பாடம் - 9. வள்ளுவரின் மெய்ப்பொருள்

அறிமுகம்

வள்ளுவர் என்ற சொல் திருவள்ளுவரைக் குறிக்கிறது . திருவள்ளுவர் திருக்குறளை எழுதியவர் .

திருக்குறள் தமிழர்களின் மறை ( அதாவது வேதம் ) என்றும் , உலகப் பொதுமறை என்றும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது . திரு + குறள் = திருக்குறள் ' திரு ' என்னும் சொல் பெருமை , சிறப்பு , மேன்மை என்னும் பல பொருள்களை உணர்த்தும் . குறள் என்பது இரண்டு அடிகளைக்கொண்ட குறள் ( குறுகிய என்ற பொருள் ) வெண்பாவைக் குறிக்கும் . இந்நூல் குறள் வெண்பாவில் எழுதப்பட்டதால் ' திருக்குறள் ' என்ற பெயரைப் பெற்றது .

இந்நூலின் கருத்துகள் மொழி , இனம் , சமயம் , காலம் , நாடு ஆகியவற்றைக் கடந்து நிற்பதால் இதை ' உலகப் பொதுமறை ' என்று சொல்வது பொருத்தமாகக் காணப்படுகிறது .

திருக்குறள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன . இவை அறத்துப்பால் , பொருட்பால் , காமத்துப்பால் என்பவை ஆகும் . திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன . அதிகாரத்திற்குப் பத்துப் பாக்கள் என மொத்தம் 1330 பாக்கள் இருக்கின்றன .

திருக்குறள் தொடர்பாக ஞானி என்பவர் எழுதிய வள்ளுவரின் மெய்ப்பொருள் என்னும் கட்டுரை இங்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது .

Lesson Introduction

valluvar refers Thiruvalluvar. He wrote 'Thirukkural'.

Thirukkural is honoured with the titles “moral values Tamilians” and “Universal moral values”. Thiru+Kural = Thirukkural. Here thiru means reverence, respect administration and so on. Kural means couplet (two-line-verse).

As the concept of Thirukkural stand beyond language, caste, religion, and time, region it is precisely correct to be called “Universal Moral Values”.

There are three major divisions in Thirukkural. They are Arathuppaal, porutpaal and Kaamathuppaal. Thirukkural has 133 chapters having ten couplets each. On the whole it has 1330 couplets.

The essay, “Philosophy of Valluvar”, written by Gnani is given here as a lesson.

1. தமிழ் மக்களின் தேசியத் திருநூல் என்றும் தமிழர்களின் அறவியலைத் தொகுத்துக் தரும் நூல் என்றும் போற்றுவதற்கான தகுதியுடையது திருக்குறள் .

2. திருக்குறள் குறித்துக் கடந்த ஒரு நூற்றாண்டுக் கால அளவில் நிறைய விளக்கங்களும் விவாதங்களும் நடைபெற்று உள்ளன .

3. திருக்குறள் நீதி நூலா . இலக்கியமா என்பது ஒரு விவாதம் .

4. இத்தகைய விவாதங்கள் ஒருபுறம் இருக்க . திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் சிந்தனையின் அடித்தளம் குறித்து இங்குச் சிலவற்றைச் சொல்லலாம் .

5. ' எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் ' ' எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் ' ' அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ' என்ற கருத்தின் வழியே திருவள்ளுவரது சிந்தனையின் அடிப்படை நமக்குப் புரிகிறது .

6. எத்தனையோ கருத்துகளைத் திட்பத்தோடு நுட்பத்தோடும் கூறியுள்ளார் வள்ளுவர் .

7. தாம் அறிந்த பல்வேறு நூல்களின் உள்ளும் வாய்மையைக் காட்டிலும் வேறு எதுவும் சிறப்பித்துச் சொல்லப்படவில்லை என்கிறார் இன்னொரு குறளில் .

8. பொறாமைப் படுபவனிடமும் தீயவனிடமும் செல்வம் சேருவதும் நேர்மையாளனுக்கு வறுமை நேர்வதும் ஏன் என்பது ஆய்வுக்குரியது என்று வள்ளுவர் கூறுகிறார் .

9. நவீன காலச் சூழலில் நமக்குத் தேவையான மனநிலை என்று இதைக் கூறமுடியும் .

10. கொடுப்பதனால் மேல் உலகம் கிட்டாது என்று யாரேனும் சொன்னாலும் கொடு என்கிறார் .

11. மேல் உலகம் செல்வதற்கு இரப்பதுதான் நல்லநெறி என்று யாரேனும் சொன்னாலும் இரப்பது தீயது என்கிறார் .

