65

நேரசை எந்த நான்கு வகையில் அமையும்?

நேரசை, தனிக்குறில் (தி), தனிக்குறில் ஒற்று (வன்), தனி நெடில் (ஆ), தனி நெடில் ஒற்று (லாம்) என நான்கு வகையில் அமையும்.

செய்யுளின் சந்தத்தை உண்டாக்கும் அடிப்படைச் செய்யுளுறுப்பு எது?

வெண்பா எவ்வகை அடிகளால் ஆகியது ?

வெண்பாவுக்குரிய அடி நாற்சீரடியாகிய அளவடி ஆகும் .

செப்பலோசை எத்தனை வகைப்படும் ?

செப்பல் ஓசை மூன்று வகைப்படும் .

அவை ஏந்திசைச் செப்பல் , தூங்கிசைச் செப்பல் , ஒழுகிசைச் செப்பல் என்பன ஆகும் .

ஏந்திசை அகவல் ஓசையின் இலக்கணம் யாது ?

மாமுன் நேர் என அமையும் நேரொன்றாசிரியத்தளை மட்டுமே இடம் பெறும் ஆசிரியப்பாவின் ஓசை , ஏந்திசை அகவல் ஓசை ஆகும் .

வெண்பாவின் வகைகள் யாவை ?

வெண்பா ஐந்து வகைப்படும் .

அவை குறள்வெண்பா , நேரிசை வெண்பா , இன்னிசை வெண்பா , பஃறொடை வெண்பா , சிந்தியல் வெண்பா ஆகியன .

நேரிசை வெண்பா எத்தனை விகற்பங்கள் பெறும் ?

ஒரு விகற்பமாகவும் வரலாம் ; இரு விகற்பமாகவும் வரலாம் .

நேரிசை - இன்னிசை வெண்பாக்களிடையே முக்கியமான வேறுபாடு யாது ?

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் வருவது மலி - ஒலி ; கச்சி - கடல் என மூன்று விகற்பங்கள் வந்துள்ளன .

இவ்வகையில் , இது நேரிசை வெண்பாவில் அடங்காது மாறுபடுகிறது .

பஃறொடை வெண்பா - பெயர்க்காரணம் தருக ?

பல் + தொடை = பஃறொடை .

ஒரு தொடை என்பது இரண்டடிகளைக் குறிக்கும் .

பலதொடை = பல இரண்டடிகள் .

மூன்றடியால் ஆகிய வெண்பாவின் பெயர் தருக ?

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா எனப்படும் .

வெண்பாவின் இறுதியில் வரும் நேரீற்றியற்சீர்களின் வாய்பாடுகள் தருக ?

வெண்பாவின் இறுதியில் வரும் நேர் ஈற்று இயற்சீர்களின் வாய்பாடுகள் காசு ( நேர்நேர் ) , பிறப்பு ( நிரைநேர் ) என்பனவாகும் .

இவ்விரண்டு வாய்பாடுகளும் குற்றியலுகரத்தில் ( சு , பு ) முடிந்திருப்பதைக் காணலாம் .

ஆசிரியப்பாவில் இடம்பெறும் தளைகள் யாவை ?

ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானவைகளாகிய நேரொன்றா சிரியத்தளை , நிரையொன்றா சிரியத்தளை ஆகிய இரண்டும் மிகுந்துவரும் ; பிற தளைகளும் கலந்து வரும் .

ஆசிரியப்பாவின் வகைகள் யாவை ?

நேரிசை ஆசிரியப்பா , இணைக்குறள் ஆசிரியப்பா , நிலைமண்டில ஆசிரியப்பா , அடிமறி மண்டில ஆசிரியப்பா என ஆசிரியப்பா நான்கு வகைப்படும் .

‘ இணைக்குறள் ஆசிரியப்பா ’ - பெயர்க்காரணம் தருக ?

‘ இணைக்குறள் ஆசிரியப்பா ’ – பெயர்க்காரணம் : ‘ குறள் ’ என்னும் சொல் குறுகிய அடிகளாகிய குறளடி , சிந்தடி ஆகிய இரண்டையும் குறிக்கிறது .

இணை = இரண்டு .

‘ இரண்டு அல்லது அதற்கு மேல் குறுகிய அடிகளைக் கொண்டது ’ என்பது பொருள் .

நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குரிய சிறப்பான ஈறு எது ?

என் என்னும் ஈற்றில் முடிவது நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானது .

அடிமறி மண்டில ஆசிரியப்பாவின் அமைப்பைக் கூறுக ?

ஓர் அடியில் சொல்லவரும் பொருள் அந்த அடியிலேயே முடிவடைந்து விடுகிறது ; அடுத்த அடிக்குத் தொடர்வதில்லை .

ஏட்டுச் சுவடிகளில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும் பாக்களில் சீர் , அடி

ஆகியவற்றைப் பிரித்துப் பார்ப்பது எப்படி ?

யாப்பிலக்கணம் அறிந்தவர்களுக்குப் பாவின் ஓசை நன்கு தெரிந்திருக்கும் .

படிக்கும் போதே ஓசையை உணர்ந்து இன்ன பா இது , இதில் இத்தனை அடிகள் உள்ளன என்று சரியாகச் சொல்லிவிடுவர் .

வஞ்சிப்பாவுக்குரிய அடியும் , ஓசையும் யாவை ?

குறளடிகளால் அல்லது சிந்தடிகளால் அமைந்து வருவது வஞ்சிப்பா . வேறு எவ்வகை அடியும் வஞ்சிப்பாவில் வராது .