81

யாப்பருங்கலக்காரிகை - 1

பாடம் - 1

யாப்பு இலக்கணம் – பொது அறிமுகம்

1.0 பாட முன்னுரை

மக்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு மொழி கருவியாகும். அந்நிலையில் அது பேச்சு, எழுத்து ஆகிய இருவழிகளில் பயன்படுகிறது. பேச்சு பெரும்பாலும் உரைநடை முறையிலேயே அமைகிறது. எழுத்து என்பது உரைநடை, செய்யுள் ஆகிய இருவகை நடைகளிலும் அமைகிறது. தமிழில் பழங்கால முதல் செய்யுள் நடையே இலக்கியப் படைப்புக்கு மிகுதியும் கையாளப்பட்டு வந்துள்ளது. செய்யுள் எவ்வாறு இயற்றப் பெறுகிறது என்பதைப் பற்றிச் சொல்வதே யாப்பு இலக்கணமாகும். இதைப் பற்றிய பொதுவான செய்திகள், யாப்பு இலக்கணம் – பொது அறிமுகம் என்னும் தலைப்பிலான இந்தப் பாடத்தில் கூறப்பட்டுள்ளன.

1.1 தமிழிலக்கண வகைகள்

தமிழிலக்கணம் ஐந்து வகைப்படும் என்று சொல்வது ஒரு மரபுச் செய்தி. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்கிற இவையே ஐந்து வகை இலக்கணங்கள் ஆகும். இவை ஐந்தையும் ஒன்றாகவோ, சிலவற்றைப் பற்றியோ அல்லது இவற்றுள் ஒரு வகையைக் குறித்தோ தமிழ் இலக்கண நூல்கள் இயற்றப் பெற்றுள்ளன. புலமை இலக்கணம் என்னும் ஆறாம் வகையும் சேர்ந்துள்ளது.

1.1.1 யாப்பு இலக்கணம் பாடல்கள் எழுதுவதைப் பாட்டுக்கட்டுதல் என்று இன்றும் கிராமப்புறங்களில் கூறுகின்றனர். யாத்தல் என்னும் சொல்லுக்குக் கட்டுதல், பிணைத்தல், தளைத்தல் என்று பொருள். செய்யுளுக்குரிய உறுப்புகள் ஓர் ஒழுங்கமைதியோடு கட்டப்பெறுகின்றன. எனவே இது யாப்பு என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. யா என்னும் வினையடிச் சொல்லிலிருந்து இச்சொல் வந்தது. செய்யுள் குறிப்பிட்ட ஓர் ஓசையைப் பெறும் வகையில் செய்யுள் உறுப்புகள் சேர்த்து அமைக்கப் பெறுகின்றன. இவை பற்றிய செய்திகளைத் தமிழ் யாப்பு இலக்கண நூலார் பேசி உள்ளனர்.

பல பெயர்கள்

பாடப்படுவதற்குப் பாட்டு அல்லது பாடல் என்று பெயர். தமிழில் செய்யுள் என்பதற்குப் பல பெயர்கள் உள்ளன. யாப்பு, தூக்கு, தொடர், பாட்டு என்பன அவற்றுள் சில.

யாப்பிலக்கணம்

குறிப்பிட்ட ஓர் ஓசை அமையும் வகையில், எழுத்து, அசை, சீர் முதலான யாப்பு உறுப்புகளைச் சேர்த்து அமைப்பதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர். இவ்வுறுப்புகள் தகுந்த முறையில் பிணைக்கப்படுவதால் இவ்விலக்கணத்தை யாப்பு எனும் பெயரால் குறித்தனர்.

1.1.2 யாப்பிலக்கணப் பழமை வாய்மொழிப் பாடல்கள் வளர்ச்சி பெற்று மொழியின் அடிப்படை அலகுகளாகிய எழுத்து, சொல் முதலியவை உருப்பெற்ற காலத்தில் யாப்பிலக்கணம் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. மக்கள் வாழ்வியலைச் சார்ந்து பொருளிலக்கணம் தோன்றி அதனை வெளிப்படுத்துவதற்கு உரிய வடிவம் தேவைப்பட்ட போது, யாப்பு உருப்பெற்றிருக்கக் கூடும். வாய்மொழிப் பாடல்களே, கால வளர்ச்சியில், புலவர்களால் செப்பம் செய்யப் பெற்றதால் பாவகைகள் தோன்றியிருக்கக் கூடும். எவ்வாறாயினும், ஓசைகளின் அடிப்படையிலேயே செய்யுள் செய்வதற்குரிய யாப்பு இலக்கணம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும்.

1.2 முதல் யாப்பிலக்கண நூல்

கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலே காலத்தால் முந்தியது. அந்நூலின் மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரத்தில் செய்யுளியல் என்பது எட்டாவது இயலாக அமைந்துள்ளது. இதில்தான் யாப்பிலக்கணச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்நூலில் தொல்காப்பியர் தம் காலத்திற்கு முந்திய யாப்பியல் சிந்தனையாளர்களைப் பலவாறு குறிப்பிட்டுள்ளார். யாப்பறி புலவர், நல்லிசைப் புலவர், நூல் நவில் புலவர் என்பன போன்ற தொடர்களால் சுட்டியுள்ளார். எனவே, அவர் காலத்திற்கு முன்பிருந்தே யாப்பியற் சிந்தனை இருந்துள்ளது என அறியலாம். எனினும், தனிப்பட்ட ஒரு நூற் பெயரையோ, புலவர் பெயரையோ தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

இலக்கியத்தைக் கண்டு இலக்கணம் படைப்பது உண்டு. ஆகவே தொல்காப்பிய காலத்திற்கு முன்பே பல இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும். அவற்றிலிருந்தே இலக்கணங்களை உருவாக்கியிருப்பர். இவ்வாறு சிந்தித்தால் தமிழில் பலநூறு ஆண்டுகட்கு முன்பிருந்தே செய்யுள் இலக்கியமும், அது சார்ந்த யாப்புப் பற்றிய சிந்தனையும் வளர்ந்து வந்துள்ளன என்பது தெளிவாகப் புலப்படும்.

1.2.1 தொல்காப்பியச் செய்யுளியல் செய்திகள் தொல்காப்பியர் தம் நூலில் அக்காலத்தில் பயன்படுத்திய யாப்பு முறையை ஒட்டி ஏழு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1) பாட்டு

2) உரை

3) நூல்

4) வாய்மொழி

5) பிசி

6) அங்கதம்

7) முதுசொல்

என்பன அவை. மேலும், செய்யுள் இயற்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் இரு தொகுதிகளாகக் கூறியுள்ளார்.

முதல் பிரிவில் காணப்படும் 26 உறுப்புகள் வருமாறு:

1) மாத்திரை

2) எழுத்து

3) அசை

4) சீர்

5) அடி

6) யாப்பு

7) மரபு

8) தூக்கு

9) தொடை

10) நோக்கு

11) பா

12) அளவு

13) திணை

14) கைகோள்

15) கூற்றுவகை

16) கேட்போர்

17) களன்

18) காலம்

19) பயன்

20) மெய்ப்பாடு

21) எச்சம்

22) முன்னம்

23) பொருள் வகை

24) துறை

25) மாட்டு

26) வண்ணம்

செய்யுளுக்கு அடிப்படையான உறுப்புகளும், செய்யுளின் பொருள் புலப்பாட்டுக்கு உதவும் உறுப்புகளும் இவற்றுள் இடம் பெற்றுள்ளன.

அதே நூற்பாவில் இரண்டாவது பிரிவில் எண்வகை வனப்புகள் செய்யுள் உறுப்புகளாகத் தனியே சுட்டப்பெற்றுள்ளன. இவ்விரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 34 உறுப்புகள் செய்யுளுக்கு உரியனவாகக் கூறப்பெற்றுள்ளன.

எண்வகை வனப்புகள்

1) அம்மை

2) அழகு

3) தொன்மை

4) தோல்

5) விருந்து

6) இயைபு

7) புலன்

8) இழைபு

வனப்பு என்பது அழகு என்று பொருள்படும். பல உறுப்புகள் ஒன்று சேர்ந்தபோது உருவாகும் செய்யுள் அழகு, அது.

1.2.2 தொல்காப்பியச் செய்யுளியல் உரைகள் தொல்காப்பியர் கூறிய செய்திகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டன. ஆதலால் இவற்றின் பொருளை விளங்கிக் கொள்வதற்கு ஏற்பப் பலர் உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியச் செய்யுளியலுக்கு மூவர் எழுதிய உரைகள் முதன்மையானவை. இவர்களுள் இளம்பூரணர் என்பவர் காலத்தால் முற்பட்டவராவார். இவர் இவ்வியலுக்கு எளிமையாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் உரை எழுதியுள்ளார். நூல் முழுவதற்கும் உரை எழுதிய இளம்பூரணர் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நூல் முழுமைக்கும் இவர் உரை உள்ளது.

பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்பாரும் இவ்வியலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களாவர். பேராசிரியர் எழுதிய உரை தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின் நான்கியல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

நச்சினார்க்கினியர் பெரிதும் பேராசிரியர் உரையைப் பின்பற்றியே செய்யுளியலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை, நூல் முழுமைக்கும் உளது.

இளம்பூரணர் உரை தொல்காப்பியர் கால யாப்பியல் சிந்தனையுடன், இவர்கால யாப்பியற் சிந்தனைகளையும் சேர்த்து எழுதப்பெற்ற இயல்பினதாகும். பிற உரையாசிரியர்கள் இருவரும் தொல்காப்பியர் சிந்தனைகளே யாப்பியலுக்குப் போதுமானவை எனும் கருத்துடன் உரை செய்துள்ளனர். பாடத்தில் பின்னர்த் தேவைப்படும் இடங்களில் இவை பயன்படுத்தப் பெறும்.

1.3 பிற யாப்பு நூல்கள்

தொல்காப்பியத்துக்குப் பின் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பெற்ற யாப்பு நூல்களே கிடைத்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் பல யாப்பு நூல்கள் இயற்றப் பெற்றன. எனினும், பல நூல்கள் முழுமையாகக் கிடைக்காமல் சிற்சில பகுதிகளாகவே கிடைத்துள்ளன. உரையாசிரியர்கள் தம் உரையில் மேற்கோள்களாக எடுத்தாண்டமை கொண்டு பிறர் நூல்களிலிருந்து சில பகுதிகள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து மறைந்துபோன நூற்பெயர்களை அறிகிறோம்.

