பதிப்பு ஊடகங்களான இதழ்கள், நூல்கள் முதலியன மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் அவற்றிற்கும் இன்றைய சூழலில் அவசியம் ஏற்படுகிறது. மொழிபெயர்ப்பின் நோக்கம் கருத்துப் பரவல் என்பதால் அது இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு அதன் அவசியம் தற்காலத்தில் உணரப்பட்டு, பெருமளவு மொழிபெயர்ப்புப் பணிகள் நடக்கின்றன. இதில் தொடர்புடையன தருமொழி – மொழிபெயர்ப்பாளர் – பெறுமொழி ஆகியனவாகும்.
தருமொழி
மொழிபெயர்ப்பின் போது, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்துகளை மொழிபெயர்க்கிறோம். அப்போது அந்த முதல்மொழியை மூலமொழி அல்லது தருமொழி என்கிறோம்.
சான்றாக: தமிழிலிருந்து இந்திமொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தால் அப்போது தமிழ்மொழி தருமொழி ஆகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டால் அப்போது ஆங்கிலம் தருமொழி ஆகிறது.
ஆகவே எந்த மொழியின் கருத்துகளை வேறுமொழிக்குப் பெயர்க்கிறோமோ அந்த மொழி தருமொழி என்கிறோம்.
பெறுமொழி
மொழிபெயர்ப்புப் பணியில் தருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் பெயர்க்கும் போது அந்த மற்றொருமொழி பெறுமொழி ஆகிறது. இதனை இரண்டாம்மொழி என்றும் அழைக்கிறோம்.
சான்றாக: தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஒரு நூலை மொழிபெயர்க்கிறோம் என்றால் அப்போது தமிழ் தருமொழியாகவும் ஆங்கிலம் பெறுமொழியாகவும் உள்ளன. அவ்வாறே ஆங்கிலத்திலிருந்து இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் போது ஆங்கிலமொழி தருமொழியாக அதாவது முதல்மொழியாகவும், இந்திமொழி பெறுமொழியாக அதாவது இரண்டாம்மொழியாகவும் உள்ளன.
வழிமொழி
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் போது அதில் முதல்மொழியான தருமொழியும் இரண்டாம் மொழியான பெறுமொழியும் இருப்பது இயல்பு. அதே மூலமொழி சீனமாகவும் இரண்டாம் மொழி ஆங்கிலமாகவும் மூன்றாம் மொழி தமிழாகவும் இருந்தால் அப்போது இரண்டாம்மொழியாகிய ஆங்கில மொழியை வழிமொழி என்கிறோம்.
சான்றாக: இந்திமொழியில் உள்ள பிரேம்சந்த் அவர்களின் சிறுகதையோ, புதினமோ முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிறகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அப்போது ஆங்கிலமொழி வழிமொழி ஆகிறது. இதில் மொழிபெயர்ப்பாளர் மேலும் ஒரு திறமையான மூலமொழியின் சமூகப் பண்பாட்டுப் பின்னணியை அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது விரும்பத் தக்கதாகும்.
சான்று:
LIG
இச்சான்றில், Starch என்பதற்கு இணையாக உணவு என்ற தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லது ‘ஸ்டார்ச்’ என்று அச்சொல்லை ஒலிபெயர்த்தும் அமைத்துக் கொள்ளலாம்.
வாய்பாடுகளை அப்படியே அமைத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய நேரடி மொழிபெயர்ப்பைப் பொதுவாக அறிவியல் நூல்கள், கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படும்போது பின்பற்ற வேண்டும்.
இனி, தழுவல் என்பது பற்றிப் பார்க்கலாம்.
சீவகசிந்தாமணி வடமொழியில் உள்ள க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் உள்ள கதையைத் தழுவி இயற்றப்பட்டதாகும்.
கம்பராமாயணம் வடமொழியில் வான்மீகியின் ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது.
புது நூலா தழுவல் நூலா என்பது எளிதில் புலப்படாத நிலையில் தழுவல் நூல்கள் அமைந்திருக்கும். பலமொழி இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவர்கள் எளிதில் அறிந்துகொள்வர்.
ஆகிய இரண்டு தொடர் மொழிபெயர்ப்புகளை (Phrase level translations) எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் Parent என்ற சொல் தாய், தந்தை இருவரையும் உள்ளடக்கிய பொதுச்சொல் (generic term). தமிழில் தாய் என்பது பெற்றவளை மட்டும் குறிக்கும் தனிச்சொல். ஆங்கிலத்தில் daughter என்னும் சொல் மகளை மட்டும் குறிக்கும் தனிச்சொல். தமிழில் சேய் என்பது மகன், மகள் ஆகிய இருவரையும் குறிக்கும் பொதுச்சொல். ஆனால் மொழிபெயர்ப்பில் மூலத்தின் பொதுச்சொல்லுக்குப் பெறுமொழியின் தனிச்சொல்லையும், மூலத்தின் தனிச்சொல்லுக்குப் பெறுமொழியின் பொதுச்சொல்லையும் நிகரனாகப் பயன்படுத்துகிறோம். இதனை மாற்றி, பெற்றோர் தனிமம், மகள் தனிமம் என்று எழுதினால் மொழிபெயர்ப்பு சிறக்கவில்லை. மூலத்தைத் தாய் என்றும் அதிலிருந்து கிளைத்ததைச் சேய் என்றும் வழங்குவது தமிழ் மரபு. ஆகவே தமிழ் மரபிற்கேற்ப மொழிபெயர்ப்பில் ஆக்கம் நிகழ்கிறது.
(1) அறிவியல் செயல்முறைகளின் விளக்கமும் செயல்பாடுகளும் இடம்பெறுவதால், அதற்கேற்ற மொழிநடை அறிவியல் மொழியில் இடம்பெறுகிறது.
(2) வினைமுதலாகிய (Subject) எழுவாய்க்கு முக்கியத்துவம் இல்லாததால் செயல்பாட்டு வினை ஆட்சி அதிகம் உண்டு.
(3) பெயராக்க நடை (Nominalized style) அதிகம் கையாளப்படுவதால் சுருக்கத்திற்கும் எளிமைக்கும் இது உதவுகிறது.
(4) செய்முறையைக் கூறுமிடங்களில் கட்டளை வாக்கியங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
(5) பொருள்களின் பண்புகளைக் கூறும் வாக்கியங்களில் முக்காலத்திற்கும் பொதுவான தொடர்கள் வழக்கத்தில் உள்ளன.
அதிலும் புதினம், சிறுகதை ஆகிய புனைவுகளிலும் நாடகங்களிலும் வட்டாரவழக்குச் சொற்களைப் பயன்படுத்தினால், அவற்றை, பெறுமொழியில் மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர் என்னதான் பெறுமொழியை நன்கு உணர்ந்திருந்தாலும் அச்சிக்கல் அவருக்குச் சோதனையாக அமைந்து விடுகிறது.
ஒருமொழியிலேயே வட்டாரவழக்குச் சொற்களில் பல விளங்குவதில்லை. இதே போன்று உறவுமுறைச் சொற்களும் சிக்கலை ஏற்படுத்துவது உண்டு. ஆங்கிலத்தில் Sister என்ற சொல்லும் Brother என்ற சொல்லும் Uncle என்ற சொல்லும் முறையே தமிழில் அக்கா, தங்கை; அண்ணன், தம்பி; மாமா, பெரியப்பா, சித்தப்பா என்று பல உறவுகளைச் சுட்டுவனவாக உள்ளன.
சொற்பொழிவுகளை மொழிபெயர்க்கும்போது உடனுக்குடன் மொழிபெயர்ப்பு தேவைப்படுவதால், சொற்பொழிவாளரின் உணர்ச்சி நடைக்கேற்ற மொழிபெயர்ப்பு உணர்ச்சிநடை அமைவது அவசியம். அதில் வரட்டுத்தன்மை இருக்கக்கூடாது.
விளம்பரங்களில் சுருக்கமும் உணர்த்து முறையில் தெளிவும் அவசியம். அதற்கேற்ப மொழிபெயர்ப்பு வாசகனை/கேட்போனை எளிதில் சென்று சேர்ந்து விற்பனையைப் பெருக்கும் முறையில் அமையவேண்டும்.
சமய வரலாற்று இலக்கியங்களில் காலப்பின்னணி அவசியம். அதற்கு ஏற்ற நிகரன்சொற்கள் அமைந்தால் இனிமை பயப்பதாக இருக்கும்.
1.2.6 மொழிபெயர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியவை
மொழிபெயர்ப்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய சில கூறுகளை அறிவது அவசியம்.
மொழிபெயர்ப்புகளில் அடிக்குறிப்புகள் கையாளப்படுவது உண்டு. அதற்கு ஒரு வரைமுறை உண்டு. மிகமிகத் தேவை என்றால் ஒழிய அடிக்குறிப்புகள் பயன்படுத்தல் கூடாது. அடிக்கடி பயன்படுத்தினால் அது ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தோன்றும்.
மொழிபெயர்ப்பு கலைத்துறையினதா அறிவியல் துறையினதா என்ற முடிவுக்குப் பின் கலைச்சொற்களை உருவாக்கவேண்டும். அக்கலைச் சொற்களையே இறுதிவரை பயன்படுத்தவேண்டும்.
ஓர் அறிவுத்துறையின் நோக்கம், பயன், விளைவு ஆகியவற்றிற்கு ஏற்ப அதை உள்ளடக்கித் தரும் மொழியின் இயல்பும் நடையும் வேறுபடுகின்றன.
மூலமொழியின் இயல்புக்கும் நடைக்கும் ஏற்ப மொழிபெயர்ப்பு மொழியாகிய பெறுமொழியின் இயல்பும் நடையும் அமையும். இதனால் ஓர் இலக்கிய மொழிபெயர்ப்பும் அறிவியல் மொழிபெயர்ப்பும் மொழிநடையில் முற்றிலும் வேறுபடுகின்றன.
இலக்கியத்துறைகளிலும் கூட, புதினம், சிறுகதை மொழிபெயர்ப்பு ஒருவிதமாகவும், நாடக மொழிபெயர்ப்பு ஒருவிதமாகவும், கவிதை மொழிபெயர்ப்பு இன்னொரு விதமாகவும் அமைந்துள்ளன.
இரு மொழிபெயர்ப்பில் என்னென்ன முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அறிந்துகொண்டால் மொழிபெயர்ப்பில் சிக்கல் ஏற்படாது.
• மூலத்தின் செய்தி எதைப் பற்றியது? • யாரைப் பற்றியது? • எந்தக் காலக்கட்டத்திற்கு உரியது? • அதில் இடம்பெறும் இடங்கள் எவை? • பொருள்கள் எவை? • உயிரிகள் எவை? • அது விவரிக்கும் சூழல் (Situation) யாது?
என்ற மேற்கண்ட அனைத்தும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம்பெற வேண்டும்.
அறிவியலில் ஒரு நிகழ்வு (Phenomenon), பொருள், பொருளின் பண்பு போன்றவற்றின் வரையறைகளை (Definitions) மொழிபெயர்க்கும் போது சொற்சிக்கனமும் மூலத்தின் பொருளனைத்தும் உள்ளடக்கிய பொருட் செறிவும் வேண்டும்.
பழகு தமிழில் கலைச்சொற்களை உருவாக்க, சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் முற்பட்டது. இதனால் 1936இல் எளிய கலைச்சொற்கள் உருவாயின. கோவையிலிருந்து வெளிவரும் கலைக்கதிர் என்ற இதழ் நீண்ட காலமாகவே கலைச்சொல்லாக்க முயற்சியில் மிக உதவி வந்தது. டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அவர்களின் தனிப்பெரு முயற்சியால் அனைத்துத் துறைகளிலும் கலைச்சொல் ஆக்கம் சிறப்பாக வளர்ந்தது.
கலைச்சொல் – விளக்கம்
(1) ஒரு துறையினர் மிகுதியாகப் பயன்படுத்திப் பிற துறையினர் வழங்காமல் இருப்பது. Antibiotic – எதிர்உயிரி Cathode – எதிர்முனை
(2) வழக்கமான அகராதியில் இடம் பெறாதது. Zygonema – சைகோனிமா Mesothorax – இடை மார்பு
(3) நடைமுறையில் ஒரு பொருளும், அறிவியல் உலகில் வேறுபொருளும் கொண்டது. Charge – (பொது அகராதி)-குற்றச்சாட்டு, பொறுப்பு, கடமை, விலை, பாதுகாப்பு (இயற்பியல்) – மின்னூட்டம்
என்ற வகையில் கலைச்சொற்களுக்குக் கா. பட்டாபிராமன் விளக்கம் தருகிறார்.
கலைச்சொல்லாக்க நெறிகள்
இதுவரையான கலைச்சொல்லாக்கங்களிலிருந்து பின்வரும் நெறிகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று அறியலாம். அவை
(1) கலைச்சொல்லின் மூலம் யாது என அறிதல்.
(2) அவை குறிக்கும் மையக்கருத்தை வரையறுத்தல்.
(3) சுருக்கமான தமிழ்வடிவம் அமைத்தல்.
(4) இயன்ற அளவு வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துதல்.
(5) தனிச்சொற்களாகவோ தொகை வடிவிலோ அமைத்தல்.
(6) குறிப்பிட்ட கலைச்சொல்லுடன் – இணையத் தக்க முன்னொட்டு அல்லது பின்னொட்டு வகையில் கலைச்சொற்களை உருவாக்கல்.
(7) சொல்லாக்கம் இல்லாதபோது, பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ் வடிவம் தருதல்.
(8) குறியீடுகள், சமன்பாடுகள், வாய்பாடுகள், கருத்துக்குறிப்புகள் ஆகியன தமிழ்வடிவம் பெறுவதில்லை. அதனால் உள்ளவாறே இருக்க வேண்டும்.
மேற்கண்ட நெறிகள் இதுவரை தமிழாக்க முயற்சியில் மேற்கொள்ளப்பட்டன. வருங்காலத்தில் இதில் மாற்றம் ஏற்படலாம். பின் வருவோர் புதுநெறி காட்டலாம்.
இனி இலக்கிய மொழிபெயர்ப்பு அல்லது கலைத்துறை மொழிபெயர்ப்பு பற்றிக் காணலாம்.
இது போன்ற இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது பல நெறி முறைகளைப் பின்பற்ற வேண்டியது உள்ளது. குறிப்பாகக் கவிதை போன்றவற்றை மொழிபெயர்க்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது உள்ளது. இதில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க வேண்டியது இல்லை. கருத்தை மொழிபெயர்த்தால் அந்த இலக்கியம் சொல்லவரும் செய்தியைப் புலப்படுத்திவிடலாம். கவிதை மனவெளி உணர்வுகளைச் சுருக்கித் தகுந்த சொற்களால் உவமை, உருவகம், படிமம் என்ற அணிநயம் தோன்ற புனையப்படுவது. அதனை மொழிபெயர்க்கும் போது சில நேரம் கவித்துவம் கரைந்து போய் உரைநடைத்தன்மை வெளிப்படுகிறது.
கவிதை
மூலக் கவிஞன் தனது கவிதைக்குரிய அனுபவ வரையறைகளைத் தானே தேர்வு செய்து கொள்கிறான். மொழிபெயர்ப்பாளனோ அந்த அனுபவ வரையறைகளை மூலத்திலிருந்து பெற்றுக் கவிதை புனைகிறான். மூலக்கவிஞனுக்கு உள்ள சுதந்திரம் மொழிபெயர்ப்பாளனுக்கு இருப்பதில்லை. இந்தச் சூழலில் மொழிக்கே உரிய ஆக்கப்பண்பு துணை செய்வதோடு மொழிபெயர்க்கும் போது கூடிய மட்டும் மூலக் கவித்துவம் வெளிப்படுவதாக அமையவே முயற்சி செய்கிறான் மொழிபெயர்ப்பாளன். ஆயினும் சிலநேரம் உரைநடைத்தன்மையில் அவனது மொழிபெயர்ப்பு அமைந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
புனைகதை
புனைகதைகளான புதினம், சிறுகதைகள் முதலியவற்றில் இடம்பெறும் உரையாடல்கள் வட்டார வழக்கில் இடம் பெற்றிருக்கும். என்னதான் பிறமொழிப் புலமை இருந்தாலும் வட்டார வழக்குகளைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் இருக்கும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது எந்த வட்டார வழக்கில் மொழிபெயர்ப்பது என்பதில் சிக்கல் தோன்றும். கிட்டத்தட்ட பொருத்தமான மொழிபெயர்ப்பு ஆக்கிக் கொள்ளலாம்.
உறவுப் பெயர்களை மொழிபெயர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையை நாடகங்களிலும் காணலாம். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சான்றாக: ஆங்கிலத்தில் Sister-in-law, Brother-in-law. Uncle, Sister, Brother போன்ற பொதுச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது புனைகதை, நாடகத்தின் போக்கிற்கு ஏற்பப் பொருத்தமான உறவுப் பெயர்களை அமைக்க வேண்டும்.
சான்றாக: சுவாமி விவேகானந்தர், அறிஞர் அண்ணா ஆகியோர் பல்வேறு சூழலில் ஆற்றிய எழுச்சிமிகு உரைகள், மாவீரன் அலெக்சாண்டரின் போர்க்கள உரை ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது வறட்டு உரைநடையில் மொழிபெயர்த்தால் அந்தச் சொற்பொழிவுகளின் வீரியம் காணாமல் போகும்.
மூலத்தின் கருத்து மூலமொழி வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வுகளை மொழிபெயர்ப்பும் தன் வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற புலப்பாடுகளை (Expressions) மொழிபெயர்ப்பு பெற்றிருத்தல் வேண்டும். இதனை மொழிபெயர்ப்பின் உணர்வூட்டும் பணி (Expression function) என்பர்.
வாசகரைச் செயல்படத் தூண்டுவதாகவும் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும். அதற்கான ஆற்றல் அதற்கு இருத்தல்வேண்டும். மொழிபெயர்ப்பின் இச்செயல்பாட்டைச் செயல்தூண்டும் பணி (Imperative function) என்பர். மேற்கண்ட மூன்று பணிகளும் ஒரு மொழிபெயர்ப்பில் இருந்தால் அம்மொழிபெயர்ப்பு கூடுதல் ஆற்றல் வாய்ந்ததாக – சிறந்ததாக இருக்கும்.
அறிவியல் சொல்லானாலும், சாதாரண வழக்குச் சொல்லாக இருந்தாலும் அவற்றின் மூலம் என்ன என்பதை ஆராய்ந்து பின்னர் அம்மூலத்தோடு தொடர்புடையதாகப் பெறுமொழிச் சொல்லை உருவாக்கவேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களுடன் அமையும் அளவைப் பெயர்களையும் பிற பெயர்களையும் ஒலி பெயர்ப்பதுதான் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.
ஒலிபெயர்க்கப்பட்ட சொல்லை மொழிபெயர்ப்பு நூல் முழுவதும் ஒரே மாதிரியான ஒலிக்கட்டமைப்பில் கையாள வேண்டும். ஒரே சொல்லுக்கு வேறு வேறு சொற்களை நூல் முழுவதும் பயன்படுத்தினால் வாசகர் (படிப்பவர்) குழப்பம் அடையக்கூடும். ஆகவே ஒரே சொல்லை நூல் முழுவதும் பயன்படுத்தவேண்டும்.
ஒலிபெயர்ப்பில் பெறுமொழி ஒலிமரபுகளைக் காப்பது சிறப்பானது. ஆனால், பொருள் வெளிப்பாட்டில் மயக்கத்தையும் சிதைவையும் திரிபையும் தவிர்ப்பதற்காகத் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத ஆங்கில ஒலிப்பு ஒலிகளுக்கு இணையாக ஸ, ஷ, ஜ, ஹ, போன்ற கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர். கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது பற்றித் தமிழ் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் காலப்போக்கில் அவற்றைத் தவிர்த்துத் தமிழ் ஒலிநெறிப்படி மாற்றிக் கொள்ளலாம்.
குறியீடுகளைக் கையாளுதல்
a, b, g, m, r, w போன்ற அனைத்துலக அறிவியல் குறியீடுகளையும், >, <, =, ò, Ö, p, S, q, +, -, ´, ¸ போன்ற கணிதக் குறியீடுகளையும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே கையாளுவது மொழிபெயர்ப்பை எளிமையாக்குவதாகவும், அறிவியல்பொதுமையைக் காப்பதாகவும் அமையும்.
பெறுமொழி வாசகனிடத்தில் நகைப்பூட்டும் ‘குதிரைக்குஞ்சு’ போன்ற மரபுப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும்.
மூலமொழி, பெறுமொழி இரண்டிலும் ஒரு சொல் வழக்கில் இருந்து அதன்பொருள் இருமொழிகளிலும் வேறுவேறாக இருந்தால், மொழிபெயர்ப்பில் மூலத்தின் பொருளுக்கு இணையான பெறுமொழிச் சொல்லைத்தான் பயன்படுத்தவேண்டும். மூலச்சொல்லோடு வடிவத்தில் மட்டும் ஒப்புமை உடைய பெறுமொழிச் சொல்லைத் தவிர்த்தல் வேண்டும்.
சூழல் சார்ந்த மொழிபெயர்ப்பு, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பைக் காட்டிலும் பொருத்தமானது.
வாசகனுக்குப் பழக்கமான சொற்களும் தொடர்களும் மரபுவழிப்பட்ட சொற்கள், தொடர்களைக் காட்டிலும் பொருத்தமானவை.
புனைகதை, நாடகம் போன்றவற்றில் இடம்பெறும் உரையாடல்களை மொழிபெயர்க்கும்போது, இலக்கிய மொழிவழக்கைக் காட்டிலும் பேச்சுமொழி வழக்கே பொருத்தமானது.
மொழிபெயர்ப்பு நடையில் மூலமொழியின் மொழியியல் கூறுகளைக் காட்டிலும் பெறுமொழியின் மொழியியல் கூறுகளே முக்கிய இடம்பெற வேண்டும்.
கூட்டல் குறைத்தல்
மூலத்தின் கருத்தில் கூட்டவோ குறைக்கவோ செய்வது முழுமையான மொழிபெயர்ப்பு ஆகாது. ஆனால் மூலத்தின் கருத்தைப் பெறுமொழி வாசகனுக்கு உயிர்த்துடிப்புடன் புலப்படுத்துவதற்கு மூலத்தின் சொற்களில், தொடர்களில், தொடர் அமைப்புகளில், உருவக, உவமைகளில், படிமங்களில், சந்தத்தில், பெறுமொழியின் இயல்புக்கேற்ப மாற்றங்கள் செய்வது மொழிபெயர்ப்புக்கு, குறிப்பாகக் கவிதை மொழிபெயர்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட உரிமையாகக் கொள்ளலாம்.
மூலத்தை மிஞ்சாமை
ஒரு நிறைவான மொழிபெயர்ப்பு மூலத்தைப் பொருளில் தான் மிஞ்சக்கூடாதே தவிர, சொல்லும் விதத்தில் கடுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. அதாவது மூலக்கவிஞன் தனது கவிதைக்கான அனுபவ வரையறைகளைத் தானே தேர்வு செய்கிறான். மொழிபெயர்ப்புக் கவிஞன் அந்த அனுபவ வரையறைகளை மூலத்திலிருந்து பெற்றுக் கவிதை புனைகிறான். மொழிபெயர்ப்புக் கவிஞன் மூலத்தின் அனுபவ வரையறைகளைத்தான் மிஞ்சக் கூடாதே தவிர, அவன் கவிதை புனையும் விதத்தில் மூலத்தை மிஞ்சுவது என்பது அவனது மொழித்திறத்தையும் அந்தச் சூழலில் சுரக்கும் கவிதை ஊற்றையும் பொறுத்தது. இதில் கட்டுப்பாடு விதிக்க முடியாது.
தருமொழி, பெறுமொழி, வழிமொழி, மொழிபெயர்ப்பாளர் என்ற நிலைகளில் கருத்துகளை மொழிபெயர்ப்பது என்பது என்ன என்று அறிந்து கொண்டீர்கள்.
அறிவியல் மொழிபெயர்ப்பும் அதில் குறியீடுகளும், சமன்பாடுகளும், எப்படி அமையவேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள்.
இலக்கிய அல்லது கலைத்துறை மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை கவிதை மொழிபெயர்ப்பு என்பது சிக்கலானதாக இருந்தாலும் கவிதையாக அமைக்க முடியவில்லை என்றால் உரைநடைப்பாங்கில் அமையலாம் என்றும், கருத்துகளை மொழிபெயர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சமூக, பண்பாட்டுக்கூறுகள் பற்றியும் மொழிவழக்குகள் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
சிறந்த மொழிபெயர்ப்பு என்பது எப்படி அமையலாம் என்பதற்கான கருத்துகளையும் அறிந்திருப்பீர்கள்.
பாடம் - 2
‘இலக்கிய மொழிபெயர்ப்பு வரலாறு’ என்ற இந்தப் பாடத்தில் பொதுவாக இலக்கிய மொழிபெயர்ப்பு என்றால் என்ன என்பது பற்றியும், இலக்கியங்களை மொழிபெயர்ப்பது என்பது எவ்வளவு பழமை வாய்ந்தது என்பது பற்றியும், தொடர்ந்து காலந்தோறும் என்னென்ன மொழிபெயர்ப்புகள் எந்த எந்த இலக்கியத் துறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் அறிய இருக்கிறீர்கள். தமிழிலிருந்து பிறமொழிக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு வரலாறாக இப்பாடம் அமைய இருக்கிறது.
நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களைக் கொண்டு நோக்கினால், சுமார் கி.மு.300க்கு முன்னரே நல்ல நாகரிகத்துடனும் சிறந்த பண்பாட்டுடனும், இலக்கிய வளத்துடன் விளங்கிய மொழி தமிழ்மொழி என்பது புலனாகும். அம்மொழி தோன்றிய காலத்திலிருந்து இன்றளவும் தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வரும் மொழி. அது தோன்றிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் வழக்கில் இருந்து நீங்கின.
இத்தகைய பழமை வாய்ந்த மொழியில் பல்வேறு மொழிச்சொற்களும் இலக்கியங்களும் இணைந்திருப்பது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை மட்டும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழிலிருந்து தனித்துப் பிரிந்த மொழிகள் எல்லாம் தமக்கென இலக்கிய இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டன. துளு மொழிக்கு மட்டும் பிற்காலத்தில் இலக்கணம் உருவாக்கப்பட்டது.
தமிழோடு தொடக்கக் காலத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மொழி சமஸ்கிருத மொழி ஆகும். அதிலிருந்து தமிழில் சொற்கள் பல வழக்கிற்கு வந்தன. பிற்காலத்தில் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவல்களாகவும் தமிழில் இடம் பெற்றன. தமிழிலிருந்து பிரிந்த மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்தும், இந்தியாவின் வடமாநிலங்களில் வழங்கும் குசராத்தி, இந்தி, வங்க மொழி போன்ற மொழிகளிலிருந்தும் இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. அம்மொழிகளுக்குத் தமிழிலிருந்தும் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அயல்நாட்டு மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்ய மொழிகளிலிருந்தும் கூட இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டதோடு தமிழ் இலக்கியங்களும் அம்மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டன.
இப்படி இலக்கிய வளங்களைக் கொண்டும் கொடுத்தும் இணைந்தே வளர்ச்சி காண வேண்டிய சூழலில் மொழிகள் உள்ளன. இதற்குப் பெரிதும் பயன்படுவது மொழிபெயர்ப்பு ஒன்றே ஆகும்.
இருவகை எண்ணங்கள்
பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில் திராவிட மொழிகளும், திராவிடமொழி அல்லாத அயல்மொழிகளும் உள்ளன. வெளிநாட்டு மொழிகளாக ஆங்கிலம் போன்றவை உள்ளன. தமிழிலிருந்து பிறமொழிக்கும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் வரலாற்றை இனிக் காணலாம்.
மொழிபெயர்த்தவை
எவற்றை மொழிபெயர்க்க வேண்டும், எவற்றை மொழிபெயர்க்கக் கூடாது என்று முடிவு செய்வதற்கான வரன்முறை எதுவும் இலக்கிய மொழிபெயர்ப்புக்கு இல்லை. ஒருமொழியில் தோன்றிய சிறந்த இலக்கியம் அம்மொழி பேசும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, காலம் காலமாக வழக்கில் இருந்தால், அந்த இலக்கியம் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. அதே இலக்கியத்தை இருமொழி அறிந்த அறிஞன் ஒருவன், மற்றமொழி பேசும் மக்களுக்கும் பயன்படும் என்ற நோக்கிலோ அல்லது அந்த இலக்கியம் எழுந்த மொழியின் சமூகப் பண்பாட்டு நிலைகளை மற்ற மொழியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலோ மொழிபெயர்ப்பது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இத்தகைய இயல்பான நிகழ்ச்சிதான் மொழிபெயர்ப்புக்கான தூண்டு கருவிகளில் ஒன்றாக அமைகிறது.
பண்டைய காலத்திலேயே நன்கு வளர்ச்சி அடைந்த இந்திய மொழிகளுள் தமிழ்மொழி தொன்மையானது மட்டுமன்றி, தொடர்ந்து வளர்ந்து வருவதுமாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே தமிழர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் கொண்டு இருந்தனர். இதனால் பிறமொழியாளர்களுடன் தொடர்பு கொண்டு தம் கருத்தைப் புரிய வைக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டின் சிறப்புமிகு வணிகத் தலமாகக் காவிரிப் பூம்பட்டினம் விளங்கியது. அதன் கடைத்தெருக்களில், ”பதினெண்பாடை மாக்களும்” அதாவது பதினெட்டு மொழி பேசும் மக்களும் சுற்றித் திரிந்தார்கள் எனப் பட்டினப்பாலை என்ற சங்க இலக்கியமும் மணிமேகலை என்ற காப்பியமும் குறிப்பிடுகின்றன.
அவர்களுடன் சீனர், அரேபியர், யவனர் எனப்படும் கிரேக்க ரோமானியர் என்போரும் தமிழ்நாட்டிற்கு வாணிகத்திற்காக வந்து தங்கியுள்ளனர் எனப் பழங்காலத் தகவல்களைத் தரும் தொல்லியல் ஆய்வு குறிப்பிடுகிறது.
இத்தகைய சூழலில் அண்டை அயல்நாட்டவருடன் தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை எடுத்துரைக்க அம்மொழி தெரிந்தவர்கள் சிலராவது இங்கே இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களில் சிலராவது தமிழ் மொழியைக் கற்றிருக்க வேண்டும்.
கி.மு.215 அளவில் காஞ்சியிலிருந்து சென்ற தூதுக் குழு ஒன்று, சீனப் பேரரசைச் சந்தித்ததாகச் சீனாவின் காலவழிச் செய்திக்கோவை குறிப்பிடுகிறது.
இன்றைய திருப்பதி மலைக்கு வடமேற்குப் பகுதியில் தெலுங்கானா என்ற நிலப்பரப்பைக் கடந்து விட்டாலே மொழிபெயர் தேயம் தொடங்கி விடுகிறது என்று சங்ககாலப் புலவர் மாமூலனார் குறிப்பிட்டுள்ளார். இங்கு ”மொழிபெயர் தேயம்” என்பது தமிழ் தவிர ஏனைய மொழிகளான தெலுங்கு மொழி, கன்னட மொழி பேசும் பகுதி என்று பொருள்.
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர்தேயத்தர் ஆயினும் நல்குவர்
என்ற 211ஆவது அகநானூற்றுப் பாடல் அடியின் அடிப்படையில் மொழிபெயர்ப்பு என்ற சொல் கூட உருவாகி இருக்கலாம்.
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே
(தொல்நூற்பா – 1597)
எனவே தொல்காப்பியம் தோன்றியதாகக் கருதப்படும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், வேறு பல மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நூல்கள் தமிழில் இருந்தன எனலாம்.
‘லக்ஷ்மி’ என்ற வடமொழிப்பெயர் முதன் முதலாக மணிமேகலைக் காப்பியத்தில் இலக்குமி என்ற சொல்லாகத் தமிழாக்கம் பெற்றுள்ளது.
வாரணாசி என்ற காசியின் பெயரைக் கலித்தொகைப் பாடலில் வாரணவாசி என்று குறிப்பிட்டுள்ளமை பின்வரும் வரிகளால் விளங்கும்.
தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார் கண்டுநீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வது;
(கலித்தொகை – 60 : 13)
யமுனா என்ற வடஇந்திய ஆற்றினைச் சங்கத் தமிழர் ”தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை” என்ற சிலப்பதிகாரத் தொடரின் வழி குறிப்பிட்டுள்ளதை அறியலாம்.
பரிபாடலில் நரசிம்ம அவதாரம் ”நரமடங்கல்” என்றும் பிரகலாதன் ‘பிருங்கலாதன்’ என்றும் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.
சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்தில் வடமொழிக் கலப்பு சங்க இலக்கியத்தைக் காட்டிலும் அதிக அளவில் இருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாகக் கண்ணகியும் கோவலனும் புகாரை விட்டு மதுரைக்குச் செல்லும் போது இராமனைப் பிரிந்த அயோத்தி போல என்ற குறிப்பைக் காணலாம்.
மணிமேகலையிலும் வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. இதில் இராமாயணக் குறிப்புக் கையாளப் பட்டுள்ளமை மூன்று காதைகளின் வழி அறிய முடிகிறது.
பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் நிறைய வடமொழிநூல்களின் அறிமுகம் ஏற்பட்டது. இக்காலத்திலிருந்து தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் நேரடியான மொழிபெயர்ப்புகளும் தழுவல்களும், மொழியாக்கங்களும், சுருக்கமும் விரிவானதுமான நூல்களும் வெளிவந்துள்ளன.
பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆட்சியாளர்கள், உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இசுலாமியர், ஆங்கில ஆட்சியாளர்கள், ஆங்கிலத்தை தொடர்புமொழியாகக் கொண்ட பிற ஐரோப்பிய ஆட்சியாளர்கள், வணிகர்கள் அவரவர் மொழியையும், இலக்கியங்களையும் தமிழகப் படிப்பாளிகளுக்கு அறிமுகமாக்கினர், அத்துடன் படைப்பாளிகளாகவும் திகழ்ந்து புதிய இலக்கிய வழியைச் செம்மைப் படுத்தியதுடன் புதிய இலக்கிய வடிவங்களையும் உருவாக்கினர்.
தமிழ்மொழி திராவிட இனத்தின் முதல் மொழி ஆகும்.
நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களைக் கொண்டு நோக்கினால், சுமார் கி.மு.300க்கு முன்னரே நல்ல நாகரிகத்துடனும் சிறந்த பண்பாட்டுடனும், இலக்கிய வளத்துடன் விளங்கிய மொழி தமிழ்மொழி என்பது புலனாகும். அம்மொழி தோன்றிய காலத்திலிருந்து இன்றளவும் தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வரும் மொழி. அது தோன்றிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் வழக்கில் இருந்து நீங்கின.
இத்தகைய பழமை வாய்ந்த மொழியில் பல்வேறு மொழிச்சொற்களும் இலக்கியங்களும் இணைந்திருப்பது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை மட்டும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழிலிருந்து தனித்துப் பிரிந்த மொழிகள் எல்லாம் தமக்கென இலக்கிய இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டன. துளு மொழிக்கு மட்டும் பிற்காலத்தில் இலக்கணம் உருவாக்கப்பட்டது.
தமிழோடு தொடக்கக் காலத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மொழி சமஸ்கிருத மொழி ஆகும். அதிலிருந்து தமிழில் சொற்கள் பல வழக்கிற்கு வந்தன. பிற்காலத்தில் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவல்களாகவும் தமிழில் இடம் பெற்றன. தமிழிலிருந்து பிரிந்த மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்தும், இந்தியாவின் வடமாநிலங்களில் வழங்கும் குசராத்தி, இந்தி, வங்க மொழி போன்ற மொழிகளிலிருந்தும் இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. அம்மொழிகளுக்குத் தமிழிலிருந்தும் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அயல்நாட்டு மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்ய மொழிகளிலிருந்தும் கூட இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டதோடு தமிழ் இலக்கியங்களும் அம்மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டன.
இப்படி இலக்கிய வளங்களைக் கொண்டும் கொடுத்தும் இணைந்தே வளர்ச்சி காண வேண்டிய சூழலில் மொழிகள் உள்ளன. இதற்குப் பெரிதும் பயன்படுவது மொழிபெயர்ப்பு ஒன்றே ஆகும்.
இருவகை எண்ணங்கள்
பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில் திராவிட மொழிகளும், திராவிடமொழி அல்லாத அயல்மொழிகளும் உள்ளன. வெளிநாட்டு மொழிகளாக ஆங்கிலம் போன்றவை உள்ளன. தமிழிலிருந்து பிறமொழிக்கும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் வரலாற்றை இனிக் காணலாம்.
மொழிபெயர்த்தவை
எவற்றை மொழிபெயர்க்க வேண்டும், எவற்றை மொழிபெயர்க்கக் கூடாது என்று முடிவு செய்வதற்கான வரன்முறை எதுவும் இலக்கிய மொழிபெயர்ப்புக்கு இல்லை. ஒருமொழியில் தோன்றிய சிறந்த இலக்கியம் அம்மொழி பேசும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, காலம் காலமாக வழக்கில் இருந்தால், அந்த இலக்கியம் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. அதே இலக்கியத்தை இருமொழி அறிந்த அறிஞன் ஒருவன், மற்றமொழி பேசும் மக்களுக்கும் பயன்படும் என்ற நோக்கிலோ அல்லது அந்த இலக்கியம் எழுந்த மொழியின் சமூகப் பண்பாட்டு நிலைகளை மற்ற மொழியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலோ மொழிபெயர்ப்பது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இத்தகைய இயல்பான நிகழ்ச்சிதான் மொழிபெயர்ப்புக்கான தூண்டு கருவிகளில் ஒன்றாக அமைகிறது.
பண்டைய காலத்திலேயே நன்கு வளர்ச்சி அடைந்த இந்திய மொழிகளுள் தமிழ்மொழி தொன்மையானது மட்டுமன்றி, தொடர்ந்து வளர்ந்து வருவதுமாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே தமிழர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் கொண்டு இருந்தனர். இதனால் பிறமொழியாளர்களுடன் தொடர்பு கொண்டு தம் கருத்தைப் புரிய வைக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டின் சிறப்புமிகு வணிகத் தலமாகக் காவிரிப் பூம்பட்டினம் விளங்கியது. அதன் கடைத்தெருக்களில், ”பதினெண்பாடை மாக்களும்” அதாவது பதினெட்டு மொழி பேசும் மக்களும் சுற்றித் திரிந்தார்கள் எனப் பட்டினப்பாலை என்ற சங்க இலக்கியமும் மணிமேகலை என்ற காப்பியமும் குறிப்பிடுகின்றன.
அவர்களுடன் சீனர், அரேபியர், யவனர் எனப்படும் கிரேக்க ரோமானியர் என்போரும் தமிழ்நாட்டிற்கு வாணிகத்திற்காக வந்து தங்கியுள்ளனர் எனப் பழங்காலத் தகவல்களைத் தரும் தொல்லியல் ஆய்வு குறிப்பிடுகிறது.
இத்தகைய சூழலில் அண்டை அயல்நாட்டவருடன் தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை எடுத்துரைக்க அம்மொழி தெரிந்தவர்கள் சிலராவது இங்கே இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களில் சிலராவது தமிழ் மொழியைக் கற்றிருக்க வேண்டும்.
கி.மு.215 அளவில் காஞ்சியிலிருந்து சென்ற தூதுக் குழு ஒன்று, சீனப் பேரரசைச் சந்தித்ததாகச் சீனாவின் காலவழிச் செய்திக்கோவை குறிப்பிடுகிறது.
இன்றைய திருப்பதி மலைக்கு வடமேற்குப் பகுதியில் தெலுங்கானா என்ற நிலப்பரப்பைக் கடந்து விட்டாலே மொழிபெயர் தேயம் தொடங்கி விடுகிறது என்று சங்ககாலப் புலவர் மாமூலனார் குறிப்பிட்டுள்ளார். இங்கு ”மொழிபெயர் தேயம்” என்பது தமிழ் தவிர ஏனைய மொழிகளான தெலுங்கு மொழி, கன்னட மொழி பேசும் பகுதி என்று பொருள்.
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர் மொழிபெயர்தேயத்தர் ஆயினும் நல்குவர்
என்ற 211ஆவது அகநானூற்றுப் பாடல் அடியின் அடிப்படையில் மொழிபெயர்ப்பு என்ற சொல் கூட உருவாகி இருக்கலாம்.
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே
(தொல்நூற்பா – 1597)
எனவே தொல்காப்பியம் தோன்றியதாகக் கருதப்படும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், வேறு பல மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நூல்கள் தமிழில் இருந்தன எனலாம்.
‘லக்ஷ்மி’ என்ற வடமொழிப்பெயர் முதன் முதலாக மணிமேகலைக் காப்பியத்தில் இலக்குமி என்ற சொல்லாகத் தமிழாக்கம் பெற்றுள்ளது.
வாரணாசி என்ற காசியின் பெயரைக் கலித்தொகைப் பாடலில் வாரணவாசி என்று குறிப்பிட்டுள்ளமை பின்வரும் வரிகளால் விளங்கும்.
தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார் கண்டுநீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வது;
(கலித்தொகை – 60 : 13)
யமுனா என்ற வடஇந்திய ஆற்றினைச் சங்கத் தமிழர் ”தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை” என்ற சிலப்பதிகாரத் தொடரின் வழி குறிப்பிட்டுள்ளதை அறியலாம்.
பரிபாடலில் நரசிம்ம அவதாரம் ”நரமடங்கல்” என்றும் பிரகலாதன் ‘பிருங்கலாதன்’ என்றும் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.
சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்தில் வடமொழிக் கலப்பு சங்க இலக்கியத்தைக் காட்டிலும் அதிக அளவில் இருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாகக் கண்ணகியும் கோவலனும் புகாரை விட்டு மதுரைக்குச் செல்லும் போது இராமனைப் பிரிந்த அயோத்தி போல என்ற குறிப்பைக் காணலாம்.
மணிமேகலையிலும் வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. இதில் இராமாயணக் குறிப்புக் கையாளப் பட்டுள்ளமை மூன்று காதைகளின் வழி அறிய முடிகிறது.
பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் நிறைய வடமொழிநூல்களின் அறிமுகம் ஏற்பட்டது. இக்காலத்திலிருந்து தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் நேரடியான மொழிபெயர்ப்புகளும் தழுவல்களும், மொழியாக்கங்களும், சுருக்கமும் விரிவானதுமான நூல்களும் வெளிவந்துள்ளன.
பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆட்சியாளர்கள், உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இசுலாமியர், ஆங்கில ஆட்சியாளர்கள், ஆங்கிலத்தை தொடர்புமொழியாகக் கொண்ட பிற ஐரோப்பிய ஆட்சியாளர்கள், வணிகர்கள் அவரவர் மொழியையும், இலக்கியங்களையும் தமிழகப் படிப்பாளிகளுக்கு அறிமுகமாக்கினர், அத்துடன் படைப்பாளிகளாகவும் திகழ்ந்து புதிய இலக்கிய வழியைச் செம்மைப் படுத்தியதுடன் புதிய இலக்கிய வடிவங்களையும் உருவாக்கினர்.
தமிழில் கொங்கு வேளிரால் இயற்றப்பட்ட சிறப்புமிக்க காப்பியம் பெருங்கதை ஆகும். கி.பி.2ஆம் நூற்றாண்டு அளவில் ‘பைசாசம்’ என்ற பிராகிருத மொழியில், குணாட்டியர் என்ற புலவர் உதயணன் சரித்திரத்தைப் பிருகத் கதா என்ற பெயரில் காப்பியமாக இயற்றினார். ஏறத்தாழ கி.பி.7ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கங்க நாட்டு அரசன் ‘துர்விநீதன்’ என்னும் அரசன் சமஸ்கிருத மொழியில் குணாட்டியரைத் தழுவி ‘பிருகத்கதா’ என்ற பெருங்காப்பியத்தை இயற்றினார். இந்த வடமொழி நூலைத் தழுவியே கொங்கு வேளிர் பெருங்கதையைத் தமிழில் படைத்துள்ளார்.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் திருத்தக்க தேவரால் தமிழில் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணி என்ற காப்பியமும் சமஸ்கிருத மொழியின் தழுவலாகவே தோன்றியுள்ளது.
இந்த நூலின் மூலமாகக் கருதப்படுபவை க்ஷத்திர சூடாமணி, கத்தியசிந்தாமணி, ஜீவன்தர சம்பு, ஸ்ரீபுராணம் ஆகியனவாகும்.
சீவகசிந்தாமணிக்குப் பிறகு கி.பி.10ஆம் நூற்றாண்டு அளவில் தோலாமொழித் தேவர் என்பவரால் சூளாமணி என்னும் காப்பியம் இயற்றப்பட்டது. இதற்கும் ஒரு வடமொழி நூலே மூலநூல்.
சிறு காப்பியங்களுள் யசோதர காவியம் ‘புஷ்ப தந்தா’ என்பவர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய யசோதர காவிய என்ற படைப்பே மூல நூலாகும்.
தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் பெரும்பாலானவை வடமொழி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் உள்ள நூல்களையே மூலங்களாகக் கொண்டவை. கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கருநாடகத்தில் வீர சைவம் தழைத்தது. அந்தச் சமயத்துக் குரு ஒருவரின் கதை ‘பிரபுலிங்க லீலா’ என்ற காப்பியமாகக் கி.பி.14ஆம் நூற்றாண்டில் கன்னட மொழியில் இயற்றப்பட்டது. இதனைப் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பிரபுலிங்க லீலை என்னும் சிற்றிலக்கியமாகத் தமிழில் தந்துள்ளார்.
காப்பியங்களில் பெயர் மாற்றங்கள்
வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட பெயர்கள் பலவற்றைத் தமிழ்க் காப்பியங்களில் காண முடிகிறது. சான்றாக, வசந்தமாலை = வயந்த மாலை; வித்தை = விஞ்சை போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.
பௌத்த சமயப் புலவர் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்ற காப்பியத்தில் பாலிமொழியில் உள்ள புத்த சாதகக் கதைகள் பல தமிழாக்கம் செய்யப்பட்டு மணிமேகலையின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சாவக நாட்டு அரசனான பூமிச் சந்திரனைப் பற்றியும் ஆபுத்திரனைப் பற்றியும் சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. இவ்விருவர் வரலாற்றையும் இணைத்து, மணிமேகலையின் மூன்று காதைகளான ஆபுத்திரன் திறன் அறிவித்த காதை (13), ஆபுத்திரன் நாடு அடைந்த காதை (24) ஆபுத்திரன் மணிபல்லவம் அடைந்த காதை (25) எனும் பகுதிகள் அவற்றைத் தழுவி அமைந்துள்ளன.
குலசேகராழ்வார் இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தயரதன் புலம்பல், தாலாட்டுப் போன்ற பதிகங்களைப் பாடியுள்ளார். பெரியாழ்வார் கண்ணன் குறும்புகளைப் பற்றிப் பாடியுள்ளார்.
கௌதம முனிவர் இந்திரனுக்கும் அகலிகைக்கும் சாபம் கொடுத்த கதை பரிபாடலில் காணப்படுகிறது. திருக்குறளிலும், இந்திரனும் அகலிகையும் சாபம் பெற்ற நிலை குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
கம்பருக்கு முன் தமிழில் ‘இராமாயண வெண்பா’ என்ற நூல் இருந்ததாகத் தெரிகிறது. புறத்திரட்டு என்னும் நூல்வழியாக ஆசிரியப்பாவில் எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் சில இராமாயணக் கதையைக் கொண்டிருந்தன எனவும் அவை அழிந்து விட்டன எனவும் அறியலாம்.
வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி தமிழில் அமைக்கப்பட்ட இராமாயணமே கம்ப ராமாயணம் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் கம்பர் தமிழ் மரபிற்கு ஏற்ப, பல மாற்றங்களைச் செய்துள்ளார்.
”குணாதித்தன் சேய்” என்பவரால் இயற்றப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘இராமாயண வெண்பா’ என்னும் நூல் இப்போது கிடைக்கவில்லை. இதுவும் கம்பராமாயணம் போன்ற தழுவலே ஆகும்.
நாட்டுப்புற இலக்கியமாக இராமாயண ஓடம், இராமாயண ஏலப்பாட்டு, இராமாயணச் சிந்து முதலியவையும் தோன்றின.
