39

விடை

3.

விடை

4.

விடை

5.

விடை

6.

விடை

7.

விடை

பாடம் – 6

D06146 புலம்பெயர்வுத் திறனாய்வு

6.0 பாட முன்னுரை

தமிழ்த் திறனாய்வுப் பரப்பில், பல சூழ்நிலைகளின் காரணமாகப் புதிய புதிய கொள்கைகளும் தளங்களும் தோன்றுகின்றன. சமூக வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் ஏற்படுகின்ற மாற்றங்களும் வளர்ச்சிகளும் இத்தகைய புதிய தளங்களையும் புதிய பரிமாணங்களையும் தவிர்க்க முடியாதனவாக ஆக்குகின்றன. பின்னை அமைப்பியலும் பின்னை நவீனத்துவமும் அதுபோலப் பெண்ணியமும் தலித்தியமும், கொள்கைகளையும் அவற்றின் புதிய கோணங்களையும் ஒட்டிப் பிறந்தன. புலம்பெயர்வு என்பது குறிப்பிட்ட கொள்கை அல்லது முறையியல் சார்ந்தது அல்ல; மாறாக, வித்தியாசமான சூழ்நிலையையும் வாழ்நிலையையும் அது குறிக்கின்றது. புலம்பெயர்வு என்ற நிகழ்வு பழைமையானது; ஆனால் அது பற்றிய உணர்வும் ஆய்வும் புதியது. இன்று அது சமூகவியலாளர்களிடையேயும், இலக்கிய ஆய்வாளர்களிடையேயும் பெரிதும் கவனத்திற்குள்ளாகி வருகிறது. தமிழ்ச் சூழலிலும் இத்தகைய ஆய்வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

6.1 புலம்பெயர்வு - விளக்கம்

ஒரே இடத்தில் தொடர்ந்து வாழாமல், இடம்விட்டு இடம் நகர்தல், ஊர் விட்டு வேற்றூர் வாழ்தல் என்ற பொதுவான பொருளை இது குறிக்கிறது என்றாலும், இன்று ஒரு கலைச்சொல்லாக (technical term) வழங்குகிறது. சமூக நகர்வுகள் (Social mobility) குடியேற்றங்கள், இருவகைப்பட்ட பண்பாடுகளின் உறவுகள், மொழி உறவுகள் என்ற பொருள்நிலை, புலம்பெயர்வு என்ற சொல்லுக்கு உண்டு. பிழைப்பும் பாதுகாப்பும் நாடிச் செல்லுகின்ற சாதாரணச் குடிமக்களிலிருந்து நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள், கணினிப் பொறியாளர்கள், பணம் குவிக்கும் கனவுகளோடு வணிகர்கள், தஞ்சம் அடையும் அரசியல் போராளிகள் என்று இவர்கள் வரை புலம்பெயர்வோர் பல திறத்தினர்; பல தரப்பினர். புலம்பெயர்வுக்குக் காரணங்களைப் பொதுவாக இப்படிக் கூறலாம்.

(1) இயற்கையின் சீற்றம், வறுமை முதலியன. (2) யுத்தங்கள் (3) வேற்றுநாட்டு ஆதிக்கங்கள் (4) இனக்கலவரங்கள், பெருந்தேசியவாத அரசியல் தரும்     நெருக்கடிகள், சமய வழக்கு (5) புதிதாய் வசதிகளும் வாய்ப்புகளும் பற்றிய     தேட்டங்கள் / விருப்பங்கள்.

இவை பொதுவான காரணங்கள். வெவ்வேறு சூழல்களின் பின்னணியில்    நடைபெறும்    வெவ்வேறு    வகையான புலம்பெயர்வுகளாலும் புலம் அமர்வுகளாலும், வாழ்நிலை, சூழ்நிலை வேறுபாடுகளும் பொருளாதார - பண்பாட்டுப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்களைப் புலம்பெயர்வு இலக்கியம் (Emigrant Literature) என்று அழைப்பர்.

