சிற்றிலக்கியம் - 2
பாடம் - 1
ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது பரணி எனப்படும். கடவுள் வாழ்த்து, கடை திறப்பு முதலிய பலவகையான உறுப்புகளைக் கொண்டு அவ்வீரனின் போர்ச்சிறப்புப் பரணியில் பாடப்படுகிறது. இது ஒரு
புறப்பொருள் நூல் ஆகும்.
போர்க்களத்தில் வீரம்
பொதுவாக, நூல்களுக்கு, பாடப்படும் அரசனின் பெயரையோ, தெய்வத்தின் பெயரையோ வைப்பர். ஆனால் பரணி இலக்கியத்தில் மட்டும் தோற்றவரின் பெயரே நூலின் பெயராக வைக்கப்படும். (எடுத்துக்காட்டு : தக்கயாகப் பரணி). அல்லது தோற்றவருடைய நாட்டின் பெயர் அந்த நூலுக்கு வைக்கப்படும். (எடுத்துக்காட்டு : கலிங்கத்துப் பரணி)
தமிழில் 11ஆம் நூற்றாண்டு முதல் பரணி இலக்கியங்கள் காணப்படுகின்றன. கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, மோகவதைப் பரணி போன்ற பரணி நூல்கள் தமிழில் உள்ளன.
இந்தப் பாடத்தில் தக்கயாகப் பரணி பற்றிய செய்திகள் தொகுத்து உரைக்கப்பட்டுள்ளன.
தக்கயாகப்பரணியின் பாட்டுடைத் தலைவன் சிவபெருமானாகிய வீரபத்திரக் கடவுள். சிவபெருமானின் மனைவி பார்வதியின் தந்தை பெயர் தக்கன். இவன் சிவபெருமானை அவமதித்து அவரை அழைக்காமல் ஒரு யாகம் செய்கிறான். அதனால் வீரபத்திரராகிய சிவபெருமான் தக்கனின் யாகத்தை அழித்து அவனுக்கு உதவிய தேவர்களைத் தோற்கடிக்கிறார். அதனால் இந்த நூலுக்கு, தக்கயாகப் பரணி என்ற பெயர் வைக்கப் பட்டுள்ளது.
தக்கன் யாகம் செய்தல்

இவர் விக்கிரம சோழனைப் பற்றி ‘விக்கிரம சோழன் உலா’ என்ற ஓர் உலா இலக்கியத்தைப் பாடியுள்ளார். அவ்வரசன் அதிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் கூறி ‘அதை ஒட்டி ஒரு பாடல் பாடுக’ என்று கேட்க இவர் ஒட்டிப் பாடியதால் இவருக்கு ‘ஒட்டக்கூத்தர்’ என்ற பெயர் வந்தது என்று கூறுகிறார்கள். கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, கௌடப்புலவர் முதலிய பல சிறப்புப் பட்டங்கள் ஒட்டக்கூத்தருக்கு உண்டு.
இவர் சோழநாட்டில் உள்ள மலரி என்ற ஊரில் பிறந்தவர். இவர் இந்த நூலில் சீர்காழி என்ற ஊரைப் பற்றியும் அதில் உள்ள சட்டைநாதரையும் உமாபாகரையும், அவ்வூரில் பிறந்த திருஞான சம்பந்தரையும் சிறப்பித்துப் பாடுகிறார்.
நூல்கள்
இவர் தக்கயாகப் பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களையும், விக்கிரம சோழன் உலா, அச்சோழன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்கனைப் பற்றிக் குலோத்துங்க சோழன் உலா, அவன் மகனாகிய இரண்டாம் இராசராசன் பற்றி இராசராசன் உலா என்று மூன்று உலா இலக்கியங்களையும் பாடியுள்ளார். இந்த மூன்று உலாவையும் சேர்த்து மூவருலா என்று குறிப்பிடுவார்கள். கம்பர் பாடாது விட்ட இராமாயணத்தின் இறுதிப் பகுதியாகிய உத்தரகாண்டம் என்ற பகுதியையும் இவர் பாடியுள்ளார். இவை தவிரக் குலோத்துங்கன் கோவை, நாலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது ஆகிய நூல்களையும் எழுதி உள்ளார்.
சிறப்புகள்
இவர் விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ அரசர்களிடத்திலும் அவைக்களப் புலவராய் இருந்த சிறப்பைப் பெற்றிருந்தார்.
இவ்வரசர்களில் ஒருவன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில் ஓர் ஊருக்குக் ‘கூத்தனூர்’ என்று இவரது பெயரை வைத்து, இவருக்குப் பரிசாகக் கொடுத்தான். அங்கு இவர் கல்விக் கடவுளாகிய கலைமகளுக்கு ஒரு கோயிலைக் கட்டி வழிபட்டார். அக்கோயில் இன்றும் அங்கு உள்ளது.
ஆக்குவித்தோன்
ஒரு நூலை எழுதச் சொல்லி, புலவர் எழுதுவதற்கு உதவி செய்பவன் ஆக்குவித்தோன் என்று அழைக்கப்படுகிறான். தக்கயாகப் பரணியை எழுதச் சொல்லி ஒட்டக்கூத்தருக்கு உதவிய அரசன் இரண்டாம் இராசராசன் ஆவான்.
அடிப்படை நூல்
இந்த நூலில் உள்ள தக்கனின் யாகத்தைச் சிவபெருமான் அழித்த கதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் வட மொழியில் உள்ள சிவ மகாபுராணம் போன்ற நூல்களில் உள்ள தக்கயாக சங்காரக் கதையிலிருந்து இது வேறுபட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

காப்புச் செய்யுள்
ஒரு நூலை எழுதத் தொடங்கும் முன்பு தெய்வத்தை வாழ்த்திக் ‘காக்க வேண்டும்’ என்று வேண்டுவது காப்புச் செய்யுள் எனப்படும்.
இந்நூலில் சீர்காழியில் உள்ளவைரவக் கடவுளை வேண்டிக் காப்புச் செய்யுள் இயற்றப்பட்டுள்ளது.
சீர்காழி வைரவக் கடவுள்
(1)கடவுள் வாழ்த்து
(2)கடை திறப்பு
(3)காடு பாடியது
(4)தேவியைப் பாடியது
(5)பேய்களைப் பாடியது
(6)கோயிலைப் பாடியது
(7)பேய் முறைப்பாடு
(8)காளிக்குக் கூளி கூறியது
(9)கூழ் அடுதலும் இடுதலும்
(10)களங்காட்டியது
(11)வாழ்த்து
கடவுள் வாழ்த்து
இதில் உமாபாகர், விநாயகர், முருகன், திருஞானசம்பந்தர் ஆகிய நான்குபேரையும் வணங்கிக் கடவுள் வாழ்த்துப் பாடப்பட்டுள்ளது.
கடை திறப்பு
வீட்டில் உள்ள பெண்களைக் கதவைத் திறக்கும்படி கூறுவது கடை திறப்பு எனப்படும். இதில் தக்கன் யாகத்தை அழித்து அவனுக்கு உதவிய தேவர்களைத் தோற்று ஓடச் செய்த வீரபத்திரக் கடவுளின் வெற்றியைப் பாடுவதற்காக, தேவமங்கையர், இராசராசபுரத்துவீதியில் உள்ள மாதர், வித்தியாதர மகளிர், நாக கன்னியர் போன்ற பெண்களைக் கதவைத் திறக்கும்படி அழைக்கிறார்கள்.
காடு பாடியது
கொற்றவையாகிய காளி எழுந்தருளி உள்ள கள்ளிச் செடிகள் நிறைந்த வெப்பம் மிகுந்த சுடுகாடு, அதைப்பற்றிப் பாடுவது காடுபாடியது எனும் பகுதி காளி கோயிலைச் சுற்றி உள்ள சோலைகளின் பெருமை, காளி கோயிலுக்கு வந்து வழிபடக்கூடிய திருமகள் முதலிய தெய்வங்கள், அஞ்சாமல் தம் குடலின் உதிரத்தை ஒரு விரலால் தொட்டு நெற்றியில் பொட்டு வைத்து வழிபடும் வீரர்களின் செயல் ஆகியவை இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன.
காளி
தேவியைப் பாடியது
இதில், “தேவியாகிய கொற்றவை சாதாரண தெய்வம் அல்லள். அகில லோகமாதாவே, மாயோளே” என்பன போன்று தேவியின் பெருமையும், “அவளுக்கு அணிவிக்கப்படும் மலரோ சாதாரண வனமலர் அன்று; வானத்தில் உள்ள கற்பகமலரே, அவளை நீராட்டும் நீரோ சாதாரண மேகங்கள் தரும் மழை நீரன்று; சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையின் நீரே” என்பன போன்று தேவிக்கு உரிய பூசைப் பொருட்கள் முதலியனவும் விவரிக்கப்பட்டுள்ளன.
வனமலரோ பூமாரி வானக் கற்பக மலரே
கனசலமோ அபிடேகம் கடவுள் கங்கா சலமே
(வனமலர் = காட்டு மலர்; கனசலம் = கனம் + சலம், கனம் = மேகக்கூட்டம், சலம் = நீர்)
பேய்களைப் பாடியது
இதில் பேய்களின் உருவ வருணனையும், அவற்றின் பசி மிகுதியும் விவரிக்கப்பட்டுள்ளன.
வாய்எழப் புகைந்து கீழ் வயிறுஎரிந்து மண்டுசெந்
தீயெழக் கொளுந்தியன்ன குஞ்சிவெஞ் சிரத்தவே
பேய்களின் கீழ் வயிற்றில் பசி மிகுதியானதால் செந்தீ மண்டி எரிகிறது. அந்தத் தீ மேலே எழுந்து தலையைக் கொளுத்தி விட்டது போல, செந்நிறமாக முடி காணப்படுகிறது. வயிற்றில் எரியும் நெருப்பின் புகை வாய்வழியாகச் செல்லுகிறது.
கோயிலைப் பாடியது
இதில் முதலில் காளி கோயிலின் தோற்றம், அதில் உள்ள ஆலமரம், அரவுக்கு அரசனாகிய ஆதிசேடன், காளியின் பஞ்சாயுதங்களாகிய (ஐந்து ஆயுதங்கள்) தண்டாயுதம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றின் சிறப்பு என்பன ஒட்டக்கூத்தரால் கூறப்பட்டுள்ளன.
பின்னர், திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனைச் சைவ சமயத்தவனாக மாற்றிய திறம் பற்றி சகல கலாவல்லியாகிய சரசுவதி கூறினாள். அதைக் கேட்ட காளி தேவி சரசுவதியைத் தன் கோயில் முன் இருக்கும்படி கூறினாள் என்று பாடியுள்ளார், ஒட்டக்கூத்தர்.
பேய் முறைப்பாடு
பேய்கள் தாம் பசியோடு இருப்பதாகவும் தமக்கு உணவு அளிக்க வேண்டும் என்றும் காளியிடம் முறையிடுவது பேய் முறைப்பாடு எனப்படும்.
இப்பகுதியில் பேய்கள், பண்டைக்காலத்தில் பெரும்போர்கள் நடந்தன. அவற்றில் இறந்தவர்களை நாங்கள் பசியாற உண்டோம். ஆனால் இப்போது பசியால் வருந்துகிறோம் என்று முறையீடு செய்கின்றன.
அப்போது தக்கன் யாகத்தை அழிக்கச் சிவபெருமானோடு சென்ற பூதகணப் படைகளுள் ஒன்றான ஒரு பேய் ஓடிவந்து, பசி மிக்கவர்கள் என்னோடு வாருங்கள் என்று அழைக்க, அப்பேயிடம் காளிதேவி சிவபெருமான் தக்கன் யாகத்தை எப்படி அழித்தார் என்று வினவுகிறாள். அப்போது அப்பேய் அந்த வரலாற்றைக் கூறத் தொடங்குகிறது.
காளிக்குக் கூளி கூறியது
தக்கன் சிவபெருமானை மதிக்காமல் யாகம் செய்தது; அதில் அவன் பார்வதியை அவமானப் படுத்தியது; அதை அறிந்த சிவபெருமான் வீரபத்திரக் கடவுளை அழைத்து அவ்வேள்வியை அழிக்கச் சொன்னது; அவ்வாறே தக்கனது யாகம் அழிக்கப்பட்டது; அதனால் அவனுக்கு உதவிய தேவர்கள் எல்லோரும் அழிந்து பேய்களாக மாறியது என்றவாறு சிவபெருமான் தக்கன் யாகத்தை அழித்த வரலாறு இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.
கூழ் அடுதலும் இடுதலும்
இக்கதையைக் கேட்ட காளி தேவி மகிழ்ந்து பேய்களுக்கு உணவிடக் கூழ் சமைக்கச் சொல்கிறாள். பேய்களும் இறந்த தேவர்களின் உடல்களைக் கொண்டு சமைத்து, உண்டு மகிழ்கின்றன; மகிழ்ந்து இரண்டாம் இராசராசனையும், அவன் முன்னோர்களையும் புகழ்ந்து பாடுகின்றன.
களங்காட்டியது
போர்க் களத்தில் இறந்து கிடப்போர் யார் யார் என்று சுட்டிக்காட்டியது களங்காட்டியது (களம்= போர்க்களம்) எனப்படும்.
போர்க் களத்தில் இறந்து கிடப்போர்
இப்பகுதியில் சிவபெருமான் பார்வதியோடு தோன்றி யாகத்தை அழித்த போது தன்னை எதிர்த்த தேவர்கள் இறந்து இந்த இந்தப் பேயாக உள்ளனர் என்று காட்டுகிறார். அப்போது பார்வதி தேவி ‘அவர்கள் மேல் நான் கொண்ட கோபம் தணிந்து விட்டது, நீங்களும் சினம் தணிந்து அருள வேண்டும்’ என்கிறாள். அதற்குச் சிவபெருமானும் இரங்கி, தக்கனுக்கு ஆட்டுக்கிடாய்த் தலையையும், உயிரையும் அருளினார். மற்றவர்களுக்கும் உயிர் கொடுத்தார். இதனால் அவர்கள் வீரபத்திரக் கடவுளை வாழ்த்தி வலம் வந்து தத்தம் இடம் சென்றனர்.
வாழ்த்து
இறுதியாக உள்ள ‘வாழ்த்து’ என்ற பகுதியில் தன்னை ஆதரித்த வள்ளலாகிய இரண்டாம் இராசராசனைப் புகழ்ந்து பாடுகிறார், நூலாசிரியர்.

தும்பை ஆடுதல்
போருக்குச் செல்லும் போது, வீரர்கள் வெற்றி உண்டாக வேண்டும் என்று தும்பைப் பூ மாலையைச் சூடிப் போருக்குச் செல்லுவர். இதைப்புறப்பொருள் வெண்பாமாலை என்ற புறப்பொருள் இலக்கண நூல்
செங்களத்து மறங்கருதிப்
பைந்தும்பை தலைமலைந்தன்று – (புறப். வெண்பா-127)
(செங்களம் = சிவப்பு நிறமான போர்க்களம்; மறம் = வீரம்; பைந்தும்பை = பசுமையான தும்பைப் பூ;தலைமலைந்தன்று = தலையில் சூடுவது)
என்று கூறுகிறது. அதுபோலவே வீரபத்திரக் கடவுள் தக்கனுடன் போர் புரியச் செல்லும்போது போர்க்கோலம் கொள்ளும் காட்சியைக் காளிக்குக் கூளி கூறுகிறது. அதில்
பொதியில் வாழ் முனிபுங்கவன் திருவாய் மலர்ந்த புராணநூல்
விதியினால் வரும் தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே (624)
(பொதிய மலையில் வாழும் முனிவராகிய அகத்தியர் எழுதிய பழமையான நூல் கூறியுள்ளவாறு வானம் மறையும் அளவு வீரபத்திரர் தும்பை மாலையைத் தலையில் சூடிக் கொண்டார்.)
என்று வீரபத்திரர் போருக்குப்போகும் போது தும்பை மாலையைச் சூடிச் சென்றார் என்று ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்.
படைவழக்கு
அரசர்கள் வீரர்களுக்குப் படைக்கலங்களை வழங்குவது படைவழக்கு எனப்படும். (புறப்பொருள் வெண்பாமாலை – 64) இந்நூலில் வீரபத்திரர் போர்க்கோலம் பூண்டு புறப்படும் போது அவர் கையில் அம்புகொடுக்கப்படுகிறது. எனவே இது படைவழக்கு என்ற புறத்துறையைச் சேர்ந்தது ஆகும்.
புரங்கொல் அம்புகொல், வந்து வந்து இடை
போனபேர் புராணர் பொற்
சிரம்கொல் அம்புகொல் என்கொல் ஒன்று
வலத்திருக்கை திரிக்கவே
(புரம் = திரிபுரம்; புராணர் = பழையோர்; சிரம் = தலை)
வீரபத்திரருக்குப் போர்க்கோலம் செய்யும் போது ஓர் அம்பை அவரது வலக்கையில் கொடுத்தனர். அந்த அம்பு சிவபெருமான் திரிபுரம் எரித்த போது தொடுத்த அம்போ என்று கூறத்தக்க வகையில் இருந்தது. தக்கனின் படையில் உள்ள தேவர்கள் எல்லாம் இறந்து பின் பிழைத்து, தேவர்களாக ஆகியவர்கள். அதனால் அவர்கள் இறந்தாலும் பிழைத்து விடுவர் என்பதால், மறுபடியும் பிழைக்க முடியாமல் தலையைக் கொல்ல ஆராய்ந்து எடுத்துக் கொடுத்த அம்போ என்று கூறத்தக்க வகையில் ஓர் அம்பு வீரபத்திரர் கையில் கொடுக்கப்பட்டது. இது படைவழக்கு என்ற துறை இந்நூலில் இடம் பெறுவதைச் சுட்டுகிறது.
வரலாற்றுச் சிறப்புகள்
இந்த நூல் வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த வரலாற்றுக் களஞ்சியமாக விளங்குகிறது. மூன்று சோழ அரசர்களிடத்தும் அவைக்களப் புலவராக இருந்ததால் சோழர்களைப் பற்றி ஏறக்குறைய 24க்கும் மேற்பட்ட வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் இந்நூலில் கூறுகிறார். சான்றாக ஒரு சிலவற்றை இங்குக் காண்போம்.
இரண்டாம் இராசராசனுக்கு ‘இராச கம்பீரன்’ (774), இராசபுரந்தரன் (811), கண்டன் (549), குலதீபம் (246), வரராசராசன் (549,812) போன்ற சிறப்புப் பெயர்கள் உள்ளன.
சோழர்களின் புகழ்பாடும் ‘மெய்க்கீர்த்தி’ என்ற செய்யுள்களில் காணப்படும் ‘இரட்டபாடி ஏழரை இலக்கம்’ என்ற செய்தி இதில் இடம்பெறுகிறது. இரண்டாம் இராசராசன், பிரட்டன் என்ற அரசனை அழித்து ஏழரை இலக்கம் என்ற ஊரைப் பாதுகாப்பதற்காக அவ்வூருக்கு இரட்டன் என்பவனை அரசனாக்கினான்.
பிரட்டனையே பட்டங்கட்டழித்துப்
பேர் ஏழரை இலக்கம் புரக்க
இரட்டனையே பட்டங்கட்டிவிட்ட
இராச கம்பீரனை வாழ்த்தினவே. – (774)
அரிய செய்திகள்.
இந்நூலில் பல அரிய செய்திகளும், அரிய புராணச் செய்திகளும் இடம் பெறுகின்றன. சான்றாக, அகத்தியர் யாழ் வாசிப்பதில் வல்லவர்; சிவபெருமானின் கங்கணமாக உள்ள பாம்பின் பெயர் திட்டிவிடம்; திருமாலுக்கு ஐந்து வடிவங்கள் உண்டு; ஒருவகைப் பாம்புகள் யானையை விழுங்கும்; புத்தர் வாளெறிந்த இடத்தில் பால் சுரந்தது; இவை போன்ற அரிய செய்திகள் இந்நூலில் இடம் பெறுகின்றன.

சிரமும் சிரமும் செறிந்தன
சரமும் சரமும் தறிப்பவே
கனமும் கனமும் கனைத்தன
சினமும் சினமும் சிறக்கவே
கடையும் கடையும் கலித்தன
தொடையும் தொடையும் துரப்பவே
தாரும் தாரும் தழைத்தன
தேரும் தேரும் திளைப்பவே
தோலும் தோலும் துவைத்தன
கோலும் கோலும் குளிப்பவே
(சிரம் = தலை; சரம் = அம்பு; கனம் = மேகம்; சினம்=கோபம்; கடை = நீர்; கலித்தன = ஒலித்தன; தொடை = அம்பு; தார் = காலாட்படை, தூசிப்படை; தோல் = யானை; கோல் = ஈட்டி)
போரில் அம்புகளும் எதிர் அம்புகளும் மேலே விழுவதால் வீரர்களின் தலைகள் எல்லாம் கீழே கொட்டுவது போல விழுந்தன.
வீரபத்திரரின் பூதகணங்கள் மேகங்களாக மாறி, கோபம் மிகுவதற்காக ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்பின.
தேவர்கள் விட்டஅம்புகளுக்கு எதிர் அம்புகளாக மிகுதியான மழை நீராகிய அம்புகளை விட்டது.
காலாட்படையும்காலாட்படையும் மோதிக்கொண்டன. தேர்ப்படையும் தேர்ப்படையும் மிகுதியாக மோதிக்கொண்டன.
ஈட்டியும், ஈட்டியும் மிகுதியாகப் பாய்ந்து நிறைந்ததால் யானைகள் இறந்து போயின.
தோளும் தோளும் மோதிக்கொண்டன. கால்களும் கால்களும் தளராது நிலைபெற்றுப் போர் புரிந்தன என்று போர்க்களக் காட்சியைக் கண்முன் ஒட்டக்கூத்தர் நிறுத்துகிறார்.
இல்பொருள் உவமை அணி
உலகில் இல்லாத ஒரு பொருளை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணி எனப்படும்.
கோயிலைப் பாடியது என்ற பகுதியில் காளிதேவியின் இருக்கையாக ஆயிரம் தலையுடைய ஆதிசேடன் என்ற பாம்பு அமைந்துள்ளது. அதன் கண்களுக்கு வடமுகாக்கினி என்ற தீயும், பற்களுக்கு நஞ்சோடு சேர்ந்த சந்திரனின் அமுத கிரணமும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
உலகம் அழியும் காலத்தில் தோன்றக்கூடிய தீ என்பது உலகம் அழியாத இன்று இல்லை. சந்திரன் குளிர்ந்த அமுதகிரணங்களையே (ஒளிக்கதிர்) உடையவன். ஆனால் நஞ்சோடு சேர்ந்த கதிர்கள் சந்திரனுக்கு இல்லை. எனவே இவை இரண்டும் இல்பொருள் உவமை அணி ஆகும்.
வேலைநின்று எழா உகக்கனல் என
வேகநஞ்சு அறா மதிப்பிளவு என
மாலையும் படாவிழித் திரளது
வாய்தொறுங்குவால் எயிற்று அணியே (155)
(வேலை = கடல்; எழா = எழுகிற; உகக்கனல் = யுகம் அழியும் காலத்தில் தோன்றும் தீ; என=போல; மதிப்பிளவு = நிலவு ஒளி; படா விழி = உறங்காமல் விழித்திருக்கும் கண்கள்; குவால் = மிகுதியான; எயிறு = பற்கள்)
உலகம் அழியும் ஊழிக் காலத்தில் தோன்றக் கூடிய வடவைத்தீ போன்றனவாய், இரவிலும் உறங்காதனவாய், நெருப்பு விடக் கூடியனவாய் ஆயிரம் தலையையுடைய ஆதிசேடனின் கண்கள் காணப்பட்டன. நஞ்சை நீங்காமல் உமிழும் சந்திரனின் வெண்மை நிறமுடைய ஒளிக்கதிர்கள் போன்று வாயில் மிகுதியான விஷமுடைய பற்கள் இருந்தன என்று இல்பொருள் உவமை அணி அமைந்துள்ளது.
நிரல் நிறை அணி
செய்யுளில் சொல்லையும் பொருளையும் முறையே வரிசையாக வைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும். இதை, தண்டி அலங்காரம்
நிரல் நிறுத்தி இயற்றுதல் நிரல்நிறை அணியே
என்று கூறுகிறது.
இந்நூலில் காளிதேவியின் இருக்கையாகிய ஆதிசேடனை வருணிக்கும் போது இவ்வணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாயிரும் பய உததித் தொகைஎன
வாள்விடும் திவாகரத்திரளென
ஆயிரம் பணம் அமிதப் பரவையது
ஆயிரம் சிகாமணி ப்ரபையே (154)
(மாயிரும் = மிகப்பெரிய; பயம் = பால்; உததி = கடல்;தொகை = கூட்டம்; வாள் = ஒளி; திவாகரம் = சூரியன்; பணம் = பாம்பின் படம்; அமிதப் பரவையது = அளவிடமுடியாத பரப்பளவுள்ளது; சிகாமணி = மாணிக்கம்; ப்ரபை = ஒளி)
பெரிய பாற்கடல் போன்றுவெண்மையான ஆயிரம் படங்களையும், ஒளிவிடும் சூரியக்கூட்டம் போன்று ஒளிவிடும் ஆயிரம் நாகரத்தினங்களையும் உடையதாக ஆதிசேடன் காட்சி அளித்தது என்று வரிசையாக உள்ள முதல் இரண்டு வரிகளும் முறையே மூன்றாவது, நான்காவது வரிகளுக்கு உவமையாகி உள்ளன. எனவே இது நிரல் நிறை அணி ஆகும்.
இயற்கை இறந்த நிகழ்ச்சிகள்
ஒட்டக்கூத்தர் உலக இயல்பைக் கடந்த காட்சிகளை அமைப்பதில் சிறந்தவராக விளங்குகிறார். எனவே இவரை ‘கௌடப்புலவர்’ என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். அவ்வகை உலக இயல்ப – உலக இயற்கையைக் கடந்த நிகழ்ச்சிகள் கூளிகள் கூழ் சமைக்கும் பகுதியில் அழகாக இடம் பெறுகின்றன. இவ்வகை வருணனைகள் பரணி இலக்கிய வகையில் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டை இங்குப் படிக்கலாம்.
…………………………
மலைகளும் வான யானைத்
தலைகளும் அடுப்புக் கொள்ளீர் (730)
சிவனுக்குத் துரோகம் செய்து அழிந்து போன மலைகளையும், தேவலோக யானைகளின் தலைகளையும் கொண்டு அடுப்பு அமைப்பீர்!
வானவர் பல்லும் வானோர்
மன்னவர் பல்லும் எல்லாத்
தானவர் பல்லும் தீட்டி
அரிசியாச் சமைத்துக் கொள்ளீர்
(வானவர் = தேவர்கள்; வானோர் மன்னவர் = இந்திரன்; தானவர் = அசுரர் முதலியோர்)
தேவர்களின் பல்லையும், தேவர் தலைவனாகிய இந்திரனின் பல்லையும் எல்லா அசுரர்களின் பற்களையும் எடுத்துத் தீட்டி அரிசி ஆக்கிக் கொண்டு அதைச் சமைப்பீர் என்பன போன்று இந்த நூலில் உலகின் இயல்புக்கு மாறுபட்ட வருணனைகள் இடம் பெறுகின்றன.

இரண்டாம் இராசராசனின் உதவியால் எழுதப்பட்ட இந்த நூலின் பாட்டுடைத்தலைவர் வீரபத்திரக் கடவுள். இவர் தக்கனின் யாகத்தை அழித்த கதையே சிறப்பித்துக் கூறப்படுகிறது.
இதில் பல வரலாற்றுச் செய்திகளும், அரிய புராணச் செய்திகளும் இடம் பெறுகின்றன.
இந்த நூலின் அமைப்பு, பாவகை, பரணி உறுப்புகள், நூலின் சிறப்பு, ஒட்டக்கூத்தரின் இலக்கியத்திறன் ஆகியவற்றைப் பற்றி நாம் இப்பாடத்தில் படித்தோம்.
பாடம் - 2
இலக்கியங்களில் அகப்பொருள் என்று கூறப்படும் தலைவன் தலைவியின் அக வாழ்க்கை நிகழ்ச்சிகளையோ, புறப்பொருள் என்று கூறப்படும் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி முதலிய புற வாழ்க்கை நிகழ்ச்சிகளையோ வரிசையாகப் பாடுவது கோவை இலக்கியம் எனப்படும்.
எனவே கோவை இலக்கியம் அகக்கோவை, புறக்கோவை என இருவகைப்படும். புறக்கோவை என்பது பற்றிச் சுவாமிநாதம் என்ற இலக்கண நூல் கூறுகிறது. ஆனால் புறக்கோவை இலக்கியம் இதுவரை பாடப்படவில்லை. அகக்கோவை நூல்கள் மட்டுமே உள்ளன. ஆகவே பெரும்பாலான இலக்கண நூலார் கோவை என்பது அகப்பொருள் துறைகள் அமைந்த நானூறு கலித்துறைப் பாக்களால் அமைவது என இலக்கணம் கூறியுள்ளனர். கோவைக்கு அகப்பொருட் கோவை என்றும் பெயர் உண்டு.
தமிழில் 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை என்ற நூலே முதல் கோவை நூல் ஆகும். இதே நூற்றாண்டில் மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் அகப்பொருள் துறைகள் அமைந்த சமய இலக்கியம் ஆகும். இதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையார் எனும் பெயரும் உண்டு.
தஞ்சைவாணன் கோவை 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலாகும். தஞ்சைவாணன் கோவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
இவருடைய ஆசிரியர் பெயர் வயிரபுரம் ஆசான். இந்த ஆசிரியரே இவருக்குப் பொய்யாமொழி என்று பெயரிட்டார் என்று கூறப்படுகிறது.
கதைகள்
பொய்யாமொழிப் புலவரைப் பற்றிப் பல கதைகள் அபிதான சிந்தாமணி, தமிழ் நாவலர் சரிதம் முதலிய நூல்களில் காணப்படுகின்றன.
பெற்ற பரிசுகள்
பொய்யாமொழிப் புலவர் இந்த நூலைப் பாடியபோது இதில் சிறப்பித்துப் பாடப்படும் தஞ்சைவாணன் என்ற அரசனின் மனைவி ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் செய்யப்பட்ட தேங்காயைப் பரிசாக அளித்தாள். தஞ்சைவாணன் அத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் மூன்று விலை உயர்ந்த மணிகளை வைத்துப் பரிசளித்து இவரைச் சிறப்புச் செய்தான் என்று கூறப்படுகிறது.
காலம்
இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1268-1311 ஆகும். எனவே இந்நூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு ஆகும்.
இயற்பெயர்
தஞ்சைவாணனின் இயற்பெயர் சந்திர வாணன். 13ஆம் நூற்றாண்டில் பாணர்கள் என்ற குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டில் வாழ்ந்தனர். அவர்கள் சோழ நாட்டிலிருந்தும் பல்லவ நாட்டிலிருந்தும் குடி பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்தவர்கள். அந்தப் பாணர் மரபில் வந்தவனே இந்தச் சந்திரவாணன் என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார். (தெ.பொ.மீ. தமிழ் இலக்கிய வரலாறு ccc தமிழாக்கம் மு. இளமாறன். ப.176)
நாடு
தஞ்சைவாணன் பாண்டிய நாட்டில் இருந்த மாறைநாடு என்ற சிறு நாட்டை ஆண்டு வந்தான். அதன் தலைநகர் தஞ்சாக்கூர். இவ்வூர் தென்காசிக்கு அருகில் உள்ளது. இந்த நூலில் தஞ்சை என்று போற்றப்படுவது இவ்வூரே ஆகும்.
பாண்டியனின் படைத்தலைவன்
மாறை நாட்டை ஆண்டு வந்த தஞ்சைவாணன், பாண்டியன் கோமாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகரனுக்குப் படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்தான். பாண்டியனின் கண்போல இருந்து சேரநாட்டை வெற்றி பெறுவதற்கு இவன் உதவினான் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
மலைநாடு கொண்ட வழுதிகண் போல்பவன் வாணன் (18)
(மலைநாடு = சேரநாடு; வழுதி = பாண்டியன்; போல்பவன் = போன்றவன்; வாணன் = தஞ்சைவாணன்)
நம்பி அகப்பொருள் நூலில் களவியல், வரைவியல், கற்பியல் ஆகிய இயல்களில் தலைவன் தலைவியின் அகவாழ்க்கை நிகழ்வுகளின் இலக்கணம் கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே இக்கோவை நூலிலும் களவியல், வரைவியல், கற்பியல் என்று மூன்று இயல்கள் உள்ளன.
நம்பி அகப்பொருளில் இம் மூன்று இயல்களிலும் உள்ள தலைவன், தலைவி, தோழி, தாய் போன்றோர் பேசும் பேச்சுகள் (கூற்றுகள்) தஞ்சைவாணன் கோவையில் அதே வரிசையில் உதாரணப் பாடல்கள் கொண்டு விளக்கப்படுகின்றன.
எனவே நம்பி அகப்பொருள் இலக்கணத்திற்கு உரிய முழுமையான இலக்கியம் தஞ்சைவாணன் கோவை என்பதை உணரலாம்.

(1) களவியல் – 18 பிரிவுகள் – 280 பாடல்கள்
(2) வரைவியல் – 8 பிரிவுகள் – 86 பாடல்கள்
(3) கற்பியல் – 7 பிரிவுகள் – 59 பாடல்கள்
ஆகியன.
களவியல் என்பது தலைவன் தலைவியின் திருமணத்துக்கு முன் உள்ள காதல் வாழ்க்கை பற்றிய இயல். தலைவியைத் தலைவன் முதன்முதல் பார்ப்பது தொடங்கிக் காதலித்துப், பின் திருமணத்திற்காக அவன் பொருள் தேடிப் பிரிந்து செல்லுதல் வரை உள்ளவை களவியலில் கூறப்பட்டுள்ளன.
வரைவு என்றால் திருமணம் என்று பொருள். திருமணத்திற்காகத் தலைவனும் தலைவியும் முயல்வது தொடங்கித் திருமணம் செய்து கொள்ளுதல் வரை உள்ளவை வரைவியலில் கூறப்பட்டுள்ளன.
திருமணம் செய்து கொள்ளுதல்
கற்பியல் என்பது திருமணத்திற்குப் பின் உள்ள குடும்ப வாழ்க்கையைப் பற்றிய இயல் ஆகும்.
பாடுபொருள்
ஒரு நூலில் பாடப்படும் பொருள் அல்லது கருத்து பாடுபொருள் எனப்படும். தஞ்சைவாணன் கோவையின் பாடுபொருள் அகப்பொருள் ஆகும். இதில் தலைவன் தலைவியின் அகவாழ்க்கை நிகழ்ச்சிகள் வரிசையாகப் பாடப்பட்டு உள்ளன. எனவே தான் இந்நூலை அகப்பொருள் கோவைநூல் என்று சொல்லுகிறோம்.
பாவகை
இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை என்ற பா இனத்தால் அமைந்துள்ளன.

(1) அக வாழ்க்கையில் இடம்பெறும் தலைவன், தலைவி, தோழி, தாய் போன்ற மாந்தர்கள்.
(2) அவர்களின் அகவாழ்க்கை நிகழ்ச்சிகள்; அந்நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசும் பேச்சுகள் (அவை கூற்றுகள் என்று அழைக்கப்படும்; அவையே பாடல்களாக எழுதப்படுகின்றன).
(3) அக இலக்கியத்திற்கே உரிய உள்ளுறை உவமம், இறைச்சி ஆகிய உத்திகள் ஆகியவை.
இந்த அகஇலக்கிய மரபுகள் தஞ்சைவாணன் கோவையில் எப்படி அமைந்துள்ளன என்பது பற்றியே இந்தப் பகுதியில் நாம் படிக்கப் போகிறோம்.
அக இலக்கிய மாந்தர்
அக இலக்கியங்களில் யார் யார் பேசுவார்கள் என்பதை இலக்கண நூல்கள் கூறுகின்றன. அந்த வகையில் தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி, செவிலி, நற்றாய், கண்டோர், பரத்தை, பாணன் ஆகிய 9 மாந்தர்கள் இந்த நூலில் கூற்று நிகழ்த்துகின்றனர். அதாவது இந்த 9 பேர் மட்டுமே இந்நூலில் பேசுகின்றனர்; அவர்களின் பேச்சுகளே பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன. அனைவர் கூற்றுகளும் தலைவன்-தலைவி அகவாழ்க்கையோடு தொடர்பு உடையவையாகவே இருக்கும்.
களவியல்
திருமணத்துக்கு முன் நிகழும் காதல் வாழ்க்கை களவியலில் கூறப்படுகிறது. இதில் நடக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நம்பி அகப்பொருள் இலக்கண நூலின் அடிப்படையில், கைக்கிளை, இயற்கைப் புணர்ச்சி முதலிய 18 வகைகளாகப் பிரித்து உள்ளார் இந்நூலாசிரியர்.
மேற்காட்டியவை, தலைவன் தலைவியைக் கண்டு காதல் கொள்ளுதல், பிறர் அறியாத களவுப் புணர்ச்சியில் தலைவனும் தலைவியும் கூடுதல், தலைவனின் தோழனாகிய பாங்கன் துணையோடும், தலைவியின் தோழியாகிய பாங்கியின் துணையோடும் காதலர்கள் சந்தித்தல், தலைவியை விரைவில் மணந்து கொள்ளுமாறு தலைவனைத் தோழி வேண்டுதல், திருமணத்திற்காகப் பொருள்தேடத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளையும், இந்நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சுகளையும் உள்ளடக்கியவை.
அவற்றுள் ஒரு சில நிகழ்ச்சிகளைச் சான்றாக இங்குக் காணலாம்.
கைக்கிளை
ஒரு தலைவியைப் பார்த்த தலைவன் அவள் அழகில் மயங்கி அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால் தலைவி அவனைப் பார்க்கவில்லை. காதலின் (களவின்) இந்தத் தொடக்க நிகழ்ச்சியைக் கைக்கிளை என்று நம்பி அகப்பொருள் இலக்கண நூல் கூறுகிறது. (கைக்கிளை : ஒருதலைக் காதல்) இக்காதல் பின்னர் இருபுறக் காதலாக மாறிவிடும்.
காதலின் தொடக்க நிகழ்ச்சியாகிய கைக்கிளையைக் காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்று நான்கு வகைப்படுத்துகின்றனர்.
காட்சி
காட்சி என்பது தலைவன் தலைவியை முதன்முதலில் காணுவது. அப்போது அவன் அவள் அழகில் மயங்கித் தன் மனத்துக்குள் பேசுகிறான். இதுவே தஞ்சைவாணன் கோவையில் இடம்பெறும் முதல் பாடல் ஆகும்.
“புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்துஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை
அன்னம் செந்நெல் வயலே தடம் பொய்கை
சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே (1)
(புயல் = கரியமேகம்; பொருவில் = போரிடும் வில்; கயல் = மீன்; மணந்த = சேர்ந்திருந்த; கமலம் = தாமரை; அயலே = அருகே; தடம் = பெரிய; பொய்கை= குளம்; சூழ் = சுற்றி இருக்கக்கூடிய; மலையம் = பொதியமலை)
இந்தப் பாட்டின் பொருள்: “வெள்ளை நிற அன்னப் பறவைகள் நிறைந்து உள்ள செந்நெல் வயல்களும், பெரிய குளங்களும் சூழ்ந்திருக்கக் கூடியது தஞ்சைவாணனின் பொதியமலை. அம் மலையின் பக்கத்தில் மிக அழகான பொற்கொடி ஒன்று நிற்கிறது! அந்தப் பொற்கொடி (கூந்தலாகிய) கரிய மேகத்தைச் சுமந்து கொண்டும், பிறைநிலவை (நெற்றியாக)க் கொண்டும், போரிடும் வளைந்த இரு வில்களை (புருவமாக)க் கொண்டும், தாமரை மலரில் மீன் (முகம், கண்)களைக் கொண்டும், கற்பக மரத்தின் பக்கத்திலே நிற்கிறதே!” என்று தலைவியின் அழகில் மயங்கித் தலைவன் தனக்குள் கூறிக் கொள்கிறான்.
செந்நெல் வயல்கள்
இப்பாடலில் கருமேகம் தலைவியின் கூந்தலையும், பிறை அவளது நெற்றியையும், வில் புருவத்தையும், கயல் கண்களையும், தாமரை முகத்தையும், பொற்கொடி அவளது முழு உருவத்தையும் குறிக்கும் உருவகங்கள் ஆகும்.
ஐயம்
காட்சிக்கு அடுத்தது ஐயம். அதாவது தலைவியைப் பார்த்த தலைவன் ‘இவ்வளவு அழகாக இருக்கிறாளே! இவள் தெய்வப்பெண்ணா? மானிடப் பெண்தானா? என்று ஐயம் கொள்கிறான். பின் அவளது தோற்றத்தையும் இயக்கத்தையும் கொண்டு அவள் மானிடப் பெண்தான் என ஐயம் தீர்கிறான். இது தெளிவு எனப்படும். அதன்பின் அவளது பார்வையில் அவனை விரும்பும் குறிப்பு இருப்பதைக் கண்டு மகிழ்கிறான். இது குறிப்பறிதல் எனப்படும். இந்நிலையில் காதல் ஒருபுறக் காதலாக இல்லாமல் இருபுறக் காதலாக மலர்கிறது.
இவ்வாறு தொடங்கித் தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் களவுக் காதல் வாழ்க்கையில் மகிழ்வர்.
பாங்கற்கூட்டம்
களவுக் காதலில் தலைவனால் தலைவியைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது தலைவன் தன் நண்பனாகிய பாங்கன் உதவிகொண்டு, தலைவியைச் சந்திப்பான். இதற்குப் பாங்கற் கூட்டம் (பாங்கன் கூட்டம்) என்று பெயர்.
தலைவியைச் சந்திக்க இயலாது காதல் நோயால் தலைவன் துன்பப்படுவதைக் கண்ட பாங்கன் ‘ஒரு சிறிய குவளை நீர் வெப்பம் அடைந்திருந்தால் அதில் குளிர்ந்த நீரை ஊற்றி விளாவி அதன் வெப்பத்தைத் தணித்துவிடலாம். ஆனால் நீ அடைந்துள்ள காதல் வெப்பமோ கடல் போன்றது. கடலே வெப்பம் அடைந்தால் அதைத் தணிப்பதற்கு இந்த உலகத்தில் எந்த ஆற்றில் நீர் இருக்கிறது?’ எனக் கேட்கிறான்.
…………. கடல் வெதும்பின்
தன்மேல் விளாவ உண்டோ தரைமேல் ஒரு
தண்புனலே (47)
(வெதும்பின் = வெப்பம் அடைந்து கொதித்தால்; விளாவ = விளாவுதல்; சுடுநீரின் வெப்பத்தைத் தணிப்பதற்குக் குளிர்ந்த நீரைக் கலப்பர். அதற்கு விளாவுதல் என்று பெயர்; தரை = உலகம்; தண்புனல் = குளிர்ந்த ஆறு)
பின்னர்ப் பாங்கன் தலைவனைத் தேற்றித் தலைவியைச் சந்திக்க உதவுகிறான்.
பாங்கியிற் கூட்டம்
பாங்கனின் உதவியை நாடியதுபோலத் தலைவன் தலைவியின் தோழியாகிய பாங்கியின் உதவியை நாடிப்பெற்றுக் களவு வாழ்க்கையைத் தொடர்வான். அதற்குப் பாங்கியிற் கூட்டம் என்று பெயர்.
தலைவன் – தலைவியைச் சந்திக்க வைப்பதற்காகப் பாங்கி இரவு, பகல் ஆகிய இரு நேரங்களிலும் உதவுவாள். ஏதாவது ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அங்குத் தலைவியை அழைத்துச் சென்று தலைவனைச் சந்திக்கச் செய்வாள். இவை இரவுக்குறி எனவும் பகற்குறி எனவும் கூறப்படும்.
இரவில் தலைவன் மலைப் பகுதிகளைத் தாண்டி வந்து தலைவியைச் சந்தித்துப் பிரியும் போது தலைவி, வழியில் உள்ள விலங்குகளை நினைத்தும் பெய்யும் மழையை நினைத்தும் அச்சப்படுவது உண்டு.
அரியும் கரியும் பொரும்நெறிக்குஓர் துணையாய்
அவர்மேல் சொரியும் திவலை துடைக்க……………
…………………….மனம் பின் செல்வதே (220)
(அரி = சிங்கம்; கரி = யானை; பொரு = பொருதல், சண்டையிடுதல்; நெறி = வழி)
‘சிங்கமும் யானையும் சண்டையிட்டுக் கொள்ளும் வழியில் தலைவன் செல்லுகிறான். மேலும் மழையும் பெய்து அவனைத் துன்புறுத்துகிறது. அச்சம் தரக்கூடிய அந்த வழியில் சிங்கம், யானையிடமிருந்து அவர் தம் வீரத்தால் தம்மைக் காப்பாற்றிக் கொள்வார். ஆனால் அவர் மழையில் நனைந்து கொண்டு செல்லுவார். அவர் மீது படும் மழைத்துளிகளைத் துடைக்க என்மனம் அவருக்குத் துணையாகச் செல்கிறது’ என்று தலைவி தலைவன் மேல் உள்ள தன் அன்பை வெளிப்படுத்துகிறாள்.
இவ்வாறு காதலிக்கத் தொடங்கித் திருமணம் செய்து கொள்ளுமாறு தோழி வற்புறுத்த, அதனை ஏற்றுத் தலைவன் பொருளுக்காகப் பிரிவது வரை உள்ளவற்றிற்குக் களவியல் என்று பெயர்.
வரைவியல்
இரண்டாவதாக உள்ள வரைவியலில்
(1) வரைவுமலிவு
(2) அறத்தொடு நிற்றல்
(3) உடன்போக்கு
(4) கற்பொடு புணர்ந்த கவ்வை
(5) மீட்சி
(6) தன் மனை வரைதல்
(7) உடன்போக்கு இடையீடு
(8) வரைதல்
ஆகிய 8 நிகழ்ச்சிகள் உள்ளன. வரைவு என்பது திருமணம். களவு வாழ்க்கையின் இறுதியில் நிகழும் திருமணம் பற்றிய இயல் வரைவியல் ஆகும். திருமணத்திற்கான முயற்சிகள், களவுக் காதலைப் பெற்றோர்க்குத் தெரிவித்தல், பெற்றோர் மறுத்தால் தலைவியைத் தலைவன் அழைத்துச் சென்றுவிடல், திருமணம் செய்து கொள்ளல் என்பனவற்றைக் குறிப்பவை மேற்காணும் நிகழ்வுகள்.
தலைமகளிடம் காதலால் ஏற்பட்ட வேறுபாட்டைக் கண்ட செவிலித்தாய் பாங்கியிடம்,
பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது
கண்டேன்
பன்னுற்றசொல்லும்இன்பாலும் கொள்ளாள்
……………………………………….மான் அனையாளுக்கு
என்னுற்றது என்றறியேன் புனங்காவல் இருந்த பின்னே
(297)
(பன்னுற்றசொல் = திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லுதல்; புனங்காவல் = தினைப்புனம் காத்தது)
எனக் கேட்கிறாள். அதாவது ‘தினைப் புனம் காவலுக்குச் சென்று வந்த பின்னர் என் மகளுடைய மார்பில் பொன் போன்ற பசலை பாய்ந்துள்ளது. கண்களும் நீர்நிறைந்து வருத்தத்துடன் காணப்படுகின்றன. நான் திரும்பத்திரும்பப் பலமுறை சொல்லுவதைக் காதில் கேட்டுக் கொள்ளாமல் ஏதோ நினைப்பில் உள்ளாள், பாலும் உண்ணாது பசியறியாமல் உள்ளாள். மான்போன்ற அழகிய என் மகளுக்கு என்ன நடந்தது?’ என்று செவிலித்தாய் பாங்கியைக் கேட்கிறாள். பாங்கியும் இதுதான் சரியானநேரம் என்று அவள் கேட்கும்போதே தலைவியின் காதலைச் செவிலித்தாய்க்கு உணர்த்திவிடுகிறாள்.
போருறை தீக்கணை போலும்நின் கண்கண்டு போதவஞ்சி
நீருறை நீலமும் நீயும்நண் பாகென்று நின் மகட்கோர்
தாருறை தோளவர் தந்தனர் ……..,………………………
காருறை சோலையில் யாம் விளையாடிய காலையிலே
(300)
(போருறை = போர்உறை; போர் செய்வது போன்ற கொடுமை உறைந்துள்ள; தீக்கணை = கொடிய அம்பு; நீலம் = நீலமலர்; நண்பாகு = நண்பராக இருக்க வேண்டும்; தார் = மாலை; கார் = மேகம்; உறை = உறைதல்; தங்கி இருத்தல்)
என்கிறாள். ‘மேகங்கள் தங்கி இருக்கக்கூடிய சோலையில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை அணிந்த ஒரு தலைவன் நம் தலைவியிடம் வந்து, ‘போர் செய்யும் கொடிய தீக்கணை போன்ற உன் கண்ணைக் கண்டு அஞ்சி நீலமலர் நீரின் உள்ளே ஒளிந்து கொண்டது; அதனால் நீலமலரும் நீயும் நண்பர்களாக இருங்கள்’ என்று சொல்லி நீல மலரை அவளுக்குப் பறித்துக் கொடுத்தான். அவ்வாறு பூவைத் தந்ததிலிருந்து தலைவிக்கு இவ்வாறு வேறுபாடு தோன்றி உள்ளது என்று தலைவியின் காதலைச் செவிலித்தாய்க்கு உணர்த்துகிறாள்.
இவ்வாறு பாங்கி செவிலிக்குத் தலைவியின் காதலைத் தெரிவிப்பதற்கு அறத்தொடு நிற்றல் என்று பெயர்.
கற்பியல்
திருமணத்திற்குப் பிறகு உள்ள அக வாழ்க்கை பற்றிய இயல் கற்பியல். இதில்,
(1)இல்வாழ்க்கை
(2)பரத்தையிற் பிரிவு
(3)ஓதற்பிரிவு
(4)காவற்பிரிவு
(5)தூதிற்பிரிவு
(6)துணைவயிற் பிரிவு
(7)பொருள்வயிற் பிரிவு
என்று 7 பகுதிகள் உள்ளன. தலைவியின் இல்லத்திற்குச் சென்று வந்த செவிலித்தாய் அவள் மகிழ்ச்சியாக வாழ்வதை நற்றாயிடம் சொல்கிறாள்.
விண்மேல் அமரர் விரும்பும் அமராவதி …………….
மண்மேல் அடைந்தன்ன வாழ்க்கையது ஆனது……
…………………………………………………………………………
…………………………………… மடமாதர் கடி மனையே
(375)
(விண் = வானம்; அமரர் = தேவர்; அமராவதி = தேவலோகத் தலைநகர்; கடிமனை = சிறந்தவீடு)
அதாவது வானத்தின் மேல் உள்ள தேவர்களின் தலைநகரமாகிய அமராவதி நகரம் மண்ணில் வந்தது போன்று மகிழ்ச்சியும், செல்வமும் உடையதாகத் தலைவியின் வீடு உள்ளது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறாள்.
தலைவன் பரத்தையிடம் சென்று வந்தபோது தலைவி அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அதற்குப் பாங்கி தலைவனை ஏற்றுக் கொள்வதே நல்ல குணம் என்று எடுத்துக் கூறுகிறாள்.
……………………….. உள்ளாது உனைப் பண்டு அகன்றனர்
ஆயினும் உள்ளி இப்போது
எள்ளாது வந்து உன் கடையின் நின்றார் நம்
இறைவர் குற்றம்
கொள்ளாது எதிர்கொள்வதே குணமாவது
………………………….. (385)
(உள்ளாது = நினையாது; உனை = உன்னை; பண்டு = முன்பு; உள்ளி = நினைத்து; கடை = வாயிற்கடை; வீட்டின் முன்பகுதி; இறைவர் = தலைவர்; எதிர்கொள்வது = ஏற்றுக் கொள்வது)
‘தலைவியே! தலைவர் முன்பு உன்னைப் பற்றி நினைக்காமல் பரத்தையிடத்துப் பிரிந்து சென்றவர், இப்போது உன்னை நினைத்து உன் வீட்டின் வாயிலில் வந்து நிற்கிறார். அவரது குற்றத்தைப் பார்க்காமல் அவரை ஏற்றுக்கொள். அதுவே நல்ல குணம் ஆகும்’ என்று பாங்கி தலைவிக்கு நல்லதை எடுத்துக் கூறுகிறாள். அவளது வாழ்க்கை இனிமை உடையதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
இவ்வாறு கற்பியலில் இல்வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய பாடல்கள் அமைந்துள்ளன.
உள்ளுறை உவமம்
உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக என
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்
(தொல்காப்பியம் – பொருளதிகாரம், 51)
என்று தொல்காப்பியம் கூறுகிறது.
வெளிப்படையான உவமைபோல அல்லாமல் மறைமுகமான உவமையாக, நாமே குறிப்பாக உணர்ந்துகொள்ளும் விதமாக அமைவது உள்ளுறை உவமம். அதாவது உவமானம் சொல்லப்பட்டிருக்கும். உவமேயம் (கவிஞன் சொல்ல விரும்பும் பொருள்) நாம் ஊகித்து அறியுமாறு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
திருமணம் செய்து கொள்வதற்காகப் பொருள் தேடிச் செல்லும் தலைவன் (வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்று இதைக் கூறுவார்கள்) பாங்கியிடம்,
‘நெற்கதிர் கரும்பு போல மிக உயரமாகச் செழித்து வளர்வதற்காக நீரைக் கவர்ந்து கொண்டு வரும் மழைமேகம் போல நான் வருவேன் என்று தலைவியிடம் கூறு’ என்கிறான்.
கழைபோல் வளர்நெல் கவின்பெற வாரி கவர்ந்து வரும்
மழைபோல் வருகுவன்…………………………………………….
(260)
(கழை = கரும்பு; கவின் = அழகு; வாரி = கடல்நீர்; மழை = மழைமேகம்)
‘நெற்கதிர்கள் கரும்புபோல உயரமாக – செழிப்பாக வளர்வதற்காக மழைமேகம் நீரைக் கொண்டு வருகிறது; அம் மேகம்போல் வருவேன்’ என்பது உவமை. ‘தலைவியாகிய நெற்பயிர், கரும்புபோல மகிழ்ச்சியால் செழிப்பான அழகைப் பெறுவதற்காக முகில் போன்ற நான், பொருளாகிய நீரைக் கொண்டு வருகிறேன்’ என்பது உவமைக்குள் மறைந்திருக்கிற பொருள். இவ்வாறு உள்ளுறை உவமம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
இறைச்சி
இறைச்சி தானே பொருள் புறத்ததுவே
(தொல்காப்பியம் – பொருளதிகாரம், 225)
என இறைச்சி பற்றித் தொல்காப்பியம் கூறுகிறது.
அக இலக்கியங்களில் ஒவ்வொரு திணைக்கும் உரிய மரம், பூ, விலங்கு முதலியவற்றைக் கருப்பொருள் என்று கூறுவார்கள். அக்கருப்பொருட்களை வைத்துப் பாடல் காட்சி அமைந்திருக்கும். சில இடங்களில் அக்கருப்பொருட் காட்சியினுள்ளே பேசுபவர் கூற நினைக்கும் கருத்து மறைந்திருக்கும். அதுவே இறைச்சி எனப்படும். இந்த உத்தியையும் பொய்யாமொழிப் புலவர் மிகச் சிறப்பாகக் கையாளுகிறார். சான்றாக,
களவு வாழ்க்கையில் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள முயலாது உள்ளான். அப்போது வேறு சிலர் தலைவியைப் பெண் கேட்டு வருகின்றனர். அதைத் தலைவனுக்குத் தெரிவிக்கும் பாங்கி,
வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை
வெம்பகுவாய்த்
துடிக்கின்ற திங்களில் தோன்றும் துறைவ………….. (232)
(இப்பி = சிப்பி; நித்திலம் = முத்து; வெம்பகுவாய் = பாம்பு; திங்கள் = நிலா)
என்று தலைவனின் ஊரைப் பற்றிக் கூறுகிறாள். நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் தலைவன். அந்த நெய்தல் திணைக் கருப்பொருள் சிப்பியும், முத்தும். தலைவனின் கடற்கரையில் முத்தை உமிழ்வதற்காகச் சிப்பி வெடித்து முத்தை வெளியே தள்ளுகிறது. அந்தக் காட்சி, கிரகணத்தின்போது பாம்பு விழுங்கும் நிலாத் துடிப்பதுபோல் இருக்கிறது என்று கூறுகிறாள்.
சிப்பி வெடித்து முத்தை வெளியே தள்ளுகிறது
இந்த இயல்பான கருப்பொருள் காட்சியின் உள்ளே வேறொரு பொருள் மறைந்துள்ளது. சிப்பி முத்தை விளைவித்தது போலத் தலைவியை அவள் பெற்றோர் வளர்த்தனர். இன்று பெண்கேட்டுச் சிலர் வந்துள்ளனர். சிப்பி முத்தை வெளியே தள்ளுவது போல வந்தவர்களுக்குப் பெண் தருவதாகப் பெற்றோர் உடன்படுகின்றனர். ஆனால் தலைவியோ தலைவனைக் காதலிக்கிறாள். அதனால் வேதனையோடு பாம்பின் வாயில் அகப்பட்ட கிரகண காலச் சந்திரன் போலத் துடிக்கிறாள்’ என்ற உட்பொருள் தோழிகூற்றில் மறைந்துள்ளது. இவ்வாறு இறைச்சிப் பொருள் அமைத்துப் பாடியுள்ளார் புலவர்.

…………………..எதிர்ஏற்ற தெவ்வர்
தம் ஊரை முப்புரமாக்கிய வாணன்(197)
……………………………..எதிர்த்த ஒன்னார்
மன்மலை வேழம் திறைகொண்ட சேய்தஞ்சை
வாணன்(16)
சீயங்கொலோ எனத் தெவ்வென்ற வாணன்(29)
……………………………… அடையார் தமக்கு
மகத்தில் சனி அன்ன சந்திரவாணன்(48)
(தெவ், தெவ்வர், ஒன்னார், அடையார் = பகைவர்; சேய் = முருகன்; வேழம் = யானை; திறை = கப்பம்; சீயம் = சிங்கம்; மக = மக நட்சத்திரம்)
‘தம்மை எதிர்த்த பகைவர்களின் ஊரை, சிவபெருமான் முப்புரத்தை எரித்தது போல எரித்தான்; பகைவர்களின் போர் யானைகளையே திறையாகக் கொண்ட முருகனைப் போன்றவன்; பகைவர்க்குச் சிங்கம் போலக் காட்சி தரக்கூடியவன்; மேலும் மகநட்சத்திரத்தில் வரும் சனி அழிவைத் தருவதுபோலப் பகைவருக்கு அழிவைத் தரக்கூடியவன்’ என்று அவனது வீரம் சிறப்பிக்கப்படுகிறது.
…………………………….. நாவலர்க்கு
தானக் களிறு தரும் புயல் வாணன் (17)
மணிபொன் சொரியும் கை வாணன் (25)
………………………….. களியானை, செம்பொன்
தரும் பாரி வாணன் (37)
வலம்புரி போல் கொடை வாணன் (40)
காவிரி வைகிய காலத்தினும்
தரைத்தாரு அன்ன செந் தண்ணளி வாணன் (71)
(தானக்களிறு = மதயானை; புயல் = மேகம்; வலம்புரி = சங்கு – இங்குச் சங்கநிதி; வைகிய = வற்றிய; தாரு = கற்பகமரம்; தண்ணளி = குளிர்ந்த அருள்)
தமிழ் தங்கிய தஞ்சைக் காவலன் (13)
………. மாறைவாணன் தமிழ்த் தஞ்சை நாடு (19)
………….. வாணன் தமிழ்த் தஞ்சை (71)
வாணனது நகராகிய தஞ்சாக்கூரைத் தமிழ் தங்கிய தஞ்சை என வருணிப்பதன்மூலம், அங்குத் தமிழைத் தங்கச் செய்த வாணனின் சிறப்பைப் புலவர் புலப்படுத்துகிறார்.

அழகிய உவமைகளும், உருவகங்களும் நூல் முழுதும் நிரம்பி உள்ளன. தற்குறிப்பேற்ற அணி, தன்மை அணி போன்ற அணிகளும் மிகச் சிறப்பாக இந்த நூலில் படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்குக் காணலாம்.
இந்நூலில் தலைவியின் அழகு பலவாறு உவமிக்கப்பட்டுள்ளது. தலைவியின் கண்களை வேல் போன்றது, மான் போன்றது, விஷம் போன்றது என்று உவமிக்கிறார். அவள் நெற்றி வில் போன்று உள்ளது ; அவள் இடை பொய் போன்று இல்லாத ஒன்றாக உள்ளது என்கிறார்.
உழையும் வெங்காளமும் போலும் கண் (99)
(உழை = மான்; வெங்காளம் = விஷம்)
பொய்போலும் இடையாய் (137)
தலைவின் உறுப்புகளுக்கு உவமையாகக் கூடிய பூ, வண்டு போன்ற பொருட்களுக்குத் தலைவியின் உறுப்புகளையே உவமையாகக் கூறுகிறார்.
வண்டை, நல்லார் விழிபோல் இருந்தும் (8)
(நல்லார் = பெண்கள்)
என உவமை செய்கிறார்.
மற்றொரு சிறப்பான உவமை! தலைவனின் காதல்நோய் கண்ட பாங்கன் அவனை, ‘சிலந்தி வலையைக் கொண்டு கட்டப்பட்டதற்காக, ஒருபோர் யானை புலம்பி நைந்தால் போல, ஒரு பெண் தன் கொங்கையால் அணைக்க நீ வருந்தினாய்’ என்று பழிக்கிறான்.
வலிமையான யானையைச் சிலந்திநூல் கொண்டு அடக்க முடியாது; மனவலிமை மிக்க தலைவனை ஒரு பெண்ணின் காதல் வருத்தப்படுத்த முடியாது என்பது உவமையின் கருத்து.
சிலம்பிமென்னூல் கொண்டு சுற்றவெற்றிப்
போரார் களிறு புலம்பிநைந்தாங்கு ஒரு பூவைகொங்கை
வாரால் அணைப்ப வருந்தினை நீ ……………………… (44)
(சிலம்பு = மலை; சிலம்பி = சிலந்திப்பூச்சி; நைந்தாங்கு = நைந்தது போல; கொங்கை வார் = வாரால் கட்டிய மார்பு)
புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்தொரு கற்பகத்தின்
அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை
அன்னம் செந்நெல்
வயலே தடம் பொய்கை சூழ் தஞ்சை வாணன்
மலையத்திலே (1)
இங்குத் தலைவியின் கூந்தல் மேகமாகவும், நெற்றி பிறையாகவும், புருவம் வில்லாகவும், கண் கயலாகவும், முகம் தாமரையாகவும், முழுத்தோற்றம் பொற்கொடியாகவும் உருவகம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். (பார்க்க : 2.3.2 காட்சி)
அலங்காரங்கள் இன்றிப் பொருளின் இயல்பை நேரில் பார்ப்பது போலத் தோன்றுமாறு, உள்ளதை உள்ளபடி விளக்குவது தன்மை அணி ஆகும். இந்த நூல் ஓர் அகப்பொருள் நூல் ஆகும்.
அதனால் இதில் உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளே மிகுதியும் விளக்கப்பட்டுள்ளன. தலைவியின் அழகையோ, பாட்டுடைத் தலைவனாகிய அரசனின் நாட்டையோ விளக்கும்போது தான் உவமை, உருவகம் போன்ற அணிகள் தேவைப்படுகின்றன. மற்றபடி ஒவ்வொரு பாடலும் அகவாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதால் பல பாடல்களில் இத்தன்மையணி இடம் பெறுகிறது என்று கூறலாம்.
தலைவி தலைவனைச் சந்தித்து விட்டுச் செல்லுகிறாள். அவள் எப்படிச் செல்லுகிறாள் தெரியுமா?
‘அகில் புகை ஊட்டிய நீண்ட கூந்தலை ஒருகையில் ஏந்திக் கொண்டும், மற்றொரு கையில் தான் அணிந்துள்ள துகிலை ஏந்திக் கொண்டும், இரண்டு கால்களிலும் அணிந்த சிலம்புகள் ஒலிக்க நடக்கிறாள் இவ்வாறு, தலைவி நடமாடுவதை இயல்பான காட்சியாக வருணிக்கிறார் புலவர்.
அகிலேந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி அசைந்து ஒருகை
துகில்ஏந்தி ஏந்தும் துணைச் சிலம்பு ஆர்ப்ப
(அகில் =அகிற்புகை; துணை = இரண்டு; ஆர்ப்ப =ஒலிக்க)
வசிஷ்டர் என்ற முனிவரின் மனைவி அருந்ததி. புராணங்களில் அவள் சிறந்த கற்புடைய பெண்ணாகக் குறிப்பிடப்படுகிறாள். முனிவர்கள் வானில் விண்மீனாக உள்ளனர் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த முனிவர்களோடு சேர்ந்து அருந்ததியும் வானில் விண்மீனாக உள்ளாள். தன் கற்பின் சிறப்பால் விண்மீனாக இருக்கக்கூடிய பெருமை உடைய ஒரே பெண் இவளே.
அந்த அருந்ததி விண்மீன் வானில் வடதிசையில் உள்ளது. தஞ்சைவாணன் கோவைத் தலைவி அருந்ததியை விடச் சிறந்த கற்புடையவள் என்று கூறவந்த ஆசிரியர் தம் கருத்தை வடதிசையில் உள்ள அருந்ததி விண்மீனின் மேல் ஏற்றித் தற்குறிப்பேற்றமாகக் கூறுகிறார். ‘தலைவியின் கற்பு நிலையை அறியாமல் அருந்ததி தலைவியை எதிர்த்து நின்று தோற்றுப் போனாள். தோற்றவர்கள் வடக்கு நோக்கித் தவம் இருப்பர். அதனால் அருந்ததியும் விண்மீனாய் வடக்கு நோக்கித் தவமிருக்கிறாள்’ என்கிறார்.
நின்தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு
அன்றோ வடக்கிருந்தாள் மடப்பாவை அருந்ததியே (374)
(தோகை = மயில் போன்ற தலைவி; வெந்நிட்டு = தோற்று; வடக்கிருத்தல் = தோற்றவர்கள் வடக்கு நோக்கி உண்ணாது தவமிருந்து உயிர்துறத்தல்)
அருந்ததி விண்மீன் இயல்பாகவே வடக்கில் இருப்பது. தலைவிக்குத் தோற்றதனால் அது வடக்கு நோக்கித் தவம் செய்கிறது எனப் புலவர் தம் கருத்தை ஏற்றிச் சொல்வதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. இவ்வாறு பொய்யாமொழிப்புலவர் தம் இலக்கியத்திறத்தால் பலவகை அணிகளைக் கையாண்டு தஞ்சைவாணன் கோவையை மிகச்சிறந்த ஓர் அகப்பொருள் கோவை இலக்கியமாகப் படைத்துள்ளார்.

நம்பி அகப்பொருள் என்னும் இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் அக இலக்கிய மரபுகளும், பாட்டுடைத் தலைவனாகிய தஞ்சைவாணனின் சிறப்புகளும் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளன.
இந்நூலின் அமைப்பு, இதில் அக வாழ்க்கை நிகழ்ச்சிகள் கோவையாகப் பாடப்பட்டுள்ள தன்மை, அக இலக்கியத்துக்கே உரிய உள்ளுறை, இறைச்சி முதலிய உத்திகள், தஞ்சைவாணனின் கொடை, நாட்டுச் சிறப்புகள், பொய்யாமொழிப் புலவரின் இலக்கியத் திறன் ஆகியவற்றைப் பற்றி இந்தப் பாடத்தில் நாம் படித்தோம்.
பாடம் - 3
இலக்கியத்தில் தோன்றிய இந்தப் புதிய வகையினை, ‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சுட்டுகிறது. சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் மிகுதியான கற்பனையைக் கொண்டவை. சிற்றிலக்கியங்கள் தமிழகத்தின் வரலாற்றை ஓரளவு நமக்குத் தெரிவிக்கின்றன. அக்காலச் சமூக நிலை பற்றியும் ஓரளவு அறிய முடிகின்றது. அக்காலக் கவிதைப் போக்கினையும்
நாம் அறிந்து கொள்ளலாம்.
வழக்கொடு சிவணிய வகைமை யான
எனும் தொல்காப்பிய நூற்பா உலாவின் தோற்ற நிலை என்பர். பெருங்காப்பியங்களில் பாட்டுடைத்தலைவன் உலா வருதல் சுருக்கமாகக் கூறப்படும். இதனை மட்டுமே உயிர்நாடியாகக் கொண்டு தெய்வமே உலா வருவதாகவும், அவ்வுலாக் கண்டு உவகை கொண்ட பல திறப் பெண்கள் காமுற்றதாகவும் கலிவெண்பாவில் பாடப்படுவது உலா இலக்கியம். இதனை உலாப்புறம் என்றும் கூறுவர்.
ஆதி உலா, தெய்வீக உலா எனச் சிறப்பிக்கப்பெறும் சேரமான் பெருமாள் நாயனார் செய்த திருக்கைலாய ஞான உலாவே முதல் உலாவாகும். இறைவன் பெருமை பேசும் உலா என்ற முறையில் தெய்வீக உலா எனச் சிறப்பிக்கப்படுகிறது. சிறந்த ஓசை நயமும் கருத்தாழமும் கொண்ட இவ்வுலா பன்னிரு திருமுறைகளில் பதினொராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இதன் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. சிவபெருமானின் பெருமையும் இறைவியின் அழகும் வீதிகளின் சிறப்பும் அழகிய வர்ணனைகளோடு அமைந்து கற்போரை மகிழ்விக்கிறது.
சிவபெருமான்
அடுத்து வருவது நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையாகும். இது திருஞானசம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அமைகின்றது. 12ஆம் நூற்றாண்டில் உலாப்பாடுவதில் வல்லவரான ஒட்டக்கூத்தரால் மூவருலா இயற்றப்பட்டது. விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன் ஆகிய மூன்று சோழ மன்னர்களையும் தலைவர்களாகக் கொண்டு தனித்தனியாகப் பாடப்பெற்ற உலா நூல்கள் மூன்றையும் இணைத்து மூவருலா என்பர். இம்மூன்று மன்னர்கள் காலத்திலும் வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். தமிழக வரலாற்றை அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகின்றது. விசயாலய சோழனுக்கு 96 விழுப்புண்கள் ஏற்பட்ட செய்தியும் முதலாம் இராசராசனின் வெற்றியும், கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம் இராசேந்திரனின் வெற்றியும் பற்றி ஒட்டக்கூத்தர் தன் உலா நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இராசராச சோழன்
நம்பியாண்டார் நம்பிகளின் ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, இரட்டைப்புலவர்களின் ஏகாம்பர நாதர் உலா, அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலா, திருக்கழுக்குன்றத்து உலா, திரிகூடராசப்பக்கவிராயரின் திருக்குற்றால நாதர் உலா, தத்துவராயரின் சொக்கநாதர் உலா, கந்தசாமிப்புலவரின் திருப்பூவணநாதருலா, திருக்காளத்தி நாதருலா முதலியவை பின்னாளில் தோன்றியவை. இக்காலத்தில் தோன்றியவை தமிழன் உலா, காமராசர் உலா போன்ற உலா இலக்கியங்கள் ஆகும்.
நச்சினார்க்கினியர், உலா இலக்கியத்தில் வரும் காதல் மகளிர் பரத்தையரே; குலமகளிர் அல்லர் என்பர். பெருங்கதையும் உலா பற்றிக் கூறுமிடத்தில் உத்தம மகளிர் ஒழிய எனக் கூறிக் குல மகளிரை நீக்கும். பேராசிரியர் உரையும் தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக்
கூறப்படாது எனக் கூறும்.
கடவுள், அரசன், வள்ளல், தலைவன் ஆகியோரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடும் மரபினை உலா இலக்கியத்தில் காணலாம். ஒரு நாளில் ஓர் ஊர்தியில் ஒரு தலைவன் வர, ஏழு பருவப் பெண்கள் இதயம் நெகிழ்வது இலக்கணமாக இருக்க, ஒரு தலைவன் ஏழு நாட்களில் ஏழுவித ஊர்திகளில் வர, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவ மகளிர் காமுறுவதாகக் கூறும் கற்பனையை மதுரைச் சொக்கநாதர் உலாவில் காணலாம்.
ஒட்டக்கூத்தர் பெற்ற பரிசுகள் பல, சோழமன்னர்களுள் ஒருவன் அரிசிலாற்றங்கரைக்கண் ஓர் ஊரைப் பரிசிலாக அளித்தனன். அது கூத்தனூர் என்று பேர் பெற்று இன்றளவும் உள்ளது. இராசராச சோழன் உலாவைப் பாடி அரங்கேற்றிய பொழுது இரண்டாம் இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசில் வழங்கினான் எனத் தெரிகிறது.
ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட வேறு நூல்கள் அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டியெழுபது, காங்கேயன் நாலாயிரக்கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி என்பன. ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று உலா நூல்களும் மூவருலா என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள் முன் நிற்பது விக்கிரம சோழன் உலா. அடுத்தது குலோத்துங்க சோழன் உலா. மூன்றாவது இராசராச சோழன் உலா. இம்மூன்று மன்னர்களும் அரசு புரிந்த காலமே ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலமாகும். விக்கிரமசோழன் கி.பி. 1118 முதலும், இரண்டாம் இராசராசசோழன் 1146 முதலும் ஆட்சி புரிந்துள்ளனர். எனவே 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரையும் வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர் என அறியலாம்.

இவற்றைத் தொடர்ந்து பேதை (113-133), பெதும்பை (134-162), மங்கை (163-192), மடந்தை (193-227), அரிவை (228-262), தெரிவை (263-305), பேரிளம்பெண் (305-327) ஆகிய ஏழு பருவப் பெண்களின் வனப்பும் பண்பும் செயல்களும் காதலும் மயக்கமும் முறையே கூறப்படுகின்றன. பின் தோழியர் பலர் ஏங்கி நின்று தம் தலைவியைப் புரக்குமாறு வேண்ட, விக்கிரம சோழன் உலாப் போந்தான் என விக்கிரம சோழன் உலா நிறைவு பெறுகிறது.
இம்மன்னன் அரசு புரியும் காலத்தில் வடஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் வெள்ளக்கேடு நேர்ந்த காரணத்தால் ஊர்ப்பொது நிலங்களை விற்று அரசாங்கவரி செலுத்தப்பட்டது என அறிகிறோம். கல்வெட்டு ஒன்றில் இவ்வெள்ளக்கொடுமை நிகழ்ந்தது பொறிக்கப்பட்டுள்ளது. காலம் பொல்லாததாய் நம்மூர் அழிந்து குடி ஓடிப்போய்க் கிடந்தமையால் என்பது அக்கல்வெட்டின் தொடக்கம். அதனால் இவன் ஆட்சியில் உணவுப்பஞ்சம் மிகுந்திருந்தது என அறியலாம்.
இவன் ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராய் அமைந்திருந்தது. திருமழபாடிக்கல்வெட்டு ஒன்றில் இவன் செய்த திருப்பணியும் திருவிழாவும் விரிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தில்லைக்கோயில் திருப்பணிகள் விக்கிரம சோழனது பத்தாம் ஆட்சியாண்டில் செய்யப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளன.
தொண்டைமான், வாணன், காடவன், வேணாடர் வேந்தன், அனந்தபாலன், அதிகன், நுளம்பன், திகத்தன், மாளுவ நாட்டு மன்னன், மகத நாட்டு மன்னன், சேரன், பாண்டியன், பல்லவன், மற்றைய மண்டலத்து மன்னர்கள் ஆகியோரும் மற்றும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் முன்புறத்திலும் வலப்புறம் இடப்புறம் ஆகிய இரு பக்கங்களிலும் சூழ்ந்து நெருங்கி வர, விக்கிரம சோழன் உலா வரும் சிறப்பைக் காணலாம்.
இம்மன்னன் உலா வருவதைக்காண வேண்டும் என்ற வேட்கையால் சூழ்ந்திருக்கும் பரத்தையர் கூட்டம் மணற்குன்றின் மேல் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைக் கூட்டம் போலவும், மேகத்தில் தோன்றும் மின்னல் கூட்டம் போலவும், மலைகள் தோறும் சேர்ந்த மயில் கூட்டம் போலவும் விரைந்து வந்து தெருவெங்கும் நெருங்கி நின்றது.
பெதும்பைப் பருவத்தாள் ஒருத்தி வேய்ங்குழல் போன்ற இனிமையான சொற்களைப் பேசக்கூடியவள் தான் கண்ட கனவினைப் பேசுகின்றாள். ஓர் இளம்பூங்கொடி செழித்த கோங்க மரத்தின் ஒரு கொம்பினைப் பற்றி இணைந்திருப்பது கண்டு மகிழ்வுற்றேன் என்கிறாள்.
செருக்குற்ற அன்னம் போன்ற மங்கைப்பருவப் பெண்ணொருத்தி விக்கிரம சோழனைப் பெதும்பைப் பருவத்தில் கண்டு காதல் கொண்டவள். அவன் பாதம் முதலாகத் தங்க முடி புனைந்த உச்சி வரையிலும் மனத்திலே குறித்தெழுதிப் பின் படத்தில் எழுதிப் பகல் முழுதும் பார்த்திருந்தவள். இப்பொழுது மன்னனைக் காணத் தன்னை அலங்கரித்துக்கொண்டு இப்பொழுது தன்னை அறிவானோ என்று கண்ணும் மனமும் களித்து நிற்கிறாள்.
வெல்லப்பாகு போன்ற இனிய சொல்லையுடைய மடந்தைப் பருவப்பெண் பாங்கியிடம் பந்தயம் கட்டிப் பல பந்துகளைக் கையிலெடுத்தாள். ஆட்டத்தில் பாங்கியை வென்றாள். உடனே சூரியன் போன்ற சோழன் மாலையை வாங்கித்தா என்று அவளை வருத்தி நிற்கிறாள்.
தேவாமிர்தம் போன்ற அரிவைப் பருவமுடைய ஒருத்தி மான்விழி போன்ற கண்களை உடையவள்; முன்னொரு நாள் தெருவில் பவனி வந்த விக்கிரம சோழன்பால் காதல் கொண்டவள் இப்போது காமத்தீயால் மனம் உருகி நிற்கிறாள். அன்னங்கள், குருகுகள், குயிலினங்கள், மயிலினங்கள், வண்டுகள் ஆகியவற்றைப்பார்த்து, சோழனை அடைய நீங்கள் எனக்கு உதவி செய்ய மாட்டீரோ என்று மயங்கிக் கூறி நிற்கிறாள்.
மயக்கம் கொடுக்கும் தேன் போன்ற தெரிவைப்பெண் ஒருத்தி பாணனை நோக்கி, சோழனது நாட்டையும், ஆத்திமாலையையும், புலிக்கொடியையும், காவிரியாற்றினையும் பற்றிப்பாடுக என்கிறாள். பாணன் யாழிலிருந்து எழுந்த இசைப்பாடல்கள் இனிமையாக ஒலிக்க, காமனுடைய அம்புகள் அவளைத் துன்புறுத்த, விடியுமளவும் காதலால் பலபடப் புலம்பி நிற்கிறாள்.
வில்லை நெற்றியாகக் கொண்ட பேரிளம்பெண் கமழும் பூமாலை பல அணிந்து, கள்ளுண்டு களித்துக் கனவிலே சோழனைக் கண்டு மகிழ்ந்தவள், கனவை நனவாகப் பலரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

இவன் ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட சோழபுரமே சோழநாட்டின் தலைநகராய் அமைந்திருந்தது. இவனது ஒப்பற்ற செங்கோல் எட்டுத்திசையையும் அளக்கிறது. இவனுடைய வெண்கொற்றக் குடை எட்டுத் திசைகளுக்கும் நிழல் செய்கின்றது. வேற்றரசர்கள் தங்கள் மகுடங்களை இறக்கி வைத்து இவன் பாதங்களைப் பணிகின்றனர்.
மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும்
கூடற்கும் கோழிக்குங் கோமானே-பாடலர்
சாருந் திகிரி தனையுருட்டி ஓரேழு
பாரும் புரக்கும் பகலவனே-சோர்வின்றிக்
காத்துக் குடையொன்றால் எட்டுத் திசைகவித்த
வேத்துக் குலகிரியின் மேருவே-போர்த்தொழிலால்
ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே (655-662)
என்று விக்கிரம சோழனைச் சிறப்பிக்கிறார் ஒட்டக்கூத்தர்.
மூன்று முரசு முகில்முழங்க-நோன்றலைய
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்து (56-57)
என்கிறார் ஒட்டக்கூத்தர்.
நீர் நிறைந்த ஏழுகடல்களும் நிலத்தில் உள்ள ஏழு தீவுகளும் பொதுவென்று சொல்வதை நீக்கி, தன்னுடைய போர்க்குரிய சக்கரத்தால் வென்று தனக்கே உரிமையாக்கிக் கொண்டவன். வட்ட வட்டமாகச் சூழ்ந்திருக்கும் ஏழு தீவுகள் இறலி, சூசை, கிரவுஞ்சம், சம்பு, புட்கரம், கமுகு, தெங்கு என்பனவாம். ‘உலகமேழுடைய பெண்ணணங்கு, பெண் சக்கரவர்த்தி’ என்று விக்கிர சோழன் பட்டத்துத் தேவியைக் குறிப்பிடுகின்றார். இவனுடைய பட்டத்து யானை தானே முழங்குவதல்லால் தனக்கெதிராக வானமே முழங்கினாலும் அவ் வானத்தைத் தடவி அதற்குப் பட்டமும் கொம்பும் வலிய துதிக்கையும் இல்லையெனக்கண்டு சினம் தணியும். ஈழமண்டலம், சேரமண்டலம், மாளுவநாடு இவற்றையெல்லாம் வென்று ஆள்பவன் விக்கிரம சோழன். மன்னர் பலர் வந்து அவன் பாதத்தில் வணங்கும்போது அவர் முடிமேற்பட்டுக் கழல் ஒலிப்பதால்.
முடிமேல் ஆர்க்கும் கழற்கால்
என்கிறார் ஒட்டக்கூத்தர்.
கூத்தப்பெருமானையே குலதெய்வமாகக் கொண்டவன் இவன். வருவாயில் பெரும்பகுதியைத் தில்லைக்கோயில் திருப்பணிச் செலவிற்கே தந்தனன் எனத் திருமழபாடிக் கல்வெட்டுக் கூறுகின்றது. பூமகள் புணர பூமாது மிடைந்து என்று தொடங்கும் கல்வெட்டு மெய்க்கீர்த்திகள் இச்செய்தியை நன்கு விளக்குகின்றன. கூத்தப்பெருமான் திருக்கோயில் வெளிச்சுற்று முழுவதும் விக்கிரம சோழன் திருமாளிகை என்றும் திருவீதிகளுள் ஒன்று விக்கிரமசோழன் தென்திருவீதி என்றும் இம்மன்னன் பெயரால் வழங்கப்படுகின்றன. தில்லைக் கூத்தப் பெருமான் திருக்கோயிற்பணியில் இவன் உள்ளம் பெரிதும் ஈடுபட்டிருந்தது என்பதை இதனால் உணரமுடிகின்றது.

மடந்தைப் பருவப் பெண்ணொருத்தி தன் தோழியுடன் பந்து விளையாடும் அழகை எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடுகிறார் ஒட்டக்கூத்தர் என்று பாருங்கள். பந்துவிளையாடுவதால் அவள் கை சிவக்கும் என்று கூறுவது போல் அவள் வளைகள் ஒலித்தன. இடை வருந்தும் என்று கூறுவதுபோல் அவள் இடையில் அணிந்திருந்த மேகலை ஒலித்தது. சிற்றடி வருந்தும் என்று கூறுவதுபோல் காலில் அணிந்திருந்த சிலம்பு ஒலித்தது. தற்குறிப்பேற்ற அணியில் தன் கற்பனையைப் பின்வருமாறு பாடுகிறார் ஒட்டக்கூத்தர்.
செங்காந்தள் அங்கை சிவக்கும் சிவக்கும் என்று
அங்காந்து தோள் வளைகள் ஆர்ப்பெடுப்பத் – தங்கள்
நுடங்கு கொடி மருங்குல் நொந்து ஒசிந்தது என்று
அடங்கு கலாபம் அரற்றத் – தொடங்கி
அரிந்த குரலினவாம் அஞ்சீறடிக்குப்
பரிந்து சிலம்பு பதைப்ப – (409 – 414)
அதேபோல,
விந்தமே போலப் புதைய நடந்த பொருப்பே – (581) எனவும்
வண்டு புடை போதப் போதும் பொருப்பே – (581) எனவும்
அரசனது பட்டத்து யானையை மலையாக உருவகித்து ஒட்டக்கூத்தர் பாடுவதைக் காணலாம்.
தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர்
வானே முழங்கினும் அவ்வான் தடவி-வானுக்
கணியும் மருப்பும் அடற்கையும் இன்மைத்
தணியும் யமராச தண்டம் (105-108)
(யமராச தண்டம் = எமன் கையில் உள்ள தண்டம்)
உலா வரும் விக்கிரம சோழனை வர்ணிக்கும் ஒட்டக்கூத்தர்,
கன்னியும் நர்மதையும் கங்கையும் சிந்துவும்
பொன்னியும் தோயப் புகார்விளங்க-மன்னிய
செங்கோல் தியாக சமுத்திரம் (429-431)
என்கிறார்.
தியாகசமுத்திரம் என்பது விக்கிரம சோழன் பட்டப்பெயர்களுள் ஒன்று. சமுத்திரம் வந்ததற்கேற்பச் சமுத்திரத்தில் உள்ள பொருள்களும் உடன் வந்தனவாகத் தோன்றும்படி அமைத்துள்ளார். அரசன் உலா வரும்போது உடன் வந்தனவாகக் கூறும்போது பவளமும் முத்தும் என்பவைற்றை உலாக்காண வந்த மகளிர் சிவந்த வாயும் பற்களும் ஆகவும், மகர மீன்குலம் என்பதை அம்மீன்கூட்டம் போன்ற மகளிர் விழிக்கூட்டங்களாகவும், சங்குகளை அம்மகளிர் கண்டங்களாகவும், அவை முழங்குவதை அவர்கள் குரலாகவும் கூறும் நயம் சிறப்பானது.
பேதைப் பருவப் பெண்ணை ஒட்டக்கூத்தர் வர்ணிக்கும் அழகிலேதான் எத்தனை உவமைகள் பாருங்கள். பூமியிலே வந்து பிறந்து வளர்கின்ற பிறை போல்வாள், தோகை முளைக்காத மயில் போல்வாள், இளமையான அன்னப்பெடை போல்வாள் என்று உவமிக்கிறார். (224-230)
மடந்தைப்பருவப் பெண் ஒருத்தி “அந்தமில் ஓலக்கடலேழுமொன்றாய் உலகொடுக்கும் காலக்கடையனைய கட்கடையாள்” (387-388) என்று கூறப்படுகிறாள். முடிவில்லாத ஒலியை உடைய ஏழுகடலும் ஒன்றாகச் சேர்ந்து உலகத்தைத் தனக்குள் அடக்குகின்ற யுகமுடிவுக்காலம் போன்ற கடைக்கண்களை உடையவள் என்கிறார். யுகமுடிவு எவ்வாறு உலகினையழிக்குமோ அவ்வாறு இவள் ஆடவர் மனத்தை அழிக்கும் இயல்புடையவளாம்.
தெரிவைப்பெண் நல்ல வெல்லப்பாகு போன்றவள். வாடாத பொற்கொம்பு போன்றவள். ஒளி மழுங்காத நிறைமதி போன்றவள். இலக்கணம் கொண்டு எழுதப்படாத ஓவியம் போன்றவள். இளமையான மயில் போன்றவள். மயக்கம் கொடுக்கும் தேன் போன்றவள் என்று உவமிக்கப்படுகிறாள்.

பாடம் - 4
இலக்கியத்தில் தோன்றிய இந்தப் புதிய வகையினை “விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்று பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சிற்றிலக்கியங்கள் அகம் பற்றியன, புறம் பற்றியன, பக்தி பற்றியன எனப் பல வகைகளாக உள்ளன. இவை பெரும்பாலும் மிகுதியான கற்பனை கொண்டு அமைந்தவை. தமிழகத்தின் வரலாறு, சமூகநிலை ஆகியன பற்றிச் சிற்றிலக்கியங்கள் வாயிலாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.
விழையுமொரு பொருள்மேல் தழைய உரைத்தல் சதகமென்ப
என்னும் இலக்கண விளக்கச் சூத்திரத்தால் உணரலாம். இது சதகம் என்று வட சொல்லால் குறிக்கப்படும். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானைப்பாடிய ஒரு பகுதி திருச்சதகம் எனப்பெயர் பெறும். பிற்காலத்தில் தெய்வங்களையும், வள்ளல்களையும், சிற்றரசர்களையும் சிறப்பித்துப் பாடப்பட்ட சதகங்கள் பல உண்டு. திண்ணைப் பள்ளிக் கூடங்களில் சதகம் கற்பது கட்டாயமாக இருந்தது. சதகத்தில் நீதிகள் பல நல்ல உவமைகளோடு உணர்த்தப்பட்டன. அனைவரும் கற்பதற்கு உரிய வகையில் சதக இலக்கியங்களின் நடை எளிமையும் ஓட்டமும் உடையதாய் இருந்தது. எதுகை, மோனைகள் மனப்பாடம் செய்வதற்கு உதவியாக அமைந்துள்ளன. தமிழ்ச் செய்யுட்களின் நடை படிப்படியாக எளிமை பெற்று வளர்ந்த வளர்ச்சியை அந்த நூல்களில் காணலாம் என்கிறார் டாக்டர். மு.வ.
திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
இறைவனைப் போற்றிப் புகழ்வன பக்திச் சதகங்கள், வாழ்க்கையைக் கூறுவன வாழ்வியல் சதகங்கள், வரலாற்றை விளக்குவன வரலாற்றுச் சதகங்கள், உடல் நலம் பற்றி எடுத்து உரைப்பன மருத்துவச் சதகங்கள், காமச் சுவையைத் தருவன அகச் சதகங்கள், தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை எடுத்துரைப்பன. வாழ்க்கை வரலாற்றுச் சதகங்கள் எனச் சதக நூல்களைப் பட்டியலிடுகின்றார் ‘தமிழ்ச் சதக இலக்கியம்’ என்ற தன் நூலில் சு. சிவகாமி அவர்கள்.
சதகப் பாடல்களில் யாப்பு முறை பெரும்பாலும் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கட்டளைக்கலித்துறையில் அமையும்.
அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறுவதில் ஆர்வம் கொண்ட ஒருவர் திருத்தொண்டர் சதகம் இயற்றினார். நாட்டில் உள்ள பல பழமொழிகளைத் தொகுத்து, அவற்றை அமைத்துப் பாடிய சதகங்களும் உள்ளன. தண்டலையார் சதகம், கோவிந்த சதகம் என்பவை பழமொழிகளை அமைத்து, தெய்வ வழிபாட்டுடன் சேர்த்து இயற்றப்பட்டவை. ஜெயங்கொண்டார் சதகத்தில் பழமொழிகளும் அவற்றை விளக்கும் கதைகளும் நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக்கு உரிய நீதிகளை எடுத்துக் கூறும் சதகங்கள் சில உண்டு. கைலாச நாதர் சதகம் என்பதில் நீதிகள் மட்டும் அல்லாமல், சோதிடம் உடலோம்பல் முதலியன பற்றிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.
ஆறைக்கிழாரின் கார் மண்டல சதகம் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. படிக்காசுப் புலவரின் தொண்டை மண்டல சதகம், தண்டலையார் சதகம் ஆகியனவும், குணங்குடி மஸ்தான் சாகிபுவின், நந்தீசர் சதகம், முகைதீன் சதகம் ஆகியனவும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம், சாந்தலிங்க அடிகளாரின் வைராக்கிய சதகம் ஆகியன கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இயேசுநாதர் திருச்சதகம் என்பது யாழ்ப்பாணத்தாராகிய சதாசிவப் பிள்ளை இயேசுநாதரைப் போற்றி எழுதிய சதகமாகும்.
திருவண்ணாமலை, திருப்பதி முதலான தலங்களின் தெய்வங்களை வழிபடும் முறையில் அமைந்த சதகங்கள் பல உண்டு. இசுலாமிய மதத்தவர் பாடிய சதகங்கள் அகத்தீசர் சதகம், அரபிச் சதகம் முதலியன. இவ்வாறு பலவகைக் காரணம் பற்றியும், பல தலங்களைப் புகழ்ந்தும் பல வகைப் புலவர்களால் இயற்றப்பட்டவைதாம் சதக இலக்கியங்கள்.
சதகப்பாடல்கள் நீதி இலக்கியத்திலும் சிறப்பிடம் பெறுகின்றன. நீதி கூறும் இலக்கியத்தில், சதகங்கள் மக்கள் செல்வாக்குப் பெற்றவை. கலைக்களஞ்சியம் போன்றவை இல்லாத அக்காலத்தில் கற்பவர்க்குத் தேவையான பல குறிப்புகளையும் இவ் விலக்கியங்களில் புலவர்கள் தந்திருக்கிறார்கள். திருமாலின் அவதாரங்களைக் குறித்தும், புராணங்கள் குறித்தும் அறங்கள் முப்பத்திரண்டு என்னென்ன என்பது பற்றியும் விளக்கம் தரப்படுகிறது. இவ்வாறு பலவற்றைக் கூறுவதற்குச் சதகச் செய்யுட்கள் பயன் பட்டன.
நூறு பழமொழிகளை நூறு செய்யுட்களில் அமைத்து இயற்றப்பட்ட நூல் தண்டலையார் சதகம் ஆகும். குமரேச சதகம், சிலவகை மனிதர்களைப் பேய்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் குற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. கடன் தந்தவர் வந்து திருப்பிக் கேட்கும்போது முகம் கடுகடுப்பவர் பேயாம். பெரிய பதவி வந்த போது செருக்கோடு நடப்பவர் பேய். பகைவரின் சொல்லை மதித்து அதில் மயங்கி அகப்படுவோர் பேய். இலஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்குத் துன்பம் செய்பவர் பேய். மனைவி வீட்டில் இருக்கப் பரத்தையரை நாடிச் செல்வோர் பேய். இவ்வாறு நீதிகள் வெவ்வேறு வகையாக உணர்த்தப்படுதல் காணலாம்.

அறப்பளீசுர சதகத்தில் முதலில் காப்புச் செய்யுளில் விநாயகர் காக்க வேண்டும் என்று துதிக்கையுளான் காப்பு என்று கூறி விநாயக வணக்கம் செய்கிறார் அம்பலவாணக் கவிராயர்.
முதலில் வரும் காப்புச் செய்யுள் ‘வெண்பா’வில் உள்ளது. இச்சதகம் பன்னிரு சீர் ஆசிரிய விருத்தப் பாவால் இயற்றப்பட்டுள்ளது. இச்சதகத்திற்கு மகுடமாக ஒவ்வொரு பாடலிலும் ‘அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே’ என்ற வரி அமைந்துள்ளது.
சிவபெருமான் அருளும், சிறப்பும் பாடல்களில் குறிப்பாகப் பேசப்படுகின்றன.
விடமுண்ட கண்டனே (9)
என்றும்
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள் செய்அமல (12)
என்றும்
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே (17)
என்றும்
அறிவுற்ற பேரை விட்டகலாத மூர்த்தியே (23)
என்றும் சிவனருள் பேசப்படுவதைக் காணலாம்.
உதவியின்றிக் கெடுவன இவையென்பது பற்றியும், குறைவுற்றும் குணம் கெடாமை பற்றியும், குணத்தை விட்டுக் குற்றத்தைக் கவர்தல் பற்றியும் விவரிக்கிறது. ஊழின் வலிமை பற்றியும், ஒளியின் உயர்வு பற்றியும், கற்பு மேம்பாடு பற்றியும், நற்சார்பு பற்றியும், பிறவிக் குணம் மாறாமை பற்றியும் பேசுகின்றது. வறுமையின் கொடுமையையும், கோபத்தின் கொடுமையையும் விளக்குகிறது. யாக்கை நிலையாமை பற்றியும் தருமம் பற்றியும் எடுத்துரைக்கின்றது.
திருமங்கை இருப்பிடத்தையும், மூதேவி இருப்பிடத்தையும் சுட்டுகிறது. மேலும் மருத்துவக் குறிப்பும், மழைநாள் குறிப்பும் சோதிடக் குறிப்பும் கூட இந்நூலில் இடம் பெறுகின்றன,
குதிரைப்படை, யானைப்படை
திரைகடலோடியும் திரவியம் தேட வேண்டும். நினைவு தடுமாறாமல், ஊக்கம் உடையவராய், மலிவு குறைவது விசாரித்து அளவில்லாமல் பற்பல சரக்கும் அமைவுறக் கொள்வர். கணக்கைச் சரியாக வைத்துக் கொள்வர். செலவு வந்தால் மலையின் அளவும் கொடுப்பர். இவை வணிகர் சிறப்பு என்கிறார் (83).
அந்தணர், அரசர், வணிகர் ஆகியோர் தத்தம் கடமைகளையும் தொழில்களையும் தவறாமல் செய்து பெருமை பெறுவதற்கும், எல்லாத் திசைகளிலும் உள்ள கோயில்களில் வழிபாடு முதலியன தடையில்லாமல் நடைபெற்றுச் சிறப்படைவதற்கும் அடிப்படையாய் இருப்பவர், பெருமை பெற்ற ஏரைப் பிடிக்கும் வேளாளர்களே என்று வேளாளர் புகழ் பேசுகிறது அறப்பளீசுர சதகம் (84).
விடியலில் நீராடி, மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் செபித்து, நாளும் அதிதி பூசைகள் செய்து, பேராசை கொள்ளாமல், ‘வைதீக நன்மார்க்கம் பிழையாதிருக்கும் மறையோர் பெய்யெனப் பெய்யு முகில்’ என்று மறையோர் சிறப்புப் பேசப்படுகிறது (81).
குணமற்ற பேய் முருங்கை தழை தழைத் தென்ன
குட்ட நோய் கொண்டுமென்ன
மதுரமில்லா உவர்க்கடல் நீர் கறுத்தென்ன
மாவெண்மையாகி லென்ன
உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன படராது
உலர்ந்துதான் போகிலென்ன
என்றெல்லாம் கூறி, ஈகைக்குணம் இல்லாதவரிடத்துச் செல்வமிருந்தென்ன பயன்? என்று கேட்கிறார் அம்பலவாணக் கவிராயர்.
உதவாத பேர்க்கு வெகு வாழ்வு வந்தாலென்ன – (22)
இதற்கு மாறாக, குறைவு பட்டாலும் குணம் கெடாத உயர்ந்தோரைப் பற்றிக் குறிப்பிடும் பாடலைப் பாருங்கள்.
தறிபட்ட சந்தனக் கட்டை பழுதாயினுஞ்
சார்மணம் பழுதாகுமோ
தக்க பால் சுவறிடக் காய்ச்சினும் அது கொண்டு
சார மதுரங் குறையுமோ
நெருப்பிடை யுருக்கினும் அடிக்கினும் தங்கத்தின்
நிறை மாற்றுக் குறையுமோ
(சுவறிட = வற்றும்படி, சுண்ட; மதுரம் = இனிமை)
என்றெல்லாம் கூறி, அதுபோல்,
கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்
காசினிதனிற் போகுமோ
(மகிமை = பெருமை; காசினி = உலகம்)
என்று கற்ற பெரியவர்களின் பண்புச் சிறப்பினைப் புகழ்ந்துரைக்கிறது அறப்பளீசுர சதகம் (23).

குடும்பத்தில் எப்படிப் பொருள் சேர்க்க வேண்டும், எப்படிச் செலவழிக்க வேண்டும் என்றும் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்றும் கூறும் ஒரு பாடலைப் பாருங்கள்.
புண்ணிய வசத்தினால் செல்வமது வரவேண்டும்
பொருளை ரட்சிக்க வேண்டும்
புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
போதவும் வளர்க்க வேண்டும்
உண்ண வேண்டும் பின்பு நல்ல வஸ்த்ராபரணம்
உடலில் தரிக்க வேண்டும்
உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்குதவி
ஓங்கு புகழ் தேட வேண்டும்
மண்ணில் வெகு தர்மங்கள் செய்ய வேண்டும் (7)
(ரட்சித்தல் = பாதுகாத்தல்; வஸ்த்ராபரணம் = ஆடைகளும் அணிகளும்; தமர் = தம்மவர், உறவினர்; ஆதுலர் = வறியவர்)
தென்புலத்தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததஞ் செய்கடனை என்றுமிவை பிழையாது
தான் புரிந்திடல் இல்லறம் (95)
(தென்புலத்தோர் = முன்னோர்; துணைவர் = உடன் பிறந்தோர்; தேனு = பசு; பூசுரர் = அந்தணர்; அதிதி = விருந்து; சந்ததம் = எப்போதும்; செய்கடன் = கடமை; பிழையாது = தப்பாமல்)
என்கிறது இச்சதகம். இத்தகைய இல்லறம் நடத்துவோருக்குத் துறவிகளும் ஈடாக மாட்டார்கள் என்றும் வலியுறுத்துகிறது.
‘ஒன்றற்கு ஒன்று அழகு செய்வன’ என்ற பாடலில் வாழ்மனை தனக்கழகு குலமங்கை என்றும், குலமங்கை வாழ்வினுக்கழகு சிறுவர் என்றும், சிறுவர்க்கு அழகு கல்வி என்றும், கல்விக்கழகு மாநிலம் துதி செய்கின்ற குணமென்றும், குணமதற்கு அழகு பேரறிவு என்றும், பேரறிவுக்கு அழகு தூயதவம் மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை, பெரியோர்களைத் தாழ்தல், பணிவிடை புரிதல், சீலம் நேசம், கருணை முதலியவையாம் எனக் குடும்பத்தின் சிறப்புப் பேசப்படுகிறது.
கணவனுக்கினியளாய் ம்ருதுபாஷியாய் மிக்க
கமலை நிகர் ரூபவதியாய்க்
காய்சின மிலாளுமாய் நோய் பழியிலாத தோர்
கால்வழியில் வந்தவளுமாய்
மணமிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பென்ன
வருமினிய மார்க்கவதியாய்
மாமி மாமர்க்கிதம் செய்பவளுமாய் வாசல்
வருவிருந் தோம்புபவளாய்
இணையின் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் வந்தி
யெனப் பெயரிலாத வளுமாய்
(ம்ருதுபாஷி = இன்சொல் உடையவள்; கமலை = திருமகள்; ரூபவதி = அழகி; கால்வழி = பரம்பரை; இதம் = அன்பு; மகிழ்நன் = கணவன்; வந்தி = மலடி)
இருக்க வேண்டுமாம்.
தம் குலம் விளங்கப் பெரியோர்கள் செய்து வரும் தான தருமங்களை அவன் செய்து வரவேண்டும். தானங்கள் செய்தும், தந்தை, தாய், குருமொழி மாறாது வழிபாடு செய்தும் வரவேண்டும். இங்கித (இணக்கமான) குணங்களும், வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் (நல்லொழுக்கம்) இவையெல்லாம் உடையவனே புதல்வன் என்று சொல்லத் தகுந்தவன். இவனை ஈன்றவனே நல்ல புண்ணியம் செய்தவன் என்கிறது அப்பாடல் (3).
நன்மாணாக்கர் இயல்பு பற்றிப் பேசும் பாடல்
வைதாலும் ஓர் கொடுமை செய்தாலுமோ சீறி
மாறாதிகழ்ந்தாலுமோ
மனது சற்றாகிலும் கோணாது நாணாது
மாதா பிதா எனக்குப்
பொய்யாமல் நீயென்று கனிவொடும் பணிவிடை
புரிந்து பொருள் உடல் ஆவியும்
புனித உன் தனதெனத் தத்தம் செய்து இரவு பகல்
போற்றி மலரடியில் வீழ்ந்து
மெய்யாகவே பரவி உபதேசம் அது பெற
விரும்புவோர் சற்சீடராம் (6)
(சற்சீடர் = உண்மையான சீடர்)
என அமைகிறது அப்பாடல்.

அவை (கூட்டம்) மெச்சப் பேசுவோர் பதின்மரில் ஒருவர். அவை புகழப் பாடுவோர் நூற்றில் ஒருவர். மனம் கவரும் வகையில் முறையாகச் சொற்பொழிவு செய்பவர் ஆயிரத்தில் ஒருவர். இவற்றின் அருமை அறிவோர் பதினாயிரத் தொருவர். இதய மகிழ்வால் மற்றவர்க்கு ஈகின்றவர்கள் இலட்சத்திலே ஒருவர். மூன்று காலமும் அறிந்த மெய்த்தூயர் (தூய்மையானவர்) கோடியில் ஒருவராம் என்கிறது ஒரு பாடல் (59).
இதற்கு இது வேண்டும் என்ற பாடலில்
தனக்கு வெகு புத்தியுண்டாகிலும் வேறொருவர்
தம்புத்தி கேட்க வேண்டும்
தானதிக சூரனே யாகினுங் கூடவே
தள சேகரங்கள் வேண்டும்
கனக்கின்ற வித்துவானாகினுந் தன்னினும்
கற்றோரை நத்த வேண்டும்.
காசினியை ஒரு குடையில் ஆண்டாலும் வாசலில்
கருத்துள்ள மந்திரி வேண்டும்
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
சுதி கூட்ட ஒருவன் வேண்டும்
(தளசேகரம் = படை பலம்; கனக்கின்ற = மிகப் பெரிய கல்வியறிவுடைய; நத்து = சென்று சேர்)
என்று, இச்சமுதாயத்தில் மற்றவர் தயவின்றி யாரும் வாழ இயலாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (36).
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதைச் சொல்லும் பாடலில்,
செத்தை பல கூடி யொரு கயிறாயின் அது கொண்டு
திண் கரியையும் கட்டலாம்
மனமொத்த நேயமொடு கூடியொருவர்க் கொருவர்
வாழின் வெகு வெற்றி பெறலாம் (32)
என்று வாழும் வழியைக் காட்டுகிறார்.
செயற்கு அருஞ்செயல் என்ற பாடலில்
நீர்மேல் நடக்கலாம் எட்டியும் தின்னலாம்
நெருப்பை நீர் போற் செய்யலாம்
நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்
நீளரவினைப் பூணலாம்.
பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
பட்சமுடன் உண்ணலாம்
(நீள்அரவு = நீண்ட பாம்பு; பட்சம் =அன்பு, விருப்பம்; எட்டி = கசப்பான ஒரு காய்)
என்பன போன்ற செயற்கரிய செயல்கள் எல்லாம் செய்ய முடியும் ஆனால் ‘புத்தி சற்றும் இல்லாத மூடர் தம் மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது காண்’ (15) என்று அடித்துச் சொல்கிறார் அம்பலவாணக் கவிராயர்.
இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழி போன்றது. புதல்வர், கிளை, மனை, மனைவி இவையெல்லாம் கானல் நீர். உயிரோ வெட்ட வெளிதனில் வைத்த தீபம். எனவே வீண்பொழுது போக்காமல் ஆண்டவனை நேயமொடு வழிபட அவனிடமே அருள் வேண்டி நிற்க வேண்டும் என்கிறார்.
காயமொரு புற்புதம் வாழ்வு மலைசூழ் தரும்
காட்டில் ஆற்றின் பெருக்காம்
கருணைதரு புதல்வர் கிளை மனை மனைவிஇவையெலாம்
கானல் காட்டு ப்ரவாகம்
மேயபுய பல வலிமை யிளமை அழகு இவையெலாம்
வெயில் மஞ்சள், உயிர் தானுமே
வெட்ட வெளிதனில் வைத்த தீபமெனவே கருதி
வீண்பொழுது போக்காமலே
நேயமுடனே தெளிந்து அன்போடுஉன் பாதத்தில்
நினைவு வைத்து இரு போதிலும்
நீர் கொண்டு மலர் கொண்டு பரிவு கொண்டர்ச்சிக்க
நிமலனே யருள் புரிவாய் (19)
(காயம் = உடம்பு; புற்புதம் = நீர்க்குமிழி; பெருக்கம் = வெள்ளம்; கிளை = சுற்றம்; மனை = வீடு; ப்ரவாகம் = வெள்ளம்)
வறுமையின் கொடுமை பற்றிப் பேசும் பாடலைப் பாருங்கள்.
மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன
பெருவித்தை கற்றுமென்ன
மிக்க அதிரூபமொடு சற்குணமிருந் தென்ன
மிக மானியாகி லென்ன
பாலான மொழியுடையனா யென்ன ஆசார
பரனாயிருந்து மென்ன
பார்மீது வீரமொடு ஞான வான்ஆய் என்ன
பாக்கிய மிலாத போது
வாலாயமாய்ப் பெற்ற தாயும் சலித்திடுவள்
வந்த சுற்ற மும்இகழுமே
மரியாதை யில்லாமல் அனைவரும் பேசுவார்
மனைவியும் தூறு சொல்வாள் (37)
(பெருவித்தை = பெரிய கல்வி; அதிரூபம் =அழகானவடிவம்; ஆசார பரன் = ஒழுக்கமுடைவன்; பாக்கியம் = செல்வம்; வாலாயமாய் = வழக்கமாய், இயல்பாகவே; தூறு = குறை)
என்று வறுமையுற்றவனுக்கு ஏற்படும் துன்பங்களைச் சுட்டிக் காட்டுகிறது.
ஆதாரமாய் உயிர்க்குயிராகி எவையுமாம் அமல – (5)
என்றும்
ஐயா, புரம் பொடிபடச் செய்த செம்மலே (6)
என்றும்
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள் செய்
அமல (12)
என்றும்
சுரர் பரவும் அமலனே (15)
(சுரர் = தேவர்)
என்றும்
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே (27)
என்றும்
அரி பிரமர் தேடரிய அமலனே (32)
என்றும்
மதனவேள் தனை வென்ற அண்ணலே (43)
என்றும் சிவபெருமான் சிறப்புகளைக் குறிப்பிட்டுப் பாடுகிறார் அம்பலவாணக் கவிராயர்.
சோமுகா சுரனை வதைத்தமரர் துயர் கெடச்
சுருதி தந்தது மச்சமாம்
சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமையாம்
என்று தொடங்கித் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பிடுகிறது ஒரு பாடல். (98)
பிறைசூடி உமைநேசன் விடை ஊர்தி நடமிடும்
பெரியன் …….
திருமாலின் அவதாரங்கள்
என்று தொடங்கி சிவபெருமான் பெருமைகளை விவரிக்கிறது ஒரு பாடல். (99)
சித்திரை மாதம் பதின்மூன்று தேதிக்கு மேல் பரணியிலும், வைகாசியில் பௌர்ணமி கழிந்த நாலாம் நாளிலும், ஆனியில் தேய்பிறை ஏகாதசியிலும், ஆடியில் ஐந்தாம் நாள் ஆதிவாரத்திலும் (ஞாயிற்றுக்கிழமை), ஆவணி மூல நாளிலும் மழை பொழிந்தால் நன்மையான விளைவுகள் பெறலாம் என்று மழைநாள் குறிப்பும் சொல்லப்படுகிறது. (79)
பிறந்த நாளோடு வருகிற வார பலமும், மனை கோலுவதற்கு உரிய மாதமும், புதிய ஆடை உடுக்கும் நாட்களின் பலனும் போன்ற சோதிடக் குறிப்புகளும் சொல்லப்படுகின்றன. (61, 67, 77) சகுனம் பார்த்தல் அதற்குரிய பலன் பற்றி மூன்று பாடல்கள் விவரிக்கின்றன. (62, 63, 64)
நீதி இலக்கியத்தின் நோக்கமும் பயனும் மக்களை உயர்ந்த உத்தமர்கள் ஆக்குவதுதானே. எனவே, நிறைவாக, உத்தமராவோர் யார் என்று இச்சதகம் சொல்லுகிறது என்பதைப் பார்ப்போமா.
செய்ந்நன்றி மறவாத பேர்களும் ஒருவர் செய்
தீமையை மறந்த பேரும்
திரவியம் தர வரினும் ஒருவர் மனையாட்டி மேற்
சித்தம் வையாத பேரும்
கைகண்டெடுத்த பொருள் கொண்டு போய்ப் பொருளாளர்
கையிற் கொடுத்த பேரும்
காசினியில் ஒருவர் செய் தருமங் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும்
பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கு அழிவு
புகலாத நிலை கொள்பேரும்
புவிமீது தலை போகும் என்னினும் கனவிலும்
பொய்மை உரையாத பேரும் (16)
(பேர் = மனிதன்)
என்றிவர்களெல்லாம் உத்தமர்கள் என்கிறார்.
தம்மை ஆதரித்த மதவேள் என்னும் வள்ளலைப் பற்றி ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
மதவேள் என்னும் வளோண் செல்வர் எப்படிப்பட்ட கருணை வள்ளல் என்பதைக் குறிப்பிடும் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.
பருகாத அமுது ஒருவர் பண்ணாத பூஷணம்
பாரில் மறையாத நிதியம்
பரிதி கண்டு அலராத, நிலவு கண்டு உலராத
பண்புடைய பங்கேருகம்
கருகாத புயல் கலைகள் அருகாத திங்கள் வெங்
கானில் உறையாத சீயம்
கருதரிய இக்குணமனைத்தும் உண்டான பேர்
காசினியில் அருமையாகும்
(பூஷணம் = ஆபரணம்; பரிதி = சூரியன்; பங்கேருகம் = தாமரை; கருகாதபுயல் = கருமை நிறம் பெறாமலே மழை பொழியும் மேகம்; சீயம் = சிங்கம்; காசினி = உலகம்)
என்று குறிப்பிட்டுள்ளார் (97).
அத்தகைய அரியவராம் மதவேள் புகழ், கல்வி, சீர் இதயம், ஈகை, வதனம் (சிரித்தமுகம்), திடமான வீரம் இவை பெற்றுக் கற்பகத் தருவைப் போன்றவர் என்று கூறுவதிலிருந்து அவர் சிறப்பும், ஆசிரியருக்கு அவர் மேல் உள்ள ஈடுபாடும் புலனாகின்றது.

ஆசிரியர் தான் கண்டு உணர்ந்தவற்றையும், உலகியலையும் தெளிந்து, மக்களுக்குப் பயன்படும் வகையில் நல்ல நீதிகளையும் அறவுரைகளையும் இந்நூலில் வழங்கியுள்ளார்.
அரசர், வைசியர், வேளாளர், மந்திரி, சேனாதிபதிகள் ஆகியோரின் சிறப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன. இல்லறச் சிறப்பு. ஒற்றுமையின் பெருமை, பிறவிக் குணம் மாறாமை, ஊழின் வலிமை பற்றி விவரிக்கப்படுகின்றன.
சோதிடக் குறிப்புகளும், மருத்துவக் குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. நிலையாமை, வறுமையின் கொடுமை, கோபத்தின் கொடுமை முதலிய வாழ்வியல் உண்மைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
ஒவ்வொரு பாடலிலும் ‘மதவேள்’ என்ற வேளாண் செல்வரைக் குறிப்பிடுகிறார். அறப்பளீசுரரின் (சிவபெருமான்) பெருமைகள் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து ஆசிரியருடைய சைவசமயப் பற்று புலனாகின்றது.
திருமாலின் பத்து அவதாரங்கள், புராணங்களின் வகைகள், 32 வகையான அறங்கள் என்று கூறும் நிலையில் இச்சதகம் கலைக்களஞ்சியத்தின் பயனைத் தருகிறது எனலாம். நல்ல சொற்கட்டு, சந்தம், கற்பனை, கவிதை நயம் போன்றவற்றைச் சதக நூல்களில் நாம் அதிகம் காண இயலாது. எனினும் வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய நீதிகளை எடுத்துரைக்கும் விதத்தில் சிற்றிலக்கியங்களில் அறப்பளீசுர சதகம் சிறந்து விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
பாடம் - 5
இலக்கியத்தில் தோன்றிய இந்தப் புதிய வகையினை ‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சுட்டுகிறது. சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் மிகுதியான கற்பனையைக் கொண்டு அமைந்தவை. சிற்றிலக்கியங்கள் தமிழகத்தின் வரலாற்றை ஓரளவுக்கு நமக்குத் தெரிவிக்கின்றன. அக்காலச் சமூக நிலை பற்றியும் அவற்றிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது; அக்காலக் கவிதைப் போக்கினையும் நாம் அறிந்து கொள்ளலாம். சிற்றிலக்கியங்களில் ஒரு வகையாகிய அந்தாதி இலக்கியம் பற்றி இனிக் காண்போம்.
தொல்காப்பியர் குறிப்பிடும் இயைபு என்னும் வகையில் அந்தாதி அடங்கும். யாப்பருங்கலக்காரிகை ‘அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி’ எனக் குறிப்பிடும். இதற்குரிய யாப்பு வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறையாகும்.
அந்தாதி தமிழ் இலக்கியத்திற்கு வடமொழியின் தாக்கத்தால் வந்தது என்பர். இது சரியன்று. அந்தாதி தனி இலக்கியமாக இல்லாவிடினும் புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலில் முதல் ஐந்து வரிகளில் அந்தாதி அமைப்பினைக் காண முடிகிறது.
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் – (புறம் – 2)
முதல் வரியின் ஈற்றுச் சொல் ‘நிலன்’ அடுத்த வரியின் முதற் சொல்லாக வருகிறதல்லவா. இதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியே அந்தாதி இலக்கியம் தோன்றியது. தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
குறிப்பிடத்தக்க அந்தாதிகளை இனிக் காண்போம்.
(1) முதல் திருவந்தாதி -பொய்கை ஆழ்வார்
(2) இரண்டாம் திருவந்தாதி-பூதத்தாழ்வார்
(3) மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்
(4) சடகோபரந்தாதி -கம்பர்
(5) திருவரங்கத்தந்தாதி -பிள்ளைப் பெருமாளையங்கார்
(6) கந்தரந்தாதி -அருணகிரிநாதர்
(7) திருவருணை அந்தாதி-எல்லப்ப நாவலர்
(8) அபிராமி அந்தாதி -அபிராமி பட்டர்
(9) திருக்குறள் அந்தாதி -இராசைக் கவிஞர்
11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்
(1) அற்புதத் திருவந்தாதி -காரைக்காலம்மையார்
(2) சிவபெருமான் திருவந்தாதி-கபிலதேவ நாயனார்,
(3) சிவபெருமான் திருவந்தாதி -பரணதேவ நாயனார்
(4) கயிலைபாதி காளத்தி
பாதி அந்தாதி – நக்கீர தேவ நாயனார்
(5) திருவேகம்பமுடையார்
திருஅந்தாதி – பட்டினத்தடிகள்
(6) திருத்தொண்டர் திருஅந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
(7) ஆளுடைய பிள்ளையார்
திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
(8) பொன்வண்ணத்தந்தாதி – சேரமான் பெருமாள் நாயனார்
19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றின. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர்.
இவ்வந்தாதியில் சைவ நெறியாகிய சிவபக்தியும், முழுமையாகச் சரணடையும் நிலையும் சொல்லப்படுகின்றன. சிவபெருமான் திருஉருவச் சிறப்பும், திருவருட் சிறப்பும், இறைமைக் குணமும் திருவருள் நெறியினர்க்கும், பக்தியாளர்க்கும் பெருவிருந்து அளிக்கும் சிறப்புடையன எனலாம்.
பின்னர் அவர்தம் உறவினர் அம்மையாரை அழைத்துக் கொண்டு பாண்டிநாடு சென்ற போது, அவன் மனைவி மகளுடன் சேர்ந்து அம்மையார் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அவன் நிலையுணர்ந்த அம்மையார் ஊனுடலை உதறி என்புடலைத் தாங்கினார். இதனால் அவரைக் காரைக்கால் பேயார் என்றும் குறிப்பிடுவார்கள். அவ்வுடல் கொண்டு தலையால் நடந்து கயிலைமலை சென்றபோது அங்கே அவர் இறைவனால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டார். பின்னர் இறைவன் கட்டளைப்படி திருவாலங்காடு சென்று ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடிக் கீழிருந்து பெறுதற்கரிய பேறு பெற்றார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இன்றும் காரைக்காலில் அம்மையாரைப் போற்றும் மாங்கனித் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

சைவநெறிக்கே அடிப்படையான அன்பு நெறி முதற் பாடலிலேயே வலியுறுத்தப்படுகிறது. எம் உள்ளத்தில் என்றும் அறாது அன்பு என்கிறார் காரைக்கால் அம்மையார். சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இவ்வந்தாதி வைக்கப்பட்டுப் போற்றப்படுகிறது.
இறைவன் அம்மையாரை நோக்கி நீ நம்பால் இங்கு வேண்டுவது என் என்று வினவக் காரைக்கால் அம்மையார் என்ன வேண்டுகிறார் பாருங்கள்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க என்றார்.
- (பெரியபுராணம், காரைக்கால் அம்மையார் புராணம்-60)
சைவ ஆலயங்களில் உள்ள 63 நாயன்மார்களில் 62 பேர் நின்ற கோலத்தில் இருக்க காரைக்கால் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிறப்புப் பெற்றவர்.
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும்நெறி பணியா ரேனும் – சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மனார்க்கு
அன்பறா தென்நெஞ் சவர்க்கு – (2)
அவர்க்கே ஏழு பிறப்பும் ஆளாவோம் என்று தொடர்ந்து பாடுகிறார். இத்தகைய அன்பு ஒன்று தான் சேமநிதி வைப்பாகும் என்று சைவ நெறியின் அடிப்படையைக் குறிப்பிடுகின்றார்.
எனக்கினிய எம்மானை ஈசனை யான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் – (10)
இத்தகைய அன்புள்ளம் படைத்தோருக்கு அவன் எளியனாக இருக்கின்றான் என்பதனைப் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்.
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் – பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க்கு எளிது – (45)
ஒன்றே நினைத்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தின் உள் அடைத்தேன்-ஒன்றே காண்
கங்கையான் திங்கட் கதிர் முடியான் பொங்கொளிசேர்
அங்கையற்கு ஆளாம் அது. – (11)
என்கிறார். சிவபெருமானைச் சரணடைந்தால் என்னென்ன கிடைக்கும் என்பதைப் பட்டியலிடுகிறார் அம்மையார்.
காலனையும் வென்றோம் கடுநரகங் கை கழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் – கோல
அரணார் அவிந்தழிய வெந்தீ அம்பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து – (81)
வினைப்பயனை வேரோடு அறுக்கவும், எமனை வெல்லவும் கடுநரகத்திலிருந்து விடுபடவும் ஒரே வழி அவனைச் சரணடைதலே என்பதை எவ்வளவு உறுதியுடன் வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதாம். அதனால்தான் பெருமை தரும் பெரிய புராணம், திருத்தொண்டர் புராணம் என வழங்கப்படுகிறது. உழவாரப் படை கொண்டு ஆலயங்களைத் தூய்மை செய்த அடியவர் திருநாவுக்கரசர் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்கிறார். அதுபோல் இறைவனுக்குச் செய்யும் தொண்டே சிறந்தது என்ற கருத்துடைய அம்மையார்,
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அது வேண்டேன் – (72)
என்கிறார். மேலும் இக்கருத்தை ஒட்டியே ‘உள்ளமே! இறைவன் அடிகளையே நீ எப்போதும் விரும்பி ஓது’ என்கிறார்.
வெள்ள நீரேற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
உள்ளமே எப்போதும் ஓது – (73)
இனி அற்புதத் திருவந்தாதி கூறும் சிவபெருமான் சிறப்புகளைக் காண்போம்.

எவ்வுலகும் அளிக்கும் இயல்புடையன் – (78)
என்று காரைக்கால் அம்மையார் பாடுகிறார்.
சிவபெருமான் வேண்டியார்க்கு வேண்டிய வடிவில் வருபவன் என்பதை,
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம் – (33)
என்ற பாடலிலும், அட்ட மூர்த்தியானவன் என்பதை,
அவனே இருசுடர் தீ ஆகாசமாவான்
அவனே புவிபுனல் காற்றாவான் – அவனே
இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து – (21)
என்ற பாடலிலும் விளக்குகிறார் அம்மையார். (ஞாயிறு, திங்கள், ஐம்பூதங்கள், உயிர் ஆகிய எட்டும் அவனே, இதனை அட்டமூர்த்தி என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். இயமானன்= உயிர்)
சிவபெருமான் எவ்வுருவில் இருக்கிறான் என்று சொல்ல இயலாது. எல்லா உருவிலும் இருக்கிறான். அவன் ஒருவராலும் அறியப்படாதவன் என்பதே அவன் இலக்கணமாம். அவ்விலக்கணம் அம்மையாரால் பின்வரும் பாடலில்
பேசப்படுகிறது.
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது – (61)
எளிமையானவன். ஆனாலும் எங்கும் வியாபித்திருப்பவன். எல்லாமே அவன்தான் என்பதை,
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன் – (20)
என்ற பாடல் உணர்த்தும்.
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் – (5)
என்று அவன் சிறப்புப் பேசப்படுகிறது.
இறைசக்தி மிகப் பெரியது. இறைவன் நடனமாடும் போது இறைவன் அடி, முடி, கை முதலியன ஏழு உலகங்களில் மட்டும் அடங்கிக் கிடப்பன அல்ல. இவை அவ்வுலகங்களைக் கடந்தும் செல்வன. இறைவன் அடியும், முடியும், மேலும், கீழும் உழன்று தாக்கி, அரங்கு ஆற்றாது என்று கூறுவதன் வாயிலாக இறை சக்தியின் ஆற்றல் நமக்கு உணர்த்தப்படுகிறது.
அந்தப் பாடல் இதோ.
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் – கடகம்
மறிந்தாடு கை பேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு – (77)
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலி திரியும் எத்திறமும் – பொங்கிரவில்
ஈம வனத்தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று – (25)
என்று பாடுகிறார்.
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – என்று பாடுகிறார் அப்பர் பெருமான் (திருநாவுக்கரசர்).
தம்பெருமை தானறியாத் தன்மையன் காண் சாழலோ – (திருவாசகம்)
என்கிறார் மாணிக்கவாசகர்.
இறைவனுடைய இந்த இயல்பினை அற்புதத் திருவந்தாதி எடுத்துரைக்கிறது.
என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
தன்னை யறியாத தன்மையனும் – பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
அருளாக வைத்த அவன் – (92)
எமன்
மாலயனும் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால் – (80)
என்ற பாடல் வரிகளில் அம்மையார் குறிப்பிடுகின்றார்.
இனி, சிவபெருமானின் திருவருள் திறம் மீளாப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவுவது என்பதைக் காரைக்கால் அம்மையார் எப்படிப் பாடுகிறார் பாருங்கள்.
இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே – இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண் – (16)

இயற்கையை உடலாகக் கொண்டவன் சிவன். ஒரு நாளின் பொழுதுகளையே உவமையாக்கி, சிவபெருமானை வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு – மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கிருளே போலும் மிடறு – (65)
வேளைக்கு வேளை இயற்கை அடையும் நிறங்கள் சிவபெருமான் திருமேனியில் திகழ்தலைச் சுட்டிக் காட்டுகிறார்.
மின் போலும் செஞ்சடையான் – (83)
என்றும்,
பொன் வரையே போல்வான் – (8)
என்றும்,
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து – (41)
என்றும் ஒளி வீசும் மின்னலையும் பொன்னையும் சிவனுக்கு உவமித்து மகிழ்வதைக் காணலாம்.
சிவன் பிரம கபாலத்திலே பிச்சையெடுத்து உண்ணும் நிலை புராணங்களிலே பேசப்படுகின்றது. அதை எப்படிக் கற்பனை செய்கிறார் பாருங்கள்.
கழுத்திலே அரவம் ஆட நீ பிச்சையெடுக்கச் செல்லும்போது அதைப் பார்த்துப் பயப்படும் பெண்கள் உனக்குப் பிச்சையிட மாட்டார்கள். எனவே நீ செல்லும் போது, அச்சம் தரும் இந்தப் பாம்பை விட்டுவிட்டுச் செல் என்கிறார்.
……… நின்னுடைய
தீய அரவொழியச் செல் கண்டாய் -தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விட அரவம் மலோட மிக்கு – (57)
சிவபெருமான் பன்றியின் கொம்பை மார்பிலும் பிறைச் சந்திரனைத் தலையிலும் அணிந்திருக்கிறான். பன்றியின் கொம்பு, பிறைச்சந்திரன் ஆகிய இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருக்கின்றன. இரண்டையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கும் அரவு பிறைமதி எது என்று தெரியாததால்
அதன் மீது பாய்ந்து பற்றாமல் இருக்கிறது. அந்த அளவுக்கு அரவு மதியற்றது என்ற கருத்தில் காரைக்கால் அம்மையார் பாடும் பாடலைப் பாருங்கள்.
திரு மார்பில் ஏனச் செரு மருப்பைப்பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் – ஒருநாள்
இது மதியென்று ஒன்றாக இன்றளவும் தேறாது
அது மதியொன்றில்லா அரா. – (40)
திங்கள் ஒவ்வொரு நாளும் தேய்கிறது. பின் ஒவ்வொரு நாளும் வளர்கிறது. சிவபெருமான் கழுத்தில் அணிந்துள்ள பாம்பு திங்களுக்கு எப்போதுமே பகை அல்லவா? இதைத் தொடர்புபடுத்தி நயம்பட ஒரு கற்பனையை அமைக்கிறார் பாருங்கள்.
திங்கள் பாம்பைப் பார்த்து அஞ்சும் இயல்புடையது அல்லவா? அதனால் பாம்பு தன்னை அழித்து விடுமோ என்ற அச்சத்தினால் அது நாளும் மெலிந்து தேய்கிறது. தளர்ந்து போன தன் மீது பாயும் போது அதற்கு அஞ்சி நாளும் வளர்கிறதோ என்ற கற்பனையில் வரும் பாடல் இது.
மறுவுடைய கண்டத்தீர் வார்சடை மேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆ ஆ – உறுவான்
தளர மீதோடுமேல் தானதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி – (36)
எலும்பு மாலை அணிந்தவன் சிவபெருமான். எலும்பு மாலை அணிந்தவனாயிற்றே என்று இகழாமல் அவனை வழிபட்டால் எலும்பு யாக்கை கொண்டு மீண்டும் பிறவார். பிறவிப் பிணி தீர்வார் என்கிறார்.
என்பாக்கையால் இகழாது ஏத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கையாய்ப் பிறவார் ஈண்டு – (37)

இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்காலம்மையார். ஒப்பற்ற தலைவனாம் சிவபெருமானின் சிறப்பினைப் பாடும் அம்மையின் அன்புள்ளமும் விருப்பமும் வேண்டுகோளும் இந்நூலில் காணலாம்.
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் – விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின் – (85)
சிவபெருமான் எளிமையே வடிவானவன். இயற்கையை உடலாகக் கொண்டவன். எங்கும் வியாபித்திருப்பவன். அவனுடைய திருவருள் திறம் மக்களின் பிறவிப் பிணியைத் தீர்க்கக் கூடியது. அவன் திருவடியினைப் போற்றாமல் நாம் காலத்தை வீணே கழிக்கலாகாது. அவனைப் போற்றுவதும் அவன் திருவடியை வணங்குவதும் நாம் பெற்ற இப்பிறவிக்குப் பயனாகும்.
அந்தாதித் தொடையில் அமைந்த இவ்வற்புதத் திருவந்தாதியில் காரைக்காலம்மையாரின் உணர்வுகளையும் அதன் அடியில் உள்ள உறுதிப் பாட்டினையும் உணர முடிகிறது. கற்பனை நயத்தைச் சுவைக்க முடிகிறது. கவிதைச் சிறப்பினை அறிய முடிகிறது. சிற்றிலக்கியங்களில் அற்புதத் திருவந்தாதி அற்புதமான நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பாடம் - 6
சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் மிகுதியான கற்பனையைக் கொண்டு அமைந்தவை என்றாலும் ஓரளவு தமிழகத்தின் வரலாற்றை அறியப் பயன்படுகின்றன. பள்ளு போன்ற இலக்கியங்கள் அக்காலச் சமூக நிலையினை நன்கு எடுத்துரைக்கின்றன. பொதுவாக இறைவன், அரசன், வள்ளல், தலைவன் ஆகியோரின் சிறப்பினை எடுத்துரைத்தலே சிற்றிலக்கியங்களின் பணி எனலாம். தமிழில் சிறப்பாக உள்ள சிற்றிலக்கியங்கள் பரணி, உலா, பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, கோவை, அந்தாதி முதலியன. இனி, இவற்றுள் பிள்ளைத் தமிழ் இலக்கியம் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
கி.பி.17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் ஆகிய இரண்டும் பக்தி இலக்கிய வரலாற்றில் பெரும் புகழ் படைத்தவை. கி.பி.18ஆம் நூற்றாண்டில் பகழிக் கூத்தர் எழுதிய திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் சிறப்புடையது. சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய சுவைகள் ஒரு சேர அமையப் பெற்ற நூலாக இந்நூல் உள்ளது.
19ஆம் நூற்றாண்டில் அழகிய சொக்கநாதர் பாடிய காந்திமதியம்மைபிள்ளைத் தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஆகியவை சிறப்பானவை. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்கள் பத்துப்பிள்ளைத் தமிழ் நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.
சிவஞான சுவாமிகள் எழுதிய அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், அருணாசலக் கவிராயர் எழுதிய அனுமார் பிள்ளைத் தமிழ் ஆகியவற்றோடு செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ், சுந்தரர் பிள்ளைத் தமிழ், மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ் போன்ற பிள்ளைத் தமிழ் நூல்களும் பிற்காலத்தில் தோன்றியுள்ளன.
தற்காலத்தில் பாவேந்தர் பிள்ளைத் தமிழ், மறைமலை அடிகள் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், பெரியார் பிள்ளைத் தமிழ், கலைஞர் பிள்ளைத் தமிழ், எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ் போன்றவை தோன்றியுள்ளன. சிற்றிலக்கிய வகைகளில் மிகுதியான இலக்கியங்கள் பிள்ளைத் தமிழிலேயே தோன்றியுள்ளன.
காப்புப் பருவம்
பாட்டுடைத் தலைவனைஅல்லது தலைவியைக் காத்தருளுமாறு இறைவனைவேண்டிப்பாடுவது. இது குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.
தாலப் பருவம்
தால் – நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது. குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.
செங்கீரைப் பருவம்
ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. இதுகுழந்தையின் 7ஆம் மாத்திற்குரியது.
சப்பாணி
குழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.
முத்தம்
இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.
வருகை அல்லது வாரானை
குழந்தையின் 13ஆம் மாதத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.
அம்புலி
15ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில்நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது. இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.
சிற்றில்
17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)
சிறுபறை
19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.
சிறுதேர்
21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும்.
நீராடல்
குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.
அம்மானை – கழங்கு
கழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.
ஊசல்
ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.
தமிழ் இலக்கிய உலகம் காணாத பல கருத்துகளுக்குக் கவிதை வடிவம் அளித்த புரட்சிக் கவிஞரைச் சிறு குழந்தையாகக் கருதி, பாவேந்தர் பிள்ளைத் தமிழைப் படைத்துள்ளார்; ஆசிரியர்.இந்நூலில் புலமைப் பித்தனின் சிறந்த சொல்லாட்சியையும், கற்பனை வளத்தையும், சந்தச் சிறப்பையும் காணமுடிகிறது. பழைய பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைப் போன்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. சிறப்பாக, குமரகுருபர அடிகளின் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை ஒத்தும், உறழ்ந்தும் பாடியிருப்பதாக, பாவேந்தர் பிள்ளைத் தமிழுக்கு உரையெழுதியந.இராமநாதன் பாராட்டுகிறார். (பாவேந்தர் பிள்ளைத் தமிழ் பக்.25)
அளி முரல மலரவிழ வருமுதய கதிரவனை
அரசாள வைத்த அண்ணன் – (பாடல் – 9)
என்று பிள்ளைத் தமிழில் திராவிட இயக்கத்தார் உதய சூரியனைச் சின்னமாகக் கொண்டு தமிழக அரசை ஆளத் தொடங்கிய வரலாறு சுட்டப்படுவதைக் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டின் அரசியல், சமுதாய இயல் ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய பெரியாரையும், பெரியாரின்சிந்தனைகளைச் செயல்படுத்துபவராக விளங்கிய பேரறிஞர் அண்ணாவையும் பாடிமகிழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வாழ்வையும், சமுதாயப் பணிகளையும் பாடு பொருளாகக் கொண்டது இந்நூல். ஒப்புயர்வற்ற இலக்கியமாகத் திகழும் இப்பிள்ளைத் தமிழ்,பாவலர் புலமைப்பித்தன் பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டின் மொத்த வடிவம் எனலாம்.
வரலாறும் வாழ்க்கையும்
தமிழை உயிராகக் கருதிய பாவேந்தர் பாரதிதாசன் 29.04.1891இல் பாண்டிச்சேரியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பெற்றோர் கனகசபை – இலக்குமி. இவர் இளமையிலேயே, கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். அப்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதியாரோடு தொடர்பு ஏற்பட்டது; அவருடைய அன்பாலும் கவிதையாலும் ஈர்க்கப்பட்ட இவர், தம்மைப் பாரதிதாசன் எனக் குறிப்பிடத் தொடங்கினார். தொடக்க காலத்தில் காங்கிரஸ் தொண்டராகஇருந்தவர், பின்னர், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் புரட்சிகரமான சிந்தனைகளைப் பாடல்களாக்கி, தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர் எனப் பாராட்டப் பெற்றார். 1946இல் புரட்சிக் கவிஞர் என்ற விருது பெற்றார். 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் இயற்கை எய்தினார். 1968இல் பாவேந்தரின் உருவச் சிலை சென்னைமெரீனா& கடற்கரையில்திறந்து வைக்கப்பட்டது. பாவேந்தர் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. பாவேந்தர் பெயரில் அமைந்த பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
சமுதாயப் பங்களிப்பு
தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து கவிதையில்மாற்றம் செய்தமையால் புரட்சிக்கவிஞரானார். சாதிக்கொடுமையை வேருடன் களைந்தெறிய வேண்டும், பெண் இனம் முன்னேற வேண்டும் என்பதே இவருடைய கொள்கை. பொன்னி, குயில் இதழ்களின் மூலம் புரட்சிகரமான தன்னுடைய கவிதைகளை வெளியிட்டார்.
பெண் கல்வியைக் குடும்ப விளக்கிலும், புதிய உலகத்தைப் பாண்டியன் பரிசிலும், இயற்கை அழகை அழகின் சிரிப்பிலும் நயம்பட மொழிகிறார். புரட்சிக்கவியில் காதலும் வீரமும் வெளிப்படக் காணலாம். மணிமேகலை வெண்பாவில் மணிமேகலையைச் சமூகச் சீர்திருத்த வாதியாகக் காட்டுகிறார். எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு முதலிய காப்பியங்களையும், சௌமியன், சேர தாண்டவம், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார் ஆகியநாடகங்களையும் இயற்றியுள்ளார். இவரது பிசிராந்தையார் நாடகம் 1970இல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

காப்புப் பருவம் தவிர ஏனைய பருவங்களைப் பாடும்போது குழந்தைகளின் அந்தந்தப் பருவங்களின் இயல்புகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும் என்பதற்கேற்ப, பாவேந்தர் பாரதிதாசனின் கருத்துகளும் கொள்கைகளும், சாதனைகளும் விளங்க இந்நூல் அமைந்துள்ளது.
‘பாவேந்தர் புகழைப் பாடும் தகவிலாச் சிறிய கவி’ என்று அவையடக்கமாகக் கூறிய போதிலும் பாவேந்தரின் புகழை எஞ்சாது இயம்புகிறது இந்நூல். தமிழ் மன்னன், தமிழ் விளக்கு, புரட்சிக் குயில், புதுவை முரசு, விடுதலைக் கவி என்றெல்லாம் பெயர் சூட்டிப் பெருமை கொள்கிறார் புலமைப்பித்தன்.
பாவேந்தர் பிள்ளைத் தமிழில் அமைந்துள்ள ஈற்றடிகளில் சொற்சுவை, பொருட்சுவை, சந்தச் சுவை ஆகியன சிறப்பாக அமைந்துள்ளன.
வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
- (முதல் தொகுதி. பக்-173)
என்றுவினா எழுப்பிக் குடியாட்சிக்குக் குரல் கொடுத்த பாவேந்தரை,
. . . . . . . . . . உறங்குவோரும்
புலியாகி வருகவென்று போர்க்குரல் எழுப்பியொரு
புரட்சிப் புயல் விளைத்தாய்
- (பா.34)
என்று சப்பாணிப் பருவத்திலே பாடுகிறார்.
சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் புகழையும் (பாடல் எண்கள் – 30, 38, 50, 72) சேர மன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் ஈகை வளத்தையும் அவன் இமயத்தில் வில் பொறித்த செய்தியையும், சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப்போரையும் (பாடல் எண்கள் – 33, 97, 3, 8, 32, 63) பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.
கரிகாலன் காவிரிக் கரை அமைத்த செய்தியையும் (25) பாண்டியன் இமயத்தில் கயல் பொறித்ததையும் (44), பாரி, பேகன் ஆகிய வள்ளல்களின் கொடைத்திறத்தையும் (84, 4) இந்நூல் குறிப்பிடக் காணலாம். பிற்கால நிகழ்வுகளாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், மொழிக்காகத் தீக்குளித்த மாணவர்களின் உயிர்த் தியாகம் (100) ஆகியன குறிப்பிடப்படுகின்றன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் தொடரும் நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வரலாற்றுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
கோலஞ்சிறந்த தமிழணங்கின்
குடைக்கீழ் இந்த உலகனைத்தும்
குறுகிக்கிடப்பப் புது யுகத்தைக்
கொணரத் தகுந்த அறிவியற்கும்
சாலச் சிறந்தாள் இவளென்று
சரிதம் படைக்கும் இது நாள் – (78)
என்று தமிழக அரசு தமிழ் வளர்ச்சி கருதித் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைப்பது முதலான எல்லா வகையான முயற்சிகளையும் சுட்டிக் காட்டும் இலக்கியமாகத் திகழக் காணலாம்.
பெரியாரைப் போற்றுதல்
செங்கீரைப் பருவத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கிய செய்தியை நினைவுபடுத்திப் பாடுகின்றார், புலவர்.
ஈரோட்டு வெண்தாடி வேந்தனெனும் எந்தையவர்
இலட்சியப் பாசறைக் கோர்
இனிய கவி முரசென்று மனமகிழ நாடெல்லாம்
ஏத்தெடுத்துத் துதித்தும்
பாராட்டு மொரு நாட்பசும் பொற்செழுங்கிழி
பரிந்தளித்திட்டவாறு
என்று வரும் பாடலில் தமிழகத்து அரசியல், சமுதாய இயல், கலை இலக்கிய இயல் ஆகிய துறைகளில் ஒரு புதிய திருப்பத்தை, தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கம் ஏற்படுத்தியதையும் புலமைப்பித்தன் சுட்டிக்காட்டுகிறார்.
பெரியார் பிறந்து வளர்ந்து புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்ததால் அவர் பிறந்த ஊராகிய ஈரோடும் அவர் முகத்தில் தோன்றி அழகு செய்ததால் வெண்தாடியும் புலவர் பாடும் புகழுடையதாக ஆயின என்பதை, பாரதிதாசனும் பாடக் காணலாம்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும். அவர்தாம் பெரியார்.
இராக்காலத்தில் உடுக்கணங்கள் என்று சொல்லப்படுகின்ற நட்சத்திரங்களாகிய அற்ப இனம் புடை சூழ வளரும் குறைத் தன்மையைப் பெற்றிருப்பவன் நீ. எங்கள் கவிஞராகிய குழந்தையோ தந்தை பெரியாரோடு ஒன்றுபட்டு வாழும் ஏற்றத்தைத் தனக்குரித்தாகக் கொண்டுள்ளது என்று அம்புலிப்பருவத்தில் பாரதிதாசனுக்கும் அம்புலிக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்லி அம்புலியை விளையாட வருமாறு அழைக்கிறார் புலமைப்பித்தன்.
அண்ணாவைப் போற்றுதல்
பாவலர் புலமைப்பித்தன் புதுமை உலகம் காணத் துடிக்கும் தம் உள்ளத் துடிப்புக்கு மூலமாக விளங்கிய பேரறிஞர் அண்ணாவை முதற்கண் பாடுகிறார். பேரறிஞர் அண்ணா அவர்களின் மூன்று சிறந்த இயல்புகளை முதற்பாடலிலேயே சுட்டிக் காட்டுகிறார். அவருடைய நா நலம், அவர் பொது வாழ்வில் கடைப்பிடித்த நடைமுறை, தமிழ்நாட்டில் அவர் தோன்றிய சிறப்பு ஆகியவற்றைப் பாடுகிறார்.
கேட்டாரைத் தன் வசப்படுத்தும்படியாகத் தமிழைக் கையாண்டவர் அறிஞர் அண்ணாவைப் போல் யாருமில்லை. தமிழ் தன்னை உரையிலும் எழுத்திலும் உலகம் விரும்பக் கருத்தும் கனிவும் கலந்துறவாடக் கையாளும் உரவோன் ஒருவன் தோன்ற வேண்டுமென நெடுநாள் செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவர் அறிஞர் அண்ணா என்ற கருத்துப்பட,
தமிழ் உடற்றிய பெருந்தவத்தால்
தோன்றிய உரவோன் – (பா – 1)
என்று பாடுகின்றார்.
பார் முழுவதும் வெல்லும் சொல்லேருழவன் அண்ணா
-(13)
என்று அண்ணாவைப் பாராட்டுகின்றார்.
சப்பாணிப் பருவத்தில், பாரதிதாசனின் கவிதைச் சிறப்பினையும் அண்ணாவின் திறமையையும் இணைத்துப் போற்றுகிறார். “தமிழகத்துக்கென அமைந்து மறைந்த பழைய புகழை உன் கவிதை கொண்டு புதுப்பித்துத் தமிழகத்துக்கும் தமிழுக்கும் வெற்றியளித்த பேரறிஞர் அண்ணாவின் புகழைப் பாடுவேன்” என்கிறார். அண்ணாவின் தமிழ்ப்பணியினை
இளந்தமிழ்க் கோர் கொற்றமளித்தவன்
பெற்றிமை பாடுவேன் கொட்டுக சப்பாணி – (37)
(பெற்றிமை = தன்மை)
என்று சிறப்பித்துப் பாடுகிறார்.

சிந்தாமணித் தமிழ் நந்தா விளக்கு நீ
சிறுபறை முழக்கியருளே – (82)
என்று சிறுபறைப் பருவத்திலே பாடுகின்றார்.
தரணிமிசை யாருக்கும் தன் தலை வணங்காத தமிழ் வேந்து
- (66)
என்றும்,
செந்தமிழ்க்குக் காவலனும் ஓர் அரிய பாவலனும் ஆனவன்
- (9)
என்றும்,
தமிழுக்கு அமுதென்று பேரென்று கொட்டுமொரு
சப்பாணி கொட்டியருளே
என்றும் தமிழோடிணைத்துப் பாடும் அழகைப் பல இடங்களில் காணலாம்.
சலியாத தமிழ்த் தொண்டினாற் சாதலற்றவன்
சப்பாணி கொட்டி யருளே – (34)
என்று பாடுவது புரட்சிக் கவிஞரின்,
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ”
என்ற கருத்தை அடியொற்றி எழுந்ததாகும்.
கோட்டை நாற்காலி இன்றுண்டு – நாளை
கொண்டு போய் விடுவான் திராவிடக் காளை
கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை
- (பாரதிதாசன், இரண்டாம் தொகுதி, பக்-96)
என்பது போன்ற பாடல்களை, திராவிட இயக்க அரசுகள் அமைவதற்கு முன்னரே பாடிய தொலைநோக்குப் பார்வையினர் பாரதிதாசன். இதனை,
கொத்தடிமையாய்ப் பிறரை நத்துமிருள் நாளிலே
குடும்ப விளக்கேற்றி வைத்துச்
சடம்பட்ட போக்குணர்வு சமைக்கப் பிறந்தவன்
சப்பாணி கொட்டியருளே. – (35)
(சடம்பட்ட = அறிவுகெட்ட)
என்று பிள்ளைத் தமிழ் பாடுகிறது.
இப்பாடலில் பாரதிதாசன் பாடிய குடும்ப விளக்கு என்னும் படைப்பின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகிறது. குடும்ப விளக்கு என்று கவிஞர் பாடியதைப் பெயரளவில் எடுத்துக் கொண்டு அது தமிழகத்தின் தன்னாட்சி பற்றியதாகவே அமைவதாகக் கொள்ள வேண்டும். தமிழர்கள் கொத்தடிமைகளாய்ப் பிறரை அண்டி வாழும் இருள் சூழ்ந்த நாளில் குடும்ப விளக்கேற்றி வைத்தல் என்ற குறிப்புப் பொருளில் சுதந்திரமாய் வாழ்தலைக் குறிக்கின்ற நயத்தைக் காணலாம். உறங்கிக் கிடக்கின்ற சுதந்திர உணர்வை எழுப்புவதே குடும்ப விளக்கின் குறிக்கோள் என்பதை நயம்பட எடுத்துரைக்கின்றார், பிள்ளைத்தமிழ் பாடிய பாவலர்.
தாலப்பருவத்தின் முதற்பாட்டு மூன்று விளிகளைக் கொண்டு விளங்குகிறது. ‘கவிதைக் கொற்றவனே’ என்றும் ‘மண்ணில் விளையும் புதுமைக்கோர் மழையே’என்றும், ‘மாலைப் பொழுதின் இளந்தென்றல் மணமே’என்றும் விளித்துப் பாடுகின்றார்.
காலங்களில் முழுமையான பகலும், முழுமையான இரவும் உயிர்களுக்கு முழுமையான இன்பத்தைத் தர இயலாதவை. இந்த இரண்டும் சேரும் மாலைப் பொழுதில் இரவுண்டு, இருளில்லை, ஒளியுண்டு, வெப்பமில்லை, மெல்லென வீசும் தென்றல் சேரும். மாலையில் மலரும் முல்லை முதலான மலர்களின் மணத்தை வாரிக் கொண்டுவரும் தென்றல் இயற்கைக் கூறுகள் இணைந்து இன்பம் செய்வதைப் போல் கவிஞரின் பாக்கள் கருத்தாலும், கருத்துகளை வழங்கும் பாங்காலும் இன்பம் பயக்கின்றன. ஆகவே மாலைப் பொழுதின் இளந்தென்றல் மணமே தாலே! தாலேலோ என்று பாடுகிறார்.
மன்னர்கள் புலவர்களுக்குப் பரிசில் தருவது என்பது நெடுங்காலமாகத் தமிழகத்தில் நடந்துவரும் நடைமுறையாகும். ஆனால் புரட்சிக் கவிஞர் பாண்டியன் பரிசு என்னும் நூல் எழுதியுள்ளமையால் பாண்டிய மன்னனுக்கே இவர் பரிசில் தந்தவரானார் என்றகருத்துப்படப் பாடுகின்ற வரிகளைக் கேளுங்கள்.
பாண்டியன் தனக்குமொரு பரி சென்று தந்த தமிழ்ப்
பாவேந்து முத்தமருளே
பாட்டான தமிழுக்கு நாட்டாண்மை தந்தவன்
பனி வாயின் முத்தமருளே – (48)
தமிழ் மொழியைப் பெண்ணாகவும், அம்மொழியில் அமைந்த நூல்களின் பெயர்களைப் பெயர் ஒப்புமை கொண்டு தமிழ்ப் பெண்ணின் அணிகலன்களாகவும் விளங்க, தமிழ்ப் பெண் ஆடிய அழகைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்து மயில் போலக் களித்துப் பாக்களைப் பாடிய புரட்சிக் கவிஞராம் குழந்தையே நீ செங்கீரையாடி அருள்வாயாக என்று பாடும் அழகைப் பாருங்கள்.
வடிவமை காதினில் குண்டலகேசி
வயங்கொளி கொண்டாட
வார்ந்த எழிற்கரம் ஏந்திய ஆடக
வளையாபதி ஆடத்
துடியிடை கையினில் ஒரு பிடி என்று
துவண்டு துவண்டாடும்
துறவற மேகலை ஒரு புறமாகவும்
தூய சிலம்பாடும்
அடிமலர் கண்டொரு மாமயிலானவன்
ஆடுக செங்கீரை
அஞ்சுகமாம் தமிழ் கொஞ்ச மகிழ்ந்தவன்
ஆடுக செங்கீரை
பாரதிதாசனின் கவிதையில் அமையும் சந்த அழகில் ஈடுபட்டுத்தான் பாவலர் புதுமைப்பித்தன் மேற்கண்ட பாடல் போல் அனைத்துப் பாடல்களையும் சந்தச் சிறப்புடன் அமைக்கின்றார்.
சப்பாணிப் பருவப் பாடல்களின் இறுதி வரிகளாகப் பின்வரும் வரிகளை அமைத்து
குருதி துடிப்புறக் கவிதை வடிப்பவன்
கொட்டுக சப்பாணி – (37, 38, 39)
என்றும்,
குரை கடலெனு மெழுச்சிக் கவி
கொட்டுக சப்பாணி – (41)
என்றும் பாடுகிறார்.
பாரதிதாசன் பாடல்களின் சிறப்பை இனிய சந்தத்தில் வெளிப்படுத்துவதைக் காணலாம்.
சிந்திடும் கவிமதச் சந்தக் கடாக்களிறு
சிறுதேர் உருட்டியருளே – (92)
என்றும் பாடி மகிழ்கிறார் பாவலர் புலமைப்பித்தன்.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக, பழைய மரபில் புதிய கருத்துகளைஎடுத்துரைக்கும் விதத்திலும், பாரதிதாசனின் தமிழ்ப் பற்றையும், சமுதாயப் பற்றையும், இலக்கியப் பணிகளையும் போற்றும் விதத்திலும் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் பாரதிதாசன் உள்ளத்தைக் கவர்ந்த பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இவ்வாசிரியருடைய உள்ளத்தையும் கவர்ந்திருப்பதால் அது தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கும் போது மனம் ஈடுபட்டுப் பாடக் காணலாம்.
அண்ணா என் மனக் கோயில் இறைவன் (81)
என்று பாடும் இவர், பாரதிதாசன் மேல் கொண்டிருக்கும் அளவு கடந்த பற்றும்,அன்பும் இந்நூலில் பல இடங்களில் எதிரொலிக்கக் காணலாம்.
பாவேந்தர் என் பாட்டுடைத் தலைவன்
- நெஞ்சில் ஏற்றி வைத்த தீபம்
செந்தமிழ் நறைக் கவிதை சிந்து – (12)
தென் பொதிகைச் சிகரத் தொளிரும் மணி விளக்கே
- (73)
தமிழ்த் தாயின் நிதியென எழுதி உவக்க
அமைத்த சுவைப்பாட்டில்
நிதமுமென் உயிரை மயக்க நினைத்த
கவிக்கோ – (40)
என்றும் பாடக் காணலாம்.
‘பாவேந்தர் புகழைப் பாடும் தகவு இலாச் சிறிய கவிநான்’ (31) என்று பாவலர் புலமைப்பித்தன் அவையடக்கமாகக் குறிப்பிட்டாலும், பாரதிதாசனின் தமிழ்ப்பற்றையும், சமுதாய அக்கறையையும் சிறிதும் குறைவுபடாமல் எடுத்துரைக்கும் பாவேந்தர் பிள்ளைத் தமிழ் சிறந்ததோர் பிள்ளைத் தமிழ் இலக்கியம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.