இராமாயணம் பல நாடக வடிவத்திலும் உருப்பெற்றது. இராம நாடகக் கீர்த்தனையை அருணாசலக் கவிராயர் இயற்றினார்.
வேங்கட கிருஷ்ணய்யர் என்பவர் துளசி, வால்மீகி, கம்பர் ஆகியோரின் கருத்துகளைத் தழுவி இராம காவியம் என்னும் கதம்ப ராமாயணத்தைப் படைத்தார்.
கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வார், வேதவியாசருடைய வடமொழி மகாபாரதத்தைத் தழுவி, தமிழில் மகாபாரதம் இயற்றியுள்ளார். இந்நூல் பத்துப் பருவங்களாக 4375 பாடல்களைக் கொண்டுள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நல்லாப்பிள்ளை என்பவர் ஏழாயிரம் செய்யுள்களுக்கு மேற்பட்ட விரிவான பாரதத்தைத் தமிழில் தந்திருக்கிறார்.
பாரதக் கிளைக் கதைகளில் குறிப்பாக நளன் கதையைக் கி.பி.15ஆம் நூற்றாண்டில் புகழேந்தியார் நளவெண்பாவாக இயற்றினார்.
வல்லூர் தேவராசப் பிள்ளையின் ‘குசேலோபாக்கியானம்’ மகாபாரதக் கிளைக் கதைத் தழுவலாகும்.
பாரதியின் பாஞ்சாலி சபதமும் தழுவல் இலக்கியமே ஆகும்.
இந்நூல் கண்ணனால் அருளப்பட்டது என்பர். இதனை ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ என வடமொழியில் குறிப்பிடுவர். ‘கீதா’ என்ற வடமொழிச் சொல்லிற்குப் பாடப்படுவது என்று பொருள். பாடப்படுவது என்பதற்குப் பாராயணம் செய்வதற்காக இயற்றப்பட்ட நூல் என ஆய்வாளர் கருதுகின்றனர். இதற்குத் தமிழில் மட்டும் 12 மொழிபெயர்ப்புகள் கிடைத்துள்ளன. ஆங்கிலத்தில் சுமார் 27 மொழிபெயர்ப்புகள் உள்ளன.
பகவத் கீதையைத் தமிழாக்க முயற்சி செய்தவர்கள் அதன் கருத்துகளைச் சுருக்கமாகவும், விளக்க உரையாகவும், கருத்துக் கோவையாகவும் வெளியிட்டுள்ளனர்.
கி.பி.1786இல் முதன்முதலாக இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் பாரதியார் மொழிபெயர்ப்புக்கு முன்னர் சுமார் 14 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.
இவை அனைத்தும் செய்யுள் வடிவில் புலவர்களுக்கும் கற்றோருக்கும் மட்டும் புரியும் வண்ணம் இயற்றப்பட்டனவாக இருந்தன.
பாரதியின் இறப்பிற்குப் பிறகு அவர் மொழிபெயர்த்த பகவத் கீதையின் தமிழாக்கம் மகாத்மா காந்தி அடிகளின் முன்னுரையுடன் 1928இல் பாரதி பிரசுராலயத்தினரால் வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு 1981 வரை 5 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.
வடமொழிக்குப் பின், ஆங்கிலம் முதலிய உலக மொழிகள் மொழிபெயர்ப்புக்கு இடம் அளிக்கும் முன், திராவிட மொழிகள் தம்முள் இலக்கியப் பரிமாற்றத்தை மொழிமாற்றம் மூலம் செய்தமை தெரிகின்றது. நான்கு மொழிகளின் கலந்துறவாடலாக அல்லாமல் தமிழும் மலையாளமும் ஓர் இணையாகவும், கன்னடமும் தெலுங்கும் மற்றொரு இணையாகவும் உறவு கொண்டிருந்தன.
இதே காலத்தில் தமிழிலிருந்து பரமஞான விளக்கம் என்பதும் மலையாளத்தில் வழங்கப்பட்டது. இந்நூலின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
‘உள்ளூர்’ பரமேஸ்வரய்யர் என்பவர் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடும்போது மொழிபெயர்ப்பாளரையும், மொழிபெயர்க்கச் செய்தவராகிய கொச்சி ராம வர்ம மகாராஜாவையும் (கொல்லம் ஆண்டு, 740-776) குறிப்பிடுகிறார். அந்நூலின் பெயரை, திரு(வள்ளுவ)வுள்ளப் பயன் என்று சுட்டுகிறார்.
தெலுங்கும் கன்னடமும் தவிரத் தமிழும் கன்னடமும் கூட மொழிபெயர்ப்புக்கு வாய்ப்பு அளித்துள்ளதைப் பிரபுலிங்கலீலை காட்டுகின்றது. சாமரசனின் (1430) பிரபுலிங்க லீலை, பிதுபர்த்தி சோமநாத கவியால் (1480) தெலுங்கு த்விபத (இருசொல்) யாப்பிலும், மீண்டும் பிதுபர்த்தி சோமநாத கவியின் இளைய சகோதரன் பசவனால் (1510) பத்ய (கவிதை நூல்) காவியமாகவும் தெலுங்கில் தரப்பட்டது. பசவ புராணமும் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழில் தரப்பட்டது. தமிழ் பிரபுலிங்க லீலையை இயற்றியவர் சிவப்பிரகாசர்.
தமிழிலிருந்தும் கூட ஆண்டாளின் கதையும், நாயன்மார் வரலாறும், இறைவன் திருவிளையாடற் பாடல்களும் தெலுங்கு, கன்னட மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆனால் அவை முழுமையான மொழிமாற்றம் பெற்றனவா என்பது தெரியவில்லை. ஆனாலும் 1672இல் சிக்குபாத்யாய என்பவர் நம்மாழ்வாரின் திருமொழியைக் கன்னடத்தில் தந்ததாக, சிவகாமி குறிப்பிடுகின்றார்.
வடமொழியிலிருந்து காதம்பரி (15ஆம் நூற்றாண்டு) செய்யுள் நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
காளிதாசனின் ரகுவம்சமும், அரிச்சந்திர புராணம், புரூரவ சரித்திரம், நைடதம் போன்றனவும் தமிழில் வந்துள்ளன.
செவ்வைச் சூடுவார், அருளாளதாசர் ஆகியோரின் பாகவத ஆக்கங்களும் இக்காலத்தில் ஏற்பட்டன.
மாதை திருவேங்கட நாதரால் இரண்டாயிரம் செய்யுட்களில் பிரபோத சந்திரோதயம் (17ஆம் நூற்றாண்டு) காவிய அமைப்புடன் வெளிவந்தது. அத்வைதச் சார்பில் குறியீட்டுப் பொருள் கொண்டது இந்நூல்.
சிவப்பிரகாசர் (17ஆம் நூற்றாண்டு) சங்கரரின் வேதாந்த சூடாமணியை 180 செய்யுளில் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு, வசு சரிதை, மனுசரிதை, குசேலோ பாக்கியானம் (17ஆம் நூற்றாண்டு), பஞ்ச தந்திரம் என வடமொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
வடமொழியிலிருந்து இதிகாசங்களும், புராணங்களும், சமயச் சார்புடைய ஆக்கங்களும், வேத உபநிடதங்களும் மிகுதியாக மொழிபெயர்ப்புக்கு உட்பட்டன.
இராமாயண மொழிபெயர்ப்புகள்
இராமாயணம் இந்தியாவில் வடமொழியில் வால்மீகியால் இயற்றப் பட்டது. அது தொடங்கி இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்ப்பாகவும், தழுவலாகவும், பிற உள்ளளூர் இலக்கியங்களில் இடைக் குறிப்புகளாகவும் காண முடிகின்றது. இராமாயணம் பலரால் தமிழில் தரப்பட்டுள்ளது.
மகாபாரதம்
இந்திய இலக்கியங்களில் புராண இலக்கியமாகத் திகழ்கின்ற மகாபாரதமும், அதில் உள்ள கிளைக் கதைகளும், குறிப்பாக பகவத் கீதையும், ஏனைய மொழிகளில் உள்ளது போன்று தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும், தழுவல்களாகவும் வெளிவந்துள்ளன.
வேதங்கள்
வடமொழியில் இசையுடன் பாடப்படும் வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் சில உபநிடதங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாரசீக மொழியிலிருந்து உமர்கய்யாமின் பாடல்கள் ஆங்கிலமொழி வழியாக, சாமி சிதம்பரனார் (1946), எஸ். கிருஷ்ணமாசாரியார் (1921), கவிமணி (1945), சுப்பிரமணிய யோகி (1942) போன்ற பலரால் வழங்கப்பட்டுள்ளன.
கிரேக்க மொழி இலியட் (1961), ஒடிசி ஆகியனவும் தமிழில் வெளிவந்துள்ளன.
ரஷ்யப் பாடல்கள், த.கோவேந்தன் (எண்ணப் பறவைகள், 1975 சிவப்புக் குயில்கள், 1975), ரகுநாதன் (சோவியத் நாட்டுக் கவிதைகள், லெனின் கவிதாஞ்சாலி, 1965), போன்றோரால் தமிழில் தரப்பட்டுள்ளன.
இந்திய மொழிகளில் ஒன்றான வங்காளத்திலிருந்து இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திர சாட்டர்ஜி, பங்கிம் சந்திரர் முதலியவர்களுடைய ஆக்கங்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர்.
இந்தியிலிருந்து துளசி ராமாயணம், ஸ்ரீநிவாசாசாரியார் (1916), எஸ்.அம்புஜம்பாள் (1942), எஸ்.ஜி. சுப்பிரமணி அய்யர் (1965), தி.வேங்கட கிருஷ்ணய்யங்கார் (1967), எஸ்.ஜகந்நாராயணன் (1971-72) போன்ற பலரால் பெயர்க்கப்பட்டுள்ளது. கபீரின் படைப்புகளும், கபீர்தாசரின் அருள்வாக்கு (தி.வேங்கட கிருஷ்ணய்யங்கார் (1966), கபீர் அருள்வாக்கு (தி. சேஷாத்திரி) என்று தமிழில் வழங்கப்பட்டு உள்ளன.
பிற திராவிட மொழிகளும் தமிழோடு இலக்கியப் பரிமாற்றம் செய்து கொண்டன.
நிஜகுண யோகி கன்னடத்தில் இயற்றிய விவேக சிந்தாமணியின் வேதாந்த பரிச்சேதமும் (1892), தேவர நாம பதகளு (1964) என்ற கன்னட இறைப்பாடல் தொகுதியும் தமிழில் வழங்கப்பட்டுள்ளன.
தெலுங்கு மொழி சில சதகங்களையும், வேமனாவின் பல பாடல் மொழிபெயர்ப்புகளையும் தமிழிற்கு வழங்கியுள்ளது.
மலையாளத்திலிருந்து குமாரன் ஆசான் படைப்பும், வள்ளத்தோள் கவிதைகளும் தமிழில் அண்மைக் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மூலக்கதைகள் புதினங்களாக உருவான காலத்திலும் கூட மொழிபெயர்ப்புகளும் எழுந்துள்ளன. இது திராவிட மொழிகளுக்குப் புதுத்துறையாகும். உலகளாவிய புகழுடைய பல புதினங்கள் உலகெங்கும் எழுந்தமையாலும் புதுமை நாட்டத்தை நிறைவு செய்யவும் பரவலான மொழிமாற்றத்திற்கு இடம் ஏற்பட்டது. ஒரே கவிதை பலரால் மொழிபெயர்க்கப்பட்டது போல ஒரே புதினத்தைப் பலர் மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் சுமார் 550 நூல்கள் புதினம் மொழிபெயர்ப்புகளாக உள்ளன. அதில் குறிப்பாக ஆங்கிலப் புதினங்கள் தமிழிற்குப் பெருமளவு வந்துள்ளன.
ஆங்கிலப் புதினங்கள்
சுமார் நானூறு ஆண்டுகள் ஆங்கில மொழியோடு தொடர்பு கொண்டிருந்த தமிழக மக்களுக்கு ஆங்கில இலக்கிய அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சுமார் முப்பது ஆங்கிலேய எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழில் இடம் பெற்றுள்ளன.
பிரெஞ்சுப் புதினங்கள்
ஆங்கிலத்தளவு பெருமளவு மொழிபெயர்க்கப்பட்ட உலக, இந்திய, திராவிட மொழிபெயர்ப்புகள் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க சில புதினங்கள் உள்ளன. உலக மொழிகளில் பிரெஞ்சு, ரஷ்யன் போன்றன இந்நிலையில் குறிப்பிடத்தக்கன.
பிரெஞ்சிலிருந்து விக்டர் ஹ்யூகோ, அலெக்ஸாண்டர் டூமோ, அனடோல் பிரான்ஸ், ஜூல்ஸ் வெர்ன் முதலியவர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாப்பசான் படைப்புகள் பலவும் தமிழில் வந்துள்ளன.
ரஷ்யப் படைப்புகள்
ரஷ்யமொழிப் படைப்புகள் பலவும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு :
மாக்சிம் கார்க்கியின் தாய் பலரால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. அம்மா (முல்லை முத்தையா, 1956), அன்னை (ப. ராமஸ்வாமி, 1946), தாய் (ரகுநாதன், 1952) என உருவாகியுள்ளது. அதனைத் தற்காலத்தில் தாய்க் காவியமாக கலைஞர் மு. கருணாநிதி எழுதி வருகிறார். அத்துடன் தந்தையின் காதலி (ரகுநாதன், 1963), மூவர் (சு. பாலவிநாயகம், 1962), வாழ்க்கைப் படகு (எஸ். சங்கரன், 1952) என்பனவும் தமிழிற்கு வந்துள்ளன.
லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா, போரும் அமைதியும் முதலிய புதினங்கள் தமிழில் வந்துள்ளன. அலெக்ஸாண்டர் குப்ரின், இவான் துர்க்கனேவ் முதலியவர்களின் புதினங்களும் தமிழில் வந்துள்ளன.
ஜெர்மன் படைப்புகள்
ஜெர்மன் மொழியிலிருந்தும் ஆங்கில வழியாகத் தமிழிற்கு வந்த நூல்களும் சில உள்ளன. ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தன் நல்லதொரு தமிழ் நாவலாக வந்திருக்கிறது.
ஸ்பானிஷ் மொழியிலிருந்து வான்டெஸ்ஸின் டான்குவிக்ஸாட் வந்துள்ளது.
பிற இந்திய மொழிப் படைப்புகள்
இந்திய மொழிகள் பலவும் தமிழுக்கு ஏராளமான புதினங்களை வழங்கியுள்ளன. அவற்றுள் வங்கமொழி முன்னிற்கிறது.
இந்தியிலிருந்தும் மொழிபெயர்ப்பில் படைப்புகள் வெளிவந்துள்ளன. சுதர்சன், ராகுல சாங்கிருத்யாயன், பிரேம்சந்த் முதலியவர்களின் பல புதினங்கள் தமிழுக்கு வந்துள்ளன. அவ்வாறே உருது, குஜராத்தி, ஒரிய மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. வங்க மொழியைப் போலவே, மராத்தியிலிருந்தும் தமிழுக்குப் பல புதினங்கள் வந்துள்ளன. பிற திராவிட மொழிகளிலிருந்தும் தமிழ் புதினங்களைப் பெற்றது. கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளிலிருந்து பல புதினங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அரபு மொழியிலிருந்து ஆயிரத்தொரு இரவுக் கதைகள், ஈசாப் நீதிக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலிருந்து கிரிம் தேவதைக் கதைகள், கான்டர் பரிக் கதைகள் வந்துள்ளன.
புராண நாடோடிக் கதைகள்
உலக நாடோடிக் கதைகள், குழந்தைகளுக்கான ஆசிய நாடோடிக் கதைகள், சிறுவர்க்குரிய ஆசிய நாடோடிக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், பீகார் மாநில நாட்டுக் கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், கிரேக்கப் புராணக் கதைத் தொகுதிகளான கிரேக்கக் கதைகள், மனிதப்பறவை என்பன குறிப்பிடத்தக்கன.
உலகச் சிறுகதைகள்
உலக மொழிகள் பலவற்றின் சிறந்த சிறுகதை ஆசிரியரின் படைப்புகள் தமிழில் வந்துள்ளன. ஆஸ்கர் ஒயில்ட், நாதானியல் ஆதார்ன், எட்கர் ஆலன் போ, ஓஹென்றி, ருட்யார்டு கிப்லிங், பால்ஸாக், மாப்பசான், டால்ஸ்டாய், புஷ்கின், டாஸ்டாவஸ்கி, அந்தோன் செகாவ் சிறுகதைகளும் புதினங்களும் குறிபிடத்தக்கவை.
இந்திய மொழிச் சிறுகதைகள்
இந்திய மொழிகளான இந்தி, குஜராத்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் உள்ளன.
இந்திக்கு அடுத்ததாக மிகுதியான சிறுகதைத் தொகுதிகளைத் தமிழுக்கு வங்காளம் வழங்கியுள்ளது. அரசியல் கைதி முதலிய வங்கச் சிறுகதைகள் (த.நா. குமாரசாமி 1961) எனப் பொதுவாகவும் ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள் (1977), அவரது பக்திக் கதைகள் (1976), ஏழாவது வாசல் (நாரா.நாச்சியப்பன் 1980) போன்று குறிப்பாகவும் உள்ளன.
தாகூரின் கதைகள் பல மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சரத் சந்திரரின் படைப்புகளும் தமிழில் கிடைக்கின்றன.
திராவிட மொழிச் சிறுகதைகள்
திராவிட மொழிகளும் தமிழிற்குச் சில சிறுகதைத் தொகுதிகளை வழங்கியுள்ளன.
ஆங்கில மொழி அறிந்தோரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நாடகங்களில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
ஆங்கிலத்திலிருந்து ஷேக்ஸ்பியர் தவிர வேறு சிலரது படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஹர்ஷனின் ரத்நாவளி 1878, 1918 ஆகிய ஆண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
சூத்திரகனின் மிருச்சகடிகாவும் தமிழில் தரப்பட்டுள்ளது. இதனை மண்ணியல் சிறுதேர் என்று பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் தமிழாக்கினார்.
பவபூதியின் உத்தர ராம சரித்திரம், மாலதி மாதவம் என்பன தமிழில் வந்துள்ளன.
பாஸகவியின் பிரதிமா நாடகம், தூதகடோத்கசம், ஸ்வப்ன வாசவ தத்தம் என்பன தமிழில் அமைகின்றன.
பாணபட்டனின் காதம்பரி மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
விசாக தத்தனின் முத்ரா ராக்ஷஸம் தமிழில் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பலமொழிகளிலிருந்து நாடகங்கள் தமிழில் வந்துள்ளன. ஆயினும் சிறுகதை புதின மொழிபெயர்ப்புகளை ஒப்பிட நாடகத்தின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
பாடம் - 3
முதல் இதழ் எனக் கருதப்பட்ட ‘தமிழ் மேகசின்’ – இல் (1856) பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் முதன்முதலாக வெளிவரத் தொடங்கின.
இதழ்களின் நோக்கம்
தகவல் தொடர்புச் சாதனங்களில் முக்கியமானதும் முதன்மையானதுமாகிய இதழ்கள் இந்தச் சில நூற்றாண்டுகளில் செய்திகளை வெளியிடுவதனைக் கடமையாகக் கொண்டிருந்தன. அவற்றுடன் அறிவியல் செய்திகளையும் வெளியிடுவது அவற்றின் பணிகளில் ஒன்றாக இருந்தது. சில நேரம் அறிவியல் செய்திகளை மட்டுமே தாங்கிய இதழ்களும் வெளிவந்துள்ளன. இவை, குறிப்பாக மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பலவற்றைக் கொண்டு இருப்பதால், மொழிபெயர்ப்புப் பணியில் இதழ்களும் ஈடுபட்டன என்பதை அறியலாம்.
மருத்துவ இதழ்கள்
இவற்றில் ‘அகத்தியர் வர்த்தமானி’ (1870) -யைத் தொடர்ந்து ‘சுகசீவனி’ (1887) என்ற பெயரில் பெங்களூரிலிருந்து வெளிவந்தது. இதில் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் ஆங்கிலத்தில் அமைந்த கட்டுரைகளும் இடம்பெற்றன. 1891இல் ‘சுகாதார போதினி’ என்ற இதழில் பொதுச்சுகாதாரம் பற்றிய செய்திகள் வெளியாயின.
சட்ட இதழ்கள்
சட்டத்துறை சார்ந்த செய்திகளைத் தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும் வெளியிட்ட இதழ்களைக் காணலாம். சித்தார்த்த சங்கிரகம் (1887) என்ற இதழ் முதல் இதழாகக் காணக் கிடைக்கிறது. அத்துடன் மாதாந்தர சட்டப் பத்திரிகை (1893), வக்கீல் குமாஸ்தா ஜர்னல் (1914), ஹைக்கோர்ட்டுத் தீர்மானங்கள் (1914), பத்திர லேகரி (1922), வக்கீல் (1944), லாயர் போன்ற இதழ்களும் வெளியாகியுள்ளன.
வணிகம் பற்றிய இதழ்கள்
வணிகச் செய்திகள், வணிக வரிச் செய்திகள் எனப் பல செய்திகளை வெளியிட்ட இதழ்களாகப் பின்வரும் இதழ்களைக் காணமுடிகிறது. வர்த்தகமித்திரன், தனவணிகன் (1930), வர்த்தக ஊழியன் (1932), வியாபாரக்குரல் (1954), வர்த்தகக் குரல் (1964), வணிகச் செய்தி (1949), விற்பனைவரித் தகவல் (1964), வர்த்தக உலகம் (1967).
தொழில்
விவசாய தீபிகை (1904), விவசாய வர்த்தினி (1907), கருவிகள் (1909), ஏல விவசாயி (1926). மேழிச் செல்வம் (1943), உழவர் நாடு (1949), விவசாய உலகம் (1916), உரமும் பயிரும் (1962), உழவுத் தொழில், ஏர் முரசு (1967), விவசாய விஞ்ஞானம், டெய்லி திருப்பூர்க் காட்டன் பிரஸ் (1947), டைலர் (1948), நடிகன் குரல் (1954), தையற்கலை, உஷா தையல்கிளப், மோட்டார் (1958), டிரான்சிஸ்டர் மெகானிசம், மோட்டார்த் தொழில் (1966), பனைச்செல்வம், செய்தி மடல் (சக்தி சர்க்கரை ஆலை) எனப் பல்வேறு தொழில் சார்ந்த செய்தி இதழ்கள் வெளிவருகின்றன.
அறிவியல் மற்றும் திரைப்பட இதழ்கள்
1897ஆம் ஆண்டு, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளையால் தொடங்கப்பட்டு 1904வரை வெளிவந்த ‘ஞானபோதினி’ என்ற இதழில் அறிவியல் தொடர்பான கட்டுரைகளே அதிகம் இடம்பெற்றன. இதேபோன்று கல்யாண சுந்தர நாடன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட ‘சித்தாந்த தீபிகை’ என்ற இதழில் சமயம், தத்துவ ஞானம் துறை சார்ந்த கட்டுரைகளுடன் இயற்பியல், வேதியியல் கட்டுரைகளும் இடம்பெற்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழ் நூல்கள் கணிசமாக வெளிவந்தன. அதே போன்று இதழ்களும் வெளியாயின. இதில் ”தொழிற்கல்வி” இதழாக 1914இல் வெளிவந்தது. அதே ஆண்டில் மருத்துவ அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதற்காக ”வைத்தியக்கலாநிதி” என்ற இதழ் வெளியானது. 1911இல் தமிழர் கல்விச் சங்க வெளியீடாக வந்த ‘தமிழர் நேசன்’ என்ற இதழ் ஒரு தனித்துவமான போக்கில் அறிவியல் செய்திகளையும் குறிப்புகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் நல்ல தமிழில் வெளியிட முனைந்தது. அறிவியல் செய்திகளை வெளியிடுவதற்கென்றே சில இதழ்கள் வெளிவரத் தொடங்கின. தமிழ்க்கடல் (1933), மணிமாலை (1935), கலைக்கதிர் (1945), தோல் விஞ்ஞானம் (1962), இளம் விஞ்ஞானி (1965), களஞ்சியம் (1979) எனப் பல இதழ்கள் வெளியாயின.
தமிழகத்தில் அறிவியலின் அளவற்ற வளர்ச்சியின் அடையாளமாக விளங்கும் திரைப்படம் குறித்த இதழ்கள் பலவும் வெளியாகியுள்ளன. முதல் திரைப்பட இதழ் சினிமா உலகம் (1935) ஆகும். கே.சுப்பிரமணியம் ‘பிலிம் மெயில்’ என்ற இதழை வெளியிட்டுள்ளார்.
