5

உரைநடை - 1

பாடம் - 1

உரைநடையும் நாடகமும்

உரைநடை – 1

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

1.0பாட முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடையின் பங்கு மிகுதி. பழைய இலக்கியங்களின் விளக்கமாகவும் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையிலும் உரை விளங்குகிறது. பொதுவாக உரை என்பது செய்யுள் நூல்களுக்கு (commentary) உரைநடையில் தரப்பட்ட விளக்கம். உரைநடை என்பது செய்யுள் வடிவில் அமையாத இலக்கியம் (Prose). ஆகவே, உரைகளைப் பற்றியும், உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியும் இப்பாடத்தில் படிக்கலாம்.

1.1உரைநடையின் தொன்மை

தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்பது தெரியும் அல்லவா? அதன் ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலேயே உரைநடை இருந்தது என்பதற்கு,

பாட்டிடை வைத்த குறிப்பி னானும். . . . .

உரை வகை நடையே நான்கென மொழிப

"-(செய்யுளியல், 163)

என்னும் தொல்காப்பிய நூற்பாவே சான்று பகரும்.

இந்நூற்பாவிற்கு விளக்கங்கூறும் பேராசிரியர் உரைநடையினைப் பாட்டுகளுக்கு இடையே வருகின்ற குறிப்புகள் எனவும், நூற்பாக்களுக்கு எழுதப்படும் விளக்கவுரைகள் எனவும், பொய்யானதாக அன்றி மெய்ம்மையை எடுத்துக் கூறும் உரை எனவும், நகைச்சுவை பொருந்திய உரைநடை எனவும் நான்காக எடுத்துக் கூறுவார். தொல்காப்பியத்திற்கு முன்னர் இருந்த நூல்கள் கிடைக்காத காரணத்தினால் பழங்கால உரைநடையைப் பற்றி அறிவதற்கு எதுவும் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில்தான் உரைநடை முதன்முதலாக இடம்பெறுகிறது.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

எனச் சிலப்பதிகாரத்தைக் கூறுவர். இதில் காணப்படும் உரைநடை செறிவும், ஓசையும் கொண்டு செய்யுள் போலவே அமைந்துள்ளது. பெருந்தேவனார் பாடிய பாரதமும், தகடூர் யாத்திரை என்ற ஒரு பெருநூலும் உரைநடை கலந்த செய்யுள்களால் ஆகியவை என்பதை உரையாசிரியர் கூற்றால் அறிய முடிகிறது. இறையனார் களவியல் என்ற அகப்பொருள் இலக்கண நூலுக்கு எழுதப்பட்ட உரையே முதன்முதலில் எழுந்த உரை எனலாம். இதை எழுதியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர்

1.1.1உரைநடை - விளக்கம் உரைநடை என்பது பொருளின் தன்மையை உள்ளது உள்ளவாறு உரைப்பதாகும். உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் உரைநடை ஆகும். வசனம் என்ற வடமொழிச் சொல்லே, அண்மைக்காலத்தில் தமிழில் உரைநடையைக் குறிப்பதாய் அமைந்தது. அதுவே பெருவழக்காகவும் நிலவியது.

உரைக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர்,

தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே

(செய்யுளியல்-229)

எனக் கூறியுள்ளார். எனவே, உரைநடை என்பது பாட்டைவிடப் பழைமையானது என்பது நன்கு விளங்கும். உரைநடை என்பது இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு, பாட்டுக்குள்ள சந்தச் சேர்க்கை இன்றியே நல்ல ஓசை நயம் உடையதாகி அமையும். மேலும் ஒளிவு மறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரையிட்டுக் காட்டும். கருத்துக்கும், காரணத்துக்கும் பொருத்தமானதாக ஒன்றைப் பற்றியோ, ஒருவரைப் பற்றியோ, விளக்கி உரைப்பது உரைநடை எனப்படுகிறது.

1.2முற்கால உரைநடை

தமிழிலே உரைநடை தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஒரு மொழியில் செய்யுள் தோன்றும்போது பேச்சு வழக்கிலுள்ள மொழிநடையினையும் ஓசைப் பண்பினையும் ஒட்டியே தோன்றுகிறது. அந்த வகையில் சங்க இலக்கியத்தின் அகவற்பாக்கள் இம்முறையில் தோன்றின எனலாம். சங்க இலக்கியச் செய்யுளோசை, பேச்சோசை போன்று எதுகை, மோனை முதலான தொடை அமைப்பின்றி இருப்பது இதற்குச் சான்று ஆகும். உரைநடைக்குச் சீர் அடி என்ற வரையறை கொடுத்தது போலச் செய்யுள்கள் அமைந்துள்ளன. இது படிப்படியாகச் செறிவும் ஒழுங்கும் பெற்றுவந்த தன்மையை, சங்கம் மருவிய கால இலக்கியங்களான சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களில் காணலாம். சிலப்பதிகாரத்தில் உரை கலந்து வருவதையும் காணலாம். அடுத்து உரைநடை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது இறையனார் அகப்பொருளுக்கு எழுந்த உரையான களவியலுரையாகும். தமிழ் உரைநடை வளர்ச்சியை உணர்த்துவதாகக் களவியலுரை அமைந்துள்ளது.

1.2.1சங்க காலம் சங்க காலத்தில் தமிழ் நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிலேயே இருந்தன. காவியம், வரலாறு, சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளில் தமிழ் மக்கள் தங்களுடைய அறிவுச் செல்வத்தைச் செய்யுள் உருவிலேயே சேமித்து வந்தனர். எனவே, உரைநடை அப்போது தோன்றவில்லை. பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவதில் ஏற்படும் இன்னலைத் தவிர்க்கவே சுருங்கிய செய்யுள் வடிவிலே எழுதினர். சங்க இலக்கியங்களில் உரைச் செய்யுளோ, தனி உரைநடையோ காணப்படவில்லை. தகடூர் யாத்திரை என்ற நூல் உரை விரவிய பாடலைக் கொண்ட சங்க கால நூல் என்பர். சங்கப் பாக்களின் கீழ்க் காணப்படும் குறிப்புரைகளும், துறைகளும் பழந்தமிழ் உரைநடையைக் காட்டுகின்றன. எனினும் அவை மிகச்சிறிய அளவிலேயே உள்ளன.

1.2.2சங்கம் மருவிய காலம் களப்பிரர்கள் ஆட்சி செய்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் செய்யுளுக்கு இடையிடையே உரைநடை அமைந்துள்ளது. அதனால்தான் அடியார்க்கு நல்லார், “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” எனச் சிலப்பதிகாரத்திற்கு மற்றொரு பெயரைக் குறிப்பிட்டுள்ளார். உரை என்ற சொல்லை, தொல்காப்பியத்தில்தான் முதன்முதலில் காண்கின்றோம். ஆனால் உரைநடை என்ற பகுதியைச் சிலப்பதிகாரத்தில்தான் காண்கின்றோம். மடை என்ற சொல்லுக்கு உரிய பொருள் தடுத்து நிறுத்துதல். சிலப்பதிகாரத்தில் வரும் செய்யுள்களைத் தடுத்து உரைநடை வருவதால் உரைப்பாட்டு மடை என்ற பெயர் ஏற்பட்டது. சிலப்பதிகாரத்தின்கண் அமைந்துள்ள உரைப்பாட்டு மடை மிகச் சிறப்பானது ஆகும். இதனால் பல அரிய வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன. எடுத்துக்காட்டாக, இளங்கோவடிகள் உரைப்பாட்டு மடையைத் தொடங்கும் பொழுது, “குமரியொடு வட இமயம்” (வஞ்சிக்காண்டம், வாழ்த்துக்காதை) என்று நாட்டின் எல்லையை வரையறை செய்கின்றார்.

மதுரைக் காண்டத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையில்,

குடப்பால் உறையா குவிஇமிழ் ஏற்றின்

மடக்கண்ணீர் சோரும் வருவது ஒன்று உண்டு

உறிநறு வெண்ணெய் உருகா உருகும்

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

மான் மணி வீழும் வருவது ஒன்று உண்டு.

என்று உரைப்பாட்டு மடை வருகிறது. இந்த உரைப்பாட்டு மடை உரைநடையாக இருந்தாலும், செய்யுள் போன்றே அமைந்துள்ளது.

இறையனார் களவியலுரை

சங்கம் மருவிய காலத்தை அடுத்து வந்த காலப் பிரிவே பல்லவர் காலம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது, ஏறக்குறைய கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது எனலாம். இதுவே பக்தி இயக்கக் காலமும் ஆகும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த இந்தக் காலத்தில் உரைநடையில் நூல்கள் ஏதும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இறையனார் களவியல் உரையே இலக்கியங்களுக்கு எழுந்த உரைநூல்களுள் முதலாவதாகக் கருதப்படுகிறது. இதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர் அறிஞர். எனவே இந்த உரை பல்லவர் ஆட்சியின் இறுதியில் எழுதப்பட்டது எனலாம்.

இறையனார் அகப்பொருள் என்றாலும் இறையனார் களவியல் என்றாலும் ஒன்றுதான். இந்த நூலில் அறுபது நூற்பாக்கள் உள்ளன. இந்த நூல் களவு, கற்பு என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் இறையனார் (சிவபெருமான்). இறையனார் களவியல் நூலின் உரைதான் முதல் உரைநடை நூல். இந்நூல், உரைகளில் காலத்தால் முற்பட்டது. இதுவே தமிழில் தோன்றிய முதல் உரைநூல். பிற்காலத்துத் தோன்றிய எல்லா உரைகளுக்கும் இது வழிகாட்டியாய் விளங்குகிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள இந்த உரை நக்கீரரால் எழுதப்பட்டது. அவர் தானே தன் கைப்பட எழுதியது அல்ல. அவர் உரையே வாய்மொழியாகப் பல தலைமுறைகளுக்கு வழங்கி வந்தது. நக்கீரருக்குப் பின்னால் வந்த ஒன்பதாம் தலைமுறையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரால் எழுதி வைக்கப்பட்டது என்பர்.

நக்கீரர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்; தம் உரையில் வேறு எந்தத் தெய்வத்தையும் குறிப்பிடவில்லை.

உரை மரபு

இறையனார் அகப்பொருள் உரை சிறப்பியல்புகள் பல வாய்ந்ததாகும். இந்த உரைநடை சிறப்புடையது; பிறரது உரை மறுப்பும், பன்னூற் பயிற்சியும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த உரையைப் படிக்கும் போது இலக்கண உரையைப் படிக்கின்றோம் என்ற நினைவு தோன்றுவதில்லை. இனிமையான இலக்கியம் போலத் தொட்ட இடமெல்லாம் இந்த உரையில் இலக்கியச் சுவை மிகுந்துள்ளது. பிற உரையாசிரியர்களின் கருத்தைக் கூறி மறுக்கும் தன்மை சிறப்பாக அமைந்துள்ளது.

“நூல் முழுவதும், உரையாசிரியர் நம் எதிரே நின்று உரையாடுவது போன்ற மனநிலையை உரையின் வாயிலாக உண்டாக்கி விடுகின்றார்” என மு.வை.அரவிந்தன் குறிப்பிடுகின்றார். ஏனைய இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத சிறப்பியல்புகள் பல இக்களவியல் உரைக்கு உண்டு. ஆசிரியரது உரையில் அந்தாதிப் போக்கினைக் காணலாம்.

எடுத்துக்காட்டு :

பன்னீராண்டு கழிந்தது. கழிந்த பின்னர்

நாடு மலிய மழை பெய்தது. பெய்த

பின்னர் அரசன். . . .

இந்த நூலில் பல இடங்களில் உரையாசிரியரின் பிற துறை அறிவு வெளிப்பட்டு நிற்கிறது. தொல்காப்பியத்தில் காணும் பல நூற்பாக்களை இவர் சுட்டிக் காட்டுகின்றார்.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

1.3இடைக்கால உரைநடை

கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் உரையாசிரியர்களின் உரைகள் தொடர்ந்து வெளிவரலாயின. தமிழ்உரைநடை உரைகளால் சிறப்பாக வளர்ச்சியுற்றது. உரைநடை தெளிவாகவும் தருக்கமுறையாகவும் வளரக் கூடிய வகையில் செய்யுள் வடிவிலானவற்றுக்கு உரை எழுதி விளக்கும் சூழல் உருவானது. இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியர்கள் உரைநடையை வளர்த்தனர்.

என்பது போன்ற குறட்பாக்களை நக்கீரர் பயன்படுத்தியுள்ளார். வினாவிடைப் போக்கு, சில சொற்களுக்கு மிக நுணுக்கமாகப் பொருள் கூறுதல் போன்றவை ஆசிரியரின் தனிச் சிறப்பாகும். “இந்த நூல் என்நுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று.” இங்கு, தமிழ் என்ற சொல்லிற்கு அகப்பொருள் என்ற பொருளை இந்த ஆசிரியர் கூறுகின்றார். இந்த நூலாசிரியர் பல இடங்களில் அக்காலவழக்கங்களை விளக்குகின்றார். 16ஆம் நூற்பாவின் உரையால் அக்கால விழாக்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. முச்சங்கங்கள் பற்றிய குறிப்புகளை இந்த உரையாசிரியர் விளக்குகின்றார். இந்த உரையாசிரியர் பின் வந்த உரையாசிரியர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார்.

நுட்பமான பல கருத்துகளையும் விளக்கங்களையும் இவ்வுரை மிகவும் தெளிவாக விளக்குகிறது. தொட்ட இடமெல்லாம் இனிக்கின்ற பலாச்சுளையைப் போல இவரது உரை விளங்குகின்றது. நக்கீரரின் உரைநடைச் சிறப்பைக் கற்று உணர்ந்த மறைமலையடிகள்,

“பளபளப்பான பல நிறச் சலவைக் கற்கள் அழுத்தி, பொன் மினுக்குப் பூசி, பல பல அடுக்கு மாடங்கள் உடையதாய் வான் முகடுவரை உயர்ந்து காண்பார் கண்ணும் கருத்தும் கவருவதாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம் போல் ஆசிரியர் உரை உயர்ந்து நிற்கிறது”

எனக் கூறுகின்றார். இவ்வுரையில் இனிய இலக்கியம் போல் தொட்ட இடமெங்கும் இலக்கியச் சுவை தேங்கிக் கிடக்கிறது. இதைப் படித்து விட்டு மூடும் போது செந்தமிழ் தந்த இன்பம் மண்டிக் கிடக்கிறது. இதில் எதுகையும் மோனையும் சிறப்பாக அமைந்துள்ளன. பல்லவர் காலத்துத் தோன்றிய சந்தி சேர்த்து எழுதும் முறையும் செய்யுள் சொற்களும் இந்த உரையில் கையாளப்பட்டுள்ளன.

1.3.1உரையாசிரியர்களின் உரைப் பணி சங்க காலத்தில் தமிழைக் காக்கும் பொறுப்பை மன்னர்கள் பெற்றிருந்தனர். பின் பல்லவர் காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ்ப்பணியை மேற்கொண்டனர். பிற்காலச் சோழர் காலத்தில்தான் பல உரையாசிரியர்கள் தோன்றித் தமிழின் காவலராய் விளங்கினர். உரையாசிரியர்களின் இடைவிடாத முயற்சியாலும் தொடர்பணியாலும் பழந்தமிழ் இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உதவுகின்றன. தமிழ் நூல்களை,

இலக்கியம்

இலக்கணம்

தத்துவம்

கலை

என்ற நான்கு பிரிவிற்குள் அடக்கலாம். இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் உரைகள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. தத்துவம், கலை ஆகிய பிரிவுகளில் தேவையான அளவு உரைகள் தோன்றவில்லை. இருட்டறையிலுள்ள எழில்மிக்க ஓவியத்தைக் காணக் கண்கள் மட்டும் இருந்தால் பயனில்லை. இருளைப் போக்கும் ஒளிவேண்டும். இனி, பலாப்பழத்தைச் சுவைத்து மகிழ அதனை முறையாக அறுத்துச் சுளை எடுத்துத் தருபவரின் உதவி வேண்டும். இவ்வாறே பழம்பெரும் இலக்கண, இலக்கியச் செல்வங்களைக் கற்று மகிழ்வதற்கு, தக்க உரையாசிரியர்கள் வேண்டும்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

என்ற உயர்ந்த நோக்கத்தோடு உரையாசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். கல்விக் கோயிலின் பெருவாயிலைத் திறந்துவிட்ட சான்றோர்கள்தான் உரையாசிரியர்கள்.

“இந்திய நாட்டிலுள்ள பௌத்த சமய நூல்கள் இக்காலத்தவர் படித்து இன்புறுவதற்கு ஏற்ற உரை விளக்கங்கள் இல்லாத காரணத்தால் விளங்காமல் இருக்கின்றன” என்று ஆங்கில ஆராய்ச்சியாளர் ரைஸ் டேவிட் (Rhys David) கூறியுள்ளார்.

“நூலாசிரியரின் அரிய கருத்துகளையெல்லாம் உரையாசிரியர் உதவியாலேயே உலகம் உணர்ந்து இன்புறுகின்றது. பேருபகாரிகளாகிய உரையாசிரியர்கள் உதவி இல்லையெனில் பண்டைய உயர்நூல்களாம் கருவூலங்களில் தொகுத்து வைத்த விலை வரம்பு இல்லாப் பொருள்மணிக் குவியல்களை யாம் எங்ஙனம் பெறுதல் கூடும்” என்று பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் கூறியுள்ளார்.

இலக்கிய வரலாற்றில் உரைகளுக்கு மிகுந்த உயர் இடம் உண்டு. தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய இலக்கணப் பயிற்சிக்கும் உரைகள் உதவி செய்கின்றன. உரைகள் இல்லாது இருக்குமேயானால் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்கள் நமக்கு விளங்காமல் போயிருக்கும். நமக்குக் கிடைத்துள்ள உரைகள் யாவும் புதையல் போன்றவையாகும்.

உரையின் பயன்கள்

உரையாசிரியர்கள் தாம் கற்றுத் தேர்ந்த புலமைச் செல்வத்தை எல்லாம் தம் உரைகளில் கொட்டி எழுதுவதால் நாம் எளிதாகக் கருத்துகளைப் புரிந்து கொள்கின்றோம்.

சில பாடல்களுக்கு உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும், நயமிக்க விளக்கமும் எழுதி இருப்பதால், அவை இலக்கியப் பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன.

தமிழ்மொழியின் அமைப்பு காலந்தோறும் எவ்வாறு மாறுதல் அடைந்து வந்துள்ளது என்பதையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை, அரசியல் மாறுதல், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் உரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

மறைந்து போன தமிழ்நூல்களின் பெயர், அந்த நூல்களின் சில பகுதிகள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து வருபவை உரைகளே ஆகும். இவ்வாறு பல உதவிகள் செய்யும் உரை நூல்களைத் தந்த உரையாசிரியர்களை நாம் என்றென்றும் போற்ற வேண்டும். தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது உரையின் வளர்ச்சியே யாகும். தமிழ் இலக்கியத்தில் உரைநடை தோன்றிய வரலாற்றைக் காலந்தோறும் விரிவாகக் கண்டறிய வேண்டும்.

1.3.2இலக்கண உரைகள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சான்றோர்கள் வாழ்ந்த காலத்தை உரையாசிரியர்கள் காலம் என்கிறோம். இதனை, கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை எனலாம். இதன் பின்னரும் இலக்கண இலக்கியங்களுக்கு உரை வகுத்த பலர் இருந்திருக்கிறார்கள். தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், பேராசிரியர் போன்றோர் உரை எழுதியுள்ளனர். இன்று நமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் இளம்பூரணரும், சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையரும், பொருளதிகாரம் உட்பட மூன்றுக்கும் நச்சினார்க்கினியரும் உரை எழுதிப் புகழ் பெற்றனர்.

இளம்பூரணர் உரை

பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதி அதனைத் “தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு” நன்கு புலப்படுத்தினார். மற்றவர்கள் உள்ளே புகுந்து காணமுடியாத வண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்ற மாளிகைக்குள் தன் அறிவு என்ற விளக்கைக் கொண்டு தேடி அங்குக் குவிந்து கிடந்த இரத்தினக் குவியல்களை உலகிற்கு முதன்முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகை இளம்பூரணர்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர். இவர் தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவர். மேலும் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர். இதனால் உரையாசிரியர் என்ற பொதுப்பெயர் இவருக்கே உரிய சிறப்புப் பெயராக மாறிற்று. இவரை உரையாசிரியர் அல்லது உரை முதல்வர் என்று அழைத்தனர்.

ஊரெனப்படுவது உறையூர், நாடெனப்படுவது சோணாடு என்று இவர் கூறும் சான்றுகளைக் கொண்டு இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் எனப் புலனாகிறது. இவர் தன் உரையின் பல இடங்களில் அவனுக்குச் சோறிடுக, உழுது வரும் சாத்தன், கூழ் உண்டான் என்பது போன்ற உழவுத் தொழில் பற்றிய சான்றுகளைத் தருகிறார். சமண சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும் மற்ற சமயங்களை வெறுக்கும் பண்பு இவரிடம் இல்லை. பெருந்தன்மையோடு பிற சமயக் கடவுளர்களையும் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகின்றார். எனவே இவர் சமயப்பொறை மிக்கவர் என்பதை அறியலாம். “இவர் உரை தெளிந்தநீரோடை போன்றது. பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்திமூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன் முகமலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகிறது” என்று மு.வை.அரவிந்தன் பாராட்டியுள்ளார். காலப்போக்கில் பல உரைகளும் உரை ஆசிரியர்களும் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கியவர் இளம்பூரணர் எனலாம். இவர் தனக்குப் பின்னால் வருபவர்கள் பின்பற்றத்தக்க உரைமரபுகள் பலவற்றைத் தோற்றுவித்தார். எனவே இவரை உரை முன்னோடி எனலாம். இளம்பூரணர் மூல நூலாசிரியரிடத்துப் பெருமதிப்பு வைத்து எழுதுதல், பிறமொழிப் பயிற்சியோடு உரை எழுதுதல், வினாவிடைப் பாங்கு, சொற்பொருள் தருதல், பலதுறை அறிவோடு உரை எழுதுதல், பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல், தம் கால வாழ்வியல் நெறிகளைப் புலப்படுத்துதல் போன்ற உரை மரபுகள் பலவற்றைக் கையாண்டு உரை எழுதியுள்ளார். புகழ்பெற்ற வடமொழி இலக்கண நூலான பாணினீயத்தை இரண்டு முறை இளம்பூரணர் தம் உரையில் பயன்படுத்தியுள்ளார்.

சொற்பொருள் தருதல்

இளம்பூரணர் பல இடங்களில் சொற்களின் பொருளை நன்கு விளக்கிச் சொல்கிறார். மாணாமை என்ற சொல்லிற்கு மிகாமை என்ற பொருள் கூறுகின்றார். உயர்வு என்ற சொல்லிற்கு விளக்கமாகப் பின்வருமாறு கூறுகின்றார் : “உயர்வு தாம் பல, குலத்தால் உயர்தலும், தவத்தால் உயர்தலும், நிலையால் உயர்தலும், உபகாரத்தால் உயர்தலும்” என விளக்குகின்றார். எழில் என்பதற்கு அழகு என்றுபொருள் கூறுகின்றார். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்களிலிருந்து பல பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார்.

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பாலான

- (பொருளதிகாரம், 206)

என்ற நூற்பாவிற்கு உரை எழுதுங்கால்,

செறிவு என்பது அடக்கம்

நிறைவு என்பது அமைதி

செம்மை என்பது மனம்கோடாமை

செப்பு என்பது சொல்லுதல்

அறிவு என்பது நன்மை, தீமை பயப்பனவும் அறிதல்

அருமை என்பது உள்ளக்கருத்தினை அறிதல்

இவையெல்லாம் மகளிர்க்கு உரித்தானவை என இளம்பூரணர் விளக்கம் தருகின்றார். எனவே இளம்பூரணர்க்கு உரை முதல்வர் என்ற பெயர் முற்றிலும் பொருத்தம் ஆகும்.

சேனாவரையர் உரை

தொன்மை இலக்கண நூலாம் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்தவர்கள் ஐந்து பேர். இந்த ஐந்து பேரின் உரையுள் சேனாவரையரின் உரையே மிகச் சிறந்தது. சேனாவரையர் என்ற பெயருக்குப் படைத்தலைவர் என்பது பொருள். பண்டைய தமிழ் வேந்தர்கள் படைத் தலைவர்களைச் சேனாவரையர் என அழைத்தனர். இவ்வாறு அமைந்த சிறப்புப் பெயரே பிற்காலத்தில் இயற்பெயராக வழங்கி விட்டது. இவருடைய உரை, திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும், ஆராய்ச்சி வன்மையும், கருத்துத் தெளிவும், உரை முழுமையும் காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழ வேண்டும். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு எழுந்த இவருடைய உரை சேனாவரையம் என்றே குறிக்கப்படும் பான்மை இவருடைய உரைச் சிறப்பினை உணர்த்தும். ‘வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்’ என்று இவர் வழங்கப்படுவதற்குத் தகுந்தாற் போன்று வடநூற் கருத்துகளை யொட்டிச் சில இடங்களில் தமிழிலக்கணம் கூறுகிறார். இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். பாண்டிய நாட்டுக் கொற்கைத் துறைமுகத்திற்கு அருகே உள்ள ஆற்றூர் என்பது இவரது சொந்த ஊர். சேனாவரையர் வாழ்ந்த போது அரசாண்ட மன்னர் குலசேகர பாண்டியன். சொல்லதிகார உரையின் தொடக்கத்தில் இவர் விநாயகர், சிவன், கலைமகள், முருகன், அகத்தியர் ஆகியவர்களை வணங்குகின்றார். எனவே இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இவர் ஆசிரியர் பணியை மேற்கொண்டு இருந்தார். தொல்காப்பியர் வகுத்துள்ள இலக்கண விதிகளையும் சூத்திரங்களையும் சேனாவரையர் தம் நுட்பமான அறிவால் உணர்ந்து நுணுகி நோக்கி, நூலாசிரியர் ஒவ்வொரு சொல்லையும், பொருள் ஆழத்துடன் அமைத்திருக்கின்றார் என்று கூறியுள்ளார். சேனாவரையர் எது சரி, எது பிழை என ஆராய்ந்து, தம் முடிவினை ஆதாரத்தோடு எடுத்துக் காட்டுகின்றார். “வடநூற் கடலை நிலை கண்டு உணர்ந்த சேனாவரையர்” என, சிவஞான முனிவர் பாராட்டியுள்ளார்.

இலக்கண விதிகளை விளக்கும் இடத்து நன்னூல் கருத்துகளை விளக்குகின்றார்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

என்ற நூற்பாவை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் திருவள்ளுவரைத் தெய்வப் புலவன் என்றே அழைக்கின்றார். சேனாவரையர் உரை செறிவும், சுருங்கச் சொல்லி உய்த்துணரவைக்கும் இயல்பும் உடையது. இதைக் கற்கும் போது சிங்க நோக்காக நூலின் முன்னும் பின்னும் நோக்கி அவற்றை நன்கு நினைவில் கொண்டு கற்க வேண்டிய பகுதிகள் பல இருப்பதை உணரலாம்.

நச்சினார்க்கினியர் உரை

“உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்ற புகழுரையே இவர் உரையின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாகும். இவர் நடை, அழகும் சற்றுக் கடினமும் பொருந்தியது. சங்க இலக்கியப் பாக்களின் ஆழ்ந்த பொருள்களை உய்த்தறியும் பேராற்றல் இவரிடம் இருந்தது. இவர் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இருந்தவர் எனலாம். இவருடைய உரைநடையில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின், அதனை அகம் என்றார். எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்.”

- பொருளதிகாரம்

நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டிற்கு உரை எழுதவில்லை யெனில், இருளில் மூழ்கி இருக்கும் வண்ண ஓவியமாய்ப் பார்த்துக் களிப்பாரின்றிப் போய் இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களை மரபறிந்து, பொருள் தெளிவுடன் சுவையாக எடுத்து விளக்கிய பெருமை நச்சினார்க்கினியருக்கு உண்டு. இவர் நுண்ணறிவு உடையவர். இவர் தொல்காப்பியத்துக்கும் உரை எழுதியுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

தெய்வச்சிலையார் உரை

இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியுள்ளார். இவர் உரை உயிரோட்டமுடையதாய், எளிதாய் உள்ளது. இவரது உரையின் ஒரு பகுதியில்,

காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும்

ஆகி உள்ளதோர் பொருள்

என்று கூறுகின்றார். பல இடங்களில் நெசவுத் தொழில் பற்றி உதாரணம் காட்டி இருப்பதால் இவர் வாழ்ந்த ஊரில் நெசவுமிகுதியாக இருந்திருக்கும் என்பர்.

கல்லாடர் உரை

ஊரின் பெயர் கல்லாடம் ஆதலால் இவருடைய பெயரும் கல்லாடர் ஆயிற்று. இவரும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றிய ஆசிரியர் ஆவார்.

பேராசிரியர் உரை

உரையாசிரியர்களுள் பேராசிரியர் என்ற சிறப்புப் பெயர் அமைந்திருப்பது இவருடைய உரையின் பெருமையினைப் புலப்படுத்தும். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகியநான்கு இயல்களுக்கு மட்டுமே இவரின் உரை கிடைத்துள்ளது.

நன்னூல் உரைகள்

தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களுள் பவணந்தியார் இயற்றிய நன்னூலே உயர்வும் சிறப்பும் பெற்றுவிளங்குகிறது. சங்கர நமச்சிவாயர், ஆண்டிப் புலவர், ஆறுமுகநாவலர், சடகோப ராமநுஜாசாரியார், முகவை இராமாநுச கவிராயர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

பிற

அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கல விருத்திக்கும் யாப்பருங்கலக் காரிகைக்கும் உரை எழுதியவர் குணசாகரர். புத்தமித்திரர் இயற்றிய வீரசோழியத்திற்குப் பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.

சிவஞான முனிவர் உரை

சைவமும் தமிழும் தழைத்தோங்க அருள்மழை பொழிந்த கார்முகில் சிவஞான முனிவர் என்று இவரைப் போற்றுவர். இவரைப் புலவர் பெருமக்கள் சிவஞான யோகி, சிவஞான சுவாமி, மாதவச் செல்வர் என்று புகழ்ந்து கொண்டாடுவர். தமிழில் உரைநடை வேந்தர்களுள் தலை சிறந்தவர் இவரே ஆதலின் இவரை உரை மன்னர் என்பர். பெற்றோர் இட்ட பெயர் முக்களாலிங்கர். தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி, நன்னூலின் விருத்தி போன்ற உரைகளை எழுதியுள்ளார். நன்னூலுக்குச் சங்கர நமச்சிவாயர் எழுதிய விருத்தியுரையைச் சிவஞான முனிவர் செப்பனிட்டு விரிவாக்கி எழுதியுள்ளார்.

1.3.3இலக்கிய உரைகள் நச்சினார்க்கினியர் உரை

நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிற வேறு நூல்களாவன :

பத்துப்பாட்டு

கலித்தொகை

சீவக சிந்தாமணி

இந்த உரைகள், பிற்காலத்தவர் சங்க இலக்கியங்களுக்கு உரைகாணுவதற்குப் பெரிதும் பயன்பட்டன.

திருக்குறள் உரைகள்

தமிழில் தோன்றிய நூல்களில் திருக்குறளுக்குப் பல வகையான சிறப்புகள் உண்டு. ஒரு நூலுக்குக் காலம் தோறும் உரைகள் தோன்றிவருவது அந்த நூலின் சிறப்பினையே குறிக்கும். திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் தோன்றியுள்ளன. இதற்கு நேரடியாக உரை எழுதியோர் மட்டுமல்லாமல் இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் போன்ற எண்ணற்ற புலவர்கள் தத்தம் நூல்களில் திருக்குறளை எடுத்தாண்டு விளக்கமும் எழுதியுள்ளனர். நீதிநூல்களை எழுதிய அனைத்துச் சான்றோர்களும் திருக்குறளுக்கு உரை வகுத்துள்ளனர் என்றே கூறலாம். திருக்குறளைப் பயின்றவர்கள் இதன் சுவையில் ஈடுபட்டுப் புகழ்ந்தும் பாடியுள்ளனர். மிகப்பலர் திருக்குறளுக்கு உரை எழுதி இருந்தாலும் பரிமேலழகர் எழுதிய உரையே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவருக்கு முன்னால் ஒன்பது உரைகள் தோன்றியுள்ளன. பத்தாவது உரையாகப் பரிமேலழகர் உரை தோன்றியுள்ளது.

பரிமேலழகர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர்.

‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’

- (திருவாய்மொழி)

‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்’

- (நம்மாழ்வார்)

இவ்வாறு இவர் எடுத்துக்காட்டாய்க் கூறும் தன்மையை வைத்து, இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவரென்பர்.

பாலெல்லாம் நல்ஆவின் பாலாமோ பாரிலுள்ள

நூலெல்லாம் வள்ளுவர்செய் நூல்ஆமோ? – நூலிற்

பரித்தவுரை யெல்லாம் பரிமேலழகர்

தெரித்த வுரையாமோ தெளி

என்ற தொண்டை மண்டல சதகச் செய்யுளால் இவரது உரையின் பெருமையை அறியலாம்.

சங்கத் தொகை நூலாம் பரிபாடலுக்கு இவர் ஓர் அரிய உரையை வகுத்துள்ளார். பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படைக்கும் இவர் உரை எழுதியுள்ளார்.

உலக மக்களிடையே நன்கு பழகி அவர்களின் பேச்சு, பழக்க வழக்கம் ஆகியவற்றை அப்படியே குறிப்பிடுகின்றார். ஓரிடத்தில் “குற்றமே இல்லாதவர் உலகத்து இன்மையில்” என்று கூறுவதிலிருந்து இவரது உலகியல் அறிவை அறியலாம். மானம் என்ற அதிகாரத்திற்கு உரை எழுதும் போது உடலின் நிலையின்மையும், மானத்தின் நிலை பேற்றையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். மக்கள் பதடி என்னும் குறளுக்கு (196) “அறிவு என்னும் உள்ளீடு இன்மையின் பதடி என்றார்” என்பதாக விளக்குகிறார்.

“வேண்டாத அடைமொழிகளுக்கு இடம் தராமல் நேரிய முறையில் உரிய பொருளை விளக்கும் அளவிற்கே சொற்களை அளந்து பயன்படுத்துவார். செறிவு, நேர்மை ஆகிய பண்புகள் அமையத் தமிழ் உரைநடையைக் கையாண்டவர் இவர்.”

என்று மு.வரதராசனார் பாராட்டியுள்ளார். பொருட்பாலிலுள்ள ஒவ்வொரு அதிகாரத்திலும் பரிமேலழகரின் அரசியலறிவு வெளிப்படுகிறது. இசைப் புலமை, மருத்துவ அறிவு. யோக நூலறிவு, திட்பநுட்ப அறிவு, இலக்கண அறிவு, இலக்கிய அறிவு, சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஆகிய இவையனைத்தும் ஒருங்கேபெற்றவர் பரிமேலழகர்.

பேராசிரியர் உரை

இவர் குறுந்தொகைக்கும் உரைஎழுதியிருக்கிறார் என்பர். கோவை நூல்களில் சிறப்புடையதாய், இராசாக் கோவை என்று கூறப்படும் மணிவாசகப் பெருமான் அருளிச் செய்த திருக்கோவையாருக்கு இவர் அழகியதோர் உரையினைச் செய்துள்ளார். இதனால் இவரைச் சைவர் என்பர். இவர் வறுமை என்பதற்குப் “போகம் துய்க்கப் பெறாதபற்றுள்ளம்” என்று உரையெழுதிய பான்மை சிறப்புடையதாகும்.

அடியார்க்கு நல்லார் உரை

சிலப்பதிகாரம் முழுமைக்கும் அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார். எனினும் 18 காதைகளுக்கான உரையே கிடைத்துள்ளது வடமொழியிலும், தமிழிலும் புலமை மிக்கவர் இவர். அக்காலத்திலிருந்த இசைத் தமிழ், நாடகத் தமிழ் நூல்களைப் பற்றிய கருத்துகளை யெல்லாம் இவரது உரையில்தான் காண்கிறோம். இவரது உரைநடை சில இடங்களில் பாட்டிற்குரிய ஓசையுடன் காணப்படுகிறது; இவரது நடை எதுகை மோனையுடன் செய்யுளுக்குரிய ஓசையுடன் அமைந்துள்ளது. மேலைநாட்டுத் திறனாய்வாளரைப் போல அடியார்க்கு நல்லார் சிலம்பினைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்துள்ளார். தமது உரையுள் முந்நீர் என்பதற்கு, முச்செயலைக் கொண்ட முந்நீர் என்று விளக்கம் தருகின்றார். மூன்று செய்கையாவன மண்ணைப் படைத்தலும், மண்ணைக் காத்தலும், மண்ணை அழித்தலும் ஆகும் என்று கூறுமிடம் நயம்மிக்கதாகும். பருந்தும் நிழலுமெனப் பாவும் உரையும் பொருந்த எல்லாப் பொருளும் தெரிந்து நல்அமிர்தம் போன்ற உரையை வகுத்துள்ளார் என்பர். தமிழிசை மறுமலர்ச்சிக்கு உதவியது இவரது அரங்கேற்று காதை உரையேயாகும். காப்பிய அமைப்பு, நிகழ்ச்சி ஒருமைப்பாடு, காப்பிய மாந்தர் பண்புகள், செயல் நிகழும் கால எல்லை, இடம், கவியுள்ளம் இவற்றையெல்லாம் நுணுகி ஆராய்ந்து புலப்படுத்தியுள்ளார். இவற்றால் அடியார்க்கு நல்லார் சிறந்த திறனாய்வாளராகத் திகழ்கிறார்.

சிவஞான முனிவர் உரை

சிவஞான பாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் சுபக்கம் உரை, கம்பராமாயண முதற்செய்யுள் விருத்தி போன்ற உரைகளையும் எழுதியுள்ளார்.

