43

கவிதை , உரைநடை , மரபுக் கவிதை , புதுக்கவிதை , கட்டுரை , சிறுகதை , நாவல்

யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கக் கவிதையில் இடம்பெறும் முரண் சொற்கள் யாவை ?

யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கக் கவிதையில் இடம்பெறும் முரண் சொற்கள் யாய் - ஞாய் , எந்தை - நுந்தை .

யான் – நீ ஆகும் .

அனுமதி வாக்கியம் என்பது யாது ?

சில வாக்கியங்கள் ஏவல் பொருளுமல்லாது வியங்கோள் பொருளுமின்றி அனுமதிப் பொருளைத் தருகின்றன .

கவிஞரது உள்ளத்து உணர்வை உள்ளவாறே விளக்குவது அனுமதி வாக்கியம் எனப்படும் .

கவிதைகளில் பயன்படும் உவம உருபுகள் சிலவற்றைச் சுட்டுக .

கவிதைகளில் பயன்படும் உவம உருபுகள் சில போல் , போல , போலே , போலும் , போலவும் , போலவே , போன்று , போன்ற , ஆக , நிகர் , என , அன்ன , அனைய , ஒக்க என்பனவாம் .

வினை எச்சத்தொடர் என்பது யாது ?

அதன் பயன்பாடு என்ன ?

நாவல் இலக்கிய மொழிநடை உருவாக்கத்திற்கான காரணிகளுள் இரண்டைச் சுட்டுக .

நாட்டு விடுதலை உணர்வு , சீர்திருத்த உணர்வு , மொழி உணர்வு முதலியவற்றோடு மேனாட்டில் முன்னேறிய கலை , அறிவியல் முதலியவற்றின் பரவல் முதலியனவும் உரைநடை வளரக் காரணமாயின .

பாரதியின் கட்டுரை நடை எத்தகைய கூறுகளைக் கொண்டது ?

பாரதியின் நடை உணர்ச்சியூட்டும் நடை மட்டுமன்று ; எளியதும் தர்க்கரீதியானதும் பேச்சு வழக்கு நிறைந்ததும் ஆகும் .

பேச்சுச் சாயல் , தெளிவு , வேகம் முதலியன இவர் நடையில் அமைந்தன .

ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் எவை ?

ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் பேச்சு மொழி , இலக்கியச் சாயல் ஆகும் .

ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை ?

• புதிய பொருட் பயன்பாடு

• குறிப்பிட்ட துறையைக் கற்றல்

• அரசியல் , சமயம் , வணிகம் காரணமாகத் தொடர்பு

கடன்வாங்கல் என்றால் என்ன ?

மொழியியல் அறிஞர்கள் ஒரு மொழியிலிருந்து பிற மொழிக்குச் சொற்களை வாங்கிக் கொள்ளும் முறைக்குக் கடன்வாங்கல் என்று பெயரிடுகின்றனர் .

இது தொடர்பாகப் பின்வரும் சொற்கள் குறிப்பிடத் தக்கவை .

சங்க இலக்கியத்தில் காணப்படும் வடசொற்களுள் ஐந்தினைக் குறிப்பிடுக .

சங்க இலக்கியத்தில் காணப்படும் வடசொற்களுள் சில ஆதி , யாமம் , அரமியம் , நேமி , ஆரம் , காரணம் .

மணிப்பிரவாள நடை என்பது யாது ?

மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொடுத்தாற்போல சமஸ்கிருதத் தொடர்களையும் தமிழ்த் தொடர்களையும் மாற்றி மாற்றிக் கட்டிய நடைப்போக்கு மணிப்பிரவாள நடை ஆகும் .

தெலுங்குச் சொற்கலப்பு தமிழில் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை ?

சோழர்களது வெற்றியாலும் திருமண உறவாலும் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன .

விசய நகரப் பேரரசின் சிற்றரசர்களான நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் நடைபெற்றபோது தெலுங்கு மொழி சிறப்புற்று விளங்கியது .

தமிழ்நாடு சீனாவோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குக .

தமிழ் மாலுமிகளுடன் சீனர்கள் தொடர்பு கொண்டிருந்தனர் .

யுவான்சுவாங் தென்னகத்திற்கு வருகை புரிந்தார் .

படகு வகையைச் சார்ந்த சாம்பான் என்ற சொல் , பெரிய மண்கலத்தைக் குறிக்கும் காங்கு என்ற சொல் , பீங்கான் என்ற சொல் ஆகியன சீனத்திலிருந்து நமக்குக் கிடைத்த சொற்கள் .

தமிழில் கலந்துள்ள சில போர்ச்சுகீசியச் சொற்களைத் தருக .

தமிழில் கலந்துள்ள சில போர்ச்சுகீசியச் சொற்கள் , கடுதாசி , பேனா , வாத்து , சா ( தேநீர் ) , இலஞ்சி , திராவி , அலமாரி , மேசை , சாவி , ஆயா , அன்னாசி , கோப்பை , பீப்பாய் , வராந்தா , கிராதி , கொரடா , ஏலம் , சன்னல் , மேஸ்திரி , தோசை , பிஸ்கோத்து , புனல் ( funnel ) , பொத்தான் , தம்பாக்கு ( தாமிரமும் துத்தநாகமும் கலந்த ஒன்று ) போன்ற சொற்கள் சான்று .

டச்சுக்காரர்களின் வருகையை விளக்குக .

போர்ச்சுகீசியர்களுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவிற்கு வணிகத்தின் பொருட்டு வந்தவர்கள் டச்சுக்காரர்கள் .

பிரெஞ்சு மொழிச் சொற்கள் தமிழில் கலந்ததற்கான காரணம் யாது ?

பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்தியாவின் தலைமை இடமாக விளங்கிற்று .

பாண்டிச்சேரி பிரெஞ்சு நாகரிகத்தின் சின்னமாக விளங்குகின்றது .

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு தமிழிலுள்ள பிரெஞ்சுச் சொற்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது .

உரைநடையின் வரையறுத்த அமைப்பு யாது ?

உரைநடையின் வரையறுத்த அமைப்பு பத்தி அமைப்பு ஆகும் .

உரைநடை இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று தொல்காப்பியம் குறிக்கிறது ?

உரைநடை இலக்கியம் நான்கு வகைப்படும் என்று தொல்காப்பியம்

தமிழ்மொழியில் உரையாசிரியர்களின் உரைநடை எக்காலத்தில் இருந்து சுவடிகளில் எழுதப் பெற்றது ? தமிழ்மொழியில் உரையாசிரியர்களின் உரைநடை கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் இருந்து சுவடிகளில் எழுதப் பெற்றது .