62

தமிழகத்தில் யாப்பியல் சிந்தனையாளர் இருந்தனரா ?

யாப்பறி புலவர் , நல்லிசைப் புலவர் , நூல் நவில் புலவர் என்பன போன்ற யாப்பியல் சிந்தனையாளர் இருந்தனர் .

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளாகக் கூறுவன எத்தனை ?

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளாகக் கூறுவன மொத்தம் 34 ஆகும் .

வனப்பு என்பது யாது ?

எத்தனை ?

இரண்டன் பெயர்களைத் தருக .

வனப்பு என்பது அழகு என்று பொருள்படும் .

பல உறுப்புகள் ஒன்று சேர்ந்தபோது உருவாகும் செய்யுள் அழகு , அது .

நச்சினார்க்கினியர் எழுதிய தொல்காப்பிய உரை எவர் உரையைப் பெரிதும் பின்பற்றியுள்ளது ?

நச்சினார்க்கினியர் பெரிதும் பேராசிரியர் உரையைப் பின்பற்றியே செய்யுளியலுக்கு உரை எழுதியுள்ளார் .

இவர் உரை , நூல் முழுமைக்கும் உளது .

முழுமையாகக் கிடைக்காத யாப்பிலக்கண நூல்களுள் இரண்டனைச் சுட்டுக .

முழுமையாகக் கிடைக்காத யாப்பிலக்கண நூல்களுள் இரண்டு , காக்கைப்பாடினியம் , அவிநயம் ஆகும் .

வீரசோழியம் எந்தக் காலத்தில் தோன்றியது ?

வீரசோழியம் தோன்றியதுகி .

பி.11ஆம் நூற்றாண்டில் தோன்றியது .

வைத்தியநாத தேசிகர் செய்த இலக்கண நூலின் பெயர் யாது ?

இலக்கண விளக்கம் என்னும் நூல் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் செய்யப்பெற்றது .

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய யாப்பிலக்கண நூல் ஒன்றன் பெயரைத் தருக .

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய யாப்பிலக்கண நூல் ஒன்றன் பெயரைத் யாப்பதிகாரம் , தொடையதிகாரம் என இரு நூல்கள் ஆகும் .

யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலின் உரையாசிரியர் யார் ?

யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலின் உரையாசிரியர் யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் ஆவார் .

காரிகைச் செய்யுள்கள் யாரை முன்னிலைப்படுத்திப் பேசுகின்றன ?

காரிகைச் செய்யுள்கள் பெண்களை முன்னிலைப்படுத்திப் பேசுகின்றன .

கட்டளைக் கலித்துறைக்கு உரிய வேறொரு பெயர் யாது ?

கட்டளைக் கலித்துறைக்கு உரிய வேறொரு பெயர் காரிகை ஆகும் .

கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள் .

யாப்பருங்கலக்காரிகை எந்த யாப்பினால் ஆனது ?

யாப்பருங்கலக்காரிகை கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பினால் ஆனவையே .

காரிகை நூலில் எத்தனை இயல்கள் உள்ளன ?

காரிகை நூலில் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என மூன்று இயல்கள் உள்ளன .

வரிவடிவ எழுத்து எந்த இரு புலன்களுக்குப் புலனாவது ?

வரிவடிவ எழுத்து கண்ணுக்கும் மெய்க்கும் என்ற இரு புலன்களுக்குப் புலனாவது ஆகும் .

தொல்காப்பியர் தமிழ் எழுத்துகள் எத்தனை என்று குறிப்பிடுகின்றார் ?

தொல்காப்பியர் தமிழ் எழுத்துகள் முப்பத்து மூன்று என்று குறிப்பிடுகின்றார் .

பொதுவாகத் தமிழ் எழுத்துகளை எங்ஙனம் பகுக்கலாம் ?

பொதுவாகத் தமிழ் இம்முப்பத்து மூன்றெழுத்துகளை முதல் என்றும் சார்பு என்றும் இருவகையாக பகுக்கலாம் .

ஆய்த எழுத்து உயிரா ?

மெய்யா ?

இரண்டுமா ?

ஆய்த எழுத்து , ஒரு சமயம் ‘ மெய் ’ ; ஒரு சமயம் உயிர் .

எனவே , இதனைத் ‘ தனிநிலை ’ என்ற பெயராலும் சுட்டினர் .

உயிர்மெய்யின் மாத்திரை எதனுடைய அளவே ஆகின்றது ?

உயிர்மெய்யின் மாத்திரை உயிரின் அளவே ஆகின்றது .

அளபெடுக்கும் மெய்கள் யாவை ?

அளபெடுக்கும் ஒற்றெழுத்துப் பதினொன்று ஆகும் .

மொழி முதலில் நிற்கும் ஐகாரக்குறுக்கம் , ஒளகாரக்குறுக்கம் ஆகியவற்றுக்குத் தனித்தனி மாத்திரை எவ்வளவு ?

மொழி முதலில் நிற்கும் ஐகாரக்குறுக்கம் , ஒளகாரக்குறுக்கம் ஆகியவற்றுக்குத் தனித்தனி மாத்திரை ஒன்றரை மாத்திரை ஆகும் . யாப்பு இலக்கணம் குற்றியலிகரம் எத்தனை என்கின்றது ?