42

இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் பேச்சில் எல்லா உயிர் எழுத்துகளும் சொல்லின் முதலிலும் இடையிலும் வருகின்றன .

ஈரிதழ் ஒலிக்கு முன்னரும் நாவளை ஒலிக்குப் பின்னரும் வரும்பொழுது எகரம் ஒகரமாகிறது .

இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் மெய்யொலியன்களுள் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றம் எது ?

க் , ச் , த் , ப் , ம் , ந் , ஞ் , வ் , ய் ஆகிய மெய்கள் சொல்லின் முதலில் வருகின்றன .

ட் , ர் , ல் ஆகிய மெய்கள் பிறமொழிச் சொற்களில் மொழி முதலில் வருகின்றன .

இரண்டு அல்லது மூன்று மெய்கள் மயங்கி வருவதற்கான சான்றுகளைத் தருக ?

( ன்ச் ) இன்சூரன்ஸ் , ( ர்ன் ) கவர்னர் , ( ஸ்வ் ) சரஸ்வதி

அண்ண இனமாதல் பற்றிக் கூறுக .

அண்ண ஒலிகளாகிய பிற ஒலிகள் ச , ஞ என்று மாற்றம் பெறுவதை அண்ண இனமாதல் எனலாம் .

எ.கா : அடித்தான் - அடிச்சான்

ஆக்கப் பெயர்கள் உருவாவதற்கான விகுதிகளுள் எவையேனும் இரண்டனைச் சுட்டுக .

த்துவம் - என்னும் உருபு முதலாளி - முதலாளித்துவம்

அம் - என்னும் உருபு திருப்பு - திருப்பம்

உயர்வு ஒருமைப் பெயர் - விளக்குக .

சமுதாயத்தில் படிநிலை அமைப்பு ஏற்பட்டதன் விளைவாகத் தமிழில் உயர்வைக் குறிக்கும் விகுதிகள் உயர்வு ஒருமைப் பெயர்கள் ஆகும் .

அண்ணனார் , அண்ணியார்

வினைச் சொற்களோடு சேரும் துணை வினைகளுக்குச் சான்று தருக .

செய்து வை , செய்யப் போகிறான் , கொடுத்து அழு , விட்டுத் தள்ளு

ஊடகங்கள் என்பன எவை எவை ?

ஊடகங்கள் , அச்சு ஊடகங்களாக நாளிதழ்கள் வார , மாத இதழ்கள் மின்னணு ஊடகங்களாக வானொலி தொலைக்காட்சி திரைப்படம் என்பனவாம் .

தமிழில் தொடக்கக் காலத்தில் தோன்றிய இதழியல் எத்தகையது ?

தொடக்கத்தில் சமயக் கருத்துகளைப் பரப்பவே தமிழில் இதழ்கள் தோன்றின .

திரு .

வி.க. எத்தகைய நடையைக் கொண்டு வந்தார் ?

திரு .

வி.க. தேசபக்தனுக்கெனத் தனி ஒரு நடையைப் கொண்டு வந்தார் .

எளிதாகக் கருத்தை விளக்கப் பல வகைகளிலும் முயன்றார்

சி.பா. ஆதித்தனாரின் பத்திரிகை மொழிக் கோட்பாடு யாது ?

• பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ் .

அதைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும் .

• கடின நடையில் எழுதக் கூடாது .

• புரிகிற தமிழில் எழுதினால் மட்டும் போதாது ;

• பேசுகிற தமிழில் எழுத வேண்டும் .

கவர்ச்சி மொழி எக்கூறுகளைக் கொண்டு விளங்குகிறது ?

கவர்ச்சி மொழிக்கு உதவும் கூறுகள் பின்வருமாறு .

• பேச்சு மொழியில் எழுதுதல்

• ஆங்கில மொழிக் கலப்புடன் எழுதுதல்

• குறிப்பிட்ட ஆயத்தச் சொல் மற்றும் சொற்றொடர் அமைப்புகளைக் கையாண்டு வேறுபடுத்துதல் .

வானொலி மொழியில் இன்றியமையாத இடம் பெறுபவை எவை ?

வானொலியின் ஒலி அமைப்பில் பேசுபவரின் உச்சரிப்புத் திறன் , ஏற்ற இறக்கம் , குரல் வளம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன .

வானொலியில் பேசுபவரின் பேச்சுத்திறன் எத்தகையதாய் இருக்க வேண்டும் ?

பேசுபவர் தம் கருத்தில் உறுதியாக நின்று பேச வேண்டும் .

தாம் சொல்ல வரும் கருத்தை ஐயமின்றித் திட்டவட்டமாக எடுத்துரைக்க வேண்டும் .

தொலைக்காட்சி மொழியில் செய்தி மொழி எவ்வாறு அமைகிறது ? \

தொலைக்காட்சி மொழியில் செய்தி மொழி வட்டார மொழிக் ( Dialect ) கலப்பிற்கு இடமில்லாத வகையில் செய்திகள் எல்லா மாவட்ட மக்களுக்கும் புரியும் வகையில் தரமான பொதுத்தமிழில் அமைகிறது .

தொலைக்காட்சி மொழியில் மிகுதியும் கவனிக்காமல் விட்டு விடப்படுவது எது ?

தொலைக்காட்சி மொழியில் மிகுதியும் கவனிக்காமல் விட்டு விடப்படுவது மொழி பற்றி அக்கறை .

திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களில் கையாளப்பட்ட மொழி எத்தகையதாய் இருந்தது ?

திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களில் கையாளப்பட்ட மொழி செந்தமிழில் இருந்தது . இலக்கிய வடிவங்கள் யாவை ?