பாடம் - 6. தீபங்கள்

அறிமுகம்

' வேரும் வாழ்வும் ' என்ற தலைப்பிலான மலேசிய எழுத்தாளர்களது சிறுகதைத் தொகுப்பு நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ' தீபங்கள் ' என்ற சிறுகதை . பாட நோக்கில் சுருக்கித் தரப்பட்டுள்ளது . இத்தொகுப்பில் 43 சிறுகதைகள் உள்ளன . இவற்றைத் தொகுத்தவர் சை . பீர் முகம்மது ஆவர் . ' தீபங்கள் ' என்ற சிறுகதையின் ஆசிரியர் அன்புச்செல்வன் . இவர் தம் கதைகளுக்காகப் பல முதல் பரிசுகளையும் தங்கப் பதக்கங்களையும் வென்றவர் என்று தொகுப்பாளர் பீர் முகம்மது சிறப்பித்துக் கூறுகிறார் .

மலேசியாவுக்குப் ( இக்கதை எழுதப்பட்ட காலக்கட்டத்தில் இதன் பெயர் மலாயாவாக இருந்தது ). பிழைக்க வந்த அடித்தள மக்கள் ( ஏழை மக்கள் ) பலரில் ஒருவர் இஸ்மாயில் என்ற கதைப்பாத்திரம் . அவரது எதிர்பார்ப்பும் வாழ்க்கைப் போராட்டமும் இச் சிறுகதையில் காட்டப்படுகின்றன . மலேசியாவில் வாழும் தமிழர்களைப் பற்றித் தமிழ் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற குறிப்போடு கதை முடிவு பெறுகிறது .

Lesson Introduction

Dear Students,

Listen to the introductory part of this lesson before learning it. Then read it with comprehension. This is an abridged version of DEEPANGAL, one of the short stories extracted from the collection of short stories compiled by Malaysian writers and titled 'VERUM VAZHVUM', The 43 stories in this collection have been compiled by Mr.Sy.Bir Mohammed. Mr. Anbuchelvan is the author of the story DEEPANGAL. Mr.Sy.Bir Mohammed acclaims thar Mr. Anbuchelvan has won many awards and golden citations.

Ismail is one of the characters in DEEPANGAL who had migrated to Malaysia ( which was Malaya when the story was written). This short story depicts Ismails's expectations and struggle in his life. The story ends with a note by Tamil Nadu, Tamils on the Malaysian Tamils.

படித்துக் கருத்தறிதல்

பகுதி -1- பாடப்பனுவல்

1. அஞ்சல் வழி அனுப்பிய பணம் ஒழுங்காகப் போய்ச் சேருமா அல்லது ‘ எங்காவது தவறி விடுமா என்ற சந்தேகச் சுமையைத் தாங்கியவாறு கடைக்கு வந்தார் . இசுமாயில் .

2. கடைக்கு வந்ததும் காரியங்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டார் .

3. இசுமாயில் இலட்சியமெல்லாம் தன்மகன் சுல்தானை டாக்டராக்குவதிலேயே அடங்கியிருந்தது .

4. அதற்காக எந்தச் சோதனையையும் எதிர்கொள்ளத் தயாராய் இருந்தார் .

5. மலாயாவுக்கு வந்த புதிதில் எல்லாம் சரியாக இருந்தது .

6. எஸ்டேட்டில் கடை . சுகமான வருமானம் .

7. அபிதாவை ' நிக்காஹ் ' செய்த சமயம் அது .

8. பணம் கையிலும் பேங்கிலும் புரண்டது .

9. பிறகு எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கியது .

10. ஐயாயிரம் வெள்ளி பெறுமதி கொண்ட கடை எரிந்து சாம்பலாயிற்று .

11. துயரை விழுங்கிக் கொண்டு ஓர் ' ஓட்டுக்கடையில் ' வேலை க்குச் சேர்ந்தார் .

12. இரண்டு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை .

13. பிறகு ' ஐந்தடி ' யில் சொந்தமாக வியாபாரம் செய்தார் .

14. அதிலும் நிலைத்து நிற்கவில்லை .

15. மூன்று நான்கு முறை முனிசிபல்காரர்களிடம் அகப்பட்டு அபராதம் கட்டி வந்தார் .

16. கடை மூடிய பிறகு இரவில் ' மீ வியாபாரம் ' போட்டுக் கொண்டிருந்த காதரிடம் எடுபிடி

வேலை செய்து இழக்கும் வருமானத்தை ஈடு செய்து கொள்ள முயற்சித்தார் .

17 இந்த வேலை களெல்லாம் முடிந்துவந்து படுக்க இரவு ஒரு மணியாகிவிடும் .

18. திரும்பவும் காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும் .

19. காலம் இப்படியே கரைந்து கொண்டிருந்தது .

அருஞ்சொற் பொருள்

அஞ்சல் வழி அனுப்பிய பணம் = money order. Money sent through the mail service from one place to another

தவறிவிடுமா = தொலைந்து விடுமா will it be lost

சந்தேகச் சுமையைத் தாங்கியவாறு = சந்தேகத்தையே ஒரு சுமையாகத் தாங்கிக் கொண்டு . bearing /shouldering suspicion as a burden

சோதனை = வாழ்க்கையில் நேரும் துன்பம் , துயரம் முதலியவை

எதிர்கொள்ள = சந்திக்க : to face

சுகமான வருமானம் = வாழ்வதற்கேற்ற நல்ல வருமானம் : income to lead a good life

நிக்காஹ் = அரபிச்சொல் , இசுலாமியரின் திருமணச் சடங்கு the maariage ritual of the muslims

எஸ்டேட் = ஆங்கிலச் சொல் : esate

இங்கு ரப்பர் போன்றவை பயிரிடப்படும் பெரிய பண்ணைப்பகுதி

புரண்டது = ( பணம் முதலியன் ) புழங்குதல் , வரவாகிச் செலவாகுதல் . (of money)

தலைகீழாக = முன்பு இருந்த நிலையிலிருந்து நேர் எதிராக ; being the reverse of

வெள்ளி = மலேசியப் பணம் .

பெறுமதி = ( ஒன்றின் ) மதிப்பு value

துயர் = மனத்துன்பம் ; sorrow, grief

துயரை விழுங்கிக் கொண்டு = ( மனத் ) துன்பத்தை வெளியே காட்டாமல் மறைத்துக்கொண்டு ; concealing the grief

தாக்குப்பிடிக்க முடியவில்லை = ( நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு ) தாங்கி நிலைக்க முடியவில்லை நிலைத்தல் ; சமாளிக்க முடியவில்லை ; can not withstand

ஐந்தடி = கடைகளுக்கு முன்னால் ஐந்தடி அளவுள்ள நடைபாதை போன்ற இடம் . இந்த இடத்தில் பொருட்களைக் காலையில் கொண்டு வந்து வியாபாரம் செய்துவிட்டு மாலையில் எடுத்துச் செல்வர் . A space measuring five feet width. In the foot path infront of the shops; Vendors sell their articles in this place from morning to evening.

நிலைத்து நிற்க முடியவில்லை = நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்க முடியவில்லை ; Not able to long last.

அகப்பட்டு = சிக்கிக் கொண்டு ; having got caught;

அபராதம் = தண்டத்தொகை ; fine

மீ = அரிசிமாவால் தயாரிக்கப்பட்ட நூடுல்சு போன்ற வடிவமைப்போடு கூடிய ஒரு சிற்றுண்டி பொதுவாகக் காலை மற்றும் இரவு நேரங்களில் மலாய்க்காரர்கள் , சீனர்கள் , தமிழர்கள் ஆகியோர் விரும்பி உண்ணும் சிறு உணவு : A confectionary item resembling noodles prepared out of rice flour. Malay. Chinese and Tamils use this generally for break fast and as well for dinner.

மீ வியாபாரம் போட்டுக்கொண்டிருந்த = மீ வியாபாரம் செய்து கொண்டிருந்த did மீ business

எடுபிடி வேலை = ( அதிகப் பொறுப்பு இல்லாத ) சிறு வேலை : petty errands; odd jobs

இழக்கும் = பறிகொடுக்கும் ; lose

வருமானம் = வேலை , பணி மூலம் கிடைக்கும் பணம் : income

ஈடுசெய்து கொள்ள = ( இழப்பு போன்றவற்றை ) சரி செய்து கொள்ள ; make good of the loss etc... compensate.

கரைந்து கொண்டிருந்தது = குறைத்து கொண்டிருந்தது , போய்க்கொண்டிருந்தது : Get reduced , passed

பகுதி -2

பாடப் பனுவல்

20. இரண்டு நாட்களாக இஸ்மாயிலுக்கு முடியவில்லை .

21. நல்ல காய்ச்சல் .

22. டிஸ்பென்சரிக்குப் போய் மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு ஊசியரிப் போட்டுக்கொண்டு ... வெளியே சொல்ல முடியாத வேதனையை உள்ளுக்குள் சீரணித்துக் கொண்டு வேலையை ச் செய்து வந்தார் .

23. இரவு ஒரு மணிக்கு மேல் அறைக்கு வந்து பாயைத் தட்டிப் போட்டுப் படுத்தபோது நிதானமே இல்லை .

24. மறு நாள் . இஸ்மாயிலுக்குப் பொழுது விடியவேயில்லை .

25. ஏறக்குறைய அதே நேரத்தில் இஸ்மாயிலின் இலட்சியக் கனவான சுல்தான் தன் நண்பர்களுடன் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் ஒரு சினிமா தியேட்டரில் பகல் காட்சிக்கு ' டிக்கெட் ' எடுப்பதில் முனைந்திருந்தான் .

26 “ அவனுக்கென்னப்பா . அப்பா மலாயாவுலே கடை வெச்சிருக்காரு ..... செலவுக்கில்லேன்னு எழுதினா நாளைக்கே பணம் வரும் " என்று ஒருவன் சொன்னான் .

27 “ சுல்தான் கொடுத்து வெச்சவன்பா " - வேறொருவன் உற்சாகப்படுத்தினான் .

28 “ மலாயாவில் கித்தா மரத்தில் காசு காய்க்கிறது " என்ற நம்பிக்கை காலம் காலமாய்த் தமிழ் நாட்டாரிடம் வளர்ந்துவரக் காரணமாய் இருந்த தீபங்களில் ஒன்று அணைந்து போய் நாதியற்றப்பிணமாய் ' மையத்துக்கொல்லை ' யை நோக்கிச் சென்று கொண்டிருந்தது !

அருஞ்சொற்பொருள்

முடியவில்லை = உடல் நலம் சரியில்லை : not well

நல்ல காய்ச்சல் = மிகுதியான காய்ச்சல் , அதிகக் காய்ச்சல் : intense fever

லீவு போட்டுவிட்டு = வேலை க்கு வராமல் விடுப்பு எடுத்துக்கொண்டு taking leave ( லீவு is the transliterated form of the English word leave)

டிஸ்பென்சரி = சிறிய மருத்துவனை transliterated form of the English word 'dispensary'

மருந்து மாத்திரை = medicines: mixture and tablet

ஊசி = injection

வேதனை = துன்பம் ; distress; mental agony

( வெளியே சொல்ல

முடியாத வேதனை = mental agony (that cannot be expression)

உள்ளுக்குள் சீரணித்துக்

கொண்டு = மறைத்துக்கொண்டு ; hiding

பாயைத் தட்டிப் போட்டு = பாயில் உள்ள தூசி முதலியன் போகும்படி தட்டி பிறகுக் கீழே விரித்துப் போடுதல் . dusting the mat and spreading it on the floor

நிதானம் = consciousness

இஸ்மாயிலுக்குப் = Ismail did not see the day breadk i.e. Ismail expired

பொழுது விடியவே இல்லை

இலட்சியக் கனவு = objective / aim or ambition

மவுண்ட் ரோடு பகுதி = The place around Mount Road area (in Chennai) ( மவுண்ட்ரோடு is the transliterated version of the English form MOUNT ROAD) now it is called as Anna Saalai.

டிக்கெட் = Ticket

செலவுக்கில்லேன்னு = பேச்சு மொழி வழக்கு , இணையான எழுத்துத் தமிழ் வழக்கு ; செலவுக்கு இல்லையென்று ; spoken Tamil usage, equivalent written Tamil usage is செலவுக்கு இல்லையென்று that (he) has no (money) to spend

கொடுத்துவெச்சவன்பா = பேச்சு மொழி வழக்கு . இணையான எழுத்துத் தமிழ் / இலக்கியத் தமிழ் வழக்கு : கொடுத்து வைத்தவன் அப்பா he is gifted or blessed (in his life)

பகல்காட்சி = matinee show of a movie

உற்சகப்படுத்தினான் = enthused. Encouraged

கித்தா மரம் = இரப்பர் மரம் ; ( கித்தா - மலாய்ச் சொல் ) Rubber tree ( கித்தா -a Malay word )

கித்தா மரத்தில்

காசு காய்க்கிறது = தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை ஆசைகாட்டி

மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதற்காகக் கங்காணிகள் பயன்படுத்திய கவர்ச்சியான ஒரு தொடர் . இதன் தெரிபொருள் : மலேசியாவில் இரப்பர் மரத்தில் காசு காய்க்கிற்து . ( எனவே இரப்பர் தோட்ட வேலை க்கு வாருங்கள் ). உட்பொருள் மலேசியா பணச் செழிப்புள்ள ஊர் ( வேலை க்கு வாருங்கள் .) Agents who muster people for jobs in Malaysia use. Such a captivating phrase. The literal meaning of the sentence is: the rubber trees yield/bear money as fruits (and hence you come to Malaysia to take jobs in rubber plantation etc.)

தீபம் = விளக்கு ; lamp

அணைந்துபோய் = put off

நாதியற்ற பிணம் = ( அக்கறைகாட்டி இறுதிச் சடங்கு செய்யும் ) ஆள் இல்லாத பிணம் ; a corpse without a person to conduct the funeral.

மையத்துக் கொல்லை = மலேசியத்தமிழ் வழக்கு ... பொருள் : இடுகாடு ; Malaesian Tamil usage. Meaning burial ground

முழுப்பாடம் - பாடப் பனுவல்

1. அஞ்சல்வழி அனுப்பியப் பணம் ஒழுங்காகப் போய்ச் சேருமா அல்லது எங்காவது தவறி விடுமா என்ற சந்தேச் சுமையைத் தாங்கியவாறு கடைக்கு வந்தார் . இஸ்மாயில் .

2. கடைக்கு வந்ததும் காரியங்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டார் .

3. இஸ்மாயில் இலட்சியமெல்லாம் தன்மகன் சுல்தானை டாக்டராக்குவதிலேயே அடங்கியிருந்தது .

4. அதற்காக எந்தச் சோதனையையும் எதிர்கொள்ளத் தயாராய் இருந்தார்

5. மலாயாவுக்கு வந்த புதிதில் எல்லாம் சரியாக இருந்தது .

6. எஸ்டேட்டில் கடை . சுகமான வருமானம் .

7. அபிதாவை ' நிக்காஹ் ' செய்த சமயம் அது .

8. பணம் கையிலும் பேங்கிலும் புரண்டது .

9. பிறகு எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கியது .

10. ஐயாயிரம் வெள்ளி பெறுமதி கொண்ட கடை எரிந்து சாம்பலாயிற்று .

11. துயரை விழுங்கிக் கொண்டு ஓர் ' ஓட்டுக்கடையில் ' வேலை க்குச் சேர்ந்தார் .

12. இரண்டு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை .

13. பிறகு ' ஐந்தடி ' யில் சொந்தமாக வியாபாரம் செய்தார் .

14. அதிலும் நிலைத்து நிற்கவில்லை

15. மூன்று நான்கு முறை முனிசிபல்காரர்களிடம் அகப்பட்டு அபராதம் கட்டி வந்தார் .

16. கடை மூடிய பிறகு இரவில் ' மீ வியாபாரம் ' போட்டுக் கொண்டிருந்த காதரிடம் எடுபிடி வேலை செய்து இழக்கும் வருமானத்தை ஈடு செய்து கொள்ள முயற்சித்தார் .

17. இந்த வேலை களெல்லாம் முடிந்து வந்து படுக்க இரவு ஒரு மணியாகிவிடும்

18. திரும்பவும் காலையில் நாலரை மணிக்கெல்லம் எழுந்து விட வேண்டும் .

19. காலம் இப்படியே கரைந்து கொண்டிருந்தது .

20. இரண்டு நாட்களாக இஸ்மாயிலுக்கு முடியவில்லை .

21 நல்ல காய்ச்சல் .

22. டிஸ்பென்சரிக்குப் போய் மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு , ஊசியைப் போட்டுக்கொண்டு ..... வெளியே சொல்ல முடியாத வேதனையை உள்ளுக்குள் சீரணித்துக் கொண்டு வேலையை ச் செய்து வந்தார் .

23. இரவு ஒரு மணிக்கு மேல் அறைக்கு வந்து பாயைத் தட்டிப் போட்டுப் படுத்தபோது நிதானமே இல்லை .

24. மறு நாள் . . இஸ்மாயிலுக்குப் பொழுது விடியவேயில்லை .

25 ஏறக்குறைய அதே நேரத்தில் .......... இஸ்மாயிலின் இலட்சியக் கனவான சுல்தான் தன் நண்பர்களுடன் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் ஒரு சினிமா தியேட்டரில் பகல் காட்சிக்கு ' டிக்கெட் ' எடுப்பதில் முனைந்திருந்தான் .

26. “ அவனுக்கென்னப்பா . அப்பா மலாயாவுலே கடை வெச்சிருக்காரு செலவுக்கில்லேன்னு எழுதினா நாளைக்கே பணம் வரும் " என்று ஒருவன் சொன்னான் .

27. “ சுல்தான் கொடுத்து வெச்சவன்பா " - வேறொருவன் உற்சாகப்படுத்தினான் .

28. “ மலாயாவில் கித்தா மரத்தில் காசு காய்க்கிறது " என்ற நம்பிக்கை காலம் காலமாய்த் தமிழ் நாட்டாரிடம் வளர்ந்து வரக்காரணமாய் இருந்த தீபங்களில் ஒன்று அணைந்துபோய் நாதியற்றப் பிணமாய் ' மையத்துக்கொல்லை ' யை நோக்கிச் சென்று கொண்டிருந்தது !

வாய்விட்டு படித்தல்

1. அஞ்சல்வழி அனுப்பியப் பணம் ஒழுங்காகப் போய்ச் சேருமா அல்லது எங்காவது தவறி விடுமா என்ற சந்தேச் சுமையைத் தாங்கியவாறு கடைக்கு வந்தார் . இஸ்மாயில் .

2. கடைக்கு வந்ததும் காரியங்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டார் .

3. இஸ்மாயில் இலட்சியமெல்லாம் தன்மகன் சுல்தானை டாக்டராக்குவதிலேயே அடங்கியிருந்தது .

4. அதற்காக எந்தச் சோதனையையும் எதிர்கொள்ளத் தயாராய் இருந்தார்

5. மலாயாவுக்கு வந்த புதிதில் எல்லாம் சரியாக இருந்தது .

6. எஸ்டேட்டில் கடை . சுகமான வருமானம் .

7. அபிதாவை ' நிக்காஹ் ' செய்த சமயம் அது .

8. பணம் கையிலும் பேங்கிலும் புரண்டது .

9. பிறகு எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கியது .

10. ஐயாயிரம் வெள்ளி பெறுமதி கொண்ட கடை எரிந்து சாம்பலாயிற்று .

11. துயரை விழுங்கிக் கொண்டு ஓர் ' ஓட்டுக்கடையில் ' வேலை க்குச் சேர்ந்தார் .

12. இரண்டு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை .

13. பிறகு ' ஐந்தடி ' யில் சொந்தமாக வியாபாரம் செய்தார் .

14. அதிலும் நிலைத்து நிற்கவில்லை

15. மூன்று நான்கு முறை முனிசிபல்காரர்களிடம் அகப்பட்டு அபராதம் கட்டி வந்தார் .

16. கடை மூடிய பிறகு இரவில் ' மீ வியாபாரம் ' போட்டுக் கொண்டிருந்த காதரிடம் எடுபிடி வேலை செய்து இழக்கும் வருமானத்தை ஈடு செய்து கொள்ள முயற்சித்தார் .

17. இந்த வேலை களெல்லாம் முடிந்து வந்து படுக்க இரவு ஒரு மணியாகிவிடும்

18. திரும்பவும் காலையில் நாலரை மணிக்கெல்லம் எழுந்து விட வேண்டும் .

19. காலம் இப்படியே கரைந்து கொண்டிருந்தது .

20. இரண்டு நாட்களாக இஸ்மாயிலுக்கு முடியவில்லை .

21 நல்ல காய்ச்சல் .

22. டிஸ்பென்சரிக்குப் போய் மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு , ஊசியைப் போட்டுக்கொண்டு ..... வெளியே சொல்ல முடியாத வேதனையை உள்ளுக்குள் சீரணித்துக் கொண்டு வேலையை ச் செய்து வந்தார் .

23. இரவு ஒரு மணிக்கு மேல் அறைக்கு வந்து பாயைத் தட்டிப் போட்டுப் படுத்தபோது நிதானமே இல்லை .

24. மறு நாள் . . இஸ்மாயிலுக்குப் பொழுது விடியவேயில்லை .

25 ஏறக்குறைய அதே நேரத்தில் ............... இஸ்மாயிலின் இலட்சியக் கனவான சுல்தான் தன் நண்பர்களுடன் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் ஒரு சினிமா தியேட்டரில் பகல் காட்சிக்கு ' டிக்கெட் ' எடுப்பதில் முனைந்திருந்தான் .

26. “ அவனுக்கென்னப்பா . அப்பா மலாயாவுலே கடை வெச்சிருக்காரு செலவுக்கில்லேன்னு எழுதினா நாளைக்கே பணம் வரும் " என்று ஒருவன் சொன்னான் .

27. “ சுல்தான் கொடுத்து வெச்சவன்பா " - வேறொருவன் உற்சாகப்படுத்தினான் .

28. “ மலாயாவில் கித்தா மரத்தில் காசு காய்க்கிறது " என்ற நம்பிக்கை காலம் காலமாய்த் தமிழ் நாட்டாரிடம் வளர்ந்து வரக்காரணமாய் இருந்த தீபங்களில் ஒன்று அணைந்துபோய் நாதியற்றப் பிணமாய் ' மையத்துக்கொல்லை ' யை நோக்கிச் சென்று கொண்டிருந்தது !

இலக்கணம்

வேற்றுமை உருபுகள்

பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும் . அவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவதற்குச் சில எழுத்துகள் வரும் அவற்றை வேற்றுமை உருபு என்பர் .

பின்வரும் எடுத்துக்காட்டு வேற்றுமையை எளிதில் விளக்கும் .

பாண்டியன் பார்த்தான்

பாண்டியனைப் பார்த்தான்

இந்த எடுத்துக்காட்டுகளில் பார்த்தல் என்ற தொழில் நடைபெறுகிறது . முதல் எடுத்துக்காட்டில் பார்த்தல் தொழிலைப் பாண்டியன் செய்கிறான் . இரண்டாம் எடுத்துக்காட்டில் அந்தப் பார்த்தல் தொழிலைப் பாண்டியன் செய்யவில்லை . வேறு யாரோ செய்கிறார் . இவ்வாறு மாறுபடுவதற்குக் காரணமாய் இருப்பது எது ?

