45

இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் மெய்யொலியன்களுள் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றம் எது?

க், ச், த், ப், ம், ந், ஞ், வ், ய் ஆகிய மெய்கள் சொல்லின் முதலில் வருகின்றன. ட், ர், ல் ஆகிய மெய்கள் பிறமொழிச் சொற்களில் மொழி முதலில் வருகின்றன.

இரண்டு அல்லது மூன்று மெய்கள் மயங்கி வருவதற்கான சான்றுகளைத் தருக?

(ன்ச்) இன்சூரன்ஸ், (ர்ன்) கவர்னர், (ஸ்வ்) சரஸ்வதி

அண்ண இனமாதல் பற்றிக் கூறுக.

அண்ண ஒலிகளாகிய பிற ஒலிகள் ச, ஞ என்று மாற்றம் பெறுவதை அண்ண இனமாதல் எனலாம். எ.கா: அடித்தான்- அடிச்சான்

ஆக்கப் பெயர்கள் உருவாவதற்கான விகுதிகளுள் எவையேனும் இரண்டனைச் சுட்டுக.

த்துவம் - என்னும் உருபு முதலாளி- முதலாளித்துவம்

அம் - என்னும் உருபு திருப்பு- திருப்பம்

உயர்வு ஒருமைப் பெயர் - விளக்குக.

சமுதாயத்தில் படிநிலை அமைப்பு ஏற்பட்டதன் விளைவாகத் தமிழில் உயர்வைக் குறிக்கும் விகுதிகள் உயர்வு ஒருமைப் பெயர்கள் ஆகும். அண்ணனார், அண்ணியார்

வினைச் சொற்களோடு சேரும் துணை வினைகளுக்குச் சான்று தருக.

செய்து வை, செய்யப் போகிறான், கொடுத்து அழு, விட்டுத் தள்ளு

ஊடகங்கள் என்பன எவை எவை?

ஊடகங்கள், அச்சு ஊடகங்களாக நாளிதழ்கள் வார, மாத இதழ்கள் மின்னணு ஊடகங்களாக வானொலி தொலைக்காட்சி திரைப்படம் என்பனவாம்.

தமிழில் தொடக்கக் காலத்தில் தோன்றிய இதழியல் எத்தகையது?

தொடக்கத்தில் சமயக் கருத்துகளைப் பரப்பவே தமிழில் இதழ்கள் தோன்றின.

திரு.வி.க. எத்தகைய நடையைக் கொண்டு வந்தார்?

திரு.வி.க. தேசபக்தனுக்கெனத் தனி ஒரு நடையைப் கொண்டு வந்தார். எளிதாகக் கருத்தை விளக்கப் பல வகைகளிலும் முயன்றார்

சி.பா. ஆதித்தனாரின் பத்திரிகை மொழிக் கோட்பாடு யாது?

• பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்.

• கடின நடையில் எழுதக் கூடாது.

• புரிகிற தமிழில் எழுதினால் மட்டும் போதாது;

• பேசுகிற தமிழில் எழுத வேண்டும்.

கவர்ச்சி மொழி எக்கூறுகளைக் கொண்டு விளங்குகிறது?

கவர்ச்சி மொழிக்கு உதவும் கூறுகள் பின்வருமாறு.

• பேச்சு மொழியில் எழுதுதல்

• ஆங்கில மொழிக் கலப்புடன் எழுதுதல்

• குறிப்பிட்ட ஆயத்தச் சொல் மற்றும் சொற்றொடர் அமைப்புகளைக் கையாண்டு வேறுபடுத்துதல்.

வானொலி மொழியில் இன்றியமையாத இடம் பெறுபவை எவை?

வானொலியின் ஒலி அமைப்பில் பேசுபவரின் உச்சரிப்புத் திறன், ஏற்ற இறக்கம், குரல் வளம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வானொலியில் பேசுபவரின் பேச்சுத்திறன் எத்தகையதாய் இருக்க வேண்டும்?

பேசுபவர் தம் கருத்தில் உறுதியாக நின்று பேச வேண்டும். தாம் சொல்ல வரும் கருத்தை ஐயமின்றித் திட்டவட்டமாக எடுத்துரைக்க வேண்டும்.

தொலைக்காட்சி மொழியில் செய்தி மொழி எவ்வாறு அமைகிறது?\

தொலைக்காட்சி மொழியில் செய்தி மொழி வட்டார மொழிக் (Dialect) கலப்பிற்கு இடமில்லாத வகையில் செய்திகள் எல்லா மாவட்ட மக்களுக்கும் புரியும் வகையில் தரமான பொதுத்தமிழில் அமைகிறது.

தொலைக்காட்சி மொழியில் மிகுதியும் கவனிக்காமல் விட்டு விடப்படுவது எது?

தொலைக்காட்சி மொழியில் மிகுதியும் கவனிக்காமல் விட்டு விடப்படுவது மொழி பற்றி அக்கறை.

திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களில் கையாளப்பட்ட மொழி எத்தகையதாய் இருந்தது?

திரைப்பட வரலாற்றில் புராணப் படங்களில் கையாளப்பட்ட மொழி செந்தமிழில் இருந்தது.

இலக்கிய வடிவங்கள் யாவை?

கவிதை, உரைநடை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்

யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கக் கவிதையில் இடம்பெறும் முரண் சொற்கள் யாவை?

யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கக் கவிதையில் இடம்பெறும் முரண் சொற்கள் யாய் - ஞாய், எந்தை - நுந்தை. யான் – நீ ஆகும்.

அனுமதி வாக்கியம் என்பது யாது?

சில வாக்கியங்கள் ஏவல் பொருளுமல்லாது வியங்கோள் பொருளுமின்றி அனுமதிப் பொருளைத் தருகின்றன. கவிஞரது உள்ளத்து உணர்வை உள்ளவாறே விளக்குவது அனுமதி வாக்கியம் எனப்படும்.

கவிதைகளில் பயன்படும் உவம உருபுகள் சிலவற்றைச் சுட்டுக.

கவிதைகளில் பயன்படும் உவம உருபுகள் சில போல், போல, போலே, போலும், போலவும், போலவே, போன்று, போன்ற, ஆக, நிகர், என, அன்ன, அனைய, ஒக்க என்பனவாம்.

வினை எச்சத்தொடர் என்பது யாது? அதன் பயன்பாடு என்ன?

நாவல் இலக்கிய மொழிநடை உருவாக்கத்திற்கான காரணிகளுள் இரண்டைச் சுட்டுக.நாட்டு விடுதலை உணர்வு, சீர்திருத்த உணர்வு, மொழி உணர்வு முதலியவற்றோடு மேனாட்டில் முன்னேறிய கலை, அறிவியல் முதலியவற்றின் பரவல் முதலியனவும் உரைநடை வளரக் காரணமாயின.