பாடம் - 7. எல்லாம் போச்சு
அறிமுகம்
மிகச் சுருக்கமான கதைகள்
' குட்டிக்கதை ' ' ஒரு பக்கக் கதி ' என்ற பெயர்களில் வார இதழ்களில் வெளியாகின்றன . இங்குப் பாடமாக உள்ள ' எல்லாம் போச்சு !' என்ற கதை தேவி கணேஷ் என்பவர் எழுதியது . தமிழ்நாட்டில் உள்ள பல நிதி நிறுவனங்கள் ( ஃபைனான்ஸ் கம்பெனிகள் ) மூடப்பட்டு அவற்றில் பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் தங்கள் முதலீட்டை இழந்து துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள் . இதை அடிப்படையாக வைத்து மனிதநேயம் வெளிப்படும் வகையில் எழுத்தப்பட்ட கதைஇது . இஃது ஆனந்த விகடன் 1/4/2001 இதழில் வெளியானது .
இக்கதையில் மிகுதியாகப் பேச்சுத் தமிழ் உரையாடல்களும் , பேச்சு வழக்கில் பொதுவாகக் காணப்படும் ஆங்கிலச் சொற்களும் இடம் பெற்றுள்ளன .
Lesson Introduction
shor stories, about a page in length are usually published in weeklies. This lesson EVERYTHING HAS GONE is written by Mr.Deviganesh. The story goes that a good number of people who have deposited and lost their savings in fake finance investment companies are suffering in Tamilnadu. An attempt has been made in the story to expose the traits and trials of humanity.
Colloquial language and certain english words that are commonly used in day-to-day life occur in th story
வாசித்துக்கருத்தறிதல்
பகுதி -1 - பாடப்பனுவல்
பின்வரும் பகுதியை படித்துப் பொருள் அறிக .
“ எவரெஸ்ட் நிதி நிறுவனத்தை ( பைனான்ஸ் கம்பெனியை ) இழுத்து மூடுவிட்டாங்களாம் . பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது !” சிவகாமி சொன்னாள் . “ உனக்கு எப்படித் தெரியும் " என்று கேட்டார் சுந்தரம் . “ மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன் " என்றாள் சிவகாமி . அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம் . ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது . சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர் . “ அடப் பாவிகளா ...... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன் . இப்ப எல்லாம் போயிடுச்சு . இனி என்
பொண்ணு கதி என்னாகுமோ !” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி . வேதனையோடு பார்த்தார் சுந்தரம் .“ வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன் . இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன் . எப்படி என் பொண்டாட்டி . பிள்ளைங்க மூஞ்சில முழிப்பேன் " கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஓடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார் !. இப்படி இன்னும் பல
அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய் .... “ எல்லாம் திமிருய்யா ... கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது .... அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா ... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு ... இப்ப அழுது என்ன செய்ய " கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு .....
அருஞ்சொற்பொருள்
இழுத்து மூடு = வேறு வழி இல்லாமல் நிறுவனம் . தொழிற்சாலை போன்றவற்றை வலுக்கட்டாயமாக் மூடி விடுதல் ...
Lockup or close an Institution or industry
டெபாசிட் = வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு .
deposit என்பதன் தமிழ் ஒலிபெயர்ப்பு .
கம்பெனி வாசல் = நிறுவனம் 'company ' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம் .
மார்க்கெட் = சந்தை - பழங்கள் , பூக்கள் கறிகாய்கள் போன்றவை விற்கும் கடைகள் உள்ள பகுதி ... 'market' என்பதன் தமிழ் ஒலி பெயர்ப்பு .
கணம் = வினாடி .... moment
மாட்டிக்கொண்டு = உடுத்திக் கொண்டு , போட்டுக்கொண்டு ; put on the shirt etc.. .
கட்டுக்கடங்காமல் = கட்டுப்பாடு இல்லாமல் without control.
வாய் விட்டுக் கதறி அழு = சத்தம் போட்டு அழு ; Wail, scream in a heart breaking manner
பாவிகள் = contemptible persons. Wretched men. Sinners
சிறுகச் சிறுக = சிறிது சிறிதாக , கொஞ்சம் கொஞ்சமாக ... little by little
சேமி = மிச்சப்படுத்து .. save
எதிலாச்சும் = எதிலாவது .... any one .
ஏமாந்து போனா = if get cheated , ' ஏமாந்து போனால் ' என்பதன் பேச்சு வழக்கு
தூக்கி எறிஞ்சி பேசு = மதிப்புக் கொடுக்காமல் மரியாதை இல்லாமல் பேசு ... speak without showing respect.