யாப்பிலக்கண நூல்களைக் கீழ்வருமாறு பகுக்கலாம்.

1.3.1 முழுமையாகக் கிடைக்காத யாப்பு நூல்கள் கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றப்பெற்ற யாப்பு இலக்கண நூல்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளை யாப்பருங்கல விருத்தி உரை, தொல்காப்பிய உரைகள், இலக்கிய உரைகள் போன்றவற்றிலிருந்து அறிகிறோம். யாப்பிலக்கண நூல்களிலிருந்து மேற்கோள்களாக உரைகளில் எடுத்தாளப் பெற்ற செய்யுட் பகுதிகளைக் கொண்டு அவற்றிற்குரிய யாப்பியல் நூல்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கு நோக்குவோம்.

காக்கைப்பாடினியம்

இந்நூற் பகுதிகளை யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மிகுதியாக எடுத்தாண்டுள்ளார். இந்நூல் ஆசிரியரை மாப்பெரும் புலவர் என்று யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பாராட்டியுள்ளார். தொல்காப்பியருக்குப் பின்வந்த யாப்பு நூலாருள் இவர் காலத்தால் முற்பட்டவராகக் கூடும் என்பது அறிஞர் கருத்து.

யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றுக்கு காலத்தால் முற்பட்டது இந்நூல்.

அவிநயம்

யாப்பருங்கல உரையாசிரியர் அவிநய நூற்பாக்களைப் பல இடங்களில் தம் உரையில் எடுத்தாண்டுள்ளார். இந்நூல், அதனை இயற்றிய அவிநயனார் பெயரில் அவிநயம் என்றே வழங்கப்பட்டுள்ளது. யாப்பிலக்கண நூலாகிய இதனை மற்றவர்கள் அவிநயனார் யாப்பு எனக் குறித்துள்ளனர். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்கு ஒரு பழைய உரை உள்ளது. இந்நூலில் உள்ள யாப்பியல் குறித்த கருத்துகள் பல, காக்கைப்பாடினிய நூற் கருத்துகளுடன் ஒத்துள்ளன.

மயேச்சுரர் யாப்பு

மயேச்சுரர் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூலை மயேச்சுரர் யாப்பு எனப் பிற்காலத்தோர் குறிப்பர். இவருடைய இலக்கண நூல் எடுத்துக்காட்டுகளுடன் இருந்ததுபோலும். இந்நூலாசிரியரை வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர் மயேச்சுரனார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட நூல்கள் தவிர, சிறுகாக்கைப் பாடினியார், நக்கீரர், பல்காயனார், நற்றத்தனார், கையனார், வாய்ப்பியனார் என்னும் பெயர்களுடன் புலவர்கள் பலர் யாப்புத் துறை நூல்களை இயற்றியுள்ளனர். எனினும், இவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

1.3.2 இலக்கண நூல்கள் பிறவற்றில் யாப்பு கிடைக்கும் இலக்கண நூல்களில் சில ஐந்து இலக்கணங்களையும் பேசுகின்றன. எழுத்து, சொல் முதலிய சில பிரிவுகளை மட்டும் பேசும் இலக்கணங்களும் உள்ளன. யாப்பு என்பது இலக்கண நூல்களில் இடம் பெற்றுள்ளது. அல்லது இது குறித்து மட்டுமே தனி இலக்கண நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஐந்திலக்கண நூல்களில் யாப்பு

கிடைக்கும் ஐந்திலக்கண நூல்களில் வீரசோழியம், இலக்கண விளக்கம், சுவாமிநாதம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவற்றுள் யாப்பு ஒரு பிரிவாகப் பேசப்பட்டிருப்பதால் இவற்றைப் பற்றிய அறிமுகம் பயில்வோர்க்குப் பயன்படும்.

வீரசோழியம்

கி.பி.11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரனார் என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டது. இது, ஐந்து அதிகாரங்களைக் கொண்டது. இதுவே தமிழில் கிடைக்கும் ஐந்து இலக்கணம் பேசும் நூல்களில் காலத்தால் முந்தியது எனலாம். இந்நூலின் நான்காவது அதிகாரம் யாப்பதிகாரம் ஆகும். நூலில் 105 முதல் 140 வரையிலான பகுதியில் யாப்பியல் செய்திகள் பேசப் பெற்றுள்ளன.

இலக்கண விளக்கம்

இந்நூல் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் கி.பி.17ஆம் நூற்றாண்டில் செய்யப்பெற்றது. இஃது ஓர் ஐந்திலக்கண நூல். இதற்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இந்நூலில், மூன்றாவது அதிகாரமாகப் பொருளதிகாரம் உள்ளது. இதன்கண் நான்காம் இயலாக யாப்பியல் அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாட்டியல் என்னும் ஐந்தாவது இயலும் அமைந்துள்ளது.