நாடோடி (1938), பேசும்படம் (1941), சினிமாக் கதிர் (1952), தமிழ் சினிமா (1953), தென்றல் திரை (1953), சினிமா ஸ்டார் (1954), மதி ஒளி (1955), குண்டூசி (1957), நாரதர் (1958) போன்ற இதழ்கள் வெளிவந்துள்ளன.
தமிழக அளவில் மட்டும் அல்லாமல் பன்னாட்டு அளவில் அறிவியலைத் தெளிவாகவும் சொற்செட்டோடும், பொருட் செறிவுடனும் தமிழில் தர முடியும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்த்தி நிலைநாட்டிய பெருமை ‘யுனெஸ்கோ கூரியர்’ என்னும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும். இவ்விதழ் 34 மொழிகளில் வெளிவருகிறது. இவ்விதம் 1967 ஜூலை முதல் தமிழில் வெளிவரத் தொடங்கியது.
இது கல்வி, அறிவியல், பண்பாடு இதழாக அமைந்திருந்தது. இருப்பினும் மிக அதிக அளவில் இடம் பெறுவது அறிவியல் கட்டுரைகளே ஆகும். அறிவியல் செய்திகளை விளக்குவதற்கு விளக்கப்படங்கள் இன்றியமையாதன ஆகும். பக்கந்தோறும் படங்களும், விளக்கக்குறிப்புகளும் வெளியாகும் இந்தத் திங்கள் இதழில், தற்கால அறிவியல் துறைகள் பலவற்றில் உள்ள தற்போதைய முன்னேற்றங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி அத்துறைகளைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. அவை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு மேல்நாட்டு இதழ்களுக்கு இணையாக ஆங்கில இதழ் வெளியாகும் அதே சமயத்தில் தமிழிலும் வெளியிடப்படுகின்றன. இந்த இதழில் வெளியாகும் கட்டுரைகள் முழுவதும் மொழிபெயர்ப்புகளாகவே வெளியிடப்படுகின்றன. மொழிபெயர்ப்பு என்ற உணர்வே வாசகர்களுக்கு ஏற்படாவண்ணம் மூலக்கட்டுரை போன்ற மொழி அமைப்பில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
இவ்விதழ் வாயிலாகப் புதிய கலைச்சொற்கள், கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் கலைச்சொற்கள், உருவாக்கப்பட்டன.
தமிழ் நாளிதழ்களில் அறிவியல் கட்டுரைகளை அவ்வப்போது வெளியிடும் நாளேடாகத் தினமணி திகழ்கிறது. எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறது. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பல்வேறு பிரச்சினைகளை வல்லுநர்களைக் கொண்டே விவாதிக்கும் இதழாக அமைந்து வருகிறது.
‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பு, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தமிழில் அறிவியல் வளர்ந்த வளர்ச்சியை மதிப்பிடுவதோடு, அறிவியல் வளர்ச்சிக்காக எதிர்காலத் திட்டங்கள் பற்றிய கருத்தரங்குகள் வாயிலாகப் பெற்ற கட்டுரைகளையும் வெளியிடுகிறது.
1916 இல் இராஜாஜியும், டி.ஜி. வெங்கடசுப்பையாவும் இணைந்து தமிழில் விஞ்ஞானச் சொற்களைப் படைக்க, ”தமிழ் விஞ்ஞானச் சொற் கழகம்” தொடங்கினார்கள். அதன் சார்பில் ”ஜர்னல் ஆப் த டமில் சயின்டிபிகல் டெர்ம்ஸ்” என்ற ஆங்கில இதழை நடத்தினார்கள்.
‘விவேக போதினி’ (1929) இதழில் அறிவியல் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றில் சில வருமாறு: ஆக்சிஜன் – உயிர்க்காற்று; ஹைட்ரஜன் – நீர்க்காற்று; பிரஸ் – பீலி; பில்டர் பேப்பர் – வடிதாள்; டெஸ்ட் ட்யூப் – ஆய்குழல்; பிளானெட் – கோள்; பவுண்டன்பென் – ஊற்றுக்கோல்; டெசிமல் சிஸ்டம் – பதின்மை ஒழுங்கு, இந்தத் தமிழ்ச் சொற்கள் நடைமுறைக்கு வராமலே போய்விட்டன.
புதிய அறிவியல் செய்திகளைத் தமிழ் இதழ்கள் வழியாகத் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர். அவர்கள் பெ.நா. அப்புசாமியும் சுத்தானந்த பாரதியாரும் ஆவர்.
1933இல் சென்னையிலிருந்து வெளிவந்த ”தமிழ்க்கடல்” ஒரு அறிவியல் மாத இதழாகும். இதன் ஆசிரியர் கா.நமச்சிவாய முதலியார் ஆவார். அதன் முதல் இதழில் ‘பூமி சாத்திரம்’. ‘வான சாத்திரம்’, ‘தாவர சாத்திரம்’ ‘இரசாயன சாத்திரம்’. ‘பௌதிக சாத்திரம்’ என்ற கட்டுரைகளை எழுதினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் விரைந்து வளரத் தொடங்கியது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டு இருந்த காலம் அது. ஆங்கிலேயர்களின் தாய்மொழியும் பாட மொழியும் அறிவியல் தொழில்நுட்பச் செய்திகளை ஏந்தி வந்த மொழியும் ஆங்கிலமாகவே அமைந்ததால் அவர்களைப் பொருத்த வரையில் அறிவியலை உணர்ந்து கொள்ள அவர்களுக்குச் சிக்கல் ஏற்படவில்லை. அதே நேரம் ஆங்கில மொழி அறியாதவர்களுக்கு அந்தச் சிக்கல் பெருகியது. இதற்காக மொழிபெயர்ப்பு அவசியமாயிற்று.
நம் நாட்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கமும் புதிது. அவர்களது மொழியும் புதிது. அதன் வழி வந்த அறிவியல் செய்திகளும் புதியன. ஆங்கிலேயரின் ஆட்சியில் உருவான கல்விக் கொள்கையில் அறிவியலும் ஆங்கில வழி கற்பிக்க வழி இருந்தது. இந்த நிலைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தொடர்ந்தது. இந்த அறிமுகத்திற்குப் பிறகு, அவற்றைத் தமிழில் கற்றால் இன்னும் சிறப்படையலாம் என்ற வேட்கை அக்காலத்தில் ஏற்பட்டது.
இவ்வேட்கையை நிறைவேற்றும் பொறுப்பை ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும், கிறித்துவ சமய அமைப்புகளும் அறிவு வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட தனிப்பட்ட அறிஞர்களும் தமிழ் வழி அறிவியல் பரப்பும் வழி பற்றி முனைப்புடன் சிந்தித்தனர்.
அறிவியலைத் தமிழில் தருவதில் பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருந்தது.
முதலாவதாக, பள்ளிக் கூடங்களில் கல்வி கற்கும் இளம் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் அறிவியல் பாடங்களை எளிமையாக எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக அறிவியல் செய்திகளைப் பொதுமக்கள் விரும்புமாறு கட்டுரை வடிவிலும் கதைப்போக்கிலும் எளிய வடிவில் தருதல் வேண்டும்.
இந்த அடிப்படைகளில் அறிவியல் செய்திகளை வெளியிட நூல்களை உருவாக்கியவர்கள் தொடக்கக் காலத்தில் மொழிபெயர்ப்பு ஒன்றையே துணையாகக் கொண்டனர். அவற்றைக் கற்று உள்வாங்கிக் கொண்டு எளிய தமிழில் எழுதப்பட்ட படைப்புகளையும் அறிமுக நூல்களாக வெளியிட்டனர்.
இதில் முதல் கட்டமாக முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழி ஆக்கப்பட்டது. பாடமொழி தாய்மொழியாகிய தமிழாக இருந்ததால் அதற்கு இணங்கப் பாடநூல்கள் தமிழில் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தொடக்கத்தில் ஆங்கிலப்பாட நூல்களை மொழிபெயர்த்து, தமிழாக்கம் செய்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1850க்கு முன்னர் சென்னைப் பாட சாலை புத்தகச் சங்கம் உருவாக்கப்பட்டுப் பாடநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.
1854இல் தென்னிந்திய கிறித்தவ பாடசாலைப் புத்தகச் சங்கம் உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் இவ்விரண்டும் தமிழ் மொழிபெயர்ப்பில் துணை நின்ற நிறுவனங்கள் ஆகும்.
அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்த முதல் மருத்துவர் டாக்டர் ஃபிஷ் கிரீன் (Fish Green) ஆவார். மருத்துவ நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தவர். 1848ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்த மருத்துவ ஆசிரியர்.
முதல் கணித நூல்
தமிழ் நாட்டில் எண்ணையும் எழுத்தையும் கண்ணாகப் போற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டு எண்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எண் என்பது அறிவியலையும் எழுத்து என்பது கலையையும் குறிப்பதாகக் கூறுவர்.
எண்களைப் பற்றிய அறிவும், அளவை பற்றிய அறிவும், நிறுத்தல் அளவை பற்றிய அறிவும் தமிழர் முழுமையாகப் பெற்றிருந்தனர். இன்று அவை பற்றிய நூல் கிடைக்கவில்லை.
1849ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே சில கணித நூல்கள் வெளிவந்தன. இவ்வகையில் முதன் முதல் வெளிவந்த நூல் ”பால கணிதம்” என்னும் நூலாகும். இந்த நூல் முழுமையான மொழிபெயர்ப்பாக அமையாமல் ஆங்கிலக் கணித முறைகளின் சிறப்பியல்புகளும் தமிழ்க் கணித முறையின் சிறப்புக் கூறுகள் சிலவும் இணைந்த முறையில் வெளிவந்தது. இந்நூல் முழுமையான தமிழ் மூல நூல் என்ற தோற்றத்துடன் வெளியானது.
1855இல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரோல், விஸ்வநாதன் என்ற இருவரும் அல்ஜீப்ரா கணிதத்தைத் தமிழில் ‘இயற்கணிதம்’ என்ற பெயரிலும் ”வீர கணிதம்” என்ற பெயரிலும் தமிழ் வடிவில் வெளியிட்டனர்.
1861இல் ஆர்னால்டு என்பவர் ‘வான சாஸ்திரம்’ என்ற நூலைத் தழுவலாக வெளியிட்டார். சாலமன் என்பவர் ”க்ஷேத்திர கணிதம்” (Geometry) நூலை வெளியிட்டார்.
1865இல் ஜெகந்நாத நாயுடு என்பவர் சரீர வினா விடை (A catechism of
அதே நேரத்தில் ஃபிஷ் கிரீனின் முனைப்பான மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்த ‘கெமிஸ்தம்’ (Chemistry) எனும் நூலும் சிறப்பான மொழிபெயர்ப்பு நூலாகும்.
சாப்மன் என்பவர் மொழிபெயர்த்த ”மனுச அங்காதி பாதம்” என்ற நூலும், ஃபிஷ் கிரீனின் மேற்பார்வையில் மொழிபெயர்க்கப்பட்ட ‘இரண வைத்தியம்’ (The science and art of surgery), ”மனுசகரணம்” (
1868ஆம் ஆண்டு லூமிஸ் என்பவர் ‘தி ஸ்டீம் & தி ஸ்டீம் எஞ்சின்’ என்ற நூலைத் தமிழில் வெளியிட்டார். இந்த நூலில் பயன்பட்ட விளக்கப் படங்களுக்கான எண்கள் கூடத் தமிழ் எண்களாக அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நூல்களில் பல இலங்கையில் இருந்து வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
1938ஆம் ஆண்டிலேயே கல்லூரி நிலையில் தமிழில் அறிவியலைப் பாடமாகப் பயிற்றும் வகையில் வேதியியல் (Chemistry) நூல்களின் இரண்டு தொகுதிகளை மொழிபெயர்ப்பாகவும், தழுவலாகவும் தமிழில் தயாரித்து வெளியிட்டது.
அவ்வாறே 1941ஆம் ஆண்டு இயற்பியல் (Physics) நூலின் இரு தொகுதிகளை அதேபோன்று தயாரித்து வெளியிட்டது.
டாக்டர். வா.செ.குழந்தைசாமி அவர்கள் துணைவேந்தராக இருந்தபோதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் வழியாக ‘களஞ்சியம்’ என்ற காலாண்டு இதழும் வெளிவருகிறது. ‘அறிவியல் இலக்கியக் கழகம்’ என்ற அமைப்பும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து, 1987இல் அறிவியல், தொழில்நுட்பச் செய்திப் பரிமாற்றம் என்ற இருவாரக் கருத்தரங்கை நடத்தி எந்தெந்த வகைகளில் அறிவியல் தமிழை வளர்க்கலாம் என்று ஆய்ந்தன. அதில் மொழிபெயர்ப்புக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதேபோன்று குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளும் பெரியசாமித் தூரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டன.
இதே காலக்கட்டத்தில் 1954இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை, மூலவடிவத்திலும், மொழிபெயர்ப்பாகவும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களும் படிக்கும் அளவிற்கு எளிய நடையில் அவை எழுதப்பட்டுள்ளன. முதல்முறையாகத் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான பற்றவைப்பு (Welding), உருவமைக்கும் பொறி (Shaping machine), தச்சுத் தொழில் (Carpentry) போன்ற நூல்களைத் தமிழில் பட விளக்கங்களுடன் அந்த நிறுவனம் வெளியிட்டது.
1951இல் தொடங்கப்பட்ட நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் பல அரசியல் நூல்களையும் ரஷ்ய, சீன நூல்கள் பலவற்றையும் மொழி பெயர்த்துள்ளது. அத்துடன் அறிவியல் போன்ற புதுத்துறைகள் சார்ந்த தொடக்க நூல்கள் பலவற்றையும், மருத்துவ நூல்கள், W
இந்த நிறுவனம் பிற்காலத்தில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமாக மாறியது. மத்திய அரசின் நிதியுதவியுடன், கல்லூரி மாணவர்கள் தமிழில் கற்பதற்காக எல்லாத் துறைகளிலும் மொழிபெயர்ப்பாகவும், மூலநூலாகவும், தழுவலாகவும் பெருமளவில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் மொழியில் கோப்புகள் அமைய வேண்டும் என்பதற்காகவே, அரசு அலுவலர்கள் தமிழில் கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழ் அறியாத பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக வந்தாலும் அவர்களும் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆட்சி விதி இருக்கிறது. ஆட்சியை தமிழில் நடத்த வாய்ப்பான துறை ஆட்சித்துறைதான். ஆங்கிலச் சொற்களுக்குத் தொடக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளை உருவாக்கிப் பயன்பாட்டில் விட்ட பிறகு மக்களே அவற்றைச் சிறந்த சொல்லாக்கமாக்கி விடுவார்கள்.
தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மூலமாக ஆட்சித்துறைக்கான அத்தனை ஆணைகளும், குறிப்புகளும், விதிகளும், துணை விதிகளும் மொழிபெயர்த்துத் தரப்படுகின்றன.
ஆங்கில மருத்துவமுறைகளைத் தமிழில் கற்பிக்க மருத்துவ நூல்களும், கலைச்சொற்களஞ்சியமும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சட்டத்தைத் தமிழில் வரைபவர்கள், மொழிபெயர்ப்பு மற்றும் சட்ட வரைவு முறைகள் தொடர்பாகவும், மொழிஅமைப்பின் அடிப்படையில் சட்டத்தைப் பொருள் கொள்வதிலும், ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் தேடியும் இடர்ப்பட நேர்கிறது. ஆங்கிலமொழி வளமான சொற்களையும், மாதிரி நூல்களையும், வழக்குகள் கொண்ட தொகுப்புகளையும் மிகுதியாகப் பெற்றுள்ளது. இன்னும் வகை வகையான சட்ட அகராதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் தமிழில் சரியான அளவில் அவசரத்திற்குப் பயன்படுத்தும் வகையில் மாதிரி நூல்களோ, சட்டத் தமிழ்ச் சிறப்பு அகராதிகளோ எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை.
பாடம் - 4
முதல் பாடத்தில் சிறந்த மொழிபெயர்ப்புகளையும் இரண்டாம் பாடத்தில் இலக்கிய மொழிபெயர்ப்புப் பற்றியும் மூன்றாவது பாடத்தில் பிறதுறை மொழிபெயர்ப்புகள் பற்றியும் அறிந்து கொண்ட நீங்கள் இப்பகுதியில் இக்காலத்தில் இலக்கியத்துறையில் நடந்துள்ள மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றி அறிய இருக்கிறீர்கள்.
மொழிபெயர்ப்பு வளர்ந்த வரலாற்றை முந்தைய பாடங்களைப் படித்த போது அறிந்திருப்பீர்கள். இக்கால இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்ற நிலையில், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரைகள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், இலக்கிய ஆய்வுக் கோட்பாடுகள் எனப் பலவற்றை இந்தப் பாடம் உங்களுக்கு விரித்துக்கூற முற்படுகிறது. மேலும் இந்திய மொழிகள், உலக மொழிகள் போன்றவற்றிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட தன்மையை அறிவிக்க முற்படுகிறது.
சாகித்ய அகாடமி, தேசிய புத்தக நிறுவனம் போன்ற மைய அரசு நிறுவனங்கள் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நூல்கள், சில தனியார் பதிப்பகங்களின் வெளியீடுகள் எனப் பல்கிப் பெருகிய இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ்மொழி வளர் இலக்கியத் தொடர்ச்சிக்குக் காரணமாக இருப்பதோடு புதிய இலக்கிய வடிவம், வகைகள் உருவாவதற்குக் காரணமாகவும் இருந்துள்ளன; இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் அமைந்த நாடுகளில் ஒவ்வொரு மொழியிலும் சமூகப் பண்பாட்டு வெளிப்பாடுகளாய் அமைந்த இலக்கியங்கள் பல தோன்றி மக்களால் படிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தோன்றும் இலக்கியங்கள் அந்தந்த மாநிலத்திலேயே நின்றுவிடாமல், அந்தந்த மொழிபேசும் மக்கள் மட்டுமே கற்றுப் பயன்படுவதாக நின்றுவிடாமல் பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் வாயிலாகச் சென்று அப்பயனை விளைவிக்க வேண்டும். எனவே, இந்திய நாட்டின் மாநில மொழிகளுக்கிடையேயான இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்றும், அண்டை அயல்நாடுகளிலிருந்து வந்த இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்றும் அடையாளம் காட்ட வேண்டியது உள்ளது.
ஐரோப்பியக் கல்வியின் தாக்கத்தினால் புதிய இலக்கிய வகைகள், இந்திய மொழிகளுக்கு அறிமுகமாயின. இலக்கியங்களை அணுகுவதற்குரிய நடுநிலையான திறனாய்வு நெறிமுறைகளும் அரும்பின. புதிய செய்திகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஓரளவிற்கு, அப்போது கற்றவர்களிடம் பெருகியது. இந்த அறிவுப் பசியைத் தணித்துக் கொள்வதற்காகச் சில அறிஞர்கள் பிறமொழி நூல்களைக் கற்று இந்திய மொழிகளில் ஆக்கம் செய்ய முயன்றனர்.
ஆங்கிலேயர் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிலைநாட்டிய பிறகு, இந்திய மொழிகளும், ஆங்கிலமும் அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலர் தேவைப்பட்டனர். கிழக்கிந்திய வணிக நிறுவனங்களுக்கு இருமொழி வல்லுநர்களாக உதவிய இந்திய நாட்டு மக்களைத் துவிபாஷி (துபாஷி-இருமொழியாளர்) என்னும் பெயரால் அழைத்தனர். ஒரு நூற்றாண்டிற்குள் இவர்கள் செல்வாக்குப் பெருகி, மிகப்பெரிய அதிகாரிகளாக வாழ்வு பெற்றனர்.
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்து ஆட்சிப் பொறுப்பையும் நீதித்துறை நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கு அந்தந்த வட்டார மொழிகளைப் பயிற்றுவிக்கும் பொறுப்பினை அரசு ஏற்றது. இதன் மூலம் வட்டார மொழி நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குரிய வாய்ப்பும் உந்துதல் சக்தியும் பெற்றன. இத்தகைய பின்னணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்புக் கலை நன்கு வளரத் தொடங்கியது.
இலக்கியத் துறையில் புதினம் என்ற நாவல், சிறுகதை முதலியன இந்தியர்களைக் கவர்ந்தன. கட்டுரை என்னும் புதுவகை உரைநடை இலக்கியம், தன் உணர்ச்சிப் பாடல்கள் (Lyrics), குறுங்காப்பியங்கள், நாடகங்கள், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ போன்ற இலக்கிய வகைமைகள் அறிமுகமாயின. இதன் விளைவாகத் தமிழில் பல மொழிபெயர்ப்பு நூல்கள் தோன்றி வளர்ந்தன.
மேலைநாட்டு மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டவை.
சீன, ஜப்பானிய மொழிகளாகிய ஆசிய மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.
ஆங்கில மொழி நூல்கள்
வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை.
தென்னிந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை.
மேலே சுட்டப்பட்டுள்ள பாகுபாட்டின் அடிப்படையில் இந்தப் பாடத்தில் தற்கால மொழிபெயர்ப்புகளைச் சுட்டிக்காட்டலாம். ஏறத்தாழ பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வரும் மொழிபெயர்ப்புப் பணியில் தற்கால மொழிபெயர்ப்புகள் இலக்கியத் துறையில் பல்கிப் பெருகி உள்ள சூழ்நிலையைக் காணலாம். மேலும் நாள்தோறும் நடைபெற்று வரும் மொழிபெயர்ப்புகள் நூல்களாக வந்த வண்ணம் உள்ளன.
பண்டைக் காலத்திலிருந்தே நாகரிகத்தில் சிறந்து விளங்கிய கிரேக்க ரோமானிய மொழிகள் ஏராளமான கலைச்செல்வங்களையும், இலக்கியச் செல்வங்களையும் உலக மொழிகளுக்கு வழங்கியுள்ளன. தற்காலத்தில் அம்மொழிகள் வழக்கில் இல்லை என்றாலும், ஆங்கில மொழியில் கலந்துள்ள சொற்களின் வாயிலாக அவற்றைப் பற்றிய உண்மைகளை அறிய முடிகிறது.
சாக்ரடீஸ், பிளேட்டோவைத் தொடர்ந்து அரிஸ்ட்டாட்டிலின் கவிதையியலை (Poetics) அ.அ.மணவாளன் மொழிபெயர்த்து அரிஸ்ட்டாட்டிலின் கவிதையியல் என்ற பெயரில் தந்துள்ளார்.
ஹோமரின் இலியத் என்னும் காப்பியம் தமிழில் முழுமையாகக் கீழ்த்திசைச் சுவடிநூல் நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் போன்று ஹோமரின் ஒடிசி என்ற காப்பியமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஸோபோக்ளிஸ் எழுதிய கிரேக்க நாடகம் எடிபஸ் வேந்தன், மன்னன் ஈடிபசு என்ற பெயர்களில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ் வாய்ந்த உமர்கய்யாமின் பாடல்கள், தமிழில் பன்னிரண்டு அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் மொழிபெயர்ப்புச் செய்த அறிஞர்களுக்குப் பாரசீக மொழிப்பயிற்சி இல்லை. எனவே அவர்கள் ஆங்கிலத்தில் பிட்ஜெரால்டு (Fitzerald) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஆங்கில நூலைத் தழுவி, தமிழாக்கம் செய்துள்ளனர். இந்தப் பன்னிரண்டு மொழிபெயர்ப்புகளுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சாமி சிதம்பரனார், ச.து.சு.யோகியார் ஆகிய மூவரும் செய்துள்ள மொழிபெயர்ப்புகள் தமிழுக்கு வலிவையும் பொலிவையும் ஊட்டியுள்ளன.
மேற்கு ஆசிய நாடுகளில் வளமிக்க மொழிகள் அரபும் பாரசீகமும் ஆகும். அரபு மொழிகளில் ஏராளமான செய்யுள் இலக்கியங்கள் சிறப்புற்று விளங்குகின்றன.
அரபு மொழிக் கதைகள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. ஆயிரத்து ஓர் இரவுகள் என்ற அரபுக் கதைத் தொகுப்பை நான்கு தமிழ் அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். இந்தத் தொகுப்பு மட்டும் இல்லாமல், அலாவுதீன் அல்லது அற்புதத் தீபம், தாவீது கதை போன்ற அராபியப் புதினங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
இஸ்லாம் சமயக் கவிஞர் இக்பாலுடைய கவிதைகள் இக்பால் கவி அமுதம், இக்பாலின் ஞானோதயம் என்னும் பெயர்களில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. கலீல் ஜிப்ரான், ஜலாலுதீன் ரூமி முதலியோரின் படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் மக்கள் படித்து அறியக் கூடியனவாக உள்ளன.
அனைத்துத் துறைகளிலும் இயற்றப்பட்ட அரபு மொழி நூல்கள் ஸ்பெயின், சிசிலி, சிரியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புப் பிரதியெடுப்புப் பணிகள் வாயிலாக, 12ஆம் நூற்றாண்டில் இருந்து மறுமலர்ச்சிக் காலத்திற்குள் லத்தீன் மொழியில் வெளிவந்து விட்டன.
மேலை நாடுகளில் அக்காலத்தில் மொழிபெயர்ப்புத் தரமும் அறிவுத் திறனும் குன்றியிருந்த போதிலும் இடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் மேலைநாடுகள் முழுவதிலும் இந்த இலத்தீன் மொழிபெயர்ப்புகள் அறிவு வேட்கையை அதிகப்படுத்தின. உயிரியல் துறையில் பண்டைக் காலத்தவரின் புகழ் மிகு சாதனைகளை அரேபியர் பேணிக் காத்தனர். அதோடு அவர்களே தேடிச் சேர்த்த புதிய விளக்கங்கள் மானுட அறிவை மேலும் வளப்படுத்தின. அனைத்துலகச் சமுதாய நலனுக்காகவும் பணிபுரிந்தன.
கண்நோய் மருத்துவத்தில் நிகழ்ந்த இஸ்லாமிய சாதனைகள் பண்டைய கிரேக்கர்கள் அமைத்த அடித்தளத்தின் மீது எழுந்தவையே ஆகும். கண்நோய் மருத்துவம் பற்றி தாலமி எழுதிய ஆய்வு நூல் தொடக்க நாளிலேயே அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. அரபு பகுதியை அடிப்படையாகக் கொண்ட இலத்தீன் மொழிபெயர்ப்பு ஒன்று 12ஆம் நூற்றாண்டில் சிசிலியில் உருவாக்கப்பட்டது. கிரேக்க மூலமும் அரபு மொழிபெயர்ப்பும் மட்டும் எஞ்சியுள்ளன.
அரபு நூலாசிரியர்கள் சிலர் தங்களுடைய நூல்கள் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டதால் இலத்தீன் வடிவமாக்கப்பட்ட பெயர்களைத் தாங்கியவர்களாகப் புகழ் பெற்றார்கள்.
ஏழை படும் பாடு என்ற பெயரால் சுத்தானந்த பாரதியாரும், அம்பலவாணன் அல்லது நாவாய்க் கைதி என்ற பெயரில் பி.எஸ். சுப்பிரமணியனும், விக்டர் யூகோவின் லெஸ் மிசரபிள் என்ற பிரெஞ்சு நாவலைத் தமிழில் தந்துள்ளனர். அலெக்சாண்டர் டூமாசின் லீகாம்டே மாண்டி கிறிஸ்டோ என்ற நாவல், மாண்டி கிறிஸ்டோ பெருமகன் எனவும், அமரசிம்மன் எனவும் தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.
அலெக்சாண்டர் டூமாசின் திரி மஸ்கடியர்ஸ் என்ற நாவலை, அன்னியின் காதல் எனவும், மூன்று வீரர்கள் எனவும் மூன்று போராளிகள் எனவும் தமிழ்ப்படுத்தியுள்ளனர். விக்டர் யூகோவின், லோம்கிரி எனும் புதினத்தைச் சுத்தானந்த பாரதியார் இளிச்சவாயன் எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய Toilers of the sea கதையைக் கடல் மறவர் எனவும் கடல் வேட்டை எனவும் மொழிபெயர்த்துள்ளனர்.
வான்வெளிப் பயணத்தைப் பற்றி ஜூல்ஸ் வோர்ன் என்பவர் எழுதிய கற்பனைக் கதைகளை ஆகாசப் பிரயாணம் எனவும் 80 நாளில் உலகம், வானவெளியில் ஐந்து வாரங்கள் எனவும் பலவாறாக மொழிபெயர்த்துள்ளனர்.
எமிலி ஜோலாவின் ஜெர்மினல் எனும் புதினத்தைச் சுரங்கம், தப்பிப் பிறந்தவள் என்ற பெயர்களில் தமிழில் தந்துள்ளனர். அவரது நாநா என்ற புதினத்தை, கசங்கிய மலர் எனவும் தாசியின் மகள் எனவும் பல்வேறு பெயர்களில் தமிழ்ப் புதினங்களாகப் பெயர்த்துள்ளனர். மாப்பசானுடைய கதையும் கருத்தும், காதல் சக்கரம், வாழத் தெரியாதவன் போன்றனவும் புதினங்களாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
அனதோல் பிரான்ஸ் என்பவரின் ராஜிவாணி என்னும் புதினத்தை, சாது சவானி என்று தமிழாக்கியுள்ளனர். இவை தவிர வேறு பல புதினங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நாடகங்கள்
ஐரோப்பிய மொழி நாடகங்களில் பிரெஞ்சு மொழி நாடகங்கள் நடப்பியல் பண்பு வாய்ந்தனவாகப் போற்றப்படுகின்றன. பிரெஞ்சு மொழியை வளப்படுத்திய நாடக ஆசிரியர்களுள் மோலியர் முதன்மையானவர். அவரது நாடகங்கள் பல தமிழில் மொழிபெயர்ப்புகளாகவும் தழுவல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தி நேவரி ஆப் ஸ்கால்பின் என்ற மோலியருடைய நாடகத்தைப் பம்மல் சம்பந்த முதலியார் காளப்பன் கள்ளத்தனம் என்ற பெயரில் தழுவலாக அமைத்துள்ளார்.
இதே நாடகத்தை பி.ஸ்ரீ.ஆச்சார்யா என்பவர், குப்பன் பித்தலாட்டங்கள் எனத் தமிழ்ப்படுத்தியுள்ளார். மோலியரின் சிறப்பு மிக்க நாடகங்கள் இரண்டனை கே.எஸ். வெங்கட்ராமன் என்பவர் இரு நாடகங்கள் என்ற படைப்பாக வெளியிட்டுள்ளார். இரசின் என்னும் நாடக ஆசிரியரின் பிரித்தானிக் குயில் எனும் நாடகத்தை வீழ்ச்சி என்ற பெயரில் ச.கிருஷ்ணராஜா தமிழாக்கம் செய்துள்ளார்.
கட்டுரைகள்
சிந்தனை வளமும் ஆழமும் வெளிப்படும் வகையில் அமைந்தவை பிரெஞ்சு மொழிக் கட்டுரைகள். பல்வேறு துறைகளின் சிந்தனைக் கருவூலமாக விளங்குகின்ற ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் (The Social contract theory) என்ற நூல் இதற்கு ஒரு சான்றாகும். இந்நூல் சமுதாய ஒப்பந்தம் என்ற பெயராலும் சனநாயகத் தத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பெயராலும், சமூக ஒப்பந்த நெறி என்ற பெயராலும் தமிழில் தரப்பட்டுள்ளது. இவற்றோடு, வால்டேர் முதல் மாப்பசான் வரை என்ற தொகுப்பு நூலில் பிரெஞ்சு அறிஞர்கள் பலருடைய சிறப்பான டி.என்.இராமச்சந்திரன் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற இந்தியச் சிந்தனையாளர்களைப் பற்றி ரொமைன்ட் ரோலண்ட் என்ற பிரெஞ்சு அறிஞர், பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ள நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
பிரெஞ்சு மொழியில் உள்ள வரலாற்று இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும், சிறுகதைகள் சிலவற்றையும் வாணிதாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.
திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான சி.பி.சிற்றரசு எமிலி ஜோலா வாழ்க்கை வரலாற்று நூலினை ஆங்கில வழியாக மொழிபெயர்த்து இரு பாகங்களாக 1952ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
எமிலி ஜோலா, அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடித் தண்டனை பெற்றவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அதிகாரத்தினை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்; சமூகப் போராளி. இவரைப் பற்றி உணர்ச்சி மயமாக சி.என்.அண்ணாதுரை 1959இல் ஏழை பங்காளன் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
பிரெஞ்சு சிந்தனையாளர்கள் பெரிய அளவில் தமிழில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர். புரட்சி செய்த பேனா வீரர் என்ற பெயரில் ப.கோதண்டராமன் 1946 இல் வெளியிட்டுள்ளார். அதில், பிரெஞ்சுப் புரட்சி என்ற தலைப்பில் வால்டேர், மொந்தெஸ்கியோ, திதெரோ, ஒல்பாக், மப்லி, ரெய்லால், மெர்சியே, ரூசோ ஆகியோரின் புரட்சிகரமான செயற்பாடுகளும் சிந்தனைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அஞ்சா நெஞ்சன் வால்டேர் என்ற நூலினை மா.இளஞ்செழியன் 1958ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
இது தவிர பிரேமா பிரசுரம் சிந்தனையாளர் வரிசையில், பிரெஞ்சு சிந்தனையாளரின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் என்ற இரு பெரும் பிரிவுகளுடன் எளிய தமிழில் நூல்களை வெளியிட்டுள்ளது.
கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இலக்கியப் படைப்புகள், பிறநாட்டு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. ஆயினும் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய மொழிகளில் வெளியான இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பண்பாட்டு நிலையில் பிரெஞ்சு, ரஷ்ய இலக்கியப் படைப்புகள் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவ்விருமொழி இலக்கியங்களும் தமிழ் மனோநிலைக்கு நெருங்கிய நிலையில் இருப்பதால் அவை சித்தரிக்கும் உலகு வாசகரிடையே அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது.
பிரெஞ்சு மொழியிலிருந்து பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பெரும்பாலுமான பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் ஆங்கிலம் வழியாகவே தமிழாக்கப் பட்டுள்ளன. வெ.ஸ்ரீராம், மதன கல்யாணி மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள் மட்டும் பிரெஞ்சு மொழி மூலத்திலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டன. அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய மாண்டி கிறிஸ்டோ நாவல் அமர சிம்ஹன் என்ற பெயரில் என்.சி.கோபால கிருஷ்ணப்பிள்ளை மொழிபெயர்ப்பில் 1914ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. இதுவே பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பாகும். ஆல்பர்ட் காம்யூவின் ல ட்ரன்ஞர் என்ற பிரெஞ்சு நாவல் அந்நியன் என்ற பெயரில் வெ.ஸ்ரீராமின் தமிழ் மொழிபெயர்ப்பில் 1980ஆம் ஆண்டு வெளியானது.
எமிலி ஜோலா, அலெக்ஸாண்டர் டூமாஸ், மாப்பசான், பால்சாக், மோலியர், விக்டர் ஹியூகோ முதலியோரின் படைப்புகள் பெருமளவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு நாட்டுச் சிறுகதை மன்னன் மாப்பசானின் நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பாகவும், தழுவலாகவும் அமைத்துள்ளது தமிழில் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். பால்சாக்கின் சிறுகதைகள் ஏராளமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் பால்சாக் கதைகள் என்ற தொகுப்பு சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. இவ்வாறே மாப்பசான் கதைகள் பல தொகுதிகளாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. சில படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்க படைப்புகள் வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
சிறுபத்திரிகைச் சூழலில் பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் எழுபதுகள் தொடங்கி, தொடர்ந்து தமிழாக்கம் பெற்று வெளியிடப்படுகின்றன. இன்று வரை சிறுபத்திரிகைகளில் பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் நேரடியாகவோ ஆங்கிலம் வழியாகவோ தமிழில் வெளியிடப்பட்டு வருகின்றன.
நார்வே நாட்டு இப்சனின் நாடகங்கள், தமிழில் பல வடிவங்களில் நூலாக்கப்பட்டுள்ளன. தி பில்லர்ஸ் ஆப் சொசைட்டி (The Pillars of Society). ஆன் எனிமி ஆப் த பீப்பிள் (An Enemy of the people) என்ற நாடகங்கள் இரண்டையும் சமூகத்தின் தூண்கள், மக்களின் பகைவன் என்ற பெயர்களில் கா.திரவியம் மொழிபெயர்த்துள்ளார்.
கோபுரத்தின் உச்சியிலே, தோல்வியின் சந்நிதானத்திலே என்ற இரு நாடகங்களையும் கா.திரவியம் மொழிபெயர்த்துள்ளார். பேய்கள் (Ghosts), காட்டு வாத்து (The Wild Duck) என்னும் நாடகங்களை துரை.அரங்கசாமி என்பவர் மொழிபெயர்த்துள்ளார். பொம்மையா? மனைவியா? (The Doll’s house) என்னும் நாடகத்தை, க.நா.சுப்பிரமணியன் தமிழாக்கம் செய்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் சில, இப்சனின் நாடகங்கள் சிலவற்றைத் தழுவியனவாக அமைந்துள்ளன. மாஜினியின் சனநாயகத் தத்துவ விளக்கப் பேச்சுகள் சாமிநாத சர்மாவால் தமிழாக்கம் பெற்றுள்ளன.
தென்மொழிகள் புத்தக டிரஸ்ட்டின் சார்பில், ஜெர்மானிய இலக்கியத்தின் சிறப்புப் பகுதிகள் எனும் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று, (Classical Readings form German literature என்ற நூலின் தமிழாக்கம்) வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மானிய மொழியில் செய்யப்பட்டுள்ளன தத்துவ ஆராய்ச்சிகளும், மொழியியல் ஆராய்ச்சிகளும் அவ்வப்போது ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்ச் சிறுகதைகளை வளப்படுத்தியதில் பெரும்பங்கு வகிப்பவை ரஷ்ய இலக்கியங்கள் ஆகும். டால்ஸ்டாயின் கதைகள் பல வகைத் தொகுப்புகளாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. செகாவ் என்பவரின் சிறுகதைகளும், குறுநாவல்களும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. புஷ்கினுடைய பல்வேறு கதைகள் தீபம் என்ற கதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ரஷ்ய சிறுகதைகள் தமிழில் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. டால்ஸ்டாயின் அக்னிப் பரீட்சை என்ற புதினம், அன்னா கரீனினா, போரும் காதலும் போன்றவை சிறப்பு மிக்க புதினங்களாகத் தமிழில் வழங்குகின்றன.
மார்க்சிம் கார்க்கியின் Mother என்ற புதினம், 1905இல் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது. ருஷிய மொழியில் 1907ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது. இந்நூல் தமிழில் அம்மா, அன்னை, தாய் என்ற தலைப்புகளில் வெளிவந்துள்ளது. 2005ஆம் ஆண்டு தாய் புதினத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இப்புதினம் கலைஞர் மு.கருணாநிதியால் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இவான் துர்கனோவ் அவர்களின் புதினங்கள், உணர்ச்சிப் பெருவெள்ளம், ஊமையின் காதல், தந்தையும் மகனும் போன்ற தலைப்புகளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய யாமா தி பிட் என்ற புதினத்தை, பலிபீடம் என்ற பெயரில், புதுமைப்பித்தன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவற்றைப் போன்ற சிறப்பு மிக்க படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
டால்ஸ்டாயின் இருளின் வலிமை என்ற நாடகமும் கோகோ என்பவரின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்ற நாடகமும் தமிழில் சிறப்பு மிக்கனவாகப் போற்றப்படுகின்றன. டால்ஸ்டாயைப் பற்றி இதுவரை பலமொழிகளில் 23,000 நூல்களும், 56,000 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. போரும் அமைதியும் (The War and Peace) என்ற நூலை எழுதி முடிக்க அவருக்கு ஏழாண்டுகள் ஆயின. முப்பத்தைந்து முறைகள் அந்நூலைத் திருத்தி எழுதினார் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
லெனினுடைய பேச்சும், எழுத்தும், அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களும் உலகின் மிகுதியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏராளமான இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் ரஷ்யாவில் ரஷ்ய மொழியில் வெளிவருகின்றன.
குங்போதங் என்ற சீனர் எழுதிய நாவலைத் தழுவி கிழக்கோடும் நதி என, த.நா.குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார்.
சி-யூ-சென் என்ற சீன நாட்டுப் பெண் எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பாரதி தமிழில் தந்துள்ளார். பெண் விடுதலை என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் அவரது கவிதைகளைப் பாரதியார் பயன்படுத்தியுள்ளார்.
தத்துவ ஞானிகளான கன்பூசியஸ், லவோட்சு, மென்ஷியஸ் முதலியோரின் நூல்களை முதுமொழிகள், நடுவுநிலைக் கோட்பாடு, சிறப்பு மிகு கல்வி, மாண்பு மிகு நெறி, மென்ஷியஸ் போதனைகள் எனும் நூல்களாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
ஜப்பானிய மொழியில், பண்டைக்கால இலக்கியங்கள் மிகக் குறைவு. ஆனால், இக்கால இலக்கியங்கள் நன்கு வளர்ந்துள்ளன. ஜப்பானிய சிறுகதைகள் மணியோசை எனும் தொகுப்பாகப் புதுமைப்பித்தனால் வெளியிடப்பட்டுள்ளன.
முரசாக்கி எனும் புகழ் மிகு ஜப்பானிய எழுத்தாளரின் கெஞ்சி மோனைகத்ரி எனும் புதினத்தை கெஞ்சிக் கதை எனும் பெயரில் கா.அப்பாத்துரையார் மொழிபெயர்த்துள்ளார். நாத்சுமே ஸோஸாகி என்பவரின் கோ கோ ரோ எனும் கதை, தமிழில் கொகோரோ எனும் புதினமாகக் கலைக்கதிர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
யாமதாகாஷி என்னும் ஜப்பானிய புதின ஆசிரியரின் உலகப் புகழ் வாய்ந்த கதையினைத் துன்பக் கேணி என்ற பெயரில் கா.அப்பாத்துரையார் தமிழாக்கம் செய்துள்ளார். மற்றும், பகற்கனவு, முத்துமாலை போன்ற ஜப்பானிய நாடகங்களும் தமிழில் வெளிவந்துள்ளன.
நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் குறும்பாட்டு (
வீழுமலரின்
அமைதி என்னே!
என்ற கவிதை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
நோகுச்சி எழுதிய மடலினைத் தம்முடைய கடிதங்களில் பாரதியார் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
வேத நாயகரின் பெண்மதி மாலை (பெண் புத்தி மாலை) என்ற நூல், பேகன் (Bacon) என்ற அறிஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் பலவற்றின் சாரமாக உள்ளதைக் காண்கிறோம். இவர் காலத்திலே வாழ்ந்த
The Golden Treasury of poems என்ற நூலில் சிறப்புற்று விளங்கும் எண்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வே.திரிகூட சுந்தரம் பிள்ளை ஆங்கிலக் கவிதை மலர்கள் எனும் நூலாகத் தமிழில் தந்துள்ளார். கிரே என்னும் கவிஞரின் கல்லறைக் கவிதை (The Elegy written in the country churchyard) எனும் சிறப்புமிகு கவிதையை நீ.கந்தசாமிப் பிள்ளை என்பவர், இரங்கற்பா எனும் நூலாக மொழிபெயர்த்துள்ளார்.
ஷேக்ஸ்பியரின் Venus and Adonis என்னும் பாடலை அ.கு.ஆதித்தனார் காமவல்லி என்ற கதைப்பாடலாகவும்,
As you like it, Macbeth, The merchant of Venice ஆகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முறையே விரும்பிய விதமே, மகபதி, வாணிபுர வணிகன் என்ற பெயர்களில் பம்மல் சம்பந்த முதலியார் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்துள்ளார்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பெரும்பாலானவை, பல பெயர்களில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவையல்லாமல், கோல்ட்ஸ்மித், பென்ஜான்சன், பெர்னார்ட்ஷா முதலிய ஆங்கில நாடகாசிரியர்களின் படைப்புகள் பல, தமிழில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் லிட்டன் பிரபு படைத்த The secret way என்ற கவிதையைக் கருவாகக் கொண்டு மனோன்மணீயம் என்ற நாடகத்தைப் படைத்துள்ளார். இந்த நாடகத்தில் இடம் பெற்றுள்ள சிவகாமியின் சபதம் என்ற கிளைக்கதை சிறந்த காதல் காப்பியமாகும். இது ஆலிவர் கோல்டு ஸ்மித் எழுதிய The vicar of wakefield என்ற புதினத்தில், இளநிலை பாதிரி என்ற தலைப்பில் உள்ள கதையைத் தழுவி எழுதப்பட்டதாகும்.
அவரைத் தொடர்ந்து கு.ப.இராஜகோபாலன், புதுமைப்பித்தன் முதலியோர் தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை மொழிபெயர்த்துள்ளனர். புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகத்துச் சிறுகதைகள் தனிநூலாக வெளிவந்துள்ளது. தொடக்க காலச் சிறுகதைகளில் பல ஐரோப்பிய இலக்கியங்களைத் தழுவியும், வங்கக் கவிஞர் தாகூரின் சிறுகதைகளைத் தழுவியும் அமைந்துள்ளன.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஆங்கிலச் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வகைக்கு மெருகூட்டி உள்ளன. சாசருடைய The Canterbury Tales எனும் கதைகள், தமிழில் கேண்ட்டர்பரிக் கதைகள் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆஸ்கர் ஒயில்டின் சிறுகதைகளைத் தொகுத்து, சிறந்த சிறுகதைகள் என்ற தலைப்பில், தமிழில் தந்துள்ளனர்.
ருட்யார்டு கிப்லிங்கின் கதைகள் வில்லியம் மாரிஸ் கதைக் கொத்து, ஆகியவை தமிழில் வெளிவந்துள்ளன. நாத்தானியல் ஹாவ்தார்னின் சிறுகதைகள், அற்புதக் கதைகள் எனவும், எட்கர் ஆலன்போவின் கதைகள் இதயக்குரல் எனவும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் ஆப்பிரிக்க இலக்கியங்கள், மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் முகிழ்த்த இலக்கியங்கள் எனப் பல ஆங்கிலம் வழியாகத் தமிழில் அறிமுகமாகியுள்ளன.
ஜேன் அயரின் அபலைப்பெண், மார்க் ட்வைனின் அரசனும் ஆண்டியும், ஆஸ்கார் ஒயில்டின் அழியா ஓவியம் என்னும் நாவலும் தமிழில் வெளிவந்துள்ளன.
டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும் என்ற நூலை, இரட்டை மனிதன் என்றும், தி லைப் அண்டு அட்வென்சர்ஸ் ஆப் ராபின்சன் குருசோ என்னும் நூலை இராபின்சன் குருசோ சரித்திரம் என்றும் மொழிபெயரத்துள்ளனர்.
சார்லஸ் டிக்கன்ஸனின், A tale of two cities என்ற நாவலை இரு நகரக் கதை என கா.அப்பாத்துரையாரும், இருபெரும் நகரங்கள் என கே.வேலன் அவர்களும் மொழிபெயர்த்துள்ளனர். ஜேன் ஆஸ்டினுடைய எம்மா என்ற புதினம் தமிழில் நால்வரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வால்ட்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ (Ivanhoe) எனும் புதினம் ஐவன்கோ என்ற பெயரால் ஆறு தமிழ் அறிஞர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்ற நாவல் கடலும் கிழவனும் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கலிவரின் யாத்திரைகள் என்ற தலைப்பில் கலிவர்ஸ் டிராவல்ஸ் எனும் சோனதன் சுவிப்ட் என்பவரது படைப்பு, இதுவரை எட்டு அறிஞர்களால் தமிழில் மொழிபெயர்க்கப பட்டுள்ளது. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆகிய இருவரும் ரேனால்ட்ஸ் நாவல்களைப் பலவகையான தழுவல் கதைகளாகத் தமிழில் வெளியிட்டுள்ளனர்.
குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற மறைமலைஅடிகளின் புதினம் ரேனால்ட்ஸ் படைத்த லைலா என்னும் ஆங்கிலக் கதையின் தழுவலாகும். வால்டேருடைய கேண்டிட் என்ற புதினம் புதிர் எனும் பெயரால் தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
பெர்னார்ட்ஷாவின் கதை கடவுளைத் தேடி அலைந்த கறுப்புப் பெண் (The black girl in search of God) என்று தமிழில் கிடைக்கிறது. உலகப் புகழ்பெற்ற புதினங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
புதுமைப்பித்தன் எழுதிய பிரேத மனிதன் என்ற புதினம், ஆங்கிலக் கதையின் தழுவலாகும். போரே நீ போ எனும் புதினம், A farewell to arms என்ற ஹெமிங்வேயின் புதினத்தைத் தழுவியதாகும். பெர்ல்.எஸ்.பக் என்ற நாவலாசிரியையின் The good earth, The Pavilion of women போன்ற புதினங்களும், நல்லமண், மங்கையர் மாடம் என்ற பெயர்களில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
அரிஸ்ட்டாட்டிலின் Poetics என்ற நூலை டாக்டர் அ.அ.மணவாளன் கவிதையியல் என்ற கட்டுரைத் தொகுப்பாக அளித்துள்ளார். எட்மண்ட் பர்க்கின் பாராளுமன்றப் பேச்சுகளும், ஆபிரகாம்லிங்கன் போன்ற சிறப்புமிகு பேச்சாளர்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பேச்சுகளும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
சார்லஸ் லேம்பின் கனவுலகக் குழந்தைகள், பேகனின் கட்டுரைகள், கார்லைலின் கட்டுரைகள், பெர்னார்ட்ஷாவின் கட்டுரைகள், இங்கர்சாலின் கட்டுரைகள், எமர்சன், இலியட், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சி.இ.எம். ஜோடு முதலிய அறிஞர்களின் கட்டுரைகள், சிறு சிறு நூல்களாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன், இலக்கிய, கலை ஆய்வுக்கான ஆய்வு அணுகுமுறைகளில் தற்காலத்தில் குறிப்பிடத்தக்க கருத்தாக்கங்களான, அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம், குறியியல், ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்றவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர். சிலர் அவற்றைக் கற்றுக் கருத்துக்கோவையாகத் திரட்டித் தந்துள்ளனர்.
நேர்காணலும் கூடத் தமிழாக்கம் பெற்றுள்ளன. அந்த வகையில், தொமாஸ் போர்ஹேவின் கியூபா நாட்டு ஃபிடல் காஸ்ட்ரோவுடனான நேர்காணலைத் தமிழில் அமரந்தா வெளியிட்டுள்ளார்.
மறைமலை அடிகள் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகம் எனவும், கே.சந்தானம் சாகுந்தலம், மேகதூதம் எனவும் தமிழாக்கம் செய்துள்ளனர்.
வடமொழியில் சிறந்து விளங்கிய மிருச்ச கடிகம் என்ற காப்பியத்தை மண்ணியல் சிறுதேர் என்ற பெயரில் மு.கதிரேசன் செட்டியாரும் மிருச்சகடிகம் என்ற பெயரிலேயே வேறு சிலரும் மொழிபெயர்த்தனர். பாணபட்டரின் காதம்பரி என்ற கதைநூலைத் தமிழில் ஆறு அறிஞர்கள் மொழிபெயர்த்து உள்ளனர்.
முத்ரா ராட்சசம், தசகுமார சரிதம் போன்ற நாடகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பர்த்ருஹரி என்ற கவிஞரின் நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் ஆகிய மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வடமொழியில் உள்ள கதா சரித் சாகரம் என்ற கதைத் தொகுப்பின் ஒரு பகுதி கதைக்கடல் என்ற பெயரில் வெ.இராகவன் அவர்களாலும், பஞ்ச தந்திரப் பாடல்கள் என்ற நூல் செய்யுள் வடிவிலும், உரைநடை வடிவிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நான்கு வேதங்களையும் உரைநடை வடிவில் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்த்தும், நேரடியாக மொழிபெயர்த்தும் தமிழில் வெளியிட்டுள்ளனர்.
சாதவாகனப் பேரரசன் ஹாலா தொகுப்பித்த காதா சப்த சதி என்ற பிராகிருத மொழிநூல் சிறந்தது. இதனை இரா.மதிவாணன் ஆந்திர நாட்டு அகநானூறு என்னும் தழுவல் நூலாகத் தமிழில் வெளியிட்டுள்ளார்.
இதனை, காதா சப்த சதி என்ற தலைப்பிலேயே பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
பாலி மொழியில் உள்ள தம்மபதமும், புத்த சாதகக் கதைகளும், தேரிக் கதைகளும் சில தொகுப்புகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
கர்மபூமி என்ற பிரேம்சந்த்தின் நாவல் அறக்கோட்டம் என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. சுதர்சன், தர்மவீர் பாரதி, ஸ்ரீலால், கோவிந்த வல்லபன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. கமலாகாந்தவர்மனின் நாடகம், அடிவானத்திற்கு அப்பால் என்ற பெயரிலும், மோகன் ராகேஷ் என்பவரின் நாடகம் அரையும் குறையும் என்ற பெயரிலும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. சாகித்ய அகாடெமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இந்தி மொழி நாவல், சிறுகதை போன்றவற்றைப் பெருமளவில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளன.
ராகுல சாங்கிருதியாயன் படைத்துள்ள சிம்ஹசேனாபதி என்ற நூலைக் கண. முத்தையா வால்காவில் இருந்து கங்கை வரை என்ற பெயரிலும், மாஜினி சிந்து முதல் கங்கை வரை என்ற பெயரிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறான சத்திய சோதனை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
காண்டேகரின் பல சிறுகதைகள் தமிழில் நூல்களாக வெளிவந்துள்ளன. அரும்பு, ஆஸ்திகன், ஓடும் இரயிலிலே, கண்ணாடி அரண்மனை, கவியும் கனியும், கருப்பு ரோஜா, கோடை மழை, தாழை முள், மிஸ் லீலா, ஜமீன்தார் மாப்பிள்ளை முதலிய சிறுகதைத் தொகுப்புகள் தமிழ் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவையாகும்.
இரு துருவங்கள், எரி நட்சத்திரம், கிரௌஞ்ச வதம், புயலும் படகும், யயாதி, சுகம் எங்கே, வெறும் கோயில், வெண்முகில் முதலிய காண்டேகரின் புதினங்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. யால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
வினோபாவின் குட்டிக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றுடன் மராத்திய சிறுகதைகள் என்ற தொகுப்பு தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியப் புதினங்களும் ஏறக்குறைய காண்டேகரின் புதினங்கள் அனைத்துமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தேவதாசி, நான், பண்டர்வாடி, புதுமைப்பெண் போன்ற மராட்டிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விநாயக் சாவர்க்கர் என்பவரின் முதல் இந்திய சுதந்திரப் போர் மராட்டிய மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட சிறந்த வரலற்று நூலாகும். தற்காலத்தில் வீரசிவாஜி, வீர சாவர்க்கர் போன்றோரது வாழ்க்கை வரலாற்று நூல்களும் தமிழில் கிடைக்கின்றன.
சரத் சந்திரருடைய பல்வேறு புதினங்களும் சிறுகதைகளும் த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி ஆகியோரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அரசியல் கைதி முதலிய வங்கச் சிறுகதைகள், இரு சகோதரிகள் போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். இத்துடன் இராமகிருஷ்ண பரமஹம்சரின் பரமஹம்சர் சொன்ன கதைகள் சில நூல்களாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள இரவீந்திரர் கதைத் திரட்டு சிறந்த நூலாகும். பங்கிம் சந்திரரின் ஆனந்த மடம் என்ற புதினம் தமிழில் ஐந்து அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வந்தே மாதரம் என்ற நாட்டு வாழ்த்துப் பாடலைப் பாரதியார் இருவகையாக மொழிபெயர்த்துள்ளார்.
பங்கிம் சந்திரருடைய புதினங்களும், சரத் சந்திரருடைய புதினங்களும் மிகுதியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வங்க மொழியின் சிறப்பு மிக்க ஏழு குறு நாவல்கள் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
தாகூரின் நகைச்சுவை நாடகங்கள், இரவீந்திர நாடகத் திரட்டு போன்ற நூல்களுக்குத் தமிழாக்கம் வெளிவந்துள்ளன. வங்காள மொழியில் இராஜாராம் மோகன் ராய் எழுதிய கட்டுரைகள் பலவும், ஆராய்ச்சி நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தெலுங்கு மொழிச் சிறுகதைகள், கதாபாரதி என்ற பெயராலும் கதா ரத்னாவளி என்ற பெயராலும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் வழங்கும் தெனாலிராமன் கதைகள் யாவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தனவாகும்.
தெலுங்கு மொழியின் நாவல்களுள் ஆயிரம் தலைநாகம், உருத்திர மாதேவி, கடைசியில் இதுதான் மிச்சம் போன்ற நாவல்கள் தமிழ் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
தெலுங்கு மொழி நாடகங்களுள் கன்யா சுல்கம், சிவகாம சுந்தரி, பரிணய நாடகம், வாழ்வில் இன்பம் என்பன மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மாஸ்தி வேங்கடேச அய்யங்கார், சிவராம காரந்த், திரிவேணி, யூ.ஆர்.அனந்தமூர்த்தி, எஸ்.எல்.பைரப்ப, கிரிஷ் கார்நாட் முதலிய பலரின் நாவல்களும், நாடகங்களும், சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சாந்தலை, அழிந்த பிறகு, ஸம்ஸ்கார, மண்ணும் மனிதரும், பாட்டியின் கனவுகள், கடசிராத்த, பருவம், பலிபீடம், சிக்கவீர ராஜேந்திரன், சொப்பன மாளிகை, பூனைக்கண் முதலிய புதினங்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. ஆண்டுவிழா என்ற நாடகத் தொகுப்பு தமிழில் செல்வாக்குப் பெற்றுள்ளது.
சாகித்ய அகாடெமியின் நன்முயற்சியால் கன்னட இலக்கியப் படைப்பாளிகள், கன்னட இலக்கியங்களில் பரிசு பெற்றவை எனப் பல தமிழ் மொழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணி நடந்து வருகிறது.
இந்துலேகா, ஏணிப்படிகள், செம்மீன், தோட்டியின் மகன், பனிமேகம், பைத்தியக்கார உலகம், வெறும் மனிதன், பேராசிரியர் முதலிய புதினங்கள் தமிழில் பெருவழக்காக உள்ளன. கூட்டுப்பண்ணை அடிமை என்ற நாடகம் முதலிய தொகுப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் என்ற நூலைக் கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார். தகழி, வைக்கம் முகம்மது பஷீர், எஸ்.கே.பொற்றக்காட், எம்.டி.வாசுதேவன் நாயர் முதலியவர்களின் நாவல்களும் சிறுகதைகளும் தமிழில் வந்துள்ளன.
பாரதி, பாரதிதாசன், மு.வரதராசனார், ஜெயகாந்தன், அகிலன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் பிறமொழிகளுக்குச் சென்றுள்ளன. பாரதியும் வள்ளத்தோளும் போன்ற ஒப்பீட்டு நூல்கள் பாரதியை மலையாள மொழியிலும் அறிமுகம் செய்துள்ளன. வள்ளலாரும் நாராயண குருவும் போன்ற ஒப்பீடுகளும் வெளிவந்துள்ளன.
தற்காலத்தில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்வாகப் பதிவு செய்ய வேண்டியது குறள் பீடம் என்ற அமைப்பாகும். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பின் வழியாகத் தமிழில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் சில தொகுக்கப்பட்டு அவை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அமைப்பு நிலையிலன்றி, இந்திரன், விஜயராகவன் போன்ற தனியாரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பாராட்டுக்குரியன.
சிற்றிதழ்களின் பங்களிப்பு மொழிபெயர்ப்பு நிலையில் பெரும்பங்கு வகிக்கிறது. அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியே இன்றி அவை வந்த அளவில் உள்ளன.
பிறநாட்டுக் கலை இலக்கியங்களை மொழிபெயர்க்கும் அதே வேளையில் தமிழில் உள்ள இலக்கிய வளங்களையும் பிறமொழிக்கு மொழிபெயர்த்தல் வேண்டும் என்கிற வேட்கை வளர வேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழிலிருந்து சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பாரதி, பாரதிதாசன் கவிதைகள் போன்ற இலக்கியங்களையும் படைப்பாளிகளின் படைப்புகளையும் மொழிபெயர்க்க முயற்சி எடுத்துள்ளது.
தமிழ்மொழி இலக்கிய வளத்திற்குப் பெரிதும் துணை நின்ற சூழலாக மொழிபெயர்ப்பைச் சொல்வது பொருந்தும்.
வடமொழியின் செல்வாக்கும், ஆங்கில இலக்கிய அறிமுகத்திற்குப் பிறகும் ஏற்பட்ட மொழிபெயர்ப்பு வீச்சும் வளம் சேர்த்துள்ளன.
தற்காலத்தில் இலக்கிய திறனாய்வு உத்திகள் முதலியன மொழிபெயர்ப்பின் வழியே தமிழில் இடம் பெற்றுள்ளன.
பாடம் - 5
தமிழ்மொழிச் சூழலில், சங்க காலம் முதற்கொண்டு தமிழர்கள் கடல் கடந்து உலகமெங்கும் வணிக, அரசியல், பண்பாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலிருந்து படைப்புகள் தமிழில் தழுவி எழுதப்பட்டன. தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களின் கருத்தியல் தாக்கம் காரணமாகத் தமிழரின் சிந்தனைப் போக்குகள் மாற்றம் அடைந்து வருகின்றன. தற்கால நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகள் தோன்றுவதற்கு உரிய களத்தினை மொழிபெயர்ப்புகள் வடிவமைத்துத் தந்துள்ளன.
திராவிட மொழிகள் தங்களுக்குள் மொழிபெயர்ப்பினால் ஏற்படுத்திய விளைவுகளையும், பிற மொழிகள் தமிழில் ஏற்படுத்திய விளைவுகளையும் இந்தப் பாடம் வெளிப்படுத்த முற்படுகிறது.
தமிழர் கிரேக்க மொழியை அறிந்திருந்தது போலவே கிரேக்கரும் தமிழ்மொழியைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இத்தகைய சூழலில் வணிக நோக்கிற்காகச் சொல் அடிப்படையில் மொழிபெயர்ப்புத் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. தமிழ் மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கோ அல்லது கிரேக்க மொழியிலிருந்து தமிழ் மொழிக்கோ ஒரு முழுமையான நூலை மொழிபெயர்த்ததாக அறிய முடியவில்லை. ஆனால் ”தமிழின் இனிமை கருதியோ அல்லது தமிழ் ஒலியைப் பதிவு செய்யக் கருதியோ ஒரு கிரேக்க நாடகத்தின் ஒரு பகுதியில் தமிழ்ச் சொற்களை வழங்கியும் அதற்குக் கிரேக்க மொழிபெயர்ப்பும் தந்து எழுதியுள்ளனர்” என்கிறார் கி.கருணாகரன் மொழி வளர்ச்சி என்ற தமது நூலில்.
பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய இந்தியாவின் பழைய மொழிகளோடு தமிழ்மொழி தொடர்பு கொண்டு இருந்தது என்பதற்கு இலக்கிய வரலாற்றில் பல சான்றுகளைக் காட்டலாம்.
கி.பி.15ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள், தொடக்கத்தில் வணிகத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உள்நாட்டு ஆட்சியில் தலையிட்டனர்; கிறித்துவ சமயத்தைப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றவும், கிறித்தவ சமயத்தைப் பரப்பவும், ஐரோப்பியருக்குத் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளைக் கற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக இருமொழி அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டனர். அவர்களுக்கு துவிபாஷிகள் அல்லது துபாஷ் என்று பெயர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்விமுறை நடைமுறைக்கு வந்தது. அதனால் ஆங்கில இலக்கியங்கள் கற்கும் வழக்கம் ஏற்பட்டது. ஆங்கில இலக்கிய வகைமைகள் அக்காலத்தில் ஆய்வு முயற்சியாகத் தமிழில் மேற்கொள்ளப்பட்டன. சில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சில நூல்கள் தமிழில் தழுவி எழுதப்பட்டன.
வேறு ஒரு மொழியில் ஒரு நூலைப் படிக்கிற போது அந்தப் படிப்பாளிக்கு ஏற்பட்ட தாக்கம் காரணமாக, அந்த மொழியையும், அமைப்பையும் நன்கு அறிந்தவராக இருந்தால், அவரே மொழிபெயர்க்க முயற்சி செய்யலாம். ஆக மொழிபெயர்ப்பு என்பதே மூலமொழிப் படைப்பு, ஒரு படிப்பாளியின்பால் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக உருவாவதாகும். இதுவே சமூக மறுமலர்ச்சிக்கோ அல்லது ஓர் இனத்தின் மேம்பாட்டிற்கோ மூலமொழியின் கருத்தாக்கங்கள் பயன்படுமேயானால், அந்த மொழிபெயர்ப்புப் பயனுடையதாகும். அந்தக் கருத்தாக்கத்தின் தாக்கத்தால் எதிர்பார்த்த விளைவை அடைவதற்காகவும் அம்மொழிபெயர்ப்புப் பயன்படலாம்.
”அன்னிய ராஜாங்கமாக இருப்பதால் இங்கிலீஷ் பாஷையிலே நம்மவர் தேர்ச்சி பெறவேண்டும் என்பதை நாம் மறுத்துப் பேசவில்லை. ஆனால், பூலோக சாத்திரம், உலக சாஸ்திரம், ரஸாயனம், வான சாஸ்திரம், கணிதம் என்பனவற்றைச் சுதேசி பாஷைகளிலேயே கற்றறிந்து கொள்ளுதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்… இங்கிலீஷ் பாஷை பயிற்ற வேண்டுவது அவசியமாயினும், மற்றப் பாடங்களைக் கூட தேச பாஷையில் நடத்த வேண்டும்” என்று பாரதி (பாரதி தரிசனம், சுதேசிய கல்விமுறை) கூறியிருப்பது மொழிபெயர்ப்புக்கு முன்மொழியப்பட்ட நிகழ்ச்சியாக நாம் கொள்ளலாம்.
வசூல், இலாக்கா, தாக்கீது, தவாலி, மகால், ஆஜர், இரிசால், முகாம், லாயக்கு, ரத்து, ஜப்தி, ஜாமீன், தணிக்கை, மகசூல், ஜில்லா போன்ற அரபுச் சொற்களும்,
டபேதார், திவான், ரவாணா, ரஸ்தா, ஜாகீர், சர்தார், ஹவல்தார், அங்கூர், சால்வை, சிப்பந்தி, ரசீது, மாலீசு, சுமார், தயார் போன்ற பாரசீகச் சொற்களும்,
அசல், அமுல், அம்பாரம், அலக்காக, அலாதி,. அமீன், இந்துஸ்தான், ராஜினாமா, ராத்தல், இனாம், கச்சேரி, கஜானா, அஸ்திவாரம், இஸ்திரி, கம்மி, குத்தகை, சந்தா, சராசரி, அயன், உருமால், கவாத்து, சர்பத், சரிகை, கிராக்கி போன்ற உருதுச் சொற்களும் தமிழாகிப் போயின. இவற்றுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கும் முயற்சி நடந்த வண்ணம் உள்ளது.
ஆட்சித்துறையும் சட்டத்துறையும் இன்றைய அமைப்புக்கு வடிவமைக்கப்பட்ட காலம் ஆங்கிலேயருக்கு உரியது. அவர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய பலவற்றைச் சிற்சில மாற்றங்களுடன் ஜனநாயக நெறிமுறைக்கேற்றவாறு அமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக மேற்கண்ட இருதுறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்கி, சொற்சீர்திருத்தம் மேற்கொண்டனர். இதற்கிடையில் தமிழ்மொழியில் தூய்மை கருதி, மறைமலை அடிகளார் முதலியோர் தனித்தமிழ் என்ற கொள்கையை முன் வைத்து மொழிச் சீர்திருத்தம் மேற்கொண்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கப்பட்ட நூல்கள் வெளியீட்டில் காலத்தின் செயல்பாட்டினைக் கவனிக்கலாம். இந்தியாவைக் காலனியாக்கி அரசாண்ட ஆங்கிலேயரின் கருத்துகளின் வெளிப்பாடாகவும் மொழிபெயர்ப்பு நூல்களைக் கருத இடமுண்டு. மக்களைக் கருத்தியல் நிலையிலும் செயல்பாட்டு நிலையிலும் ஒருங்கிணைக்க, மொழிபெயர்ப்புகளும் துணை நின்றுள்ளன. தமிழகத்தைப் பொருத்த வரையில் மேற்கண்ட இரண்டு நிலைகளிலும் மக்களை ஒருங்கிணைத்தனர். அரசியலில் தேர்தல் முறை வந்தபிறகு பல்வேறு இயக்கங்கள் தோன்றி மக்களின் செல்வாக்கைப் பெற முனைந்தன.
பண்பாட்டு நிலையில் மாற்றங்களைக் கோருவதன் மூலம் ஏற்கெனவே நிலவி வந்த நிலமானிய மதிப்பீடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கினர். திராவிட இயக்கத்தைச் சார்ந்த இதழ்கள், புத்தகங்கள், மேடைப் பேச்சுகள் மூலம் சமூகச் சீர்த்திருத்தக் கருத்துகளைப் பரப்பினர். அப்பொழுது பெருமளவில் பிரெஞ்சு சிந்தனையாளர்களின் கருத்துளையும், இலக்கியப் படைப்புகளையும் தமிழாக்கிப் பயன்படுத்தினர். திராவிட இயக்கத்தாரின் கருத்தியல் பிரச்சாரத்திற்குப் பிரெஞ்சு மொழி நூல்கள் அடிப்படையாக விளங்கின. மாறிவரும் புதிய போக்குகளை வெளிப்படுத்த, பிரெஞ்சு நூல்கள் அவர்களுக்குப் பயன்பட்டன.
கி.பி.18ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் எல்லா அடக்குமுறைகளுக்கும் எதிராக ஏற்பட்ட புரட்சியை முன்நின்று நடத்திய புரட்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் ரூசோ எழுதிய சமுதாய ஒப்பந்தம் என்ற நூல் மறைநூலாக விளங்கியது. பிரெஞ்சு சிந்தனையாளர்களான வால்டேர், மாண்டெயின், மொந்தெஸ்சியோ, திதெரோ, ஒல்பாக், மப்லி, ரெய்னால், மெர்சியோ, நியெட்ஸே, ரூசோ போன்றோரின் சிந்தனைகள் உலகமெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது போன்று தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டன.
குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள்
திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான சி.பி.சிற்றரசு, எமிலி ஜோலாவின் வாழ்க்கை வரலாற்றை 1952இல் ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்த்து இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான சி.என்.அண்ணாதுரை 1959இல் ஏழைபங்காளன் என்ற தலைப்பில் எமிலி ஜோலா பற்றி உணர்ச்சிமயமாக எழுதியுள்ளார். ”ஜோலா ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக எழுதினார். எழுதினார் என்றால் போராடினார் என்றே பொருள். அவருடைய எழுத்து வீரனின் கைவாளை விட வலிமையானது” என்று, பேனாவின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற கருத்தை வெளியிட்டார்.
இவை தவிர பிரேமா பிரசுரம், சிந்தனையாளர் வரிசையில் நூல்கள் வெளியிட்டது, பிரெஞ்சு சிந்தனையாளரின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் என்ற இருபெரும் பிரிவுகளுடன் எளிய தமிழில் ரூசோ (1954), வால்டேர் (1960), மாண்டெயின் (1962), மாக்கியவல்லி (1964), நியெட்ஸெ (1965) ஆகிய நூல்கள் இன்றுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.
திராவிட இயக்க இதழ்களான திராவிட நாடு, மன்றம், காஞ்சி, தென்றல், எண்ணம் போன்ற ஏடுகளில் பிரெஞ்சு சிந்தனையாளர்கள் பற்றிய கட்டுரைகளும், பிரெஞ்சு இலக்கியப்படைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் அரசியல் சித்தாந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. மார்க்ஸின் மூலதனம், மாஜினி, தியாகு ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டன. லெனினின் பேச்சும், எழுத்தும், அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்களும் உலகின் மிகுதியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ரஷ்ய மொழியிலிருந்து எட்டு நாடகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மாக்சிம் கார்க்கி, பொக்கோடின், அர்டிஸிங் ஆகிய ரஷியப் படைப்பாளிகளின் நாடகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ரஷிய இலக்கிய மொழிபெயர்ப்பில், புதின இலக்கியம் சிறப்பிடம் வகிக்கின்றது. ஒட்டுமொத்த புதின நூல்கள் மொழிபெயர்ப்பில், ரஷியப் புதின நூல்கள் 25% இடம் பெறுகின்றன.
ரஷியச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பில் அதிக அளவில் குழந்தை இலக்கியப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியக் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்தன; குழந்தை இலக்கியங்கள் பலவும் தமிழில் மொழிபெயர்ப்புக்கு உள்ளாயின.
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் நூல்கள் தொடர்களாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அம்பேத்கர் பவுண்டேஷனால் வெளியிடப்பட்டுள்ளன. தலித் மக்களுக்கான விடுதலை உணர்வை வெளிப்படையான போராட்டங்கள் மூலம் பெறவேண்டும் என்றும் கட்சி சார்பாகவும் விடுதலை பெறவேண்டும் என்றும் உருவான கட்சிகள், கொள்கைத் தெளிவுக்காகப் பல நூல்களை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்துள்ளன.
வழுவல கால வகையினானே
என்ற இலக்கண நூற்பா இலக்கணங்கள் காலத்திற்கேற்ப மாற்றமும் புதுமையும் பெற்றுப் பொலிவடைய வழிவகை செய்வதை இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். இத்தகைய புதுமைகளைத் தமிழ்மொழியும் ஏற்றுக் கொண்டுள்ளது.
வடமொழி நூல்கள் மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ தமிழில் இடம்பெற்ற போது தமிழில் புதுவகைப் பாடுபொருள் தோன்றியுள்ளது. அவ்வாறே 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் வழியாக உலக இலக்கியங்களின் வகையும் வடிவமும் தமிழ்மொழியின் இடையறாத வளர்ச்சியை ஊக்குவித்தன.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் பைசாசம் என்னும் மொழியில், குணாட்டியர் எனும் புலவர் உதயணன் சரித்திரத்தைப் பாடினார். பின்னர் துர்விநீதன் என்னும் அரசன் அந்தக் கதையை வடமொழியில் பிருகத்கதா என்ற பெயரில் இயற்றினான். இந்த வடமொழி நூலைத் தழுவியே கொங்கு வேளிரின் பெருங்கதை அமைந்துள்ளது.
க்ஷத்திர சூடாமணி, கத்தியசிந்தாமணி, ஜீவன்தார சம்பு, ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களைத் தழுவியே சீவக சிந்தாமணி எழுதப்பட்டது. தோலாமொழித் தேவரின் சூளாமணியும் வடமொழி நூல் ஒன்றின் தழுவலே ஆகும். சிறுகாப்பியங்களுள் யசோதர காவியம் என்ற காப்பியத்திற்கு புஷ்பதந்த என்பார் சமஸ்கிருதத்தில் இயற்றிய யசோதர காவிய என்ற படைப்பே மூல நூலாகும்.
கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கருநாடக நாட்டில் தோன்றிய வீரசைவம் தழைத்து ஓங்கியது. அந்தச் சமய குருமார்களில் ஒருவரான அல்லமாப் பிரபு என்பவரின் கதை பிரபுலிங்க லீலா என்ற காப்பியமாகப் பதினான்காம் நூற்றாண்டில் கன்னட மொழியில் இயற்றப்பட்டது. இதனை, 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பிரபுலிங்க லீலை என்ற சிற்றிலக்கியமாகத் தமிழாக்கம் செய்துள்ளார்.
மேற்கண்டவை சமண, பௌத்த, வீர சைவ சமயங்கள் தழைத்தோங்குவதற்கான மொழிபெயர்ப்புகளாகவோ, தழுவல்களாகவோ அமைந்தன எனலாம். இதனால் தமிழின் பாடுபொருள் நிலையிலும் காப்பிய அமைப்பு நிலையிலும் நிறைய மாற்றங்களும் ஏற்பட்டன.
‘இருபதாம் நூற்றாண்டின் இருபது முப்பதுகளில் தோன்றி நாற்பது, ஐம்பதுகளில் தனிச் செங்கோலோச்சி, தான் ஏற்றுக்கொண்ட சில மாற்றங்களால் அறுபது, எழுபதுகளிலும் சிறுபான்மை வழக்காகத் தொடர்ந்து, எண்பது, தொண்ணூறுகளில் வரலாறாகி நிற்கின்ற இலக்கியக் கோட்பாட்டின் பெயர்தான் புதுத் திறனாய்வுக் கோட்பாடு என்பது’ என்று அ.அ.மணவாளன் (இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.) குறிப்பிடுவது இலக்கிய ஆய்வின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னதாகக் கருதலாம்.
1920,30களில் டி.எஸ் எலியட், ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் என்பவர்களால் பிரிட்டனில் உருவாகிய புதிய திறனாய்வு வளம் பெற்று வலுவடைந்து ஏறக்குறைய அனைத்துலகக் கோட்பாடாக உயர்ந்தது.
ஜான்குரோ ரான்சம், கிளியந்த் புருக்ஸ், ஆலன் டேட், வாரன், விம்சாத் ஆகியோரையும் ராபர்ட் பென்வாரன், ஆஸ்டின் வாரன், கென்னத் பர்க், ஜான் எல்லிஸ் போன்றோரையும் திறனாய்வு என்ற கோட்பாட்டின் முன்னோடிகள் எனலாம்.
மேற்கண்டோரின் நூல்களில் ஆஸ்டின் வாரன், ரெனி வெல்லாக் போன்றோரின் திறனாய்வு நூல்கள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய ஆய்வில் இத்தகைய அணுகுமுறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
மொழியியல் ஆய்வில் பெர்டினான் டி சசூர், புளும்பீல்டு போன்ற அறிஞர்களின் கோட்பாடுகள் தமிழ்மொழி ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அறிவியல் துறைகள் பற்றிய நூல்கள் எவையும் தமிழ்நாட்டில் கட்டுரைகளாகவோ தொகுப்பு நூலாகவோ 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இல்லை. ஆங்கிலக் கல்வியின் விளைவாக ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அறிவியல் நூல்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துள்ளன. பிற்காலத்தில் பாடநூல்களாக மொழிபெயர்ப்புகளும் தமிழில் அறிவியல் செய்திகளை உள்ளடக்கிய தமிழ் நூல்களும் பெருகுவதற்குக் காரணமாக மொழிபெயர்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ்வழி பயில்வோருக்காக, மாணவர்கள் படித்துப் பயன் பெறும் வகையில் மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றை மலிவுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. இன்றைய நிலையில் +2 வரையிலான பாடநூல்கள் தமிழில் எழுதப்பட்ட நூல்களாக உள்ளன.
பல தனியார் புத்தக நிறுவனங்கள் அறிவியலின் இன்றைய வளர்ச்சியான கணினித்துறை சார்ந்த பல்வேறு வகையான நூல்களை மொழிபெயர்த்தும் தனியே தமிழ் நூல்களாகவும் வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் அறிவியல், தொழில்நுட்பம் முதலியன தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான துறைகளாக உள்ளன.
அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளைத் தமிழில் வழங்குவதற்கு யுனெஸ்கோ கூரியர், கோவையிலிருந்து வெளிவரும் கலைக்கதிர், அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் களஞ்சியம் போன்ற ஏடுகள் துணைபுரிகின்றன. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைசார்ந்த ஆய்வேடுகளில் ஆய்வுச் சுருக்கம் தமிழில் ஓரிரு பக்கங்களில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருப்பதும் பாராட்டுக்கு உரியது. தமிழில் எழுதக் கூடிய பலர் அறிவியல் செய்திகளைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றனர். வானியல், விண்கலன் முதலியன பற்றி நெல்லை சு.முத்து, கணினித்துறை சார்ந்து ஆண்டோ பீட்டர் முதலியோர் தொடர்ந்து தமிழில் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.
தமிழ்நாட்டில், தமிழ்மொழி ஆட்சிமொழியாகப் பயன்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. ஆட்சி மொழியைச் செயற்படுத்தும் பணி, அதிகாரிகள், அலுவலர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.
1960ஆம் ஆண்டு முதல் எல்லா மாவட்டங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். தமிழ் ஆட்சி மொழி ஆவதற்கு ஏற்றமுறையில் கல்விமுறையில் கற்பிக்கும் மொழியாகத் தமிழை வளர்க்க வேண்டும். ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைத் துறைதோறும் அனுபவம் உள்ள அலுவலர்களை வைத்து ஆட்சிச் சொற்களஞ்சியம் தயாரிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது; செயல்படுத்தவும் பட்டது.
அரசு 1960ஆம் ஆண்டிலேயே சட்டமன்றத் துறைச் சொல்லகராதியை வெளியிட்டது. இவை அனைத்தும் ஆட்சித்துறை சார்ந்த மொழிபெயர்ப்பினால் ஏற்பட்ட விளைவுகள் எனலாம்.
செய்திகளை வெளியிடுகின்ற பெரும்பணியில் செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியன பெரும்பங்காற்றுகின்றன. அத்துடன் இன்றைய தொழில்நுட்பப் பெருக்கம் காரணமாக இணைய இதழ்கள் பல்கிப் பெருகி உள்ளன. செய்திகளைப் பரிமாறிக் கொள்வதும், கருத்துகளைப் புலப்படுத்துவதும் ஒரு மொழியின் அடிப்படைப் பணிகளாகும். அந்நிலையில் ஒரு மொழியில் கிடைக்கும் செய்திகளை அதே மொழி அறிந்த மக்களுக்குச் சுருக்கமாகவோ, விளக்கமாகவோ கூறுவது முதல்நிலையாகும்.
ஒரு மொழி பேசும் மக்களிடையே மற்றொரு மொழி பேசும் மக்களின் கருத்துகளை அறியச் செய்கின்ற மொழிபெயர்ப்புப் பணி இரண்டாவது நிலையாகும்.
மொழி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற சொல்லாக்கப் பணி மூன்றாவது நிலையாகும்.
புதியனவற்றிற்குப் புதிய சொற்கள் பெயர்ப்பு மொழியில் படைக்க முடியாத நிலையில் அதனை நிறைவடையச் செய்கின்ற ஒலிபெயர்ப்புப் பணி நான்காவது நிலையாகும்.
பத்திரிகைத்துறை பெருமளவு வளர்ந்திருப்பதோடு, அதற்கிணையாக மொழிபெயர்ப்புத் துறையும் வளர்ந்து, செய்திகளை உடனுக்குடன் புரிந்துகொள்ள வகை செய்கிறது.
மொழிபெயர்ப்புக்கெனவே தனி இதழ்கள், ஒப்பியலுக்கு எனத் தனி இதழ்கள் எனப் பல்வேறு தனித்தனிச் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்க வகையில் இந்திய மொழிகளில் வெளியான கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றின் மொழிபெயர்ப்புகள் வெளிவருகின்றன. அவ்வாறே உலக மொழிகள் பலவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புகளைச் சிற்றிதழ்கள் தாங்கி வருகின்றன. இதழ்கள் பெருகியதும், அவற்றில் மொழிபெயர்ப்புகள் இடம்பெறுவதும் மொழிபெயர்ப்பினால் விளைந்த விளைவே ஆகும்.
புதிய புதிய இலக்கிய வடிவங்கள், வகைகள், பாடுபொருள் முதலியன தோன்றியது மொழிபெயர்ப்பினால் ஆகும்.
தொடக்கத்திலிருந்து தொடர்ந்து வரும் மொழிபெயர்ப்பினால் அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் எளிய மக்கள் அறிந்து பயன்படுத்த முடிகிறது.
சட்டங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே எளிதாக எல்லாரும் நீதிமன்றங்களை அணுக ஏதுவாக அமைந்தது.
ஆட்சித்துறையில் நெடுங்காலம் ஆங்கிலம் ஆட்சி செய்தது. எனவே, அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி பெருகியது. அதனை மொழிபெயர்ப்புகள் குறைத்தன.
செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு இதழ்கள் செயலாற்றுகின்றன. அவற்றில் பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
பாடம் - 6
மொழிபெயர்ப்புகள் அறிவுப்பரவல் காரணமாகப் பெருமளவில் உருவாகியுள்ளன. ஆயினும் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் அல்லது ஒரு படைப்பு முழுநிறைவுடையதாக இருப்பதில்லை. சில நேரம் மாறுபட்ட பொருளை ஏற்படுத்தி மொழிபெயர்ப்பாளனின் அறியாமையை வெளிப்படுத்திவிடுகிறது. மொழிபெயர்ப்பாளர் இருமொழி அறிவை முழுமையாகப் பெறாமலும், மொழி அமைப்பின் அடிப்படைகளை அறியாமலும் செய்கின்ற மொழிபெயர்ப்புகள் தவறானவையாக அமைந்து விடுகின்றன.
இலக்கிய மொழிபெயர்ப்பாக இருந்தாலும், அறிவியல் மொழிபெயர்ப்பாக இருந்தாலும், கலைச் சொற்களை உருவாக்குவதாக இருந்தாலும் மொழிபெயர்ப்பின் போது ஏற்படும் சிக்கல்களை எடுத்துக் கூறும் விதத்திலும், அத்தகைய சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு உரிய ஆலோசனைகளைக் கூறி விளக்கும் விதத்திலும் இந்தப் பாடம் அமைகிறது.
• அறிவுத்துறையில் புலமை
மொழிபெயர்ப்பாளருக்கு, தான் மொழிபெயர்க்கத் தேர்ந்து கொண்ட அறிவுத்துறையில் ஆழ்ந்த அறிவும் பிடிப்பும் வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாகும். இருமொழிப் புலமை மட்டும் கொண்டு ஒரு துறை சார்ந்த அறிவுக் கருவூலத்தை மொழிபெயர்த்துவிட முடியாது. அது போலவே துறைப்புலமை மட்டுமே கொண்டு ஒருவர் மொழிபெயர்க்கத் துணிந்துவிடக் கூடாது. இருமொழிப் புலமையும், துறைப்புலமையும் இணைந்து செயல்பட வேண்டும். இப்புலமை அறிவியல்துறை சார்ந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு அடிப்படையான ஒரு தகுதியாகும்.
• மிகையும் குறையும் வேண்டாம்
மொழிபெயர்ப்பாளருக்கு அவர் மொழிபெயர்க்கும் துறையில் மிகுதியான புலமை இருக்கும்போது, மூலத்தின் செய்தியைக் காட்டிலும் அதிகமான செய்திகளை, பெறுமொழியில் தன்னையறியாமலேயே விளக்கமாகத் தந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆனால் அது மொழிபெயர்ப்பின் வரன்முறைகளை மீறுவதாகும். பிறருக்குப் பயன்படும் வகையில் அவர் தன் புலமையை வழங்க வேறு களங்கள் உண்டு. அல்லது தனி நூலாகவும் வெளியிட்டுக் கொள்ளலாம். மொழிபெயர்ப்பு அதற்கேற்ற களம் அல்ல. இங்கு மூலத்தின் செய்திகள் மிகாமலும், குன்றாமலும் பெறுமொழியில் தரப்பட வேண்டும். ‘மூலத்தை’ மாற்றியும், சிதைத்தும், சில பகுதிகளை விடுத்தும் செய்யப்படும் மொழிபெயர்ப்பு அவற்றை ஆக்கிய மறைந்த மாமேதைகளுக்குச் செய்யும் மரியாதைக் கேடு என்ற டிரைடனின் கூற்று கவனிக்கத் தக்கது. மூலத்தின் செய்தியைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுமொழியில் தரக்கூடாது.
• மொழி பற்றிய மனப்பான்மை
மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் மூலமொழியைப் பற்றியும் அம்மொழியின் எடுத்துரைக்கும் திறம் அல்லது உரைமைத்திறன் (Communicative potential) பற்றியும் மிகை உயர் எண்ணம் கொண்டிருக்கின்றனர். இதனால் பெறுமொழியின் கிளத்தும் திறன் அல்லது உரைமைத்திறனைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். தத்துவம், சமயம் சார்ந்த கருத்துகளையும் (ideas) கருத்தாக்கங்களையும் (Concepts) புலப்படுத்துவதற்குக் கிரேக்கத்துக்கு நிகரான மொழியே இல்லை, சமஸ்கிருதத்திற்கு இணையான மொழியே இல்லை என்று கருதுபவர்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். ஒருமொழிபெயர்ப்பாளர் பெறுமொழியின் கிளத்துத் திறனை அல்லது உரைமைத் திறத்தை எக்காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
• அறிவியல் பார்வை
மொழிபெயர்ப்பாளர் விருப்பு வெறுப்பு இன்றி மொழிகளையும் மக்களையும், பண்பாட்டையும் மதிக்கும் அறிவியல் பார்வை (Scientific look) உடையவராய் இருத்தல் வேண்டும். திருந்தா மொழிக்கும் அதற்குரிய தனிச்சிறப்புத் தன்மை உண்டு. தமக்குத் தெரிந்த மொழிகள் தான் உயர்ந்தவை என்ற மனப்பான்மை ஒருபோதும் கூடாது. எல்லா மொழிகளிலும் அவ்வவற்றிற்கு என்று பண்பாட்டுக் கூறுகளும் வாழ்வியல் மதிப்புகளும் உள்ளன என்பதை உணர வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மொழிகளின் தனிச்சிறப்புத் தன்மைகளை மதிக்க வேண்டும்.
• மொழித்திறம்
ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மூலமொழியில் உள்ள மொழித்திறத்தைக் காட்டிலும் பெறுமொழியில் மொழித்திறம் இன்னும் கூடுதலாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் மூலத்தின் பொருளையும், நயங்களையும் மயக்கமின்றிப் புரிந்து கொண்டால் போதும். ஆனால் பெறுமொழியிலோ புரிந்து கொண்ட பொருளைச் சுவை குன்றாமல் வடிவமைத்துத் தர வேண்டும். எனவே, மொழிபெயர்ப்பில் பெறுமொழியில் மொழித்திறம் மேலோங்கி இருக்க வேண்டும். மூலமொழியில் புலமையுள்ள ஒருவர் தன் தாய்மொழியில் மொழிபெயர்ப்பதே சிறப்பானதாகும். பன்மொழிப் புலமை இருப்பினும் மொழித்திறம் மிகுந்து உள்ள தாய்மொழியில் பெயர்ப்பது சிறந்தது.
இலக்கிய மொழிபெயர்ப்பில் எழுகின்ற சிக்கல்களைப் பொதுவாக இரண்டு நிலைகளில் காணலாம். அவை,
(1) பொதுவாக எந்த மொழிக்குமான சிக்கல்கள்
(2) குறிப்பிட்ட மொழியில் ஏற்படும் சிக்கல்கள்
என்பன இவற்றை வடிவம், பொருள் என்ற இரு நிலைகளில் அணுகலாம். வடிவம் என்பதில் சொற்றொடர் அமைப்பு, சொல்லாட்சி முதலியன அமைந்து இன்னும் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம். வாக்கிய அமைப்பில் கவிதை, உரைநடை போன்றவற்றில் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
பல்வேறு வகையான உள்அமைப்பின் காரணமாக, காப்பியம், விடுகதைகள், பழமொழிகள், கட்டுரை, புதினம், நாடகம் இவற்றிற்கிடையேயும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொல்லாட்சியில் மொழி, நடை, போன்ற கூறுகளும் பல்வேறு சிக்கலைத் தோற்றுவிக்கின்ற நிலை ஏற்படுகின்றது. மொழியில் கூட இலக்கிய, கொச்சையான, மரபு சார்ந்த வழக்குச் சொற்கள் சிக்கலைத் தோற்றுவிப்பது இயல்பானது. சிலேடை, ஒலிக்குறிப்பு, இரட்டைக் கிளவி, ஆகுபெயர், அடுக்குத் தொடர் போன்றவையும் சிக்கலைத் தோற்றுவிக்கின்றன.
பொதுவாக எல்லா மொழிகளிலும் ஏற்படுகின்ற சிக்கல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
• சொல்லும் பொருளும்
ஒரே சொல் பல பொருளைக் குறிக்கிறது. இந்நிலை மொழிபெயர்ப்பாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட சொல் ஏற்படுத்துகின்ற பொருள் என்ன என்பதை அறிந்து, அப்பொருளை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
சான்றாக: ‘கிழமைப்பட வாழ்’ என்ற ஆத்திசூடி வரியில், கிழமை என்ற சொல் நாள், உரிமை, நட்பு ஆகிய பொருளை உணர்த்துகின்றது. இவற்றில் நட்பு என்ற பொருளைத் தான் ஆத்திசூடி குறிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ”Live in Friendship” என்று பெயர்க்கவேண்டியுள்ளது. அப்படிப் பெயர்த்தால்தான் மூலநூல் கூறும் கருத்துகள் ஆங்கிலத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.
சொற்களின் பொருத்தமான பொருளைக் கையாள வேண்டும்.
• பழமொழி
மக்களின் அன்றாடப் பழக்க வழக்கங்களிலே, அதாவது பேச்சு வழக்கில் பழமொழிகள் பெரும்பாலும் கலந்திருப்பது காணலாம். ‘வாய்மொழியிலும் எழுத்துமொழியிலும், பழமொழி மிகவும் முதன்மையான இடம்பெறுகிறது. பழமொழி அந்தந்த மொழியில் பேசுகின்ற மக்களின் வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இத்தகைய பயன்பாடுகளை மொழிபெயர்ப்பது கடினம். இத்தகைய சூழ்நிலையில் பெறுமொழியில் மூலமொழிப் பழமொழிக்கு இணையான பழமொழியைப் பயன்படுத்துவதில் நிறைவடையலாம். அப்பொழுதுதான் பெறுமொழியாளர்கள் அப்பழமொழியின் உள்ளார்ந்த உயிரோட்டத்தை உணர முடியும்.
சான்றாக, அத்தி பூத்தாற் போல என்ற தமிழ்ப் பழமொழி, அரிதான நிலையினைக் குறிக்கின்ற பழமொழியாகும். இதனை அப்படியே ஆங்கிலத்தில் தருகின்றபோது உணர்வினைக் கொடுக்க முடியாது. அதற்கு இணையாக ‘As rare as hen’s teeth’ என்ற இணையான ஆங்கிலப் பழமொழியைக் கொடுப்பது நல்லது.
• மரபுச் சொற்கள்
மரபுச் சொற்கள் அந்தந்த மொழியின் மரபுப்படி வெளிப்படுவன ஆகும். தமிழ் இலக்கியங்களில் பெரும்பான்மையான மரபுச் சொற்கள் பயன்படுகின்றன. இவையும் மொழிபெயர்ப்புப் பணியில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. சான்றாக, தமிழில் ‘மந்தி’ என்று பெண் குரங்கையும், ‘கடுவன்’ என்று ஆண் குரங்கையும் குறிக்கும் மரபுச் சொற்களைப் பயன்படுத்துவோம். இவ்விரண்டு சொற்களையும் ஆங்கிலத்தில் female monkey and male monkey என்று பயன்படுத்த வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். ஆகவே மொழிபெயர்ப்பாளன் பெறுமொழியின் மரபுச் சொற்களையும் தருமொழியின் மரபுச் சொற்களையும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.
• வழக்குச் சொற்கள்
மரபுச் சொற்களைப் போன்றே வழக்குச் சொற்களும் மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. வழக்குச் சொற்களை மொழிபெயர்ப்பாளர்களால் மொழிமாற்றம் செய்ய முடிவதில்லை. மூலமொழியிலுள்ள சொற்களுக்கு இணையான சொற்களைப் பெறுவதும்கூடக் கடினமான செயலாகும். தமிழ் இலக்கியத்தில் வட்டார வழக்குகளைப் பயன்படுத்துதல் என்பதை மு.வரதராசனாருக்குப் பின்னர் வந்த படைப்பாளிகள் பின்பற்றியுள்ளார்கள். குறிப்பாகச் சிறுகதை உலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ளள புதுமைப்பித்தன், போன்றவர்களும், ஞானபீடம் விருது பெற்ற ஜெயகாந்தன் போன்றோரும், கரிசல் நடை நாயகன் கி.ராஜநாராயணன் போன்றோரும், முற்போக்கு இலக்கியச் சிற்பிகளும் பெரும்பாலும் வட்டார வழக்கில் உணர்வு ததும்ப எழுதுகின்றனர். அவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதாக இருந்தால், வழக்குச் சொற்கள் நிறைந்த வாக்கியங்கள், பத்திகள் முதலியவற்றை விலக்கி ஒரு எளிய நடையைப் பயன்படுத்தலாம்.
