54

பழைய இலக்கியங்களுள், ஆராய்ச்சியாளர்களை மிகவும் கவர்ந்தவை எவை?

தமிழில்,    பழைய    இலக்கியங்களுள், ஆராய்ச்சியாளர்களை அவர்களுள்ளும்    முக்கியமாகக் கல்வியாளர்களை அதிகம் கவர்ந்தவை, காப்பியங்களே.

குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர் யார்?

குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர், பேராசிரியர், தொ.பொ.மீனாட்சி     சுந்தரனார் ஆவார்.

சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?

ம.பொ.சிவஞானம்,    சிலம்புச் செல்வர் என்று     அழைக்கப்படுகிறார்.

கம்பனுடைய காப்பியத்தை, இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப விளக்கம்    கொடுத்தவர்களில் முக்கியமானவர் யார்?

கம்பனுடைய காப்பியத்தை இன்றைய சமுதாயத்தின்     தேவைக்கேற்ப விளக்கம்    கொடுத்தவர்களில்     முக்கியமானவர் ப.ஜீவானந்தம்.

டி.கே.சி.யின் ரசனைமுறைத் திறனாய்வுக்குத் தளமாக இருந்த நூல் எது?

டி.கே.சி.யின் ரசனைமுறைத் திறனாய்வுக்குத் தளமாக இருந்த நூல் கம்ப ராமாயணமாகும்.

‘வேறு எதில் வேண்டுமானாலும் சமரசம் செய்யலாம்.. ஆனால், இதில்    சமரசம் கூடாது’ என்று க.நா.சுப்பிரமணியம் கூறுவது எதைக் குறிக்கிறது?

“வேறு எதில் வேண்டுமானாலும் சமரசம்     (compromise)    பேசலாம்; இலக்கியத்தின் தரத்தில் மட்டும்    சமரசம்    பேசி முடிவுகட்டக்கூடாது” என்று க.நா.சுப்பிரமணியம் கூறுவதைக் குறிக்கிறது.

தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது என்ற நூலை எழுதியவர் யார்?

தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது என்ற நூலை எழுதியவர் சி.சு. செல்லப்பா ஆவார்.

புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதியவர் யார்?

புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதியவர் வல்லிக்கண்ணன் ஆவார்.

சி.கனகசபாபதி புதுக்கவிதையின் உருவ அமைப்பை, சங்க காலத்தின் எந்த யாப்பு வகையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்?

சி.கனகசபாபதி புதுக்கவிதையின் உருவ அமைப்பை, புதுக்கவிதை என்ற யாப்பு மீறிய கவிதையை யாப்புடைய சங்க இலக்கியக் கவிதைகளோடு ஒப்பிடுவதாகும்.

விமரிசனத்துக்காக என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட இதழ் எது?

விமரிசனத்துக்காக என்று    சொல்லி,    சி.சு.செல்லப்பா    என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது எழுத்து.

1980க்குப் பின்னர் வந்த தமிழ்த் திறனாய்வாளர்களிடம் மையமாக அமைந்தது என்று சொல்லத்தக்கது எது?

1980க்குப் பின்னர் வந்த தமிழ்த் திறனாய்வாளர்களிடம் மையமாக அமைந்தது என்று சொல்லத்தக்கது நவீனச் சிந்தனை வழிப்பட்ட கொள்கையும் அக்கொள்கையின் சார்பும் ஆகும்.

தொல்காப்பியம் முக்கியமாக எது பற்றிப் பேசுகிறது?

தொல்காப்பியம் முக்கியமாக ஒரு மேல்நிலையில், இலக்கியம் எவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது, அதன் பண்புகள், பகுதிகள், செயல்கள், செய்திகள் என்ன என்று இலக்கியக் கொள்கை பற்றிப் பேசுகிறது.

தமிழில் பல்துறை ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் குறிப்பிடத் தக்க மூவரைக் கூறுக?

தமிழில் பல்துறை ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் மயிலை சீனி. வேங்கடசாமி முதலியோர்.

தமிழில் திறனாய்வாளர்களை அதிகமாகப் பாதித்த / செல்வாக்குச் செலுத்திய ஈழத்துத் திறனாய்வாளர் யார்?

ஈழத்திலும் தமிழகத்திலும் திறனாய்வாளர்களிடையே அதிகமாகப் பாதிப்பை ஏற்படுத்தியவர் கலாநிதி கைலாசபதி.

ஈழத்துத் திறனாய்வாளர்களுள் காந்தியத் தாக்கம் கொண்டவர் யார்?

ஈழத்துத் திறனாய்வாளர்களுள் காந்தியத் தாக்கம் கொண்டவர் மு.தளைய சிங்கம் ஆவார்.

தொ.மு.சி.ரகுநாதன், பாரதி பற்றி எழுதிய முக்கியமான நூல் யாது?

தொ.மு.சி.ரகுநாதன், பாரதி பற்றி எழுதிய முக்கியமான நூல் பாரதி- காலமும் கருத்தும் என்ற ஆராய்ச்சி நூல் ஆகும்.

பள்ளு இலக்கியம் பற்றிய புதிய செய்திகளைத் தம் திறனாய்வு மூலம் வெளிப்படுத்தியவர் யார்?

பள்ளு இலக்கியம் பற்றிய புதிய செய்திகளைத் தம் திறனாய்வு மூலம் வெளிப்படுத்தியவர் கோ.கேசவன் ஆவார்.

முற்போக்கான போக்குகள் என்று நா.வானமாமலை கூறும் போக்குகள் எத்தகையவை?

முற்போக்கான போக்குகள் என்று நா.வானமாமலை கூறும் போக்குகள்  நம்பிக்கைகளையும், சமூக உணர்வுகளையும், மனித நேயங்களையும் கொண்ட போக்குகள் ஆகும்.

‘அந்நியமாதல்’ என்ற மேலைநாட்டுக் கொள்கையில் அதிகமான அக்கறை கொண்ட தமிழ்த் திறனாய்வாளர் யார்?

‘அந்நியமாதல்’ என்ற மேலைநாட்டுக் கொள்கையில் அதிகமான அக்கறை கொண்ட தமிழ்த் திறனாய்வாளர் கோவை ஞானி ஆவார்.

தமிழில் பின்னை அமைப்பியல் என்ற கொள்கையை அதிகம் பின்பற்றிய திறனாய்வாளர் யார்?

தமிழில் பின்னை அமைப்பியல் என்ற கொள்கையை அதிகம் பின்பற்றிய திறனாய்வாளர் அ.மார்க்ஸ் ஆவார்.