57

கா.சீ.வேங்கடரமணி , ந.சிதம்பர சுப்பிரமணியன் முதலியோருடைய நாவல்களைத் திறனாய்வு செய்யத் தேவைப்படும் வரலாற்றுப் பின்னணிகள் முருகன் ஒர் உழவன் , தேசபக்தன் கந்தன் , மண்ணில் தெரியுது வானம் .

வரலாற்றியல் திறனாய்வில் காணப்படுகிற மூன்று அடிப்படை நிலைகள் யாவை ?

இலக்கியத்திலிருந்து வரலாறு காண்பது , இலக்கியத்தினுடைய வரலாற்றினைக் காண்பது மற்றும் இலக்கியத்தை வரலாற்றின் பின்னணியில் பார்ப்பது ஆகும் .

உளவியல் தனித்துறையாக வளர்வதற்குமுன்னால் , அதில் வல்லவர்களாகக் கருதப்பட்டவர்கள் யார் ?

உளவியல் தனித்துறையாக வளர்வதற்குமுன்னால் , அதில் வல்லவர்களாகக் கருதப்பட்டவர்கள் அவல நாடகங்களை ( Tragedy ) உருவாக்கியவர்கள் ஆகும் .

பகுப்புமுறை உளவியலை வகுத்துச் சொன்ன அறிஞர் யார் ?

பகுப்புமுறை உளவியலை வகுத்துச் சொன்ன அறிஞர் சிக்மண்ட் ஃபிராயிட் எனும் ஜெர்மானிய மருத்துவர் .

உள்ளம் அல்லது மனம் என்பது மூன்று அடுக்குகளைக் கொண்டது .

அந்த மூன்றும் எவை ?

நனவுடை மனம் , நனவிலி மனம் மற்றும் அடிமனம் ஆகும் .

மேலைநாடுகளில் தீங்கு , கேடு முதலியவற்றைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் தொல்படிமமாகச் சித்தரிக்கப்படும் மாந்தர் யார் ?

மேலைநாடுகளில் தீங்கு , கேடு முதலியவற்றைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் தொல்படிமமாகச் சித்தரிக்கப்படும் மாந்தர் சாத்தான் ஆவான் .

தன் வரலாற்று உளவியல் திறனாய்வு செய்த அமெரிக்கத் திறனாய்வாளர் ஒருவரைக் குறிப்பிடுக ?

தன் வரலாற்று உளவியல் திறனாய்வு செய்த அமெரிக்கத் திறனாய்வாளர் எட்மண்ட் வில்சன் ஆவார் .

ஒப்பியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருதுகோள்கள் இரண்டனைக் கூறுக ?

ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் தோன்றுகிற இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும் , அதே சமயத்தில் படைப்பாளியின் திறத்தினாலும் , குறிப்பிட்ட சிறப்பியலான சில பண்பாட்டுச் சூழலினாலும் வித்தியாசப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதாகும் .

ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை விதிமுறைகளைத் தந்தவர் யார் ?

ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை விதிமுறைகளைத் தந்தவர் அமெரிக்க அறிஞர் ரீமாக் ஆவார் .

இலக்கியங்களுக்கிடையேயுள்ள தாக்கங்களை அறியத் துணை நிற்கும் துறை யாது ?

இலக்கியங்களுக்கிடையேயுள்ள தாக்கங்களை அறியத் துணை நிற்கும் துறை மொழிபெயர்ப்பு துறை ஆகும் .

இலக்கியம் என்பதற்கு அதன் இலக்கியத் தன்மையே ( Literatures ) முக்கியக் காரணம் என்றும் அதனைத் தருவது மொழியமைப்பே என்றும் சொன்னவர் யார் ?

இலக்கியம் என்பதற்கு அதன் இலக்கியத் தன்மையே ( Literatures ) முக்கியக் காரணம் என்றும் அதனைத் தருவது மொழியமைப்பே என்றும் சொன்னவர் ரோமன் யகோப்சன் ஆவார் .

