பாடம் - 2. குழந்தைகளும் கல்வியும்

( உரையாடல் )

அறிமுகம்

மாணவ நண்பரே , ' குழந்தைகளும் கல்வியும் ' என்ற பாடத்தைக் கற்பதற்கு முன் இப்பாடம் குறித்த அறிமுகப் பகுதியைக் கேளுங்கள் ; கேட்டவாறு படித்துப் பாருங்கள் .

இப்பாடம் ' குழந்தைகளும் கல்வியும் ' என்ற தலைப்பில் ' உரையாடல் ( ஒருவரோடு ஒருவர் பேசும் ) முறையில் ' அமைந்துள்ளது . குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கும் சிறுவர்களின் உடல்நலமும் மனநலமும் , கெடுவது இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன . அவர்களுக்குக் கல்வி கிடைக்காமல் போவது போன்ற துன்பங்களும் இங்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன . குழந்தைத் தொழிலாளியாக உள்ள கதிர்வேலன் என்பவனை மையமாகக் கொண்டு இந்த உரையாடல் தொடங்குகிறது .

உரையாடலில் பயன்படுத்தும் பண்பான சொற்களாகிய ' வணக்கம் ' ' நன்றி ' ' மிக்க மகிழ்ச்சி ', ' சென்று வாருங்கள் ' போன்றவை இந்தப் பாடத்தில் இடம்பெற்றுள்ளன . மேலும் கருத்துத் தொடர்பை விளக்கும் சொற்களான ' எனவே ' ' ஆனால் ' ' அப்படியானால் ' என்னும் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன . உரையாடலின் இன்னொரு கூறான சிறிய தொடர்களையும் மிகுதியாக இப்பாடம் கொண்டுள்ளது .

Lesson Introduction

This lesson titled 'children and Education' is presented in the conversation form (one to one interaction). The mental and physical health of the child labourers is explained in this lesson. The agony of loss of education is also mentioned here The interaction starts focusing on a child labourer named Kadhirvelan.

குழந்தைகளும் கல்வியும் ( உரையாடல் )

பங்கு பெறுவோர் : ஆசிரியர் ,

மாணவன் கதிர்வேலனின் பெற்றோர்

ஆறுமுகம் , வள்ளி

இடம் : பள்ளிக் கூடத்தில் ஆசிரியரின் அறை

ஆறுமுகம் : ஐயா , வணக்கம் நான் உங்கள் மாணவன் கதிர்வேலனின் தந்தை என் பெயர் ஆறுமுகம் . இவள் என் மனைவி வள்ளி .

வள்ளி : வணக்கம் , ஐயா .

ஆறுமுகம் : தாங்கள் வரச் சொன்னதாகப் பக்கத்து வீட்டுப் பையன் சொன்னான் . ஆகையால் , உங்களைப் பார்க்க வந்துள்ளோம் .

ஆசிரியர் : ஓகோ ; சரி , உங்கள் மகன் கதிர்வேலன் பல நாட்களாகப் பள்ளிக்கு வரவில்லையே , ஏன் ?

ஆறுமுகம் : ஐயா , நான்தான் அவனிடம் பள்ளிக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .

ஆசிரியர் : என்ன ! பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டிய நீங்களே அவனைப் போக வேண்டாம் என்று நிறுத்தி விட்டீர்களே ? பள்ளியில் இலவசப் புத்தகங்கள் , சீருடை , சத்துணவு போன்றவற்றைக் கொடுக்கின்றோமே ! இவ்வளவு இருந்தும் அவனை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?

ஆறுமுகம் : எங்களுக்கு ஆறு குழந்தைகள் , குழந்தைகள் பெரியவர்களாக வளர வளரக் குடும்பச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது . என்னுடைய சிறிய வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை . எனவே கதிர்வேலனை வேலை க்கு அனுப்பியுள்ளேன் .

வள்ளி : கடினமாக உழைத்து உழைத்து இவருடைய உடல்நலமும் அடிக்கடி கெடுகிறது . எனவேதான் அவனை வேலை க்கு அனுப்ப வேண்டியதாயிற்று ஐயா .

ஆசிரியர் : இதனால் கதிர்வேலனின் எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் சிந்தித்தீர்களா ?

ஆறுமுகம் : சிறுவயதிலிருந்தே ஒரு வேலையை ச் செய்து வந்தால் அந்த வேலை யில் நல்ல அனுபவம் கிடைக்கும் . கதிர்வேலனுக்கு இதனால் நன்மை தானே ஏற்படும் ? என்ன கெடுதல் ஏற்பட்டுவிடும் ?

ஆசிரியர் : என்ன கெடுதல் என்று தானே கேட்கிறீர்கள் ? சொல்கிறேன் . கேளுங்கள் . இளம் வயதில் வேலை க்குச் செல்வதால் அவனது கல்வி கெடும் . மூளை வளர்ச்சி குறைந்து சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போகும் . எல்லாவற்றிற்கும் மேலாக அவனது உடல் நலமும் பாதிக்கும் .

