4

திறனாய்வின் மொழி , எவ்வாறு அமைந்திருக்கும் ?

உள்ளும் அதன் வகைமை , நோக்கம் , சூழல் , சென்று சேரும் இலக்கு முதலியவற்றிற்கு ஏற்ப இந்த மொழி அமைந்திருக்கும் .

ம.பொ.சிவஞானம் , சிலப்பதிகாரத்தை எவ்வாறு காணுகிறார் ?

அதற்குரிய அவருடைய சமூகப் பின்புலம் யாது ?

ம.பொ.சிவஞானம் , சிலப்பதிகாரத்தை தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாகவும் இலட்சியமாகவும் காணுகிறார் .

குறிப்பிட்ட சமூகப் பின்னணியோடு , அதிலே நல்ல அறிவும் ஈடுபாடும் கொண்ட ஒருவர் , அந்த வகையான சமூக வாழ்வோடு கூடிய இலக்கியத்தைப் படைக்க முடியும் என்பதாகும் .

திறனாய்வு , வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது ஏன் தேவைப் படுகிறது ?

மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வது , அறிவாராய்ச்சிகளின் நடைமுறை .

அம்முறையில் , திறனாய்வு , வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது அதன் முக்கியமான தேவையாகும் .

தத்துவம் என்றால் என்ன ?

அதன் வரையறைக் கூறுக ?

உலகத்திற்கும் மனிதனுக்குமுள்ள உறவுகள் , மனித வாழ்க்கையின் நடைமுறை அனுபவங்கள் மற்றும் அவனுடைய உள்ளாற்றல்கள் , நம்பிக்கைகள் , பயங்கள் , ஆசைகள் முதலிய உணர்வு நிலைகள் ஆகியவற்றிலிருந்து பொதுமைப்படுத்தி ஓர் ஒழுங்கு முறையாகச் ( System ) செய்யப்படுவது தான் தத்துவம் ஆகும் .

‘ பத்தினி ’ எனும் தொன்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கிய மாந்தர்கள் யாவர் ?

புனிதவதியார் ( காரைக்காலம்மையார் ) , குண்டலகேசி , பெருங்கோப்பெண்டு ஆகியோராகும் .

திறனாய்வின் எடுகோள் அல்லது அடிப்படைக்கருத்து என்ன?

இலக்கியத்திற்குத் ‘திறன்’ இருக்கிறது. அதனைக் கண்டறிய வேண்டும் என்று சொல்லுகிறது. இலக்கியத்தின் திறன் என்பது, அதன் வடிவழகில், மொழி வளத்தில், உத்திகளின் உயர்வில், சொல்லுகிற செய்திகளின் மேன்மையில், அதன் நோக்கத்தில் இருக்கிறது என்று பொருள்.

   திறனாய்வு என்ற சொல்லிற்கு இணையாக வழங்கும் வேறொரு சொல் என்ன?

 திறனாய்வு என்ற சொல்லிற்கு இணையாக வழங்கும் வேறொரு சொல் விமர்சனம் ஆகும்.

திறனாய்வு - விமர்சனம் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தி வழக்கில் கொண்டு வந்தவர்கள் யார்?

திறனாய்வு - விமர்சனம் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தி வழக்கில் கொண்டு வந்தவர்கள் ஆ.முத்து சிவன்.

திறனாய்வின் அடிப்படை நோக்கம் அல்லது வரையறை என்ன?

குறிப்பிட்ட இலக்கியத்தின் குறிப்பிட்ட விளக்கம், அந்த இலக்கியம் மீதான திறனாய்வுக்கு அடிப்படையான கருதுகோளாக அல்லது நோக்கமாக அமைகிறது.

கம்பராமாயணத்தைத் திறனாய்வு செய்திருக்கிற அறிஞர்களுள் ஐவரைக் குறிப்பிடுக?

ஏ.சி.பால் நாடார், டி.கே.சிதம்பர நாத முதலியார், மு.மு. இஸ்மாயில், ப.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன்.

வாசகனுக்கு எந்தச் சூழ்நிலையில் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது?

சில நேரங்களில் இலக்கியத்தைப் படிப்பவனுக்குச் சில சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் போக்குவதற்கும் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது.

இலக்கியத்திற்குரிய விளக்கம் வரையறுக்கப்பட்டிருக்கிறதா?

 ஆம். இலக்கியத்திற்குப் பல விளக்கங்கள் உள்ளன.

படிக்கிறவர், இலக்கியத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்?

படிப்பவர், தத்தம் தேவைக்கும்     பின்னணிக்கும்,     பயிற்சிக்கும் ஏற்பவே இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கிறார்; இலக்கியத்தைப் புரிந்து கொள்கிறார்.

இலக்கியத் தளத்தில் முக்கூட்டு உறவு என்பது, யார் யாருக்குமான உறவு?

    இலக்கியத் தளத்தில் முக்கூட்டு உறவு என்பது படைப்பாளி, வாசகன், திறனாய்வாளன் இம்மூவருக்குமான உறவு ஆகும்.

இலக்கியம் பற்றிய விளக்கம் திறனாய்வுக்கு எவ்வாறு உதவுகிறது?

படிக்கிறவர்களுக்கு அல்லது ஓரளவாவது படிப்பதிலே ஆர்வம் உள்ளவர்களுக்கு, இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்கத் திறனாய்வு உதவுகிறது.

எழுதுவதாலும் அதனைப் படிப்பதாலும் பயன்கிடைக்க வேண்டுமானால், எழுதுகிறவனும் படிக்கிறவனும் எவ்வாறு இருக்க வேண்டும்?

இலக்கியத்திறன்களைப் படிக்கிற வாசகர்களுக்குச் சொல்லுகின்ற திறனாய்வு, அந்த வாசகர்களின் திறனையும் வளர்க்கிறது; அவர்களின் அறிவையும், ரசனையையும் விரிவடையச் செய்கிறது.

திறனாய்வாளன் முதலில், யார்?

அ) படைப்பாளி ஆ) வாசகன் இ) அறிஞன்.

ஆ) வாசகன்

படைப்பாளிக்கும் திறனாய்வாளனுக்கும் உள்ள பொதுவான மனநிலை என்ன? வேறுபாடாக இருக்கிற முக்கியமான மனநிலை என்ன?

படைப்பாளி, ஒரு அழகை அல்லது ஒரு பொருளை அல்லது அதன் சாரத்தைத் தனது படைப்பில் பொதிந்து / ஒளித்து வைக்கிறான். திறனாய்வாளன் அதனைத் தேடி எடுத்துத்தருகிறான். படைப்பாளி, விடுகதை போடுகிறான்; திறனாய்வாளன் அதனை விடுவிக்கிறான். படைப்பாளி, பல சமயங்களில் மவுனமாகி நிற்கிறான்; திறனாய்வாளன் அந்த மவுனங்களை உடைக்கிறான்; அந்த மவுனங்களுக்கு விளக்கம் தருகிறான். திறனாய்வின் எடுகோள் அல்லது அடிப்படைக்கருத்து என்ன?