சைவ சித்தாந்த உரைகள்

இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை வகுத்த பலரைப் பற்றி அறிந்து கொண்டோம். இனி, சமய இலக்கியங்களைப் பார்க்கலாம். சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என்பது உங்களுக்குத் தெரியும். திருமுறைகளுக்கு உரை எழுதுவது பாவம் என்ற கருத்தால், அவற்றுக்கு உரை வகுக்க யாரும் முற்படவில்லை. சைவத்தின் தத்துவம் சைவ சித்தாந்தம் ஆகும். மெய்கண்டார் முதலிய அருளாளர்கள் தமது நூல்களில் சைவ சித்தாந்தத்தை விளக்கியிருக்கிறார்கள். சைவ சித்தாந்த நூல்கள் பதினான்காகும். பதினான்கு சைவ சித்தாந்த நூல்களில் சிவஞான போதம் தலைமை வாய்ந்தது. பன்னிரண்டு சூத்திரங்களையும் எண்பத்தோர் எடுத்துக்காட்டு வெண்பாக்களையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நூலுக்குப் பலர் உரை வகுத்துள்ளனர். எனினும் சிவஞானமுனிவர் எழுதிய மாபாடியம் தலைசிறந்தது. இந்த நூல்கள் பதினான்கனுக்கும் பலர் உரை எழுதியுள்ளனர். சைவ மடங்களிலேயே இவை கற்பிக்கப்பட்டு வந்ததால் உரையாசிரியர்களில் பலர்துறவிகளாவர். சிவஞானசித்தியார், பரபக்கம், சுபக்கம் என இரு பகுதிகளைக் கொண்டது. சுபக்கத்துக்கு உரை தந்தவர்கள் ஆறு அறிஞர்கள். இவர்களின் உரைகளை இணைத்து அறுவர் உரை என்றே குறிப்பிடுவார்கள்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்த உரைகள்

கடைச்சங்க இலக்கியங்களில் வடசொல் கலப்பு ஒரு விழுக்காடு இருந்தது. ஏழு, எட்டு நூற்றாண்டுகளில் ஐந்து விழுக்காடு வரைவடசொற்கள் காணப்பட்டன. இந்த மணிப்பிரவாள நடை சமணர்களால் தோற்றுவிக்கப்பட்டு வைணவ உரையாசிரியர்களால் வளர்க்கப்பட்டது. மணியும் முத்தும் கோத்த ஆரம்போலவடசொல்லும், தமிழ்ச் சொல்லும் கலந்து வர, தமிழ் வாக்கியஅமைப்பில் அமைந்த நடையே மணிப்பிரவாள நடை எனப்படும்.

ஆழ்வார்கள் எழுதிய பக்திப் பாசுரங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என அழைக்கப்படும். இப்பாடல்களுக்கு 14, 15ஆம் நூற்றாண்டுகளில் இவ்வுரைகள் எழுந்தன. இவையாவும் வடமொழிச் சொற்கள் மிகுதியாகவும், தமிழ்ச் சொற்களைக் குறைவாகவும் கொண்ட மணிப்பிரவாள நடையில் அமைந்தன. இதனால் தமிழின் தூய தனித்தன்மை பாதிக்கப்பட்டது. இப்போக்கினால் தமிழ் மொழியில் ஏராளமான வடசொற்கள் புகத் தொடங்கின.

இந்நூற்றாண்டுகளில் தோன்றிய வில்லிபாரதம், திருப்புகழ் முதலிய நூல்களில் வடசொற்கள் மிகுதியாக உள்ளமைக்கு இப்போக்கே ஒரு காரணம்.

தமிழிலக்கிய உலகத்தில் இடைக்காலத்தில் செந்தமிழை வளர்த்து செழிக்கச் செய்த பெருமை ஆழ்வார்களுக்கும் உரியது. இலக்கியச் சுவை முதிர்ந்த வளமான கவிதைக் கனிகளை நல்கித் தமிழ் இலக்கியத்தில் அளப்பருந் தொண்டுகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்கள் பன்னிருவரும் திருமாலை வணங்கி வாழ்த்தி அவரது பெருமைகளைப் புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப்பட்டது. ஆழ்வார்களின் பாடல்களை நாதமுனி என்பார் கி.பி 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொகுத்தார் என்பர். ஆழ்வார்களின் பாடலுக்கு உரை இயற்றிய வைணவப் பெரியோர் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் தம் உரைகளில் வழங்கிச் சென்றுள்ளனர். மிக நயம்படப் புலப்படுத்தி எழுதியுள்ளனர். வைணவ உரையாசிரியர்கள் தாம் செய்த விளக்க உரையை வியாக்கியானம் என்று குறிப்பிட்டுள்ளனர். வைணவர்களின் வேத நூலாகிய இந்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்களின் சிறப்பை உ.வே.சாமிநாத ஐயர், “ஆழ்வார்களுடைய உரையில் ஒரு பாடலுக்கு உரை கேட்டுவிட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது” என்று கூறி, அதன் பெருமையை வெளிப்படுத்துகின்றார்.

ஆறாயிரப்படியே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய திருவாய்மொழி வியாக்கியானம் ஆகும். இதுவே பிற்கால வைணவ உரைகளுக்கு ஆரம்பமாகும். இதை எழுதியவர் இராமானுஜரின் மாணாக்கர் பிள்ளான் ஆவார். இவர் எழுதிய வியாக்கியானத்தைக் கண்டு மகிழ்ந்த இராமானுஜர் இவருக்குத் திருக்குருகைப் பிரான் என்று பெயரிட்டார்.

பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் மிகச் சிறப்பாக வியாக்கியானம் எழுதி வியாக்கியானச் சக்ரவர்த்தி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். தற்கால உரைநடையின் முந்தைய நிலையினை இவ்உரையாசிரியர் நடையில் காணலாம்.

வைணவப் பிரபந்த உரையாசிரியர்கள் மணிப்பிரவாள நடையில் எழுதினர்; அவர்கள் காலத்தோடு இந்நடை மறையலாயிற்று.

1.4பிற்கால உரைநடை

உரையாசிரியர்களின் உரைப்பணியின் தொடர்ச்சியை நாயக்கர் காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் காணமுடிகிறது. ஐரோப்பியர் தொடங்கி வைத்த நடை தமிழிற்குப் புதிதானது. வைத்தியநாத தேசிகர், சுப்பிரமணிய தேசிகர், தத்துவபோதக சுவாமிகள், வீரமா முனிவர் முதலானோர் உரைநடை வளர்ச்சிக்கு உழைத்தனர்.

1.4.1நாயக்கர் கால உரைகள் நாயக்கர் காலத்தில் உரைகள் மூலம் உரைநடை வளர்ந்தது. நிரம்ப வழகிய தேசிகர் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகிய திருவருட்பயனுக்கு அழகிய எளிய நடையில் உரை வகுத்தார். மயிலேறும் பெருமாள் கல்லாடத்திற்கு உரை வகுத்தார். இலக்கணவிளக்க ஆசிரியர் வைத்தியநாததேசிகர், இலக்கணக் கொத்து சாமிநாததேசிகர், பிரயோக விவேகம் சுப்பிரமணிய தேசிகர் ஆகிய மூவர் நடையும் பண்டைய இலக்கிய நடையினை ஒட்டியன. சிவப்பிரகாசர் தருக்க பரிபாஷை எனும் உரைநடை நூல் யாத்துள்ளார்.

1.4.2ஐரோப்பியர் கால உரைகள் ஐரோப்பியர் காலத்தில் இயற்கையான ஒரு மொழி நடையாக உரைநடை உருவானது. இதற்கு அடிகோலியவர்கள் ஐரோப்பியராவர். அக்காலகட்டத்தில் ஐரோப்பியர் வளர்த்த உரைநடையில் அனைவர்க்கும் புரிந்த இயற்கை நடையும் இருந்தது. உரையாசிரியர் தொடங்கி வைத்த கற்றோர்க்கே புரியும் செயற்கை நடையும் இருந்தது. பேச்சுத் தமிழ் கொண்டே, தமிழுக்கு ஒருவிதப் புதிய நடையினைப் படைத்தவர் ஐரோப்பிய அறிஞர்களே! இவர்களது எழுதுபொருள், அச்சுப் பொறிகளின் வரவால் உரைநடை விரைந்து பரவி வளர்ந்தது.

இந்திய மொழிகளிலேயே உரைநடை நூல் முதன் முதல் தோன்றியது தமிழ்மொழியில்தான். அம்பலக்காட்டில் 1577-இல் வெளியான கிருஸ்துவோபதேசம் என்ற நூலே தமிழில் அச்சான முதல் நூல் என்கிறார் கால்டுவெல். இப்போது அந்நூல் கிடைக்கவில்லை. பதினாறு பக்கங்கள் கொண்டதும் 1579-இல்கொல்லத்தில் ஆன்றிக் என்பவர் அச்சேற்றியதும் ஆன தம்பிரான் வணக்கம் (கிறிஸ்தவ வணக்கம்) தான் முதன்முதலில் தோன்றியது என்கிறார், தனிநாயக அடிகள். 1716-இல் சீகன்பால்கு ஐயர் ‘தமிழ் – லத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு நூலினைத் தாமே உண்டாக்கிய தமிழ் அச்சுக்களால் பதிப்பித்தார். பல சொற்கள் இரு மொழியிலும் ஒன்றாக இருப்பதை உணர்த்தியுள்ளார். இலக்கண நடையை விட்டு நீண்ட தொடர்களில் பேச்சு நடையினைப் பின்பற்றி எழுதினார். 17ஆம் நூற்றாண்டில் தத்துவபோதகர் என்பவர் கிறித்தவர் படித்தற்கெனப் பல நூல்களைப் படைத்தார். இதே காலத்தில் அருளானந்த அடிகள் சில உரைநடை நூல்கள் செய்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டு

பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் வசன நடை வளர்த்த வல்லாளர். இவர் எழுதிய தொன்னூல் விளக்கம் கற்றோர்க்கே உரிய நடை கொண்டது. பேச்சுத் தமிழை அடியொற்றி எளிய நடையில் வேதியர் ஒழுக்கம் என்னும் நூலை வரைந்தார். இது கல்லார்க்கெல்லாம் களிப்பருளுவது. இவர் சமயக் கொள்கைகளைப் பரப்புதற்குத் தமக்கெனத் தனியொரு நடையினை வகுத்துக் கொண்டார். அது ஒரு புதுநடை. பரமார்த்த குரு கதையிலும் அமைவது அனைவர்க்கும் ஏற்றது. உரைநடையாக உலவிய தமிழ் உரைநடை இலக்கியமாகவும் உருவெடுக்கத் தொடங்கியது. எழுத்துகளில் சீர்திருத்தங்களையும் செய்தார் அவர். வீரமாமுனிவர் தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் உரைநடையின் தோற்றுநர் என்று போற்றப்படுகிறார். சீகன் பால்கு தரங்கம்பாடியில் மத போதகராகப் பல்லாண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் பல உரைநடை நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளுக்கு உரையும் மொழிபெயர்ப்பும் எழுதியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு

அச்சு இயந்திரங்களின் உதவியால் பல உரைநடை நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. இக்கால கட்டத்தில் பல நூல்களை அச்சிட்ட பெருமை காலின் மெக்கன்சி, ஜான் மெர்டாக் என்பவர்களைச் சாரும். இவர்கள் இருவரும் புராணம், வாழ்க்கை வரலாறு, நாடகம், தத்துவம், வானநூல், மருத்துவம், சமயம், சட்டம், அறிவியல், மொழியியல், இதழியல் போன்ற பல துறை நூல்களைத் தொகுத்து முன்னுரையோடு அச்சிட்டு வெளியிட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உரைநடை ஓங்கி வளர்ந்தது. விரைந்து சிறந்தது. இதற்குரிய காரணங்கள்:

நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின.

கிறித்தவ மதம் பரப்ப எண்ணற்ற நூல்களை மிஷனரிகள் வெளியிட்டன.

இதுகண்டு விழிப்புற்ற இந்துக்கள் தங்கள் இதிகாச புராணங்களை

வசனங்களாக வடிக்கத் தொடங்கினர்.

இந்த நூற்றாண்டில்தான் பத்திரிகைகள் பிறந்தன.

சென்னைக் கல்விச் சங்கம் தோன்றிப் பாட நூல்களையும்,

மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டது.

கிறித்துவ மதத்தை எதிர்த்துக் கண்டன நூல்கள் எழுந்தன.

உரைநடையாசிரியர் சிலர்

தஞ்சைவாணன் கோவைக்கு உரை வகுத்த சொக்கப்ப நாவலர் நடை, தெளிவும் தனித்துவமும் வாய்ந்தது. இந்த நூற்றாண்டில் உரைநடை இளவரசு தாண்டவராய முதலியார் வெளியிட்ட பஞ்சதந்திரக் கதை (1826) தலையாயது; நகைச்சுவை மிக்கது. நீதிகள் நிறைந்த தெள்ளிய நடையது. இந்நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுகநாவலர். உரைநடைக்கு ஒரு வடிவினை அருளியவர். இலக்கண வழுவில்லாத ஓர் எளிய இனிய தெள்ளிய நடையைத் தந்து வழிகாட்டினார். வழக்கில் பயின்ற சொற்களைக் கொண்டே சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிவான தமிழில், இலகுவான நடையில் எழுதினார். குறியீட்டு முறைகளைப் பயன்படுத்தி மக்கள் உள்ளத்தில் ஊடுருவும் ஆற்றல் சான்ற அருமையான தமிழில் எழுதியும் பேசியும் நாவலர் நடை என ஒரு தனி நடையையே உண்டாக்கினார். இதனால் இவர் தமிழ்க் காவலர் எனவும், தற்காலத் தமிழ் உரையின் தந்தை என்றும் ஏத்தப் பெற்றார்.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்

சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே

எனத் தாமோதரம் பிள்ளை ஏத்துகிறார்.

வசன நடை கைவந்த வல்லாளர்

என்பார் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்).

இதே சமயத்தில் நீண்ட வாக்கியங்கள் கொண்டு நீட்டி எழுதும் நடையும் நிலவியது. இராமலிங்க அடிகளின் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், உண்மை நெறி போன்றன மிக நீண்ட வாக்கியங்களில் கற்றோர்க்கே புரியும் சொற்களைக் கொண்டு இலக்கண வரம்புடன் யாக்கப்பட்டுள்ளன. வீராசாமி செட்டியார் நகை நெளிய, உவமை, பழமொழி ஆகியன ஊடே வர, சுவை சொட்ட விநோதரச மஞ்சரி என்ற உரைநடை நூலை எழுதினார். ஓசை நலமும் கவிதை ஓட்டமும் உடைய ஓர் உணர்ச்சி நடையினை உருவாக்கியவர் பி.ஆர்.இராஜமையர். இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டின் நடைக்கு வித்திட்டவர் ஆவர். இராஜமையருடைய கமலாம்பாள் சரித்திரம் வாழ்க்கையை உள்ளவாறு காட்டும் ஒரு முயற்சி.

1.5தற்கால உரைநடை

மேலை நாட்டுக் கல்வியின் பயனாக, விஞ்ஞான, மெய்ஞ்ஞான உளவியல் கருத்துகளை வெளியிடும் வகையில் உரைநடை ஓங்கியது.

கலைகளும், கருத்துகளும் அறிவாக்கமும் பெருகப் பெருக அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் உரைநடை விரிந்தது.

உள்ள உணர்வுகளைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தும் ஆர்வம் கொண்டு உரைநடையினைப் பயன்படுத்தியதால் பல்வகை நடைகள் பிறந்தன.

தத்தம் புலமையைக் காட்டித் தனித்துவம் காட்ட முனைந்தமையாலும் நடையில் மாறுபாடுகள் மலர்ந்தன.

சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை போன்ற புதிய இலக்கிய வடிவத்தால் தமிழன்னையைப் பலர் அழகுபடுத்தினர். எண்ணற்ற ஆசிரியர்கள் உரைநடை வாயிலாகப் பல நூல்களை எழுதி இலக்கியப்புகழ் பெற்றனர்.

வீராசாமி செட்டியாரும், பி.ஆர்.இராஜமையரும் தமிழில் கட்டுரை இலக்கியத்தைத் தொடங்கி வைத்தவர்களாகவும், கதை இலக்கியத்திற்கு வித்தூன்றியவர்களாகவும் விளங்குகின்றனர். இவர்களேயன்றி, தாமோதரம் பிள்ளை, சுந்தரம் பிள்ளை போன்றோரும் உரைநடை உயர்வுக்கு உறுதுணை புரிந்தனர். இந்த இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆங்கிலச் சாயல் படிந்துள்ளமை அறியத்தக்கது. இந்த நூற்றாண்டு உரைநடை இலக்கிய உச்சகாலமாகவும், நற்றமிழ் உரைநடையின் பொற்காலமாகவும் பொலிகிறது.

1.5.1கட்டுரை நடை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் தமிழ்க்கவிதைக்கு உயிர்ப்பூட்டியது போன்றே உரைநடையையும் சொல் புதியதாக, பொருள் புதியதாகப் படைத்தார். இக்காலத்துக்கேற்ற உரைநடைக் கூறுகள் அவர் நடையில் ஒளிரவே செய்கின்றன. வ.ரா.வின் உரைநடை எளிமையானது.

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையர் பொதுமக்கட்குப் புரியும் வகையில் எளிய நடையில் பழகு தமிழ்ச் சொற்களைப் பெய்து மரபுகெடாது எழுதினார். தொடக்கத்தில் பண்டிதர் நடையில் எழுதிய இவர்காலப் போக்குணர்ந்து எளிய நடையில் எழுதினார். கி.வா.ஜ.வும் அவரைப் போன்றோரும் இந்நெறியில் எழுதியவர்கள் ஆவர்.

பண்டிதர் தமிழில் எழுதியவர் பரிதிமாற்கலைஞர். இவரும் பின்னர் நடையின் கடுமை குறைத்து எழுதினார். இதற்கு இவரது தமிழ் வரலாறு சான்றாகும். தற்காலத் தமிழ் உரைநடையின் ஞாயிறும், திங்களுமாகத் திகழ்பவர்கள் மறைமலையடிகளாரும் திரு.வி.க.வும் ஆவர். இவ்விருவரும் பேச்சாலும், எழுத்தாலும் பைந்தமிழுக்கு ஊட்டமளித்தவர்கள். மறைமலையடிகள் ‘தனித்தமிழ் நடையின் தந்தை’ தனித்தமிழ் இயக்கங் கண்டவர். வடமொழி கலவாது தமிழில் பேசவும், எழுதவும் முடியும் என்பதை உறுதி செய்து தாமே 1916-இல் தனித்தமிழில் எழுதும் முறையைத் தொடங்கி வைத்தார். இந்நெறியை இளவழகனார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் போன்றோர் பின்பற்றினர்.

திரு.வி.க., மென்தமிழ் உரைநடையின் முதல்வராய்த் திகழ்ந்தார். ஒருமுறை இவரது பேச்சைக் கேட்ட பாரதி ‘இதுவையா பேச்சு’ எனத்துள்ளி எழுந்தாராம். அத்துணை உணர்வூட்டும் அரிய இயல்பும் எழில் நடையும் கொண்டது, அவரது நடை. திருத்தமான தமிழுக்குப் பொருத்தமான வடிவம் தந்து நல்ல தமிழ் நடையினை நிலைக்கச் செய்தவர்.

இதே சமயம் பண்டைப் புலவர் நடையினைப் பின்பற்றிச் செந்தமிழ் நடையில் எழுதிச் சென்றவர்கள் பண்டிதமணி மு.கதிரேசர், செல்வகேசவராயர், விபுலானந்தர் போன்றவர்கள். பண்டைய இலக்கணம் பிறழாத அதே சமயம் காலத்தோடு பொருந்தும் உயரிய தெள்ளிய செழுந்தமிழ் நடையின் சீர்மையுணர்த்தும் சோமசுந்தர பாரதியாரின் வீரமும் செறிவும் வலிமையும் வாய்மையும் வாய்ந்த வீறுநடை, கம்பீரமானது; சிறிது கடினமானது. விபுலானந்தரின் வளநடையோ செறிவும், ஓசைச் சிறப்பும் சொல்வளமும் சான்றது.

கா.சு.பிள்ளையின் நடை, வெள்ளோட்டமான தெள்ளிய சாதாரணநடை. வையாபுரிப்பிள்ளையின் நடை வடசொற்கலந்த அறிவு நிரம்பிய எளிய நடை. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை தமக்கெனத்தனிநடை வகுத்துக் கொண்டவர். ஒளவை. துரைசாமியாரின் அள்ளுநடை உரையாசிரியர்களின் ஊற்று நடை. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ இருவர் நடையும் பழுத்துப் பண்பட்டு இறுகிய சிந்தனை மிகு செறிவு நடை; அழகும், குழைவும் கெழுமிய செழுமை நடை; மு.வ. நடையில் கனிவு, தெளிவு, எளிமை, இனிமை தவழும்.

உரைநடைக்கு மெருகூட்டி மேன்மை அளித்தவர்கள் அறிஞர் அண்ணாதுரையும், கலைஞர் கருணாநிதியும் ஆவர். அடுக்குச் சொல், மிடுக்கு நடை, முன்னவர் நடை. அலங்கார அழகு நடை, பின்னவர் நடை. இருவரும் ஒரு பெரும் அலையை எழுப்பி விட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் பலாப்பழ ஈக்கள் போல் ஆயினர்.

பத்திரிகைகள், மறுமலர்ச்சி நடையை உருவாக்கின. வ.வே.சு. ஐயர், பாரதியார், வ.ரா, கல்கி, புதுமைப்பித்தன், டி.கே.சி., சீனிவாச ராகவன் போன்றோர் படைப்புகள் இதற்குச் சான்றாகும். இதுவே இக்காலப் புத்திலக்கியத்திற்கு ஏற்ற சிறப்பான நடையாகும்.

1.5.2படைப்பிலக்கிய நடை எம்மொழியிலும் நாவல் முன்னே எழுந்து சிறுகதை பின்னே எழுந்துள்ளது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழ் நாவலுக்கு மட்டும் முன்னோடி இல்லை. உரைநடைக்கும் முன்முயற்சியாளர் எனலாம். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற பெருமைக்குரியது. இவரைத் தொடர்ந்து பண்டித நடேச சாஸ்திரி, பி.ஆர்.இராஜம் ஐயர், அ.மாதவையா, ஆரணி குப்புசாமி, வடுவூர் துரைசாமி, கே.எஸ்.வேங்கடரமணி, தேவன், த.நா.குமாரசாமி, அறிஞர் அண்ணா, மு.வரதராசனார், ந.சிதம்பரசுப்பிரமணியன், பி.எம்.கண்ணன், சாண்டில்யன், க.நா.சுப்பிரமணியம், லா.ச.ராமாமிர்தம், எம்.வி.வெங்கட்ராம், கோவி.மணிசேகரன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, இராஜம் கிருஷ்ணன், சூடாமணி போன்றவர்கள் நாவல்களைப் படைத்துள்ளனர்.

முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் வரும் ஞானாம்பாள் பாத்திரத்தின் மூலம் பல அரிய கருத்துகளைக் குறிப்பிடுகின்றார்.

நம்மைப் பெற்றது தமிழ் நம்மை வளர்த்தது தமிழ்

நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்.

என்று தமிழ்மொழியைப் போற்றுகின்றார்.

வரகனேரி வேங்கட சுப்ரமணிய ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தமிழில் தோன்றிய முதல் சிறுகதை. ஆற்றலும், அழகும் பொருந்திய வசனங்களை அமைப்பதில் இவர் வல்லவர். இவரது நடை உயிர்த்துடிப்புள்ளதாக விளங்குகிறது. இவரை வ.வே.சு.ஐயர் என்பர்.

பார்க்கப் போனால் நான் மரம் தான்… ஆனால் என் மனதில் உள்ளதை சொல்கிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயிசுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன்.

என்று குளத்தங்கரையிலுள்ள அரசமரம் பேசுவதாகப் படைத்துள்ளார். இவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் பாராட்டுவர். இவரைத் தொடர்ந்து பாரதியார், கு.ப.ராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி), புதுமைப்பித்தன், மௌனி,பி.எஸ்.இராமையா, ராஜாஜி, கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன், கி.இராஜநாராயணன், மு.வ.,கி.வா.ஜகந்நாதன், அகிலன், ஜெயகாந்தன், கோவி.மணிசேகரன், சு.சமுத்திரம், வண்ணநிலவன், சுப்ரபாரதிமணியன், பிரபஞ்சன், பொன்னீலன் போன்றவர்கள் சிறுகதை படைத்தனர்; படைத்து வருகின்றனர்.

1.5.3இதழியல் உரைநடை மக்களது வாழ்வியலுக்கு வளம் சேர்க்கும் துறைகளுள் இதழியல் ஒன்று. இந்த இதழியல் துறையுடன் மற்ற எல்லாத் துறைகளும் பின்னிப் பிணைந்துள்ளன. பத்திரிகைத் துறை பொது அறிவுக்களஞ்சியமாக விளங்குகின்றது. இந்திய இதழியல் வரலாறு ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளைக் கொண்டதாகும். சுதேசமித்திரன் என்ற பத்திரிகையின் தோற்றமே தமிழ் இதழியலின் தோற்றமாகும். பாரதியாரின் இந்தியா, திரு.வி.க.வின் தேசபக்தன், நவசக்தி போன்ற இதழ்கள் சுதந்திர உணர்வின் அடிப்படையில் செயலாற்றின. சுதேசமித்திரன் தமிழ் நாளிதழ்களின் முன்னோடி ஆகும். இந்த இதழில் மிக நீண்ட வாக்கியங்களைக் கொண்ட செய்திகளைக் காணலாம். இதில் ஆங்கிலச் சொற்களும், வடசொற்களும் பயன்படுத்தப்பட்டன. கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவல் விவேக சிந்தாமணி என்னும் இதழில் தொடர்கதையாக (1893-95-இல்) வெளிவந்தது.

தமிழ் இதழ் வரலாற்றில் மணிக்கொடி வெளிவந்த காலம் குறிப்பிடத் தக்கது. இந்த இதழ் உரைநடையில் எளிமைத்தன்மையைக் கொண்டு வந்தது.

பாரதி பாடியது மணிக்கொடி

காந்தி ஏந்தியது மணிக்கொடி

காங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி

சுதந்திரப் போராட்ட வீரர்களை

உற்சாகமூட்டியது இம்மணிக்கொடி

இவ்வாறு மணிக்கொடி முதல் இதழில் தலையங்கம் வெளிவந்தது.

முரசொலி இதழின் நடையில் எதுகை மோனையைக் காணலாம்.

தமிழே ! தேனே ! தீங்கனியே !

அமிழ்தே ! அன்பே ! அழகுக்கலையே !

எழிலே ! அறிவே ! எண்ணச் சுடரே !

என, கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாவைப் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றின் வளர்ச்சிக்கேயன்றிப் புதின வளர்ச்சிக்கும் இதழ்கள் பேருதவி புரிகின்றன.

1.6தொகுப்புரை

தமிழ் மொழியின் இன்றியமையாமையை உணர்ந்து, காலந்தோறும்காத்து, பல வகைகளில் தொண்டாற்றிய பேரறிஞர்கள் பலர் தமிழ் உரைநடையைச் செம்மைப்படுத்தியுள்ளனர்.

உரையாசிரியர்களின் இடைவிடாத முயற்சியாலும் தொடர்பணியாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உரைநடை ஓங்கி வளர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டில் சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புதிய இலக்கிய வடிவத்தால் தமிழன்னையைப் பலர் அழகுபடுத்தினர்.

தமிழுக்குப் பொருத்தமான வடிவம் தந்து எளிமையான, இனிமையான நல்ல தமிழ் உரைநடையை நிலைக்கச் செய்தனர்.

பாடம் - 2

உரைநடை வகைகள்

2.0பாட முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடையின் பங்கு மிக முக்கியமானது. பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பது உரைநடையாகும். அந்த உரைநடையின் வகைகள் பற்றி இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.

2.1

உரைநடை - விளக்கமும் வகைப்பாடும்

உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் உரைநடை அல்லது உரைவாசகம் எனப்படும். உரைநடை என்பது பொருளின் தன்மையை உள்ளது உள்ளவாறு உரைப்பதாகும்.

உரைநடைக்குச் சொற்கள் தான் அடிப்படை என்றாலும், வெறும் சொற்களால் மட்டும் உயிரோட்டமுள்ள கலைநயமான நடை அமைந்து விடுவதில்லை. கருத்தோட்டம், சொல் சேர்க்கை, ஒலிநயம், வேகம், அழுத்தம் முதலிய கூறுகளும் அதில் அடங்கியிருக்கும். இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனுபவப் பார்வை, வீச்சு, மனப்பண்பு இவற்றுக்கு ஏற்பவே நடைநயமும் அமைகிறது. ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்’ வாக்கினிலே ஒளி உண்டாம்’ என்ற பாரதியார் வாக்கையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

எல்லார்க்கும் விளங்க வேண்டும், அதனோடு உரைநடைப் பண்புகளும் உடன் வளர வேண்டும். நல்ல உரைநடையைப் படிக்க மக்கட்குப் பயிற்சி கொடுப்பது எழுதுவோர் பொறுப்பு. எழுத்தாளர்கள் சிறுசிறு தொடர்களையே உரைநடையமைப்பாகக் கருதிப் பின்பற்ற வேண்டும். எழுத்து வழக்கில் பலரும் படிக்கத்தக்க பொதுத்தன்மை அமைய வேண்டும். பேச்சுப் பகுதிகளை எளிய இயல்பு நடையில் அமைக்கலாம். நல்ல தமிழ்ச் சொல்லும் பொருந்திய தொடரும் பெருவரவாக அமைந்தால் நல்ல தமிழ் உரைநடை அமையும்.

2.1.1உரைநடையாட்சி இன்று எங்கும் உரைநடை, எல்லாம் உரைநடை. நாட் செய்தித்தாள் என்ற தரைப்படையாலும், கிழமையிதழ் என்ற கடற்படையாலும், மேடைப் பேச்சு என்ற வானப்படையாலும் கவிதை என்னும் முதிய மன்னனிடமிருந்து, மொழி என்னும் பரந்த நிலத்தை இளைய உரைநடை வேந்தன் கைப்பற்றிக் கொண்டான்.

இருபதாம் நூற்றாண்டை உரைநடைக் காலம் எனலாம். ஆங்கிலக் கல்வியின் பயனால் புதுமைப் படைப்புகளை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டதனால் தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அரசியல் விழிப்பும், விடுதலை வேட்கையும் ஏற்பட்ட பிறகு வளர்ச்சி பெருமளவில் பெருகியது. நாட்டு விடுதலை உணர்வு, சீர்திருத்த உணர்வு, மொழி உணர்வு அனைத்தும் இணைந்து உரைநடை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தன. மேலைநாட்டில் முன்னேறிய கலை, அறிவியல் நம் நாட்டிலும் பரவத் தொடங்கியது. அதன் விளைவாகவும் உரைநடை புதுவகையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அக்காலத்தில் செய்யுள் பெற்றிருந்த இடத்தை இக்காலத்தில் உரைநடை பெற்றுள்ளது எனலாம்.

2.1.2உரைநடை வகைப்பாடு தமிழ் உரைநடை ஒரு நூற்றாண்டிற்குள் மாபெரும் வளர்ச்சி பெற்றது. பன்முகத் துறையில் பயன்படுத்தப்படும் இவ்வுரைநடையை, பயன்படுத்தப்படும் சூழலின் அடிப்படையில் மேடைத் தமிழ்நடை, அறிவியல் தமிழ் நடை, பத்திரிகைத் தமிழ் நடை, நாடக உரைநடை என்று பொதுவாக நான்காகப் பிரிக்கலாம்.

எத்தகைய பொருளையும் வெளிப்படுத்தும் முறையின் அடிப்படையில் உரைநடையைப் பல வகையாகப் பிரிக்கலாம். ஓர் உரைநடைப் பகுதியை நாம் ஆராயும்போது, அது எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதையும் மனத்திற்கொண்டே ஆராய வேண்டும். ஏனெனில் அந்தப் பயன் நோக்கமே அதன் நடையை நிர்ணயம் செய்கிறது. உரைநடையின் பொதுவான பாகுபாடுகள், விளக்க உரைநடை, வருணனை உரைநடை, எடுத்துரை உரைநடை, நாடக உரைநடை, சிந்தனை உரைநடை. அளவை உரைநடை எனப் பல வகைப்படும். மேலே கண்ட பாகுபாடுகள் அனைத்தும் முடிந்த முடிபானவை அன்று. அவரவர்கள் தத்தம் மனப்போக்கிற்கு ஏற்பக் கூட்டியோ குறைத்தோ சில அடிப்படையான பாகுபாடுகளைச் செய்வர்.

2.2விளக்க உரைநடை

ஒரு கருத்தை விளக்கிக் காட்டுவது போல் எழுதப்படுவது அனைத்துமே விளக்க உரைநடை (Expository prose or explanatory prose) தான். பள்ளிக்கூட, கல்லூரிப் பாடப்புத்தகங்கள், அறிவியல் நூல்கள், கலைக்களஞ்சியங்கள், பல்வேறு தொழில்களைப் பற்றியும் கலைகளைப் பற்றியும் எழுதப்படும் விவர விளக்கங்கள் முதலியன இவ்வகையில் அடங்கும். மனிதனின் தீராத அறிவுப்பசிக்கு உணவாக அமைவது இவ்வகை உரைநடையே எனலாம்.

அறிவுத்துறை சார்ந்த எல்லா நூல்களும் விளக்கம் தருவதையே முதன்மை நோக்கமாய்க் கொண்டுள்ளன. அறிவியல், தத்துவம், வரலாறு, பொருளாதாரம், சமுதாயவியல், அரசியல் போன்ற துறைசார்ந்த எல்லா நூல்களும் ஏதோ ஒரு கருத்தை விளக்கிக் கூறவே எழுதப்படுகின்றன. எனவே, விளக்கம் தருவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது விளக்க உரைநடை (Expository prose or explanatory prose) ஆகும்.

விளக்க உரைநடை சில செய்திகளை முன்மொழிகிறது; அவற்றிற்கு விளக்கம் தருகிறது. மாறுபட்ட கருத்துகளை ஆராய்ந்து முடிவு கூறுகிறது. முன் மொழிதல், தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், விளக்கம் கூறுதல், ஒப்பீடு செய்தல், முடிவு காணல் முதலியன விளக்க உரைநடையின் செயற்பாங்கு எனலாம்.

எதை? யாருக்கு? எப்படி? எனும் இம்மூன்று வினாக்களுக்கும் தெளிவான விடைகாண வல்லவர்கள் விளக்க உரைநடையில் வெற்றி காண முடியும்.

கற்ற பொருள் கால அளவில் மறைந்தொழிவதற்குப் பொதுவாக இரண்டு வகையான காரணங்கள் பின்வரும் உரைநடைப் பகுதியில் கூறப்பட்டுள்ளன.

I. “சூழ்நிலையினின்றும் தூண்டுதல்கள் தொடர்ந்து மனிதன்மேல் மோதிக் கொண்டே இருக்கின்றன. அதன் காரணமாக அவன் பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறான். செயல்களில் திறன் அடைகிறான். நாளடைவில் ஒரு செயல் மற்றொரு செயலைப் பாதிக்கிறது. அதனால் அச்செயலுக்குரிய திறனும் குறைகிறது.

மனிதன் உயிர்வாழ அவனுள் பல விடாய்கள் (தாகங்கள்) உள்ளன. அவ்விடாய்களைப் பூர்த்தி செய்வதற்குரிய உடலுறுப்புகள் இருக்கின்றன. இவ்வுறுப்புக்கள் நுண்ணியவையும் மிகவும் பெரியவையுமாக உள்ளன. இவற்றின் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் கண்ணுக்குப் புலனாகா உயிரணுக்கள் மிகவும் இன்றியமையாதவை. ஒரு குறிப்பிட்ட வினாடியில் இவை நூற்றுக்கணக்கில் புதிதாக உற்பத்தியாகின்றன; அல்லது அழிகின்றன. உயிரணுக்கள் அழிவதன் காரணமாகவும், உயிரணுக்கள் புதிதாகத் தோன்றுவதன் காரணமாகவும் கற்றல் திறன் மாறுகிறது. மறதி இந்த இரண்டு காரணங்களினாலோ அல்லது இவற்றுள் ஒரு காரணத்தினாலோ ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது” என்று தா.ஏ.சண்முகம் உளவியல் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

II. “கார்ல் மார்க்ஸ்தான் முதன் முதலாக சாஸ்திரீய சோஷலிசம் ஒரு தத்துவமாக, நடைமுறையில் கொணரக்கூடிய ஒரு திட்டமாக வகுத்தவன். இதனாலேயே இவன் சோஷலிஸத்தின் பிதா என்று அழைக்கப்படுகிறான். இவனுடைய திட்டம் ‘சாஸ்திரிய சோஷலிஸம்’ என்றும் மற்றவர்களுடையது ‘உட்டோப்பியன் சோஷலிஸம்’ அதாவது கற்பனையில் மட்டுமே கண்டு மகிழக்கூடிய சோஷலிஸம் என்றும் முறையே அழைக்கப் பெறுகின்றன.

சாஸ்திரீய சோஷலிஸம் என்பதுவே பின்னர் மார்க்ஸீயம் என்றும் ‘கம்யூனிசம்’ என்றும் பல பெயர்களை அடைந்தது. இதுவும் மார்க்ஸின் பிற்காலத்தில் பல கிளைகளாகவும் பல கட்சிகளாகவும் பிரிந்திருக்கிறது.

சோஷலிஸத்தின் அடிப்படையான கோட்பாடுகள் மூன்று. அவை,

இந்த மூன்று கோட்பாடுகளைப் பொறுத்தமட்டில் எல்லா சோஷலிஸ்ட்டுகளும் ஒன்றுபட்டவர்களே. இவைகளை நடைமுறையில் கொண்டு வருகிறபோதுதான் கட்சி வேற்றுமைகள் தோன்றுகின்றன.”

இப்பகுதி வெ.சாமிநாத சர்மா எழுதிய அரசியல் வரலாறு என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட இரு பகுதிகளும் (I,II) எடுத்துக்கொண்ட பொருளை மிகத் தெளிவாக விளக்குகின்றன. முன்பகுதி உளவியல் கற்கும் உயர்மாணவர்களை நினைவில் கொண்டு எழுதப்பட்டது. பின்னைய பகுதி அரசியல் நெறிகளை அறிந்து கொள்ள அவாவும் பொது வாசகனை நினைவிற் கொண்டு எழுதப்பட்டது. இரண்டுமே, சொல்லும் பொருள் மனத்தில் எளிதில் பதியும் வண்ணம், ஒவ்வொன்றாகப் பகுத்துரைக்கின்றன. ஒன்று, இரண்டு, மூன்று எனக் கருத்துகளை நிரல்படத் தனித்தனியே கூறும்போது ஒவ்வொன்றும் படிப்போர் மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இது ஆசிரியர்க்கு இப்பகுப்பில் சொல்லப்படும் செய்தியில் இருக்கும் தெளிவையே காட்டுகிறது.

பல்வேறுபட்ட கருத்துகளை ஒருங்கு வைத்து ஆராய்ந்து முடிபு கூறுவதும் விளக்க உரைநடையின் பண்பு என்று முன்னர்க் கூறினோம். வரலாற்றறிஞர் ஒருவர் களப்பிரர் யார்? என்பது பற்றிய கருத்துகளை எங்ஙனம் ஆராய்ந்து தீர்ப்புக் கூறுகிறார் என்பதைக்கீழே காணுங்கள்.

“கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியருள் வலிகுன்றிய ஓரரசன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது, களப்பிரர் மரபைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அதனைக் கவர்ந்து கொண்டு அரசாளத் தொடங்கினான். அதனால், பாண்டியர் தொன்றுதொட்டு ஆட்சி புரிந்துவந்த தம் நாட்டை இழந்து பெருமை குறைந்து பாண்டி நாட்டில் ஓரிடத்தில் ஒடுங்கி வதிந்து வருவாராயினர். ஆகவே, அந்நாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் அங்கு உயிர் வாழ்ந்து கொண்டிருந்த பாண்டியர்களைப் பற்றிய செய்திகள் இந்நாளில் தெரியவில்லை. சங்க நூல்களில் களப்பிரர் என்ற பெயர் காணப்படாமையானும், வராகமிகிரர் என்பார் தென்னாட்டவரின் வரிசையில் களப்பிரரைக் கூறாமையானும் அன்னோர் பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு ஆதரித்துள்ளமையானும் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும், வடபுலத்தினின்றும் போந்த ஏதிலார் ஆவார் என்பதும் நன்கு தெளியப்படும். எனவே, களப்பிரர் தென்னிந்தியாவினரே என்னும் சில ஆராய்ச்சியாளரின் கொள்கை பொருந்தாமை காண்க. அன்றியும், தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடையதன்று. களப்பாள் என்ற சோணாட்டூரொன்றில் முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும், களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப்பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே, தமிழராகிய களப்பாளரும் ஏதிலாராகிய களப்பிரரும் ஒருவரே யாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. இதுகாறும் விளக்கியவற்றால் களப்பிரர் தமிழர் அல்லர் என்பது தேற்றம். ”இவ்வாறு டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் பாண்டியர் வரலாறு என்னும் நூலில் எழுதியுள்ளார்.

விளக்க உரைநடை, ஒன்றை ஆராய்ந்து முடிவு கூறுவதற்கு முன், ஆய்வுப் பொருளைப் பல வகைகளாகப் பிரிவினை செய்து அதன் அமைப்பு முறையைத் தெளிவாக எடுத்துக்காட்டும். இப்பகுப்பாய்வு விளக்கம் உரைநடை ஆசிரியரின் கூர்த்த சிந்தனையின் விளைவே என்பதை யாரும் மறுக்க முடியாது.

2.2.1விளக்க உரைநடையில் தருக்கம் விளக்க உரைநடையின் அடியிழையாக இருப்பது தருக்கம் (தர்க்கம்). தருக்கமாவது காரண – காரிய இயைபின் (அமைப்பின்)வழிச் செல்வது. காரணம் – காரியம் என்பன யாவை? காரணம் முன்நிற்பது ; காரியம் பின்னர் நிகழ்வது.

தருக்க நெறி சான்ற உரைநடைக்குச் சான்றாகப் பின்வருவனவற்றைக் காணலாம்.

சேனாவரையர் உரைநடை

சேனாவரையர் வடமொழி மரபைத் தழுவி உரை எழுதினார். அவ்வுரை செறிவும் திட்பமும் வாய்ந்ததோடு தர்க்க முறையிலும் அமைந்ததாகும்.

“இறப்பாவது தொழிலது கழிவு. நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை, எதிர்வாவது தொழில் பிறவாமை, தொழிலாவது, பொருளினது புடைபெயர்ச்சியாகலின் அஃது ஒரு கணம் நிற்பது அல்லது இரண்டு கணம் நில்லாமையின், நிகழ்ச்சி என்பது ஒன்று அதற்கு இல்லையாயினும், உண்டல், தின்றல் எனப் பல்தொழில் தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின் உண்ணாநின்றான். வாரா நின்றான் என நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று என்பது” (தொல்காப்பியம், சொல். வினையியல்)

மேலேயுள்ள சேனாவரையரது உரைநடை அறிவுச் செறிவும் தர்க்க – நியாய சாஸ்திரங்களின் நுண்மையும் கொண்டது. இவரது வடமொழிப் புலமை தமிழ்ப் புலமை போல் சிறப்புமிக்கது. இவரது உரைநடையின் செறிவு, நுண்மை, நயம் கருதியே ‘சொல்லுக்குச் சேனாவரையம்’ என்கிற வழக்கு நிலைபெற்றது.

சிவஞான முனிவரின் உரைநடை

சேனாவரையர் உரைநடையின் தாக்கத்தைச் சிவஞான முனிவரின் மாபாடியத்தில் காணலாம். சிவஞானபோதம் என்னும் நூலுக்குச் சிவஞான முனிவர் எழுதிய பேருரை மாபாடியம் என்றுகுறிப்பிடப்படுகிறது.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். வடமொழி, தமிழ் இவ்விரண்டிலும் புலமையுடையவர். சிவஞானபோத மாபாடியம், இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திர விருத்தி முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார். மேலை நாட்டார் பேச்சுவழக்கையொட்டி உரைநடை நூல்கள் எழுதிய காலத்தில் சிவஞானமுனிவர் தூய செந்தமிழ் நடையில் தர்க்க முறையில் உயர்ந்தநடையில் எழுதியது இங்குக் குறிப்பிடத்தக்கது.

“அதிகாரம் – அதிகரித்தல். அஃது இரு வகைப்படும். அவற்றுள் ஒன்று வேந்தன் இருந்துழி இருந்து தன்நிலம் முழுவதும் தன்னாணையின் நடக்கச் செய்வது போல, சொல் நின்றுழி நின்று பலசூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன் பொருளே நுதலிவரச் செய்வது. ஒன்று சென்று நடாத்தும் தண்டத்தலைவர் போல ஓரிடத்து நின்றசொல் பல சூத்திரங்களோடும் சென்று இயைந்து தன் பொருளைப்பயப்பிப்பது. இவற்றிற்கு முறையே வடநூலார் யதோத்தேசபக்கம் எனவும், காரிய கால பக்கம் எனவும் கூறுப. இது சேனாவரையர் உரையானும் உணர்க.” (நன்னூல், விருத்தியுரை)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிவஞான முனிவரின் உரைநடை நுட்பமான பொருளைத் தெளிவாக விளக்கமாகத் தர்க்க ரீதியாக ஆராய்ந்து கூறும் தன்மையுடையது என்பதை உணரலாம்.

2.3வருணனை உரைநடை

புலன் உணர்வு மூலம் ஏற்படும் அனுபவங்களை வருணித்துக்காட்டும் உரைநடையை வருணனை உரைநடை (Descriptive prose) என்பர். இதைத் தனியே கொள்ளாமல் கருத்துரைக்கும் உரைநடையிலேயே சிலர் அடக்கிக் காட்டுவதும் உண்டு. மனிதர்களையும், பொருள்களையும் இவை வருணிக்கும். படிப்போரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் ஆற்றல் இதற்கு உண்டு.

எழுதுவோர் ஒரு பொருளையோ மனிதரையோ இடத்தையோ வருணிக்கும் நிலையில் அவ்வகை உரைநடையை வருணனைஉரைநடை என அறிஞர்கள் பாகுபாடு செய்வர். புனைகதைகளிலும், பயண நூல்களிலும், கட்டுரைகளிலும் வருணனை பேரளவு இடம்பெறும். விளக்க உரைநடையிலும் வருணனைக்கு இடம் உண்டு. வருணனை எல்லா வகையான உரைநடையிலும் உண்டு.

2.3.1வருணனையின் வகைகள் புலன்களால் உணர்வனவற்றை அல்லது புலன்களின் வாயிலாக உணரும் புறக்காட்சிகளைச் சொற்களில் மொழிபெயர்த்துக் காட்டுவதே வருணனை ஆகும். நாம் ஒரு பொருளை நேரே பார்த்து வருணிக்கலாம்; பிறர் வாயிலாகக் கேட்டும் வருணிக்கலாம். நோக்குவோன் அல்லது கேட்போன், நோக்கப்படும் பொருள் அல்லது கேட்கப்படும் பொருள் ஆகிய இரண்டே வருணனையின் அடிப்படை. வருணனை உலகப் பொருள்களின் தோற்றத்தோடு தொடர்புடையது என்று முன்னர்க் கூறினோம். பொருள் எவ்வாறு காட்சி தருகிறது என்பதையும், அது எத்தகைய மனப்பதிவுகளை நம்மில் உருவாக்குகிறது என்பதையும் வருணனை உணர்த்துகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தின் வகை தெரிவோனே வருணனையில் வெற்றி பெற முடியும்.

நோக்குவோனுக்கும் நோக்கப்படும் பொருளுக்கும் உள்ள உறவை ஒட்டி, புறநிலை நோக்கில் அமையும் வருணனை, அகநிலை நோக்கில் அமையும் வருணனை என வருணனை இருவகைப்படும்.

புறநிலை நோக்கில் அமையும் வருணனை

புறநிலை நோக்கில் அமையும் வருணனையில் நாம் பொருளைக் காண்பதில்லை. உள்ளத்தால் உணர்கிறோம். பின்வரும் வருணனைகளை ஒப்பு நோக்கிக் காண்க.

“கிழக்கே பார்த்தான் ஒன்றுமில்லை. மேற்கே பார்த்தான். கண்ணெட்டிய தொலைவரை, அடைத்த கடைகள், வெறிச்சிட்ட தெருவீதி, வெள்ளை மெழுகியது மாதிரி, வெயில் கானல் ஜ்வாலை விட்டு ஓவென்று கொளுத்துகிறது. பட்டப்பகல் வேளையில் சாலைக்கடைவீதியை இப்படிக் காண்பது அபூர்வம். எலெக்ட்ரிக் கம்பிகளில் காக்கைகள் அங்கிங்காக அமர்ந்திருக்கின்றன. பூக்கடை ஓரத்துக் குப்பைக் குவியல்களில் நாலைந்து தொட்டிப் பயல்கள் எதையோ கிளறிக் கொண்டிருக்கிறார்கள். ஓடை ஓரமாக ஒரு நாய் ஓடிப்போகிறது. பிளஷர் கார் போகிறது. டிரான்ஸ்போர்ட் பஸ் ஒன்றையும் காணவில்லை. சக்கரத்திற்கு டயர்போட்ட கட்டை வண்டிகள், அங்கிங்காக வெறுமனே கிடக்கின்றன. சரக்கு இறக்க முடியாத பென்ஸ் லாரியொன்று தார்ப்பாயை மூடிக்கொண்டு வேகமாகப் போயிற்று. கப்பென்று புழுதி புகையாக இறைத்தது.”

மேலே குறிப்பிட்ட பகுதி ஆ.மாதவனின் பறிமுதல் என்ற நாவலில் இடம் பெற்றுள்ளது. இவ்வருணனையில் காட்சியை உள்ளவாறே அறிவிக்கும் முயற்சி தெரிகிறது. நோக்குவோன் பொருளோடு ஒன்றிக்கலந்து விடவில்லை.

நிலைநோக்கு வார்ப்பு வருணனை

நோக்குவோன் ஏதோ ஒரு நிலைத்த இடத்தில் இருந்து கொண்டுதன் பார்வையை மட்டும் மெல்ல மெல்ல முற்கூறியவாறு ஓட்டி, பார்வையில் பட்டவற்றையெல்லாம் வருணிப்பது ஒரு முறை. இதனை நிலைநோக்கு வார்ப்பு வருணனை எனலாம்.

இராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம் என்ற நாவலின் ஒரு பகுதி பின்வருமாறு :

“அந்த வீட்டின் முன்னறை அது. நான்கு பழைய இரும்புக்கம்பி நாற்காலிகளின் நடுவே ஒரு வட்டமேஜை. வட்ட மேஜைமீது வட்ட வட்டமாக ரோஜாப்பூக்களைப் பின்னி இணைத்த லேசு விரிப்பு, வீட்டுப் பெண்மணிகளின் கைத்திறனைக் காட்டுகிறது. கள்ளிப்பெட்டி அலமாரிகள் இரண்டு எதிரும் புதிருமாகச் சுவர்களில் காட்சி தருகின்றன. அவற்றில் புத்தகங்கள் மராத்தியிலும், ஆங்கிலத்திலும், போர்த்துக்கீசியத்திலும் தென்படுகின்றன. சுவரோரமாக ஒரு பழைய கடைசல் பிடித்த மரமேசையில் ஆசிரியர் வீடு என்பதைப் பறைசாற்றிக் கொண்டு அடுக்கடுக்காக நோட்டுக்கள் வீற்றிருக்கின்றன, இவை தவிர வெள்ளை மங்கிய சுவர்களில் அங்கு வருபவரின் கண்ணைக் கவருபவை வலை அட்டையில் பூநூல் வேலை செய்த சித்திரங்கள்தாம். யானை ஒன்று சிவலிங்கத்துக்குப் பூச்சூட்டுகிறது. ஒரு சித்திரத்தில் குன்றொன்றில் துளசியம்மன் எழுந்தருளியிருக்கிறாள். மற்றொரு படத்தில் ஒரு பெரிய மாளிகை காணப்பெறுகிறது. ஜிகினாக் கொடிகளாலும் பொட்டுக்களாலும் அழகுறத் தைக்கப் பெற்ற கருநீல வெல்வெட் பின்னணியில் குழலூதும் கண்ணன் ராதையுடன் காட்சி தருகிறான். ஆர்மோனியத்தில் இசை எழுப்பிய விரல்களே இந்தப் படங்களையெல்லாம் உருவாக்கியிருக்குமோ என்று எண்ணிக் கொண்டே ஒரு நாற்காலியில், ரகோத்தமரின் முன் மாதவன் அமர்ந்து கொள்கிறான்.”

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வருணனையில் மாதவன் என்பான் அறையின் ஓரிடத்தில் நின்று கொண்டே பார்வையை மட்டும் ஓட்டுகிறான். எழுதும் ஆசிரியை மாதவனின் நோக்கு நிலையில்கண்டே, ஒவ்வொன்றையும் வருணிக்கிறார். இவ்வருணனையைப்படிக்கும் நிலையில் நோக்குவோரின் இருப்புநிலையை நாம் சூசகமாக உணர்ந்து கொள்கிறோம்.

சில வேளைகளில் நோக்குவோன் நிலையாக ஓரிடத்தில் இல்லாமல் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இயங்கிக் கொண்டே வருணிக்கலாம். இவ்வாறான வருணனையை இயங்குநிலை வார்ப்பு (pattern from moving point) என்பர்.

சார்வுநிலை வருணனை

பார்க்கப்படும் பொருள் ஒன்றானாலும் பார்ப்போன் ஆர்வநிலை காரணமாக, சார்வுநிலை காரணமாகக் காட்சி வேறுபடுகிறது. இங்ஙனம் நோக்குவோனின் குறிக்கோளுக்கு ஏற்ப அமையும் வருணனையைச்சார்வுநிலை வருணனை அல்லது ஆர்வநிலை வருணனை எனலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள வருணனைக்குப் பின்வரும் உரைநடைப் பகுதி பொருத்தமாக உள்ளது.

“இக்கோயில் (தஞ்சைப் பெரிய கோயில்) சிவகங்கைச் சிறுகோட்டைக்குள் உள்ளது. முதற்கோபுரம் கடந்ததும் இராசராசன் கட்டிய மற்றொரு அகன்ற கோபுரம் உண்டு. உள்நுழைந்ததும், கருங்கல் செங்கற்களால் பரப்பப்பெற்ற சுமார் 500 அடி நீளமும் 250 அடி அகலமும் உள்ள ஒரு பரந்த போர்வை போன்ற வெளிமுன் மேடை இருக்கின்றது. அதன் மீது ஒரே கல்லாலான நந்தியும் அதனைப் பாதுகாக்கக் கட்டிய நாயக்கர் மண்டபமும் உள்ளன. எதிரில் இறைவன் கோவில் விமானமும் அடுத்து அம்மன் திருக்கோவிலும் உள. உட்கோயில் இறையறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் தியாகராசர் சந்நிதியுள்ள தாபன மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்ற ஆறு பகுதிகளை உடையது. கோவிலிலுள்ள ஏழு வாயில்களிலும் 18 அடி உயரமும், 8 அடி அகலமும் உள்ள 14 வாயிற்காவலர் சிலைகள் உள.”

இந்தச் சார்வு நிலை வருணனை டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய ‘சோழர் வரலாறு’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

வருணனையை அமைக்கும் நிலையில் அனுபவம் குறைந்த ஆசிரியர்கள் ஏராளமான பெயரடைச் சொற்களைப் (adjectives) பெய்து எழுதுவர். பெயரடைகளை எவ்வண்ணம் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம் ஆகும்.

2.4 எடுத்துரை உரைநடை

கதை சொல்லும் எல்லா நூல்களும் இவ்வகையில் அடங்கும். வேறு எந்த வகையான உரைநடையையும்விட மக்கள் விரும்பிப் படிப்பது இதுவே. வெறும் நிகழ்ச்சிகளை ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கிக்காட்டி அச்சத்தையும் புதிரையும் ஊட்டும் துப்பறியும்கதை முதல், பாத்திரப் படைப்பில் சிறந்து நிற்கும் இலக்கியத் தகவுடைய புனைகதை இலக்கியம் வரை எல்லாமே எடுத்துரை உரைநடையில் அமைந்தவையே. வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு போன்றன இவ்வகையில் அடங்கும்.

ஒரு செயல் பற்றியோ, வாழ்வின் இயக்கம் பற்றியோ விவரிப்பது எடுத்துரை உரைநடை (Narrative prose) . ‘என்ன நடந்தது?’ என்னும் வினாவுக்கு இது விடை தரும். சற்றே எளிமைப்படுத்திக் கூறினால் எடுத்துரை உரைநடை என்பது கதை கூறும் உரைநடையே ஆகும்.

வருணனைக்கும் எடுத்துரைத்தலுக்கும் வேறுபாடு உண்டு. ஒருபொருள் குறித்த தருணத்தில் எவ்வாறு காட்சி தருகிறது என்றுகாட்டும் வகையில் எழுதப்படுவது வருணனை. அது வரையப்பட்ட உருவப்படம் போன்றது. ‘கிளிக்’கென எடுக்கப்பட்ட புகைப்படக்காட்சி போன்றது. தன்னளவில் இயக்கமின்றி நிற்பது. எடுத்துரை என்பதோ ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்தை ஒத்தது. மாறிக் கொண்டே இருக்கும் இயக்கநிலையைச் சித்திரிப்பது. எடுத்துரை உரைநடை கதையைப் பற்றிச் சொல்வதன்று; கதையையே சொல்வது.

எடுத்துரையில் இரு வார்ப்புகள் உண்டு. நடந்த நிகழ்ச்சிகளை அவை எவ்வண்ணம் நிகழ்ந்தனவோ அதே வரிசையில் நிரல்படச் சொல்வது ஒருமுறை. நிகழ்ச்சிகளின் வரிசை முறையைச் சற்றே முன் பின்னாக மாற்றி எழுதுவது மற்றொரு முறை.

எடுத்துரை உரைநடை நிகழ்ச்சிகளை நிஜ அனுபவ உலகமாய்ப்படைக்க வேண்டியிருப்பதால் உணர்ச்சி மயமான கட்டங்களை நாடகப் போக்கில் நேரே காண்பது போல் சித்திரித்துச் செல்லும். பின்வரும் காட்சியைக் காண்க.

“தன்னை நோக்கி வந்த மாதவனை ஜெயின் அப்படியே சிறிது நேரம் உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். பிறகு பெரியதாகச் சிரிக்க ஆரம்பித்தார்.

நீ ஒரு பசுங்கொம்பு… போரில் முதிர்ந்த காளையுடன் உன்னால் போரிட முடியுமா?… அம்மா உன்னைப் பால் சாப்பிடக் கூப்பிடுகிறாள்… போ… போ.”

அகர்வால் மாதவனை ஒதுங்கி இருக்கும்படி சைகை செய்தான்.

மாதவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவருக்குத் தன்மேல் ஏன் இவ்வளவு கோபம்? பூமாவைச் சேர்ந்த எல்லோருமே அவர் எதிரிகளா? திடீரென்று அவனுக்குப் பூமாவின்மேல் ஆத்திரமாக வந்தது. இவர் இப்படி இருப்பதற்கு இவள்தான் காரணம் ! அவன் ஜெயினின் மனைவியை நோக்கினான். அவள் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல், ஆடாமல் அசையாமல் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜெயின் ஆப்பிள் நறுக்குவதற்காகப் பக்கத்தில் வைத்திருந்த கத்தியை மாதவனிடம் விட்டெறிந்தார். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. உடனே அவர் அகர்வால் பையிலிருந்த பேனாவை எடுத்துக் கொண்டார். பேனாவைக் கத்தி போல் கழற்றினார்.

“கீழே வைத்திருக்கும் கத்தியை எடு. . . சண்டைக்குத் தயாரா?” என்று கேட்டுக் கொண்டே கட்டிலிலிருந்து கீழே இறங்கினார்.

மாதவன் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தான்.

இப்பகுதி இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால் என்ற பகுதியிலுள்ள உரைநடையாகும். இக்கதையில் வரும் ஜெயின்‘ஸீஷோப் ரென்யா’ (Schizophrenia) என்னும் மனவியாதியால் பீடிக்கப்பட்டவர். அடங்கி ஒடுங்கி இருந்த அவரது அமுக்கப்பட்ட மனோவிகாரங்கள் பீறிட்டெழுந்த நிலையில் தன்னைப் பிறருக்குக்காட்டிக் கொள்ள எண்ணித் தாறுமாறாக நடந்து கொள்கிறார். அவரது இப்போதைய அவல நிலையைக் காட்சியாகச் சித்திரித்தால்தான் படிப்போரின் மனத்தில் அவர்பால் இரக்கத்தை எழுப்ப முடியும்.

எடுத்துரை உரைநடை ஏனைய உரைநடை வகையும் கலந்தே வரும் தன்மையுடையது. ஒரே செய்தியை விளக்க உரைநடையாகவும் எழுதலாம்; எடுத்துரை உரைநடையாகவும் எழுதலாம். கீழே காட்டியிருக்கும் பகுதியை ஒப்பிட்டுக் காண்க. ஓர் உழவன் தனக்கேற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் தன்னிடமிருந்த நிலத்தைப் பக்கத்துத் தெருவிலுள்ள பணக்காரனிடத்தில் விற்று விட்டான் என்பதே சொல்லப்படும் செய்தி.

“அவர் ஓர் ஏழை விவசாயி. பெயர் வடிவேலுத்தேவர். தன் மூத்தபிள்ளையின் திருமணத்திற்காகக் கடனாக வாங்கியிருந்த இரண்டாயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்சிரமப்பட்டார். கடன் கொடுத்தவர் நெருக்கினார். எனவே, தன்பிதுரார்ஜித சொத்தாக இருந்த இரண்டுமா நிலத்தை விற்று விடலாம் என்று முடிவு செய்தார். அடுத்த தெருக்காரர் ஒருவரிடம் விலை பேசிவிற்றுக் கடனை அடைத்தார்.”

இது விளக்க உரைநடை. ஒரு செய்தியை விளக்கிச் சொல்வதோடு இதன் பணி முடிந்து விடுகிறது. இதே செய்தியை எடுத்துரை உரைநடை எப்படிச் சொல்லும் தெரியுமா?

“வடிவேலுத்தேவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கவலையால் உருத்தெரியாது இளைத்து விட்டார். கடன்காரர்கள் எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்ற பயமே அவரைத் தடுமாறச்செய்தது. எது எப்படி இருந்தாலும் போன வருஷம் மூத்த மகனின் கல்யாணத்திற்காக வாங்கியிருந்த ரூபாய் இரண்டாயிரத்தையும் நான்கு நாட்களில் செலுத்தியாக வேண்டும். ‘கணக்கைத் தீர்த்துடுங்க, இல்லே, கோர்ட்டுப்படி ஏறுறதின்னாலும் ஏறுங்க…’ என்று செட்டியார்எச்சரித்துவிட்டுப் போய்விட்டார்.

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்ட தேவர் திண்ணையை விட்டு எழுந்தார். அவர் மானஸ்தர். இத்தனை வருஷம் எப்படியோ வாழ்ந்துட்டு இந்த வயதுக்கு மேலே கோர்ட்படி ஏறுவதா?. . .

வீட்டுக்கு எதிரே இருந்த இரு துண்டு நிலம் அவர் பார்வையில் பட்டது.

தந்தையின் வழியாக வந்த பிதுரார்ஜித சொத்து அது. இருபோகம் விளையும். நல்ல மண். பொன் போட்டால் பொன்னை எடுக்கலாம் என்று ஊரில் பேசுவார்கள்.

‘நிலத்தை விற்றுத்தான் கடனை அடைக்க வேண்டும்’ என்ற முடிவுக்குத் தேவர் வந்துவிட்டார். வேறு வழி. . . ? அப்போது தான் உலகநாதம் அங்கு வந்தார். பக்கத்துத் தெருக்காரர். அவருக்கு புகையிலை வியாபாரம். உலகநாதம் ஒரு மாதிரியானவர். ‘ஊரைஅடிச்சி உலையிலே போடறவன்’ என்கிற பேர் அவர் தலையெடுத்த காலத்திலிருந்தே அவருக்கு உண்டு. நிலம் வாங்குவதற்கு என்று பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வேறு யார் அலைகிறார்கள்? அவரை விட்டால் வேறு ஆளில்லை.

உலகநாதத்தைப் பார்த்ததும் கும்பிடப் போன தெய்வம் குறுக்கேவந்ததுபோல் தேவர் மகிழ்ந்தார். மெல்ல விஷயத்திற்குப் பிள்ளையார்சுழி போட்டார். மீனே வலிய வந்து அலகில் மாட்டிக் கொள்ளும்போது கொக்கு சும்மா விடுமா?

பேச்சு சீக்கிரமே முடிந்து விட்டது.

அடுத்த வாரமே ரிஜிஸ்ட்ரேஷனை வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.

இரண்டு மா நிலமும் இரண்டாயிரம் ரூபாயாக மாறி வடிவேலுத்தேவரின் கையை நிறைத்தது.”

எடுத்துரை உரைநடை செய்தியை வாளாசொல்லாமல், அந்தநிகழ்ச்சி நம் முன்னே நடப்பது போலச் சித்திரிக்கிறது. முன்னேகண்ட விளக்க உரைநடையில் செய்தியை மட்டுமே அறிந்தோம். இதிலோ செய்தி மட்டுமன்றி, அதன் விளைவான அனுபவமும்நமக்குக் கிட்டுகிறது. எடுத்துரை உரைநடையில் நாம் பெறுகிறமிகப்பெரிய இலாபம் இந்த அனுபவமே. அனுபவங்களை யாராவது இழக்க விரும்புவார்களா? இவ்வாறு எடுத்துரை உரைநடைஅமைந்துள்ளது.

2.5நாடக உரைநடை

நாடகத்தில் இடம்பெறும் பாத்திர உரையாடல்கள், இடையிடையே நாடக ஆசிரியர் தரும் மேடை விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றை நாடக உரைநடை (Dramatic prose) எனலாம். நாடக உரைநடை இயல்பு நவிற்சிப் பாங்கு உடையதாய் இருக்கும். பேச்சு வழக்கை ஒட்டியே அமையும்.

நாடகம் என்பது ஆடலுடன் பாடலும் கலந்த ஒன்றாகும். தமிழ்நாட்டில் பழங்காலத்திலிருந்தே நாடகக் கலை இருந்து வந்திருக்கிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள முதல் உரைநடை நாடகம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதாகும். காசிவிசுவநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் முதலில் வெளிவந்த உரைநடை நாடகமாகும். உரைநடை நாடகங்களைச் சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண நாடகங்கள் எனப் பல வகையாகப் பிரிக்கலாம். உரைநடை நாடகத்தின் தந்தை எனப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரைச் சொல்லலாம். செய்யுள் வடிவிலமைந்த நாடகத்தை முழுமையாக உரைநடையில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். ஏறத்தாழ நூறு நாடகங்களுக்கு மேல் உரைநடையில் எழுதி, சிலவற்றில் நடிக்கவும் செய்தவர். நாடகங்களில் துன்பவியல் முடிவு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவரேயாவர்.

சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், சுந்தரம் பிள்ளை ஆகிய நால்வரையும் புதுமுறை அமைப்புத் தமிழ்நாடகத்தின் முன்னோடிகளாகக் கருதலாம்.

நால்வருடைய நடையும் தனித்தனிச் சிறப்புடையதாகக் காணப்படுகிறது. கற்றோர் நடையில் சம்பந்த முதலியாரும், பாமரர்நடையில் சங்கரதாஸ் சுவாமிகளும், பண்டிதர் நடையில் பரிதிமாற்கலைஞரும் நாடகங்களை எழுதியுள்ளனர். கவிதை நடையில் சுந்தரம்பிள்ளையும் நாடகத்தை எழுதியுள்ளார். இவர்கள் தமிழ்நாடகவுலகைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் பல்வகைப்பொலிவுகளுடன் புதுமையுறச் செய்துள்ளனர்.

2.5.1சங்கரதாஸ் சுவாமிகள் நடை (1867-1922) இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்குத் தொண்டாற்றியவர் இவர். நாடக சபை ஒன்று ஏற்படுத்தித் தமிழக முழுவதும் நாடகங்களை நடத்தினார். அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, கோவலன் சரித்திரம், சிந்தாமணி, சதி அனுசூயா, பிரகலாதன், சீமந்தினி, சிறுத்தொண்டன், வள்ளித்திருமணம், சத்தியவான் சாவித்திரி, சதி சுலோசனா, மிருச்சகடிகா, ரோமியோ ஜூலியட் முதலியன அவர் படைத்த முக்கிய நாடகங்கள் ஆகும். இவற்றுள் பல புராண நாடகங்கள், சில மொழிபெயர்ப்பு நாடகங்கள். அவர் கால நாடகங்கள் செய்யுளும் உரைநடையும் கலந்து எழுதப்பட்டனவாகும். உரையாடல் பகுதிகள் பேச்சுத் தமிழில் அமைந்திருக்கும். சில இடங்களில் உரைநடைப் பகுதிகள் நீண்ட வாக்கியங்களால் அமைந்திருக்கும். அக்காலத் தமிழைப் போன்று இவரது நடையும் வடமொழிக் கலப்பு மிகுந்ததாகக் காணப்படுகின்றது.

2.5.2பம்மல் சம்பந்த முதலியார் நடை (1873-1964) இவர் அரை நூற்றாண்டுக்காலம் தமது வாழ்வை நாடகத்துறைக்கே அர்ப்பணித்தவர். நாடகத் தொழிலுக்கு இருந்து வந்த இழிநிலையை மாற்றியமைத்தவர். 1891ஆம் ஆண்டு சென்னையில் சுகுண விலாசசபா என்ற நாடக அமைப்பை ஏற்படுத்தினார். அவரே எழுதிமுதன்முதலில் நடித்த நாடகம் புஷ்பவல்லி என்ற சமூக நாடகமாகும்.தொண்ணூறு நாடகங்களை எழுதியுள்ளார். தமிழ் நாடக உலகிற்கு இவரைப்போல் தொண்டு செய்தவர் எவருமிலர். இவரை நாடகத்தந்தை எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமாகும். ரத்னாவளி, மனோகரா, கள்வர் தலைவன், இரண்டு நண்பர்கள், வேதாள உலகம் இவரது படைப்புத் திறனைக் காட்டும் நாடகங்களாகும். சபாபதி நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த படைப்பாகும். ஆங்கில நாடகங்களையும் வடமொழி நாடகங்களையும் மொழிபெயர்த்தார். நாடகத் துறையைப் பற்றியே நாடகத் தமிழ், நாடக மேடை நினைவுகள், நாடகக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்ற நூல்களையும் படைத்தார்.

மனோகரா நாடகத்தின் ஒரு பகுதி :

விஜயா: (சிரிப்புடன்) இல்லை, ‘பிராண நாதா வாரும்.’

மனோஹரன்: எங்கே வருவது?

விஜயா: அதோ பாரும், ஆங்காங்குப் பெண்கள் தம் காதலருடன் நீர் நிரம்பிய தடாகங்களிலிறங்கி ஒருவர் மீதொருவர் தண்ணீர் வாரி இறைத்து விளையாடியும் நிலவை வியந்து புஷ்பம் கமழ சோலைகளிலுலாவியும் புஷ்பச் செண்டுகளால் ஒருவரையொருவர் அடித்தும் புஷ்ப மாலைகளால் ஒருவரையொருவர் கட்டியிழுத்தும், மகரந்தம் தூவியும், மல்லிகை மலர்களைச் சூடியும், ஒருவர் கண்ணை ஒருவர் பொத்தியும் இன்னும் இப்படி பற்பல விதமாகக் காலங்கழிக்கிறார்களே, நாமும் போய் விளையாடுவோம்.

மனோஹரன்: கண்ணே, என் மனம் ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது. இப்பொழுது வினோதத்தின் மீது செல்லவில்லை.

விஜயா: உம் ! உம் ! நான் எப்பொழுது அழைத்தாலும் இப்படித்தானே ! உம் ! உம் !

மனோகரன் நாடகத்தில் உரைநடை இவ்வாறு அமைந்துள்ளது.

தூங்கிக் கிடந்த தமிழ்நாடக அரங்கை விழிப்புறச் செய்து உலகநாடக வானில் ஒளியோடு விளங்க வழிகண்ட பெருமை சம்பந்தமுதலியாரையே சாரும். சம்பந்த முதலியார் காலத்திலிருந்து தமிழ்நாடக மேடையானது ஏற்றத்தாழ்வு அகன்ற நிலையில் அனைவருக்கும் இன்பம் அளிக்கும் கலைக்கூடமாகவும் அறிவு புகட்டும் கலாசாலையாகவும் சமூகத்தைச் சீர்திருத்தும் நல்வழி மன்றமாகவும் விளங்கியது. இவரது நாடகத் தொண்டைப் பாராட்டி மத்திய அரசுபத்ம பூஷண் பட்டமளித்துச் சிறப்பித்தது. சங்கரதாஸ் சுவாமிகள்பழைய மரபையொட்டிப் பாடலும், உரைநடையும் கலந்து எழுதினார். சம்பந்த முதலியார் மேலைநாட்டு முறையைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களை இயற்றினார். சம்பந்த முதலியார் நாடக நடை கற்றோர்நடையாக இருப்பினும் எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது. எளிய வாக்கியங்களைக் கையாண்டு உரைநடையில் எழுதியுள்ளார்.

2.5.3சூரிய நாராயண சாஸ்திரியார் நடை (1871-1903) பரிதிமாற் கலைஞர் என்று புனைபெயர் பூண்ட சூரிய நாராயணசாஸ்திரியார் நாடக இலக்கணம் குறித்து நாடகவியல் எனும் நூலையும் சில நாடகங்களையும் இயற்றினார். ஆனால், இவை நடிப்பதற்குரிய நாடகங்கள் அல்ல.

இவருடைய நாடகங்கள் அருஞ்சொற்கள் மிகுந்த தமிழ் நடையில் அமைந்துள்ளன. உரைநடை, பாட்டுக் கலந்துள்ள உரையாடல்நடையில் எழுதப்பட்டுள்ளன. மொழிநடை சற்றுக் கடினமாக இருப்பதனால் கற்றவர்களே எளிதில் பரிதிமாற் கலைஞரின்நாடகங்களை படித்துப் புரிந்து கொள்ள முடியும். இவற்றின் நடைசற்றுக் கடினமாக இருப்பதுடன் வடமொழிச் சொல் கலப்பும்அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2.5.4சாமிநாத சர்மாவின் நடை இவர் பாணபுரத்து வீரன் என்ற தேசிய நாடகம் ஒன்றை எழுதியுள்ளார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துடன் நமது நாடு நடத்திய போராட்டத்தை நிழற்படம் போல் காட்டிய நாடகமாகும். நல்ல தமிழ் நடையில் தேசப்பற்றை வளர்க்கும் விதத்தில் அமைந்த நாடகமாகும்.

2.5.5அறிஞர் அண்ணாவின் நடை (1909-1969) தமிழில் அறிஞர் அண்ணாவின் திறமை பாயாத துறைகளில்லை என்றுரைக்கும் வண்ணம் இலக்கியத்தின் பற்பல துறைகளிலும் படைப்புக்களைப் படைத்துள்ளார். சமூகச் சீர்திருத்தத்தோடு அரசியலையும் இணைத்துப் புதியதோர் உலகம் செய்வோம், கெட்டபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்ற பாவேந்தரின் பாடலுக்குச் செயல் வடிவங்கள்தான் அறிஞர் அண்ணாவின் நாடகங்கள். வேலைக்காரி, ஓர் இரவு, கண்ணீர்த்துளி, சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி முதலான நாடகங்கள் சிறந்த நோக்குடன் இயற்றப்பட்டவை. அண்ணாவின் நாடகங்கள் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக் குரலாகவும் புதிய எண்ணத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுவனவாகவும் உள்ளன. ‘நாடக அரங்குகள் பாமர மக்களின் பல்கலைக்கழகம்’ என்ற கவிக்குயில் சரோஜினிதேவியின் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக, நாடகங்களை எழுதிப் பாமர மக்களிடையே உலவச் செய்தவர். அண்ணாவால் நாடகத்துறை மறுமலர்ச்சி பெற்றதெனின் மிகையாகாது.

பழந்தமிழ்ச் சொற்களைக் கையாண்டு, உரைநடைக்குப் புத்துயிரூட்டினார். புதிய சொல்லாக்கங்களை அமைத்தார். அண்ணாவின் மேடைப்பேச்சு, தம்பிக்குக் கடிதம் போன்றவைகளெல்லாம் பெரும்பாலும் பேச்சு மொழியிலே அமைந்திருந்தன. அண்ணாவின் நடையில் கிப்பனுடைய ஆங்கில மொழித்தாக்கமும் இங்கர்ஸாலின் தாக்கமும் காணலாம். அவர்களது நடையில் ‘பேலன்ஸ் ஸ்ட்ரக்சர்’ அருமையாகக் கையாளப்பட்டுள்ளது. அதை அண்ணா தமிழில் கையாள ஆரம்பித்த போது தமிழுக்கு ஒரு புதிய நடை கிடைத்தது என்பர். அண்ணாவின் மொழிநடையில் புலவர் தமிழின் செல்வாக்கும், பேச்சுத் தமிழின் செல்வாக்கும் அவர் சார்ந்த இயக்கத்தில் அவரின் தனி ஆற்றலால் உருவாகிய புதிய கூறுகளும் அமைந்துள்ளன என, அண்ணாவின் மொழிநடையை ஆராய்ந்த பேராசிரியர் ம.செ.ரபிசிங் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. எதுகை, மோனை, அடுக்குமொழி, உவமை, உருவகம், ஓசை நயம், பழமொழி, மேற்கோள் போன்றவற்றைத் தமது நடையில் பயன்படுத்தி நடையை வளம்பெறச் செய்தார் எனக்கூறலாம்.

காதல் ஜோதி நாடகத்திலிருந்து ஒரு பகுதி.

“விழாத்தலைவர் : மணமக்களே ! பெரியோர்களே ! நண்பர்களே ! இந்தத் திருமண விழாவுக்கு என்னைத் தலைவனாக இருக்கும்படி அழைத்தார்கள். மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன். . . கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையான காட்சி இது. கலப்புத் திருமணம். விதவைக்கு மறுமணம். காலப்போக்கை உணர்ந்து அறிவுக்குப் பொருத்தமான முறையில் நடத்தப்பட்ட காதல் மணம். அம்மி மிதித்து அரசாணைக்கால் வைத்து அக்னி சாட்சியாக நடத்தப்பட்டது தோழியர் சுகுணாவின் திருமணம்.”

இவ்வாறு அறிஞர் அண்ணாவின் நடை, தமிழ் உரைநடைவரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் எழுத்து நடையிலும்பேச்சு நடையிலும் அண்ணா சகாப்தம் என்று அழைக்கப்படும்அளவுக்கு ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கிவிட்டுச் சென்றார்.

அறிஞர் அண்ணா நாடகங்களில் கையாண்ட உரைநடைபுதுமையானது. சிந்தனையைக் கிளறுவது. நாடகம் எழுதுவதற்குப்பழகு தமிழைக் கையாண்டார். பழகு தமிழைப் பயன்படுத்திப்பைந்தமிழுக்கு உயர்வையும் சிறப்பையும் கூட்டினார். சுருக்கமாகக்கூறின் தமிழுக்கு அவர் ஒரு புது நடை தந்தார். அண்ணாவின் எழுத்தால் தமிழ் உரைநடை புதிய உயிரோட்டம் பெற்று விளங்குகிறது எனலாம்.

2.6சிந்தனை உரைநடை

எழுதுவோனின் சொந்த ஆளுமை முனைப்பாகத் தெரியும் வகையில் எழுதப்படுவது சிந்தனை உரைநடை (Contemplativeprose). தன்னுணர்ச்சிப் பாங்கான கட்டுரைகள், ஆன்மிக அனுபவங்களை உணர்த்தும் கட்டுரைகள் முதலியன இவ்வகையில் அடங்கும். (சிலர் சிந்தனை உரைநடையை ‘வருணனை’ உரைநடையாகக் கொண்டு ஒன்றாகவே அதனுள் அடக்குவர்)

சிந்தனைக் கட்டுரைகளில் சிறுசிறு பத்திகள் இடம்பெற்று அவை சூத்திர வாய்பாடுபோல் சுருக்கமாகவும், சுவையாகவும் இருக்கும்.

கண்ணதாசனின் கவிதாஞ்சலி என்ற கட்டுரையில் சிந்தனை உரைநடை அமைந்துள்ளது.

“குழந்தை பிறக்கும் போதே ஒவ்வொரு வருஷத்துக்கும் டைரிஎழுதி குழந்தையின் கையிலேயே கொடுத்து இறைவன் அனுப்பியிருக்கலாம்.

விதையைத் தகப்பன் உடம்பிலும், உரத்தைத் தாயின் உடம்பிலும் வைத்ததோடு நிலத்துக்குடையவனின் வேலை முடிந்துவிட்டது.

மழையை எதிர்பார்த்தும், வெயிலைத் தாங்கிக் கொண்டும் வளர்ந்து, மலர்ந்து, கருகிப் போக வேண்டிய பொறுப்பு செடியினுடையதே. நடக்கும் அன்றைய நாளுக்குக்கூட நம்மாலே பொறுப்பேற்க முடியவில்லை.

இன்னது நடக்கும் என்று திட்டமிட்டுக் கொண்டு காரியம் செய்து வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர்? விதி என்னும் பிரவாகத்தின் சக்தி அழுத்தமானது?” இவ்வாறு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டச்செய்யும் சிந்தனை உரைநடை கண்ணதாசனின் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற எம்.எஸ்.உதயமூர்த்தியின் ‘ஆன்மீகச்சிந்தனை’க் கட்டுரைகளும் இப்பிரிவில் அடங்கும்.

2.7அளவை உரைநடை

அளவை உரைநடை (Argumentative prose) என்பது விவாதிக்கும் போக்கில் அமையும். ஓர் உட்கோளைப் படிப்போர் இணங்கி ஏற்றுக்கொள்ளும் வகையில் பரிந்து வலியுறுத்தும், நன்முறையில் எழுதப்பட்ட அளவை உரைநடை, அறிவாராய்ச்சியைத் தூண்டுவதோடு அமையாமல் உணர்ச்சிக்கும் விருந்து தரும். மிக உயர்ந்த அளவை உரைநடை படிக்கும் வாசகரை ‘நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்’ என்று கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, பிரச்சினைகளை நுணுக்கமாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்கவே தூண்டும்.

2.8வினாவிடைப்போக்கு உரைநடை

இது, பண்டைய இலக்கிய இலக்கண உரையாசிரியர்கள்பால் காணலாகும் ஒருபொதுப்பண்பு ஆகும். உரையை ஒரு மாணவனுக்குக் கூறுவது போன்று அமைக்கும் வினாவிடைப்போக்கு ஆகும். ஒருவினாவையும் அதற்கு இருக்கும் விடையையும் ஒருங்கு சேர்த்து உரைநடையில் அமைக்கும் போது அவற்றை ‘எனின்’ என்ற சொல்லாலே தொடுத்து ‘என்பது’ என்ற சொல்லால் முடிப்பதுபண்டைக் காலத்தில் பெரு வழக்காக இருந்தது என்பர்.

ஆசிரியன் மாணவனுக்கு ஒன்றை விளக்கும் போது எழுப்பும்கடாக்களும் (வினாக்களும்) அவற்றிற்கு அவன் கூறும் விடைகளும்பேச்சில் எவ்வாறு அமையுமோ, அவ்வாறே எழுத்திலும் அமைதலைமேலே காட்டிய (இறையனார் களவியல் உரை ப.9) உரைப்பகுதியிற் காணலாம் என்று அறிஞர் வி.செல்வநாயகம் கூறிவிட்டுப் பின்வருமாறு அவ்வுரைப் பகுதியினை வினா-விடையாக அமைத்துக் காட்டுவார்.

ஆசிரியன்: இனிப் பயனென்பது இது கற்க இன்னது பயக்கும்.

மாணாக்கன்: இது கற்க இன்னது பயக்கு மென்பதறியேன் ; யான் நூற்பொருள் அறிவல்.

ஆசிரியன்: சில்லெழுத்தினான் இயன்ற பயன் அறியாதாய், பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள் எங்ஙனம் அறிதியோ பேதாய்? இன்னது பயக்குமென்பது அறிய வேண்டும்.

மாணாக்கன்:என் பயக்குமோ இது கற்க?

ஆசிரியன்: வீடுபேறு பயக்கும்.

இவ்வாறு அமையும் உரைநடையும் ஒரு வகையில்நயமுடையதாகவே அமைகின்றது எனலாம். மிக நீண்ட உரைப்பகுதிகளையும் வினாவிடையான முறையில் அமைத்துக்காட்டுதல் உரையாசிரியரின் பண்பாக அமைந்துள்ளது.

கேட்கப்படும் வினாவே விடையாக அமையும் வண்ணம் அண்ணாவின் நடை அமைந்திருப்பதைக் காணலாம்.

‘அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது? எனவேதான், பெரியாருடைய பெரும்பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்.’ இளைஞரைக் கவர்வதற்கு நீண்ட வாக்கிய அமைப்பைத் தமது நடையில் அண்ணா கையாண்டார்.

அறிஞர் அண்ணா அவர்களின் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவின் ஒரு பகுதியைக் காண்போம் :

“பட்டம் பெற்றிடுகின்றீர் ! பல்கலை வல்லுநர் ஆகின்றீர் ! பல்கலைக்கழகம் ஈன்றெடுத்து நன்மணிகளாகுகின்றீர் ! ஆம் ! ஆயின் இஃது முடிவா, தொடக்கமா? அஃதே கேள்வி ! பட்டம் பெற்றுள்ளீர்! பாராட்டுக்குரியீர். ஐயமில்லை. ஆயின் பட்டம் எதற்கு? காட்டிக் களித்திடவா? அன்றிப் பணி செய்திடக் கிடைத்த ஆணையெனக் கொண்டிடவா? நுமக்கா? நாட்டுக்கா? பொருள் ஈட்டிடவா? நாட்டுப் பெருமையினைக் காத்திடவா? எதற்கு இப்பட்டம் பயன்பட இருக்கிறது? அஃதே கேள்வி ! விழாத் தந்திடும் மகிழ்ச்சியுடன் இழைந்து நம் செவி வீழ்ந்திடும் கேள்வி, பட்டம் பெற்றிடும் சிறப்புடையீர் ! நீவிர் திருவிளக்கு, பொற்குவியல், புள்ளிக் கலாப மயில்-கார்மேகம்-நாட்டைச் செழிக்கச் செய்திடும் வல்லுநர்கள், இசைபட மக்கள் வாழ உமது ஆற்றலை ஈந்திட வந்துள்ளீர்.”

இளைஞர் தாம் பெற்ற பட்டத்தை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அடுக்குமொழி நடை அண்ணாவுக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். இவ்வாறு வினா எழுப்பி விடைகூறும் நடைக்கு அண்ணாவின் மொழிநடையை உதாரணமாகக் கருதலாம்.

2.9தொகுப்புரை

உரைநடைக் காலமான இருபதாம் நூற்றாண்டில், ஆங்கிலக்கல்வியின் பயனால், தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. விளக்கம் தருவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது விளக்க உரைநடையாகும்.

வருணனை, படிப்போரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும். எல்லாவகை உரைநடையிலும் வருணனை உண்டு. புறநிலை நோக்குவருணனை காட்சியை உள்ளவாறு அறிவிக்கக் கூடியது.

எடுத்துரை உரைநடை என்பது ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் போன்று கதையையே சொல்வது.

பாடம் - 3

பாரதியார் உரைநடை

3.0பாட முன்னுரை

என் எழுத்தும் தெய்வம் என் எழுதுகோலும் தெய்வம்’ என்று முழங்கியவர் பாரதியார். பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பாரதி கவிதைக்கும் உரைநடைக்கும் புத்தொளி தந்தவர். படைப்பாளனின்எந்தக் கருத்தும் எளிமையாகச் சமுதாயத்தை அடைய வேண்டும்என்ற குறிக்கோளினை உடையவர் பாரதியார். பல மொழிகளைக் கற்ற பாரதியார் யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் இனிமையான மொழியை எங்குமே கண்டதில்லை என்று போற்றியுள்ளார். பண்டிதர் நடையில் இருந்த தமிழ்மொழியை எளிமைப்படுத்தி, இனிமைப்படுத்திக் கொடுத்தவர் பாரதியார்.

3.1தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியார் பெறுமிடம்

இருபதாம் நூற்றாண்டு எல்லாத் துறைகளிலும் மாற்றங்களைப் பெற்று விளங்குகிறது. தமிழிலக்கிய உலகிலும் எழுச்சியும், ஏற்றமும்,மாற்றமும் வளர்ச்சியும் தோன்றலாயின. பிறநாட்டு மொழிகளின்பெரும் வளர்ச்சியை அறிந்த தமிழறிஞர்கள் தமிழின் வளத்திற்கும் நலத்திற்கும் பல வகைகளில் பாடுபட்டுள்ளனர். இந்நூற்றாண்டைத்தமிழின் பொற்காலமாக ஆக்கினர். பல்லுடைக்கும் கடுநடை மறந்து கவிதைகளில் எளிய நடையினைக் கையாண்டனர். உரைநடையிலும் எளிமையும், சுருக்கமும் இனிமையும் இடம்பெற்றன. கவிதை உலகில் புரட்சியையும் புதுமையையும் கையாண்டு பாரதியுகம் என ஒருகாலகட்டத்தை வகுத்தளித்தவர் பாரதியார். முப்பத்தொன்பது வயதே வாழ்ந்த பாரதியார் தொடாத துறையேயில்லை எனலாம். முக்கூடற்பள்ளும், குற்றாலக் குறவஞ்சியும் முறையே உழவர், குறவர் வாழ்க்கையைச் சித்திரிக்கும் மக்கள் இலக்கியங்களாகத் தோன்றின. பாமர மக்களும் விரும்பிப் பாடும் வண்ணம் இனிய, எளியசொற்களால் நெகிழ்ச்சி வாய்ந்த நடையில் இவை அமைந்தன. அண்ணாமலை ரெட்டியார் எழுதிய சிந்துப் பாடல்கள் பாமரமக்களின் கவிதைகளாய் விளங்கின. இவை மூன்றும் பாரதியாருக்கு முன்னோடி இலக்கியங்கள் எனலாம்.

காங்கிரஸ் வலுப்பெற்ற காரணத்தினால் நாட்டில் சுதந்திர உணர்ச்சி பெருகிற்று. மக்கள் விடுதலை வேட்கை உற்றனர். அரசியல் போராட்டங்கள் தோன்றின. நாட்டு உணர்வும் சமுதாய விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டமையால் அரசியல் மக்களுக்குப் புதிய மதமாகியது. மக்கள் நிலை பற்றிப் பலர் பேசவும் எழுதவும் தொடங்கினர். இந்தச் சூழ்நிலையில் உருவான பாரதியார் புதிய கவிமரபைக் கையாண்டார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இனிமையாக எழுதினார். பாரதியார் வகுத்த பாதையில் தேசிக விநாயகம் பிள்ளை சென்றார். பாரதி தந்த புதிய மரபைப் பாரதிதாசன் வளர்த்து வளமாக்கினார்.

“அழகு, சுவை, ரம்மியம் என்பனவற்றுக்கு இடமாகிய மனிதர்கள் புளகமுறும்படி செய்யும் தொழில்களை எல்லாம் ஆங்கிலேயர்கள் மதுர கலைகள் (Fine Arts) என்று கூறுகிறார்கள். இக்கலைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பழக்கத்தின் மேலும் பயிற்சியின் மேலும் ஏற்படக் கூடிய தென்றாலும் பொதுவாக இவை ஆழ்ந்த மனக் கிளர்ச்சி யுடையோரும் வரப் பிரசாதிகளென்று கருதப்படுவோருமாகிய பெரியோர்களுக்கே இனிது சாத்தியம்”

என்று பாரதியார் இந்தியா (8-12-1906) பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

கலை வடிவம் குறித்த அவரது கருத்தாகவும் இது அமைந்துள்ளது. ஒரு கலைவடிவத்திற்கு அழகு, சுவை, ரம்மியம் ஆகியவை இருக்க வேண்டும் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார். மேலும் அத்தகைய கலையை உருவாக்குந்திறன் ஒருவனுக்குப் பழக்கத்தினாலும், பயிற்சியினாலும் உருவாகக் கூடியது, ஆழ்ந்த மனக் கிளர்ச்சியுடையோர்க்கும் வரப்பிரசாதிகட்கும் இத்திறன் அதிகமாக இருக்கும். எனவே கலைத்திறன் என்பது மனிதச் செயல்பாடு ஆகும்.

3.1.1பாரதியாரின் படைப்புகள் விவேகபாநு, சுதேசமித்திரன், சக்கரவர்த்தி, இந்தியா முதலிய இதழ்களில் பாரதியார் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பத்திரிகை ஆசிரியராய் இருந்த பாரதி, தொடாத துறையே இல்லை என்று சொல்லுமளவிற்குப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வழங்கினார். பாரதியார் பாடல்களைத் தேசியப் பாடல்கள், தெய்வப் பாடல்கள், சமுதாயப் பாடல்கள், முப்பெரும் பாடல்கள் என நான்கு வகையாகப் பிரிக்கலாம். மக்களைக் கவரும் எளிய மெட்டுக்களில் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அவர் பாடிய தேசியப் பாடல்கள் பாரதியை நாட்டிற்கு அறிமுகப்படுத்தின எனலாம்.

பாரதியார் உலகக் கவிஞர். உலகமக்கள் யாவரும் ஒன்றுபட்டு வாழத் தகுந்த உயரிய எண்ணங்களையும், கருத்துகளையும் அவர் பாடல்களில் காணலாம். அச்சில் படிப்பதைவிட உணர்ச்சியோடு பாரதியாரின் பாடல்களைப் பாடக் கேட்பதால் பெரும்பயன் உண்டு என்று காமராசர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமையான நடையினைக் கையாண்டு ஒரு தனி மரபினைத் தனக்கென வகுத்துக் கொண்டார். பாரதியின் எழுத்து நடை சிந்திக்க வைக்கும் நடை; உணர்ச்சி ஊட்டக்கூடிய நடை. அதனைக் குடிமக்கள் நடை எனச் சிலர் குறிப்பிடுவர்.

3.2பாரதியாரின் உரைநடைக் கொள்கை

கவிதையின் நுணுக்கங்களையெல்லாம் உணர்த்தும் உரையாகவே இடைக்காலத்தில் வசனம் பயன்பட்டது. சென்ற இரு நூற்றாண்டுகளாக வசனம் இலக்கியமாகப் படைக்கப்பட்டு, உலக இலக்கியங்களில் தனக்குரிய இடத்தை அடைய முயன்று வருகிறது.

“உள்ளத்திலே நேர்மையும் தைரியமுமிருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும்; வாலைப்பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. வசன நடை, கம்பர், கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்க வேண்டும்… உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ்நடை யெழுதும்”

உள்ளக்கருத்தை மாற்றியோ, திரித்தோ சொல்லும் பொழுது நடையில் தெளிவில்லாமல் போய்விடுகிறது.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்

என்பது பாரதியார் வாக்கு. இந்த உண்மை ஒளியே உள்ளத்தின் இருளாகிய குழப்பங்களையும் கலக்கங்களையும் தெளிவித்து விடுகிறது. இத்தகைய தெளிந்த தூய ஒளி மிகுந்த உள்ளத்திலிருந்து பிறக்கும் இலக்கியத்திலும் இதே பண்புகள் சுடர்விடுகின்றன. அவை ஆசிரியரின் தனித்தன்மையை ஏற்று வெளிவருகின்றன.

சொல்ல வந்த பொருளை நேரே சொல்வது; பொருளைத் திரித்து மாறுபடச் சொல்லாமலிருப்பது; அவசியமில்லாத அடைமொழிகளைச் சேர்க்காமலிருப்பது; உலகத்தார்க்குப் பொருள் விளங்கும்படிஎழுதுவது; மனமறிந்த உண்மையை அச்சமின்றி உள்ளவாறேசொல்வது. இவை யாவும் நடையின் தெளிவுக்கு இலக்கிய ஆசிரியன்உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் என்று பாரதிகாட்டுகின்றார். ஆகவே, பேசுவது போல எழுதும் பொழுது நடையில்தெளிவு ஏற்படுவதோடு, எளிமையும் உண்மையும் சேர்வதால், வசனஇலக்கியம் முழுமையும் அழகும் உடையதாகிறது.

3.3கட்டுரை நடை

பாரதியார் உரைநடையிலும், கவிதையிலும் வழங்கிய கருத்துகள் அனைத்துத் துறைகளையும் சார்ந்தவையாகும். சுருங்கச் சொன்னால் அவர் தொடாத துறையே இல்லை எனலாம். பல்வேறு பொருள்கள் பற்றிய பல்வேறு கட்டுரைகள் உரைநடைத் தமிழுக்கு அவர் வழங்கிய கொடைகளாகும். தத்துவம், கலைகள், மாதர், சமூகம் எனப் பல்வேறு தலைப்புகளில் அவருடைய உரைநடைக் கட்டுரைகள் அமைந்துள்ளன. உரைநடைப் பகுதியை ஆராயும்போது ஆசிரியர் அந்தக் கருத்தை எந்த நோக்கத்திற்காக யாருக்காக வெளியிட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நடைவகைகளை ஆராயும் இலக்கியத் திறனாய்வாளர்கள், நடை வேறுபடுவதற்குரிய காரணங்களைக் கூறும்போது ஆசிரியர் (Author), காலம் (Age),நோக்கம் (Purpose), கருத்து (Theme), இடம் (Geography), மக்கள்(Audience) முதலியவற்றால் நடையின் தன்மைகள் வேறுபடும் என்பர். இவ்வகையில் மக்களுக்குரிய செய்தியாகப் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் (முன்னுரை) கூறுவது இங்குப் பொருந்தும்.

‘எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்’,

‘பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு’

‘ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவது.’

ஆகியவற்றைத் தம் நோக்கமாகக் கொண்டுள்ளார் பாரதியார். பாரதியின் படைப்புகள் முழுவதும் இத்தகைய நெறியை அடிப்படையாகக் கொண்டு எளிமையும், இனிமையும் வெளிப்பட அமைந்துள்ளன. எனவே பாரதியின் எளிய நடைத்திறனுக்கு மூலகாரணமாக அமைவது எழுதும் அனைத்தும், மக்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருத்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தேயாகும்.

3.3.1ஞானரதம் ஞானரதம் உயர்ந்த தத்துவங்களைக் கதைப் பொருளாகக் கொண்டு சமைக்கப்பட்டது. ஞானரதத்தின் கதையமைப்பு இலக்கிய வகையிலே மிகவும் புதுமையானது. தம்மையே மூலக் கதாபாத்திரமாகக் கொண்டு, தம் வெவ்வேறு வகையான அனுபவங்களை ஒன்றாக இணைக்கும் முறையும் புதுமையானதுதான். இவ்வாறு பல வகைகளில் ஞானரதம் ஒப்பற்றதொரு கற்பனைச் சித்திரமாக விளங்குகிறது.

பாரதியின் ஞானரதம் அவரது சிறந்த உரைநடைக்கு ஓர் எடுத்துக்காட்டு. “நெடிதோங்கி வளர்ந்த கோட்டைச் சுவர்களைக் கொண்ட உபசாந்திலோகத்திற்கு (பாரதியின்) ஞானத்தேர் செல்கிறது. அக்கோட்டை வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் வாயில் காப்போனின் கையிலே, நெருப்பு நிறங்கொண்டதும், இமயமலையைக் கூட ஒரேவெட்டில் பொடிப்பொடியாகச் செய்துவிடுமென்று தோன்றியதுமாகிய விவேகம் என்ற கண்ணைப் பறிக்கக்கூடிய சோதியெழுத்திலே எழுதப்பட்ட வாள் ஒன்று மின்னுகிறது. கவலையற்ற அந்த உலகத்திற்குள் நுழைவதற்கு மனமே தடையாக நிற்கிறது. ஆகவே மனத்தைக் கொன்றாலொழிய சாந்திலோக தரிசனம் கிடைக்காது” என்ற அனுபவத்தைப் பெறுகிறார் பாரதி.

மனத்தை மகிழ்விக்கும் பொருட்டுத் துன்பக் கலப்பற்ற இன்பவுலகமாகிய கந்தர்வலோகத்திற்குச் செல்கிறார் பாரதி.

பாரதி கந்தர்வப் பெண்ணாகிய பர்வதகுமாரியைப் பின்வருமாறு வருணிக்கிறார்.

“சந்திரகலை வீசும் முகம். அதன்மீது சிறியதும், மூன்று விரல் உயரமுடையதுமாய், மலர்களாற் செய்யப்பட்ட ஓர் கிரீடம். உயிரென்ற வண்டு வீழ்ந்து சிறகிழந்து தள்ளாடும் கள்ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள். தின்பதற்கல்லாது, தின்னப்படுவதற்கமைந்த போன்ற பற்கள்…. மண்ணுலகத்துப் பெண்களைப் பேசுமிடத்து கந்தர்வச் சாயலென்கிறார்கள். இவளது இயலையும், சாயலையும் என்னென்பேன்? தெய்வ இயல், தெய்வச் சாயல்.”

3.3.2பாரதியாரின் தராசு தராசு பாரதியின் வசன இலக்கியத் திறனைக் காட்டுவதோடு அவரை நடுநிலை கொண்ட சிந்தனையாளராகவும் எடுத்துக்காட்டுகிறது. தராசு எல்லா வஸ்துகளையும் நிறுத்துப் பார்க்கும் என்று பாரதி கூறுகிறார். தத்துவம், சமூகப் பிரச்சனைகள், இலக்கியம், அரசியல், கலைகள், வைத்தியம், சமயம் முதலான எல்லாவற்றையும் பற்றிய பல்வேறு ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் தராசு விடையளிக்கிறது. ஒரு பொருளைப் பற்றிய இருவகையான கோணங்களையும் துலக்கிப் பார்த்து இறுதியில் தீர்ப்பான முடிவைச் சொல்கிறது தராசு. கவிஞன் ஒருவனும், துணிக்கடை முதலாளி ஒருவனும் கேட்ட கேள்விகளுக்கு, இருவருக்கும் பொதுவான பொருத்தமான ஒரே பதிலைச் சொல்கிறது தராசு.

“நெசவிலே நாட்டு நெசவு மேல், விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால், பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டு போல பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய, கச்சைவேஷ்டி, போல நெய்ய வேண்டும். ‘மல்’ நெசவு கூடாது. ‘மஸ்லீன்’ நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்ந்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்.”

கவிதையில் இடம்பெறும் சிலேடையைப் போல உரைநடையிலும் அமைத்துப் பாரதியார் புதுமையைச் செய்துள்ளார்.

3.4படைப்பிலக்கிய நடை

சிறுகதையின் தொடக்கம் படிப்பவரின் ஆர்வத்தையும், கற்பனையையும் தூண்டுவதாக அமைக்கப்படுவதோடு, கதையில் முறையான வளர்ச்சியையும் முழுமையையும் காட்ட வேண்டும். பாரதி தம் சிறுகதைகளுக்கு அடிப்படையாகத் தம்மைத் தூண்டும் நோக்கம் என்னவென்பதை ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்.

“பொதுவாக நான் கதைகளெழுதும் போது வெறுமனே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனினும் என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்து விடுகின்றன.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

கதைக் கொத்து என்னும் தொகுதியிலுள்ள கதைகளைத் தவிர பாரதி எழுதிய வேறு சில சிறுகதைகள், கட்டுரைகள் (மாதர், கலைகள், சமூகம்), பாரதி தமிழ், பாரதி புதையல் என்னும் வேறு சில தொகுப்புகளில் காணக்கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றான “ஆறிலொரு பங்கு” தேசசேவையைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டது. தேசப்பற்றுக் கொண்டு அதன் காரணமாகக் கதாநாயகன் தன் வாழ்க்கையில்பட்ட துன்பங்களையும், உளப் போராட்டங்களையும், இறுதியில் அவன் எல்லாவற்றையும் வென்று தன் இலட்சியத்தை அடைவதையும் இக்கதை சுவைபட விவரிக்கிறது.

3.4.1 ஆறில் ஒரு பங்கு இந்தச் சிறுகதை 1933-இல் (24/11/1933) சுதந்திரச் சங்கு வாரப் பதிப்பு முதல் இதழில் அதன் ஆசிரியர் ‘சங்கு’ சுப்ரமணியனால் மறுபிரசுரம் செய்யப்பட்டது. அதன் தலைப்பில் அவர் எழுதிய குறிப்பு: “தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகளைச் சிருஷ்டித்து உதவிய பெரியோர்களுள் முக்கியமானவர் மூவர். மூவரும் புகழுடம்பில் இன்று உலாவுகிறார்கள். கவி சுப்பிரமணிய பாரதியார், வ.வே.சு.ஐயர், அ.மாதவையா.” இம்மூவரையும் தமிழர் மறக்க முடியுமா? இச்சிறுகதையைப் பாரதியார் 1913-இல் எழுதியிருக்கிறார். இச்சிறுகதைக்குப் பாரதி எழுதிய முகவுரையில்,

“ஒரு ஜாதி, ஓர் உயிர், பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம், பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மதபேதங்கள் இருக்கலாம். மத விரோதங்கள் இருக்கலாகாது. இவ்வுணர்வே நமக்கு ஸ்வதந்திரமும், அமரத்தன்மையும் கொடுக்கும். இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று தான் சிறுகதை எழுதியதன் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆறிலொரு பங்கு சிறுகதையின் ஆரம்ப வரிகள் இவை.

“மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள். புரசைவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களிலெல்லாம் மேல்மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காக காலி செய்து விடுவது வழக்கம். நிலாக்காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் போஜனம் முடிந்து விடும். ஒன்பதுமணி முதல் நடுநிசி வரையில் அவள் தனது அறையில் இருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள்”

என்று தொடங்குகிறது. இது ஒரு காதல் கதை. முறைமை உறவான மாமன் மகள் அல்லது மாமன் மகன், அத்தை மகள் அல்லது அத்தை மகன் ஆகிய உறவை விஷயமாக எடுத்துக் கொள்வது சிறுகதை ஆரம்பத்தில் படைப்பாளிக்கு உவப்பாக இருந்திருக்கிறது. பாரதியே இதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். கோவிந்தராஜன், அவனது தாய்மாமன் மகள் மீனாம்பாள் இருவரது காதல் உறவில் ஏற்படும் சிக்கலால் அவர்கள் விருப்பம் ஈடேறாமல் போய்விட, எதிர்பாராத விதமாக இருவர் விருப்பமும் நிறைவேறுகிறது.

இந்தச் சிறுகதையின் சிறப்பு, இது வெறும் காதல் கதையாக மட்டுமே இல்லை என்பதுதான். காதலர் இருவர் மனத்திலும் லட்சியத் தன்மையை ஏற்றி இருக்கிறார் பாரதி. அவர்கள் உறவேலட்சியசித்தி பெற்றதாக ஆகிவிடுகிறது. கதையின் கடைசி இரண்டு வாக்கியங்களான

“இரண்டு ஜீவன்கள் மாதாவின் சேவைக்காக வயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது.”

என்பதிலிருந்து அந்த லட்சிய நிறைவேற்றம் தெரிகிறது. பாரதத் தாயின் சேவைக்கு இருவரும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுவிட்டதைத் தான் காண்கிறோம்.

3.4.2இருள் கதைக்கொத்து என்னும் தொகுதியில் அமைந்த கதைகளுள் இருள் என்னும் சிறுகதை திடசித்தத்தின் வலிமையை உணர்த்துகிறது. உறுதியான உள்ளத்தை திடசித்தன் என்னும் அரசனாக உருவகித்துக்கதை தொடர்கிறது. திடசித்தன் உறங்கும் பொழுது அவன் பகைவர்களால் ஒரு மலைச்சாரல் குகைக்குள்ளே கொணர்ந்து அடைக்கப்படுகிறான். அந்தக் குகையில் அவன்பட்ட இன்னல்களையும், இறுதியில் அவற்றையெல்லாம் கடந்து அவன்வெற்றி பெற்ற வகையையும் கதை விளக்கிக் கூறுகிறது. செயல்களுக்கும், அவற்றைச் செய்தற்குரிய முயற்சிக்கும் அடிப்படைக்காரணமாக விளங்குவது, எதற்கும் அஞ்சாத, உறுதியுள்ள நெஞ்சு; அதனைக் கொண்டு உலகில் எத்தகைய துன்பத்தையும் கடந்து வெற்றிபெறலாம் என்னும் உண்மையை மிகச் சிறந்த முறையில், இருள் என்னும் அளவில் சிறிய இவ்வுருவகக் கதையாக அமைத்திருக்கிறார் பாரதி.

பாரதியின் சிறுகதைகளின் அமைப்பு முறையை மூன்று வகைகளாகப் பகுக்கலாம். கதையைக் கூறிவிட்டு இறுதியில் நீதியை அறிவுறுத்தும் கதைகள் நீதிக்கதைகள் ஆகும். நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு அமைபவை நகைச்சுவைக் கதைகள். கருத்துகளை உருவங்களாகக் கொண்டு அமைந்தவை உருவகக்கதைகள் ஆகும்.

3.5பாரதியாரின் வசன கவிதை

தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின் பாரதியின் சொல்லாட்சியில் தான் வேகமும் உணர்ச்சியூட்டும் திறனும் மிகுந்து காணக்கிடக்கின்றன. பழைய சொற்களுக்குப் புதிய வேகம் தந்தவர் பாரதி. பாரதியின் வசன கவிதையில் அவர் வழங்கியிருக்கும் சொற்களும், சொற்றொடர்களும் புதுமையானவை.

ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?

ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?

. . . . . . . . . . . . . .

உணர்வே நீ வாழ்க

நீ ஒன்று நீ ஒளி

நீ ஒன்று நீ பல

நீ நட்பு, நீ பகை

உள்ளதும் இல்லாததும் நீ

அறிவதும் அறியாததும் நீ

நன்றும், தீதும் நீ

நீ அமுதம், நீ சுவை

நீ நன்று, நீ இன்பம்

பழைய சொற்களில் புதிய கற்பனைக் கோலங்களைப் பயன்படுத்தி அழகும் எளிமையும் உணர்ச்சியும் மீதூரப் பாரதியார் மொழியினைக் கையாளும் போதுதான் தமிழ்மொழியின் வலிவும் வனப்பும் நமக்குப் புலனாகின்றன.

3.6பாரதியாரின் கடித இலக்கிய நடை

கடிதம் எழுதும் கலை தமிழ் இலக்கிய மரபிற்குப் புதுமையன்று. சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய மடல் முன்னோடியாக விளங்குகிறது. பாரதி தன் படைப்புகளைக் கற்பனையில் அமைந்த கடித இலக்கிய வடிவில் தரவில்லை. தன்னுடைய மனைவிக்குக் காசியிலிருந்து கடிதம் எழுதுகின்றார்.

“நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப்படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன் என்று எழுதி, கவலைப்படும் நேரத்திற்கும் கூடத் தமிழ் மருந்தாகும் என்பதை நுட்பமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரலி சு. நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதும் போது அவருடைய தமிழுணர்ச்சி வீறுகொள்கின்றது.

‘தம்பி, நான் ஏது செய்வேனடா ! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்த முண்டாகிறது. தமிழ்நாடு வாழ்க என்றெழுது. தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் மலிக என்றெழுது, அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது’.

என்றெல்லாம் நெல்லையப்பரிடம் உணர்ச்சி நடை பொலிய வேண்டுகின்றார். தமிழும் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்க் கல்வியைப்பெறவேண்டும் என்னும் அவருடைய அவா இக்கடித நடையால்புலனாகும்.

ஐரோப்பியரிடம் காட்டும் அடிமைத் தனத்தை ‘ஐரோப்பிய பூஜை’ என்னும் சொல்லால் குறிப்பார். ‘முடம்படும் தினம்’, ‘மூத்த பொய்மைகள்’, ‘பொங்கி வரும் பெருநிலவு’, ‘பெட்டைப் புலம்பல்’முதலாய தொடர்கள் அவர்தம் கவிதைக்கும் உரைநடைக்கும் வாய்த்த அருஞ்சொற்களாகும். மொழி ஆளும் திறம் குறித்து அவரே நன்கு சிந்தித்ததால் இத்தகைய சொல்லாட்சிகள் அவருடைய மொழிநடையில் அமைந்தன எனலாம். அது குறித்து அவரே ‘வேதரிஷிகளின் கவிதையில்’ நடையின் தெளிவுக்குரிய கூறுகளைக் கூறுவார். சொல்லவந்த பொருளை, நேரே சொல்வது; பொருளைத் திரித்து மாறுபடச் சொல்லாமலிருப்பது; அவசியமில்லாத அடைமொழிகளைச் சேர்க்காமலிருப்பது, உலகத்தார்க்குப் பொருள் விளங்கும்படி எழுதுவது; மனமறிந்த உண்மையை அச்சமின்றி உள்ளவாறே சொல்வது என்பன பாரதியின் மொழித்திறன் கொள்கைகளாகும். இவை அனைத்துக்கும் இலக்கியமாகவே பாரதியின் கட்டுரைகள் விளங்குகின்றன.

3.7பாரதியாரின் உரைநடைக் கூறுகள்

உரைநடை வகையினை ஆராய்ந்த திறனாய்வாளர்கள் பொதுவாக அதன் கூறுகளை ஒன்பது வகையாகப் பகுத்துள்ளனர். இவற்றுள் சிலவற்றைப் பிறிதொன்றனுள்ளும் அடக்கிக் காணலாம். சான்றாகத்தருக்க முறையும், திறனாய்வு முறையும் மிக நெருங்கிய தொடர்புடையனவாகும். பாரதியின் உரைநடைத் தமிழை ஆராய்ந்து பார்த்தால் இவ்வெல்லா வகையான கூறுகளும் அவர்தம் எழுத்தில் மிளிர்வதை உணரலாம். அவற்றுள் இன்றியமையாத சில உரைநெறிகளில் அவர்தம் தனித்தன்மை புலனாவதைக் காண்போம்.

3.7.1தருக்க முறை ஒருவர் தம் கருத்தைச் சொல்லும் போது பிறர் அதனை ஏற்குமாறு காரண காரியங்களை வகைப்படுத்திக் காட்டி அறிவியல் பூர்வமாக விளக்குதல் இவ்வகையினதாகும். இத்தகைய விவாத முறையினை முன்னையோர் அளவை நூல் வகையில் அடக்கினர்.

பாரதியின் கட்டுரைகளில் தம் கருத்திற்காக வாதிடும் போது இவ்வழகிய நடைத்திறன் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. பெண் ஆணுக்கு அடிமையாக இருத்தலைப் பற்றிய உரையாடல் சந்திரத் தீவு எனும் கட்டுரையில் வருகின்றது. ‘பெண்களை ஏன் அடிமையாக்க வேண்டும்?’ என்னும் வினாவினை, சந்திரத்தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் கேட்கின்றான். அதற்கு ராஜாகங்காபுத்திரன் பின்வருமாறு மறுமொழி சொல்லுகின்றான்.

