10

இக்காலக் கவிதை -2

பாடம் 1

கண்ணதாசனின் கவிதைகள்

1.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர் கண்ணதாசன். கவியரசு என்று போற்றப்பட்டவர். அரசியலும் திரைப் படமும் விளம்பரம் மிக்க துறைகள் அல்லவா? தமது திறமையால் இந்த இரண்டிலும் முன்வரிசையில் இடம் பிடித்தவர் இவர். இலக்கியப் பத்திரிகைகள் நடத்தி இதழியல் துறையிலும் சிறந்து நின்றவர். இதனால் உலகறிந்த புகழுடன் விளங்கினார். இவரது கவிதைகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

1.1 கண்ணதாசன்

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூர். இங்கு வாழ்ந்த சாத்தப்பன்-விசாலாட்சி பெற்ற எட்டுப் பிள்ளைகளுள் ஒருவர் முத்தையா. இலக்கிய ஆர்வத்தால் தம் பெயரைக் கண்ணதாசன் என்று புனைந்து கொண்டார். பிறந்த நாள்: 24.6.1927.

ஆர்வமும் ஆற்றலும்

இளமையிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இலக்கியப் படைப்பில் ஆர்வம் மிகுதி. தந்தை பெரியாரின் சமூகச் சிந்தனைகளும், அறிஞர் அண்ணாவின் தமிழும், அரசியல் கருத்துகளும் இவரை ஈர்த்தன. சிறந்த மேடைப் பேச்சாளர்; திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் ஒருவர் ஆனார்.

சாதனைகள்

தமிழ்த் திரைப்பட உலகில் நல்ல தமிழும், பகுத்தறிவுக் கருத்துகளும் நுழைந்த காலப்பகுதி அது. பாரதிதாசன், உடுமலை நாராயணகவி, கம்பதாசன் இவர்களைத் தொடர்ந்து திரைத்துறையினுள் கண்ணதாசன் புகுந்தார். அழியாத இலக்கியங்கள் என்று பாராட்டப்படும் ஆயிரக் கணக்கான திரைப்பாடல்களை எழுதினார். இவரது திரைப்பட உரையாடல்களில் இலக்கியத் தரம் இருந்தது.

அரசியலும் கொள்கையும்

அரசியலில் திராவிட இயக்கத்திலிருந்து அதற்கு எதிரான தேசிய இயக்கத்திற்கு மாறினார். இந்தக் கொள்கை மாற்றம் இவரது இலக்கியப் படைப்புகளில் இருவேறு முரண்பட்ட நிலைகளை ஏற்படுத்தி விட்டது. நாடு, இனம், மொழி, சமயம் பற்றிய கருத்துகளில் இந்த முரண்பட்ட நிலைகளைக் காணலாம்.

படைப்புகள்

ஆறு கவிதைத் தொகுதிகள்; ஆயிரக் கணக்கான திரைப்பாடல்கள்; மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி என்னும் குறுங்காவியங்கள்; இயேசு காவியம், கிருஷ்ண அந்தாதி, தைப்பாவை ஆகியவை இவரது கவிதைப் படைப்புகள். வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்து மதம் இவை இவரது உரைநடைப் படைப்புகளில் சிறந்தவை. செப்புமொழி, குட்டிக் கதைகள் ஆகிய தொகுப்புகள் புகழ்பெற்றவை.

பல திரைப்படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் தீட்டியுள்ளார். பல புதினங்களைப் படைத்துள்ளார். சேரமான் காதலி இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது பெற்றது.

தென்றல், தென்றல்திரை, கடிதம், கண்ணதாசன் முதலிய சிறந்த இலக்கிய இதழ்களை நடத்தினார். கண்ணதாசன் தமிழின் தலைசிறந்த இலக்கிய இதழ்களுள் ஒன்றாகும்.

மறைவு

அமெரிக்க சிகாகோ நகரில் 17.10.1981 அன்று உயிர் நீத்தார்.

1.2 உணர்ச்சிக் கவிதைகள்

தோழர்களே! உணர்ச்சி மானிடப் பொதுவானது. எல்லாரும் உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறோம். ஆனால், கவிஞன் உணர்ச்சிகளால் ஆட்டிவைக்கப்படுகிறான்; அலைக்கழிக்கப் படுகிறான். அதனால்தான் அவனது சொற்களில் மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்கின்றன. தமிழ்க் கவிஞர்களிலேயே மிகுதியாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவர் கண்ணதாசன்தான். சில சான்றுகளைப் பார்ப்போம்.

1.2.1 அவலம் உணர்ச்சிகளிலேயே மிக்க ஆற்றல் உடையது அவலம் என்னும் துயரம்தான். அடிக்கடி உள்ளத்தின் அணையை அது உடைத்து விடுகிறது. கண்ணீர் வெள்ளப் பெருக்கிற்குக் காரணமாகி விடுகிறது.

கலங்கல் பாக்கள்

சொந்த வாழ்வின் சில தவறான பழக்கங்கள் காரணமாக உடலும் மனமும் பாதிப்புக்கு உள்ளானவர் கண்ணதாசன். உள்ளம் எல்லாம் நினைவுகள்; நினைவுகள் எல்லாம் கவலைகள்தாம் அவருக்கு. நினைக்கத் தெரிந்த மனமே என்ற கவிதையில் (5 ஆம் தொகுதி) கலங்குகிறார்.

பட்டகடன் தீர்ப்பேனா

பாதகரைப் பார்ப்பேனா

பாவலர்க்கு மேடையிலே

பரிந்துரைக்கப் போவேனா?

கொட்டுகின்ற தேளை எல்லாம்

கும்பிட்டு நிற்பேனா?

கொல்லுகின்ற சூழ்நிலையைக்

குடித்து மறப்பேனா?

நெஞ்சை ஆற்ற, நிலையை மாற்ற வழி தேடுகிறாராம். காணவில்லை. கதறுகிறார்….

ஆற்றும்வழி தேடுகிறேன்

ஆறவில்லை தேறவில்லை

காற்றுஒன்றை இந்தக்

கட்டையிலே விட்டுவைத்த

கூற்றுவனைக் காணாமல்

குழப்பம் அகல்வதில்லை.

(வஞ்சக நண்பர்களை, பாதகர், கொட்டுகிற தேள் என்கிறார்; காற்று = இங்கு மூச்சு;கட்டை = உடம்பு; கூற்றுவன் = எமன்)

செத்தால்தான் நிம்மதி என்று மனம் வெம்புகிறார்.

அவலம் என்னும் துன்பச் சுவையைப் பிழிந்து திரைப்பாடல்கள் பல வடித்திருக்கிறார். ஆயிரம் சான்று தரலாம். இங்கு ஒன்று காட்டப்படுகிறது.

எனது கைகள் மீட்டும்போது

வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும்போது

மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப்படைத்தான்

இறைவன் என்பவனே

கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த

இறைவன் கொடியவனே…

அவலம் ஒருவனை எந்த அளவுக்குத் தன்னிரக்கத்தில் தவிக்க விடுகிறது என்பதைக் கூர்மையாகச் சொல்கிறார்.

கண்ணிலே நீர் எதற்கு? என்று கேள்வி கேட்டுக் காலம் எல்லாம் அழுவதற்கு என்று விடை கண்டவர் அவர். நெஞ்சிலே நினைவு எதற்கு? வஞ்சகரை மறப்பதற்கு என்று துயரத்தின் உச்சியில் ஏறுகிறார். நினைவு இருப்பதே மறப்பதற்குத்தான் என்ற ஒரு முரண் ஆன கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இந்தக் குழப்பம் அழகான குழப்பம்!

இரங்கல் பாக்கள்

இதயத்தில் நிறைந்தவர்கள் இறக்கும் போது இதயம் துடிக்கும் துடிப்பை உணர்ச்சி குன்றாது எடுத்துரைக்க எல்லாருக்கும் முடிவதில்லை. ஆனால் கவிஞனால் முடிகிறது. கண்ணதாசன் அந்தக் கலையில் வல்லவர்.

திரைக்கவிஞர் இவர். இசைக்கலை இவர் இதயத்தின் நாதம். நாதசுர இசைமேதை ஒருவன் இறந்தான். நெஞ்சம் தாங்குமா? திருவாவடுதுறை இராஜரத்தினம் இறந்தபோது கண்ணதாசன் இரங்கல் கவிதை பாடினார். இதன் ஒவ்வொரு வரியும் கண்ணீர்ச் சரமாக இருந்தது. கலைவாணர் என்.எஸ்.கே. மரணப் படுக்கையில் கிடந்தபோது பார்க்கச் சென்றார் கண்ணதாசன். அப்போது ‘எனக்கும் அதைப்போல் ஒரு இரங்கல் கவிதை பாட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாராம் கலைவாணர்.

கல்வி வள்ளல் அழகப்பா மறைந்தபோது இவர் பாடிய இழப்புக் கவிதை வரலாற்றின் பக்கங்களில் காய்ந்து போகாத கண்ணீராய் இருக்கிறது.

முதலாளி மார்களிலே முழுமுதலைக்

கல்விக்கே முடிந்து வைத்த

முதல்ஆளை நீ கொன்றாய்! மற்றவர்கள்

வாழ்கின்றார், முதல் அடிக்க.

சதிகாரச் சாவே, நின் வயிற்றினிலே

சர்வகலா சாலை காண

இதமான ஆள்வேண்டும் என்றோ எம்

பெருமகனை எடுத்துச் சென்றாய்?

(முழுமுதல் = செல்வம் முழுவதையும்; முடிந்து வைத்த = கல்விக்காகவே மூட்டைகட்டிக் கொடுத்துவிட்ட; இதமான ஆள் = (கல்லூரி கட்டுவதற்குப்) பொருத்தமான இனிய மனிதர்). என்று ‘சாவைச்’ சட்டையைப் பிடித்து உலுக்குகிறார்.

பல கல்வி நிலையங்களும், காரைக்குடி பல்கலைக் கழகமும் இன்று வள்ளல் அழகப்பா பெயர் சொல்லி நிற்கின்றன. வள்ளல் அழகப்பா (முதல்தொகுதி) என்னும் இந்த இரங்கல் கவிதை அவற்றைவிட உயர்வான ‘சொல் மண்டபமாக’ அமைந்து அவர் பெயர் சொல்லி நிற்கிறது.

‘முழுமுதல்’ என்றால் இறைவன் என்றும் பொருள் உண்டு. கல்விக்காக உதவும் பணம் கடவுளுக்குச் சமம் என்னும் நயமான பொருளையும் இக்கவிதைச் சொல் தருகிறது பாருங்கள்!

ஒப்பற்ற தலைவர் ஜவஹர்லால் நேரு இறந்தபோது கண்ணதாசன் பாடிய இரங்கல் கவிதை மறக்க முடியாதது. “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ சஞ்சலமே நீயும் ஒரு சஞ்சலத்தைக் காணாயோ?” என்ற வரிகள் அவலத்தின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்பவை.

அண்ணா, பெரியார், பட்டுக்கோட்டை, கலைவாணர் ஆகியோர் இறந்தபோது இவர் பாடிய இரங்கல் பாக்கள் உயிர்த்துடிப்பு உள்ளவை.

சீசர் என்ற தன் வளர்ப்புநாய் இறந்தபோதும் இரங்கல்பாப் பாடினார்.

இருந்து பாடிய இரங்கல் பா என்ற தலைப்பில் தனக்கே இரங்கல்பாப் பாடிக் கொண்ட முதல் கவிஞர் கண்ணதாசன் தான். (4 ஆம் தொகுதியில் உள்ளது)

1.2.2 காதல் உலகின் உயிர் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற ‘உயிர்இயற்கை’ காதல். இது வாழ்வையே இயக்குகின்ற பேருணர்வு, கவிதைகளுக்கும், கலைகளுக்கும் வற்றாத ஊற்றாக இருந்து வளம்தருவது காதல். கண்ணதாசன் காதலை உடல் இன்பத்திற்கான ஒரு ‘போகப்’ பொருளாகக் கருதவில்லை. அவரைப்போல் காதலைப் புனிதப்படுத்தி உயர்வு செய்பவர் வேறு எவரும் இருக்க முடியாது.

விந்தையாய்த் தொடங்கும் காதல்

காதல் முன் அறிவிப்பு எதுவும் இன்றி, எதிர்பாராமல் தோன்றுகிறதாம். இதை

மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்

சொல்லாமல் கொள்ளாமல் வந்தது

என்கிறார்.

ஒரு திருடனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த நாட்டியக்காரியின் காதலை ஒரு திரைப்பாடலில் காட்டுகிறார்;

காட்டினில் ஒருவன் என்னைக் கண்டான்

கையில் உள்ளதைக் கொடு என்றான்

கையில் எதுவும் இல்லை என்று

கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்

அவன்தான் திருடன் என்று இருந்தேன்

அவனை நானும் திருடிவிட்டேன்

முதன்முதல் திருடும் காரணத்தால்

முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்.

கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன் என்பதில், காதலின்-வாசல் கண் என்பதை எவ்வளவு அழகாக உணர்த்துகிறார்!

பிரிவிலே வளரும் காதல்

பிரிவுதான் காதலின் ஆழத்தையும் உறுதியையும் காட்டும் அளவுக் கருவி. அத்தியைப் பிரிந்த மருதியின் உடல் மெலிகிறது. இதை-

வேகும் நிலவினுக்கும் – அனல்

வீசி வதைத்திடும் தென்றலுக்கும்

பாகுக் கனிமொழியாள் – ஒரு

பாதி உடல்தனைப் பறிகொடுத்தாள்

(ஆட்டனத்தி ஆதிமந்தி)

என்று பாடுகிறார். குளிர்ந்த நிலவும், தென்றலும் பிரிந்த காதலரைச் சுட்டு வருத்தும். இதை அழகான உணர்வு ஓவியமாகத் தீட்டுகிறார். பாதியாக மெலிந்தாள் என்பதைப் ‘பாதி உடல்தனைப் பறிகொடுத்தாள்’ என்னும் போது கவிதை, உணர்ச்சி வேகம் பெறுகிறது.

பிரிந்த காதலர் சேரும்போது பேச்சுக் கூட இருவருக்கும் இடையில் தடையாகி விடும். வள்ளுவரும் கம்பரும் கூட இந்த நிலையைப் பாடியுள்ளனர். கண்ணதாசன் இந்த நிலையை உணர்ச்சி மிக்க மௌன நாடகக் காட்சியாக்கிக் காட்டுகிறார். பிரிந்தவர் இருவரும் சேரும் நிலையைத் தெய்வத்தின் சன்னதியாகப் புனிதப்படுத்திக் காதலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைப் படைத்து விட்டார்.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போதில்

அழுதால் கொஞ்சம் நிம்மதி.

பேச மறந்தே சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி

காதலைப் பாடுவதில் தனக்கு உவமை இல்லாத தனிப்பெருமை பெறுகிறார் கண்ணதாசன்.

1.2.3 தாய்மை தாலாட்டுப் பாடல், தாயின் வாய்வழி ஊறிவரும் தாய்ப்பால். தன் அன்பின் ஆழ, அகலத்தை முத்தங்களால் சொன்னது போகத் தன் சொல்லால் தாய் பாடும் மிச்சங்களே தாலாட்டுகள். தாலாட்டுப் பாடுவதில் கண்ணதாசனுக்கு இணை எவரும் இல்லை. அவரது ஆண்மைக்கு உள்ளே ஒரு பெண்மை இருப்பதாக நமக்குத் தோன்றும்.

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?

மங்காத கண்களில் மை இட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?

மக்கள் செல்வத்தினும் மேலான செல்வம் எது என்பதைக் கவிதை உணர்த்துகிறது.

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,

மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா ?

அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

எப்படிப்பட்ட உருக்கமான தாய் – சேய் பிணைப்பு இவ்வரிகளில் வெளிப்படுகிறது! இப்படிப் பல தாலாட்டுப் பாடல்கள்! அவற்றின் இனிமையில் கவிதை அழகு தூங்குகிறது.

தாலாட்டில் கலந்துவரும் அறிவுரைகள்

காலம்இது காலம்இது கண்ணுறங்கு மகளே

காலம்இதைத் தவறவிட்டால் தூக்கம்இல்லை மகளே

என்று தொடங்கும் ஒரு தாலாட்டு. இது பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் ஒவ்வொரு காரணத்தால் தூக்கம் இல்லாமல் போகும்; எனவே ‘இப்போதே குழந்தைப் பருவத்திலேயே தூங்கிக்கொள்’ என்று குழந்தைக்குச் சொல்லும் அறிவுரைகள் நிறைந்தது. பெண் வாழ்வின் சுமைகளை, போராட்டங்களை அழகாக எடுத்துச் சொல்வது. கண்ணதாசனின் கவிதைத் திறமைக்கு இந்த ஒரு பாடலை மட்டுமே சான்றாகக் காட்டலாம்.

1.3 தத்துவக் கவிதைகள்

வாழ்வின் இன்பங்கள்-துன்பங்கள், மேடுகள்-பள்ளங்கள் எல்லா அனுபவங்களிலும் எல்லை தாண்டி நின்றவர் கண்ணதாசன். அனுபவங்களின் சாறு தத்துவமாகத் திரள்கிறது. அது சிலவேளைகளில் சித்தாந்தம் ஆகிறது. சில வேளைகளில் ஆன்மிகம் ஆகிறது.

1.3.1 சம உடைமைத் தத்துவம் 4ஆம் தொகுதியில் உள்ள ஒரு பானையின் கதை என்ற கவிதையில் ஓர் ஏழைக் குடும்பத்தின் வறுமை நிலையைச் சோற்றுப் பானையே கதையாய்ச் சொல்கிறது. அருமையான வறுமை ஓவியம் இது. கவிதையின் இறுதியில்

இப்படியே பசிநீளும் என்றால் இது

என்ன சுதந்திர பூமி ? – ஏன்

இத்தனை ஆயிரம் சாமி ? – ஒரு

கைப்பிடியில் பலபூட்டை உடைத்து இன்று

காத்திடுவோம் எங்கள் வீட்டை – பழி

தீர்த்திடுவோம் இந்த நாட்டை!

என்று கொதிக்கிறது பானை. வறுமை பொறுமையை மீறச் செய்கிறது. புரட்சியை எழுப்பிடும் சித்தாந்தக் குரலாக ஒலிக்கிறது.

நெருப்பின் மக்களே என்ற கவிதையில் இந்தக் குரல் போர் முழக்கமாக ஒலிக்கிறது.

நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே – இனி

நேருக்கு நேர்நின்று பார்ப்போம் – சம

நீதிக்குப் போர்ப்படை சேர்ப்போம்

சமஉடைமைப் புரட்சித் தத்துவம் பேசுகிறது. வீரச்சுவை பொங்குகிறது.

1.3.2 ஆன்மிகத் தத்துவம் தன் உள்ளம் அறியத் தவறு செய்தவன் வருந்துகிறான். சிந்திக்கிறான். திருந்துகிறான், தத்துவம் பிறக்கிறது. கடுகு போல் சிறுத்து இருந்த உள்ளம் கடவுள் படைப்பிலேயே பெரிய உள்ளமாக விரிகிறது. கடவுளின் அரசாங்கமாக ஆகிறது. ஞான பூமியாய் ஆகிறது. இதை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்:

எறும்புத் தோலை உரித்துப்

பார்க்க யானை வந்ததடா – என்

இதயத் தோலை உரித்துப் பார்க்க

ஞானம் வந்ததடா.

நண்பர்களே! கண்ணதாசனின் தத்துவப் பாடல்களைப் பற்றிப் பெரிய ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. சான்றுக்காகச் சில பாடல் பகுதிகளையே நாம் பார்த்தோம்.

மொத்தமாகப் பார்க்கும் போது, இவர் கவிதைகளில் உலகப் பொருள்கள் எல்லாமே உள்ளடக்கம் ஆகி இருக்கின்றன எனக் கூறலாம்.

பிற்காலத்தில் படைத்த கவிதைகள் பெரும்பாலும் பக்தி – கடவுள் நம்பிக்கை சார்ந்தவையாகவே அமைந்தன. 5, 6 ஆம் தொகுதிகளில் இவ்வகைக் கவிதைகளே நிறைந்து உள்ளன.

1.4 இலக்கியச் சுவை

படித்த உடனே மனத்திற்குள் சென்று அமர்ந்து கொள்ளும் எளிமையான சொற்கள்; ஒவ்வொரு சொல்லிலும் சந்த இசைநயம் இயல்பாகவே ஒலிக்கும். வளமான கற்பனைகள், புதுமையான மொழிநடை; சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம் இவற்றின் புலமையால் வந்த செழுமையான தமிழ்நடை இவருடையது. பெருமிதமும், காதல் உணர்வும், நகைச்சுவையும், சோகமும் இழையோடும் நடையழகு இயல்பாக அமையப் பெற்றவர் கண்ணதாசன். வாழ்க்கைப் பாதையில் மேடு, பள்ளங்கள் பல கண்டவர். இதனால் தத்துவம் இவர் எழுத்துகளில் தனி இடம் பிடித்து உள்ளது. இந்தச் சிறப்புகளால் எல்லாவகை மனிதர்களையும் எளிதில் கவர்ந்து, இதயங்களில் கலந்து நிற்கின்றன இவரது கவிதைகள். இனி இவற்றைப் பற்றி விரிவாக அறியலாம்.

1.4.1 சொல்லாட்சி நண்பர்களே! கவிஞன் என்பவன் சொற்களைக் கட்டுபவன் என்று பலரும் நினைக்கின்றனர். இல்லை, அவன் சொற்களால் காட்டுபவன், அவன் காட்டும் காட்சி தெளிவாய் இருக்க வேண்டும்; அழகாய் இருக்க வேண்டும். புரியாத தன்மை அறவே கூடாது. எளிமையில் செழுமை வேண்டும்.

பாரதி, பாரதிதாசன், கவிமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் இப்படித்தான் எழுதினார்கள். இந்தச் சிறப்பான படைப்புக் கலைத்திறன் கண்ணதாசனிடம் மிகுதியாகவே இருந்தது. அவர் பரவலாகப் புரிந்து கொள்ளப் பட்டதற்கும், புகழ் பெற்றதற்கும் காரணம் இதுதான்.

இதழ்களில் தலைப்புகள்

கண்ணதாசன் சிறந்த இதழ் ஆசிரியர். தென்றல், தென்றல்திரை இதழ்களை நடத்திய போதே இதை வெளிப்படுத்தினார். தென்றல்திரை இதழில் திரைக்கலையின் நுட்பங்கள் பற்றிய ஒரு தொடர் வந்தது. அதற்குத் தலைப்பு ‘எங்கள் தொழில் கேளாய் இளங்கொடியே சொல்லுகிறேன்’. திறனாய்வுப் பகுதிக்குத் தலைப்பு: ‘பார்த்தோம், பட்டது, சொல்கிறோம்’. தலைப்புகள் மட்டுமல்ல, படங்களுக்கு அடிக் குறிப்புக்கூட அழகான கவிதை நடையில் எழுதுவார்.

நடிகை பத்மினி கார் ஓட்டுவதுபோல் அமைந்த படத்துக்கு:

வண்ணமயில் கார்ஓட்ட வந்துவிட்டார் என்றாலே

எண்ணெய் இல்லாமலே இந்தக்கார் ஓடாதோ !

அரிய தத்துவம்- எளிய சொல்லாட்சி

தத்துவம் என்பது அறிவின் சாறு. வாழ்வில் பட்டு அறிந்த அனுபவ உண்மைகளின் திரட்டு. அதனால் பொதுவாக அவை புரிந்து கொள்வதற்கு எளிதாக இருப்பதில்லை. ஆனால் கண்ணதாசனின் சந்தக் கவிதைகளில் கூட, தத்துவம் குழந்தையின் சிரிப்பைப்போல் எளிமையாகப் பூத்திருக்கும். இனத்தால், மதத்தால், சாதியால், செல்வ நிலையால் நமக்குள் பேதங்கள் (பிரிவினைகள்) கூடாது என்பதை எவ்வளவு எளிதாக விளக்குகிறார் பாருங்கள் :

சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்துப் பார்த்ததிலே

வடநாட்டு எலும்புஎன்று வந்தஎலும்பு இல்லையடி

தென்னாட்டு எலும்புஎன்று தெரிந்தஎலும்பு இல்லையடி

எந்நாட்டு எலும்பென்றும் எழுதிவைக்க வில்லையடி

ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவை

எரியூட்ட வில்லைஎனில் எந்நாளும் துன்பமடி

(இனமேது-4ஆம்தொகுதி)

குறிப்புமொழி

ஆட்டனத்தி ஆதிமந்தி கண்ணதாசன் படைத்த சிறந்த காவியம். கதையின் தலைவன் ஆட்டனத்தி, சேரமன்னன். வீரத்துடன், ஆடல் கலையிலும் வல்லவனாக விளங்கினான். இவனிடம் ஆடல் கற்க வந்த மருதி, ஆதிமந்தி இருவரும் அத்தியிடம் காதல் கொண்டனர். அவன் நெஞ்சமோ மருதியை விரும்பியது. அவளுக்காகவே கரூர் மன்னனுடன் போர் செய்தான். வென்றான். அதற்குப் படை உதவிய சோழன் கரிகாலனின் மகளான ஆதிமந்தியை மணக்க நேர்ந்தது. மருதி புத்தத் துறவியானாள். காவிரிப் புதுவெள்ளத்தில் நீராடும்போது அத்தியை வெள்ளம் அடித்துச் சென்று கடலில் தள்ளியது. அங்கிருந்த மருதி அவனை மீட்டுக் காப்பாற்றினாள். தானே மூச்சை அடக்கி உயிர்நீத்தாள். கணவனைத் தேடிக் கரைவழியே வந்த ஆதிமந்தி அவனைக் கண்டாள். இருவரும் மருதிக்குச் சிலைவடித்துக் காதல் தெய்வமாய் வழிபட்டனர். இது காப்பியக்கதை. சங்க இலக்கிய வரலாற்றுக் குறிப்பைக் கொண்டு கண்ணதாசன் படைத்த அழகிய குறுங்காவியம் இது. இதில் வரிக்குவரி அழகிய சொல்லாட்சியால் மயக்குகிறார் கவிஞர்.

ஆதிமந்தி காதல் உணர்வால் உறக்கம் இன்றித் தவிக்கிறாள். அறையை விட்டு வெளியே வருகிறாள். மருதியுடன் ஆட்டனத்தி சேர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கிறாள். திகைக்கிறாள். இதைப் பண்பாடு குறையாத குறிப்பு மொழியால் வருணிக்கிறார் கண்ணதாசன். இதில் அவரது அழகிய சொல்லாட்சித் திறன் விளங்குகிறது.

துயிலோடும் பகையான தோகை கண்டாள்

தோள்தூங்கும் வாள்வீரன் துணையும் கண்டாள்

பயிராகிப் போயிற்றாம். அறுவ டைதான்

பாக்கிஎன்னும் நிலைகண்டாள் பதுமை ஆனாள்

(துயில் = தூக்கம்; தோகை = மயில்போன்ற மருதி ; பதுமை = சிலை)

உருவகச் சொல்லாட்சி

மற்றொரு சிறந்த குறுங்காவியமான ‘மாங்கனி’யில் மாங்கனியின் சிவந்த உதடு காதலன் முத்தமிட்டதால் வெளுத்திருக்கிறது. இதை,

காதல், துடிப்பினால் சிவப்பைத் தின்ற

துட்டனும் யாரோ..

(துட்டன் = துஷ்டன்; குறும்புக்காரன்)

எனப் பாடுகிறார்.

மாங்கனி தன் தாயிடம் வாய்திறந்து இனிமையாகப் பேசுகிறாள். இதைக் கவிஞர்,

அந்தப் பூக்காட்டின் வாய்ப்பூட்டைத் தேன் திறக்கும்

என்று உருவகச் சொல்லாட்சியால் உரைக்கிறார்.

1.4.2 உவமைகள் கவிதையின் அழகுக்கே அழகு சேர்ப்பது உவமை. கற்பனைக்கு வளம் சேர்ப்பது. ஒரு பொருளுக்கு ஒப்பாக இன்னொரு பொருளைக் காண்பவன், வாழ்க்கைக்கே புதுப்பொருள் காண்கிறான். உலகில் ஒரு முறை ஒரு வடிவத்தில் பிறக்கின்ற ஒருபொருள், எண்ணங்களில் பலமுறை பலவடிவங்களில் புதுப்பிறப்பு எடுக்கிறது. அந்தப் புதுமையில் வாழ்க்கை புதுச்சுவை பெறுகிறது. உவமை எப்போதும் இனிப்பது இதனால்தான்.

உவமையில் புதுமை

கண்ணதாசனின் உவமைகளிலே ஒரு புதுமை இருக்கும். மாலைப் பொழுது, மலைகளிடையே மறையும் சூரியன், காதல் உணர்வுடன் ஓர் இளைஞன் இக்காட்சியைக் காண்கிறான்.

மார்பகத்தின் ஆடைக்குள் கடிதம் வைக்கும்

மங்கையரின் கைபோல, மலைகள் ஊடே

தேர் உருட்டிக் கதிர் சென்றான்….

(இரவே போதும், முதல்தொகுதி)

என்று இதை அழகான உவமையால் சொல்கிறார் கண்ணதாசன்.

மாங்கனியின் சிரிப்பு எப்படி ஒலிக்கிறது?

வெள்ளிக்காசு ஒருபிடியைக் கீழே கொட்டி

விட்டாற்போல் அலட்சியமாய்ச் சிரித்து,,,,,,

என்கிறார் கண்ணதாசன்.

ஆட்டன் அத்தியை அடித்துப் போகும் வெள்ளம் எப்படிப் பெருகி வந்தது தெரியுமா? கதை கட்டத்தை வெள்ள ஓட்டத்துடன் சேர்த்து உவமையால் காட்டுகிறார்.

காவிரி வெள்ளம் கணிகை மா மருதிகொண்ட

கவலைபோல் மேலும் பல்கும்….

(பல்கும் = பெருகும்)

காதலில் தோற்றுக் கண்ணீர் வடித்தபடி இருக்கும் மருதியின் துயரத்தைப் போல் மேலும் மேலும் வெள்ளம் பெருகுகிறது என்கிறார்.

உவமையை வடிவம் மாற்றிப் புதிய முறையில் சொல்வது இவரது தனிச்சிறப்பு. ‘மாங்கனி’ காவியத்தில் நடனமாடும் மாங்கனியை வருணிக்கிறார்.

‘வாள் போன்ற விழி’ என்பது பழமையான மரபு உவமை. கண்ணதாசன் சொல்லும் முறையில் சிறிய மாற்றம் செய்து இதைப் புதுமையாய்ப் பொலிய வைக்கிறார். விழியை வாளாக உருவகம் செய்துவிட்டு இமைக்கு வாள் உறையை உவமை காட்டுகிறார்.

“கொலை வாளுக்கு உறைபோல விழிவாளுக்கு இமை”.

உவமையில் உயர்நோக்கம்

சிங்கப்பூர்-மலாயா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த கண்ணதாசன் பினாங்கு நகரில் தமிழர், மலாயர், சீனர் ஆகிய மூன்று இன மக்களும் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டார். அமைதிப் பண்புக்கும் தாய்மை அன்புக்கும் எடுத்துக்காட்டாக இருப்பது பசு. பசுக்கள் தமக்குள் உறவு பூண்டு ஒற்றுமையாக இருப்பது போல இம்மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு மகிழ்கிறார். கவிதையில் பாராட்டுகிறார். வாழ்த்துகிறார்.

ஆவினம் தமக்குள் காணும்

அன்பினம் போல இங்கே

மூவினம் தமிழ், மலாயர்

மூப்பு இலாச் சீனர் சேர்ந்து

சாவிலும் வாழ்விலும் சேர்

சமத்துவ வாழ்க்கை வாழும்

ஆவணம் கண்டேன் ! இந்த

அன்பிலே பினாங்கு வாழ்க.

(ஆவினம் = பசுஇனம்; மூவினம் = மூன்றுஇனம்; மூப்புஇலா = இளமை மாறாத; ஆவணம் = உறுதிச்சான்று)

இந்த ஒற்றுமையும் சமத்துவமும் நீடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கம் இந்த உவமையில் பளிச்சிடுகிறது. பினாங்கு கண்டேன் என்னும் இக்கவிதை 5ஆம் தொகுதியில் உள்ளது.

1.4.3 உருவகங்கள் உவமையின் செறிவான வடிவமே உருவகம் என்பதை அறிவீர்கள். கண்ணதாசனின் கவிதைகளில் உருவக நடை ஊடுருவிக் கிடக்கிறது. மாங்கனியை உருவகத்தால் வருணிக்கிறார்:

விரிக்காத தோகைமயில் ! வண்டு வந்து

மடக்காத வெள்ளைமலர் ! நிலவு கண்டு

சிரிக்காத அல்லிமுகம் ! செகத்தில் யாரும்

தீண்டாத இளமை நலம் பருவ ஞானம் !

(செகத்தில்= உலகத்தில்)

திரைப்பாடல்களிலும் இலக்கிய வளம் சேர்த்த இயற்கைக் கவிஞர் கண்ணதாசன். குழந்தையை இளந்தென்றல் காற்றாக உருவகம் செய்கிறார். அந்தத் தென்றலைப் பற்றி மேலும் உருவகம் செய்கிறார்.

நதியில் விளையாடிக் கொடியில்

தலைசீவி நடந்த இளந்தென்றலே…

தென்றல் நதியில் விளையாடுகிறதாம். கலைந்த தலையைக் கொடியில் வாரிக் கொள்கிறதாம். உருவகத்துக்குள் எத்தனை உருவகம், பாருங்கள்.

வாழ்வே போராட்டம் ஆகிவிட்டது இளைஞன் ஒருவனுக்கு! தன் நிலையை அவனே பாடுவது போல் ஒரு திரைப்பாடல். முழுதுமே உருவகங்களால் ஆனது. உலக இலக்கியத் தரம் வாய்ந்தது:

மயக்கம் எனது தாயகம்

மவுனம் எனது தாய்மொழி

கலக்கம் எனது காவியம் – நான்

கண்ணீர் வரைந்த ஓவியம்.

நான்…..

பகலில் தோன்றும் நிலவு – கண்

பார்வைக்கு மறைந்த அழகு

திரைமூடிய சிலை நான் -துன்பச்

சிதையில் மலர்ந்த மலர்நான்…

(மவுனம் = பேசாதநிலை; சிதை = பிணம் எரியும் நெருப்பு)

உருவகங்களை அடுக்கி ஓர் உயிர் ஓவியம் தீட்டியிருக்கிறார். இறுதியில் “விதிவேறு மதிவேறு” என்னும் பழமொழியின் விளக்கமே நான் என்று உருவகத்தில் முடிக்கிறார்.

