பாடம் - 3. வருணனை
அறிமுகம்
வருணனை என்றால் ஒரு பொருளைப் பற்றிய விவரங்களை அழகுபட விளக்கிக் கூறுவது ஆகும் . இந்த வருணனையைப் புனைந்துரை என்றும் கூறுவர் , புனைதல் என்றால் அலங்கரித்தல்
என்று பொருள் . அலங்காரமாகக் கூறுவதைப் புனைந்துரை என்றும் வருணனை என்றும் கூறலாம் .
வருணனை நடைக்கு எடுத்துக்காட்டாக உள்ள படம் இது . கதை நிகழும் இடங்களை . கதையோட்டத்தில் நிகழும் காட்சிகளை அழகாக வருணிப்பது புதினங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு போக்கு ஆகும் கல்கி எழுதிய ' பொன்னியின் செல்வன் ' என்ற வரலாற்றுப் பதினத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள வருணனைப் பகுதியாகும் இது .
Lesson Introduction
'VARUNANANI' means describing the sequence of incident's beautiful. This is also known as “PUNAINDHURAI' or Decorative narration. The word PUNAITHAL means 'decorating'. Depicting anything in a decorative style is known as VARUNANAI or PUNAINDHURAI.
படித்துக் கருத்தறிதல்
அந்திநேரம் கடல்
பொன்னியின் செல்வன் ( பாகம் 2)
முதல் அத்தியாயம்
பூங்குழலி
அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது . கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது . கட்டுமரங்களும் , படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன . கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது . அதற்கு அப்பால் வெகு தூரத்துக்கு வெகு தூரம் காடு படர்ந்திருந்தது . காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை ; இலைகள் அசையவில்லை . நாலாபக்கமும் நிசப்தம் நிலவியது . மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன . கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது . கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவதுபோல மெல்ல மெல்ல அசைத்தன .
இரவுமின்னல்
இருள் மேலும் மேலும் கரியதாகிக் கொண்டு வந்தது . இருட்டை விடக் கரியதான இருட்டு எப்படி இருக்க முடியும் ? அப்படியும் இருக்க முடியும் என்று தோன்றுகிறது . திடீரென்று வானத்தில் ஒரு மின்னல் தோன்றி ஒரு மூலையிலிருந்து மறு மூலைவரை பாய்ந்தஹ்டு
அதற்குப் பிறகு தோன்றிய இருட்டு இருளைவிடக் கரியதாயிருந்தது . மின்னலைத் தொடர்ந்து இடி முழக்கம் கேட்டது . கடல் அதிர்ந்தது . திசைகள் அதிர்ந்தன .
இன்னொரு மின்னல் அடிவானத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டது . அது மேலும் மேலும் நீண்டு கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து பற்பல ஒளிக் கோலங்கள் ஆகாயமெங்கும் போட்டு , வானையும் கடலையும் ஜோதி மயமாகச் செய்துவிட்டு . அடுத்த கணத்தில் அடியோடு மறைந்தது .
அருஞ்சொற்பொருள்
அந்தி நேரம் = பகல் பொழுது முடியும் நேரம் .. dusk
கோடிக்கரை = தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஓர் இடம்
கட்டு மரம் = மீனவர்கள் கடலுக்குச் செல்லப் பயன்படுத்தும்
மிதவை . Raft made of logs tied together.
நிசப்தம் = அமைதி
மேகத் திரள்கள் = மேகக் கூட்டங்கள்
பூங்கரங்கள் = பூப்போன்ற கைகள்
மணித்தொட்டில் = அழகான தொட்டில் : beautiful cradle
கரியது = கறுப்பானது : black
அதிர்ந்தது = குலுங்கி ஆடியது . vibrated
ஒளிக்கோலங்கள் = அழகான ஒளிக்கீற்று light in the form of decorative designs
படித்தல்
அந்திநேரம் கடல்
பொன்னியின் செல்வன் ( பாகம் 2)
முதல் அத்தியாயம்
பூங்குழலி
அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது . கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது . கட்டுமரங்களும் , படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன . கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது . அதற்கு அப்பால் வெகு தூரத்துக்கு வெகு தூரம் காடு படர்ந்திருந்தது . காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை : இலைகள் அசைய வில்லை . நாலாபக்கமும் நிசப்தம் நிலவியது . மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன .
கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது . கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவதுபோல மெல்ல மெல்ல அசைத்தன .
இரவுமின்னல்
இருள் மேலும் மேலும் கரியதாகிக் கொண்டு வந்தது . இருட்டை விடக் கரியதான இருட்டு எப்படி இருக்க முடியும் ? அப்படியும் இருக்க முடியும் என்று தோன்றுகிறது . திடீரென்று வானத்தில் ஒரு மின்னல் தோன்றி ஒரு மூலையிலிருந்து மறு மூலைவரை பாய்ந்தது . அதற்குப் பிறகு தோன்றிய இருட்டு இருளைவிடக் கரியதாயிருந்தது .