சுவாமி நாதம்

இந்நூலின் ஆசிரியர் சுவாமிநாத கவிராயர் என்பவராவார். இவர் காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு. இவர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இந்நூல் ஆறு அதிகாரங்களை உடையது. கிடைத்துள்ளவை 202 செய்யுள்கள். அந்தாதித்தொடையில் இவற்றை ஆசிரியர் இயற்றியுள்ளார்.

முத்துவீரியம்

முத்துவீர உபாத்தியாயர் என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டது. திருச்சி உறையூரைச் சார்ந்த இவர் கி.பி.19ஆம் நூற்றாண்டினர். நூலாசிரியர் பெயராலேயே இந்நூல் வழங்கப் பெறுகிறது. இது ஐந்து இலக்கணங்களையும் பேசுகிறது. பொருளதிகாரத்தில் இவர் புறப்பொருள் பற்றிப் பேசவில்லை. அகப்பொருளை மட்டுமே பேசியுள்ளார். யாப்பு அதிகாரம் என்பது மூன்று இயல்களுடன் 267 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.

தொன்னூல் விளக்கம்

வீரமா முனிவர் இந்நூலின் ஆசிரியராவார். இத்தாலி நாட்டைச் சார்ந்த இவர் சமயம் பரப்பத் தமிழகத்திற்கு வந்தார். தமிழைக் கற்று, இம்மொழியில் பல நூல்களைச் செய்துள்ளார். இவர் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு. தொன்னூல் விளக்கம் செய்த இவர், தாமே இந்நூலுக்கு ஓர் உரையும் செய்துள்ளார். இந்நூல் நூற்பா யாப்பினால் ஆனது. இதன்கண் 201 முதல் 250 வரை உள்ள நூற்பாக்களில் யாப்புப் பற்றிப் பேசியுள்ளார்.

1.3.3 முழுமையாகக் கிடைத்த தனி யாப்பு நூல்கள் ஐந்திலக்கண மரபில் யாப்பு என்னும் ஒரு பிரிவு பற்றியே தனி நூல்கள் சில தோன்றியுள்ளன. கி.பி.10ஆம் நூற்றாண்டில் தோன்றிய அமிதசாகரர் என்பார் இரண்டு நூல்களை இவ்வகையில் இயற்றியுள்ளார். அவை,

1) யாப்பருங்கலம்

2) யாப்பருங்கலக் காரிகை

என்பனவாகும்.

இவ்விரண்டில் முந்தியது நூற்பா யாப்பால் 95 செய்யுள்களைக் கொண்டதாகும். பிந்தியது கட்டளைக் கலித்துறை யாப்பால் 44 செய்யுள்களைக் கொண்டது. இவை இரண்டிற்கும் குணசாகரர் என்பார் உரையாசிரியராவார்.

இவற்றுக்குப் பின், 19ஆம் நூற்றாண்டில் தனி யாப்பு நூல்கள் சில தோன்றின. இடைப்பட்ட காலத்தில் சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின. அவற்றுக்காகப் பாட்டியல் இலக்கண நூல்கள் அவ்வப்போது தோன்றின.

19ஆம் நூற்றாண்டில் யாப்பிலக்கணத்திற்கென விருத்தப்பாவியல் எனும் நூல் தி.வீரபத்திர முதலியார் என்பவரால் இயற்றப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் என இரு நூல்கள் தோன்றின. புலவர் குழந்தை என்பார் இந்நூல்களின் ஆசிரியராவார். யாப்பு நூல் என்னும் நூலை, த.சரவணத்தமிழன் என்பார் செய்து அளித்தார். யாப்பொளி என்று ஒரு நூல் சீனிவாசராகவாசாரி என்பவரால் இயற்றப்பட்டது.

1.4 யாப்பருங்கலக்காரிகை

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் யாப்புப் பயில்வோரால் பெரிதும் போற்றப்படும் ஒரு நூல் யாப்பருங்கலக்காரிகை. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களுள் இதுவே சிறப்புப் பெற்றது. காரிகை என்றே இந்நூல் குறிக்கப்படுகிறது.

1.4.1 ஆசிரியர் யாப்பு பற்றித் தமிழில் தோன்றிய யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர் என்பவராவார். இவர் பெயர் அமுதசாகரர், அமிர்த சாகரர் என்பனவாகவும் வழங்கப் பெற்றுள்ளது. இப்பெயர் கீழ்வரும் சொற்களால் உருவானது.

அமித = அளவு கடந்த

சாகரர் = கடல் என்னும் பெயரர்

இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியும் உறுதிப்படுத்தும். இவர் வரலாறு பற்றி ஏதும் சான்று கிடைக்கவில்லை. அருகக்கடவுளை இவர் வழிபட்டுள்ளார் என்பதை, பாயிர முதல் செய்யுளால் அறியலாம். இதனால் இவர் சமணர் என்று அறிகிறோம்.

அமிதசாகரர் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனார் என்பவருக்குக் காலத்தால் முற்பட்டவர், இவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் வரலாறு பற்றியும் ஏதும் சான்றுகள் கிடைக்கவில்லை.

1.4.2 நூல் யாப்பும், அமைப்பும் யாப்பருங்கலக்காரிகை என்னும் நூல் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. காரிகை என்னும் சொல்லுக்கே கட்டளைக் கலித்துறை என்று ஒரு பொருள் உள்ளது. இந்நூல் செய்யுள்கள் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளன.

