61

இலக்கியங்களுக்கிடையேயுள்ள     தாக்கங்களை அறியத் துணை நிற்கும் துறை யாது?

இலக்கியங்களுக்கிடையேயுள்ள தாக்கங்களை அறியத் துணை நிற்கும் துறை மொழிபெயர்ப்பு துறை ஆகும்.

இலக்கியம் என்பதற்கு அதன் இலக்கியத் தன்மையே (Literatures) முக்கியக் காரணம் என்றும் அதனைத் தருவது மொழியமைப்பே என்றும் சொன்னவர் யார்?

இலக்கியம் என்பதற்கு அதன் இலக்கியத் தன்மையே (Literatures) முக்கியக் காரணம் என்றும் அதனைத் தருவது மொழியமைப்பே என்றும் சொன்னவர் ரோமன் யகோப்சன் ஆவார்.

சீதையைக் கண்டு வந்த அனுமன், அந்தத் தகவலை இராமன் உளங்கொள்ளுமாறு எவ்வாறு கூறுகிறான்?

சீதையைக் கண்டு வந்த அனுமன், அந்தத் தகவலை இராமன் உளங்கொள்ளுமாறு கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்று கூறினான்.

மொழியில் இயல்பு வழக்கு என்று சொல்லப்படுவது, எது?

இயல்பு வழக்கு என்று சொல்வோமானால், இலக்கியத்தில் சிறப்பாக வழங்குகிற மொழிவழக்கை இலக்கிய வழக்கு (Literary usage) என்கிறோம்.

இலக்கியம், மனித குலத்தோடு எந்த மூன்று நிலைகளில் நெருக்கம் கொண்டதாக விளங்குகின்றது?

இலக்கியம், மனித குலத்தோடு தோற்றம், பொருள், பயன்பாடு என்ற மூன்று நிலைகளில் நெருக்கம் கொண்டதாக விளங்குகின்றது.

சமுதாய மாற்றத்தை முன்மொழிகின்றவர்கள் யார்?

சமுதாய மாற்றத்தை முன்மொழிகின்றவர்கள் வெ.கனகசபைப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் ஆகியோராவார்.

சாதி மதம் பார்த்துக் காதலிக்கிற நவயுகக் காதலைக் கிண்டல் செய்த தமிழ்க் கவிஞர் யார்?

சாதி மதம் பார்த்துக் காதலிக்கிற நவயுகக் காதலைக் கிண்டல் செய்த தமிழ்க் கவிஞர் மீரா ஆவார்.

சமுதாய நிறுவனங்கள் என்று சொல்லப்படுபவை யாவை?

சமுதாய நிறுவனங்கள் என்று சொல்லப்படுபவை திருமணம், தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம், சமூக நியதிகள் அல்லது    எழுதப்படாத    சட்டங்களும்    மரபுகளும், சாதி முதலியவை சமுதாய நிறுவனங்களாகும்.

 யாப்பிலக்கணம் என்றால் என்ன ? குறிப்பிட்ட ஓர் ஓசை அமையும் வகையில் , எழுத்து , அசை , சீர் முதலான யாப்பு உறுப்புகளைச் சேர்த்து அமைப்பதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர் .