47

பாரதிக்குப் பின்னர் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர் உள்ளனர். புதுமைப்பித்தன், திரு.வி.க, மறைமலை அடிகள் முதலானவர் தமக்கெனத் தனி உரைநடைப் பாணியை உருவாக்கி உள்ளனர்.

உரை என்பதற்குரிய மூன்று பொருள்கள் யாவை ?

உரை – உரைத்தல் , சொல்லுதல் ; உரை – உரைநடை ; உரை – விளக்கம் , இலக்கியம் அல்லது இலக்கணத்தை விளக்குவது .

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறப்படுவது எது ?

சிலப்பதிகாரம் , ‘ உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் ’ என்று அதன் பதிகம் கூறுகிறது .

இலக்கணத்திற்குரிய உரையை , நன்னூல் இரண்டு வகைகளாகச் சொல்லுகிறது - அவை யாவை ?

நன்னூல் , காண்டிகையுரை , விருத்தியுரை என்ற இரண்டு பகுப்புகளாக இலக்கணத்திற்குரிய உரையை , இரண்டு வகைகளாகச் சொல்லுகிறது .

கூடியிருக்கின்றவர்களின் முன்னால் , நூல் அல்லது பாடம் பற்றி உரைப்பது ( விளக்குவது ) இன்றைய நடைமுறையில் எதனோடு ஒப்புடையது ?

இன்றைய நடைமுறையில் , கூடியிருக்கின்றவர்களின் முன்னால் , நூல் அல்லது பாடம் சொல்லுவது , பாடம் கேட்பது உள்ளிட்ட கல்விமுறை ஆகும் .

இறையனார் அகப்பொருள் சூத்திரங்களுக்குச் சரியான உரையைத் தெரிந்தெடுக்க உதவியவர் யார் ?

இறையனார் அகப்பொருள் சூத்திரங்களுக்குச் சரியான உரையைத் தெரிந்தெடுக்க உதவியவர் உருத்திர சன்மன் என்பவர் .

“ முட்டாச் சிறப்பின் பட்டினம் ” - என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறியுள்ள பொருளைக் குறிப்பிடுக ?

“ முட்டாச் சிறப்பின் பட்டினம் ” - என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறியுள்ள பொருள் “ குறைவுபடாத தலைமையை உடைய பட்டினம் ” என்பதாகும் .

தமிழில் இன்று கிடைப்பவற்றுள் முதல் உரையாகக் கருதப்படுவது எது ?

தமிழில் இன்று கிடைப்பவற்றுள் , முதல் உரையாகக் கருதப்படுவது இறையனார் களவியலுரை ஆகும் .

திறனாய்வுக்கும் உரைவிளக்கத்திற்கும் இடைவெளிகள் குறைவு என்று கூறும்படியாக மறைமலையடிகள் செய்த இரண்டு உரை நூல்கள் எவை ?

உரைவிளக்கத்திற்கும் இடைவெளிகள் குறைவு என்று கூறும்படியாக மறைமலையடிகள் செய்த இரண்டு உரை நூல்கள் : முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை மற்றும் பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை .

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன்முதலாக உரையெழுதியவர் யார் ?

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன்முதலாக உரையெழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார் .

சிவஞான முனிவர் எழுதிய உரையின் பெயரைக் குறிப்பிடுக ?

மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு , சிவஞான மாபாடியம் எனும் உரையை சிவஞான முனிவர் எழுதியுள்ளார் .

யாப்பருங்கல விருத்தியுரை , தமிழின் எதை அறிவதற்குச் செய்திகளைத் தருகிறது ?

யாப்பருங்கல விருத்தியுரை , தமிழின் கவிதையியலை அறிவதற்குச் செய்திகளைத் தருகிறது .

உரைகள் எவ்வகையான இடைவெளிகளைக் குறைக்கும்

நோக்கத்தைக் கொண்டவை ?

உரைகள் தலைமுறை இடைவெளியையும் , எழுதியோன்-

படிப்போன் என்போருக்கு இடையேயுள்ள இடைவெளியையும்

குறைக்கின்ற நோக்கத்தைக் கொண்டவை .

இலக்கண உரைகளில் , இலக்கியக் கொள்கைக்கும்

திறனாய்வுக்கும் உதவக் கூடிய உரைகள் யாவை ?

இலக்கண உரைகளில் , இலக்கியக் கொள்கைக்கும்

திறனாய்வுக்கும் உதவக் கூடிய உரைகள் தொல்காப்பியம் , நன்னூல்

முதலிய இலக்கண நூல்களுக்கு அமைந்தவை ,

பத்துப்பாட்டு , சிலம்பு முதலிய இலக்கிய நூல்களுக்கு

அமைந்தவை .

காண்டிகை , விருத்தி என்ற பாகுபாடு என்ன

வகையான உரைகளின் பாகுபாடு ?

காண்டிகை உரை , விருத்தியுரை என்ற பாகுபாடும்

இலக்கண உரைகளுக்கே உரியது .

இன்று கிடைப்பவற்றுள் முதலாவதான உரை எது ?

அதன் காலம் என்ன ?

தமிழில் இன்று காணக்கூடிய உரைகளில் , காலத்தினால்

முந்தியது இறையனார் அகப்பொருள் உரையே என்பதில் கருத்து

வேறுபாடில்லை . அது , கி.பி.9ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக்