7

    கலைகளைப் பல வகையாகப் பகுப்பார்கள். நுண்கலை, பயன்கலை, பருண்மைக் கலை (Plastic Art), கவின் கலை (Aesthetic Art), நிகழ்த்துகலை (Performing Art) என்பன இவற்றுள் முக்கியமானவை.

இளங்கோவடிகள் விளக்கமாகப் பேசிடும் மூன்று கலைகள் யாவை?

இளங்கோவடிகள் விளக்கமாகப் பேசிடும் மூன்று கலைகள் இயல், இசை, நாடகம் ஆகும்.

பாரதியின் பாஞ்சாலி சபதம் எதனைப் பின்பற்றி எழுந்தது?

பாரதியின் பாஞ்சாலி சபதம், “திரவுபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்ததாகும்.

ஓவியம், கவிதை வடிவத்தோடு கொண்டுள்ள நெருக்கம் பற்றி அறிஞர்கள் கருத்தினைக் கூறுக?

‘ஓவியம், பேசாத கவிதை (Silent Poetry); கவிதை, பேசுகிற ஓவியம் (Speaking Picture) என்று பிரான்சு நாட்டு ஓவியர் சார்ல்ஸ் ஃபிரஸ்நொய் (Charles A.D. Fresnoy) என்பவர் கூறுகிறார்.

திறனாய்வில் காணப்பெறும் அறிவியலின் வழிமுறைகள் யாவை?

அகவயச் சார்பு அற்ற, புறவயநிலைக்குட்பட்ட மனநிலை (objectivity), காரணகாரிய முறையிலமைந்த கண்டறிதல் ஆகிய வழிமுறைகள் அல்லது பண்புகள் திறனாய்வில் இருக்கின்றன.

திறனாய்வின் மொழி, எவ்வாறு அமைந்திருக்கும்?

உள்ளும் அதன் வகைமை, நோக்கம், சூழல், சென்று சேரும் இலக்கு முதலியவற்றிற்கு ஏற்ப இந்த மொழி அமைந்திருக்கும்.

ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தை எவ்வாறு காணுகிறார்? அதற்குரிய அவருடைய சமூகப் பின்புலம் யாது?

ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தை தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாகவும் இலட்சியமாகவும் காணுகிறார். குறிப்பிட்ட சமூகப் பின்னணியோடு, அதிலே நல்ல அறிவும் ஈடுபாடும் கொண்ட ஒருவர், அந்த வகையான சமூக வாழ்வோடு கூடிய இலக்கியத்தைப் படைக்க முடியும் என்பதாகும்.

திறனாய்வு, வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது ஏன் தேவைப் படுகிறது?

மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வது, அறிவாராய்ச்சிகளின் நடைமுறை. அம்முறையில், திறனாய்வு, வரலாற்றியலை அறிந்திருப்பது என்பது அதன் முக்கியமான தேவையாகும்.

தத்துவம் என்றால் என்ன? அதன் வரையறைக் கூறுக?

   உலகத்திற்கும் மனிதனுக்குமுள்ள உறவுகள், மனித வாழ்க்கையின் நடைமுறை அனுபவங்கள் மற்றும் அவனுடைய உள்ளாற்றல்கள், நம்பிக்கைகள், பயங்கள், ஆசைகள் முதலிய உணர்வு நிலைகள் ஆகியவற்றிலிருந்து பொதுமைப்படுத்தி ஓர் ஒழுங்கு முறையாகச் (System) செய்யப்படுவது தான் தத்துவம் ஆகும்.

‘பத்தினி’ எனும் தொன்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கிய மாந்தர்கள் யாவர்?

புனிதவதியார் (காரைக்காலம்மையார்), குண்டலகேசி, பெருங்கோப்பெண்டு ஆகியோராகும்.

பாடம் - 1

D06141 அமைப்பியலும் பின்னை அமைப்பியலும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்கள் பற்றிப் பேசுகிறது .

அமைப்பியலும் , அதனை அடுத்துத் தோன்றிய பின்னை அமைப்பியலும் தோன்றிய சூழல்கள் பற்றிப் பேசுகிறது .

அவற்றிற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் இன்னின்னார் என்று பேசுகிறது .

இவ்விரண்டு திறனாய்வு முறைகளின் அடிப்படைகள் பற்றி விளக்குகிறது .

சில எடுத்துக்காட்டுகளைத் தந்து , இவ்விரண்டு அணுகுமுறைகள் எவ்வாறு பின்பற்றக்கூடியன என்பது பற்றிச் சொல்கிறது .

திறனாய்வின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது .

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம் ?

• இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு , இரு முக்கிய அணுகுமுறைகளை அறிந்து கொள்ள முடியும் .

• அமைப்பியலின் பண்புகளை அறிந்து கொள்ளலாம் .

• அமைப்பியலுக்கும் பின்னை அமைப்பியலுக்கும் உள்ள உறவுகளைத் தெரிந்து கொள்ள முடியும் .

• சிறுகதை , நாவல் , வருணிப்புக்கவிதை ( Narratives ) , காப்பியம் முதலியவற்றை ஆராய்வதற்கு அமைப்பியல் மிகவும் உகந்த சாதனம் ஆகும் .

அது எவ்வாறு என்பதனை அறிந்துகொள்ள முடியும் .

• இருநிலை எதிர்வு , கதைப்பின்னல் , பன்முகவாசிப்பு , கட்டவிழ்ப்பு - முதலிய திறனாய்வு உத்தி முறைகளை அறிந்துகொள்ளலாம் .

1.0 முன்னுரை

இலக்கியத் திறனாய்வின் முக்கியமான செயல்நிலைப் பண்புகளில் ஒன்று - அது இலக்கியத்துக்குள்ளிருந்து மட்டும் முகிழ்ப்பதல்ல ; தத்துவம் , சமுதாயவியல் முதலியவற்றிலுள்ள கருத்தியல் / கொள்கைத் தளங்களிலிருந்தும் அது முகிழ்க்கின்றது என்பதாகும் .

காட்டாக , சார்பியல் , ( Relativity ) மற்றும் பரிணாமவியல் ( theory of evolution ) ஆகியவை அறிவியல் கொள்கைகளை .

வழிமுறையாக்கிக் கொண்டும் திறனாய்வு முகிழ்க்கின்றது .

மொழியியல் என்பது , அடிப்படையில் மொழிசார்ந்த ஒரு கொள்கை ; ஆனால் இலக்கியத் திறனாய்வுக்கும் அது ஓர் அடிப்படையாக அமைகின்றது .

அதுபோலவே அமைப்பியல் என்பது , நாட்டுப்புறவியல் , மொழியியல் , சமுதாயவியல் முதலிய தளங்களை மையமாகக் கொண்டது ; ஆனால் அதேபோது இலக்கியத் திறனாய்வுக்கு அது மிக முக்கியமான முறையியலைத் ( methodology ) தந்திருக்கிறது . இலக்கியத்திறனாய்வுத் துறையில் , அமைப்பியல் ( structuralism ) , செல்வாக்கு வாய்ந்த ஒரு திறனாய்வு அணுகுமுறையாக விளங்குகிறது .