பெண் சரீர பலத்தில் ஆணைக் காட்டிலும் குறைந்தவள். அவளாலே ஸ்வாதீனமாக வாழ முடியாது. தனிவழி நடக்கையிலே துஷ்டர் வந்து கொடுமை செய்தால் தன்னைக் காத்துக் கொள்ள வலியில்லாதவள். குழந்தை ஸம்ரக்ஷணம் முதலிய அவசியங்களாலே உழுது பயிரிட்டுத் தொழில் புரிந்து ஜீவனம் செய்வதில் இயற்கையிலே பெண்ணுக்குப் பல தடைகள் ஏற்படுகின்றன. அப்போது அவள் ஆஹார நிமித்தமாக ஆணைச் சார்ந்து நிற்றல் அவசியமாகிறது. பிறன் கைச் சோற்றை எதிர்பார்த்தால் அவனுக்கடிமைப்படாமல் தீருமா? என்றான்.

ஆனால் இதனை மறுத்து சுதாமன் பதிலிறுக்கும் போது பாரதியாரின் கருத்துகளில் தருக்கமுறை சுடர் விடுவது தெளிவாகும்.

பெண்கள் உழவு முதலிய தொழில் அனைத்திலும் ஆண்மக்களுக்குச் சமமான திறமை காட்டுகிறார்கள். மேலும், அவர்களுக்கு ஆண்மக்கள் சம்பாத்யம் பண்ணிப் போடாமல் அவர்கள் சம்பாதித்து ஆண்மக்களுக்குச் சோறு போடும் நாடுகளிலேகூட, ஆண்மக்கள் பெண்மக்களை அடிமை நிலையிலேதான் வைத்திருக்கிறார்கள். சரீரபலத்தில் ஸ்திரீகள் ஆண்களைவிட இயற்கையில் குறைந்தவர்கள் என்பது மாத்திரம் மெய். இது மனிதருக்கு மட்டுமன்று எல்லா ஜந்துக்களும் அப்படியே…. பலங்குறைந்த உயிரை பலம் மிகுந்த உயிர் துன்பப் படுத்தலாம் என்ற விதி சகல பிராணிகளிடையேயும் காணப்படுகிறது. மனிதர் அதை எல்லையில்லாமல் செய்கிறார்கள் என்னும் கூற்றில் ஆணுக்குப் பெண் அடிமையாய் விளங்குகிற காரணத்தைத் தருக்க நெறி மூலம் விளக்குகின்றார்.

3.7.2வருணனை முறை ஒரு பொருளையோ அல்லது காட்சியையோ வருணித்துக் காட்டும் போது இந்நடையின் தனிநிலை புலனாகின்றது. புலன்களால் உணர்வனவற்றை அல்லது புலன்களின் வாயிலாக உணரும் புறக்காட்சிகளைச் சொற்களில் மொழிபெயர்த்துக் காட்டுவதே இவ்வகை வருணனை எனலாம். பாரதியின் சிதம்பரம் என்ற கட்டுரையினை இவ்வருணனை முறைக்குரிய சான்றாகக் கொள்ளலாம்.

“காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து பூஜைமுடித்து, பழம் தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு, மேனிலத்திற்கு வந்து நாற்காலியின்மேல் உட்கார்ந்து கொண்டு இன்னகாரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வானம் தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரன் நிறங்கொண்டு முதலையைப் போலும் ஏரிக்கரையைப் போலும், நானாவிதமாகப்படுத்துக்கிடக்கிறது. எதிர்வீட்டில் குடி இல்லை. அதற்குப் பக்கத்துவீட்டிலிருந்து சங்கீத ஓசை வருகின்றது. வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் கேட்கிறது. வீதியில் ஒருவன் உஹு கும் என்று தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக் கொள்ளும் சப்தம், …‘அரிசி, அரிசி’ என்று விற்றுக் கொண்டு போகிற ஒலி இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் மற்றொன்றாக வந்து செவியில்படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத்தெய்வத்தின் மஹாமௌனத்தைச் சுருதியாக்கி என்று மனம்அனுபவித்துக் கொண்டு இருந்தது.”

பாரதியின் இவ்வருணனையால் காலைக் காட்சி நம் மனக்கண்முன் விரிகின்றது. அங்கு ஒலிக்கின்ற ஒலிகள் நம் செவிக்குள்ளும் ஒலித்ததுபோன்ற ஓர் உணர்வு நம் முன்னே பிறக்கின்றது. கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டவல்லதாக இவ்வருணனைத் திறம்அமைந்துள்ளதை உணரலாம். புறச்சூழலை நம் மனத்துள் எழுப்பும்அரிய திறம் இந்நடையால் தெளிவுறும்.

3.7.3நாடக முறை செய்திகளைப் புலப்படுத்தக் கட்டுரையின் இடையிடையே நாடக மாந்தர்கள் உரையாடுவது போலவே சில காட்சிகளை அமைத்துள்ளார் பாரதியார். ‘கொட்டையசாமி’யில் இவ்வுத்தியைக் கையாளுகிறார். ஜமீன்தாருக்கும் கொட்டையசாமிக்கும் இடையே நடக்கும் உரையாடல் நாடக மரபிலேயே அமைந்துள்ளது. காட்சியை விவரிப்பது போல முதலில் ஜமீன்தாரின் தோற்றத்தை நம் கண்முன் கொண்டுவந்துநிறுத்துகிறார்.

பலாச் சுளைகளைப் போல் மஞ்சளாகக் கொழுக்கென்ற உடம்பும்பரந்த மார்பும், விரிந்த கண்களும், தலையில் ஜரிகைப்பட்டுத்துண்டும், கைநிறைய வைர மோதிரங்களும், தங்கப் பொடி டப்பியும், தங்கப்பூண் கட்டிய பிரம்புமாக இந்த ஜமீன்தார் ஆனித்திருவிழாவின்போது… கல்யாண ஜமுக்காளத்தில் பட்டுத்தலையணைகளின் மீது சாய்ந்து கொண்டு… அப்பொழுது கன்னங்கரேலென்ற நிறமும், மலர்போலத் திறந்த அழகிய இளையமுகமும் நெருப்புப் பொறி பறக்கும் கண்களுமாக இருபத்தைந்து வயதுடைய இளைஞன் ஒருவன் வந்து தோன்றினான். இவன் பெயர் கொட்டைய நாயக்கன். இருவருக்குமிடையே உரையாடல் தொடர்கிறது.

ஜமீன்தார் : ‘வாடா, கொட்டையா’

கொட்டையா : ‘சாமி, புத்தி’

ஜமீன்தார் : ‘காவி வேஷ்டி உடுத்திக்கொண்டிருக்கிறாயே

என்ன விஷயம்?’

கொட்டையனிடமிருந்து மறுமொழி இல்லை.

ஜமீன்தார் : ‘சந்நியாசம் வாங்கிக் கொண்டாயா?’

கொட்டையன்: ஆமாம்

இவ்வாறே இவர்கள் உரையாடல் நாடக முறையில் தொடர்கின்றது. கட்டுரையினிடையே இவ்வாறு நாடக முறையில் எழுதுகின்ற இயல்பினைப் பாரதி எழுத்துகள் பலவற்றிலும் காணலாம்.

3.7.4 எடுத்துரை முறை உரைநடைத் திறனாய்வாளர்கள் அனைவரும் இம்முறையைக் கதை கூறும் உரைநடை முறை என்பர். தமிழ் உரைநடையில் பேரளவினதாக விளங்குவது இம்முறையே யாகும். ஒரு செயல்பற்றியோ, வாழ்வின் இயக்கம் பற்றியோ விவரிப்பது எடுத்துரை உரைநடையாகும். பாரதியின் உரைநடைப் படைப்புகளுள் சந்திரத் தீவு, மலையாளத்துக் கதை, டிண்டிம சாஸ்திரியின் கதை, கொட்டையசாமி, ஸ்வர்ணகுமாரி முதலாயின எடுத்துரை உரைநடை வகையைச் சார்ந்தனவாகும்.

சொல்லப்படும் நிகழ்ச்சிகளைக் காரண காரிய இயைபுகளோடும் தொடக்கம், உச்சம், வீழ்ச்சி ஆகிய சிறுகதைப் பண்புகளோடும் பாரதியார் இப்படைப்புகளில் அமைத்துக் காட்டுகின்றார். அடிமை வாழ்வின் தன்மையை ஓநாயும் வீட்டு நாயும் பகுதியில் கதை கூறுவது போல அமைத்திருக்கும் நெறி இவ்வகை நடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஓநாயும் வீட்டு நாயும்

தென் இந்தியாவிலுள்ள மன்னார் கடற்கரையை யடுத்து ஒருபெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக்காரர் இருந்தார். அவர்பெயர் உக்கிரசேனப் பாண்டியன். அவர் யுத்தப் பிரியர். அவர் புலி, கரடி, யானை, சிம்மம் முதலான காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் வல்லவர். பல வகையான வேட்டை நாய்கள் அவரிடத்தில் இருந்தன. அதிகாலையில் ஒரு நாள் அவர்வேட்டைக்குப் புறப்பட்டார். தான் மிகுந்த அன்பு பாராட்டி வளர்த்துவந்த ‘பகதூர்’ என்ற ஒரு நாயைத் தன் கூடக்கூட்டிக் கொண்டு சென்றார். அந்த நாயானது வெகுகாலமாய்க் காட்டிலே இருந்தபடியால் அந்தக் காட்டில் யதேச்சையாய்ச் சுற்றித் திரிய சமயம் வாய்த்தவுடனே ஆனந்த பரவசப்பட்டுக் கண்ட கண்ட விடத்திற்கெல்லாம் ஓடியது. அன்று ஒரு ஓநாய் தன் வழியில் குறுக்கிட்ட பகதூரைப் பார்த்து அதிசயப்பட்டு அத்துடன் சம்பாஷிக்க விருப்பங்கொண்டது.

ஓநாய்; பகதூர் உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர் (வீட்டுநாய்)

;ஓ, அது ஒன்றுமில்லை. எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.

ஓநாய் ; அந்தப் பொன் பதக்கம் எங்கே? நீர் ஏன் அதைப் போட்டுக் கொண்டு வரவில்லை?

பகதூர் ; என்னை வெள்ளிச் சங்கிலியால் கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்

ஓநாய் ;

உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப் பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன். எனக்கு எஜமானனும் இல்லை, சங்கிலியும் இல்லை. கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன். யதேச்சையாய் எங்கும் செல்வேன், எதையும் தின்பேன், எதையும் செய்வேன், எவரோடும் சேர்வேன்… இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப் போய்விட்டது.

3.7.5எள்ளல் நடை நகைச்சுவையோடு, அதே சமயத்தில் குற்றம் நெஞ்சைச் சுடுமாறு கூறுவதை இவ்வகையினுள் அடக்கலாம். குறை காணும் போக்கினைச் சுவையுணர்வோடு தருவது எள்ளல் நடை (Satirical) என்பர். வஞ்சப் புகழ்ச்சி. அங்கதம் முதலாயின இதற்கு இணை எனலாம். நகைத்திறத்தோடு குற்றங்காணும் இயல்பு பொதிந்த உரையினைப் பாரதியார் மிக நுட்பமாகக் கையாள்வது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை தரும் நடையினையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி எள்ளல் திறத்தினைச் சமூக உணர்வோடு காணும் நெறிகள் பாரதியின் கட்டுரைகளில் காணக்கிடக்கின்றன. நையாண்டி உணர்ச்சியினை இவ்வகை நடைகளில் காணலாம். தமிழ் நாட்டிலே அப்பொழுது விளங்கி வந்த இசைச் சூழலைப் பாரதியார் தனக்கேயுரிய நடையில் எள்ளல் ததும்ப விவரிக்கின்றார்.

“நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக்கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராமநீ சமான மெவரு’, ‘மரியாத காதுரா’, ‘வரமுலொச்சி.. . .’ ஐயையோ, ஐயையோ, ஒரே கதை எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ, எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாடல்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.”

இப்பகுதியில் தமிழிசையை விரும்பாத தமிழர்களையும் அவர்களுக்குச் செவியின்பம் நுகரத் தெரியாத நிலையினையும் நுட்பமாகக் காட்டுவார் பாரதி.

3.8தொகுப்புரை

பாரதியின் உரைநடை இலக்கியங்களுள் அவருடைய கட்டுரைகளுக்குத் தனியிடமுண்டு. அவை அரசியல், சமூகம், கலை, தத்துவம் முதலான பல வகைப்பட்ட பொருள்களையும் தழுவி அமைந்திருப்பதால் பாரதியின் ஆளுமை, தனித்தன்மை, அறிவு, இலக்கியப் பயிற்சி முதலியவற்றை அவற்றின் வாயிலாக நன்கு கண்டுகொள்ள இயல்கின்றது. குறிப்பாக, பாரதியின் கட்டுரைகளின் அமைப்பும் அவற்றில் காணப்படும் தெளிவும் அவற்றைத் தமிழ்வசன இலக்கியத்தில் முதலிடத்தில் நிறுத்துகின்றன. பாரதி அவற்றை அமைத்திருக்கும் வகை, போக்கு முதலானவை பொருள்களைப் பற்றிய அவரது ஆழ்ந்த சிந்தனைகளின் முடிவுகள் எத்துணைத் தெளிவானவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆழ்ந்த சிந்தனை, முறையான சிந்தனை, குழப்பமற்ற தெளிந்த சிந்தனை ஆகியவற்றின் விளைவாகப் பிறந்தனவே பாரதியின் கட்டுரைகள் ஆகும். பாரதியின் கட்டுரைகள் மூலம் பாரதியின் உரைநடைத் திறனை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

பாடம் - 4

உ. வே. சா. உரைநடை

4.0 பாட முன்னுரை

உ.வே.சா. ஒரு கவிஞர், பேச்சாளர், கட்டுரையாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், தன்வரலாற்றாசிரியர், தமிழ்ப்பேராசிரியர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு சிறந்த பதிப்பாசிரியர், ஓலைச்சுவடிகளில் இருந்த சங்கத்தமிழ் நூல்களையும் பெருங்காப்பியங்களையும், பிரபந்தங்களையும் செம்மையான முறையில் அச்சிலேற்றிப் பதிப்பித்த ‘பெருந்தமிழ்ச்செல்வர்’ இவர். ‘தமிழ்த்தாத்தா’ உ.வே. சாமிநாதையர் சிறந்த உரையாசிரியராகத் திகழ்ந்தவர். இவர் தமிழ் நூல்களை அச்சில் கொண்டு வந்ததோடு முகவுரை, குறிப்புரை ஆகியவைகளை எழுதி ஆய்வு முறைக்கு வித்திட்ட மிகச்சிறந்த உரையாசிரியர் என்பதை உணரலாம்.

4.1 உ.வே.சா. வின் தமிழ் வாழ்வு

உ.வே.சாமிநாதையர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் 19.2.1855 இல் பிறந்தார்; தந்தை வேங்கட சுப்பையர்; தாய் சரசுவதி அம்மாள்; இயற்பெயர் வேங்கடநாதன். திருவாவடுதுறையில் ஆசிரியர் இட்ட பெயர் சாமிநாதன். தந்தையே முதல் தமிழாசான்; அவர் நிகண்டு, சதகம் போன்ற கருவி நூல்கள் கற்பித்தார். திண்ணைப் பள்ளியில் பயின்று முடித்த உ.வே.சா. விற்குத் தமிழில் சுவையுண்டாக்கித் தமிழ் விதைவிதைத்த முதற் குரு அரியலூர் சடகோப ஐயங்கார். தமிழ் நூற்பரப்பைக் காட்டிப் பன்னூல் பயிலும் பேரார்வமூட்டியவர் குன்னம்சிதம்பரம் பிள்ளை. அரியலூர் சடகோபையங்கார் இசையுடன் தமிழறிவையும் உ.வே.சா. அவர்களுக்கு ஊட்டினார். சிதம்பரம் பிள்ளையிடம் திருக்குறள் போன்ற நூல்களைப் பயின்றார். அங்கிருந்து கார்குடி சென்று கஸ்தூரி ஐயங்காரிடம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களின் நுட்பங்களை அறிந்தார், தம் தந்தையாருக்கு உதவியாக இசைக்கதையில் ஈடுபட்ட இவர், தனித்து இராமாயணம், நந்தன் சரித்திரம் போன்ற இசைக்கதைகளை நடத்தினார். செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகை கற்றார். உ.வே.சா. அவர்களின் தமிழார்வத்தையும் அறிவையும் கண்ட அவர், “நாங்களெல்லாம்மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள்; என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர்; அவரிடம் போய்ப்படிப்பது தான் சிறந்தது” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் இவரை ஆற்றுப்படுத்தினார்.

1870 இல் உ.வே.சா. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்கச் சேர்ந்தார். குருகுல முறையில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐந்து ஆண்டுகள் கற்றார். படித்தது கொண்டும், மகாவித்து வானை நாடிவரும் அறிஞர், கலைஞர், வடமொழி விற்பன்னர்களைக் கண்டு கேட்டுப் பழகியதாலும் மிகச் சிறந்த அனுபவச் செல்வங்களைப் பெற்றுச் சிறந்தார். தம் ஆசிரியரின் அன்பும் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவும் இவரது வாழ்வில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தின. 1.2.1876-இல் பிள்ளையவர்கள் மறைந்த பின் அப்போது திருவாவடுதுறை மடத்தின் தலைவராக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நான்காண்டுக் காலம் இவருக்குத் தமிழ்க் கல்வி ஊட்டினார். பின்னர்த் தமிழறிஞர் சி. தியாகராசச் செட்டியாரின் உதவியால் 16.2.1880-இல் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். கும்பகோணத்தில் 1893-ஆம் ஆண்டுவரை இருந்த உ.வே.சா., சென்னை மாநிலக்கல்லூரியில் பணிபுரியச் சென்றார். 1919-ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், பதிப்புப் பணியிலிருந்தும் பாடங் கற்பித்தலிலிருந்தும் ஓய்வு பெறாது 1924-இல் (சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக) ஸ்ரீ மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராக மூன்றாண்டு பணியாற்றி 1927-இல் ஓய்வு பெற்றார். இதன்பின் முழுநேரப் பதிப்பாசிரியராக இருந்து பல்வேறுதுறை நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். எழுத்துத்துறையிலும் தீவிரமாக ஈடுபட்ட உ.வே.சா 964 கவிதைகளையும் எழுதியுள்ளார். அவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டிச் சென்னைப் பல்கலைக்கழகம் மகாமகோபாத்யாயர் என்னும் பட்டத்தை அளித்துப் பாராட்டியது.

4.1.1 பதிப்பாளர் உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு (1878), பத்துப்பாட்டு 1, எட்டுத்தொகை நூல்கள் 5, காப்பியங்கள் 5, புராணங்கள் 15, தக்கயாகப்பரணி (1930), பாசவதைப்பரணி (1993), ஆகிய இருபரணிகள், திருமயிலை திரிபந்தாதி (1930), சங்கர நயினார் கோயில் அந்தாதி (1934), திருமயிலை யமக அந்தாதி (1936) ஆகிய மூன்று அந்தாதிகள், சிவசிவ வெண்பா (1938) திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா (1939). திருக்குற்றாலச் சிலேடை வெண்பா (1940) ஆகிய மூன்று வெண்பா நூல்கள், ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு (1910), சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத்திரட்டு (1932), ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு (1939), ஆகிய நான்கு பிரபந்தத்திரட்டு, குறவஞ்சி 2, உலா 10, பிற பிரபந்தங்கள் 9, இலக்கணம் 3, ஆகியன. 87 ஆண்டுகள் வாழ்ந்த அவர் வழங்கியது 87 நூல்கள்.

21.10.1880 சேலம் இராமசுவாமி முதலியாரைக் கண்டு சீவகசிந்தாமணியைப் பற்றி உரையாடிய பின்னர்த் தமிழில் சிற்றிலக்கியங்கள் தவிர வேறு இலக்கியங்களும் இருக்கின்றன என உணர்ந்தார். முதலியார் கொடுத்த ஊக்கத்தாலும் உ.வே.சா.வின் ஜைனநண்பர்கள் கொடுத்த விளக்கங்களாலும், நண்பர்களின் உதவியாலும், இடைவிடா ஆராய்ச்சியாலும் 1887-இல் சீவகசிந்தாமணியைப் பதிப்பித்து வெளியிட்டார்.

இந்நூல் வெளிவரும் முன்னரே வேணுவனலிங்க விலாசச் சிறப்பு (1878). திருக்குடந்தைப்புராணம்(1883), மத்தியார்ச்சுனமான்மியம்(1885) ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆயினும் சீவகசிந்தாமணிப் பதிப்பே இவரை ஒரு பதிப்பாசிரியர் என உலகுக்கு அறிமுகமாக்கியது. இப்பதிப்பினை, சேலம் இராமசாமி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியார், சுப்பிரமணிய தேசிகர். தியாகராசச்செட்டியார், கொழும்பு குமாரசுவாமி முதலியார் போன்றார் பலர் பாராட்டினார்கள். இப்பாராட்டுக்கள் தந்த ஊக்கத்தால் பல்வேறு இலக்கியங்களைப் பதிப்பிக்க வேண்டும் எனும் ஆர்வம் இவருள் எழுந்தது.

1889-ஆம் ஆண்டு பத்துப்பாட்டினை வெளியிட்டார். பின்னர்ச் சிலப்பதிகாரத்தினை மிக விரிவாக ஆராய்ந்து 1892இல் வெளியிட்டார். பைபிளில் கண்ட ஒப்புமையகராதி முறையில் புறநானூற்றை ஆராய்ந்து 1894-இல் பதிப்பித்தார். அவ்வாறே மணிமேகலையை 1898-இல் வெளியிட்டார்.

4.1.3நல்லாசிரியர் “இவர் பாடம் சொல்லும் போது கடின பதங்களுக்கு மட்டும் பொருள் சொல்லுவார். கற்பனைகளை இன்றியமையாத இடங்களில் விளக்கிக் காட்டுவார். இன்ன கருத்துகளை ஒழுங்காக மனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுவார் – பாடம் சொல்லும் நூல்களில் உரைகளில் மேற்கோளாக வரும் செய்யுள்களுக்குப் பொருள் கூறுவார். புலவர்களைப் பற்றிய வரலாறுகளை அடிக்கடி சொல்லுவார்”

என்று தம் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைப் பாடம் சொல்லும் முறை பற்றித் தெளிவாய் இவர் கூறுவது குறிப்பிடத்தக்கது. தம் ஆசிரியரின் வழியிலேயே கும்பகோணத்திலும் சென்னை மாநிலக்கல்லூரியிலும் மிகச்சிறந்த தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந்தார் இக்காலத்தில் கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் உணர வேண்டிய கருத்துகள் அதில் அடங்கியிருப்பதை அறியலாம்.

4.1.4உரையாசிரியர் உ,வே.சா. பதிப்பித்தனவும் உரை எழுதி வெளியிட்டனவுமாகிய நூல்களில் தனித்தனிச் சொற்களை இவர் சுவைபெற எடுத்துக்கூறி விளக்கம் தந்திருக்கிறார். அவர் சில நூல்களுக்கு அரிய உரை எழுதியுள்ளார். மணிமேகலைக்கும், குறுந்தொகைக்கும் அவர் இயற்றிய உரைகள் அவரை ஒரு சிறந்த உரையாசிரியராக உலகுக்குக் காட்டுகின்றன. மணிமேகலைக்கும் பல இடங்களில் பதவுரையும் இடையிடையே சில அடிகளின் பொருட்சுருக்கத்தையும் காதை இறுதியில் ஒரே சொற்றொடரில், பெரும்பாலும் மூலநூல் சொற்களைக் கொண்டே, அக்காதையின் பொருட் சுருக்கத்தையும் தந்துள்ளார்.

4.2பதிப்பு நுட்பம்

உ.வே.சா. அவர்களின் பதிப்பு நுட்பம் குறிப்பிடத்தக்கது. அவருடைய பதிப்புகளின் முகவுரை ஆய்வுரையாகத் திகழும்; குறிப்புரைகள் மிகவும் பொருத்தமானவை; அவர் தரும் உவமை விளக்கங்களும் புராண விளக்கங்களும் பயனுள்ளவை; இடப்பெயர் மாற்றங்கள் குறித்த செய்திகளும் குறிப்பிடத்தக்கன. இவற்றில் வெளிப்பட்ட அவரது உரைநடை சிறப்புமிக்கது.

4.2.1முகவுரை அவர் பதிப்பித்த சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், உலாக்கள், கோவைகள், தூதுகள், இலக்கணங்கள் போன்ற பலவகை நூல்களுக்கு அவர் எழுதிய முகவுரைகளின் பொதுவியல்புகளும், சிறப்புச் செய்திகளும் குறிப்பிடத்தக்கன.

முகவுரை, நூலினை அறிந்து கொள்ள உதவுகின்றது. நூலின் இயல்புக்கு ஏற்ப முகவுரையின் போக்கும் மாறுகின்றது. இலக்கிய நுழைவாயிலாக அமைந்திருக்கும் முகவுரைகள் காலந்தோறும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடைந்து வந்திருக்கின்றன. நூற்பாயிரங்கள் முகவுரைகளின் பழைய வடிவங்கள் எனலாம். பதிப்பாசிரியர்கள் எல்லாரும் தாம் பதிப்பித்த நூல்கள் அனைத்திற்கும் முகவுரை எழுதவில்லை. யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் தாம் பதிப்பித்த நூல்களில் பெரும்பாலானவற்றிற்கு முகவுரை எழுதவில்லை. நூலுக்கு முகவுரை என்பது வீட்டுக்கு முன்வாயிலைப் போல முக்கியம் வாய்ந்தது. நூலின் நோக்கத்தைத் திறந்து காட்டும் திறவுகோலாகவும், ஆசிரியரின் இலக்கியப்பயணத்தைக் காட்டும் அருங்கருவியாகவும் முகவுரைகள் அமைந்துள்ளன.

உ.வே.சா. தாம் பதிப்பித்த எல்லா நூல்களின் முகவுரைகளிலும் அவற்றைப்பற்றிய பதிப்புச் செய்திகளை விரிவாகக் குறித்தார். குறுந்தொகை முகவுரையில் திருநாவுக்கரசு நாயனாரின் ‘மின்காட்டும்’ எனும் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் அப்பர், இறைவன் தருமிக்குக் ‘கனகக்கிழி’ அளித்த செய்தியைக் குறித்துள்ளார். ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி’ என்னும் பாடற்கருத்தைக் கொண்ட புராணச்செய்தி, அப்பாடலில் இடம் பெற்றுள்ளதால் உ.வே.சா. இதனை இணைத்தார்.

4.2.2 குறிப்புரை உ.வே.சா. தாம் பதிப்பித்த நூற்களனைத்திற்கும் குறிப்புரை வரைந்துள்ளார். இக்குறிப்புரைகள் அவரைச் சிறந்த பதிப்பாசிரியராக உலகிற்கு அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்துள்ளன. இக்குறிப்புரைகள் அவரது பன்னூற் புலமையையும், நினைவாற்றலையும் சிறந்த ஆய்வுத் திறனையும் விளக்கி நிற்கின்றன. மூலநூலில் காணப்படும் உவமைகள். மரபுச் செய்திகள், புராணக்கதைகள். வரலாற்றுக் குறிப்புகள். ஆகியவற்றின் விளக்கங்களும் இக்குறிப்புரையில் இடம் பெற்றுள்ளன. மூலத்தின் கீழே அடிக்குறிப்பாக அமைந்த பகுதியே இங்குக் குறிப்புரை என்று சுட்டப்பெறுகிறது.

4.2.3 உவமை விளக்கம் உ.வே.சா. சில இடங்களில் உவமைகள் கையாளப் பெறுதற்குக்காரணம் என்ன என்றும், அவை எவ்வாறு பொருந்துமென்றும் ஆராய்கின்றார். ‘நீலமணிமிடற்றொருவன் போல’ என்ற தொடருக்கு அவர் தரும் விளக்கத்தைக் காணலாம். ‘நீலமணிமிடற்றொருவன் என்ற உவமைக்குச் சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டுமென்பதாம் என்று பழைய உரைகாரர் விளக்கங் கூறியுள்ளார். உ.வே.சா. தம்குறிப்புரையில் “தன்னுடைய ஆக்கங் கருதாமல் விடத்தையுண்டு பல்லுயிர்களைக் காத்தருளிய புண்ணியனாதலின், நீலமணிமிடற்றொருவனை உவமை கூறினார்” என்று உவமைக்குக் காரணத்தை விளக்குகிறார். இவ்வாறு உவமைகளை விளக்கியும், ஒத்தவேற்றிலக்கிய அடிகளைத் தந்தும், புறநானூற்றிலேயே மீண்டும் மீண்டும் கையாளப் பெறும் உவமைகளை எடுத்துக் காட்டியும் கற்போர் மூலத்தை நன்குணருமாறும் உ.வே.சா. தம் குறிப்புரையை அமைத்துள்ளார்.

4.2.4 புராண விளக்கம் புராணக் கதைகளை அல்லது நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக விளக்கிய பின்னர், அக்கதைகள் விளங்குமாறு ஒப்புமையாக அமைந்த வேற்றிலக்கியச் செய்திகளையும் தருகிறார்.

‘முந்நீர் விழவின் நெடியோன்’ என்ற புறநானூற்றுப் பாடலடிக்குக்குறிப்புரை எழுதிய உ.வே.சா., ‘முன்னொரு காலத்தில் மதுரையை அழித்தற்கு வந்த கடலை, உக்கிரகுமார பாண்டியனென்பவன் ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் அருளிய வேலையெறிந்து வற்றச்செய்து அக்கடல் தன்னுடைய காலின் வடிம்பை யலம்பும்படி உயர்ந்து நின்றமையால் அவனுக்குக் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனென்பது பெயராயிற்று. இதனைத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் படலம் 21இல் 6ஆம் விருத்தம் முதலியவற்றால் உணர்க’ என்று எழுதி வில்லிபாரதம், மதுரைக்காஞ்சி போன்ற பல இலக்கியங்களினின்றும் ஒப்புமைப் பகுதிகளை எடுத்துக் காட்டுகிறார்.

4.2.5 இடப்பெயர் சுட்டல் உறந்தை (புறம் 69:12) என்பதன் குறிப்புரையில் புறநா. 67:8-9; பட்டினப்.285 என்று அவ்வூர்ப்பெயர் குறிக்கப்பெற்ற இலக்கியங்களைக் குறிப்பிட்டுப் பின்னர் உறையூர் என்பதனை உறந்தையென முன்னோர் திரித்து வழங்கியதற்குத் தொல்காப்பியச் சூத்திரத்திலிருந்து மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார்.

4.3 உரை நுட்பம்

இலக்கியம் படைத்த ஆசிரியன் நனவிலி மனக் கருத்துகளையும் (unconscious Intentions), கற்பனைப் பாத்திரங்களின் நோக்கங்களையும் உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து விளக்குவது உளவியல் அணுகுமுறை. உளவியல் அறிவை இலக்கியக் கருத்துகளோடு பொருத்தி விளக்க முற்படுவது இவ்வணுகுமுறை. படைப்பாளிகளின் கருத்தையும் நோக்கத்தையும் நன்கு ஆராய்ந்து அவன் எண்ணத்தின் உட்பகுதி இன்னதெனப் பல இடங்களில் இவர் கூறிச் செல்வதைக் காணலாம். இன்றைய திறனாய்வாளர்களைப் போலத் தனித்தனியே இன்ன அணுகுமுறை எனக் குறிக்காவிடினும் உருவஇயல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, தொன்மவியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை என்பன போன்ற பல அணுகுமுறைகளை இவர் உரைகளில் காண முடிகிறது. இன்றைய திறனாய்வாளர்களுக்கு இவ்வுரை ஆய்வுத்தளமாய் அமையுமென்பது திண்ணம்.

4.3.1 எட்டுத்தொகை உரைகள் உ.வே.சா. இலக்கிய நடையிலும் எழுத வல்லவர். என்பதற்குச் சான்றாகப் புறநானூற்றுப் பதிப்பின் முன்னுரையில் ஒரு பகுதியைக் காண்க.

“அமிழ்திற் சிறந்த தமிழ் மொழியதனை ஒன்பான் சுவைபுணர்த்தன்பால் வளர்த்தருள் நச்சும் பெருமை முச்சங்கத்துள் கடைச் சங்கப் புலவர்கள் அருளிச் செய்த எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு என்பது எட்டாவதாகும்”

என்று எழுதியுள்ளார். இந்த முகவுரையைப் படித்த ஜி.யு.போப் புறநானூற்றுப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குறுந்தொகைக்கு உரை எழுதும்போது உ.வே.சா.வுக்கு வயது 82.

“பல வருஷங்களாக முயன்று படித்துப் பலருடைய உதவியைப் பெற்று ஆராய்ந்து சுவைத்துப் பார்த்த இந்நூல் இப்பொழுது இந்த உருவத்தில் வெளிவருவதைப் பார்க்கையில் எனக்கு உண்டாகும் இன்பம் எழுதி உணர்த்துதற்கரியது”

என எழுதியிருப்பதிலிருந்து குறுந்தொகை உரையில் தம் பழுத்த அனுபவத்தின் பயனை ஊற்றியுள்ளார் என உணர்கிறோம்.

“நெருஞ்சியனைய” (குறுந். 315:4) எனும் பகுதிக்கு ‘நெருஞ்சிமலர் ஞாயிறு கீழ்த்திசையிருப்பின் கிழக்கு நோக்கியும், மேற்றிசைச் செல்லின் மேற்கு நோக்கியும் நிற்பது… ஞாயிற்றை நோக்கிய நெருஞ்சி போலத் தலைவனை என் தோள் நோக்கி நிற்குமென்றாள்’ என விரிவாக உரை எழுதினார். இது போன்று எழுதியுள்ள, உ.வே.சா. வின் உரையை அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘தெளிவும் விளக்கமும் அமைந்த புதிய உரை’ எனப் பாராட்டியுள்ளார்.

தொகை நூல்களில் முதலில் தொகுக்கப் பெற்றது குறுந்தொகை என்பதற்கு ஏதுக்கள் கூறினார்.

“காக்கை பாடினியார் நச்செள்ளையார், கயமனார், கள்ளிலாத்திரையனார், ஓரேருழவனார் போன்ற புலவர்களின் இயற்பெயர்கள் மறைய, குறுந்தொகையில் அவர்கள் எழுதிய விழுமிய பாடல்களின் நயமிகு சொற்களாற் பெயர் பெற்றார்”

“இவ்வாறு குறுந்தொகையிலுள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர் பெற்ற புலவர்கள், அப்பெயராலேயே பிற நூல்களில் வழங்கப்பெறுவதுபோல அந்நூல்களிலுள்ள செய்யுட்பகுதி காரணமாகப் பெயர் பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை”

“முதலில் ஆசிரியப் பாக்களில் தனியாக உள்ள அகப்பாக்களைத் தொகுத்து அடியளவால் மூன்று பிரிவாக்கிக் குறைந்த அளவுடைய குறுந்தொகையை முதலிற் செப்பஞ்செய்தார்களென்று கொள்வது ஒருவகையில் இயல்புடையதாகவே தோன்றுகிறது”

ஆகவே குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உ.வே.சா. வைப் பின்பற்றி உரை எழுதிய உரையாசிரியர்கள் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை, பெருமழைப் புலவர். பொ.வே.சோமசுந்தரனார் போன்றவர்களாவர்.

4.3.2 ஆய்வுச் செய்திகள் உ.வே.சா. தம் குறிப்புரையில் மன்னர், புலவர் ஆகியோரின் பெயர்க்காரணங்களை ஆராய்ந்து, தகுந்த சான்றுகளுடன் வெளியிட்டுள்ளார். ஊர்களைப் பற்றிய குறிப்பு வரும்போது அவை இருக்குமிடம், அவற்றின் இன்றைய பெயர்கள் போன்ற செய்திகளை நன்கு ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஆய்வு பெரும்பாலும் முன்னோர் கருத்தைப் பொன்னேபோற் பொதிந்துபோற்றுவதாகவே அமைந்துள்ளது. இரண்டு மாறுபட்ட கருத்துகள் தோன்றும்போது அவற்றுள் எது மிகவும் பொருத்தமானது எனஆராய்ந்து தம் கருத்தைக் கூறாது, இரண்டு கருத்துகளையும் கூறிமுடிவைக் கற்போருக்கே விட்டுச் செல்வதாகவே அமைந்துள்ளது. மேலும், பாடல்களிலும் பழைய உரையிலும் தம் உள்ளம் கவர்ந்த பகுதிகள் இருப்பின் அவற்றைத் திறனாய்ந்து பாராட்டுகிறார். இவ்வாறு ஆய்வுரை, பாராட்டுரை அனைத்தையும் உள்ளடக்கியதாக அவரது குறிப்புரை அமைந்துள்ளது.

4.3.3ஆர்வத்தைத் தூண்டும் உத்தி வரலாற்றை முன் கூறிப் படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் உத்தியை இவர் கையாளுகிறார்.

“பத்துப்பாட்டில் எட்டாவது பாட்டாக இருப்பது குறிஞ்சிப்பாட்டு. அது சங்கப் புலவர்களில் தலைசிறந்தவராகிய கபிலரால் ஆரிய அரசனாகிய பிரகத்தன் என்பவனுக்குத் தமிழின் நயத்தைத் தெரிவிக்கும் பொருட்டுப் பாடப்பெற்றது”

என்று பத்துப்பாட்டு முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியைப் படிப்பவர்கள் குறிஞ்சிப்பாட்டைச் சுவைக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறுவர். இவ்வாறு ஆர்வத்தைத் தூண்டும் உத்திகள் பலவற்றைக் கையாண்டுள்ளார்.

4.4 உ.வே.சா. வின் உரைநடை நூல்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் புதிய தமிழ் உரைநடை மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை உருவாக வேண்டும் என்று பாரதியார், உ.வே.சா. போன்றோர் அயராது பாடுபட்டனர்.

“தமிழ் வசனநடை இப்போதுதான் பிறந்து பல வருஷம் ஆகவில்லை… ஆதலால் இப்போதே வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும்”

என்ற கருத்துடைய பாரதியார் உரைநடை நூல்களையும் எழுதத் தொடங்கினார்.

பாரதியாரைப் போலவே நினைவு மஞ்சரி என்னும் நூலின்முதல்பாக முன்னுரையில் உரைநடையின் எளிமை பற்றியும், அக்காலமக்களின் விருப்பம் பற்றியும் உ.வே.சா. வும் பின்வருமாறு கூறியுள்ளார்.