• பொருள்கோள்
கவிதையில் சொற்றொடர்கள் சில வேளைகளில் பொருளில் தெளிவின்மையைத் தோற்றுவிக்கும். சொற்களின் வரிசையினை மாற்றி அமைத்தால்தான் சரியான பொருளைத் தெரிந்து கொள்ள அது வாய்ப்பாக அமையும். அதனால் மொழிபெயர்க்கும்போது மூலத்தில் இருப்பது போன்றே வாக்கிய அமைப்பை வைத்துக் கொள்வதா அல்லது தெளிவிற்காக வரிசையினை மாற்றி அமைத்தல் நல்லதா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே சொல்லின் பொருளுணர்ந்து தக்க சொல் கொண்டு மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்.
• விடுகதைகள்
விடுகதைகள் என்பது சொல்லும் அதனோடு சேர்ந்து பொருளும் வருமாறு அமையும். இந்நிலை அமையாவிட்டால் விடுகதைக்கு விடையளிப்பது கடினம். ஆனால் சொல்லையும் பொருளையும் ஒரு சேர அமைக்கின்ற நிலையிலே அதனைப் பெயர்க்க முடியாது.
விடுகதையினை விளக்கமாக மொழிபெயர்த்தால் அது விடுகதையாக அமையாமல் நிகழ்ச்சி விளக்கமாக அமைந்து விடும்.
இம்மாதிரியான நிலைகளை மொழிபெயர்க்க முடியாதவை என்ற வகையிலும் அடக்கலாம்.
• சிலேடை
ஆங்கிலத்தில் Pun என்பது இங்குச் சிலேடையாக வெளிப்படுகிறது. இருபொருள் தருகின்ற சொற்களே அவை என்பது தெரிந்ததே. இவ்வாறு சிலேடையாக மொழிபெயர்ப்பில் அமைவது கடினமானது.
• தொடை நயமும் உறவுமுறைச் சொற்களும்
தமிழ்மொழிக்கே உரிய சில மரபுகள், வழக்குகள் உள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் போதும் மொழிபெயர்ப்பாளர் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியது உள்ளது.
தமிழில் உறவுமுறைச் சொற்கள் அதிக அளவில் இலக்கியங்களில் வழங்கி வருவதைக் காண்கிறோம். இம்மாதிரியான உறவுமுறைச் சொற்களை மொழிபெயர்க்கும் போது அதற்கு இணையான சொல்லையே பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதோடு தேவை ஏற்பட்டால் அடிக்குறிப்பில் விளக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
• இரட்டைக் கிளவி
இரட்டைக் கிளவி என்ற சொற்றொடரானது தமிழுக்கே உரியது. குடுகுடு கிழவன் என்ற தொடரில் குடுகுடு என்பது பெயரடையாக அமைகின்றது. இப்பெயரடையானது, மிகவும் வயதானவர் என்ற பொருளைத் தருகிறது. இதே போன்று ஒரு புறநானூற்றுப்பாடலில் குழந்தையின் நடையை ‘குறுகுறு நடந்து’ என்று புலவர் வருணிக்கிறார். மொழிபெயர்ப்பில் நாம் அதன் பொருளைக் கொடுக்கலாமே அன்றி, அந்தக் குறிப்பிட்ட சொற்றொடரை அப்படியே மொழிபெயர்த்துத்தர இயலாது.
• அடுக்குத் தொடர்
தமிழ் இலக்கியத்தைப் பொருத்த அளவில், கவிஞன் விரும்புகின்ற உணர்வைக் கொடுப்பதற்கும், தன் கருத்திற்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கும், அடுக்குத் தொடர் என்ற உத்தியைக் கையாள்கிறான்.
சான்றாக,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
(குறள் – 29)
என்று அழுத்தம் கொடுப்பதற்காக அமைகின்றது.
ஆனால் இந்த உத்தியின் முக்கியப் பண்பானது மொழிபெயர்ப்பில் விடுபட்டுப்போகிறது.
• குறிப்புப் பொருள்
தமிழர்களின் அகப்பாடல்கள் உள்ளுறை, இறைச்சி என்ற குறிப்புப் பொருள்களின் கருவூலமாக விளங்குகின்றன. அதில் புலவர்கள் குறியீடு, உவமை, உருவகம் முதலியவற்றைக் குறிப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் உள்ள குறிப்புப் பொருளை விளங்கிக் கொள்ளத் தனி விளக்கம் தேவைப்படுகிறது. இவ்வாறு ஆகுபெயர், சித்திரக்கவி, நிரோட்டகம் முதலியனவற்றிலும் மொழிபெயர்ப்பின்போது அவற்றின் சிறப்பியல்புகள் சிதைந்து விடுகின்றன.
தமிழ்க் காப்பியங்களில் – காண்டம், காதை, படலம் அல்லது பருவம் என்பன உட்பிரிவைக் குறிக்கின்ற சொல்லாக அமைகிறது. அதனை நாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, canto அல்லது section அல்லது part என்ற சொல்லையே பயன்படுத்துகிறோம். மேற்கூறிய தமிழ்ப் பகுப்புகளுக்கு இவை இணைகள் என்று சொல்ல முடியாது.
• கலைச் சொற்கள்
ஒவ்வொரு மொழி இலக்கியத்துக்கும் ஒவ்வொரு தனித்தன்மை, சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அவ்வாறே மொழிபெயர்ப்பது என்பது இயலாத ஒன்று. அந்த வகையில் தமிழ் இலக்கியமானது, தமிழர்களின் மரபுச் சொற்களை, பழக்க வழக்கங்களைத் தன் கவிதையிலே கொண்டு அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இம்மாதிரியான மரபுச் சொற்கள் மிகுதி.
சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள திணை, துறை, அகம், புறம், தோழி, பாங்கன், பாணன், பாடினி, வெறியாட்டு, அறத்தொடு நிற்றல் முதலியவற்றை அதே பொருளில் மொழிபெயர்க்க முடிவதில்லை. இம்மாதிரியான நிலைகளில் மொழிபெயர்ப்புப் பணியானது அடிக்குறிப்புகளில் விளக்கப்படுதல் நலம். மரபினைப் புரிந்து கொண்டாலொழிய வெளிநாட்டவர் தமிழரின் பழமையான இலக்கியத்தைப் புரிந்து கொள்வது கடினம்.
இது போன்று பிறதுறைகளில் எழும் மொழிபெயர்ப்புச் சிக்கல்களையும் காணலாம்.
முதலாவதாக, இன்றைய உலகம் ஒரு அறிவியல் தொழில்நுட்ப உலகமாக மாறிவிட்டது. அறிவியல் கருத்துகளை மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இரண்டாவதாக, அறிவியல் படைப்புகளை மொழிபெயர்ப்பது என்பதை ஒரு சிறந்த மொழிபெயர்ப்பிற்குச் சான்றாகக் காட்டலாம். அதில் கருத்துகளுக்குத் தான் முதலிடம் அளிக்கப்படுகிறதே தவிர, கருத்துகள் எழுதப்படுகின்ற முறைக்கு அல்லது நடைக்கு அல்ல என்பதை அறிய வேண்டும்.
மூன்றாவதாக, மூலமொழியில் உள்ள கருத்துகளைப் பற்றிய அறிவை, அறிவியல் மொழிபெயர்ப்புச் செய்கின்றவர் பெற்றிருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துவதாகும்.
நான்காவதாக, அறிவியல் மொழிபெயர்ப்பில் சொற்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இவை போன்றவற்றை முதன்மையான காரணங்களாகக் கொள்ளலாம். அறிவியல் நூல்களைப் பொருத்தவரையில் செய்திகளைத் தெளிவாகச் சொல்வதற்குத் தேவையான மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
”நிகரான சொற்களைக் கண்டு அறிவதும் மூலமொழி நூலுக்கும், பெயர்ப்புமொழி நூலுக்கும் இடையே ஒத்த பொருளையுடைய சொற்களைக் காணுவதும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவோரை அடிக்கடி மலைக்க வைக்கும் பெரும் சிக்கலாகும்” என்பது அறிஞர் ஆர்.எம்.பகாயாவின் கருத்தாகும்.
தொழில்நுட்பச் சொற்கள் அல்லது துறைசார்ந்த சொற்கள் மொழியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இத்தொழில்நுட்பப் பொருளமைந்த சொற்களை, பெயர்ப்புமொழியில் எடுத்துரைப்பது என்பதும் மிகச் சிக்கலான செயலாகும்.
மூலமொழியிலும் பெறுமொழியிலும் உள்ள தொழில்நுட்பச் சொற்கள், விளக்கங்கள், தொடர்மொழிகள் தொடர்பான சிக்கலோடு அறிவியல் தன்மையை எடுத்துக் கூறுவது என்ற நிலையில் மொழிபெயர்ப்பு மேலும் சிக்கலானதாக நேரிடுகிறது.
அறிவியல் என்ற ஒரு பெருந்தொகுப்புக்குள் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றை மொழிபெயர்க்கும் பொழுது அந்தந்தப் பிரிவினைத் தெளிவாக உணர்த்தும் வகையில் அறிவியல் மொழிபெயர்ப்பு அமைந்தால் அம்மொழிபெயர்ப்பு வெற்றியடைந்ததாகக் கொள்ளலாம்.
சான்றாக,
Cell, scale ஆகிய ஆங்கிலச் சொற்கள், உடலியல், உயிரியல், இயற்பியல் ஆகிய துறைகளில் வெவ்வேறு பொருள்களை உணர்த்துகின்றன.
செல் (cell) - உயிரணு (உடலியல்)
செல் (cell) - நுண்ணியம், சிறு அறை – (உயிரியல்)
செல் (cell) - மின்கலம் (இயற்பியல்)
ஸ்கேல் (Scale) - வளர்ச்சிப்படி (உடலியல்)
ஸ்கேல் (Scale) - செதிள் (உயிரியல்)
ஸ்கேல் (Scale) - அளவுகோல் (இயற்பியல்)
இவற்றைப் பெயர்ப்பு மொழியில் எடுத்துரைக்கும்போது ஒரே சொல்லாகக் கொண்டு உணர்த்தக் கூடாது; இயலாது. அந்தந்தப் பொருளமைப்பிற்கு ஏற்றவாறு பெயர்ப்பு மொழியில் பொருத்தமான சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும்.
பல ஆங்கிலக் கலைச்சொற்கள் ஒரே தமிழ்ச் சொல்லால் விளக்கப்படுகின்ற நிலையும் இருந்து வருகிறது. சான்றாக, buoy, float ஆகிய இரு சொற்களும் மிதவை என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. winding, coil, turn ஆகிய சொற்கள் சுற்று என்ற ஒரே சொல்லாலேயே தமிழில் சுட்டப்படுவதால் ஒரு செய்முறையை விளக்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இச்சொற்களை முறையே, சுருணை, சுற்று, சுருள் என்று மொழிபெயர்த்து தெளிவு செய்யப்பட்டால் அவற்றை எளிதில் புரிந்துகொள்ள இயலும்.
‘gram’ என்ற பின்னொட்டிற்கு (suffix) ஈடாகத் தமிழில் ஏழு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சான்று:
Pictogram - உருவப்படம், உருவ விளக்கப்படம்
Seismogram - நிலநடுக்கப் பதிவி (நிலநடுக்கமானி)
Spectoheliogram - ஞாயிற்று ஒளிநிற அளவி (மானி)
Electro encephalogram - மின்மூளைமானி
Magnetogram - காந்தப் பதிவு
‘Gram’ என்ற பின்னொட்டினைப் படம், விளக்கப்படம், பதிவி, அளவி, மானி, பதிவு என மொழிபெயர்ப்பதை அறிய முடிகிறது. பின்னொட்டு, வேர்ச்சொல்லுடன் (Root word) இணையும் பொழுது பல பொருள்களை உணர்த்துகின்ற தன்மை அறிவியலுக்கே உரித்தானதாகும். இத்தகைய புரிதல் இல்லாத போது மொழிபெயர்ப்பில் சிக்கல் ஏற்படுகிறது.
சான்று:
Radar - ரேடார்
Laser - லேசர்
Tansi - டான்சி
Sidco - சிட்கோ
இந்த வகையில், சுருக்கமான முறையில் வழங்கப்படுவதை அவ்வாறே ஒலிபெயர்ப்பாக அமைப்பது அறிவியல் மொழிபெயர்ப்பில் தவிர்க்க முடியாததாகும். விரிவான பெயரை இவ்வாறு சுருக்கி வழங்குவதை, பெயர்ப்பு மொழியிலும் அவ்வாறே எடுத்தாள வேண்டும். இதை விடுத்து வேறு வகையைப் பின்பற்றினால் சிக்கல் ஏற்படும்.
Smoke + Fog > smog
Television + Broadcast > Telecast
Breakfast + lunch > Brunch
இவ்வாறு தனித்த இரு சொற்கள் இணைந்து மற்றொரு பொருளை உணர்த்தும் வகையில் இச்சொற்கள் அமைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் உருளைக்கிழங்குச் செடியையும் தக்காளிச் செடியையும் இணைத்து உருவாக்கிய புதிய தாவரத்தை பொமேட்டோ என்றே அழைத்தனர்.
Potato + Tomato > pomato
இதனைத் தமிழாக்கம் செய்தவர்கள் உருளைத் தக்காளி என்று வழங்கினர்.
சட்டம், ஆட்சி, நீதி ஆகிய துறைகளில் செய்யப்படும் மொழிபெயர்ப்பில் இலக்கிய மொழிபெயர்ப்புப்போல மொழி நயத்திற்கோ, உணர்ச்சிக்கோ சிறிதும் இடமில்லை. நீதிபதியின் மொழியாளுகை போல, செறிவாகவும் கறாராகவும் மொழிபெயர்ப்பு இருத்தல் வேண்டும். இல்லையேல் சிக்கல்களே மிஞ்சும்.
சட்டக் கருத்துகளை மிகைபடக் கூறாமலும் குன்றக் கூறாமலும் நடுநிலையில் உள்ளதை உள்ளவாறே எளிய, தூய தமிழில் திறம்பட எடுத்து இயம்ப வேண்டியது சட்டவியல் தமிழ் வரைவுகள் ஆகும். சட்டமொழி (Legal Language) என்பது ஒரு மொழியின் பயன்பாட்டில் சட்டக் கருத்துக்களை, தெள்ளத்தெளிவாக, சொல்ல வந்த செய்தியைத் தொடர்புபடுத்தி, அந்தந்தச் சமுதாயச் சூழல்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளப்படும் அல்லது எழுதப்படும் ஒரு மொழிநடையாகும்.
உருவாக்கப்படும் கலைச்சொற்களைத் தரப்படுத்தும்போது பொருத்தமுடைமை, எளிமை, ஏற்புடைமை, மொழித்தூய்மை, ஒரு சீர்மை ஆகியவையும் பல்துறை அணுகுமுறையும் போக்கும் பின்பற்றப்பட வேண்டும்.
• பொருத்தமுடைமை
ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான பல தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் அச்சூழ்நிலைக்கு ஏற்ற பொருத்தமுடைய சொல்லைத் தரப்படுத்துதல் அவசியமாகும்.
• எளிமை
சொல் எளிமையாக அமைவதோடு கேட்பதற்கும் இனிய ஓசை நயம் உடையதாகவும் இருக்க வேண்டும். ‘By Beat of Drum’ என்ற ஆங்கில வாசகத்திற்குப் பறையறைதல் என்ற சொல் பொருத்தமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. அவ்வாறே பப்ளிக் பங்க்ஷனரி (Public Fuctionary) என்ற ஆங்கிலத் தொடருக்கும் பொதுவாழ்வினர் என்ற ஓசை நயம் மிக்க பொருள் பொதிந்த சொற்றொடரைக் கையாளுகின்றனர். அதே போல் Confidential என்ற சொல்; இதற்கு மறைபொருள் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
• ஒரு சீர்மை
தமிழில் சட்டத்தை வரையும் பொழுது சட்டக் கலைச்சொற்களை ஒரு சீர்மையாகப் பயன்படுத்தத் தவறினால் ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களைத் தமிழில் வரைவது இயலாது. மேலும் தமிழில் வரையப்படும் பல்வேறு சட்ட வாசகங்களில் தெளிவும் திட்பமும் இல்லாது போய்விடும். பொருள் மயக்கமும் குழப்பமும் நேர்ந்துவிடும். எனவே, அடிப்படையாக அமைய வேண்டியது ஒரு சீர்மை கொண்ட சட்டச் சொல்லாக்கம் ஆகும்.
1980ஆம் ஆண்டு சனவரி திங்கள் முதல் பேராசிரியர் மா.சண்முகசுப்பிரமணியம் அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட தீர்ப்புத்திரட்டு என்ற சட்டத்தமிழ் திங்கள் இதழில், தமிழில் வெளியான பல பழந்தமிழ்த் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பல தீர்ப்புகள் ஒரு நூற்றாண்டானவை. அவற்றில் தமிழின் மொழிநடை, சொல்லின் பயன்பாடு, பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர் ஆகியவற்றில் இடைக்காலத் தமிழில் வடமொழி பெற்றிருந்த செல்வாக்கைப் போலவே, ஆங்கிலம், பாரசீகம், உருது போன்ற பிறமொழிச் சொற்கள் செல்வாக்கைப் பெற்றிருந்ததைக் காண முடிகிறது.
சட்டத் துறையில் சிக்கல் ஏற்படாமல் மொழிபெயர்க்கப் பின்வரும் பரிந்துரைகளை முக்கியமானவையாகக் கொள்ளலாம்.
1. எளிய சட்டச் சொற்களைத் தொகுத்துச் சட்டத் தமிழ் அகராதி வெளியிடுதல் – மொழிபெயர்ப்பின்போது இதனையே பின்பற்றுதல்.
2. தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்களுக்குத் தேவையான சில வழக்குகளைத் தொகுத்துச் சிறு சிறு நூல்களாக மொழிபெயர்த்தோ, தமிழிலேயோ வெளியிட வேண்டும்.
3. இலவசச் சட்ட உதவி வழங்குவோர் பெரும்பாலும் தாய் மொழியாம் தமிழிலேயே தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தல்.
இவற்றால் மக்களிடம் தமிழில் சட்டக் கருத்துகள் எளிமையாகப் பரவ வாய்ப்பு உண்டு. அதே சமயம் மொழிபெயர்ப்பின்போது எழும் சிக்கல்கள் பலவற்றையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
செய்திகளைப் பரிமாறிக் கொள்வதும், கருத்துகளைப் புலப்படுத்துவதும் ஒரு மொழியின் அடிப்படைப் பணிகளாகும். அந்நிலையில் ஒரு மொழியில் கிடைக்கும் செய்திகளை அதே மொழி அறிந்த மக்களுக்கு, சுருக்கமாகவோ, விளக்கமாகவோ கூறுவது முதல் நிலை.
ஒரு மொழி பேசும் மக்களிடையே மற்றொரு மொழி பேசும் மக்களின் கருத்துகளை, அறியச் செய்கின்ற மொழிபெயர்ப்புப் பணி இரண்டாவது நிலை.
மொழி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்ற சொல்லாக்கப் பணி மூன்றாவது நிலை.
புதியனவற்றிற்குப் புதிய சொற்கள் பெயர்ப்பு மொழியில் படைக்க முடியாத நிலையில் அதனை நிறைவடையச் செய்யும் வகையில் அமைகின்ற ஒலிபெயர்ப்புகள் நான்காம் நிலை.
தற்காலச் செய்தித்தாள்களில் சிலவற்றில் மட்டும் மொழிபெயர்க்கப்பட்ட அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்த சிறப்புக் கட்டுரைகளைக் காண முடிகிறது. அத்துடன் மருத்துவம், உடல்நலம் போன்ற சிறப்புக் கட்டுரைகளையும் காணமுடிகிறது.
செய்தித்தாள்களில் இடம்பெறும் மொழிபெயர்ப்பைப் பொறுத்த அளவில், விற்பனையைப் பெருக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், அந்தந்த மொழி பேசும் மக்களைக் கவரும் வண்ணமாகவும் அவை அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
பத்திரிகை மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகை சென்று சேரவேண்டிய சமூகத்தின் கொள்திறன், மொழியாளுமை, மொழியைச் செறிவாகப் பயன்படுத்தும் திறன் முதலிய பண்புகள் கைவரப் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் மொழிபெயர்ப்பு சரியானதாக, தகவலை முழுமையாக வெளியிடும் திறன் கொண்ட மொழிபெயர்ப்பாக அமைதல் வேண்டும். இதில் கவனம் செலுத்தத் தவறினால் பொருள் மாறாட்டம் ஏற்பட்டுத் தவறான தகவலைத் தெரிவிக்கின்ற குற்றம் ஏற்படும். அதனால் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் செய்தி மொழிபெயர்ப்பில் சிக்கல் ஏற்படாமல் கவனமாக மொழிபெயர்க்க வேண்டும்.
மொழிபெயர்க்கும்போது, தங்களுக்குரிய பாணியில் பத்திரிகைகள் (இதழ்கள்) அமைத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. செய்தியைப் பரபரப்பாக வெளியிட வேண்டும் என்ற ஒரே கோணத்தில் கூட, பல சொற்களைக் கையாளுகின்றனர்.
அதிர்ச்சித் தோல்வி, ஓலம், கூக்குரல், பயங்கரம், தவிடுபொடி, கெடுபிடி, உயிர்ச்சேதம், கல்தா, குபீர், திடீர், டமார், மர்மம், அலங்கோலம் போன்ற சொற்கள் பயன்படுவது இயல்பான நடையாகிவிட்டது. மூலமொழியில் செய்தியைப் புரிந்து கொண்டு தமிழில் உணர்ச்சிகரமான சொற்களைப் பயன்படுத்தி வெளியிடுகின்றனர். மக்கள், செய்தியை மொழிபெயர்ப்பு என்று அறிய முடியாதவகையில் மொழிபெயர்ப்பது, பத்திரிகை மொழிபெயர்ப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியே ஆகும்.
”சிறந்த விளம்பரம் ஒன்றைத் தயாரிப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கென, கலைநுணுக்கமும், கற்பனைத் திறமும், சொற்சிக்கனமும் வேண்டும். விரசத்தைத் தவிர்த்து, வீண்சொற்களைக் குறைத்து உண்மையினைக் கூறிப் படிப்போரின் உள்ளத்தில் பதியும் வண்ணம் அவை அமையுமாயின் நன்று” என்று விளம்பரத்திற்கெனச் சில வரைமுறைகள் உள்ளன.
செயப்பாட்டு வினைகளைப் பேரளவில் பயன்படுத்துவது ஆங்கில மரபு. தமிழோ மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தும். செயப்பாட்டு வினையைச் செய்வினை அமைப்பில் எழுதுவதே தமிழ் மரபாகும்.
கற்பிக்கப்பட்ட பாடம் - கற்பித்த பாடம்
சொல்லப்பட்ட கதை - சொன்ன கதை
அனுப்பப்பட்ட புத்தகம் - அனுப்பிய புத்தகம்
கற்பித்த பாடம், சொன்ன கதை, அனுப்பிய புத்தகம் – எனச் செறிவாகவும் சுருக்கமாகவும் எழுதுவதே தமிழ் மரபு.
இரண்டாம் பகுதியில், இலக்கிய மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்கும் வழிமுறைகளையும் காணலாம். சொல்லும் பொருளும், பழமொழி, மரபுச் சொற்கள், வழக்குச் சொற்கள், பொருள்கோள், விடுகதைகள், சிலேடை, தொடைநயம் உறவுமுறைச் சொற்கள், பெயர்ச்சொல், இரட்டைக் கிளவிகள், அடுக்குத்தொடர்கள், குறிப்புப் பொருள், கலைச்சொற்கள் முதலியன இலக்கியத்தில் கையாளப்படுகின்றன. அவற்றை மற்றொரு மொழியில் பெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர்கள் அடைகின்ற சிக்கல்கள் ஆகியவற்றை இவ்விரண்டாம்பகுதி குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் பகுதி அறிவியல் மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், அறிவியல் மொழிபெயர்ப்புக்கான காரணங்கள், நிகர்ச் சொற்கள், பொருள் நிகரன்கள் முதலியவற்றைக் குறிப்பிடுகிறது.
நான்காம் பகுதி சட்டத்துறை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் பற்றிக் கூறுகிறது.
ஐந்தாம் பகுதி இதழியல் துறையில் ஏற்படும் சிக்கல்களைப் பட்டியலிடுகிறது.
ஆறாம் பகுதியான ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள், பயனிலைகளை மொழிபெயர்த்தல், செயப்பாட்டுவினை முதலிய பலவற்றைத் தெளிவுபடுத்துகிறது.