பாடம்    -   16.   ஏனாதி நாதர்

அறிமுகம்

        தமிழ்நாட்டில் பல் இடங்களில் சிவன் கோயில்கள் உள்ளனஇந்தச் சிவன் கோயில்களில் சிவபெருமான் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறான்சிவனைக் கடவுளாக வழிபடுவோரைச் சைவர்கள் என்பார்கள். சைவர்கள் பின்பற்றும் சமயத்தைச் சைவ சமயம் என்கிறோம்சைவ சமயத்தின் சிறப்புகளை மக்களிடம் எடுத்துக்கூறியவர்களை நாயன்மார்கள் என்கிறோம்அந்த நாயன்மார்களை அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்று கூறுவார்கள்அவர்களின் வரலாற்றைப் பெரிய புராணம் என்னும் நூல் நெரிவிக்கிறதுபெரிய புராணத்தைச் சேக்கிழார் என்பவர் இயற்றியுள்ளார்இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஏனாதி நாதர் என்னும் நாயனாரின் வரலாறு இங்கே பாடப் பனுவலாகத் தரப்பட்டுள்ளது.

 

Lesson Introduction

          There are many siva temples in Tamilnadu.  Lord Siva appears in the form of a Linga in these temples.  The devotees of Siva are called as Saivas and they follow the Saiva religion.  Nayanmars are the prople who propagated and spread sivaism.  There were 63 Nayanmars.  Their history has been written in Periyapuranam by Seykkizhaar.  This lesson is the history of one of the 63 Nayanmargal, ENAATHI NAATHAR.

 

பாடப் பனுவல்

        பண்டையக் காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவை,

        1.     சேர நாடு

        2.     சோழ நாடு

        3.     பாண்டிய நாடு

 

என்பவை ஆகும்சோழ நாட்டில் உள்ள ஓர் ஊரின் பெயர் எயினனூர் என்பது ஆகும்அங்கே தோன்றியவர்தான் ஏனாதி நாதர்ஏனாதி என்பது படைத் தலைவருக்கு வழங்கப்படும் பட்டப் பெயர் ஆகும்ஏனாதி நாதரின் இயற்பெயர் தெரியவில்லை.

 

ஏனாதி நாதர் போர்க் கலையில் சிறந்து விளங்கினார்எனவே சோழ மன்னனிடம் படைத்தலைவராக விளங்கினார்மேலும், படை   வீரர்களுக்குப் படைப் பயிற்சி அளிக்கும் பணியையும் அவர் செய்து வந்தார். ஏனாதி நாதர் தன்னிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கும் சிவன் அடியார்களுக்கும் வழங்கும் குணம் கொண்டவர்சிவன் அடியார்களை அவர் சிவபெருமானின் வடிவமாகவே கருதினார்தன்னை அறியாமல் கூட அவர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவர் வாழ்ந்து வந்தார்.

 

        வீரத்தில் சிறந்து விளங்கிய ஏனாதி நாதரின் புகழ் எங்கும் பரவியதுஅதனால் அதிசூரன் என்பவன் ஏனாதி நாதர் மீது பொறாமை கொண்டான்படைப் பயிற்சி அளிக்கும் தொழிலையே அவனும் செய்துவந்தான்சோழ மன்னனின் படைகளுக்குப் பயிற்சி வழங்கும் வேலை தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவன் ஆசை கொண்டான்அது கிடைக்காததால் ஏனாதி நாதரை வெல்ல வேண்டும் என்று எண்ணினான்அதனால் பல முறை ஏனாதி நாதருடன் போருக்குச் சென்றான்ஆனால், ஒவ்வொரு முறையும் அவன் தோற்றுப் போனான்எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நினைத்த அதிசூரன் வஞ்சகத் திட்டம் ஒன்றைத் தீட்டினான்அதன்படி ஏனாதி நாதரைத் தனியாகப் போருக்கு அழைத்தான்ஏனாதி நாதரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

 

        அதிசூரன் தனது நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டான்அதைத் தனது கேடயத்தால் மறைத்துக் கொண்டு போர்க்களத்திற்கு வந்தான்போர் தொடங்கியதுதாக்குவதற்குப் பாய்ந்து வந்த அதிசூரனைத் தாக்குவதற்கு ஏனாதி நாதர் சென்றார்அப்போது அதிசூரன் தனது நெற்றியை மறைத்திருந்த கேடயத்தை அகற்றினான்அவனது நெற்றியில் திருநீறு பளிச்செனத் தெரிந்தது.

 

அதிசூரனின் நெற்றியில் திருநீற்றைப் பார்த்ததும் ஏனாதிநாதர் திகைத்து நின்றார்திருநீறு பூசியவனைக் கொல்வது சிவன் அடியாரைக் கொல்வதற்கு ஒப்பாகும் என்று அவனை அவர் கொல்லவில்லைஉடனே அதிசூரன் அவரைக் கொன்றான்திருநீறு பூசியவனைக் கொல்லக்கூடாது எனக் கருதிய ஏனாதி நாதர் மண்ணில் விழுந்து இறந்தார்அவரை எல்லாரும் ஏனாதி நாத நாயனார் எனப் போற்றுகின்றனர்.

 

அருஞ்சொற்பொருள்

 

இலிங்கம்                  -  சிவனைக் குறிக்கும் வடிவம், a symbol of Siva

வழிபடுவோர்             -  வணங்குவோர், one who worship

சமயம்                       -  மதம், religion

சைவர்                       -சிவனைக் கடசுளாக வணங்குவோர், one who follows saivism

நாயன்மார்                 -   சிவன் அடியார், saiva saints

தோன்றியவர்              -  பிறந்தவர், born

பட்டப்பெயர்             -  விருதுப்பெயர், title

இயற்பெயர்               -  பெற்றோர் இட்ட பெயர், actual name

போர்க்கலை               -  போர் செய்யும் முறை, art of war

படைப்பயிற்சி            -  படை வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சி, training to the soldiers

பணி                         -  வேலை, work

இல்லாதவர்கள்           -  வறுமை நிலையில் உள்ளவர்கள், poverty sticken persons

தீங்கு                 -  தீமை, harm

பொறாமை                 -  பிறரது புகழைப் பொறுக்க முடியாமல் தவித்தல், jealousy

வெல்ல                     -   வெற்றிகொள்ள, to conquer

தோற்றுப்போனான்     -  தோல்வி அடைந்தான், defeated

வஞ்சகத் திட்டம்நேர்மையற்ற திட்டம், deceit plan

தீட்டினான்         -  உருவாக்கினான், well planned

ஒப்புக்கொண்டார்       -  ஏற்றுக்கொண்டார், accepted

திருநீறு                      -  சிவச் சின்னங்களில் ஒன்று, sacred ash of the saivites

கேடயம்                    - போர் செய்யும் போது பாதுகாப்பாகக் கையில் வைத்திருக்கும்   கருவி, shield

பாய்ந்து                     -  விரைவாகச் சென்று, headlong attack

அகற்றினான்               -  நீக்கினான், removed

பளிச்சென          -  வெளிச்சமாக, brightly

 

1.   கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள வினாவிற்கு விடையளிக்கவும்

 

1.   யாருடையப் புகழ் பரவியது?

2.   ஏனாதிநாதர் மீது பொறாமை கொண்டவர் யார்?

3.   ஏனாதிநாதரை வெல்ல விரும்பியவன் யார்?

4.   வஞ்சகத் திட்டத்தைத் தீட்டியவர் யார்?

5.   ஏனாதிநாதர் எதற்கு ஒப்புக் கொண்டார்?

 

விடைகள் :

 

1.   ஏனாதி நாதரின் புகழ் பரவியது.