“காலத்திற்கும் நாகரீகத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப ஜனங்களுடைய கருத்துக்களும் விருப்பங்களும் மாறிவருகின்றன,,, செய்யுளைக்காட்டிலும் வசனம் மூலமாக ஜனங்கள் விஷயங்களை மிகவும் சுலபமாகத் தெரிந்து கொள்ள இயல்வது தான்”

என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்து அவர்கால இலக்கிய நடையையும், மக்களின் விருப்பத்தையும், உரைநடையின் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடிகிறது. காலத்தின் தேவைக்கேற்ப உரைநடை அமையவேண்டிய திறம் குறித்து உ.வே.சா. சிந்தித்திருக்கிறார்.

4.4.1 கட்டுரை நூல்கள் எளிய தமிழில் பொருளைத் தெளிவாகவும் நயம் பொருந்தவும், புலப்படுத்தும் ஒரே நோக்குடன் இவர் உரைநடை நூல்களை இயற்றினார். உ.வே.சா., சிறந்த கட்டுரையாசிரியர், அவர் எழுதிய கட்டுரைகள் நல்லுரைக்கோவை (4 பாகங்கள்), நினைவு மஞ்சரி (2 பாகங்கள்), நான் கண்டதும் கேட்டதும் எனும் நூல்களாக வெளிவந்தன, புதியதும் பழையதும், மணிமேகலை கதைச்சுருக்கம், புத்தசரிதம், திருக்குறளும் திருவள்ளுவரும், மத்தியார்ச்சுன மான்மியம் என்பன அவர் எழுதிய பிற கட்டுரை நூல்கள். மேலும்சில செய்திகளைக் கூட்டிக் கதைகள் போல எழுதியுள்ளார். அவற்றுள் நடந்தவைகளும் அவர் கேட்டவைகளும் எனப் பல திறத்தன உள. இவர் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பிறரும் அறிந்து மகிழும் வண்ணம் சுவைபட எழுதியுள்ளார். சிறந்த குருபக்தி, சுவாமி இருக்கிறார், மாம்பழப்பாட்டு போன்ற கட்டுரைகள் நகைச்சுவை தோன்ற எழுதப்பட்டனவாகும். என்ன வேண்டும்? சங்கராபரணம் நரசையர், அவன் போய்விட்டான் போன்ற கட்டுரைகள் படித்து இன்புறத்தக்கன. முத்தமிழ் சாராத வேறு பொதுவான செய்திகளையும் உ.வே.சா. எழுதியுள்ளார்.

4.4.2வரலாற்று நூல்கள் ஐயர் எழுதிய உரைநடை நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். வாழ்க்கை வரலாறுகள் ஒருவகை; மற்றொருவகை ஏடுதேடிய வரலாறுகள். வாழ்க்கை வரலாற்று நூல்கள் மொத்தம் ஏழு. அவை:

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்- பகுதி-1

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்- பகுதி-2

மகாவைத்தியநாதையர்,

கனம் கிருஷ்ணையர்,

கோபால கிருஷ்ண பாரதியார்,

என் சரித்திரம்,

வித்துவான் தியாகராசச் செட்டியார்

தனித்தனியே சிலருடைய வரலாறுகள் நூல்வடிவில் எழுதியதையன்றிக் கட்டுரை வடிவிலும் பலருடைய வரலாறுகளை எழுதியுள்ளார். புதுக்கோட்டையில் திவானாக இருந்த சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், இசைப்புலவர் ஆனை ஐயா, சுப்பிரமணிய பாரதியார் முதலிய பலரைப்பற்றியும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

4.4.3 நூல்களின் சுவைத்திறம் எந்த நிகழ்ச்சியைக் கூறினாலும் அதைப் படிப்பவர் மனத்தில் பதியும்படி சுவையுடன் விரித்தெழுதுவது சாமிநாதையர் இயல்பு. இவரது உரைநடை நூல்களில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் இதைக் காணலாம்.

“தெளிவான நடையில் எல்லோருக்கும் விளங்கும் சொற்களைப் பெய்து உயிரோவியத்தைப் போலத் தாம் கூறுவதை எழுதும் ஆற்றல் ஐயருக்கு இருந்தது. சிறிய வகுப்பில் படிக்கும் பிள்ளை முதல் பெரும்புலவர் வரையில் அவருடைய கட்டுரைகளைப் படித்து மகிழலாம். அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி அவற்றின் சுவையை உணரலாம்”

என்று அவர் மாணவர் கி.வா. ஜகந்நாதன் பாராட்டியுள்ளார். மேலும் எஸ்.டி. காசிராசன் என்பவர்,

“பாட்டியற்றும் வன்மை, உரை காணும் திறம், உரைநடை எழுதும் ஓட்டம், கேட்பவர் உளங்கொள எடுத்துரைக்கும் பேச்சாற்றல், நகைச்சுவை ஆகிய இவை ஒருங்கே அமைந்து விளங்கியமை அவர் தம் பலதிறத் தொண்டுகளுக்கும் அணிக்கு அணி செய்வது போல் விளங்கா நின்றன”

என்று பாராட்டியுள்ளார்.

4.4.4 கவித்துவத் தலைப்பு உரைநடை நூல்களில் தாம் எழுதியுள்ள கட்டுரைகளுக்கு இவர் அருமையான தலைப்புகள் இடுவார். அத்தலைப்புகளே செய்தியின் சுவையைக் கூட்டும்; கட்டுரையைப் படிக்கத் தூண்டும். சுவடிகளைப் பதிப்பிப்பதற்காக இவர் ஏடு தேடிப் பல ஊர்களுக்கும் செல்வதுண்டு. அவ்வாறு சென்று தேடிவரும் பொழுது. பத்துப்பாட்டுச் சுவடியின் ஒரு பகுதியான முல்லைப்பாட்டு அடங்கிய ஏடொன்று கிடைத்தது. அது கிடைத்த போது இவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நிலவு ஒளி வீசும் இரவில் அது கிடைத்ததால், ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற அருமையான தலைப்பிட்டுக் கலைமகள் மாத இதழில் விரிவாக எழுதினார். நல்லுரைக்கோவை இரண்டாம் பாகத்தில் அது இடம் பெற்று நூலாய் வெளிவந்தது. அந்நிகழ்ச்சியைச் சுவைபடக் கூறுவதைக் காணலாம்.

“என் நண்பர்களுடன் நான் ஆகாரம் செய்து கொண்ட வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன், நிலா ஒளி நன்றாக வீசியது. அப்போது லட்சுமணக் கவிராயர் மிகவும் வேகமாக நாங்கள் இருந்த இடம் வந்து ‘இந்தப் புத்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் உள்ளது. பார்த்துவிட்டுத் திருப்பியனுப்பி விடுவதாக வாங்கி வந்திருக்கிறேன்’ என்று ஒரு சுவடியைக் கொடுத்தார். எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தேன். சட்டென்று ‘முல்லைப்பாட்டு’ என்ற பெயர் என் கண்ணிற்பட்டது. அப்போது எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லை இல்லை. திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக இருந்தன”.

முல்லைப்பாட்டு கிடைத்த மகிழ்ச்சியையும், அவருடைய கவித்துவப் பண்பையும் ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற தலைப்பு வெளிப்படுத்துகிறது.

4.5 உ.வே.சா.வின் உரைநடை நலம்

உ.வே.சா. எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் உரைநடைத் தமிழுக்கு அவர் வழங்கிய கொடைகளாகும். பல்வேறு தலைப்புகளில் அவருடைய கட்டுரைகள் அமைந்துள்ளன. உ.வே.சா. வின் எளிய நடைத்திறனுக்கு மூல காரணமாக அமைவது, எழுதும் அனைத்தும் மக்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருத்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தேயாகும். உ.வே.சாமிநாதையரின் உரைநடை வருணனை முறையிலும், எடுத்துரைமுறையிலும், நாடக முறையிலும், எள்ளல் முறையிலும் அமைந்துள்ளது. எனவே ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்குக் காணலாம்.

4.5.1வருணனை உரைநடை ஒரு பொருளையோ அல்லது காட்சியையோ வருணித்துக் காட்டும் போது இந்நடையின் தனித்தன்மை புலனாகின்றது, புலன்களால் உணர்வனவற்றை அல்லது புலன்களின் வாயிலாக உணரும் புறக்காட்சிகளைச் சொற்களில் மொழிபெயர்த்துக் காட்டுவதே இவ்வகை வருணனை எனலாம். உ.வே.சா.வின் `மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தின்’ ஒரு பகுதியிலிருந்து இவ்வருணனை உரைநடைக்குச் சான்று காணலாம். ஐயரவர்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து நின்ற நால்வரைப் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்.

“என் உடம்பை எடுத்து நிறுத்திய என் தந்தையார், என் அறிவை நிலை நிறுத்திய என் ஆசிரியர், என் நிலையை உயர்த்திய திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். எனக்கு ஒரு பதவியை அளித்து நிலைபெறச் செய்த ஸ்ரீ தியாகராசச் செட்டியார் ஆகியவர்கள் எனக்கு மகோபகாரம் செய்தவர்களின் வரிசையிலே முன்னணியில் நிற்பவர்கள், இந்த நால்வரும் நால்வேறு குணம் உடையவர்கள், நால்வேறு நிலையை உடையவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எனக்குத் தெய்வமாய் விளங்குகின்றனர்,”

இச்சொற்கள் சாமிநாதையரின் தமிழ்வழிப் பண்பாட்டையும், குடிவழி நன்றியுணர்வையும் காட்டுகின்றன.

சாமிநாதையர் பல இதழ்களில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவற்றின் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்றது. எளிமையானது; இனியது. நீர்ப்பளிங்கு போல் இருந்தாலும் ஆழ்ந்துள்ள அருவி போலப் பொருள் ஆழம் உடையது. எளிமையான சிறிய சிறிய தொடர்களை அமைத்து எழுதுவதில் இவர் திரு.வி.க.வுக்கு ஒப்பானவர். அறிஞர்களைப்பற்றி வருணிக்கும் போது புற வருணனையைத் தந்து நம் கண்முன் நிறுத்துவார். தம் ஆசிரியரைப் பற்றி வருணனை நடையைக் கையாண்டு உள்ளது உள்ளவாறே அவர் தோற்றத்தை நம் கண்முன் நிறுத்துவதைப் பின்வரும் பகுதியால் அறியலாம்:

“அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும், இளந்தொந்தியும், முழங்கால் வரை நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும், அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை. ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது…. பல காலமாய்த் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப்போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம் போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது”

என்று வருணனை செய்துள்ளார். எளிய நடையில் இப்புனைவு அமைந்துள்ளது. இதைப்படிக்கும் போது பிள்ளையவர்களை நேரில் காண்பது போன்ற ஒருமன நிலையை நாம் அடைகிறோம்.

தம் அருமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் புறத்தோற்றத்தை வருணித்தவர் அவரது அகத்தின் ஆழத்தையும், மன ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகிறார்.

“காட்சிக்கு எளிமையும் பணிவும் சாந்தமும் இவர் பால் உள்ளன என்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும் அவைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல, அறிவின் விசித்திர சக்தி எல்லாம் கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றம் உடையவராய் இருந்தார்”.

இவ்வருணனை மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பெரும் புலமையை வெளிப்படுத்துகிறது.

மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் இரண்டு பாகங்களைக் கொண்டது. தாம் அவரிடம் தமிழ் பயிலப் போவதற்கு முந்திய நிகழ்ச்சிகளை முதற்பாகமாகவும், அவரிடம் சேர்ந்து தமிழ் பயின்றகாலம் தொடங்கி அப்புலவர் பெருமானுடைய இறுதிக்காலம்வரையிலும் இரண்டாம் பாகமாகவும் எழுதியிருக்கிறார். அவற்றைப்படிக்கும் போது உ.வே.சாமிநாதையருக்கு இருந்த குருபக்தியைவியக்காமல் இருக்க முடியாது. குருவின் மீது கொண்ட மிகுந்தபக்தியினால் இப்புலவர் பிரான், இத்தமிழ்க்கவிஞர் என்றுகுறிப்பிடுவாரேயொழியப் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதில்லை.மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் அவருடைய வரலாறு மட்டும் இருக்கிறது என்று சொல்ல முடியாது, அக்காலத்தில் இருந்தபுலவர்களின் நிலை, தமிழ் ஆர்வம், பெரியமனிதர்களின் இயல்புமுதலிய பல செய்திகளும் இருக்கின்றன.

4.5.2எடுத்துரை உரைநடை ஒரு செயல் பற்றியோ, வாழ்வின் இயக்கம் பற்றியோ விவரிப்பது எடுத்துரை உரைநடை. கதை சொல்லும் எல்லா நூல்களும் இவ்வகையில் அடங்கும். வேறு எந்த வகையான உரைநடையையும் விட மக்கள் விரும்பிப் படிப்பது இதுவே. எடுத்துரை உரைநடையைப் படிக்கும் போது ஒரு நாடகத்தையோ திரைப்படத்தையோ காண்பது போன்ற உணர்வு தோன்றும்.

இக்காலத் தமிழ் உரைநடையில் பேரளவாகத் திகழ்வது எடுத்துரை உரைநடையே. புனைகதைகள், வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு போன்றன இவ்வகையில் அடங்கும்.

எடுத்துரை சிறு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்;பெரிய கதையாகவும் இருக்கலாம். இதோ, உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘நல்லுரைக் கோவை’ யிலிருந்து ஒருபகுதி:

“ஈஸ்வர வருஷத்தில் (1877) மதுரையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்குத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தராகிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகரும் அடியார் குழாங்களோடு சென்றிருந்தனர். வன்றொண்டரும் போயிருந்தார். அங்கே நமசிவாய தேசிகரைத் தரிசிக்கும் பொருட்டுக் கையுறையாகக் கொண்டு சென்ற இரண்டு எலுமிச்சம் பழங்களை அவர் கொடுத்து வணங்கினார். அப்பொழுது அத்தேசிகர், “ஐயா, நீங்கள் கொடுத்தவை இரண்டு பழமானாலும் நாலு பழம்” என்று சாதுரியமாகப் பேசினார். நாலு பழமென்பதற்கு (மரத்தில்) தொங்கும் பழமென்றும், நான்கு பழமென்றும் இரண்டு பொருள் தொனித்தன. இதனைக் கேட்ட வன்றொண்டர் “சாமி, சாமி, நன்றாக இருக்கிறது!” என்று வியந்தார். உடனே தேசிகர் “நான் குறையப்படித்தாலும் கூடப் படித்தவன்” என்றதற்கு அதிகமாகப் படித்தவனென்றும் உடனிருந்து படித்தவனென்றும் இரண்டு பொருள் தோன்றின. நமச்சிவாய தேசிகர் வன்றொண்டரோடு பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டவர், அவருடைய சிலேடை வார்த்தைகளைக் கேட்டு வன்றொண்டர் இன்பத்தை அடைந்து அவருடைய அறிவு நுணுக்கத்தைப் பாராட்டினார்”.

மேற்கண்ட எடுத்துரை தன்னளவில் முழுமை பெற்ற ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடந்து முடிந்த நிகழ்ச்சியைச்சுவையோடு சொல்கிறது.

4.5.3 நாடக உரைநடை முறை நாடக உரைநடை பேச்சு வழக்கை ஒட்டியே அமையும். இயல்பு நவிற்சிப் பாங்கு உடையதாய் இருக்கும். வகுப்பறையில் ஆசிரியர் மாணவரிடையே நடக்கும் உரையாடலை இவ்வகை உரைநடைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ‘எழுத்துப்பேறு’ என்ற இலக்கணத் தொடரை அடிப்படையாய் வைத்துச் சுவையான நிகழ்ச்சியொன்றை உ.வே.சா. நயமுறக் கூறியிருக்கின்றார். இதை அவரது எழுத்து வாயிலாகவே இங்குக் காணலாம்.

“கோபால்ராவ் தமிழில் நல்ல பயிற்சி உடையவர், நன்னூலையும் பிற நூல்களையும் அழுத்தமாய்ப் படித்தவர்“. ஒரு நாள் கோபால் ராவ் காலேஜில் (கும்பகோணம்) இலக்கணப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வழக்கப்படி முதல் நாள் நடந்த பாடத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். ஒரு மாணாக்கனை நோக்கி, “செல்வுழிச்செல்க என்பதை எப்படிப் பிரிப்பது? என்று கேட்டார். அவன், செல்+உழி+செல்க என்று பிரித்துச் சொன்னான்.

‘வகரம் இடையே வந்திருக்கிறதே’ அதற்குப் பெயர் என்ன? என்று கேட்டார். அந்த மாணாக்கன் விடை கூறவில்லை. ஒவ்வொரு மாணவனாய்க் கேட்டு வருகையில் பலர் விடை தெரியாமல் விழித்தனர்.

“ஒரு மாணாக்கன் மாத்திரம், செல்வுழி என்பதில் இடையே வந்த வகரம் எழுத்துப்பேறு. விண்வத்துக் கொட்கும் என்பதில் விண், அத்து என்னும் இரண்டும் சேரும் போது இடையில் வந்த வகரமும் அத்தகையதே என்று தைரியமாகச் சொன்னான்.

“அந்த வகரத்தை உடம்படுமெய் என்று ஏன் சொல்லக் கூடாது? என்று கோபால்ராவ் கேட்டார். உயிரீற்றின் பின் உயிர் வந்தால் இரண்டும் நின்றவாறே சேராவாதலால் அவற்றை உடம்படுத்தற்கு வரும் யகர வகர மெய்களை மட்டும் உடம்படுமெய் என்று சொல்வர். இது வேறு வகையில் தோன்றிய எழுத்தாதலால் எழுத்துப்பேறு என்று தான் சொல்ல வேண்டும்’ என்று அவன் தெளிவாய்க் கூறினான்.

“நீ இந்தப் பள்ளிக்கூடத்தில் எவ்வளவு காலமாகப் படிக்கிறாய்?

இதற்குமுன் எங்கே, யாரிடம் படித்தாய்?”

“இந்த வருஷந்தான் இங்கே வந்தேன். இதற்குமுன் ஸ்ரீரங்கம் பள்ளிக்கூடத்தில் தியாகராசச் செட்டியாரிடம் படித்தேன். அவரிடந்தான் நன்னூலைக் கற்றுக்கொண்டேன்” என்றான் அவன்.

“கோபால்ராவ் ஏதோ ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தவர் போல் உற்சாகமடைந்தார். தியாகராசச் செட்டியாரின் திறமையை அறிந்தவுடன் அவரையே வருவித்து அங்கே நியமிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.”

இவ்வாறு எழுத்துப்பேறு, செட்டியார் கும்பகோணத்தில் உத்தியோகப்பேறு பெறக் காரணமாயிற்று. மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி நாடக உரைநடை முறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இது வித்துவான் தியாகராசச் செட்டியார் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

4.5.4 நகைச்சுவை நடை உ.வே.சாமிநாதையரின் சொல் நடையில் ஆங்காங்குநகைச்சுவையும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். பற்பல இடங்களில்பற்பல நிகழ்ச்சிகளை இவர் நகைச்சுவையோடு கூறிச் செல்லுகிறார். நான் கண்டதும் கேட்டதும் என்னும் நூலின் 12 ஆவது கட்டுரை ‘டிங்கினானே’ என்ற தலைப்பை உடையது. இது நகைச்சுவைக்குநிலைக்களமாய் விளங்குகின்றது.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் ஐயர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டுவந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார்.

ஒருநாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையை ஒரு காரியமாக மாயவரத்தில் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அங்குச் சென்ற சவேரிநாத பிள்ளை இரவு 12 மணியாகியும் திரும்பி வரவில்லை. பிறகு 2 மணிக்கு வந்தார். வந்தவரை “ஏன் இவ்வளவு காலதாமதம்” என்று பிள்ளை வினவினார். அதற்குப் பின்வருமாறு சவேரிநாதர் பதில் கூறினார்:

“நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.

என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்…. அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.

ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.

‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,

‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவாராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார்சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரியவந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக்காட்டி வந்தார்கள்’.

இவ்வாறு மகாபாரதத்தில் இடம்பெற்ற பீமசேனன் பற்றிய கதை தெருக்கூத்தாக இரவில் நடைபெற்றதை அறிய முடிகிறது.

உ.வே.சா. மகாமகோபாத்யாயர் (பெரும்பேராசிரியர்) பட்டம்பெற்ற போது மகாகவி பாரதியார்,

“குடந்தை நகர்க் கலைஞர் கோவே பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” என்று போற்றிப் பாடியுள்ளார்.

பாரதியாரும். உ.வே,சா.வும் இருபெரும் சுடர்கள். தமிழ் மறுமலர்ச்சியின் தாயும் தந்தையுமாகத் திகழ்கின்றனர். தமிழ்ப் பணிக்கெனவே பிறந்த தமிழன்னையின் தனிப்பெரும் தவப்புதல்வர்கள். ‘பாரதியுகம்’ என்பது போல, ‘சாமிநாதையர் காலம்’ என்று கூறலாம். தமிழே தானாய், தானே தமிழாய் ஆன நிறைவாழ்வு, தமிழ் வாழ்வு வாய்ந்த தமிழினிய தெய்வம் உ.வே.சாமிநாதையர் ஆவார்.

4.6. தொகுப்புரை

உ.வே.சா. வண்டமிழ் வழங்கிய வள்ளல். பைந்தமிழைக்காக்கப் பிறவி எடுத்தவர். உ.வே.சாமிநாதையர் பொதுமக்கட்குப் புரியும் வகையில் எளிய நடையில் பழகு தமிழ்ச்சொற்களைக் கொண்டு மரபு கெடாது எழுதினார்.

தெளிவான நடையில் எல்லாருக்கும் விளங்கும்சொற்களைப்பெய்து உயிரோவியத்தைப் போலத் தாம் கருதுவதைஎழுதும் ஆற்றல் சாமிநாதையருக்கு இருந்தது.

எந்த நிகழ்ச்சியைக் கூறினாலும் அதைப் படிப்பவர் மனத்தில்பதியும்படி சுவையுடன் விரித்தெழுதுவது உ.வே.சாமிநாதையர் இயல்பு.உ.வே.சா.வின் உரைநடையால் தமிழ் உரை நடை வளம் பெற்றது.

பாடம் - 5

மறைமலையடிகளார் உரைநடை

5.0பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் உரைநடை, இலக்கியத்தின் ஒரு பிரிவாக மதிக்கப்படும் அளவிற்கு வளம் பெற்று இருந்தது. இவ்வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் மறைமலை அடிகளாரும், திரு.வி.கல்யாணசுந்தரனாரும் ஆவார்கள். இளமையிலேயே தமிழ்மொழி கற்று, சங்கப் புலவர் போல் பாடும் ஆற்றல் பெற்ற மறைமலை அடிகள் ஆங்கில உரைநடைக்கு இணையாகத் தமிழ் உரைநடை அமைய வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர். அதன் பயனாய், சங்கநூல் ஆய்வுகளையும், சமய நூல் ஆராய்ச்சிகளையும், மொழி பெயர்ப்பு நூல்களையும், நாவல்களையும், கட்டுரைகளையும், வரலாற்று அறிவியல் கருத்துகளையும் உரைநடையில் எழுதித் தந்தார். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கிய பெருமை இவருக்கு உண்டு.

5.1மறைமலையடிகளார் வாழ்க்கை

1876-இல் நாகப்பட்டினத்திலுள்ள காடம்பாடியில் அடிகளார் தோன்றினார். அத்திருத்தலத்து இறைவன் பெயரான வேதாசலம் என்பதையே பெற்றோர் அவருக்குச் சூட்டி மகிழ்ந்தனர். வேதாசலம் அவர்களின் அன்னை பெயர் சின்னம்மையார். தந்தையார் பெயர் சொக்கநாதப் பிள்ளை. அடிகளார் இளமையிலேயே கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவராக விளங்கினார். பன்னிரண்டாம் அகவையில் தந்தையை இழந்த அடிகளார், ஒன்பதாம் வகுப்பு வரைதான் கற்றார்.

5.1.1தமிழ்க் கல்வி தமிழ் நூல்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அடிகளாருக்கு இயற்கையாக எழுந்தது. நாகப்பட்டினத்தில் வெ.நாராயணசாமிப்பிள்ளை என்பார் புத்தகக்கடை வைத்திருந்தார். தமிழ்ப் பெரும்பேராசிரியராக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களிடம் இவர் முறையாகத் தமிழ் கற்றவர். நாராயணசாமிப் பிள்ளை புத்தக விற்பனையோடு தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்து வந்தார். இவரிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தருக்க நூல்களையும் முறையாகக் கற்றுச் சிறந்த அறிவு பெற்றார் அடிகளார்.

5.1.2அடிகளாரின் படைப்புகள் 1898 முதல் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தார். அடிகளாரின் விளக்கவுரைகள் செறிவானவை. அவற்றின் இடையிடையே நகைச்சுவையும் உலகியல் மேற்கோள்களும் நிறைய இடம்பெறுவதுண்டு. அடிகளார் காலத்தில் காரைக்காலில் நடந்து வந்த திராவிட மஞ்சரி, பாஸ்கர ஞானோதயம் என்னுங்கிழமைத் தாள்களுக்கும், நாகப்பட்டினத்திலேயே நடைபெற்று வந்த நாகை நீலலோசனி என்னும் கிழமைத்தாளுக்கும் பல கட்டுரைகளை எழுதினார். ஞானசாகரம் என்னும் திங்களிதழ் அடிகளாரின் முயற்சியால் 1902ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. நூல் எழுதுதல், நூலாராய்தல், எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியிடுதல் போன்ற பலதுறைகளில் அடிகளார் தமிழுக்குச் செய்துள்ள தொண்டுகள் அளப்பரியன. அடிகளார் அரிய ஆங்கில நூல்களை ஆராய்ந்துள்ளார். கல்வி, உய்த்துணர்வு, சொல்வன்மை இம்மூன்றும் வாய்க்கப் பெற்றிருந்தார். 1903ஆம் ஆண்டு மாணவர்களின் வேண்டுகோளின்படி, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய இருநூல்களுக்கும் ஆராய்ச்சியுரை எழுதி வெளியிட்டார்.

செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் அடிகளார் நூல்களைப் படைத்துள்ளார். திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலியன அடிகளார் இயற்றிய செய்யுள் நூல்களாகும். சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்க்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், இந்தி பொது மொழியா? போன்ற கட்டுரை நூல்களையும் அடிகளார் எழுதியுள்ளார். குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலியன அடிகளாரின் புதின நூல்களாகும். வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தை மொழிபெயர்த்து அடிகளார் சாகுந்தல நாடகம் என்று பெயரிட்டுள்ளார். அம்பிகாபதி அமராவதி என்ற நாடக நூலையும் அடிகளார் எழுதியுள்ளார்.

அடிகளாரின் ஆராய்ச்சி நூல்களை இலக்கிய ஆராய்ச்சி, காலவரலாற்று ஆராய்ச்சி, வாழ்வியல் ஆராய்ச்சி என்ற மூன்று பிரிவுகளாகப் பாகுபடுத்தலாம். பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், மாணிக்க வாசகர் வரலாறும் காலமும், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், சோமசுந்தர நாயகர் வரலாறு முதலியன அடிகளாரின் கால வரலாற்றை உணர்த்தும் அடிகளாரின் ஆய்வு நூல்களாகும். பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், வளோண் நாகரிகம், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? என்பன வாழ்வியல் ஆய்வு நூல்களாக விளங்குகின்றன. வாழ்வியல் ஆராய்ச்சி நூல்களில் சமயத் தொடர்புடைய நூல்கள் சைவ சித்தாந்த ஞானபோதம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவமாகா, பழந்தமிழர் கொள்கையே சைவ சமயம், தமிழர் மதம் முதலியனவாகும். வாழ்வியல் ஆய்வு நூல்களிலே மரணத்தின் பின் மனிதர் நிலை, யோகநித்திரை அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி. மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நான்கு நூல்களும் மறைபொருளியலை உணர்த்தும் நூல்கள் ஆகும்.

சைவம், தமிழ் இரண்டையும் தம் இரு கண்களாகக் கருதியவர் அடிகளார். ஏனைய சமய உண்மைகளோடு சைவ சித்தாந்த உண்மைகளையும் ஒப்பு நோக்கி அடிகளார் ஆராய்ந்தார். இவ்வாராய்ச்சியின் முடிவாக, சைவ சித்தாந்தமும் செயல்முறையறிவும் என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்நூல் அடிகளாரின் ஆழ்ந்த சிவநெறிப் பற்றினை விளக்குவதாகும். 1911-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய அடிகளார் சைவ சித்தாந்தப் பணியிலும் நூல்களை எழுதுவதிலும் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டார். இல்லறத்திலிருந்து காவியுடுத்துத் துறவு பூண்டு சுவாமி வேதாசலம் ஆயினார். 1911-இல் பொது நிலைக் கழகம் என ஒன்றைத் தோற்றுவித்துச் சாதி வேறுபாடில்லாமல் பொது மக்களுக்குக் கடவுட்பற்றும் சமயப் பற்றும் உண்டாக்கும் சொற்பொழிவுகள் நடத்தினார். திருமுருகன் அச்சுக்கூடம் என ஒன்றைத் தொடங்கிப் பல நூல்களை வெளியிட்டார்.

5.1.3தனித்தமிழ் இயக்கத் தோற்றம் சங்க காலத்திற்குப் பின் தனித்தமிழ் வழக்கொழிந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் வழக்கினை உயிர்ப்பித்தவர் அடிகளாரேயாவர். உரிய தமிழ்ச் சொற்கள் இருக்க வடமொழிச் சொற்களைக் கலந்து அக்காலத்தில் எழுதினர். அவ்வாறு எழுதித்தம்மை இருமொழிப் புலமை உடையவர் போன்று காட்டிக்கொண்டனர். இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சியில் தடைஏற்பட்டது. இச்சூழலில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது.

1916-ஆம் ஆண்டு அடிகளார் தம் வீட்டுத் தோட்டத்தில் மகள் நீலாம்பிகையாருடன் உலாவிக் கொண்டிருக்கும் போது, இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவில்,

பெற்ற தாய் தனை மகமறந்தாலும் பிள்ளையைப்

பெறும்தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்

சிவாயத்தை நான் மறவேனே

என்ற பாட்டைப் பாடினார். பிறகு தம் மகளிடம் “இப்பாட்டில்உள்ள ‘தேகம்’ என்ற வடசொல்லை நீக்கி அவ்விடத்தில் யாக்கைஎன்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் செய்யுளின் ஓசையின்பம் இன்னும் இனிமையாக இருக்கும்” என்றார். மேலும், “பிற மொழிச்சொற்கள் வழங்கி வருவதால் தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றன”என்றார். உடனே நீலாம்பிகையார் தந்தையிடம், “நாம் இனி அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வமுடன் கூறினார். தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றத்திற்குக் காரணமானவர் நீலாம்பிகையம்மையாரேயாவர். தனித்தமிழ் இயக்கம் 1916-இல் ஏற்பட்டது.

5.1.4பெயர் மாற்றம் மகளின் அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்று, சுவாமிவேதாசலம் என்ற தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றிவைத்துக் கொண்டார். அது முதல் அடிகளார், தனித்தமிழ் எழுதலாயினார். சொற்கள் தனித்தமிழில் கிடைக்காத போது புதியசொற்களைத் தமிழில் உண்டாக்கி எழுதினார். ஞானசாகரம் என்ற தம்திங்கள் வெளியீட்டிற்கு அறிவுக்கடல் என்றும், சமரச சன்மார்க்க நிலையத்தைப் பொதுநிலைக் கழகம் என்றும் பெயர் மாற்றம்செய்தார். அடிகளாரும் அவர் மகளும் இவ்வாறு தனித்தமிழ் இயக்கங்கண்டது மட்டுமன்றி அதனை வளர்க்கும் பணியிலும்ஈடுபட்டனர்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையுடைய அடிகளார் இறை வழிபாடு, திருமணம் முதலிய சடங்குகளும் தமிழ்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்று விரும்பினார்.தமிழுக்கும் தமிழினத்திற்கும் வந்த தீங்குகளை நீக்கவே அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதை அறிய முடிகிறது.இதனால் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். இசைப்புலமையுடைய அடிகளார் தம் மகள் நீலாம்பிகைக்குத் தாமே இசையையும் கற்பித்தார்.

5.1.5மறைமலையடிகள் நூல்நிலையம் அடிகளார் பெரும்பொருள் செலவிட்டு அரிதில் தேடியநாலாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை, தம் இறுதி விருப்பஆவணத்தின்படி தமிழ் மக்களின் பொது உடைமையாக்கிச்சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரிடம் ஒப்புவித்துச் சென்றார். அக்கழகத்தார் தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு பலநூற்றுக்கணக்கான அரிய நூல்களையும் சேர்த்து, அடிகளார் பெயரால் மறைமலை அடிகள் நூல்நிலையம் என ஒரு நூல்நிலையத்தைச் சென்னையில் சிறந்த முறையில் தமிழ் மக்கள் பயன்துய்க்குமாறு நடத்தி வருகின்றனர்.

5.2மறைமலையடிகளாரின் மேடைத் தமிழ்நடை

மறைமலையடிகளார் தமிழ்ப் பெருங்கடல்; முதுபெரும் புலவர்; தமிழக மறுமலர்ச்சியின் விடிவெள்ளி; கன்னல் குரல்தனில் பேசிக்கேட்போர்க்கெல்லாம் காதினிக்கக் கருத்தினிக்க வைத்த செம்மல். இவரது செறிவுமிகு செந்தமிழ்ச் சொற்பொழிவுகள் அந்நடைக்கு எடுத்துக்காட்டாகும். சொற்பொழிவின் நெறியில் அந்நாளில் ஒப்பவர்பிறரின்றி உயர்ந்தோங்கி நின்றார். மறைமலையடிகளார், தாம் நிகழ்த்தவிரும்பும் சொற்பொழிவின் பொருளை நன்கு எண்ணி அது பற்றிக்கூறவிரும்பும் கருத்துகளை முறைப்படத் தொகுத்தும் வகுத்தும் எழுதிக் கொள்வது வழக்கம். அவையே பின்பு நூல் வடிவில்வெளிவரும் என்பர் ஒளவை.சு.துரைசாமி பிள்ளை அவர்கள். பழைய பாடல்களுக்குப் புதுமையான பொருள் விளக்கம் அடிகளாரின் பேச்சில் வெளிப்படும். மேடைத் தமிழ் வளர்ச்சிக்குக் காரணமாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் அடிகளார். இவரது சொற்பொழிவுகளுக்கு இடையே பாடல்களும் இசைக் கருவிகளுடன் பாடப்படும். இது புராண விளக்க முறையின் (கதாகாலட்சேபத்தின்) எச்சமாக இருக்கலாம். தமிழில் பேச வந்த இளைஞர்களுக்கு இவர்முன்னோடியாகத் திகழ்ந்தார்.

“மறைமலையடிகளின் சொற்பொழிவின்பத்தில் மூழ்கிவிட்டேன். அவர் இனிய பேச்சொலிகள் என் இரண்டு செவிகளிலும் இன்ப முழக்கஞ் செய்கின்றன.”

எனத் தமிழ்த் தாத்தா டாக்டர். உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

5.3தனித்தமிழ் இயக்க உரைநடை

இருபதாம் நூற்றாண்டு உரைநடை வரலாற்றில் தனித்தமிழ் உரைநடை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கின் தொல்காப்பியர் காலத்திலேயே வடமொழிக் கலப்பு இருந்ததை

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

என்ற சூத்திரத்தால் அறிகிறோம். சங்க இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. சங்க இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு இரண்டு விழுக்காடு எனின் சங்கமருவிய கால இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு ஐந்து விழுக்காடாக உள்ளது. மணிமேகலை போன்ற நூல்களில் புத்த சமயக்கோட்பாடுகளை விளக்குவதால் வடசொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. பல்லவர், சோழர் காலத்தில் வடசொல் கலப்புமிகுந்து காணப்படுகின்றது. பல்லவ அரசர்களும் சோழப்பேரரசர்களும் வடமொழிக் கல்விக்கு ஆதரவு அளித்த செய்தியை வரலாற்றின் மூலம் அறிகிறோம். திருவாசகத்திலுள்ள 2810 சொற்களுள் 373 சொற்கள் வடசொற்கள் என மறைமலையடிகள் குறிப்பிடுகிறார். சங்க காலந்தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை தமிழில் பிறமொழிக்கலப்பு இருந்ததை மறுப்பதற்கில்லை.

சூரிய நாராயண சாஸ்திரி அவர்களைத் தனித்தமிழ் இயக்கவழிகாட்டி எனலாம். இவர் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞர் எனமாற்றிக் கொண்டார். அவர் தனித்தமிழ் ஆர்வம் கொண்டிருந்தாலும், அவரது நடையிலும் வடமொழிக் கலப்பைக் காண்கிறோம். தமிழ் தனித்தியங்க முடியும் என்று முதன்முதலில் கூறியவர் திராவிடமொழியியல் தந்தை கால்டுவெல் ஆவார். அவரது கருத்தைப்பரிதிமாற் கலைஞரும் வலியுறுத்தினார்.

‘திராவிட மொழிகள் அனைத்தினும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்றுவளர்வதும் இயலும்’ என்று கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தனித் தமிழைப் பற்றிப் பரிதிமாற் கலைஞரும் கால்டுவெல் அவர்களும் கூறிய போதிலும், தனித்தமிழ்க் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர் மறைமலை அடிகளேயாவார். ‘வடசொற்களை இப்போதே நாம் தடை செய்யாவிடின் தமிழ் தன்னிலைகெட்டு வேறுமொழி போலாகிவிடக் கூடும். தமிழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் தமிழ் தன் இனிமை இழந்து போவதோடுபல தமிழ்ச் சொற்களும் வழக்கில் இல்லாது இறந்து போகின்றன.‘ யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள்’ என மறைமலையடிகளே கூறுகிறார்.

தனித் தமிழ்க் கொள்கையை வலியுறுத்தி அறிஞர்கள் ஆங்காங்குச் சொற்பொழிவுகளும் நூல்களும் செய்த வண்ணமிருந்தனர். தமிழவேள் உமாமகேசுவரனார், திரு.வி.க., ச.சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியனார், பண்டிதமணி கதிரேசனார், மு.வ., வ.சுப.மாணிக்கனார் போன்றோர் செந்தமிழ் நடையில் எழுதத்தொடங்கினர். தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ் போன்ற இதழ்கள் செந்தமிழ் நடையில் வெளிவரத் தொடங்கின. தூயதமிழ் வளர்ச்சியில் இவ்விதழ்கள் பெரும்பங்காற்றின.

