8

நாடகம் - 2

நாடகம் - II

பாடம் - 1

புராண நாடகங்கள்

1.0 பாட முன்னுரை

தொடக்கத்தில் எல்லாக் கலைகளும் பக்தியைப் பரப்பப் பயன்பட்டு வந்தன. இதனால் இதிகாசங்களும் புராணங்களும் கலைவழியே வெளிப்பட்டன. நாட்டிய நாடகங்கள் இசை நாடகங்கள் கதா காலட்சேபங்கள் என எல்லாவற்றிற்குமே புராணக் கதைகள் அடிப்படையாயின. புராணக் கதைகளை நாடக ஆசிரியர்கள் தங்கள் படைப்பு ஆற்றலுக்குத் தக்கவாறு பல மாற்றங்களை ஏற்படுத்தி நாடகங்களாக ஆக்கினார்கள். காலப்போக்கில் முடிந்த அளவு உலக இயற்கைக்கு ஒத்த முறையிலும் நம்பத் தகுந்த முறையிலும் காட்சிகளை அமைத்து நாடகங்களை உருவாக்கினார்கள். இவ்வாறு தமிழில் புராண நாடகங்கள் நடிப்பதற்காகவும் படிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

1.1 நாடகத் தன்மை

தமிழில் இயற்றப்பட்ட பழைய நாடகங்களின் தன்மையைப் பற்றிப் பார்ப்போம்.

1.1.1 பழைய நாடகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் ஆடலும் பாடலும் கொண்ட நாடகங்கள் எழுதப்பட்டன. குறவஞ்சி நாடகங்கள், நொண்டி நாடகங்கள், கீர்த்தனை நாடகங்கள் முதலானவை இத்தகைய தன்மையில் அமைந்தவை.

குறவஞ்சி நாடகங்கள்

குற்றாலக் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி முதலானவை குறவஞ்சி நாடகங்கள்.

நொண்டி நாடகங்கள்

திருக்கச்சூர் நொண்டி நாடகம், பழனி நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் முதலான பல நொண்டி நாடகங்களும் படைக்கப்பட்டன. கதைத்தலைவன் காம வலையில் சிக்கித் தீயவனாக இருந்து, பிறகு தண்டனைகளால் அங்கங்களை இழந்து, வருந்தித் தெய்வத்தை வேண்டி மீண்டும் அங்கங்களைப் பெறுவான் என்பது நொண்டி நாடகத்தின் கதை. இந்நாடகங்களில் திருடன் கூடச் சலங்கை கட்டிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்விப்பான்.

கீர்த்தனை நாடகங்கள்

கீர்த்தனை நாடகங்களும் எழுதப்பெற்றன. இசை நாடக வடிவில் இவை அமைந்திருந்தன. சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை முதலானவை குறிப்பிடத்தக்கன. இராம நாடகத்தில் 500 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இராமனும் பரசுராமனும் வாதம் புரிகின்ற இடத்தில் மட்டும் உரையாடல் தன்மை இருக்கிறது. பாடல்கள் பேச்சு மொழி கலந்து அமைந்துள்ளன.

விலாசம்

பாடல்களோடும் கட்டியங்காரனின் வசனங்களோடும் அமைந்த நாடகங்கள் விலாசம், நாடகம் முதலான பெயர்களில் எழுதப்பட்டன. இராமச்சந்திரக் கவிராயரின் பாரத விலாசம், அரங்கப் பிள்ளையின் அரிச்சந்திர விலாசம், கல்யாண சுந்தரம் பிள்ளையின் மெய்அரிச்சந்திர விலாசம், வெங்கட்ராம உபாத்தியாயரின் மார்க்கண்டேய விலாசம், வேம்பம்மாளின் பிரகலாத விலாசம், அப்பாவுப் பிள்ளையின் சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம் முதலானவை குறிப்பிடத் தக்கவை. அப்பாவுப் பிள்ளையின் பாடல்களே பின்வந்த அரிச்சந்திர நாடகங்களில் பயன்படுத்தப்பட்டன. சகுந்தலை விலாசம், தாருக விலாசம் முதலான நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.

நாடகம்

மேற்குறிப்பிட்ட பாணியில் பாடல்களாகவும் கட்டியங்காரன் வசனத்தோடும் நாடகம் என்ற பெயரிலும் நாடகங்கள் எழுதப்பட்டன. ஹிரண்ய சம்கார நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர் நாடகம், பாண்டவர் சூதாட்ட நாடகம், வள்ளியம்மை நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் முதலானவை குறிப்பிடத் தக்கன.

பழைய நாடகங்களின் தன்மை

முந்தைய நாடகங்களில் வசனங்களைக் கட்டியங்காரனே பேசுவான். அந்த வசனம் ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவதாக இருக்கும். “அகோ! கேளுங்கள் சபையோர்களே! இப்படியாகத்தானே அரிச்சந்திர மகாராஜனாகப்பட்டவர் நாடு நகரம் முதலானதுகளை விசுவாமித்திரரிடம் கொடுத்துவிட்டுக் காசிக்கு வரும் வழியில் அநேகத் துயரை அடைந்து காசிநகர்க் கோபுரந் தோன்றக் கண்டு தன் பத்தினிக்குத் தெரிவித்துக் கரம்கூப்பித் தொழுகின்றதனைக் காண்பீர்கள் கனவான்களே!” என்பான் கட்டியங்காரன். இது பொதுவசனம் எனப்படும். இதைத் தவிரப் பாடல்கள்தாம் நாடகங்களில் இடம் பெற்றன.

1.2 நாடக முன்னோடிகள்

தமிழ் நாடகத் துறையில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களுள் சங்கரதாஸ் சுவாமிகள், சி. கன்னையா, நவாப் ராஜமாணிக்கம் முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

1.2.1 சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பேராசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் தொழில்முறை நாடகக் குழுக்களின் வளர்ச்சிக்குக் காரணமானவர் எனலாம். நாடகங்களின் தன்மை ஆட்டம், இசை, உரையாடல் என்று இருந்தது. இதிலிருந்து ஆட்டத்தை விலக்கியது இவர் செய்த முக்கிய மாற்றம் எனலாம். தமிழிசைக்குப் புது மெருகு தரும் முயற்சிகளாக இவரது நாடகங்கள் அமைந்தன. இவர் நாடகத்தில் இசையை முதன்மைப்படுத்தினார்.

சங்கரதாஸ் சுவாமிகள்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

பாடல்கள்

சிரித்தாலும் பாட்டு, அழுதாலும் பாட்டு, பேசிக்கொள்வதும் கூடப் பாட்டு என்று பாட்டின் ஆதிக்கம் இவரது நாடகங்களில் இருந்தது. உரையாடல்கள் பாட்டின் பொருளை விளக்குவதற்கே இடம்பெற்றன. வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், வண்ணம், கும்மி, தாழிசை, நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, கீர்த்தனை, நாட்டுப்புறப் பாடல்கள், காதல் பாடல்கள் எனப் பல வகைகளில் பாடல்கள் இடம் பெற்றன. பாடல்கள் கற்பனைச் சிறப்பு மிக்கனவாக இருந்தன.

பவளக் கொடியின் அழகை வருணிக்கும் பாடலை எடுத்துக்காட்டாகக் காணலாம்.

கூந்தல் நீருண்ட மேகம் போலிருக்கும் – நீளம்

கொஞ்சமல்ல பத்துப் பாகமிருக்கும் -

ஒரு குற்றமிலாச் சந்திரனிருக்குமேல் – ஒத்

திருக்கும் மனம் உருக்கும்

கண்களிரண்டும் மதனம்பு – புருவங்

காணிலந்தக் காமன் கைவிற் கரும்பு

எனப் பாடல் அமைந்திருக்கும்.

வசனங்கள்

சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திற்கு முன் நாடகங்களில் நடிகர்கள், கட்டுப்பாடில்லாமல் விருப்பம் போல் வசனங்களைப் பேசி வந்தார்கள். நாடகங்களுக்கு வரையறுத்த பிரதிகளைச் சுவாமிகள் உருவாக்கினார். மக்களுக்குத் தேவையான பல நல்ல செய்திகளை நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தினார். வசனங்களில் சங்க இலக்கியம், திருக்குறள், பழமொழிகள் முதலானவற்றின் வரிகளையும் இடம்பெறச் செய்தார். தம் சொந்தப் புலமையையும் வெளிப்படுத்தி வசனங்களை எழுதினார். ஆயினும் பாடல்களின் ஆதிக்கம் வசனங்களை விஞ்சியதாக இருந்தது.

எடுத்துக்காட்டாக அரிச்சந்திரன், “கேளாய் பெண்ணே! சந்திரமதி! லோகத்திலுள்ளவர்கள் செய்யும் படியான சகல பாவங்களையும் போக்கத் தக்கதாகிய திவ்ய மகிமை பூண்ட இந்தக் காசிநாடு வந்தோம் பாராய் பெண்ணே!” என்பான். உடனே “கரம் குவிப்பாய் மயிலே! இதோ காசி காணுது பார் குயிலே !” என்று பாடத் தொடங்கிவிடுவான்.

கதைகள்

நாடகத்திற்காக இவர் எடுத்துக்கொண்ட கதைகள், தமிழ்நாட்டில் அம்மானைப் பாடல்களாகவும் தெருக்கூத்துகளாகவும் இருந்த பழங்கதைகள் ஆகும். மரபான கூத்து அமைப்பையும் நடிப்பையும் உள்வாங்கி நாடகங்களை எழுதினார். அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சீமந்தினி, சதிஅநுசூயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, சதிசுலோசனா முதலான இவரது நாடகங்களை இவரே எழுதினார். இவை ஆயிரக் கணக்கான முறை நிகழ்த்தப் பெற்றன. மார்க்கண்டேயர், மயில்ராவணன், அரிச்சந்திரா மயான காண்டம், பாதுகா பட்டாபிஷேகம், லங்கா தகனம், லவகுச, இராம ராவண யுத்தம், வாலி மோட்சம், மன்மத தகனம், நளதமயந்தி, காந்தர்வதத்தை முதலான நாடகங்களையும் இவர் படைத்திருக்கிறார்.

பணிகள்

1914ஆம் ஆண்டு இவர் தோற்றுவித்த சமரச சன்மார்க்க நாடக சபை மூலம் பல நல்ல நாடகப் பிரதிகளை உருவாக்கி நடத்தினார். தொழில் முறை நாடகக் குழுக்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப் பாலர் நாடக சபை தொடங்கி, அதற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். தொழில் முறை நடிகர்களும் கலைஞர்களும் உருவாகக் காரணமானார். எம்.ஜி. இராமச்சந்திரன், பி.யு. சின்னப்பா, எம்.ஆர். இராதா, என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.இராசேந்திரன், ஏ.பி.நாகராஜன் முதலான நாடகக் கலைஞர்கள் உருவாக இவரது நாடகக்குழு காரணமானது. பல ஊர்களிலிருந்து வந்து நடிக்கும் நடிகர்கள் இவரது வசனங்களையே பேசியதால் நாடகங்களை எங்கு வேண்டுமானாலும் நடத்த முடிந்தது.

1.2.2 சி. கன்னையா இவர், ஸ்ரீ கிருஷ்ண விநோதசபா என்ற பெயரில் நாடகக்குழு ஒன்றினை அமைத்திருந்தார். சம்பூரண ராமாயணம், அரிச்சந்திரா, தசாவதாரம், கிருஷ்ணலீலா, ஆண்டாள் திருக்கல்யாணம், துருவன், சக்குபாய், பக்த குசலோ, சாகுந்தலா, பகவத்கீதை முதலான நாடகங்களை நடத்தியிருக்கிறார்.

சி. கன்னையா

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சீர்திருத்தங்கள்

சி. கன்னையா மேடை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் பல சீர்திருத்தங்களையும் சிறப்புகளையும் செய்தார்.

பழைய நாடக மேடைகளில் பின்திரை பற்றியும் அரங்கப் பொருள்கள் பற்றியும் கவலைப்படுவதில்லை. திரௌபதி வஸ்திரா பஹரணம் நாடகத்தில், மன்னன் துரியோதனனும் சகுனியும் உரையாடும் காட்சிக்குப் பின்னணித் திரையாக, சென்னை போஸ்ட் ஆபிஸ் மின்சார டிராம் வண்டிகள் அடங்கிய திரைச்சீலை தொங்கவிடப் பட்டிருந்தது. சுப்பிரமணியர், அரிச்சந்திரன், விதூஷகன் முதலான பாத்திரங்களுக்கு உடைகள் பொருத்தமாக இல்லை. இவற்றையெல்லாம் சி. கன்னையா மாற்றியமைத்தார்.

மேடைக் காட்சிகள்

இவரது நாடகக் காட்சிகளில், மேடையிலேயே குதிரை, யானை, தேர், காளை முதலானவற்றைக் கொண்டு வந்துவிடுவார். அரசவைக் காட்சிகளில் இரண்டு தூதர்கள் நிற்க, அவர்களுக்குப் பின்னால், நிறைய வெட்டுருக்கள் (கட்அவுட்) வைத்து ஐம்பது பேர் நிற்பது போலக் காட்டிவிடுவார். அரிச்சந்திரா நாடகத்தில் மயானக் காட்சியில், பிணம்போல் உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார். இவரது குழுவில் நாற்பது அரங்கக் கலைஞர்கள் பணியாற்றினார்கள். பத்து லாரி அளவிற்கு அரங்கப் பொருட்களை வைத்திருந்தார்.

மக்கள் ஆதரவு

காட்சிச் சிறப்பிற்காகவே இவரது நாடகங்களுக்குக் கூட்டம் அலைமோதும். நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் மக்கள் திரும்பினார்கள். முன்பதிவு முறையையும் இவர் ஏற்பாடு செய்தார். இவரது தசாவதாரம் நாடகம் 1008 நாட்கள் நடத்தப் பெற்றது. இவரது நாடகம் சென்னையில் நடக்கும்போது 700 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலியில் விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

1.2.3 நவாப் ராஜமாணிக்கம் மதுரை பாலமீன ரஞ்சனி சபா என்றும் மதுரை தேவி பால விநோத சங்கீத சபா என்றும் பால நாடக சபைகள் நடத்தியவர் நவாப் ராஜமாணிக்கம். பக்த ராம்தாஸ் நாடகத்தில் நவாப்பாக நடித்ததினால் இவர் நவாப் ராஜமாணிக்கம் என்று அழைக்கப்பட்டார். இவரும், காட்சி அமைப்பில் பல சாதனைகள் செய்தவர். கிருஷ்ணலீலா, தசாவதாரம், இராமாயணம், ஐயப்பன், ஏசுநாதர், பக்த ராமதாஸ், குமார விஜயம், சக்திலீலா முதலான புராண நாடகங்களை நடத்தியுள்ளார்.

நவாப் ராஜமாணிக்கம்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

தந்திரக் காட்சிகள்

மேடையில் இவர் உருவாக்கிக் காட்டிய தந்திரக் காட்சிகள் பலரையும் கவர்ந்தன. ‘குமார விஜயம்’ நாடகத்தில் முருகன் பிறப்பைக் காட்டுகையில், ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதைக் காட்டினார். ‘கிருஷ்ணலீலா’ நாடகத்தில் குழந்தை கண்ணனைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வசுதேவர் கொட்டும் மழையில் செல்வதும், ஐந்து தலை நாகம் வந்து குடை பிடிப்பதும் காட்டப்பட்டது. யமுனை நதி பிளந்து வழிவிடுவதும், நதி நீர் அலம்புவதும், மீன்கள் துள்ளி விளையாடுவதும் காட்டப்பட்டது. ‘தசாவதாரம்’ நாடகத்தில் சிறைக்காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பதும், கதவு தானாகத் திறந்து கொள்வதும் காட்டப்பட்டது. ‘ஏசுநாதர்’ நாடகத்தில் கல்லறையிலிருந்து ஏசு உயிர்த்தெழும் காட்சி காட்டப்பட்டது. இவரது தந்திரக் காட்சி முறைகளை, ஆர். எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி முதலானோர் பின்பற்றினார்கள்.

மக்கள் ஆதரவு

தந்திரக் காட்சிச் சிறப்பிற்காக, இவரது நாடகங்கள் ஆயிரம் முறைகளுக்கு மேல் நடத்தப்பட்டன. இவர், ஐயப்பன் நாடகம் நடத்தியபோது ஐயப்ப ஊர்வலம் நடத்தப்பட்டது. ஐயப்ப பக்தி பரவியதாகவும் தெரிகிறது. இவருடைய ராமாயண நாடகம் நடந்த இடத்திற்கு ராமாயணம் பஸ் ஸ்டாப் என்றே பெயர் இருந்தது. இவருடைய ராமாயண நாடகம் நடந்தபொழுது எஸ்.எஸ். வாசன், தம்முடைய ஒளவையார் திரைப்படத்தை வெளியிட்டால் கூட்டம் வராது என்பதற்காக, வெளியிடாமல் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

1.2.4 பம்மல் சம்பந்தனார் மேற்கண்ட தொழில் முறை நாடகக் கலைஞர்களிடமிருந்து வேறுபட்டவர் நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார். பயில்முறை நாடகக் குழுவை உருவாக்கி அவ்வகையான குழுக்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தவர். இவருடைய ‘சுகுண விலாச சபை’ இதற்கு முன்னோடியாக அமைந்தது. பார்சி, மராட்டி, இந்துஸ்தானி நாடகக் குழுக்கள் நடத்தும் முறையை அறிந்து, அதே போன்று தமிழ் நாடகங்களை எழுதி இயக்கினார். எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என்று நடந்துகொண்டிருந்த நாடகத்தை ஐந்து மணி நேரத்தில் முடியும் வண்ணம் மாற்றியவர் பம்மல் சம்பந்தனார்.

பம்மல் சம்பந்தனார்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

தனித்தன்மை

மக்களுக்கு நன்கு தெரிந்த கதைகளையே இவர் நாடகமாக்கினார். யயாதி, கொடையாளி கர்ணன், வள்ளி திருமணம், சிறுத்தொண்டர், மார்க்கண்டேயன், சதிஅநுசூயா முதலான நாடகங்கள் இவரால் எழுதப்பட்டவை. நம்ப முடியாத நிகழ்வுகளை நீக்கி எழுதுவது இவர் வழக்கம். புராண நிகழ்ச்சிகளுக்கும் காரணம் காட்டி விளக்குவார். சமுதாய நன்மைக்கு ஏற்ற வகையில் கருத்துகளை வலியுறுத்துவார். ‘யயாதி’யில் தாய் தந்தையர் மீது பற்று வைத்தல் வலியுறுத்தப்பட்டது. ‘கொடையாளி கர்ணனில்’ அறக்கொடையின் ஆற்றல் விளக்கப்பட்டது. ‘மார்க்கண்டேயர்’ நாடகத்தில் உறுதியான இறை நம்பிக்கை எடுத்துக்காட்டப்பட்டது. இவர் காலவ ரிஷி, சகாதேவனின் சூழ்ச்சி முதலான நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.

எதிர்க்கதை

எதிர்க்கதை நாடகம் (Burlesque) என்ற வகையை உருவாக்கியவர் பம்மல் சம்பந்தனார். சமுதாயத்தில் பரவலாக வழங்கிவரும் பழைய கதையின் மூலக் கருத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டு நகைச்சுவையாக எழுதப்படுவது எதிர்க்கதை நாடகம். இதை ஏட்டிக்குப் போட்டி நாடகம் என்றும் கூறலாம். இதற்காக அரிச்சந்திரன் கதையை எடுத்துச் சந்திரஹரி என்று மாற்றி எழுதினார்.

அரிச்சந்திரன் கதை எந்த நிலையிலும் பொய் பேசாத ஒருவனைப் பற்றியது. பம்மல் சம்பந்தனாரின் சந்திரஹரி எந்த நிலையிலும் பொய்யே பேசுகிற ஒருவனைப் பற்றிய வேடிக்கைக் கதை. இதை என்.எஸ். கிருஷ்ணன் திரைப்படமாக ஆக்கினார்.

1.2.5 டி.கே.எஸ் சகோதரர்கள் தேசிய வாதிகளான டி.கே.எஸ். சகோதரர்கள், மேடையமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத் தக்கன. முகப்புத் திரைக்குப் பின்னுள்ள பின்னணித் திரைகளை வரிசைப்படுத்தி வைக்கும் முறையில் ஓர் ஒழுங்கினைப் புகுத்தினார்கள். ஒலிவாங்கி(mike)யிலிருந்து மூன்றடி தூரத்தில் தெருத்திரை இருக்கும். மேகத்திரை கடைசியில் இருக்கும். இடையில் காடு, அரண்மனை, தர்பார் எனப் பல திரைகள் இருக்கும். எல்லாத் திரைகளும் மேலிருந்து கீழிறங்கி வரும் வகையில் அமைக்கப்பட்டன. திரை இறங்கும் போது, ஓசை வராமலிருக்க மரக்கப்பிகள் பயன்படுத்தப்பட்டன.

இவர்கள் நடத்திய சிவலீலா நாடகத்தில் வானுலகக் காட்சிக்குப் பொருத்தமாகப் பக்கத்தட்டிகளும், மேல் தொங்கட்டான்களும் அமைக்கப்பட்டிருந்தன. தொங்கட்டான்களை, மேக மண்டலம் போல் ஓவியங்கள் தீட்டி அமைத்தார்கள். அத்துடன், வளைவாக நறுக்கியும் வைத்திருந்தார்கள். விளக்கு அமைப்பிலும், ஒப்பனையிலும், இவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

டி.கே.எஸ் சகோதரர்கள்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

1.2.6 பெண்கள் பங்கேற்பு பாலாமணி அம்மாள், பி.பி.ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் முதலான பெண்மணிகளும் நாடகத் துறையில் சாதனை படைத்தவர்கள்.

பாலாமணி அம்மாள்

இவர்களில் பாலாமணி அம்மாள் குறிப்பிடத் தக்கவர். பெண்களைக் கொண்டே இவர் நாடகக் குழுவை நடத்தினார். இவருடைய நாடகக் குழுவிற்கும் பாலாமணி அம்மாள் நாடகக் குழு என்றே பெயர் இருந்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற இவரது நாடகங்களுக்காகச் சிறப்பு ரயில் 40 கி.மீ. தொலைவில் உள்ள மாயவரத்திலிருந்து விடப்பட்டது. இதற்குப் ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்றே பெயரிடப்பட்டிருந்தது.

பாலாமணி அம்மாள்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

1.2.7 பிறர் சங்கரதாஸ் சுவாமிகளின் காலத்தையொட்டி, நாடகம் படைத்தவர்களில் ஏகை சிவசண்முகம் பிள்ளை குறிப்பிடத் தக்கவர். இவரது சம்பூரண இராமாயணம், அரிச்சந்திரா முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை. இராமாயண நாடகத்தில், இவர் எழுதிய பாடல்களைத்தான் எல்லா இராமாயண நாடகங்களிலும் பயன்படுத்தினார்கள். நாடக சபைகள், நாடக முகாம் நடத்துகையில், இறுதி நாளில் இவரது ராமாயண நாடகத்தை நடத்தி முகாமை முடிப்பார்கள்.

நாடக ஆக்கம்

எம்.வி. கோவிந்தராஜ அய்யங்கார், குசேலர் நாடகத்தில் ஆழ்வார், கம்பர் முதலானோரின் கவிதை அடிகளைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். அண்ணிய பூபன், சுந்தரர் விலாசம் நாடகத்தை மெய்ப்பாடுகளுடன் எழுதியுள்ளார். சுவாமிநாத சர்மாவின் அபிமன்யு நல்ல நடையமைப்புடன் எழுதப்பட்டுள்ளது. விசுவநாதன் எழுதிய அப்பூதி அடிகள் நாடகத்தில் மாணிக்கவாசகரின் பாடல் அடிகள் பயன்படுத்தப்பட்டன. பிரணதார்த்திகா சிவன், தமயந்தி நாடகத்தில் நளவெண்பாப் பாடல்களை அப்படியே பயன்படுத்தியுள்ளார்.

பவானந்தம் பிள்ளையின் சீதா கல்யாணம், ராமமூர்த்தி பந்துலுவின் பாண்டவ அஞ்ஞாத வாசம், அனந்தராம சாஸ்திரியின் உத்தரராம சரிதம் முதலானவையும் குறிப்பிடத்தக்கவை.

1.3 தேசிய இயக்கத் தாக்கம்

தேசிய இயக்கத்தைச் சார்ந்த தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், டி.கே.எஸ்.சகோதரர்கள் முதலானோர் தொடக்கத்தில் புராண நாடகங்களை நடத்தினார்கள். பிரகலாதா, அரிச்சந்திரா, ராஜா பர்த்ருஹரி, வள்ளி திருமணம் முதலான நாடகங்களைத் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் நடத்தியிருக்கிறார். டி.கே.எஸ். சகோதரர்கள் வள்ளி திருமணம், அபிமன்யு சுந்தரி, சதிஅநுசூயா, நந்தனார் முதலான நாடகங்களை நடத்தினார்கள். வெ. சாமிநாத சர்மா, லவகுசா நாடகத்தைப் படைத்தார்.

தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

1.3.1 தேசியக் கருத்துகள் புராணக் கதைகளில் வீரவுணர்வு ஊட்டக் கூடியவற்றை விடுதலை எழுச்சி ஊட்டுவதற்காகத் தேசிய இயக்கத்தினர் நாடகமாக்கி நடத்தினார்கள். இவ்வகையில் சாமிநாதசர்மா, அபிமன்யு நாடகத்தை எழுதினார். அடுத்த நிலையில், புராண நாடக வசனங்களிலும் பாடல்களிலும் தேசியக் கருத்துகள் புகுத்தப்பட்டன. மதுரகவி பாஸ்கரதாஸ், ராஜா சண்முகதாஸ், சுந்தரவாத்தியார், உடுமலை முத்துசாமிக் கவிராயர், கவிக்குஞ்சரவாத்தியார், குடந்தை வீராசாமி வாத்தியார், வீரநாதக் கோனார், பூமி பாலகதாஸ், எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் முதலானோர் நாடகங்களில் தேசியப் பாடல்களைப் புகுத்தினார்கள்.

தேசியக் கருத்துடைய பாடல்

வள்ளி திருமணம் நாடகத்தில், வள்ளி குருவி ஓட்டுகையில் ‘வெள்ளைக் கொக்குகளா !’ என்று வெள்ளையரைக் குறிப்பிட்டுப் பாடல் பாடுவது போல் காட்சியை அமைத்தார்கள்.

வெள்ளை வெள்ளைக் கொக்குகளா வெகுநாளாய் இங்கிருந்து

கொள்ளை அடித்தீர்களா ஆலோலங்கிடிச்சோ – இனி

கோபம்வரும் போய்வாருங்கள் ஆலோலங்கிடிச்சோ – அந்தக்

காந்தி மகத்துவத்தால் கதிர்கள் விளைந்து இங்கே

காய்ந்து கிடக்குதென்று ஆலோலங்கிடிச்சோ – அதைத்

தட்டிப் பறிக்க வந்தீரோ ஆலாலங்கிடிச்சோ

என்ற பாடலில் மதுரகவி பாஸ்கரதாஸ் வெள்ளைக்காரர்களுக்கு வெள்ளைக் கொக்கு என்று குறியீடமைத்துத் தேசியக் கருத்தைப் பரப்பினார். திரௌபதி, அரிச்சந்திரன், கிருஷ்ணன், முருகன், நாரதர், பாண்டவர்கள் என எல்லாப் புராணப் பாத்திரங்களும் நாடக மேடையில் தேசியப் பாடலைப் பாடினார்கள்.

1.4 திராவிட இயக்கத் தாக்கம்

நாட்டு விடுதலை நெருங்கியபோது, தேசிய எழுச்சி பொருளற்றதாகியது. இதனால் சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடகங்களின் உள்ளடக்கமாக ஆயின. மூடநம்பிக்கை எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு என்ற உள்ளடக்கங்கள் நாடகமாக்கப் பெற்றன. உரையாடல்களில் தமிழ்மொழி நடை புதுப்புனைவுடன் இடம் பெற்றது. பாரதிதாசன், அண்ணா, கலைஞர் கருணாநிதி, என்.எஸ். கிருஷ்ணன், ஏ.கே. வேலன், ப. கண்ணன், திருவாரூர் கே. தங்கராசு, திருவாரூர் மூர்த்தி, குத்தூசி குருசாமி முதலானோர் புராணக் கதைகளைத் தம் கொள்கைகளுக்கு ஏற்பப் புதுக்கி மாற்றி அமைத்தனர்.

1.4.1 பாரதிதாசன் திராவிடர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு, அதற்காகப் பிரச்சாரம் செய்த பாரதிதாசன், கட்சிக் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைப்பதற்காகத் திராவிட இயக்கம் சார்பான நாடகங்களை இயற்றினார்.

இரணியன் – நாடகம்

பாரதிதாசன், ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகத்தின் மூலம் இரணியன் வரலாற்றைத் திராவிட இயக்கக் கொள்கையான ஆரிய எதிர்ப்பிற்கேற்ப மாற்றியமைத்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பிரகலாதா நாடகமும் நவாப் ராஜமாணிக்கத்தின் தசாவதாரம் நாடகமும் நடத்தப்பட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. இக்காலக் கட்டத்தில் இந்நாடகங்களின் கருத்துக்கு முரணாகவும் எதிர்ப்பாகவும் பாரதிதாசன் இந்நாடகத்தைப் படைத்தார். இதில், வடமொழிச் சொற்கள் மிகுதியாக இடம் பெற்றன. 15 காட்சிகளும் 22 பாடல்களும் இந்நாடகத்தில் இடம் பெற்றன. ஆரிய நாகரிகம் மோசமானது என்று இந்நாடகம் புலப்படுத்தியது.

நாடகக்கதை

பிரகலாதன் ஆரியர் பிடியில் சிக்குகிறான். தந்தை இரணியன் வருந்துகிறான். பிரகலாதனுடன் இருக்கும் ஆரியப் பெண் சித்திரபானு, இரணியன் உறங்கும்போது ஈட்டியை அவன் மீது வீசுகிறாள். அவள் பெண் என்பதால், இரணியன் மன்னிக்கிறான். அவள் பிரகலாதனிடம், இரணியன் தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி வெறுப்பேற்றுகிறாள். சித்திரபானு, சேனாதிபதியை மயக்கி, இரணியனைக் கொல்லத் தூண்டுகிறாள். இரணியன், ஆரியர் புரட்டை வெளிப்படுத்துகிறான். ஆரியர்கள், அவனை நாராயணன் அழிப்பார் என்று புரளியைக் கிளப்புகின்றனர். தூணுக்குப் பின் ஒளிந்திருக்கும் ஆரியன் ஒருவன், நரசிங்கம் போல் வேடமிட்டுக்கொண்டு இரணியனைக் குத்த வருகிறான். அதே சமயம் பின்னாலிருந்து இருவர் முதுகில் குத்துகின்றனர். சேனாதிபதி பிரகலாதனைக் கொல்கிறான். சித்திரபானுவையும் அவன் கொல்கிறான். பின் சேனாதிபதி தற்கொலை செய்து கொள்கிறான். புராணக் கதையில் பொல்லாதவனாகக் காட்டப்பட்ட இரணியனை, நல்லவனாகக் காட்டும் புரட்சியாக நாடகம் அமைந்தது.

நாடகக் கருத்து

நாடகம் முழுதும் ஆரியர்களின் வஞ்சகத்தையும் கொடுமையையும் பாரதிதாசன் வன்மையாகக் கண்டிக்கிறார். ஆரியர்கள் தமிழ் நூல்களை எதிர்ப்பதாகக் காட்டி, தமிழ் உணர்ச்சியைத் தூண்டுகிறார்.

நாடக வசனம்

இரணியன் நாடகத்தில் உணர்ச்சிகரமான வசனங்களைப் பாரதிதாசன் எழுதியுள்ளார். சித்திரபானுவை அறிமுகப்படுத்துகையில், “நீலோற்பல நேத்திரம்! மின்னல் ஒளியை ஒழுகாயிடும் மந்தகாசம்! மலர்க்கொடியிடை! அந்திமாலைப் பொழுது ! இன்பத்தென்றல் !…. இளம் பருவத்தில் துடிதுடிப்பு !” என்று வருணித்திருந்தார்.

நாடகத் தாக்கம்

இந்நாடகத்திற்குப் பின் ஆரியர்கள் சூழ்ச்சியை மையமாகக் கொண்டு பல நாடகங்கள் படைக்கப்பட்டன. புராண இதிகாச மாந்தர்கள் ஆராய்ச்சிக்கு உள்ளானார்கள். இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித், கம்சன், வாலி முதலான மாந்தர்களின் வீரவரலாறுகள் திராவிட இயக்கத்தாரால் நாடகங்களாக ஆக்கப்பட்டன.

வஞ்ச விழா – நாடகம்

பாரதிதாசன் படைத்த ‘வஞ்ச விழா’ என்ற நாடகமும் ஆரிய எதிர்ப்புக் கருத்துடையதே. ஆரியர்கள், தமிழர் வாழ்வை அழிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள். இந்திரனின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். இந்திரன் தமிழர்களோடு மோதித் தோல்வி அடைகிறான். கரியன் என்ற அந்தணன், பெண்கள் படையைத் தமிழர்களுக்கு எதிராக அனுப்புகிறான். தமிழர்கள் தோல்வி அடைகிறார்கள். தமிழர்கள் தோற்ற நாள் வஞ்ச விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

1.4.2 ஏ.கே. வேலனும் பிறரும் பாரதிதாசனைப் போன்று, திராவிட இயக்கச் சார்புடைய ஏ.கே.வேலன் என்ற நாடக ஆசிரியரும், பிறரும் இயக்கச் சார்பான நாடகங்களை இயற்றினர்.

ஏ.கே. வேலன்

ஏ.கே.வேலனின் இராவணன் நாடகம், அவனது மாட்சியைக் காட்டுவதாக உள்ளது. அவனை மாவீரனாகப் படைத்துக் காட்டுகிறது. இராம இலக்குவரை இழிகுணம் படைத்த ஆரியர்களாகவும் கோழைகளாகவும் காட்டுகிறது. அகத்தியனை ஆரியச் சூழ்ச்சிக்குத் துணை புரிபவனாகவும், சீதையைக் காமவெறி பிடித்தவளாகவும் காட்டுகிறது. ஏ.கே. வேலன் கும்பகர்ணன், மாவீரன் கம்சன் முதலான நாடகங்களை நேஷனல் தியேட்டர்ஸ் ஆர்.எஸ். மனோகருக்காக எழுதினார்.

பிறர்

கண்ணன் எழுதிய வீரவாலி நாடகம், கிட்கிந்தைத் தலைவன் வாலியை மிகப்பெரிய வீரனாகக் காட்டுகிறது. எம்.ஆர். ராதாவின் கீமாயணம், என்.எஸ்.கிருஷ்ணனின் கிந்தனார், திருவாரூர் மூர்த்தியின் இலங்கேஸ்வரன், மு.கருணாநிதியின் துருவன், திருவாரூர் கே. தங்கராசுவின் இராமாயணம், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிவன் – விஷ்ணு முதலான நாடகங்களும் குறிப்பிடத் தக்கவை.

இலங்கேஸ்வரன் நாடகம்

1.5 சமய நாடகங்கள்

தமிழ்நாட்டில் இந்து, கிறித்துவம், இஸ்லாம் முதலான சமயங்கள் செல்வாக்குடையவை. இந்து சமயத்தில் சைவம் வைணவம் முதலான பிரிவுகளும் உள்ளன. இச்சமயங்கள் சார்ந்த புராணக் கதைகள் ஏராளமாக உள்ளன. மக்களிடையே பரவியுள்ள இக்கதைகளைப் பல விதங்களில் படைப்பாளர்கள் நாடகங்களாக ஆக்கினார்கள். முனிவர்களின் தவ வலிமை, பெண்களின் தெய்வீக ஆற்றல், மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களின் செயல்பாடுகள் எனப் பல வகையாகப் படைத்திருக்கிறார்கள். பாத்திரங்களின் பண்புகளும் மக்களுக்குப் பல செய்திகளை உணர்த்தும் வண்ணம் நாடகங்களைப் படைத்திருக்கிறார்கள். சிறந்த பல கருத்துகளைப் படைத்து மக்களைச் செம்மைப்படுத்தும் நோக்கிலும் படைத்திருக்கிறார்கள்.

1.5.1 இந்து சமய நாடகங்கள் இந்து சமயம் நீண்ட காலமாய் நிலைத்திருப்பது. பெரும்பாலான மக்கள் இச்சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இச்சமயத்தில் இறைக் கதைகள் ஏராளமாக உள்ளன. இந்து சமய நாடகங்களில் இதிகாசக் கதைகளும் புராணக் கதைகளும் தத்துவ விளக்கக் கதைகளும் இடம் பெறுகின்றன. சமயவாதிகளின் வரலாறும் நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறும் தெய்வ வணக்கக் கதைகளும் சமயக் கொள்கைகளின் விளக்கங்களும் நாடகங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

புராணக் கதை நாடகங்கள்

தமிழில் பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலானவை சமயக் கருத்துகளையும் சமயப் பெரியார் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கொண்டு எழுதப்பட்டவை. இவற்றில் சைவ சமயம் சார்ந்தவை, வைணவ சமயம் சார்ந்தவை என்ற பாகுபாடுகள் உள்ளன.

சைவ நாடகங்கள்

சமயக் குரவர்களின் வரலாறுகள் நாடகமாக்கப்பட்டுள்ளன. செ.மு.வேலு முதலியார், ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாடகம் என்று நாடகம் படைத்துள்ளார். தஞ்சை. வீ. ஆறுமுகம் சேர்வையும் வே. இராமசாமி வன்னியரும் சேர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாடகத்தைப் படைத்துள்ளனர். எஸ்.கே.பார்த்தசாரதி ஐயங்கார், திருஞான சம்பந்தர் சரித்திர நாடகம் எனப் படைத்துள்ளார். எஸ். குற்றாலம், திருநாவுக்கரசர் நாடகத்தை எழுதியுள்ளார். தெள்ளூர் மு.தருமராசனும் திருநாவுக்கரசர் வரலாறு என்ற நாடகத்தை எழுதியுள்ளார். எஸ். சங்கர குற்றாலமும் திருநாவுக்கரசர் நாடகத்தை எழுதியுள்ளார். தெள்ளூர் மு.தர்மராசன் அனைத்துத் தலைவர்களின் வாழ்வையும் விளக்கும் வகையில் தேவாரம் என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

நாயன்மார்களின் வரலாற்றையும் நாடகங்களாகப் படைத்துள்ளனர். அடையாறு கலாட்சேத்திராவின் படைப்பான காரைக்கால் அம்மையார், மு.வரதராசனார் அவர்களின் படைப்பான திலகவதி முதலானவை பெண் பெரியார்களின் வரலாற்றை உணர்த்துவன. இந்திரா பார்த்தசாரதி, நந்தன்கதை என்ற நாடகத்தைப் புராணப் புதுக்கலாக எழுதியுள்ளார். பார்ப்பனர் சூழ்ச்சியில் நந்தன் எரிக்கப்பட்டதாக எழுதியுள்ளார்.

சைவக் கடவுளர் பற்றிய நாடகங்களும் படைக்கப்பட்டன. வேங்கடசாமி தீட்சிதர் படைத்த பார்வதி பரிணயம், பார்வதி திருமண நிகழ்வின் பின்னணியைப் புலப்படுத்துகிறது. சங்கரதாஸ் சுவாமிகள், சம்பந்த முதலியார் முதலானவர்கள் முருகக் கடவுள் வள்ளியை, வேடன் விருத்தன் முதலான கோலங்களில் வந்து மணந்து கொள்ளும் நிகழ்வை நாடகங்களாக்கினர். வெங்கடேச எட்டப்ப மகாராஜாவும் வள்ளி நாடகம் எழுதியுள்ளார். ராம் ஐயர், வள்ளி பரிணயம் என்று படைத்துள்ளார். சூரசம்காரம் நாடகம் முருகக் கடவுள் தேவர்களைக் காக்கச் சூரனை வதைத்த நிகழ்வைப் புலப்படுத்தியது.

திருவிளையாடற் புராணத்திலுள்ள செய்திகளும் நாடகமாக்கப்பட்டுள்ளன. கோவிந்தசாமி நாட்டார், நக்கீரர் நாடகம் எழுதியுள்ளார்.

வைணவ நாடகங்கள்

பன்னிரு ஆழ்வார்களின் கதைகள், திருமாலின் பெருமை முதலானவை வைணவ நாடகங்களாக ஆக்கப்பட்டுள்ளன. எஸ்.கே. பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய தொண்டரடிப் பொடியாழ்வார் நாடகம் மகாலட்சுமி தத்துவத்தையும், நாராயணனிடம் மக்களுக்கு இருக்க வேண்டிய பக்தியையும், திருமாலின் பெருமையையும், திருமால், பக்தர்களுக்கு அருளுகின்ற தன்மையையும் உணர்த்துகிறது.

திருமலை நல்லான் எழுதிய மார்கழி நோன்பு அல்லது ஸ்ரீ ஆண்டாள் திருமணம், ஆண்டாளின் வரலாற்றை உணர்த்தியது. வைணவத் தத்துவமும் திருமாலின் பெருமையும் பக்தியால் ஆண்டாள் திருமாலுடன் சேர்வதும் காட்டப்படுகிறது. பரமாத்மாவை ஜீவாத்மாவை அடைவதை இந்நாடகம் விளக்குகிறது.

சமயத் தலைவர் பற்றிய நாடகங்கள்

வள்ளலார் எனப் போற்றப்படும் இராமலிங்க அடிகளின் வரலாற்றை நாரண துரைக்கண்ணன் திருவருள் பிரகாச வள்ளலார் என்று நாடகமாக எழுதியுள்ளார். சமரச சுத்த சன்மார்க்கக் கொள்கையை அவர் பரப்பிய செய்தி புலப்படுத்தப்படுகிறது. விசிஷ்டாத்வைதக் கொள்கையைப் பரப்பிய இராமாநுசரின் வரலாற்றை ஸ்ரீராமாநுசர் என்ற பெயரில் சி.எம்.வெங்கட்ராமன் நாடகமாகப் படைத்துள்ளார்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய நாடகங்கள்

தமிழ்நாட்டில் நாட்டுப்புறத் தெய்வ வணக்கம் நிலவுகிறது. வீரவாழ்வு வாழ்ந்தவர்களுக்குக் கோயில் எடுத்துத் தெய்வமாகக் கருதி விழா எடுப்பது தமிழ்நாட்டு வழக்கம். விழாக்களின் போது அந்த வீரர்களின் வரலாறுகளை மக்களிடம் நாடகமாக நடத்திக் காட்டுவர். மதுரை வீரன். காத்தவராயன் முதலானோர் கதைகள் நாடகமாக ஆக்கப்பட்டிருக்கின்றன.

