பாடம் - 18. கணிப்பொறி நினைவகம்

 

அறிமுகம்

 

        இப்பாடம் கணிப்பொறியின் ஓர் அங்கமான கணிப்பொறி நினைவகத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறது. முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் எழுதிய 'கணிப்பொறி-ஓர் அறிமுகம்' என்ற பகுதி பாடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 'கணிப்பொறியும் தகவல் தொடர்பும் - ஓர் அறிமுகம்' எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் பொறியியல் மற்றும் தமிழ்க் கணினி இயல் துறைகளில் வல்லுநர். இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் 'லிபியா'விலௌம் பொறியியல் வல்லுநராகவும் கருத்துரைஞராகவும், அறிவுரைஞராகவும் பணியாற்றிவர். உலக அளவிலான மின் இயல் மற்றும் மின் அணுவியல் நிறுவன, சென்னை அமைப்பின் (IEEE Madras Chapter) இரண்டாயிரம் ஆண்டின் சிறந்த பொறியாளர் என்ற விருதைப் பெற்றவர். தமிழ்ப் பற்றாளர். இவர் கணிப்பொறித் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் பல நூல்களைத் தமிழில் ஆக்கியுள்ளார்.

 

கணிப்பொறி  நினைவகத்தின் அமைப்பு, வகை, செயல்பாடுகள் பற்றி இப்பாடத்தில் கூறப்பட்டுள்ளன. இத்தகைய அறிவியல் கட்டுரைகளில் கலைச்சொற்கள் மிகுந்து காணப்படும். இப்பாடப் பகுதியிலுள்ள 195 சொற்களில் சுமார் 85 சொற்கள் கணிப்பொறித் துறைக்குரிய கலைச்சொற்களாகவே உள்ளன.

 

Lesson Introduction

 

Dear Students!

 

          Before you learn the lesson, “Computer- An Introduction”, listen to the introduction to this lesson and then read the lesson to have a better understanding

         

          This lesson tells you in a nutshell about computer memory, which is an important part of computer learning. The section “Computer – an Introduction” authored by Dr.Ponnavaiko is given in the form of a lesson.

 

          This section is extracted from the book, “Computer and Communication – An Introduction” published by the Tamilnadu Textbook Society. The author Ponnavaiko is an expert in the fields of engineering and computer studies in Tamil. He is a great exponent or the Tamil language. He has authored several books in the field of computer technology in Tamil.

 

கணிப்பொறி என்பது கொடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து முடிவுகளை வெளியீடாகக் கொடுக்கவல்ல ஒரு மின்னணுக் கருவி. கணிப்பொறி நான்கு அடிப்படைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை.

 

        (i)   உள்ளீட்டுப்பகுதி.

        (ii)  மையச் செயலகம்.

        (iii)  நினைவகப்பகுதி.

        (iv)   வெளியீட்டுப்பகுதி.

 

இவற்றில் நினைவகப் பகுதியை  பற்றி இக்கட்டுரை மூலமாகச் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம்.

 

கணிப்பொறி நினைவகம்

        கணிப்பொறி நினைவகம் பல்லாயிரக்கணக்கான நுண்ணறைகளைக் கொண்டுள்ளது. இந்த நுண்ணறைகள் நேர் அணுகு நினைவகமாக நிறுவப்பட்டுள்ளன. ஒரு நுண்ணறையில் ஒரு நுண்மியைத் தேக்கி வைக்கலாம். ஒரு நுண்மியின் மதிப்பு '0' அல்லது '1' ஆக இருக்கும் இந்தவகை நினைவகம் தன்னுள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நுண்மியின் மதிப்பை மின்திறன் உள்ள வரையில்தான் சேமித்து வைத்திருக்கும். மின்திறன் நிறுத்தப்பட்டவுடன் நுண்மியின் மதிப்பு மறைந்துவிடும். எவ்வளவு நேரத்திற்கு மின்திறன் இருக்கிறதோ அவ்வளவு நேரம்வரைதான் நுண்மிகளின் மதிப்பை நினைவகம் தேக்கிவைத்திருக்கும். எனவே தான் நேர் அணுகு நினைவகம் அழியும் நினைவகம் எனப்படுகிறது. நினைவக நுண்ணறைகளுக்கு மின்திறன் கொடுக்காதபோதும் அவற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நுண்மியின் மதிப்புகள் அழியாமலிருந்தால் அவை அழியாத நினைவகம் எனப்படுகிறது.

நினைவக அமைப்பு

        ஒரு நினைவக அமைப்பு பல்லாயிரக்கணக்கான  சொற்களைத் தேக்கிவைக்கக் கூடிய வகையில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு சொல் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எண்நுண்மிகளைக் கொண்டது. ஒரு கணிப்பொறி நினைவகத்தின் தேக்கத்திறன் எண்நுண்மிகளின் எண்ணிக்கைகளைக் கொண்டு அளவிடப்படுகின்றது.