12. துறவியைக் காட்டிலும் இல்லறத்தானை வள்ளுவர் போற்றுகிறார் .

13. தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாமலிருப்பதும்தான் தவம் என்கிறார் .

14. நாம் தொடங்கிய காரியத்திற்குத் ( செயலுக்குத் ) தெய்வம் அல்லது விதி தடையாக இருந்து நமக்கு ஊதியம் தரவில்லை என்றாலும் மெய்வருத்திச் செய்ததற்கானக் கூலி உறுதி என்கின்றார் .

15. வறுமையை இறைவன் படைத்தான் என்றால் அவனே வறியவனாகி இரந்து உழலட்டும் ( அழியட்டும் ) என்கிறார் .

16. மேல் நிலையில் இருந்தும் மேன்மைக்குணம் இல்லாதவரைக் கீழ் நிலையர் என்கிறார் .

17. கீழ்நிலையில் இருந்தாலும் கீழ்மைக் குணம் இல்லாதவரை மேன்மையர் என்று பாராட்டுகிறார் .

18. இப்படி எல்லாவற்றையும் புரட்டிப் பார்க்கிற வள்ளுவரின் சிந்தனைத் திறனை நாம் இன்றும் பாராட்டாமல் இருக்க முடியாது .

19. வள்ளுவரின் பார்வையிலுள்ள தீவிரத்தை ( பொதுமையை ) இப்படி எத்தனையோ குறட்பாக்கள் நமக்கு உணர்த்துகின்றன .

குறட்பாக்கள்

1. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (423)

2. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (355)

3. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற (300)

4. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று (222)

5. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவது எவன் (46)

6. ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து (48)

7. உற்றநோய் நோற்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (261)

8. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் (619)

9. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் (1062)

10. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர் (973)

படித்துக் கருத்தறிதல்

பகுதி -1- பாடப்பனுவல்

1. தமிழ் மக்களின் தேசியத் திருநூல் என்றும் தமிழர்களின் அறிவியலைத் தொகுத்துத் தரும் நூல் என்றும் போற்றுவதற்கானத் தகுதியுடையது திருக்குறள் .

2. திருக்குறள் குறித்துக் கடந்த ஒரு நூற்றாண்டுக் கால அளவில் நிறைய விளக்கங்களும் விவாதங்களும் நடைபெற்று உள்ளன .

3. திருக்குறள் நீதி நூலா . இலக்கியமா என்பது ஒரு விவாதம் .

4. இத்தகைய விவாதங்கள் ஒருபுறம் இருக்க . திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் சிந்தனையின் அடித்தளம் குறித்து இங்குச் சிலவற்றைச் சொல்லலாம் .

5. ' எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் ' ' எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் ' ' அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ' என்ற கருத்தின் வழியே திருவள்ளுவரது சிந்தனையின் அடிப்படை நமக்குப் புரிகிறது .

6. எத்தனையோ கருத்துகளைத் திட்பத்தோடும் நுட்பத்தோடும் கூறியுள்ளார் வள்ளுவர் .

7. தாம் அறிந்த பல்வேறு நூல்களின் உள்ளும் வாய்மையைக் காட்டிலும் வேறு எதுவும் சிறப்பித்துச் சொல்லப்படவில்லை என்கிறார் இன்னொரு குறளில் .

8. பொறாமைப் படுபவனிடமும் தீயவனிடமும் செல்வம் சேருவதும் நேர்மையாளனுக்கு வறுமை நேர்வதும் ஏன் என்பது ஆய்வுக்குரியது என்று வள்ளுவர் கூறுகிறார் .

9. நவீன காலச் சூழலில் நமக்குத் தேவையான மனநிலை என்று இதைக் கூறமுடியும் .

10. கொடுப்பதனால் மேல் உலகம் கிட்டாது என்று யாரேனும் சொன்னாலும் கொடு என்கிறார் .

11. மேல் உலகம் செல்வதற்கு இரப்பதுதான் நல்லநெறி என்று யாரேனும் சொன்னாலும் இரப்பது தீயது என்கிறார் .

அருஞ்சொற்பொருள்

அறவியல் = குடும்ப வாழ்வு , பொதுவாழ்வு இரண்டும் நன்றாக / சீராக இயங்க ஒருவர் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்கும் இயல் ...... chapter on virtues

நூற்றாண்டு = நூறு ஆண்டுகள்கொண்ட காலப் பிரிவு ; hundred years, one century

விளக்கங்களும் விவாதங்களும் = Clarifications and arguments

அடித்தளம் = அடிப்படை ஆதாரம் .... basis

யார் யார் வாய் = from whomsoever

கேட்பினும் = கேட்டாலும் if heard

எத்தன்மைத்து = எப்படிப்பட்ட தன்மை உடையது . of whatever nature

ஆயினும் = இருந்தாலும் . even if

மெய்ப்பொருள் = உண்மையான பொருள் truth

திட்பம் = வலிமை . உறுதி . strength

நுட்பம் = நுணுக்கம் , மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம் . subtlety

திட்பத்தோடும் நுட்பத்தோடும் = with firmness and subtlety

நேர்மையாளன் = நேர்மையான குணம் உள்ளவன் ... honest person

கிட்டாது = கிடைக்காது .. wouldn't get

இரப்பது = பிச்சை எடுப்பது .... begging

பனுவலில் உள்ள குறட்பாக்கள்

( தொடர் - 5) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

( குறள் : 423)

குறளின் பொருள் :

யார் சொல்லுகிறார் என்பது முக்கியமல்ல . சொல்லும் பொருளின் உண்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே முக்கியம் .

சொற்பொருள் :

எப்பொருள் = எந்தப் பொருளையும்

யார் யார் வாய்க் கேட்பினும் = யாரிடத்திலிருந்து கேட்டாலும்

அப்பொருள் = அந்தப் பொருளின்

மெய்ப்பொருள் = உண்மையை

காண்பது அறிவு = அறிவது அறிவு

குறள் :

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

( குறள் : 355)

குறளின் பொருள் :

சொல் , பொருள் , நிகழ்ச்சி இவற்றின் வெளித்தோற்றங்களைக் கண்டு ஏமாறாது அவற்றின் உள்தன்மைகளை ஆராய்ந்து தெளிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு .

சொற்பொருள்

எப்பொருள் = எந்தப் பொருளையும்

எத்தன்மைத்து ஆயினும் = அதன் வெளித்தோற்றம் கண்டு ஏமாறாமல்

அப்பொருள் = அந்தப் பொருளின்

மெய்ப்பொருள் = உண்மைத் தன்மைகளை

காண்பதறிவு = ஆராய்ந்து தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு

குறள்

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற

( குறள் 300)

குறளின் பொருள்

பல நூல்களை ஆராய்ந்து பார்க்கும்போது . நிலையான பயனைத் தருவதில் வாய்மையைப் போன்ற சிறந்த குணம் வேறு இல்லை .

சொற்பொருள்

யாம் மெய்யாக் கண்டவற்றுள் = நான் ( பல நூல்களை ) ஆராய்ந்து அறிந்தவற்றுள்

எனைத் தொன்றும் வாய்மையின் = வாய்மையைப் போன்ற வேறு

நல்ல பிற சிறந்த குணம்

இல்லை = இல்லை

குறள் :

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்

( குறள் : 169)

குறளின் பொருள் :

பொறாமை கொண்டவன் செல்வத்தைப் பெறுவதும் சிறந்த குணம் கொண்டவன் தீமை அடைவதும் சில சமயம் நிகழ்வது உண்டு . இவ்வாறு நிகழ்வது எதனால் என்பது ஆராய்ந்து அறிய வேண்டியது ஆகும் .

To men of envious heart. When comes increase of joy. Or loss to blameless men. the

why will thoughtful hearts employ.

G.U.Pope

சொற்பொருள் :

அவ்விய நெஞ்சத்தான் = பொறாமைத் தீயில் வெந்த மனத்தை உடையவன்

ஆக்கமும் = பெறும் பயனும்

செவ்வியான் = நல்ல மனம் கொண்ட நல்லவனுக்கு

கேடும் = உண்டாகும் தீங்கும்

நினைக்கப்படும் = ( இயற்கைக்கு மாறானவை ; ஆகவே விழிப்போடு ஆராயப்பட வேண்டியவை

பகுதி -2 - பாடப் பனுவல்

12. துறவியைக் காட்டிலும் இல்லறத்தானை வள்ளுவர் போற்றுகிறார் .

13. தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யாமலிருப்பதும்தான் தவம் என்கிறார் .

14. நாம் நம் முயற்சியால் தொடங்கிய காரியத்திற்குத் தெய்வமே தடையாக இருந்தாலும் , அம்முயற்சிக்கு நம் உடல் வருத்திச் செய்ததற்குரிய கூலி உறுதி என்கிறார் .

15. வறுமையை இறைவன் படைத்தான் என்றால் அவனே வறியவனாகி இரந்து உழலட்டும் என்கிறார் .

அருஞ்சொற்பொருள்

துறவி = உலகப்பற்று நீங்கி ஆன்மீகத்தில் ஈடுபட்டவர் . Ascetic: one who has renounced worldly things and has taken to spiritual life.

இல்லறத்தான் = குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்பவன் .. துறவி என்பதன் எதிர்ச்சொல் : Antonym of hermit or ascetic

தீங்கு = தீமை , துன்பம் ... . harm, injury

தவம் = ( முனிவர் போன்றவர் ) ஒன்றை அடைய வேண்டும் என்று ஐந்து புலன்களையும் அடக்கி உடலைத் துன்பப்படுத்தி , மனத்தை ஒருமுகப் படுத்திச் செய்யும் தியானம் .. penance

ஊதியம் = பலன் .... reward

மெய் = உடல்

கூலி = பலன் .. reward wages

வறியவனாகி = ஏழையாகி .. become poor

இரந்து = பிச்சையெடுத்து .. beg

உழலட்டும் = திணறட்டும் . . (let him) suffer

குறள் :

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவது எவன்

( குறள் : 46)

குறளின் பொருள் :

அறநெறியில் நின்று இல்வாழ்க்கையை நடத்திச் செல்வதே சிறந்தது . இல்லறத்தை விட்டுத் துறவற வழியில் செல்வதால் ஒரு நன்மை யும் உண்டாகாது .

சொற்பொருள்

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே நடத்துவான் என்றால்

புறத்தாற்றின் = அந்த இல்லறத்திற்குப் புறமாகிய துறவறத்தில்

போஒய்ப் பெறுவது எவன் = சென்று என்ன பெரிய பயனைப் பெற்று விடுவான்

குறள் :

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து

( குறள் : 48)

குறளின் பொருள் :

தன்னைச் சூழ்ந்துள்ளவர்களை அறவழியில் நடத்தித் தாமும் அறம் தவறாமல்

நடத்தும் இல்வாழ்க்கை . துறவி மேற்கொண்டவர்கள் செய்யும் தவத்தைவிட வலிமையானது .

சொற்பொருள் :

ஆற்றின் ஒழுக்கி = தன்னைச் சூழ்ந்துள்ளவர்களையும் தங்கள்

தங்கள் அறவழிகளில் வழிநடத்தி

அறன் இழுக்கா இல்வாழ்க்கை = தாமும் அறம் தவறாது வாழும் இல்வாழ்க்கை

நோற்பாரின் = துறவியரின் தவத்தை விடவும்

நோன்மை உடைத்து = வலிமை உடையது .

குறள் :

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு

( குறள் : 261)

குறளின் பொருள் :

தமக்கு வரும் நோயைப் பொறுத்துக் கொள்வதும் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருப்பதும் தவத்திற்கான நிலைகள் ஆகும் .

சொற்பொருள் :

உற்ற நோய் நோற்றல் = ( உணவு உண்ணுதலைக் குறைத்தல் முதலியவற்றால் ) தனது உயிர்க்கு / உடலுக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்

உயிர்க்கு உறுகண்

செய்யாமை = மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருத்தல்

அற்றே = ஆகியவைகளே

தவத்திற்கு உரு = தவத்திற்கான நிலைகள் ஆகும் .

குறள் :

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும் ( குறள் : 619)

குறளின் பொருள் :

ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலைச் செய்வதற்குத் தெய்வமே தடையாக நின்றாலும் விடா முயற்சியுடன் அயராது உழைத்துச் செய்தால் அவ்வுழைப்பின் பலனைப் பெறமுடியும் .

சொற்பொருள் :

தெய்வத்தான் ஆகாது எனினும் = தெய்வமே தடையாக நிற்கும் நேரங்களிலும்

முயற்சி = விடா முயற்சியும்

தன்மெய் வருத்த = அயராத உடல் உழைப்பும்

கூலி தரும் = அவற்றிற்கு உரிய பலன்களை தந்து விடும்

குறள் :

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்

( குறள் : 1062)

குறளின் பொருள் :

உயிர் வாழ்வதற்காகப் பிறரிடம் பிச்சையெடுத்து வாழ வேண்டியிருந்தால் . அத்தகைய நிலையை உலகத்தில் ஏற்படுத்தியதற்காக . அந்த இறைவன் துன்பப்பட்டு அழியட்டும் .