2.   அதிசூரன் என்பவன் ஏனாதிநாதர் மீது பொறாமை கொண்டான்.

3.   அதிசூரன் என்பவன் ஏனாதிநாதரை வெல்ல விரும்பினான்.

4.   அதிசூரன் என்பவன் வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.

5.   தனியாகப் போர் புரிவதற்கு ஏனாதிநாதர்  ஒப்புக் கொண்டார்.

 

படித்துக் கருத்தறிதல்

 

பண்டைக் காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்ததுஅவை,

        1.     சேர நாடு

        2.     சோழ நாடு

        3.     பாண்டிய நாடு

 

என்பவை ஆகும்சோழ நாட்டில் உள்ள ஓர் ஊரின் பெயர் எயினனூர் என்பது ஆகும்அங்கே தோன்றியவர்தான் ஏனாதி நாதர்ஏனாதி என்பது படைத் தலைவருக்கு வழங்கப்படும் பட்டப் பெயர் ஆகும்ஏனாதி நாதரின் இயற்பெயர் தெரியவில்லை.

 

        ஏனாதி நாதர் போர்க் கலையில் சிறந்து விளங்கினார்எனவே சோழ மன்னனிடம் படைத்தலைவராக விளங்கினார்மேலும், படை வீரர்களுக்குப் படைப் பயிற்சி அளிக்கும் பணியையும் அவர் செய்து      வந்தார்ஏனாதி நாதர் தன்னிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கும் சிவன் அடியார்களுக்கும் வழங்கும் குணம் கொண்டவர்சிவன் அடியார்களை அவர் சிவபெருமானின் வடிவமாகவே கருதினார்தன்னை அறியாமல் கூட அவர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவர் வாழ்ந்து வந்தார்.

       

வீரத்தில் சிறந்து விளங்கிய ஏனாதி நாதரின் புகழ் எங்கும் பரவியதுஅதனால் அதிசூரன் என்பவன் ஏனாதி நாதர் மீது பொறாமை கொண்டான்படைப் பயிற்சி அளிக்கும் தொழிலையே அவனும் செய்துவந்தான்சோழ மன்னனின் படைகளுக்குப் பயிற்சி வழங்கும் வேலை தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவன் ஆசை கொண்டான்அது கிடைக்காததால் ஏனாதி நாதரை வெல்ல வேண்டும் என்று எண்ணினான்அதனால் பல முறை ஏனாதி நாதருடன் போருக்குச் சென்றான்ஆனால், ஒவ்வொரு முறையும் அவன் தோற்றுப் போனான்எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நினைத்த அதிசூரன் வஞ்சகத் திட்டம் ஒன்றைத் தீட்டினான்அதன்படி ஏனாதி நாதரைத் தனியாகப் போருக்கு அழைத்தான்ஏனாதி நாதரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

 

        அதிசூரன் தனது நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டான்அதைத் தனது கேடயத்தால் மறைத்துக் கொண்டு போர்க்களத்திற்கு வந்தான்போர் தொடங்கியது. தாக்குவதற்குப் பாய்ந்து வந்த அதிசூரனைத் தாக்குவதற்கு ஏனாதி நாதர் சென்றார்அப்போது அதிசூரன் தனது நெற்றியை மறைத்திருந்த கேடயத்தை அகற்றினான்அவனது நெற்றியில் திருநீறு பளிச்செனத் தெரிந்தது.

 

        அதிசூரனின் நெற்றியில் திருநீற்றைப் பார்த்ததும் ஏனாதிநாதர் திகைத்து நின்றார்திருநீறு பூசியவனைக் கொல்வது சிவன் அடியாரைக் கொல்வதற்கு ஒப்பாகும் என்று அவனை அவர் கொல்லவில்லைஉடனே அதிசூரன் அவரைக் கொன்றான்திருநீறு பூசியவனைக் கொல்லக்கூடாது எனக் கருதிய ஏனாதி நாதர் மண்ணில் விழுந்து இறந்தார்அவரை எல்லாரும் ஏனாதி  நாத  நாயனார் எனப் போற்றுகின்றனர்.

 

1.   பின்வரும் வினாக்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து விடையைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிடுக.

 

1.   பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பிரிவுகள்

      மூன்று

      இரண்டும்

      )   நான்கு                         விடை :

 

2.   ஏனாதி என்ற பட்டப் பெயருக்கு உரியவர்.

      )   அமைச்சர்

      )   மன்னன்

      )   படைத்தலைவர்                     விடை :

 

3.   ஏனாதிநாதரைப் படைத்தலைவராகக் கொண்ட மன்னன்?

      பாண்டியன்

      சோழன்

      )   பல்லவன்                             விடை :

 

4.    ஏனாதிநாதருக்குச் சிவபெருமான் வடிவமாகவே வீளங்குபவர்.

      சிவனடியார்

      மன்னர்

      )   வீரர்                                     விடை :

 

5.    வஞ்சகம் தீட்டியவர் யார்?

      சோழமன்னன்

      ஏனாதி நாதர்

       அதிசூரன்                             விடை :

 

2.    பின்வரும் சொற்களுக்கு ஏற்ற பெயர்களைத் தேர்ந்து பொருத்துக.

        1.   வஞ்சகம் கொண்டவன்  -       ஏனாதி நாதர்

        2.   எயினனூரில் தோன்றியவர்     -       திருநீறு

        3.   அகன்றது                     -       அதிசூரன்
        4.  
பளிச்செனத் தெரிந்தது   -       புகழ்

5.   எங்கும் பரவியது                  -       கேடயம்

 

விடை : 1.   வஞ்சகம் கொண்டவன்              -       அதிசூரன்

         2.   எயினனூரில் தோன்றியவர்    -       ஏனாதி நாதர்

         3.   அகன்றது                    -       கேடயம்
         4.  
பளிச்செனத் தெரிந்தது  -       திருநீறு

         5.   எங்கும் பரவியது         -       புகழ்

 

3.   எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ளதுபோல் பின்வரும் கோடிட்ட இடங்களை நிரப்புக.

எடுத்துக்காட்டு :

        ஏனாதி நாதர்    -------------------  (போர்க்கலைசிறந்து விளங்கினார்.

        ஏனாதி நாதர் போர்க்கலையில் சிறந்து விளங்கினார்.

 

1.   ஏனாதி நாதர்  எயினனூர் என்னும்  -------------------- (ஊர்) தோன்றியவர்.

      (ஊரின், ஊரில்ஊருக்கு)

 

2. அதிசூரனால் ஏனாதி நாதரைப் ----------------------- (போர்) வெல்ல இயலவில்லை.  (போரில், போரின், போரால்)

 

3.   அதிசூரன் தனது  ------------------------ (நெற்றி) திருநீற்றைப் பூசிக் கொண்டான்.

      (நெற்றியுள், நெற்றியில், நெற்றிக்கு)

 

4.   ஏனாதி நாதர் ---------------------- (மண்) விழுந்தார்.

      (மண்மீது, மண்ணுள், மண்ணில்)

 

5.   ----------------- (வீரம்) சிறந்து விளங்கியவர் ஏனாதி நாதர் (வீரத்தால், வீரத்தின், வீரத்தில்)

 

விடைகள்

1.   ஊரில்   2.  போரில்   3.  நெற்றியில்   4.  மண்ணில்  4.  வீரத்தில்

 

 

4.   பின்வரும் கோடிட்ட இடங்களில் சரியான சொல்லைத் தெரிவு செய்து நிரப்புக.

 

1.  ஏனாதி என்பது படைத்தலைவருக்கு வழங்கப்படும் பட்டப் பெயர்  ------------------ ஏனாதி நாதர் என்று அழைக்கப்படுகிறார்.

     எனவே

     ஆனால்

     ஏனென்றால்                            விடை :

 

2.   ஏனாதி நாதர் சோழ மன்னனிடம் படைத் தலைவராக விளங்கினார். ----------------- அவர்

      படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியையும் செய்துவந்தார்.

     ஏனெனில்

     மேலும்

     அப்படிஎன்றால்                               விடை :

 

3.   சோழ நாட்டில் உள்ள ஊர் எயினனூர்  -------------------- தோன்றியவர்தான் ஏனாதி நாதர்.

     அங்கே

     அதனால்

     அப்படி                                  விடை :

 

4.   ஏனாதி நாதரை அதிசூரன் வெல்லவேண்டும் என்று எண்ணினான். -------------------

      பலமுறை ஏனாதி நாதருடன் போருக்குச் சென்றான்.

     அப்படித்தான்

     அவ்வாறு

     அதனால்                                        விடை :

 

 

5.  அதிசூரன் தனது நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டான்.  --------------------- தனது கேடயத்தால் மறைத்துக்கொண்டு போர்க்களத்திற்கு வந்தான்.

      அவற்றை

      அதை

      அவனை                                        விடை :

 

5.   பின்வரும் தொடர்களை அடைப்புக் குறிக்குள் இருக்கும் சொற்களிலிருந்து தெரிவுசெய்து நிறைவுசெய்க.

 

1.     தமிழ்நாட்டில் பல இடங்களில் சிவன் கோயில்கள் ----------------

              (உள்ளது/உள்ளன)

 

2.     சிவன் அடியார்களை ------------------ (அவன்/அவர்) சிவபெருமானின் வடிவமாகவே கருதினார்.

 

3.     அதிசூரன் என்பவன் ஏனாதிநாதரிடம் பொறாமை --------------------------

        (கொண்டான்/கொண்டார்)

 

4.     போர் ------------------------- (தொடங்கின/தொடங்கியது)

 

5.     ஏனாதி நாதரை எல்லாரும் ஏனாதி நாத நாயனார் எனப் -------------------------

        (போற்றுகின்றனர்/போற்றுகிறான்)

 

 

 

விடைகள் :

 

1.     தமிழ்நாட்டில் பல இடங்களில் சிவன் கோயில்கள் உள்ளன.

 

2.     சிவன் அடியார்களை அவர்  சிவபெருமானின் வடிவமாகவே கருதினார்.

 

3.     அதிசூரன் என்பவன் ஏனாதிநாதரிடம் பொறாமை கொண்டான்.

 

4.     போர் தொடங்கியது.

 

5.     ஏனாதி நாதரை எல்லாரும் ஏனாதி நாத நாயனார் எனப் போற்றுகின்றனர்.

 

6.   பின்வரும் பத்திகளில் அடிக்கோடிட்ட சொற்களைத் தனித்து எடுத்துச்

      சொற்றொடராக  உருவாக்குக.

 

        ஏனாதி நாதர் போர்க் கலையில் சிறந்து விளங்கினார்எனவே, சோழ மன்னனிடம் படைத்தலைவராக விளங்கினார்மேலும், படை வீரர்களுக்குப் படைப் பயிற்சி அளிக்கும் பணியையும் அவர் செய்து வந்தார்ஏனாதி நாதர் தன்னிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கும் சிவன் அடியார்களுக்கும் வழங்கும் குணம் கொண்டவர்சிவன் அடியார்களை அவர் சிவபெருமானின் வடிவமாகவே கருதினார்தன்னை அறியாமல் கூட அவர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவர் வாழ்ந்து வந்தார்.

 

விடை :             ஏனாதி நாதர் படைப் பயிற்சி அளிக்கும் கலையில் சிறந்து விளங்கினார்.

 

வீரத்தில் சிறந்து விளங்கிய ஏனாதி நாதரின் புகழ் எங்கும் பரவியதுஅதனால் அதிசூரன் என்பவன் ஏனாதி நாதர் மீது பொறாமை கொண்டான்படைப் பயிற்சி அளிக்கும் தொழிலையே அவனும் செய்துவந்தான்சோழ மன்னனின் படைகளுக்குப் பயிற்சி வழங்கும் வேலை தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவன் ஆசை கொண்டான்அது கிடைக்காததால் ஏனாதி நாதரை வெல்ல வேண்டும் என்று எண்ணினான்அதனால் பல முறை ஏனாதி நாதருடன் போருக்குச் சென்றான்ஆனால், ஒவ்வொரு முறையும் அவன் தோற்றுப் போனான்எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நினைத்த அதிசூரன் வஞ்சகத் திட்டம் ஒன்றைத் தீட்டினான்அதன்படி ஏனாதி நாதரைத் தனியாகப் போருக்கு அழைத்தான்ஏனாதி நாதரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

 

விடை  :    ஏனாதி நாதரை வெல்லவேண்டும் என்று அதிசூரன் போருக்கு                                  அழைத்தான்.

 

அதிசூரன் தனது நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டான்அதைத் தனது கேடயத்தால் மறைத்துக் கொண்டு போர்க்களத்திற்கு வந்தான்போர் தொடங்கியது. தாக்குவதற்குப் பாய்ந்து வந்த அதிசூரனைத் தாக்குவதற்கு ஏனாதி நாதர் சென்றார்அப்போது அதிசூரன் தனது நெற்றியை மறைத்திருந்த கேடயத்தை அகற்றினான்அவனது நெற்றியில் திருநீறு பளிச் எனத் தெரிந்தது.

விடை  :            அதிசூரன் அவனது நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டான்.

 

7.   பின்வரும் எதிர்ச்சொற்களைப் பொருத்துக.

 

        பல்           x      தோல்வி

        பின்          x      தெரியாது

        தெரியும்    x      தீமை

        நன்மை      x      சில

        வெற்றி      x      முன்

 

விடைகள் :

 

        பல்           x      சில

        பின்          x      முன்

        தெரியும்    x      தெரியாது

        நன்மை      x      தீமை

        வெற்றி      x      தோல்வி

 

8.   பின்வரும் சொற்களை வாக்கியத்தில் அமைக்க.

 

1.   சோழநாடு

2.   பொறாமைகொண்டான்

3.   பயிற்சி

4.  கேரயம்

5.  போற்றுகின்றனர்

 

 

விடைகள் :

 

1.   சோழ நாட்டில் உள்ள எயினனூரில் ஏனாதிநாதர் பிறந்தார்.

2.   ஏனாதிநாதர் மீது அதிசூரன் பொறாமை கொண்டான்.

3.   சோழ நாட்டுப் படை வீரர்களுக்கு ஏனாதி நாதர் பயிற்சி வழங்கினார்.

4.   அதிசூரன் தனது நெற்றியில் பூசியிருந்த திருநீற்றைக் கேடயத்தால் மறைந்திருந்தான்.

5.   ஏனாதி நாதரை எல்லாரும் ஏனாதி நாத நாயனார் எனப் போற்றுகின்றனர்.

 

9.   பின்வரும் தொடர்கள் சரி அல்லது தவறு என்பதைக் குறிப்பிடுக.

 

1.   தமிழ்நாட்டில் பல இடங்களில் சிவன் கோயில்கள் உள்ளன. (சரி/தவறு)

2.   ஏனாதி நாதர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். (சரி/தவறு)

3.   ஏனாதி நாதர் தீய குணங்கள் கொண்டவர். (சரி/தவறு)

4.   ஏனாதி நாதர் ஒரு சிவன் அடியார். (சரி/தவறு)

5.   ஏனாதி நாதரை அதிசூரன் வஞ்சகமாய்க் கொன்றான். (சரி/தவறு)

 

விடைகள்

 

        1.  சரி               2.  தவறு

        3.  தவறு   4.  சரி

        5.  சரி