 

        ஒவ்வொரு சொல்லும் ஒரு பதிவகத்தில் தேக்கி வைக்கப்படுகின்றது. நினைவகத்திலுள்ள ஒவ்வொரு பதிவகத்திற்கும் ஒரு முகவரி உண்டு. இந்த முகவரியின் உதவியால் நினைவகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள சொற்களை எளிதில்

திரும்பப் பெற முடிகிறது. நினைவகத்தில் ஒரு சொல்லை இட்டுத் தேக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் இடுநேரம் எனப்படுகின்றது. ஒரு தரவைக் கணிபொறியின் நினைவகத்திலிருந்து எடுத்துப் பெறுவதற்கு ஆகும் நேரம் எடுநேரம் எனப்படுகின்றது.

 

கணிப்பொறியின் முதன்மை நினைவகம் நேரணுகு நினைவக அமைப்பைக் கொண்டது. இதைத்தவிர, வாசிப்பு (படிப்பு) நினைவகம். விரைவு நினைவகம், துணை நினைவகம் எனப் பல நினைவகங்கள் கணிப்பொறியில் பயன்படுத்தப்படுகின்றன.

 

கலைச் சொற்கள்

கணிப்பொறி                      -               Computer

தரவு                                  -               Data

உள்ளீட்டுப் பகுதி               -               Input Unit

நினைவகம்                -               Memory

நுண்ணறை                 -               Cell

நேர் அணுகு நினைவகம்               -               Direct access Memory

நுண்மி                               -               Bit

தேக்கி வை                        -               Save

மதிப்பு                              -               Value

வெளியீடு                          -               Output

மின்னணு                          -               Electron

கருவி                                -               Device

மையச்செயலகம்                 -               Central Processing Unit

பகுதி                        -               Unit

மின்திறன்                          -               Electric Power

சேமித்து வை                     -               Save

அழியும் நினைவகம்            -               Volatile memory

அழியா நினைவகம்             -               Non-Volatile memory

அமைப்பு                           -               System

எண்நுண்மி                 -               Byte

தேக்கத்திறன்                      -               Memory Capacity

எண்ணிக்கை                      -               Number, Count

அளவிடு                            -               Estimate

பதிவகம்                            -               Register

திரும்பப்பெறு                    -               Retrieve

இடுநேரம்                          -               Input time

எடு                                   -               Access. Take

எடுநேரம்                           -               Access time

முதன்மை நினைவகம் -               Main Memory

வாசிப்பு(படிப்பு)நினைவகம் -               Read Only Memory-ROM

விரைவு நினைவகம்            -               Cache Memory

 

பயிற்சி

 

பின்வரும் வினாக்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து விடையைத் தெரிந்தெடுத்து எழுதுக.

 

1. கணிப்பொறியில் உள்ளீடாக கொடுக்கப்பெறுவது.

 

        () முடிவுகள்

        () வினாக்கள்

        () தரவுகள்                                      விடை ()

 

2. கணிப்பொறியில் கட்டளைகளைத் தேக்கிவைக்கும் இடம்

 

        () உள்ளீட்டுப் பகுதி

        () நினைவகப் பகுதி

        (வெளியீட்டுப் பகுதி                    விடை : ()

 

3.     தரவுகளை ஆராயும் வேலை நடைபெறும் பகுதி.

 

        () மையச் செயலகம்

        () உள்ளீட்டுப் பகுதி

        (வெளீயிட்டுப் பகுதி                    விடை()

4.     சேமிக்கும் நுண்மிகளின் எண்ணிக்கை?

        () ஒன்று

        () நான்கு

        (எட்டு                                 விடை ()

 

5.     அழியும் நினைவகம் என்பது?

        () வாசிப்பு நினைவகம்

        () நேர அணுகு நினைவகம்

        (துணை நினைவகம்                      விடை ()

 

6.     ஒரு எண்நுண்மியில் உள்ள நுண்மிகள்

        () எட்டு

        () பதினாறு

        (ஒன்று                                        விடை : ()

 

7.     கணிப்பொரி நினைவகத்தின் தேக்கத்திறன் அளவிட தேவையானது

       

        () நுண்ணறைகள்

        () பதிவகங்கள்

        () எண்நுண்மிகள்                             விடை: ()

 

8.     நினைவகத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள சொற்களைத் திரும்பப் பெற உதவுவது

       

        () முகவரி

        () எண்நுண்மி

        (பதிவகம்                                    விடை: ()

 

9.     'எடுநேரம்' என்பது

       

        () ஒரு சொல்லை நினைவகத்தில் தேக்குவதற்கு எடுக்கும் நேரம்

        () ஒரு தரவை நினைவகத்திலிருந்து எடுத்துப் பெறுவதற்கு ஆகும் நேரம்

        () ஒரு சொல்லை மையச் செயலகத்தில் ஆய்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்

                                                        விடை: ()                              

                                               
10.  
நேரணுகு நினைவக அமைப்பைக் கொண்டது.