வள்ளி : வேலை க்குச் செல்வதால் அவனுக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுமா ?

ஆசிரியர் : ஆமாம்மா , தமிழ்நாட்டில் மட்டும் 8.5 இலட்சம் குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் . இவர்களைக் ' குழந்தைத் தொழிலாளர் ' என்பார்கள் . இவர்கள் , உடல் நலமும் உள்ளப் பண்பும் குன்றும் வகையில் மிகக் கடுமையாக உழைக்கின்றனர் . இது கற்றவர்கள் ஆராய்ந்து அறிந்த உண்மை .

ஆறுமுகம் : அப்படியானால் கதிர்வேலன் போன்ற சிறுவர்களை வேலை க்கு அனுப்புவது தவறு என்று கூறுகிறீர்களா , ஐயா ?

ஆசிரியர் : ஆமாம் , குழந்தைகளை வேலை க்கு அனுப்புவதும் தவறு . அவர்களைத் தொழிற்கூடங்களில் வேலை க்கு அமர்த்திக் கொள்வதும் தவறு .

ஆறுமுகம் : இதில் இவ்வளவு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே ! எங்கள் கண்ணைத் திறந்து விட்டீர்கள் . நன்றி ஐயா . நாளை முதல் கதிர்வேலன் தொடர்ந்து பள்ளிகு வருவான் . வேலை யெல்லாம் இனி அவனுக்குக் கிடையாது . உங்களைச் சந்தித்ததில் நாங்கள் அறிவு பெற்றோம் . இதனை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி இக்கொடுமையை மாற்றுவோம் . நாங்கள் சென்று வருகிறோம் ஐயா .

ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி . சென்று வாருங்கள் .

அருஞ்சொற்பொருள்

சீருடை = பள்ளி , தொழிற்சாலைக்கென வரையறுக்கப்பட்ட ஆடை .. Uniform

சிந்திக்கும் ஆற்றல் = சிந்தனை செய்யும் திறமை .. thinking Capacity

வருவாய் = வருமானம் .. income

சத்துணவு = பள்ளிகளில் இலவசமாக வழங்கும் மதியஉணவு .. free midday meals served at school.

தொழிற்கூடம் = தொழிற்சாலை .. factory

ஆராய்ந்து அறிந்த = ஆராய்ந்து கண்டு பிடித்த .. ( something) found by analysis/research.

புதிய அறிவு = புதிதாக முதன் முறையாக ஒன்றைத் தெரிந்து கொள்வது .. new wisdom, new knowledge

பங்கு பெறுவோர் = பங்கேற்பவர்கள் .. participants

ஈடுபட்டுள்ளனர் = சேர்ந்து வேலை செய்து வருகின்றனர் ..have been involved in working

பெற்றோர் = தாய் தந்தை .. parents

கற்று = அறிந்து .. learned

உள்ளப்பண்பு = மன நிலையில் அமையும் நற்குணங்கள் .. psychological features

குன்றும் = குறையும் .. (reducing)

பாடப் பனுவல்

குழந்தைகளும் கல்வியும் ( உரையாடல் )

ஆறுமுகம் : ஐயா , வணக்கம் , நான் உங்கள் மாணவன் கதிர்வேலனின் தந்தை . என் பெயர் ஆறுமுகம் . இவள் என் மனைவி வள்ளி .

வள்ளி : வணக்கம் , ஐயா .

ஆறுமுகம் : தாங்கள் வரச் சொன்னதாகப் பக்கத்து வீட்டுப் பையன் சொன்னான் . ஆகையால் , உங்களைப் பார்க்க வந்துள்ளோம் .

ஆசிரியர் : ஓகோ : சரி , உங்கள் மகன் கதிர்வே லன் பல நாட்க ளாகப் பள்ளிக்கு வரவில்லையே , ஏன் ?

ஆறுமுகம் : ஐயா , நான்தான் அவனிடம் பள்ளிக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .

ஆசிரியர் : என்ன ! பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டிய நீங்களே அவனைப் போக வேண்டாம் என்று நிறுத்தி விட்டீர்களே ? பள்ளியில் இலவசப் புத்தகங்கள் . சீருடை . சத்துணவு போன்றவற்றைக் கொடுக்கின்றோமே ! இவ்வளவு இருந்தும் அவனை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?

ஆறுமுகம் : எங்களுக்கு ஆறு குழந்தைகள் . குழந்தைகள் பெரியவர்களாக வளர வளரக் குடும்பச் செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது . என்னுடைய சிறிய வருவாயை மட்டும் வைத்துக் கொண்டு எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை . எனவே கதிர்வேலனை வேலை க்கு அனுப்பியுள்ளேன் .

வள்ளி : கடினமாக உழைத்து உழைத்து இவருடைய உடல்நலமும் அடிக்கடி கெடுகிறது . எனவேதான் அவனை வேலை க்கு அனுப்ப வேண்டியதாயிற்று ஐயா .

ஆசிரியர் : இதனால் கதிர்வேலனின் எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் சிந்தித்தீர்களா ?

