பாடம் - 10. ஔவை பெற்ற நெல்லிக்கனி

அறிமுகம்

தமிழ் மொழியில் கவிதை இயற்றியவர்களில் ஒருவர் ஔவையார் . ஔவையார் என்றால் வயது முதிர்ந்த பெண் என்று பொருள் . ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர் . அவர்களின் வாழ்க்கையுடன் பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன . அவ்வாறு கூறப்படும் ஒரு நிகழ்ச்சியை இங்கே காண்போம் .

Lesson Introduction

Avvaiyar is one of the renowned poets who composed poetry in Tamil language. The term “Avvaiyar” means “Elderly Lady” . Many women poets with the name “Avvaiyar” have lived in Tamil Nadu in the past. Interesting events which had taken place during their lifetime have been reported. We shall learn about one such incident here.

படித்தல் - பாடப் பனுவல்

தமிழ்நாட்டில் உள்ள தருமபுரிப் பகுதியைப் பழங்காலத்தில் அதியமான் என்னும் மன்னன் ஆண்டுவந்தான் . அவனுக்கு ஔவையாரின் பாடல்களைக் கேட்பதில் ஆர்வம் மிகுதி . எனவே ஔவையாரைத் தனது அரண்மனையிலேயே தங்க வைத்தான் .

ஒருநாள் , அதியமான் தனது வீரர்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தான் . அவன் வேட்டைக்குப் போயிருந்த மலைபிளவில் ஒரு நெல்லிமரம் நின்றது . அந்த நெல்லிமரத்தின் நுனிக் கிளையில் ஒரு நெல்லிக் கனி பழுத்திருந்தது . அந்த நெல்லிக்கனியை உண்பவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள் என்று அதியமான் அறிந்திருந்தான் . தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மலைப்பிளவில் நின்ற நெல்லிமரத்தில் அவன் ஏறினான் . அந்த நெல்லிக்கனியைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கினான் .

அதுவரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த வீரர்களுடன் அவன் தனது அரண்மனைக்குத் திரும்பினான் . நேரே ஔவையார் தங்கியிருந்த பகுதிக்கு அதியமான் சென்றான் . அந்த அரிய நெல்லிக்கனியை ஒரு தட்டில் வைத்து ஔவைக்குக் கொடுத்தான் .

ஔவையார் அந்த நெல்லிக்கனியை உண்டு முடித்தார் . அதன்பிறகு அந்த நெல்லிக்கனியின் பெருமையை அதியமான் தெரிவித்தான் .

அதைக் கேட்ட ஔவையார் , “ மன்னா இந்த அரிய நெல்லிக்கனியை நீ உண்டு நீண்ட நாள் வாழ்ந்தால் என்னைப் போன்ற புலவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் உதவ முடியும் . அப்படிச் செய்யாமல் நெல்லிக்கனியை எனக்குத் தந்துவிட்டாயே !” என்று கூறினார் .

அதற்கு அதியமான் , “ புலவரே ! அந்த நெல்லிக்கனியை நான் உண்டிருந்தால் அது எனக்கும் என் நாட்டு மக்களுக்கும்தான் பயன்பட்டிருக்கும் . ஆனால் தமிழ் ப் புலவராகிய நீங்கள் உண்டதால் தமிழ் கூறும் உலகமே பயன்படும் என்றுதான் உங்களுக்குக் கொடுத்தேன் " எனக் கூறினான் .

அதியமான் கூறியதைக் கேட்ட ஔவையார் உள்ளம் மகிழ்ந்தார் . அதியமானை வாயார வாழ்த்தினார் . ஔவையார் நீண்ட நாள் உயிருடன் வாழ்ந்து தமிழ்ப் பாடல்கள் பலவற்றைப் பாடினார் .

அருஞ்சொற்பொருள்

வேட்டை = விலங்குகளை விரட்டிச் சென்று கொல்லுதல் . hunting

மலை = பெரிய பாறை , mountain, hill

பிளவு = மலைகளுக்கு இடையே உள்ள வெளி , cleft of a rock

நெல்லிமரம் = உருண்டை வடிவப் பச்சை நிறச் சிறிய காய் தரும் மரம் .

A type of tree which give medicinal fruit.

நுனிக்கிளை = கிளையின் இறுதிப் பகுதி . end of the branch

பழுத்திருந்தது = முதிர்ந்த நிலை அடைதல் . ripened

அரிய = எளிதில் கிடைக்காத . rare

பெருமை = சிறப்புத்தன்மை . special feature

புலவர் = செய்யுள் இயற்றும் திறமை மிக்கவர் . poet

தமிழ் கூறும் உலகம் = தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் . world of Tamils

உள்ளம் = மனம் . mind

வாயார = மனம் மகிழுமாறு . whole heartedly

விரைந்து படித்துப் பொருள் அறிக - பாடப் பனுவல்

தமிழ்நாட்டில் உள்ள தருமபுரிப் பகுதியைப் பழங்காலத்தில் அதியமான் என்னும் மன்னன் அண்டுவந்தான் . அவனுக்கு ஔவையாரின் பாடல்களைக் கேட்பதில் ஆரவம் மிகுதி . எனவே ஔவையாரைத் தனது அரண்மையிலேயே தங்க வைத்தான் .

ஒருநாள் , அதியமான் தனது வீரர்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தான் . அவன் வேட்டைக்குப் போயிருந்த மலைபிளவில் ஒரு நெல்லிமரம் நின்றது . அந்த நெல்லிமரத்தின் நுனிக் கிளையில் ஒரு நெல்லிக் கனி பழுத்திருந்தது . அந்த நெல்லிக்கனியை உண்பவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள் என்று அதியமான் அறிந்திருந்தான் . தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மலைப்பிளவில் நின்ற நெல்லிமரத்தில் அவன் ஏறினான் . அந்த நெல்லிக்கனியைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கினான் .

அதுவரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த வீரர்களுடன் அவன் தனது அரண்மைக்குத் திரும்பினான் . நேரே ஔவையார் தங்கியிருந்த பகுதிக்கு அதியமான் சென்றான் . அந்த அரிய நெல்லிக்கனியை ஒரு தட்டில் வைத்து ஔவைக்குக் கொடுத்தான் .