மறைமலையடிகள், திரு.வி.க. போன்றோர் தூய தமிழ் நடையில் எழுதினாலும், தனித்தமிழில் எழுதுவதைத் ‘தனித்தமிழ் இயக்கமாக’ வளர்த்த பெருமை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரையும் பெருஞ்சித்திரனாரையும் சாரும். பெருஞ்சித்திரனார் அவர்கள் தனித்தமிழுக்கென்றே தென்மொழி என்னும் இதழை நடத்தினார். தென்மொழி ஓர் இயக்கமாகவே இயங்குகிறது. தமிழ் உரைநடை வரலாற்றில் பெரும் மாறுதலை உண்டாக்கியது தனித்தமிழ் நடை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

மறைமலையடிகளால் தமிழ் வளர்ந்தது. தமிழால் அவர் வளர்ந்தார். தனித்தமிழ் நடை வளம் பெற்றதோடு தனித்தமிழ் மரபும் வளரலாயிற்று. எந்தவொரு துறையையும் தனித்தமிழில் எழுத முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டிய பேரறிஞர் மறைமலையடிகள். இவரது உரைநடையைப் பற்றிக் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் ‘தனித்தமிழிலே தேனும் பாலுங் கலந்தனைய தீஞ்சொற் சுவைமிக்க இழுமெனும் இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும் சொன்மாரி பொழிவதிலும் இவர்க்கு ஒப்பாவார் எவருமிலர்’ எனப் பாராட்டுவது முற்றிலும் பொருந்துவதாகும். இவருடைய தமிழ்த் தொண்டால் தமிழ்உரைநடை, செறிவு மிக்க பெருமித நடையாக வளர்ந்தது. இவரதுஉரைநடை நீண்ட வாக்கியங்களைக் கொண்டதாக இருப்பினும், எளிமையும் இனிமையும் வாய்ந்ததாக உள்ளது. தனித்தமிழில் எழுதமுயன்றதன் விளைவாகப் புதுச் சொல்லாக்கங்களைப் படைத்துத்தமிழ் மொழியை வளம் பெறச் செய்தார். மறைமலையடிகளாரைத் தனித்தமிழ் நடைக்குத் தந்தை என்று கூறலாம்.

அடிகளாரின் தனித்தமிழ்த் தொண்டை அவர்தம் மாண்புமிக்க செல்வி நீலாம்பிகை அம்மையார் தொடர்ந்து செய்து வந்தார்கள் இவர் தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொல்-தமிழ் அகராதி என்னும் நூல்களை இயற்றியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்த பெருமை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் அதன் தலைவராக இருந்த தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளைக்கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கும் உண்டு.

5.4மறைமலையடிகளாரின் உரைநடை நூல்கள்

தனித்தமிழ் நடையை உருவாக்கிய அடிகளார் தம் நூல்களில் அந்நடையைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். அறிவுரைக்கொத்து, வேளாளர் நாகரிகம், சிறுவர்க்கான செந்தமிழ் முதலான உரைநடை நூல்களிலும் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் புதினத்திலும் அவரது நடையின் சிறப்புகளைக் காணமுடிகிறது.

5.4.1அறிவுரைக் கொத்து அறிவுரைக் கொத்து என்னும் நூலில் கல்வியே அழியாச் செல்வம் என்பது குறித்து அடிகளார்,

“அழியாச் செல்வத்தையே அடைய வேண்டுமென்னும் அவா நம்மெல்லாரிடத்தும் இயற்கையாக இருந்தாலும் முத்துச் சிப்பியில் உள்ள முத்தின் ஒளியும், பாசி மூடிய பவளத்தின் நிறமும், மாசியில் நிறைந்த மதியின் துலக்கமும், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும் போல் நம்மை மூடிக்கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர்களாகி, நம் அறிவை இழந்து அழியாச் செல்வத்தை அடைய முடியாமல் நிலையின்றி அழிந்து போகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைந்து அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்தும் வருகின்றோம்”

என்றும்,

“சிலர் கல்வியானது ஆண் மக்களுக்குத் தாம் வேண்டுமேயல்லாமற் பெண் மக்களுக்கு வேண்டுவதில்லை யென்றும், பழைய நாளில் மாதர்கள் எவரும் கல்வி கற்கவில்லை யென்றும், பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்று நூல்களிற் சொல்லப்படவில்லை யென்றும் கூறுவார்கள். உயிர்கள்என்ற பொது வகையில் விலங்குகளும் மக்களும் ஒப்பவர்களே ஆவர். உணவு தேடுதல், தேடிய உணவை உண்டல், உறங்கல், இன்புறல் என்னும் தொழில்கள் விலங்குகளுக்கும் உண்டு; மக்களுக்கும் உண்டு. ஆனால் மக்கள் விலங்குகளிலும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது ஏன் என்றால், நல்லது இது, தீயது இது என்று பகுத்துணர்தலாலும் தம்மைப் போன்ற உயிர்க்கு இரங்கித் தம்மாலான உதவி செய்தலானும், கடவுளைத் தொழுதலானும் இங்ஙனமெல்லாம் தமது அறிவை வளரச் செய்தற்குரிய பல நூல்களைக் கற்றலானுமே, மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவர்களாக எண்ணப்படுகின்றனர். இவ்வுயர்ந்த அறிவின் செயல்கள் இல்லையானால் விலங்குகளுக்கும், மக்களுக்கும் சிறிதும் வேற்றுமை இல்லாமற்போம். கல்வி இல்லாதவர் விலங்குகளே ஆவர். கல்வி இல்லாதவர்களுக்கு நுட்பமான அறிவு சிற்சில நேரங்களிற் காணப்பட்டாலும் அதனை அறிவாகப் பெரியோர்கள் கொள்ள மாட்டார்கள்.

இங்ஙனம் அறிவான் மிக்க ஆன்றோர் மக்களாய்ப் பிறந்த எல்லார்க்கும் கல்வி இன்றியமையாது வேண்டற்பாலதேயாம் என்று கூறியிருக்க, அஃது ஆண் மக்களுக்குத் தாம் வேண்டுமேயல்லாமற் பெண் மக்களுக்கு வேண்டுவதில்லை என்று உரைப்போர் உண்மை அறிந்தாராவரோ சொன்மின்கள் !”

எனவும் கூறியுள்ளார்.

5.4.2வேளாளர் நாகரிகம் வேளாளர் நாகரிகம் என்னும் நூலில் அடிகள் வேளாளரைப் பற்றிக் கூறி அவர்கள் அன்பொழுக்கத்தை விளக்குவதைக் காண்போம்:

“உழவுத் தொழிலோ மிகவும் வருத்தமானதொன்று. உழவுத் தொழிலைச் செய்பவர்கட்கே வருத்தம் இன்னதென்பது தெரியும். அதனைச் செவ்வையாய்ச் செய்து முடிப்பதற்கோ முன்பின் ஆராயும் நுண்ணறிவு வேண்டும். ஆதலால் அதனைச் செய்வார்க்கே உயர்ந்த அறிவும் அவ்வறிவினைப் பயன்படுத்தும் முறைகளும் விளங்கும். ஆதலினாற்றான் வேளாளர்க்கு இரக்கமும் அறிவும் ஈகையுந் தொன்றுதொட்டு வரும் இயல்புகளாகக் கூறப்படுகின்றன. தம்மை யொத்த மக்கள் வறுமையாலும் நோயாலும் துன்புறக் கண்டால், அவர்க்குற்ற அத்துன்பத்தின் கொடுமையினை நினைந்துருகி, அவை தம்மைப் பொருளாலும் மருந்தாலும் நீக்க வல்லவர்களே ஆவர்.”

“மக்களாய்ப் பிறந்தோர் தம்மை யொத்த எல்லார்க்கும் பசியும், நோயும், வறுமையும் உண்டென்பதை உணர்ந்து, அவர்பால் இரக்கமும் அன்பும் மீதூரப் பெற்றாராய் அவர்க்குச் சோறு தந்து பசியை நீக்கியும், மருந்து ஊட்டி நோயைத் தீர்த்தும், பொருள் வழங்கி வறுமையைக் களைந்தும் ஒழுகுவதோடு அவர் இம்மை மறுமைப் பயன்களை எய்துதற்கு இன்றியமையாத கல்வியறிவையும் தந்து நடத்தல் வேண்டும். இதுவே அன்பொழுக்கமாம். தமிழ் நன் மக்களான வளோளர்கள் எல்லா மாந்தரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையராய்ப் பசித்து வருந்தினார்க்கு அப்பசியைத் தீர்த்தற்கு அறச் சோற்று விடுதிகளும், நீர்விடாய் தணித்தற்கு அறக்கூவல் குளங்கள், தண்ணீர்ப் பந்தல்கள், இளமரக்காக்களும், வழிப்போவார் தங்குதற்குச் சத்திரஞ் சாவடிகளும், நோயுற்று வருந்தினர்க்கு நோய் தீர்க்கும் மருத்துவ விடுதிகளும், கல்வி கற்பிக்குங் கல்விக் கழகங்கள், திருமடங்களும், கடவுளை வழிபடுதற்குத் திருக்கோயில்களும் பண்டு தொட்டு ஆங்காங்கமைத்துப் பலவகை அறங்களுஞ் செய்திருக்கின்றனர்.”

5.4.3சிறுவர்க்கான செந்தமிழ் சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூலில் மலையைப் பற்றி அடிகள் எழுதும் பொழுது மலையைக் குறிக்கும் பல்வேறு சொற்களை இளஞ்சிறார்க்கு அறிமுகப்படுத்துகின்றார்.

“மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினையுடையது. மல் என்றால் வலிமை. மலைகளெல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல், பிறங்கல், பொருப்பு, வெற்பு என்றும், ஓரிடத்திற் குறுக்கே நீண்டு கிடக்கும் மலையை ‘விலங்கல்’ என்றும்; ஒன்றன் மேலொன்று அடுக்கு அடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை ‘அடுக்கல்’ என்றும்; எதிரொலி செய்யும் மலையைச் ‘சிலம்பு’ என்றும்; மூங்கிற்காடுகள் உள்ள மலையை ‘வரை’ என்றும்; காடுகள் அடர்ந்த மலையை ‘இறும்பு’ என்றும்; சிறிய மலையைக் ‘குன்று, குவடு, குறும்பொறை’ என்றும்; மண் மிகுந்த மலையைப் ‘பொற்றை, பொச்சை’ என்றும்; மலைப்பக்கத்தைச் ‘சாரல்’ என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும்.”

இவ்வாறு மலை என்ற சொல்லுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு சொற்களை இளஞ்சிறார்க்கு அறிமுகப்படுத்துகின்றார்.

5.4.4மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை அடிகளார், “பசி எடாமைக்கு இரண்டு ஏதுக்கள் உண்டு. மிகவும் கொழுமையான உணவுப் பொருள்களை அயின்றால் அவை செரித்தற்கு நெடுநேரஞ் செல்லுமாதலால் அதனால் ஒருநாள் முழுதுங்கூடப் பசியில்லாதிருத்தல் உண்டு. இனி முறைகடந்து தின்று வந்த பழக்கத்தாலும் பசித் தீ அவிந்து போதலும் உண்டு” என்று மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வது எப்படி? என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட வாக்கிய அமைப்பும், படிமங்களைத் தோற்றுவிக்கும் சொற்புணர்ப்புகளும், இழுமென் ஒலியும் நம்மை மயக்குறுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.

5.4.5கோகிலாம்பாள் கடிதங்கள் அடிகளார் பிறந்த அதே ஆண்டில் தமிழ் நாவலும் தோன்றியது. ஒற்றுமை இத்துடன் நிற்கவில்லை. இலக்கிய சமய ஆராய்ச்சிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அடிகளார், தாம் பிறந்த அதே ஆண்டில் பிறந்த மற்றோர் இலக்கியக் குழந்தையையும் மறந்து விடவில்லை. உரிய காலத்தில் தம் வயதோடொத்த அத்தோழனின் வளர்ச்சிக்கும் தம் உழைப்பில் ஒரு பகுதியைத் தந்தார். அவ்வுழைப்பின் பகுதியே குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி யாகவும், கோகிலாம்பாள் கடிதங்களாகவும் மலர்ந்துள்ளது எனலாம்.

அடிகளாரின் இரண்டு புனைகதைப் படைப்புகளில் கோகிலாம்பாள் கடிதங்களே தனிச்சிறப்புப் பெறுவது. குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி ஓர் ஆங்கில நாவலின் தழுவல் என்பதுடன், புனைவியல் கூறுகள் அதிகமுள்ள ஒரு படைப்பு எனலாம். ஆனால் கோகிலாம்பாள் கடிதங்களோ இயல்பு நவிற்சி அல்லது உண்மையுணர்ச்சி (Realism) மிகுந்துள்ள ஒரு நாவல். அத்துடன் இந்நாவலின் வடிவத்திற்கு அடிகளார் பயன்படுத்தியுள்ள கடித அமைப்பு முறை தமிழிற்குப் புதுமையானது. ஆங்கில இலக்கிய உலகில் இக்கடித அமைப்பு முறை ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. தமிழில் இவ்வகையில் அமைந்த நாவல் இதுவொன்றே ஆகும். ஞானசாகரம் என்ற இதழில் 1911ஆம் ஆண்டு தொடங்கிய இந்நாவல் 1921இல் முற்றுப்பெற்று அதே ஆண்டில் நூல் வடிவமும் பெற்றது. ஆங்கில இலக்கிய உலகில் இக்கடித அமைப்புமுறை பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தது.

கோகிலாம்பாள் கடிதங்கள் அடிப்படையில் கலப்பு மணத்தையும், விதவைத் திருமணத்தையும் ஆதரித்து எழுதப்பட்டதெனலாம். சாதி வேறுபாடுகளற்ற ஒரு சமுதாயத்தைக் காண விழைந்த அடிகளார், இன்றுள்ள சமுதாயச் சூழலுள் விதவைகள் படும் துன்பத்தைக் கண்டு அதனையும் போக்கவே இந்த நாவலை எழுதியுள்ளார்.

“ஏழை எளியவர்களுக்கும் வலியற்றவர்களுக்கும் இயன்ற அளவு ஊணும் உடையும் கொடுத்து அவர்கள் துன்பத்தைப் போக்குவீர்களாக ! பசியாலும் தாகத்தாலும் வருந்தி வந்தவர்களுக்கு முதலில் உணவுந் தண்ணீருங் கொடுத்து அவர்கள் களைப்பை மாற்றியபின் நீங்கள் உணவெடுக்க வேண்டும். தமிழ்க் கல்வியை எவரும் படிக்கும்படி செய்து வருதல் வேண்டும். படிக்க வகையற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து வாருங்கள். நீங்களும் இடைவிடாது கல்வியிற் பயின்று வருதல் வேண்டும். உன் கணவன் இங்கிலீஷிலும் வல்லவனாதலால், அந்தப் பாஷையிலிருக்கின்ற அற்புதமான பூத பௌதிக சாஸ்திரக் கருத்துகளையெல்லாம் நீ தெரிந்து கொண்டு தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம் அவற்றை எழுதித் தமிழ் நூல்களாக வெளிப்படுத்தல் வேண்டும். சமஸ்கிருத பாஷைச் சொற்களைக் கண்ட மட்டும் தமிழில் வழங்காமல் தமிழ்ச் சொற்கள் ஏராளமாக இருப்பதால் அவற்றையே நீ பழக்கத்துக்குக் கொண்டு வந்து, புண்ணிய பூமியாகிய இத்தமிழ் நாட்டுக்குப் பல நன்மைகளை நீ செய்தல் வேண்டும்…’ என்று மரணப் படுக்கையில் கோகிலாம்பாளின் மாமனார் அவளிடம் கூறும் கருத்துகள் இவ்வாறு அமைந்தவை. இவற்றைக் கூறுவது கோகிலாம்பாளின் மாமனாரானாலும், இவையே இந்நாவலின் மூலம் அடிகளார் படிப்பவர்களுக்கு உணர்த்தும் செய்திகள்.

“இந்நூலில் தலைமகளாகிய கோகிலாம்பாள் என்னும் நங்கையார் தாம் பார்ப்பனக் குடியிற் பிறந்தவராயிருந்தும் தமது குடிப்பற்றிற்கு அகப்படாத தூய்மையும் நுண்ணறிவும், கற்பொழுக்கமும், உறுதியான உள்ளமும் உடையவராய்த் தமது நல்லறிவிற்பட்டபடி தாம் நடந்து காட்டியதோடு, தாம் எழுதிய கடிதங்களில் இருபாலருங் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய நன்முறைகளையும் விளங்க எடுத்து இனிதாகத் தெருட்டியிருக்கின்றார். இக்கடிதங்களையெல்லாம் ஒருங்கு திரட்டிப் பதிப்பிட்டு வெளியிடத்துணிந்தோம்” என்று முகவுரையில் கூறுவதன் மூலம் தம்முடைய கதைத்தலைவி அறிவிலும், ஆற்றலிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவள் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறார். அதனாலேயே அவளுடைய ஆராய்ச்சித் திறனும், வாதத் திறமையும் படிப்பவர்களிடம் ஒரு நம்பிக்கையின்மையைத் தோற்றுவிப்பதில்லை. அடிகளாரின் மற்ற நூல்களையெல்லாம் அவரை ஒரு சிறந்த ஆய்வாளராகவும் மொழி அறிஞராகவுமே காட்டுகின்றன. இந்த நூலே அவரைப் படைப்பிலக்கிய ஆசிரியராக ஒரு புதிய கோணத்தில் காட்டுகிறது. அவர் படைத்த இந்நாவல் கடித வடிவில் தமிழில் எழுந்த ஒரே நாவல். இந்நாவல் தமிழ் நாவல் உலகிற்குக் கிடைத்த கொடை எனலாம்.

5.5அடிகளார் உரைநடையின் தனித்தன்மை

தனித்தமிழ் நடை கண்டதோடு தமக்கெனத் தனி நடையையும் மறைமலை அடிகளார் உருவாக்கிக் கொண்டார். இலக்கியச் சொற்களைப் பெய்தல், பழஞ்சொற்களையே ஆளுதல், நீண்ட வாக்கியங்களாக அமைத்தல், விளக்கமாகக் கூறுதல், வருணித்துக் கூறுதல் என்பன அவரது நடையின் தனித்தன்மையை உணர்த்துவன எனலாம். சில எடுத்துக்காட்டுகள் மூலம் அவரது நடையில் தனித்தன்மையைக் காண்போம்.

5.5.1தனிநடை திரும்பத் திரும்ப நடந்து போவதால் தடம் உருவாவது போல், பழகப் பழக நடை உருவாகும். தனிநடை என்பது ஓர் ஆசிரியரின் அகமன வெளிப்பாடு. ஆளுமையின் மலர்ச்சி. தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் நாட்டம் கொண்டால் தனிநடை, தானே உருவாகும். தனிநடை என்பது தம் பண்பு (ஆத்மகுணம்) தோன்ற எழுதுவதேயாம். சொல்வதற்கென்று புதிய சொற்களை வைத்திருப்போர் அவற்றை வெளிப்படுத்த முனையும் போது அதற்கேற்ற மொழிநடையைத் தேடுகின்றனர். கிடைக்காத போது அந்நடையைத் தாமே உருவாக்குகின்றனர். ‘முயன்றால் நாமும் இதுபோல் எழுதலாம்’ என்னும் உணர்வை எந்த உரைநடை தூண்டுமாயினும் அது தனித்தன்மை உடையதே. அவ்வகையில் அடிகளாரின் எழுத்து நடை தனித்தன்மை உடையதாக விளங்கியது.

மறைமலையடிகள் தாம் எழுதிய முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் நூலின் முன்னுரையில்,

“முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப் புலவர்கள் தமதருமைச் செந்தமிழ் மொழியைத் தம் இன்னுயிரினும் விழுமியதாக ஓம்பிப் பொய் சிறிதும் கலவா அறிவுரையே பகரும் தமது நாவால் மெய்ப்பொருள்களே நிரம்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்து வந்தனர். அதனால், அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய நந்தாமணி விளக்குப்போல், தனது பொங்கு பேரொளியை எங்கணும் வீசி, இவ்வுலகின் கண்ணிருந்த மாந்தரெல்லாருடைய அறிவுக் கண்களையும் விளங்க விளங்கிற்று. மற்றுப் பிற்காலத்தே, அஃதாவது சென்ற அறுநூறு ஆண்டுகளாய்த் தோன்றிய தமிழ்ப்புலவர்களோ பெரும்பாலுந் தம் முன்னோர் சென்ற நெறியே தேர்ந்து செல்லாதவர்களாய், அவர் சென்ற மெய்ந்நெறி பிழைத்துப் பொய்ந்நெறி ஏகித் தமதருமைச் செந்தமிழ் மொழியின் தூய்மையை ஓம்பாது, அதனைப் பிறமொழிச் சொற்களோடு கலந்து மாசுபடுத்தியதல்லாமலும், அதன்கண் மெய்யல்லாதனவும் முழுப்பொய்யும் மிடைந்த பாவும் நூலும் இயற்றி அதன் மெய்வழக்கினையும் பாழ்படுத்தி விட்டனர். அவ்விரு திறமும் பிரித்து நனி விளங்கக் காட்டினாலன்றி, இனித்தமிழ் கற்பார் தமிழ்மொழியினையும் அதனை வழங்கும் மக்களையும் பேணி வளம் படுத்தாரெனக் கருதியே இந்நூலை இயற்றலானேம்.”

மேற்குறிப்பிட்ட பத்தியில் மிக நீண்ட வாக்கிய அமைப்பையும், இலக்கியச் சாயம் ஏறிய பழந்தமிழ்ச் சொற்களையும், சொல்லணி மிடைந்த அலங்காரங்களையும் நாம் காணுகிறோம். இவை மறைமலை அடிகளாரின் இலச்சினையை நம் கருத்தில் பதிக்கின்றன.

5.5.2படைப்பு விளக்கம் படைப்பு என்பதனை விளக்க நினைக்கும் மறைமலையடிகளார் முதற்கண் நுண்மை நடையிலேயே பேசி, அதை விளக்கப் பருமையை எடுத்தாளுவதைக் கீழே காண்க (from subtle to gross).

“படைப்பு எனினும் ஒழுங்குபடுத்தல் எனினும் ஒக்கும். யாதினையோ ஒழுங்கு படுத்தலெனின் உறுப்பின்றிப் பிண்டமாகக் கிடந்த ஒரு பொருளை உறுப்புடைத்தாக நெறிப்படுத்து அமைத்தலாம். அவயவம் எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். இறைவன்றன் அரும்பேராற்றலால் நிகழ்த்தும் படைப்புக்கு ஒப்பாக எடுத்துக் காட்டப்படும் பொருள் ஒன்று இவ்வுலகிலில்லையாயினும், ஈண்டெடுத்துக் கொண்ட தருக்கம் இனிது விளங்குதற் பொருட்டு ஓருதாரணம் எடுத்துக் காட்டுவாம். தச்சுத் தொழில் செய்வான் ஒருவன் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றை வாளாற் பல துண்டுகளாக ஈர்த்து அவற்றையெல்லாம் வழுவழுப்பாக இழைத்துத் திரட்டுவனவற்றைத் திரட்டிக் கடைந்தும், குறைக்குமிடங்களில் அவற்றைக் குறைத்தும், மிகுத்தும் பலவேறு படுத்திப் பின் அத்துண்டுகளையெல்லாம் ஒன்றாக இயைத்து ஆணியறைந்து ஒரு நாற்காலி செய்யக் காண்கிறோம். இங்ஙனம் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றைப் பலவாகத் திரித்து உறுப்புக்களையுடைய நாற்காலியாக ஒழுங்குபடுத்து முயற்சியே படைப்பென்பதாம். இதுபோல் இறைவனும் உறுப்பின்றி வடிவமற்றுக் கிடந்த மிகுநுட்பப் பொருளாகிய மாயையை மலையுங் காடும் நாடுங் கடலுமாகிய உறுப்புடைய பருப்பொருளுலகமாக ஒழுங்குபட அமைத்து உயிர்களுக்கு உதவியாக வைத்தருளினான். இங்ஙனம் செய்யப்படுவதாகிய படைப்பும் மிகு நுண்ணிய உள்பொருண்மாயையிற் செய்யப்படுவதல்லது வெறும்பாழின்கட் செய்யப்படுவதன்றாம். ஆகவே, படைப்பு என்பது எக்காலத்தும் இருப்பதாகிய உள்பொருள் ஒன்றனையே வேறு வேறாக ஒழுங்குபடுத்து அமைக்கும் முயற்சியாமென்பது ஈண்டுக் கூறியவற்றான் இனிது விளங்கும்”

என்று படைப்புப் பற்றி வர்ணித்துள்ளார்.

5.5.3பாட்டு விளக்கம் முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையில் அடிகளார் பாட்டு என்பதற்குத் தரும் விளக்கம்.

“மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை என்னும் மலைக்குகைகளிலே அரித்து எடுத்து வந்த அருங் கருத்துகளான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களையெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி யெடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்று அறிதல் வேண்டும்”

என்று அடிகளார் பாட்டிற்கு விளக்கம் தந்துள்ளார்.

5.5.4வைகறை வருணனை “பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் போர்த்தியிருந்த நீலப்பட்டாடையினைச் சிறிது சிறிதாக நீக்கி, பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்துவிட்டுத் துயில் ஒழிந்து, ஒளி விளங்கு தன் நளிமுகம் காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டம் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கி விடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற்றிரளை போலத் தளதளவெனக் கீழ்த்திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை, பொன்மை, நீலம், சிவப்பு, வெண்மை முதலான நிற வேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் திகழவும்.”

அடிகளாரின் மேற்கண்ட வைகறை வருணனை வண்ணப் பகட்டோடு செம்மாந்த நடையில் விரைந்து நடக்கிறது.

5.5.5மணிதிருநாவுக்கரசு மரணம் அடிகளாரின் வாக்கியங்கள் நீளமானவை. அவற்றில் அருஞ்சொற்கள் பலவற்றை ஆங்காங்கே காணலாம். எனினும் படிப்பதற்கு இனிமையாக இருக்கும். அவருடைய நடைக்குப் பின்வரும் மேற்கோளைத் தரலாம்.

“நமது பொதுநிலைக் கழக முதன் மாணவரும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியருமான மணி.திருநாவுக்கரசு முதலியார் பிரசோற்பத்தி வைகாசி 12ஆம் நாள் சனிக்கிழமை (23.05.1931) முற்பகலில் திடீரென இம்மண்ணுலக வாழ்வு நீத்து விண்ணுலகு புகுந்த செய்தி இத்தமிழ் நாட்டவர் எல்லாரையும் திடுக்கிடச் செய்து, அவருக்குப் பெருந்துயரைத் தருவதொன்றாய் எங்கும் பரவலாயிற்று. முகிழ்ந்து மணங்கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப்பூ அதனருமையறியான் ஒருவனாற் கிள்ளியெறியப்பட்டு அழிந்தாற் போலவும், மறை நிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக்காட்டுதற்கு ஏற்றி வைத்த ஒரு பேரொளி விளக்குச் சடுதியில் வீசிய சூறைக் காற்றினால் அவிந்து மறைந்தாற் போலவும், நீண்டநாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்னெஞ்சக் கள்வனொருவனாற் கவர்ந்து கொள்ளப்பட்டாற் போலவும் இத்தமிழ்நாட்டுக்கு ஒரு கல்வி மலராய், ஓர் அறிவு விளக்காய், ஓர் அருங்குணப் புதையலாய்த் தோன்றிய இவ்விளைஞர் தமது 43ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்றுவனாற் கவரப்பட்டது ஒரு பெருங்கொடுமையன்றோ?”

என்று எழுதியுள்ளார்.

5.5.6கடிகாரம் பழுதடைதல் “நிலைக் கடிகாரத்தில் மணி முள் நிமிடமுள்ளை அழுத்தும் பித்தளைச் சிறுகுமிழ் முறிந்து போனதற்கு வேறு நல்லதொன்று பொருந்தவில்லை. மணி முள்ளும் கழன்று கீழே தொங்குகின்றது. அதனை இறுகப் பொருத்த வேண்டும்” என்று தம் இல்லத்தில் இருந்த கடிகாரத்தைச் செப்பனிட நேரிட்டபோது உரிய தொழிலாளிக்கு மறைமலையடிகளார் எழுதினார்.

5.5.7மக்கள் கடமை “உண்டு உடுத்து உறங்கி வாழ்நாட் கழிப்பதைவிட மக்களால் அடையத்தக்க வேறு சிறந்த பொருள் இல்லையென்றே பெரும்பாலார் நினைக்கின்றார்கள். அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? எந்த வகையில் மக்கட் பிறவியானது மற்றைச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்தது என்பதை நாம் கண்டு ஆராய்ந்து பார்த்துத் தெளிதல் வேண்டும். மக்களாகிய நாம் பகுத்தறிவு உடையவர்களாய் இருக்க மற்றச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்படவில்லை. அதனால் தான் நமது பிறவி மற்ற விலங்கின் பிறப்பைவிடச் சிறந்தது ஆகும் என்று அறிகின்றோம். விலங்குகளுக்கு இது நல்லது, இது தீயது என்று பகுத்துணர்தல் இயலாது. நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்குத் தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்து வருவதுடன் பகுத்துணர்ச்சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த அறிவுடையோர்களாற் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால் நாம் எல்லையில்லாத இடர்க்கடலினின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் புதுப்புது நலங்களை அடைந்து இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம்.

இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த இசை வல்லோர்களின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத்தக்கதாய் முடிந்து போகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக்கனியினுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துப் போனாலும், அவர்களுடைய அருமைக்குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மை விட்டு நீங்கிப் போகவில்லை. எப்படியெனில் அமெரிக்கா தேசத்தில் அறிவியலிற் சிறந்து விளங்கிய எடிசன் என்னுந் துரைமகனார் ஆக்கிய ஒலியெழுதி (Gramophone) என்னும் பொறியானது, அப்பாவாணர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலிகளையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக் கேட்டு நாம் வியந்து மகிழ்கின்றோம் அல்லோமோ? நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத்துணர்ச்சியை, நாம் பல வகையான உயர்ந்த வழிகளிலும் வளரச் செய்து அதனால் அழியாப் பெரும்பயனை அடைதல் வேண்டும். இதுவரையிலுமே பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும், அடைந்து வரும் பயன்களும் அளவிடப்படா. வெள்ளைக்காரர் கண்டுபிடித்த அச்சுப் பொறிகளின் உதவியால் பல்வேறு நூல்களும், பல்வேறு புதினத்தாள்களும், ஒவ்வொரு நொடியுங் கோடி கோடிகளாக அச்சிற் பதிக்கப்பட்டு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனால், எவ்வளவு ஏழையாயிருப்பவர்களும் சிறிது பொருள் செலவு செய்து, தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்றுக் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். இத்தனைப் பெரும்பேறுகளும் காக்ஸ்டன் (Caxton) என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுப் பொறியைக் கண்டு பிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ? பகுத்துணர்ச்சியைப் பெற்ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப் பயன்படுத்தி அதனாற் பல புதுமைகளையும், அவற்றால் தாமும் பயன் பெற்று மற்றையோரையும் பயன்பெறச் செய்து வருதல் போல, நாமும் அவ்வுணர்ச்சியினை மேலும் மேலும் பயன்படுத்தி இன்னும் மலோன இன்பங்களை அடையக் கடமைப் பட்டிருக்கின்றோம்.”

இவ்வாறு மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது பற்றியும், மக்கள் கடமை என்ன என்பது பற்றியும் விளக்கியுள்ளார்.

5.5.8கடவுள் உணர்ச்சியின் இன்றியமையாமை “எல்லாம் வல்ல இறைவன்றன் அருளியக்கத்தை எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி தெரிவிக்கும் அம்பலவாணன் திருவுருவ வழிபாட்டைவிடச் சிறந்ததும், சிற்றுயிர்களாகிய நமக்கு இம்மை மறுமைக்குரிய எல்லா நலங்களையும் எளிதிற் பயப்பதும் வேறு ஏதுமே இல்லை. இவ்வுடம்பையும் இவ்வுடம்பிலுள்ள கண், கால், கை முதலான உறுப்புகளையும் படைத்துக் கொடுத்த முதல்வனுக்கு, அவ்வுடம்பையும் அவ்வுறுப்புகளையும் பயன்படுத்தி நெஞ்சம் நெக்கு நெக்குருகுதலால் மட்டுமே அவன் திருவருட்பேற்றிற்கு உரியராகலாம். இதுபற்றியே இராமலிங்க அடிகளார் சமரச சன்மார்க்க சங்கம் அல்லது பொதுநிலைக் கழகம் என்பதனை வகுத்து எல்லாத் தேயத்தார்க்கும் பொதுவாய் நின்று அருள் வெளியிலே ஆடல் புரியும் அம்பலவாணனாகிய ஒரு தனித்தலைமைக் கடவுளின் வழிபாட்டை வலியுறுத்தினார். எல்லாம் வல்ல இறைவன் அறிவும் அன்பும் அருளுமே உருவாய்க் கொண்டு விளங்குகின்றானென்பது அவன் அமைத்த அமைப்புகளில் நன்கு புலனாகிறது. இவ்வாற்றால் கடவுளிடத்துப் பேரன்பு பூண்டு ஒழுகுவதும் எல்லா உயிர்களிடத்தும் அன்பினால் அகங்கரைந்து ஒழுகுவதும் ஒன்றைவிட்டொன்று பிரியாத அத்துணை ஒருமைப்பாடுடையவாகும். உயிர்களிடத்து இரக்கம் காட்டுதலென்பது உயிர்களைக் கொல்லாமையும் அவற்றின் ஊனை உண்ணாமையும் ஆகும். உயிர்களைக் கொல்வோரும் அவற்றின் ஊனை உண்போரும் கொடிய வன்னெஞ்சமுடையராதலால் அவர்க்கு அன்பும் அருளும் உண்டாகா.”

எல்லாச் சாதியாரும், எல்லாச் சமயத்தாரும் ஏதொரு வேற்றுமையுமின்றி வழிபட்டு உய்யும் பொருட்டு அம்பலவாணர் திருவுருவம் வைத்த கோயிலொன்று மறைமலை அடிகளாரால் அமைக்கப்படலாயிற்று. அம்பலவாணர் திருக்கோயிலுடன் மணிமொழி நூல் நிலையமும் சேர்த்துப் பொதுநிலைக் கழக நிலையத்தில் அடிகளார் அமைத்தார்.

5.6தொகுப்புரை

தமிழ்ப் பெரியார்களுள் மாமலை என விளங்கியவர் மறைமலையடிகள். “மறைமலை ஒரு பெரும் அறிவுச்சுடர்; தமிழ்நிலவு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சிப் பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. அடிகள் பேச்சு பல பேச்சாளரைப்படைத்தது. எழுத்து, பல எழுத்தாளரை ஈன்றது” என்று தமிழ்ப்பெரியார் திரு.வி.க. இவரைப் பாராட்டியுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதினாலும், பிற்காலத்தில் தூய தமிழ் நடையில் எழுதினார். நீண்ட தொடர்களைக் கொண்டிருப்பினும் எளிமையும் இனிமையும் தெளிவும் திண்மையும் உடைய மறைமலை அடிகளின் உரைநடையால் தமிழ் உரைநடைவளம் பெற்றதோடு தனித்தமிழ் மரபும் வளரலாயிற்று.

பாடம் - 6

திரு.வி.க. உரைநடை

6.0பாட முன்னுரை

மகாகவி பாரதியாரைப் போலவே, திரு.வி.கல்யாண சுந்தரனாரும் தமிழோடு பல நிலைகளில் உறவு கொண்டு எழுதி, கட்டுரை நூல்களை வழங்கினார். சில கவிதை நூல்களை வெளியிட்டார். இதழியலில் சொற்சிலம்பங்கள் பல நிகழ்த்தினார். எனினும் அவரை நினைக்கும் போது நம் கண்முன் வந்து நிற்பது அவருடைய உரைநடைப் பணிகளே. இலக்கிய விமரிசனம், தொழிலாளர் இயக்கம், தேசப்பற்று, உரிமை வேட்கை, பழந்தமிழ் மரபின் உண்மை விளக்கம், நல்வாழ்வுத் தடம், பெண்மை உயர்வு, இதழியல் போன்ற பல சமுதாய வீதிகளுக்கு, தமிழ் உரைநடை வண்டியை இழுத்து வந்து செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றார்.

6.1 திரு.வி.க.வின் வாழ்க்கையும் கல்வியும்

தமிழ் இளைஞர் முதல் முதியோர் வரையுள்ள யாவர் நெஞ்சங்களிலும் வாழும் பெரியவர் இவர். இவரை அன்போடு திரு.வி.க. என அழைப்பர். இவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் எண்ணிலடங்காத் தொண்டுகள் செய்துள்ளார். இவர் செங்கற்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் 1883ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய பெற்றோர் விருத்தாசல முதலியார், சின்னம்மாள். எனினும் இவர்தம் முன்னோர் திருவாரூரைச் சேர்ந்தவராதலின் ‘திரு’ என்ற அடைமொழியைத் தம் பெயருக்கு முன்னால் அமைத்துக் கொண்டார். முதலில் தந்தையிடமே திண்ணைப் பள்ளியிலும், பிறகு வெஸ்லி கலாசாலையிலும் பயின்றார்.

இவருடைய தமிழாசான் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை. தனியே தம் ஆசானிடம் புராணங்களையும், யாப்பிலக்கணத்தையும்; மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் திருவருட்பயன், சிவப்பிரகாசம், சிவஞானபோதம் போன்ற நூல்களையும் வடமொழியையும் கற்றார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களும், மருவூர்க் கணேச சாஸ்திரிகளிடம் சிவகீதையும், நீலகண்ட பாடியமும், அப்துல் கரீமிடம் திருக்குர்ஆனும் கற்றார். ஜஸ்டிஸ் சர்.டி.சதாசிவராவ் தொடர்பால் ஆங்கில அறிவும் பெற்றார். சான்றோர் பேசுமிடம் எங்கணும் சென்று கேள்விச் செல்வத்தைப் பெருக்கியும், பல்திற நூல்களை விடாது பயின்று அறிவை விசாலப்படுத்தியும் வந்தார். அந்நாளைப் பெருமக்கள் பெசன்ட் அம்மையார், மறைமலையடிகள் போன்றோர் தொடர்பும் இவரை உயர்த்தியது. இவ்விதமாகப் பெற்ற ஊற்றமே இவரை ஏற்றம் பெறச் செய்தது. வெஸ்லி கலாசாலையிலும், பள்ளியிலும் தமிழாசிரியராகத் திகழ்ந்தார்.