மகடூஉ முன்னிலை

எதிரில் ஒரு பெண் இருப்பது போலவும், அவளை விளித்து அவளிடம் பேசுவது போலவும் எழுதும் முறைக்கு மகடூஉ முன்னிலை என்று பெயர். மகடூஉ என்பதற்குப் பெண் என்று பொருள். முன்னிலை என்பதற்கு முன்னிலையாக்கிப் பேசுவது என்று பொருள். காரிகை என்பது பெண் என்னும் பொருள்தரும் ஒரு சொல். எனவே, காரிகையை முன்னிலைப்படுத்திப் பேசுவதாக இந்நூல் செய்யுள்கள் அமைந்திருப்பதால் இந்நூலுக்குக் காரிகை என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. இந்நூல் செய்யுள்களையும் காரிகை என வழங்குவதுண்டு.

கட்டளைக் கலித்துறை

இந்நூல் செய்யுள்கள் எல்லாம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பினால் ஆனவையே. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர்.

எழுத்தெண்ணிப் பாடுகிறபொழுது ஒற்றெழுத்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

யாப்பருங்கலக்காரிகையில் நேரசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்தியொன்றும், நிரையசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்து மூன்றும் உள்ளதாக அந்நூலின் உரை கூறுகிறது. ஆயினும், இன்று கிடைக்கும் அச்சு நூல்களில் அறுபது காரிகைகள் உள்ளன. மிகுதியாக உள்ள 16 செய்யுள்கள் உரையாசிரியரால் எழுதப்பட்ட உரைக்காரிகைகளாம்

காரிகை நூலின் அமைப்பு

யாப்பருங்கலக்காரிகை மூன்று இயல்களை உடையது. நூல் அமைப்பைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்வரும் வரைபடம் உதவும்.

முதல் இயலாகிய உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

இரண்டாம் இயலாகிய செய்யுளியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்குரிய இலக்கணம் பேசப் பெற்றுள்ளது. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்பட்டுள்ளது. நான்கு வகைப் பாக்களின் இனங்களும் கூறப்பட்டுள்ளன.

ஒழிபியலில் முன் இரு இயல்களில் இடம்பெற்ற செய்திகளுக்கான ஒழிபுச் செய்திகள் தரப் பெற்றுள்ளன.

ஒழிபுச் செய்திகள்

ஒழிபுச் செய்திகள் என்பன முன்னர்க் கூறப்பட்ட செய்திகளுக்கு வேறுபட்டு வருவனவும், அங்குக் கூறப்படாதனவும், அங்குக் கூறப்பட்டவற்றிற்கு மேலும் விளக்கம் தருவனவும் ஆன செய்திகள் எனலாம்.

1.5 தொகுப்புரை யாப்பிலக்கணம் என்பது செய்யுள் இலக்கணமாகும். தொல்காப்பியம் தொடங்கி இக்காலம் வரை யாப்பு நூல்கள் மட்டுமே இருபதிற்கு மேல் தோன்றியுள்ளன. இந்நூல்களை இயற்றியோர், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண அமைப்பிலும், இவற்றுள் தனி ஒரு வகை அல்லது இரு வகை எனத் தம் விருப்பத்திற்கு ஏற்பவும் இலக்கண நூல்கள் இயற்றியுள்ளனர்.

இந்நிலையில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சிந்தனைப் போக்குடன் இலக்கண நூலார் தம் நூல்களைப் படைத்துள்ளனர். தமிழில் இப்போக்கில் பல யாப்பு நூல்கள் தோன்றின. அவற்றுள் யாப்பருங்கலக் காரிகை என்னும் நூலைத் தமிழைப் பயில்வோர் மிகுதியாகப் பயின்றுள்ளனர்; இன்றும் பயின்று வருகின்றனர்.

யாப்பருங்கலக்காரிகை என்பது கி.பி.10ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்நூலுள் மூன்று இயல்கள் உள்ளன. இவற்றுள் செய்யுள் உறுப்புகள், செய்யுள்களின் இலக்கணம் ஆகியன விளக்கப் பெற்றுள்ளன. அடுத்து வரும் பாடங்களில் இவை பற்றித் தெளிவாக அறியலாம்.

பாடம் - 2

அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்

2.0 பாட முன்னுரை

அன்பார்ந்த மாணாக்கர்களே! சென்ற முதற்பாடத்தில், இலக்கணங்கள் காலந்தொறும் பாகுபட்டு மூன்று வகை என்றதுபோய் ஆறு வகை என்றாயின; தொல்காப்பியருக்கு முன்னரும் செய்யுள் இலக்கண நூல்கள் இருந்துள்ளன; தொல்காப்பியர் தம் காலத்தில் செய்யுள் இலக்கணத்தைப் பொருளதிகாரத்துள் ஓர் இயலாக வைத்தார்; அவர் காலத்திற்குப் பின் அது யாப்பிலக்கணம் என்று நான்காவது வகை இலக்கணமாகியது; செய்யுள் குறித்த இலக்கண நூல்கள் பின்னரும் பல எழுந்தன; எழுந்த அந்தப் பல நூல்களுள்ளும் பெரிதும் இன்று வகை பயன்பாட்டில் இருந்து வருவன அமிதசாசரர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இவ்விரண்டு நூல்களுமே; இவற்றுள்ளும் யாப்பருங்கலக் காரிகை சிறந்த இடத்தைப் பெற்றுத் தமிழ் மாணாக்கர் எல்லாராலும் படிக்கப் பெறும் நூலாக விளங்குகின்றது; இக்காரிகை நூல் பாயிரப்பகுதியோடு உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது; உறுப்பியல், செய்யுள் உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறனைப் பற்றிய இலக்கணத்தைச் செப்புகின்றது என்னும் செய்திகளைப் படித்து முடித்தீர்கள். இந்த இரண்டாம் பாடத்தில், முதலாவது உறுப்பாகிய எழுத்துப் பற்றிய செய்திகளைப் படிக்க இருக்கின்றீர்கள்.