       

        () வாசிப்பு நினைவகம்

        () முதன்மை நினைவகம்

        () விரைவு நினைவகம்                      விடை : ()

 

விரைந்து படித்துக் கருத்தறிதல்

 

 

 

        பின்வரும் பகுதியை விரைந்து படித்துப் பொருள் அறிக.

 

                                        இணையம்

                                    நா. நல்லபெருமாள்

கணினி மின்வலை, தகவல் தளங்கள், இணையம், மின் அஞ்சல் எனப் பலப் பல புதிய புதியச் சொற்கள் நம்மிடையே வெகுவிரைவாகப் பரவியுள்ளன. இந்த அறிவியல் உலகில் இவற்றைப்பற்றித் தெரிந்து கொள்ளாதவர்களைப் 'படிப்பறிவில்லாதவர்கள், உலகோடு ஒட்டி வளராதவர்கள்' என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு நம்மை ஆட்டிப் படைக்கும் ஒரு புதுமைக் கருவியே கணினி.

 

        மிக விரைவாகப் பணி செய்வது. கூடுதல் நேரம் பணி செய்வது போன்றவை நம்மை இன்னலுக்கு ஆளாக்குகின்றன. ஆனால், இன்றைய அறிவியல் உலகில் விரைவு, சோர்வின்மை, மீண்டும் மீண்டும் பணி செய்தல். நேர்த்தி துல்லியம். கூடுதல் கொள்திறன் மற்றும் செயலாக்கம் , தானியக்கம் போன்றவை தேவையாகின்றன. இத்தனை சிறப்புக் கூறுகளும் கொண்டிருப்பதால் கணினி இன்று நம் இரண்டு கண்களைப் போல உள்ளது.

இன்று கணினியின் பயன் இல்லாத துறையே இல்லை. இனிமேல் ஐயங்களுக்கு நூல்களைப் புரட்டிப் பார்க்கவேண்டாம். இருக்கவே இருக்கிறது கணினி அகராதி பார்க்கவேண்டுமா? இலக்கணம் வேண்டுமா? மருத்துவம், பொறியியல், நிர்வாகம் போன்ற எது தேவை என எண்ணுகிறேமோ அது அங்கேயே, அப்போதே, விரைவாகக் கிடைக்கும்.

        இவ்வாறானச் சூழ்நிலையில்தான் உலத்திலுள்ள கணினிகளை இணைக்கும் வழியைக் கண்டறிந்தார்கள். அதுவே 'இன்டர்நெட்' என்னும் இணையம்.

        சிலந்திவலை போலப் பின்னிப் பிணைந்து உலகத்திலுள்ள கணினிகளை இணைப்பதால் இதை இணையம் என்கிறோம் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் இன்னொருவரோடு தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை அளிப்பது இந்த  இணையமே!

        இணையத்திலுள்ள செய்தித் தளங்களுக்குச் சென்று தகவல்களைத் துழாவுவதற்கு என்னென்ன வேண்டும் ? ஒரு கணினியும் அதனுடன் தொடர்புடைய துணைக் கருவிகளும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் - மென்பொருள் இணையத்தில் புகுந்து துழாவுவதற்கான இணையத் தேட்டம் என்னும் மென்பொருள். 'மோடம்' கருவியும் தொலைபேசி இணைப்பும் இணையப் பயன்பாட்டுக்கு என ஒரு கணக்கு. இத்தனையும் இருந்தால் இணையமும் உலகமும் உங்கள் கையில்தான்.

 

சொற்பயிற்சி

கீழ்க்காணும் சொற்களைப் படிக்க. சொற்களுக்கு அருகில் பாடப்பனுவலின் ஒரு பகுதி தரப்பெறுகிறது. பாடப்பனுவலில் சொற்களுக்குச் சமமான மற்றொரு சொல் உள்ளது. அதனை தெரிந்தெடுத்து எழுதுக.

 

        1. கணிப்பொறி

        2. துன்பத்திற்கு

        3. வேகம்

        4. திரும்பத் திரும்ப

        5. அதிக

        6. சந்தேகங்கள்

        7. புத்தகங்களை

        8. நினைக்கிறோம்

        9. பகிர்ந்து

        10. சாதனங்கள்

        11. தேடு

        12. செய்தித் தளங்கள்

விடை

        1. கணினி          2. இன்னலுக்கும்

        3.விரைவு          4. மீண்டும் மீண்டும்

        5. கூடுதல்          6. ஐயங்கள்

        7. நூல்கள்          8. எண்ணுகிறோம்

        9. பங்கிட்டு       10. கருவிகள்

        11. துழாவு         12. தகவல் தளங்கள்