1917-இல் பெசன்டையும் அவரது இரு கண்களான அருண்டேல், வாடியாவையும் கைது செய்தது அரசு. உடனே அரசியலில் ஈடுபட்டு, தேசபக்தன் இதழாசிரியராகி, வேகமிக்க தமிழ் எழுத்தால் மக்களைச் சிந்திக்கவும் சீறி எழவும் தூண்டினார். அடக்குமுறையை எதிர்த்து கோகலே மண்டபத்தில் திவான் பகதூர் கேசவப் பிள்ளை தலைமையில் திராவிடரும் காங்கிரசும் என்ற தலைப்பில் பேசினார். இதுவே இவரது அரசியல் கன்னிப் பேச்சு.

சென்னையில் மகாசன சங்கம் தோன்றியது. அதன் தஞ்சை மாநாட்டில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொணர்ந்தார். இந்த மொழிப் புரட்சி காரணமாக அவரைப் புரட்சி வீரர் எனப் புகழ்ந்தனர். அம்மாநாடு ஈரோட்டில் கூடியபோது பெரியார் ஈ.வே.ரா தொடர்பு ஏற்பட்டது. சாது அச்சுக்கூடம் நிறுவி நவசக்தி வார இதழை 20-10-1920-இல் தொடங்கினார். தேசபக்திக் கனலை மூட்டினார். தமிழார்வத்தைப் பொங்கச் செய்தார். 1940வரை 20 ஆண்டுகள் அப்பத்திரிகையை நடத்தினார். இந்தியாவிலேயே முதன்முதல் 1918-இல் சென்னையில்தான் தொழிற்சங்கம் ஏற்பட்டது. அதில் சுந்தரனாரின் பங்கு பெரிது. போலீஸ் சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம், இரயில்வே தொழிலாளர் சங்கம் தோன்றக் காரணமானார். அரசியலிலும் தொழிலாளரியக்கத்திலும் இவரது பெரும் பகுதி வாழ்க்கை கழிந்தது. 9-7-1926-இல் அரசியலைத் துறந்தார். இவரது அரசியல் குரு திலகர்.

சமயத் தொண்டின் நிலையமாக நிலவுவது இவர் தோற்றிய பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை. மாதர் சங்கம், கைம்மைப் பெண்கள் கழகம், கணிகையர் நலம் கருதும் நாகபாசத்தார் சங்கம் முதலியவை தோன்றச் செய்தார். இளமை மணம் ஒழிக்க வந்த சாரதா மசோதாவுக்கு எழுத்தாலும் பேச்சாலும் ஊக்கம் தந்தார். இவர் பணிகட்கெல்லாம் மகுடமாக அமைவது தமிழ்ப்பணி.

6.1.1 திரு.வி.க.வின் படைப்புகள் இவர் நடத்திய இரண்டு இதழ்கள் தேசபக்தன், நவசக்தி ஆகியன. இயற்றிய நூல்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, தமிழ்த்தென்றல் (சொற்பொழிவுகள்), தமிழ்ச் சோலை (பத்திரிகைத் தலையங்கங்கள்), மேடைத் தமிழ் (மேடைப் பேச்சுகள்), அருள்வேட்டல் (செய்யுள் நூல்) ஆகியவை. இவரது உரைநடை சின்னஞ்சிறு தொடர்கள், வினாவிடை, வியங்கோள், வியப்புத் தொடர்கள், அடுக்குத் தொடர்கள், புதுச்சொல்லாக்கம், உவமை, உருவகம் போன்றவற்றைக் கொண்டு தனித்தன்மையும் எளிமையும் கொண்டு விளங்குகிறது. புதிய உரைநடையின் தந்தை என்றும் தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்றும் இவர் போற்றப் பெறுகிறார். பொதுமைக் கருத்துகளையும் காலத்துக்கு ஏற்ற புதுமைக் கருத்துகளையும், தமிழ்நாட்டில் தென்றலாய் அள்ளித் தெளித்தார். தமிழாசிரியராய் இருந்து பத்திரிகை ஆசிரியராய்ப் புகழ் பெற்று, அரசியல் தலைவராய் விளங்கி, தொழிலாளர் தலைவராய்ச் சிறப்புற்றுப் படிப்படியாய் வளர்ச்சி கண்டவர்.

திரு.வி.க. ஐம்பது அரிய நூல்களை எழுதியுள்ளார். “பேச்சுப் பெரும்புயலாகவும், எழுத்து எரிமலையாகவும், செய்தித்தாள் சிற்பியாகவும் ஒளிர்ந்தார். அவர் தமிழ்நாட்டுக் காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கினார்” என்று கல்கி பாராட்டியுள்ளார்.

6.1.2 சாதனையும் போதனையும் திரு.வி.க. ஒரு சகாப்தம்; பல்கலைக் கழகம், மூன்றெழுத்துச் சான்றோர், ஆன்ற எழுத்தாளர், அருவிப் பேச்சாளர், தேர்ந்த சிந்தனையாளர், பண்பார்ந்த பத்திரிகையாளர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், இறைத்திருப்பணியும் தமிழ்ப் பொற்பணியும் நாட்டு நற்பணியும் ஆற்றிய நல்லார். தமிழ் முனிவர், தனக்கென வாழாப் பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சம் உடையவர். எல்லார்க்கும் எழுத்துநடை வேறு, பேச்சுநடை வேறு. இந்த இருவேறு நடையையும் ஒன்றாக்கிப் புதியதோர் நடை படைத்தவர். வாழ்வையே பேச்சும் எழுத்துமாக ஆக்கிக் கொண்டவர் இவர். இதனால்தான் படித்த அறிவாளிகளும் ஏடறியாத் தொழிலாளிகளும் இவரால் ஒருசேரக் கவரப்பட்டனர். அடிக்கன்று வாழையாகத் தோன்றிய கல்கியும் மு.வரதராசனாரும் இவருக்கு வாரிசுகளாவர். அதனால்தான் கல்யாண சுந்தரனாரின் முதல் ஈரெழுத்தையும் தன் பெயரின் முதலெழுத்தையும் கல்+கி = கல்கி என வைத்துக் கொண்டார் இரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி). தாம் நடத்திய ஏடுகளில் திரு.வி.க. காந்தியடிகளின் ஆங்கிலத்தை அழகும் ஆழமும் குறையாது அப்படியே பெயர்த்துள்ளார். காந்தி இவரைப் ‘பெயர்ப்பாளர்’ என்றே அழைப்பார். இவரது நூற்றாண்டு விழாவினை1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு தஞ்சையில் கொண்டாடியது.

6.1.3 தன் வரலாறு தன் வரலாற்றில் இவரது ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ ஒருமைல் கல். அது புதுவகை இலக்கியத்திற்குப் புத்தொளி தந்தது. பிரயாணம் என்ற சொல்லுக்குச் ‘செலவு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி நிலவச் செய்த பெருமையர். திரு.வி.க., திரு.வி.க. தமிழ் என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையினைத் தோற்றுவித்தவர். தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, அனுபவங்களை, கலந்து கொண்ட இயக்கங்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றி 800-க்கு அதிகமான பக்கங்களில் வாழ்க்கைக் குறிப்புக்களாகத் தொகுத்துத் தந்துள்ளார். தோற்றுவாய், சோதிடம், குழந்தைமை, பள்ளிப்படிப்பு, பிள்ளைமை, கல்வி எனப் பதினாறு அத்தியாயங்களில் வாழ்க்கைக் குறிப்புக்களைத் தந்துள்ளார். ‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாதல் துணைபுரியும் என்னும் நம்பிக்கை இதை எழுதுமாறு உந்தியது’ – இதுதான் திரு.வி.க.வின் நோக்கம்.

6.2திரு.வி.க. உரைநடையின் வடிவம்

உரைநடையின் பொருளில் புதுமை கண்டவர் திரு.வி.க. அதைப் போலவே, உரைநடையின் வடிவத்திலும் அவர் வளர்ச்சியை ஊட்டினார் என்றால் அது மிகையாகாது. அவர் வழங்கிய நடை, உரைநடையின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றதாகும். நீண்ட தொடர்களுடன், குறியீடுகள் இன்றி, ஏற்ற இறக்கங்கள் இன்றி உணர்ச்சி வெளிப்பாட்டில் கவனம் செலுத்தாது, நீண்ட பத்திகளுடன் வழங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை. அதிலிருந்து மாறுபட்டுச் சிறுசிறு தொடர்களையும், பல்வேறு உணர்ச்சிகளையும் முறையாக வெளிப்படுத்தும் குறியீடுகளுடன் துள்ளல் அமைப்பில், உள்ளத்துக் கருத்துகளுக்கேற்பச் சொற்களைப் புகுத்திப் புதியதோர் அழகுநடையை உருவாக்கியவர்களுள் திரு.வி.க. தலைசிறந்தவராவார்.

தமிழ் உரைநடையைப் பாமரரும் கேட்கும் வண்ணம் ஓரளவுக்கு எளிமைப்படுத்தி, எழில் கூட்டி, வீறுகாட்டி, மிடுக்கு ஊட்டி வழங்கியவர் அவரே. பிறருடைய உரைநடை நூல்கள் கற்றறிந்த அறிஞர் மத்தியில் மட்டுமே உலவின எனலாம். அவர் கொண்ட பன்முக உறவு தமிழ் உரைநடையைப் பலரோடும் உறவாடச் செய்தது ; பலரைப் பின்பற்றச் செய்தது. இந்த நூற்றாண்டின் நடைமாற்றத்துக்கு வழி காட்டி, உன்னதப் படைப்புகளை வழங்கிய முதல்வர்களுள் முதல்வர் திரு.வி.க.வே எனலாம்.

6.2.1 பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை வடிவங்கள் சிலவற்றை நோக்கினால் திரு.வி.க.வின் உரைநடை வடிவ வளர்ச்சியை இனங்காணல் இயலும்.

“உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை யென்பது பரமகர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதர் ஸ்தாபித்த சமயத்தின் தூதனாகவும் அஸ்திவாரமாகவும் இருக்கின்றதென்றும் புரோடெஸ்டாண்டும் மதங்கள் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அபத்த மார்க்கங்களாயிருக்கின்றன வென்றுங் காண்பிக்கின்ற திஷ்டாந்தங்கள்” (மெய்ஞ்ஞான திருச்சபையின் விளக்கம் – 1841) எனவரும் கிறிஸ்துவ சமயநூல் தொடரிலும், “இச்சீவக சிந்தாமணியை உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியருரையுடன் பல பிரதிரூபங்களைக் கொண்டு நன்றாகப் பரிசோதித்து எழுதுவோரால் நேர்ந்த வழுக்களை மாற்றி, பலருக்கும் பயன்படும் வண்ணம் அச்சிடுவிக்க முயலும்படி சில வருடத்திற்கு முன் ம-ள-ள-ஸ்ரீ இராமசாமி முதலியாரவர்கள் பலமுறை வற்புறுத்திக் கொடுத்தார்கள்” (1887, சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முகவுரை) என எழுதுகின்ற டாக்டர் உ.வே.சாமிநாத ஐயருடைய மொழியிலும், நாம் சென்ற நூற்றாண்டின் உரைநடையமைப்பைக் காணலாம்.

இவ்வடிவங்களில் நாம் காண்பது என்ன? உணர்வது எது? நீண்ட நீண்ட தொடர்கள், பெரிய பெரிய பத்தியமைப்புகள், உணர்ச்சிகளையும் சொற்சிறப்புகளையும் வெளிப்படுத்தும் குறியீடுகளின்மை ஆகியவற்றையே.

சுதேசமித்திரனில் பாரதி எழுதிய கட்டுரைகளிலும் நாம் செம்மையைக் காண முடியவில்லை. நீண்ட வாக்கியங்களையும், கவிதையில் ஒதுக்கிய வடமொழிச் சொற்களை இதில் அதிகம் பெய்துள்ள மொழியமைப்பையுமே காண்கின்றோம். ஆயின், அவரிடம் பிற்காலத்தில் சிறிய சிறிய தொடர்கள் கொண்ட தூய தமிழ்ச் சொற்கள் இடம்பெற்ற நடை உருவாயிற்று. “சிறிய தானியம் போன்ற மூக்கு, சின்னக் கண்கள், சின்னத் தலை, வெள்ளைக் கழுத்து” எனத் தொடரும் சிட்டுக் குருவியின் வருணனை புதுமை கொண்ட நடையை நினைவூட்டுவதாகும்.

6.2.2திரு.வி.க. கண்ட உரைநடை வளர்ச்சி திரு.வி.க.வின் உரைநடையோ எளிமை, இனிமை என்னும் இரண்டு இனிய பண்புகளைத் தாங்கி, சிறு சிறு தொடர்களால் துள்ளல் போட்டு நடை பயில்வதைக் காணலாம்.

“சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புத் தமிழ்; வளர்ப்புத் தமிழ்; வாழ்வுந் தமிழ்; அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர்” எனத் தொடரும் மொழியிலும் (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் – பக்.100). “மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப்போராட்டம் பொருளற்ற தென்பது எனது உள்ளக் கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலேயே பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப் பழக அவருக்கென்று ஒரு நடை இயற்கையாகும். இன்னொருவருக்கு வேறுவித நடை இயற்கையாகும்” எனத் தொடரும் மொழிகளிலும் நாம் இவ்வுண்மையைக் காணலாம்.

திரு.வி.க.வின் இத்துள்ளல் நடையே கவிதைப் பண்புடன் உரைவீச்சாக மலர்ந்தது எனலாம்.

“1932ஆம் ஆண்டு ! துறையூர் உமாமகேசுவரர் வரவேற்பு ! சுயமரியாதை எழுச்சி ! என் பெயர் தீட்டிய வளைவு தீக்கிரை ! உமாமகேசுவரர் கையில் தீயன் சிக்கல் ! ‘நம்மவன் விடுங்கள்’ என்கிறது என் நா !” – (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக்.807)

எனத் தொடர்ந்து வியப்புக் குறிகளையே பயன்படுத்தி, சொற்கட்டில் ஒரு அழுத்தத்தையும் விறுவிறுப்பையும் ஊட்டிப் பெய்துள்ளமையை நோக்கும்போது இதனை உணரலாம்.

இத்துள்ளல் நடையே டாக்டர் சாலை.இளந்திரையன் அவர்கள் படைக்கும் உரைவீச்சிலும் அமைந்திருக்கிறது.

பெண்ணே,

பட்டு உடுத்தினால் பகட்டு -

நகை போட்டால் நளினம் -

பசை தடவினால் பளபளப்பு -

மை தீட்டினால் மலர்ச்சி -

சுண்ணம் பூசினால் சுகந்தம் -

இப்படி இப்படிச் சொல்லி

உன்னை

மரப்பாச்சி ஆக்கி விட்டார்கள் மனிதர்கள்

. .. . . . . . . . . . . . . . . . .

விளம்பரத் தட்டியாகவா நீ இருப்பது?

இதுவா பெண்ணின் பெருமை?

- (சாலை. இளந்திரையன், உரைவீச்சு. பக்-12)

என வரும் உரைவீச்சில், தனித்தொடர்கள், உணர்வு காட்டும் சிறு சிறு தொடர்கள் கொண்ட நடை காணப்படுகின்றதன்றோ?

6.2.3நடையும் நடைமாற்றமும் இளமையில் அவரிடம் கால்கொண்ட நடை வேறு. சங்க இலக்கியப் பயிற்சிக்குப் பிறகு அமைந்த கடிய நடைவேறு, பத்திரிகைத் துறையில் நுழைந்த பிறகு அமைந்த இனிய நடைவேறு. இறுதியில் அமைந்த பத்திரிகைக்காக மாற்றப்பட்ட நடையே அவரது உரைநடை வடிவமாயிற்று என்று அவரே தெளிவு செய்தல் காண்கிறோம். அவர் கொண்ட நடை பற்றிய விமர்சனத்தை அவர் கூற்றின் வாயிலாகவே காண்போம்.

“யான் தமிழ்ப் போதகாசிரியனாயிருந்தவன். இப்பொழுது தமிழ்ப் பத்திரிகையாசிரியனானேன். தேசபக்தனுக்கென்று ஒரு தனிநடை கொண்டேன். சிறுசிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில் கருத்துகள் விளக்கும் முறையைப் பற்றினேன். அந்நடையை நாடோறும் எழுதி எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்கு இயற்கையாகியது. பழைய தொடர் மொழிகளும் கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே ஒடுங்கின. சமயம் நேர்ந்துழிச் சிலவேளையில் அவை தலைகாட்டும்.” எவ்வித நடையைக் கைக்கொண்டார் என்பது பற்றி அவர் தரும் ஒரு குறிப்பையும் இங்குக் காணல் தகும்.

“செவ்விய தமிழ்நடை, தமிழ்நாட்டிலுள்ள பல்லோர்க்கு இது போழ்து பயன்படாதென்று கருதித் தேசபக்தனுக்கெனச் சிறப்பாக ஒருவகை உரைநடையைக் கொண்டுள்ளேன். இதுகாலைத் தமிழ்நாட்டு வழக்கிலுள்ள பிற மொழிக்குறியீடுகளையும் இக்கால வழக்குச் சொற்களையும் ஆன்றோராட்சி பெறாத சில முறைகளையும் பண்டைத் தமிழ் மக்கள் கோலிய வரம்பிற்குப் பெரிதும் முரணாதவாறு ஆண்டு வருகின்றேன்” என்ற கூற்றுகளிலேயே அவர்தம் செவ்வியநடை புலனாகிறதன்றோ? உருவாகும் உரைநடைகளின் நடையில் மாற்றம் காண்பது எதனால்? இவ்வினாவுக்குப் பலரும் பல்வேறுவகைக் காரணங்களைக் காட்டியுள்ளனர். திரு.வி.க. அதனை இயற்கை என்னும் ஒரே வகை விதைகளினின்றும் தோன்றும் மரங்கள், உருவ வேறுபாடு கொண்டு வளர்வது போல – மாறுபடுவது என்றும், மொழிநடை அவரவர் இயற்கைக் கேற்ற வண்ணம் அமையும் என்றும் கூறுகின்றார். உள்ளப் பண்போடு பண்பை உருவாக்கிய சூழல், வாழ்ந்த சூழல், கற்ற நூல், பழகிய பழக்கம் இவற்றைப் புலப்படுத்துவது போல அது காணப்பெறும்; ஒவ்வொருவரின் கையெழுத்தும் மாறுதல் போல அதுவும் ஒவ்வொருவரிடமும் மாற்றம் கொள்ளும்” என்கிறார், டாக்டர் மு.வரதராசனார்.

திரு.வி.க. பழகிய துறைகள் பல, பயின்ற துறைகள் பல, நுழைந்த துறைகள் பல, தேடிய துறைகள் பல. எனவே, அவரிடம் பல்வேறுபட்ட துறைமொழியறிவும், கலைமொழியறிவும் தமிழ்மொழியறிவோடு சங்கமமாயின. ஆதலின் அவருடைய நடை இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் சிறந்த நடையாகக் காணப்படுகிறது எனலாம்.

6.3 நடைச்சிறப்பு

உரைநடை சிறப்பாக அமைய வேண்டுமானால் ஒரு சொல்லைத் திரும்பத் திரும்ப எழுதாமல் சொற்களின் உருவத்தை மாற்ற வேண்டும்; புதிய சொற்களை உருவாக்க வேண்டும்; பாரதி கூறியது போல, சொல் புதியதாக இருக்க வேண்டும்; அச்சொல் உணர்த்தும் பொருளும் புதியதாக இருக்க வேண்டும்.

தமிழில் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன.

‘சொன்னான்’ என்னும் சொல்லை

சொன்னான் -

செப்பினான்

அறைந்தான்

கூறினான்

உரைத்தான்

பகர்ந்தான்

பறைந்தான்

கழறினான்

இயம்பினான்

விளம்பினான்

நவின்றான்

ஓதினான்

சாற்றினான்

புகன்றான்

என்றும் அவர் பயன்படுத்துவார்.

தமிழ் மரபுக்குச் சிறிதும் ஊறு நேராமல் மேலைநாட்டு மொழிகளின் உரைநடையைப் பின்பற்றி எழுதுவதிலே திரு.வி.க. அவர்களுக்கு இணையாக அவரையே கூறலாம்.

இவர் எழுதிய முருகன் அல்லது அழகு என்ற நூலில்

“வானத்தின் அழகை என்னவென்று வர்ணிப்பது?”

“ஞாயிற்றின் ஒளியை என்னவென்று நவில்வது?”

“திங்களின் நிலவை என்னவென்று செப்புவது?”

“மின்னலை என்னவென்று கூறுவது?”

“கரிய காற்றின் காட்சியை எப்படி எடுத்துக் காட்டுவது?”

“கைநீட்டும் அலைகடலின் கவினை (அழகு) எங்ஙனம் கூறுவது?”

“என்னே ! அண்டத்தின் அழகு” என்கிறார். இச் சிறுபகுதியில் திரு.வி.க.வின் தமிழ் யாழ்ஒலிபோல இசைக்கின்றது.

6.3.1 தொடர்கள் திரு.வி.க.வின் தொடர்கள் எளிமை வாய்ந்தன; இனிமை வாய்ந்தன; தெளிவு காட்டுவன. அவர்தம் தொடர்கள் முறையாக, ஆற்றொழுக்காகத் தொடர்ந்து பின்னிப் பிணைந்து பொருள் தருவன. ஒன்றோடொன்று இயைபு கொண்டமைவன. அறிமுகம், விளக்கம், முடிப்பு ஆகிய பண்பில் தலைசிறந்து நிற்பன. “நாவலில் புறமனம் ஈடுபடும், ஈடுண்ட அம்மனம் புலன்களின் தொடக்கத்தினின்றும் விடுதலையடைவதாகாது. விடுதலைக்கு ஆழ்ந்த பொருளைக் கொண்ட அரிய நூல்களில் நெஞ்சம் படிதல் வேண்டும். அப்படிவு, புறமனத்தைப் புலன்களின் தொடக்கினின்று விடுவித்துப் புறமனத்தை விளங்கச் செய்யும். ஒழுக்கம் கால்கொள்ளுமிடம் அகமனமே. இந்நுட்பம் உணர்ந்தே சான்றோர் காவிய ஓவியங்களைத் தந்தனர் போலும்” (பக்-656, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்) எனத் தொடரும் வரிகளில் இவ்வமைப்பைக் காணலாம்.

அவர்தம் தொடர்கள் ஓர் எழுவாயைக் கொண்ட பல வினைகளைக் காட்டுவன. ஆயின் பல வினைகளும் பல தொடர்கள் போன்றே அரைப்புள்ளிகளுடன் நடமிட்டு ஒரு துள்ளலைக் கூட்டி எழுவாய்க்கும் இயைபைக் காட்ட வல்லன.

“விழா கழக அளவில் நிற்கவில்லை. அதைக் கடந்து பெருகி வெள்ளமாகியது. விழாவைக் கொண்டாடத் தொழிற் சங்கங்கள் புறப்பட்டன; மாதர் சங்கங்கள் புறப்பட்டன. சமயச் சபைகள் விரைந்தன; கல்விக் கழகங்கள் விரைந்தன. பள்ளிகள் வீறின ! கல்லூரிகள் வீறின ! பத்திரிகைகள் பறந்தன. நூலகங்கள் நுழைந்தன. சிறைகள் எழுந்தன; நகரசபைகள் கிளம்பின; மூலை முடுக்குகளும் முயன்றன.” (பக்-971)

எனவரும் தொடர்களில் நாம் இன்னோரன்ன பண்புகளைக் காணலாம்.

ஆயின், அவர் செயப்பாட்டு வினையிலேயே சில தொடர்களை அமைத்திருப்பதையும் காணமுடிகிறது?

“நமது தேச நலத்தின் பொருட்டுக் காங்கிரஸ் என்றோர் அமைப்பு அறிஞர்களால் காணப்பட்டது.” (தமிழ்ச்சோலை, பக்-90)

“இம்முறையும் அத்தொண்டாற்றுமாறு கேட்கப் பட்டேன்.” (பக்.154)

“சாமிநாத ஐயர் தேசபக்தன் நிலையத்தில் ஒருநாள் காணப்பட்டனர்.” (வாழ்க்கைக் குறிப்புகள், பக்-162)

இவ்வகைத் தொடர்களால் துள்ளல் குறைவதோடு, நடையோட்டம் தடைப்படுதல் போல் தோன்றுகிறதல்லவா? ஆயின் இவ்வகையமைப்பில் ஒரு மிடுக்கிருப்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.

இதழியல் தொடர்கள்

திரு.வி.க. தம் உரைநடையில் பயன்படுத்தும் தொடர்கள், குறிப்பாகத் தலைப்புகள் சிறுமையும், நுண்மையும், பொருளாழமும்கொண்ட விமரிசனத் தன்மை கொண்டவைகளாகக் காணப்பெறும்.சிறப்பாக, அவர் பயின்ற பத்திரிகைத் துறையில் அவர் நிகழ்த்திய பலபுரட்சிகளில் இதுவும் ஒன்றாகும். செய்திக்குரிய தலைப்பை நேர்பொருளில் வழங்காது செய்தியைப் பற்றிய விமரிசனப்போக்கில், உணர்வைத் தட்டி எழுப்பும் வண்ணம் வழங்கியமை ஒருபுது முயற்சி யன்றோ? இது தேசபக்தனுக்கும் நவசக்திக்கும் முன்தோன்றிய சுதேசமித்திரனில் காணப்படாத ஒன்று.

மணி ஐயர் காலமான செய்தியை, “மணிமரஞ் சாய்ந்தது”(12-12-1924) என்றும், சித்தரஞ்சன தாஸ் இறந்த செய்தியை, “கற்பகத்தை இழந்தோம்” (7-8-1925) என்றும், காணப் பெறுகின்ற தலைப்புக்களே இதற்குச் சான்றாகும்.

பத்திரிகைத் துறையில் அவர் உருவாக்கிய மற்றொரு சிறப்பு, உரைநடையில் தமிழ்ச் சொற்களையே பெரும்பாலும் கையாண்டமையாகும். பல அரசியல் சொற்களையும், பிற துறைச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி அவற்றை முறையாகப் பயன்படுத்தினார். இது குறித்துப் பொதுப்பார்வையிலும் கண்டோம். தமிழால் எத்துணை நுண்ணிய கருத்தையும் காட்ட முடியும் என்பதையும் ஓரளவுக்கு வெற்றியோடு நிறுவியவர் அவர். தொடர்ந்து வரும் நடையில்பிறமொழிச் சொற்கள் இடம்பெறும்போது ஓட்டம் தடைப்படுதல் இயல்பு. துள்ளல் மாறுவது தவிர்க்க முடியாதது.

அன்னி பெசன்ட் அம்மையாரை ‘அன்னை வசந்தை’ என்றும், Certificate – தகுதித்தாள்; Culture – மனிதம்; Evolution – கூர்தல் அறம் என்று மொழிபெயர்த்தவர் அவர். ஆயின், சில இடங்களில் சாதாரணச் சொற்களையும் மொழிமாற்றம் செய்யாது விட்டமை புதுமையாய்த் தோன்றுகிறது.

‘எளிமையான நடையிலே எழுதுகின்றேன். தொழிலாளரையும் என்எழுத்து சென்று சேர வேண்டும்’ என்றெல்லாம் பேசியும் எழுதியும்வந்தவர் அவர். ஆயின் சில இடங்களில் காணப்பெறும் கடுஞ்சொற்களை – கடுக்கும், பிறங்கப் பிறங்க, பாங்கர், மன்பதை,கடாவிடை, காண்டகு, கால்வது போன்ற பல சொற்களை நீக்கியிருப்பின் நீரோட்ட நடை எளிமையில் ஏற்படும் சிறு சிறு தடைகளையும் சுழிகளையும் தவிர்த்திருக்க முடியும் எனலாம்.

திருக்குறள் விரிவுரை, பெரியபுராணக் குறிப்புரை போன்ற நூல்களில் இடைக்கால உரையாசிரியர்கள் பயன்படுத்திய சொற்களான என்னை, கொள்க, என்க, என்பது போன்ற சொல் முடிவுகளைக் காண்கிறோம். அங்கே இவை மொழி ஓட்டத்தைத் தடை செய்வதாகக்காண முடியவில்லை. ஆயின் பிறநூல்களில் அது தடை செய்தல் காண்கிறோம்.

6.3.2உரைநடையில் கவிதைப் பண்பு உரைநடையில் கவிதைப் பண்பு கலப்பதும் கவிதையில் உரைநடைத் தாக்கம் அமைவதும் தவிர்க்க முடியாத மொழிப்பண்பாகும். திரு.வி.க.வின் உரைநடை வீறு கொண்டது, எழுச்சி ஊட்டுவது, இனிமை ஊட்டுவது, இப்பண்புகளைப் போலவே, சொல்லினிமை, காட்சியினிமை கொண்ட கவிதைப் பண்பையும் சில இடங்களில் காட்டுகின்றது.

“என்னை வைவோர் மீதும் எனக்கு முனிவு தோன்றவில்லை. கனிவே தோன்றுகிறது” (பக்-964, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்)

எனவரும் இடத்தில் எதுகை, மோனை போன்ற சொல்லாட்சியைக் காண்கிறோம்.

“வழிப்போக்கரைக் கொடிகளிற் குலவும் வெற்றிலைக் கால்கள் வாழ்த்தும் ; வாழைகள் பழங்களைத் தாங்கிக் கைகளை நீட்டி அழைக்கும். மாமரங்கள் காய் கனிகளை ஏந்தி இறைஞ்சும்; தென்னைகள் காய்களைச் சுமந்து இளநீர் பருக வாரும் வாரும் என்று தலையாட்டும். கரும்புகள் அருந்துக அருந்துக என்று சாறு பொழியும்; ஆலும் அரசும் வேம்பும் ஆங்காங்கே குடை பிடித்து நிற்கும். செஞ்சாலிக் கதிர்கள் சாமரை இரட்டும். பொய்கைப் பூக்கள் கண்ணுக்கு விருந்தாகும்.”

என வரும் இடத்தில் இயற்கைக் காட்சியில் கற்பனைக் காட்சியைக் கலந்தூட்டும் கவிதைப் பண்பைக் காணலாம்.

“அட்லன் தோட்டம் என்ற சிறு வனம் காட்டைக் கடுக்கும். அவ்வனம் இராயப்பேட்டைக்குப் பொதுவுடைமையாகப் பயன்பட்டது. அதில் அத்தி, விளா, மா, நெல்லி, நாகை, கிச்சலி, இலந்தை, இலுப்பை, புளியம், புரசை, புன்கு, முள்முருக்கு, கொன்றை, மகிழம், அசோகு, புன்னை, நுணா, ஆல், அரசு, வேம்பு, பனை, மூங்கில் முதலிய மரங்கள் விரிந்து பரந்து அடர்ந்து ஓங்கி வெய்யோனுடன் பொருதும். பெருங்களா, காரை, நொச்சி, ஆமணக்கு, எருக்கு, வட்டத்தாரை முதலிய செடிகள் பரவி மரங்களை நோக்கும். சிறுகளா, சங்கம், கள்ளி, கண்ணி, மருட்டி, படர்காரை முதலிய தூறுகளையும் பிணித்துப் பின்னிப் படர்ந்து இறுமாந்து கிடக்கும். முண்டகம், கண்டகம், முள்ளி, ஆடாதொடா, ஆடுதின்னாப் பாளை, செருப்படை, தூதுவளை, தும்பை, துழாய், சுண்டை, நாயுருவி, நாக்கடு, ஊமத்தை, கற்றாழை, கொடிவேள், கண்டங்கத்திரி, அவுரி முதலிய மூலிகைகள் மருத்துவஞ் செய்யும்.” (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக் – 81, 83)

எனத் தொடரும் அவரது இராயப்பேட்டை வருணனை கவிதையின் முழுச்சாயலைப் புலப்படுத்துதல் காணலாம். கபிலரின் குறிஞ்சிப் பாட்டும், களவியலின் தலைவி நிற்கும் காட்சி வருணனையும், இளங்கோவின் பேரியாற்று வருணனையும் இக்காட்சியில் கலந்திருப்பதை நாம் நினைந்து மகிழலாம். இயற்கைக் காட்சிகள் வரும் சில இடங்களைக் கண்டு அவர் தரும் நடை ஜான்ஸன் நடையோடும், நச்சினார்க்கினியர் நடையோடும் ஒத்திருத்தலைச் சிலர் அவரிடமே கூறியுள்ளனர் என்பதையும் நாம் அறிகிறோம்.

குறியீடுகள்

சொற்கள் புலப்படுத்தும், புலப்படுத்த வேண்டிய உணர்வுகளுக்கேற்பத் தொடர்களில் நிறுத்தற் குறியீடுகளையும், உணர்ச்சிக் குறியீடுகளையும் பயன்படுத்துதல் வேண்டும். ஆறுமுக நாவலர் இவ்வுண்மையைப் பழக்கிக் காட்டினார். தம் உரைநடையில் மொழியுணர்வைப் புலப்படுத்தினார் அவர். ஆயின், அவ்வறிமுகத்தில் முழு வெற்றி கண்டவர் திரு.வி.க.வே எனலாம். ஆறுமுக நாவலர் கேள்விக்குறி, காற்புள்ளி, முற்றுப்புள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றார். காற்புள்ளியைவிட, அரைப்புள்ளியை மிகுதியும் கையாள்கிறார். வியப்புக் குறியை மிகுதியாகப் பயன்படுத்தவில்லை. ஆயின் திரு.வி.க. வியப்புக்குறியையும், காற்புள்ளி போலவே சரளமாகப் பயன்படுத்துகிறார். ஒரே சொல் இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் அடுக்கி வரும்போது சில இடங்களில் வியப்புக் குறியைக் கூட்டிக் கொண்டே போகின்றார். சில இடங்களில் கூட்டாது ஒன்றை மட்டுமே பயன்படுத்துகின்றார்.

“தமிழின் தொன்மையும் தன்மையும் என்னே ! என்னே !!” (தமிழ்ச்சோலை, பக்-5)

“அவர் ஆன்மா சாந்திநிலை பெறுக என வாழ்த்துகிறோம். சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!” (தமிழ்ச்சோலை, பக்-356)

இவ்வாறு அடுக்கி வரும் சொற்களுக்கேற்பக் குறிகளையும் அடுக்குகிறார். ஆயின்,

“இவ்வளவுக்குங் காரணர் யாவர்? கற்றோர் ! கற்றோர் !” (பக்-167)

“ஆறறிவுடைய மனிதனோ? வெட்கம் ! வெட்கம் !” (பக்-231)

போன்ற இடங்களில் சொற்கள் அடுக்கிய போதும் குறிகள் அடுக்கம் பெறவில்லை. இதேபோன்று, வியப்புக்குறி இடம்பெற வேண்டாத இடத்துப் பெய்துள்ளமை, இடம்பெற வேண்டிய இடத்துக் கேள்விக் குறியைப் பெய்துள்ளமை, இவ்விரண்டையும் விடுத்து, அரைப்புள்ளியையும் முற்றுப் புள்ளியையும் பெய்துள்ளமை ஆகிய போக்கை அவர்தம் நடையில் காணலாம்.

“இயற்கை அன்னையினுடையதா? மகனுடையதா?

நேயர்களே ! உன்னுங்கள் !” – (பக்-231)

உன்னுங்கள் எனவரும் சொல்லில் வியப்புக்குறிக்கு என்ன வேலை?

6.3.3உரைநடையில் நகை திரு.வி.க.வின் உரைநடையில் சீரிய கருத்துகளே இடம் பெற்றன. எனவே, நகைச்சுவை, எள்ளல் சுவை போன்றவற்றை அவரிடம் காணுதல் அருமை, எனினும் அவரது உரைநடையில் சிலவிடத்து அவை இடம் பெற்றிருத்தலை நாம் கண்டு சுவைக்கலாம்.

“இலங்கைச் செலவு” என்னுந் தலைப்பை நோக்கியதும் சிலர்

இலங்கைக்குச் சென்று திரும்பியதற்கு நேர்ந்த செலவு போலும் என்று நினைக்கலாம்” (தமிழ்ச்சோலை, பக்-57)

எனத் தொடரும் இடத்திலும், “இயந்திரந்தீட்டி ஈந்த அரிசியை வீட்டுப் பெண்மணிகள் நன்றாகக் கழுவுகின்றார்கள் நன்றாக வேகவைத்துக் கஞ்சி வடிக்கிறார்கள். யாண்டாயினும் சிறிது சத்து மருந்து போல் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அரிசியைக் கழுவுவதாலும் கஞ்சியை வடித்தலாலும் அச்சிறு சத்தும் ஒழிகிறது” (தமிழ்ச்சோலை, பக்-201) எனத் தொடரும் இடத்திலும் அவர்தம் எள்ளலும் நகையும் சிந்தனையைக் கிளறும் வண்ணம் அமைந்திருத்தல் காணலாம்.

இளங்கோவிடமும், உரையாசிரியர்களிடமும், கல்வெட்டுக்களிலும் கிறித்தவர்களிடமும் தவழ்ந்து நடந்த உரைநடை, ஆறுமுக நாவலர் போன்றோரிடத்து வளர்ந்த உரைநடை, திரு.வி.க. அவர்களிடம் சீர்மை பெற்று மலர்ந்தது எனலாம். அவர்தம் உரைநடை வடிவம் பழமைக்கும் இன்றைய புதுமைக்கும் சிறந்த உரம் வாய்ந்த பாலமாய் விளங்கியது என அறிந்து மகிழலாம்.

6.4 தொகுப்புரை

திரு.வி.க.வின் நடை இயற்கை நடையாய் ஆன பீடுநடை. நேராகச் சொல்லல், சுருங்கச் சொல்லல், சிறந்த பொருளைச் சொல்லல் ஆகிய பண்புகளோடு அமைந்த கட்டுரையே இலக்கிய வரலாற்றில் ஒரு சிறந்த இடத்தைப் பெறும் என்ற கூற்றிற்குத்தக திரு.வி.க.வின் உரைநடை தமிழ் இலக்கியத்தில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. ஒரே அளவுள்ள சிறுசிறு பகுதிகளாக அமைப்பது திரு.வி.க.வுக்குக் கைவந்த கலை. இவ்வாக்கியங்களின் இறுதிச் சொற்களாக ஒரே சொல் வரும் நிலையில் இயற்கையாக அமைப்பதன் மூலம், ஓசை இன்பத்தைச் சேர்க்கும் நிலை இவர் நடையில் அமைந்திருப்பதைக் காணலாம்.