44

தமிழில் ஏட்டில் எழுதப் பெற்ற முதல் உரை எது ?

தமிழ் மொழியில் முதன்முதலில் ஏட்டில் எழுதப் பெற்ற முதல் உரை இறையனார் அகப்பொருள் உரை ஆகும் .

மணிப்பிரவாளம் - பொருள் என்ன ?

மணி தமிழ்ச் சொல்லைக் குறிக்கும் .

பிரவாளம் வடமொழிச் சொல்லைக் குறிக்கும் .

பிரவாளம் என்றால் பவளம் / பவழம் என்பது பொருள் .

தமிழில் புதிய உரைநடை எக்காலத்தில் தோன்றியது ?

தமிழில் புதிய உரைநடை கி.பி. 18 , 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது .

புதிய உரைநடையின் மூன்று வகைகள் எவை ?

• முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடை

• பேச்சுத் தமிழ் கலந்த உரைநடை

• இலக்கணத் தூய்மையுடன் அமைந்த உரைநடை

முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எது ?

முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பு .

கால்டுவெல் ஐயரின் உரைநடை எவ்வாறு அமைந்துள்ளது ?

கால்டுவெல் ஐயரின் ( 1714-1761 ) உரைநடையும் நீண்ட தொடர் உடையதாகவே அமைந்து உள்ளது .

சந்தி பிரித்து எழுதுதல் , எளிமை , தெளிவு என்னும் பண்புகள் உடையதாகவும் அமைந்துள்ளது .

ஐரோப்பியப் பாதிரிமார்கள் தம் தமிழ் உரைநடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்று கருதினர் ?

• யாவரும் எளிதில் வாசித்து உணரக் கூடியதாய் இருத்தல்

• மிகுந்த புணர்ச்சி விகாரங்கள் இல்லாது இருத்தல்

• செந்தமிழுடன் கொடுந்தமிழும் கலந்து இருத்தல்

• சில வாக்கியங்கள் இலக்கண விதிகளையும் மீறி அமைதல்

பாரதிக்குப் பின்னர் தமிழ் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்க மூவர் யாவர் ?

பாரதிக்குப் பின்னர் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர் உள்ளனர் .

புதுமைப்பித்தன் , திரு.வி .

க , மறைமலை அடிகள் முதலானவர் தமக்கெனத் தனி உரைநடைப் பாணியை உருவாக்கி உள்ளனர் .

தமிழ்மொழி தனக்கெனத் தனி ஒரு வரிவடிவம் உடைய மொழி என்பது சரியா?

தமிழ்மொழி தனக்கெனத் தனி ஒரு வரிவடிவம் உடைய மொழி என்பது சரி.

ஓவிய எழுத்துமுறை பயன்படுத்தப் பெறும் மொழிகள் இரண்டினைக் குறிப்பிடுக.

ஓவிய எழுத்துமுறை சப்பான் மொழியிலும் சீன மொழியிலும் காணப்பெறும்.

மரம் என்பதை, ‘ம்அர்அம்’ என எழுதுவது எந்த வகை எழுத்து முறை?

மரம் என்பதை, ‘ம்அர்அம்’ என எழுதுவது அசை எழுத்து முறை ஆகும்.

ஒரு சொல்லை ஓர் எழுத்தாக எழுதும் முறைக்குப் பெயர் என்ன?

ஒரு சொல்லை ஓர் எழுத்தாக எழுதும் முறைக்கு அசை எழுத்து முறை என்பது பெயர்.

பண்டைக் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ்மொழியின் வரிவடிவத்தை அறிய எவை பயன்படுகின்றன?

பண்டைக் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ்மொழியின் வரிவடிவத்தை அறிய நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை பயன்படுகின்றன.

தென்னக பிராமியின் மற்றொரு பெயர் என்ன?

தென்னக பிராமியின் மற்றொரு பெயர் குகைக் கல்வெட்டு ஆகும்.

பாண்டிய மன்னர்களால் போற்றப் பெற்ற தமிழ் எழுத்து வடிவம் எது?

பாண்டிய மன்னர்களால் போற்றப் பெற்ற தமிழ் எழுத்து வடிவம் வட்டெழுத்து வடிவம் ஆகும்.

பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தம் ஒன்றைக் குறிப்பிடுக.

  ஆகிய எழுத்துகளுக்குத் தனி அச்சு வார்க்க வேண்டி இருந்தது. எனவே இந்த எழுத்துகளை எல்லாம் இந்த எழுத்துகளை ஒத்த ஏனைய எழுத்துகளைப் போன்றே எழுத வேண்டும் என்னும் கருத்து தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்களால் முன் வைக்கப் பெற்றது.

காலந்தோறும் தமிழ் மொழி பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. பொதுக்கிளைமொழி இருபதாம் நூற்றாண்டில் பரவியுள்ளதற்குக் காரணங்கள் யாவை?

இருபதாம் நூற்றாண்டில் வானொலி, பத்திரிகை, அனைவர்க்கும் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட பாட நூல்கள், அறிவியல் செய்திகளைத் தமிழில் தரும் முயற்சி, சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள் ஆன திரைப்படம்,

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மாற்றம் பெறுவதற்கான காலச் சூழல் யாது?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மேலை நாட்டுக் கிறித்தவ சமயம் விரைவாகப் பரவியது. மேலை நாட்டினரின் வருகையினால் விளைந்த முக்கியமான மாற்றம் அச்சு இயந்திரங்களின் வரவு ஆகும். மேனாட்டாரின் தொடர்பால் சிறுகதை, புதினம், பத்திரிகைகள், உரைநடை போன்ற பல்வேறு துறைகளில் தமிழ் மொழியிலும் புதுமைகள் புகுந்தன. இதனால் தமிழ்மொழி வரலாற்றிலும் மாற்றம் ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழில் இடம்பெறும் இ எ, உ ஒ மாற்றம் பற்றிக் குறிப்பிடுக

சொல்லின் ஈற்றில் எ, ஒ வருதல் இல்லை. ஈ, ஊ ஆகிய இரண்டும் தீ, பூ ஆகிய ஓரசைச் சொற்களில் ஈற்றில் வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் உயிர் ஒலியன்களுள் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றம் எது?இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் பேச்சில் எல்லா உயிர் எழுத்துகளும் சொல்லின் முதலிலும் இடையிலும் வருகின்றன. ஈரிதழ் ஒலிக்கு முன்னரும் நாவளை ஒலிக்குப் பின்னரும் வரும்பொழுது எகரம் ஒகரமாகிறது.