6.1.1 புலம்பெயர்வு - வரையறை

பிறந்து    வளர்ந்து பரம்பரையாக இருந்த தங்கள் நிலப்பகுதியிலிருந்து அல்லது தேசத்திலிருந்து, அகன்று/ பெயர்ந்து, வேறுநாடு சென்று, நீண்ட காலமாகவோ, நிரந்தரமாகவோ குடியமர்தலை அல்லது குடியமராமல் அலைப்புண்டு திரிதலைப் புலம்பெயர்வு என்பது குறிக்கின்றது. இரண்டு வேறு நாடுகள், இரண்டு வேறு மொழிகள், இரண்டு வேறு பண்பாடுகள் என்ற ஒருநிலை, இந்தப் புலம்பெயர்வில் காணப்படும் நிலையாகும். இதனுடைய ஆங்கிலச்சொல் Diaspora என்பதாகும். இது disappearing என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. மொழி, பண்பாடு முதலானவற்றில் பொது அடையாளங் கொண்ட குழுவினர், தம்முடைய பாரம்பரியமான நிலங்களை அல்லது தேசங்களை விட்டு அகன்று, வேற்றுப்புலம் அல்லது வேற்றுநாடுகளில் சிதறிப் போதல் (scattering of persons or groups) என்பது இந்தச் சொல்லின் பொருளாகும். ஒரே நாட்டிற்குள் வெவ்வேறு மொழிகள் பேசுகின்ற பகுதிகளில் - உதாரணமாக, இந்தியாவிற்குள், தமிழ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலத்திற்கோ, மேற்குவங்க மாநிலத்திற்கோ சென்று வசிப்பதை, அதுவும் ஒரு வகையில் இடம்விட்டு இடம் நகர்தலாக இருந்தாலும் புலம்பெயர்வு என்று அழைப்பதில்லை. புலம்பெயர்வு பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியம் இருவேறு நாடுகள் சார்ந்த புலம்பெயர்வாக இருக்க வேண்டும். இருவேறு பண்பாட்டுச் சூழமைவுகளும் இருவேறு மொழிநிலைகளும் அடுத்த நிலையில் தளங்களாக அமைகின்றன.

.

புலம்பெயர்வு இலக்கியங்களில் இந்த உணர்வுநிலை    பல    வடிவங்களில்    வெளிப்படக்கூடும். திறனாய்வாளன் இவற்றை உற்றறிந்து புலப்படுத்த வேண்டும். உதாரணமாக தம் தாயகமாகிய ஈழத்தைவிட்டுப் பிரிந்து கனடாவில் வாழும் சேரன் முதலிய கவிஞர்களின் கவி வரிகளில் இந்த மனநிலையைப் பார்க்கமுடிகிறது.

6.1.2 புலம்பெயர்வு வரலாறு

‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பது பழமொழி. உலகத்தில் பல இனங்கள், பல்வேறு காலங்களில் தம் நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்துள்ளனர். மிக நீண்டகாலமாக இது நடந்து வருகிற ஒன்றுதான். புலம்பெயர்வு (Diaspora) பற்றிய கருத்துநிலை முதலில், பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற அதே நேரத்தில் தொடர்ந்து ஒரே இடத்தில் இல்லாமல் பல நாடுகளுக்கும் அலைகின்ற/அலைந்து திரிந்த யூதர்களின் (Jews) வாழ்நிலைகளைக் குறிப்பதாகவே எழுந்தது.

ஜெரூசேலம் (Jerusalem) நகரைச் சேர்ந்த ஆப்ரஹாம் உள்ளிட்ட யூதர்களைப் பார்த்து ஆண்டவர் சபித்தாராம்; ‘நீங்கள் பிறந்த, உங்கள் தந்தையர் நாட்டைவிட்டு உடனே வெளியேறக் கடவீர்கள் ! வேற்று தேசங்களில் அலைந்து திரியக் கடவீர்கள் !” - இந்தச் சாபத்திற்கு விமோசனம் இல்லை. எனவே யூதர்கள் பல்வேறு நாடுகளிலும் அலைகிறார்கள்; குடியேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவே Diaspora என்ற கருத்துநிலைக்கு மூலமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இசுரேயில் (Isreal) என்று இவர்களுக்கென ஒரு நாடு பிறந்திருக்கிறது; இருப்பினும் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மிகப் பல நாடுகளில் (இந்தியாவிலும்    தான்;   

 கேரளாவில்)    இவர்கள் குடியமர்ந்திருக்கிறார்கள்.

புலம்பெயர்வு அதிகம் நடந்த இடம் என்று பார்த்தால் மத்திய ஆசியா - மெசபடோமியா, ஐரோப்பா முதலியன உள்ளிட்ட பகுதிதான். தொடக்கத்தில் அதிகமாகப் புலம்பெயர்ந்தவர்கள் ஆரியர்கள். அதன்பின் தொடர்ந்து, அதே இனத்தோடு உறவுடைய ஐரோப்பியர்கள். உலகத்தின் பல நாடுகள், ஐரோப்பியர்களின் குடியேற்ற    நாடுகளாக    ஆகியிருக்கின்றன. இருப்பினும் தொழிற்புரட்சி    மற்றும் இரண்டு    உலகப் போர்கள் ஆகியவற்றுக்குப்பின், பல தேசிய இனங்களின் புலம்பெயர்வுகள் கணிசமாகவே காணப்படுகின்றன. 2005 ‘சர்வதேச ஒருங்கிணைவு மற்றும் அகதிகள் சங்கம்’ (I.I.R.N) என்ற அமைப்பின் கணக்குப்படி, தம் நாடுகளையும் உறவுகளையும் விட்டுப் புலம்பெயர்ந்து சென்றோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ இருநூறு மில்லியனையும் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

6.2 புலம்பெயர்வு சில விவரங்கள்

நவீன காலத்தில் (Modern period) தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியை இரண்டு வகையாகப் பகுக்கலாம்.