1.5.2 கிறித்தவ நாடகங்கள் கிறித்தவர்களின் விவிலிய விளக்கக் கதைகள், இயேசுநாதர் வரலாறு முதலானவை கிறித்துவ சமய நாடகங்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் பல கிறித்தவ நாடகங்கள் இசை நாடகங்களாக எழுதப்பட்டுள்ளன. ஆதாம் ஏவாள் விலாசம், பூதத்தம்பி விலாசம், நல்ல சமார்த்தன், ஞான சௌந்தரி அம்மாள் விலாசம், எஸ்காத்தியர் நாடகம் முதலான நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் ஞானசௌந்தரி நாடகத்தையும், நவாப் ராஜமாணிக்கம் ஏசுநாதர் நாடகத்தையும் சிறப்பாக நடத்தி, மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படு்த்தினார்கள். எஸ்.பொன்ரத்தினம் இதோ நமக்கு ஒருவர் என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

1.5.3 இசுலாமிய நாடகங்கள் இசுலாமிய நாடகங்களும் இசை நாடகங்களாக இருந்தன. அலிபாதுஷா நாடகம், தையார் சுல்தான் நாடகம், அப்பாஸ் நாடகம், லால் கௌஹர் நாடகம் முதலானவை இவ்வாறு எழுதப்பட்டவை. அகமது பஷீர், சே.மு.மு.முகமதலி, சாயபு மரைக்காயர் முதலானோர் இசுலாமிய நாடகங்களைப் படைத்துள்ளனர்.

1.6 இதிகாச நாடகங்கள்

இதிகாசங்களில், இராமாயணமும் மகாபாரதமும் கதைக் களஞ்சியங்களாக இருக்கின்றன. அவற்றிலுள்ள கிளைக் கதைகளும், பாத்திரப் படைப்புகளும் கதா காலட்சேபங்களாகவும், தெருக்கூத்து நாடகங்களாகவும் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன. மேடை நாடகங்கள் உருவானபோது இக்கதைகள் நாடகங்களாக ஆக்கப்பட்டன. இராமாயணக் கதைகளைவிட, மகாபாரதக் கதைகள் மிகுதியான வரவேற்பைப் பெற்றிருந்தன. மகாபாரதக் கதைகளை 18 நாட்கள் கோயில் விழாக்களின் போது படிக்கும் வழக்கம் இருந்தது. பாரதக் கதை நாடகங்களும் கோயில் விழாக்களில் நடத்தப்படுகின்றன.

1.6.1 மகாபாரதம் மகாபாரதம் ஒரு கதைக் களஞ்சியம்; கருத்துக் குவியல்; மனித வாழ்வின் பல கூறுகளைப் படம் பிடித்துக் காட்டுவது. தொடக்கக் கால நாடக ஆசிரியர்கள் அனைவருமே மகாபாரதக் கதைகளை நாடகமாக ஆக்கியுள்ளனர். ஏதாவது ஒரு நல்ல கருத்து, நாடகத்தின் வாயிலாக உணர்த்தப்பட்டது. சி.ஆர். நமச்சிவாய முதலியாரின் கீசகன் நாடகம் காமத்திற்கு அடிமையாவது சீர்கேடு என்பதை வலியுறுத்தியது. நளாயினி நாடகம் கற்பிற்கும், கணவனுக்குச் செய்யும் பணிவிடைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. எஸ்.கே. வெங்கடராம ஐயரின் சைரந்திரியின் வெற்றி கற்பின் சிறப்பை விளக்கியது.

கன்னையா தாசரின் மகாபாரத விலாசம், சிவசண்முகம் பிள்ளையின் சம்பூரண மகாபாரதம் முதலான நாடகங்கள் பாரதக் கதையை முழுமையாக வெளிப்படுத்தின. பி.ராம மூர்த்தியின் பாண்டவர் அஞ்ஞாதவாசம் பிற்பகுதிக் கதையை வெளிப்படுத்தியது. கல்யாண சாஸ்திரி படைத்த கோஷயாத்திரை என்ற கௌரவர் பங்கம் என்னும் நாடகம் கதையின் ஒரு பகுதியை விளக்கியது. மதுரை முத்துசுப்ப பாரதியின் சுபத்ராபரிணயம், சுபத்திரைக்கும் அர்ச்சுனனுக்கும் நிகழ்ந்த திருமணத்தைப் புலப்படுத்தியது. வீ.கே. பார்த்தசாரதி ஐயங்காரின் சுபத்திரார்ஜு ன நாடகம் இத்தகையது.

கர்ணமோட்சம், சூதுச்சருக்கம், திரௌபதி வஸ்திராபகரணம், கிருஷ்ணன்தூது, அரக்கு மாளிகை, அரவான் களப்பலி, கடோத்கஜன் போர், பதினெட்டாம் நாள் போர் முதலான நாடகங்களும் கதையின் ஒரு பகுதியை விளக்கின.

சாஸ்தா ஐயரின் ‘தூதகடோற்கசம் நாடகம்’, பி.எஸ். ராமையாவின் ‘தேரோட்டிமகன்’, ஆர். எஸ். மனோகரின் துரியோதனன் முதலியன பாத்திரப் படைப்புப் பற்றியன.

கிளைக் கதையான நளன் கதையையும் பலர் நாடகமாக ஆக்கியிருக்கிறார்கள். ஆர். சுப்பிரமணிய அய்யரின் நளச் சக்கரவர்த்தி நாடகம், எஸ்.கே. பார்த்தசாரதியின் நளன் அல்லது கலியின் பெருமை, கவிஞர் உலக நாதனின் தமயந்தி நளன் கதை முதலானவை குறிப்பிடத் தக்கன.

மகாபாரத்தில் வரும் சகுந்தலை கதையும் பலரால் நாடகமாக்கப்பட்டிருக்கிறது. என். சாமிநாத சாஸ்திரியின் சாகுந்தல நாடகம், மறைமலை அடிகளின் சாகுந்தலம், பவானந்தம் பிள்ளையின் சாகுந்தலம், அ.கு. ஆதித்தரின் சகுந்தலா நாடகம் முதலானவை குறிப்பிடத் தக்கன.

அரிச்சந்திரன் கதையும் பலரால் நாடகமாக்கப்பட்டிருக்கிறது. முத்தழக பாரதியின் அரிச்சந்திர நாடகம், அப்பாவுப் பிள்ளையின் அரிச்சந்திர விலாசம், முத்தன் ஆசாரியாரின் சத்யவாக்கு அரிச்சந்திர நாடகம், பவானந்தம் பிள்ளையின் அரிச்சந்திரன் நாடகம் முதலானவை குறிப்பிடத் தக்கவை.

1.6.2 இராமாயணம் கன்னையா, நவாப் ராஜமாணிக்கம் முதலானவர்கள், முழுமையாக ராமாயணக் கதையை நாடகமாக்கினார்கள். எஸ். பவானந்தம் பிள்ளையின் சீதா கல்யாண நாடகம், பாதுகா பட்டாபிஷேகம் முதலாயின குறிப்பிடத் தக்கன. அ. சீனிவாச ராகவனின் நிகும்பலை, இந்திரஜித் யாகம் பற்றியது. எஸ்.கே.பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய பக்தபரதன் அல்லது பாதுகா பட்டாபிஷேகம் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்ட நாடகம். பூரணலிங்கம் பிள்ளையின் இலங்கை மன்னன் இராவணன் வீரவரலாறு, ஆனந்த பாரதி ஐயங்காரின் உத்தர ராமாயண நாடகம், பி. பக்தவத்சலத்தின் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், கும்பகர்ணன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கா. அரங்கசாமி எழுதிய கனகை, நாடோடி எழுதிய அகலிகை, இரா.பழனிச்சாமியின் மாவீரன் வாலி முதலானவை குறிப்பிடத் தக்கன.

தாடகை வதம், வாலிவதம், சபரி மோட்சம், மயில் ராவணன், சஞ்சீவி பர்வதம், வீபிஷணன் அடைக்கலம் முதலான பல நாடகங்களும் இராமாயணத்தைக் கொண்டு எழுதப்பட்டவை.

1.7 தொகுப்புரை

புராண நாடகங்கள், மக்களுக்கு நன்கு அறிமுகமான பழைய கதைகளைக் கொண்டு படைக்கப்பட்டவை. இருப்பினும் இந்நாடகங்களின் வாயிலாகச் சமயக் கருத்துகள் பரப்பப்பட்டன. குறிப்பாகப் படிப்பறிவற்ற மக்களுக்குச் சமய அறிவு ஊட்டும் சாதனங்களாகப் புராண நாடகங்கள் திகழ்ந்தன. கிராமங்களில் புனிதமான சமயச் சடங்காகவே நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இந்நாடகங்களின் மூலம் இசைப்பாடல்கள் மக்களிடையே பரவின. அரிய தத்துவ விளக்கங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.

பாடம் - 2

தெருக்கூத்து நாடகங்கள்

2.0 பாட முன்னுரை

கூத்து தமிழகத்தின் பழைமையான நாடகக் கலைவடிவம். கர்நாடகத்தில் யட்சகானம், கேரளாவில் கதகளி என்பன போன்ற பழம் கலைவடிவங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் கூத்து, பொதுமக்களின் கலைவடிவமாக இருந்து வந்திருக்கிறது. தெருக்கூத்து என்று அழைக்கப்படும் அதன் வரலாறு, அமைப்பு, கதைகள், நிகழ்த்து முறைகள், கூத்துக் கலைஞர்கள் பற்றிய செய்திகள், பார்வையாளர் பங்கு ஆகிய செய்திகளை இங்குக் காண்போம்.

2.1 தெருக்கூத்து

இயல், இசை, நாடகம் எனத் தமிழை மூவகையாகப் பாகுபடுத்துவர் என்பதை அறிவீர்கள். இவற்றுள் நாடகம் என்பதே கூத்து எனப்பட்டது.

கூத்து, தெருக்கூத்து, தெருக்கூத்து நாடகம் என்று அழைக்கப்படுகிற நாடகக் கலைவடிவம் மிகவும் பழைமையானது. பழந்தமிழ் நூல்களில் கூத்து, கூத்தன், கூத்தியர், கூத்தியல், கூத்தாட்டவை, கூத்தப்பள்ளி எனப் பல சொற்களும் சொற்சேர்க்கைகளும் காணப்படுகின்றன. உரையாசிரியர் குறிப்பிலும் கல்வெட்டுகளிலும் கூத்து பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பொதுமக்களுக்கு என்றும் அரசர் போன்ற பெரிய மனிதர்களுக்கு என்றும் கூத்துகள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அரங்கத்தில் நடத்தப்பட்ட கூத்து என்ற நாடகம் பொதுமக்களுக்காகத் தெருவில் நடத்தப்பட்ட போது தெருக்கூத்து என்று ஆகியிருக்கிறது.

தெருக்கூத்து

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

பல்லவ அரசன் பரமேசுவர வர்மன் வாதாபி மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் இவ்வழக்கம் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். படை திரட்டுவதற்காக மக்களிடையே போர்க்குணத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அதற்காகப் போர் நிகழ்ச்சிகள் நிறைந்த பாரதக் கதையைக் கோயில்களில் படித்து மக்களைக் கேட்கச் செய்யும் வழக்கம் உண்டாக்கப்பட்டது. இதற்காக மானியம் வழங்கப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. அதனால்தான் பல்லவர் ஆட்சி நிலவிய அப்பகுதிகளில் இவ்வழக்கம் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். பிற்காலத்தில் தேசிங்கு ராஜன் செஞ்சியை ஆண்டபோது, திரௌபதி அம்மன் கோயில்களில் பாரதக் கூத்து நடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்ததாகவும் கூறுகிறார்கள். இக்காலத்தில், கிராமத் திருவிழாக்களில் கதை படிக்கிற, கூத்து நடத்துகிற பொறுப்பை ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு சாதியினர் என்று முறைவைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

நோய், மழையின்மை, திருட்டு முதலான கேடுகள் நீங்க வேண்டும் என்பதற்காக அம்மனை வழிபட்டுக் கூத்து நடத்தும் வழக்கமும் இருந்தது. குழந்தைப் பேற்றுக்காகவும் ஈமச்சடங்காகவும் திருப்பதி போய் வந்தமைக்கும் கூடக் கூத்து நடத்தும் வழக்கம் இருந்தது. தற்பொழுது இவ்வழக்கம் குறைந்துவிட்டது. பொதுவான நிகழ்வாக இதே கூத்துகள் அரிதாக நடத்தப்படுகின்றன.

வேண்டுதலுக்காகச் சில கூத்துகள் நடத்தப்படுகின்றன. மழை வேண்டி விராட பருவம், தபசு நாடகம் முதலான கூத்துகளை நடத்துகிறார்கள். இறந்தவர் கடனாக வீஷ்மர் சுவர்க்கம், கர்ண மோட்சம், சபரி மோட்சம், துளசி மகத்துவம், வாலி மோட்சம், இராஜசூய யாகம், இராமர் வைகுந்தம் முதலான கூத்துகளை நடத்துகிறார்கள்.

கோயில்களில் கூத்து

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

தெருக்கூத்தின் இன்றைய நிலை

ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பட்ட கூத்து இன்று பெரும்பாலும் வட மாவட்டங்களில் மட்டும் நடத்தப்படுகிறது. மற்ற இடங்களில் நசிந்துவிட்டது. இன்று கூத்து பெரும்பான்மையாகக் கோயில் சடங்காகவும் சிறுபான்மையாகப் பொது நிகழ்வாகவும் நடத்தப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் முதலான மாவட்டங்களில் கோடை காலத்தில் திரௌபதி அம்மன் கோயில்களில் கூத்து நடத்தப்படுகிறது. பாரதக் கதையைக் கேட்கிற பழக்கமும் அதே கதையைக் கூத்தாக நடத்திப் பார்க்கிற பழக்கமும் இருக்கின்றன. எந்தக் கதைப்பகுதி படிக்கவும் நடிக்கவும் படுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அம்மனுக்கு அலங்காரம் செய்வார்கள். திரௌபதி திருமண நிகழ்ச்சி கதை உரையாகச் சொல்லப்பட்டால் மாலையில் அம்மன் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்படும். இரவில் பாஞ்சாலி மாலையீடு கூத்து நடத்தப்படும்.

2.1.2 கூத்தின் பொது முறை கூத்து கோயில் சடங்காக இருந்தாலும் பொதுவான நிகழ்வாக இருந்தாலும் சில முறைகளின்படி அது நடத்தப்படுகிறது.

தொடக்கம்

கூத்து தொடங்கும் முன் ஒப்பனை அறையில் கூத்து ஆசிரியர் தீபம் ஏற்றி இறைவணக்கம் சொல்வார். கூத்தர்கள், கூத்து நன்கு நடக்க வேண்டிக் கொள்வார்கள். கூத்து ஆசிரியரிடமும் மூத்த கூத்தர்களிடமும் மற்ற கூத்தர்கள் ஆசி பெறுவார்கள். தீப ஆராதனைத் தட்டு இசைக் கலைஞர்களுக்கும் பின்பாட்டுக்காரர்களுக்கும் காட்டப்படும். இதன் மூலம் ஆசிரியர் கூத்தைத் தொடங்க அனுமதி அளிப்பார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குத் தாளம் அல்லது மிருதங்கம் தட்டப்படுகிறது. இது பார்வையாளர்களுக்குக் கூத்தின் தொடக்கத்தை அறிவிப்பதாக இருக்கிறது. பார்வையாளர்களை மனரீதியாகக் கூத்தை ரசிக்கத் தயார்படுத்துவதாகவும் இருக்கிறது. இதற்குக் களரி கட்டுதல் என்றும் மேளக் கட்டு என்றும் பெயர்கள் உண்டு.

கட்டியங்காரன் வருகை

கூத்து அரங்கில் முன்திரை அமைப்பது பெரும்பாலும் இல்லை. இருவர் துணியைத் திரையாகப் பிடித்துக் கொள்வர். முதலில் அரங்கில் நுழைகிற பாத்திரம் கட்டியங்காரன். அவன் ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு அவைக்கு வணக்கம் சொல்வான். தங்கள் நாடகக்குழு பற்றியும் ஊர்ப் பெயர், ஆசிரியர் பெயர், நடக்க இருக்கும் கூத்தின் பெயர் முதலானவற்றையும் உரக்கக் கூறுவான். இதை ஆடுகளத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் சென்று கூறுவான். பின்னர் அவையடக்கம் கூறுவான். தங்கள் கூத்தில் சொற்குற்றம், இசைக்குற்றம், பொருள் குற்றம் இருப்பின் பிள்ளைகளைப் போலப் பாவித்துப் பொறுத்து நாடகத்தினைக் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்வான்.

முன்பிருந்த வழக்கம்

முன்பெல்லாம் கட்டியங்காரனை அழைத்து, கௌரவம் செய்து ஒரு கூத்தை நடத்தித் தர வேண்டும் என்று வேண்டுவார்கள். அவன், ‘என்ன கூத்து வேண்டும்’ எனக் கேட்பான். ‘இன்னது’ என்று சொல்லப் பின்னர்க் கூத்து நிகழும். இந்த மரபு இப்பொழுது இல்லை.

இதே போல முன்பிருந்த இன்னொரு வழக்கம் விநாயகர் வணக்கம். விநாயகர் வேடமிட்ட ஒருவர் அரங்கில் வந்து அமர்ந்து கொள்வார். எல்லாரும் துதிபாடுவார்கள். கட்டியங்காரன் விநாயகரைக் கேலி செய்வான். அவர் சாபமிடுவார். பின் சரஸ்வதி வேடமிட்டவர் வருவார். அதன் பின் கூத்து நடக்கும். விநாயகர் உருவத்தை வைத்து வணங்குவது இப்பொழுது பெரும்பான்மை வழக்கமாக உள்ளது.

கூத்து முடிவு

கட்டியங்காரன் இரவு பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை நகைச்சுவை, கதைகள், கூத்தர்களின் பெருமை, பாடல்கள், ஆடல்கள் என்று பொழுதை ஓட்டுவான். தலைவேடதாரி (தலைமைப் பாத்திரம்) வரும்வரை கட்டியங்காரன் அவையை மகிழ்விப்பான். பின் கூத்து தொடங்கி அதிகாலை ஆறரை மணிவரை நிகழும். கதிரவனைக் கண்ட பிறகு கூத்தை முடிக்கும் வழக்கம் இருக்கிறது. இதையொட்டியே ‘கூலிக்காரன் மேற்கே பார்ப்பான், கூத்தாடி கிழக்கே பார்ப்பான்’ என்ற பழமொழி தோன்றியது எனலாம். கூத்து முடிந்தவுடன் கூத்து நடத்தப் பண உதவி செய்த உபயதாரரின் பெயரைக் கூறி வாழ்த்துவார்கள். நிகழ்வுகள் முடிந்த பின் ‘கண்டார்க்கும் கேட்டார்க்கும்’ வாழ்த்துக் கூறி மங்களம் பாடுவார்கள்.

2.1.3 பிற இடங்களில் கூத்துகள் பாரதக் கதைகள் மட்டுமன்றி இராமாயணக் கதைகள், பெரியபுராணக் கதைகள் ஆகியவையும் கூத்துகளாக நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கூத்து கோயில் சடங்காக இருக்கிறது. காரைக்குடியில் மார்க்கண்டேயர் கோயிலில் இராமாயணக் கூத்து நடைபெறுகிறது. குமரி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டம், சேலம் மாவட்டம், தஞ்சை மாவட்டம் முதலான இடங்களில் அம்மன் கோயில்களில் கூத்துகள் நடத்தப்படுகின்றன.

2.2 கோயிலில் கூத்து நிகழ்த்தும் முறை

கோயில் சடங்காகக் கூத்து நடத்தப்படுவதால்தான் இக்கலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கிராம மக்களது தெய்வ நம்பிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் அவர்களை ஒன்றுபடுத்துகிற பொது நிகழ்வாகவும் கூத்து நிகழ்த்தப்படுகிறது. மக்களுக்கு நன்கு தெரிந்த பாரதக் கதையின் பல நிகழ்வுகளைக் கதையாக வாசிக்கக் கேட்டும் கூத்தாகப் பார்த்தும் கோயில் சடங்கை நிறைவு செய்கிறார்கள். கோயில் சடங்காகக் கூத்து நிகழ்த்தும் முறை பற்றிக் காண்போம்.

அறிவிப்பு

அம்மன் கோயில்களில் பங்குனி மாதம் தொடங்கி ஆடி மாதம் வரையிலும் தெருக்கூத்து நிகழ்கிறது. முன்பு கூத்து நிகழ்த்தப்படும் நாளன்று கிராம வெட்டியான் ‘இன்ன இடத்தில் கூத்து நடக்கப் போகிறதெனத்’ தமுக்கடித்து அறிவிக்கும் வழக்கம் இருந்தது. இன்று சில இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புச் செய்கிறார்கள். பெரும்பாலும் இன்று அழைப்பிதழ் மூலம் நிகழ்ச்சிகளை அறிவிக்கிறார்கள். (அழைப்பிதழின் படியைப் பின்னிணைப்பில் காண்க). கூத்து நடக்கும் நாளும் நேரமும் இடமும் கூத்தின் பெயரும் அதில் அறிவிக்கப்படுகின்றன. கோயில் நிர்வாகிகளோ கூத்தர்களோ துண்டறிக்கைகளை வெளியிடுவதுண்டு. இதை ‘அக்கினி வசந்தோற்சவ பத்திரிகை’ என்கிறார்கள்.

2.2.1 கூத்து அரங்கம் கோயில் அருகே உள்ள பெரிய வெளியிலோ, அகன்ற நாற்சந்தியிலோ, கூத்தாடுதல் வழக்கமாக உள்ளது. வயல் பகுதியில் கோயில் இருந்தால் அங்கு நிலத்தைச் சீரமைத்து அரங்கை உருவாக்குவார்கள். கூத்தாடும் அரங்கு கோயிலை நோக்கியதாக இருக்க வேண்டும். கூத்தாடுபவர்கள் கோயிலைப் பார்த்துக் கொண்டே ஆடும் வண்ணம் ஆடுகளம் அமைந்திருக்கும்.

கூத்துக் களத்திற்கு முன்பக்கம் இரண்டு கோல்களை நட்டு அவற்றின் மேற்பகுதியை ஒரு கோலால் இணைத்து, அதில் காந்த விளக்குகளைத் (பெட்ரோமாக்ஸ்) தொங்கவிடுவார்கள். சிலர் மின்விளக்குகளையோ குவிவிளக்குகளையோ (Focus Light) தொங்க விடுகிறார்கள். பழைய காலத்தில் தீவட்டிகளைப் பயன்படுத்தினார்கள். தீவட்டிகளை இருவர் பிடித்துக் கொண்டும் நின்றது உண்டு. களத்தின் பின் பக்கம் விசிப்பலகை போடப்பட்டு அதில் வாத்தியக்காரர்கள் இருப்பர். பின்பாட்டுக்காரர்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்வார்கள். கூத்துக் களத்தின் பின் பகுதியில் ஒப்பனை அறை அமைந்திருக்கும். கீற்றுத் தட்டிகளால் அதை அமைப்பார்கள். களத்தின் மூன்று பக்கங்களிலும் பார்வையாளர்கள் அமர்வார்கள்.

2.2.2 வழிபாடு கூத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வ வழிபாடு செய்வது நடைமுறையாக உள்ளது. கூத்து தொடங்குவதற்கு முன் தெய்வ வேடமிடும் கூத்தர்களுக்குக் கோயிலில் சிறப்புச் செய்வார்கள். கூத்துக் களத்திற்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது அம்மன் உலா வரும்போது வாசிக்கப்படும் மேளதாளம் வாசிக்கப்படும்.

வில்லுக்கு வழிபாடு

அர்ச்சுனன் வில் வளைக்கும் நிகழ்ச்சி நடக்கும் முன் வில்லை அம்மன் கோயிலிலிருந்து மங்கல இசை ஒலிக்க எடுத்து வருவார்கள். பின்னர்க் கூத்துக் களத்தில் நடுவார்கள். அதற்கு முன் வில்லிற்கும் சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றைப் பூசுவார்கள்; மாலை சூட்டுவார்கள்.

வில்லுப் பாட்டு வில்லுப் பாட்டு கலைஞர்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

பனைமரத்துக்கு வழிபாடு

அர்ச்சுனன் தபசு நடத்தும் பொழுது அவன் ஏறித் தவம் செய்ய வேண்டிய பனைமரத்திற்கு நல்ல நேரத்தில் காவி, வெள்ளை பூசுவார்கள், பூசை செய்து அதை நிறுத்துவார்கள். அர்ச்சுனன் வேடமிட்டவன் ஏறும் முன்பும் பூசை நடைபெறும். பனைமரத்தில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட படிகளில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலான நூல்களிலுள்ள தெய்வப் பாடல்களைப் பாடியபடி அர்ச்சுனன் ஏறுவான்.

மன்னிப்பு வேண்டி வழிபாடு

திரௌபதி துகிலுரிதல் கூத்து நடக்கையில் துகிலுரியும் காட்சிக்கு முன் கற்பூரம் ஏற்றி “பாஞ்சாலி அம்மனே! கோயிலுக்காகத் கூத்தாடுகின்ற இந்த நேரத்தில் வஸ்திராபகரணம் செய்வது கூத்துக்காக; அதற்காக எங்களை மன்னித்து அருள்வாய் தாயே !” என மன்னிப்புக் கேட்பார்கள்.

சீதையின் சேலைக்கு வழிபாடு

காரைக்குடி மார்க்கண்டேயர் கோயிலில் நடக்கும் இராமாயணக் கூத்திலும் வழிபாடு காணப்படுகிறது. சீதையாக வேடமிடும் கலைஞர், கட்ட வேண்டிய சேலையை ஒருவாரம் பூசையில் வைத்து அதன் பின் கட்டிக் கொள்கிறார்.

தொடக்கத்திலும் இறுதியிலும் வழிபாடு

ஒப்பனை செய்யும் முன்னரும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தீபாராதனை காட்டிய பின்பே கூத்தைத் தொடங்குவார்கள். கூத்து முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்திய பிறகே வேடத்தைக் கலைப்பார்கள்.

2.2.3 சடங்காக நிகழும் கூத்துகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெறும் பாரதக் கூத்துகள் பல. சேயூர், இருங்கல், எருக்கம்பூர் முதலான கிராமங்களில் பாரத விழா என்ற பெயரிலேயே கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன. இருங்கல் கிராமத்தில் அரக்கு மாளிகை அழிவு, பகாசுரனை வீமன் வதைத்தல், மாடுபிடி சண்டை, துரியோதனன் வீமன் சண்டை முதலான நிகழ்ச்சிகள் கூத்தாகத் தொடர்ந்து நடைபெறுகின்றன. எருக்கம்பூரில் பகாசுர வதம், சுபத்திரை கல்யாணம், திரௌபதி வஸ்திராபகரணம், களபலி, கீசக வதம், அருச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அபிமன்யு கதை, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் முதலான நிகழ்வுகள் கூத்தாக நடத்தப்படுகின்றன. இவ்வாறு பல கூத்துகள் நடத்தப்படுகின்றன. சிலவற்றை மட்டும் காண்போம்.

அர்ச்சுனன் தபசு

கோயில் சடங்கில் பெரும்பாலும் இக்கூத்து எல்லா ஊர்களிலும் நடத்தப்படுகிறது. அப்பொழுது கோயிலைச் சார்ந்த கிராமமே கூத்துக்களமாக மாறிவிடுகிறது. மக்கள் தங்களைப் பாண்டவ நாட்டு மக்களாகப் பாவித்துக் கொள்கிறார்கள். ஊர் மாடுகளை மந்தை வெளியில் மறித்து ஆநிரை கவர்தல் என்னும் நிகழ்ச்சியை நடத்திக் கூத்தைத் தொடங்குவார்கள். மண்ணால் உருவாக்கப்பட்ட அரவான் பொம்மையைக் களபலி இடுவார்கள். முழு மூங்கிலை வளைத்து நாண் ஏற்றிக் கூத்துக் களத்தில் வில்லாக வளைப்பார்கள். எண்பது அடி உயரமுள்ள பனைமரத்தை ஊன்றி அதன் உச்சியில் அர்ச்சுனன் தவம் செய்வதான காட்சி கூத்தாக நிகழ்த்தப்பெறும். அவன் முன்னே பார்வதியும் பரமசிவனும் தோன்றுவார்கள். அர்ச்சுனனுடன் அவர்கள் விவாதம் செய்வார்கள். பார்வையாளர்கள் இந்த விவாதத்தை ரசிப்பார்கள்.

பிள்ளைப் பேறு இல்லாத கிராமப் பெண்கள் அந்தப் பனை மரத்தின் அடியில் மஞ்சள் ஆடை உடுத்து உண்ணா நோன்பிருப்பார்கள். மகப்பேறு அடைந்த பெண்கள் பனைமரத்தில் அறையப்பட்டிருக்கும் முளையில் தூளியிட்டுக் குழந்தையைத் தாலாட்டுவார்கள். வேண்டுதல் உள்ளவர்கள் புது வேட்டி, துண்டுகளை முளையில் சார்த்துவார்கள்.

பகாசுரன் வதை

பீமன் வேடமிட்டவன் பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்லும் காட்சி ஊர்த் தெருக்களில் நடத்தப்படும். பிற்பகலில் நல்ல நேரம் பார்த்து இதை நிகழ்த்துவார்கள். பீமன் அந்தணனாக வேடமிட்டு உணவு கொண்டு செல்வதாகக் கதை இருப்பதால், பீமன் வேடதாரி அந்தணனாக வேடமிட்டுக் கொள்வான். கட்டை வண்டியில் கிராமத் தெருக்களில் ஊர்வலம் வருவான். ஊர்மக்கள் கொழுக்கட்டை, வடை, பணியாரம் முதலான உணவுப் பண்டங்களை வண்டியில் உள்ள பாத்திரத்தில் இடுவார்கள். பீமன் வேடதாரி கூத்துக் களத்திற்கு வண்டியைச் செலுத்துவான். வண்டியின் பின்னால் பகாசுரன் வேடதாரி ஆடிக்கொண்டு செல்வான். ஊர் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களைப் பிரித்துக் கொடுப்பார்கள். அன்று இரவு பகாசுரன் வதை கூத்தாக நடிக்கப்படும்.

துரியோதனன் வதை

கிராமத்தில் துரியோதனன் உருவத்தைச் செய்து கிடத்தி வைத்திருப்பார்கள். அவ்வுருவத்தின் தொடைப் பகுதியில் ஒரு குடத்தில் குங்குமம், எண்ணெய் கலந்த கலவையை நிரப்பிப் புதைத்து வைத்திருப்பார்கள். பீமன் வேடதாரியும் துரியோதன் வேடதாரியும் சண்டையிடுவார்கள். சண்டையின் உச்சத்தில் பீமன் வேடமிட்டவன், கிடத்தப்பட்டிருக்கும் துரியோதனன் உருவத்தின் தொடைப் பகுதியில் தண்டத்தால் அடித்து உடைப்பான். குடத்தில் இருக்கும் செந்நிற நீர் பெருக்கெடுத்து ஓடும். துரியோதனுடைய அரண்மனைச் சேடியாக வேடமிட்ட கூத்தன் அந்த உருவைச் சுற்றி வந்து ஒப்பாரி வைப்பான். ஊர் மக்களும் அந்த ஒப்பாரியில் கலந்து கொள்வார்கள். அந்த ஒப்பாரியின் போது ஓராண்டில் அந்தக் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்கள். விமரிசனம் செய்கிறார்கள். பாஞ்சாலி துரியோதனன் உருவத்தின் தொடைப் பகுதியிலிருந்து வெளியான செந்நீரை எடுத்துக் கூந்தலில் தடவி முடிவாள்.

இதைப் படுகளம் என்றும் அழைக்கிறார்கள். திரௌபதி சபதம் நிறைவேறும் போர்க்களம் சிறப்பு மிக்கது என்பதால் படுகளம் என்கிறார்கள். திரௌபதி வேடதாரி செந்நீரைத் தடவுவதுபோல் அம்மனுக்கும் கூந்தலில் அச்செந்நீரைத் தடவி முடிப்பர்.

ஈழத்தில் கோயில் வழிபாட்டுக் கூத்துகள்

ஈழ நாட்டில் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இராமாயண, பாரதக் கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன. மட்டக்களப்பில் திரௌபதி அம்மன் கோயிலில் தமிழக வட மாவட்டங்களில் உள்ளதுபோல் பாரதக் கதைகள் நடத்தப்படுவதுடன் வேறு வகையான கூத்துகளும் நிகழ்த்தப்படுகின்றன. மகிஷக் கூத்து, கமலாவதிக் கூத்து, நல்லதங்காள் கூத்து, கோவலன் நாடகம், கண்டி நாடகம் முதலான பல கூத்துகள் நடத்தப்படுகின்றன.

மட்டக்களப்புப் பகுதியில் திரௌபதி அம்மன் கோயிலில் பஞ்ச பாண்டவர் வனவாசம் செல்லுதல், அர்ச்சுனன் தவம் செய்யச் செல்லுதல், அரவானைக் களப்பலி கூட்டுதல் போன்ற நிகழ்வுகள் கூத்தாக நடத்தப்படுகின்றன. மக்கள் கூத்தர்களை உண்மையான பாண்டவர்களாகவும் திரௌபதியாகவும் நினைத்து வழிபடுவார்கள். அர்ச்சுனன் தவம் கூத்தில் மரத்தில் கூடுகட்டி ஏணி வைத்திருப்பார்கள். அர்ச்சுனன் தவத்திற்குப் புறப்படுவான். இடையில் தடைகள் வரும். தடைகளை மீறி ஏணியில் ஏறி மரத்தில் தவநிலையில் இருப்பான். மக்கள் அவனை வழிபடுவர். அரவான் கூத்தில் அரவானைப்போல் மண்ணுருவம் செய்து தலையைத் தருமர் பிடிக்கத் திரௌபதி அறுப்பாள். இவ்வாறு ஈழத்தில் கூத்து நடத்தப்படுகிறது.

2.3 தெருக்கூத்துக் கதைகள்

கூத்துப் பாடங்களைப் பெரும்பாலும் நூலாக அச்சிடுவதில்லை. ஒரு சில கூத்துகளே அச்சில் வந்திருக்கின்றன. இவை நாடகம், விலாசம், சபா, அலங்காரம், சரித்திரம், வாசகப்பா, சரித்திரப்பா என்ற பெயர்களில் வெளியாகியிருக்கின்றன. கூத்துக் கதைகளைத் தெய்வக் கதைகள், வரலாற்றுக் கதைகள், இனச்சார்புக் கதைகள், நவீனக் கதைகள் என்று பிரிக்கலாம். தெய்வக் கதைகளில் பாரதம், இராமாயணம் முதலான இதிகாசக் கதைகளே மிகுதி. திருவிளையாடற் புராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான புராணக் கதைகளும் கூத்தாக ஆடப்படுகின்றன.

கூத்துக் கதைகள் பெரும்பாலும் எதிர்மறைகளுக்கிடையில் நடக்கும் மோதல்களைச் சொல்வனவாக இருக்கின்றன. பாண்டவருக்கும் துரியோதனன் கூட்டத்தாருக்கும் நடக்கும் போர், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராகக் கருதப்படுகிறது. இராமன் இராவணன் மோதல், நல்லது கெட்டது ஆகியவற்றின் மோதலாகக் காட்டப்படுகிறது. தர்மம் வெல்லும், நல்லது நிலைக்கும் என்ற நீதிகளை இவை மக்களுக்குச் சொல்கின்றன.

2.3.1 பாரதக் கதைக் கூத்துகள் பாரதக் கதைகளில் பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதி துகிலுரிதல், அர்ச்சுனன் தபசு, பாஞ்சாலி சபதம், கர்ணமோட்சம், கிருஷ்ணன் தூது, பதினெட்டாம் போர் என்னும் கதைகள் அடிக்கடி கூத்தாக நிகழ்த்தப்படுகின்றன. ஜலக்கீரிடை, யாகசாலை, திரௌபதி திருக்கல்யாணம், அல்லி திருக்கல்யாணம், பவளக்கொடி திருக்கல்யாணம், ராஜசூய யாகம், துரியோதனன் வீரயாகம், சுந்தரி மாலையீடு, விராட பருவம், அரவான் களப்பலி, அணிவகுப்பு, பீஷ்மர் சுவேதனன் சண்டை, பகதத்தன் வதை, அபிமன்யூவதை, சயந்தவன் வதை, துரோணர் சண்டை, துச்சாதனன் சண்டை, துரியோதனன் வீர சுவர்க்கம் என்னும் பிற கூத்துகளும் நடத்தப்படுகின்றன. பாரதக் கதைக் கூத்துகள் பெரும்பாலும் கோயில் வழிபாட்டுக் கூத்துகளாக நடைபெறுகின்றன அரிதாகப் பொது நிகழ்வாகவும் நடத்தப்படுகின்றன.

கூத்துகளில் பாரதக் கூத்துகளே செல்வாக்கு மிக்கவையாக இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமன்றிப் பிற மாநிலக் கலை வடிவங்களிலும் இக்கதைகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. கர்நாடகத்தின் யட்ச கானத்தில் திரௌபதி சுயம்வரம், அபிமன்யு கலகம், கர்ணார்ஜுன கலகம், பீஷ்ம விஜயம், சுபத்திரை கல்யாணம், கீசக வதம், விராட பர்வம் போன்ற கதைகள் பயன்படுத்தப் படுகின்றன.

பாரதக் கதைக் கூத்துகள்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

2.3.2 இராமாயணக் கதையும் புராணக் கதையும் பாரதக் கதையைப் போல, இராமாயணக் கதையும் புராணக் கதைகளும் இடம் பெற்றுள்ளன.

இராமாயணக் கதைக் கூத்துகள்

இராமாயணக் கதைகளில் இராமர் பட்டாபிஷேகம், மூலபல சண்டை, பக்த ஹனுமான், சீதா கல்யாணம், இந்திரஜித், இரணியன் வரலாறு, இராவண வதம், மந்தரை-கைகேயி சூழ்ச்சி, இராமன்-குகன் சந்திப்பு, பரதன் பாதுகா பட்டாபிஷேகம், சூர்ப்பணகை மானபங்கம், பொன்மான். வாலி வதை, சபரி மோட்சம், இராமர் வைகுந்தம் எனப் பல கூத்துகள் நடத்தப்படுகின்றன. திரௌபதி அம்மன் கோயிலில் இக்கூத்துகள் நடத்தப்படுவதில்லை. பொது நிகழ்வாகவும் வேண்டுதல் கூத்துகளாகவும் இவை நடத்தப்படுகின்றன.

புராணக் கதைக் கூத்துகள்

புராணக் கதைகளில் சக்தி விநாயகர், வீர விநாயகர் யுத்தம், கந்தன் – கார்க்கோடகன் யுத்தம், தாரகாசுரன் சம்காரம், திரிபுர தகனம், காமதகனம், மும்மூர்த்திகள் கர்வ பங்கம், அனுசூயை, உத்தண்டாசுரன் சம்காரம் என்னும் முத்துமாரி மகத்துவம், நளாயனி சரித்திரம், ரேணுகா சம்காரம், தக்க யாகம், வல்லாள கண்டன் – வீரபத்திரன் சண்டை, கங்கா தேவி கர்வ பங்கம் என்னும் பராசக்தி – பண்டாசுரன் சண்டை, வள்ளி திருமணம் ஆகியவை கூத்தாக ஆடப்படுகின்றன.

பிறவகைக் கதைக் கூத்துகள்

கட்டபொம்மன், தேசிங்கு ராஜன் முதலானோர் கதைகள் வரலாற்றுக் கூத்துகளாக நடிக்கப்பட்டன. அரிச்சந்திரன் கதை, வன்னியர் வீர முழக்கம், சனிவார விரத நாடகம் முதலானவை சாதி சமயம் சார்ந்து நடைபெறும் கூத்துகள். இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை, நல்லதங்காள் கதை முதலான ஓரளவு பிற்காலக் கதைகளும் கூத்தாக நடிக்கப்படுகின்றன.

2.4 தெருக்கூத்தின் சிறப்புக் கூறுகள்

மேடை அமைப்பு, ஒளி அமைப்பு, இசை, நடிகர்களின் ஒப்பனை, பாட்டு, ஆடல், வசனம் பேசுதல், நடிப்பு என்னும் தெருக்கூத்தின் சிறப்புக் கூறுகள் பற்றிக் காண்போம்.

2.4.1 ஒப்பனை தெருக்கூத்து ஒப்பனையை ‘வேஷமிட்டுக் கொள்வது’, ‘வேஷம் கட்டிக் கொள்வது’, ‘வேஷம் போட்டுக் கொள்வது’ என்று குறிப்பிடுவார்கள். தெருக்கூத்தைக் ‘கட்டை கட்டிக் கொண்டு ஆடுவது’ என்றும் சொல்வதுண்டு. முகப்பூச்சு தவிர, வேடத்திற்கு வேண்டிய எல்லா அலங்காரங்களையும் (அணிந்து கொள்பவை) கயிற்றால் கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கட்டையால் (மரத்தால்) ஆனவை. தலைக்கீரிடம், புஜகீர்த்திகள், பெரிய காதுகள், மார்பு அணிகள், விரிந்த பெரிய பாவாடை, சலங்கை எனப் பலவற்றைக் கட்டிக் கொள்கிறார்கள். இதனால்தான் ‘வேஷம் கட்டுதல்’ என்ற சொல்லாட்சி வந்திருக்க வேண்டும்.

ஒப்பனைப் பொருள்கள்

புடவைகள், புஜக்கட்டைகள், மார்பு ஆரம், கழுத்து மணி, இடுப்புக் கச்சை, நெற்றிச் சரடு, காதுக் கட்டை, கீரிடம், அரையாடை, மேல் சட்டை, வாக்கு மாலை என்ற நீண்ட அங்க வஸ்திரம் போன்ற துணி மாலை, வாகு வலயம் என்னும் கயிறு போலச் சுருட்டப்பட்ட துணி மாலை, கணுக்காலில் கட்டப்படும் துணிப்பட்டை, கால் சலங்கை முதலான அணிமணிகளைப் பயன்படுத்துகிறார்கள். மரக்கத்தி, வில், கதாயுதம், நாகாஸ்திரம் முதலான ஆயுதங்களையும் புனைகிறார்கள். ஆண் வேடதாரிகளுக்கே ஒப்பனைப் பொருள்கள் அதிகம். பெண் வேடதாரிகள் சாதாரணப் புடவை, கொண்டைப் பந்து முதலானவற்றையே பயன்படுத்துகின்றனர். கட்டியங்காரன் கால்சட்டை, பூப்போட்ட சட்டை, தொப்பி முதலானவற்றை அணிகிறான்.

ஒப்பனை செய்தல்

ஒப்பனை செய்வதற்குச் சில மணி நேரங்கள் ஆகிவிடும். பாத்திரங்கள் தங்கள் ஒப்பனையை அவரவர்களே செய்து கொள்கிறார்கள். வேடம் போட்டுக் கொள்ளும் முன் ஒப்பனை அறையில் ஒப்பனைப் பொருள்களை எடுத்துப் பரப்பி வைத்துக் கொள்வார்கள். அங்கு விளக்கேற்றித் தீபம் காட்டிச் சிவ பூசை செய்த பின் தாளத்தைத் தட்டி வேடம் தரிக்கத் தொடங்குவார்கள்.

முக ஒப்பனை

முகப் பூச்சுக்குச் செந்தூரம், அரிதாரம், கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரணமாகப் பச்சை வண்ணத்தில் பெரும்பாலான பாத்திரங்கள் முக ஒப்பனை செய்கிறார்கள். முகத்திற்கு மஞ்சள் வண்ணம் பூசுவதும் உண்டு. சபேதா என்னும் வெள்ளைப் பொடி, அரிதாரம் என்னும் மஞ்சள் பொடி, இங்குலிகம் என்னும் செந்நிறப் பொடி, நீலம் என்னும் ஊதா வண்ணப் பொடி, கறுப்பு வண்ணமை, நாமக் கட்டி முதலானவற்றைப் பாத்திரத்தின் இயல்புக் கேற்பப் பயன்படுத்துகிறார்கள். வண்ணக் கலவையைத் தண்ணீர் அல்லது எண்ணெயில் கலந்து பூசுகிறார்கள். வேர்வையில் அழியாமல் இருக்கவும் நன்கு பற்றிக் கொள்ளவும் தேத்தா விதையை உரைத்துக் கலந்து கொள்வார்கள். இவ்வாறு வர்ணம் தீட்டுதல் மூலம் தொலைவிலுள்ள பார்வையாளர்களுக்கும் முகத்தைக் காட்சியாக்குகிறார்கள். மனித முகத்தின் தற்காலத் தன்மையை நீக்கிப் புராணத்தன்மை தருகிறார்கள்.

அரசன், அரசி, பிராமணன், மந்திரி முதலான உயர்நிலைப் பாத்திரங்களுக்கு வெள்ளை வண்ணம் பூசுகிறார்கள். கிருஷ்ணன், காளி, எமன், ராமன் முதலான தெய்வப் பாத்திரங்களுக்கு நீல நிற ஒப்பனை செய்கிறார்கள். வேடன், வேட்டுவிச்சி முதலான பாத்திரங்களுக்குக் கறுப்பு நிற ஒப்பனை செய்கிறார்கள். இவ்வாறு பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப வண்ணம் பூசுகிறார்கள்.

கண்களைச் சுற்றிப் புள்ளிகள் இடுகிறார்கள். வெள்ளைக் கோடுகள் இடுகிறார்கள். மீசை எழுதிக் கொள்கிறார்கள். நாரால் ஆன பொய் மீசையையும் வைத்துக் கொள்கிறார்கள். ‘ஒருநாள் கூத்திற்கு மீசையைச் சிரைத்தல்’, ‘ஒருநாள் கூத்திற்கு மீசையை வைத்தல்’ என்ற பழமொழிகள் கூத்து ஒப்பனையின் அடிப்படையில் தோன்றியவை. கிரீடம், மகுடம், முன்தலை அணியான கலிகை, நெற்றியில் கட்டப்படும் பட்டம், நெற்றியில் அணியப்படும் முத்துச் சரம் ஆகியவற்றையும் முக ஒப்பனைக்குப் பயன்படுத்துகிறார்கள். தலைமுடியை நீளமாகக் காட்டத் தென்னை ஓலையால் ஆன பூமுடியை அணிகிறார்கள்.

முக ஒப்பனை

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

பிற ஒப்பனைகள்

தோள்களில் புஜ கீர்த்திகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இவை மரக்கட்டை அல்லது அட்டையால் உருவாக்கப்பட்டவை. இவற்றில் வண்ணத்தாள் ஒட்டிக் கண்ணாடித் துண்டுகளை ஒட்டியிருப்பார்கள். இதை அணிவதால் பாத்திரத் தோற்றம் தொலைவிலிருக்கும் பார்வையாளர்களுக்கும் எடுப்பாகப் புலப்படும்.

முழுப் புடவையையும் கொசுவி உடம்பில் சுற்றிக் கொள்கிறார்கள். இதனால் கம்பீரமான உடல் தோற்றம் உண்டாகிறது. இளைப்புச் சட்டை என்னும் சரிகை வேலைப்பாடுள்ள சட்டையை அணிகிறார்கள். கழுத்தைச் சுற்றி அணியும் ஏகாவடம் என்னும் ஆடையையும் அணிகிறார்கள். இறுக்கமான கால்சட்டை அணிந்து கீழ்ப்பகுதியில் துணிப் பட்டையால் கட்டிக் கொள்கிறார்கள். பதக்கம், ஒட்டியாணம், குண்டலம், கடுக்கன், தோடு, கடகம், மோதிரம் முதலான அணிகலன்களையும் தேவைக்கேற்ப அணிகிறார்கள்.

பாவாடை அணிதல்

இடுப்பில் முழங்கால் வரை பாவாடை என்ற அமைப்பை அணிந்து கொள்கிறார்கள். இது போர் அடிக்கப்படாத வைக்கோலால் செய்யப்பட்டது. இடுப்பில் அணிகையில் சுற்றிலும் குடைபோல விரிந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதன் மீது துணியைப் போர்த்துவதால் பாவாடை போன்று காட்சியளிக்கும். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆட்ட முறைகள் வேறுபட்டிருப்பதால் அதைக் காட்டும் வகையில் முழங்கால் வரை மட்டும் பாவாடை அமைந்திருக்கிறது.

2.4.2 ஒளியும் இசையும் தெருக்கூத்துகளில் ஒளி அமைப்பும், இசையும் மிகவும் இன்றியமையாதவை.

ஒளி அமைப்பு

தெருக்கூத்தில் மேடை நாடகங்களைப் போல வண்ண விளக்குகள், சுழல் விளக்குகள் முதலானவற்றைப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் காந்த விளக்குகளே பயன்படுகின்றன. மின் விளக்குகள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகையில் குறைவான ஒளியமைப்பின் மூலம், ஒப்பனையுடன் வரும் பாத்திரங்களுக்கு மீமனிதத் தோற்றம் (மனித இனத்தைவிட பெரிய கடவுளர் போன்ற தோற்றம்) கிடைக்கிறது. இந்த ஒளியமைப்பிற்கு ஏற்ற வகையிலேயே ஒப்பனை முறைகளும் அமைந்திருக்கின்றன.

இசை

கூத்தில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது இல்லை. கூத்தர்கள் அனைவருமே உரக்கப் பேசவும் பாடவும் ஆற்றல் படைத்தவர்கள். அரங்கத்தின் ஒரு பகுதியில் விசிப்பலகையில் இசைக்குழுவினர் மறைவின்றி இருக்கிறார்கள். அவர்களது இருப்பு கூத்தில் இடைஞ்சலாக இருப்பதில்லை. முகவீணை, மிருதங்கம், சுருதிப் பெட்டி, தாளம் எனப்படும் ஜால்ரா முதலான கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். நரம்புக் கருவிகளைப் பயன்படுத்துவதில்லை. சிலர் முகவீணைக்குப் பதிலாக ஆர்மோனியத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாத்தியங்கள் குரலுக்கு அலங்கார வாத்தியங்களாக இல்லாமல், மனிதக் குரலை அது முடியும் இடத்திலிருந்து நீட்டும் வேலையைச் செய்கின்றன. உரையாடல்கள் நிகழும்போது இசை இருப்பதில்லை ; இசைஞர்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள்.

2.4.3 பாடல், ஆடல், உரையாடல் கூத்தில் பாடல்கள் மூலமாகவே கதை செல்கிறது. வசனம் என்பது பாடலின் கருத்தாக இருக்கிறது. கூத்துப் பாடல்களுக்குத் தரு என்று பெயர். பாத்திரங்கள் களத்திற்கு வரும்போது தங்களைப் பற்றிப் பாடிக்கொண்டே வருவார்கள். அதற்குப் பிரவேச தரு என்று பெயர். விவாதப்பாடலுக்குச் சம்வாத தரு என்று பெயர். இவ்வாறு வர்ணனைத் தரு, கும்மித் தரு, கோலாட்டத் தரு எனத் தருக்கள் இருக்கின்றன.

அறிமுகம்

கூத்துப் பாத்திரங்கள் முதன்முதலில் வருகிறபோது தங்களின் சிறப்புகளையும் பண்புகளையும் பாடல்களாகப் பாடுகின்றனர். இது சுயப் புகழ்ச்சியாக இருப்பினும் பார்வையாளர்கள் அவ்வாறு கருதுவதில்லை. அந்தப் பாடல்களைக் கேட்டுப் பாத்திரப் பண்புகளை மதிக்கிறார்கள். இப்புகழ்ச்சிகள் பாத்திரப் பண்பிற்கு மெருகூட்டுகின்றன. சீதா கல்யாணம் என்னும் தாடகை சம்மார நாடகம் என்னும் கூத்தில் தசரதன் வரும்போது தன்னைத்தானே

அரசர் வந்து பணிய

உச்சித வீரன்

மெச்சிய வீரன்

குண்டு கடகமாட

தனுவு மாயு மேந்தி

பருதிகுலேசன்

சர்வ விலோசன்

எனச் சுயப்புகழ்ச்சி செய்து கொள்வான். இது தவறாகத் தெரிவதில்லை. அது மட்டுமின்றிக் கூத்துப் பாத்திரங்கள் ‘வந்தேனே’ என்று சொல்லாமல் படர்க்கையில் ‘வந்தானே’ என்பார்கள். தசரதன் வரும்போது தன்னையே ‘தரணிபுகழ் அயோத்தி தசரதராஜன் வாரான்’ என்பான். இது கூத்தனையும் பாத்திரத்தையும் வேறுபடுத்துகிறது. மற்றொரு பாத்திரமும் இப்பாத்திரத்தைப் புகழ்வது உண்டு. அப்போதும் முகத்தில் சிறு அசைவுகளைக் காட்டி அந்தப் புகழ்ச்சியை ஏற்றுக் கொள்வான்.

பாடல்கள் காட்சிக்கு வலுவேற்றல்

பாடல்கள் காட்சிக்கு வலுவேற்றும் வகையில் அமைகின்றன. திரௌபதி துகிலுரியப்படும் கட்டத்தில் துச்சாதனன் பாடுகிற பாடலை எடுத்துக் காட்டாகக் காணலாம். அரசியான திரௌபதி, வீரர்கள் பலர் முன்னிலையில் கணவன்மாருக்கு முன்னிலையில் துகிலுரியப்படுகிறாள். ‘இன்னமும் ஒரு சுற்று அகன்றால் அவள் பிறந்த மேனியாக இருப்பாள்’ என்று பாடல் அமைகிறது. அதைக் கேட்கும் பொழுது அதன் மெட்டினாலும் தொனியினாலும் பெண் நிர்வாணமாகப் போகிற அதிர்ச்சி உண்டாக்கப்படுகிறது.

பின்பாட்டு

பாத்திரம் பாடலின் ஓர் அடியைப் பாடித் தன்னைத் தானே சுற்றியபடி சுழன்று சுழன்று ஆடுகையில், பின்பாட்டுக்காரர்கள் அந்த அடியைப் பாடுவர். ஒப்பனை அறையில் இருக்கும் கூத்தர்களும் பின்பாட்டுப் பாடுவர். கூத்தவையில் இருக்கும் மற்றொரு பாத்திரமும் பின்பாட்டுப் பாடுவது உண்டு. ஒற்றைக் குரலாக இருப்பதைப் பெருக்கிப் பார்வையாளர்களுக்கு எட்டச் செய்வதே பின்பாட்டின் நோக்கம் ஆகும்.

பாடல் ராகங்கள்

கூத்துப் பாடல்கள் நிறைய ராக வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. ஒரே பாடல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பாணிகளில் பாடப்படுகின்றது. நாட்டை, நீலாம்பரி, முகாரி, பூபாளம் முதலான ராகங்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆடல்

பாத்திரங்கள் அறிமுகப் பாடலுடன் நடன நடையில் வந்து வலம் வருவர். பின் கால்களை நன்கு ஊன்றிக் கொண்டு நிற்பர். உடல் அசைவால் வலிமையைக் காட்டுவர்; அதிர்ச்சியூட்டுவர். இது பாத்திரங்களின் கம்பீரத்தைக் கூட்டுகிறது.

ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வெவ்வேறு நடை அமைப்பு இருக்கும். நிற்கும்போதும் தாளத்திற்கேற்பப் பாதங்களைத் தரையில் வெவ்வேறு விதமாகத் தட்டுவர். பாத்திரங்களின் உணர்ச்சி வேறுபாட்டைக் காட்டவும் நடை வேறுபாடு உதவுகிறது. இதற்காகத்தான் கூத்துப் பாத்திரங்களின் கால் பகுதிகள் மூடப்படாமல் காட்டப்படுகின்றன. கூத்தில் ஒருவர் ஆட இன்னொரு பாத்திரம் சும்மா இருப்பதில்லை. அப்பாத்திரமும் இயல்புக்கேற்ப ஆடுகிறது.

கூத்து ஆடல் முறையில் வட்டச் சுற்றுகள் ஒரேமாதிரி இருப்பதில்லை. மனோபாவத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. பீமனின் நடை அதிரவைக்கும் குதிப்பும், துள்ளல்களும் கொண்டதாக இருக்கும். வருகைக்கான ஆட்டம், தர்க்கத்துக்கான ஆட்டம், முடிவினைச் சுட்டும் ஆட்டம் என ஆட்ட வேறுபாடுகள் உள்ளன.

செயல்களைக் காட்டவும் ஆட்ட அசைவுகள் பயன்படுகின்றன. ஒரு வட்டமடித்து அஸ்தினாபுரத்திலிருந்து இந்திரப் பிரஸ்தம் சென்றதாக உணர்த்துவர். கர்ண மோட்சம் கூத்தில் வரும் ஓர்அசைவு குறிப்பிடத் தக்கது. 17ஆம் நாள் போருக்குத் தயாராகும் துரியோதனன் சகுனியை அழைத்துவரச் சொல்கிறான். கட்டியங்காரன் குதிரையேறிச் சகுனியைக் காணச் செல்வதாகக் காட்சி. கட்டியங்காரன் தலையில் கட்டிய துண்டை எடுத்துக் கால்களின் இடையே நீளவாக்கில் வைத்துக் கொள்வான். முன் பகுதியிலும் பின் பகுதியிலும் துண்டில் இடம்விட்டுப் பிடித்துக் கொள்வான். துண்டின் தொங்கும் பகுதிகள் குதிரை முகமாகவும் வாலாகவும் தோற்றமளிக்கும். இடுப்பிற்கு மேலே குதிரையில் அமர்ந்த ஆளாகவும் இடுப்புக்குக் கீழே குதிரையாகவும் ஒரு தோற்றப் புனைவை உருவாக்குவான். துண்டைக் குதிரை அசைவதுபோல அசைத்துக் கொண்டு, கால்நடையில் குதிரையின் இயக்கத்தைக் காட்டுவான். விரைவைக் காட்டுவதற்குச் சொற்களையும் விரைவாகப் பேசுவான். இதன் மூலம் உண்மையாகவே குதிரையில் பயணம் செய்யும் தோற்றத்தை அவன் உருவாக்குகிறான்.

இருப்பு

பாத்திரங்கள் கூத்துக் களத்தில் வந்து அமர்வதற்கும் ஒரு முறை இருக்கிறது. கால்களை விரித்து அமர்ந்து நிலைத்த மேல்உடம்பில் பாவனைகள் காட்டுகிறார்கள். கைகளை வைத்துக் கொள்ளும் முறை மாறுகிறது. குதிகால்கள் நிலத்தில் ஊன்றப்பட்டுக் கால்விரல்கள் மேலே தூக்கப்படுகின்றன. உணர்ச்சியில் கால்களில் அசைவுகள் காட்டுகிறார்கள். உடம்பில் குலுக்கல்கள் காட்டுகிறார்கள். இதுவும் பாத்திரத்தின் மன உணர்வைக் காட்டுகிறது.

வசனம்

கேரளத்தின் கதகளியில் வசனம் இல்லை. யட்சகானத்தில் பேச்சு உண்டு. தெருக்கூத்தில் பாடலும் பேச்சும் இருக்கின்றன. வசனம் ஒருகாட்சிக்கு விளக்கம் தரும் வகையில் அமைகிறது. பாத்திரங்கள் பாடிய பாட்டின் பொருள் வசனத்தில் சொல்லப்படும். கட்டியங்காரன் நிறையப் பேசுவான். பிற வசனங்கள் எளிமையாக இருக்கும். வட்டாரக் கொச்சை மொழியையும் பயன்படுத்துகிறார்கள். பாடல் போல வசனத்தை மனப்பாடமாக வைத்துக் கொள்வதில்லை. அவ்வப்போது தோன்றுகிறபடி வசனம் பேசுகிறார்கள். இது கூத்தர்களின் திறமையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

2.4.4 கட்டியங்காரனின் பங்கு கட்டியங்காரன் கூத்து முழுக்க வருகிறான். ஆனால் இவன் கூத்துக் கதைக்குத் தொடர்பற்றவன். சேவகன், தோழி, தேரோட்டி, மந்திரி என்று பாத்திரங்களையும் இவன் ஏற்று நடிக்கிறான். கூத்தின்போது பாத்திரங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்கிறான். பாத்திரங்களின் ஒப்பனையைச் சரிசெய்கிறான். பாத்திரங்கள் மறந்துவிடுகிற பாடல் வரிகளை மறைமுகமாக எடுத்துக் கொடுக்கிறான். அனைத்துப் பாடல்களையும் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருப்பான். பார்வையாளர்களின் சலசலப்பை அமைதிப்படுத்துகிறான். உறங்குபவர்களை எழுப்பப் பல உத்திகளைக் கையாள்கிறான். கூத்துப் பாத்திரங்கள் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசாமல் இவனைப் பார்த்தே பேசுகின்றனர்.

விமர்சனம்

சாதாரண ஒப்பனையில் வரும் இவன் கதையில் பல இடங்களில் குறுக்கிடுகிறான். எடுத்துக் காட்டாகத் துரியோதனன் பாத்திரத்தோடு அவன் பேசுவதைச் சுட்டலாம். துரியோதனன் களத்திற்கு வந்து தனக்குரிய விருத்தப் பாவைப் பாடிமுடிப்பான். கட்டியங்காரனிடம் துரியோதனன் “டேய் ! நான் யார் தெரிகிறதா?” என்பான். கட்டியங்காரன் “தெரியாதே !” என்பான். “என்ன? தெரியாதா !” என்று கேட்டுவிட்டுத் துரியோதனன் கட்டியங்காரனைச் சாட்டையால் அடிப்பான். அப்பொழுது கட்டியங்காரன் குறுக்கிட்டு அவன் அதிகாரத்தை மட்டம் தட்டுவான்.

துரியோதனன் : டேய் ! நான் திருதராட்டிரன் புத்திரன்.

கட்டியங்காரன் : ஆ ! அந்தக் குருட்டு ராஜா மகனா?

துரியோதனன் : அத்தினாபுரத்திற்கு நான் அரசன்

கட்டியங்காரன் : பாண்டவர்களைக் கலைத்துவிட்டு ஆட்சி புரிகிற இடமா?

துரியோதனன் : நாங்கள் வீரதீரர்கள் 100 பேர் இருக்கிறோம்.

கட்டியங்காரன் : பாஞ்சாலியின் சேலையை உரிந்த ஆட்களா?

இவ்வாறு கட்டியங்காரன், அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறான். கதைக்குள்ளே ஒரு விமர்சகனாகச் செயல்படுகிறான்.

இதே போலத் திரௌபதி கற்புடையவள், தருமன் தருமவான், வீமன் வீரன், கர்ணன் கொடையாளி, கண்ணன் கருணையுள்ளவன் என்கிற கருத்தியல்களையும் கட்டியங்காரன் உடைக்கிறான். திரௌபதியைப் “பாரதப் போரை உண்டாக்கி அனைவரையும் சாகடித்த பெண்” என்பான். “ஐவருக்கு மனைவியாக இருந்தது முறையானதா?” என்பான். தருமனைத் “தன் மனைவியை வைத்துச் சூதாடிய மடையன்” என்பான். வீமனைச் “சாப்பாட்டுப் பிரியன்” என்றும் “சாதிபேதம் பார்ப்பவன்” என்றும் கூறுவான். கர்ணனைச் “சகோதரர்களுக்கு எதிராக நின்றவன்” என்பான். கண்ணனைச் “சூழ்ச்சிக்காரன்” என்பான். கட்டியங்காரனின் இக்கருத்துகளைப் பார்வையாளர்கள் ரசித்து வரவேற்கின்றனர். இவையெல்லாம் பார்வையாளர்களின் விமரிசனமாகவே இருப்பதால் அவர்கள் வரவேற்கிறார்கள்.

நகைச்சுவை

கட்டியங்காரனின் நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம். ‘கீசக வதம்’ கூத்தில் கட்டியங்காரன் வந்தவுடன் “எங்கு போயிருந்தாய்?” என்று கீசகன் கேட்பான். “நான் யானைக்குத் தண்ணீர் காட்டப் போயிருந்தேன்” என்பான். கீசகன் “தண்ணீர் காட்டினாயா? என்பான். “ஆமாம் ! காட்டினேன் இதுதான் தண்ணீர் என்று தெலைவிலிருந்தபடியே காட்டினேன்” என்று சொல்வான். பார்வையாளர்கள் ரசித்துச் சிரிப்பார்கள்.

கூத்தில் கட்டியங்காரன் பார்வையாளர்களின் பிரதிநிதியாக இடம்பெறுகிறான் எனலாம்.

2.4.5 திரையும் காட்சியமைப்பும் கூத்து நடத்தும்போது திரை எவ்வாறு அமைக்க வேண்டும், காட்சி எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

திரை

கூத்துக் களத்தின் முன்பக்கமும் பின்பக்கமும் திரை இல்லை. வாத்தியக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் இடையிலும் திரை இல்லை. இரண்டு பேர் திரையைப் பிடிக்க, அதை விலக்கிக் கொண்டுதான் பாத்திரங்கள் நடிப்பிடத்திற்கு வருவார்கள். கேரளத்தின் கதகளியிலும் இதே மாதிரித் திரையைப் பிடிப்பது உண்டு. கர்நாடகத்தின் யட்சகானத்திலும் இதுபோலச் செய்கிறார்கள். கூத்தில் பாத்திரங்கள் திரைக்குப் பின்னே பாடிக் கொண்டும் நடையிட்டுக் கொண்டும் இருப்பார்கள். கால்கள் மட்டும் தெரியும்படி திரை பிடிக்கப்படுவதால் பாத்திரத்தை முழுதாகப் பார்க்கும் ஆர்வம் உருவாகும். பார்வையாளர்களுக்குத் தடையாக இருக்கும் திரையைத் தூக்கி எறிந்து பாத்திரங்கள் வெளிப்படுவதுண்டு. இதனால் பாத்திரங்களிடம் பார்வையாளர்களுக்குப் பிரியம் உண்டாகிறது.

காட்சி அமைப்பு

கூத்தில் அங்கம் (Act) என்ற பாகுபாடுகள் இல்லை. காட்சி (Scene) என்ற பிரிவும் இல்லை. கதை நிகழ்கிற இடம் பற்றிப் பாட்டில் சொல்லப்படுகிறது. கட்டியங்காரன் காட்சி மாற்றங்களை எடுத்துக் கூறுகிறான். சில சமயங்களில் கூத்தர் ஒருவர் இரண்டு பாத்திர வேடங்களை ஏற்று நடிப்பதுண்டு. அப்போது அவர் வருவதற்கு ஏற்ற வகையில் கதை நிகழ்வு வரிசையை அமைத்துக் கொள்வார்கள். காட்சிச் சூழலைக் காட்டப் பொருள்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. விசிப்பலகை பிரம்மாண்டமான சிம்மாசனமாகக் காட்டப்படும். துண்டு, ரதமாகவும் குதிரையாகவும் காட்டப்படும். கூத்தின் இத்தகைய பாவனை உத்தியைத் தற்போதைய நவீன நாடகங்களில்

தூரப்படுத்தும் உத்தி

நவீன நாடகங்களில் காணும் இன்னொரு உத்தி தூரப்படுத்துதல் என்பது. நடப்பது கதைதான், எதார்த்தமல்ல என்று காட்டுவதற்காக நவீன நாடகங்களில் பொருந்தாத குறுக்கீடுகளை அமைப்பார்கள். இவ்வுத்தியும் கூத்தில் பின்பற்றப்பட்டதுதான். ஆனால் அது நடப்பது கதைதான் என்று உணர்த்துவதற்குப் பதிலாக நடப்பது யதார்த்தம் என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது.

கீசகவதம்

கீசகவதம் கூத்தில் கீசகனுக்கும் பீமனுக்கும் சண்டை நடக்கும். அது உக்கிரமடையும் போது இரண்டு வெளிநபர்கள் இடையே புகுந்து பாத்திரங்களைப் பிரித்து விடுவார்கள். கூத்தர்களுடைய ஆவேசத்தில் விபரீதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. என்றாலும் சண்டையின் உக்கிரத்தை இந்தச் செயல் மிகுதிப்படுத்திக் காட்டுகிறது எனலாம்.

திரௌபதி துகிலுரிதல்

திரௌபதி வஸ்திராபகரணம் கூத்தில் துச்சாதனன் திரௌபதியைத் துகிலுரியும் கட்டத்தில் நாடகம் நிறுத்தப்பட்டுத் தீபாராதனை நடக்கிறது. துச்சாதனன் வேடம் கட்டியவனும் தீபாராதனையை வணங்குகிறான். வயிற்றுப்பாட்டிற்காக நடத்தக் கூடாததை நடத்தும் செயலுக்காகக் கூத்தர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்பதன் மூலமே இது மன்னிக்க முடியாத குற்றம் என்ற உணர்வை இக்குறுக்கீடு ஏற்படுத்துகிறது.

2.4.6 பார்வையாளர்கள் கூத்து அரங்கில் பார்வையாளர்களுக்குத் தனி இருக்கைகள் என்று இல்லை. தெருவில் அமர்ந்து பார்க்கிறார்கள். முன் ஒதுக்கீடு பின் ஒதுக்கீடு என்று இல்லை. யாரும் எங்கும் அமரலாம். சின்ன வகுப்பாருக்கு இன்ன இடம் என்று இல்லாவிட்டாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் ஓரமாக இருப்பார்கள். ஆண் பெண் பாகுபாடு இல்லை. பெரும்பாலும் நள்ளிரவில் கூத்துப் பார்க்க வருகின்றனர். பாய் தலையணையுடன் வந்து தூங்கித் தங்களுக்குப் பிடித்த கட்டம் வரும்போது எழுப்பச் சொல்லிப் பார்க்கிறார்கள்.

பக்தி

பார்வையாளர்கள் கூத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்ப்பதில்லை. தெய்வம் தொடர்பான கூத்துகளைப் பார்க்கையில் உண்மையில் நடக்கும் நிகழ்ச்சியாகவே கருதுகிறார்கள். கிருஷ்ணன் திரௌபதி முதலான பாத்திரங்களாக நடிக்கும் நடிகர்களிடம் கூத்து இல்லாத நேரத்திலும் பயபக்தி காட்டுகிறார்கள்.

நம்பிக்கைகள்

‘அர்ச்சுனன் வில் வளைப்பில்’ பயன்படும் வில்லை வணங்கினால் கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடக்கும் என்று நம்புகின்றனர். ‘இராசசூய யாகம்’ என்ற கூத்தை நடத்தினால் அல்லது கண்டால் வீடுபேறு கிடைக்கும் என்று நம்புகின்றனர். ‘கர்ணமோட்சம்’ பார்த்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ‘விராட பர்வம்’ கூத்தை நடத்தினால் கண்டிப்பாக மழைபொழியும் என்று நம்புகின்றனர்.

‘திரௌபதி வஸ்திராபகரணம்’ கூத்தில் திரௌபதி துகிலுரியப்படும் காட்சியைப் பார்த்தால் பாவம் என்று கருதுகின்றனர். அச்சமயத்தில் பலர் எழுந்து போய் விடுகின்றனர். ‘அர்ச்சுனன் தபசு’ கூத்தில் நடப்படும் பனைமரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என நம்புகின்றனர். ‘கிருஷ்ணன் தூது’ கூத்தில் விதுரர் வீட்டில் படைக்கும் உணவு பிரசாதமாகக் கருதப்படுவதால் அதை எல்லாரும் வாங்கி உண்கின்றனர். அதை உண்டால் குழந்தைப் பேறு உண்டாகும் என்றும் நம்புகின்றனர். ‘துரியோதனன் மோட்சம்’ கூத்தில் துரியோதன் இறந்த காட்சியைப் பார்த்துவிட்டு வீடு சென்று இறப்பு வீட்டிற்குச் சென்று வந்ததுபோல எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுகின்றனர்.

இவ்வாறு பார்வையாளர்களின் வாழ்க்கையோடு தெருக்கூத்து பிணைந்ததாக உள்ளது.

2.5 கூத்துக் கலைஞர்கள்

கூத்தாடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் முன்பு இருந்தார்கள். இப்பொழுது ஒருசிலரே அவ்வாறு பாரம்பரியக் கூத்தர்களாக இருக்கிறார்கள். பலர் பிற தொழிலுடன் கூத்தையும் மேற்கொள்கிறார்கள். நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூடச் சில பாத்திரங்களை ஏற்று நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பணவசதி உள்ளவர்களும் கூட அவ்வாறு இருக்கிறார்கள். அந்தணர்கள் தவிர எல்லாச் சாதியினரும் கூத்துக் கலையில் ஈடுபடுகிறார்கள். அரிசனப் பிரிவு மக்கள் தங்கள் பகுதியில் கோயிலில் கூத்தாடுகிறார்கள்.

2.5.1 கூத்துக் கலைஞர் வாழ்வு கூத்துக் கலைஞர்கள் தனித்தன்மையுடன் வாழ்கின்றார்கள். பொருளாதார நிலையிலும் மிகவும் துன்பப்படுகின்றனர்.

மன்றங்கள்

கூத்துக் கலைஞர்கள் மன்றங்கள் அமைத்துச் செயல்படுகிறார்கள். புரிசை, வந்தவாசி, வெளியம்பாக்கம் முதலான பகுதிகளில் கூத்துக் கலைஞர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

கூத்து ஆசிரியர்

கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துபவர் கூத்து ஆசிரியர். கூத்தர்களைக் கூத்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதும் திரும்ப அழைத்து வருவதும் இவர் பொறுப்பு. இவர் மற்றவர்களுக்குப் பாடல்களைக் கற்றுக் கொடுத்துக் கூத்துப் பயிற்சி தருகிறார். கூத்துக் கலைஞர்கள் பாடும் ஆற்றல் மிக்கவர்கள். கூத்தின் எல்லாப் பாடல்களுமே அவர்களுக்குத் தெரியும். இடத்திற்கு ஏற்றவாறு வசனம் பேசும் ஆற்றலும் உடையவர்கள்.

சங்கேத மொழி

கூத்து நடக்கும் பொழுது கூத்துக் கலைஞர்கள் பொது மக்கள் அறியாத வண்ணம் தங்களுக்குள் சங்கேத மொழியில் பேசிக் கொள்கிறார்கள். இச்சங்கேத மொழி பகுதிக்குப் பகுதி மாறுபடும். எடுத்துக் காட்டாக வந்தவாசிப் பகுதியில் உள்ள கலைஞர்களின் சங்கேத மொழியைப் பார்ப்போம். ‘மாய்மெசக்கிவிட்டாயா?’ என்றால் ‘சாப்பிட்டாயா?’ என்று பொருள். ‘அக்கினிபாணி’ என்றால் தேநீர் என்று பொருள். ‘முல்லைங்க கசமுறித்தல்’ என்றால் ‘பார்வையாளர் திட்டுகிறார்கள்’ என்று பொருள். ‘பிராப்போ’ என்றால் ‘திறமையாகச் செய்’ என்று பொருள். ‘கித்தான்’ என்றால் ‘பாடலை இன்னும் நீட்டு’ என்று பொருள்.

குறிப்பிடத் தக்க கலைஞர்கள்

புரிசை நடேசத் தம்பிரான், புரிசை கண்ணப்பத் தம்பிரான், பெருங்காட்டூர் பொன்னுசாமி, பெருங்காட்டூர் ராஜகோபால், பத்தரைக் கோட்டையார் எனப்படும் ராஜவேல் வாத்தியார், கொண்டையார் தண்டலம் வரதப்ப வாத்தியார் ஆகியோர் குறிப்பிடத் தக்க கூத்துக் கலைஞர்கள்.

வருமானம்

கூத்துக் கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கிடைப்பதில்லை. ஒரு கூத்து நடத்த 3000 ரூபாய் வரை சன்மானம் கிடைக்கிறது. அதில் பங்கீட்டின்படி தலைவேடதாரிக்கு 200 ரூபாய் தான் கிடைக்கும். கூத்து தொடங்கும்போது கிடைக்கும் தட்சணை, கூத்து முடியும்போது கிடைக்கும் மங்களப் பணம் முதலான சிறு தொகைகள் கிடைக்கும். சில கூத்தர்கள் துன்பக் காட்சியில் நடிக்கும்போது அவரைச் சார்ந்தவர் மக்களிடம் பணம் வசூலிப்பது உண்டு. சில இடங்களில் அறுவடையின்போது தரும் நெல் போன்ற வருமானங்களும் உண்டு. கோயில் கூத்துகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குலத்தார் உணவு தருவர். ஒரு குலத்தாரை விஞ்சி இன்னொரு குலத்தார் கூத்தர்களைக் கவனிப்பர். இத்தகைய போட்டியின் காரணமாகக் கூத்தர்களுக்கு வருவாய் கிடைக்கும். இதனால்தான் “ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்ற பழமொழி உருவாயிற்று. சரியாகக் கவனிக்காத குலத்தாரைக் கேலி செய்தும் கூத்தர்கள் காட்சியை அமைத்து விடுவார்கள்.

2.6 தெருக்கூத்தின் எதிர்காலம்

தமிழக மக்களின் வாழ்வோடும் நம்பிக்கைகளோடும் கலை உணர்வோடும் தெருக்கூத்து பின்னிப் பிணைந்திருந்தது. சங்கரதாஸ் சுவாமிகள் முதலானவர்கள் வளர்த்தெடுத்த இசை நாடகங்களால் தெருக்கூத்துகள் நசித்துப் போய்விட்டன. வட மாவட்டங்களில் கோயில் சடங்காகக் கூத்து இருப்பதால் அங்கு மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கேரளத்தில் வள்ளத்தோள் கதகளிக்குப் புத்துயிர் அளித்தார். கர்நாடகத்தில் சிவராம காரந்த் யட்சகானத்திற்குப் புத்துயிர் அளித்தார். அதுபோலத் தெருக்கூத்திற்கும் புத்துயிர் அளிக்கப்பட வேண்டும்.

2.6.1 செய்ய வேண்டியவை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தார் கிராமியக் கலைவிழா நடத்தி ஓரிரு கூத்துகளை மாவட்டங்களில் நடத்துகிறார்கள். கூத்துகள் வட்டாரத் தன்மை கொண்டவையாக இருப்பதால் ஒரு வட்டாரத்தில் வழங்கும் கூத்தை மற்றொரு வட்டாரத்தினர் புரிந்து ரசிக்க முடிவதில்லை. அந்தந்த வட்டாரத் தன்மைகளைக் குறைத்துப் பொதுத் தன்மைகளை உருவாக்கினால் கூத்து பரவலாகும்.

புதிய கூத்து

கூத்துப் பட்டறை என்ற அமைப்பு தொடங்கப்பட்டுப் புதிய கதைகளையும் கூத்தாக ஆக்க வேண்டும் என்ற முயற்சி மேற் கொள்ளப்பட்டது. பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ இவ்வகையில் கூத்தாக ஆக்கப்பட்டது. இதுபோலப் பல புதிய கூத்துகள் உருவாக்கப்பட வேண்டும்.

பயிற்சி

சங்கீத நாடக அகாடமி, புரிசையில் கண்ணப்பத் தம்பிரான் குழுவினருக்குக் கூத்துப் பள்ளி தொடங்க நிதி உதவி அளித்திருக்கிறது. இம்முயற்சி பரவலாக்கப்பட்டுப் பொதுவான பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும்.

சீர்திருத்தம்

கூத்தில் சில சீர் திருத்தங்களும் செய்யப்பட வேண்டும். முழு இரவு நடக்கும் கூத்தை மூன்று மணி நேரத்திற்குக் குறைக்க வேண்டும். கட்டியங்காரனது பங்கைக் குறைத்து முறைப்படுத்த வேண்டும். விரசமான வசனங்களைத் தவிர்க்க வேண்டும். ஆண்கள் பெண் வேடமிடுவது பொருத்தமாக இல்லை. பெண்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்கச் செய்ய வேண்டும். கூத்து நூல்கள் அச்சிடப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கூத்துக் கலையை உயர்த்த முடியும்.

2.7 தொகுப்புரை

தமிழர்களின் பாரம்பரியக் கலையான தெருக்கூத்து நாடகம் கோயில் சடங்காகச் சுருங்கிவிட்டது. எண்ணிறந்த கூத்துகள் நடத்தப்படாமல் போய்விட்டன. கூத்திற்கென்று இருக்கும் சிறப்புக் கூறுகள் போற்றத்தக்கவை. கூத்து மக்களின் வாழ்வோடு பிணைந்திருக்கிறது.

பாடம் - 3

வரலாற்று நாடகங்கள்

3.0 பாட முன்னுரை

புராண நாடகங்கள் படைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரலாற்று நாடகங்கள் படைக்கப்பட்டன. புராணக் கதைகளையொத்த வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவற்றைச் சுவையாகக் கோத்து வரலாற்று நாடகம் படைக்கப்பட்டது. அதில், நடந்த நிகழ்ச்சிகளுடன் கற்பனையான நிகழ்ச்சிகளையும் கலந்து படைத்தார்கள். கல்வெட்டிலும், இலக்கியத்திலும் வரலாற்று நூல்களிலும் காணப்படும் பண்டைய வரலாறுகளும் இடைக்கால வரலாறுகளும் இந்நாடகங்களுக்கு அடிப்படையாகின்றன. இந்நாடகங்களில் வரலாற்றுப் பெயர்கள் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. கற்பனைப் பாத்திரங்களுக்கும் பொருத்தமான பெயர்கள் இடப்படுகின்றன. அரசர்கள் காலத்தில் நடந்ததாகப் படைக்கப்படும் கற்பனையான வரலாற்று நாடகங்களும் படைக்கப்படுகின்றன. தேசிய இயக்கம், திராவிட இயக்கம் முதலான இயக்கங்களின் கருத்துப் பரப்பலுக்காகவும் வரலாற்று நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

3.1 வரலாற்று நாடகங்கள்

அரசர்கள் பற்றிய வரலாற்று நாடகங்கள், அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற புகழ்மிக்க அரசர்களின் வரலாற்றைப் பற்றிச் சான்றாதாரங்கள் வாயிலாகக் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டன.

3.1.1 மூவேந்தர் வரலாறு இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் செய்திகள், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் முதலானவற்றைக் கொண்டு சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றை நாடகங்களாக ஆக்கியிருக்கிறார்கள். உண்மை நிகழ்ச்சிகளுக்கும் இடம் தந்து கற்பனை கலந்து இந்நாடகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கலைச்சிறப்பும், கற்பனைச் சுவையும், கருத்துச் செறிவும் கலந்து இவை படைக்கப்பட்டிருக்கின்றன.

சேரர்

சிதம்பர நடராஜ சுந்தரம் என்பார் இளங்கொடியாள் என்னும் நாடகத்தைப் படைத்திருக்கிறார். இந்நாடகம் சேரன் செங்குட்டுவன் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

சோழர்

ஏ.கே. இராமச்சந்திரன் எழுதிய இளவரசன் குலோத்துங்கன் நாடகம் இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. அரு.ராமநாதனின் ராஜராஜ சோழன் நாடகம் குறிப்பிடத்தக்கது. இது டி.கே.எஸ். சகோதரர்களால் வெற்றிகரமான நாடகமாக நடிக்கப்பட்டது. இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. எஸ்.பி.மணியின் முடிந்த கோயில் ராஜேந்திர சோழன் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. கோவிந்தராஜ் நாட்டாரின் இராசேந்திரன் நாடகமும் இத்தகையதே.

ராஜ ராஜ சோழன்

மாமன்னன் ராஜராஜன் ராஜதந்திரத்தில் சிறந்தவன் என்று காட்டுவதாக நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. மகளின் காதலை ஆதரித்துப் பின்னர் காதலனைச் சிறை செய்வதும், தீயவரை நம்பி நல்லவரைப் புறக்கணிப்பதும் என்று முன்னுக்குப்பின் முரண்பாடான செயல்பாடுகளைக் கொண்டவனாக ராஜராஜ சோழன் படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் இறுதியில் இதெல்லாம் ராஜதந்திரம் என்று உணர்த்தும் வகையில் தன் அறிவுத்திறனைப் புலப்படுத்தி அனைவரையும் வியக்க வைக்கிறான்.

முடிந்த கோயில்

இந்நாடகத்தில் ராஜராஜனின் சகோதரி குந்தவை நாச்சியார் அனைவரையும் ஆட்டுவிக்கும் திறனுடைய பெண்மணியாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். குந்தவையின் மகளான இளங்கோப் பிச்சியை இளவரசன் இராசேந்திரன் காதலிப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் இறுதியில் திருமணத்தை நடத்தி வைப்பதாக நாடகம் படைக்கப் பட்டுள்ளது.

பாண்டியர்

ஆர்.சி.தமிழன்பனின் பாண்டிய மகுடம் பாண்டிய இளவரசர்களின் அரசுரிமைப் போரையும், ஒற்றுமையின்மையையும் புலப்படுத்தும் நாடகமாக அமைந்துள்ளது.

3.1.2 நாயக்கர் வரலாறு விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சி தமிழகத்திலும் விரிவாக்கப்பட்டது. மதுரையிலும், தஞ்சையிலும், நெல்லையிலும் நாயக்கர் ஆட்சி வேரூன்றியது. குறிப்பாக விஸ்வநாதன் என்கிற படைத்தலைவனும், திருமலை நாயக்கனும், ராணி மங்கம்மாளும் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இக்காலக் கட்ட வரலாற்றைப் படைப்பாளர்கள் நாடகங்களாகப் படைத்துள்ளனர். தஞ்சை நாயக்கர் வரலாற்றை விதியின் வலிமை என்ற பெயரில் பி.எஸ்.சுப்பிரமணியம் நாடகமாக்கியுள்ளார்.

விஸ்வநாதம்

விஸ்வநாதனின் வரலாற்றை சி.எஸ்.முத்துசாமி ஐயர் விஸ்வநாதம் என்ற பெயரில் கவிதை நாடகமாக ஆக்கியிருக்கிறார். விஜய நகர மன்னரால் மதுரைக்கு அனுப்பப்பட்ட விசுவ நாதநாயக்கனின் வீரம், காதல் முதலானவை பற்றி நாடகம் விளக்குகிறது. காஞ்சனைக்கும் விசுவநாதனுக்கும் இடையிலான உண்மைக் காதல் உளம் கவரும் வகையில் சித்திரிக்கப் பட்டுள்ளது.

மறைந்த மாநகர்

என்.கனகராஜ ஐயர் படைத்த மறைந்த மாநகர் கிருஷ்ண தேவராயர் காலத்தில், விஜய நகர ஆட்சி பெற்றிருந்த உயர்வையும், இராமராயர் காலத்தில் வீழ்ச்சியுற்றதையும் சித்திரித்துக் காட்டுகிறது. நாடக ஆசிரியர் இதன் வாயிலாக நிலையாமையையும் புலப்படுத்துகிறார்.

ராணி மங்கம்மாள்

கே.எம்.பக்தவத்சலம் படைத்த ராணி மங்கம்மாள் வரலாற்று ஆதாரங்களை மிகுதியாகக் கொண்ட நாடகம். சுத்தானந்த பாரதியார் படைத்த இராணி மங்கம்மாள் நாடகம், அவளது ஆட்சித் திறனை விளக்குவதாக அமைந்துள்ளது. மங்கம்மாள் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது.

திருமலை நாயக்கர்

ஆறு.அழகப்பன் படைத்த திருமலை நாயக்கர் நாடகம் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் சிறந்தவரான திருமலை நாயக்கரின் வரலாற்றை நுணுக்கமாகக் காட்டுகிறது. அக்காலத்தில் இருந்த குமரகுருபரர், ராபர்ட் டி நொபிலி முதலானவர்கள் பற்றிய வரலாறுகளும் இதில் காட்டப்பட்டுள்ளன. திருமலை நாயக்கரின் ஆட்சி வல்லமை, வீரம், கலை ஆர்வம், மனிதாபிமானம் முதலானவற்றை விளக்குவதாக நாடகம் அமைந்துள்ளது. பாடல்கள், பழமொழிகள் முதலானவற்றுடன் இந்நாடகம் அமைந்துள்ளது.

பிற மன்னர்கள்

வேங்கி நாட்டு அரசுரிமைப் போர் பற்றி ராஜநீதி என்ற நாடகத்தை மக்களன்பன் எழுதியுள்ளார். எஸ்.மகாதேவனின் தெள்ளாற்று நந்தி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறெறிந்த நந்தி, கண்ணன் எழுதிய நந்திவர்மன் முதலானவை பல்லவர் வரலாற்றைக் காட்டும் நாடகங்கள். பி.கே.சுப்பராஜின் வீரபாண்டிய கட்டபொம்மன், கண்ணன் எழுதிய வேங்கை மார்பன், மாலிக்காபூர் முதலானவை நல்ல வரலாற்று நாடகங்கள். தாமரைக் கண்ணனின் சாணக்கிய சாம்ராஜ்யம், சாணக்கியனின் அரசியல் தந்திரங்களையும், சந்திரகுப்தனின் அரசியல் திறமைகளையும் காட்டியது. அரு.ராமநாதனின் சக்கரவர்த்தி அசோகன், மதுரை திருமாறனின் சாணக்கிய சபதம் முதலானவை வடநாட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள்.

3.1.3 பெரியார்களின் வரலாறு புகழ் பெற்ற மனிதர்களைப் பற்றிய நாடகங்களையும், வாழ்க்கை வரலாறு போலப் படைத்திருக்கிறார்கள். இவற்றையும் வரலாற்று நாடகங்களாகவே கொள்ள வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரையான செய்திகளும் இவற்றில் இடம்பெறக் கூடும்.

புலவர்கள்

திருவள்ளுவர் வரலாற்றை ஆறு.அழகப்பன் திருவள்ளுவர் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். வழித்துணைவன் திருவள்ளுவர் என்ற நாடகத்தின் மூலம் வள்ளுவரைப் பற்றியுள்ள வாழ்க்கைச் செய்திகள், கருத்துகள் அனைத்தையும் அளிக்கின்றார். எத்திராஜ் அவ்வையார் என்ற நாடகத்தைச் சங்க இலக்கியம் மற்றும் புனைகதைகளைக் கொண்டு எழுதியுள்ளார். இன்குலாப் படைத்த ஒளவை பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. மு.வரதராசனாரின் இளங்கோ நாடகமும் இத்தகையதே. சி.எஸ்.சச்சிதானந்த தீட்சிதரின் காளிதாசன், சுத்தானந்த பாரதியின் மகாகவி காளிதாசன் நாடகம் முதலானவையும் குறிப்பிடத்தக்கன.

சமயப் பெரியார்கள்

அன்னபூரணி அம்மாளின் சங்கர விஜய விலாசம், ஆதிசங்கரரின் வரலாற்றைக் கூறுகிறது. கிருபானந்த வாரியாரின் ஸ்ரீ அருணகிரி நாத பாவலரின் கபீர்தாசர் நாடகம், திருமலை நல்லானின் மார்கழி நோன்பு அல்லது ஆண்டாள் வரலாறு, மதுரை பத்மனாபனின் வள்ளலார் நாடகம் நாரண துரைக்கண்ணனின் திருவருட்பிரகாச வள்ளலார் முதலானவையும் குறிப்பிடத் தக்கவை.

3.1.4 பல்வகை வரலாறு அரசாண்ட மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய கதைகளும், மன்னர்களைப் பற்றிக் கற்பனையுடன் அமைக்கப்பட்ட கதைகளும் நாடகங்களாக இயற்றப்பட்டன. அதைப் போல சாதி, சமயம் முதலியவை பற்றிய வரலாற்று நாடகங்களும் வெளிவந்தன.

வரலாற்றுக் கதை

தெருக்கூத்துகளில் புராணக் கதைகளே இடம் பெற்றன. பின், சில வரலாற்றுக் கதைகளையும் கூத்துகளாக மாற்றி நிகழ்த்தினர். கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், ராஜா தேசிங்கு முதலானவர்களின் வரலாறுகள் கூத்துகளில் இடம்பெற்றன. அர்ச்சுனனையும் துரியோதனனையும், இராமனையும் இராவணனையும், முருகனையும் சூரபதுமனையும் கூத்தில் கண்டிருந்த மக்களுக்கு வரலாற்று நாயகர்கள் புதுமையாகத் தோன்றினார்கள்.

கட்டபொம்மு கதை

வரலாற்றுக் கதை, கூத்தாக ஆக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக அடைக்கல புரம் சிதம்பர சுவாமிகள் இயற்றிய கட்டபொம்மு கூத்து பற்றிக் காண்போம். இதிலுள்ள செய்திகள் புதுமையாகத் தோன்றின. கட்டபொம்மனின் உரிமை உணர்வு கூத்தில் புலப்படுத்தப்பட்டது. இதில் வரும் பாடலில்

வானம் பொழிய முப்போகம் விளையுது

மன்னவன் காணிக்கு ஏதுபணம்?

காலமழையிலே முப்போகம் விளையுது

கொற்றவன் காணிக்கு ஏதுபணம்?

மாரிகள் பெய்தும் பெய்யாமலும் போவதை

மாற்றுதற்கோ கப்பம் வாங்குகிறீர்?

என்று உரிமையுணர்வு வெளிப்படுத்தப்பட்டது. கட்டபொம்மன் திரைப்படத்திலும் இத்தகைய கருத்து வசனமாக ஆக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இதுபோல வரலாற்று அடிப்படையில் இருந்த கூத்துகள் நாடகங்களாக ஆக்கப்பட்டன.

சாதி நாடகங்கள்

வரலாற்றுக் கூத்துகள் நாடகமாக்கப் பட்டதைத் தொடர்ந்து பல நாடகங்கள் வெளியாயின. சோகி நாடகம், கார்காத்த நாடகம், தட்ட நாடகம் என்று சாதி பற்றிய வரலாற்று நாடகங்கள் எழுந்தன.

இசுலாமிய நாடகங்கள்

முகமது இபுராகிம் அவர்களின் அப்பாசு நாடகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் அலிபாதுஷா நாடகம், தையார்சுல்தான் நாடகம் முதலான இசுலாமிய நாடகங்கள் வெளியாயின.

கிறித்தவ நாடகங்கள்

ஞான சௌந்தரி நாடகம், வேதநாயகம் பிள்ளை வாசகப்பா முதலான கிறித்துவ நாடகங்களும் வெளியாயின.

3.2 நாடக முன்னோடிகள்

தொடக்கக் காலத்தில், பல நாடகங்களை எழுதி, நாடகக் கலை வளர்த்தவர்களுள் சங்கரதாஸ் சுவாமிகள், கந்தசாமி முதலியார், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

3.2.1 சங்கரதாஸ் சுவாமிகள் வீரபாண்டிய கட்டபொம்மன், தேசிங்கு ராஜா, பூதத்தம்பி, மதுரை வீரன் முதலானோரின் வீர வரலாறுகளை இவர் நாடகமாக ஆக்கியுள்ளார். இசுலாமிய வரலாற்று நாடகங்களாக புரோஸ்ஷா, நூர்ஜஹான், அலிபாதுஷா, அலாவுதீன், லைலா மஜ்னு முதலான நாடகங்களையும் படைத்திருக்கிறார். ரோமியோ ஜூலியட், ஜூலியஸ் சீசர் முதலான ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகளையும் நாடகமாக்கியுள்ளார்.

3.2.2 கந்தசாமி முதலியார் கண்டிராஜா  வரலாற்றைப் பலரும் நாடகமாக ஆக்கியிருக்கின்றார்கள். கந்தசாமி முதலியார் அக்கதையை ஆற்றல் மிக்க காட்சிகளுடன் நாடகமாக்கம் செய்தார். பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் மேடையில் காட்சிகளை அமைத்தார். குறிப்பாக ஒரு காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். குழந்தையின் தலையை உரலில் போட்டு இடிக்கும் நிகழ்ச்சி ஒன்று நாடகக் கதையில் உண்டு. இக்காட்சியில் இளநீரைக் குழந்தை தலைபோலச் செய்து அதற்குள் சிவப்பு நீரை நிரப்பி உரலில் போட்டு இடிக்கையில், இடிக்கும் பெண்ணின் புடவையில் சிவப்பு நீர் தெறிப்பது போலக் காட்சி அமைத்திருந்தார். பார்ப்பவர்களுக்கு ரத்தம் தெறிப்பது போன்ற அதிர்ச்சியை இக்காட்சி ஏற்படுத்தியது. கந்தசாமி முதலியார் ராஜபக்தி, போஜன், ராமதாஸ் முதலான வரலாற்று நாடகங்களையும் படைத்து இயக்கியுள்ளார்.

கந்தசாமி முதலியார்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

3.2.3 பம்மல் சம்பந்த முதலியார் இவரது கற்பனை வரலாற்று நாடகமான மனோகரா புகழ்பெற்றது. பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை நடத்தியிருக்கின்றன. இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. புத்த அவதாரம் என்னும் நாடகத்தையும் இவர் எழுதியிருக்கிறார். சித்தார்த்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த போட்டி பூசல், ஆடல், பாடல், காதல், பிரிவு, தவிப்பு, துறவு, ஞானம், போதனை, சீடர் கூட்டத்தைப் பெறுதல், சமாதியடைதல் என எல்லாவற்றையும் இந்நாடகத்தில் சித்திரித்திருந்தார். இவரது ரஜபுத்திர வீரன் நாடகமும் குறிப்பிடத் தக்கது. ஷேக்ஸ்பியர் படைத்த வரலாற்று நாடகங்களைத் தழுவி அமலாதித்தன் (

amlet), விரும்பிய விதமே (As You Like It), சிம்ஹளநாதன் (Cymbeline) எனப் படைத்துள்ளார். வாணிபுரத்து வணிகன் (Merchant of Venice), மகபதி (Macbeth) முதலான நாடகங்களையும் இவ்வாறே படைத்திருக்கிறார். இந்நாடகங்களில் தமிழ் மக்களின் சுவையுணர்ச்சிக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றி அமைத்துள்ளார்.

3.3 தேசிய இயக்க நாடகங்கள்

1919 ஆம் ஆண்டு நேர்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ச்சி தமிழ் நாடகங்களின் உள்ளடக்கத்தில் தேசிய அலையை ஏற்படுத்தியது. சத்தியமூர்த்தி முதலானவர்கள் முயற்சியால் நாடகக் கலைஞர்கள் தேசிய உணர்வு பெற்றனர். சுப்பிரமணிய சிவா தேசிங்கு ராஜன், சிவாஜி முதலான தேசிய வீரர்களின் கதைகளை நாடகமாக்கினார். இந்நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்துச் சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி வாதிட்டார். இதையடுத்துப் பலர் தேசிய உணர்வு சார்ந்த வரலாற்று நாடகங்களைப் படைத்தார்கள்.

3.3.1 பாணபுரத்து வீரன் சாமிநாத சர்மா பாணபுரத்து வீரன் என்ற கற்பனை வரலாற்று நாடகத்தைப் படைத்தார். இதில் கிழக்கிந்தியக் கம்பெனியை ஈசானபுரம் என்று பெயரிட்டும், பாரத நாட்டைப் பாணபுரம் என்று பெயரிட்டும் உருவக நாடகமாக எழுதியிருந்தார். பாணபுரத்து வீரன் வாலீசன் அரசத் துரோகக் குற்றச்சாட்டில் தூக்கில் இடப்படுகிறான். அவ்வேளையில் அவன் மக்களிடம் சுதந்திரக் கனல் கக்கும் வகையில் பேசுகிறான். “நாட்டுக்கு உழைப்பதே ஒருவனது பிறவிப் பயன். தேசபக்தி என்னும் சுடர் இல்லாவிட்டால் மனிதன் தீய பண்புகளுக்கு அடிமையாவான். தேசபக்தி குற்றமானால் விடுதலை தந்தாலும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்வதே கடன்” என்று பேசுகிறான். பின் தூக்கிலிடப்படுகிறான்.

பாணபுரத்திற்கும் ஈசான புரத்திற்கும் போர் மூள்கிறது. பாணபுரத்தின் அடுத்த தலைவனான புரேசன் தோல்வியுற்றுத் தலைமறைவாக இருக்கிறான். அப்போது சிலந்தி பலமுறை முயன்று கூடுகட்டி முடிப்பதைப் பார்க்கிறான். உற்சாகம் கொண்டு வீரர்களைத் திரட்டிப் போர்க்களம் செல்கிறான். புரேசனும் வீரவுரை ஆற்றுகிறான். பாணபுரம் வெற்றிபெறுகிறது.

இந்நாடகத்தில் பாரதியாரின் ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’, ‘விடுதலை விடுதலை விடுதலை’, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ முதலான பாடல்கள் பாடப்பட்டன. நாடகம் தடை செய்யப்பட்டது. அப்போது தேசபக்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடிக்கப்பட்டது. இதில் காந்தியடிகள் வில்லுப்பாட்டு சேர்க்கப்பட்டது. வாலீசன் தூக்கில் இடப்படும் காட்சியில் அவன் பகத்சிங் போல உடையணிந்திருப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டது. பகத்சிங் வாழ்க என்ற முழக்கமும் நாடகத்தில் எழுப்பப்பட்டது.

3.3.2 கவியின் கனவு நாடு விடுதலை பெறவேண்டும் என்று கவிஞன் கண்ட கனவு பலிப்பதாக எஸ்.டி.சுந்தரம் நாடகம் படைத்தார். சர்வாதிகாரியின் கொடுமைகள் நீக்கப்படுவதாகக் கவியின் கனவு நாடகத்தில் காட்டி வெள்ளையர் ஆட்சி நீக்கப்படவேண்டும் என்ற கருத்தை மறைமுகமாக வலியுறுத்தினார். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.டி.சுந்தரம் சிறைச்சாலையில் இந்நாடகத்தை ஆக்கினார்.

அரசன் ஆத்ம நாதன் இறந்த பிறகு அவன் தம்பி வீரசிம்மன் அரசனாகின்றான். ராஜகுருவின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தது. ஆத்ம நாதனின் நண்பர் கவிஞர் ஆனந்தன் இதை எதிர்த்தார். மக்களிடையே சுதந்திர உணர்வைப் பரப்பினார். ராஜகுரு, கவிஞரைச் சிறையில் அடைத்தான். அங்கு ஆனந்தன் ஒரு நாடகத்தைப் படைத்தார். அந்நாடகத்தின் பெயர் கவியின் கனவு என்பதாகும். 15 ஆண்டுகள் கழித்து இளவரசியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கவியின் கனவு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அரசி ஊர்வசி, கவிஞரின் மனைவி வாணியைக் கொன்ற நிகழ்ச்சி அந்நாடகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ராஜகுருவின் சதிகள் வெளிப்படுகின்றன. ஆத்மநாதனின் மகன் அரசை ஏற்கிறான்.

இந்நாடகத்தின் உரையாடல்களில் விடுதலை வேட்கை புலப்படுத்தப்பட்டது. சுகவீரன் என்பவன் பேசுகையில் “மக்களாய்ப் பிறந்தோம். மடிவது திண்ணம், தாய்த் திருநாட்டைத் தகர்த்திடும் எதிரிகள் மாய்ந்திடும் வரை நாம் மறப்போம் சுகத்தை… தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி நாயென வாழ்வதை விழைவது நன்றோ?” என்று விடுதலையுணர்வை வெளிப்படுத்துகிறான். கவிஞர் பேசுகையில், “சுதந்திரம் நம் வாழ்வின் ஜீவன்! நாகரிகத்தின் சின்னம்! சுயமரியாதையின் ஆத்மா! வீரத்தியாகிகளின் வெற்றிப் பரிசு! இதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பது நம் கடமை” என்று சுதந்திரத்தைப் போற்றுகிறார். கவியின் கனவு நாடகம் 2000 முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் இந்நாடகம் நடத்தப்பட்ட போது தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இதற்கெனத் தனி ரயில் விடப்பட்டது. அதற்குக் கவியின் கனவு ஸ்பெஷல் என்றே பெயரிடப்பட்டது.

3.3.3 பிற நாடகங்கள் எஸ்.டி. சுந்தரம் எழுதிய வீரசுதந்திரம் என்னும் நாடகம் வாஞ்சி, லஜபதி, பகத்சிங், குமரன் முதலான விடுதலை வீரர்களின் வாழ்க்கையைச் சித்திரித்தது. சக்தி கிருஷ்ணசாமியின் வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழ்வாணனின் புலித்தேவன், டி.கே.எஸ்.குழுவினரின் செக்கிழுத்த சிதம்பரனார், பாலசஞ்சீவியின் தண்ணீர் விட்டா வளர்த்தோம், தே.ப.பெருமாளின் சுதந்திர தீபம் முதலானவையும் விடுதலை வரலாற்றை வெளிப்படுத்திய நாடகங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. கோவை அய்யாமுத்து எழுதிய இன்பசாகரன் நாடகம் பாண்டிய அரசனை எதிர்க்கும் ஈழ மக்கள் உண்ணாவிரதம் இருப்பதாகக் காட்டிக் காந்தியின் போராட்ட முறையைப் புலப்படுத்தியது. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி தேசபக்தி அல்லது சகோதர துரோகம் என்ற நாடகத்தை நடத்தியது. மராட்டியர் முகலாயர் போரை மையமாகக் கொண்ட கதை என்பதால் வேற்றவர் ஆட்சி பற்றிய கண்டனங்கள் நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்டன.

பாவலரின் நாடகங்கள்

தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட வீரர்களின் வரலாறுகளை நாடகமாக்கித் தேசிய உணர்வை ஊட்டினார். கிருஷ்ண தேவராயர், ஹைதர்அலி, தேசிங்கு ராஜா, நெப்போலியன் முதலானவர்களின் வரலாறுகளை நாடகமாகப் படைத்துத் தம் கருத்தைப் புலப்படுத்தினார்.

டி.கே.எஸ். குழுவினரின் நாடகங்கள்

தேசிய உணர்வு கொண்ட டி.கே.எஸ்.சகோதரர்கள் ஊமைத்துரை, கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி சண்டை, மருதுபாண்டியர் முதலான நாடகங்களை நடத்தினர். இந்நாடகங்கள் தடை செய்யப்பட்டன. தமிழரின் பெருமையை உணர்த்தும் வகையில் ராஜராஜ சோழன் நாடகத்தை நடத்தினர். தமிழரின் வீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்திற்காக ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலுக்குச் சென்று ஓவியங்கள் எழுதி அரங்கு(set) போட்டு மேடையில் நடித்தனர்.

3.4 திராவிட இயக்க நாடகங்கள்

திராவிட இயக்கம், நாடகத்தைக் கருத்துப் பரப்பும் கருவியாகவும், போர்க் கருவியாகவும், கேடயமாகவும் ஆக்கிக் கொண்டது. திராவிட இயக்கம் கொள்கை பரப்பும் சாதனங்களாகவும், பகுத்தறிவைப் பரப்பும் சாதனங்களாகவும் நாடகங்களைப் படைத்தது. ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிட இனமேன்மை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை முதலான இயக்கக் கொள்கைகளைப் பரப்பியது.

3.4.1 பாரதிதாசன் நாடகங்கள் திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசன் சேரதாண்டவம், பிசிராந்தையார், தலைமலை கண்ட தேவர், கழைக்கூத்தியின் காதல், சௌமியன், நல்ல தீர்ப்பு, சத்திமுத்தப் புலவர், அம்மைச்சி, ரஸ்புடீன் முதலான வரலாற்று நாடகங்களைப் படைத்திருக்கிறார். இந்நாடகங்களில் திராவிட இயக்கக் கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டன. குறிப்பாகத் தமிழரின் ஆற்றல்களை உணர்த்துவனவாக இவரது நாடகங்கள் அமைந்தன.

பாரதிதாசன்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சேர தாண்டவம்

ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதற் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது. பரணர், வெள்ளிவீதியார் முதலானோர் பாடிய அகநானூற்றுப் பாடல்கள், ஆதிமந்தியே பாடியுள்ள குறுந்தொகைப் பாடல், இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.

சேரநாட்டிற்கும் சோழநாட்டிற்கும் அரசியல் உறவு இல்லை. சோழநாடு வலுவானதாக இருந்தது. சேரன் ஆட்டனத்தி, நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் நாடகம் ஒன்றை நடத்துகிறான். கண்டிருந்த மக்கள் ‘சோழன் வீழ்க!’ என்று முழங்குகின்றனர். ஆட்டனத்தி சோழநாடு செல்கிறான். அத்தியின் ஆடலில் ஈடுபாடு கொண்ட சோழ இளவரசி ஆதிமந்தி அவனைக் காதலிக்கிறாள். இரும்பிடர்த்தலையார் துணையால் அத்திக்கும் ஆதிமந்திக்கும் திருமணம் நடக்கிறது. சோழநாட்டில் புதுப்புனல் விழா வருகிறது. அத்தி, ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறான். ஆதிமந்தி ஆற்றோரம் அவனைத் தேடுகிறார். அத்தியை மருதி என்ற பெண் காப்பாற்றுகிறாள். மருதியை அத்தி காதலிக்கத் தொடங்குகிறான். ஆதிமந்தி அங்கு வந்து சேர மருதி ஒதுங்கிக் கொள்கிறாள். தற்கொலை செய்து கொள்கிறாள். அவளைப் போற்றிக் கடற்கரையில் கல் நடப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் வீரமும், கலைத்திறமும், நேர்மையும், ஆட்சித் திறமும் இதில் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

பிசிராந்தையார்

பாண்டிய நாட்டுப் பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையேயிருந்த சிறந்த நட்பினை இந்நாடகம் புலப்படுத்துகிறது. சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் கண்ட செய்திகளைக் கொண்டு இந்நாடகத்தினைப் பாரதிதாசன் படைத்திருக்கிறார். சில புதிய நிகழ்ச்சிகளைப் படைத்துப் பிசிராந்தையாரின் புகழை நிலைநாட்டியுள்ளார்.

பாண்டிய நாட்டில் மழை பெருக்கெடுக்கின்றது. புயல் வீசுகின்றது. இன்னலுறும் மக்களுக்குப் பிசிராந்தையார் உதவுகிறார். பாண்டிய மன்னனும் இதில் ஈடுபடுகிறான். இருவரும் மீன்பிடிக்கும் தம்பதியருக்கு வலையை இழுக்க உதவுகின்றனர். வலையில் ஒரு பெண்ணின் உடல் சிக்கியிருக்கிறது. அது கொலை எனத் தெரிகிறது. கொலை செய்தவனைக் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூன்று நாட்களில் கண்டுபிடிப்பதாகவும் தவறினால் மடிவதாகவும் அமைச்சர் சூளுரைக்கிறார்.

அவ்வாறு மூன்று நாட்களில் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அமைச்சரின் மனைவி கணவனுக்காக உயிர்ப்பிச்சை கேட்கிறாள். அமைச்சன் தூக்கில் இடப்படும் சமயத்தில் கொலைகாரன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். ஆனால் கொலைக்கான காரணத்தைக் கூற மறுக்கிறான். இன்னும் மூன்று நாட்களில் அமைச்சன் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் இல்லையேல் கொல்லப்படுவான் என்றும் அரசன் கட்டளையிடுகிறான். தண்டனை நிறைவேறவிருக்கும் சமயம் இன்னொருவன் கொலையை ஒப்புக் கொள்கிறான். நாடகத்துள் நாடகமாகக் கொலைக்கான நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன. உண்மைக் குற்றவாளி தண்டிக்கப் படுகிறான்.

சோழநாட்டு ஆட்சியைப் பிடிக்கக் கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகள் முயல்கின்றனர். சூழ்ச்சியாகப் படையெடுக்கின்றனர். பாண்டியனையும் துணையாகப் படையெடுத்து வரத் தூண்டுகின்றனர். பாண்டியனைப் பிசிராந்தையார் தடுக்கிறார். சோழனின் அருமை பெருமைகளைப் பாண்டியன் உணர்கிறான். இருப்பினும் போர் நிகழ்கிறது. தன் மக்களால் இது நேர்ந்தது என்று நொந்து போகும் சோழன் வடக்கிருந்து உயிர்விடத் துணிகிறான். தனக்கு அருகில் பிசிராந்தையாருக்கும் இடம் ஒதுக்கச் சொல்கிறான். பிசிராந்தையாரும் அங்கு வந்து வடக்கிருக்கின்றார். சோழன் பிள்ளைகள் திருந்தி மன்னிப்புக் கேட்கின்றார்கள். மன்னனும் பிசிராந்தையாரும் மடிகின்றனர்.

இந்நாடகத்தில் பழந்தமிழ் மன்னரின் சிறப்பும், புலவர் புரவலர் உறவும், நட்பு என்ற பண்பின் திறமும் உணர்த்தப் பட்டுள்ளன. இந்நாடகத்திற்காகப் பாரதிதாசனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

தலைமலை கண்ட தேவர்

இது ஒரு கற்பனை நாடகம். தலைமலை கண்ட தேவர், கண்பார்வையற்ற பாவலர். இவர் தம் விருப்பப்படி வாழும் இயல்புள்ளவர். ஒருமுறை பரத்தையின் வீட்டில் திருடச் செல்கிறார். அங்கு கட்டிலின் அடியில் மறைந்திருக்கிறார். பரத்தை, கடவுள் வணக்கம் செய்கையில் பாடல் ஒன்றைப் பாடி முடிக்க இயலாமல் திகைக்கிறாள். பாவலரான தலைமலை கண்ட தேவர் பாட்டை முடிக்கின்றார். பரத்தை தன் காதலையும் செல்வத்தையும் அவருக்குக் கொடுக்கிறாள். அவர் தமிழ்த்தொண்டு செய்ய முடிவெடுத்து அவளையும் தம்முடன் அழைத்துச் செல்கிறார். இந்நாடகத்தில் கவிதைத் திறனும் ஆர்வமும் புலப்படுத்தப் பட்டுள்ளன.

கழைக்கூத்தியின் காதல்

முத்துநகை கழைக்கூத்து ஆடுபவள். அவள் சடையநாத வள்ளலைக் காதலிக்கிறாள். வள்ளல் சாதிப்பற்று மிக்கவர். அவள் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றித் தன்னை மணந்து கொள்ளச் செய்கிறாள். சாமி மறுப்பு இந்நாடகத்தின் மையக் கருத்தாக உள்ளது. அத்துடன் ஏழை செல்வர் என்ற வேறுபாடும் மறுக்கப்படுகிறது. இதுவும் ஒரு கற்பனை நாடகம்.

சௌமியன்

மன்னன் ரவிகேது கொடுமைக்காரன். அவனால் மக்கள் துன்புறுகின்றனர். படைவீரர்களே கொள்ளை, கற்பழிப்பு முதலானவற்றில் ஈடுபடுகின்றனர். வன்முறை நாட்டில் பரவுகிறது. ஆசிரமத் தலைவர் மகள் பத்ராவை அரசகுமாரன் கற்பழித்துவிடுகிறான். ஆசிரமத் தலைவரின் தொண்டன் சௌமியன் அரசகுமாரனை எதிர்க்கிறான். இறுதியில் முடியாட்சி வீழ்த்தப்பட்டுக் குடியாட்சி ஏற்படுத்தப்படுகிறது. இதில் குடியாட்சி வலியுறுத்தப்படுகிறது.

நல்ல தீர்ப்பு

பிறை நாட்டின் படைத்தலைவன் மகள் கிள்ளையும் அமைச்சர் மகள் சாலியும் பீலிநாட்டு ஆடற்பெண் நிலவு என்பவளிடம் நடனம் கற்க விரும்புகின்றனர். பிறைநாட்டு இளவரசி முல்லை கிள்ளையிடம் அன்பு செலுத்துகிறாள். இது சாலிக்குப் பிடிக்கவில்லை. அரசியின் மோதிரம் காணாமற் போனபோது, அதைத் கிள்ளைதான் எடுத்தாள் எனச் சாலி குற்றம் சாட்டுகிறாள். கிள்ளை, பீலி நாட்டில் ஓராண்டு வாழ வேண்டுமெனத் தண்டனை வழங்கப்படுகிறது. கிள்ளை, நிலாவிடம் நடனம் கற்க இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. இதை உணர்ந்த சாலி தானே திருடியதாக மாற்றிப் பேசுகிறாள். மோதிரம் கிடைத்துவிடுகிறது. இருவருமே திருடவில்லை என்பதையும் அவர்களின் நடன ஆர்வத்தையும் அறிந்த அரசன் அவர்கள் நிலாவிடம் நடனம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறான். இது கலை ஆர்வத்தைப் புலப்படுத்தும் நாடகமாக உள்ளது.

சத்திமுத்தப் புலவர்

பாண்டிய அரசனும் அரசியும் சோலைக்குச் செல்கின்றனர். பல்வேறு காட்சிகளை ரசிக்கின்றனர். நாரை ஒன்றைப் பார்க்கின்றனர். அதன் தோற்றம் அவர்களைக் கவர்கிறது. அதன் வாய்க்கு உவமை சொல்ல முயல்கின்றனர். அரசி, கத்தரிக் கோலை உவமையாகச் சொல்கிறாள். வறுமையில் சத்திமுத்தப் புலவர் பொருள் பெறுவதற்காக அரசனைத் தேடி அப்போது அங்கு வருகிறார். நாரையொன்றைக் காண்கிறார். உடனே “நாராய்! நாராய்! செங்கால் நாராய்!” என அழைத்து அரசனிடம் தம் நிலையைக் கூறுமாறு பாடுகிறார். அதன் வாயைப் பிளவுபட்ட பனங்கிழங்குடன் ஒப்பிட்டுப் பாடுகிறார். இந்த உவமையை அருகிலிருந்த மன்னனும் கேட்கிறான். மகிழ்கிறான். பரிசு தருகிறான். புலவர் திறனையும் புரவலர் கொடையையும் இலக்கிய ஆர்வத்தையும் விளக்குகிறது இந்நாடகம்.

அம்மைச்சி

காஞ்சியில் இருக்கும் தமிழ்ப் பெண்ணான அம்மைச்சியை அடையப் பார்ப்பனர்கள் முயல்கின்றனர். தோல்வி அடைகின்றனர். தங்களுக்குக் கிட்டாத அம்மைச்சியின் வீட்டின் மீது தேரைச் செலுத்தி அழிக்கின்றனர். தமிழச்சியான அம்மைச்சியின் வீடு அழிவது கண்டு கவிஞர் வீரராகவ முதலியார் வருந்துகிறார். பார்ப்பனர்களின் கொடுமையை இந்நாடகம் விளக்குகிறது.

ரஸ்புடீன்

இரசிய நாட்டை சார் மன்னன் ஆள்கிறான். மன்னனை ரஸ்புடீன் என்பவன் இயக்குகிறான். லெனின் இதை எதிர்த்துப் போராடுகிறார். புரட்சியை உண்டாக்குகிறார். ரஸ்புடீன் வீழ்ச்சியடைகிறான். இரசிய நாடு விடுதலை அடைகிறது.

இவ்வாறு பாரதிதாசன் பல நாடகங்களைத் தம் கொள்கைகளுக்கு ஏற்பக் கற்பனையாகவும், இலக்கியச் செய்திகளின் அடிப்படையிலும், வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதியிருக்கிறார்.

3.4.2 அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் அறிஞர் அண்ணா பெரும்பாலும் சமூகச் சீர்திருத்த நாடகங்களையே எழுதியுள்ளார். சமீன்தார் காலக் கதைகளின் ஊடாக மடங்களின் செயல்பாடுகளையும் சாதி வேறுபாடுகளையும் விமரிசித்துள்ளார். அவர் எழுதிய வரலாற்று நாடகம் சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்பது.

அறிஞர் அண்ணா

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்

வீரன் சிவாஜி மராட்டிய மண்டலத்தை உருவாக்கி முடிசூடக் கருதியபோது ஆரியர்கள் உண்டாக்கிய குழப்பங்களை இந்நாடகம் எடுத்துக்காட்டுகிறது. ஆரியச் சதிகளால் வீரம் மிக்க சமுதாயம் விழுந்து விட்டதை அண்ணா எடுத்துக்காட்டித் தமிழகத்தை எச்சரிக்கிறார். சந்திரமோகன் என்பவன் சிவாஜியின் துணைவன். ஆரியரின் சூழ்ச்சி குறித்து சிவாஜிக்கு எச்சரிக்கிறான். காகபட்டரின் சூழ்ச்சியால் மராட்டியம் ஆரியருக்கு அடிமையாகிறது. சந்திரமோகன் நாடு கடத்தப்படுகிறான். சிவாஜி உண்மையை உணர்ந்து நண்பனுடன் இணைகிறான். பகுத்தறிவை வலியுறுத்தும் வகையில் சிவாஜியின் இறுதிக் கூற்று அமைகிறது. சந்திரமோகனிடம் அவன், “வீரனே! அஞ்சா நெஞ்சு படைத்த நீ, மக்களிடம் பரவியிருக்கும் மயக்கத்தைப் போக்கு. வாளால் அரசுகளை அமைத்து விடலாம்! ஆனால் அது நிலைக்க அறிவு தேவை! அந்த ஆயுதத்தை வீசு! நாடு முழுவதும் வீசு! பட்டி தொட்டிகளில் எல்லாம் வீசு! மக்களை வீரர்களாக்கு! சந்திரமோகனா, சகலரையும் சந்திரமோகன்களாக்கு! ஜெயம் பெறுவாய்!” என்று கூறுகிறான்.

இந்நாடகம் இயக்க மாநாடுகளிலும், பிற இடங்களிலும் பல முறை நடிக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, காகபட்டராக நடித்தார். இதில் சிவாஜியாக வேடம் தாங்கிய கணேசன் சிவாஜிகணேசன் என்று அழைக்கப்பட்டார்.

3.4.3 கலைஞர் கருணாநிதியின் நாடகங்கள் கலைஞர் கருணாநிதி சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றவர். இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு கற்பனையாகவும் வரலாற்று நாடகங்களைப் படைத்துள்ளார். சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ், அனார்கலி முதலான ஓரங்க நாடகங்களையும் படைத்துள்ளார். இவரது மணிமகுடம், இரத்தக் கண்ணீர் முதலான நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

கலைஞர் கருணாநிதி

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

மணிமகுடம்

இந்நாடகம் மேரிகாரெல்லி என்பவர் எழுதிய டெம்பொரெல்லா என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. மணிமகுட புரியில் ஏழைகள் வாழும் பகுதியை அழித்துவிட்டுப் பார்ப்பனர்கள் ஆலோசனைப்படி ஒரு கோயில் கட்டுவது என அரசன் முடிவு செய்கிறான். இதை மக்கள் எதிர்க்கிறார்கள். புரட்சி வெடிக்கிறது. இது ஆரியச் சூழ்ச்சியையும், ஏழைகள் எழுச்சியையும் உணர்த்துகிற நாடகம். கற்பனையான இவ்வரலாற்று நாடகம் எஸ்.எஸ்.ராஜேந்திரன் குழுவினரால் நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடிக்கப்பட்டது.

இரத்தக் கண்ணீர்

இரத்தக் கண்ணீர் நாடகமும் கற்பனை வரலாற்று நாடகம். சாமியார் ஒருவரின் திருவிளையாடல்களை விளக்குகிறது இந்நாடகம். பழுதூர் இளவரசன் சுகதேவன், முத்தாயி என்ற பெண்ணை விரும்புகிறான். முத்தாயியோ முத்தனை விரும்புகிறாள். முத்தனைப் பழுதூர் இளையராணி விரும்புகிறாள். முத்தாயியும் முத்தனும் காதலிக்கிறார்கள். சுகதேவன் முத்தாயியைக் கவர முயல்கிறான். முத்தனை ஒற்றன் என்று குற்றம் சாட்டிக் கொன்று விடுகிறான். முத்தாயி, தனக்குப் பிறக்கும் மகனைக் கொண்டு பழிவாங்குவேன் என்று சபதம் செய்கிறாள்.

3.4.4 ப.கண்ணனின் நாடகங்கள் திரைப்பட உரையாடல்களை எழுதியுள்ள ப.கண்ணனின் நாடகங்கள் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டவை. இவரது வரலாற்று நாடகங்களான நந்திவர்மன், பகைமை வென்றான், பாண்டிய மகுடம் முதலானவை குறிப்பிடத் தக்கன.

நந்திவர்மன்

இந்நாடகம் தேவி நாடக சபையால் நடத்தப் பெற்றது. இது வானொலி நாடகமாகவும் ஒலிபரப்பப்பட்டது. நந்திவர்மனும் பட்டத்தரசி சங்காதேவியும் நல்ல கலைஞர்கள். சங்கா சமண மதம். நந்திவர்மன் சைவ மதம். சாளுக்கிய மன்னன் பங்கயன் பல்லவ நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறான். நந்திவர்மனின் தம்பி சந்திரவர்மன் இதற்குத் துணை செய்கிறான். சங்காவும் நந்தியும் வேறு மதத்தவர்கள் என்ற பிரச்சினையைக் கிளப்புகிறான். அண்ணனை அறம்பாடிக் கொல்ல முயல்கிறான். கலம்பகம் பிறக்கிறது. கலம்பக அரங்கேற்றத்தை ஏற்பாடு செய்து சிதையில் இருந்து பாடலைக் கேட்கிறான். சிதை எரிகிறது. அரசன் இறக்கிறான். நந்தியின் மகன் நிருபதுங்கன் சந்திரவர்மனைக் கொல்கிறான்.

பகைமை வென்றான்

குலோத்துங்க சோழன் காலப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். இது கலிங்கத்துப்போர் பற்றியது. சோழனுக்கும் இலங்கை மன்னனுக்கும் நடந்த போரையும், இலங்கை அரசனுக்கும் சோழன் மகளுக்கும் இடையிலான காதலையும் மையமாகக் கொண்டது இந்நாடகம்.

பாண்டிய மகுடம்

வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் நிகழ்ந்த அரசுரிமைப் போரை மையமாகக் கொண்டது இந்நாடகம். இருவருக்கும் இடையிலான போட்டியால் பிற நாட்டு ஆதிக்கம் பாண்டிய மண்டலத்தில் ஏற்படுகிறது. மாலிக்கபூர் படையெடுத்து வருகிறான். வேணாட்டரசன் இரவிவர்மன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றுகிறான். வீரபாண்டியன், பாண்டிய நாட்டைப் பாண்டியரே ஆள முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனச் சுந்தர பாண்டியனிடம் கூறுவதுடன் இந்நாடகம் நிறைவுபெறுகிறது.

3.4.5 ஏ.கே.வேலன் நாடகங்கள் சாம்பாஜி, கங்கைக்கு அப்பால், காவேரிக் கரையினிலே, பகைவனின் காதலி முதலான வரலாற்று நாடகங்களை இவர் எழுதியிருக்கிறார்.

சாம்பாஜி

மத வெறியும் மாது வெறியும் மாவீரனையும் வீழ்த்திவிடும் தன்மையன என்பதை உணர்த்துகிறது இந்நாடகம். மராட்டிய மன்னன் சிவாஜியின் மகன் சாம்பாஜி. அவன் பெண்பித்து மிக்கவனாக இருக்கிறான். ஒளரங்கசீப் அவனை ஆட்சியிலிருந்து துரத்துகிறான். சிர்கே என்பவன் காட்டிக் கொடுக்க ஒளரங்கசீப் சாம்பாஜியைப் பிடித்து விடுகிறான். சாம்பாஜி ஒளரங்கசீப்பிற்கு முன்னால் தன்னை மாவீரனாகக் காட்டிக் கொள்கிறான். இதைக் கண்டு ஒளரங்கசீப்பின் மகள் அவனைக் காதலிக்கிறாள். சாம்பாஜி இறந்த பின் அவள் விதவை நிலையினை அடைகிறாள். அறிஞர் அண்ணாவின் சந்திரமோகன் நாடகத்தின் தொடர்ச்சியாக இந்நாடகம் அமைந்துள்ளது.

கங்கைக்கு அப்பால்

இராசேந்திர சோழனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றியை விளக்குவது இந்நாடகம். தமிழர்களின் வீரத்தை உணர்த்துவதாக நாடகம் அமைந்துள்ளது. கங்கை கொண்டவனாக இராசேந்திரன் ஆவதைச் சித்திரிக்கிறது இந்நாடகம்.