ஆறுமுகம் : சிறுவயதிலிருந்தே ஒரு வேலையை ச் செய்து வந்தால் அந்த வேலை யில் நல்ல அனுபவம் கிடைக்கும் . கதிர்வேலனுக்கு இதனால் நன்மை தானே ஏற்படும் ? என்ன கெடுதல் ஏற்பட்டுவிடும் ?

ஆசிரியர் : என்ன கெடுதல் என்று தானே கேட்கிறீர்கள் ? சொல்கிறேன் கேளுங்கள் . இளம் வயதில் வேலை க்குச் செல்வதால் அவனது கல்வி கெடும் . மூளை வளர்ச்சி குறைந்து சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போகும் . எல்லாவற்றிற்கும் மேலாக அவனது உடல் நலமும் பாதிக்கும் .

வள்ளி : வேலை க்குச் செல்வதால் அவனுக்கு இத்தனைத் துன்பங்கள் ஏற்படுமா ?

ஆசிரியர் : ஆமாம்மா , தமிழ்நாட்டில் மட்டும் 8.5 இலட்சம் குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் . இவர்களைக் ' குழந்தைத் தொழிலாளர் ' என்பார்கள் . இவர்கள் , உடல் நலமும் உள்ளப் பண்பும் குன்றும் வகையில் மிகக் கடுமையாக உழைக்கின்றனர் . இது கற்றவர்கள் ஆராய்ந்து அறிந்த உண்மை .

ஆறுமுகம் : அப்படியானால் கதிர்வேலன் போன்ற சிறுவர்களை வேலை க்கு அனுப்புவது தவறு என்று கூறுகிறீர்களா , ஐயா ?

ஆசிரியர் : ஆமாம் , குழந்தைகளை வேலை க்கு அனுப்புவதும் தவறு . அவர்களைத் தொழிற்கூடங்களில் வேலை க்கு அமர்த்திக் கொள்வதும் தவறு .

ஆறுமுகம் : இதில் இவ்வளவு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே !

எங்கள் கண்ணைத் திறந்து விட்டீர்கள் . நன்றி ஐயா . நாளை முதல் கதிர்வேலன் தொடர்ந்து பள்ளிக்கு வருவான் . வேலை யெல்லாம் இனி அவனுக்குக் கிடையாது . உங்களைச் சந்தித்ததில் நாங்கள் அறிவு பெற்றோம் . இதனை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி இக்கொடுமையை மாற்றுவோம் . நாங்கள் சென்று வருகிறோம் ஐயா .

ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி . சென்று வாருங்கள் .

இலக்கணப் பகுதி - மெய் எழுத்து

தமிழ் மொழிக்கு உடல் போல் விளங்கும் எழுத்துகள் மெய் எழுத்துகள் எனப்படும் . க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துகளும் மெய் எழுத்துகள் ஆகும் . இவை ஒற்று அல்லது புள்ளி பெற்றிருப்பதால் இவற்றை ஒற்றெழுத்துகள் அல்லது புள்ளி எழுத்துகள் என்றும் குறிப்பிடுவார்கள் .

மெய் எழுத்து வகைகள்

மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும் . அவை

1. வல்லினம்

2. மெல்லினம்

3. இடையினம்

என்பவை ஆகும் .

வல்லினம்

வன்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள் வல்லினம் எனப்படும் .

க் , ச் , ட் , த் , ப் , ற் என்னும் ஆறு எழுத்துகளும் வல்லின எழுத்துகள் ஆகும் .

எ . கா : சுக்கும்

பச்சை

பட்டு

பத்து

அப்பா

பற்று

மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் க் , ச் , ட் , த் , ப் , ற் என்னும் ஆறு எழுத்துகளும் வன்மையாக ஒலிக்கின்றன அல்லவா ? எனவே இவற்றை வல்லினம் என்று கூறுகிறார்கள் .

மெல்லினம் :

மென்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள் மெல்லினம் எனப்படும்

ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் என்னும் ஆறு எழுத்துகளும் மெல்லின எழுத்துகள் எனப்படும் .

எ . கா : சங்கு

பஞ்சு

நண்டு

பந்து

கம்பு

அன்பு

மேலே தரப்பட்டுள்ள எடுத்துகாட்டுகளில் ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் என்னும் ஆறு எழுத்துகளும் மென்மையாக ஒலிக்கின்றன , அல்லவா ? எனவே இவை மெல்லின எழுத்துகள் எனப்படுகின்றன .

இடையினம் :

வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிக்கும் மெய்எழுத்துகள் இடையின எழுத்துகள் எனப்படும் .

ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் ஆறு மெய் எழுத்துகளும் இடையின் எழுத்துகள் எனப்படும் .

எ . கா : செய்தான்

மார்பு

பல்

அவ்வை

தமிழ்

பள்ளி

மேலே தரப்பட்டுள்ள எடுத்துகாட்டுகளில் ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் ஆறு எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன . அல்லவா ? எனவே இவை இடையின எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன .