48

கூறப்படுகிறது .

நோக்கு என்பதை உரையாசிரியராகிய பேராசிரியர்

விளக்குவது , அமெரிக்காவின் எந்த வகைத்

திறனாய்வோடு ஒப்புமையுடையது ?

நோக்கு என்பதை உரையாசிரியராகிய பேராசிரியர்

விளக்குவது , அமெரிக்காவின் புதுத்திறனாய்வோடு ஒப்புமையுடையது .

இளம்பூரணர் , பேராசிரியர் , நச்சினார்க்கினியர் ,

அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக்

கருதும் அறிவுடையவராக , உ.வே.சாமிநாத ஐயரால்

கருதப்படும் உரையாசிரியர் யார் ?

சங்கப் பாடல்களுக்கு அமைந்துள்ள - ஆசிரியர் பெயர்

தெரியாத பழைய உரைகளில் - புறநானூற்றுக்குள்ள பழைய

உரை , மிகவும் சிறப்பாகவும் ஓரளவு விரிவாகவும் உள்ளது .

இவ்வுரையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாத ஐயர் , “ இளம்பூரணர் ,

பேராசிரியர் , நச்சினார்க்கினியர் , அடியார்க்கு நல்லார்

முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக ” இந்த

உரையாசிரியரைப் புகழ்ந்துரைக்கிறார் .

சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில்

எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும்

முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன .

அவை

யாவை ?

சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில்

எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும்

முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன .

அவை ஒன்று , இந்தப் பாடல்களைச் சிதறவிடாமல் பாதுகாத்தன .

இரண்டு , பின்னால் , சற்று விரிவாக உரையெழுத

முனைந்தவர்களுக்கு இவை அடியெடுத்துக் கொடுத்தன .

பாடல்களை அப்படியே கொள்ளாமல் அவற்றில்

இடமாற்றம் செய்து , கொண்டு கூட்டுப் பொருளாக

உரை செய்கிற போக்குக் கொண்ட உரையாசிரியர்

யார் ?

பாடல்களை அப்படியே கொள்ளாமல் அவற்றில்

இடமாற்றம் செய்து , கொண்டு கூட்டுப் பொருளாக

உரை செய்கிற போக்குக் கொண்ட உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஆவார் .

பதுமனார் என்பார் எந்த நூலின் உரையாசிரியர் ?

பதுமனார் என்பார் நாலடியார் நூலின் உரையாசிரியர் .

திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் எத்தனை

இயல்களாகப் பகுக்கிறார் ?

அவை யாவை ?

திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் ஏழு

இயல்களாகப் பகுக்கிறார் , அவை அரசியல் , அமைச்சியல் , அரணியல் , கூழ்இயல் ,

படையியல் , நட்பியல் , குடியியல் ஆகும் .

பரிபாடலுக்கு உரையெழுதியவர் யார் ?

பரிபாடலுக்கு உரையெழுதியவர் பரிமேலழகர் ஆவார் .

நச்சினார்க்கினியர் எந்தெந்த நூல்களுக்கு

உரையெழுதியுள்ளார் ?

நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் எனும் இலக்கண நூலுக்கும் ,

கலித்தொகைக்கும் , பத்துப்பாட்டுக்கும் மற்றும் சீவக சிந்தாமணிக்கும் உரையெழுதியுள்ளார் .