காவேரிக் கரையினிலே

குலோத்துங்க சோழன் நிகழ்த்திய தலைக்காட்டுப் போரை இந்நாடகம் சித்திரிக்கிறது. காவிரியின் கரையில் உருவான வல்லரசுகளை நினைவூட்டுவது போல நாடகம் அமைந்துள்ளது. கங்கை நாட்டுப் பெண் பைரவி சோழனைப் பழிவாங்க நடனப் பெண்ணாகச் சோழநாடு வருகிறாள். கொல்லிமலையிலுள்ள இருளப்பன் அவளுக்கு உதவுகிறான். அவள் விருப்பப்படி புலிக்கொடியை அறுத்தெறிகிறான். பல திருப்பங்களுக்கு அவன் காரணமாகிறான். இறுதியில் இருளப்பன் வேடத்தில் வந்தவன் குலோத்துங்கன் என்பது வெளிப்படுகிறது. அவன் கன்னரதேவி என்னும் பைரவியை மணக்கிறான்.

பகைவனின் காதலி

கரிகாலன் தன் பகைவன் இருங்கோவேளோடு மோதி அடைகின்ற வெற்றியை இந்நாடகம் புலப்படுத்துகிறது.

3.4.6 சி.பி.சிற்றரசு நாடகங்கள் வரலாற்று நாயகர்கள் பலரைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள சி.பி.சிற்றரசு பல வரலாற்று நாடகங்களை எழுதியுள்ளார். இவர் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களைப் படைத்துள்ளார்.

வரலாற்று நாடகங்கள்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

தங்க விலங்கு

மார்த்தாண்டபுரத்து மன்னன் பார்வை இழக்கிறான். தேனார்ஜி என்னும் ஆரியன் அவனை ஆட்டிப் படைக்கிறான். தேனார்ஜியின் தங்கை தேவிகாவும் இதற்குத் துணை செய்கிறாள். ஆரியர்கள் யாகம், வேதம், சாஸ்திரம் என்பவற்றோடு பெண்களையும் பயன்படுத்தித் தமிழர்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று காட்டுகிறது இக்கற்பனை நாடகம்.

இரத்த தடாகம்

இந்நாடகம் பாண்டிய நாட்டில் நின்ற சீர்நெடுமாறன் சமணர்களை அழித்த வரலாற்றைக் கூறுகிறது. சைவநெறி பரப்புவதற்காகத் திருஞானசம்பந்தரும் பாண்டியனும் சதிசெய்து எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றியதாக நாடகம் கூறுகிறது.

3.4.7 தில்லை வில்லாளன் நாடகங்கள் ஆரியரின் வஞ்சம், தமிழர்களின் எழுச்சி முதலானவற்றை மையமாகக் கொண்டு இவர் நாடகங்களைப் படைத்திருக்கிறார். பேசும் ஓவியம், திரை முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை.

பேசும் ஓவியம்

மகேந்திரன் என்னும் அரசன் தன் மனைவி மரகதவல்லி என்பவளை நாடுகிறான். இதற்குக் காரணமானவர் குரு கோவிந்தானந்தர். புகழ் பெற்ற ஓவியன் குமணன் குருவை எதிர்க்கிறான். குமணன் ஓவியக் காட்சி நடத்துகிறான். ஓவியங்களின் மூலமே தன் கருத்தைப் பரப்புகிறான். புரட்சி வெடிக்கிறது.

திரை

இந்நாடகம் ராஜா தேசிங்கு பற்றியது. சோதிடர் பைய ராமகிருஷ்ணய்யர், ராஜா தேசிங்கு தன் மனைவியை மூன்று ஆண்டுகள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்கிறான். பார்த்தால் நாட்டில் பஞ்சம் வரும் என்று அச்சுறுத்துகிறான். போர் மூள்கிறது. போருக்குப் போகும் முன் ராஜா தேசிங்கு மனைவியைப் பார்த்துவிடுகிறான். போரில் தேசிங்கு இறக்கிறான். மனைவி தீக்குளித்து இறக்கிறாள். சோதிடன் தன் பேச்சை மீறியதால் இந்த விளைவு என்கிறான். அரசியின் தோழி சோதிடனின் சோதிடத்தைப் பொய்யெனக் காட்ட விரும்புகிறாள். அவன் தனக்கு நல்ல எதிர்காலமிருப்பதாகச் சொல்ல அவனைத் தீயில் தள்ளிக் கொன்று சோதிடத்தைப் பொய்யாக்குகிறாள். சோதிடம் பொய் என்பதை இந்நாடகம் உணர்த்துகிறது.

3.4.8 பிற நாடகங்கள் அரங்கண்ணலின் ரஸ்புடீன், கே.ஏ.மதியழகனின் பவளநாட்டு எல்லை, கா.காளிமுத்துவின் மன்னர் திருமலை, கண்ணதாசனின் ராஜ தண்டனை, சீவகங்கை சீமை, தமிழ்க்குடிமகன் எழுதிய செம்பியன் செல்வி, பி.சி.கணேசன் எழுதிய சோமநாதபுரத்துச் சிலை முதலான நாடகங்களும் குறிப்பிடத் தக்கவை.

திராவிட இயக்கத்தவர்கள் கொள்கை விளக்கம், மொழிப்பற்று, அரசியல் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்பு, ஆரிய எதிர்ப்பு முதலானவற்றை வரலாற்று நாடகங்கள் மூலமாகப் பரப்பினார்கள்.

எஸ்.எஸ்.தென்னரசு நாடகம்

எஸ்.எஸ்.தென்னரசு எழுதிய வரலாற்று நாடகம் சந்த மழை என்பது. இது புத்த பெருமானின் வாழ்க்கையை விளக்குகிறது. நாடகம், ஆரியக் கொள்கைகளைத் தாக்குகிறது. பிராமணர்கள் பித்தலாட்டக்காரர்கள் என்று புத்தர் கூறுவதாக நாடகம் அமைந்துள்ளது.

கே.ஜி.இராதாமணாளன் நாடகம்

இவருடைய அரக்கு மாளிகை நாடகம் பிராமணர்களின் சூழ்ச்சி பற்றியது. சாணக்கியன், மௌரிய அரசு நிலைக்கப் பாடுபடுகிறான். ஆரியர்கள் இதை ஒழிக்க நினைக்கின்றனர். மௌரிய அரச வழியில் வந்தவன் பிருகத்ரதன். இவன் ஆரிய ஆதரவாளன். சமண புத்த மதங்களைச் சார்ந்தவர்களின் தலைகளை வெட்ட ஆரியர் பதஞ்சலி கட்டளையிடுகிறார். தனக்கு முழுமையாக ஆதரவளிக்காத பிருகத்ரதனைக் கொல்ல அக்னிமித்திரன் என்பவனைப் பதஞ்சலி ஏவுகிறார். பிருகத்ரதன் கொல்லப்படுகையில் அக்னிமித்திரனிடம் ‘அரசாட்சி என்பது அரக்கு மாளிகை போன்றது. உனக்கும் இந்நிலை வரும்’ என்று எச்சரிக்கிறான்.

3.5 கவிதையும் இலக்கியமும்

எல்லா மொழிகளிலும் தொடக்கத்தில் கவிதை நாடகங்கள் இருந்திருக்கின்றன. உரைநடை நாடகங்கள் பின்னரே தோன்றியுள்ளன. சங்க இலக்கிய அகப்பாடல்கள் நாடகத் தனிமொழி போலவே அமைந்திருக்கின்றன. பள்ளு, குறவஞ்சி, நொண்டி முதலான நாடக வகைகள் கவிதையாக எழுதப்பட்டதையும், தெருக்கூத்து நாடகங்களில் பாடல்களே இடம் பெற்றதையும் இராம நாடகக் கீர்த்தனையையும் நாடகங்களில் கவிதையின் செல்வாக்கிற்குச் சான்றாகக் கொள்ளலாம். சுந்தரம் பிள்ளை முதல் வரலாற்று நாடகத்தைக் கவிதையில்தான் எழுதினார். இதைத் தொடர்ந்து பல கவிதை நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. அதைப் போலப் பழைய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டும் நாடகங்கள் எழுதப்பட்டன.

3.5.1 பழைய கவிதை நாடகங்கள் த.அ.சுந்தரராசனின் வேங்கையின் வேந்தன் சோழ அரசர்களான விஜயாலயன், ஆதித்தன் முதலானோரின் வரலாற்றைக் கூறுகிறது. நா.கனகராசையர் விஜயநகரின் வீழ்ச்சியை மறைந்த மாநகர் என்னும் நாடகத்தில் காட்டுகிறார். நாயக்க அரசின் காலத்தில் சிறந்த வீரனாகத் திகழ்ந்த விசுவநாதன் வரலாற்றை சி.எஸ்.முத்துசாமி ஐயர் விசுவநாதம் என்ற நாடகமாகப் படைத்துள்ளார். இதே வரலாற்றை ம.கோபாலகிருஷ்ணன் விசுவநாதன் அல்லது கடமை முரண் என்ற நாடகமாகப் படைத்துள்ளார்.

சி.எஸ்.முத்துசாமி ஐயர் ராஜாதேசிங்கு வரலாற்றை ராஜா தேசிங்கு என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளார். தி.இலக்குவணப் பிள்ளை கேரளநாட்டு வீரர்களுள் ஒருவரான இரவிவர்மன் வரலாற்றை இரவிவர்மன் என்று நாடகமாக்கியுள்ளார். சிவகங்கை மன்னர்களான மருது சகோதர்களின் வரலாற்றைப் பாலசஞ்சீவி தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். நடராஜப்பிள்ளை புகழேந்தி என்ற கவிதை நாடகத்தை எழுதியுள்ளார். மறைமலை அடிகளாரின் அம்பிகாபதி அமராவதியும் கவிதை நாடகமே. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை படைத்த கற்பனை நாடகமான மனோன்மணீயம் கவிதை நாடகமாக வெளியாயிற்று.

மனோன்மணீயம்

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை படைத்த நாடகமான மனோன்மணீயம் லார்டு லிட்டன் என்பவர் எழுதிய இரகசியவழி (Secret Way) என்ற ஆங்கிலக் கதைப்பாடலைத் தழுவி எழுதப்பட்டதாகும். பாண்டியருக்கும் சேரருக்கும் இடையே நாஞ்சில் நாடு என்ற பகுதியின் உரிமை குறித்து நிகழ்ந்த போர் பற்றியது இக்கற்பனை நாடகம். இந்நாடகம் மறைமுகமாக நாட்டு உரிமை உணர்வையும், அந்நியருக்கு அடிமைப்படக் கூடாது என்ற விடுதலை உணர்வையும், தமிழின் உணர்வையும் ஊக்குவிப்பதாக அமைந்தது. இது பல கவிதை நாடகங்களுக்கு முன்னோடியாகவும் அமைந்தது.

3.5.2 பழைய இலக்கிய நாடகங்கள் சங்க இலக்கியத்தில் காணும் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு சிலர் நாடகங்களைப் படைத்துள்ளனர். புலவர் ஆ.பழனியின் அனிச்ச அடி, செ.உலகநாதனின் அன்னி மிஞிலி, உத்திரங்கண்ணனின் கரிகால் வளவன் இவ்வாறு படைக்கப்பட்டுள்ளன. கு.ராசவேலுவின் அணை கடந்த வெள்ளம், கோவி.மணிசேகரனின் பிறவிப் பெருங்கடல் க.த.திருநாவுக்கரசுவின் அடிமை விலங்கு, பூவண்ணனின் வளவன் பரிசு முதலான நாடகங்களும் குறிப்பிடத் தக்கவை.

ஐசக் அருமைநாதனின் முல்லை மாடம், நெடுமான் அஞ்சி முதலானவையும், கண்ணனின் தமிழ் வாழத் தலை கொடுத்தான், வ.சுப.மாணிக்கத்தின் மனைவியின் உரிமை, பா.கிருட்டினனின் வள்ளல் பேகன் முதலான நாடகங்கள் சங்க கால வள்ளல்களின் வரலாற்றைக் கூறுகின்றன. சிவ.குப்புசாமியின் சங்க கால வள்ளல்கள் நாடகமும் இத்தகையதே.

ஆர்.வெங்கடாசலம் சிலப்பதிகார வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை இமயத்தில் நாம் என்ற நாடகமாக எழுதியுள்ளார். ஏ.என்.பெருமாள் மணிமேகலைக் காப்பியச் செய்தியைக் கொண்டு பீலிவளை என்ற நாடகத்தை எழுதியுள்ளார். வி.எஸ்.வேங்கடராமன் எழுதிய நாகநாட்டு இளவரசி அல்லது பீலிவளை என்பதும் இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டது.

3.6 தொகுப்புரை

வரலாற்று நாடகங்கள் முற்காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை அறிய உதவுகின்றன. வரலாற்றைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. வரலாற்று மூலங்களுக்கு உருக்கொடுத்து வரலாற்று மனிதர்களுக்கும் உருக்கொடுத்துக் கருத்தூட்டுகின்றன. அறிவுறுத்தவும், பொழுதுபோக்கவும் உதவுகின்றன. தேசிய எழுச்சிக்கும், சமூக இயக்கங்களின் கருத்துப் பரப்பலுக்கும் தமிழ் இனத்தின் சிறப்பைப் புலப்படுத்தவும் தமிழகம் அல்லாத பகுதிகளின் நிகழ்வுகளைக் காட்டவும் பெரியவர்களின் வரலாறுகளை உணர்த்தவும் வரலாற்று நாடகங்கள் பயன்பட்டிருக்கின்றன. மேடை அமைப்பின் மூலமும், ஒப்பனையின் மூலமும், மொழியின் மூலமும் கடந்த காலத்தை நம்முன் நிறுத்தி வெற்றி பெற்றிருக்கின்றன.

பாடம் - 4

சமூகச் சீர்திருத்த நாடகங்கள்

4.0 பாட முன்னுரை

தமிழில் சமூக நாடகங்கள் மேடை நாடகங்களாகவும் படிக்கும் நாடகங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் உள்ளடக்கத்திலும் அமைப்பிலும் நிகழ்த்து முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் பொழுதுபோக்குக் கூறுகள் இருந்தாலும் சமூகத்தின் நிலையை அவ்வப்போது உணர்த்தும் வாயில்களாகவும் இவை இருக்கின்றன. அரசியலின் ஆயுதமாகவும் இவை திகழ்கின்றன. சமூக நாடகங்களின் வரலாறு சமூக வரலாறாகவும் இருக்கிறது என்பதால் இவற்றைப் பற்றி அறிந்து கொள்வது தேவையானதாகும். சமூக நாடகங்களின் வரலாறு, விலாச நாடகம், நாவல்களை நாடகமாக்கல், பம்மல் சம்பந்தனாரின் நாடகத் தொண்டு, தேசிய நாடகங்கள், திராவிட இயக்க நாடகங்கள், சமூக உணர்வு நாடகங்கள், நவீன நாடகங்கள் முதலானவை குறித்துக் காண்போம்.

4.1 சமூக நாடக வரலாறு

தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் நாடகங்கள் தோன்றிய வரலாற்றை முதலில் நோக்குவோம்.

4.1.1 பத்தொன்பதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதில் மேடை நாடகங்களும் படிக்கும் நாடகங்களும் உருவாயின. வானொலி, தொலைக்காட்சி முதலானவற்றின் போட்டி இல்லாமையால் அவை விரைவாக வளர்ச்சி பெற்றன. அப்போது மக்களிடம் சமயவுணர்வு ஓங்கியிருந்தது. அதனால் நாடகங்கள் பெரும்பாலும் புராண இதிகாசக் கருத்துகளையே கொண்டிருந்தன. தெருக்கூத்தின் மூலம் மக்கள் அறிந்திருந்த கதைகளே நாடகங்களாகத் தரப்பட்டன. அதிலும் பாடலுடன் கூடிய நாடகங்களையே மக்கள் பார்க்க விரும்பினர். சமூக உணர்வு முளைவிடத் தொடங்கியதன் அடையாளமாகச் சில சமூக நாடகங்களும் உருவாயின. விலாச நாடகங்கள் என்ற பெயரில் நாடகங்கள் நடத்தப்பட்டன. பாட்டு வசனம் முதலானவை சம அளவில் இடம்பெறும் வகையில் நாடகங்கள் உருவாக்கப்பட்டன.

4.1.2 இருபதாம் நூற்றாண்டு நாடகம் பொழுதுபோக்கிற்கு மட்டுமன்றிச் சமூகத்திற்கு உதவுவதும் ஆகும் என்ற உணர்வு சமூக நாடகங்களின் வளர்ச்சிக்கு வழிகோலியது. சமூக நாவல்கள் பல, சமூக நாடகங்களாக ஆக்கப்பட்டன. தேசிய உணர்வு முளைவிட்டு அது பரப்பப்பட வேண்டிய சூழலில் சமூக நாடகங்கள் மேலும் வளர்ச்சி பெற்றன. அத்துடன் புராண இதிகாச நாடகங்களிலும் கூடச் சமூகக் கருத்துகள் ஊடாடின. தொடர்ந்து திராவிட உணர்வுகள் பரப்பப்பட்டதால் சமூக நாடகங்கள் பெருகின.

விடுதலைக்குப் பின் சமூக நாடகங்கள், மேலும் பெருகின. சமுதாயம் பற்றிய பொதுவான கருத்துகள் நாடகங்களில் இடம் பெற்றன; நடுத்தர வர்க்கத்தினரின் சிக்கல்கள் வெளியிடப்பட்டன. தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்கள் பேசப்பட்டன; சமூகச் சீர்கேடுகளான சாதிச் சிக்கல்கள் சாடப்பட்டன. கலப்பு மணம், பெண் முன்னேற்றம், தலைமுறை இடைவெளி, மக்களாட்சியின் குறைகள் எனப் பல செய்திகள் நாடகங்கள் வாயிலாகப் பரப்பப்பட்டன. எளிய மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் பேசப்பட்டன. மனித இன ஏற்றத் தாழ்வு, மனித உரிமை பாதிப்பு, அரசியல்வாதிகளின் ஒழுக்கக் கேடு, பொருளியல் சீர்கேடு, வேலையில்லாத் திண்டாட்டம், புரட்சி உணர்வு முதலானவற்றைக் காட்டுகிற நவீன நாடகங்கள் உருவாக்கப்பட்டன.

4.2 தொடக்கக் காலச் சமூக நாடகங்கள்

விலாசம் என்று முடியும் தலைப்புகளில் நாடகங்கள் பல இயற்றப்பட்டன. அவற்றில் டம்பாச்சாரி விலாசம், பிரதாப சந்திர விலாசம், ஊதாரிப்பிள்ளை விலாசம் ஆகியன குறிப்பிடத் தக்கன.

4.2.1 விலாச நாடகங்கள் விலாசம் என்பது போல நாடகம் என்ற பெயரிலும் நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. காசி விசுவநாத முதலியார் தாசில்தார் நாடகம் (1857), பிரம்ம சமாஜ நாடகம் (1871) முதலான நாடகங்களையும் எழுதியுள்ளார். தாசில்தார் நாடகம் தாசில்தார், கணக்குப் பிள்ளை, மணியக்காரர் முதலானோரின் ஊழல்களை அச்சமின்றி வெளிப்படுத்தியது. ராஜாராம் மோகன்ராயின் பிரம்ம ஞான சபையில் ஈடுபாடு கொண்டிருந்த காசி விசுவநாத முதலியார் பிரம்ம சமாஜ நாடகம் என்ற நாடகத்தை எழுதினார். உருவ வழிபாடு மறுப்பு, விதவை மறுமணம், பலகடவுள் மறுப்பு முதலானவற்றை இதில் அவர் வலியுறுத்தினார்.

பம்மல் சம்பந்தனார் தாசிப்பெண் என்ற நாடகத்தை எழுதினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாடக ஆசிரியர்கள் நாடு ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்று விரும்பினர்; இறை உணர்வை வளர்க்க விரும்பினர்; மூடநம்பிக்கையைக் குறைக்க விரும்பினர்; மேலைநாட்டு நாகரிகத்தின் தாக்கம் உள்நாட்டுச் சமுதாயத்தில் ஏற்படுத்தும் மாறுதல்களைச் சுட்டிக் காட்ட விரும்பினர்.

சைதாபுரம் காசிவிசுவநாத முதலியார் முதல் சமுதாயச் சீர்திருத்த நாடகத்தைப் படைத்தார் எனலாம். அவர் எழுதிய டம்பாச்சாரி விலாசம் (1857) மேடையில் நடிக்கப்பட்டது. பின் (1867) நூலாகவும் வெளிவந்தது. தம் காலத்துச் சமூக நிலையை அவர் நாடகமாக்கினார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து வந்த பணக்காரர் ஒருவரின் மகன், தாசி மோகத்தால் சீரழிந்துபோன வரலாற்றை ஆசிரியர் நாடகமாக எழுதியுள்ளார். அங்கப் பாகுபாடு, கள மாறுதல் இன்றி நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. கூத்து மரபைப் போலக் கட்டியங்காரன் கதையை நடத்துவதாக அவர் எழுதியிருந்தார். நாடகத்தில் பாடல்களும் பழமொழிகளும் நகைச்சுவையும் நிறைய இடம்பெறுகின்றன. பல பாத்திரங்கள் இடம்பெறுகின்றார்கள். இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. எழுதப்பட்ட நாளிலிருந்து எண்பது ஆண்டுகள் வரை இந்நாடகம் மேடையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. நாடகத்தைப் பார்த்த பலர் ஆடம்பர வாழ்வையும் பரத்தையர் உறவையும் விட்டுவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ப.வ.ராமசாமி ராஜு எழுதிய பிரதாப சந்திர விலாசம் (1877) நாடகமும் தீய நட்பு, குடிப்பழக்கம் முதலானவற்றின் தீமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. பிரதாப சந்திரன் என்பவன் ஷோக் சுந்தரம், மத்தாப்பு சுந்தரம் என்பவர்களின் வலையில் விழுகிறான். பின் திருந்துகிறான். மனோன்மணி என்ற நல்ல பெண்ணை மணந்து வாழ்கிறான்.

இந்நாடகத்தில் சென்னையில் வழங்கும் பல்வேறு மொழிகளான தெலுங்கு, உருது முதலான மொழிகளையும் கலந்து உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. பழமொழிகளும் நிறைய இடம் பெற்றுள்ளன. இதில் முதல் காட்சியில் மட்டும் கட்டியங்காரன் வருவதாகக் காட்டப்பட்டுள்ளது. 12 அங்கங்கள், காட்சிப் பிரிவினைகள் என்ற அமைப்பும் உள்ளது. ஆங்கிலப் படிப்பின் நன்மை, சுற்றுலா விவரங்கள் முதலான செய்திகளும் கூறப்பட்டுள்ளன.

மரியதாஸ் என்பவர் ஊதாரிப்பிள்ளை விலாசம் (1898) என்ற நாடகத்தினை எழுதியுள்ளார். செல்வன் ஒருவன் தாசியிடம் பொருள் இழந்து இயேசுவின் அருளால் திருந்துவதாகக் கதை அமைப்பு உள்ளது. டம்பாச்சாரி விலாசம் போலவே அமைப்புடைய நாடகம் இது.

4.2.2 நாவல்கள் நாடகமாதல் சமூக நாடகங்களுக்கு இருந்த வரவேற்பின் காரணமாக அக்காலத்தில் எழுதப்பட்டிருந்த சமூக நாவல்களை நாடகமாக்கினர். கந்தசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு வின் நாவல்களான இராஜேந்திரா, சந்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன், ராஜாம்பாள் முதலானவற்றை நாடகமாக்கினார். ராஜேந்திரா நாவல் வரதட்சணைக் கொடுமையைக் கண்டித்தது. வரதட்சணை கொடுக்க முடியாத பெண் அதற்காக விபசாரத்தில் ஈடுபட்டுப் பணம் சேர்க்கிறாள். பின் கணவனுடன் சேர்கிறாள். கணவனும் தன் வாடிக்கையாளர்களில் ஒருவன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். சந்திரகாந்தா, திருக்கல்லூர் பண்டாரசந்நிதியின் போலித்தனத்தையும், சமூக விரோதச் செயலையும் எடுத்துக்காட்டுகிறது. ராஜாம்பாள், முதியவரை மணந்து கொண்டு துன்புறும் இளம்பெண் பற்றியது. இதில் குழந்தை மணம் கூடாது என்பது அறிவிக்கப்பட்டது. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா நாவலையும் கந்தசாமி முதலியார் நாடகமாக்கினார்.

வே.சாமிநாத சர்மா தாகூரின் நாவலை ஜீவபாலன் என்று நாடகமாக்கினார். இது விலங்குகளைப் பலியிடுதலைக் கண்டிக்கிறது.

4.3 பம்மல் சம்பந்தனாரின் நாடகங்கள்

ஆங்கில மயப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் குரலாகவும் எழுத்து வாசிப்பின் அடிப்படையிலும் நாடகங்கள் மாறின. தொழில் முறை மற்றும் பயில்முறை நிகழ்த்து கலையாக நாடகம் ஆகியது. தமிழகத்தில் அப்போதிருந்த பார்சி மராத்தி நாடகக் குழுக்கள் போலவே நாடக சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுணவிலாச சபா அத்தகைய சபைகளில் ஒன்று.

4.3.1 சீர்திருத்த நாடகங்கள் நாடக உரையாடல்களில் பாடல்கள் குறைக்கப்பட்டன. பேசும் மரபு சார்ந்த இயல்பான வழக்குமொழி பயன்படுத்தப்பட்டது. அரங்க அமைப்பிலும் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் சம்பந்தனார் மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒழுங்கு, நேரக் கட்டுப்பாடு முதலானவை வலியுறுத்தப்பட்டன. புராண நாடகம், வரலாற்று நாடகம் என்பவற்றோடு சமூக நாடகங்களையும் அவர் நடத்தினார்.

பொன் விலங்குகள் நாடகம் சிக்கல்களால் அலைக்கழிக்கப்பட்ட குடும்பம் திரும்பவும் சீரடைந்து சிறப்பதைக் காட்டியது. குடும்ப வாழ்வு சீரானால் சமூக வாழ்வு சீரடையும் என்பதை இந்நாடகம் உணர்த்தியது. விஜயரங்கம் நாடகம் குடும்பத்தில் உருவாகும் ஐயவுணர்ச்சியினால் ஏற்படும் பிரிவை உணர்த்துகிறது. உத்தம பத்தினி நாடகம் கணவனால் மிகவும் கொடுமைப் படுத்தப்படும் பத்தினிப் பெண் அடையும் சோதனைகளைக் காட்டுகிறது. குறமகள் நாடகம் தாழ்ந்த குலத்தில் தோன்றியோரும் உள்ளத்தில் ஊறும் உணர்வில் உயர்குலத்தினரை ஒத்தவர்கள் என்பதை விளக்குகிறது. பிராமணனும் சூத்திரனும் நாடகம் சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு காண்பது அறிவியலுக்கு ஒத்தது இல்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

சதிசக்தி, வைகுண்ட வைத்தியம், சபாபதி முதலான நகைச்சுவை நாடகங்களையும் சம்பந்தனார் எழுதியுள்ளார். ஆயினும் இவரது நாடகங்களில் நாட்டு விடுதலை உணர்வின் பாதிப்பு என்பது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

4.4 தேசிய நாடகங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா முதலானவர்களின் விடுதலைப் போராட்ட முயற்சி ஒடுக்கப்பட்டது. இதனால் விடுதலை உணர்வு எழுச்சி பெற்றது. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் முதலானவற்றைப் பரப்ப நாடகம் தலைப்பட்டது. வீரேசலிங்கம் பந்துலு, பெரியார், வரதராஜுலு, திரு.வி.க. முதலானோரின் காந்தியச் சிந்தனைகள் பரவின. இவையும் நாடகத்தில் வெளிப்பட்டன. ஜாலியன் வாலாபாக் படுகொலை நாடகத்தை அரசியல் மயப்படுத்தியது. சத்தியமூர்த்தி முதலானோர் தேசிய நாடக முயற்சிகளைத் தூண்டினார்கள்.

4.4.1 தேசிய உணர்வு நாடகங்களில் கிடைத்த பணம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தரப்பட்டது. பரந்துபட்ட பாமர மக்கள் தமது நாடகங்களுக்கான பார்வையாளர்கள் என்பதை நடிகர்கள் உணர்ந்தார்கள். அன்றிருந்த ஒரே மக்கள் தொடர்புச் சாதனமான நாடகத்தை விடுதலைப் போராட்டத்திற்குப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்க மாற்றம் எனலாம். நாடகக் கலைஞர்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொன்னார்கள்; சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று எடுத்துக்காட்டினார்கள். நாடகக் கலைஞர்களுக்கு இருந்த நெஞ்சுரம், தியாக மனப்பான்மை, சமூகப் பொறுப்பு முதலானவை பாராட்டத் தக்கன.

பாடல்கள்

புராணம் வரலாறு சமூகம் என எல்லா நாடகங்களிலும் தேசவிடுதலைப் பாடல்கள் இடம்பெறச் செய்தார்கள். விடுதலை வீரர்கள் பற்றிய பாடல்கள் இடம்பெற்றன. பாரதியார் பாடல்களும் பாடப்பட்டன. மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை முத்துசாமிக் கவிராயர், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதியார் முதலானோரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. ரவுலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம் என எல்லாமே பாடல் பொருளாயின. கொக்கு விரட்டும் வள்ளி, மானம் காக்க வாதிடும் திரௌபதி, மயானம் காக்கும் அரிச்சந்திரன், நாரதர், பாண்டவர் என எல்லாரும் விடுதலைப் பாடல்களைப் பாடினர். எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சி.எம்.கமலம், எஸ்.ஆர்.ஜானகி, எம்.ஆர். கமலவேணி, ஒளவை தி.க.சண்முகம் முதலானோர் விடுதலை இயக்கப் பாடல்களைப் பாடினர். பின்பாட்டுக்காரர்களும் இடைவேளையில் பாடல்களைப் பாடினர்.

தேசியச் சின்னங்கள்

விடுதலைப் போரை அடையாளப் படுத்துகிற சின்னங்களையும் அரசியல் முழக்கங்களையும் நாடகங்களில் பயன்படுத்தினார்கள். காந்தி குல்லாய், சர்க்கா (இராட்டை) கதராடை முதலானவை காட்சிகளில் இடம்பெற்றன. அலிபாதுஷா என்ற வரலாற்று நாடகத்தில் அரசன் அவையில் வீரர்கள் மூவர்ணக் கொடியை நினைவூட்டுவது போல மூன்று வண்ணங்களிலும் உடையணிந்து இருப்பதாகக் காட்டப்பட்டது.

முதல் தேசிய நாடகம்

பண்டித கோபாலாச்சாரியார் எழுதிய ஸ்ரீ ஆர்யசபா (1894) என்பதுதான் முதல் தேசிய நாடகம் எனலாம். காங்கிரசு இயக்கத்தின் நோக்கம், குறிக்கோள், செயற்பாடுகள் முதலானவற்றை மக்களுக்குப் புலப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நாடகம். இதில் ஐந்து அங்கங்கள் இருந்தன. ஒவ்வோர் அங்கத்திலும் இரண்டு காட்சிகள் இடம் பெற்றன. ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்ற காட்சிகள் இதில் உண்டு. கொள்கை விளக்கம் தவிர இதில் விடுதலை உணர்வு இல்லை. இதில் கதாநாயகி, “அந்நிய ஆடையினால் நாம் வருடம் தோறும் எழுபது கோடி ரூபாய்களுக்கு மேல் வெளிநாட்டவர்களுக்குக் கொடுத்து வருகிறோமென்று தாங்கள் அன்று கடற்கரையில் பிரசங்கம் செய்தது முதல் நான் கதரணியவே விருப்பம் கொண்டேன். அப்பாவின் கோபத்திற்கு அஞ்சியே அணியவில்லை” என்று பேசும் வசனம் கொள்கை விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

அரசியல் மயம்

1928 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகள் முடுக்கப்பட்டன. கள்ளுக்கடை மறியல், உப்புச் சத்தியாகிரகம் முதலான நடவடிக்கைகளும் நாடகக் கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டன. நடிகர்கள் கதராடை அணிந்தனர். 1931 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நடிகர்கள் மாநாட்டில் காங்கிரசுக்கு உதவுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, ராஜாஜி முதலானோர் நடிகர் சங்க அலுவலகம் சென்று நடிகர்களைச் சந்தித்தனர்; நடிகர்களைப் பாராட்டினர். தேச பக்தி (1937) என்ற நாடகத்திற்குக் கு.காமராசு தலைமை தாங்கினார். தேசிய உணர்வுள்ள நாடகங்கள் மிகுதியாக நடத்தப்பட்டன. தேசிய நாடகங்களை எழுதித் தயாரித்து நடத்தியவர்களில் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் குறிப்பிடத் தக்கவர். தேசிய நாடகம் தயாரித்து நடத்தியவருள் குறிப்பிடத் தக்கவர்கள் டி.கே.எஸ். சகோதரர்கள்.

விடுதலைக்குப் பின் தேசிய நாடகங்கள்

நாட்டு விடுதலைக்குப் பின் தேசிய உணர்வு நாடகங்கள் சில எழுதப்பட்டு வெளிவந்தன. சில மேடை நாடகங்களாகவும் நடிக்கப்பட்டன. பால சஞ்சீவி படைத்த தண்ணீர் விட்டோ வளர்த்தோம், ரா.வே.யின் முதல் முழக்கம், தே.ப.பெருமாளின் சுதந்திர தீபம், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு (காந்தியம்), அருணகிரியின் சேவாசிரமம் (காந்தி, வினோபா கொள்கைகள்), எஸ்.பெருமாளின் தீபம் எரியட்டும் (நாட்டுப்பற்று), சூ.இன்னாசியின் தேசத்தியாகி (நாட்டுணர்வு), அரு.சோமசுந்தரனின் அருள்மணீயம் (நாட்டுப்பற்று) ப.நீலகண்டனின் நாம் இருவர் (தேசிய உணர்வு) முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கன.

4.4.2 தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் இன்றைய சமாச்சாரம் என்ற நாளிதழை நடத்தி வந்தார். அதன் மூலம் மக்களுக்குச் செய்திகளைப் பரப்பி வந்தார்; காங்கிரசு இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். சமகாலத் தேசிய நிகழ்ச்சிகளை வெளியிட இதழை விட நாடகம் ஏற்ற ஊடகம் என்று உணர்ந்தார். மக்களிடம் எளிமையாகச் செய்திகளைச் சேர்க்கும் சாதனமாக நாடகத்தை வளர்த்தெடுத்தார். பதிபக்தி என்ற நாடகம் குடியின் கொடுமையை உணர்த்தியது. தேசியக் கொள்கைகளுள் ஒன்றான மதுவிலக்கை விளக்கும் வகையில்-மதுவின் தீமையை உணர்த்தும் வகையில் வசனங்கள் அமைந்தன. வேலைக்காரன் கூற்றாக ‘அவுங்களுக்கு நாளுக்கு நாளு பசியின்றதே பூடுது. அதனாலேதானே நம்ம காந்தி மகாராஜா குடி அடியோட கூடாதுன்னு சொல்றாரு. பாருங்க குடியில பணம் மாத்தரமா போவுது! அறிவு கெட்டுப் போவுது. உடம்பு மெலிஞ்சு போவுது. கடைசியிலே உயிருக்கே ஒலையும் வச்சிடுது. பாவம் ! இந்தப் பாழாப்போன குடியால எத்தனை குடும்பம் அழிஞ்சது! அழியுது” என்று குடியின் தீமை உணர்த்தப்படுகிறது.

பாலாம்பாள் நாடகம் காந்தியக் கொள்கைகளை வெளியிட்டது. கவர்னர்ஸ் கப் நாடகம் சூதாட்டமான குதிரைப் பந்தயத்தின் தீமையை உணர்த்தியது. கதரின் வெற்றி, தேசியக்கொடி முதலான நாடகங்களில் நேரடியாகத் தேசிய இயக்கக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. இவ்விரு நாடகங்களும் லண்டன் நகரில் நடத்தப்பட்டன. தேசியக் கொடி நாடகம் நாகபுரியில் நிகழ்ந்த போராட்டத்தைப் புலப்படுத்தியது. நாகபுரியில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்த தெருவில் தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது என்று காவலர்கள் தடை செய்தனர். தேசியத் தொண்டர்கள் தேசியக் கொடியுடன் நாள்தோறும் அந்தத் தெருவில் செல்வதைப் போராட்டமாக்கினர். எண்ணற்ற தொண்டர்கள் இப்போராட்டத்தில் சிறை சென்றனர். இந்த அடிப்படையில்தான் தேசியக்கொடி நாடகம் உருவாக்கப் பட்டது.

பிறர்

பாவலரின் தேசபக்தி, பதிபக்தி, கதரின் வெற்றி முதலான நாடகங்களை டி.கே.எஸ். குழுவினரும் நடத்தினார்கள். நாடகப் பார்வையாளர்கள் நாடகம் முடிந்து செல்கையில் ஒரு செய்தியுடன் அல்லது உணர்வுடன் செல்ல வேண்டும் என்பதில் ஒளவை தி.க.சண்முகம் அழுத்தமான ஆசை கொண்டிருந்தார். அவர் நடத்திய தேசபக்தர் சிதம்பரனார், அந்தமான் கைதி முதலான நாடகங்களும் குறிப்பிடத் தக்கவை.

எஸ்.டி.சுந்தரம் படைத்த வீர சுதந்திரம் என்ற நாடகம் விடுதலை வீரர்களின் வாழ்வைச் சித்திரித்தது. வாஞ்சி நாதன், லஜபதி ராய், பகத்சிங், குமரன் முதலானோரின் எழுச்சி மிக்க வாழ்வைச் சித்திரித்தது. கோவை அய்யாமுத்து எழுதிய இன்பசாகரன் நாடகம் தொடர்ச்சியாக ஆறு மாதக் காலம் நவாப் ராஜமாணிக்கம் குழுவினரால் நடத்தப்பட்டது.

4.5 திராவிட இயக்க நாடகங்கள்

ஈ.வெ.ரா பெரியார் காங்கிரசு இயக்கத்திலுள்ள சிலரின் நடைமுறைத் தவறுகளைக் கண்டித்து நீதிக்கட்சியில் சேர்ந்தார். பின்னர் திராவிட இயக்கத்தைத் தொடங்கினார். தேசிய இயக்கத்தைத் தொடர்ந்து உருவாகிய திராவிட இயக்கமும் தனது கொள்கைகளைப் பரப்ப நாடகங்களைப் பயன்படுத்திக் கொண்டது. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பவும் அரசியல் கருத்துகளை விதைக்கவும் நாடகங்கள் உதவின.

சமூகச் சீர்திருத்தம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, இதிகாச புராண எதிர்ப்பு, சாதி சடங்கு எதிர்ப்பு, ஜமீன்தாரி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தனித்திராவிட நாடு, பெண்கல்வி, பெண் முன்னேற்றம், கைம்மை மறுமணம், தமிழ் வளர்ச்சி, சீர்திருத்த மணம், கலை வளர்ச்சி எனப் பல உள்ளடக்கங்கள் திராவிட இயக்க நாடகங்களில் இடம்பெற்றன.

தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு ஈரோட்டில் நடைபெற்றபோது அறிஞர் அண்ணா தம் பேச்சில் குறிப்பிட்ட ஒரு கருத்து, திராவிட இயக்க நாடகங்களின் உள்ளடக்கங்கள் குறித்து அறிய உதவுகிறது.

“எலும்பு பெண்ணுருவான அருட்கதைகளைப் பற்றிப் பாடியும் ஆடியும் வந்தது போதும். நமது பெண்மக்கள் எலும்புருவானது தவிரப் பயன் எதுவுமில்லை. இனிப் பெண்கள் எலும்புருவாகும் பரிதாப வாழ்வைச் சித்திரிக்கும் நாடகங்களை நடத்துங்கள். கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்பிய கண்ணப்பர் கதையை ஆடியது போதும். இனிக் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்பவன் ஊரில் கொள்ளையடிக்கும் விஷயத்தை விளக்கும் நாடகத்தை நடத்திக் காட்டுங்கள்; வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுங்கள். ஏழையின் கண்ணீர், விதவையின் துயரம், மதத் தரகர்களின் மமதை ஆகியவற்றை விளக்கும் அறிவு வளர்ச்சி நாடகங்களை நடத்துங்கள்” என்று அண்ணா குறிப்பிட்டார். இது திராவிட இயக்க நாடக மரபைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

புராண வரலாற்று நாடகங்களில் கூடச் சனாதனத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்ப் பண்பாட்டை நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உரையாடல்களிலும் தமிழ்மொழி நடை புதுப்புனைவுடன் வெளியிடப் பெற்றது. பாரதிதாசன், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ப.கண்ணன், ஏ.கே.வேலன், தில்லை வில்லாளன், சி.பி.சிற்றரசு, இரா.செழியன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, முரசொலி மாறன், எஸ்.எஸ்.தென்னரசு, இராதா மணாளன், திருவாரூர் கே.தங்கராசு முதலானோர் திராவிட இயக்க நாடகங்களைப் படைத்தனர்.

4.5.1 பாரதிதாசன் பாரதிதாசன் அமைதி, படித்த பெண்கள், கற்கண்டு, பொறுமை கடலினும் பெரிது, இன்பக்கடல், குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும், விகட கோர்ட் முதலான சமூக நாடகங்களைப் படைத்திருக்கிறார். அமைதி நாடகம் பண்ணையாரின் கொடுமை பற்றியது. பண்ணையாரின் கொடுமையை மண்ணாங்கட்டி என்பவன் எதிர்ப்பதும் அதனால் அவன் தாக்கப்பட்டு இறப்பதும் அமைதி நாடகத்தின் உள்ளடக்கம்.

கற்கண்டு நாடகத்தில் இளம்பெண்ணை முதியவன் மணந்து கொள்ளும் கொடுமை எதிர்க்கப்படுகிறது. கற்கண்டு என்ற பெண்ணின் தந்தை கடன் காரணமாக மகளைக் கிழவனுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கையில் இளைஞன் ஒருவன் தந்திரமாக அதைத் தடுத்து அவளை மணந்துகொண்டு காப்பாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது இந்நாடகம்.