சொற்பொருள் :

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் = உயிர் வாழ்வதற்காகப் பிச்சை

எடுக்க வேண்டி வந்தால்

உலகியற்றியான் = இறைவன்

பரந்து கெடுக = அத்தகைய நிலையை உலகில் ஏற்படுத்தியதற்காகத் துன்பப்பட்டு அழியட்டும்

பாடப் பனுவல்

பகுதி -3-

16. மேல் நிலையில் இருந்தும் மேன்மைக்குணம் இல்லாதவரைக் கீழ் நிலையர் என்கிறார் .

17. கீழ்நிலையில் இருந்தாலும் கீழ்மைக் குணம் இல்லாதவரை மேன்மையர் என்று பாராட்டுகிறார் .

18. இப்படி எல்லாவற்றையும் புரட்டிப் பார்க்கிற வள்ளுவரின் சிந்தனைத் திறனை நாம் இன்றும் பாராட்டாமல் இருக்க முடியாது .

19. வள்ளுவரின் பார்வையிலுள்ள தீவிரத்தை இப்படி எத்தனையோ குறட்பாக்கள் நமக்கு உணர்த்துகின்றன .

அருஞ்சொற்பொருள்கள்

மேல் இருந்தும் = உயர்ந்த நிலையில் இருந்தாலும் : even one occupies the higher status

மேன்மைக்குணம் = உயர்வான நல்லகுணம் .. good quality

கீழ்நிலையர் = persons of lower status

கீழ்மைக்குணம் = இழிந்த ( மோசமான ) குணம் .. evil quality

மேன்மையர் = மேலான குணம் உள்ளவர்கள்

புரட்டிப்பார்க்கிற = ஆராய்ந்து பார்க்கிற . . analyse

தீவிரம் = ( செயலைச் செய்வதில் ) அதிகமான கவனமும் முனைப்பும் கொள்வது .. seriousness

பார்வை = கண்ணோட்டம் , ஒரு பொருளைச் சிந்தனை செய்யும் முறை .. approach

குறள் :

மேல்இருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர் ".

( குறள் : 973)

குறளின் பொருள் :

ஒருவர் மேல் நிலையில் இருந்தாலும் குணத்தில் தாழ்ந்தவர்கள் ( குறைந்தவர்கள் ) உயர்ந்தவர்கள் இல்லை . ஒருவர் கீழான் நிலையில் இருந்தாலும் குணத்தில் உயர்ந்தவர்கள் கீழானவர்கள் அல்லர் . மேலான மக்களே ( உயர்ந்தவர்களே ) ஆவர் .

சொற்பொருள் :

மேல் இருந்தும் = ஒருவர் மேல் நிலையில் இருந்தாலும்

மேல் அல்லார் = குணத்தில் இழிந்தவர்கள்

மேல் அல்லர் = மேலோர் அல்லர்

கீழ் இருந்தும் = கீழ் நிலையில் இருந்தாலும்

கீழ் அல்லவர் = குணத்தில் உயர்ந்தவர்கள்

கீழ் அல்லார் = மேலான மக்களே

இலக்கணம்

சொற்களின் பயன்பாடுகள் :

கீழே கொடுக்கப்பட்டுள்ள பனுவலில் ' என / என்று '. என்றாலும் . என்பது ” ஆகிய சொற்களின் பயன்பாட்டை . படித்து அறிந்து கொள்ளுங்கள் .

மாணவரே !

என் - என்ற சொல்லிலிருந்து ' என்கிறான் ' ( நிகழ்காலம் ) ' என்றான் ' ( இறந்த காலம் ) ' என்பான் ' ( எதிர்காலம் ) ' என ' ' என்று ' ' என்றும் ', ' என்றால் ', ' என்றாலும் ', ' என்பது ஆகிய சொற்கள் உண்டாகின்றன .

இப்போது ' என / என்று ' என்றாலும் '. ' என்பது '. ஆகிய சொற்களின் பயன்பாட்டைத் திரையில் தோன்றும் பனுவல் மூலமாக படித்து அறிந்து கொள்ளுங்கள் .

பனுவல்

தான் ஒரு தமிழன் அல்ல என்றும் , தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே செருமானிய நாட்டில்தான் என்றும் அந்த விஞ்ஞானி கூறினார் .

அவர் ஒரு செருமானியர் என்றாலும் , தமிழில் தடங்கலின்றிப் பேசினார் .

ஒரு செருமானியர் தமிழில் பேசுகிறார் என்பது ஒரு வியப்பான , மகிழ்ச்சியான செய்தி அல்லவா !

அந்தச் செருமானியர் தமிழ் கற்றது எப்படி என்று / என அறிய ஆவல் ஏற்படுகின்றது , இல்லையா ?