மொழியின் தோற்றம் குறித்து ஆராய்ந்த மொழியியல் அறிஞர் சிலர், கருதுகோள்களின் அடிப்படையில் மொழித்தோற்றக் கோட்பாடுகள் சிலவற்றை முன்வைத்துள்ளனர். இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே சொற்கள் எல்லாமும் தோன்றின என்று கூறிவிட முடியாது; இக்கோட்பாடுகளிலும் சொற்கள் பல தோன்றியிருக்கலாம்; அவ்வளவே.

உடம்பை இடமாகக் கொண்டு பத்து வகைக் காற்றுகள் உள்ளன. இவற்றுள் ஒன்று, உதானன் என்னும் காற்று. இஃது உந்தியை இடமாகக் கொண்டு பிறப்பதாகும். இதனையே தொல்காப்பியர், ‘உந்தி முதலா முந்துவளி தோன்றி’ என்னும் தொடரில் சுட்டுகின்றார் எனக் கொள்ளலாம். (எழுத்து. பிறப்பியல்) 1) இக்காற்று, உரம் (நெஞ்சு) முதலிய பல இடங்களில் நிலைக்கின்றது; நிலைத்துப்பின், வெளியே வரும் போது பல், நா, அண்ணம், இதழ் முதலான எட்டு உறுப்புகளின் தொழிற்பாட்டில் எழுத்தோசை ஆகின்றது. அஃதாவது, அவ்வெழுத்தோசையே மொழிக்கு முதற்காரணமாவதாம். இதனையே ‘மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலியெழுத்து’ என்கின்றார், நன்னூலார். ‘ஒலியெழுத்து’ என்றவுடன், இதனின் வேறாகிய ‘வரிஎழுத்து’ என்று ஒன்றுள்ளமை உங்களுக்குப் புலனாகின்றது அல்லவா? ஆகவே, எழுத்து, ஒலிவடிவம் வரிவடிவம் என இரண்டு வடிவங்களை உடையது என்பதும் தெரிய வரும். ஒலி வடிவம் முன்னது; வரிவடிவம் பின்னது.

செய்யுளின் அடிக்கு உறுப்பு சீர்; சீர்க்கு உறுப்பு அசை; அசைக்கு உறுப்பு எழுத்து. அசைக்கு உறுப்பாகும் எழுத்துகளைத்தாம், நாம், இங்குப் படிக்க இருக்கின்றோம்.

2.1 எழுத்து

எழுப்பப்படும் காரணம் பற்றியும், எழுதப்படும் காரணம் பற்றியும் வைத்த பெயர் ‘எழுத்து’ என்பதாகும். இதனை,

எழுப்பப் படுதலின் எழுத்தே

எழுதப் படுதலின் எழுத்தா கும்மே

எனவரும் அடிகள் அறிவிக்கின்றன. எழுத்தின் வேறு பெயர்கள் இரேகை, வரி, பொறி என்பனவாம். எழுத்து என்பது இயற்பெயராய் நின்று எழுத்துகளைக் (ஒலி வடிவ, வரி வடிவ எழுத்துகள்) குறிக்கும்;

சுருங்கச் சொன்னால், எழுத்து என்பது நாதத்தின் – ஓசையின் – காரியமாக இருப்பது; சொல்லுக்குக் காரணமாக இருப்பது எனலாம்.

2.1.1 எழுத்தின் வரைவிலக்கணம் மேலே எழுத்து என்பது நாதத்தின் காரியமாய் இருப்பது என்று பார்த்தோம் அல்லவா? அதனைச் சற்றுச் சிந்திப்போம். நாதம் என்னும் ஓசை, கண், மெய், வாய், மூக்கு ஆகியவற்றுக்குப் புலனாகுமா? ஆகாது. செவி ஒன்றனுக்கே புலனாகும். எனவே, ஒலிவடிவ எழுத்து, கண் முதலாயவற்றுக்குப் புலனாகாமல் செவியொன்றனுக்கே புலனாவது என்று கொள்வோம். இவ்வாறே வரிவடிவ எழுத்தை நோக்குவோம். வரிவடிவம், கண்ணுக்குப் மெய்க்கும் (உடம்புக்கும்) புலனாவது. (கண்ணுக்குப் புலனாகும் என்பது சரி; மெய்க்குப் புலனாகுமா? என்ற ஐயம் தோன்றுகிறதா? தோன்றினால், அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்னும் புலவர் தமது முதுகையே எழுதும் பலகையாகக் கொண்டு கற்றார் என்றதனை எண்ணிப் பாருங்கள். ஐயம் விலகும்.) செவி வாய் மூக்கு ஆகியவற்றுக்குப் புலனாகாமல் கண்ணுக்கும் மெய்க்கும் புலனாவது ‘வரிவடிவ எழுத்து’ எனக்கொள்வதில் தடையொன்றும் இல்லை அல்லவா?

‘ஆ’ என்ற எழுத்து என்னும் போது, எழுத்துத் தன்னையே சுட்டிக்கொள்கின்றது. ‘ஆ வந்தது’ என்னும்போது, ‘ஆ’ என்ற எழுத்துத் தன்னைச் சுட்டிக்கொள்ளவில்லை; மாறாக, அதனால் சுட்டப்பெறும் பசுவாகிய ஒரு பொருளைச் சுட்டுகின்றது. அஃதாவது, பொருண்மையைச் சுட்டுகின்றது. ஆகலான், எழுத்துத் தனித்து நின்று தன்னையும் பொருளையும் சுட்டும் என்பது தெரிகிறது.

2.1.2 எழுத்து – வகை தமிழில் உள்ள எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை முப்பத்து மூன்று என்பார் தொல்காப்பியர். மூன்றுதலை யிட்ட முப்பதிற்று எழுத்து (தொல்.எழுத். புணரி. 1) என்பது அவருடைய வாக்கு. இம்முப்பத்து மூன்றெழுத்துகளை அவர் முதல் என்றும் சார்பு என்றும் இருவகையாக்குகின்றார். இவரது கணக்குப்படி முதலெழுத்தின் எண்ணிக்கை முப்பதாகும்; சார்பெழுத்தின் எண்ணிக்கை மூன்று ஆகும் . வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரரும், நேமிநாதம் இயற்றிய குணவீரரும் முதலெழுத்து முப்பத்தொன்று என்கின்றனர். இவர்கள் ஆய்த எழுத்து ஒன்றனையும் சேர்த்துக்கொண்டனர். இவர்களுக்குப்பின் வந்தவர் நன்னூல் ஆசிரியர் பவணந்தியார். இவர், தொல்காப்பியரொடு ஒத்து முப்பதே கொண்டார்.

சார்பெழுத்துகளைக் கொள்வதிலும் இலக்கண ஆசிரியர்கள் தம்முள் வேறுபடுகின்றனர். தொல்காப்பியர் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றனையே சார்பெழுத்துகளாகக் கொண்டார். தொல்காப்பியருக்குப் பின் வந்தவர்கள் சார்பெழுத்தின் வகையும் அவற்றின் விரியுமாகத் தத்தமக்கு வேண்டியவாறே கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் பின்னர்ப் படிக்க உள்ளீர்கள்.

முதலெழுத்து முப்பது என்பது உயிரும் மெய்யுமாக வகைப்படும். உயிர், மெய் ஆகியவை சேரும்போது பிறப்பது உயிர்மெய் எனப்படும். ‘உயிர்மெய்’ யையும் சார்பெழுத்து என்றனர் பின்னோர். இந்த வகைகளை எல்லாம் இப்பாடத்தின் பிற்பகுதியில் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.

மொழியிலக்கணத்தார் புணர்ச்சியைப் பற்றிச் சொல்லவரும்போது எழுத்துகளை உயிர்க்கணம், வன்கணம், மென்கணம், இடைக்கணம் என நான்கு கணங்களாகப் பகுத்துக் கொள்வர்.

மொத்தத்தில், தமிழில் உள்ள எழுத்துகள் எல்லாமும் உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய் என்னும் நான்கு வகைக்குள் அடங்குவனவேயாம்.

2.1.3 எழுத்து – ஆய்தம் தொல்காப்பியர் ஆய்த எழுத்தைச் சார்பெழுத்துகள் மூன்றனுள் ஒன்றாகக் கொண்டார்.

ஆய்தம், உயிர் எழுத்தா? மெய்யெழுத்தா? அல்லது இரண்டுமேயா? என்ற வினா எழுவது இயல்பு. ஆய்தம், உயிரா? மெய்யா? இரண்டுமா? இதனை, அசைகளைப் பற்றிப் படித்த பிறகு அலகிட்டுக் காணும்போது தெளியலாம்.

ஆய்த எழுத்து, ஒரு சமயம் ‘மெய்’; ஒரு சமயம் உயிர். எனவே, இதனைத் ‘தனிநிலை’ என்ற பெயராலும் சுட்டினர்.

‘தனிநிலை’ என்ற பெயர் பெற்றமைக்கு வேறு ஒரு காரணமும் சொல்வதுண்டு. அதனையும் காண்போம்.

