66

வஞ்சிப்பாவின் ஓசை , தூங்கல் ஓசை எனப்படும் .

கலிப்பாவுக்குரிய அடி யாது ?

அதன் புறனடை என்ன ?

கலிப்பாவுக்குரிய அடி அளவடி .

அம்போதரங்க உறுப்பில் குறளடி , சிந்தடிகளும் , அராக உறுப்பில் நெடிலடி , கழிநெடிலடிகளும் வரும் .

கலிப்பாவின் ஓசை யாது ?

கலிப்பாவின் ஓசை , துள்ளல் ஓசை ஆகும் .

கலிப்பாவில் இடம் பெறும் உறுப்புகள் யாவை ?

கலிப்பாவில் இடம் பெறும் உறுப்புகள் தரவு , தாழிசை , அராகம் , அம்போதரங்கம் என்பன ஆகும் .

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இடம்பெறும் உறுப்புகள் யாவை ?

தரவு , தாழிசை , தனிச்சொல் , சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகள் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இடம்பெறும் உறுப்புகள் ஆகும் .

அராகத்தின் அடிச் சிறுமை , பெருமைகளைக் கூறுக ?

அராகம் நான்கடிச் சிறுமையும் , எட்டடிப் பெருமையும் கொண்டது .

வெண்கலிப்பா எத்தனை வகைப்படும் ?

வெண்கலிப்பாவை வெண்கலிப்பா , கலிவெண்பா என இரு வகைகளாகக் குறிப்பிடுவதுண்டு .

வஞ்சிப்பாவில் பெரும்பாலும் வரும் சீர்கள் யாவை ?

வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா .

சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம் .

வஞ்சிப்பா எவ்வாறு முடிவுறும் ?

வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும் .

வஞ்சிப்பா வகைப்படுத்தப்படுவதன் அடிப்படை யாது ?

வஞ்சிப்பா பாவுக்குரிய அடியை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றது .

மருட்பாவின் பெயர்க்காரணம் கூறுக ?

மருள் + பா = மருட்பா .

மருள் = மயக்கம் .

மயக்கம் என்பது ஒன்றோடு மற்றொன்று கலந்து வருவதைக் குறிக்கும் .

வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமையும் பா , மருட்பா .

மருட்பாவில் அடி எண்ணிக்கை எவ்வாறு அமையும் ?

முதலில் வரும் வெண்பா அடிகள் குறைந்த அளவு இரண்டடி வரும் ; அதிக அளவுக்கு வரம்பு இல்லை ; இறுதியில் ஆசிரியப்பா அடிகள் இரண்டடியாக வரும் எனப் புரிந்து கொள்ளலாம் .

மருட்பாவின் வகைகளைக் கூறுக .

மருட்பா , புறநிலை வாழ்த்து மருட்பா , கைக்கிளை மருட்பா , வாயுறை வாழ்த்து மருட்பா , செவியறிவுறூஉ மருட்பா என நான்கு வகைப்படும் .

புறநிலை வாழ்த்து என்றால் என்ன ?

தெய்வத்தை வாழ்த்துவது வாழ்த்து .

தெய்வத்தை முன்னிலையாக்கி வாழ்த்துவதும் உண்டு ; படர்க்கையில் , புறத்தே நிறுத்தி வாழ்த்துவதும் உண்டு .

இவ்வாறு புறத்தே நிறுத்தி வாழ்த்துவது புறநிலை வாழ்த்து ஆகும் .

வாயுறை என்பதன் பொருள் என்ன ?

வாய் = வாய்மை , மெய்ம்மை ; வாயுறை = மருந்து எனவும் பொருள்படும் .

‘ வாயுறை வாழ்த்து ’ – விளக்குக ?

வாயுறை வாழ்த்து = மெய்ப்பொருளை உள்ளடக்கியுள்ள வாழ்த்து .

வேப்பங்காயும் கடுக்காயும் போன்ற ஒவ்வாத சுவைகளையுடைய ஆன்றோர் சொற்கள் முதலில் கசப்பாயிருந்தாலும் பின்னர் நன்மை பயக்கும் .

இத்தகைய சொற்களைத் தடையின்றி , நல்ல நோக்கத்துக்குப் பயன்படுத்தி அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து ஆகும் .

‘ செவியறிவுறூஉ ‘ - விளக்குக ?

பெரியோர்களின் முன்னிலையில் அடங்கி அறங்களைப் பின்பற்றி வாழ்க என வாழ்த்துவது செவியறிவுறூஉ .

ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் யாவை ?

ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் தாழிசை , துறை , விருத்தம் என மூன்று வகைப்படும் .

பா ‘ வகை ’ பா ‘ இனம் ’ இரண்டும் ஒன்றா ?

பாக்களின் ‘ வகை ’ என்பது வேறு ; ‘ இனம் ’ என்பது வேறு .

குறள் வெண்பாவின் இனங்கள் யாவை ?

வெண்பா இனங்களுள் இரண்டடியாலானது குறள்வெண்பாவின் இனம் ஆயிற்று . குறள்வெண் செந்துறையின் பொருள் எவ்வாறு இருக்க வேண்டும் ?