மூஞ்சில முழி = முகத்தில் விழி .... To face ' முகம் ' என்பதன் பேச்சு வழக்கு ' மூஞ்சி '
அரற்ரு = வேதனையில் அழு .. cry out in grief
அபாக்கியவான் = அதிருஷ்டம் இல்லாதவன் .... unlucky person
சோகக்கடல் = கடல் அளவு சோகம் . sea of grief .. அதாவது மிகுதியான சோகம் .
திமிரு = திமிர் ( கர்வம் ) haughtiness
கவர்ன்மென்ட் பாங்க் = transliteration of the English word Government Bank. அரசு வங்கி
அல்வா குடுக்க = ( அல்வா கொடுக்க ) ஏமாற்ற . Deceive தற்காலப் பேச்சு வழக்கில் உள்ள தொடர்
குத்தல் பேச்சு = மனத்தைப் புண்படுத்தும் பேச்சு ........ hurtful remarks
பகுதி - 2- பாடப்பனுவல்
தளர்ந்து போனார் சுந்தரம் . சோர்வுடன் நடந்து , வீட்டை அடைந்தார் . வாசலில் கவலையோடு சிவகாமி . “ சாப்பாடு போடவா ...” சிவகாமி கேட்க , முறைத்தார் . “ அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு ... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன் ...” என்றார் . “ என்னங்க இது " ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க ? “ விதி .... யாரைச் சொல்ல ..!” என்றாள் சிவகாமி . நொந்த குரலில் . “ அங்கே வந்து பாரு ....
ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது !” “ அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால் ?!” “ எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே ...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும் . அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி .” “ நீங்க என்ன சொல்றீங்க !” “ அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில் நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம் . நம்மால வட்டிகூட சரியா கட்ட முடியவை ... இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க ... அதுக்கு நாமும் ஒரு காரணம் இல்லையா ? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்த்த பணமாச்சே " அழுதார் சுந்தரம் .
அருஞ்சொற்பொருள்
தளர்ந்து போனார் = சோர்ந்து போனார் .. becomes slackened
நொந்த குரலில் = வேதனையான குரலில் .. in a grieved tone
மனசைப் பிசையுது = மனத்தைப் பிசைகிறது . மனத்தை
வேதனைப்படுத்துகிறது ... it pains the mind / heart
மனசை அறுக்குது = மனத்தை அறுக்கிறது . மனத்தை வேதனைப்படுத்துகிறது ... it pains the mind / heart
சுயநலம் = தனது நன்மை . தன்னலம்
சாபம் = curse
முழுப்பாடம் - பாடப் பனுவல்
“ எவரெஸ்ட் நிதி நிறுவனத்தை ( பைனான்ஸ் கம்பெனியை ) இழுத்து மூடிவிட்டாங்களாம் பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது !” சிவகாமி சொன்னாள் . “ உனக்கு எப்படித் தெரியும் " என்று கேட்டார் சுந்தரம் " மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன் " என்றாள் சிவகாமி . அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம் . ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது . சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர் . “ அடப் பாவிகளா ... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன் . இப்ப எல்லாம் போய்டுச்சு . இனி என் பொண்ணு கதி என்னாகுமோ !” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி . வேதனையோடு பார்த்தார் சுந்தரம் . “ வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன் . இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன் . எப்படி என் பொண்டாட்டி , பிள்ளைங்க மூஞ்சில் முழிப்பேன் " கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஒடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார் !. இப்படி இன்னும் பல அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய் ... “ எல்லாம் திமிருய்யா ... கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது .. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா ... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு ... இப்ப அழுது என்ன செய்ய " கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு ...
தளர்ந்து போனார் சுந்தரம் . சோர்வுடன் நடந்து , வீட்டை அடைந்தார் . வாசலில் கவலையோடு சிவகாமி . “ சாப்பாடு போடவா ....” சிவகாமி கேட்க , முறைத்தார் . “ அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு ... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன் ...” என்றார் . “ என்னங்க இது " ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க ? “ விதி .. யாரைச் சொல்ல ...!” என்றாள் சிவகாமி . நொந்த குரலில் . “ அங்கே வந்து பாரு ... ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது !” “ அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால் ?!” “ எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே ...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும் .
அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி .” “ நீங்க என்ன சொல்றீங்க !” “ அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம் . நம்மால் வட்டிகூட சரியா கட்ட முடியலை .. இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க ... அதுக்கும் நாமும் ஒரு காரணம் . இல்லையா ? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்ந்த பணமாச்சே " அழுதார் சுந்தரம் .
படித்தல் - வாய்விட்டுப் படித்தல்
“ எவரெஸ்ட் நிதி நிறுவனத்தி ( பைனான்ஸ் கம்பெனியை ) இழுத்து மூடிவிட்டாங்களாம் . பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது !” சிவகாமி சொன்னாள் . “ உனக்கு எப்படித் தெரியும் " என்று கேட்டார் சுந்தரம் . “ மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன் " என்றாள் சிவகாமி .
அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம் . ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது . சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர் . “ அடப் பாவிகளா ... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன் . இப்ப எல்லாம் போய்டுச்சு . இனி என் பொண்ணு கதி என்னாகுமோ !” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி . வேதனையோடு பார்த்தார் சுந்தரம் . “ வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன் . இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன் . எப்படி என் பொண்டாட்டி , பிள்ளைங்க மூஞ்சில் முழிப்பேன் " கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஒடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார் !. இப்படி இன்னும் பல அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய் ... “ எல்லாம் திமிருய்யா ... கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது .. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா ... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு ... இப்ப அழுது என்ன செய்ய " கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு ...
தளர்ந்து போனார் சுந்தரம் . சோர்வுடன் நடந்து , வீட்டை அடைந்தார் . வாசலில் கவலையோடு சிவகாமி . “ சாப்பாடு போடவா ....” சிவகாமி கேட்க , முறைத்தார் . “ அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு ... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன் ...” என்றார் . “ என்னங்க இது " ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க ? “ விதி .. யாரைச் சொல்ல ...!” என்றாள் சிவகாமி . நொந்த குரலில் . “ அங்கே வந்து பாரு ... ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது !” “ அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால் ?!” “ எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே ...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும் . அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி .” “ நீங்க என்ன சொல்றீங்க !” “ அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம் . நம்மால் வட்டிகூட சரியா கட்ட முடியலை .. இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க ... அதுக்கும் நாமும் ஒரு காரணம் . இல்லையா ? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்ந்த பணமாச்சே " அழுதார் சுந்தரம் .
படித்தல் - விரைந்துப் படித்தல்
“ எவரெஸ்ட் நிதி நிறுவனத்தை ( பைனான்ஸ் கம்பெனியை ) இழுத்து மூடிவிட்டாங்களாம் . பணம் டெபாசிட் செஞ்சவங்க கூட்டம் பதறிக்கிட்டு கம்பெனி வாசல்ல நிக்குது !” சிவகாமி சொன்னாள் . “ உனக்கு எப்படித் தெரியும் " என்று கேட்டார் சுந்தரம் " மார்க்கெட் போயிட்டு வரும்போது பார்த்துப் பதறிப்போயிட்டேன் " என்றாள் சிவகாமி . அடுத்த கணம் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினார் சுந்தரம் . ஃபைனான்ஸ் கம்பெனியின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது . சிலர் வாய்விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தனர் . “ அடப் பாவிகளா ... என்னோட பொண்ணு கல்யாணத்துக்குச் சிறுகச் சிறுக சேமிச்ச பணத்தைக் கொண்டு வந்து போட்டேன் . இப்ப எல்லாம் போய்டுச்சு . இனி என் பொண்ணு கதி என்னாகுமோ !” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி . வேதனையோடு பார்த்தார் சுந்தரம் . “ வீட்டுல மத்தவங்க எதிலாச்சும் ஏமாந்து போனா அதையே பெருசாக்கி தூக்கியெறிஞ்சு பேசிடுவேன் . இப்ப முழுசா அஞ்சு லட்சம் ஏமாந்து போயி நிக்கிறேன் . எப்படி என் பொண்டாட்டி , பிள்ளைங்க மூஞ்சில் முழிப்பேன் " கண்களில் நீரோடு ஆபிசை பாதியில் விட்டு ஒடிவந்திருக்கும் ஒரு ஆண் அரற்றிக் கொண்டிருந்தார் !. இப்படி இன்னும் பல அபாக்கியவான்கள் சோகக் கடல்களாய் ... “ எல்லாம் திமிருய்யா ... கவர்மெண்ட் பாங்க் எத்தனை இருக்குது .. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டா ... ஆண்டவன் அல்வா குடுக்க வெச்சுட்டாரு ... இப்ப அழுது என்ன செய்ய " கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஒருவரின் குத்தல் பேச்சு ...