1.5 முரண்பாடுகள்

நண்பர்களே! கண்ணதாசனின் கவிதைகளின், எளிமையை, இனிமையை, அழகை, தெளிவை இதுவரை பார்த்தோம்.

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்

மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன் – நான்

நிரந்தரம் ஆனவன் அழிவதில்லை – எந்த

நிலையிலும் எனக்கு மரணம் இல்லை

என்று இறந்த பின்னும் சாகாமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் கண்ணதாசன். புகழை மணந்து கொண்டவர்.

இவரது கவிதைகள் அனைத்தையும் ஒருசேரப் படிப்பவர்களுக்கு ஒரு கருத்துத் தோன்றலாம்.

1.5.1 அரசியல் கருத்துகள் ‘முன்னுக்குப்பின் முரண்படுகிறார் இவர். முரண்பாடுகளின் மொத்த உருவகமாகக் காணப்படுகிறார்’ என்பதே அது. இதற்கு என்ன காரணம்?

அரசியல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டார். மாறும் கட்சிகளின் கொள்கைகளை விளக்கத் தம் கவிதையை, எழுத்தைப் பயன்படுத்தினார். இதனால் பல முரண்பாடுகள் கொண்டவராகக் காட்சியளிக்கிறார்.

பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தபோது கடவுள் இல்லை என்னும் நாத்திகக் கருத்துகளைப் பாடினார். பிற்காலத்தில் தேசிய இயக்கத்தில் சேர்ந்த பின்னர், படித்தாலே மனம் உருகும் பக்திப் பாடல்கள் பாடிக் குவித்தார்.

திராவிட இயக்கத்தில் இருந்தபோது ஆட்சிமொழிச் சட்டத்தை எதிர்த்தார். போராடினார். போராட்டங்களைக் காவியப் பொருள் ஆக்கிக் கவிதைகள் படைத்தார். ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட மொழியை நையாண்டிச் சொற்களால் வசை பாடினார். தேசிய இயக்கத்துக்கு மாறிச் சென்றபின் கருத்துகளை மாற்றிக் கொண்டார். முன்பு தூற்றியவை எல்லாவற்றையும் போற்றிக் கவிதை பாடினார்.

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்

என்னும் பெருமித உணர்வு கொண்டவர் கண்ணதாசன். அதனால் உள்ளே எப்படியோ அப்படியே வெளியிலும் வாழ்ந்தவர்.

அகமும் புறமும்

வெளிவேடம் இட்டு நடிக்காமல் வாழ்ந்தவர். தம் கவிதைகளிலும் இப்படியே தம்மை வெளிப்படுத்தினார். இதனால்தான் கருத்துகளில் முரண்படுவதுபோல் கவிதைகளில் காட்சி அளிக்கிறார்.

இந்த முரண்பாடுகள் தம் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று அவரே கூறியிருக்கிறார்.

நண்பர்களே! கண்ணதாசனின் கவிதைகளை அவரது வாழ்க்கையுடன் சேர்த்து வைத்துப் படியுங்கள். அப்போது இந்த முரண்பாடுகளை உணர மாட்டீர்கள். பொய்களால் முகமூடி இட்டுக்கொண்டு வாழத் தெரியாத ஓர் உயர்ந்த தமிழ்க்கவிஞரை அடையாளம் கண்டுகொள்வீர்கள். உணர்வுகளைத் தொட்டு இன்பம் தரும் அவரது அழகிய கவிதைகளில் உள்ளம் கரைந்து விடுவீர்கள்.

1.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை, கவியரசு என்று போற்றப்படும் கண்ணதாசனின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்துகொண்டீர்கள் என்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்:

கண்ணதாசன் என்னும் கவிஞர் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள முடிந்தது.

அவரது கவிதைகள் பற்றியும், அவற்றின் இலக்கியச் சிறப்புக்குக் காரணமான எளிமை, இனிமை, தெளிவு பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது. சொல்லாட்சி, உவமை, உருவகம் போன்றவை எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

துன்பம், காதல் போன்ற சுவைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கவிதைகளில் உள்ள தத்துவக் கருத்துகள், ஆன்மிக வெளிப்பாடுகள் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளமுடிந்தது.

உள்ளத்தை ஒளித்து வைக்காமல் உலகத்துக்குக் காட்டி வாழ்ந்த ஓர் உயர்ந்த கவிஞர் கண்ணதாசன் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பாடம் 2

முடியரசனின் கவிதைகள்

2.0 பாட முன்னுரை

பாரதிதாசன் வழியில் தமிழ்க் கவிஞர் பரம்பரை ஒன்று வந்தது. இதன் மூத்த கவிஞர்களுள் ஒருவர் முடியரசன். இவருடைய கவிதைகளிலும் மொழிப்பற்று, இனஉணர்வு, காதல், இயற்கை ஈடுபாடு, சமுதாயச் சீர்திருத்தம், பகுத்தறிவு வாதம் ஆகியவை பாடுபொருளாக உள்ளன. இந்த உள்ளடக்கத்தைக் கொண்ட கவிதைகளைப் பாரதிதாசனைப் போன்றே உணர்ச்சித் துடிப்புள்ள வளமான தமிழ் நடையில் இவர் எழுதினார். முடியரசனின் கவிதைகளைப் பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப் பட்டுள்ளது.

2.1 முடியரசன்

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்த பெரியகுளம் இவர் பிறந்த ஊர். சுப்பராயலு – சீதாலட்சுமி இவருடைய பெற்றோர். 7-10-1920-இல் பிறந்தார்.

பெயர் மாற்றம்

துரைராசு என்ற தம் பெயரைத் தமிழில் அழகாய் மொழி பெயர்த்து முடியரசன் என்று மாற்றிக்கொண்டார்.

கல்வியும் பணியும்

தமிழைத் தெளிவுடன் கற்றுப் புலவர் பட்டம் பெற்றார். காரைக்குடியில் தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றினார். சிறந்த கவிதைகளை இயற்றினார். பல கவி அரங்கங்களில் பங்கு பெற்றுத் தமிழ்நாடு முழுதும் புகழ் பரவப் பெற்றார். 3-12-1998-இல் மறைந்தார். ‘சொல்லிய வண்ணம் செயல் அரியது’ என்றார் வள்ளுவர். தம் கவிதைகளில் சொல்லிய கொள்கை வழியில் இருந்து சிறிதும் தவறாமல் வாழ்ந்து காட்டிய மிகச்சில தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர் முடியரசன்.

படைப்புகள்

இவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து முடியரசன் கவிதைகள் என்னும் நூலாக, 1954-இல் வெளியிட்டவர் தமிழறிஞர் தமிழண்ணல். இந்நூல் மாநில அரசின் பரிசுபெற்றது. இதில் உள்ள பல கவிதைப் பகுதிகள் சாகித்ய அகாதமியால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

காவியப் பாவை (1960), கவியரங்கில் முடியரசன் (1964) ஆகிய தொகுதிகளும்; பூங்கொடி (1964), வீரகாவியம் (1966) ஆகிய காவியங்களும் இவர் படைத்துள்ளார். மாநில அரசின் ‘கவியரசு’ விருது பெற்றவர். இவரது பல கவிதைகள் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற்றுள்ளன.

2.2 கவிதைகள்

ஒவ்வொரு கவிஞனும் தான் வாழும் காலத்தின் குரலை எழுப்பும் பாட்டுக் குயிலாக இருக்கின்றான். முடியரசன் காலத் தமிழ்நாட்டில் பிறமொழி மோகம் முற்றி இருந்தது. தமிழில் வேற்றுமொழிக் கலப்பு மிகுதியாய் இருந்தது. தமிழ்ப் பண்பாட்டை அயலவர் பண்பாடு அழித்துவிடும் நிலை இருந்தது. இதனால் சமூகத்தில் சாதிப் பிரிவுகள், போலிச் சடங்குகள் வளர்ந்து பெரும் புதராக அடர்ந்தன. தன்னலம் மிகுந்த செல்வர்களால் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டனர். உரிமை இன்றி ஒடுக்கப்பட்டனர். உண்மையும், உழைப்பும், காதலும், நேர்மையும் மதிப்பு இழந்து நின்றன.

இவ்வகைக் கொடுமைகள் ஒவ்வொன்றும் கவிஞனின் மென்மையான உள்ளத்தை வன்மையாகத் தாக்கும். அவனது விரிந்த நெஞ்சக் கடலின் அலைகளாய்க் கவிதைகள் கொந்தளித்துப் பொங்கும். இழிவை அகற்றி அழிவைத் தடுக்க மக்கள் கூட்டத்தைக் கூவி அழைக்கும் போர்க்குரலாக அவை ஒலிக்கும். பாரதி, பாரதிதாசனின் கவிதைகளில் இந்தப் போக்கைக் காண்கிறோம் அல்லவா?

முடியரசனின் கவிதைகளும் அதே மரபில் பிறந்து வந்தவைதாம்.

தாய்மொழியின் நலத்தைப் பாதுகாப்பது தாயைப் பாதுகாப்பது போன்ற கடமை. மொழியின் உணர்வை இழந்தால் வாழ்வின் உணர்வு சாகும். நாட்டில் உரிமைகள் ஒவ்வொன்றாய்ப் பறிபோகும். இத்தகைய உணர்ச்சியும் கருத்துகளுமே மிகுதியும் முடியரசன் கவிதைகளின் உள்ளடக்கமாக அமைந்துள்ளன.

2.2.1 தாய்மொழிப் பற்று தமிழ்நாட்டில் தமிழர் தாய்மொழியில் கல்வி கற்றால் இழிவு என்று நினைத்தனர். கல்வி கற்றவர் என்று காட்டிக் கொள்வதற்கு ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவதும், உயர்ந்த சாதி என்று காட்டிக் கொள்வதற்கு சமஸ்கிருதம் கலந்த தமிழ் பேசுவதும் இவர்களின் வழக்கம் ஆயிற்று. தூய தாய்மொழியில் பேசினாலே இழுக்கு என்று கருதும் அறியாமை இன்று வரை மிகுதியாய் உள்ளது.

நண்பர்களே ! இன்று அக்கரையில் வாழுகின்ற தமிழர்களாகிய நீங்கள் பேசும், எழுதும் தூய தமிழைக் கண்டு பெருமைப்படுகிறோம். இங்கே தாய்த் தமிழ்நாட்டின் ஊர்ப் புறங்களில் கூடத் தமிழும் ஆங்கிலமும் கலந்து ‘தமிங்கில நடை’யில் பேசித் திரியும் எங்கள் நிலை கண்டு வெட்கப் படுகிறோம். தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி, இதழ்கள் போன்ற தொடர்பு ஊடகங்களிலும் நாள்தோறும் தமிழ்க்கொலை நிகழ்கிறது. இதைக் கண்டு நீங்கள் எவ்வளவு வேதனை கொள்கிறீர்கள் என உணர முடிகிறது. நாம் இன்று படும் இந்த வேதனையை முடியரசன் அன்றே பட்டிருக்கிறார். இந்த இழிநிலை வரும் என்று முன்பே உணர்ந்து எச்சரிக்கை செய்திருக்கிறார்.

பிறமொழிக் கலப்பு

தமிழில் பிறமொழிக் கலப்பின் மிகுதி கண்டு கொதித்திருக்கிறார். மொழியுணர்ச்சி என்ற கவிதையைப் பாருங்கள்.

ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்

அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்ற

தீங்கு உடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்

தென்படுமோ மொழியுணர்ச்சி ? ஆட்சி மன்றில்

பாங்குடன்வீற்று இருக்கும்மொழி தமிழே என்று

பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும்.

ஈங்குஇதற்காய் என்செய்யப் போகின் றீர்நீர்?

இளைஞர்இனி விழித்துஎழுந்தால் விடிவு தோன்றும்.

மறுமலர்ச்சி எனும்பேரால் தமிழின் பண்பை

மாய்க்கின்றோம் ; ‘மொழி’இருக்கப் ‘பாஷை’ என்போம்

பெறுமகிழ்ச்சி ‘சந்தோஷம்’ ஆகும் ; வேட்டி

‘வேஷ்டி’எனப் பெயர்மாறும் ; பதற்றம் என்னோம்

மறுமொழிபோல் ‘பதஷ்டம்’எனக் குதிப்போம் ;தண்ணீர்

‘ஜலம்’ஆகும் ; மறைக்காடு ‘வேதா ரண்யப்’

பிறமொழியாய் மாறிவிடும் ! மொழியுணர்ச்சி

பிழைத்திருக்க இடம்உண்டோ? புதைத்து விட்டோம்.

தமிழில் பிறமொழியைக் கலப்பது மட்டுமன்றித் தமிழ்ச் சொற்களையே (வேட்டி = வேஷ்டி) வேற்று மொழிச் சொல்போல உச்சரிக்கும் இழிநிலையை என்ன சொல்வது!

கோயிலும் தமிழும்

தமிழனின் இயல்பான நடவடிக்கைகளான திருமணம், சாவுச்சடங்கு, இறைவழிபாடு ஆகிய எல்லாவற்றிலும் பிறமொழி நுழைவு கண்டு கொதிக்கிறார் முடியரசன்.

மணவினையில் தமிழ்உண்டா? பயின்றார் தம்முள்

வாய்ப்பேச்சில் தமிழ்உண்டா? மாண்ட பின்னர்ப்

பிணவினையில் தமிழ்உண்டா? ஆவணத்தில்

பிழையோடு தமிழ்உண்டு. கோயில் சென்றால்

கணகணஎன்று ஒலியுண்டு ; தமிழைக் கேட்கக்

கடவுளரும் கூசிடுவர் ; அந்தோ ! அந்தோ !

அணுஅளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில்

ஆத்திகரே இறையுணர்ச்சி வளர்வது எங்கே?

(நாணுகின்ற = வெட்கப்படுகிற; மனப்போக்கர் = எண்ணம் கொண்டவர்; தென்படுமோ = காணப்படுமோ; பாங்குடன் = முறையோடு; வீற்றிருக்கும் = அமர்ந்து இருக்கும்; ஈங்குஅதற்காய் = இங்கே அதற்காக; மணவினை = திருமணச் சடங்கு; பிணவினை = சாவுச்சடங்கு; ஆவணத்தில் = பதிவு ஏடுகளில்; கூசிடுவர் = தயக்கம் கொள்வார்கள்; ஆத்திகர் = கடவுள் பக்தர்கள்)

தாய்மொழியில் வழிபாடு செய்யாவிட்டால் கடவுள் பக்தி கூட அழிந்து போகும் என்று எச்சரிக்கை செய்கிறார். தமிழ்காக்கப் போர் செய்ய அழைக்கிறார். அதற்குச் சிங்கம் போன்ற வீரர் வேண்டும்; உணர்வும், மானமும் வேண்டும்; மொழி உரிமைப் போரில் உயிர் கொடுத்த வீரர்களான தாலமுத்து, நடராசன் கொண்டிருந்த துணிவு வேண்டும் என்கிறார்.

அவளும் நானும என்னும் கவிதையை, கணவன் – மனைவி உரையாடுவதுபோல் அமைத்துள்ளார்.

“மணநாளில் தமிழ்ஒலியே கேட்கவில்லை. கோயில் உள்ளேயும் தமிழ் ஒலி இல்லை. பிள்ளை பெற்றோம், கிறுக்கரைப்போல் பிறமொழியில் பெயர் வைத்தோம்” என்று மனைவி இடித்து உரைக்கிறாள். கணவர் உணர்ந்து திருந்துகிறார். வஞ்சினம் (சபதம்) உரைக்கிறார்.

தஞ்சம்என வந்தவரின் சூழ்ச்சி யாலே

தமிழ்வழங்காக் கோயில்உள்ளே தலையைக் காட்டேன்

எஞ்சிஉள்ள குழந்தைக்குத் தமிழ்ப்பேர் வைப்பேன்

இப்படியே என்வீட்டைத் தமிழ்வீடு ஆக்க

வஞ்சினமும் கொள்கின்றேன்………

மனைவி நகைத்து நல்வழிப் படுத்துகிறாள். “கோயில் உங்கள் சொத்து. நுழையாமல் இருந்தால் தமிழ் பிழைத்துவிடாது. உரிமையை வென்று அடைய வேண்டும். வீண்பேச்சு வேண்டாம். வீரம் இல்லையா?” என்று கேட்கிறாள். அவர் இதை, “தோழர்களே உங்களிடம் சொல்கின்றேன். என்ன செய்யலாம்?” என்று கேட்டுக் கவிதையை முடிக்கிறார்.

மரபைக் காத்தல்

இந்த எல்லையில்லாத மொழிப்பற்றுத்தான், யாப்பு இலக்கண மரபை மீறிப் ‘புதுக்கவிதை’ எழுத முயன்றவர்கள் மீது வெறுப்பாகப் பாய்கிறது. அவர்களை நெருப்பாகச் சுடுகிறார், சொல்லால் !

வயலுக்கு வரப்புஒன்றும் வேண்டாம் என்றால்,

வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால்

இயல்மொழிக்கு இலக்கணமும் வேண்டாம் ! …..

மொழியைக் காக்கும்

வரம்புஇலையேல் எம்மொழியும் அழிந்து போகும்

2.2.2 உழைப்பின் மேன்மை கருநாடக மாநிலத்தின் மைசூர் பழம்பெருமை வாய்ந்த அந்நாள் தலைநகரம். அங்கு பிருந்தாவனம் என்னும் வண்ண மலர்ப்பூங்கா உள்ளது. சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் சென்று கண்டு வருவர். முடியரசனும் சென்று அதன் அழகை வியந்து படைத்தோன் வாழ்க என்னும் கவிதை படைத்தார். இந்தக் கவிதை வாழ்வியல் பற்றிய இவரது கொள்கையின் வெளிப்பாடாக இருக்கிறது. பூங்காவின் அழகைக் கண்டு வியப்பில் கவிஞர் வாழ்த்துகிறார் :

படைத்தோன் வாழி ! படைத்தோன் வாழி !

என்றேன். நண்பன் “இறைவனோ” என்றான் ;

“அன்றே” என்றேன் ; “அரசனோ” என்றான்.

அறியாது உரைத்தனை ஆருயிர் நண்பா !

உறுதி குலையா உழைப்பினை நல்கிக்

குருதியை நீராய்க் கொட்டிய ஏழை

பாரில் இப் பூங்கா படைத்துத் தந்தனன்

……………….

இதமுடன் உழைக்கும்அவ் ஏழையை வாழ்த்தினேன்

வாழிய அவன்குலம் வாழிய நன்றே !

(அன்றே = இல்லையே; குலையா = தளராத; நல்கி = கொடுத்து, தந்து; பாரில் = உலகில்; இதமுடன் = பொறுமையுடன்)

தொழிலாளியை அரசனை விட, தெய்வத்தை விட உயர்ந்தவனாய் மதிக்கிறார் முடியரசன்.

உழைப்போர் துயரம்

தம் நூலில் தொழில் உலகம் என்று தனிப் பகுதியே ஒதுக்கி, உழைக்கும் மக்கள் உயர்வைப் பாடும் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கிறான். அவன் உடலில் மூச்சுடன் உயிர்வாழ வழியில்லை. பெருஞ்செல்வர்க்கு இன்பம் தரும் மங்கையர் உடல் முழுக்கத் தங்கநகை அணிந்து உலவுகின்றனர். ஆனால் சுரங்கத்தில் இறங்கித் தங்கத்தைத் தோண்டி எடுத்தவன் அங்கத்தில் அணிய ஒன்றும் இல்லை. ஆடை நெய்கிறான்; அவனுக்கு நல்ல ஆடையில்லை. உழைத்து முதலாளியின் நெல் களஞ்சியத்தை நிரப்புகிறான்; அந்த உழவனுக்கு உணவு இல்லை. முடியரசன் காட்டும் முரண்கள் இவை.

தீண்டாமை

மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத தொழில்களைச் செய்வோரைத் தீண்டத் தகாதவர் என ஒதுக்கி வைக்கும் சமூகக் கொடுமை முடியரசனை வருத்துகிறது.

ஆடையிலே அழுக்குஅகற்றித் தூய்மை ஆக்கி

அழகுசெய்து தருகின்றோன் ; பொலிவு குன்றாத்

தாடையிலே வளரும்அதை வழித்து எறிந்து

தளிர்க்கின்ற முடிவெட்டி அழகு செய்வோன் ;

கோடையிலே வருந்தாமல் முள்ளால் கல்லால்

கொடுமைஒன்றும் நேராமல் நடப்பதற்குச்

சோடைஇன்றிச் செருப்புஅளிப்போன் இவர்கள் எல்லாம்

தொடக்கூடாச் சாதிஎன்றால் தொலைக வையம் !

(பொலிவுகுன்றா = அழகுகுறையாத; தாடையிலே வளரும் அது = தாடி; சோடை இன்றி = தரம் குறையாமல்; தொடக்கூடாச் சாதி = தீண்டத்தகாத சாதி; வையம் = உலகம்)

வறுமைக்கும், சாதியைச் சொல்லித் தீண்டாமையை வளர்க்கும் இழிந்த நிலைக்கும் தொடர்பு உள்ளது. இதை எடுத்துக் காட்டுகிறார். சாதிக் கொடுமை இருக்கின்ற இந்த உலகம் அழிந்து ஒழிந்து போகட்டும் என்று கவிச்சாபம் இடுகிறார்.

போர்க்குணம்

ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை மீட்கப் போர்க்குணம் கொள்ள வேண்டும் என்கிறது முடியரசன் கவிதை. குதிரை நினைத்தால் என்னும் கவிதையில் இந்தப் புரட்சிக் குரலைக் கேட்கலாம்.

குதிரைமீது ஏறிவருகிறான் ஒருவன். விரைவாக, இன்னும் விரைவாகச் செல்ல ஆசை, குதிரையைக் கைச்சவுக்கால் அடிக்கிறான். செருப்பின் ஆணியால் குத்துகிறான். மீண்டும் மீண்டும் அடித்து வதைக்கிறான். குதிரை பொறுமையை இழக்கிறது. துள்ளிக் குதிக்கிறது. அவனை உதறிக் கீழே தள்ளுகிறது. கல்லில் அடிபட்டுத் தலைசிதறிச் சாகின்றான்.

முடியரசனுக்கு இந்தக் குதிரை பாட்டாளிக் கூட்டத்தின் – உழைக்கும் மக்களின் குறியீடாகத் தெரிகிறது. உணர்ச்சிக் கவிதை படைக்கிறார் :

மனம்நொந்து பொறுத்திருப்பர். அளவு மீறின்

காட்டாரோ தம்வலிமை? இங்கு வாழக்

கருதாரோ தொழிலாளர்? உரிமை கேட்க

மாட்டாரோ? அவரெல்லாம் உருத்து எழுந்தால்

மனம்புரவிச் செயல்தன்னைக் காட்டி டாதோ?

(அளவுமீறின் = அளவைத் தாண்டினால்; காட்டாரோ = காட்ட மாட்டார்களோ; உருத்து எழுந்தால் = சினத்துடன் திரண்டால்; புரவி = குதிரை)

நண்பர்களே! கொடுமை கண்டு பொங்கும் போர்க்குணம் கொண்டவர் முடியரசன். இதைப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? அன்பிலும் இனிமையிலும் நெகிழ்ந்து இளகும் ஈர நெஞ்சமும் கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் காட்டுகின்றன. இனி வரும் பாடப் பகுதியில் அதைப்பற்றி அறியலாம்.

………..

2.3 காதலும் அன்பும்

காதல், அன்பு இரண்டும் ஒன்றுதான். ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் பால்உணர்ச்சி சார்ந்த அன்பைக் குறிப்பிடும் சொல்லாகக் ‘காதல்’ என்பதை வரையறை செய்து கொண்டோம். அதனால் ‘அன்பு’ பொதுவாக எல்லா உயிர்க்கும் இடையில் தோன்றும் உள்ளப் பற்றைக் குறிக்கிறது. இவை இல்லாத இதயம் வறண்ட பாலை நிலம்தான். நல்ல உள்ளம் காதலின் பூஞ்சோலை; அன்பின் வளமான வயல்வெளி. இவைதாம் இதயத்தின் அழகு. கவிஞன் இதயம் இந்த அழகின் சொர்க்க பூமி.

2.3.1 காதலும் கவிதையும் காதலும் கவிதையும் ஒன்றுக்கு மற்றொன்று ஆதாரமாக அமைந்தவை. காதலால் கவிதை வாழ்கிறது. கவிதையால் காதல் வாழ்கிறது. முடியரசனின் நெஞ்சம் காதலில் தோய்ந்தது. அவரது முதல் காதலியே கவிதைப் பெண்தானாம்; கவிதைப்பெண் என்ற கவிதை சொல்கிறது.

உணவுக்கும் உடைக்கும் கவலை இல்லாத இளம் பருவத்தில் கடலில், நிலவில், மலரில், வயலில், கதிரில் தணியாத காதலுடன் கவிதைப்பெண் இவரோடு கலந்து இருந்தாளாம். தென்றலாய்ப் பாடுவாளாம். மயிலாக ஆடுவாளாம். புதுமாலைப் பொழுதாக விதவிதமான நிறத்தில் ஆடைகட்டி விளையாடுவாளாம். உயிராகி, உணர்வாகி உள்ளத்தில் கலந்து வாழ்ந்தாளாம்.

தாலி கட்டிய உரிமையுடன் மனைவி ஒருத்தி வந்த பின்னர், இல்லறக் கடமைகளில் இவர் மூழ்கிப்போனார். வயிறு நிறைப்பதற்காகவே வாழ்வு என்று ஆகிப்போனது. வாழ்வில் சுவை இல்லை.

ஒருநாள் சலிப்புடன் கடற்கரையில் நின்றார். அவர்முன் கவிதைப் பெண் வந்து நின்றாள். அவளிடம், தன்னை மறத்தல் சரியோ? முறையோ? என்று கேட்டார். அவள் “உன்னை மறக்க மாட்டேன், உண்மை சொல்வேன்” என்று பேசுகிறாள்:

உன்மனைவி பணிவிடையில் ; உனக்குப் பாவை

உவந்துஅளிக்கும் இன்பம்அதில் ; மதலை நல்கும்

இன்அமுத மழலைதனில், விழியில், மெய்யில்,

இற்கிழத்தி புலந்துஇருக்கும் விழியில், பேச்சில்

என்¬னஇனிக் காண்புஅரிது ; குடல்வ ளர்க்க

இரந்துஉண்போர் பொற்கரத்தில், உழைப்பால் ஓங்கும்

வன்புயத்தில், விதவையர்கண் சிந்தும் நீரில்

வாழ்கின்றேன் வாஅங்கே என்று சென்றாள்.

(உவந்து = மகிழ்ந்து; மதலை நல்கும் = குழந்தை தரும்; மழலை = குழந்தை மொழி; மெய் = உடம்பு; இற்கிழத்தி = மனைவி; புலந்து = ஊடல் (பொய்க்கோபம்) கொண்டு; காண்புஅரிது = காணஇயலாது; பொற்கரம் = தங்கக் கை; வன்புயம் = உறுதியான தோள்; விதவையர் = கணவனை இழந்த கைம்பெண்கள்)

இக்கவிதையை மேலோட்டமாகப் பார்த்தால் இயற்கை அழகுகளில், குடும்ப வாழ்வின் இனிமைகளில் கவிதை இல்லையோ எனத் தோன்றும். கவிதை அடுத்த நிலைக்குப் போயிருக்கிறது; வறுமையால் துன்புறுவோர், உழைப்போர், சமூக ஒடுக்குமுறைகளால் துன்புறுவோர் ஆகியோரிடத்தில் நிற்கிறது. அதாவது கவிதைகளில் அவர்கள் உள்ளடக்கம் ஆகிறார்கள் என்பதையே முடியரசன் உணர்த்துகிறார். காதலைத் தாண்டி அன்பின் பெருவிரிவுக்குச் செல்கிறது கவிதை.

2.3.2 புதுமைப் பெண்ணின் காதல் இவர் படைக்கும் புதுமைப்பெண் தன் காதலின் உறுதியைக் கொண்டு வீட்டார், ஊரார் தடைகளை வெல்கிறாள். தான் விரும்பிய காதலனைக் கைப்பிடிக்கிறாள், “நாம் பெண்கள். வீட்டார், ஊரார் பேச்சுக்கு இடம் வைக்காமல் அடங்கித்தானே போக வேண்டும்?” என்று கேட்கும் தன் தோழியிடம் பேசுகிறாள் ‘புதுமைப்பெண்’ :

நாட்டார்கள் காதல் நலம்அறியார் புல்லுரைக்கும்

வீட்டார்கள் சொல்கின்ற வெற்றுஉரைக்கும் நான்

அஞ்சேன்

உள்ளம் விழைந்த ஒருவரை விட்டுவிட்டுக்

கள்ளச் செயல்புரியக் கற்பறியா நல்லகுலப்

பெண்என்றா எண்ணினை நீ….. என்னுளத்தைத்

தொட்டார்க்கு உரியளாய்த் தோள்தோய்ந்து வாழல்

அன்றிக்

கட்டாயக் கல்யாணம் கண்டிப்பாய் நான்வேண்டேன்

அஞ்சிஅஞ்சி வாழ்ந்த அரிவையர்கள் இந்நாளில்

மிஞ்சிவிட்ட செய்கையினை மேல்நடத்திக்

காட்டுகிறேன் !

(புல்உரை = சிறுமைப்பேச்சு; விழைந்த = விரும்பிய; அரிவையர்கள் = பெண்கள்)

தோழியிடம் சொல்லியபடியே தன் காதலனைக் கைப்பிடித்தாள் என்கிறார். காதலின் வெற்றியைப் பெருமிதத்துடன் பாராட்டுகிறார்.

2.3.3 பிள்ளைக்கனி அமுது பாரதி குழந்தையைப் பிள்ளைக் கனியமுது என்றார். அவர் பேரனாகத் தம்மைச் சொல்லும் முடியரசன் பிள்ளைச் செல்வத்தின் பெருமையை அன்புத் தமிழில் பேசிப் பேசிக் கனிகிறார்.

குழந்தை இன்பம் என்னும் கவிதையில் மனைவியுடன் பேசுகிறார்.

தென்றல் தொடும் இன்பம்; குழல்யாழின் இசை இன்பம்; இயற்கைப் பொருள் எல்லாம் அழகின் வடிவில் தரும் காட்சி இன்பம் இவை எவையுமே குழந்தை தரும் இன்பத்துக்கு இணை ஆகாது என்கிறார். மனைவியிடமே, அவள் தரும் காதல் இன்பம்கூட மழலை தரும் இன்பத்துக்கு இணை இல்லை என்கிறார். அவள் ஊடல் கொள்கிறாள் என்று முடிகிறது கவிதை.

நண்பர்களே ! இங்கு ஒரு தாய் தன் இன்பத்தைக் குழந்தை இன்பத்தை விட உயர்ந்தது என்று நினைக்கிறாள். ஊடல் (சிறுகோபம்) கொள்கிறாள். தந்தை முடியரசனோ குழந்தை இன்பமே உயர்ந்தது என்கிறார். தாயைவிடத் தம் குழந்தைமேல் அன்பு கொள்ளும் தந்தையாக இங்கு முடியரசன் உயர்ந்து நிற்கிறார் அல்லவா?

தோற்றுவிட்டேன் என்னும் கவிதையைத் தமிழ்மொழியில் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று என்றே சொல்லலாம். தம் குழந்தையிடம் பேசுவதுபோல் இக்கவிதையை எழுதியுள்ளார்.

போர்க்களத்தில் எதிர்நிற்க எவரும் காணேன்

பூரித்தேன், வீரத்தால் செருக்கும் கொண்டேன்

தார்க்கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும்

தளிர்அடியால் நீமிதித்தாய் தோற்று விட்டேன்

- என்று தொடங்கித் தம் குழந்தையிடம் தாம்பெற்ற தோல்விகளைப் பட்டியல் இடுகிறார்.

(பூரித்தேன் = பெருமை கொண்டேன்; தார்க்கழுத்து = மாலையணிந்த கழுத்து; வன்புயம் = ஆற்றல் மிக்க தோள்; தளிர்அடி = தளிர் போன்ற காலடி)

குழந்தையின் மழலையின் முன் தோற்கிறார். கருணையில்லாத கல்நெஞ்சம், குழந்தையின் பார்வையால் உருகித் தோற்கிறது.

பெரியவர்கள் சொல் கேளாத, பணிவு அற்ற முரட்டுத்தனம் குழந்தை இடும் கட்டளைக்குப் பணிந்து தோற்கிறது. தன் மனைவியின் கண்களுக்கு ஒப்பான அழகு உலகில் எதுவுமில்லை என்று எண்ணியிருந்த கணவனின் இறுமாப்பு, தன் குழந்தையின் கவலை படியாத அழகு மலரான கருவிழியின் முன் தோற்றுவிட்டது.

இறுதியில் -

“இலக்கிய, இலக்கண, அகராதிகள் எல்லாம் கற்றிருக்கிறேன். இருந்தும், பேசமுயன்று உன் நா உந்தும் போது வெளியே குதிக்காமல் இதழ் ஓரத்தில் சுழலுமே அந்த மழலை மொழி? அதன் பொருள் உணர முடியாமல் உன்னிடம் தோற்றுவிட்டேன்” என்று பாடுகிறார்.

‘தோற்றுவிட்டேன்’ என்று பாடியே ஒரு மிகச்சிறந்த கவிதையைப் படைப்பதில் வென்றுவிட்டார் முடியரசன். நண்பர்களே ! நீங்கள் சொல்லுங்கள் இங்கே வென்றவர் கவிஞர் முடியரசனா? அன்பான தந்தை முடியரசனா?

2.4 இயற்கையின் அழகு

இயற்கையின் அழகை எல்லாம் மேலும் அழகாகப் படைக்கும் முயற்சிதான் கவிஞனின் கலைப்பணி. அவன் சொல்லில் ஓவியம் தீட்டுகிறான். சிலை வடிக்கிறான். உணர்வை ஏற்றி அவற்றை இயங்கவும் வைக்கிறான். வாடி உதிர்ந்து அழிந்து போகும் இயற்கையின் அழகுகளை வாடாமல் காக்கிறான். மொழி என்னும் அமுதத்தை ஊட்டிச் சாகாமல் வாழ வைக்கிறான்.

இந்த அழகுக் கலையில் முடியரசனும் வல்லவராக விளங்குகிறார்.

2.4.1 கற்பனை வளம் ஆறு கடலை நோக்கி விரைந்து ஓடுகிறது. ஏன் இத்தனை வேகம்?

ஓடும் நீரில் தாமரை போன்ற நீர்த் தாவரங்கள் முளைப்பது இல்லை. இந்த உண்மையைக் கொண்டு கற்பனை ஒன்று பிறக்கிறது.

- தன்பால் செந்தா

மரைஇன்றி முகம்காட்ட முடியா ஆறு

மாள்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார் !

என்று பாடுகிறார். முகத்துக்கு உவமையாகும் மலர் செந்தாமரை, ஆற்றுக்கு இந்த முகம் இல்லை. அதனால் மலர்ந்த முகம்காட்ட முடியவில்லை. அவமானமாக இருக்கிறது இது. அதனால் கடலில் குதித்துச் செத்துவிட அவசரமாக ஓடுகிறதாம். ‘தற்குறிப்பு ஏற்ற அணி’ என்று இதைச் சொல்வார்கள்.

2.4.2 உவமைகள், உருவகங்கள் உலகத்தின் படைப்பை எல்லாம் ஒன்றாய்க் காணும் உயர்ந்த உள்ளம் கவிதை உள்ளம். அது ஒவ்வொரு பொருளிலும் ஒப்புமையை, ஒற்றுமையைத் தேடுகிறது. அந்த அழகின் தேடலில் பிறப்பவைதாம் உவமையும், உருவகமும். இந்த உயர்ந்த உள்ளப் பாங்கில் பிறப்பதால்தான், கவிஞனின் சிறப்பை உவமை, உருவகங்கள் கொண்டு மதிப்பீடு செய்கிறது உலகம்.

உவமை நலம்

அழகின் சிரிப்பு என்னும் கவிதையில் கோழிக் குஞ்சுகளைக் “கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சி தரும் குஞ்சுகள்” என்கிறார்.

சுதமதி இவர் படைத்த குறுங்காவியம். இதில், சோலைக்குள் பூப்பறிக்கச் செல்கிறாள் சுதமதி. ஒரு முல்லைக் கொடி தன் அரும்பால் சிரிக்கிறது. சுதமதி புன்னகை செய்கிறாள். அது முல்லையின் அழகை வெல்கிறது. இதைப் புதுமையாகக் காட்சிப் படுத்துகிறார்.

….அவள் இடை

நிகர்த்தோம் நாம்என நினைத்தஓர் பூங்கொடி

முகிழ்த்தநல் அரும்பால் நகைத்துச் செருக்கத்

தருக்கினை நோக்கிய தையல் முறுவலால்

தருக்கினை அடக்கித் தலைகொய் தனளே

(இடை நிகர்த்தோம் = இடைக்கு உவமை ஆவோம்; முகிழ்த்த = அரும்பிய; செருக்கு, தருக்கு = தற்பெருமை; தையல் = பெண்; முறுவல் = புன்சிரிப்பு; தலைகொய்தனள் = அரும்பைக் கிள்ளிப் பறித்தாள்)

கொடியை இடைக்கும், முல்லை அரும்பைப் பற்களுக்கும் உவமை காட்டுவது பழமையான கவிதை மரபு. சொல்லாட்சியின் புதுமையால் இந்தப் பழைய உவமைகளை மெருகேற்றி இருக்கிறார் முடியரசன்.

நிலவைப் பாடாத கவிஞர் உண்டா? பிறை நிலவை முடியரசன் புதுப்புது உவமைகளால் பாடுகிறார். ஏன் வரவில்லை? என்ற காதல் கவிதையில் :

விண்இடத்து எறிந்த வெள்ளைப்

பூசணிக் கீற்றோ என்ன

எண்ணிடப் பிறக்கும் நல்ல

இளம்பிறை நிலவே……….

என்றும்,

கண்கவர் சிறுவர் சேர்ந்து

கடுமழைப் புனலில் ஓடப்

பண்ணிய கப்பல் போலப்

படர்பிறை நிலவே……..

என்றும்,

அகத்தியின் குவிபூத் தோற்றம்

அன்னதோர் பிறைநிலாவே

என்றும்

மூன்று புதிய உவமைகளை அடுக்குகிறார். அகத்தி மரத்தின் பெரிய பூ மொட்டு வெள்ளையாய்ப் பிறைநிலவுபோல் இருக்கும்.

(புனல் = நீர்; குவி பூ = குவிந்த பூ, மொட்டு)

உருவக அழகு

உவமையின் செறிவான வடிவமே உருவகம். இருபொருள்களின் இடையே உள்ள ஒப்புமையை விளக்காமல், இரண்டும் வேறல்ல, ஒன்றுதான் என்று ஒற்றுமைப்படுத்திக் கூறினால் அது உருவகம் ஆகிறது. முடியரசன் அழகிய உருவகங்களைப் படைத்திருக்கிறார்.

இயற்கைத்தாய் என்னும் கவிதையில் தம்மைக் குழந்தையாகவும் இயற்கையைத் தாயாகவும் உருவகம் செய்து பாடுகிறார். இக்கவிதை முழுதுமே உருவகங்களால் நிறைந்து உள்ளது.

அழுக்காறாம் எறும்பு ஊரும், பொய்மை என்னும்

அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும்,

இழுக்குஏறா நல்அறிவுப் பசிதோன்றும்

இத்தனையும் தாங்க ஏலாது

அழுதிடுவேன் ; விரைந்தோடி என்பால்வந்து

அன்புஎன்னும் முலைசுரந்த

பழுதுஇல்லா முப்பாலை ஊட்டிடுவாள்

பார்புரக்கும் தாய்மை வாழ்க !

(அழுக்காறு = பொறாமை; இழுக்கு ஏறா = குற்றம்இல்லாத; ஏலாது = முடியாமல்; பழுது இல்லா = குறைஇல்லாத; பார்புரக்கும் = உலகத்தைக் காக்கும்)

மனிதனை வந்து அடைந்து வருத்தம் உண்டாக்கும் பொறாமை, பொய்மை, அறிவுப்பசி இவை மூன்றும், குழந்தையைத் தொல்லை செய்யும் எறும்பு, ஈ, வயிற்றுப்பசி இவையாக உருவகம் செய்யப்படுகின்றன. இவற்றின் தொல்லையால் மனிதன் வருந்துவது குழந்தையின் அழுகையாகக் குறிப்பிடப்படுகிறது. முப்பால் என்னும் திருக்குறள் இந்தத் தொல்லைகளைப் போக்கும். அதையே இயற்கைத்தாய் ஊட்டும் பாலாக உருவகம் செய்கிறார் முடியரசன். மிக அழகான தொடர் உருவகமாக இது விளங்குகிறது.

இதில் ‘அறுகால்’ என்பது ‘ஆறுகால்களை உடைய’ என்றும், ‘கால்கள் இல்லாத’ என்றும் இருபொருள் தரும். பொய் என்பது கால் இல்லாதது தானே? அது அறுகால் ஈயாகச் சொல்லப்படுகிறது. இங்கு இருபொருள் (சிலேடை) நயத்தையும் சுவைக்கிறோம்.

இயற்கையின் எழுச்சி என்னும் கவிதையில் இதே இயற்கை அரசியாக உருவகப் படுத்தப் பெறுகிறது. தாயாக இருக்கும்போது உலகை எல்லாம் வாழ வைக்கிறாள் இயற்கைப் பெண். அவளே அரசியாக உலா வரும்போது அழிவுக்குத் தான் வழி அமைக்கிறாள். புயல் மழையை அவளது உலாவாக உருவகம் செய்கிறார் முடியரசன்.

விளக்கு, தந்திக் கம்பங்கள் வளைந்து தலை வணங்குகின்றன. கம்பிகள் – தோரணங்கள். வீடுகள், மரங்கள் விழுந்து வணங்குகின்றன. குடிசைகளை அரசி காணக் கூடாதென்று பெருமரங்கள் விழுந்து வயிற்றில் மறைத்துக் கொள்கின்றன. காற்றில் பறந்த கூரை ஓடுகள் தூவிய மலர்களாய் உதிர்கின்றன. பறவைகள் வாய்மூடி நிற்கின்றன. பறக்கும் குடிசைகள் வாண வேடிக்கை காட்டுகின்றன. கதிரவனும், நிலவும் ஒளிந்து நின்று பார்க்கின்றன. மூன்று நாட்கள் ஒரே ஆரவாரம். அவள் ஊர்வலம் வந்து சென்ற பின்னும் அவலக் குரல்கள். இழப்பின் துயர ஓலங்கள்!

இக்கவிதை வெறும் இயற்கை வருணனை அன்று. தனிமனிதனின் அதிகாரத்தையும், தனி உடைமை அரசு அமைப்பையும், அவற்றால் சிதையும் மனித வாழ்க்கையையும் இங்கு இயற்கைக் கொடுமையாக உருவகம் செய்கிறார் முடியரசன்.

2.5 பெருவாழ்வு

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை, தமிழ்க் கவிஞன் பாரதிதான் செத்ததுண்டா?” என்று பாடினார் பாரதிதாசன். அவரும் இறவாத புகழுடன் இன்றும் வாழ்கிறார். பாரதிதாசனைத் தம் தந்தை, ‘தமிழர் தந்தை’ என்று பாடியவர் முடியரசன். அவரையும், திரு.வி.க.வையும், கா. அப்பாதுரை யாரையும், ‘விதவை மறுமணக் கழகம்’ நிறுவிய தமிழ்த் தொண்டர் முருகப்பாவையும், கலைவாணரையும் தம் கவிதைகளால் இறவாத சொல் ஓவியங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார் முடியரசன்.

பழங்காலத்தில் கவிஞர்கள், ‘வள்ளல்கள்’ என்று அரசரைப் புகழ்ந்துள்ளனர். ஆனால் இங்கு, ஓர் அரசன் – முடியரசன் ஒரு கவிஞரை ‘வள்ளல்’ என்று புகழ்ந்திருக்கிறார். கவிமணி தேசிக விநாயகரைக் காரணத்துடன், வள்ளல் என்று பாடுகிறார் முடியரசன், கவிமணி என்னும் கவிதையில் -

செந்தமிழ்க்கு வாழ்வுஅளித்தோன்; சேர்ந்தோர்க்கு

நண்புஅளித்தோன்

சிந்தையினைச் செம்மைக்கே தந்துஉவந்தோன் – உந்திஎழும்

செய்யுளுக்கு வாய்அளித்தோன் தேசிகவி நாயகனை

உய்யவரு வள்ளல்என ஓது

(நண்புஅளித்தோன் = நட்பை வழங்கியவன்; செம்மை = நேர்மை; உந்திஎழும் = பொங்கி எழுகிற; உய்யவரு வள்ளல் = காக்க வரும் வள்ளல்)

இறவாத பெருவாழ்வு பெற்ற தம் முன்னோர்போல் தாமும் சாவதை வரவேற்கிறார் முடியரசன். இறப்பே வா என்ற கவிதையில் சாவை அழைக்கிறார். ஒரு காதலியாய்த் தம்மை வந்து தழுவச் சொல்கிறார் :

உன்னைக்கண்டு அஞ்சுகிறார் கோழை மாந்தர்

உவக்கின்றேன் உனைத்தழுவ வருக மாதே !

பொன்னைப்போல் புழுவைப்போல் வருத்தும் நோய்போல்

பொல்லாத பாம்பினைப்போல் வந்தால் ஏலேன்

தன்னைப்போல் மாந்தர்எல்லாம் எண்ணச் செய்யும்

தனிப்புரட்சி உருவில்வரின் அணைத்துக் கொள்வேன்

(உவக்கின்றேன் = மகிழ்கிறேன்; ஏலேன் = ஏற்கமாட்டேன்; உருவில்வரின் = உருவில் வந்தால்)

முடியரசன் சமஉரிமைக்கான புரட்சியின் விளைவில் தமக்குச் சாவு வர வேண்டும் என்று விரும்புகிறார்

2.6 தொகுப்புரை

நண்பர்களே ! இதுவரை முடியரசன் என்னும் மூத்த தமிழ்க் கவிஞரின் கவிதைகள் பற்றியும் அவரது படைப்புலகம் பற்றியும் சில செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.

இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

முடியரசன் என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

தாய்மொழிப் பற்றுக் குறைந்திருந்த தமிழகத்தில், காலத்தின் குரலாக அவர் மொழியுணர்ச்சி பற்றி மிகுதியாகப் பாடினார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

உழைப்பின் உயர்வை அவர் போற்றுகிறார் என்று அறிய முடிந்தது.

சமுதாயத்தில் இருக்கும் சாதிக் கொடுமைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்துப் புரட்சிக்குரல் எழுப்பியதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

காதல், அன்பு, பெரியோரைப் போற்றல் போன்ற மனிதப் பண்பின் உயர்வுகள் முடியரசன் கவிதைகளில் சிறப்பிடம் பெறுவதை அறிய முடிந்தது.

கற்பனை வளமும்; உவமை, உருவக நலமும் அவர் கவிதைகளில் இருப்பதைக் காண முடிந்தது.

பாடம் 3

ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள்

3.0 பாட முன்னுரை

காலத்தின் வேகத்தில் தமிழ்க் கவிதை இயல்பான ஒரு புது வளர்ச்சியைப் பெற்றது. புதுக்கவிதை தோன்றியது. ஆங்கிலத்தில் ‘New Poetry’, ‘Modern Poetry’ எனத் தோன்றிய சொல்லாக்கங்களுக்கு இணையாகத் தமிழில் அமைந்த சொல்லாக்கமே புதுக்கவிதை என்பது. 1960-ஆம் ஆண்டில்தான் இந்தக் கவிதை வகை இப்பெயரைப் பெற்றது. என்றாலும், 1934-ஆம் ஆண்டிலேயே ஒரு கவிஞர் இவ்வகைக் கவிதைப் படைப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அவர்தாம் ந.பிச்சமூர்த்தி. அவரையும் அவரது கவிதைகள் பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.

3.1 ந. பிச்சமூர்த்தி

தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டம் தஞ்சாவூர். இதில் கும்பகோணம் நகரில் 15-8-1900-இல் இவர் பிறந்தார்.

பெற்றோர் நடேச தீட்சிதர் – காமாட்சி அம்மாள். தந்தை ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்யம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராய் இருந்தவர். எனவே கலை, சமயம், பண்பாடு, கல்வி, தொண்டு இவற்றில் ஊறி இருந்த ஒரு குடும்பப் பின்னணியில் பிச்சமூர்த்தி வளர்ந்தார். தத்துவத்தில் இளங்கலைப் பட்டமும், சட்டக் கல்வியில் பட்டமும் பெற்றார்.

சிறுகதை

முதலில் ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதினார். பின்னர்த் தமிழில் எழுதத் தொடங்கினார். பிக்ஷு, ரேவதி என்னும் புனைபெயர்களில் எழுதினார். மணிக்கொடி என்னும் இலக்கிய இதழில் சிறப்பாக எழுதிய தொடக்கக் காலப் படைப்பாளிகளில் ஒருவர் ந. பிச்சமூர்த்தி. சிறந்த சிறுகதை எழுத்தாளராகப் போற்றப் படுகிறவர்.

புதுக்கவிதை

பாரதியின் கவிதைகள் மற்றும் வசன கவிதைகள், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் என்னும் கவிதை ஆகியவற்றால் தூண்டுதல் பெற்றுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்.

1934 முதல் 1944 வரை புதுக்கவிதைகள் எழுதினார். பதினைந்து ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. மீண்டும் 1959-இல் தொடங்கி எழுத்து இலக்கிய இதழில் எழுதினார். தம் இறுதி நாள் வரை எழுதினார். 83 சிறந்த கவிதைகள் படைத்தார். இவற்றுள் 7 குறுங்காவியங்கள். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் சிறுவர் கதைகளும் நாடகங்களும் படைத்துள்ளார்.

4-12-1976-இல் சென்னையில் மறைந்தார்.

3.2 வசனமும் கவிதையும்

நண்பர்களே ! நாம் எண்ணத்தை மொழியாக வெளியிடுகிறோம். நம் எண்ண ஓட்டம் இரண்டு வழிகளில் அமைகிறது. ஒன்று, காரண காரியத்தோடு உலகின் உண்மைகளை அறியத் துடிக்கும் அறிவுவழி. இன்னொன்று உலகையும் வாழ்வையும் சுவைக்கத் துடிக்கும் நம் உணர்வின் வழி. மொழியாக வெளிப்படும் எண்ணம், அறிவின் வழியில் நடந்தால் அது வசனம் (உரைநடை) ஆகிறது. அந்த எண்ணம் உணர்வின் பாதையில் ஓடினால் அது கவிதை ஆகிறது.

ஒரு சான்று காட்டினால் இது இன்னும் தெளிவாக உங்களுக்குப் புரியும்.

‘தீ சுடும்’ என்பது அறிவியல் உண்மை. இப்படிச் சொன்னால் அது வசனம்.

‘தீ இனிது’ என்கிறார் பாரதி. தீ இனிமையானதா? இனிக்குமா? இது அறிவியலுக்கு ஏற்காது. இந்த வார்த்தைகள் அறிவு நிலையில் வெளிப்பட்டவை அல்ல. உணர்வு நிலையில் வெளிப்பட்டவை என்று புரிந்து கொள்கிறோம். இது பல கற்பனைகளை எழுப்புகிறது. எனவே, இது கவிதை.

வார்த்தை, நம் அறிவுடன் மட்டும் பேசும்போது அது வெறும் செய்தியை மட்டும் சொல்கிறது. வசனமாக நின்று போகிறது. வார்த்தை, நம் உணர்வுடன் பேசும்போது உணர்ச்சியைத் தூண்டுகிறது. கற்பனையைத் தூண்டுகிறது. கவிதை ஆகிறது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? வசனம் கவிதை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு வடிவத்தில் இல்லை; பண்பில்தான் உள்ளது.

மரபும் மீறலும்

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தொன்று தொட்டு இலக்கணங்களால் வரையறுக்கப்பட்ட வடிவங்களில் தான் கவிதை உள்ளது என்று நம்பினர். நம் மொழியில் மட்டும் அல்ல, உலகின் எல்லா மொழியிலும் இந்த நம்பிக்கை வேர் ஊன்றி இருந்தது. வகுக்கப்பட்ட அந்த மரபான யாப்பு வடிவங்களில் எழுதப்படாத எதையுமே கவிதை என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் தோன்றிய வால்ட் விட்மன் என்னும் கவிஞன் இந்த மரபை மீறிக் கவிதைகள் படைத்தான். புல்லின் இதழ்கள் என்ற அக்கவிதைகள் உணர்வுடன் பேசின. அதுவரை வசனம் என்று நம்பிவந்த ஒரு வடிவத்தில் அவை கவிதைகளாக, உணர்ச்சி வெள்ளங்களாக வெளிப்பட்ட போதுதான் உலகம் நாம் மேலே கண்ட உண்மையை உணர்ந்தது. வசனம் கவிதை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பண்பில்தான் உள்ளது என்பதை ஏற்றது.

பாரதி, வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ படித்தார். தமிழின் மரபு ஆன யாப்பு வடிவங்களில் மட்டும் அன்றி, நாட்டுப்புற இசைப்பாடல் வடிவங்களிலும் கவிதை படைத்த உணர்ச்சிக் கவிஞர் அவர், அவரே, ‘புல்லின் இதழ்கள்’ போல் புதிய நடையில் காட்சிகள் என்னும் கவிதைகளை எழுதினார்.

3.2.1 புதுக்கவிதை என்ற பெயர் மாறுதல் காலம் என்பதால், பாரதியின் ‘காட்சிகளும்’ விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’, வசன கவிதைகள் என்ற பெயரில் சுட்டப்பட்டன.

இந்த இரண்டையும் படித்தார் பிச்சமூர்த்தி. அதுவரை சிறுகதை மட்டுமே எழுதிவந்தவர் அவர். அவ்வசன கவிதைகளால் கவரப்பட்டுத் தாமும் கவிதை எழுதத் தொடங்கினார். மரபான கவிதை வடிவங்களில் இல்லாத அக்கவிதைகளை, அன்று இலக்கணம் கற்ற பண்டிதர் பலர் எதிர்த்தனர். அவை கவிதைகளே அல்ல என்று வாதிட்டனர்.

அவற்றின் சொல்லில், நடையில், உள்ளடக்கப் பொருளில் இருந்த புதுமை பலரைக் கவர்ந்தது. 1959-இல் தோன்றிய ‘எழுத்து’ என்னும் இதழில் பலர் புதிதாக எழுதத் தொடங்கினர். அவர்கள் பிச்சமூர்த்தியைப் பின்பற்றினர். தங்கள் கவிதைகளைப் ‘புதுக்குரல்கள்’ என்றனர். அதுவரை ‘வசன கவிதை’ என்று கூறிவந்த பொருந்தாத பெயர் மறைந்தது. ‘புதுக்கவிதை’ என்ற பெயர் பிறந்தது.

வித்திட்டவர்

இந்தப் புதுமைக்கு விதை போட்டுத் தொடங்கி வைத்தவர் பாரதிதான். உண்மையில் புதுக்கவிதையின் தந்தை அவர்தான். ஆனால் அவர் தொடராமல் விட்டதைத் தொடர்ந்து வளர்த்துச் சிறந்த கவிதைகளை எழுதிக் குவித்த பிச்சமூர்த்திக்கு அந்தப் பெருமை வந்து சேர்ந்துவிட்டது.

காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறி வரும் வாழ்க்கையின் புதிய புதிய உள்ளடக்கங்களைத் தானும் ஏற்றுப் புதுக்கவிதை வளர்ந்து வருகிறது.

3.3 பிச்சமூர்த்தியின் கவிதைகள்

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காண முயன்றவர் பிச்சமூர்த்தி. அந்த முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்.

இவரது 75 கவிதைகளைத் தொகுத்து 1975-இல் எழுத்து பிரசுரம் வெளியீடாக சி.சு. செல்லப்பா வெளியிட்டார். விடுபட்டிருந்த 8 கவிதைகளைத் தேடிச் சேர்த்து பிச்சமூர்த்தி கவிதைகள் என்ற பெயரில் 1985-இல் க்ரியா வெளியிட்டது. மதிநிலையம் வெளியீடாக 2000 ஆண்டில் ந.பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

அறிவின் ஒளியும், உணர்வின் ஓட்டமும் இக்கவிதைகளில் உள்ளன. அழகு நயங்கள் நிறைந்துள்ளன. இரசனைக்கு இனிய விருந்தாக ஆகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் இவை. இவற்றைப் பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.

3.3.1 கவிதை பற்றிய கவிதை காவிரி ஆற்றுக் கரையில் பிறந்து வளர்ந்தவர் பிச்சமூர்த்தி. ஊரின் சிறு குழந்தைகள் ஆற்று மணலைக் குவித்து, நீர் தெளித்துக் குச்சிகளைக் கம்பிபோல் வரிசையாய் அடுக்கிக் கூண்டுபோல் செய்து விளையாடுவார்கள். இதைக் கிளிக்கூண்டு விளையாட்டு என்பார்கள். கூண்டு இருக்கிறது, கிளி எங்கே? கூண்டை அப்படியே விட்டுவிட்டுப் போனால் இரவில் கிளி தானாக வந்து அதற்குள் அடையும்; நாளை வந்து பார்க்கலாம் என்று நம்புவார்கள். குழந்தைகளின் இந்த ஆசையும் கற்பனையும் அழகானவை.

கவிஞரும் ஒரு கிளிக்கூண்டு செய்கிறார்; அதில் வார்த்தைதான் மணல்; ஓசையே நீர்; தீராத தாகமே விரல்; ‘பாட்டு’ என்னும் கூண்டைக் கவிஞரும் அமைக்கிறார். ‘அழகு’ என்னும் கிளி வந்து அடையும் என்று நம்புகிறார்.

மணலில் கூண்டு செய்த குழந்தைகள் அடுத்த நாள் காலை வந்தனர். கூண்டைக் கண்டனர்; கிளியைக் காணவில்லை. இரு குழந்தைகள் வருந்தினர். ‘இரவில் கிளி வந்திருக்கிறது. சிறகை ஒடுக்கிப் பார்த்து இடம் இல்லை என்று பறந்து போய்விட்டது, சுவடுகள் இதோ’ என்றனர். பல குழந்தைகள் ‘கிளியாவது, சுவடாவது! முட்டாள்தனம்,’ என்று பரிகாசம் செய்தனர்.

கவிஞரும் தம் பாட்டு என்னும் கிளிக்கூண்டில் ‘அழகு’ என்னும் கிளி வந்து அடைந்ததா? என்று தேடுகிறார். மணல் கூண்டில் கிளி வந்து அடையுமா? உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?…. அழகென்ன மீனா? ஓசையின் தூண்டிலில் சிக்குமா? என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

சில பெரியோர்கள் சொல்கின்றனர்: ‘நன்னூல் தெரியாத நண்பா!…. சொல்லோடு மன்றாடும் அடிமுட்டாள்’ என்று! வயிற்றையும் வாழ்க்கையையும் விட்டுக் காலத்தையும் காசையும் இழக்கின்ற பைத்தியமா என்று அவரைக் கேட்கின்றனர். அவர் மேல் இரக்கம் கொள்கின்றனர். பல சிறியோர்கள் அவரைப் புகழ்கின்றனர்:

தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கினாய்

தொடாத தந்தியில் ஒலியை எழுப்பினாய்

எண்ணாத உள்ளத்தில் எழிலினை ஊற்றினாய்

அழகின் அம்பை வார்த்தையில் பூட்டினாய்

அழகுப் பித்தே வாழ்க

என்று வாழ்த்துகின்றனர். கவிஞர் ஒரு முடிவுக்கு வருகிறார்.

சிறியோர்கள் வார்த்தையைப் போற்றினேன்

பெரியோர்கள் இரங்கலைத் தள்ளினேன்

ஆறுஎங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்

அழகினை அழைப்பேன்

எந்நாளும் -

என்று சொல்கிறார். அவரது கிளிக்கூண்டு என்னும் கவிதை இவ்வாறு முடிகிறது.

பிச்சமூர்த்தி தம் இலக்கியப் படைப்புக் கொள்கையாக உலகிற்கு அறிவிக்கும் செய்தியே இந்தக் கவிதை.

இதில் வரும் ‘பெரியோர்கள்’ – கற்றறிந்த பண்டிதர்கள். ‘சிறியோர்கள்’ – இயல்பான படைப்பு ஆற்றல் – கற்பனை ஆற்றல் உடையவர்கள்; புதிய தலைமுறையினர்; இலக்கணம் அறியாதவர்கள். நன்னூல் – தமிழ் இலக்கண நூல். இதைப்பற்றிய குறிப்புத்தான் நமக்கு இந்த இரு பிரிவினரைப் பிரித்து அடையாளம் காட்டுகிறது.

சிறியோர்களோ, ‘உன் சொற்களில் தங்கம் தேங்குகிறது. தந்தியை மீட்டாமலேயே வீணை இசை எழுகிறது. அறிவின் எண்ணம் தோன்றாத உள்ளத்தில் உணர்வாக அழகை நீ ஊற்றுகிறாய். வார்த்தை வில்லாக வளைகிறது, அதில் அம்பாக அழகு பாய்கிறது. உன் முயற்சி வீண் இல்லை’ என்று பாராட்டுகின்றனர்.

கவிஞர் தேடும் அழகு என்ற கிளி அவரது உணர்வின் போக்கில் அமைக்கும் வார்த்தை மணல் கூண்டில் தானாகவே வந்து அடைகிறது. அதைத்தான் அந்தச் சிறியோர்கள் பார்த்திருக்கின்றனர். பிச்சமூர்த்தியோ நிறைவு அற்றவர்; தம் சொல்லில் கவிதை வந்துவிட்டது என்பதை நம்ப மறுப்பவர். இந்தத் திருப்தியின்மையே அவரை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து வாழ்க்கை என்னும் ஆற்றங்கரையில் கிளிக்கூண்டுகளைக் கட்டிக் கொண்டே இருப்பதும் அழகென்னும் கிளியை அழைப்பதும்தான் தம் வாழ்க்கை என்று அவர் உணர்கிறார்.

‘கவிதை என்னும் அழகு, வார்த்தைகளுக்கோ, வடிவங்களுக்கோ கட்டுப்படாதது; அது எல்லையற்றது’ என்னும் பெரிய உண்மையை உணர்த்துகிறார்.

கொம்பும் கிணறும் என்னும் கவிதை, கவிதையின் வீச்சு, உச்சி வானத்தையும் தொடும்; கிணற்றின் ஆழத்தையும் தொடும் என்று உணர்த்தும் கவிதை.

நாங்களோ கலைஞர் !

ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம் ; ….

அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம்

கொம்பையும் கிணற்றையும் பிணைப்போம்.

3.3.2 வாழ்க்கையும் இயற்கையும் பிச்சமூர்த்தி இயற்கையில் முழு ஈடுபாடு கொண்டவர். இயற்கையை உற்று நோக்கி அதிலிருந்து வாழ்க்கையைப் படித்துக் கொள்கிறார். துன்பங்களால் துவண்டு போகாமல் வாழும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார். நமக்கும் தாம் உணர்ந்ததை அழகிய கவிதையாய் வடித்துத் தருகிறார்.

ஒளியின் அழைப்பு என்னும் கவிதை மிக அழகானது. அதைப்பற்றி இப்பகுதியில் காண்போம்.

வாழ்க்கையில் போட்டி மிக அதிகமாகிவிட்டது. உணவுக்கும், இருப்பிடத்திற்கும், இவற்றைத் தரும் பணத்திற்கும், பணத்தைத் தரும் வேலைக்கும் எங்கும் எதிலும் போட்டி. இருப்பவை மிகக் குறைவு. மக்கள் எண்ணிக்கையோ மிக அதிகம். முந்திக் கொள்பவர்களே பிழைக்க முடியும் என்ற நிலை. இதனால் போட்டி கடுமையாகிவிட்டது. இந்தப் போட்டியில் ஏழையாய், இளைத்தவனாய்ப் பிறந்துவிட்ட ஒருவன் என்ன செய்ய முடியும்?

வாழ்க்கையின் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு சொல்லும் ஆசிரியனாகப் பிச்சமூர்த்தி இயற்கையைத்தான் தேடிப் போகிறார்.

‘அடர்த்தியான பெரிய மரம் ஒன்று. ஒளி, வெளி, காற்று, நீர் அனைத்தையும் தனக்கே எடுத்துக் கொண்டது. நிலத்தையும் பெரும்பகுதி அடைத்துக் கொண்டு படர்ந்து வளர்ந்து நிற்கிறது. ‘பட்டப் பகலில் இரவைக் காட்டும்’ என்று படம்பிடிக்கிறார் அதை! இந்தப் பேராசை பிடித்த மரத்தின் அடியில் உள்ளது சிறிய கமுகு (பாக்கு). இதனால் சத்துக் கிடைக்காமல் வளர்ச்சி இன்றிச் சோனியாக (இளைத்துப்போய்) நிற்கிறது அந்தக் கமுகு. இந்த நிலையில் தன் பிறப்பை – சூழ்நிலையை நொந்து அது செத்துப் போய்விடவில்லை. வாழ்வதற்காகப் போராடுகிறது. தன்னால் இடம் பெயர்ந்து வேறு ஓர் இடத்துக்குச் செல்ல முடியாது என்று தெரியும். அதற்காகத் தளரவில்லை. தன் உடம்பை வளைக்கிறது. மரத்தை, அதன் இருட்டை மீறிக் கொண்டு ஒளியைத் தேடி வான் வெளியில் தலை நீட்டுகிறது, வாழ்கிறது.

கவிஞர் தம்மையும் இந்தக் கமுகையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தாமும் இதன் நிலையில் இருப்பதை உணர்கிறார். பழமையின் இருட்டு; பொய்களின் இருட்டு; ‘உலகம் பொய் சாவுதான் மெய்’ என்னும் மூட வேதாந்தங்களின் இருட்டு. இவற்றுக்கு உள்ளே வளர்ந்ததால் தானும் சோனிக் கமுகாக ஆகிவிட்டதை உணர்கிறார்.

பெருமரத்துடன் போட்டி இடும் சோனிக் கமுகு இவருக்கு ஆசிரியன் ஆகிறது. வாழ்க்கை என்னும் போரை எதிர் கொள்ளும் நம்பிக்கையைப் போதிக்கிறது:

முண்டி மோதும் துணிவே இன்பம்

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி

என்று உணர்த்துகிறது. மனம் தேறுகிறார். தம்மைப் போல் ‘சோனி’ ஆகிவிட்ட உலக மாந்தர்க்கும் உரைப்பதுபோல், தமக்குச் சொல்கிறார்:

ஜீவா ! விழியை உயர்த்து

சூழ்வின் இருள் என்ன செய்யும்?

அமுதத்தை நம்பு

ஒளியை நாடு

கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்

சூழ்வின் இருள் என்ன செய்யும்?

(ஜீவா = உயிர் வாழ்பவனே; சூழ்வு = வாழ்க்கைச் சூழ்நிலை; அமுதம் = (இங்கு) உயிர்தரும் ஒளி)

தளராத ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் இளைஞர்க்குக் கற்பிக்கப் பாடமாக வைக்க வேண்டிய அருமையான கவிதை இது.

மழைஅரசி, காட்டுவாத்து இவையும் நம்பிக்கையின் குரலை நம் மனத்தில் ஒலிக்கும் அழகிய குறுங்காவியங்கள் ஆகும்.

சைபீரியாவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது காட்டுவாத்து. வேடந்தாங்கலில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. அவற்றை வளர்த்தெடுத்து அவற்றுடன், மீண்டு செல்கிறது. இதன் செயல், ‘வாழ்வு எங்கிருந்தாலும் நம்பிக்கையோடு அதைத் தேடிச் செல்’ என்னும் இயற்கையின் செய்தியாகிறது. அறவுரையாகிறது.

3.3.3 காதலும் இறைக்காதலும் காதல் உயிரின் இயற்கை. உயிர்களின் உலகத்தை இயக்கும் சக்தியே அதுதான். ஒவ்வோர் அணுவிலும் துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு தவிப்பு அது.

துன்பம் எனும் இன்பம்

காதலர் சேர்ந்து தாகம் தணிவது இனிமைதான். அதைவிட, பிரிந்து தவித்து இருக்கும் கிளர்ச்சியே அதிக இனிமையானது. அந்தத் துன்பமே பெரிய இன்பம்.

இந்த மெய்யுணர்வின் வெளிப்பாடாக அமைந்ததுதான் காதல் என்ற கவிதை. இதுதான் பிச்சமூர்த்தி எழுதிய முதல் கவிதை.

மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது

மலர்கள் வாசம் கமழ்கிறது

மரத்தில் இருந்து ஆண்குயில் கத்துகிறது

என்ன மதுரம் ! என்ன துயரம் !

இப்படித் தொடங்குகிறது கவிதை. இளவேனில் காலம். மனிதனிலும் மற்ற உயிர் இனங்களிலும் மட்டும் அல்ல, பயிர் இனங்களிலும் கூடக் காதல் உணர்ச்சி பொங்கும் காலம். மாந்தோப்பு மணப்பெண் போலப் பட்டாடை உடுத்து நிற்கிறது. எங்கும் மலர்கள், காற்றும் வாசனையும் தழுவிக் கிடக்கின்றன. மரத்தில் இருந்து ஆண்குயில் கூவுகிறது. தன் இணையைச் சேர்வதற்காகத் தவிக்கிறது. தவிப்பு அழைப்பாகிறது. அதில், என்ன இனிமை! எவ்வளவு தனிமைத் துயரம்! அந்தக் குரலுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகள் கவிஞருக்குப் புரிகின்றன.

‘காதல் என்னும் தீயில் நெஞ்சம் கருகுகிறது. காதல் என்னும் நீரை ஊற்றித் தீயை அணைக்க வா’ என்று பெண்குயிலை அழைக்கிறதாம் ஆண்குயில்.

பக்கத்தில் இருக்கும் கொல்லையில் இருக்கிறது பெண்குயில். அது எதிர்க்குரல் கொடுக்கிறது. இந்தக் குரலில் இனிமையை முந்திக் கொண்டு சோகம் ஒலிக்கிறது. என்ன சொல்கிறது?

‘பிரிவின் தனிமை உயிரைத் தீக்கங்கு ஆக்கிவிட்டது. அதை உன் குரல் மூட்டிப் பெரிய தீச்சுடர் ஆக்கி விட்டது.

என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?

காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை

இந்தத் துன்பம் தான் இன்பம்!’ என்கிறது.

கவிதையின் மூன்றாவது நிலையில் காதல் தெய்வம் பேசுகிறது. காற்றின் ஒலியில் (குரல் இன்றியே) இது கவிஞருக்கு மட்டும் கேட்கிறது.

ஒன்றுபட்டால் ஓய்வு உண்டாகும் ;

காதல் குரல்கட்டிப் போகும்…..

கிடைத்துவிட்டால் முயற்சி இல்லை. சேர்ந்துவிட்டால் தேடல் இல்லை. தேடல் இல்லையேல் இயக்கம் இல்லை. கற்பனையின் இனிப்பு இல்லை. கசப்புத்தான் மிஞ்சும்.

சேர்ந்துவிட்டால் அழைப்பு ஏது? காதல், குரல் எழுப்பாது; குரல் கட்டி ஊமை ஆகும்.

காதலின் குரல்கள்தாமே கவிதை, இசை, மற்றக் கலைகள் எல்லாம்? எல்லாமே இல்லாமல் போகும்….

கவிதையின் நான்காவது நிலையில் கவிஞரே பேசுகிறார். கவிஞர் மட்டும் பேசுகிறாரா? அவர், காதல் தெய்வம், பெண்குயில், ஆண்குயில் எல்லாம் ஒருவரே ஆகிப் பேசுகின்றாரா என்று பிரித்து அறிய முடியாத பேச்சு :

பிரிவினையின் இன்பம் இணையற்றது

தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப் பிடிக்கிறார்கள் !

தெய்வ லீலையை உரக்கச் சொல்லு

க்காவூ……..க்காவூஉ……..

இப்படி முடிகிறது கவிதை. உலக வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் (லீலை) தான். கடவுளும் இயற்கையாகிய நாம் எல்லாமும் பிரிந்து, ஒளிந்து கண்டு பிடிக்கச் சொல்லி ஆடும் ஒரு ‘கண்ணாமூச்சி’ ஆட்டம்.

சேருவதில் இன்பம் இருக்கிறது. அது கண்டுபிடித்தவுடன் ஏற்படும் கண நேர மகிழ்ச்சி. அதைவிடப் பிரிவில், தேடுவதில் ஏற்படும் இன்பம் மிகப் பெரியது, இணையற்றது. இதை நன்கு உணர்ந்துதான் இறைவன் நம்மிடம் இருந்து பிரிந்து ஒளிந்து விளையாடுகிறான். ‘இந்தத் தெய்வ விளையாட்டை (லீலையை) உரத்த குரலில் பாடு என்று க்காவூ….. க்காவூஉ’ என்னும் குயில்களின் கூவலோடு கவிதை முடிகிறது.

உண்மையில் பிச்சமூர்த்தி பார்த்தது பூத்த மாந்தோப்பை மட்டும்தான். கேட்டது இணைக்குயில்களின் குரல்களை மட்டும்தான். இவற்றின் உள்ளே இருந்து என்னென்ன உணர்வுகளைப் படித்துவிட்டார்! எத்தனை பெரிய தத்துவத்தைப் படித்துவிட்டார்!.

இயற்கை, வாழ்க்கை, ஆன்மா, இறைவன் இவ்வளவையும் பார்த்துவிட்டார். இவை அனைத்தையும் இணைக்கும் காதல் என்னும் உறவு நிலையை உணர்ந்து விட்டார். அதில் பிரிவுதான் இன்பம் என்ற மெய்யுணர்வை அடைந்து விட்டார். விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இவற்றின் தேடல் எல்லாம் இந்தப் பிரிவால் விளையும் தேடல்கள் தாம் என்று உணர்த்தி விட்டார்.

இந்தக் ‘காதல்’ என்ற முதல் கவிதையில் தொடங்கிக் கடைசியாக எழுதிய தேவை என்ற கவிதை வரை; இவரது 83 கவிதைகளிலும் என்ன பொருள் பொதிந்திருக்கிறது? இயற்கை – மனிதன் – இறைவன்: இந்த உறவு நிலையின் தத்துவச் சாரம்தான் அமைந்து கிடக்கிறது.

தமிழில் கவிதைக்கு இது ஒரு புதுப்பாதை திறந்திருக்கிறது. இதனால்தான் இவரது கவிதை புதுக்கவிதை ஆகியிருக்கிறது.

பெறுவது அன்று, தருவதே காதல்

காதல் என்னும் தலைப்பில் இன்னொரு கவிதையும் படைத்திருக்கிறார் பிச்சமூர்த்தி. காதலியாகத் தம்மைக் கற்பனை செய்து கொண்டு பாடிய கவிதை.

காதலரைத் தெருவில் காண்கிறாள். காதல் பொங்குகிறது. சேர்ந்து இன்பம் காண ஆசை கொண்டு வீட்டுக்கு அழைக்கிறாள். ஒருநாள் காதலர் மனம் கனிகிறார். ‘நாளை வருவேன்’ என்கிறார். தன்னையும் வீட்டையும் தூய்மை செய்து அலங்காரம் செய்து ஆவலுடன் காத்திருக்கிறாள். அவர் வரவில்லை. ஒருநாள் எதிர்பாராமல் வந்து நிற்கிறார் -

எண்ணாத நாள் ஒன்றில்

வந்தார் -

கோடை மழைபோல்

காட்டாற்று வெள்ளம்போல்

வீடெங்கும் குப்பைகூளம்

எங்கிலும் கந்தல் துணிகள்

முகம் எங்கிலும் வேர்வை

கைஎங்கும் சமையல் மணம்

எங்கும் இல்லநெடி

சிறு புகைச்சல்,

ஒட்டடை

வேளை பார்த்தா

நாதர் வந்தார்?

அசடானேன்.

கேட்பது அல்ல காதல்

தருவதுதான் என்று

தரையில் அமர்ந்தார்

என்னைக் காணேன்.

என்று காதலில் இணைவதைப் பாடி முடிகிறது இந்தக் கவிதை. முதல் ‘காதல்’ கவிதையில் இவர் காட்டிய பிரிவின் தத்துவம்தான் இதில் இணைவின் தத்துவம் ஆகக் கவிதை ஆகி இருக்கிறது. நண்பர்களே! முரண்பாடு இருப்பதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு இல்லை. கண்ணாமூச்சியில் ‘தேடும் இன்பத்தை’, கிளர்ச்சியை முதல் கவிதை உணர்த்துகிறது. தேடி, எதிர்பாராமல் கண்டு பிடித்தவுடன் கிடைக்கும் ‘கூடும் இன்பத்தை’ இந்தக் கவிதை உணர்த்துகிறது. விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘என்னைக் காணேன்’ என்ற தொடரைக் கவனியுங்கள். அவர் வந்து சேர்ந்தபின் ‘தான்’ காணாமல் போகிறது. காதலில் மறுபடி ஆன்மிகம் கலக்கிறது. தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் என்ற திருநாவுக்கரசரின் ஆன்மக் காதல் உணர்வை இங்கும் காண்கிறோம். (திருவாரூர்த் திருத்தாண்டகம், 6501)

பிரிவு ஏது?

சிணுக்கம் என்னும் கவிதையில் இந்த நுணுக்கம் விளக்கம் பெறுகிறது. இதுவும் பிரிவு பற்றியது தான். ஊருக்குப் புறப்பட்டால், உறவினர் வண்டிப் படி அருகே ‘மதகு நீர்ச் சுழல் போல்’ தயங்கி விடை பெறுகின்றனர். வேலைக்குப் போகும் மகன் ‘போய் வாரேன் அம்மா’ என்று விடை பெறுகிறான். குளத்தின் சிறு அலைகூடக் கரை ஓரப் படியிடம் ‘சிறுமூச்சு’ விட்டு விடை பெறுகிறது. ‘நீ மட்டும் விடைபெறுவது இல்லை. கல்லா நீ’ என்கிறாள் தலைவி. இதற்குத் தலைவன் பதில் சொல்கிறான் : (இவர்களுக்கு வேலைக்குச் செல்லும் வயதில் மகன் இருக்கிறான்!)

“அடி கிறுக்கே !

சென்றால் அன்றோ விடைபெற வேண்டும்

போனால் அன்றோ வரவேண்டும்?

என்உயிர் என்னிடம்

இல்லாது இருக்கையில்

இருவர் ஏது?……

வீட்டில் இருந்தும்

என்னுடன் வருகிறாய்

வெளியே சென்றாலும்

உன்னுடன் இருக்கின்றேன்

கிறுக்கே” என்றேன்

சிணுக்கம் சிரிப்பாச்சு -

இதுவும் கூடக் கண்ணாமூச்சி விளையாட்டின் இன்னொரு பரிமாணம் தான். பிரிதல், சேர்தல் என்பவை கூட இன்பம் தரும் இந்த விளையாட்டு வசதிக்காகச் செய்து கொண்ட ஒரு ஏற்பாடுதான். உண்மையில் நீ, நான் இரண்டும் வேறல்ல. ஒன்றுதான். ஆன்மிக நெறியில் இதை இரண்டற்ற நிலை (அத்துவிதம்) என்பார்கள். இதைத்தான் இனிய காட்சிப் படிமமாகச் சொல் ஓவியம் தீட்டியிருக்கிறார் பிச்சமூர்த்தி.

காதலை நினைக்கும் போது ஆன்மக் காதலையும் இணைத்தே நினைக்கிறார் என்பதை இந்தக் கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

3.4 இக்கால உலகியல்

நண்பர்களே ! இயற்கையிலும் காதலிலும் பிச்சமூர்த்தி கண்ட வாழ்வியல் தரிசனங்களை, ஆன்மிக இணைவை இதுவரை கண்டோம். தற்கால வாழ்வியலில் – உலகியலில் அவரது பார்வை பற்றி இனி அறியலாம்.

இயற்கையின் சீரான இயக்கம், அழகு, தூய்மை இவற்றில் ஆழ்ந்து கரையும் மனம் பிச்சமூர்த்தியின் கவிமனம். இவரது ஆன்மிகமாகவும் இதுவே இருக்கிறது.

மனிதனின் சுயநலம், பொருள் தேடும் பேராசை இவை உலகத்தின் இனிமைகளைச் சிதைக்கின்றன. இவற்றின் மீது அவருக்கு எல்லை இல்லாத வெறுப்பு எழுகிறது. வெறுப்பை நெருப்பாக உமிழாமல் கேலி செய்யும் சிரிப்பாக வெளிப்படுத்துவது கவிஞனின் தனி இயல்பு. கேலியாக, பரிகாசம் தொனிக்க, நையாண்டி செய்து சுட்டிக் காட்டும் கவிதைக் கலை ‘அங்கதம்’ எனப்படும். பிச்சமூர்த்தியின் அங்கதம் தனித்தன்மை வாய்ந்தது.

3.4.1 கள்ளச் சந்தை காந்தியின் தூய வாழ்க்கையால் கவரப்பட்டவர் பிச்சமூர்த்தி. சமூக வாழ்வில் எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், சேவை இவை இவர் வியந்து பின்பற்றிய காந்திய நெறிகள். சிறுமை கண்டு பொங்கும் நெஞ்சம் இவருடையது. ‘வாழ்வில் பெரும் செல்வத்தைத் தேடிக்கொள்ள எந்தக் கெட்ட வழியையும் பின்பற்றலாம்’ என்னும் ‘பிழைப்பு வாதத்தை’ இவர் கடுமையாக வெறுக்கின்றார்; எதிர்க்கின்றார். பெட்டிக் கடை நாரணன் என்ற அங்கதக் கவிதையாக இந்த எதிர்ப்பு உணர்வு வெளிப்பட்டு உள்ளது.

உலகப் போர்க் காலத்தில் வளர்ந்த ‘கள்ளச் சந்தை’ வணிகம் பற்றியது இக்கவிதை. போரின் விளைவால் உற்பத்தி, போக்குவரத்து இவை பாதிக்கப்பட்டு உணவு போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பேராசை கொண்ட வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைத்து, மறைவாக மிக அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். மேலும், கலப்படம் செய்தும் மக்களை ஏமாற்றினர். இதற்குக் கள்ளச்சந்தை என்றும் கறுப்புச் சந்தை என்றும் பெயர். அரசாங்கம் இந்தக் கொள்ளைக்காரர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் பங்கீட்டுக் கடை (ரேசன் கடை)களை ஏற்படுத்தியது. அந்தக் கடை உரிமை பெற்ற வணிகர்களும் இந்த வகைக் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் பிச்சமூர்த்தி படைத்த கவிதைதான் ‘பெட்டிக்கடை நாரணன்’.

முதலில் பெட்டிக்கடை வைத்த நாரணன் அரசாங்க அதிகாரி ஒருவர் தயவால் பங்கீட்டுக் கடை உரிமம் பெற்றான். அரிசியுடன் களிமண் உருண்டை கலப்படம் செய்தும், மண்ணெண்ணெயைக் ‘கறுப்பில்’ விற்றும் கொள்ளை இலாபம் அடைந்தான். தன்செயலை நியாயப்படுத்திப் பேசுகிறான். கவிஞர் நையாண்டியாய்ப் பேசுகிறார் :

மண்ணெண்ணெய் வர்ணம்

இரண்டுதான் என்றாலும்

மஞ்சளும் வெளுப்பும்

என்றாலும், பலபேர்கள்

கறுப்புஎன்று கதறினர்…

பாவமான கலப்படத்தை நியாயப்படுத்தி அவன் பேசும் பேச்சும் பரிகாசமாய் வெளிப்படுகிறது :

பாவம் ஒன்று இல்லாவிட்டால்

பார் உண்டா?

பசி உண்டா?

(பார் = உலகம்)

மண்ணில் பிறப்பதற்கு

நெல் ஒப்பும்போது

களிமண்ணில் கலந்திருக்க

அரிசி மறுப்பது இல்லை….

நட்சத்திரம் போல

நல்முத்துப் போல

சுத்தமாக அரிசிவிற்க

பங்கீட்டுக் கடைஎன்ன

சல்லடையா?

முறமா?…..

மூட்டை பிரிக்கும் முன்னர்

முந்நூறு பேர் இருந்தால்

சலிப்பது எங்கே?

புடைப்பது எங்கே?

புண்ணியம் செய்யத்தான்

பொழுது எங்கே?

அங்கயற் கண்ணியின்

அருள் என்ன சொல்வேன் !

பங்கீடு வாழ்க !

பாழ்வயிறும் வாழ்க !

வாழ்வில் தினமும் நடப்பதை அப்படியே இலக்கியமாய் ஆக்குவதை ‘நடப்பியல்’ என்பர். பேச்சு நடையில் நடைமுறை வாழ்க்கையின் புதிய கோலங்களை நேராகப் பேசுகிறார். கற்பனையும் உவமை உருவக அணிகளும் இருந்தால்தான் அது கவிதை என்ற பழமையான கருத்தை உடைத்து விட்டது இந்தப் புதுக்கவிதை.

‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றில் ‘பெட்டிக் கடை நாரணன்’ முக்கியமான கவிதை’ என்கிறார் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி.

3.4.2 விஞ்ஞானம் கடவுளின் இயற்கைப் படைப்பு, மனிதனின் செயற்கைப் படைப்பு இரண்டில் எது உயர்ந்தது? விஞ்ஞான அறிவு இயற்கையை வெல்கிறது, ஆனால் அருள் இல்லாத அறிவு, அழிவுக்கே கொண்டு செல்லும் என்கிறது பிச்சமூர்த்தியின் கவிஉள்ளம்.

விஞ்ஞானியின் பக்கம் நின்று அவன் சாதனையைப் புகழ்வதுபோல் பழிக்கிறார் பிச்சமூர்த்தி. இதை ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’ என்று பழைய கவிமரபு சொல்லும். இந்த அங்கதக் கவிதை பிச்சமூர்த்தியின், இயற்கை பற்றிய உயர்ந்த மதிப்பீட்டைக் காட்டுகிறது. நகைச்சுவை உணர்வுக்குச் சான்றாகிறது.

கடவுளால் என்ன முடியும்?

புல்லைச் செய்வார்

மேய என்று மாட்டைச் செய்வார்

பொங்கும் நுரைப் பாலைச் செய்வார்

ஊட்ட என்று கன்றைச் செய்வார்

விஞ்ஞானி சொல்கிறான்: ‘நாங்கள் புல்லுக்குப் போட்டியாகக் கிருமிக் குண்டு செய்வோம்; வைக்கோலில் தோல் கன்று செய்து மாட்டைப் பால்சுரக்கச் செய்வோம்; உணவுச் சத்துகள் செய்து உழைப்புக்கே ஓய்வு தருவோம்; ஆண்பெண் சேர்க்கை இன்றி உயிரை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டு பிடிப்போம்; கோள்களில் தளம் அமைப்போம்’ என்று தன் பெருமையை ஆணவத்துடன் பேசுகிறான்.

அருள் என்னும் ஜால வித்தை

செலாவணி ஆகா தய்யா

மடமையால் உலகைச் செய்தால்

அறிவினால் களைதல் தவறா?

இறைவன் படைத்த இயற்கை மடமையில் இயங்குகிறதாம். விஞ்ஞானி அறிவு கொண்டு அதைத் திருத்துகிறானாம் ! ‘அருள்’ ஒரு மந்திரவித்தை. இனி அது உலகிற்குப் பயன்படாது என்று சொல்கிறான். விஞ்ஞானத்தைப் பெருமைப் படுத்துவதுபோல் கவிதை முடிகிறது. உண்மையில் முடியவில்லை தொடங்குகிறது. நம் சிந்தனையை எழுப்புகிறது. இயற்கை படைக்கிறது; செயற்கை – அறிவியல் அழிக்கிறது. இந்த அழிவுச் சக்தியின் இழிவைப் புகழ்வதுபோல் அங்கதமாகப் பழிக்கிறார். விஞ்ஞானம் அழிவுக்குப் பயன்படக் கூடாது என்பதே கவிஞரின் நோக்கம்.

3.5 உருவகமும், படிமமும்

உவமை, உருவகம் போன்ற அலங்காரங்களை மறுத்து, உண்மை, உலகியல் இவற்றையே இனிக் கவிதையின் இயல்பான அழகாகக் கொள்ள வேண்டும்’ -இது புதுக்கவிதையின் முக்கியப் பண்பு. எனவே படைப்பவன் கவிதையில் இவற்றைத் தேடி அணிவிப்பதும், படிப்பவன் தேடி அனுபவிப்பதும் தவறு. இது நல்ல கவிதைப் படைப்புக்கு அழகு அல்ல என்பது தான் புதுக்கவிதையின் கோட்பாடு.

ஆனால் மொழி இயற்கையிலேயே உவமை, உருவகம், படிமம் (உருக்காட்சி) இவற்றைத் தனக்குள் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றை முற்றிலும் விலக்கிவிட்டு ஒரு மொழி இயங்க முடியாது. மொழியின் முழு மலர்ச்சியான கவிதையால் எப்படி இயங்க முடியும்?

நண்பர்களே ! இதுவரை பார்த்த பிச்சமூர்த்தி கவிதைகளில் பல முழுக்கவிதைகளே உருவகமாகவும், படிமமாகவும் இருப்பதைக் காணலாம். ஒருமுறை திரும்பப் பாருங்கள். நல்ல உவமைகளும், உருவகங்களும் கவிதையோடு கலந்து நிற்பதைக் காண்பீர்கள்.இன்னும் சில சான்றுக்காக இங்குத் தரப்படுகின்றன.

உருவகம்

சொல் என்னும் கவிதையில் சொல்லை உருவக அடுக்காக வருணிக்கிறார். அதன் முரண்பட்ட இரட்டைத்தன்மையை, அது தரும் ஏமாற்றத்தை, சமயங்களில் அதன் பயனின்மையை – ஒரு கவிஞனின் அனுபவமாகத் தருகிறார்.

சொல் ஒரு சூது

இருபுறமும் ஒடும்

காக்கைக் கண்

இருமுகம் தெரியும்

பேதக் கண்ணாடி

காம்பில் படாமல்

மரத்தில் தாக்கி

மூர்க்கமாய்த் திரும்பிவரும்

எறிகல்

உண்மை என்று

ஒருதலை கடிப்பதை

மாயை என்று மறுக்கும்

இருதலைப் பாம்பு

படிமம்

தேவை என்னும் கவிதையில் சடுகுடு விளையாட்டு ஒரு படிமமாகிறது.

விலைப் புள்ளியும்

பஞ்சப் படியும்

விளையாடும் சடுகுடு

விலைப்புள்ளிக்கு ஏற்றாற் போல, ஊழியர்களின் பஞ்சப்படி ஏறும்; இறங்கும். இதை இரண்டுக்கும் இடையிலான சடுகுடுவாகக் காண்கிறார்.

இப்படிப் பல உருவகங்களை, படிமங்களை இவர் நூல் முழுக்கக் காணமுடியும்.

நண்பர்களே ! இவற்றால் என்ன புரிந்து கொள்கிறோம்?

எதுகைக்கும் மோனைக்குமாகச் சொற்களை வலிந்து கையாளுவது; உவமை உருவகம் என்று கவிதைப் பொருளோடு பொருந்தாமல் செயற்கையாகக் கையாளுவது – இவற்றையே பழமை என்று தள்ளுகிறார் பிச்சமூர்த்தி. கவிதையின் பொருளோடு இயைந்த இந்த எழில் நலங்களைத் தம் கவிதை முழுக்கத் தேவைக்கேற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.

3.6 உள் உணர்வின் வெளிப்பாடு

அறிவு மட்டுமே நம் வாழ்க்கையையும் உலகையும் வழிநடத்துகிறதா? இந்தக் கேள்விக்குக் கலைஞர்கள் கூறும் விடை ‘இல்லை’ என்பதுதான். உள் உணர்வுதான் வழி நடத்துகிறது என்றுதான் எந்த உயர்ந்த கலைஞனும் சொல்வான். ந.பிச்சமூர்த்தி உயர்ந்த கலைஞர். சிறந்த கவிஞர். நமக்குள் உறங்கிக் கிடக்கும் உள்ளுணர்வை – மெய் உணர்வை விழிக்க வைக்கக் குரல் எழுப்புவதே இவரது தொழிலாக இருக்கிறது. அந்தக் குரலே இவரது கவிதையாக இருக்கிறது.

காட்டுவாத்து குறுங்காவியம் இதை அழகாக வெளிப்படுத்துகிறது -

சுயநலத்தைப் பொதுத்தொண்டு ஆக்கும்

ஜாலக் கண்ணாடி வித்தை

காட்டநான் பாடவில்லை

பழவேதப் படையை ஓட்டி

லோகாயத வேதப் படையின்

தமுக்காய் ஒலிக்க நான்

தரணியில் அதிரவில்லை

மனுக்கால வெள்ளம்போச்சு

மார்க்ஸ்கால வெள்ளம்போகும்

பூமித்தாய் கருணை வெள்ளம்

எக்காலும் வழியாது ஓடும்

இயற்கையின் ஓயாத் தானம்

உயிர்களின் ஒழியா உழைப்பு

செயற்கையின் சிலுப்பல் இடையே

மலையாக உயர்ந்து நிற்கும்

(பழவேதம் = பழைய வேதங்கள்; லோகாயதம் = உலக வாழ்வியல்; தமுக்கு = வெற்றி முரசு; எக்காலும் = எப்போதும்; தானம் = கொடை, வழங்கல்)

காட்டுவாத்து – பறந்துவரப் பாதை இல்லை, பார்த்துவர வரை படங்கள் இல்லை. பிழைதிருத்த அதற்குப் பகுத்தறிவு இல்லை ; பறக்கும் சாத்திரம் பற்றிய படிப்பு அறிவு இல்லை. சைபீரியாவை விட்டு மூவாயிரம் மைல் தாண்டி வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சை வளர்த்துவிட்டுத் திரும்பிப் போகிறது. தன் இனத்தைப் பேணும் உணர்வில்,

நெறியோ நீதியோ

நீண்ட கதைகளோ

கலாச்சார மரபோ, மமதையோ

புகட்டாத மெய்யுணர்வால்

மூவாயிரம் கல்தாண்டி

இங்குவந்த பறவைச் சத்தம்…..

(மமதை = ‘நான்’ என்னும் அகந்தை; வேடந்தாங்கல் = தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயம்)

பிச்சமூர்த்தியின் பாட்டுச் சத்தமும், இந்தப் பறவையின் சிறகுச் சத்தமும் வேறு அல்ல.

‘மெய்யுணர்வை எழுப்பிடும் ‘காட்டு வாத்து’ ஆகிச் சிறகை விரித்துவிட்டால் வாழ்வும் வேடந்தாங்கல் ஆகும்’ என்கிறார் இந்தக் கவிஞானி.

பொங்கல் கவிதையில் இறுதியில் இதே அறிவுரைதான் கூறுகிறார்:

பொங்கல்இடு தன்னலத்தை

பொங்கவிடு உள்உணர்வை

வாழ்வியல் பற்றிய இவரது கவிதைக் கோட்பாடு இதுதான்! நண்பர்களே! ந.பிச்சமூர்த்தி கவிதை தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதை இதுவரை கண்ட சில சான்றுகளால் உணர்ந்திருப்பீர்கள். அவரது கவிதைகளை, முழுதும் ஆழமாக விரித்துரைக்க இப்பாடப் பகுதியில் இடமில்லை. நூல் தேடிப் படித்துச் சுவையுங்கள்.

3.7 தொகுப்புரை

இதுவரை ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்று நினைவுபடுத்திப் பாருங்கள் :

ந. பிச்சமூர்த்தி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

அவரது கவிதைகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

மரபில் இருந்து விலகித் தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்குப் பிச்சமூர்த்தி ஆற்றிய பங்கு பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.

அவரது கவிதைகளில் பாடப்பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

பிச்சமூர்த்தியின் படைப்புக் கலைத்திறன்கள் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.

பிச்சமூர்த்தியின் வாழ்வியல் பற்றிய பார்வையை உணர்ந்துகொள்ள முடிந்தது.

பாடம் 4

சிற்பியின் கவிதைகள்

4.0 பாட முன்னுரை

கவிஞர் சிற்பி இக்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத் தக்க ஒருவர். இவர் 1960 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். மரபுக் கவிதையில் தொடங்கிப் புதுக்கவிதையில் படைப்புகளைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார். மரபின் நல்ல இயல்புகளைவிட்டு விலகிவிடாமல் புதுக்கவிதை படைப்பது இவரது தனிவழி. இதனால் செழுமையான ஒரு தமிழ்நடையில் எழுதுகிறார். இவரது கவிதைகள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

4.1 சிற்பி

தமிழ்நாட்டின் தென்மேற்கு எல்லையில் கேரளத்தை ஒட்டி இருக்கும் மாவட்டம் கோயம்புத்தூர். கோவை என்ற இந்த மாவட்டத்தில் உள்ள ஆத்துப் பொள்ளாச்சியில் 29-7-1936-இல் பிறந்தார். பொ.பாலசுப்பிரமணியன் என்ற தம் பெயரைக் கவிதைக்காகச் சிற்பி என்று புனைந்து கொண்டார்

.

கல்வியும் பணியும்

இளம் வயதிலேயே கவிதைகள் எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மலையாள மொழியையும் நன்கு அறிந்தவர். மலையாள மகாகவி வள்ளத் தோளுடன் தமிழ் மகாகவி பாரதியை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றார். பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஆற்றினார். பின்னர்க் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றார்.

கவிஞர் சிற்பி

மரபு இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றுப் பின்னர்ப் புதுமை நாட்டத்தால் புதுக்கவிதை எழுத வந்த கவிஞர்களுள் பலர் தமிழ்ப் பேராசிரியர்கள். சிற்பி, மீரா, அப்துல் ரகுமான், அபி, நா.காமராசன், தமிழன்பன், இன்குலாப், மு.மேத்தா….. என்று இப்பட்டியல் நீளும். இவர்களுள் தமக்கென்று ஒரு தனி வழி வகுத்துக் கொண்டு எழுதி வருபவர் சிற்பி.

பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் உந்து விசையாய் இருந்து, புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கேற்றவர்.

படைப்புகள்

நிலவுப்பூ (1963), சிரித்த முத்துக்கள் (1968), ஒளிப்பறவை (1971), சர்ப்ப யாகம் (1974), புன்னகை பூக்கும் பூனைகள் 1980), மௌன மயக்கங்கள் (1982), சூரிய நிழல் (1991), இறகு (1996) ஒரு கிராமத்து நதி முதலிய கவிதை நூல்களைப் படைத்திருக்கிறார். இன்னும் எழுதி வருகிறார். கவிதை நாடகம் : ஆதிரை, குழந்தை இலக்கியம்: வண்ணப்பூக்கள், சிற்பிதரும் ஆத்திசூடி. உரைநடையிலும் பத்துக்கு மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் ஒரு நூலையும் படைத்துள்ளார்.

விருதுகள்

சாகித்ய அகாதமி விருது, தமி்ழ்நாடு அரசின் பரிசு, பாவேந்தர் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகப் பரிசு எனப் பல பெருமைகளைப் பெற்றவர்.

தம் பெயரில் ஒரு ‘கவிதை அறக்கட்டளை’யை நிறுவி இருக்கிறார். ஆண்டுதோறும் சிறந்த முதுபெரும் கவிஞர் ஒருவரையும் இளங்கவிஞர் ஒருவரையும் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறார்.

இக்காலத் தமிழ்க் கவிஞர்களுள் ஒரு தனிச்சுடராய் ஒளிர்கிறார்.

4.2 கவிதை பற்றிய சிற்பியின் கொள்கை

நண்பர்களே, பாரதிக்குப் பின் மரபுக் கவிதை வடிவத்தில் பலர் கவிதை எழுதினர். புதுமையை விரும்பிய சிலர் யாப்பு இலக்கணத்தைப் பின்பற்றாமல் ‘புதுக்கவிதை’ எழுதினர். இந்த இரு பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு இடையில் கருத்துப் போர் நிகழ்ந்து வந்தது, இந்தச் செய்திகளை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

வானம்பாடி இயக்கமும் எழுத்து இயக்கமும்

கவிதை பழையதோ புதியதோ, அது வாழ்க்கையின் பிரச்சினைகளை, மக்களின் சிக்கல்களை முன் நிறுத்த வேண்டும் என்பதே முக்கியம் என்ற ஒரு புதிய எழுச்சி பிறந்தது. இவ்வாறு சமுதாய நலன்களுக்காக எழுத முனைந்த சிலர் ஒன்று சேர்ந்தனர். ‘மானுடம் பாடும் வானம்பாடிகள்’ என்று தங்களை அழைத்துக் கொண்டனர். வானம்பாடி என்ற புதுக்கவிதைச் சிற்றிதழைத் (சிறு பத்திரிகை) தொடங்கினர். வானம்பாடி இயக்கம் தோன்றவும் வளரவும் காரணமாக இருந்தவர்களுள் சிற்பி முன் இடம் பெறுகிறார். ஏற்கனவே மரபு வழியில் எழுதி வந்தவர்களும் புதிதாக எழுதத் தொடங்கியவர்களும் இயக்கத்தில் இணைந்தனர். இந்த இதழில் புதுக்கவிதை வடிவத்தில் (அதாவது, மரபான யாப்பு இலக்கணத்தைத் துறந்து) எழுதினர்.

ந.பிச்சமூர்த்தி வழியில் புதுக்கவிதை படைத்தவர்களின் இதழ் எழுத்து என்பது. இந்த எழுத்து இதழ்சார்ந்த புதுக்கவிதை இயக்கத்தினர் ‘வானம்பாடி’ இயக்கக் கவிதைகளைப் புதுக்கவிதை என்றே ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல மார்க்சியச் சார்புள்ள வானம்பாடிப் படைப்பாளிகள் ‘எழுத்து’ வழியிலான கவிதைகளை ஏற்பதும் இல்லை.

சிற்பி – மரபும் புதுமையும்

தம் இறகு என்னும் நூலில் ‘என்னுரை’ என்ற முன்னுரையில் சிற்பி கீழ்க் குறிப்பிடுமாறு எழுதுகிறார் :

“எழுத்து இதழும் வானம்பாடி இயக்கமும் வெவ்வேறு திசைகளில் கவிதையை இழுக்க முனைந்தாலும், அந்தத் தர்க்கத்துக்குள் நானும் என் கவிதையும் தத்தளித்து ஒருவாறு கரை ஏறுகிறோம்.

பரிசோதனைகளைப் பாராட்டுகிற அதே வேளையில் மூச்சுப் பிடித்துக் கவிதைகளைப் படிக்க வேண்டிய கொடுமையை நான் நிராகரிக்கிறேன். (அதாவது, புரிந்துகொள்ளச் சிரமப்படுத்தும் கவிதைகளை ஒதுக்குவதாகக் கூறுகிறார்)

‘செத்த உடல்புதைத்துச் சித்திரங்கள் மேலெழுதும்’ ஊறுகாய்க் கவிதைப் பாணியும் (இக்காலத்துக்குப் பொருந்தாத பழமைகளை அலங்காரம் செய்து பாராட்டித் திரியும் போக்கு) எனக்கு உவப்பூட்டுவதாய் இல்லை. சொந்தக் கவிதைகளை எழுதாமல் அன்னிய வாசனைகளுக்கு மயங்கும் நவீனத்துவங்களும் எனக்குச் சம்மதமில்லை.

நான் மரபின் பிள்ளை, புதுமையின் தோழன். என்களம் -என்மண். என் பாத்திரங்கள் – என் மனிதர்கள் என் பின்புலம் – தமிழ்இலக்கியம். மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர் மட்டுமே !”.

இவ்வாறு, சிற்பிக்குத் தம் எழுத்துக்கான பாதை எது என்ற தெளிவான கோட்பாடு இருக்கிறது. இதைத்தான் இந்த ‘என்னுரை’ குழப்பம் இன்றி உணர்த்துகிறது.

இவரது கவிதைகளின் வாடாத புதுமைக்கும், தெளிந்த ஓட்டத்துக்கும் இந்தத் தெளிவே காரணமாக நிற்கிறது.

கவிதை என்ன செய்ய வேண்டும்?

‘புன்னகை பூக்கும் பூனைகள்’ – நூலின் முன்னுரையாக, சிற்பி கவிதை பற்றிக் கவிதை எழுதுகிறார்-

எழுத்து

ஆன்மாவின் ரத்தம்

கவிதைகள்

காலத்தின் உதடுகள்

தகிடுதத்தங்களுக்கு

நகக்கண் ஊசி

வடக்கும் தெற்கும்

மேற்கும் கிழக்கும்

பேதமாய்ப் பாரோம் !

யாம் திசைகளை விழுங்கும்

திகம்பர கவிகள்

(ஆன்மா = உயிர்; தகிடுதத்தம் = பொய்புரட்டுகள்; திகம்பர கவிகள் = திசைகளையே ஆடையாக உடுத்த கவிகள் – இந்தப் பெயருடன் தெலுங்கில் தோன்றிய புரட்சிக் கவிதை இயக்கம்)

கவிதை கவிஞனுடைய ஆன்மாவின் உயிர்ப்பாக (ரத்தமாக) இயங்க வேண்டும்; காலத்தின் மாற்றங்களைப் பிரதிபலிக்க வேண்டும்; காலத்தின் தேவைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டும்; பொய் புரட்டுகளின் நகக்கண்களில் ஊசியாய் ஏறித் தண்டிக்க வேண்டும். இனம், மொழி, தேச எல்லைகள் தாண்டிப் பொது மானிடத்தை மேம்படுத்த வேண்டும். இவையே கவிதையின் பணி என்கிறார் சிற்பி.

மேலே குறிப்பிட்ட வழியில் சிற்பியின் இலக்கியப் படைப்புக் கொள்கை அமைந்துள்ளது. இதனால் இவரது கவிதைகள் தம் மண்ணின் மணத்தைக் கொண்டு உள்ளன. தம் மக்களின் பண்பாட்டையும், மரபு சார்ந்த கலைச் செழிப்பையும் முழுமையாக ஏந்திப் பிறக்கின்றன. அதே வேளையில் உலகின் எல்லாத் திசைகளில் இருந்தும் புறப்பட்டு வரும் புதுமைகளை ஏற்கின்றன. உலகப் புதுமையோடு, தமிழ்ப் புலமை கைகோத்து நடக்கிறது. இதுவே சிற்பியின் படைப்புவழி.

வயிற்றுப் பிழைப்புக்காகத் தெருவில் நடக்கும் ‘சின்ன சர்க்கஸில்’ – தன் மீது ஏறி நிற்கும் தன் தந்தையின் சுமையைத் தாங்கிக் கிடக்கிறான் ஒரு சின்னஞ் சிறுவன். இவனும் சிற்பியின் கவிதையில் நாயகன் – பாடுபொருள் – ஆகிறான். கணினி யுகத்தின் கண்டு பிடிப்பான, கண்ணீர் வடிக்கத் தெரியாத, இயந்திர மனிதனும் (ரோபோ) கவிதைப் பொருள் ஆகிறான்.

சிற்பி மண்ணில் நின்று நிலவைப் பாடும் பழங்கவிஞராகவும் இருக்கிறார்; அப்பாட்டிலும் புதுமை சிரிக்கிறது. நிலவில் ஏறி நின்று மண்ணைப் பார்க்கும் புதுக்கவிஞராகவும் இருக்கிறார்; அந்தப் பார்வையில் என்றும் மாறாத மனிதப் பண்பின் மரபுப் பழமை வேரோடி இருக்கிறது. அதில் தமிழனின் வழிவழி வந்த பண்பாட்டு மரபு தனித்தன்மையோடு மலர்ந்து மணக்கிறது.

4.3 சிற்பியின் கவிதைகள்

கல், மரம் இவற்றை உளியால் செதுக்கி அழகிய சிலைகளை வடிப்பவனைச் சிற்பி என்கிறோம். மண், பாரீஸ் பிளாஸ்ட்டர் போன்ற குழைவுப் பொருள்களால் அழகான உருவங்களைச் செய்பவனையும் சிற்பி என்போம்.

சிற்பக் கலை என்பதே தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற பகுதிகளைச் செதுக்கித் தள்ளுவது தானே? கவிஞன் என்னும் சொற்சிற்பி படைக்கும் உலகம் மிக அழகாக இருக்கிறது. மிகச் சரியானதாக இருக்கிறது. குறைகள் அற்றதாக இருக்கிறது. உண்மை உலகம் தன் குறைகளைப் பார்த்துப் பார்த்து நீக்கிக் கொள்ள வழிகாட்டும் ஒரு ‘மாதிரி’ உலகமாக ஆகிவிடுகிறது.

கவிஞர் சிற்பி, அழகு உணர்ச்சியும், உயர்ந்த ஒழுக்கமும், தூய்மையும், மனித நேயமும், சொல்லை ஆளும் வல்லமையும் படைத்த நல்ல மனிதர். இதனால் இவர் படைக்கும் உலகம் குறைகள் இல்லாத தூய உலகமாய் இருக்கிறது. அதனுள் நுழையும் நமது குறைகளையும் நீக்குகின்ற மாய உலகமாய் இருக்கிறது. அதனுள் நுழைவோம் வாருங்கள்.

4.3.1 மனித நேயத்தின் சிறப்பு அழகு எதில் இருக்கிறது?

முன்னோர்கள் கவிதைக்கு இலக்கண மரபு வகுத்தது போல், அழகுக்கும் இலக்கணம் வகுத்து வைத்து விட்டனர்.

அழகிய பெண்

அவளுடைய உடல் அழகை முடிமுதல் அடிவரை வருணனை செய்வது கவிஞர்களின் திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு. அவள் உடல் மலர்போல் மெல்லியது; பொன்போல் சிவந்த நிறம் கொண்டது; நிலாமுகம்; தாமரை முகம்; பிறைநெற்றி; கயல் விழிகள்; முத்துப் பற்கள்; பவள இதழ்; மேகம் போன்ற கூந்தல்; மிக மெல்லிய இடை; நூலை விட இளைத்த அந்த இடை தலையில் சூடும் ஒரு பூவைக் கூடச் சுமையாக உணரும்; அந்தப் பூவில் தேன் உண்ண வரும் வண்டின் சிறகு அசையும் போது வீசும் சிறு காற்றைக் கூடப் புயல்போல் உணர்ந்து தாங்காமல் தளரும் !

அவளது பாதங்கள்தாம் எவ்வளவு மென்மை !

உலகிலேயே மிக மெல்லியவை அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் மெல்லிய இறகும். அவை பட்டால் கூட அவள் பாதங்கள் நெருஞ்சி முள் தைத்தது போலப் புண்பட்டு இரத்தம் வடிக்குமாம் !

இந்த வகையான கற்பனைகள், கருத்துகள் எதைக் காட்டுகின்றன? சிறிது சிந்தியுங்கள். ஆண், தன் ஆசையையே பெண்ணின் அழகாகக் காண்கிறான். பெண்ணைப் போகப் பொருளாகக் காண்கிறான். இந்த இலக்கணங்கள் அமையாத பெண், மரபான பார்வையில் அழகி இல்லை.

மனிதன் செல்வ வளத்தில் வளர வளர அவனுக்குள் ஒரு பணக்காரத்தனம் வந்துவிடுகிறது. அது அவனது கருத்துகளிலும் படிந்து விடுகிறது. பொருளாதாரத்தில், சாதிப் பிறப்பில், நிறத்தில் தனக்குக் கீழே தங்கிவிட்ட எவரையும் தாழ்வாக எண்ணுகிறான். இதை ‘மேட்டுக்குடிக் கருத்தாக்கம்’ என்பர்.

நண்பர்களே, அழகியல் பற்றிய ‘மேட்டுக்குடிக் கருத்தாக்கம்’ தான் மேலே நாம் கண்ட ‘அழகிய பெண்’ பற்றிய கருத்தும். இந்தத் தவறான கருத்தாக்கத்தை உடைத்து, உண்மையான அழகு எது என்று சமூகத்துக்குக் காட்ட வேண்டும். சிற்பி அதைத் தம் கவிதையில் செய்கிறார்.

உண்மையான அழகு

கூலிக்காரி (சிரித்தமுத்துக்கள்) கவிதையைப் படியுங்கள்.

கூலிக்காரி லெட்சுமி கட்டட வேலை செய்யும் சிற்றாள். பழைய துணியைச் சுருட்டித் தலையில் வைத்து, அதன்மேல் இரும்புச் சட்டியை வைத்திருக்கிறாள். அதில் நிறையக் கனமான கல்லும் மண்ணும். தாங்க முடியாத பசியைத் தாங்க உணவு வேண்டும். அதைத் தேட உழைப்பவள் அவள்; அதனால் அவளது ‘இடை’ இந்தக் கனமான சுமையை நாள் முழுதும் தாங்கும் வன்மையான இடை.

கால் கடுக்கிறதே என்று சில நிமிடங்கள் ஓய்ந்து நின்றாலும் கொத்தனார் திட்டுவார். அதனால் ஓய்வே இல்லாமல் அவளது பாதங்கள் காரைச் சுண்ணாம்பிலும் கல்லிலும் நடக்கும். கொப்புளம் கண்டாலும் தாங்கிக் கொள்ளும்.

கறுத்த உடல்தான். ஒரு சிறு தங்கத் தோடு தவிர உடம்பில் அலங்கார அணிமணிகள் இல்லை. தலையில் பூக்கூட இல்லை, புழுதிதான். இவளிடம் தான் உண்மை அழகு சிரிக்கிறது. அழகையே படைக்கும் உழைப்பின் அழகு அது. சிற்பி இதைக் காண்கிறார். நமக்குக் காட்டுகிறார் :

இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல்

தெருப் புழுதியின் பூச்சு – கொஞ்சம்

இங்கும் அங்கும் பார்த்து நின்றால்

கொத்தனாரின் ஏச்சு !

பார்வைக் கணைகள் பட்டுக் கிழிந்த

பழைய ரவிக்கைக் கந்தல் – அவள்

வேர்வை மணக்கும் மார்பின் சரிவை

மூடும் சேலைப் பந்தல்

துணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த

தோட்டில் வறுமை சிரிக்கும் – அவள்

முணுமுணுத்திடும் தெம்மாங்கு இசைக்கு

முத்தமிழ் முந்தி விரிக்கும்

இழைத்த கறுப்பில் குழைத்த மேனி

லெட்சுமி சிற்றாள் கூலி – அவள்

உழைக்கும் கரத்தைப் பற்றிடும் காளை

உண்மையில் புண்ணிய சாலி !

வறுமையால் கிழிந்து பழந்துணி ஆகிவிட்டது அவளது சட்டை. அந்தக் கிழிசல்கள் காமப் பார்வை பார்ப்பவர்களின் பார்வை அம்புகளால் ஏற்பட்டவை என்கிறார். ஓயாத வேலையின் இடையிலும் சேலையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் அவளது மான உணர்வைப் போற்றுகிறார்.

பெயர் இலட்சுமி, திருமகள். மேட்டுக்குடிக் கருத்தாக்கத்தில் செல்வச் செழுமைக்குக் கடவுள். இவளோ, வறுமையின் வடிவமாக இருக்கிறாள். ஒரு முரண் அழகு. சிற்பியின் மனித நேயக் கருத்தாக்கத்தில் இவள்தான் திருவின் செல்வி; இவள்தான் அழகி.

இந்தக் கூலிக்காரி வறுமையைக் கண்டு அழும் கோழை அல்ல. அவளது சின்னத் தோட்டில் வறுமை சிரிக்கிறது. இந்த வறுமையின் செல்வி – இலட்சுமி முணுமுணுக்கும் தெம்மாங்குப் பாட்டின் இனிமையைப் பிச்சையாகக் கேட்டு,இயல், இசை, நாடகம் என்னும் மரபான முத்தமிழும் முந்தானையை விரிக்கின்றன. இது, ‘புதுக்கவிதை என்பது என்ன?’ என்ற கேள்விக்குத் தக்க விடையாகவும் அமைகிறதல்லவா?

கடவுளை அடைபவன் புண்ணியசாலி அல்ல. இவள் காதலை அடைபவன்தான் புண்ணியசாலி என்கிறார் சிற்பி. உழைக்கும் மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார். இதுதான் சிற்பியின் அழகியல்.

“மரபு – இலக்கணம் கற்றவன்; இலக்கியம் அறிந்தவன் நான். எனவே இலக்கிய உலகமே எனக்குத்தான் உரிமை” என்பதும் கூட ஒருவகை மேட்டுக்குடிக் கருத்தாக்கம்தான். இலக்கியத்தை மக்களிடம் மீட்டு வருவதற்கு, இதை உடைக்க வேண்டும். புதுக்கவிதை இதைத்தான் செய்கிறது.

சிற்பியின் புரட்சி

எனவே புதுக்கவிதை என்பது மொழியின் வரம்பை, கட்டுப்பாட்டை உடைப்பது அல்ல. மொழிக்குள் இயங்கும் மேட்டுக்குடி மனப்போக்கை உடைப்பதுதான்.

இந்தப் புரட்சியை ஒரு மரபுக் கவிதையைக் கொண்டு செய்கிறார் சிற்பி. மேற்காட்டிய கவிதை, சந்தப் பாட்டாக, யாப்பு வடிவில் இருந்தாலும் புதிய பார்வையால், புதுக்கவிதை என்ற தகுதி பெறுகிறது.

கவிஞரின் தாஜ்மகால்

தாஜ்மகால், ஒளிப்பறவை என்னும் நூலில் உள்ள அழகிய கவிதை. தாஜ்மகாலை உலகத்தின் ஏழாவது அதிசயம் என்பர். அது காதலின் அழகுச் சின்னம். உலகக் கவிஞர்கள் பலரும் அதைக் கவிதைகளால் அலங்கரித்து உள்ளனர். சிற்பியும் தமிழில் புனைந்து பாடுகிறார் :

வாடாத வெள்ளைத் தாமரை

மேகம் தொட்ட மோக மொட்டு

பால்இடைக் குளிக்கும் பளிங்கு மண்டபம்…..

ஆசையின் மடியில் ஷாஜஹான்

அள்ளி இறைத்த வெள்ளிக் காசு

யமுனையின்,

நீலக் கூந்தலில் நிகர்இல்லா வைரம்……

எனப் பலவாறு உருவகங்களை அடுக்கிப் பாராட்டுகிறார். சட்டென்று உலகின் இருப்பு (எதார்த்தம்) நிலைக்குப் பார்வையைத் திருப்புகிறார். பெரும் செல்வர்க்கு மட்டும்தான் காதல் உரிமையா? கலைகள் உடைமையா? தாமும் தாஜ்மகால் கட்டியதுண்டே ! ஷாஜஹானின் தாஜ்மகாலை விடப் பன்மடங்கு அழகான தமது தாஜ்மகாலை நினைவு கூர்கிறார்.

ஓ ! நான் காதலிக்கு மனதில்

கட்டி முடித்ததும்

மாது சலித்ததும்

நானே இடித்ததும்

இதனைக் காட்டிலும்

மதுரக் கோபுரம்

இதனைக் காட்டிலும்

அதிசயக் காவியம்

(பால்இடைக் குளிக்கும் = நிலவின் பால்போன்ற ஒளியில் குளிக்கும்; மாது சலித்தது = பெண் தனக்குப் பிடிக்கவில்லை என்று ஏற்க மறுத்தது; நிகர்இல்லா = ஒப்பு இல்லாத)

‘மனத்தில் இதைவிட இனிமையாய், அழகாய்க் கட்டினேன். காதலிக்குப் பிடிக்கவில்லை. இடித்து விட்டேன்’ என்று சொல்கிறார். என் காதல் எதையும் விட உயர்ந்தது; ‘என்னால் முடியும்’ என்னும் தன்னம்பிக்கை அதையும்விட உயர்ந்தது என உணர்த்துகிறார். இயலாதவன் செய்யும் கற்பனையை மனக்கோட்டை என்பார்கள். அந்த மரபுத் தொடரை அர்த்தம் அற்றதாய் ஆக்குகிறார். மனக்கோட்டைதான் மனத்தின் காதல் விரிவை, கற்பனை ஒளியை உண்மையாய்க் காட்டுகிறது. ஒரு புதுமை பிறக்கிறது.

4.3.2 இயற்கை இயற்கைதான் அனைத்துக்கும் தாய். அவளுக்கு உள்ளிருந்து பிறந்து அவள் மடியிலேயே வளர்ந்தவன் மனிதன். வளர்ந்த போது ‘செயற்கை’ என்ற பெண்ணின் காதலுக்குள் தள்ளப்பட்டான். தாயைப் புறக்கணித்தான். தன்னையும் சூழலையும் கெடுத்துக் கொண்டான். உலகில் இன்று இயற்கையின் மாறுபாட்டால் எத்தனையோ தொல்லைகள். இப்போது சுற்றுச்சூழல் பற்றிக் காலம் கடந்த பின் சிந்திக்கிறான். அதைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பற்றிப் பல மேடைகளிலும் பேசப்படுகிறது. இயக்கங்கள் நடத்தப் படுகின்றன.

கவிஞனும் இயற்கையும்

கவிஞன் என்றும் இயற்கையின் குழந்தைதான். ஒரு பூ உதிர்ந்தால் அவன் நெஞ்சுக்குள் பூகம்பம் ஏற்படுகிறது. ஒரு மரம் வெட்டப்பட்டால் அவனது ஆன்மாவில் இரத்தம் கொட்டுகிறது.

சிற்பியின் இறகு நூலில் உள்ள இறகு என்னும் கவிதையைப் பாருங்கள்.

பார்த்ததே இல்லை

எனினும்

கேட்டதுண்டு

காலம் இல்லை நேரம் இல்லை

அந்திகளில் கருக்கு இருட்டில்

நண்பகலில் மாலைகளில்

வேளை இன்னது என்றில்லை

மெய்சிலிர்க்க வைத்த குரல்…..

கோடைகளில் கொப்பளித்து

மழைக்குப் பொத்தல் குடைஆகும்

என்வீட்டின் மேற்குப் புறத்தில்

இன்னொருவர் நிலத்தில்

ஒரு பச்சைப் பிரளயம்போல்

நிற்கும் வேப்ப மரம்

என் கூரையின்மேல் நிழல்தூவும்

குளிர்காற்றைத் தூதுவிடும்

சிலபோது

மனதைக் கவ்வும் ஒரு மாயமாய்

ஏகாந்தப் புல்லாங் குழலாய்

இலை அடர்த்திக்கு உள்ளிருந்து

கூவி இழுக்கும்

ஒரு குயிலின் குரல் தூண்டில் !

மகளுக்குத் தலைசீவிப் பேன்பார்க்க, மகனுக்குப் பாடம் சொல்ல, கதை சொல்லிச் சோறு ஊட்ட, அக்கம் பக்கத்துப் பெண்களுடன் ஊர்ச் செய்தி பேச – இவர் மனைவிக்கு இந்த மர நிழல்தான் உரிமையான தாய்வீடு. கவிஞரின் பாட்டுக்குக் குடியிருப்பு.

பிள்ளைகளின் அழுகை

வெளியூர் போனார். மூன்று நாட்கள் பயணம் முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் துயரமான சூழல். பிள்ளைகள் அழுகின்றன. “நிலத்துக் காரங்க வெட்டித் தள்ளிட்டாங்க”. செய்தி கேட்டுத் துடிக்கிறார்.

பதைக்கப் பதைக்க ஓடினேன்

பச்சைச் சமுத்திரம்

அலைபாய்ந்த இடத்தில்

வெட்டவெளி, வெறும் பரப்பு

என்நிழல் என்உயிர்க்காற்று

என்ஆன்ம சங்கீதம்

சுள்ளிகள் உலர்ந்த இலைகள்

மரத்துணுக்குகள் …….

வெட்டப்பட்ட அடிமரம்

பூமியின் காயமாய்

விரிசல் விட்டுக் கிடந்தது

பாழ்வெளியில் அதன்

பக்கத்தில் உட்கார்ந்தேன்

எங்கிருந்தோ ஓடிவந்த மகள்

“இதைப் பாருங்கப்பா”

என்று கையில் கொடுத்தாள்

கருமை பளபளக்கப்

பழுப்பு அலைபாயும்

ஓர் இறகு

இக்கவிதையைப் படித்து முடித்ததும், நம் மனம் கசிகிறது.

ஒரு மரம் செத்துவிட்டது. அதற்கு அழும் கவிக்குடும்பத்தோடு நாமும் சேர்கிறோம், துக்கம் கொண்டாட !

மரமா செத்தது?

ஒரு மரம் மட்டுமா செத்தது? ஒரு நிழல் செத்தது. குளிர்ச்சி செத்தது. மனிதன் பறவை என்று பேதம் பார்க்காத ஓர் இயற்கை வீடு செத்தது. தூய்மையான உயிர்க்காற்றை வழங்கிவந்த மூச்சுப்பை செத்தது. கண்களில் குளிர் அலைவீசிய பசுமைக் கடல் செத்தது. அமர்ந்து பாட்டெழுதும் ஒரு கலைக்கூடம் செத்தது. தன் மகனான கவிஞனுக்குத் துன்ப நேரங்களில் ஆறுதல் தர ‘அன்னை இயற்கை’ வைத்திருந்த இசை மேடை செத்தது.

இதனால், கவிஞரின் கண்களுக்கு மரம் இருந்த இடம் எப்படித் தோற்றம் தருகிறது பாருங்கள் :

ஒரு பச்சைக் கடல் இருந்து, காய்ந்து உலர்ந்து ஆவியாகிவிட்டது; அதன்பின் மிஞ்சியுள்ள வெறும் மணல் பரப்பாக அந்த இடம் தோன்றுகிறது. அவரது நிழல், உயிர்க்காற்று, ஆன்ம சங்கீதம் இவைதாம் அங்கு உதிர்ந்து சுள்ளிகளாய், உலர்ந்த இலைகளாய், மரத்துண்டுகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன. வெட்டப்பட்ட அடிமரம் பூமியின் புண்ணாய் வலியோடு விரிந்திருக்கிறது.

மரம் இருந்த இடம் வெட்ட வெளியாகி விட்டது. ஒரு மரத்தின் சாவில் உலகத்தையே பாலை வெளியாக்கும் ‘இயற்கை அழிவு’ காட்டப்பட்டு விட்டது. ஒரு மனித மனத்தின் பதைப்பில் (துடிப்பில்) உலகத்தின் துடிப்பே உணர்த்தப்பட்டு விட்டது.

இதுதான் கவிதை. ஓர் உயர்ந்த கவிதை இப்படித்தான் உணர்வின் துடிப்பாக இருக்கும்.

இதில் உச்சமான உணர்வுநிலை எது? நண்பர்களே, கொஞ்சம் உற்று நோக்குங்கள் :

கவிஞர் அந்தக் குயிலை நேரில் பார்த்துக் கொண்டதில்லை. கேட்கும் புலன் வழியே உணர்வு ஒன்றியது. இயற்கையாய் உருவாகி இருந்தது ஒரு நட்பு, ஒரு நேயம்! அது செத்துவிட்டது.

மரக்கிளைக் குயிலுக்கும் கவிஞன் என்னும் மானுடக் குயிலுக்கும் இருந்த இசைமயமான நட்பு, அது செத்து விட்டது. எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை பெரிய வருத்தம் ! இன்னும் எத்தனை வருத்தங்கள்……

இயற்கையை அழித்துக் கொண்டே இருக்கும் தன் சகோதர மனிதனின், ‘மனிதத் தன்மை’ இறந்ததற்கு வருத்தம்.

குயில் நண்பன் வீடு இழந்ததற்கு வருத்தம்.

மனிதன் பூமியை எங்கே தள்ளிக் கொண்டு போகிறான்? பயிர் இனம் உயிர் இனம் எல்லாம் அழியும் ‘பாழ்வெளி’ நோக்கியா?

குயில் இறகு

குழந்தை, தன் பிஞ்சுக் கையில் எடுத்து வந்த குயில் இறகு, உதிர்ந்த இறகு. மெல்லிய இறகு, ஒரு வலிமையான எச்சரிக்கையின் சின்னம் ஆகிறது. என்ன எச்சரிக்கை?

உலகம் மட்டும் அல்ல. ஒவ்வோர் உள்ளமும் ஈரம் வற்றி வறண்டு அழியப் போகிறது. மென்மை என்ற தன்மையே வேர்இன்றிக் கருகப் போகிறது. பூமி அன்பில்லாத ஒரு பாலை நிலமாக மாறி வருகிறது. இதை மனிதனுக்கு நினைவூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்க ஓர் அடையாளம், குறியீடு தேவை. குயில் இறகு அந்தக் குறியீடு ஆகிறது.

குழந்தைகள் நினைவுச் சின்னமாகப் புத்தகத்தில் மயில் இறகை வைப்பார்கள்; அது ‘குட்டி’ போடுமாம்.

கவிஞர் சிற்பி புத்தகத்தில் குயில் இறகு வைத்திருக்கிறார், நம் மனத்தில் அது ‘இயற்கையை நேசி’ ‘இயற்கையைப் போற்று’ என்னும் மென்மையான எண்ணங்களைக் குட்டிகளாய் (குஞ்சுகளாய்)ப் பெற்றெடுக்கட்டும் என்று !

4.4 சமூகமும் உலகமும்

நண்பர்களே, இதுவரை படித்த பாடப் பகுதியில் கவிஞர் சிற்பியைப் பற்றியும் அவரது கவிதை நூல்கள் பற்றியும் தகவல் அறிந்தோம். அவரது கவிதைப் படைப்பின் நோக்கம் பற்றியும் தெரிந்து கொண்டோம். அழகு, இயற்கை இவற்றில் சிற்பியின் தனித்தன்மையுடைய பார்வையையும், இவற்றைக் கவிதை ஆக்கும் கலைத்திறனையும் உணர்ந்தோம். இவற்றை உள்ளடக்கமாய்க் கொண்ட கவிதைகளில் உயிர்நிலையாய் இருக்கும் மனித நேயத்தைப் புரிந்து கொண்டோம்.

இனிவரும் பகுதியில் சமூக நலன், உலக நலன் இவற்றில் சிற்பியின் அக்கறை பற்றி அறிய இருக்கிறோம். எளிமையும் இனிமையும் கொண்ட இவரது இயல்புகள் சொல்லில் வெளிப்படுவதையும் காண இருக்கிறோம்.

தனி மனிதனோ, பல மனிதர் சேர்ந்த சமூகமோ செல்லும் பாதை தவறாகும் போது குறிப்பாகச் சுட்டி உணர்த்துவார்கள் கவிஞர்கள். புரியாத கூட்டத்தை, சில நேரங்களில் பெருங்குரல் எடுத்துக் கூவியும் நேர்வழிக்கு அழைப்பார்கள். அப்போது அந்தக் கவிதை ‘பிரச்சாரம்’ போல் தோன்றும். ‘தூய இலக்கியம்’ பேசும் கவிதையாளர்கள் இதைக் “கவிதையல்ல, வெற்று முழக்கம்” என்று மட்டம் தட்டுவார்கள். பொறுப்புள்ள நல்ல கவிஞன் இதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. தன் படைப்பில் கவிதைத் தரம் குறைந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் வாழும் மனிதனின் தரம் உயர வேண்டும் என்பதே அவனது நோக்கமாய் இருக்கும். சிற்பி சமூக நலனையே பெரிதாகக் கருதும் சிறந்த கவிஞர்.

4.4.1 சாதிய ஒடுக்கு முறை நண்பர்களே, இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தை ஒரு தீராத நோயாகப் பிடித்து ஆட்டும் ஒரு கொடுமை பற்றி அறிந்திருப்பீர்கள். பிறப்பால் மனிதனுக்கு உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி என்ற கொடிய நோய் அது. தாழ்வு படுத்தப்பட்ட சாதியிலே பிறந்தவன், எந்த வகையிலும் உயர்ந்து விடாமல் அவனை ஒதுக்கித் தள்ளிப் ‘பிறவி அடிமையாய்’ ஆக்கிவிடும் நோய் அது. தம்மை உயர்ந்தவர்கள் என்று ஆக்கிக் கொண்டவர்களால் ‘தொடுவதற்குக் கூடத் தகுதி அற்றவன்’ என்று அவன் ஒதுக்கப்பட்டு விடுகிறான். ஊருக்கு வெளியே அவன் தன் சாதி மக்களுடன் சேர்ந்துதான் வாழவேண்டும். அந்த இடம் ‘சேரி’ எனப்படும்.

இந்தத் தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் ஒழிப்பதற்கு மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டனர். தீண்டாமை ஒழிப்புக்கு இங்குக் கடுமையான சட்டங்களும் உள்ளன. ஆனாலும், மக்கள் முழுமையாகத் திருந்தவில்லை.

சிற்பியின் சர்ப்பயாகம் நூலில் உள்ள சிகரங்கள் பொடியாகும் என்னும் கவிதை, சாதிக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்து எழும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதையைச் சொல்கிறது.

சென்னிமலைக் கவுண்டரின் நிலத்தில் விவசாயக் கூலிகளாய் உழைக்கும் சேரி மக்கள், சக்கிலியர் என்ற தீண்டப்படாத சாதியினர். இவர்களில் உள்ள அழகிய பெண்களின் ‘மானத்துக்கு மயான பூமியாய் இருப்பவர்’ இந்தக் கவுண்டர்; காமவெறி மட்டும் ‘தீண்டாமை’ பார்ப்பதில்லை.

அருக்காணி என்னும் சேரிப்பெண் வாய்க்காலில் குளிக்கும்போது கவுண்டரின் காமப் பார்வையில் பட்டுவிடுகிறாள்.அவள் வயல் வரப்பில் தூங்கியபோது அவளது பெண்மையைக் களங்கப்படுத்தி விடுகிறார் பண்ணை முதலாளி.

இம்முறை மக்கள் அமைதியாய் இருக்கவில்லை. கவுண்டரின் மாளிகைக்குத் திரண்டு போகிறார்கள். திருமணம் பேச வந்ததாய்ச் சொல்கிறார்கள். அவர்,

ஏதுடா பேச்சு ஒருமாதிரியா இருக்கு

உதட்டுக்கு மீறிய பல்லு மாதிரி…..

‘அடங்கிப் போக வேண்டிய அடிமைச்சாதி’ என்று சீறுகிறார்.

எங்க அருக்காணிக்கு நேத்து

நீங்கதாம் புருஷன் ஆயிட்டீங்க…..,

நாமதான் உறவாயிட்டோம்

அதனால ஒங்க மவ காமாட்சியை

எங்க சின்னானுக்குப் பொண்ணு கேட்க…

மாரி பேசி முடிக்கும் முன் பண்ணையாரின் அடியாட்கள் அவனை அடித்து வீழ்த்தினர். சேரியை வளைத்துத் தாக்கினர். குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். இரவெல்லாம் நெருப்பு எரிந்தது. இதைக் கவிஞர் -

இரவு….. தன்மேனி முழுதும்

கதகதப்பான

மருதாணி இட்டுக் கொண்டது

(மவ = மகள்; மருதாணி = பெண்களுக்கு, குறிப்பாக மணப் பெண்களுக்குக் கைகால்களில் சிவப்பு நிறம் ஊட்ட அரைத்துப் பூசும் தாவர இலை)

என்று சொல்கிறார்.

ஊர்முழுக்கக் கலவரம். காலையில் அருக்காணி கொல்லப்பட்டு வாய்க்காலில் பிணமாகக் கிடக்கிறாள்.

குத்துவிளக்குக் குழந்தைகள்

எலும்பும் சாம்பலாய் எரிந்து கொண்டிருந்தன

வீரன், மாரி, ராமனின் பிணங்கள்

வேங்கையின் அடிமரங்களாய்ச் சாய்ந்து கிடந்தன

ஒடுக்கப்பட்டவர்களும் எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். இதைக் கவிஞன்

ஊருக்கு நடுவே வளோளர் வளவில்

இழவுப் பிலாக்கணங்கள் எழுந்துகொண்டு இருந்தன

(வளவு = குடியிருப்பு; இழவுப் பிலாக்கணம் = சாவு ஒப்பாரி அழுகை)

என்று பாடுகிறார்.

பணத்தையும், அடியாட்கள் படையையும் வைத்திருக்கும் உயர் சாதியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சேரி மக்கள் சின்னான் தலைமையில் மலை அடிவாரத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார்கள். இது தோல்வி அல்ல. அடுத்துப் பாய்வதற்காக வேங்கை பதுங்குமே, அந்தப் பதுங்கல். இதை வீரம் மிக்க சொற்களால் குறிப்பாகப் புலப்படுத்துகிறார் சிற்பி.

அந்தக் காடு

தேக்குகள் தோள் உயர்த்தும்

வாகைகள் வாள் நிமிர்த்தும்

காடு !

அங்கு நிழல்கள்கூட நிஜங்கள் ஆகும்

புயல்கள் உருவாகும்

குன்றுகள் அந்தப் புயலில் தமது

சிகரங்கள் பொடியாகும் !

(தேக்கு = உறுதிக்கு உவமையாகும் மரம்; வாகை = வெற்றிப்பூ மலரும் மரம்; சிகரங்கள் = மலை உச்சிகள்)

சமூக நீதிக்காகப் பேசும்போது சிற்பி எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்கிறார். ஒடுக்கப்படும் மக்களே தம் உரிமைக்குக் குரல் எழுப்பி எழுதும் இலக்கியம் தலித் இலக்கியம். இது இன்று தமிழில் வளர்ந்து வருகிறது. இதைவிட ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்களே ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுப்பது உயர்ந்தது அல்லவா? இக்கவிதையை வெளியிட்டபோது சிற்பி தம் உறவினர் பலரின் சினத்துக்கும் வெறுப்புக்கும் ஆளானார்.

பொது உடமைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட இவர் இந்த எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சுவதில்லை. பெண்ணுரிமை, சாதி விடுதலை இவையே இவரது கவிதைகளின் உயிர்மூச்சாய் இருக்கின்றன.

கேரளத்தில் சாதி ஒடுக்குமுறையை ஒழித்த ஆன்மிகவாதி நாராயண குரு. கடவுள் மறுப்பாளரான சிற்பி, இந்த நாராயண குருவைப் போற்றி வாழ்த்திக் கேரளத்துச் சூரியன் என்ற (‘இறகு’- தொகுப்பு) கவிதை படைத்துள்ளார். நாராயண குருவைப் பற்றி இதைப் போன்ற ஒரு சிறந்த கவிதையை ஒரு மலையாளக் கவிஞர் கூடப் படைத்ததில்லை.

பெண்மை வதங்குதல்

வறுமைச் சுரண்டலால் உடலை விற்கும் நிலைக்குத் தள்ளப்படும் பெண் விலைமகள் ஆகிறாள். இந்தப் பெண்ணைக் கொண்டே, இழிந்த இந்தச் சமூகத்தை விமரிசனம் செய்கிறார் சிற்பி. இவரது நெடுங்கவிதைகள் மிகுதியும் இந்தக் கருவையே உள்ளடக்கமாய் உடையவை. தமிழக அரசின் பரிசுபெற்ற மௌன மயக்கங்கள் காவியமும் இந்த வகையில் அமைந்ததுதான்.

4.4.2 புதுஉலகு படைத்தல் நாய்க்குடை (நூல்: சர்ப்பயாகம்) என்னும் கவிதை உலக நலன் பாடுகிறது. அணுகுண்டு வெடிப்பின் நச்சுப் புகை விரிவை நாய்க்குடைக் காளான் விரிவதாக உருவகம் செய்து பாடுகிறது. பேராசை பிடித்த, அதிகார வெறிகொண்ட வல்லரசுகளை ‘அணுக்குண்டர்களே’ என்று கேலி செய்கிறது. அந்த வெறியர்களைப் பார்த்து ஆணை இடுகிறது :

சூனியக் காரரே விஞ்ஞான தீபத்தில்

மாணிக்கத் தாலியை எரிக்கும் மூடரே !

…..

எங்கள் பாப்பாக்கள் நீலமாய்ப் பிறக்கும்முன்

புல் இதழில் விஷ முத்துக்கள் வியர்க்கும்முன்

செல்வப் பசு மடியில் மரணம் சுரக்கும்முன்

…….

விரிவது நிற்கட்டும்

விரிவது நிற்கட்டும்

ராட்சச

நாய்க்குடைக்

காளான்…….

உலக அழிவைக் காட்டி அச்சம் ஊட்டும் அணு ஆயுதத்தைத் தடை செய்ய அண்மையில்தான் உலக நாடுகளின் ஒப்பந்தம் வந்தது. இதற்கு இருபது ஆண்டுகள் முந்தியே இதைப்பற்றி உலக நலக் கவிதை பாடியிருக்கிறார் சிற்பி.

4.5 சிற்பியின் இனிய கவிதை

நண்பர்களே எளிமையும் இனிமையுமே எப்போதும் அழகு ! சிற்பியின் எழுத்துகள்தாமே நம்மோடு அவர் பேசும் பேச்சு? அவை அந்த மனிதரின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. அந்த எழுத்துகள் அவரது முகம் ஆகின்றன. புன்னகை ததும்பும் இனிய முகம். அவரே அவரது கவிதை ஆகிவிடுகிறார்.

நகைச்சுவை

நகைச்சுவை நடையில் மிகுதியாய் எழுதுவார். கன்னியா குமரி தமிழ்நாட்டின் தெற்கு எல்லை. உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் இந்த இடத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். முக்கடல் சேரும் இடத்தில் சூரியனின் எழுச்சி – வீழ்ச்சி பார்க்கவே பலரும் வருகின்றனர். ஆனால் வணிகம் செய்து வயிறு வளர்ப்பவர்கள் கடற்கரையையே மறைத்துக் கட்டடங்கள் எழுப்பிவிட்டனர் நகைப்புக்கு இடமான மடமை இது. ஒரே சொல் தொடரில் இதை நகையாடுகிறார் சிற்பி -

விரி கடலை மறைக்கும்

பொரி கடலைச் சந்தைகள் (கன்னியாகுமரி – இறகு)

இந்தத் தடைகளைத் தாண்டிச் சூரியன் காட்சி அளிப்பதற்குள் பொழுது ஏறிவிடுகிறது. சூரியன் எப்படி இருக்கிறான்? ‘முற்றிப்போன சூரியன்’ – என்பது அழகான சொல்லாட்சி.

குழந்தைக்கு அறிவுரை

குழந்தைப் பாடல் தொகுப்பு வண்ணப்பூக்கள். பிள்ளை மனத்தின் குறும்புப் பேச்சை இந்த நூலில் கேட்கலாம்.

‘பூனை குறுக்கே போனால் ஆகாது’ என்ற மூடநம்பிக்கையைக் குறும்புப் பேச்சால் களைகிறார் -

பூனை குறுக்கே

போனதற்கு ஏன் தயக்கம்? – பால்

பானை தேடி

அதுவும் போய் இருக்கும்

தேவை இல்லை மயக்கம் – நம்

வேலை எத்தனை சுணக்கம்?

(சுணக்கம் = தாமதம்)

உவமைப் புதுமை

உவமை, உருவகம், சொல் ஓவியமான படிமம் இவற்றைச் சிற்பி ஆளும் திறனை அறிய, நாம் முன்னால் கண்ட முன்னுரை, தாஜ்மகால் ஆகிய கவிதைகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

பேருந்துக் கூட்டத்தில்

அகப்பட்ட இளம்பெண்

யாரோ தொட்டதும்

சீறிச் சினத்தல் போல்

சிவந்து சுரீல் எனச்

சீறியது தீக்குச்சி (இரவு – இறகு)

உரசியதும் தீக்குச்சி தீப்பற்றுவதற்குப் புதிய உவமை கூறியுள்ளார்.

சிற்பியின் சிறந்த கவிதைகள் பற்றி நிறைய எழுதலாம். இந்தப் பாடத்தில் இடம் இல்லை. ‘சர்ப்பயாகம்’ நூலில் உள்ள முள்…முள்..முள் என்னும் கவிதையைப் படித்து இவரது புதுமைச் சிந்தனைகளைச் சுவையுங்கள். மலர்கள் என்னும் கவிதையில் அழகுணர்ச்சியை அனுபவியுங்கள்.

4.6 தொகுப்புரை

நண்பர்களே ! இக்காலச் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான சிற்பியின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள் :

சிற்பி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

சிற்பியின் கவிதைப் படைப்புகள் எவை என்பது பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.

அவரது கவிதைப் படைப்புக்குப் பொருளாய் அமைந்த உள்ளடக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

அவரது கவிதைகளில் வெளிப்படும் சமூக உணர்வு, அழகியல் உணர்வு, மனித நேயம், இயற்கை நல ஈடுபாடு முதலியவை பற்றி உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவரது கவிதைகளில் அமைந்துள்ள சொல்லாட்சி, உவமை, உருவகம் போன்ற இலக்கிய அழகுகளை அறிந்து கொள்ள முடிந்தது.

சிற்பி என்னும் கவிஞரின் தனித்தன்மையை அவரது கவிதைகள் வழி உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாடம் 5

அப்துல் ரகுமானின் கவிதைகள்

5.0 பாட முன்னுரை

இக்காலத் தமிழ்க் கவிஞர்களுள் சிறந்த புதுக்கவிஞர் அப்துல் ரகுமான். புதுமையும், இனிமையும், செழுமையும் இயல்பாய் அமைந்தவை இவரது கவிதைகள். இதனால் படிப்பவர் நெஞ்சங்களை எளிதில் கவர்கின்றன. கவிதை படிக்கும் ஆர்வத்தையும், படைக்கும் ஆற்றலையும் தூண்டுகின்றன. புகழ்பெற்ற வார, திங்கள் இதழ்களிலும், தொலைக்காட்சியிலும் இவரது கவிதைகள் வெளி வருகின்றன. தனித்தன்மை வாய்ந்த இவரது படைப்புத் திறன் பற்றியும், கவிதைகளின் நலம் பற்றியும் இப்பாடத்தில் நாம் காணலாம்.

5.1 அப்துல் ரகுமான்

தமிழ்நாட்டில், மதுரையில் 9-11-1937-இல் பிறந்தார் அக்காலத்தில் தமிழ், உருது ஆகிய இருமொழிகளிலும் சிறந்த எழுத்தாளராக விளங்கிய ‘மஹதி’ சையத் அஹ்மத் என்பார் இவருடைய தந்தையார் ஆவார். இதனால் இளவயதில் இருந்தே மொழிப் புலமையும் கவிதை எழுதும் ஆற்றலும் அப்துல் ரகுமானிடம் வளரத் தொடங்கின.

கல்வியும் பணியும்

தமிழ்க் கல்விக்குச் சிறந்த கல்லூரி என்று புகழ் பெற்றிருந்த மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுக்கவிதையில் குறியீடு என்னும் பொருள்பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடியில் இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகச் சென்னையில் இருந்து தம் படைப்புப் பணியைத் தீவிரத்துடன் செய்து வருகிறார்.

கவிதை ஆர்வம்

அப்துல் ரகுமான் பள்ளிப் பருவத்திலேயே கவிதை புனைந்தவர். கல்லூரி நாட்களிலேயே புதுமையாக எழுதிப் புகழ் பெற்றவர். கல்லூரி இலக்கிய மன்றங்களும், வானொலி நிலையங்களும், அண்ணாவின் அரசியல் இயக்கமும் நிகழ்த்திய பல கவியரங்கங்களில் பங்கேற்றார். புதுமையாய்ப் பாடும் திறத்தால் தமிழகம் முழுதும் புகழ் பரவப் பெற்றார்.

கவிராத்திரி

பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் புதுக்கவிதையை ஆயிரக் கணக்கானோர் கூடிச் சுவைக்க வழி செய்தார். கவிராத்திரி என்ற பெயரில் கவியரங்கத்தைப் புதுமைப் படுத்தினார். தம் மாணவர்களைப் புதுக்கவிதை எழுதவைத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.

அன்னம் பதிப்பகம்

தம் வகுப்புத் தோழரும் கவிஞருமான மீராவுடனும் மற்ற நண்பர்களுடனும் சேர்ந்து, புதிய படைப்பாளிகளின் இலக்கிய நூல்களை வெளியிடுவதற்காகவே அன்னம் என்னும் பதிப்பகத்தை உருவாக்கினார்.

தமிழ் உணர்வு

தமிழ்மொழியின் மீது பற்றும், சமுதாய நலனில் அக்கறையும், நல்லொழுக்கமும் நிறைந்தவர் அப்துல் ரகுமான்.

தம் அறுபதாவது வயது நிறைவைக் கொண்டாட மாணவர்களும் நண்பர்களும் திரட்டித் தந்த நிதியைக் கொண்டு தம் பெயரில் ஒரு கவிதை அறக்கட்டளை நிறுவினார். ஆண்டு தோறும் தமிழில் சிறந்த கவிதை நூல் படைக்கும் கவிஞருக்கு ரூபாய் முப்பதாயிரம் பரிசளித்துப் பாராட்டி வருகிறார்.

சிறப்பும் விருதும்

கவிக்கோ என்னும் அடைமொழியால் தமிழகத்திலும், தமிழறிந்த அயலகங்களிலும் அறியப்படும் அப்துல் ரகுமான், 1999-ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கவிதைக்குரிய சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர். 1989-இல் தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கிய தமிழன்னை விருது, தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்றார். 1997-ஆம் ஆண்டு கலைஞர் விருது பெற்றார். இவையல்லாத பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கிறார்.

5.2 கவிதைகள்

அப்துல் ரகுமானின் முதல் கவிதைத் தொகுப்பு நூல் பால்வீதி. 1974-இல் வெளிவந்தது. பாலைச் சுண்டக் காய்ச்சித் திரட்டாகக் கட்டிப் படுத்தியது போன்று, சிந்தனையையும் கற்பனையையும் திரட்டி வடித்த புதுக்கவிதைகள் கொண்டது.

அடுத்து வெளிவந்தது, கவியரங்கங்களில் அவர் பல ஆண்டுகளாகப் படைத்த கவிதைகளுள் தெரிந்தெடுத்த சிலவற்றையும், இந்தி உருது இசைப்பாடல் வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திப் படைத்த பாடல்களையும் கொண்ட நேயர் விருப்பம். இது 1978-இல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சுட்டுவிரல் (1989), ஆலாபனை (1995), விதைபோல் விழுந்தவன் (1998), முத்தமிழின் முகவரி (1998), பித்தன் (1998) ஆகிய புதுக்கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். 2002 – இல் வெளிவந்துள்ளது மின்மினிகளால் ஒரு கடிதம் என்னும் நூல். இது அரபி, உருது மொழிகளின் கஸல் என்னும் காதல் கவிதை வடிவத்தைத் தமிழில் அறிமுகம் செய்ய இவர் படைத்த அழகிய காதல் இலக்கியம்.

இக்கவிதை நூல்கள் மட்டுமின்றி இரு ஆராய்ச்சி நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரை நூல்கள், பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து விளக்கி எழுதிய பல கட்டுரைத் தொகுதிகள் என்று பல நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்து எழுதி வருகின்றார்.

நண்பர்களே, ந.பிச்சமூர்த்தி, சிற்பி ஆகியோரின் கவிதைகள் பற்றிய பாடங்களை முன்பு படித்தீர்கள். அவற்றின்வழி புதுக்கவிதை பற்றி அறிந்திருக்கிறீர்கள்.

புதுக்கவிதை வடிவம்

சிற்பியும் அப்துல் ரகுமானும் தமிழ் கற்றுப் புலமை பெற்ற பேராசிரியர்கள். இவர்களும் மீரா, அபி, மேத்தா, தமிழன்பன், இன்குலாப் போன்ற பிற தமிழ்ப் பேராசிரியர்களும் யாப்பு இலக்கணக் கட்டுப்பாட்டை மறுத்த புதுக்கவிதையை எழுதத் தொடங்கினர். இதன் பிறகுதான் ‘இலக்கணத்தை மீறிக் கவிதை எழுதினால் தமிழ்மொழி அழிந்துவிடும்’ என்ற தவறான எண்ணம் அகன்றது. புதுக்கவிதையைக் கடுமையாக எதிர்த்து வந்த பலர் அமைதி அடைந்தனர். கவிதையின் பரிணாம வளர்ச்சி என்று புதுக்கவிதையை ஏற்றுக் கொண்டனர். விலங்குகள் இல்லாத கவிதை என்ற அப்துல் ரகுமானின் கட்டுரை நூல் புதுக்கவிதை பற்றிய பல தவறான ஐயங்களைப் போக்கியது.

இக்கால வாழ்வியல் சூழல் ஏற்படுத்தும் உள்ள உணர்வுகளை, வாழ்க்கைச் சிக்கல்களைக் கவிஞன் சரியாக வெளியிடப் பொருத்தமான வடிவம் புதுக்கவிதைதான் என்பது அப்துல் ரகுமானின் நம்பிக்கை.

5.2.1 தம் கவிதை பற்றிய கொள்கை அறிக்கை பாரதியார் ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்’ என்று கொள்கை அறிவிப்புச் செய்தார். தமக்குத் தொழிலே கவிதை படைப்பதுதான் என்பது அவர் கருத்து. அவர் வழியில் வந்த தமிழ்க்கவிஞர் அப்துல் ரகுமானோ, தமக்கு உயிரும் வாழ்க்கையுமே கவிதைதான் என்கிறார். எழுதுகோலைத் (பேனா) தம் கையின் ஆறாவது விரலாகவே உணர்கிறார். ‘இந்த ஆறாவது விரல் வழியே வடியும் இரத்தமும் சதையும்தாம் தம் எழுத்துகள்’ என்று அவர் சொல்கிறார்.

என் ஆறாவது விரல் வழியே

சிலுவையிலிருந்து

வடிகிறது ரத்தம்

ஆம் -

என் ‘மாம்சம்’

வார்த்தை ஆகிறது

அவரது முதல் நூலான பால்வீதியின் முதல் கவிதையே இவ்வாறு அவர் கவிதை பற்றிய கொள்கை அறிக்கையாக அமைகிறது.

நண்பர்களே, திருமறை பைபிளைப் படித்தவர் ஒவ்வொருவருக்கும் இக்கவிதை ‘ஆதியாகமத்தில்’ வரும் மனிதன் படைக்கப்பட்ட செய்திகளை நினைவூட்டும். ஆதியில் தேவனிடம் இருந்த ‘வார்த்தை மாம்சம் ஆகியது’ – அதாவது ‘வார்த்தையால் தேவன் முதல் மனிதன் ஆதாமைப் படைத்தார்’, என்பதே அச்செய்தி. அப்துல் ரகுமானின் கவிதையில் ‘மாம்சம் வார்த்தை’ ஆகிறது.

இந்தக் கவிதை நமக்கு எதை உணர்த்துகிறது?

1. சிலுவையில் ஏசுபெருமான் சிந்திய இரத்தம் மனித குலத்தைப் பாவ வழியிலிருந்து மீட்டது. அன்பு என்னும் தூய நெறியில் செலுத்தியது. உலகம் அடையும் வாழ்க்கைச் சிக்கல்களால் கணந்தோறும் சிந்தனைச் சிலுவையில் அறையப்படுகிற கவிஞனின் இரத்தமே அவன் கவிதை. இது மனித குலத்தை மீட்டு நல்வழியில் செலுத்தும்.

2. சிலுவையில் ஏசு சொன்ன வாக்கியம் ‘என் தேவனே ! ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்பது, அப்துல் ரகுமான் அதை ‘என் தேவனே ! எனக்குக் கைகொடுத்தீர்’ என மாற்றி இக்கவிதைக்குத் தலைப்பாகக் கொடுத்துள்ளார். எழுதும் கையைக் கொடுத்ததற்கு நன்றி கூறுவதற்காகவே இந்த மாற்று உரை.

5.2.2 பாடுபொருள் வகைகள் மானிட முன்னேற்றம் தமது கவிதைகளின் குறிக்கோள்’ என்ற அவரது படைப்பு நோக்கம் இன்று வரை அவர் எழுதியுள்ள கவிதைகள் அனைத்திலும் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

காதல், இயற்கை, அரசியல், சமூகம், அறிவியல், ஆன்மிகம் முதலிய வாழ்வியல் துறைகள் எதையுமே அவர் விட்டுவைக்கவில்லை. தெளிந்த சிந்தனையுடனும், ஆழ்ந்த தூய உணர்வுடனும், இனிய அழகியலுடனும் கவிதைகளைப் படைத்து வழங்கி வருகிறார். சான்றாக ஒருசில கவிதைகளே இங்குத் தரப்படுகின்றன.

சமயம் – ஆன்மிகம்

இறைவனுக்கு எத்தனையோ பெயர்கள் ! எல்லாப் பெயரும், ஒருவனான இறைவனையே குறிக்கின்றன என்று சமய ஒற்றுமை பேசுகிறார் அப்துல் ரகுமான்.

அரன் என்றழைப்பினும்

வரன் கொடுப்பவன்நீ

அரியென்று இசைப்பினும்

சரியென்று இசைப்பாய்

கர்த்தன் என்று உரைப்பினும்

அர்த்தம் நீதான்

அல்லா எனினும் நீ

அல்லாது வேறு யார்?

(ஆயிரம் திருநாமம்பாடி – நேயர்விருப்பம், ப.31)

(அரன் = சிவன்; அரி = திருமால்; வரன் = வரம்; அல்லா = இறைவன்)

இயற்கை

இயற்கைப் பொருள்களை அப்படியே வருணனை செய்வதில்லை அப்துல் ரகுமான். அவற்றுக்குள்ளும் ஆழ்ந்த வாழ்வியல் உண்மைகளைக் காண்கிறார்.

சின்னஞ் சிறிய பனித்துளிகளையும் பெரிய சூரியனையும் ஒரு கவிதையில் நிறுத்திக் காட்சி படைக்கிறார். அது ஒரு புதிய காட்சி. நம் மனச்சாட்சியை உசுப்பும் சாட்சி என்ற கவிதை :

வெண்புள்ளி குத்திய

இரவு நீக்ரோவைப்

படுகொலை செய்கிறான்

வெள்ளையன்

தரையின்

பச்சை நாக்குகளில்

வார்த்தையாக முயலும்

ரத்தத் துளிகள் (சாட்சி, பால்வீதி, ப.74)

(இரவு = நீக்ரோவாகவும்; சூரியன் = வெள்ளையனாகவும்; புல் இதழ்கள் = பச்சை நாக்குகளாகவும்; பனித்துளிகள் = இரத்தத் துளிகளாகவும் உருவகப் பொருளில் வந்தன; வெண்புள்ளி குத்துதல் = நட்சத்திரங்கள் மின்னுதல், இங்கு நீக்ரோக்களைப் புள்ளி குத்தி அவமானப்படுத்துதல்)

வெள்ளை இனத்தவரின் இனவெறிக் கொடுமைக்கு உள்ளாகும் நீக்ரோ மக்களின் மீது கவிஞர் கொண்ட பரிவு இந்த உருவகக் கவிதையாய் உருவாகியிருக்கிறது. உலகையெல்லாம் தன் உறவாகப் பார்க்கும் கவிஞருக்கு ‘அந்த விடிகாலைப் பொழுது நீக்ரோக்களுக்கு எப்போது விடியும்?’ என்ற தவிப்பு !

உழைப்பு

உழைத்துச் சிவந்த கைகளைத் திருமகளின் இருப்பிடமான செந்தாமரையாகக் காண்கிறார். தனரேகை, கையில் இல்லை, தரிசுகளில் ஏர்முனை கீறும் கோடுகள் தாம் தனரேகை என்கிறார். (நகமகுடம், நேயர் விருப்பம், ப.42)

மணி வயிரத் தோள்என்ற

மந்தரங்கள் இங்கிருக்கத்

தயக்கமென்ன அமுது எடுக்கத்

தரைக்கடலையே கடைவோம் !

(மந்தரம் = பாற்கடலைக் கடையப் பயன்பட்ட மந்தர மலை; தரைக்கடல் = தரையாகிய கடல்)

வயிரம் பாய்ந்த தோள்கள் என்னும் மந்தர மலையைக் கொண்டு, பூமியாகிய பாற்கடலில் உழைத்து, மானிடம் சாகா இருப்பதற்குரிய அமுதாகிய அனைத்துப் பயன்களையும் அடைவோம் என்பது பொருள்.

சமூக உணர்வு

காற்றைப் பாடும்போது, சமூகத்தில் சாதியின் பெயரால் வளர்ந்து நிற்கும் கொடிய நோயான தீண்டாமையைக் கண்டிக்கிறார்.

கை இல்லாத நீ

எல்லாரையும் தழுவுகிறாய்

கை இருக்கும் நாம்

சக மனிதனிடமே

தீண்டாமையைக்

கடைப்பிடிக்கிறோம்

கையிருப்பது ஒரு குறையோ?

(அந்த இடம், ஆலாபனை)

கைகள் இல்லாத காற்று எல்லாரையும் தழுவுகிறது. கையிருக்கும் மனிதன் தன் உடன்பிறப்பான இன்னொரு மனிதனை இழிந்த சாதி âன்று தீண்ட மறுக்கிறான். இதைச் சொல்லும் கவிஞர் “கையிருப்பது ஒரு குறையோ?” என்று கேட்கிறார்.

சுட்டுவிரல் என்னும் நூலில் சமுதாயச் சீரழிவுகளுக்குக் காரணமானவர்கள் அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். சினம் கொண்டு சாடுகிறார். அதில் அப்துல் ரகுமானின் ‘கவிக்கோபம்’ பொங்குகிறது. கோபம் கூட மிக அழகாக இருக்கிறது.

இசை

கவிஞர் மெழுகு வத்தியைக் கூர்மையாகப் பார்த்திருக்கிறார். நமக்காக அழுது உருகும் அதன் தோற்றத்தில் ஒரு புதிய கற்பனை பிறக்கிறது :

ஒற்றை நெருப்பு உதட்டின்

வாசிப்பில்

புல்லாங்குழலே

உருகுகிறது (பால்வீதி. ப . 51)

மெழுகு வத்தியின் சுடர் ஒற்றை உதடாகத் தெரிகிறது. மெழுகுவத்தி புல்லாங்குழலாகத் தோன்றுகிறது. வெளிச்சம் இசையைப்போல் பரவுகிறது. நமக்கு இன்பம் தருகிறது. அந்த இசையின் இனிமையில் புல்லாங்குழலே உருகிக் கரைகிறது. ஒளியையும் ஒலியையும் ஒன்றிணைத்து இசைக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குகிறார் கவிஞர்.

ஆலாபனை நூல் முழுக்க வாழ்வின் சிறந்த அம்சங்களை, அழகை எடுத்துக் காட்டி, அவருக்குள் இருக்கும் பாடகன் பாடுகிறான். ஆலாபனை : ராக விரிவை இசைக்கலைஞர் இசைக்கும் முறை. வாழ்வையே இசை ஆலாபனையாக உணர்ந்து ரசிக்கும் ரசிகனை இங்குக் காணலாம்.

காதல்

உலகக் கவிஞர்களில் காதலைப் பாடாதவர் எவரும் இல்லை. காதலர் பிரிந்து இருக்கும் போது தோன்றும் துயரத்தில்தான் காதலின் உயிர்த் துடிப்பே இருக்கிறது. அந்தப் பிரிவும் ஏக்கமும்தாம் காதலை வளர்க்கும் ஊட்டச் சத்து; கண்ணீர்தான் காதலை வாடாமல் வாழவைக்கும் ஊற்று நீர். அப்துல் ரகுமானின் காதல் கவிதைகள் எல்லாம் இந்தப் பிரிவையும் ஏக்கத்தையும் துன்பத்தையுமே பாடுகின்றன. பலநூறு கவிதைகள் படைத்தும் நிறைவு அடையாமல் ஒரு தனி நூலே படைத்திருக்கிறார். அதுதான் மின்மினிகளால் ஒரு கடிதம். தான் பாடுவதற்கே காதலியின் நினைவுதான் காரணம் என்று சொல்கிறார் :

கற்களில் இடறும்போது

பாடும் நதியைப்போல

உன் நினைவுகள் இடறும்போது

நான் பாடுகிறேன்

(மின்மினிகளால் ஒரு கடிதம், ப. 69)

(இடறுதல் = மோதிக்கொள்ளுதல்)

உண்மை அழகு

உலகத்தில் நாம் ‘உயர்ந்தவை அல்ல’ என்று கருதும் பல பொருள்களிலும் சிறந்த அம்சங்கள் இருப்பதை இவருக்குள் இருக்கும் பித்தன் பாடுகிறான். பித்தன் நூல் முழுதும் இந்த முரண் அழகைப் பாடுகிறது.

நண்பர்களே, அப்துல் ரகுமான் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையுமே தம் கவிதைப் பொருளாக எடுத்துப் பாடுகிறார். ஒரு சில சான்றுகளை இந்தப் பாடப் பகுதியில் பார்த்தோம்.

5.3 படைப்புக்கலைத் திறன்

சிறந்த கவிஞன் தன் உள்ளத்தில் உணர்ந்ததை, தன் கவிதையின் மூலம் படிப்பவரின் உள்ளத்திற்கு இடமாற்றம் செய்கின்றான். ‘சிறிதளவு கூட அது சிந்திவிடாமல், சிதறிவிடாமல் சென்று சேர வேண்டுமே’ என்று கவனம் எடுத்துக் கொள்கிறான். அதற்காகப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கிறான். உவமை, உருவகம் போன்ற கலைத் திறன் உத்திகளைக் கையாளுகிறான்.

அப்துல் ரகுமான் கையாளும் தனித்தன்மை கொண்ட கலைத்திறன்கள் பற்றி இனி அறியலாம்.

5.3.1 சொல்லாட்சி சொற்களில் கூர்மை, தெளிவு, அழகு, உணர்வு ஆகியன பொருந்தத் தேர்தெடுத்துப் பயன்படுத்துகிறார். இது இவரது தனித்தன்மை. சில இடங்களில் புதிய சொற்களையே உருவாக்குகிறார்.

கவிதைகளுக்கும், நூல்களுக்கும் தலைப்பு இடுவதிலேயே சொல்லாட்சித் திறன் காணப்படுகிறது. பால்வீதி என்பது பல ஆயிரம் நட்சத்திரங்களால் ஆன அண்ட வெளி வீதி. இது ஒரு வெளிச்சப் பாதையைப்போல் விளங்குகிறது. இதனால் வானநூல் வல்லுநர் இதற்கு இப்பெயர் இட்டனர். இப்பெயரையே கவிதைத் தொகுதிக்கு இட்டிருக்கிறார். ‘ஒளிவீசும் எழுத்துகளால் ஆன சொற்களின் தொகுதி; இது ஒளிபொருந்திய வாழ்க்கைக்குப் பாதையாக அமையும்’ என்ற பொருள் தரும் ஆழமான சொல்லாட்சி இது. இவ்வாறு ஒவ்வொரு நூலின் தலைப்பும் சிறந்த சொல்லாட்சி பொருந்த அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையின் தலைப்பையும் கூர்ந்து நோக்கினால் அங்கும் இத்திறன் விளங்குகிறது.

புதுச்சொற்களை உருவாக்குதல்

தாய் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியேற்றுகிறாள். இது பிரசவம் எனப்படுகிறது. மனிதன் மரணமடைந்து புதைக்கப்படுவது பூமித் தாயின் கருவுக்குள் அவளது குழந்தை மறுபடி நுழைவதாகத் தோன்றுகிறது கவிஞருக்கு. ஆகவே இதனைப் பிரசவத்துக்கு எதிரான அப்பிரசவம் என்ற புதுச்சொல் படைத்து இந்தக் கற்பனையைப் புரியவைக்கிறார். வெட்டியான் அப்பிரசவத் தாதி ஆகிறான். (அப்பிரசவம் = எதிர்ப்பிரசவம்; தாதி = பிரசவம் பார்பவர்)

முரண்களை ஆளுதல்

வாழ்க்கை எதிர் – எதிர்த் தன்மைகள் கொண்ட முரண்களின் இணைப்பினால்தான் ஆக்கப் பட்டிருக்கிறது. ஆண் – பெண்; இருள் – ஒளி; இரவு – பகல்; நன்மை – தீமை; இன்பம் – துன்பம்; நேர்மின் ஆற்றல் – எதிர்மின் ஆற்றல்… இப்படி, முரண்கள் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.

அப்துல் ரகுமானின் கவிதைகளில் மேலோங்கி நிற்பது முரண்களின் ஆட்சிதான்.

சுதந்திரம் பெற்ற நாளை – ‘பிள்ளைகள் கூடித் தாயைப் பெற்றநாள்’ என்கிறார்.

புன்னகை – ‘பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர்’ என்று முரண் நயம் தோன்றப் பாடுகிறார்.

பித்தன் நூல் முழுதுமே முரண்பட்ட நிலைகளை அழகிய கவிதையாய் உரைத்தது தான்

5.3.2 உவமையும் உருவகமும் சொற்கள் கவிதை ஆவதே உவமையால்தான் என்று கூறுவார்கள்.சிறந்த புலமைக்குச் சான்று ஆவதே உவமை கூறும் திறன்தான் என்று உலகம் எங்கும் நம்பப்படுகிறது. ‘கோடிச் சூரியர்களைப் பிழிந்து நட்சத்திரங்கள் செய்வதாகக்’ கூறும் அப்துல் ரகுமான் சுருக்கமாகவும் செறிவாகவும் கவிதை படைக்கிறார். அதனால் உவமையின் செறிவான வடிவமான உருவகத்தைத்தான் மிகமிக அதிகம் கையாளுகிறார்.

உவமை

உவமையை மிகமிக அரிதாகத்தான், குறைவாகத்தான் பயன்படுத்துகிறார். அப்போதும் வேறு கோணத்தில், புதுமையாக்கிக் கையாளுகிறார்.

சான்றாக, அறிஞர் அண்ணா பற்றி அவர் பாடிய கவிதை நூல் விதைபோல் விழுந்தவன், பெயரே உவமையால் ஆனது.

அழுகின்ற போதும்

மேகம்போல் அழுதவன்நீ

விழுகின்ற போதும்

விதைபோல் விழுந்தவன்நீ (ப.15)

என்ற வரிகளில் உவமை காணப்படுகிறது. ‘மேகம்போல் சரம்சரமாக அழுதவர்’ என்று பொருள் இல்லை. மேகம் அழுதால் பூமியில் (அந்த நீரைப் பெறுகிற) எல்லாம் சிரிக்கும். அதைப்போல் அண்ணா தமிழ்மக்கள் எல்லாரும் சிரிப்பதற்காக, மகிழ்வதற்காகத் தான் அழுதவர் என்று புதுமைப் பொருள் தரும் உவமை இது. அவரது தியாகத்தைக் குறிப்பது. இதில் இன்னொரு நயமும் உள்ளது : தன்னிடமிருந்து பிரிந்து அண்ணா புதிய அரசியல் கட்சி தொடங்கிய போது தந்தை பெரியார், ‘கண்ணீர்த் துளிகள்’ என்று அக்கட்சியை அழைத்தார். இதையும் உவமை குறிப்பாக உணர்த்துகிறது.

இதைப்போல், ‘விதைபோல் விழுந்தவன்’ என்பதும் அதன் விழுகின்ற செயலைக் குறிக்கவில்லை. மற்ற பொருட்கள் விழுந்தால் அழியும். விதையோ முளைத்து எழும். மேலும் பல விதைகளைத் தரும் மரமாகும். அண்ணா, தோற்றாலும் வெல்பவர், பணிந்தாலும் உயர்பவர், இறந்தாலும் வாழ்பவர் என்று பொருள் விரிக்கும் உவமை இது.

உருவகம்

அப்துல் ரகுமானின் கவிதைகளில் மிகுதியாக நிறைந்திருப்பவை உருவகங்கள்தாம். பேனாவை ஆறாவது விரலாக உருவகம் செய்துள்ள கவிதையை முன்பே பார்த்திருக்கிறோம்.

முதுமைப் பருவம் பற்றிய இவரது உருவகங்களைப் பாருங்கள் :

நிமிஷக் கறையான்

அரித்த ஏடு

இறந்த காலத்தையே பாடும்

கீறல் விழுந்த இசைத்தட்டு

ஞாபகங்களின்

குப்பைக் கூடை

வியாதிகளின்

மேய்ச்சல் நிலம்…………..

(முதுமை. நேயர் விருப்பம், ப. 52)

5.3.3 படிமம், குறியீடு, தொன்மம் படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றையும் தம் கவிதைகளில் மிகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

படிமம், குறியீடு

சொற்களால் நெஞ்சத் திரையில் வரையும் ஓவியம்தான் படிமம் என்பது. வெறும் வருணனை கூடப் படிமம்தான். ஆனாலும் உவமை, உருவகம், தொன்மம் அடங்கிய சொற்களால் உருவாக்கப்படும் சொல் ஓவியம் சிறந்த படிமமாகும். உணர்வை மிகுதியாகத் தூண்டும்; பலபொருள் தரும் சுவை ஊற்றாகும்; இயக்கம் உள்ள ஓவியமாக உயிருடன் விளங்கும்.

அப்துல் ரகுமானின் கவிதைகளில் இத்தகைய படிமங்களையே மிகுதியாகக் காண்கிறோம். பால்வீதி நூலில் உள்ள சாவி இருக்கும் வரை என்ற கவிதையைப் பார்க்கலாம்.

ஞாபக முட்கள்

காயங்களைச் சுட்டி

வட்டமிடும்

என் ஏகாந்தத்தின்

இதயத் துடிப்பாக,

பிரிந்து சென்ற உன்

காலடி ஓசை

(ஏகாந்தம் = தனிமை)

இக்கவிதை பிரிந்து சென்ற காதலியின் காலடி ஓசையைப் பற்றியது. பிரிந்து சென்றபின் நினைவெல்லாம் அந்தக் காலடி ஓசைதான். தனிமையின் இதயத் துடிப்பாகிறது அது. ஒரு கடிகாரத்தின் டிக், டிக் ஓசையாகிறது. மனமே ஒரு கடிகாரமாகி விடுகிறது. குத்தி, உறுத்தி, துளைத்துக் கொண்டே இருக்கும் ஞாபகங்கள் (துயர நினைவுகள்) அதன் முட்கள். நெஞ்சின் புண்கள்தாம் நேரம் காட்டும் எண்கள். நினைவு முட்கள் காயங்களின் மேல் வட்டமிட்டு வலியை மேலும் மிகுதிப் படுத்துகின்றன. இந்த வலி, துன்பம் எதுவரை? கடிகாரம் ஓடும் வரை ! கடிகாரம் எதுவரை ஓடும்? சாவி இருக்கும் வரை !.

காதலின் உறுதியை, பிரிவின் வலிமையைக் கண்முன்னால் வரைந்து காட்டும் அருமையான படிமம் இது.

‘சாவி இருக்கும் வரை’ என்ற தலைப்பால், ‘இந்தக் காதலின் வேதனை, ஆவி இருக்கும் வரை இருக்கும்’ என்ற பொருளைத் தருகிறது கவிதை.

‘இங்கே நெஞ்சம் ஒரு கடிகாரம்’ எனப் படிமமாக மட்டும் நின்று விடாமல், ‘கடிகாரம்’ ஆயுள் காலம் என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகிவிடுகிறது. சிறந்த குறியீட்டுப் படிமத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு,

இதில் கடிகாரம் என்ற சொல்லையே பயன்படுத்தாமல் ஒரு நுண்மையான கடிகார ஓவியத்தை நம் மனத்தில் வரைகிற கவிஞர் கைதேர்ந்த சொல் ஓவியராக விளங்குகிறார்.

தொன்மம்

தொன்மம் பற்றி முந்திய பாடங்களில் அறிந்திருக்கிறோம். புராணம், பழங்கதைகள் இவற்றில் வரும் பாத்திரங்களோ, நிகழ்வுகளோ கவிதையில் ஓரிரு வார்த்தைகளில் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு சுட்டினால், பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை அது உணர்வோடு விளக்கிவிடும். இதனால் உலகெங்கும் சிறந்த கவிஞர்கள் இந்தக் கலைத்திறனை விரும்பிக் கையாளுகின்றனர். இது தொன்மம் எனப்படுகிறது.

அப்துல் ரகுமானின் கவிதைகளில் தொன்மம் மிகுதியாக இடம் பெறுகிறது.

‘ஆறாவது விரல்’, ‘சிலுவை’ – இவை பைபிள் தொன்மங்கள். முன்னரே இக்கவிதை உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

இராமாயணத்தின் பல பாத்திரங்கள், கோவலன், கண்ணகி, நெற்றிக்கண், வாமனன், பாற்கடல், விசுவரூபம், துச்சாதனன், கவுரவர் முதலிய பிற தொன்மங்கள் இவரது கவிதைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கு இவருக்கு மிகவும் பயன்பட்டுள்ளன.

இந்திய நாட்டுத் தேர்தல்கள், மக்களாட்சி பற்றிய கவிதை ஐந்தாண்டுக்கு ஒருமுறை. இதில் நளன் கதைத் தொன்மம் இடம் பெறுகிறது.

சுயம்வரம் என்பதை அறிவீர்களா? அரச குமாரிகள் தமக்குப் பிடித்த மணாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஏற்பாடு அது. (சுயம் = தானாக; வரம் = வரிப்பது, தேர்ந்தெடுப்பது). அப்துல் ரகுமான் இன்றைய இந்தியத் தேர்தல் – மக்களாட்சி முறையை ஒரு புது வகைச் சுயம்வரமாகப் பார்க்கிறார். இந்தச் சுயம்வரத்தில் ஏமாற்றப் படுகிற மங்கையாக இந்திய மக்களைக் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். இந்த நாட்டில் பேராசை பிடித்த, சுயநலக்காரப் பதவி வெறியர்களே அரசியல் அரங்கில் மேல்நிலை பெறுகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒன்றுதான் நோக்கம். எல்லாரும் நல்லவர் போல வேடம் போடுகிறார்கள்.

நளன் கதையில், நளனை மணக்க விரும்பினாள் தமயந்தி. சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட்டு மணந்து கொள்ள மண்டபத்துள் நுழைந்தாள். இவள் நளனை விரும்புவதை அறிந்து கொண்ட தேவர்கள் நளனைப் போலவே தங்கள் உருவை மாற்றிக் கொண்டு (போலி வேடமிட்டு) இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். தமயந்தி தன் அறிவுக் கூர்மையால் உண்மையான நளனைக் கண்டறிந்து மாலையிட்டு மணந்து கொண்டாள். இவ்வாறு சுயம்வர நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப்படுகிறது.

இன்றைய சுயம்வரத்தில் உண்மை நளன் எவருமே இல்லை. எல்லாருமே போலி நளன்கள். கையில் வாக்குச்சீட்டு என்ற மாலையோடு தவித்து நிற்கும் குருட்டுத் தமயந்திதான் வாக்காளர்கள். அதாவது தெளிந்த அறிவு இல்லாத ஏமாளிகள். எப்படி நல்ல ஆட்சி அமையும்? ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் சுயம்வரக் கவிதையை இப்போது படியுங்கள்:

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்

போலி நளன்களின் கூட்டம்

கையில் மாலையுடன்

குருட்டுத் தமயந்தி (பால்வீதி, ப. 70)

பக்கம் பக்கமாய் விவரிக்க வேண்டிய செய்தியை இரக்கம், எள்ளல் உணர்வுகளுடன் நான்கு வரிகளில் சொல்லி விடுகிறார்.

நண்பர்களே, கவிதைகளை உருவாக்கும் கலையில் தேர்ந்த கலைஞரான அப்துல் ரகுமானின் படைப்பு ஆக்கக் கலைத்திறன்களைச் சில சான்றுகள் வழி அறிந்து கொண்டீர்கள்.

பித்தன் நூல் முழுதுமே முரண்பட்ட நிலைகளை அழகிய கவிதையாய் உரைத்தது தான்.

5.4 தமிழில் புகுத்திய புதுமைகள்

தமிழ்க் கவிதை இலக்கியத்தில் அப்துல் ரகுமான் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடி ஆவார். இதனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிச் சிறப்பிடத்தை அவர் பெறுகிறார்.

மீமெய்ம்மை இயல்

சர்ரியலிசம் என்னும் இந்தப் படைப்பாக்க முறையைக் கையாண்டு தமிழில் கவிதை நூல் (பால்வீதி) செய்தவர் இவர்.

நஜம், கீத், கஸல்

இவை அரபி, உருது இசைப்பா வடிவங்கள் ஆகும். இவற்றைத், தமிழில் முதன்முதலில் எழுதி அறிமுகம் செய்துள்ளார். மின்மினிகளால் ஒரு கடிதம் தமிழ் கஸல்களின் முழுத்தொகுதி.

நான் உன் மூச்சு

என்னை நீ விட்டாலும்

மீண்டும்

வாங்கித்தான் ஆகவேண்டும் (ப.18)

என் இதயத்தை

உடைத்து விட்டாயே

இனி எங்கே வசிப்பாய்? (ப.19)

போன்ற அழகிய கஸல்கள் கொண்டது இந்த நூல்.

ஹைக்கூ

இப்போது தமிழில் பலரும் எழுதிவரும் ஹைக்கூ என்னும் ஐப்பானியக் குறுங்கவிதை வடிவத்தை முதலில் தமிழில் அறிமுகம் செய்தவரும் இவர்தான். சிந்தர் என்ற தலைப்பில் பால்வீதியில் ஐந்து ஹைக்கூக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று-

இரவெல்லாம்

உன் நினைவுகள்

கொசுக்கள்

காதல் நினைவுகள் உறங்க விடாமல் தொல்லை செய்கின்றனவாம்.

இவ்வாறு, அப்துல் ரகுமான் தமிழ் இலக்கிய உலகுக்குப் புதுமைகள் பலவற்றை அறிமுகம் செய்துள்ளார் என்று அறியலாம்.

அப்துல் ரகுமான் மிகச் செறிவான, எண்ணிக்கையில் மிகுதியான பல சிறந்த கவிதைகளைப் படைத்துள்ள பெருங்கவிஞர். இதனால் தான் கவிக்கோ என்று சிறப்பிக்கப்படுகிறார். (கோ = அரசர்)

இவரது படைப்புகளில் நாம் இப்பாடத்தில் அறிந்து கொண்டவை மிகமிகச் சிறிய அளவே ஆகும். இவரது நூல்களைத் தேடிப் படித்துக் கவிதைச் சுவைப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களே, உங்கள் கவிதை நுகர்வுத் திறனைச் செழிப்பாக்கவும், நீங்களாகவே கவிதை வாசிப்புப் பயிற்சி பெற்றுக் கொள்ளவும், அப்துல் ரகுமானின் ஆலாபனை நூலில் இருந்து நீராக என்ற கவிதையின் சில அடிகள் கீழே தரப்படுகின்றன.

நீராக

நீரிலிருந்து பிறந்தவனே

நீ ஏன் நீராக இல்லை?

நீ மட்டும்

நீராக இருந்தால்

இல்லாமல் போகமாட்டாய்

நீ மட்டும்

நீராகவே இருந்தால்

உன்னை யாரும்

காயப்படுத்தவே முடியாது

நீரைப்போல்

மென்மையாக இரு

மென்மையே

உயிர்த் தன்மை

நீரைப் போல்

போராடுகிறவனாக இரு

நீர் ஆயுதமில்லாமல்

போராடுகிறது

ஆனால்

எல்லாவற்றையும்

வென்று விடுகிறது

நீரைப்போல்

உன் சிறைகளில் இருந்து

கசிகின்றவனாக இரு

நீரைப்போல்

கண்டுபிடிப்பவர்களுக்காக

ஒளிந்திரு

நீரைப்போல்

சுவை அற்றவனாக இரு

எப்போதும்,

நீ தெவிட்டாதவனாக

இருப்பாய்

நீரைப்போல்

பிரதிபலிப்பவனாக இரு

சூரியனும் சந்திரனும்

உனக்குக் கிடைப்பார்கள்

நீரைப்போல்

எங்கே சுற்றி அலைந்தாலும்

உன் மூல சமுத்திரத்தை

அடைவதையே

குறிக்கோளாய்க் கொள்வாயாக !

இக்கவிதை மிக எளிதானதாக எழுதப்பட்டுள்ளது. ஆயினும் நுண்மையான பொருள்நலம் கொண்டது. பிறர் உதவியின்றி நீங்களாகவே படித்து, சிந்தித்து, உணர்ந்து கொள்ள முயலுங்கள்.

5.5 தொகுப்புரை

நண்பர்களே ! இதுவரை அப்துல் ரகுமானின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள் :

அப்துல் ரகுமான் பற்றியும் அவரது கவிதைப் படைப்புகள் எவை என்பது பற்றியும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

அப்துல் ரகுமானின் கவிதைப் படைப்புக்குப் பொருளாய் அமைந்த உள்ளடக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

அவரது கவிதைகளில் அடங்கியுள்ள கற்பனை வளம், சொல்லாட்சி, உவமை, உருவகம், படிமம் போன்ற கலைத் திறன்களைச் சான்றுகள் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.

அவர் தமிழ்க் கவிதையில் அறிமுகப்படுத்திய புதுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

சுவைத்துத் திளைப்பதற்காகவும் நுகர்தல் பயிற்சிக்காகவும் ஒரு கவிதையைப் படித்துக் கொள்ள முடிந்தது.

பாடம் 6

குறும்பாக்கள் (மஹாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் கவிதைகள்)

6.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டு, உலகில் புதுமைகள் பல தோன்றிய காலம். தமிழ் இலக்கியத்திலும் பல புதுமைகள் தோன்றின. உலகத் தொடர்பு வளர்ந்தது. பிறமொழி அறிவும் தொடர்பும் பெருகின. இதனால் வேறு மொழிகளில் உள்ள வடிவங்களில் கவிதை படைக்கும் பரிசோதனை முயற்சிகள் தமிழில் பெருகின. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமையான கவிதைகள் படைக்கப்பட்டன.

லிமரிக் (குறும்பா-Limerick) என்பது ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி விரைந்து பரவிய ஒரு புதிய கவிதை வடிவம். அதைப் போல் தமிழில் ‘குறும்பா’ படைக்கும் முயற்சி இருபதாம் நூற்றாண்டில்தான் மேற்கொள்ளப்பட்டது. ஈழத்தைச் (இலங்கை) சேர்ந்த ‘மஹாகவி’ அதனைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மீரா, ஈரோடு தமிழன்பன், த. கோவேந்தன் ஆகியோர் சிறந்த ‘குறும்பா’க்களை இயற்றினர்.

மஹாகவி, மீரா, தமிழன்பன் இவர்களின் குறும்பாக்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

6.1 லிமரிக் என்னும் கவிதை வடிவம்

லிமரிக் ஆங்கிலத்தில் தோன்றிய, ஐந்து வரிகள் கொண்ட சிறிய கவிதை.

நாம் தமிழில் ‘இயைபுத் தொடை’ என்று சொல்வதை ஆங்கிலத்தில் ‘ரைம்’ என்கின்றனர்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே

(செந்தமிழ்நாடு, பாரதியார் கவிதைகள்)

இங்குப் போதினிலே – காதினிலே எனவருவது இயைபுத் தொடை (ரைம்).

தன்மை

லிமரிக்கின் ஐந்து வரிகளில் முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய வரிகளில் ஒத்த ஓசை உடைய ‘ரைம்’களும்; மூன்றாவது நான்காவது வரிகளில் தம்முள் ஒத்த ஓசை உடைய ‘ரைம்’களும் வரும். ஐந்தாவது வரியாக மிகுதியும் முதல் வரியே (திரும்பவும்) வந்திருக்கும்.

பாடப்படும் இடங்கள்

மக்கள் கூடிக் களிக்கும் திருவிழாக்களிலும், விருந்துகளிலும் ‘லிமரிக்’ பாடப்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும், பகடி (கிண்டல்) செய்து பேசிக் கொள்வதும் மக்கள் இயல்பு.

மகிழ்வதும், மற்றவர்களை மகிழ்விப்பதும் மட்டுமே அங்கு நோக்கமாக இருக்கும். அதனால் நகைச்சுவை உணர்வுதான் முதல் இடத்தில் நிற்கும். பால்உணர்வும், எள்ளல் (கிண்டல்) தன்மையும் கொண்ட ‘லிமரிக்’, நகைச்சுவைக்காக விருந்து, விழா நிகழ்ச்சிகளில் தவறாது இடம் பெற்றது. ஐரோப்பாவில் பலநாடுகளில் பரவி வளர்ந்தது.

முதல் தொகுப்பு

எட்வர்டு லியர் இவ்வகை ஆங்கிலக் கவிதைகளைத் தொகுத்து 1846-இல் புக் ஆப் நான்சென்ஸ் என்ற பெயரில் வெளியிட்டார். பின்னர் மாரிஸ் பிஷப் என்ற அமெரிக்கக் கவிஞர் லிமரிக்கின் அமைப்பில் சில மாறுதல்களைச் செய்தார். எதிர்பாராத முடிவையும் திடீர்த் திருப்பத்தையும் கொண்டதாகக் கவிதையின் இறுதி வரியை மாற்றி அமைத்தார். இதனால் சுவை கூடியது.

பாடுபொருள்

வாழ்வின் எந்தப் பொருளையும், உள்ளப் பாங்கையும் அக்கவிதைகள் பாடின. புனிதமானவை என்று சமூகம் உயர்த்தி வைத்தவற்றைக் கேலி செய்தன. சொல்லும் தகுதி அற்றவை என்று ஒதுக்கி வைத்தவற்றை உரத்த குரலில் பாடின. சமூகத்தில் உள்ள ஆபாசங்கள், பழங்கதைகள், மனிதரின் போலித் தனங்கள் அனைத்தையும் சுவையோடு எள்ளி நகையாடின.

மகாகவிஞர்கள் என்று போற்றப்படும் பலரும் ‘லிமரிக்’ எழுதியுள்ளனர்.

கவர்ச்சி மிகுந்த குறுங்கவிதையாக இருப்பதால் இது உலகம் எங்கும் வரவேற்புப் பெற்றது. மிக விரைவில் பரவியது.

6.1.1 தமிழில் குறும்பா இலங்கையில் உள்ள நீர்க்கொழும்பில் இந்து வாலிபர் சங்கம் 30-01-1965-இல் தமிழ்விழா நடத்தியது. அதில் நடந்த கவியரங்கத்தில் தான் மஹாகவி என்ற கவிஞர் இயற்றிய ‘குறும்பா’ முதன்முதலில் படிக்கப்பட்டது. அதன்பின் ‘இளம்பிறை’ என்ற திங்கள் இதழில் சில பாக்கள் வெளிவந்தன. இலங்கையின் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான எம்.ஏ. ரஹ்மான், தம் ‘அரசு வெளியீடு’ சார்பாக, மஹாகவியின் நூறு குறும்பாக்களைத் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டார். 17-2-1966-இல் மஹாகவியின் குறும்பா என்ற பெயரில் அந்த நூல் வெளிவந்தது.

நூலின் முகப்புப் பக்கத்தில் ‘தமிழில் முதன்முதலில் லிமரிக்ஸ்’ என்ற குறிப்பு உள்ளது. “சிரிப்புக்கும், சிந்தனைக்கும், கருத்துக்கும், கற்பனைக்கும் பெருவிருந்தாய் 100 குறும்பாக்கள்” என்ற அறிவிப்பும் உள்ளது.

இதிலிருந்து சிரிக்க வைப்பது, சிந்தனையைத் தூண்டுவது, சீர்திருத்தத்தை வேண்டுவது, சுவைப்புத் திறனை (ரசனை) வளர்ப்பது இவையே குறும்பாவின் நோக்கம் என உணரலாம்.

குறும்பா

குறும்பா என்னும் பெயர் குறுமை + பா = சின்னஞ்சிறு கவிதை என்று அதன் சிறிய வடிவத்தைக் குறிக்கிறது. மேலும், ‘குறும்பு ஆகப் படைக்கப்பட்டது’ என்று அதன் உள்ளடக்கத்தையும் நயமாகச் சுட்டுகிறது.

6.2 மஹாகவி

இலங்கை யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்னும் ஊரில் 9.1.1927-இல் பிறந்தார். சிறந்த நாதஸ்வர இசைக்கலைஞர் துரைசாமி இவரது தந்தை. இவர் தம் மகனுக்கு இட்ட பெயர் து. உருத்திரமூர்த்தி.

புனை பெயர்கள்

தம் பதினைந்தாம் வயதிலிருந்தே பண்டிதன், புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி. மகாலட்சுமி, மஹாகவி ஆகிய பல புனை பெயர்களில் கவிதைகள் பல எழுதினார். இறுதியில் மஹாகவி என்ற பெயரே நிலைத்துவிட்டது.

பணியும் படைப்பும்

இலங்கை அரசுத் துறையில் பல பதவிகளில் இருந்தார். கவிதை, நாடகம் என்று இவரது ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன.

பாடுபொருள்

மஹாகவி ஈழத்தின் நவீனத் தமிழ்க் கவிதை முன்னோடிகளுள் முதன்மையானவராக மதிக்கப் படுகிறார்.

ஆழமான மனிதாபிமானம்

வாழ்வின் மீது உறுதியான நம்பிக்கை, வாழ வேண்டும் என்ற முனைப்பு

சமூக ஏற்றத் தாழ்வுகள் மீதும், போலி ஆசாரங்கள் மீதும் எதிர்ப்பு

- இவையே மஹாகவியின் இலக்கியப் படைப்புகள் அனைத்துக்கும் உள்ளடக்கப் பொருளாக உள்ளன. எளிய மக்களின் அன்றாட வாழ்வையே தம் கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர் அவர்.

பழைய மரபான யாப்பு வடிவங்களைப் பேச்சு æசைப் பாங்கில் எளிமைப் படுத்தினார். இதனால் யாப்புக் கட்டுப்பாட்டை உடைக்காமலே கவிதைக்குப் புதுமை என்னும் நவீனத் தன்மை வந்துவிடும் என்று செயல்படுத்திக் காட்டினார்.

‘நவீன உள்ளடக்கங்களை வெளியிட யாப்பு உதவாது’ என்ற புதுக்கவிதையாளரின் கொள்கை ஆதாரம் அற்றது எனக் காட்டியவர் இவர் என்று கூறுகிறார் – மற்றொரு சிறந்த இலக்கியவாதியான எம்.ஏ. நுஃமான்.

நண்பர்களே ! மஹாகவிக்குத் தம் வாழ்வியல் கொள்கைகளுக்கும், இலக்கியப் படைப்புக் கொள்கைகளுக்கும் ஒத்த பொருத்தமான வடிவமாக லிமரிக் தோன்றியிருக்கிறது. அதனால்தான் நூறு குறும்பாக்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்று உணர்கிறீர்கள் அல்லவா?

மறைவு

20-06-1971-இல் இதய நோயினால் இறந்தார்.

6.2.1 குறும்பாக்கள் மஹாகவி ‘லிமரிக்’குக்குத் தமிழில் என்ன விதமான வடிவம் தந்திருக்கிறார் என்று அறிவோமா? இந்தக் குறும்பாவைப் பாருங்கள்.

(1) உத்தேசம் வயதுபதி னேழாம்

உடல்இளைக்க ஆடல்பயின் றாளாம்

(2) எத்தேசத்து எவ்அரங்கும்

ஏறாளாம் ! ஆசிரியர்

(3) ஒத்தாசை யால்பயிற்சி பாழாம்

இப்பாடலில் 1,2,3 என எண் இடப்பட்டுள்ளவை அடிகள்.

உத்தேசம், எத்தேச, ஒத்தாசை – எதுகைகள்

உத்தேசம் – உடல்

எத்தேசம் – ஏறாள் – மோனைகள்

னேழாம், நாளாம், பாழாம் – இயைபுகள்

ஆங்கில லிமரிக் போலவே தமிழ்க் குறும்பாவையும் ஐந்து வரிகளில்தான் அமைத்திருக்கிறார். ஆனால் வரிகள் ஐந்து என்றாலும் அவை மூன்று அடிகளில் அமைந்து உள்ளன.

மூன்று அடிகளிலும் முதல் சீர்கள் (சொற்கள்) ஒரே எதுகை கொண்டவை (இரண்டாம் எழுத்து ஒத்ததாக வருவது எதுகை).

முதல் அடியை இரு வரிகளாகவும், இரண்டாம் அடியை இரு வரிகளாகவும் மடக்கி எழுதுகிறார். முதல் இரு வரிகளிலும், அடுத்த இருவரிகளிலும் முதல் சீர்களில் மோனை வருகிறது (முதல் எழுத்து ஒத்ததாக வருவது மோனை).

முதல் வரி, இரண்டாம் வரி, ஐந்தாம் வரி இவற்றின் முடிவில் (இறுதியில்) வரும் சீர்களில் ‘ரைம்’ என்னும் இயைபு வருகிறது. ஆங்கில லிமரிக்கில் மூன்றாம் வரியிலும் நான்காம் வரியிலும் ஒரு ‘ரைம்’ வரும். அதை மஹாகவி தவிர்த்து (விட்டு)விட்டார்.

6.2.2 கவிதைக்கலை மஹாகவி குறும்பாக்களைப் படைப்பதில் கையாண்டுள்ள கலை நுணுக்கங்களை இனிக் காணலாம்.

எந்தப் பொருளிலும் மெய்ப்பொருள் காணும் நுண்ணிய நோக்குக் கொண்டவை கவிஞனின் கண்கள். கண்டதைத் தான் அடைந்த உணர்ச்சியுடன் சேர்த்து நமக்குக் காட்டுபவை அவனது சொற்கள்.

சமூகத்தின் இழிந்த நிலைகளைக் காணும்போது பொறுப்புள்ள கவிஞன் அதிர்ச்சி அடைகிறான். அவ்வுணர்ச்சியை ஒன்று வருத்தம் அல்லது சினம் பொங்கும் சொற்களால் வடிப்பான். அல்லது எள்ளி நகையாடி, இதயத்தைச் சிந்தனைக்கும் செயலுக்கும் தூண்டுவான். நையாண்டி அல்லது பகடி செய்து குத்திக்காட்டும் முறை கவிதை உத்திகளில் ஒன்றாகும். இது தமிழில் அங்கதம் எனப்படும். ஆங்கிலத்தில் ‘சட்டயர்’(Satire). குத்தலான இந்த வகைக் கவிப்பேச்சுக்கு ஒத்த பொருத்தமான வடிவமாகக் குறும்பா விளங்குகிறது. மஹாகவியின் குறும்பாவில் இப்பேச்சைக் கேட்கலாம்.

கற்பித்தலில் கயமை

நண்பர்களே ! மேலே வடிவ விளக்கத்திற்காகத் தரப்பட்டுள்ள குறும்பாவை மீண்டும் பாருங்கள். கவிதையின் பொருள் விளங்குகிறதா?

ஒரு பெண், வயது பதினேழு இருக்கலாம். (உத்தேசம் = இருக்கலாம்) உடல் மெலிவதற்காக நாட்டியக் கலையைப் பயின்றாள். ஆனால், இப்போது எந்தத் தேசத்திலும் எந்த மேடையிலும் அரங்கு ஏற முடியாது. ஏன்? ஆசிரியரின் ‘உதவி’யால் அவளது பயிற்சி பாழாகிவிட்டதுதான் காரணம் !

பயிற்சி முறையாக நடந்து முடிந்திருந்தால், இவளுக்கு உடல் இளைத்து மெலிந்திருக்க வேண்டும். நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும். ஆனால் இவள் எந்த மேடையிலும் ஏறக் கூட முடியாதவள் ஆகிவிட்டாள். ஏன்? உடல் மெலியாமல், வயிறு பெருத்து விட்டது. அவள் கரு உற்றுவிட்டாள். அதனால் அதுவரை கற்றுக் கொண்ட பயிற்சியும் வீண் ஆகிவிட்டது. யார் காரணம்?

நாட்டிய ஆசிரியர்தான் ! ஓர் ஆசிரியருக்கு வேண்டிய ஒழுக்கமும், நேர்மையும், கண்ணியமும் அவரிடம் இல்லை. பருவத்தின் வாசலில் நிற்கும் அந்தப் பெண்ணின் பேதைமை (அறியாமை)யைத் தன் பால்உணர்வு வெறிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். முறையில்லாமல் அவளிடம் ஆசையைத் தூண்டிவிட்டுத் தன் தீய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். இவர் ஆசிரியருக்கு உரிய ஒழுக்கத்துடன் அந்த மாணவியிடம் நடந்து கொள்வார் ; ஆடல் கலையைக் கற்றுக் கொடுப்பார் என்று நம்பி அவளது பெற்றோர் அவரிடம் ஒப்படைத்தனர். அவளும் அப்படி நம்பியிருப்பாள். ஆனால் ஆசிரியர் பாழாக்கிவிட்டார். களங்கப்படுத்தி விட்டார். எவற்றை எல்லாம்? ஒழுக்கத்தை ! நம்பிக்கையை ! பண்பாட்டை ! தமிழரின் அரிய கலைச் செல்வமான நாட்டியத்தை! ஒரு பெண்ணின் பெருஞ்செல்வமான கற்பை !

குறும்பாக்களில் சொற்களைக் கூர்மையாகக் கையாளும் திறனே சிறப்பு இடம் பெறுகிறது. உவமை, உருவகம் போன்ற இலக்கியக் கலைத்திறன்களுக்கு அவற்றில் இடம் இல்லை. காரணம் நேரடியான குத்தலான கேலிப்பேச்சும் அவற்றின் மிகச் சிறிய வடிவமுமே ஆகும்.

மேலே கண்ட குறும்பாவில் மஹாகவியின் சொல் ஆட்சித் திறனைக் காண்போமா?

இந்தக் குறும்பாவில் பணக்கார வர்க்கத்தின் செல்வச் செருக்கால் நிகழும் சமூக அவலத்தைத்தான் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.

சொல்லாட்சியின் சிறப்பு

‘உடல்இளைக்க’ என்ற சொல்லாட்சி இதை உணர்த்துகிறது. எப்படி? இந்தப் பெண் எளிய நடுத்தர வகுப்புப் பெண்ணாக இருந்தால் வேலை செய்வாள். உடல் தானாகவே மெலிந்து இளைக்கும். செல்வச் சீமான் வீட்டுப் பெண் இவள். உணவில் நல்ல ஊட்டம் வேறு ! மெலிவதற்கான உடல் பயிற்சியாகத்தான் ஆடல் கலை பயில்கிறாள். கலை ஆர்வத்தால் அல்ல. இதைப் ‘பயிற்சி’ என்ற சொல்லாட்சி எள்ளல் சுவையோடு சுட்டிக் காட்டுகிறது. ‘எத்தேசத்திலும் எந்த அரங்கிலும் ஏறமாட்டாள்’ என்று சொல்கிறார். ஏன்? இடையும் வயிறும் இளைக்கவில்லை. மாறாக எதிர்விளைவு நிகழ்ந்து விட்டது; பெருத்துவிட்டன. நகைச்சுவை பொங்குகிறது இந்தச் சொற்றொடர் தரும் பொருள் நயத்தில். ஆனால் சிரித்து முடிக்கும்போது நம் கண்களில் நீர் அரும்பி விடுகிறது. கிண்டலாகப் பேசியே ஒரு துயர உணர்வைக் கிண்டிவிடுகிறார் மஹாகவி.

பெண்மை பாழாகிவிட்டது. இதனால் இந்தப் பெண் இனி நாட்டிய அரங்க மேடையில் மட்டும் அல்ல, எந்தப் பொது அரங்கிலும் பெருமிதத்துடன் ஏற முடியாது. பொது இடங்களில் நடனமாட மட்டும் அல்ல, நடமாடவே இயலாது. இவளுக்குத் திருமணம் எளிதில் நடக்குமா? தடைப்படும். மணமேடையிலும் ஏறமுடியாது. “எத்தேசத்து எவ்அரங்கும் ஏறாளாம்” – என்னும் சொல்லாட்சி, எழுப்பும் எண்ணங்கள் ஏராளம். மாறுபட்ட உணர்வுகளும் ஏராளம்.

ஆர்வத்தைத் தூண்டிச் சிந்தனையைக் கிளறிவிட்டு முத்தாய்ப்பான இறுதி வரியில் புதிரை விடுவிக்கிறார் :

“ஆசிரியர் ஒத்தாசையால் பயிற்சி பாழாம்” என்று.

ஒத்தாசை என்றால் உதவி என்று பொருள். அது இங்கு, கிண்டலாக உதவி என்ற நேர்ப் பொருள் தராமல், ‘துரோகம்’ என்ற எதிர்மறைப் பொருள் தருகிறது. முட்டாளை ‘மகாமேதாவி’ என்று திட்டுகிறோமே அதுபோல ! ஆசையைத் தூண்டிவி்ட்டுத் தன் ‘ஆசை’யைத் தீர்த்துக்கொண்டு விட்டார், என்றும் இந்தச் சொல் குறிப்பாக உணர்த்துகிறது. (ஒத்தாசை = ஒத்த + ஆசை).

‘பயிற்சி பாழ்’ என்ற சொல்லாட்சியிலும் – பொருள் நலமும் உணர்ச்சித் தெறிப்பும் சிறப்பாக உள்ளன. இத்தனை நாள் கற்ற ஆடல் பயிற்சியும் பாழாய்ப் போனது என்று மட்டும் பொருள் தரவில்லை. ஆடற் பயிற்சி – நாட்டியக் கலையே, அதன் உயர்வே கெட்டுவிட்டது என்றும் பொருள் தருகிறது. பயிற்சி நின்று விட்டது என்றும் சுட்டுகிறது. இனி எந்தப் பெற்றோரும் ஆசிரியரை நம்பித் தம் பெண்ணுக்குக் கற்பிக்கத் துணிவார்களா? எனவே, அந்த வீட்டில் மட்டுமல்ல ஊரெல்லாம் ஆடற் பயிற்சி பாழ் ஆகிவிட்டது. ‘பயிற்சி பாழாம்’ என்னும் தொடர் ‘பெண் கல்வியே பாழ்’ என்று மேலும் பொருள் விரிக்கிறது. சமூகத்தில் இன்னும் ஓர் அவல நிலைக்கு விதை ஊன்றிவிட்டது இந்த நிகழ்ச்சி.

இவ்வாறு இந்தக் குறும்பா கலையின் பெயரால் ஏற்பட்டுவிட்ட கறையைச் சுட்டிக் காட்டுகிறது. இது நம் மனத்தை உறுத்துகிறது.

நண்பர்களே ! “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். அதைப்போல் நூறு குறும்பாக்களில் ஒன்றை மட்டுமே மஹாகவியின் அங்கதக் கவிதைக் கலைத் திறனுக்கும் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைக்கும் சான்றாகக் கண்டோம்.

இலஞ்சக் கொள்ளை

சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஊழல்களை நையாண்டி செய்து திருந்த, திருத்த உணர்வைத் தூண்டுவது உயர்ந்த கவிஞனின் சமூகப்பணி. கைக்கூலி, கையூட்டு, இலஞ்சம், மாமூல் என்ற பல பெயர்களில் எங்கும் நிறைந்து கிடக்கிறது ஒரு சமூகப் பெருநோய். இது எந்த அளவுக்கு முற்றிப் போயிருக்கிறது, என்பதை ஒரு குறும்பாவில் காட்டுகிறார் மஹாகவி :

முத்துஎடுக்க மூழ்குகிறான் சீலன்

முன்னாலே வந்துநின்றான் காலன்

சத்தம் இன்றி வந்தவனின்

கைத்தலத்தில் பத்துமுத்தைப்

பொத்திவைத்தான்,போனான்முச் சூலன் ! (பக் : 53)

(காலன், முச்சூலன் = எமன்; கைத்தலத்தில் = உள்ளங்கையில்; பொத்திவைத்தான் = மறைவாகத் திணித்தான்)

தர்மத்தில் தவறாதவன் என்பதால்தான் எமனுக்கு எமதர்மன் என்று பெயர். அவனையே விட்டுவைக்க வில்லை இலஞ்சம். பத்து முத்துக்களை இலஞ்சமாக (கையூட்டு) வாங்கிக் கொண்டு, ஆயுள் முடிந்த சீலனைத் தப்ப விடுகிறானாம் காலன்.

சீலம் என்றால் ஒழுக்கம், நேர்மை என்று பொருள். ‘சீலன்’ என்ற இவன் பெயர் எதிர்மறையாய் நகைச்சுவையைத் தூண்டுகிறது.

எமனையே வளைத்துவிடும் இலஞ்சத்தின் வலிமை, நம்மைச் சிரிக்க வைக்கிறது. இந்த நாடும் உலகமும் என்ன ஆகும் என்று கவலையுடன் சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?

ஏமாறும் பெண்மை

பெண்களை வெறும் அழகுப் பொருளாக மதித்து, அவர்கள் மனத்திலும் அதே எண்ணத்தை விதைத்து வளர்க்கின்றனர். அவர்களைப் போகப் பொருளாகவும் விளம்பரங்களுக்கான போதைப் பொருளாகவும் ஆக்கி விடுகின்றனர். ஆண் ஆதிக்கத்தின் இந்தச் சூழ்ச்சியை அறியாத பெண்கள் பலர் உலகெங்கிலும் இந்த மாய வலைக்குள் வீழ்கின்றனர். தங்கள் அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் பறிகொடுக்கின்றனர். வெறும் அழகுப் பதுமைகளாக நடமாடுகின்றனர். அழகிப் போட்டிகள் போன்றவை இந்த வகை மனப்போக்கைப் பெண்களிடம் உண்டாக்கும் சீரழிவுகள்தாம்.

புதிய தமிழில் கவிஞர்கள் பெண்கள் உயர்வை நாடுவதும், விடுதலையை வலியுறுத்துவதும் வேதநாயகம்பிள்ளை காலத்திலிருந்து இன்றுவரை நிகழ்கிறது. பாரதியும் அவன் பரம்பரையும் இந்தக் கொள்கையில் உயர்ந்து நின்றதை அறிவீர்கள் அல்லவா?

வருணனைகளில் மயங்கி வழி தவறிப் போன ஒரு பெண்ணை மஹாகவியும் காட்டுகிறார்.

இடையை மிக மெல்லியது என்று சொல்வதும், ‘இல்லை’ என்றே பாடுவதும் பழைய கவிமரபு.

அல்லையில் வாழும் முல்லை என்பவள் கவிஞர்கள் ‘இல்லை’ என்று கூறும் தன் இடையை ‘இல்லை’ என்று சொல்லாமல் எல்லார்க்கும் தந்தாளாம். அதனால் கரு உற்றாள். இப்போது இடைபெருப்பதால் அதை ‘இல்லை’ என்று சொல்பவர் யாரும் ‘இல்லை’யாம். (பக்கம் : 38) இல்லை என்னும் சொல்லை இப்படி நயமாக ஆளுகிறார். பெண்ணுக்கு உயர்வு அழகில் மட்டும் ‘இல்லை’ என்று உணர்த்துகிறார்.

இன்னும் எவ்வளவோ !

நண்பர்களே ! மஹாகவியின் குறும்பாக்கள் பற்றி மேலும் அதிகமாக விரித்துரைக்க இப்பாடத்தில் இடம் இல்லை. நூலைத் தேடி வாங்கிப் படித்துச் சுவையுங்கள்.

கலையின் பெயரால் நடக்கும் ஆபாசம், கள்ளக் கடத்தல் நாடகம், பிறமொழி மோகம், பண்டிதரின் போலியான பழம்பெருமை, மனிதரின் கஞ்சத் தனம், இலஞ்சத்தனம், ஏமாற்றுக் காதல், வரதட்சணைக் கொடுமை என்று சமூக வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உள்ள சீரழிவுகளைக் கேலி செய்து பாடியிருக்கிறார். கடவுள்கள், புராணப் பாத்திரங்கள் கூட இவரது எள்ளல் அம்புகளுக்குத் தப்பவில்லை. பாலுணர்ச்சி சார்ந்த செய்திகளைப் பண்பாடு கெட்டுவிடாமல் நளினமாய்க் குறிப்புச் சொற்களால் உணர்த்துகிறார்.

“கவிதை சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்தில் பாயப் பிறப்பது” என்பது மஹாகவியின் கருத்து. இதை அவரது ஒவ்வொரு குறும்பாவும் உறுதிப்படுத்துகிறது.

6.3 மீரா

தமிழ்க் கவிஞர்களுள் பாரதியைப்போல் சமூகப் போராளிகளாகவும் திகழ்ந்தவர்கள் மிகச் சிலர். அவர்களுள் ஒருவர் கவிஞர் மீரா. நடையில் எளிமை, கருத்தில் வலிமை, தமிழ்க் கவிதை மரபில் பழுத்த புலமை, சொல்லுக்குச் சொல் புதுமை, அங்கதம் என்னும் குறும்பு குதிக்கும் தமிழ்நடை, ஆனால் எவரையும் புண்படுத்தாத பண்பாட்டு வரையறை! ஒருவகையில் ஈழத்து மஹாகவியுடன் மீராவை ஒப்பிடலாம். ஆனால் மீரா சிலவகைகளில் வேறுபட்டுத் தனித்து நிற்கிறார்.

சாதனையாளர்

மரபிலும், வசன கவிதையிலும், புதுக்கவிதையிலும் சாதனைகள் செய்தவர். சிறந்த உரைநடை எழுதியவர். முன்னணிப் பதிப்பாசிரியராக இருந்து பல இளம் படைப்பாளிகளைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தவர். இலக்கிய இதழ்களின் ஆசிரியர். ஆசிரியர் சங்கம் மற்றும் உழைக்கும் மக்களின் சங்கத் தலைமைப் பொறுப்பில் இருந்து உரிமைப் போராட்டங்கள் நடத்தியவர். இப்படிப் பல சிறப்புகளுக்கு உரியவர் மீரா.

பிறப்பு

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் (இப்போது சிவகங்கை) மாவட்டத்தில் உள்ள சிவகங்கையில் 10-10-1938-இல் பிறந்தார். பெற்றோர்: மீனாட்சி சுந்தரம் – இலட்சுமி அம்மாள். இளம்பருவத்தில் பர்மாவில் (மியான்மர்) வளர்ந்தார்.

கல்வி

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கிய முதுகலைப் பட்டம் பெற்றார். கவிஞர் அப்துல் ரகுமான் இவரது வகுப்புத் தோழர். கவிதை நண்பர்.

பணி

1962 முதல் சிவகங்கை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி தொடங்கினார். முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்து ஓய்வு பெற்றார்.

ஈடுபாடு

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த பகுத்தறிவு; அறிஞர் அண்ணாவின் இயக்கம் தந்த தமிழ்மொழிக் காதல்; அறிஞர் காரல் மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தம் இவை மூன்றின் சங்கமம் கவிஞர் மீரா.

படைப்புகள்

மீ. ராசேந்திரன் என்ற பெயர் கவிதைக்காக மீரா ஆனது. இராசேந்திரன் கவிதைகள் (1965), மூன்றும் ஆறும் (1967), கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் (1971), ஊசிகள் (1974), கோடையும் வசந்தமும் (2002), குக்கூ (2002) ஆகியவை இவரது கவிதை நூல்கள்.

பல உரைநடை நூல்களும் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்கது வா இந்தப் பக்கம்.

விருதுகள்

சிற்பி கவிதை விருது, கவிக்கோ விருது முதலிய பல விருதுகள் பெற்றார்.

1-9-2002-இல் மறைந்தார்.

6.3.1 குறும்பாக்கள் மீராவையும் லிமரிக் கவிதை கவர்ந்தது. ஆனால் அந்த வடிவத்தை விட்டுவிட்டு உள்ளடக்கத்தை மட்டும் உள்வாங்கித் தமிழில் எழுதினார். அதனால் இவருடைய ஊசிகள் – நூல் மீராவின் தனித்தன்மை கொண்ட புதுக் குறும்பாத் தொகுப்பாக ஒளி வீசுகிறது.

குக்கூ

ஹைக்கூ என்னும் ஜப்பானியக் கவிதை வடிவத்தை அப்படியே தமிழில் பின்பற்ற முயன்று பலர் எழுதியுள்ளனர். மீரா அதிலும் வடிவத்தைப் பின்பற்றாமல், தம் தனித்தன்மையுடன் எழுதிக் குக்கூ என்ற நூலைப் படைத்தார், இந்தக் கவிதைகளில் பல ‘லிமரிக்’ தன்மையுடன் குறும்பாக்களாக அமைந்துள்ளன. அதாவது லிமரிக்குக்கோ, ஹைக்கூவுக்கோ மிக நெருங்கிப் போகாமல் தனித்தன்மையுடன் உள்ளன. நகைச்சுவை நடை, விமரிசனச் சொடுக்கு, சிந்தனை நறுக்கு இவற்றால் மீராவின் குறும்பாக்களாகவே விளங்குகின்றன. இவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.

6.3.2 கவிதைக்கலை மீராவின் ‘ஊசிகள்’ அன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக வாழ்க்கையின் சிறுமைகளை அழகியலோடு சாடும் (கடுமையாய் விமர்சனம் செய்யும்) அங்கதப் பாக்களால் ஆனது. புதுக்கவிதை வடிவக் குறும்பாத் தொகுதி இது.

சுயநல அரசியல்

பணத்துக்காக, பதவிகளுக்காகக் கட்சிவிட்டுக் கட்சி மாறினர் கீழ்த்தர அரசியல்வாதிகள். இவர்களால் பொதுவாழ்க்கை தரம் தாழ்ந்து போனது. இதைக் குத்திக் காட்டும் ‘வேகம்’ – ஒரு தரமான எள்ளல் கவிதை.

எங்கள் ஊர் எம்.எல்.ஏ

ஏழு மாதத்தில்

எட்டுத் தடவை

கட்சி மாறினார்

மின்னல் வேகம்

என்ன வேகம்?

இன்னும் எழுபது

கட்சி இருந்தால்

இன்னும் வேகம்

காட்டி இருப்பார்…..

என்ன தேசம்

இந்தத் தேசம்? (ஊசிகள், பக்கம், 13)

(எம்.எல்.ஏ = சட்டப் பேரவை உறுப்பினர்)

‘வேகம்’ என்ற தலைப்பு இகழ்ச்சித் தொனியுடன் அமைந்து உள்ளது. கட்சி மாறுவதில் காட்டிய வேகத்தைத் தன்னைத் தேர்ந்து எடுத்த மக்களுக்குத் தொண்டு செய்வதில் காட்டவில்லை என்று குறிப்பாக இகழ்கிறது. இன்னும் பல கட்சிகளுக்குத் தாவி இருப்பார். அவரது ‘வேகத்துக்கு’ ஈடு கொடுக்க இங்குக் கட்சிகள்தாம் போதவில்லையாம் ! என்ன கிண்டல் பாருங்கள் !

போலியான மொழிப்பற்று

“ஜாதி வேண்டும்” என்று சாஸ்திரி சொல்கிறார். தமிழ்ப் பற்றாளர் ஒருவர் “சாதி வேண்டும்” என்று சரியாய்ச் சொல்லும்படி திருத்துகிறார். ‘தமிழ்ப்பற்று’ என்னும் குறும்பா காட்டும் காட்சி இது. (ஊசிகள்: பக்.14) ‘தமிழ்ப் பற்று எப்படி இருக்கிறது? ‘ஜாதி’ கூடாது; ஆனாலும் ‘சாதி’ இருக்கலாம் என்று சொல்கிறது. மொழி, இன ஒற்றுமை பற்றி மேடையில் முழங்குபவன், பிரிவினை வளர்க்கும் சாதிப்பற்றை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறான். எழுத்தை மட்டும் திருத்தினால் போதுமா? செயல் திருந்த வேண்டாமா? ‘பேச்சில் சீர்திருத்தம், செயலில் பிற்போக்கு’ இந்த இரண்டு நிலைப்பாட்டைச் சுட்டுகிறார். கேலி மொழியால் சுடுகிறார்.

கணக்குப் பார்த்த காதல்

தாய்வழி, தந்தைவழி, முன் அறிமுகம் எந்த வகையிலும் உறவினராய் இல்லாத இருவர் கண்டனர். காதல் பிறந்தது, செம்புலப் பெயல் நீர் போல (உழுது பண்படுத்திய நிலத்தில் பெய்த மழைநீர் போல) அன்புடைய நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன. குறுந்தொகை காட்டும் – சங்க காலத்தின் – இயற்கையான காதல் இது. சாதி, சமய, வர்க்க பேதம் பார்க்காத உண்மையான காதல் !

மீரா தன் ‘குறும்புத்’ தொகையில் காட்டும் ‘நவயுகக் காதல்’- இக்காலக் காதல் – வேறு வகையானது. இது சாதி, மதம், உறவு முறை எல்லாம் ‘பார்த்து’ வருகிறது.

உனக்கும் எனக்கும்

ஒரே ஊர் -

வாசுதேவ நல்லூர் …

நீயும் நானும்

ஒரே மதம்…

திருநெல்வேலிச்

சைவப் பிள்ளைமார்

வகுப்பும் கூட,..

உன்றன் தந்தையும்

என்றன் தந்தையும்

சொந்தக் காரர்கள்…

மைத்துனன் மார்கள்.

எனவே

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

(ஊசிகள், பக். 48) (வகுப்பு = சாதி)

இவ்வாறு குத்தலாகச் சமூக இழிநிலைகள் மீது மின்னல் போல் பாய்வதுதான் மீராவின் குறும்பாக்களின் சிறப்பு. ‘ஊசிகள்’ என்ற தலைப்பு நூலுக்கு மிகவும் சிறப்பு. புற்றுநோய் போன்ற இந்தச் சமுதாயச் சீர்கேடுகளில் ‘ஊ’கதிர் ஊசிகள் போல் இவை பாய்ந்து – நோயை அழிக்கும் செயல் புரிகின்றன.

6.3.3 ‘குக்கூ’ குறும்பாக்கள் குக்கூ தொகுதியில் ஒருசில வரிகளில், சின்னப் பூக்கள்போல் மின்னும் அழகிய குறும்பாக்கள் பல படைத்துள்ளார் மீரா. சான்றாகச் சிலவற்றை மட்டும் காணலாம்.

உள்ளும் புறமும்

மேலே மேலே

பூக்கடை

கீழே…

சாக்கடை (குக்கூ : 41)

(சாக்கடை = கழிவுநீர் வடிகால்)

ஒரு நகரத்தின் கடைத் தெருவைக் காட்டும் கோட்டு ஓவியம் இது. இதுவே குறியீடாக மனிதனைக் குறிக்கும்போது- வெளியில் பார்த்தால் நல்லவன், உள்ளே நாற்றம் பிடித்தவன்; ஒழுக்கம், நேர்மை அற்றவன் என்று பொருள் தரும்.உலகத்தில் உள்ள பலதுறைகளுக்கும் பொருந்தும் கணிதக் குறியீடுபோல் அமைந்த சிறந்த குறும்பா இது.

அனுதாப அரசியல்

ஒரு சிறந்த குறும்பா. இது எம் நாட்டில் உள்ள அரசியல் சூழல் பற்றியது. மிக மோசமான ஆட்சியைச் செய்யும் ஒரு கட்சி அடுத்த தேர்தல் மூலம் அகற்றப்படலாம். ஆனால், அக்கட்சியின் தலைவர் ஒருவர் ‘திடீர்’ என இறந்துவிட்டால், எம்மக்கள் இரக்கப்பட்டு அக்கட்சிக்கே வாக்குகளை வாரி வழங்கி வெற்றியடையச் செய்து விடுவர். மீண்டும் ஆட்சியில் ஏற்றி வைத்துவிடுவர்.இந்த ‘அனுதாப அலை’ எம் நாட்டின் பரிதாப நிலை:

செத்த பிணத்தைக்

கட்டி அழலாம்

முடிந்தால்

காட்டி அள்ளலாம் (குக்கூ:91)

கட்டி அழலாம். இந்தச் சொற்களை நீட்டி அழுத்தி, காட்டி அள்ளலாம் – ஒரு புதுமையான சொற் குறும்பு. புதுமையான பொருள் திருப்பம்:காட்டி அள்ளலாம்:வாக்குகளை; அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை; அதன்வழி, கோடி கோடியாய்ப் பணத்தை…. ‘முடிந்தால்’ – என்ற சொல்லில் அரசியல்வாதியால் எதுவும் முடியும் என்ற கொடிய நிலையைக் காட்டுகிறார்.

கும்பல் மனோபாவம்

உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தது. கூடல் மா நகரில் அறிஞர் பலர் கூடித் தமிழ்மொழியில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், கருத்துரைகள் வழங்கினர். அவற்றைக் கேட்டுப் பயன் அடைய மக்கள் கூட்டம் கூடவில்லை. புகழ்பெற்ற திரை நடிகர்கள், அரசியல் தலைவர்களை வேடிக்கை பார்க்கக் கூடியது. அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்க்கப் பெருங் கூட்டம் கூடியது. முத்துக்களைத் தேடாமல் நுரை அள்ளிப் போகும் ‘மேலோட்ட’ மனப்பக்குவமே பொதுவாக எம் மக்களிடம் உள்ளது. இதைக் கண்டு மீராவின் கவி உள்ளம் குமுறுகிறது. அவரது நகைச்சுவை உணர்வு வேதனையை, சிரிப்பூட்டும் குறும்பா ஆக வெளியிடுகிறது:

கூடல் நகரில்

கூட்டம்

கூட்டம் கூட்டம்

கூட்டம் கூட்டம் கூட்டம்

கூட்டம் பார்க்க… (குக்கூ:1)

நகரின் பெயரே கூடல். சங்கம் வைத்துத் தமிழ் ஆராய்ந்த நகரம். அங்கே ‘வேடிக்கை’ மனிதர்களின் கூட்டம். எங்குப் பார்த்தாலும் கூட்டம். பத்துச் சொற்கள் கொண்ட இக்குறும்பாவில் ஏழு இடத்தில் ‘கூட்டம்’ என்ற சொல்லே வந்துள்ளது. கண்முன் இந்தக் கூட்டத்தையே காட்டுகிறது. நெரிசலை உணர்த்தும் சொல் ஓவியமாய் நிற்கிறது.

ஆங்கிலத்தில் இ.இ. கம்மிங்ஸ் (E.E.Cummings), ஜான் அப்டைக் (John Updike) போன்ற கவிஞர்கள் Concrete Poetry (கண்புலன் கவிதை) என்றொரு புதுமை வகையை அறிமுகப் படுத்தினர். தமிழில் சிறந்த கண்புலன் கவிதைக்கு இதுவே சான்று.

நண்பர்களே! இவற்றைப் போன்ற மிக அழகான குறும்பாக்கள் ‘குக்கூ’வில் உள்ளன.

இப்பாடப் பகுதியில் மீராவின் குறும்பாக்கள் சிலவற்றைக் கண்டோம். அவரது படைப்பு ஆக்கத் திறனையும் வாழ்வியல் பற்றிய கண்ணோட்டத்தையும் சில சான்றுகள் வழி அறிந்து கொண்டோம்.

6.4 ஈரோடு தமிழன்பன்

எதற்கப்பா எதுகை மோனை

மின்னலைப் பிடித்து

வைக்கவா சட்டி பானை?

என்று கேட்கும் குறும்பாக்களையும் படைப்பவர்.

இவரது சென்னி மலைக் கிளியோப் பாத்ராக்கள் சிறந்த ‘லிமரைக்கூ’ என்னும் புதுவகைக் குறும்பாக்களின் தொகுதி. இதைப்பற்றி இனி வரும் பகுதி விளக்குகிறது.

பிறப்பு

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சென்னி மலையில் பிறந்தவர்.

பெற்றோர் : செ.இரா.நடராசன் – வள்ளியம்மாள். பெயர் ; ந.செகதீசன்.

புனை பெயர்கள்

புனை பெயர்கள் : தமிழன்பன், ஈரோடு தமிழன்பன், விடிவெள்ளி.

கல்வியும் பணியும்

தனிப்பாடல் திரட்டு – ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றவர். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

படைப்புகள்

சிறந்த சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர். பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார். நிறைய எழுதி வருகிறார். சிலி நாட்டு மகாகவி பாப்லோ நெருதாவைத் தம் உள்ளத்துள் இருக்கும் நண்பனாகக் கொண்டு கற்பனையில் உரையாடி வருபவர்.

6.4.1 குறும்பாவில் புதுப்பா இனிய நண்பர்களே ! ஹைக்கூ என்னும் 5,7,5 அசையுள்ள மூன்றடி ஜப்பானியக் கவிதை வடிவம் பற்றி அறிவீர்கள் அல்லவா? லிமரிக் என்ற ஆங்கில ஐந்துவரிக் கவிதை பற்றியும் இப்பாடத்தில் அறிந்தீர்கள்.

ஆங்கில மொழியில் இந்த இரு வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது. முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர். இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக்+ஹைக்கூ) என்று பெயரிட்டார்.

இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து, 138 பாக்களைத் தொகுத்து, ‘சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்’ என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன், வெளியிட்டிருக்கிறார்.

6.4.2 கவிதைக் கலை லிமரைக்கூ என்பதால், உள்ளடக்கத்தில் லிமரிக், ஹைக்கூ இரண்டின் தன்மைகளும் கொண்ட கவிதைகள் இதில் உள்ளன. இயற்கை சார்ந்த கவிதை வெளிப்பாடுகளுள், சமூக இழிவுகளை நையாண்டி செய்யும் அங்கத இயல்புள்ள கவிதைகளும் இதில் அடங்கியுள்ளன. வடிவம் : மூன்று வரிகள். முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபு (ரைம்). சிலவரிகளில், முதற்சொல்லில் மோனை உள்ளன.

போலிக் குருமார்கள்

பரம்பொருள் (இறைவன்) மீது வைக்கும் பற்றுதான் பக்தி. இது தடம்புரண்டு பொன்மீதும், பொருள்மீதும், புகழ்மீதும் வைக்கும் போலிப் பக்தியாய் ஆகிவிட்டது. போலிப் பக்தர்களால் போலிக் குருமார்கள் பெருகிவிட்டனர். மக்கள் மடத்தனத்தைப் பயன்படுத்தி, மடங்கள், மாளிகைகள், பெரும் சொத்துகள் என்று வசதி பெருக்கி வாழ்கின்றனர். இதைச் சாடாத கவிஞர்களே இல்லை. தமிழன்பன் அழகாகக் கேலி செய்கிறார் :

குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்

கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்

குடியிருக்கப் போனார்கள். (பக்கம் : 30)

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இந்த நாட்டுப் பழமொழி. மனிதர்களுக்குத் தெய்வ நம்பிக்கையுள்ள மனிதர்கள் சொன்னது இது. குருக்களின் சுரண்டலும், அதிகார அட்டகாசமும் பொறுக்க முடியாமல், தெய்வங்களே கோயில் இல்லாத ஊர்தேடி ஓடிப்போய் விட்டனவாம். தமிழன்பனின் குறும்பா இதை எவ்வளவு குறும்பாகச் சொல்கிறது பாருங்கள் ! கோயில் உள்ள ஊருக்குப் போனால் அங்கேயும் துரத்தி வந்துவிடுவார்களே, இந்தப் போலிக் குருமார்கள் ! இக்கவிதையை அரசியல் முதலிய பிறதுறைகளுக்கும் கூடப் பொருத்திப் பொருள் கொள்ள முடியும். இன்றைய சமுதாய நிலையின் அழகான படப்பதிவு, இது.

இதே வகையில் நல்ல பல லிமரைக்கூக்கள் படைத்துள்ளார் தமிழன்பன்.

போலிப் பக்தர்கள்

பாடுவது அருட்பாப் பதிகம்

அன்றாடம் உணவில் ஆடுகோழி

மீன் நண்டு வகைகளே அதிகம் (பக்கம் : 28)

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய நெஞ்சம் வள்ளலார் இராமலிங்கர் அருள் நெஞ்சம். அவரது பக்தர் நிலை எப்படி? அவர் பாடிய திரு அருட்பாவைத் தினந்தவறாமல் பாடும் ‘வாய்’ வேறு, ‘வயிறு’ வேறாக இருக்கிறது. வழியைப் பின்பற்றாமல் மொழியை இசைப்பதா பக்தி? போலித்தனத்தைக் கிண்டல் செய்யும் கேலித்தனம் சிறப்பாக உள்ளது.

கொள்கைவேறு குணம்வேறு

அரசியலைச் சாக்கடை என்பார்கள். கட்சியின் சின்னத்தைக் கண்டு மயங்கி வாக்களித்தனர் மக்கள். அதாவது கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு வாக்களித்தனர். அக்கட்சி ஆட்சிக்கு வந்தும் அதன் கெட்ட குணமும் போகவில்லை. ஊரும் நன்றாகவில்லை.

ஊது வத்திச் சின்னம்

கட்சி வென்று கோட்டை பிடித்தும்

நாற்றம் போகலை இன்னும்

(போகலை = போகவில்லை என்பதன் கொச்சை மொழி)

சாவில் கிடைக்கும் வாழ்வு

எதையாவது விற்று எந்த வழியில் வேண்டுமானாலும் பொருளைத் தேடிக் குவிக்க வேண்டும் – இந்தச் சந்தைப் பொருளாதாரம் உயர்ந்த ஒழுக்க நெறிகளையும், வாழ்க்கை மதிப்பீடுகளையும் கருக்கிவிட்டது. இதை அழகாக விமர்சனம் செய்கிறது இந்தக் குறும்பா :

புகை பிடித்தால் இறப்பாய்

மது குடித்தால் இறப்பாய்

இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய் !

தனி மனிதர் மட்டுமல்ல அரசுகள் கூட இதைப் போன்ற அழிவுப் பொருட்களை மக்களிடம் விற்றுப் பணம் குவிக்கின்றன. இந்த இழிவுப் பாதையை எள்ளி நகையாடிக் கண்டிக்கிறது கவிதை.

‘பாசமு’ம் ‘நேசமு’ம்

‘பொருள் ஆதாரம்’ மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது. பெற்றோர், பிறந்தோர், சுற்றத்தார் இடையில் கூட எப்படிப் புகுந்து ‘விளையாடுகிறது’ ! பாலைவன நாட்டுக்குப் போய்ப் பாடுபட்டு உழைத்துவிட்டு ஊர்திரும்புகிறான். அவன் மீது உள்ள பாசத்தைவிட, அவன் கொண்டுவரும் பொருள் மீதல்லவா ‘குடும்பப் பாசம்’ பொங்குகிறது! அருமையாய் இதை வெளிப்படுத்துகிறார் தமிழன்பன்.

துபாயில் அதிகமா வெய்யில் !

கேள்வி கேட்டோர் கவனம் எல்லாம்

அவன் இறக்கிவைத்த பையில் !

அலைகளின் அழுகை

இயற்கையில் இழைந்து கரையும் இளகிய மனம் கவிமனம். மனத்தின் இந்த ‘ஹைக்கூ’த் தன்மையே சிறந்த கவிதைகளின் மூலதனம். கடலின் குமுறலுக்குக் காரணம் காண்கிறது, இந்த லிமரைக்கூ :

அத்தனை மீன்கள் வலைகளில்

அடுத்தநாள் கடலிலே

அத்தனை அழுகை அலைகளில் ! (பக்கம் : 29)

குழந்தையும் கவிஞனும்

தாத்தா ஆகும்போது கவிஞன் குழந்தை ஆகிறான். அப்போது பேரக் குழந்தைகளும், அவர்களது பொம்மைகளும் அவனுக்கு விளையாட்டுத் தோழர்கள் ஆகிவிடுகின்றனர். தமிழன்பனின் குறும்பாக்களில் குழந்தைகள், பொம்மைகள் பற்றியவை மிகுதியாய் உள்ளன.

செடிகொடிகளின் பூக்கள் எல்லாம் என்ன தெரியுமா? குழந்தை உதட்டில் இடம் கிடைக்காமல்போன ‘சிரிப் பூ’க்கள் தானாம் (பக்கம் : 52)

குழந்தைக்குத் தன் பொம்மை மேல் எவ்வளவு பாசம்! உறங்கும் போதும் அதைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதன் தாய்க்கே இதைக் கண்டு பொறாமை வருகிறதாம் ! (பக்கம் : 32)

குழந்தை கைக்குப் போவதற்கு, அதனுடன் விளையாடுவதற்குப் பொம்மைகளுக்குள் போட்டி, பொறாமையாம் :

குழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்

உள்ள பொம்மை அத்தனையும் குழந்தை

கைக்குப் போகத் துடிக்கும் ! (பக்கம் : 42)

இவ்வளவு பாசம் காட்டும் ஒரு குழந்தை இறந்து போய்விட்டால்…… உயிரற்ற பொம்மையின் உள்ளத்துக்குள் கவிஞர் தம் உயிரைச் செலுத்தி எண்ணிப் பார்க்கிறார் :

மழலைக்கா இறுதி யாத்திரை?

பழகிய பொம்மைக்கும் தூக்கம் இல்லை

கேட்கிறது தூக்க மாத்திரை (பக்கம் : 32)

(இறுதியாத்திரை = சாவு ஊர்வலம்)

தமிழன்பனின் லிமரைக்கூ – குறும்பாக்கள் சிரிப்பையும் வரவழைக்கின்றன. சிந்தனையையும் எழ வைக்கின்றன. சிலவேளை நம்மை அழவைக்கின்றன.

6.5 குறும்பாக்களின் சிறப்புத் தன்மை

நண்பர்களே ! இதுவரை அறிந்த செய்திகள் வழியாகக் குறும்பாக்களின் சிறப்பு இயல்புகள் பற்றி உணர்ந்து கொள்ள முடிந்திருக்கும்.

பெரும்பாவைப் படைப்பதுதான் திறமையான புலமை என்பது இல்லை. குறும்பா இயற்றுவதிலும் சிறந்த புலமை வெளிப்படுகிறது. உண்மையில் சுருங்கச் சொல்லி விளங்க உணர்த்துவதற்கே மிகுந்த திறமை தேவை, திருவள்ளுவரின் பெருமைக்கு எது காரணம்? எண்ணிப் பாருங்கள்.

குறிப்பாகச் சமூகத்தின் மீது அக்கறையும், பிறர் நலன்களுக்காகப் போராடும் குணமும் கொண்ட கவிஞர்களே குறும்பாவை அதிகம் படைக்கின்றனர்.

குறும்பாவில்,

‘களுக்’கென்று பொங்கிவரும் சிரிப்பை,

‘முணுக்’கென்று அரும்பிவிடும் கண்ணீர்த் துளியை,

‘சுருக்’கென்று மனத்தில் தைக்கும் வலியை,

‘பளீர்’ என்று மனத்தில் மின்னலாய்த் தோன்றும் எண்ணத்தை,

அப்படியே, ‘பளிச்’ சென்று சொல்லில் வடித்துவிட முடிகிறது.

அதைப் படிப்பவரின் உள்ளத்துக்கு அப்படியே ‘இடமாற்றல்’ செய்துவிட முடிகிறது. எனவே, குறும்பாவைப் புதுக்கவிதைக் ‘குறள்’ என்று குறிப்பிடலாம்.

நாம் மேலே கண்ட கவிஞர்கள் மட்டும் அன்றி வேறு சிலரும் மிகச் சிறந்த குறும்பாக்கள் வடித்துள்ளனர். ஹைக்கூவில் அறிவுமதியும் (புல்லின் நுனியில் பனித்துளி), லிமரிக்கில் த.கோவேந்தனும் (கோவேந்தனின் குறும்பா) நல்ல படைப்பாக்கம் செய்தவர்கள்.

சிறந்த நூல்கள் தேடிச் சிறந்த கவிதைகள் படியுங்கள், நீங்களே நல்ல கவிதைகள் படையுங்கள்.

6.6 தொகுப்புரை

இனிய நண்பர்களே, இதுவரை தமிழின் குறும்பா என்னும் கவிதை வகை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்று நினைவு படுத்திப் பாருங்கள் :

குறும்பா என்பது என்ன என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

குறும்பா என்னும் புதுவகைத் தமிழ்க் கவிதை தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிய முடிந்தது.

குறும்பாக்களைச் சிறப்பாகப் படைத்த மஹாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் ஆகிய கவிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

அவர்களின் படைப்பு ஆக்கத் திறன்கள் பற்றியும், அவர்களின் தனித்தன்மை பற்றியும் அவர்களின் குறும்பாக்கள் சில கொண்டு புரிந்து கொள்ள முடிந்தது.

நல்ல குறும்பாக்களைச் சுவைத்து மகிழ முடிந்தது.