56

அணுகுமுறை என்பது இலக்கியத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற அதன் பண்பு , போக்கு , அதன் அவசியம் , அதன் கொள்கை முதலியவற்றை அடியொற்றி அமைகிறது .

திறனாய்விற்கான அணுகுமுறையை ஐந்து எனப் பகுத்துக் கூறியவர் யார் ?

திறனாய்விற்கான அணுகுமுறையை ஐந்து எனப் பகுத்துக் கூறியவர் வில்பர் ஸ்காட் எனும் அறிஞர் ஆவார் .

அணுகுமுறை அமையும் விதம் யாது ?

அணுகுமுறை பொருத்தமானதாக இருக்கவேண்டும் .

பொருத்தமாக அமையவில்லை என்றால் அது பிழைபட்ட முடிவுகளையே தரும் .

திறனாய்வாளனுடைய இரண்டு கண்கள் என்று கருதத் தக்கவை யாவை ?

திறனாய்வாளனுடைய இரண்டு கண்கள் என்று கருதத் தக்கவை பொருத்தமான இலக்கியம் மற்றும் பொருத்தமான அணுகுமுறை ஆகும் .

அழகியல் அணுகுமுறையின் விவாதம் எவை பற்றியது ?

அழகியல் அணுகுமுறையின் விவாதம் உருவம் - உள்ளடக்கம் பற்றியதாகும் .

அழகியல் திறனாய்வு உருவம் உள்ளடக்கம் இவற்றில் எதனை முதன்மையானது என்கிறது ?

அழகியல் திறனாய்வு உருவம் உள்ளடக்கம் இவற்றில் உருவமே முதன்மையானது ஆகும் .

தமிழில் ரசனை முறைத் திறனாய்வின் முன்னோடி யார் ?

தமிழில் ரசனை முறைத் திறனாய்வின் முன்னோடி டி.கே.சிதம்பர நாதனார் ஆவார் .

அழகு பற்றி இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞர் கூறியது என்ன ?

இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞர் அழகு என்பது தற்செயலான மற்றும் தனிப்பட்ட புலன் இன்ப நுகர்ச்சிகளைவிட மேன்மையானது என்கிறார் .

டி.கே.சிதம்பர நாதனார் எவற்றை உருவத்தின் காரியங்கள் என்பார் ?

டி.கே.சி. விஷயம் , உணர்ச்சி ஆகியவற்றை உருவத்தின் காரியங்கள் என்கிறார் .

அழகியல் திறனாய்வு இலக்கியத்தில் எந்த வகையைத் தன்னுடைய தளமாக வைத்துக் கொண்டது ?

அழகியல் திறனாய்வு இலக்கியத்தில் கவிதையை தன்னுடைய தளமாக வைத்துக் கொண்டது .

மனப்பதிவு முறை என்றால் என்ன ?

மனப்பதிவு முறை என்பது நேரிடையான ஒரு படைப்பின் மீதான பொருளைத் தகர்த்து வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்வது ஆகும் .

கலை ஓர் உத்தியே என்று சொன்னவர் யார் ?

கலை ஓர் உத்தியே என்று சொன்னவர் ஷ்க்லோவஸ்கி ஆவார் .

உருவவியல் , ருசியாவில் ஒரு கொள்கையாகக் காலூன்றிய ஆண்டு யாது ?

உருவவியல் , ருசியாவில் ஒரு கொள்கையாகக் காலூன்றிய ஆண்டு 1917 ஆகும் .

தொல்காப்பியம் , செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எனக் கூறுவன எத்தனை ?

தொல்காப்பியம் , செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எனக் கூறுவன இருபத்தாறு .

கதைப் பின்னலுக்கு உட்பட்டது இழை பொருளா ?

அல்லது இழைபொருளுக்கு உட்பட்டது கதைப்பின்னலா ?

கதைப் பின்னலுக்கு உட்பட்டது இழை பொருள் ஆகும் .

கதைப் பின்னல் என்பதன் விளக்கம் ( Definition ) கூறுக ?

கதைப்பின்னல் ( Plot ) என்பது , கதைக்குரிய மூலாதாரமான நிகழ்ச்சிகளைத் தமக்குள் ஒன்றிணைகிற முறையில் கலையியல் நேர்த்தியுடன் கட்டமைப்பது ஆகும் .

இந்திய சமயத் தத்துவம் எவற்றின் அடிப்படையில் உண்டாக்கப் பெற்றிருக்கின்றது ?

இந்திய சமயத் தத்துவம் வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்டாக்கப் பெற்றிருக்கின்றது .

பாவத்தின் சம்பளம் மரணம் - எந்தச் சமயத்தின் தத்துவம் இது ?

பாவத்தின் சம்பளம் மரணம் – கிறித்துவ சமயத்தின் தத்துவம் .

ஆணவம் - கன்மம் - மாயை பற்றி விளக்கும் தத்துவம் , விசிஷ்டாத்வைதமா ?

சைவ சித்தாந்தமா ?

ஆணவம் , கன்மம் , மாயை ஆகியவை சைவ சித்தாந்தம் ஆகும் .

சரணாகதித் தத்துவ மரபைப் பின்பற்றியுள்ள புகழ்பெற்ற இலக்கியம் எது ?

சரணாகதித் தத்துவ மரபைப் பின்பற்றியுள்ள புகழ்பெற்ற இலக்கியம் இராமகாதை ஆகும் .

அறநெறி அணுகுமுறை எதனுடைய ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது ?

அறநெறி அணுகுமுறை இலக்கியத் திறனாய்வவின் பகுதியாகக் கருதப்படுகிறது .

இலக்கியம் காலூன்றி நிற்கின்ற வரலாற்றிற்கு அடிப்படையாக அமையும் அச்சுகள் எவை ?

இலக்கியம் காலூன்றி நிற்கின்ற வரலாற்றிற்கு அடிப்படையாக அமையும் அச்சுகள் காலம் , இடம் .

மாற்றம் என்பது உயிருடைய பொருள்களின் தன்மையா ?

சடப் பொருள்களின் தன்மையா ?

மாற்றம் என்பது உயிருடைய பொருள்களின் தன்மை ஆகும் . கா.சீ.வேங்கடரமணி , ந.சிதம்பர சுப்பிரமணியன் முதலியோருடைய நாவல்களைத் திறனாய்வு செய்யத் தேவைப்படும் வரலாற்றுப் பின்னணிகள் யாவை ?