சுதந்திரத்திற்கு முன்னர்ச் சென்றவர்கள் இந்தியாவை அன்று ஆண்ட ஆங்கிலப் பேரரசு, பிரெஞ்சுப் பேரரசு, போர்த்துகீசிய அரசு ஆகியவற்றினால் அவர்களுடைய ஆதிக்கங்களின் கீழ் இருந்த ஃபிஜி, பர்மா முதலிய பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் அங்கே துயரம் மிகுந்த அநாதரவான வாழ்க்கையை அனுபவித்தார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர், முதலில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப்    பணிக்காகப் போனவர்கள், முதல் அலை; எழுபதுகளுக்குப் பிறகு போனவர்களில் பெரும்பான்மையோர் கணினிப் பொறியாளர்கள், இரண்டாவது அலை.

தமிழர்களில் துயரமான சூழ்நிலைகளுக்கு இடையே தாயகம் விட்டு வெளியேறியவர்கள், ஈழத்துத் தமிழர்களே. இலங்கையின் பெருந்தேசிய இனவாத அரசியலே இதற்குக் காரணம். 1956-இல் இலங்கை அரசினால் புகுத்தப்பட்ட ‘சிங்களவர்கள் மட்டுமே’ என்ற நடவடிக்கைகள் முதற்கொண்டு, பின்னர் 1972 அதன் பின்னர் 1983இல் நடந்த பெருங்கலவரத்தையொட்டிக் கணக்கற்ற தமிழர்கள் அடைந்த பெருந்துயரம், நிராதரவான நிலை என்ற இந்தச் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கனடா, ஜெர்மனி, நார்வே, பிரிட்டன் முதலிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள்.

தமிழ் இனத்தவர்கள், ஏறத்தாழ எழுபது மில்லியன்பேர் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். ஏற்கெனவே கூறியது போல, பிரிட்டிஷ், பிரெஞ்சு குடியேற்ற ஆதிக்க அரசுகளால்     18-ஆம்    நூற்றாண்டிலிருந்து    தொடங்கி ஆயிரக்கணக்கான பேர் மொரீஷியஸ், ஃபிஜி, ரியூனியன், தென்னாப்பிரிக்கா, இலங்கை (மலையகம்), மலேசியா, பர்மா முதலிய நாடுகளுக்குக் கரும்புத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள்,    இரப்பர்த் தோட்டங்கள் முதலியவற்றை உருவாக்கவும், தொடர்ந்து அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அனுப்பப்பட்டார்கள். அண்மைக் காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு முதலிய செல்வந்தர் நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இவர்களிடையே பல தரங்களும் பல நோக்கங்களும் உண்டு. தமிழ்மொழியையும் பண்பாட்டையும் இவர்கள் தங்களிடையே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று காண்பது, புலம்பெயர்வு ஆய்வின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும்.

6.2.1 புலம்பெயர்வுப் பிரச்சினைகள்

ஏற்கெனவே தாயகத்தில் ஓரளவு வசதிகள் உடையவர்கள், மேலும் கூடுதல் வசதிகளும் உயர்நிலைகளும் வேண்டி, வெளிநாடுகளில் குடிபெயர்வது என்பது வேறு; பிரச்சினைகள் இருப்பினும் அவை குறைவே. ஆனால், நெஞ்சத்தில் அழுந்தும் சுமைகளோடும், வேறு வழியில்லை என்ற நிலைகளோடும் புலம்பெயர்ந்தோர் படுகிற சிரமங்களும் கசப்பான அனுபவங்களும் அதிகமாகும். முக்கியமாக இத்தகைய நிலைகளில் ஏற்படுகிற பிரச்சினைகள் பொதுவாக நான்கு. அவை :

(1) வேற்று நாடுகளில் குடியமர்ந்த பின்னும், தங்களுடைய     தாயகம், தங்களுடைய பாரம்பரியம், சொந்தபந்தம்     முதலியவை பற்றிய உணர்வுகள், பிரிவுகளின் எதிரொலிகள்     முக்கியமான பிரச்சினையாகும்.(2) வேற்றுநாட்டில், வேற்றுச்சூழலில் வேர்விடுகின்ற முயற்சியும்     அதன் விளைவுகளும் தருகிற பிரச்சனை.