மின்னலைத் தொடர்ந்து இடி முழக்கம் கேட்டது . கடல் அதிர்ந்தது . திசைகள் அதிர்ந்தன . இன்னொரு மின்னல் அடிவானத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டது . அது மேலும் மேலும் நீண்டு கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து பற் பல ஒளிக் கோலங்கள் ஆகாயமெங்கும் போட்டு , வானையும் கடலையும் ஜோதி மயமாகச் செய்துவிட்டு , அடுத்த கணத்தில் அடியோடு மறைந்தது .
விரைந்து படித்தல்
ஒளி ஈடுபாடு
மாலைச் சூரியன் மலைவாயிலில் மறைகிறான் . இருள் கவிகிறது . விலங்குகளும் பறவைகளும் இருள் மூடிவிட்டால் ஓய்ந்து ஒடுங்கிவிடும் . மனிதன் முயற்சியின் ஒட்டு மொத்த உருவமாகத் திகழ்பவன் . அவன் இருளை வெல்வான் . இருள் வந்து மூடிவிட்டால் மனிதனின் இயக்கம் நின்று போவதில்லை .
தன் மதியைக் கொண்டு நெருப்பை உருவாக்கக் கற்று கொண்ட மனிதன் விளக்கு ஏற்றி ஒளியையும் உருவாக்க கற்றுக் கொண்டான் .
மாலைநேரத்தில் மங்கையர் நீராடினார்கள் . கூந்தலைச் சீவிமுடித்து மலர் சூடிக் கொண்டார்கள் . நெற்றியில் திலகம் அணிந்தார்கள் .
வீட்டு வாயிலில் அந்தக் காலத்தில் ( இரும்பால் செய்த விளக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் ) விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து நெல் மலர் இரண்டையும் கலந்து அவ்விளக்குகளின் முன்பு தூவி வழிபட்டார்கள் .
நாள் தோறும் மகளிர் செய்து வரும் வழிபாடு கார்த்திகை மாதத்தில் முழு நிலவு நாளில் விழாவாக உருவெடுக்கிறது . மழைக்காலம் நின்று பனிக்காலம் தொடங்கும் பருவம் . கார்த்திகை .
மார்கழி என்னும் சொற்களிலேயே இந்தப் பொருள் அமைந்திருக்கிறது .
எங்கும் ஒளி நாட்டம் , ஒளி காணும் முயற்சிகள் , ஒளி ஈடுபாடு , ஒளி வழிபாடு .
இலக்கணம்
சுட்டு எழுத்துகள்
ஒரு பொருளைச் சுட்டிக் காட்ட உதவும் எழுத்துகளைச் சுட்டு எழுத்துகள் என்பர் .
எடுத்துக்காட்டு : அ வன்
இ வன்
உ வன்
மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளில் உள்ள அ , இ , உ என்னும் எழுத்துகள் சுட்டு எழுத்துகள் ஆகும் .
தற்காலத்தில் தமிழ் நாட்டில் உ என்னும் சுட்டு எழுத்தைப் பயன்படுத்துவதில்லை . ஆனால் இலங்கைத் தமிழர்கள் தங்கள் பேச்சில் உ என்னும் சுட்டு எழுத்தைப் பயன்படுத்துகிறார்கள் .
அண்மைச்சுட்டு
அருகில் இருக்கும் பொருளைச் சுட்டிக்காட்டுவது அண்மைச்சுட்டு எனப்படும் .
எடுத்துக்காட்டு :
இவன் , இந்தவீடு , இப்பையன்
சேய்மைச் சுட்டு
தொலைவில் இருக்கும் பொருளைச் சுட்டிக்காட்டுவது சேய்மைச் சுட்டு எனப்படும் .
எடுத்துக்காட்டு :
அவன் , அந்தவீடு , அப்பையன்
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும் எ , யா , ஆ , ஓ , ஏ என்னும் ஐந்து எழுத்துகளும் வினா எழுத்துகள் ஆகும் .
எடுத்துக்காட்டு
எ து உன் வீடு ? - எ
யா ர் உன் தந்தையா ? - யா
அறிஞனா நீ ? - ஆ
யானோ அரசன் ? - ஓ
ஏ ன் இங்கு வந்தாய் ? - ஏ
இவன்தானே செய்தான் ? - ஏ
இந்த எடுத்துக்காட்டுகளில் உள்ள எ , யா என்னும் இரு வினா எழுத்துகளும் சொல்லின் முதலில் மட்டும் வரும் . ஆ , ஓ என்னும் இரு வினா எழுத்துகளும் சொல்லின் இறுதியில் மட்டும் வரும் . ஏ என்னும் வினா எழுத்து , சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் .