இன்பக்கடல் நாடகம் காசுக்காக ஒருத்தியையும் காதலுக்காக ஒருத்தியையும் மணந்துகொள்ள விரும்பும் ஒருவனின் முயற்சியைத் தடுப்பது பற்றியது. அரசப்பன் என்பவன் காதலுக்காகப் பட்டு என்ற பெண்ணையும் காசுக்காகத் தங்கம் என்ற பெண்ணையும் மணக்க முயல்கிறான். அதற்காக இளவழகன் என்பவனுக்கும் தங்கத்திற்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து அவளை மறைத்து வைக்கிறான். பட்டு,, தங்கத்தை விடுவித்து இளவழகனுடன் சேர்த்து வைக்கிறாள். அரசப்பனின் முயற்சி தோல்வியடைகிறது. இந்நாடகங்கள் பெண்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டவை.

பொறுமை கடலினும் பெரிது என்னும் நாடகம் அனைவருக்கும் உபதேசம் கூறித் தன் காரியத்தில் கண்ணாக இருக்கும் பணக்காரரை மற்றவர்கள் பழிவாங்கும் நிகழ்வைச் சொல்வது. அவசரத் தேவையாக உதவி கேட்பவர்களுக்கு உதவாமல் பொறுமையை உபதேசிக்கும் பணக்காரனை அவனுக்குத் தேவையான நேரத்தில் அதே உபதேசத்தினைக் கூறி உதவாமல் பழிவாங்கும் நிகழ்வு இதன் உள்ளடக்கம். குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் என்ற நாடகம் உழைக்காத குடும்பத் தலைவனை மகன் மாற்றுவதைக் காட்டுகிறது. குடும்பத் தலைவி தில்லைக்கண் உழைப்பாளி. கணவன் திருக்காடு முதலியார் சோம்பேறி. இவர்களது மகன் கண்ணப்பன், தந்தையைத் திருத்துகிறான்.

படித்த பெண்கள் நாடகத்தில் வரும் மின்னொளியும் இன்னமுதும் கல்வி கற்ற பெண்கள். பொன்னன் என்பவன் ஊதாரியாகத் திரிந்து சொத்தையெல்லாம் தொலைத்ததோடு கொலை முயற்சியையும் மேற்கொள்கிறான். பொன்னனை இப்பெண்கள் திருத்துகிறார்கள். விகடகோர்ட் என்ற நாடகம் கடவுள், சமய நம்பிக்கை முதலானவற்றை எள்ளி நகையாடும் பகுத்தறிவுக் கருத்தைக் கொண்டது.

4.5.2 அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்கமாக அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் அமைந்தன. சந்திரோதயம், வேலைக்காரி, ஓர் இரவு, காதல் ஜோதி, எதையும் தாங்கும் இதயம், பாவையின் பயணம், அவன் பித்தனா?, இரக்கம் எங்கே?, புதிய மடாதிபதி, சொர்க்க வாசல், நல்லதம்பி, கண்ணீர்த்துளி, கண்ணாயிரத்தின் உலகம் முதலான பல சமூக நாடகங்களை எழுதியிருக்கிறார்.

சந்திரோதயம், ஜமீன்தார்களின் இரக்கமற்ற மனத்தைக் காட்டுகிறது. மடங்களில் நடக்கும் கயமையைக் காட்டுகிறது. பிறரை அண்டிப் பிழைக்கும் வைதிகர்களின் வஞ்சகங்களைக் காட்டுகிறது. மதம், சாதி, பழமைப் பித்து முதலானவற்றால் விளையும் தீமைகளைக் காட்டிப் புத்துலகத்தை உணர்த்துகிறது.

வேலைக்காரியும் ஓர்இரவும் கே.ஆர்.ராமசாமி நாடகக் குழுவினருக்காக அண்ணா எழுதிய நாடகங்கள். வேலைக்காரி நாடகத்தில் சாதிப் பற்று, பணத் திமிர், ஏற்றத் தாழ்வு, போலி வாழ்க்கை, கடவுள் உணர்வு, பெண்களின் நிலை முதலானவை புலப்படுத்தப்படுகின்றன. வட்டியூர் ஜமின்தார் வேதாசல முதலியாரின் கொடுமைக்குப் பலியான சுந்தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன். அவன் வேதாசல முதலியாரைத் திருத்த முயல்கிறான். ஆள் மாறாட்டம் செய்து அவர் மகளை மணந்துகொள்கிறான். ஜமின்தாரின் மகன் மூர்த்தி வேலைக்காரியைக் காதலிக்கிறான். ஜமீன்தார் மறுக்கவே மடத்தில் சேர்கிறான். அங்குப் போலித் துறவியைக் கொன்றுவிடுகிறான். ஆனந்தன் வழக்கு மன்றத்தில் வாதாடி அவனை விடுவிக்கிறான். துறவி, கொள்ளைக்காரன் என்றும் புலப்படுத்துகிறான். மூர்த்தி, வேலைக்காரியை மணந்து கொள்கிறான். ஜமீன்தார் திருந்துகிறார். ‘கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு’, ‘சட்டம் ஓர் இருட்டறை, அதிலே வக்கீலின் வாதம் ஓர் விளக்கு’ முதலான வசனங்கள் இந்நாடகத்தில்தான் இடம் பெற்றன.

49 காட்சிகளைக் கொண்ட ஓர் இரவு நாடகம், ஒரே இரவிலே நடந்து முடியும் கதையமைப்பைக் கொண்டது. ஏற்றத் தாழ்வுகள், காதல் மோதல்கள், சேரி வாசம் மாளிகை வாசம் எனப்பல வேறுபாடுகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. தேவர் மகள் சுசீலா. தேவர் செய்த ஒரு கொலையைப் படம் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டும் ஜெகவீரன் அவளை மணக்க அவரிடம் சம்மதம் பெறுகிறான். சுசீலா, டாக்டர் சேகரைக் காதலிக்கிறாள். இரவில் தேவரின் வீட்டிற்குத் திருடன் ரத்தினம் வருகிறான். அவனிடம் சுசீலா ஜெகவீரனை ஏமாற்றத் தன் காதலனாக நடிக்கும்படி வேண்டுகிறாள். அங்கு வந்த சேகர் சுசீலாவைத் தவறாகக் கருதுகிறான். ரத்தினமும் சேகரும் மோதுகின்றனர். தேவர்தான் ரத்தினத்திற்கும் தந்தை என்பது தெரியவருகிறது. ஜெகவீரனை ஏமாற்றி அவனிடமிருக்கும் படத்தைப் பிடுங்கிவிடுகின்றனர். சுசீலா சேகர் திருமணம் நடைபெறுகிறது.

அண்ணாவின் பிற நாடகங்களிலும் இதே போன்ற சீர்திருத்தக் கருத்துகள் இடம்பெற்றன. மாநாடுகளில் ஒரே நேரத்தில் இருபதாயிரம் பேர் அண்ணாவின் நாடகங்களைக் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கல்கி, அண்ணாவைப் பெர்னாட்ஷாவுக்கும் கால்ஸ்வொர்த்திக்கும் (Galsworthy) இணையானவர் என்று பாராட்டினார். வசனத்தில் புரட்சி செய்தவர் அண்ணா. ஏமாற்றிப் பணம் சேர்ப்பவனைப் பார்த்து “தங்கத்திலே அரிசி செய்து சமைத்து, கோமேதகக் கூட்டும் வைர வறுவலும் முத்துப் பச்சடியும் மோர்க்குழம்பிலே கெம்புமா கலந்து சாப்பிட்டு வந்தீர்?” என்று கேட்பது மாதிரி எழுதப்பட்ட வசனம் இதற்கு எடுத்துக்காட்டு.

4.5.3 கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் நாடகப்பணி போற்றுதற்குரியது. சாந்தா அல்லது பழனியப்பன் (நச்சுக்கோப்பை), தூக்குமேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, பரப்பிரம்மம், உதயசூரியன், திருவாளர் தேசியம் பிள்ளை முதலான பல நாடகங்களை இயற்றியுள்ளார். பரப்பிரம்மம் உருவகமாக அமைந்த அரசியல் நாடகம். எல்லாரையும் கேலியாக எழுதி வந்த இதழாசிரியர் ஒருவரின் பிரச்சாரத்திற்கு எதிராக நானே அறிவாளி என்ற நாடகம் எழுதப்பட்டது. நானே அறிவாளி என்ற வகையில் நடந்துகொண்ட அவருக்குப் பாடம் கற்பிப்பதாக இந்நாடகம் அமைந்தது. திருவாளர் தேசியம்பிள்ளை காங்கிரசாரின் கடுமையான தாக்குதல்களுக்குப் பதில் தருவதாக அமைந்த நாடகம்.

4.5.4 ப.கண்ணன் ப.கண்ணனின் மின்னொளி நாடகம் பழமையில் ஊறிய சிற்றூர் ஒன்றைத் திருத்த முயல்வது குறித்தது. ஊரைத் திருத்த முயலும் செல்லத்துரை என்ற இளைஞனுக்கு மின்னொளி உதவுகிறாள். கிராமத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு உண்டாகிறது. பழமைக்கும் புதுமைக்கும் மோதல் உண்டாகிறது. அறிவும் அன்பும் வெற்றி பெறுகின்றன. புரட்சிப் பாடகன் என்ற சமூக நாடகத்தையும் இவர் படைத்துள்ளார். தமிழிசை மறுமலர்ச்சி பற்றிய நாடகம் இது. கீதானந்தர் என்பவர் வடமொழிப் பற்றாளர்; தமிழிசையையும் தமிழையும் பழிப்பவர். சங்கரன் தமிழில் பாடல்கள் பாடிய பொழுது கீதானந்தரின் ஆட்கள் அவனைத் தாக்குகின்றனர்; தெலுங்கில் பாடுமாறு மிரட்டுகின்றனர். சங்கரன், கீதானந்தரின் போலித்தனத்தையும் கொலை பாதகத்தையும் காம வெறியையும் வெளிப்படுத்துகிறான்.

4.5.5 ஏ.கே.வேலன் ஏ.கே.வேலன் படைத்த நாடகம் கைதி, வறுமையில் வாடும் வேலன், தாய் தங்கை முதலானோரைக் காப்பாற்றக் கோயில் தட்டைத் திருடுகிறான். அவனைச் சிறையில் தள்ளுகின்றனர். அவன் சிறையிலிருந்து தப்புகிறான். ஆனால் தாயையும் தங்கையையும் காணமுடியாமல் தவிக்கிறான். பின் நல்ல நாயகம் என்னும் பெயருடன் நகரத் தந்தையாக உயர்வடைகிறான். காவல்துறை இதைக் கண்டுபிடித்து விடுகிறது. மீண்டும் அவன் தப்புகிறான். தங்கை முல்லையைச் சந்திக்கிறான். தங்கையின் கணவனான காவல்துறை ஆய்வாளர் அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறான். தங்கை மனமுடைந்து இறக்கிறாள். ஏ,கே.வேலனின் எரிமலை நாடகம் தங்கைக்காகக் கடல்கடந்து பொருள் ஈட்டச் செல்லும் இளைஞனைப் பற்றியது. நாடு திரும்பிய பின், அது இருக்கும் நிலை கண்டு அவன் மனம் எரிமலையாகிக் குமுறுகிறான்.

ஏ.கே.வேலனின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு ஓர் உரையாடலை எடுத்துக்காட்டாகக் காணலாம். சூறாவளி நாடகத்தில் இது இடம் பெறுகிறது. கோயிலின் கர்ப்பகிரகத்துள் அர்ச்சகர் தவிர வேறு யாரும் செல்லக் கூடாது என்று தடுப்பதைக் கண்டிப்பது இது. “ஏறி ஏறி இறங்கலாம். பெருச்சாளி சுரண்டலாம். கரப்பான் வண்டு மொய்க்கலாம். பூச்சி புழு நெளியலாம். வௌவால் புழுக்கை போடலாம். ஆறறிவு படைத்த மனிதன் உள்ளே வந்தாலாகாதோ?” என்பது ஆற்றலுள்ள வசனம்.

4.5.6 பிறர் தில்லை வில்லாளனின் விடியற்காலை என்ற நாடகம் அங்கதப் பண்பு கொண்டது. ஆண்டாள் கதையைக் கேலி செய்வது. பூ விற்கும் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள் கோயில் தக்காரின் மகன் ரங்கநாதனைக் காதலிக்கிறாள். மாலையினுள் காதல் கடிதத்தை வைத்து அனுப்புகிறாள். அரங்கனுடன் ஜோதியில் கலந்துவிட்டதாகப் புரளியைக் கிளப்பிவிட்டுக் காதலனுடன் ஓடிப்போகிறாள். ஆழ்வார் நாயன்மார் கதைகள் நம்புதற்குரியன அல்ல என்பதை வலியுறுத்தும் நாடகம் இது.

ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் வாழ்க்கை வாழ்வதற்கே நாடகம் சமூகத்திற்கு உரிமை உணர்வு ஊட்டுவதாக அமைந்தது. என்.எஸ்.கிருஷ்ணனின் ஐம்பதும் அறுபதும் தீமைகளையும் போலித்தனங்களையும் சாடுவது. அவருடைய விலங்கு மனிதன், மனிதன் விலங்கு போல வாழ்வதைக் கிண்டல் செய்வது.

4.5.7 நாடகக் கலைஞர்கள் என்.எஸ்.கே நாடக சபா, கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ண நாடக சபா, எஸ்.எஸ்.ஆரின் நாடகக்குழு முதலான நாடகக் குழுவினர் திராவிட இயக்க நாடகங்களை நடத்தினர். எம்.ஆர்.இராதா, எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ்.எஸ்.இராசேந்திரன், கே.ஆர்.ராமசாமி போன்ற நடிகர்கள் இந்நாடகங்களில் நடித்தவர்கள்.

பயன்

ஆரிய எதிர்ப்பு, தமிழ்ப் பற்று, அரசியல் பிரச்சாரம், மூடநம்பிக்கை எதிர்ப்பு எனத் திராவிட இயக்க நாடகங்கள் செயலாற்றின. திராவிட இயக்கத்தினரின் அரசியல் வெற்றிக்கு நாடகங்கள் துணையாயின. 1957ஆம் ஆண்டில் தி.மு.க இயக்கம் அரசியலில் பங்கேற்றபோது பிரச்சாரத்திற்கு நாடகத்தைப் பயன்படுத்தினர். 1967ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த பின்பு சாதனை விளக்கத்திற்கு நாடகத்தைப் பயன்படுத்தினர். கட்சி பிரிந்த பின் பிரிந்தவர்களை விமர்சிக்கும் நாடகங்கள் நடத்தப்பட்டன.

4.8 தொகுப்புரை

சமூக நாடகங்கள் சமூக விழிப்புணர்வின் காரணமாக உருவாகின. விடுதலைப் போரிலும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் இவற்றின் பங்கு அளவிடற்கரியது. போராட்ட ஆயுதங்களாகச் சமூக நாடகங்கள் செயலாற்றின. மக்களின் குடும்ப வாழ்வும், சமூக வாழ்வும் மேம்படும் வகையில் பல செய்திகள் சமூக நாடகங்களின் வாயிலாக உணர்த்தப்பட்டுள்ளன. மக்களிடமே நாடகத்தைக் கொண்டு செல்லும் வகையிலும் மக்களின் பங்கேற்பை மிகுதிப்படுத்தும் வகையிலும் நவீன சோதனை நாடகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. சமூக நாடகங்கள் சமூக வரலாறாகவே திகழ்கின்றன.

பாடம் - 5

வானொலி நாடகங்கள்

5.0 பாட முன்னுரை

நாடகம் என்ற இலக்கிய வடிவம் முதலில் நடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின் படிப்பதற்கான நாடகங்கள் எழுதப்பட்டன. வானொலி தொடங்கப்பட்ட பிறகு கேட்கும் நாடகங்கள் உருவாயின. படித்தவர் பாமரர்கள் என எல்லாருமே வீட்டிலிருந்தபடியோ, இருக்குமிடத்திலிருந்தோ சுவைக்கக் கூடிய ஓர் இலக்கிய வடிவம் வானொலி நாடகம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி டில்லி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களிலிருந்தும் ஈழம், மலேசியா முதலான நாடுகளிலிருந்தும் வானொலி நாடகங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான கருத்துகள், பண்பாட்டுச் செய்திகள், அரசின் முன்னேற்றத் திட்டங்கள் முதலானவற்றைச் சொல்கிற எளிய வடிவமாக வானொலி நாடகம் விளங்குகின்றது. இத்தகைய வானொலி நாடகம் பற்றிய செய்திகளை விளக்குவதாக இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.

5.1 வானொலி நாடகம்

வானொலி நாடகம் என்பது ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கலை எனலாம். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் வீட்டினுள் அடைந்து கிடந்த பொதுமக்களுக்காக பி.பி.சி நிறுவனம் நாடகங்களை ஒலிபரப்பத் தொடங்கியது. இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. நாடக ஒலிபரப்பில் சென்னை வானொலி நிலையம் முன்னோடியாக இருந்தது.

வானொலியில் முதலில் சிறுகதைகளை நாடகமாக்கி நடிகர்களைக் கொண்டு பேசச் செய்து ஒலிபரப்பினார்கள். பின் நாவல்களை நாடகமாக்கினார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களைக் கொண்டு புதிய நாடகங்களை எழுதச் செய்து ஒலிபரப்பினார்கள். இவ்வாறு வானொலியில் படிப்படியாக நாடகம் வளர்க்கப்பட்டது. நாடகப் போட்டிகளும், நாடக விழாக்களும் நடத்தப்படுகின்றன. இதனால் வானொலி நாடகம் மேலும் வளர்ச்சி பெறுகிறது.

5.1.1 நாடகத்தின் தன்மை நாடகத் தயாரிப்பாளர், நடிகர், ஒலிப்பதிவாளர் முதலானவர்களின் ஒத்துழைப்பால் வானொலி நாடகம் உருவாக்கப்படுகிறது. வானொலி, தனது நாடக நிகழ்ச்சிகளுக்குக் குரலையே பெரிதும் நம்பியிருக்கிறது. அவ்வகையில் இது ஒரு கேள்விப் புலன் சாதனமாக இருக்கிறது.

குரலின் ஆற்றல்

வானொலி நாடகம், கேட்கும் ஒவ்வொருவரிடமும் தனித்த உணர்வுகளையும், கற்பனைகளையும் தூண்டுகிறது எனலாம். குரல் மூலமும், உச்சரிப்பின் மூலமும், பேசப்படும் செய்திகளின் மூலமும் கற்பனைக் காட்சி உருவாக்கப்படுகின்றது. நாடகம் கேட்பவர் நிகழ்ச்சிகளை மனக் கண்ணில் கண்டு அனுபவிக்கிறார்; பாத்திரங்களின் முகபாவ மாற்றங்கள், அங்க அசைவுகள், செயல்கள் முதலான எல்லாவற்றையுமே ஒலியின் மூலம்தான் உணர்கிறார்.

உணர்த்தும் ஆற்றல்

அளவு, இடம், நேரம், வேகம், பண்பு போன்றவற்றை மேடை நாடகத்திலோ, தொலைக்காட்சியிலோ முழுஅளவில் உண்மைத் தன்மையுடன் படைத்துக் காட்ட முடியாது. பறக்கும் விமானத்திற்குள்ளே நடக்கும் நிகழ்ச்சிகளை மேடையில் காட்டுவது கடினம். ஆனால் வானொலியில் இதை எளிதாகச் செய்துவிடலாம். விமான ஒலியைப் பின்னணியில் ஒலிபரப்பினால் போதும்.

கட்டமைப்பு

எல்லா நாடக வகைகளுக்கும் இருப்பது போல வானொலி நாடகத்திலும் சிக்கல் (crisis), போராட்டம் (conflict), உச்சக் கட்டம் (climax), முடிவு (conclusion) ஆகியன இருக்க வேண்டும். காட்சியின் துணையின்றி ஒலியின் துணையால் மட்டும் வானொலி நாடகம் அமைவதால் அதில் உணர்ச்சிச் சுவை மிக்க பகுதிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

படைப்பாளர் தெளிவு

நாடகப் படைப்பாளர், எழுதத் தொடங்கும் முன் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடகம் யாருக்காக எழுதப்படுகிறது? நாடகத்தில் சொல்லப் போகும் கருத்து என்ன? நாடகத்தின் கால அளவு என்ன? என்பன பற்றி அவர் தெரிந்திருக்க வேண்டும்.

படைப்பின் தெளிவு

நல்ல கட்டமைப்பு உடையதாகப் படைப்பு திகழ வேண்டுமானால் கீழ்க்காணும் நெறிகளில் அது அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

(1) நாடகம், எப்படி வளரப் போகிறது என்று நேயரை எதிர்பார்க்க வைப்பதாக இருக்க வேண்டும்.

(2) நாடகக் கதையின் உச்சக் கட்டத்தை நோக்கி ஒவ்வொரு காட்சியும் வளர வேண்டும்.

(3) நாடகத்தின் மையச் சிக்கல் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

(4) ஒவ்வொரு பாத்திரமும் பேசுகிற வசனம் தெளிவாக இருக்க வேண்டும்.

(5) நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் யார் யார் பேசுகிறார்கள் என்பது தெளிவாக உணர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

(6) ஏதாவது ஒரு காட்சியில் நிறையப் பாத்திரங்கள் இடம்பெற்றால் குரலால் அடையாளம் காணும் வகையில் தெளிவாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

(7) எந்த இடத்தில் ஒரு காட்சியின் கதை நிகழ்கிறது என்பது தெளிவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

(8) நாடகத்தில் வருணனைகள் மிகவும் குறைவாக இருக்க வேண்டும்.

(9) சிக்கலுக்குத் தீர்வு சொல்லப் பட்டிருக்க வேண்டும்.

(10) காட்சிகள் விறுவிறுப்புடன் செல்ல வேண்டும்.

(11) காட்சியின் சூழ்நிலை உணர்த்தப் பட்டிருக்க வேண்டும்.

(12) நாடகத்தின் வேகம் ஒரே சீராகச் செல்வதாக இருக்க வேண்டும்.

5.2.5 காட்சியமைப்பு அளவான காட்சிகள்தாம் வானொலி நாடகத்திற்கு அணிகலன் என்பார்கள். காட்சிகளை அமைக்கும் போது கதையின் ஓட்டம் தடை படாதவாறு விறுவிறுப்பாக அமைக்க வேண்டும். வேறுபட்ட பாத்திரங்கள் பேசுமாறு காட்சிகளை மாற்றி மாற்றி அமைக்கிறார்கள். ஏனென்றால் ஒரே குரலில், பேசியவரே பேசுமாறு காட்சியை அமைத்தால் சலிப்பு ஏற்படும். இதே போல உணர்வுகளும் மாறி மாறி வருமாறு காட்சிகளை அமைக்கிறார்கள். ஏனென்றால் தொடர்ந்து பாத்திரங்கள் அழுகின்ற காட்சிகளே இடம்பெற்றால் தாங்க முடியாது.

முடிந்த அளவு சிறிய சிறிய காட்சிகளாக அமைக்கிறார்கள். நாடகத்தின் நேர அளவைப் பொறுத்துக் காட்சிகளின் எண்ணிக்கையை மாற்றுகிறார்கள்.

காட்சி மாற்றம், காட்சிக் களம், காட்சி நேரம், காட்சிச் சூழல் முதலானவற்றை இசையாலும் ஒலியாலும் உணர்த்துகிறார்கள்.

5.2.6 நாடகத் தலைப்பு வானொலியில், நாடகத்தின் மையக் கருத்துப் புலப்படும் வகையில் தலைப்பு வைக்கிறார்கள். நாடகத்தில் இழையோடும் உணர்வின் அடிப்படையிலும் தலைப்பிடுகிறார்கள். நாடகப் பாத்திரத்தின் பெயரையும் நாடகப் பெயராக்குகிறார்கள்.

தலைப்புப் பொருத்தம்

வரலாற்று நாடகம் ஒன்றிற்குக் களம் கண்ட கவிஞன் என்று பெயர் வைத்திருந்தார்கள். உணர்ச்சி மோதலை மையமாகக் கொண்ட நாடகங்களுக்கு அர்த்தமுள்ள மௌனங்கள், சாயங்கால மேகங்கள் என்று பெயர் வைத்திருந்தார்கள். நகைச்சுவை நாடகங்களுக்கு ஜிகினா சுல்தான், செல்லா துரை என்று தலைப்பு வைத்திருந்தார்கள். சாதிப் பிரச்சினையைச் சொல்லும் நாடகத்திற்கு ஒரு கோட்டுக்கு வெளியே என்றும், பிள்ளைப்பேற்று மிகுதியைக் குறிக்கும் நாடகத்திற்கு உயிர்ப்பொம்மை என்றும், முதியவர் பிரச்சினை நாடகத்திற்கு மாலை மலர்கள் என்றும் பெயர் சூட்டியிருந்தார்கள்.

கதாபாத்திரங்களின் பெயரைத் தலைப்பாக ஆக்கும் தன்மையை வடிவேலு வாத்தியார், மாவீரன் அலெக்ஸாண்டர் ஆகிய தலைப்புகளால் அறிய முடிகிறது.

நயமாகவும் மறைமுகமாகவும் கூடத் தலைப்பு வைப்பதுண்டு. குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்திய நாடகத்திற்கு Taxi Number ஒன்றைத் தலைப்பாக வைத்திருந்தார்கள். அது T.N.F.P.120 என்பது. இதன் விரிவு Tamil Nadu Family Planning என்பது. 120 என்பதற்கு ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் வேண்டாம் என்று பொருள். இதை 1,2,0 என அமைத்தார்கள்.

5.2 நாடகக் கூறுகள்

உரையாடல், ஒலிக்குறிப்பு, பின்னணி இசை, பாத்திரப் படைப்பு, காட்சியமைப்பு, நாடகத் தலைப்பு முதலானவற்றைக் கூறுகளாகக் கொண்டு வானொலி நாடகம் அமைகிறது. இப்பகுதியில் மேற்கண்ட கூறுகளின் செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

5.2.1 உரையாடல்கள் நாடகம் உடல் என்றால் அதன் கருத்து உயிர் எனலாம்; நாடகக் காட்சியமைப்பு எலும்புக் கூடு எனலாம்; உரையாடல்தான் தசைநார், தசை, குருதி எல்லாம் எனலாம். வானொலி நாடகத்தில் நாம் கேட்கும்வார்த்தைகள் நாடகப் புத்தகத்தில் நாம் படிக்கும் வார்த்தைகள்தாம் என்றாலும் பேசப்படும் போது, உச்சரிப்பாலும் குரலின் தன்மையாலும், தனிப்பட்ட அர்த்தங்களைப் பெற்றுவிடுகின்றன. உணர்ச்சியைப் புலப்படுத்தும் வகையில் உரையாடல்கள் ஏற்ற இறக்கத்துடன் அமைவதால், நாடகம் காட்சியாக நம் மனத்தில் விரிகிறது; நமக்குப் பாத்திரப் பண்புகள் புரிகின்றன.

உரையாடலில் புலப்படுத்தும் தன்மை

வானொலி நாடகம் உரையாடல் மூலம் உணர்ச்சிகளை வெளிப் படுத்துகிறது. சினம், சிரிப்பு, கவலை, வெறுப்பு, அழுகை, அக்கறை, ஆணவம், அதிகாரம் முதலான எல்லா உணர்வுகளையுமே உரையாடல் காட்ட வேண்டும்.

பாத்திரங்களின் தனிப்பண்பு, அவர்களை ஆட்டிவைக்கும் காரண காரியங்கள் ஆகியவற்றை அது புலப்படுத்த வேண்டும். பாத்திரம் சிவப்பா? கருப்பா? மீசை உண்டா? இல்லையா? என்பதை உரையாடலில் காட்ட வேண்டும்.

சுற்றுப்புறம், சூழ்நிலை, இடம், நிறம், மணம் எல்லாவற்றையுமே உரையாடல் வெளிப்படுத்த வேண்டும். சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

(1) “மணி பத்தாகிறதே! தெரியவில்லையா? தூங்கக் கூடாதா?” என்பதில் நேரம் உணர்த்தப்படுகிறது.

(2) “நகரத்தை விட்டு ஐந்தாறு மைல் தள்ளி வந்துவிட்டோம் என்பதில் தூரம் உணர்த்தப்படுகிறது.

(3) “அவரைப் பிரிந்து பத்து வருஷமாக உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்பதில் காலம் உணர்த்தப்படுகிறது.

(4) “அப்பா! என்ன குளிரு! பல் கிட்டிப்போகும் போலிருக்கிறதே” என்பதில் குளிரை உணர்த்தலாம்.

(5) “இது என்ன ஊதுவத்தி சார்! வாசனை கும்மென்று தூக்குகிறதே” என்பதில் வாசனையை உணர்த்தலாம்.

(6) “வாங்க சிங்காரம் அண்ணே! உங்களைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்” என்பதில் வருபவரை உணர்த்தலாம்.

(7) “வேணாம் கிட்ட வராதீங்க! கத்தியைக் கீழே போடுங்க” என்பதில் செயலையும் சூழ்நிலையையும் உணர்த்தலாம்.

உரையாடலில் இயல்புத் தன்மை

வானொலி நாடக உரையாடல், வாழ்க்கையில் நாம் பேசுவது போலக் குறுகியதாக இருக்க வேண்டும். நாம் பேசுகின்ற பாணிகள் பல்வேறு பட்டவை. நாடக ஆசிரியர் இவற்றைக் கவனத்தில் கொண்டு எழுத வேண்டும். யார் எவரோடு எப்படிப் பேசுவார்? என்பதைக் கவனித்து உரையாடலை அந்தப் பாணியில் அமைக்க வேண்டும். சமூக நாடகம் எனில் நாடக மாந்தரின் தன்மைக்கும் தகுதிக்கும் ஏற்பப் பேச்சு அமைய வேண்டும். தொழிலாளி, நீதிபதி, மருத்துவர், உழவர், மாணவர் என்று அவரவர் தன்மைக்கேற்ப உரையாடல் அமைய வேண்டும். எந்தப் பகுதி சார்ந்த கதையோ அந்தப் பகுதியின் மொழியைப் பயன்படுத்த வேண்டும். வரலாற்று நாடகம் எனில் அந்தக் காலத்துச் சூழ்நிலையையும் தன்மையையும் காட்டும் வகையில் இலக்கிய வழக்குத் தமிழில் எழுத வேண்டும்.

வரலாற்று நாடக உரையாடல்

வரலாற்று நாடகத்தின் உரையாடல் ஒன்றை எடுத்துக்காட்டாகக் காண்போம். கவியின் கருணை என்ற நாடகம் கவிஞர் கருணானந்தத்தால் எழுதப்பட்டது. அதில் ஒளவையார்- அதியமான் வரலாற்றின் ஒரு பகுதி நாடகமாக்கப் பட்டிருந்தது. அதியமான் நெடுமான் அஞ்சியும் தொண்டைமானும் போரில் ஈடுபட்ட போது ஒளவையார் போரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சங்க காலத்து நிகழ்ச்சியைக் கூறுகிற நாடகம் என்பதால் வசனம் செந்தமிழில் அமைந்திருந்தது.

ஒளவையார்:

தொண்டைமான்! உன் மனத்திற்கு நீ அடிபணியலாம். ஆனால் அஞ்சி அடிபணிய மாட்டான். நீ நினைப்பது போல் நெடுமான் அஞ்சி யாருக்கும் அஞ்சியவன் அல்லன்.

தொண்டைமான்:

என் படைபலம் பார்த்துமா சொல்கிறீர்கள்?

ஒளவையார்:

உன்னிடமுள்ள போர்க் கருவிகள் அழகுடன் பளபளப்பாக மின்னுகின்றன. உண்மை. உண்மை. ஆனால் நெடுமான் அஞ்சியின் போர்க் கருவிகள் பகைவரைக் குத்திக் கொன்றதால் முனை முறிந்து புதுப்பிக்கக் கொல்லன் உலையில் கிடக்கின்றன…. நெடுமான் அஞ்சியின் பலத்தைத் தாழ்வாக எடைபோட்டுப் போருக்குப் புறப்படுகிறாய் தொண்டைமான்! பகையுணர்ச்சியோடு போர் மூண்டால் உங்கள் இருவரின் நாடும் கெடும்…

சமூக நாடக உரையாடல்

சமூக நாடகத்தின் உரையாடல் ஒன்றையும் காண்போம். தெய்வ மனிதன் என்னும் சமூக நாடகம், சக்திமைந்தன் என்பவரால் எழுதப்பட்டது. மனிதர்களிடம் குறையுமிருக்கும்; நிறையுமிருக்கும். நாமாக ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கருதி அந்த வகையில் அவர் நடந்து கொள்ளாவிடில் தூற்றுகிறோம். இது அவர் குற்றம் அல்ல. நம் எண்ணந்தான். மேற்கண்ட கருத்தை விளக்கும் நாடகம் இது. இதில் நிகழ்காலத்தை உணர்த்தும் வகையில் உரையாடல் பேச்சு வழக்கில் அமைந்திருந்தது.

ராமநாதன்: ஏகாம்பரம்… ஸ்டேஷன்ல தேடிப் பாத்திட்டுத் தானே வந்தீங்க. கோபி ஒருவேளை காத்துக்கிட்டிருக்கப் போறான்.

ஏகாம்பரம்: இல்லை சார். கோபி நிச்சயம் இன்னைக்கு வந்திருக்க மாட்டான். ரயில்ல வந்த எல்லாரும் வெளியே போற வரைக்கும் நின்னு பாத்துட்டுத்தான் வந்தேன். ஆனா கோபியை மட்டும் காணோம். அப்புறமாத்தான் காரை எடுத்துக்கிட்டு வந்தேன்.

காமாட்சி: கோபி என்ன குழந்தையா? அப்படி ஒருவேளை குமாஸ்தாவை ஸ்டேஷன்ல பார்க்காட்டாலும், இறங்கி ஏதாவது வண்டி பிடிச்சுக்கிட்டுத் தானே வீட்டுக்கு வரான். அதுக்காக இப்படிக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்களே.

ராமநாதன்: இல்லை காமாட்சி. கோபி இன்னைக்குத்தான் பம்பாயிலிருந்து வரதா எழுதியிருக்கான். வரமுடியலைனா ஒரு தந்தியாவது கொடுத்திருக்க வேண்டியது தானே? அவனுக்கு எத்தனை தடவை படிச்சுப் படிச்சுச் சொல்லியிருக்கேன்? நான் வளர்த்த பையன் நான் சொல்றபடி நடக்காம, இப்படித் தன்னிச்சையா நடந்துக் கிட்டா அதுக்கு என்ன அர்த்தம்!

5.2.2 ஒலிக்குறிகள் மேடை நாடகங்களுக்குக் காட்சி அமைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு வானொலி நாடகத்திற்கு ஒலிக்குறிகள் முக்கியம். வானொலியைப் பொறுத்த அளவில், ஒலிகள் நிகழ்ச்சிகளுக்கு எதார்த்தத் தன்மையைக் கொடுக்க உதவுகின்றன. எடுத்துக்காட்டாகத் தொலைபேசி ஒலி, யாரோ ஒருவர் தொலைபேசியில் பேச முயல்கிறார் என்பதை உணர்த்துவதைச் சுட்டலாம்.

சங்கேத ஒலிகள்

சில ஒலிகளைச் சங்கேதங்கள் (குறியீடு) போலவும் பயன்படுத்துவார்கள். காலத்தைக் காட்டக் கடிகாரத்தின் ‘டிக்டிக்’ ஒலி உதவுகிறது. இரவைக் காட்ட ஆந்தையின் அலறல் ஒலி உதவுகிறது. காலை வேளையைக் காட்டப் பறவை ஒலி உதவுகிறது; பூபாள ராகமும் உதவுகிறது. ஆள் நடமாட்டத்தைக் காட்டக் காலடி ஓசை பயன்படுகிறது.

பொருத்தமான ஒலிகள்

ஒலிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நடிகர் டி.கே. சண்முகம் நடித்த வானொலி நாடகம் ஒன்றில் குழந்தையின் அழுகைக் குரலுக்குப் பதில் நாய் குரைக்கும் ஒலியை இணைத்து ஒலிபரப்பிவிட்டார்கள். (முன்பு, ஒலிகளைப் பேச்சுடன் சேர்த்து நேரடியாக ஒலிபரப்புவார்கள்) இதனை உணர்ந்த டி.கே.சண்முகம், “குழந்தையின் அழுகுரலைக் கேட்க விடாமல் நாயை யார் உள்ளே விட்டது?” என்று சமாளித்தார் என்பார்கள். மாதா கோயில் மணியோசைக்குப் பதிலாக முருகன் கோயில் மணியோசையை ஒலிபரப்பினால் அபத்தமாக இருக்குமல்லவா? சேரன் செங்குட்டுவன் பற்றிய நாடகத்தில் ஆப்பிரிக்க டிரம் இசையோ, கிதார் இசையோ சேர்க்கப்படக் கூடாது.

ஒலி வங்கி

தொடக்கக் காலத்தில் ஒலிவாங்கியின் (mike) முன்னால் நடிகர்கள் பேசும் போதே ஒலிக்குறிப்புகளையும் பின்னணி இசையையும் சேர்த்து இணைத்துத் தந்தார்கள். கடல் அலை ஓசை வேண்டும் எனில் பறையில் மணலைப் போட்டு ஆட்டுவார்கள். கூரை பற்றி எரிவதை உணர்த்த, செலபென் தாளை அசைப்பார்கள். துப்பாக்கி வெடிக்கும் ஓசையை உணர்த்த, தடித்த புத்தகத்தைப் பிரித்து வேகமாக மூடுவார்கள். இப்போது அப்படி இல்லை.

இயற்கையான ஒலிகளையும் செயற்கையான ஒலிகளையும் பதிவு செய்து சேகரித்து வைத்திருக்கிறார்கள். இது ஒலிவங்கி எனப்படும். இதிலிருந்து தேவைப்படுகிற ஓசையைத் தேவைப்படுகிற இடங்களில் இணைக்கிறார்கள். கார் ஒலி, ரயில் ஒலி, விமான ஒலி, தொலைபேசி ஒலி, ஆலயமணி ஒலி, கார் மோதும் ஒலி, மழைபெய்யும் ஒலி, தண்ணீர் குடிக்கும் ஒலி, கதவைத் தட்டும் ஒலி, கதவைச் சாத்தும் ஒலி, கார் ஒலிப்பானின் ஒலி போன்ற வாடிக்கையான ஒலிகள் ஒலிவங்கியில் சேகரித்து வைக்கப் பட்டிருக்கின்றன.

5.2.3 பின்னணி இசை வானொலி நாடகத்தில் பின்னணி இசை காட்சிகளின் தொடக்கத்தை உணர்த்த உதவுகிறது; காட்சிகளை இணைக்க உதவுகிறது; சினம், சோகம் போன்ற குறிப்பிட்ட உணர்வுகளை எழுப்பப் பயன்படுகிறது. நடந்து முடிந்த காட்சியில் இடம்பெற்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது; வரவிருக்கும் காட்சிக்கு ஆயத்தப்படுத்தவும் உதவுகிறது.

இசைப் பொருத்தம்

நாடகக் கதைக்கேற்ப நகர இசையையோ, நாட்டுப்புற இசையையோ பயன்படுத்தலாம். இசையை மாற்றியும் பயன்படுத்தக்கூடாது. சோக நிகழ்ச்சியைத் தொடர்ந்து மங்கல இசை வரக்கூடாது. இசை, அளவுக் கதிகமாகவும் இருக்கக் கூடாது. அதாவது வசனங்களை இசை அமிழ்த்தி விடக் கூடாது. அளவுக்கதிகமான இசை, உணவில் தேவைக்கு அதிகமாகச் சேர்க்கப்படும் உப்பைப் போன்று தீங்கு தரும்.

5.2.4 பாத்திரங்கள் வானொலி நாடகத்தில் பாத்திரங்கள், குரல் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள். வானொலியில் குரல் வளம் உடையவர்களை நிரந்தர நடிகர்களாக வைத்திருக்கிறார்கள். சொல் தெளிவுடன், ஏற்றத் தாழ்வுடன், உணர்ச்சி அழுத்தங்களுடன் பேசக்கூடிய நடிகர்களை வானொலி உருவாக்கியிருக்கிறது.

பாத்திரப் பொருத்தம்

ஒரே மாதிரியான குரல் உடையவர்களை ஒரே நாடகத்தில் பேச வைக்க மாட்டார்கள். அப்படிச் செய்தால் குழப்பம் வந்துவிடும். பாத்திரங்களுக்குப் பொருத்தமான குரல் உடையவர்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வைப்பார்கள். ஓர் அரசன் என்றால் கம்பீரமான குரல்தான் அடையாளம் ஆகிறது. அரசன், கம்மிய குரலிலோ, கிறீச்சிட்ட குரலிலோ பேசுவதை வானொலி நேயர்கள் ஏற்க மாட்டார்கள். குரலிலேயே ஏழை, பணக்காரன், முதியவர், இளைஞன், காதலன், காதலி, வில்லன் என்று உணர வைக்கிறார்கள். கொலையாளியா வெகுளியா என்பதைக் குரலிலே புலப்படுத்துகிறார்கள்.

வானொலியில் குரலின் வயதைக் கணித்துப் பாத்திரமாக நடிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். இருபது வயதுக்காரருக்கு ஐம்பது வயதுக்காரருக்கு உரிய குரல் இருக்கும். ஐம்பது வயதுக்காரருக்கு இருபது வயதுக் குரல் இருக்கும். குரலை மாற்றிப் பேசும் திறன் உடையவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. திருமதி பார்வதி ராமநாதன் 30 ஆண்டுகளாக வானொலியில் இளம் கதாநாயகியாகவே குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத் தக்கது.

பாத்திர எண்ணிக்கை

எழுத்தாளர்கள் தாம் எழுதும் நாடகம் கால்மணிக்கு உரியதா? அரைமணி நேரத்திற்கானதா? ஒரு மணி நேர நாடகமா? என்பதைக் கொண்டு கருவை உருவாக்குகிறார்கள். ஆகவே அதற்குரிய அளவு பாத்திரங்களைப் படைக்கிறார்கள். பெரும் நாடகங்களாயின் 10 பாத்திரங்களுக்கு மிகாமல் படைக்கிறார்கள். சிறிய நாடகங்களாயின் 5 பாத்திரங்களுக்கு மிகாமல் படைக்கிறார்கள்.

பாத்திர அடையாள உத்தி

பாத்திர உருவாக்கத்தில் ஆளைப் புரியவைக்கும் அடையாளங்களையும் வானொலி நாடகத்தில் வைக்கிறார்கள். சிலர் பேசும் பொழுது அடிக்கடி ‘வந்து’, ‘என்னன்னா?’, ‘நான் சொல்றது சரிதானே?’ என்பார்கள். இது ஓர் அடையாளமாகிறது. சிலர் தயங்கித் தயங்கிப் பேசுவதை அடையாளமாக ஆக்குவார்கள். சிலருக்கு வாய் தெற்றுவது அடையாளம் ஆக்கப்படுகிறது. ஆனால் எல்லாப் பாத்திரங்களையும் இவ்வாறு படைக்கக் கூடாது.

வானொலி நடிகர்கள்

வானொலியில் குரல் மூலம் நேயர்களின் வரவேற்பைப் பெற்ற நடிகர்கள் பலர். பலவகையான பாத்திரங்களை ஏற்றுப் புகழ்பெற்ற நடிகர்கள் பலர். இவர்களில் டி.வி.கிருஷ்ணமூர்த்தி, தென்னூர் கிருஷ்ண மூர்த்தி, கே.சந்திரகாந்தா, வி.வீரம்மாள், கே.வி.ராகவன், திருமதி கமலா, எம்.கே.மூர்த்தி, திருமதி பார்வதி ராமநாதன் முதலானவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

5.3 நாடக நெறிமுறைகள்

வானொலி நாடக நிகழ்ச்சிகள் அனைத்திற்குமே சில குறிக்கோள்கள் உள்ளன. மக்களுக்குத் தேவையான செய்திகளை எடுத்துரைத்தல் (Information), கல்வியளித்தல் (Education), களிப்பூட்டுதல் (Entertainment) என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே நிகழ்ச்சிகள் தயாரிக்கப் படுகின்றன.

கூறத் தக்கன

நல்லவையும் தீயவையும் கலந்து நிறைந்திருக்கும் சூழலில் நல்லனவற்றை அழுத்தமாக வானொலி நாடகம் காட்டுகிறது; மாறிவரும் சமூக மதிப்பீடுகளையும் மக்களுக்கு உணர்த்துகிறது.

கூறத் தகாதன

குறிப்பிட்ட இனத்தவரையோ சமயத்தவரையோ புண்படுத்தும் கருத்துகள் வானொலி நாடகத்தில் இடம் பெறுவதில்லை; சட்டங்கள், நீதிமன்றங்கள், மக்களின் பழக்க வழக்கங்கள் முதலானவற்றைக் கேலி செய்வதில்லை; கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை; வன்முறையையும் பாலுணர்ச்சியையும் தூண்டுவதில்லை; கண்ணியக் குறைவான சொற்களுக்கு இடமளிப்பது இல்லை; பெண்களை இழிவுபடுத்துவது, ஊனமுற்றோரை இழிவுபடுத்துவது போன்ற செய்திகளை இடம்பெறச் செய்வது இல்லை.

5.4 நாடக வகைகள்

வானொலியில் கால்மணி நாடகம், அரைமணி நாடகம், ஒருமணி நாடகம், சில நாட்களுக்கு ஒலிபரப்பாகும் தொடர் நாடகம் என்று பகுத்து ஒலிபரப்புகின்றனர். இவை இசை நாடகங்களாகவும், கவிதை நாடகங்களாகவும், தழுவல் நாடகங்களாகவும், மொழிபெயர்ப்பு நாடகங்களாகவும், தமிழிலேயே எழுதப்படும் உரைநடை நாடகங்களாகவும் இருக்கின்றன. நாடகத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நேரம் தவிரப் பிற நிகழ்ச்சிகளிலும் அவை தொடர்பான நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அந்நிகழ்ச்சிகள் குழந்தைகள், கிராம மக்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்காக உருவாக்கப்படுகின்றன.

நேரமும் நாடகமும்

கால்மணி நேர நாடகங்கள் சிறுகதைகள் போன்றவை. இவற்றில் சின்ன நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. நான்கு அல்லது ஐந்து காட்சிகள் இடம்பெறுகின்றன. பாத்திர எண்ணிக்கை குறைவாக இருக்கும். வருணனைகள் இருக்காது. உரையாடல் சுருக்கமாக இருக்கும். முன் கதை சொல்லும் பின்நோக்கு உத்தி இவற்றில் இருக்காது.

அரை மணி நேர நாடகங்கள் குறுநாவல்கள் போன்றவை. இவற்றில் காட்சிகள் மிகுதிப்படுத்தப் படுகின்றன. ஆறு அல்லது ஏழு காட்சிகள் இடம்பெறுகின்றன. பாத்திர எண்ணிக்கை, உரையாடல் ஆகியவற்றின் தன்மைகள் கால்மணி நேர நாடகத்தில் போலவே இருக்கின்றன. ஓரளவு பின்நோக்கு உத்தி பயன்படுத்தப்படும்.

ஒரு மணி நேர நாடகங்கள் நாவல்கள் போன்றவை. இவற்றில் பாத்திர மிகுதிக்கும் காட்சி மிகுதிக்கும் இடம் தருகிறார்கள். உரையாடல்கள் ஓரளவு நீண்டவையாக அமைகின்றன.

தொடர் நாடகங்கள் என்பவை இதழ்களில் வெளிவரும் தொடர்கதைகள் போன்றவை. நேயரைத் தொடர்ந்து ஈர்த்து வைப்பவை. ஒவ்வொரு தொடரிலும் அடுத்த தொடரைப் பார்க்க வைக்கும் வகையில் நேயரின் ஆர்வம் தூண்டப்படுகிறது. தொடர் நாடகங்கள் பற்றித் தனியாகப் பின்னால் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்ற செய்திகள் ஏனைய நாடகங்கள் குறித்தவை.

5.4.1 கவிதை நாடகமும் இசை நாடகமும் கவிதை நாடகங்களைப் பொறுத்த அளவில் அவை ஒரு மணி நாடகங்களாக ஒலிபரப்பப் படுவதில்லை. அவ்வாறு செய்யின் வெற்றி கிடைப்பது இல்லை. ஆகவே கால்மணி அல்லது அரைமணி நாடகங்களாக அமைக்கப்படுகின்றன. பாரதியாரின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் குடும்ப விளக்கு போன்ற புதுமைப் படைப்புகள் ஒலி பரப்பாயின. தஞ்சை வாணன் எழுதிய களம் கண்ட கவிஞன் நாடகம் ஒலிபரப்பாயிற்று. அதில் சிவாஜி கணேசன் குரல் கொடுத்திருந்தார். கவிஞர் கருணானந்தம் படைத்த நறுமணம் என்னும் கவிதை நாடகமும் ஒலிபரப்பப்பட்டு வெற்றி பெற்றது. விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் கருத்தை அது வலியுறுத்தியது. இவை போன்ற நாடகங்கள் பல ஒலிபரப்பாகின்றன.

நந்தனார் சரித்திரம், இராம நாடகம், குற்றாலக் குறவஞ்சி போன்ற இசை சார்ந்த கதைகளை நாடகமாக்கி வெளியிட்டனர். இசைக் கலைஞர்களைக் கொண்டு இவை நிகழ்த்தப்பட்டன. கவிதை நாடகங்கள் போன்றே இவையும் கால்மணி அல்லது அரைமணி நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

5.4.2 உரைநடை நாடகங்கள் வானொலியில் பெரும்பான்மையாக ஒலிபரப்பாவன உரைநடை நாடகங்கள்தாம். இவை வரலாற்று நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள், புராண நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், சமூக நாடகங்கள், குடும்ப நாடகங்கள் என ஒலிபரப்பாகின்றன. சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

வரலாற்று நாடகம்

வானொலிக்கென்றே எழுதப்பட்டும், வரலாற்று நாவல்களை நாடகமாக்கியும் இவை ஒலிபரப்பாகின்றன. பி.எஸ்.ராமையாவின் தேரோட்டி மகன், குகன் எழுதிய ராஜராஜ சோழன் ஆகியன வெற்றி பெற்ற நாடகங்கள். மதுரை வானொலி நிலையம் கல்கியின் வரலாற்று நாவலான சிவகாமியின் சபதத்தை நாடகமாக்கி வெற்றிகரமாக ஒலிபரப்பியது.

இலக்கிய நாடகம்

வள்ளுவர், ஒளவையார், வள்ளல்கள் போன்றோரின் வரலாற்றை இலக்கியம் தழுவி நாடகமாக்கி ஒலிபரப்புகின்றனர். ஒளவையார் அதியமான் உறவை விளக்கும் கவியின் கருணை குறிப்பிடத்தக்க நாடகம். திருமுறைகள் தொகுக்கப்பட்ட வரலாற்றைத் திருமுறை கண்ட சோழன் என்னும் நாடகத்தில் புலப்படுத்தினர்.

புராண நாடகம்

புராணக் கதைகளை விரும்பி ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தெய்வங்களின் ஆற்றலையும் அறிவையும் அருளையும் உணர்த்தும் வகையில் புராண நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. ஸ்ரீ சக்ரதாரி என்ற நாடகம் திருமாலின் வரலாற்றை எடுத்துக் காட்டியது.

நகைச்சுவை நாடகம்

நகைச்சுவை நாடகங்களும் நேயர்களால் விரும்பப்படுகின்றன. நகைச்சுவை நாடகங்களுக்கு மோதல், உச்சக் கட்டம் என்ற வளர்ச்சி நிலைகள் கிடையாது. சிரிப்பூட்டும் உரையாடல்களே முக்கியம். மக்களுக்குத் தேவையான கருத்துகளை நகைச்சுவையாகத் தருகிறார்கள். லேடி பயில்வான், ஜிகினா சுல்தான், செல்லாதுரை, T.N.F.P 120 முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை.

குடும்ப நாடகங்கள்

உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் குடும்ப நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குடும்ப உறவுகளில் சிக்கல்கள், குடும்பப் பொருளாதார நிலைகளினால் வரும் சிக்கல்கள், நல்ல குடும்பத்தின் இயல்புகள் போன்றன நாடகமாக ஒலிபரப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு நாடகங்களைக் காண்போம்.

அம்மா உன் வயிற்றினிலே

அம்மா உன் வயிற்றினிலே என்ற தலைப்பைக் கொண்ட நாடகம் நேரடியாகக் கருத்தைச் சொல்லாமல் புதுமையான முறையில் கருத்தைச் சொல்வதாக அமைந்திருந்தது. ஏற்கெனவே நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருத்தி மீண்டும் கருவுறுகிறாள். கருவில் இருக்கும் குழந்தை கடவுள் அருளால் தாயுடன் பேசுகிறது. முன்பு அவள் பெற்ற குழந்தைகளை வளர்க்கப் படும்பாட்டை அறிகிறது. தானும் பிறந்து தாயின் சுமையை அதிகமாக்க விரும்பாமல் கடவுளிடம் வேண்டி இறந்தே பிறக்கிறது. இதில் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய நேரடிப் பிரச்சாரம் இல்லை. ஆனால் மறைமுகமாகக் கருத்துக் கூறப்பட்டுள்ளது.

டியூசன் டீச்சர்

டியூசன் டீச்சர் என்ற நாடகம் மேற்கண்ட நாடகம் போன்றதுதான். நிறையக் குழந்தைகளைப் பெற்ற ஆசிரியை, குடும்ப வறுமையைப் போக்க ஒரு பணக்காரக் குழந்தைக்கு டியூசன் எடுக்கிறாள். அந்தக் குழந்தை நன்கு படித்து நிறைய மதிப்பெண் வாங்குகிறது. குழந்தையின் பெற்றோர்கள் பாராட்டி ஆசிரியைக்குப் பரிசு தருகின்றனர். ஆனால் ஆசிரியை மகிழ்ச்சியடையாமல், வருத்தப்படுகிறாள். வறுமையைப் போக்கும் ஆவலில் டியூசன் எடுத்து உழைத்த அவள், தன் குழந்தையின் படிப்பைக் கவனிக்க முடியாமல் போனாள். இதனால் அவளுடைய குழந்தை தேர்வில் தோல்வி அடைந்து விடுகிறது.

சமூக நாடகங்கள்

சராசரி மனிதனைப் பாதிக்கும் எல்லாமே சமூக நாடகங்களில் இடம்பெறுகின்றன. சமூகக் கட்டமைப்பின் கோளாறு, கருத்து மோதல், மனித உறவுச் சிக்கல், பழமைக்கும் புதுமைக்கும் போராட்டம், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் முதலானவை நாடகங்களாக ஒலிபரப்பப் படுகின்றன. வானொலியில் சமூக நாடகங்களே மிகுதி எனலாம். பிற நிகழ்ச்சிகளில் வரும் நாடகங்களில் பெரும்பான்மையானவை சமூக நாடகங்களே. தொடர் நாடகங்களாகவும் இவை ஒலிபரப்பாகின்றன. சமூகத்தில் உருவாகும் புதிய விழிப்புணர்ச்சிகளுக்கு ஏற்பச் சமூக நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக சு.சமுத்திரத்தின் வாடாமல்லி நாடகத்தைக் குறிப்பிடலாம். அலிகள் பிரச்சினை தற்போது விரிவாக விவாதிக்கப்படுகிறது. அவர்களும் ஆண், பெண் போல மதிக்கப்பட வேண்டும்; சமூக அங்கீகாரம் பெறவேண்டும் என்ற கருத்து வளர்ந்து வருகிறது. இதை மையமாகக் கொண்டு அமைந்தது வாடாமல்லி நாடகம். இதுபோன்று பல நாடகங்களைச் சொல்லலாம்.

5.4.3 தொடர் நாடகங்கள் வானொலி நாடக வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கது தொடர் நாடகம் என்று பார்த்தோம். தொடர் நாடகங்கள் வானொலி நேயர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. தொடர் நாடகங்களைப் படைப்பாளர் பலரைக் கொண்டும் தனி ஒரு படைப்பாளரைக் கொண்டும் எழுதச் செய்து ஒலிபரப்புகின்றனர்.

பலர் எழுதியன

காப்புக் கட்டிச் சத்திரம் என்ற தொடர் நாடகம் பலரால் படைக்கப்பட்டது. இது புறநகர்ப் பகுதியில் வாழும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தது. கிராமத்துக்கு வாங்க என்ற நாடகம் 13 ஆசிரியர்களைக் கொண்டு எழுதப்பட்டது. கிராமங்களிலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்து, வாழ வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு வழிசொல்லும் வகையில் இந்நாடகம் ஒலிபரப்பப் பட்டது. பெண்ணாய்ப் பிறந்தவள் என்ற நாடகம் பெண் எழுத்தாளர் பலரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணும் தன் குறைகளைத் திருத்திக் கொண்டு செம்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்நாடகம் வலியுறுத்தியது.

ஒருவர் எழுதியன

கறைபடிந்த கரங்கள் என்ற நாடகம் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த பொன். பரமகுரு அவர்களால் எழுதப்பட்டு ஒலிபரப்பானது. சமுதாயப் பகைவர்களாக நடமாடும் சிலரது பண்புக் கேடுகளையும், கொடுமைகளையும் 24 தொடர்களாக எடுத்துக் காட்டினார். இவற்றில் பெரும்பாலும் உண்மை நிகழ்ச்சிகளே நாடகமாக ஆக்கப் பெற்றிருந்தன. இதே போல உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டு என்.சி. ஞானப்பிரகாசம் நுகர்வோருக்காக பகுதியில் நுகர்வோர் உரிமைகள் குறித்துத் தொடர் நாடகம் எழுதியிருந்தார். இது 15 தொடர்களாக ஒலிபரப்பாயிற்று.

நகர மக்களின் சிக்கல்களைப் பற்றிய குயில்தோப்பு நாடகம் குறிப்பிடத் தக்கது. குப்பத்தில் முன்னேற வழியின்றி வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது பற்றி இந்நாடகம் எடுத்துரைத்தது. நல்ல சுகாதாரம், கல்வி வளர்ச்சி, கூட்டுறவு, தொழில் வளர்ச்சி போன்றன குறித்தும் இந்நாடகம் எடுத்துரைத்தது. நகர மக்களின் நலவாழ்வு பற்றிப் பட்டுக்கோட்டை குமாரவேலு எழுதிய புதிய வேதாளம் நாடகமும் குறிப்பிடத் தக்கது. துபாஷ் வீடு என்ற தொடர் நாடகமும் வெற்றிகரமாக ரசிக்கப்பட்டது.

5.4.5 பிற நிகழ்ச்சிகளில் நாடகங்கள் வானொலியில் நாடகத்திற்காக நேரம் ஒதுக்கி நாள்தோறும் ஒலிபரப்புகிறார்கள். அதையும் தவிரச் சிறுவர்களுக்கான மணிமலர் நிகழ்ச்சி, கிராம நிகழ்ச்சி, தொழிலாளர் நிகழ்ச்சி, பெண்களுக்கான பெண்ணுலகம் நிகழ்ச்சி, இளைஞர்களுக்கான நிகழ்ச்சி ஆகியவற்றில் சிறுசிறு நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன.

சிறுவர் நிகழ்ச்சி

சிறுவர்களுக்கான மணிமலர் நிகழ்ச்சியில், சிறுவர்களின் பண்புகளை வளர்க்கக் கூடிய வகையில் நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். சிறுவர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் பெரும்பாலும் சிறுவர்களையே பங்குபெறச் செய்கிறார்கள். சொல்ல வேண்டிய செய்திகளை நாடகத்தில் அழுத்தமாகச் சொல்கிறார்கள்; அதே நேரத்தில் எளிமையாகச் சொல்கிறார்கள். அன்பு, இரக்கம், வீரம், உதவும் பண்பு, முயற்சி, நாட்டுப்பற்று, பகுத்தறிவு முதலான செய்திகளை நாடகக் கருவாகக் கொள்கிறார்கள். ராமன், சீதை, சிவாஜி, அலெக்ஸாண்டர், அசோகர், ராணி மங்கம்மாள் முதலானோரின் வரலாறுகளும் நாடகங்களாக ஒலிபரப்பப்படுகின்றன. அறிவியல் கருத்துகள் குறித்தும் அறிவியல் மேதைகள் குறித்தும் நாடகங்கள் தரப்படுகின்றன. பீர்பால், தெனாலி ராமன் முதலானோரின் அறிவூட்டும் நகைச்சுவைக் கதைகளையும் நாடகமாக்கித் தருகின்றனர்.

கிராம நிகழ்ச்சி

கிராம மக்களுக்கான கிராம நிகழ்ச்சிகளில் பசுமைப் புரட்சி, பயிர்ப் பாதுகாப்பு, குடும்ப நலம், முதியோர் கல்வி முதலானவற்றைப் பற்றிய நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். கிராமப் பஞ்சாயத்து நிகழ்ச்சி என்னும் வடிவத்திலும் சிறு நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள்.

தொழிலாளர் நிகழ்ச்சி

தொழிலாளர் நிகழ்ச்சிகளில் தொழிலாளர் நலம், தொழிலாளர் முன்னேற்றம், தொழிலாளர் கடமை முதலான செய்திகளை நாடகமாக்கி ஒலிபரப்புகிறார்கள். தொழிலாளி முதலாளி உறவு குறித்தும் நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன.

பெண்கள் நிகழ்ச்சி

பெண்களுக்கான பெண்ணுலகம் போன்ற நிகழ்ச்சிகளில் குடும்ப நலம், குடும்பக் கட்டுப்பாடு, குடும்பக்கலை, பிள்ளை வளர்ப்பு, பெண்களுக்குப் பயன்தரும் தொழில்கள், கல்வி வளர்ச்சி, வரதட்சணைக் கொடுமை முதலியன குறித்துச் சிறு நாடகங்களை ஒலிபரப்புகின்றனர். மேலும் பெண்களின் பிரச்சினைகளும், குடும்ப உறவுச் சிக்கல்களும், விலைவாசி உயர்வுச் சிக்கலும் தீர்வு பெறும் வகையில் நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன.

இளைஞர் நிகழ்ச்சி

இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், வேலையில்லாத் திண்டாட்டம், தலைமுறை இடைவெளி, வாழ்க்கை அணுகுமுறை, மதிப்பீடுகள் முதலானவை குறித்து நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள்.

5.4.4 தழுவலும் மொழிபெயர்ப்பும் பிற மொழிகளிலுள்ள நல்ல கதைகளைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்றி அமைத்து நாடகங்களாக ஒலிபரப்புகிறார்கள். இத்தகைய தழுவல் நாடகங்கள் வானொலியில் நிறைய இடம்பெறுவதில்லை. எனினும் நல்ல எழுத்தாளர்களின் படைப்பை அறிந்துகொள்ள இந்நாடகங்கள் உதவுகின்றன.

அகில இந்திய அளவில் பல மொழிகளில் எழுதப்படும் வானொலி நாடகங்களில் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிறமொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள். நாடகப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் நாடகங்களையும் இவ்வாறு மொழிபெயர்த்து ஒலிபரப்புகிறார்கள். சிவாஜி வரலாற்றை மையமாகக் கொண்ட தேசத்தின் குரல் என்ற நாடகம் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.

5.4.5 பிற நிகழ்ச்சிகளில் நாடகங்கள் வானொலியில் நாடகத்திற்காக நேரம் ஒதுக்கி நாள்தோறும் ஒலிபரப்புகிறார்கள். அதையும் தவிரச் சிறுவர்களுக்கான மணிமலர் நிகழ்ச்சி, கிராம நிகழ்ச்சி, தொழிலாளர் நிகழ்ச்சி, பெண்களுக்கான பெண்ணுலகம் நிகழ்ச்சி, இளைஞர்களுக்கான நிகழ்ச்சி ஆகியவற்றில் சிறுசிறு நாடகங்கள் ஒலிபரப்பப் படுகின்றன.

சிறுவர் நிகழ்ச்சி

சிறுவர்களுக்கான மணிமலர் நிகழ்ச்சியில், சிறுவர்களின் பண்புகளை வளர்க்கக் கூடிய வகையில் நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். சிறுவர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் பெரும்பாலும் சிறுவர்களையே பங்குபெறச் செய்கிறார்கள். சொல்ல வேண்டிய செய்திகளை நாடகத்தில் அழுத்தமாகச் சொல்கிறார்கள்; அதே நேரத்தில் எளிமையாகச் சொல்கிறார்கள். அன்பு, இரக்கம், வீரம், உதவும் பண்பு, முயற்சி, நாட்டுப்பற்று, பகுத்தறிவு முதலான செய்திகளை நாடகக் கருவாகக் கொள்கிறார்கள். ராமன், சீதை, சிவாஜி, அலெக்ஸாண்டர், அசோகர், ராணி மங்கம்மாள் முதலானோரின் வரலாறுகளும் நாடகங்களாக ஒலிபரப்பப்படுகின்றன. அறிவியல் கருத்துகள் குறித்தும் அறிவியல் மேதைகள் குறித்தும் நாடகங்கள் தரப்படுகின்றன. பீர்பால், தெனாலி ராமன் முதலானோரின் அறிவூட்டும் நகைச்சுவைக் கதைகளையும் நாடகமாக்கித் தருகின்றனர்.

கிராம நிகழ்ச்சி

கிராம மக்களுக்கான கிராம நிகழ்ச்சிகளில் பசுமைப் புரட்சி, பயிர்ப் பாதுகாப்பு, குடும்ப நலம், முதியோர் கல்வி முதலானவற்றைப் பற்றிய நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள். கிராமப் பஞ்சாயத்து நிகழ்ச்சி என்னும் வடிவத்திலும் சிறு நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள்.

தொழிலாளர் நிகழ்ச்சி

தொழிலாளர் நிகழ்ச்சிகளில் தொழிலாளர் நலம், தொழிலாளர் முன்னேற்றம், தொழிலாளர் கடமை முதலான செய்திகளை நாடகமாக்கி ஒலிபரப்புகிறார்கள். தொழிலாளி முதலாளி உறவு குறித்தும் நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன.

பெண்கள் நிகழ்ச்சி

பெண்களுக்கான பெண்ணுலகம் போன்ற நிகழ்ச்சிகளில் குடும்ப நலம், குடும்பக் கட்டுப்பாடு, குடும்பக்கலை, பிள்ளை வளர்ப்பு, பெண்களுக்குப் பயன்தரும் தொழில்கள், கல்வி வளர்ச்சி, வரதட்சணைக் கொடுமை முதலியன குறித்துச் சிறு நாடகங்களை ஒலிபரப்புகின்றனர். மேலும் பெண்களின் பிரச்சினைகளும், குடும்ப உறவுச் சிக்கல்களும், விலைவாசி உயர்வுச் சிக்கலும் தீர்வு பெறும் வகையில் நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன.

இளைஞர் நிகழ்ச்சி

இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், வேலையில்லாத் திண்டாட்டம், தலைமுறை இடைவெளி, வாழ்க்கை அணுகுமுறை, மதிப்பீடுகள் முதலானவை குறித்து நாடகங்களை ஒலிபரப்புகிறார்கள்.

5.5 தயாரிப்பாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் படைப்பு

வானொலி நாடகத் தயாரிப்பாளர்கள் தகுதியான படைப்பாளர்களை அணுகி, ஒலிபரப்ப விரும்பும் கருத்துகளுக்கு ஏற்ற நாடகங்களைப் பெற்று ஒலிபரப்புகிறார்கள். இதற்காக அவர்களிடம் படைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இவைகள் தவிர, வேறு படைப்பாளர்களும் தங்கள் படைப்புகளை அனுப்புகிறார்கள். அவற்றில் தகுதியானவற்றை நாடகத் தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுத்து ஒலிபரப்புகிறார்கள். இப்பகுதியில் நாடகத் தயாரிப்பாளர் சிலர் குறித்தும் படைப்பாளர் குறித்தும் படைப்புகள் குறித்தும் காண்போம்.

5.5.1 தயாரிப்பாளர்கள் தமிழ் வானொலி நாடக வளர்ச்சிக்கு உழைத்தவர்களில் ஜி.டி. சாஸ்திரி, ஆர். பார்த்தசாரதி, எம்.எஸ். கோபால், மீ.ப. சோமசுந்தரம் (சோமு), எஸ். கந்தசாமி (துறைவன்), சுகி சுப்பிரமணியன், கே.பி. கணபதி (மாறன்), என். ராகவன், இரா.ஆறுமுகம், என்.வாசுதேவன், எம்.விசுவநாதன் (ரேடியோ அண்ணா), ஆர். அய்யாசாமி (வானொலி அண்ணா), பட்டுக்கோட்டை குமாரவேல், சக்தி மைந்தன் முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

5.5.2 படைப்பாளர்களும் படைப்புகளும் வானொலி நாடகப் படைப்பாளர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள் குறித்த தகவல்களையும் இப்பகுதியில் காணலாம்.

ஏ.என். பெருமாள்

விடுதலைவீரன் வேலுத்தம்பி; வெற்றிக்குப் பலி; விமலனின் வீரம்; வீரத்தில் விளைந்த காதல்; பாசத்தின் எல்லை.

எம்.எஸ்.கோபால்

காற்றினிலே மிதந்த நாடகங்கள்; விளம்பரப் புலி

மனசை ப.கீரன்

தேர்க்கூட்டம்; உயிர்ப்பொம்மை; காற்றிலே கமழ்ந்தவை

பட்டுக்கோட்டை குமாரவேல்

குமாரசாமியின் குடும்பம்; கிண்கிணி மண்டபம்; குயில் தோப்பு; பொன் நகர்; மனமகிழ் மன்றம்; புதிய வேதாளம்; தேவை ஒரு மணமகன்

இ.குற்றாலம்

புதுவாழ்வு; இறைவன் தந்த பரிசு; அன்னையின் பாசம்; அன்பு நிலையம்; அண்ணன் காப்பான்; அண்ணனும் தம்பியும்; தொண்டின் பெருமை; சின்னம்மா; மன்னிப்பு; தன்மானம்.

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

நீ வந்த நேரம்; பணம் பணம் பணம்

ஆலந்தூர் கோ.மோகன ரங்கன்

பொய்யே நீ போய்விடு; பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்; வெற்றி எங்கள்கைகளில; நாங்கள் நல்லவர்கள; சவால் சம்பந்தம்; ஏமாந்தவர் யார்?

தாமரைக் கண்ணன்

கிள்ளி வளவன்; வெண்ணிலா; மருது பாண்டியர்; அலெக்ஸாண்டர்; சாணக்கிய சாம்ராஜ்யம்; கை விளக்கு; சங்கமித்திரை

பொன். பரமகுரு

வினை விதைத்தவர்கள்

க. குருநாதன்

நிலாவுக்கு பஸ்

அ. அகமது பஷீர்

சிரித்துக் கொண்டே இருப்பேன்; காலமும் கடமையும்; அண்ணனும் தங்கையும்; பங்குபோட்டுத் தின்னலாம்; தவறும் திருத்தமும்; குழந்தை நூலகம்; உதவி; புத்தக வங்கி; உதவத்தான் வேண்டும்; மறுவாழ்வு

கூத்தபிரான்

சின்னக் குருவி; சிக்குடு; கிச்சூடு

மேற்கண்டவர்கள் தவிர பி.எஸ்.ராமையா, மீ.ப.சோமு, எஸ்.கந்தசாமி (துறைவன்), சுகி.சுப்பிரமணியன், என்.ராகவன், தாமரை மணாளன், குகன், வாசவன், ஞா.மாணிக்கவாசகன், இருகூரான், லியோபிரபு, இரா.தயாநிதி, எஸ்.குலசேகரன், பி.சி.கணேசன், ஐ.ஜோசப் ஆனந்தன், அவினாசி முருகேசன், சூ.இன்னாசி, சீ.சின்னத்தம்பி, கி.கோவிந்தன், வில்லிவாக்கம் சாக்ரடீஸ் முதலானவர்களும் குறிப்பிடத் தக்க வானொலி நாடகப் படைப்பாளர்கள் எனலாம்.

5.6 தொகுப்புரை

நாடகத் தயாரிப்பாளர், படைப்பாளர், நடிகர்கள், ஒலிப்பதிவாளர்கள் முதலானவர்களின் கூட்டுறவில் உருவாகும் ஆற்றல் மிக்க இலக்கிய வடிவம் வானொலி நாடகம். இது, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், படிக்கும் நாடகம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. குரல், ஒலிக்குறிப்பு, இசை முதலானவற்றால் கற்பனையான உலகைப் படைத்துக் காட்டுகிறது. பொழுதுபோக்காகவும் அறிவூட்டுவதாகவும் திகழும் வானொலி நாடகத்தின் தாக்கம் மிகப் பெரியது. வானொலி நாடகத்தின் கட்டமைப்பு நுட்பத்தை உணர்ந்து சுவைத்தால் மிகுதியான இலக்கிய இன்பம் கிடைக்கும்.

பாடம் - 6

தொலைக்காட்சி நாடகங்கள்

6.0 பாட முன்னுரை

உலகம் முழுதும் தொலைக்காட்சி நாடகங்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. இவற்றின் வளர்ச்சி மிக விரைவானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாதியளவு இடத்தை இவை பிடித்திருக்கின்றன. தமிழ்த் தொலைக்காட்சியிலும் இந்நிலை காணப்படுகிறது. திரைப்படத்திற்கு இணையாக உருவெடுத்திருக்கும் இக்கலை குறித்து அறிந்து கொள்வது நாடகக்கலை அறிவுக்கு இன்றியமையாததாகும். தொலைக்காட்சி நாடகங்களின் வரலாறு, அவற்றின் கதை அமைப்புகள், பிற ஊடகங்களோடு அவை கொண்டிருக்கிற தொடர்பு, அவற்றின் தனித்தன்மை, தயாரிப்பு முறை, அமைப்பு முறை, நாடக நிகழ்வுகள் ஆகியவை குறித்துக் காண்போம்.

6.1 தொலைக்காட்சி

இன்று வீடுகள் தோறும் இடம்பெற்றுப் பல்வேறு பிரிவு மக்களையும் கவர்ந்து இழுக்கும் சாதனமான தொலைக்காட்சியின் வரலாற்றை முதலில் காணலாம்.

6.1.1 இந்தியாவில் தொலைக்காட்சி தொலைக்காட்சி 1926ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு முதல் பி.பி.சி. நிறுவனம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. யுனெஸ்கோ உதவியால் 1959ஆம் ஆண்டு இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. விவசாய மேம்பாட்டுக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் இது இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் டில்லியிலும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலும் ஒளிபரப்பு நிகழ்ந்தது. அகில இந்திய வானொலியின் ஒரு பிரிவாக இருந்த இது பின்னர்ப் பிரிக்கப்பட்டு ‘தூர்தர்ஷன்’ என்ற தனி அமைப்பாக ஆக்கப்பட்டது.

6.1.2 தமிழகத்தில் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் சென்னையில் 1975ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 20 கிலோ மீட்டர் வரை ஒளிபரப்பு நிகழ்ந்தது. அடுத்த ஆண்டிலிருந்து 80 கிலோ மீட்டர் ஒளிபரப்பானது. 1987ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒளிபரப்பானது. 1992ஆம் ஆண்டு முதல் செயற்கைக் கோள் ஒளிபரப்புகள் தொடங்கின. அது முதல் எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்கிறது. தொடக்கத்தில் Television என்பதற்கு ‘படரேடியோ’, ‘காட்சி வானொலி’, ‘வானொளி’ என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது. பின்னர், தொலைபேசி என்பது போலத் ‘தொலைக்காட்சி’ என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

6.1.3 வளர்ச்சி 1976ஆம் ஆண்டு படத்தொகுப்பு (Editing) வசதி வந்தது. 1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக வண்ண ஒளிபரப்பு வசதி வந்தது. வெளிப்புறப் படப்பிடிப்பு வசதி வந்தது. ஒலிப்பதிவு (Dubbing) வசதி வந்தது. இந்த வசதிகளால் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கல்வி வளர்ச்சிக்காகவும் விவசாய வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியது. தொலைக்காட்சிப் பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களும், தங்கள் தயாரிப்பை விளம்பரம் செய்ய விரும்பிய வியாபாரிகளும் இதற்குக் காரணமானவர்கள் எனலாம். பொதுவான நிகழ்ச்சிகளான நாடகங்கள் முதலானவற்றால் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனை பெருகும் என்று கருதினார்கள். நாடக நிகழ்ச்சியை மக்கள் பலர் விரும்பிப் பார்ப்பதால் அதன் ஊடே விளம்பரம் செய்வது பலன் தரும் என்று கருதினார்கள்.

6.1.4 நாடக அறிமுகம் மெக்ஸிகோ நாட்டில் ‘நாவெல்லா’ என்ற பெயரில் தொடர்கள் ஒளிபரப்பாயின. அதைப் பார்த்து இந்தியாவில் ‘ஹம்லோக்’, ‘புனியாத்’ முதலான இந்திமொழி நாடகத் தொடர்களை உருவாக்கி ஒளிபரப்பினார்கள். ‘ஹம்லோக்’ தொடரின் விளம்பரதாரர்களாக இருந்தவர்கள் நூடுல்ஸ் நிறுவனத்தார். இதனால் நூடுல்ஸ் விற்பனை பெருகியது. தொலைக்காட்சிப் பெட்டி விற்பனையும் பெருகியது. இந்த ஆற்றல் காரணமாகத் தொலைக்காட்சியில் நாடகங்களுக்கு மிகுதியான நேரம் ஒதுக்கப்பட்டது.

6.1.5 மக்கள் ஊடகம் 1977ஆம் ஆண்டில் அரசின் கட்டுப்பாடு தளர்ந்தது. தூர்தர்ஷனில் இரண்டாவது அலைவரிசைகள் தொடங்கப்பட்டன. செயற்கைக்கோள் ஒளிபரப்பு வந்த பின் முற்றிலும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்குச் சாதனமாகத் தொலைக்காட்சி ஆக்கப்பட்டுவிட்டது. இன்று அரசு சார் தொலைக்காட்சியில் மட்டுமே இலாப நோக்கு இல்லாத சமூக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஏனைய செயற்கைக்கோள் ஒளிபரப்புகளான ‘சன்’, ‘ராஜ்’, ‘விஜய்’, ‘ஜெயா’ முதலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் விளம்பர நிகழ்ச்சிகளையுமே மிகுதியாகக் கொண்டுள்ளன. மக்கள், திரைப்படத்தின் இன்னொரு வடிவமாகத் தொலைக்காட்சியைக் கருதுகிறார்கள்.

6.1.6 தொலைக்காட்சி நாடக ஒளிபரப்பு தொடக்கத்தில் தூர்தர்ஷனில் மேடை நாடகங்களை அப்படியே ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பினார்கள். பின்னர், மேடை நாடகக் குழுக்களைக் கொண்டு தொலைக்காட்சி நிலைய அரங்கில் ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பினார்கள். பெரும்பாலும் அவை அரைமணி நேரம் அல்லது ஒருமணி நேர நாடகங்களாக இருந்தன. இந்தியிலிருந்த நாடகத் தொடர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டன. செயற்கைக்கோள் தொலைக்காட்சியினர் பல தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பினர். இந்த முறை தூர்தர்ஷனிலும் பின்பற்றப்பட்டது.

6.1.7 நிலைபெறுதல் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் உருவானார்கள். அவர்களில் பலர் திரைத்துறையையும் நாடகத் துறையையும் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் மேடை நாடகத் தன்மையைப் பெற்றிருந்த தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படத் தன்மையைப் பெற்றன. மேடை நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் இடைப்பட்ட ஒரு வடிவமாகத் தொலைக்காட்சி நாடகம் அமைந்துள்ளது.

6.2 தொலைக்காட்சி நாடகங்களும் பிற ஊடகங்களும்

தொலைக்காட்சி நாடகம் பொது அரங்கில் பார்க்கப்படுவதில்லை. இது வீட்டில் இருந்தபடியே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இதை ‘வீட்டுத் தொடர்புச் சாதனம்’ எனலாம். வானொலி நாடகம், மேடை நாடகம், திரைப்படம் முதலானவற்றிலிருந்து தொலைக்காட்சி நாடகம் வேறுபடுகிறது.

6.2.1 வானொலி நாடகமும் தொலைக்காட்சி நாடகமும் வானொலியும் தொலைக்காட்சியும் மின்னியல் முறையில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. வானொலி நாடகம் உரையாடல்களையும் இசையையும் ஒலிகளையும் கொண்டு இயங்கும் ‘கேட்கும்’ (Audio) ஊடகமாக இருக்கிறது. தொலைக்காட்சி நாடகம் காட்சிகளையும் உரையாடலையும் பிற ஒலிகளையும் கொண்டு இயங்கும் ‘காணும் கேட்கும்’ (Audio visual) ஊடகமாக இருக்கிறது. வானொலி நாடகத்தில் நடிகர்கள் உரையாடலைப் பார்த்துப் படிப்பதன் மூலம் குரலால் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். தொலைக்காட்சி நாடகத்தில் தொடக்கத்தில் உரையாடல்களை மனப்பாடம் செய்து பேசி நடித்தார்கள். ஒலிப்பதிவு (Dubbing) வசதி வந்த பின்பு ஓரளவு உரையாடலைத் தெரிந்து பேசி நடிக்கிறார்கள். பின் நடிகர்களே பேசி ஒலிப்பதிவு செய்கிறார்கள். அல்லது இரவல் குரல்களைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்கிறார்கள். வானொலி நாடகத் தயாரிப்பு, தயாரிப்பாளர் ஒருவர் கையில் உள்ளது. தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பில் பலரது உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன.

6.2.2 மேடை நாடகமும் தொலைக்காட்சி நாடகமும் மேடை நாடகம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் மேடை அமைத்து நடத்தப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், சமுதாய மன்றங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள்(சபா) முதலான இடங்களில் அது நடத்தப்படுகின்றது. வண்ணத் திரைச்சீலைகள், ஒலிவாங்கி வசதிகள், ஒளி வசதிகள் ஆகியவற்றுடன் நடத்தப்படுகின்றது. மேடை நாடக நடிகர்கள் வசனங்களை முழுமையாக மனப்பாடம்செய்து அவர்களே பேசுகிறார்கள். ஓரங்க நாடகமாயினும் முழு நாடகமாயினும் மக்கள் முன்னிலையில் மேடை நாடகம் நடத்தப்படுகிறது. சுவைஞர்கள் நேரில் நாடகத்தைப் பார்க்கிறார்கள்; தாங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிகிற ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். கூட்டத்துடன் அமர்ந்து கூட்ட உணர்வோடு பார்க்கிறார்கள்.

தொலைக்காட்சி நாடகத்தைச் சுவைஞர்கள் தொலைவிலிருந்து (அதாவது நாடகம் பதிவு செய்யும் இடத்திற்குத் தொலைவிலிருந்து) பார்க்கிறார்கள். தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வரும் ஒளிச் சைகைகளைத் தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாகப் பார்க்கிறார்கள். தனியாகவோ, குடும்பத்தினரோடோ பார்க்கிறார்கள். உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ, படுத்துக் கொண்டோ பார்க்கிறார்கள். சாப்பிடுதல், சமையல் செய்தல் முதலான வேறு வேலைகளைச் செய்துகொண்டும் பார்க்கிறார்கள். அண்மை, சேய்மைக் காட்சிகளால் பல அளவுகளிலும் கோணங்களிலும் நாடகப் பாத்திரங்களையும் காட்சிகளையும் பார்க்கிறார்கள். மேடை நாடகத்தில் பார்க்க முடியாத பல காட்சிகளைப் (விமானம், கப்பல், மலை, நெருப்பு, ஆறு) பார்க்கிறார்கள்.

6.2.3 திரைப்படமும் தொலைக்காட்சி நாடகமும் தொலைக்காட்சியும் திரைப்படமும் கண்ணுக்கும் காதிற்கும் உரியவை; இரண்டிலும் தொழில் நுட்ப வல்லுநர்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டியின் திரையமைப்பின் உயர அகலம் 3 : 4 என்ற அளவில் உள்ளது. திரைப்படத்தின் திரை பெரியது. தொலைக்காட்சித் திரை சிறியது என்பதால் அதற்குச் ‘சின்னத்திரை’ என்று பெயரிட்டுள்ளார்கள். பிம்ப வெளிப்பாட்டில் திரைப்படமும் தொலைக்காட்சியும் ஒத்தவை. ஆனால் உருவாக்கம், ஒளிபரப்பு முறை முதலானவற்றில் இரண்டும் வேறுபடுகின்றன. அரங்கம், கதாபாத்திர உருவாக்கம், உரையாடல் ஆகியவற்றிலும் வேறுபடுகின்றன.

6.3 தனித்தன்மை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பணக்காரர் முதல் ஏழைகள் வரை வேறுபாடின்றி ரசிக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு தொலைக்காட்சி நாடகங்கள் அமைகின்றன. பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் கூட நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கு ஏற்பவே தயாரிக்கப்படுகின்றன. இதனால் நிகழ்ச்சிகளின் தன்மைகள் நடுத்தர வர்க்கத்தினரை ஈர்க்கும் வகையில் அமைகின்றன. நாடகக் காட்சிகளில் இடம்பெறும் அரங்குகள், உடை, ஒப்பனை, முகபாவம், குரல் ஏற்ற இறக்கம் என எல்லாமே நடுத்தர வர்க்கத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப் படுகின்றன. தொலைக்காட்சி நாடகங்களின் இத்தகைய தனித்தன்மைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

6.3.1 எளிமை தொலைக்காட்சி நாடகங்கள், வானொலி நாடகங்கள் போன்றே தொடர்ச்சியாக நுகரப்பட வேண்டியவை. புத்தகத்தில் நாடகத்தைப் படிக்கின்றபோது புரியாத இடங்களைத் திரும்பப் படிப்பது போன்று தொலைக்காட்சி நாடகத்தைத் திரும்பப் பார்க்க முடியாது. புத்தகத்தில் முக்கியமான நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது அவற்றைப் பற்றி மனத்திற்குள்ளேயே அலசி ஆராய்ந்துவிட்டுப் பின்னர்த் தொடர்ந்து படிப்பது போலத் தொலைக்காட்சி நாடகத்தை விட்டு விட்டுப் பார்க்க முடியாது. ஆதலால் அதற்கேற்ற வகையில் நாடகங்களின் காட்சிகளும் உரையாடல்களும் சிக்கலின்றி எளிமையாக அமைக்கப்படுகின்றன. தொடர் நாடகங்கள் ஒவ்வொரு நாளும், முந்தைய நாள் நிகழ்வை நினைவூட்டும் வகையில் முந்தைய நாளின் இறுதிக் காட்சித் துணுக்குகளுடன் தொடங்குவது உண்டு.

தொழில் நுட்பக் கட்டுப்பாடு

மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ற தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பணச் செலவு மிக்க தொழில் நுட்பங்களைக் கொண்ட பெட்டிகளைத் தயாரிக்க முடிவதில்லை. இதனால் பொருள் செலவு செய்து பெரிய அளவில் காட்சி அமைப்புகளுடன் தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து வழங்குவது சாத்தியமில்லை. தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியக்கூடிய வகையிலான கதை அம்சங்கள், காட்சி அம்சங்கள் மட்டுமே இடம்பெற முடியும்.

6.3.2 கதை அமைப்பும் மாற்றங்களும் தொலைக்காட்சியில் இடம்பெறும் தனி நாடகங்கள், திரைப்படங்களைப் போல ஒரு கருவை மையமாகக் கொண்டு அமைபவை. தொலைக்காட்சித் தொடர் நாடகக் கதை திரைப்படத்தின் கதையைப் போல ஒரே செய்தியை மையமிட்டு அமைவது இல்லை. தொலைக்காட்சி நாடகங்களில் கிளைக்கதைகள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கதைக்குள் கதை, இன்னொரு கதை என்று கதை விரிகிறது.

தொலைக்காட்சி குடும்பப் பொழுதுபோக்குச் சாதனம் என்பதால் மக்களுக்குப் பிடித்தமான குடும்பக் கதைகளே இடம் பெற வேண்டியுள்ளது. நுகர்வோரின் மதிப்பீடுகள், இலட்சியங்கள், சிக்கல்கள், நிலைமைகள் முதலானவையே கதைகளில் இடம் பெறுகின்றன. திருமணச் சிக்கல்கள், காதல் சிக்கல்கள், குடும்ப உறவில் சிக்கல்கள், வேலைப் பிரச்சனைகள் போன்றவையே இடம் பெறுகின்றன.

ஒளிபரப்பிற்கான கால அவகாசத்தையும் ஒதுக்கீட்டையும் பொறுத்துக் கதையை நீட்டுவதும் குறுக்குவதும் உண்டு. இதனாலும் கதையின் தன்மை பாதிக்கப் படுகிறது. தொலைக்காட்சி நடிகர்களின் நிலைமைகளைப் பொறுத்தும் கதை மாறுபடுகிறது. தொடரின் இடையில் ஒரு பாத்திரத்தில் ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் நடிக்க வைக்கப்படும்போதும் இத்தகைய மாற்றம் நேர்கிறது.

பேச்சுக்கு முக்கியத்துவம் தருவதால் கதையில் சிக்கலுக்குமேல் சிக்கலாக உருவாக்குகிறார்கள். தீர்வு வரும்போல இருக்கும் நேரத்திலும் புதிய சிக்கல் ஒன்றை உருவாக்கிக் கதையை நீட்டுவார்கள்; விவாதத்தை வளர்ப்பார்கள். சில தொடர்களில், பேசியதையே வேறு வேறு சொற்களில் பேசுவதையும் காண முடிகிறது.

பிணித்து வைக்கும் தன்மை

தொலைக்காட்சித் தொடர்கள் பல அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. ஒருதொடர் பார்வையாளர்களைப் பிணித்து வைக்காவிட்டால் வேறு அலைவரிசைக்கு மாறிவிடுகிறார்கள். மேடை நாடகம், திரைப்படம் பிடிக்காதவர்கள் அரங்கை விட்டு வேறு அரங்கிற்குச் செல்ல முடியாது. ஆனால் அலைவரிசையில் இது சாத்தியமானது. எனவே தங்கள் அலைவரிசையைப் பார்வையாளர் மாற்றாமலிருக்க, பரிசுத் திட்டங்களால் ஈர்க்கிறார்கள். நேரத்தை மாற்றுகிறார்கள். கதையை மாற்றுகிறார்கள். நடிகர்களை மாற்றுகிறார்கள். இயக்குநர்களை மாற்றுகிறார்கள். மக்களைப் பிடித்து வைக்கிறார்கள்.

6.3.3 காட்சிகள் தொலைக்காட்சி நாடகம் திரைப்படத்தை விட மிக அதிகமாக அண்மைக் காட்சிகளைக் (Close-up shots)கொண்டிருக்கிறது. சிறிய திரையில் நடிகர்களின் முகபாவங்கள் தெளிவாகத் தெரிவதற்காகவே இந்த உத்தி. பேச்சு, முகபாவம் முதலானவற்றுக்கே தொலைக்காட்சித் தொடரில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் பின்னணிக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

பாத்திரங்களுடன் நெருக்கம்

தொலைக்காட்சியின் பிம்பங்கள் சிறியவை அல்லது எளியவை. வீட்டில் குடும்பத்தாருடன் பார்த்து மகிழ்வதால் அந்த பிம்பங்களுடன் நமக்கு நெருக்கம் ஏற்படுகிறது. தொலைக்காட்சி நாடகங்களில் வரும் பாத்திரங்களை நாம் நம் குடும்ப உறுப்பினர்களாகக் கருதத் தொடங்குகிறோம். இன்ன கிழமையில் இன்ன நேரத்தில் இன்ன தொடர் வரும் என்ற எதிர்பார்ப்பு வளர்க்கப்படுகிறது. இந்த நெருக்கத்தை உருவாக்கும் வகையில்தான் எல்லாரும் வீட்டில் இருக்கும் நேரங்களில் தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பப் படுகின்றன.

6.3.4 உச்சக் கட்டங்கள் தொலைக்காட்சி நாடகத்தின் தொடர்த் தன்மை காரணமாக ஒவ்வொரு தொடரிலும் (episode) உச்சக் கட்டத்தை உருவாக்குகிறார்கள். இதனால் தேவையின்றியே உறவுகளிலும் விவாதங்களிலும் சூழல்களிலும் திருகல்களை ஏற்படுத்தி உச்சத்தை வரவழைக்கின்றனர். தொடர் முடியும் நேரத்தில் யாரோ திடீரென நுழைதல், தாக்க வருதல், யாராவது கீழே விழுதல், வாகனம் மோத வருதல், புதிய சிக்கல் ஒன்று உருவாதல் என்ற உச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். தொடர் கதைகளில் இத்தகைய தன்மை உள்ளதை நாம் அறிவோம். அதுபோன்று பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டித் தொடரைத் தொடர்ந்து பார்க்கச் செய்கிறார்கள்.

6.3.5 பிற தன்மைகள் திரைப்படத்தில் உள்ளது போலப் பாத்திரங்கள் ஆடுவதும் பாடுவதும் தொலைக்காட்சி நாடகங்களில் இடம்பெறுவதில்லை. ஆயினும் தலைப்பு (Title) போடுமிடத்தில் பாடலையும் ஆடலையும் இடம்பெறச் செய்கிறார்கள். பெரிய அளவில் சண்டைக் காட்சிகளும் இடம்பெறுவதில்லை. நகைச்சுவைக்கெனத் தனியான பாத்திரங்கள் இல்லை. கதையே நகைச்சுவையாக இருப்பதுண்டு. திரைப்படத்தில் உள்ளது போல ஆபாசக் காட்சிகளும் கதாநாயகன் கதாநாயகி முதலானோரின் நெருக்கக் காட்சிகளும் இடம் பெறுவதில்லை. ஆனால் அழுகைக் காட்சிகளையும் சாவுக் காட்சிகளையும் மிகுதியாகத் தந்து பார்வையாளர்களின் உணர்வைப் பாதிக்கச் செய்கின்றனர். மேடை நாடகக் காட்சி நேரத்தைவிடத் தொலை நாடகக் காட்சி நேரம் குறைவாகவும், விரைவாகவும், மாறிமாறியும் அமைகிறது. திரைப்படக் காட்சிகள் போலத் தொலைக்காட்சி நாடகக் காட்சிகள் ஒரே ஓட்டமாக ஓடுவதும் இல்லை.

6.4 தயாரிப்பு

தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பு பல நிலைகளைக் கொண்டது. நாடகக் கதை அல்லது கரு, திரைக்கதை, உரையாடல், நடிகர்கள், அரங்கம், ஒப்பனை, வரைகலை, ஆடை அணிகள், ஒளியமைப்பு, ஒலியமைப்பு, படப்பிடிப்பு, வெளிப்புறப் படப்பிடிப்பு, இயக்கம் எனப் பலவற்றின் ஒருங்கிணைப்புத் தேவைப்படுகிறது. தொலைக்காட்சி நாடகம் ஒரு கூட்டு முயற்சி. எழுத்தாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், தொகுப்பாளர், அரங்கப் பொறுப்பாளர், ஒப்பனைக்காரர், பிற தொழில்நுட்ப ஊழியர்கள் என அனைவரின் பணியையும் தயாரிப்பாளர் ஒருங்கிணைக்கிறார்.

6.4.1 நாடகக் கதைத் தேர்வு நாடகத் தயாரிப்பு நிலையில் தூர்தர்ஷனுக்கும் தனியார் தொலைக்காட்சிக்கும் வேறுபாடு உள்ளது. அரசுசார் தொலைக்காட்சியில் நாடகத் தயாரிப்பாளர்கள் தாங்கள் ஒளிபரப்பக் கருதும் நாடகக் கதை அல்லது கருவைத் தீர்மானிக்கிறார்கள். எழுத்தாளர்களைக் கொண்டு நாடகம் எழுதச் செய்து அதைத் தயாரிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சமூக உணர்வைத் தூண்டும் நாடகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சிகள் தயாரிக்கப்பட்ட தொடர்களை வாங்கி ஒளிபரப்புவதால் இந்தச் சிக்கல் இல்லை. இவர்கள் பெரும்பாலும் குடும்பக் கதைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவையும் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளைச் சற்று மிகை உணர்ச்சிப் போக்கில் காட்டுவன. அண்மைக்காலத்தில் அரசு தொலைக்காட்சியிலும் தயாரிக்கப்பட்ட தொடர்களை வாங்கி ஒளிபரப்புகிறார்கள்.

அரசுசார் தொலைக்காட்சியின் கதைத் தேர்வுக் கொள்கை

அரசுசார் தொலைக்காட்சியில் கதையைத் தேர்ந்தெடுக்கும்போது அரங்கிலேயே தயாரிக்கும் அமைப்புடைய கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டில் படம்பிடிப்பதாகவோ, செலவு மிகுந்த அரங்க அமைப்பில் படம்பிடிப்பதாகவோ இருப்பின் தவிர்ப்பார்கள். நாடகப் பாத்திரங்களின் எண்ணிக்கையும் அளவாக இருக்க வேண்டும். எந்தத் தனி நபரையும் சமூகத்தையும் தாக்குவதாகக் கதை இருக்கக் கூடாது. தனியார் தயாரிப்புகளை வாங்கும் போதும் அரசு கொள்கைகளுக்கு முரண்படாத தொடர்களையே வாங்குகிறார்கள்.

6.4.2 தயாரிப்பு முறை அரசுசார் தொலைக்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகப் பிரதியை நடிகர்களுக்குக் கொடுத்து மனப்பாடம் செய்யக் கால அவகாசம் தருவார்கள். பின்னர் நாடக ஒத்திகை நடைபெறும். அதன்பின் ஒளிபரப்பு நாட்களை முடிவு செய்வார்கள். அரங்கத்தை நிர்மாணிப்பார்கள். தொழில்நுட்ப இயக்குநர், ஒலியமைப்புப் பொறியாளர், அரங்க வடிவமைப்பாளர், அரங்க மேலாளர், ஒப்பனையாளர், வரைகலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் முதலானோருடன் கலந்து பேசித் தயாரிப்பாளர் தேவைகளை இறுதிப்படுத்துவார். நாடகப் பதிவின் போது தயாரிப்பாளர் பொறுப்பேற்றுப் பதிவைத் தொடங்கி நிறைவு செய்வார். பின் குறிப்பிட்ட நாளில் ஒளிப்பதிவு நிகழும்.

தனியார் தொலைக்காட்சியில் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் நாடகங்களுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கப்படுகிறது. இவ்வளவு நாட்கள் என ஒதுக்கப்படுகிறது. விளம்பரதாரர்களும் இத்தகைய ஒதுக்கீட்டைப் பெற்றுத் தனியார் நாடகத் தயாரிப்புகளை வாங்கி ஒளிபரப்புகிறார்கள். ராடன் டிவி. விகடன் டெலிவிஸ்டாஸ், மின்பிம்பங்கள், ஏ.வி.எம் நிறுவனம் முதலான நிறுவனத்தார் நாடகங்களைத் தயாரிக்கின்றனர். தொலைக்காட்சித் தொடர்களை இயக்குவதற்கென்றே இயக்குநர்களும் உருவாகியிருக்கிறார்கள். சி.ஜே. பாஸ்கர், சுந்தர் கே. விஜயன், திருமுருகன், திருச்செல்வம், ஸ்ரீபிரியா, பி.ஆர். விஜயலட்சுமி, நாகா, ஹரிபாஸ்கர் முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

6.5 அமைப்பு

தொலைக்காட்சி நாடகம் கதைக்கரு, திரைக்கதை, செய்தி தரும் உத்திகள், உரையாடல், நடிப்பு, அரங்கம் முதலான கூறுகளால் அமைகிறது.

6.5.1 நாடகக் கதைக்கரு அரசு தொலைக்காட்சியில் அதன் கொள்கைகளுக்கு முரண்படாத கருக்களையும் கொள்கையைப் பரப்பும் கருக்களையும் நாடகமாக்குகிறார்கள். சாதி வேறுபாடு, சமய வேறுபாடு, வன் முறையைத் தூண்டுதல், ஆபாசத் தன்மை முதலானவற்றைக் கொண்ட கருக்களைத் தொலைக்காட்சி நாடகம் ஆக்குவதில்லை. பெரும்பாலும் பொழுதுபோக்குத் தன்மை கொண்ட குடும்பக் கதைகளையே நாடகமாக்குகிறார்கள்.

அந்தந்த நேரங்களில் வரவேற்புப் பெறுகிற கதைக் கருக்களுக்கு முதன்மை தரப்படுகிறது. பெண்கள் பிரச்சினை, இளைஞர்கள் பிரச்சினை, குற்றங்கள், காதல், நகைச்சுவை முதலானவற்றை மையமிட்ட கதைகள் அதிக வரவேற்புப் பெறுகின்றன. இவற்றை அவர்கள் ‘லேடீஸ் சப்ஜெக்ட்’, ‘யூத் சப்ஜெக்ட்’, ‘கிரைம் சப்ஜெக்ட்’, ‘லவ் சப்ஜெக்ட்’ ‘காமெடி சப்ஜெக்ட்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இதை ‘நாட்’ அல்லது ‘தாட்’ என்று அழைக்கிறார்கள். இதைத் துணைக் கதைகளுடனும் நிகழ்ச்சிகளுடனும் பாத்திரங்களுடனும் வளர்த்தெடுக்கிறார்கள்.

6.5.2 திரைக்கதை திரைக்கதை என்பது கதையைத் திரையில் காட்டுவதற்குரிய காட்சிகளாக வடிவப்படுத்துவது; வசனம், வர்ணனை, ஒலிக்குறிப்புகள், முதலானவற்றைப் பயன்படுத்திக் காட்சிகள் அமைத்துக் கட்டுக்கோப்பாகக் கதை சொல்லும் முறை. கருத்தாகச் சொல்லாமல் வெளிப்புறத்தையும் செயல்களையும் வருணித்தால் அது திரைக்கதையாகிறது. எடுத்துக்காட்டாகக் கருத்து எது என்பதையும் திரைக்கதை எது என்பதையும் பார்ப்போம்.

கருத்து : “மனோகர் ரொம்ப சோம்பேறி. எதிலுமே அக்கறை ஒழுங்கு இல்லாதவன். திட்டமிட்டபடி எதையும் செய்ய மாட்டான்”

திரைக்கதை : “மனோகர் தன் சட்டையைக் கழற்றிப் படுக்கையில் எறிகிறான். பேப்பர் குவியலுக்கிடையே தேடி டூத்பிரஷ்ஷை எடுக்கிறான்”.

திரைக்கதையாகச் சொல்லப்பட்டிருப்பதில் கருத்து இல்லை. செயல் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. இப்படிக் காட்சி வடிவமாகக் கதை சொல்வதுதான் திரைக்கதை என்பது. செயல்தான் முக்கியம். உரையாடல் அதற்கு உதவினால் போதுமானது.

எந்தத் திரைக்கதையையும் சம நிலை, கலைந்த நிலை, போராட்ட நிலை, சமரச நிலை என்ற நான்கு கூறுகளாக அமைத்துக் கொள்வார்கள். ஒரு மனிதனின் தேவை அல்லது இலட்சியத்தைக் காட்டுதல், அதற்கு ஒரு தடை வருவதைக் காட்டுதல், தடையை எதிர்த்துப் போராடுவதைக் காட்டுதல், இலட்சியத்தை அடைவதைக் காட்டுதல் என இக்கூறுகளை விளக்கலாம். தேவை அல்லது இலட்சியம் என்பது நீதியை நிலைநாட்டுதலாகவோ, குடும்பத்தைச் சீர்தூக்குதலாகவோ, பணக்காரனாவதாகவோ, காதலில் வெற்றியடைவதாகவோ இருக்கலாம். இதில் வரும் தடைகள் அல்லது இடைஞ்சல்களைப் பலவகைகளில் அமைக்கலாம். போராடும் முறையையும் பலவகைகளில் காட்டலாம். தீர்வு வெற்றியாகவோ தோல்வியாகவோ காட்டப்படலாம்.

முதல் பகுதியில் கதைமாந்தர் யார், கதை எதைப்பற்றியது, கதையை நடத்தப்போகும் இலட்சியம் என்ன என்பவை காட்டப்பட வேண்டும். தடைகளைக் காட்டுவதிலும் போராட்டத்தைக் காட்டுவதிலும் புதுமையைப் புகுத்துவது வெற்றி தரும்.

தொலைக்காட்சி நாடகத் திரைக்கதைகளில் கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லை. பஞ்சு திணிப்பது போல நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் திணித்துக் கொண்டே போகிறார்கள். கதை முடிவது போல வருவதை முடிய விடாமல் வளர்க்கிறார்கள். திடீரென்று முடிக்கிறார்கள். கதை வளர்ச்சி என்பது சீரானதாக இருப்பதே இல்லை. அண்மையில் ஒளிபரப்பான தொடர்களில் அண்ணாமலை, மெட்டிஒலி முதலான தொடர்கள் இவ்வாறு ஆண்டுக் கணக்கில் வளர்க்கப்பட்டதை நாம் உணர முடியும். தொடரில் சில நாட்கள் பார்க்காமல் விட்டுவிட்டால் கூடக் கதை புரியக்கூடிய நிலையிலேயே இத்தொடர்கள் இறுக்கமின்றி அமைந்துள்ளன.

6.5.3 செய்தியைத் தரும் உத்திகள் தொலைக்காட்சி நாடகத்தில் பெரும்பாலும் காட்சி வடிவில் செய்திகளைச் சொல்ல வேண்டும். ஒருவன் ஓடி வருவதாக வைத்துக் கொள்வோம். வானொலி நாடகத்தில் “ஏன் இப்படித் தலைதெறிக்க ஓடி வர்ரீங்க” என்று கேட்க வேண்டும். ஆனால் தொலைக்காட்சியில் ஓடி வருகிற காட்சியைக் காட்டி, அவனிடம் ‘என்ன ஆச்சு’ என்று மட்டும் கேட்டால் போதும். ஆகவே காட்சிகளால் பேசவைப்பதே சிறந்த தொலைக்காட்சி நாடகத்திற்கு அடையாளம். ஆனால் இதற்கு மாறாகவே தொலைக்காட்சித் தொடர்கள் அமைந்திருக்கின்றன. காட்சிகளில் தேவைக்கு அதிகமான விரிவான உரையாடல்கள் இடம் பெறுகின்றன.

பாலுமகேந்திரா போன்ற சில இயக்குநர்கள் தயாரிக்கும் சில நாடகங்களில் (தனி நாடகங்கள்) காட்சித் தன்மைக்கு முதன்மை இடம் தரப்பட்டு, அளவான, கூர்மையான உரையாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதையும் காண்கிறோம்.

மேடை நாடகத்தில் ஓர் அறையைக் காட்டுகையில் அறைமுழுவதையுமே அமைத்துக் காட்ட வேண்டும். தொலைக்காட்சியில் அண்மைக் காட்சி மூலம் அறையின் ஒரு பகுதியைக் காட்டினால் போதும்.

மேடை நாடகத்தில் ஒருவன் நெற்றியைச் சுருக்குவதைக் காட்ட முடியாது. விளக்கை ஏற்றியும் அணைத்தும்தான் உணர்வைக் காட்ட முடியும். தொலைக்காட்சியில் அண்மைக் காட்சி மூலம் நெற்றியைச் சுருக்குவதைக் காட்ட முடியும்.

ஒரு பெரிய வீட்டைச் சேய்மைக் காட்சி மூலம் வெளியிலிருந்து காட்டினால் பணக்காரன் என்ற செய்தியை உணர்த்திவிட முடியும்.

அடுத்த நாள், அடுத்த ஆண்டு, அடுத்த பத்தாண்டுகள் என்று மேடை நாடகத்தில் கால மாற்றத்தை உடனடியாகக் காட்டுவது கடினம். ஆனால் தொலைக்காட்சியில் அது எளிது. காட்சியை மற்றொரு காட்சியாக மாற்றும் உத்தி மூலம் அதைச் செய்ய முடியும். சில சமயம் ‘10 ஆண்டுகளுக்குப்பின்’ என எழுத்து மூலம் காட்டுவதும் உண்டு.

ஒளிப்பதிவுக் கருவி மூலம் பல கோணங்களையும் அசைவுகளையும் காட்டிச் செய்தி சொல்ல முடியும். படத்தொகுப்பு (editing), பின்னணி ஒலியின் மூலமும் பல செய்திகளைச் சொல்ல முடியும். ஒளிப்பதிவுக் கருவியின் மூலமும் பல செய்திகளைச் சொல்ல முடியும். வரைபடம் (Cartoon)கணினி வரைகலை (Graphics) முதலானவற்றின் மூலம் பல செய்திகளைச் சொல்ல முடியும்.

6.5.4 உரையாடல் தொலைக்காட்சி நாடகத்தில் உரையாடல் என்பது ஒரு கூறுதான். காட்சி மூலம் புலப்படுத்துவதுதான் முதன்மையானது. காட்சிக்கேற்ற சொற்கள் இடம் பெற்றால் போதும்.

சொற்சிக்கனம்

எடுத்துக்காட்டாக ஒரு காட்சியில் உரையாடலின் பங்கைப் பார்ப்போம். தேனிலவுக்காகக் கணவனும் மனைவியும் காரில் போகிறார்கள். வழியில் கடையில் குளிர்பானம் குடிக்கிறார்கள். அவர்கள் முன்னால் காலியான புட்டிகள் இருக்கின்றன. திடீரென்று கணவன் மனைவியைக் காரில் ஏறச் சொல்லி விரைந்து ஓட்டுகிறான். மனைவி, ‘குளிர்பானத்திற்குக் காசு கொடுத்தீர்களா?’ என்று கேட்கிறாள். அவன், “ஆமா ! கவனிக்கவில்லையா?” என்கிறான். மனைவி கடையைத் திரும்பிப் பார்க்கிறாள். கடைக்காரன் கடைக்கு வெளியே வந்து கையை நீட்டி ஏதோ கத்துவது கண்ணில் படுகிறது. மனைவி சிந்தனை வயப்பட்டவளாகக் கணவனைப் பார்க்கிறாள். இக்காட்சியில் உரையாடலில் சொல்லப்பட்டது மிகவும் குறைவு. காட்சியாகவே செய்தி சொல்லப்படுகிறது. உரையாடல் சிக்கனமாக இருப்பதே சிறப்பு.

ஏற்ற உரையாடல்

பொதுவாக உரையாடல் சூழ்நிலைக்கும் பாத்திரங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். பார்வையாளர்களின் அனுதாபத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு முதலான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். பார்வையாளர்களுக்குப் புரியக் கூடியதாக இருக்க வேண்டும்.

நாடக உரையாடல்களில் உபமான உபமேயங்களைத் தவிர்க்க வேண்டும். மீனைப்போலக் கண், மானைப்போல அஞ்சுகிறாள் என்று எழுதக் கூடாது. நடிகர்கள் மனப்பாடம் செய்ய ஏற்றவையாக இருக்க வேண்டும். பேச்சு வழக்கை ஒட்டியதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு நாடக உரையாடலைக் காணலாம். ரகு என்பவரின் பக்கத்து வீட்டுப்பையன் கடிதம் ஒன்றைக் கொண்டு வருகிறான். அக்கடிதம் ரகுவின் தங்கை ராதிகாவிற்கு வந்தது.

பையன்: ரகு அங்கிள். ராதிகா சிஸ்டர் இல்லையா?

ரகு:இருக்காளே. உள்ளேதான் இருக்கா.

பையன்: நீங்க ரெண்டுபேரும் வெளியே போயிருந்தப்போ இந்த லட்டர் வந்துச்சு. இந்தாங்க.

ரகு:ராதிகா !

ராதிகா: வர்ரண்ணா !

(கடிதத்தை வாங்குகிறாள்)

ரகு: யார்ம்மா !

ராதிகா:வேற யார் இவர்தான்

மேற்கண்ட உரையாடலில் நகர்ப்புறத்தில் காணப்படும் மொழிக்கலப்பு இருக்கிறது. பேச்சு வழக்கை ஒட்டி அமைவதால் இவ்வாறு உள்ளது. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு முதலான இரண்டும் கலந்ததாக இருக்கிறது. சுருக்கமாக உள்ளது.

உரையாடலின் நிலை

உரையாடல்கள், பாத்திரங்களின் பண்பு, தேவை, விருப்பு வெறுப்பு மனநிலை ஆகியவற்றைக் ‘கூர்மை’யாகக் காட்ட வேண்டும். ஆனால் பொதுவாக இன்றைய தொலைக்காட்சி நாடக உரையாடல்களில் கூர்மை இல்லை. காட்சி மூலம் காட்ட வேண்டிய இடங்களில் கூட உரையாடல்களே இடம் பெறுகின்றன. சில உரையாடல்கள் சுற்றி வளைத்துப் பேசப்படுகிற உரையாடல்களாக உள்ளன. இரண்டு மூன்று பாத்திரங்கள் நேரிலோ தொலைபேசியிலோ நின்று கொண்டோ அமர்ந்து கொண்டோ பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் வானொலியின் தாக்கத்திலிருந்து தொலைக்காட்சி விடுபடவில்லை என்பதையே இது காட்டுகிறது. செய்தி வாசிப்பு போலவே நாடகக் கதை, பாத்திரங்களால் உரையாடல் மூலம் நடத்தப்படுகிறது.

6.5.5 நடிப்பு நடிப்பு ஆற்றல் மிக்கவர்களைத் தேர்ந்தெடுத்துத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வைக்கிறார்கள். நாடக நடிகர்களும் திரைப்பட நடிகர்களும் தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கிறார்கள். தொலைக்காட்சி நடிகர்களாக அறிமுகமாகி நடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

அரசு தொலைக்காட்சி

தூர்தர்ஷனில் நடிகர்களைத் தேர்வுசெய்து மூன்று தரத்தினராகப் பிரித்துப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். பட்டியலில் இல்லாத திறமையான நடிகர்களும் பயன்படுத்தப் படுகிறார்கள். நடிகர்களை ‘பி’, ‘பிபிளஸ்’, ‘ஏ’, ‘ஏபிளஸ்’, ‘சூப்பர்’ என்று தரம் பிரிக்கிறார்கள். தொடக்கத்தில் மேடை நாடகங்களை அப்படியே படம்பிடித்து ஒளிபரப்பியதால் மேடை நாடக நடிகர்கள் நிறையப்பேர் இடம் பெற்றார்கள். எஸ்.வி. சகஸ்ரநாமம், ஆர்.எஸ். மனோகர், சோ, எஸ்.வி. சேகர், மௌலி, காத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோரின் மேடை நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டன. திரைப்படத்தில் சாதனை புரிந்த நடிகர்களையும் அழைத்து நடிக்கச் செய்தார்கள்.

தனியார் தொலைக்காட்சி

தனியார் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரதாரர்களும் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர்களும் நாடகத்தைத் தயாரித்த காரணத்தால் ‘சின்னத்திரை நடிகர்கள்’ என்ற வகையினராகவே பலர் உருவாகியிருக்கிறார்கள். திரைப்படங்களில் வாய்ப்புத் தேடுபவர்களும், வாய்ப்பைத் தவறவிட்டவர்களும், திரைத்துறையால் ஒதுக்கப்பட்டவர்களும், புகழ்விரும்பிகளும் தொலைக்காட்சி நாடக நடிகர்களாக ஆகியிருக்கிறார்கள்.

திரைத்துறையில் போலச் சின்னத்திரையிலும் நடிகர்கள் உருவாகிப் பெயர் பெற்றிருக்கிறார்கள். சின்ன வகைப் பாத்திரத்திற்குச் சின்ன நடிகர் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

நடிப்பின் நிலை

இன்றைய தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பைவிட உரையாடலுக்கே அதிக இடம் இருக்கிறது. இதனால் உரையாடலுக்குத் துணையாக முகபாவங்களைக் காட்டுவது நடிப்பு என்றாகிவிட்டது. மேலும் நல்லவர் தீயவர் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துப் பாத்திரங்களை மோத விடுவதால் நடிப்புக் களம் என்பது சுருங்கியதாக ஆகிவிடுகிறது. அளவுக்கு மீறி நல்லவர்களாகவும் அளவுக்கு மீறித் தீயவர்களாகவும் காட்டும் மிகை உணர்ச்சி காரணமாக மிகை நடிப்பும் கையாளப்படுகிறது. கண்களை உருட்டுதல், பற்களைக் கடித்தல், அடித்தல் போன்ற நடிப்புகளும், கண்ணீர் விடுதல், ஏங்குதல், நம்பி மோசம் போனதைக் காட்டுதல் போன்ற நடிப்புகளும் மட்டுமே காட்டப்படுகின்றன.

6.5.6 அரங்கம் நாடகம் நிகழும் களம் அல்லது களங்களைக் காட்டுவது அரங்கம். தொலைக்காட்சி நாடகங்களில் அரங்க அமைப்புப் பற்றிக் காணலாம்.

அரசு தொலைக்காட்சி

அரசு தொலைக்காட்சி நாடகங்களின் தயாரிப்பில் தொடக்கத்தில் அரங்க அமைப்பிற்கு மிகுதியான அக்கறை காட்டப்பட்டது. மேடை நாடகங்களுக்கு அரங்கம் அமைப்பது போலவே தொலைக்காட்சி நாடகங்களுக்கும் அமைத்தனர். அரங்க வடிவமைப்பாளர் அரங்கத்தை வடிவமைத்துக் கொடுப்பார். தச்சர்கள் தள உதவியாளர்கள், வண்ணம் தீட்டுவோர் முதலானோர் அரங்கத்தை உருவாக்குவார்கள். அரங்கத்தில் வைக்க வேண்டிய தட்டுமுட்டுப் பொருள்களை உதவியாளர்கள் வைக்கிறார்கள். பாத்திரங்கள் எங்கெங்கு எத்திசையை நோக்கி நிற்க வேண்டும் என்பதையெல்லாம் அரங்கத் தரையில் குறியிட்டு அடையாளம் காட்டுவார்கள். அதற்கேற்ப ஒலி ஒளி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

வளர்ச்சி

தொடக்கத்தில் எல்லாக் காட்சிகளையுமே இவ்வாறு வடிவமைத்தார்கள். கடல்அலைகள் மோதும் காட்சியைக் கூட வடிவமைத்தார்கள். பின்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் நடிகர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று பதிவு செய்கிறார்கள். இயற்கைச் சூழலில் படம் எடுக்கிறார்கள். காட்சிக்கு ஏற்றாற்போல் வீடுகள் வெளி இடங்கள் முதலானவற்றில் படம் எடுக்கிறார்கள். தனியே சில வெளிப்புறக் காட்சிகளை எடுத்துவந்து தேவையான இடங்களில் இணைக்கிறார்கள்.

அரங்கின் தேவை

தொலைக்காட்சித் திரை சிறியது என்பதால் அரங்கங்களை மிக நுணுக்கமாகவும் பெரியதாகவும் அமைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரங்கங்களிலேயே முடிந்து விடுகின்றன. எனவே அரங்க அமைப்பிற்கு மிகவும் அக்கறை கொள்ள வேண்டிய தேவை இல்லை. அதிலும் தற்கால நிகழ்வுகளைக் கொண்ட நாடகங்களுக்கு அரங்கத் தேவையென்பது முக்கியமானதல்ல. பழைய கால நிகழ்வுகளைக் கொண்ட நாடகங்களுக்கே அரங்கம் தேவைப்படுகிறது.

பெரும்பாலும் அண்மைக் காட்சிகளே இடம்பெறுவதால் பின்புலத்திற்கு அதிகத் தேவை இல்லை. அதிலும் மனித பிம்பங்களே அண்மைக் காட்சியில் காட்டப் படுகின்றன. எனவே விரிவான பெரிய நுணுக்கமாக அரங்க அமைப்பிற்கு அவசியம் இல்லை. மேலும் திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பயன்படும் வகையில் வீடுகளை வடிவமைத்து வாடகைக்கு விடுகிறார்கள். பல தொடர்களிலும் சில வீடுகள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதைக் காணமுடியும். மருத்துவ மனைகள், கடைகள் முதலானவற்றைக் காட்டும் பொழுது அங்குச் சென்றே ஒளிப்பதிவு செய்கிறார்கள். இது ஒருவகையில் அவற்றின் உரிமையாளர்களுக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுகிறது.

6.6 நாடக நிகழ்வுகள்

சின்னத்திரையின் அளவு, குடும்ப சாதனமாக இருப்பது முதலான காரணங்களால் நாடகக் கதையின் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது.

6.6.1 அரசு தொலைக்காட்சி நாடகங்கள் அரசு தொலைக்காட்சியில் கால்மணி, அரைமணி, முக்கால்மணி, ஒருமணி, ஒன்றரை மணி என ஒளிபரப்புக் கால அளவை அமைத்துக் கொண்டு நாடகங்களை ஒளிபரப்பினார்கள். தொழிலாளர் நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சி, கிராமத்து நிகழ்ச்சி முதலானவற்றில் இவை இடம்பெற்றன. சமூக நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என்று தூர்தர்ஷன் பலவகையாக ஒளிபரப்பு நிகழ்த்தியுள்ளது. சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள், இலட்சியக் கருத்துகள், ஒழுக்க நெறிகள் முதலான பல செய்திகளை உள்ளடக்கிய நாடகங்களை ஒளிபரப்பியுள்ளது. தெனாலிராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை முதலான கதைகளையும் அலையோசை, சித்திரப்பாவை முதலான புதினங்களையும் நாடகங்களாக்கி ஒளிபரப்பியிருக்கிறது.

முதல் நாடகம்

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் நேற்று இன்று நாளை என்பது. இதன் ஆசிரியர் மௌலி. இதில் யு.ஏ.ஏ. நாடகக் குழுவைச் சேர்ந்த ஒய்.ஜி. பார்த்தசாரதி, ஒய்.ஜி. மகேந்திரன், ஏ.ஆர். சீனிவாசன் முதலானவர்கள் நடித்தனர். அது தற்கால, எதிர்கால இளைஞர்களின் நடையுடை பாவனைகளைச் சித்திரித்தது. அது அரைமணி நேரம் ஒளிபரப்பானது.

வண்ண நாடகம்

சென்னைத் தொலைக்காட்சியில் வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் திருமலை நாயக்கர் என்னும் வரலாற்று நாடகம். இதன் ஆசிரியர் ஆறு. அழகப்பன். ஹெரான் நாடகக் குழுவினர் இதில் நடித்தனர். இந்நாடகம் 1.30 மணி நேரம் ஒளிபரப்பானது. தேசிய அலைவரிசையிலும் இது ஒளிபரப்பப் பட்டது.

மொழிபெயர்ப்பு நாடகம்

இந்தியில் தயாரிக்கப்பட்ட ஜுனூன், நுக்கத், ராமாயணம், மகாபாரதம், விக்கிரமாதித்தன் முதலான நாடகத் தொடர்களைத் தமிழாக்கம் செய்து தூர்தர்ஷன் ஒளிபரப்பியது. ஜுனூன் தொடரின் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழ்மொழியைச் சிதைப்பதாக அமைந்ததுடன் நகைப்பையும் உண்டாக்கிற்று. இதை ‘ஜுனூன் தமிழ்’ என்றே குறிப்பிட்டார்கள்.

இப்பொழுது தனியார் தொலைக்காட்சி போலவே விளம்பரதாரர் நிகழ்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் பலவற்றை தூர்தர்ஷன் ஒளிபரப்புகிறது.

6.6.2 தனியார் தொலைக்காட்சி நாடகங்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மூன்று வகையான நாடகங்களை ஒளிபரப்புகின்றன.

வாரம் முழுதும் ஒளிபரப்பாவன

ஒரே கதை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் திங்கள் முதல் வெள்ளி வரை அரை மணிநேரம் ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்படுகின்றது. சக்தி, குடும்பம், சித்தி, அண்ணாமலை, மெட்டிஒலி, அலைகள், காவ்யாஞ்சலி, சொந்தம், அண்ணி, ரெக்கை கட்டிய மனசு, குங்குமம், சொர்க்கம் முதலான தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் வகையைச் சார்ந்தவை. காலையில் சில தொடர்களும் மாலையில் சில தொடர்களும் ஒளிபரப்பாகின்றன. இரவு 11.00 மணி வரை இவை ஒளிபரப்பாகின்றன. இத்தகைய தொடர்கள் வணிக நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை. விளம்பரங்களைப் பெறுகிற வாயில்களாக இவை அமைகின்றன. தொடரில் ஒவ்வொரு முக்கியக் காட்சியையும் தொடர்ந்து விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பரிசுக் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பெண் மையக் கதைகளாகவே இருக்கின்றன. மர்மக் கதைகளும் வீட்டுக்குவீடு லூட்டி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நகைச்சுவைக் கதைகளும் இடம் பெறுகின்றன.

வாரம் ஒருமுறை ஒளிபரப்பாவன

ஒரே கதை பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு வாரம் ஒருநாள் மட்டும் ஒளிபரப்பப்படுவதும் உண்டு. சூலம், வேலன், ருத்ரவீணை, ராஜராஜேஸ்வரி முதலானவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இவற்றில் கணினி வரைகலை (Graphics) நுட்பங்கள் மூலம் மாயாஜாலக் காட்சிகள் காட்டப்படுகின்றன. அறிவியலின் துணையால் மூடநம்பிக்கைகளைப் பரப்புகிற முரண்பாடு இதில் இடம் பெறுகிறது. பேய் பிசாசுகளையும், மறுபிறவி நம்பிக்கைகளையும், செய்வினைகளையும், சாபம், சாப விமோசனம், மந்திர தந்திரங்களையும் இவை காட்டி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

தனிக்கதைத் தொடர்கள்

ஒளிபரப்பாகும் நாடகம் அன்றே முடிவதாக அமைவதுடன், அது போன்ற கதைகள் ஒரு தொடராகக் காட்டப்படுவது இன்னொரு வகை, தனித்தனியான இக்கதைத் தொடர்கள் தினந்தோறுமோ வாரம் ஒரு முறையோ ஒளிபரப்பாகின்றன. பாலுமகேந்திராவின் கதைநேரம் என்ற நிகழ்ச்சியில் வாரத்தில் ஒரு நாள் ஒரு தனிக்கதை வீதம் ஒரு தொடராக ஒளிபரப்பானது. இதுபோன்ற அமைப்பில் வெளியாகும் நாடகங்கள் ரசிக்கத் தக்கவை.

தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு உரையாடலைக் குறைத்துக் காட்சி வடிவில் நல்ல கதைகளைச் சொன்னால் தொலைக்காட்சி நாடகக் கலை வளர்ச்சியடையும்.

பையன்:ரகு அங்கிள். ராதிகா சிஸ்டர் இல்லையா?

ரகு:இருக்காளே. உள்ளேதான் இருக்கா.

பையன்:நீங்க ரெண்டுபேரும் வெளியே போயிருந்தப்போ இந்த லட்டர் வந்துச்சு. இந்தாங்க.

ரகு: ராதிகா !

ராதிகா:வர்ரண்ணா !

(கடிதத்தை வாங்குகிறாள்)

ரகு:யார்ம்மா !

6.7 தொகுப்புரை

கல்வி மேம்பாட்டிற்காகவும், வேளாண்மை மேம்பாட்டிற்காகவும் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி வணிகச் சாதனமாக ஆக்கப்பட்டது. அதன் விளைவாகத் தொலைக்காட்சி நாடகங்கள் உருவாயின. மேடை நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் இடைப்பட்ட தன்மை கொண்ட தொலைக்காட்சி நாடகத்தின் செல்வாக்கு அளவிடுதற்கு அரியது. குடும்ப நிகழ்வாக மாறிவிட்ட தொலைக்காட்சி நாடகம் வணிகச் சாதனமாகவும் இயங்குகிறது. அரசு தொலைக்காட்சி ஒளிபரப்புகிற நாடகங்களுக்கும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகிற நாடகங்களுக்கும் வேறுபாடு குறைந்து வருகிறது. பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் கதைகளும் மாயாஜாலக் கதைகளும் நாடகங்களாக ஆக்கப்படுகின்றன. தொழில் நுட்பங்களைக் கொண்டு தொலைக்காட்சி நாடகங்கள் பயனுள்ள செய்திகளைச் சொல்ல முடியும்.