67

ஒழுகிய ஓசையும் ( தடையில்லாத இனிய ஓசையும் ) விழுமிய பொருளும் ( மேன்மையான பொருளும் ) பெற்று வரும் .

வேற்றுத்தளை , குறள்வெண்பாவில் நுழைந்தால் அதனை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?

குறள்வெண்பா எழுதும் போது வெண்டளை அல்லாத வேற்றுத்தளை கலந்து , செப்பலோசை சிதைந்துவிடுமாயின் அது குறள்வெண்பா ஆகாது .

அதனைக் குறட்டாழிசையுள் அடக்குவர் .

வெண்டாழிசையின் இலக்கணம் தருக ?

மூன்றடியாய் , ஈற்றடி வெண்பாப் போலச் சிந்தடியாய் வருவது வெண்டாழிசை ஆகும் .

இதற்கு வெள்ளொத்தாழிசை என்பதும் பெயர் .

வெண்டுறையின் அடி எண்ணிக்கையைக் குறிப்பிடுக ?

குறைந்த அளவு மூன்றடிகளும் அதிக அளவு ஏழடிகளும் பெற்று வரும் .

ஓரொலி வெண்டுறை , வேற்றொலி வெண்டுறை - வேறுபாடு காட்டுக ?

முதலில் வரும் சில அடிகள் ஓர் ஓசை அமைப்பிலும் பின்னர் வரும் அடிகள் வேறு ஓர் ஓசை அமைப்பிலும் வந்தால் அது வேற்றொலி வெண்டுறை எனப்படும் .

எல்லா அடியும் ஒரே மாதிரியான ஓசை அமைப்பில் வந்தால் அது ஓரொலி வெண்டுறை எனப்படும் .

அடியிறுதியில் தனிச்சொல் பெறும் வெண்பா இனம் எது ?

அடியிறுதியில் தனிச்சொல் பெறும் வெண்பா இனம் வெளிவிருத்தம் ஆகும் .

வெளிவிருத்தத்தின் அடி எண்ணிக்கையைக் குறிப்பிடுக ?

மூன்று அல்லது நான்கடிகளாய் வரும் .

ஆசிரியப் பாவின் இனங்கள் யாவை ?

ஆசிரியத் தாழிசை , ஆசிரியத் துறை , ஆசிரிய விருத்தம் எனும் மூன்றும் ஆசிரியப்பாவின் இனங்கள் ஆகும் .

‘ கன்று குணிலா...’ எனத் தொடங்கும் பாடல் எவ்வினத்தைச் சார்ந்தது ?

‘ கன்று குணிலா...’ எனத் தொடங்கும் பாடல் ஆசிரியத் தாழிசை இனத்தைச் சார்ந்தது .

ஆசிரியத் தாழிசையின் அடி எண்ணிக்கை யாது ?

ஆசிரியத் தாழிசை மூன்றடியாய் வரும் .

ஈற்றயலடி குறைந்து வரும் ஆசிரியப்பா இனம் எது ?

ஈற்றயலடி குறைந்து வரும் ஆசிரியப்பா இனம் ஆசிரியத் துறை ஆகும் .

இடைமடக்கு என்றால் என்ன ?

இடைமடக்கு என்றால் வந்த அடியே திரும்பவும் அடுத்த அடியாய் வருதல் ஆகும் .

ஆசிரியத் துறை எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

ஆசிரியத் துறை இரண்டு வகைப்படும் அவை ஆசிரிய நேர்த்துறை , ஆசிரிய இணைக்குறள் துறை ஆகும் .

பெருங்காப்பியங்களில் அதிகம் இடம்பெறும் பாவினம் யாது ?

பெருங்காப்பியங்களில் அதிகம் இடம்பெறும் பாவினம் ஆசிரிய விருத்தம் ஆகும் .

ஆசிரிய விருத்தம் எவ்வடிகளால் ஆகியது ?

நான்கு கழிநெடிலடிகளால் ஆகி , நான்கடியும் அளவொத்து வருவது ஆசிரிய விருத்தம் .

ஆசிரிய விருத்தத்தின் எதுகை அமைப்பைச் சுட்டிக் காட்டுக ?

நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும் .

சிறப்பான ஆசிரிய விருத்தம் என எவற்றைக் குறிப்பிடலாம் ?

ஓர் அடியில் எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் ஆகும் .

கலித்தாழிசைக்குரிய அடி எண்ணிக்கை கூறுக ?

கலித்தாழிசை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும் .

அளவொத்து வருதல் என்றால் என்ன ?

அளவொத்து வருதல் என்றால் பாடல் முழுவதிலும் அடிகளில் சீர் எண்ணிக்கை ஒத்து வருதல் ஆகும் .

சிறப்பான கலித்தாழிசை எவ்வாறு வரும் ?

ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பான கலித்தாழிசை ; தனியே வருவதும் உண்டு .

ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கும் கலித்தாழிசைக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை ?

ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கும் கலித்தாழிசைக்கும் உள்ள ஒற்றுமை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பான கலித்தாழிசை ; தனியே வருவதும் உண்டு .

கலித்துறை எவ்வடியால் வரும் ?

கலித்துறை நெடிலடி நான்காய் வரும் .

கலித்துறை மிகுதியும் இடம்பெறும் இலக்கியங்கள் யாவை ?

ஆழ்வார் பாடல்கள் , சிந்தாமணி , கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இக்கலித்துறை மிகுதியும் இடம் பெற்றுள்ளது . ‘ கட்டளை ’ என்பதன் பொருள் யாது ?