60

ஆணவம் - கன்மம் - மாயை பற்றி விளக்கும் தத்துவம், விசிஷ்டாத்வைதமா? சைவ சித்தாந்தமா?

ஆணவம், கன்மம், மாயை ஆகியவை சைவ சித்தாந்தம் ஆகும்.

சரணாகதித் தத்துவ மரபைப் பின்பற்றியுள்ள புகழ்பெற்ற இலக்கியம் எது?

சரணாகதித் தத்துவ மரபைப் பின்பற்றியுள்ள புகழ்பெற்ற இலக்கியம் இராமகாதை ஆகும்.

அறநெறி அணுகுமுறை எதனுடைய ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது?

அறநெறி அணுகுமுறை இலக்கியத் திறனாய்வவின் பகுதியாகக் கருதப்படுகிறது.

இலக்கியம் காலூன்றி நிற்கின்ற வரலாற்றிற்கு அடிப்படையாக அமையும் அச்சுகள் எவை?

இலக்கியம் காலூன்றி நிற்கின்ற வரலாற்றிற்கு அடிப்படையாக அமையும் அச்சுகள் காலம், இடம்.

மாற்றம் என்பது உயிருடைய பொருள்களின் தன்மையா? சடப் பொருள்களின் தன்மையா?

மாற்றம் என்பது உயிருடைய பொருள்களின் தன்மை ஆகும்.

கா.சீ.வேங்கடரமணி, ந.சிதம்பர சுப்பிரமணியன் முதலியோருடைய நாவல்களைத்    திறனாய்வு செய்யத் தேவைப்படும் வரலாற்றுப் பின்னணிகள் யாவை?

கா.சீ.வேங்கடரமணி, ந.சிதம்பர சுப்பிரமணியன் முதலியோருடைய நாவல்களைத்    திறனாய்வு செய்யத் தேவைப்படும் வரலாற்றுப் பின்னணிகள் முருகன் ஒர் உழவன், தேசபக்தன் கந்தன், மண்ணில் தெரியுது வானம்.

வரலாற்றியல் திறனாய்வில் காணப்படுகிற மூன்று அடிப்படை நிலைகள் யாவை?

இலக்கியத்திலிருந்து வரலாறு காண்பது, இலக்கியத்தினுடைய வரலாற்றினைக் காண்பது மற்றும் இலக்கியத்தை வரலாற்றின் பின்னணியில் பார்ப்பது ஆகும்.

உளவியல் தனித்துறையாக வளர்வதற்குமுன்னால், அதில் வல்லவர்களாகக் கருதப்பட்டவர்கள் யார்?

உளவியல் தனித்துறையாக வளர்வதற்குமுன்னால், அதில் வல்லவர்களாகக் கருதப்பட்டவர்கள் அவல நாடகங்களை (Tragedy) உருவாக்கியவர்கள் ஆகும்.

பகுப்புமுறை உளவியலை வகுத்துச் சொன்ன அறிஞர் யார்?

பகுப்புமுறை உளவியலை வகுத்துச் சொன்ன அறிஞர் சிக்மண்ட் ஃபிராயிட்  எனும் ஜெர்மானிய மருத்துவர்.

உள்ளம் அல்லது மனம் என்பது மூன்று அடுக்குகளைக் கொண்டது. அந்த மூன்றும் எவை?

நனவுடை மனம், நனவிலி மனம்  மற்றும் அடிமனம் ஆகும்.

மேலைநாடுகளில் தீங்கு, கேடு முதலியவற்றைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் தொல்படிமமாகச் சித்தரிக்கப்படும் மாந்தர் யார்?

மேலைநாடுகளில் தீங்கு, கேடு முதலியவற்றைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் தொல்படிமமாகச் சித்தரிக்கப்படும் மாந்தர் சாத்தான் ஆவான்.

தன் வரலாற்று உளவியல் திறனாய்வு செய்த அமெரிக்கத் திறனாய்வாளர் ஒருவரைக் குறிப்பிடுக?

தன் வரலாற்று உளவியல் திறனாய்வு செய்த அமெரிக்கத் திறனாய்வாளர் எட்மண்ட் வில்சன் ஆவார்.

ஒப்பியல்     அணுகுமுறையின்     அடிப்படைக் கருதுகோள்கள் இரண்டனைக் கூறுக?

ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் தோன்றுகிற இலக்கியங்கள் ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதும், அதே சமயத்தில் படைப்பாளியின் திறத்தினாலும்,     குறிப்பிட்ட சிறப்பியலான சில பண்பாட்டுச் சூழலினாலும் வித்தியாசப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்பதாகும்.

ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை விதிமுறைகளைத் தந்தவர் யார்?

ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை விதிமுறைகளைத் தந்தவர் அமெரிக்க அறிஞர் ரீமாக் ஆவார்.