58

படைப்புவழித் திறனாய்வு இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்லுகிறது.

இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்ற முறையில் அமைகிற திறனாய்வு வகை எது?

இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்ற முறையில் அமைகிற திறனாய்வு வகை முடிபுமுறைத் திறனாய்வு.

பொதுவான விதிமுறைகளை உருவாக்குவதற்குப் படைப்புவழித் திறனாய்வுமுறை உதவுகிறதா? இல்லையா?

ஆம். பொதுவான விதிமுறைகளை உருவாக்குவதற்குப் படைப்புவழித் திறனாய்வுமுறை உதவுகிறது.

விளக்க முறையை எவ்வாறு வரையறை செய்யலாம்?

விளக்கமுறைத் திறனாய்வு என்பதைக் குறிப்பிட்ட இலக்கியப் பனுவலின் உட்பொருளையும், அதனோடு இணைந்த, பொருத்தமான பிற வசதிகளையும் ஏற்புடையதாகச் சொல்லுதல் என்பதாக வரையறை செய்யலாம்.

விளக்கமுறைத் திறனாய்வு குறித்து அறிஞர் லியோன்லெவி தரும் விளக்கம் யாது?

‘ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு    முறையில்    அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி     பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது' என லியோன்லெவி விளக்குகிறார்.

திறனாய்வில் மதிப்பீட்டு முறை என்றால் என்ன?

குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய    செய்திகள் எவ்வளவு ஆழமாகவும்,    உண்மையாகவும்,    திறம்படவும் சொல்லப் பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் அவ்விலக்கியத்தை மதிப்பிடலாம். இவ்வாறு மதிப்பிட்டுரைப்பதுதான் மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் அடிப்படைக் கருதுகோள் ஆகும்.

மதிப்பீட்டு முறையின் நோக்கம் யாது?

ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் நிறை குறைகளைக் கண்டு, குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்கன கொண்டு அது இத்தகையது என மதிப்பீடு செய்தல், மதிப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் ஆகும்.

தத்துவ நிலையில் அமைந்த புதுமைப்பித்தனின் கதையின் பெயர் என்ன?

தத்துவ நிலையில் அமைந்த புதுமைப்பித்தனின் கதையின் பெயர் கயிற்றரவு.

பின்வருவனவற்றுள் ஒப்பிடுதலுக்கு அடிப்படையானது எது?

(அ)

ஒப்பிடும் இரண்டு இலக்கியப்பனுவல்களும் ஒத்து இருக்க வேண்டும்.

(ஆ)

இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருக்க வேண்டும்.

(இ)

இரண்டிலும் ஒற்றுமையும் இருக்க வேண்டும்; வேற்றுமையும் இருக்க வேண்டும்.

(இ)

இரண்டிலும் ஒற்றுமையும் இருக்க வேண்டும்; வேற்றுமையும் இருக்க வேண்டும்.

ஒப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் யாது?

ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது, உயர்வானது என்று பேசுவது அல்ல. ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு  ஒப்பீடு என்பது ஒருவழிமுறை அல்லது உத்தியே ஆகும்.

கம்பனை மேலைநாட்டு இலக்கியத்தோடும், வடமொழி இலக்கியத்தோடும் ஒப்பிட்ட தமிழ் அறிஞர் யார்?

கம்பனை மேலைநாட்டு இலக்கியத்தோடும், வடமொழி இலக்கியத்தோடும் ஒப்பிட்ட தமிழ் அறிஞர் வ. வே. சு. ஐயர்.

பகுப்பு முறைத் திறனாய்வு - விளக்கம் தருக?

பகுப்புமுறைத் திறனாய்வு (Analytical Criticism) என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக் காண்பது ஆகும்.

தமிழில் பகுப்பு முறைத் திறனாய்வைப் பயன்படுத்தியவர்களில் ஒருவரைக் குறிப்பிடுக?

தமிழில் பகுப்பு முறைத் திறனாய்வைப் பயன்படுத்தியவர் சி.சு.செல்லப்பா.

அணுகுமுறை என்பதன் பொருள் என்ன?

அணுகுமுறை என்பதன் பொருள் முறையாக நெருங்கும் முறை.