சீதையைக் கண்டு வந்த அனுமன் , அந்தத் தகவலை இராமன் உளங்கொள்ளுமாறு எவ்வாறு கூறுகிறான் ?

சீதையைக் கண்டு வந்த அனுமன் , அந்தத் தகவலை இராமன் உளங்கொள்ளுமாறு கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்று கூறினான் .

மொழியில் இயல்பு வழக்கு என்று சொல்லப்படுவது , எது ?

இயல்பு வழக்கு என்று சொல்வோமானால் , இலக்கியத்தில் சிறப்பாக வழங்குகிற மொழிவழக்கை இலக்கிய வழக்கு ( Literary usage ) என்கிறோம் .

இலக்கியம் , மனித குலத்தோடு எந்த மூன்று நிலைகளில் நெருக்கம் கொண்டதாக விளங்குகின்றது ?

இலக்கியம் , மனித குலத்தோடு தோற்றம் , பொருள் , பயன்பாடு என்ற மூன்று நிலைகளில் நெருக்கம் கொண்டதாக விளங்குகின்றது .

சமுதாய மாற்றத்தை முன்மொழிகின்றவர்கள் யார் ?

சமுதாய மாற்றத்தை முன்மொழிகின்றவர்கள் வெ.கனகசபைப் பிள்ளை , கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் ஆகியோராவார் .

சாதி மதம் பார்த்துக் காதலிக்கிற நவயுகக் காதலைக் கிண்டல் செய்த தமிழ்க் கவிஞர் யார் ?

சாதி மதம் பார்த்துக் காதலிக்கிற நவயுகக் காதலைக் கிண்டல் செய்த தமிழ்க் கவிஞர் மீரா ஆவார் .

சமுதாய நிறுவனங்கள் என்று சொல்லப்படுபவை யாவை ?

சமுதாய நிறுவனங்கள் என்று சொல்லப்படுபவை திருமணம் , தனிக்குடும்பம் , கூட்டுக் குடும்பம் , சமூக நியதிகள் அல்லது எழுதப்படாத சட்டங்களும் மரபுகளும் , சாதி முதலியவை சமுதாய நிறுவனங்களாகும் .

பாராட்டு முறைத் திறனாய்வின் பண்பினைக் கூறுக?

பாராட்டு முறைத் திறனாய்வு இலக்கியத்தின் நிறை, குறைகளைச் சமமாக அறிந்து மதிப்பீடு செய்யாமல், நிறைகளை மட்டும் எடுத்துக் கூறி அவற்றைப் போற்றும் தன்மையைக் கொண்டது ஆகும்.

‘எதனைப் போற்றுகின்றமோ அது வளரும்’ என்று சொன்னவர் யார்?

‘எதனைப் போற்றுகின்றமோ அது வளரும்’ என்று சொன்னவர் பாரதியார்.

முடிபுமுறைத் திறனாய்வின் அடிப்படையான பண்பு யாது?

முடிபுமுறைத் திறனாய்வின் பண்பு ஒரே அளவுகோல் அல்லது ஒரேவிதமான வரையறை கொண்டு ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பது ஆகும்.

விதிமுறைத் திறனாய்வுக்கும் முடிபுமுறைத் திறனாய்வுக்கும் உள்ள வேறுபாடு கூறுக?

முடிபுமுறைத்     திறனாய்வு என்பது சில அளவுகோல்களைக் கொண்டு, குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளையும் மதிப்புகளையும் வழங்குவது ஆகும். விதிமுறைத்    திறனாய்வு என்பது, விதிகளையும் அளவுகோல்களையும் அப்படியே ஓர் இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது.

நெடுநல்வாடையை அகம் என்பது தவறு, அது புறமே என்று கூறிய உரையாசிரியர் யார்?

நெடுநல்வாடையை அகம் என்பது தவறு, அது புறமே என்று கூறிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.

செலுத்துநிலை     அல்லது     படைப்புவழித் திறனாய்வு பற்றி விளக்குக?