இரண்டாம் எடுத்துக்காட்டை மீண்டும் பாருங்கள் .

பாண்டியனைப் பார்த்தான்

முதல் எடுத்துக் காட்டிற்கும் இரண்டாம் எடுத்துக்காட்டிற்கும் இடையே இவ்வாறு பொருள் மாறுபாட்டைத் தருவது ஐ என்னும் ஓர் எழுத்து ஆகும் .

பாண்டியன் + ஐ + பார்த்தான்

இந்த ஐ என்னும் எழுத்தை வேற்றுமை உருபு என்கிறோம் .

வேற்றுமை வகைகள்

வேற்றுமை எட்டு வகைப்படும் . அவை :

முதல் வேற்றுமை

மாறுபாடு இல்லாத பெயர் முதல் வேற்றுமை எனப்படும் . இதை எழுவாய் வேற்றுமை என்றும் கூறுவர் .

செழியன் வந்தான்

இதில் உள்ள செழியன் என்ற பெயருடன் எந்த வேற்றுமை உருபும் சேரவில்லை . அப்பெயரின் பொருளும் வேறுபடவில்லை . இவ்வாறு வருவது முதல் வேற்றுமை ஆகும் .

இரண்டாம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமையின் உருபு ஐ ஆகும் .

வீட்டைக் கட்டினான்

இதில் உள்ள ஐ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும் .

மூன்றாம் வேற்றுமை

ஆல் , ஆன் , ஒடு , ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும் . தற்காலத்தில் உடன் என்பதும் மூன்றாம் வேற்றுமை உருபாக இடம்பெறுகிறது .

ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது - ஆல்

ஆசிரியரான் கற்பிக்கப்பட்டது - ஆன்

ஆசிரியரொடு வளவன் வந்தான் - ஒடு

ஆசிரியரோடு வளவன் வந்தான் - ஓடு

ஆசிரியருடன் வளவன் வந்தான் - உடன்

மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளில் இடம்பெற்றுள்ள ஆல் , ஆன் , ஒடு , ஓடு , உடன் முதலியவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும் .

நான்காம் வேற்றுமை

கு என்பது நான்காம் வேற்றுமை உருபு ஆகும் .

காலுக்குச் செருப்பு

ஐந்தாம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இன் , இல் என்பவை ஆகும் .

சென்னையின் நீங்கினான்

கல்வியில் பெரியவர் கம்பர்

இவற்றில் இடம்பெற்றுள்ள இல் , இன் என்பவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும் .

ஆறாம் வேற்றுமை

ஆறாம் வேற்றுமையின் உருபுகள் அது , ஆது , அ என்பவை ஆகும்

எனது கை

எனாது கை

என கைகள்

இந்த எடுத்துக்காட்டுகளில் இடம்பெற்றுள்ள அது , ஆது , அ என்பவை ஆறாம் வேற்றுமை உருபுகள் . இந்த உருபுகளில் அதுவும் ஆதுவும் ஒருமையைக் குறிக்கும் உருபுகள் ஆகும் . அ என்பது பன்மையைக் குறிக்கும் உருபு ஆகும் .

ஏழாம் வேற்றுமை

கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபு ஆகும் .

மலையின் கண் உள்ள குகை

இதில் உள்ள கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபு அகௌம் .

எட்டாம் வேற்றுமை

எட்டாம் வேற்றுமைக்குத் தனியாக உருபு கிடையாது . இதை விளி வேற்றுமை என்றும் கூறுவர் . விளித்தல் என்றால் அழைத்தல் என்று பொருள் .

கந்தன் என்னும் பெயர் கொண்டவனைக் கந்தா என்று அழைப்பது விளித்தல் ஆகும் . இது எட்டாம் வேற்றுமை எனப்படும் .