64

காரிகைச் செய்யுள்கள் பெண்களை முன்னிலைப்படுத்திப் பேசுகின்றன.

கட்டளைக் கலித்துறைக்கு உரிய வேறொரு பெயர் யாது?

கட்டளைக் கலித்துறைக்கு உரிய வேறொரு பெயர் காரிகை ஆகும். கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள்.

யாப்பருங்கலக்காரிகை எந்த யாப்பினால் ஆனது?

யாப்பருங்கலக்காரிகை கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பினால் ஆனவையே.

காரிகை நூலில் எத்தனை இயல்கள் உள்ளன?

காரிகை நூலில் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என மூன்று இயல்கள் உள்ளன.

வரிவடிவ எழுத்து எந்த இரு புலன்களுக்குப் புலனாவது?

வரிவடிவ எழுத்து கண்ணுக்கும் மெய்க்கும் என்ற இரு புலன்களுக்குப் புலனாவது ஆகும்.

தொல்காப்பியர் தமிழ் எழுத்துகள் எத்தனை என்று குறிப்பிடுகின்றார்?

தொல்காப்பியர் தமிழ் எழுத்துகள் முப்பத்து மூன்று என்று குறிப்பிடுகின்றார்.

பொதுவாகத் தமிழ் எழுத்துகளை எங்ஙனம் பகுக்கலாம்?

பொதுவாகத் தமிழ் இம்முப்பத்து மூன்றெழுத்துகளை முதல் என்றும் சார்பு என்றும் இருவகையாக பகுக்கலாம் .

ஆய்த எழுத்து உயிரா? மெய்யா? இரண்டுமா?

ஆய்த எழுத்து, ஒரு சமயம் ‘மெய்’; ஒரு சமயம் உயிர். எனவே, இதனைத் ‘தனிநிலை’ என்ற பெயராலும் சுட்டினர்.

உயிர்மெய்யின் மாத்திரை எதனுடைய அளவே ஆகின்றது?

உயிர்மெய்யின் மாத்திரை உயிரின் அளவே ஆகின்றது.

அளபெடுக்கும் மெய்கள் யாவை?

அளபெடுக்கும் ஒற்றெழுத்துப் பதினொன்று ஆகும்.

மொழி முதலில் நிற்கும் ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் ஆகியவற்றுக்குத் தனித்தனி மாத்திரை எவ்வளவு?

மொழி முதலில் நிற்கும் ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் ஆகியவற்றுக்குத் தனித்தனி மாத்திரை ஒன்றரை மாத்திரை ஆகும்.

யாப்பு இலக்கணம் குற்றியலிகரம் எத்தனை என்கின்றது?

யாப்பிலக்கணத்தில் அசைகளின் கீழ்வரும் குற்றியலுகரம் 42 என்றதனால், யகர வருமொழி ஏற்படுத்துகிற குற்றியலிகரமும் 42 என்றனர். அத்துடன் தனிமொழிக் குற்றியலிகரத்தையும் சேர்த்து 43 என்பர்.

தமக்குரிய மாத்திரையின் குறைந்தொலிப்பனவற்றுள் எந்த மூன்றனைக் காரிகையாசிரியர் கொண்டார்?

தமக்குரிய மாத்திரையின் குறைந்தொலிப்பனவற்றுள் ஏற்கப்பட்ட குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் ஆகிய மூன்றனைக் காரிகையாசிரியர் கொண்டார்.

தமக்குரிய மாத்திரையில் குறைந்தொலிப்பன எவ்வெவ்வெழுத்துகள்?

உயிர் எழுத்துகளுள் இ, உ, ஐ, ஒள என்பனவும், உயிரும் மெய்யுமாக கொள்ளப்பெறும் ஆய்தமும், மெய்களுள் ‘ம்’ என்னும் எழுத்தும் தமக்குரிய மாத்திரையினின்றும் குறைந்து ஒலிப்பனவாம்.

தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிக்கும் எழுத்துகள் யாவை?

செய்யுள் அடியில் தமக்குரிய மாத்திரையில் ஒலிக்கப் பெறும் எழுத்துகள் ஏழு அவை குறில், நெடில், உயிர், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்.

அசைக்குரிய உறுப்பாகிய எழுத்துகள் பதின்மூன்றனையும் எத்தனை பாகுபாட்டில் அடக்கலாம்?

அசைக்குரிய உறுப்பாகிய எழுத்துகள் பதின்மூன்றனையும்

தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன (இயல்பு வகை)

மெய்யும் உயிருமாகிய கூட்டில் ஒலிப்பது (கூட்டவகை)

தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன (குறுக்கம்)

என மூன்று பாகுபாட்டில் அடக்கலாம்.

யாப்பருங்கலக்காரிகை அசைக்குறுப்பாக எத்தனை வகை எழுத்துகளைக் கொள்கின்றது?

இவையும் இவைபோன்ற காரணங்கள் பிறவும் மனத்தில் கொண்டு, ‘அசை’ என்னும் செய்யுள் உறுப்புக்குரிய எழுத்துகளை யாப்பிலக்கண நூலார் பதினாறு வகை, பதினைந்து வகை, பதின்மூன்று வகையென வேண்டியவாறு கொண்டுள்ளனர்.

சாவி, விசா - இவற்றுள் எது நிரையசை? ஏன்?

இவற்றுள் விசா என்பது நிரையசை ஏனென்றால், நிரையசை என்பது ‘குறில்நெடில்’ என்று தொடரும், மற்றுக் ‘குறில்குறில்’ என்று தொடரும் அல்லது அடுத்தடுத்து நிற்கும் என்றும் கொள்ள வேண்டும்.

நிரையசை எத்தனை அலகுகளைக் கொள்ளும்?

நிரையசை இரண்டு அலகுகளைக் கொள்ளும்.

நேரசை எத்தனை அலகுகளைக் கொண்டிருக்கும்?

நேரசை எத்தனை அலகுகளைக் கொண்டிருக்கும்.

நிரையசை அமையும் வகை நான்கனையும் தருக.நிரையசை அமையும் வகைகள், இணைக் குறில் – வெறி, இணைக்குறில் ஒற்று – நிறம், குறில் நெடில் – பலா, குறில் நெடில் ஒற்று – விளாம் என்பனவாம்.