தளர்ந்து போனார் சுந்தரம் . சோர்வுடன் நடந்து , வீட்டை அடைந்தார் . வாசலில் கவலையோடு சிவகாமி . “ சாப்பாடு போடவா ....” சிவகாமி கேட்க , முறைத்தார் . “ அதை விட ஒரு துளி விஷம் இருந்தா குடு ... குடிச்சுட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துடறேன் ...” என்றார் . “ என்னங்க இது " ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க ? “ விதி .. யாரைச் சொல்ல ...!” என்றாள் சிவகாமி . நொந்த குரலில் . “ அங்கே வந்து பாரு ... ஒவ்வொருத்தர் அழுகையும் வேதனையும் மனத்தைப் பிசையுது !” “ அதுக்கு என்ன செய்ய முடியும் நம்மால் ?!” “ எப்படி சிவகாமி இவ்வளவு சுயநலமா பேச கத்துக்கிட்டே ...? அந்த கம்பெனியில் பணம் கட்டி இழந்தவங்களோட சாபமும் வேதனையும் நமக்கும் பாவமா வந்து சேரும் . அதனோட வேதனையை நீ புரிஞ்சுக்காம இருக்கறது மனசை அறுக்குது சிவகாமி .” “ நீங்க என்ன சொல்றீங்க !” “ அந்த ஃபைனான்ஸ் கம்பெனியில நாம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருக்கோம் . நம்மால் வட்டிகூட சரியா கட்ட முடியலை .. இப்ப கம்பெனியை மூடிட்டு அவங்க ஓடிட்டாங்க ... அதுக்கும் நாமும் ஒரு காரணம் . இல்லையா ? நாம வாங்கிய பணம் பல பேர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைச்சு சேர்ந்த பணமாச்சே " அழுதார் சுந்தரம் .
மொழிப் பயிற்சி
ஒலிபெயர்ப்பும் மொழி பெயர்ப்பும்
பேச்சு வழக்கில் ஆங்கிலம் , வடமொழி போன்ற மொழிகளின் சொற்கள் கலந்து வருகின்றன . ' எல்லாம் போச்சு ' என்ற கதையில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்படாமல் , ஒலிபெயர்ப்பாக ( தமிழ் எழுத்திலேயே ) உள்ளன . இவற்றைத் தமிழில் மாற்றித் தரும் மொழி பெயர்ப்பை - தமிழாக்கத்தைக் காண்போம் .
ஆங்கிலச்சொல் ஒலிபெயர்ப்பு மொழி பெயர்ப்பு
deposit டெபாசிட் நிலைப்புத்தொகை
company கம்பெனி நிறுவனம்
market மார்க்கெட் சந்தை / அங்காடி
office ஆபிஸ் அலுவலகம்
government கவர்ன்மெண்ட் அரசு வங்கி
bank பாங்க்
வடமொழிச்சொல் ஒலிபெயர்ப்பு மொழி பெயர்ப்பு
க்ஷணம் நொடி வினாடி
லக்ஷம் இலட்சம் இலட்சம்
அபாக்யவான் அபாக்கியவான் நல்ல பேறு இல்லாதவன்
விஷம் விஷம் நஞ்சு
மனஸ் மனசு மனம்
இவை தவிர சாபம் கதி , விதி போன்றவையும் கதையில் உள்ளன .
இலக்கணம்
வினைச்சொல்
ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும் .
( எ - டு ) கோவலன் நடந்தான்
பாவை சிரித்தாள்
இந்த எடுத்துக்காட்டுகளில் உள்ள நடந்தான் , சிரித்தாள் என்னும் சொற்கள் நடத்தல் , சிரித்தல் என்னும் செயல்களைக் குறிக்கின்றன . இவ்வாறு செயலைச் செய்வதைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள் எனப்படும் .
வினைமுற்று
ஒரு செயலின் முழுமையான தன்மையைக் காட்டுவது வினைமுற்று எனப்படும் .
நடந்தான் , சிரித்தான் என்னும் எடுத்துக்காட்டுகளில் நடத்தல் , சிரித்தல் , என்னும் செயல்கள் , செயல் செய்தவன் . செய்த காலம் ஆகியவை தெரிகின்றன . இவ்வினைச் சொற்கள் முற்றுப்பெற்ற தன்மையை ( முழுமையான தன்மையை ) க் காட்டுகின்றன . ஆகவே இவை வினைமுற்றுகள் ஆகும் .
எச்ச வினை
பொருள் முடிவு பெறாத வினைச்சொல்லை எச்ச வினை என்று கூறுவர் .
வந்த , கண்டு
என்னும் சொற்களில் பொருள் முற்றுப் பெறவில்லை . எனவே இவற்றை எச்ச வினை என்கிறோம் .
பெயரெச்சம்
ஓர் எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும் .
வந்த பையன்
சென்ற மகன்
மேலே நாம் காணும் எடுத்துக்காட்டுகளில் வந்த , சென்ற என்னும் எச்சவினைகள் பையன் , மகன் என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்துள்ளன .
வினையெச்சம்
ஓர் எச்சம் வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும் .
வந்து சென்றான்
கண்டு வந்தான்
மேலே நாம் காணும் எடுத்துக்காட்டுகளில் வந்து , கண்டு என்னும் எச்ச வினைகள் சென்றான் , வந்தான் என்னும் வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன .