49

கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் , இரண்டு காப்பியங்களுக்கே உரையெழுந்தன .

அவை யாவை ?

கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் , இரண்டு காப்பியங்களுக்கே உரையெழுந்தன .

அவை சிலம்பு , சீவகசிந்தாமணி .

உரையாசிரியர்களின் கவனத்தை அன்று காப்பியங்கள் பெறாமல் போனதற்குரிய காரணங்களாக இரண்டு கருதுகோள்களைக் கூறலாம் ; அவை யாவை ?

1.சிலம்பு முதலிய ஓரிரண்டு தவிர பெரும்பாலான காப்பியங்களின் கதைகளும் கருத்துகளும் , தமிழ் மரபிலிருந்து வரவில்லை ; வடமொழி மரபிலிருந்து அல்லது வெளியேயிருந்து வந்தவை .

2.காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை ; பல கிளைக் கதைகள் , பல புராண மரபுக் கதைகள் உடையவை ; எனவே , உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும் .

அடியார்க்கு நல்லார்க்கு முன்னதாகவும் முன்மாதிரியாகவும் இருந்த உரை எது ?

அடியார்க்கு நல்லார்க்கு முன்னதாகவும் முன்மாதிரியாகவும் இருந்த உரை அரும்பதவுரை ஆகும் .

‘ அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் மாறுபடும் இடங்களை ஆராய்வுழி , சிலவிடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது ” - இவ்வாறு சொன்னவர் யார் ?

‘ அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் மாறுபடும் இடங்களை ஆராய்வுழி , சிலவிடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது ” - இவ்வாறு சொன்னவர் சிலம்பு உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார் .

நச்சினார்க்கினியரின் சமயப் பொறைக்குச் சாட்சியமாக இருப்பது எது ?

நச்சினார்க்கினியர் , மணக்காப்பியத்துக்கு உரையெழுதியது அவருடைய ‘ சமயப்பொறை ’க்குச் சாட்சியாக அமைகிறது .

நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு முதன் முதலில் விளக்கவுரை எழுதியவர் யார் ?

திருக்குருகைப்பிரான்பிள்ளை ( பிள்ளான் ) என்பவரால் , முதன்முதலாக , நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதப்பட்டது .

‘ வியாக்கியானச் சக்கரவர்த்தி ’ என்று அழைக்கப்படுபவர் யார் ?

‘ வியாக்கியானச் சக்கரவர்த்தி ’ என்று அழைக்கப்படுபவர் பெரியவாச்சான்பிள்ளை ஆவார் .

சைவ இலக்கிய உலகில் 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் , சிறந்த உரையைப் பெற்ற நூல் எது ?

சைவ இலக்கிய உலகில் 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் , சிறந்த உரையைப் பெற்ற நூல் மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ஆகும் .

இருபதாம் நூற்றாண்டில் , உரையெழுதும் முயற்சிகளில் காணக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன ?

இந்நூற்றாண்டில் காணப்படுகின்ற உரைகாணும் முயற்சிகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன : i ) இலக்கியங்களின் பல வகைகளுக்கும் உரைகள் எழுந்தன .

ii ) ஏற்கெனவே , முன்பு உரைகள் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மீண்டும் உரைகள் எழுதப்பட்டன .

கம்பராமாயணம் முழுமைக்கும் உரையெழுதிய 20 - ஆம் நூற்றாண்டு உரையாசிரியர் யார் ?

கம்பராமாயணம் முழுமைக்கும் உரையெழுதிய 20 - ஆம் நூற்றாண்டு உரையாசிரியர் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் .

ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல்களைக் குறிப்பிடுக ?

ந.மு.வேங்கடசாமி நாட்டார் , சிலம்புக்கு மட்டுமல்லாமல் மணிமேகலைக்கும் மற்றும் அகநானூறு , திருவிளையாடற் புராணம் , நானாற்பது ( இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது ) ஆகியவற்றுக்கும் நாட்டார் உரையெழுதியுள்ளார் .

இன்றைய திறனாய்வின் முக்கியமான அடையாளம் என்ன ?

இன்றைய திறனாய்வின் முக்கியமான அடையாளம் , உடனடியாக எதிர்வினை நிகழ்த்துகின்ற அதன் பண்பு ஆகும் .

தமிழில் முதல் திறனாய்வாளர் என்று கருதப்படுகிறவர் யார் ?

வ.வே. சுப்பிரமணிய ஐயர் தான் முதலாமவர் என்று தொ.மு.சி.ரகுநாதன் , சி.சு. செல்லப்பா முதலியவர்கள் கூறினார்கள் .

அதன்பின்னர் , சாலை இளந்திரையன் , கலாநிதி கைலாசபதி ஆகியோர் , திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தான் முதலாமவர் என்று கூறினர் .

இதுவே இன்று தொடர்ந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது .

மறைமலையடிகளிடம் காணப்படுகிற திறனாய்வு , எதனைச் சார்ந்த திறனாய்வு ?

மறைமலையடிகளிடம் காணப்படுகிற திறனாய்வு , உரைமரபு சார்ந்த திறனாய்வு ஆகும் .

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சிறந்த ஆராய்ச்சி இதழின் பெயர் என்ன ?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சிறந்த ஆராய்ச்சி இதழின் பெயர் The Tamilian Antiquary என்ற ஆராய்ச்சி இதழ் , தொடர்ந்து பல ஆண்டுகள் வெளிவந்தது .

ஆராய்ச்சியில் முடிவுகளும் நோக்கங்களும் கருதுகோள்களும் எவ்வாறு இருக்க வேண்டும் ?

முடிவுகளும் நோக்கங்களும் கருதுகோள்களும் காரணகாரியத் தொடர்புகளுடன் இருக்க வேண்டும் .

புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல் , பழைய இலக்கியங்களையே தம் ஆய்வுப் பொருளாகக் கொண்ட கல்வியியலாளரும் நாவலாசிரியருமாக இருந்தவர் யார் ?

புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல் , பழைய இலக்கியங்களையே தம் ஆய்வுப்பொருளாகக் கொண்ட கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்ரா .

பி. சேதுப்பிள்ளை , ச. சோமசுந்தர பாரதியார் , மு. வரதராசன் , அ.ச. ஞானசம்பந்தன் , வ.சுப. மாணிக்கம் ஆகியோர் .

இன்றைய திறனாய்வாளர்களிடையே காணும் மூவகையினர் யார் ?

இன்றைய திறனாய்வாளர்களிடையே காணும் மூவகையினர் i ) கல்வியாளர்கள் ii ) படைப்பாளிகள் iii ) பிற துறையினர் .

படைப்பாளியாகவும் அதே போது திறனாய்வாளராகவும் இருந்தவர் ?

தொ.மு.சி. ரகுநாதன் கலாநிதி கைலாசபதி கா.சிவத்தம்பி ஆகியவருள் எவர் ?

படைப்பாளியாகவும் அதே போது திறனாய்வாளராகவும் இருந்தவர் கலாநிதி கைலாசபதி கா.சிவத்தம்பி ஆவார் .

அரசியலில் முன்னணியில் இருந்தாலும் , திறனாய்வாளர்களாகவும் இருந்த இரண்டு பேரைக் குறிப்பிடுக ?

அரசியலில் முன்னாளிலிருந்த ப.ஜீவானந்தம் , ம.பொ. சிவஞானம் ஆகிய இருவரும் திறனாய்வுத்துறையிலும் குறிப்பிடத்தக்கவர்கள் .

ஜப்பானிய ஹைகூ கவிதை பற்றி முதன்முதலில் தமிழர்க்கு அறிமுகப்படுத்தியவர் யார் ? எந்த ஆண்டில் ?