68

‘ கட்டளை ’ என்பதன் பொருள் எழுத்தின் அளவு ஆகும் .

நேர் முதலாகிய கட்டளைக் கலித்துறை அடியின் எழுத்தெண்ணிக்கை கூறுக ?

நேர் முதலாகிய கட்டளைக் கலித்துறை அடியின் எழுத்தெண்ணிக்கை பதினாறு ஆகும் .

கலிவிருத்தத்தின் அடி யாது ?

அடி அளவு எத்தனை ?

கலிவிருத்தத்தின் அடி அளவடி ( நாற்சீரடி ) அடி அளவு நான்கு .

வஞ்சிப்பாவின் இனங்கள் யாவை ?

வஞ்சிப்பாவின் இனங்கள் வஞ்சித் தாழிசை , வஞ்சித் துறை , வஞ்சி விருத்தம் ஆகியன ஆகும் .

வஞ்சித் தாழிசை எவ்வடியால் வரும் ?

வஞ்சித் தாழிசை குறளடி நான்காய் வரும் .

வஞ்சித் தாழிசை தனியே வருமா ?

வஞ்சித் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி மட்டுமே வரும் ; தனியே வராது .

வஞ்சித் துறையின் அடி யாது ?

குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறையின் அடி ஆகும் .

வஞ்சித் துறையின் ஓசை அமைப்புப் பற்றிக் கூறுக ?

வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும் .

வஞ்சி விருத்தம் எவ்வடியால் வரும் ?

சிந்தடி நான்காய் வருவது வஞ்சி விருத்தம் .

வஞ்சி விருத்தத்தின் ஓசை அமைப்பு ஒரே தன்மையினதா ?

வஞ்சி விருத்தத்தின் ஓசை அமைப்பு ஒரே தன்மையினது இல்லை இது பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும் .

வஞ்சித் துறை , வஞ்சி விருத்தம் வேறுபாடு என்ன ?

குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை ; சிந்தடி நான்கு வருவது வஞ்சி விருத்தம் .

வஞ்சித் தாழிசை , வஞ்சித் துறை ஒற்றுமை வேற்றுமை தருக ?

குறளடி நான்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது வஞ்சித் தாழிசை ; குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை ;

வஞ்சிப்பா எவ்வாறு முடியும் ?

வஞ்சிப்பாவில் வஞ்சியடிகளின் இறுதியில் தனிச்சொல் பெற்றுப் பிறகு ஆசிரியச் சுரிதகத்தால் முடியும் .

ஒழிபியலில் சொல்லப்படும் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் யாவை ?

( 1 ) முதலிரண்டு இயல்களில் சொல்லப்படாமல் விடுபட்டவை .

( 2 ) முன்பு சொல்லப்பட்டவற்றிற்குப் புறனடையாக , வேறுபட்டு வரும் கருத்துகள் .

( 3 ) இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கருத்துகள்

சீரும் தளையும் சிதையுமானால் குற்றியலிகரமும் குற்றியகரமும் எவ்வாறு அலகிடப் பெறும் ?

சீரும் தளையும் சிதையுமானால் குற்றியலிகரத்தையும் , குற்றியலுகரத்தையும் ஒற்றுப் போலக் கொண்டு , அலகிடாமல் விட்டுவிட வேண்டும் .

அருளல்ல - தியாதெனில் - இதனைப் புளிமாங்காய் - கருவிளம் > கலித்தளை என அலகிடுவது சரியா ?

சரி , இவ்வெண்பாவில் அருளல்ல தியாதெனில் > புளிமாங்காய் - கருவிளம் , காய் முன் நிரை எனக் கலித்தளை வரும் .

சீரும் தளையும் சிதையுமானால் உயிரளபெடையை எவ்வாறு அலகிட வேண்டும் ?

சீரும் தளையும் சிதையும் நிலை வருமானால் அளபெடை நெட்டெழுத்துப் போலவே கொண்டு அலகிடப் பெறும் .

ஐகாரக் குறுக்கம் எவ்வாறு அலகிடப் பெறும் ?

அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தைப் போலக் கொள்ளப்பட்டு அதன்பின் வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக அலகிடப் பெறும் .

ஒற்று அளபெடுக்கும் போது அது எவ்வாறு கொள்ளப்படும் ?

ஒற்று அளபெடுக்கும் போது ஒரு நேரசையாகக் கொள்ளப்படும் .

சீரின் முதலில் தனிக்குறில் நேரசையாக வரும் இடம் எது ?

சீரின் முதலில் ஒரு குற்றெழுத்து விட்டிசைத்து வரும்போது அக்குற்றெழுத்துத் தனித்து ஒரு நேரசையாக வரும் .

ஏஎர் , எலாஅநின் - இவற்றை எவ்வாறு அலகிட வேண்டும் ?

ஏஎர் > ஏ-எர் > நேர் நேர் > தேமா அழாஅல் > அழா-அல் > நிரை நேர் > புளிமா எலாஅநின் > எலா-அ-நின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய் - இவற்றை இவ்வாறு அலகிட வேண்டும் .

கலிப்பாவில் வாராத சீர்கள் யாவை ?

நேரீற்றியற் சீரும் ( நேர் ஈற்று இயற்சீர் ) ( தேமா , புளிமா எனும் மாச்சீர்கள் ) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் ( கருவிளங்கனி , கூவிளங்கனி எனும் சீர்கள் ) கலிப்பாவில் வாரா .

அகவற்பாவில் வாராத சீர்கள் யாவை ?

ஆசிரியப்பாவில் நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீர்கள் ( கருவிளங்கனி , கூவிளங்கனி ) வாரா .

வெண்பாவில் பிற பாக்களின் அடிகள் மயங்கி வருமா ? இல்லை , வெண்பாவைத் தவிர மற்ற எல்லாப் பாக்களிலும் பிற பாக்களுக்குரிய அடிகள் மயங்கி வரும் .