க் – மெய்யெழுத்து; இது, தன்மேல் உயிர் ஏற இடங்கொடுக்கும். உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்பது விதி. இதன்படி, க்+அ-க;

ஃ – இதனை மெய்யென்று கொள்வோம். இது, உயிர் ஏற இடங்கொடுக்குமா? ஃ+அ-?; மெய்யாயின் உயிரேற இடங்கொடுத்து உயிர்மெய் எழுத்தை உண்டாக்க வேண்டுமல்லவா? எனவே, ஆய்தம், ‘மெய்’ அன்று;

ஃ – உயிராயின் மெய்யெழுத்துகளை ஊர்ந்து வரல் வேண்டும், க்+ஃ (உயிர்) – ?; எனவே உயிரும் அன்று. ஆதலினால் தான், நம் இலக்கணப் புலவர்கள் நெடுங்கணக்கில் பன்னிரண்டு உயிர்க்கும் பதினெட்டு மெய்க்கும் இடையில் வைத்தனர் போலும்.

ஆய்தத்தின் வேறு பெயர்கள், அஃகேனம், புள்ளி, தனிநிலை, அலி எழுத்து என்பனவாம்.

தொல்காப்பியர் ஆய்த எழுத்தைச் சார்பெழுத்துகள் மூன்றனுள் ஒன்றாகக் கொண்டார்.

ஆய்தம், உயிர் எழுத்தா? மெய்யெழுத்தா? அல்லது இரண்டுமேயா? என்ற வினா எழுவது இயல்பு. ஆய்தம், உயிரா? மெய்யா? இரண்டுமா? இதனை, அசைகளைப் பற்றிப் படித்த பிறகு அலகிட்டுக் காணும்போது தெளியலாம்.

ஆய்த எழுத்து, ஒரு சமயம் ‘மெய்’; ஒரு சமயம் உயிர். எனவே, இதனைத் ‘தனிநிலை’ என்ற பெயராலும் சுட்டினர்.

‘தனிநிலை’ என்ற பெயர் பெற்றமைக்கு வேறு ஒரு காரணமும் சொல்வதுண்டு. அதனையும் காண்போம்.

க் – மெய்யெழுத்து; இது, தன்மேல் உயிர் ஏற இடங்கொடுக்கும். உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்பது விதி. இதன்படி, க்+அ-க;

ஃ – இதனை மெய்யென்று கொள்வோம். இது, உயிர் ஏற இடங்கொடுக்குமா? ஃ+அ-?; மெய்யாயின் உயிரேற இடங்கொடுத்து உயிர்மெய் எழுத்தை உண்டாக்க வேண்டுமல்லவா? எனவே, ஆய்தம், ‘மெய்’ அன்று;

ஃ – உயிராயின் மெய்யெழுத்துகளை ஊர்ந்து வரல் வேண்டும், க்+ஃ (உயிர்) – ?; எனவே உயிரும் அன்று. ஆதலினால் தான், நம் இலக்கணப் புலவர்கள் நெடுங்கணக்கில் பன்னிரண்டு உயிர்க்கும் பதினெட்டு மெய்க்கும் இடையில் வைத்தனர் போலும்.

ஆய்தத்தின் வேறு பெயர்கள், அஃகேனம், புள்ளி, தனிநிலை, அலி எழுத்து என்பனவாம்.

2.2 அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்

தமிழ் எழுத்துகள் எல்லாமும் உயிர் – மெய் – ஆய்தம்- உயிர்மெய் என்னும் நான்கு வகைக்குள் அடங்கும்.

யாப்பு இலக்கணப்படி ஓசையூட்டி அசை காண்பதற்குக் குறில், நெடில், ஒற்று (மெய்) என்ற பகுப்புத் தேவைப்படுகின்றது.

காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரும் வெண்பாவின் இறுதிச்சீர், குற்றியலுகர எழுத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

குற்றியலிகரம் குற்றியலுகரம் முதலியன இவ்விடத்து அலகு பெறும்; இவ்விடத்து அலகு பெறா; என்று எடுத்தோதுவதற்குச் ‘சிறிய இ உ அளபு’ (ஒழிபு – 1) (அதாவது, குற்றியலுகரம், குற்றியலிகரம்) என்னும் பகுப்புத் தேவை.

இவ்வாறே, வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்றனோடும் தூங்கிசை முதலிய ஐந்தும் உறழ்ந்து பல வண்ணங்கள் உருவாகும் என்று சொல்லும்போது, மெய் என்று கூறுவது மட்டும் போதாது.

இவையும் இவைபோன்ற காரணங்கள் பிறவும் மனத்தில் கொண்டு, ‘அசை’ என்னும் செய்யுள் உறுப்புக்குரிய எழுத்துகளை யாப்பிலக்கண நூலார் பதினாறு வகை, பதினைந்து வகை, பதின்மூன்று வகையென வேண்டியவாறு கொண்டுள்ளனர்.

தொல்காப்பியர் பதினைந்து வகைகளைக் கொண்டார். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் பதினாறு வகைகளைக் கொண்டார். அமிதசாகரர் தாமியற்றிய ‘யாப்பருங்கலம்’ என்ற நூலில் பதினைந்து வகைகளைக் கொண்டார். இவரே, தமது ‘யாப்பருங்கலக் காரிகையில் பதின்மூன்று வகையெனக் கொண்டுள்ளார். அவை,

குறில்

நெடில்

உயிர்

குற்றியலுகரம்

குற்றியலிகரம்

ஐகாரக்குறுக்கம்

ஆய்தம்

மெய்

வல்லினமெய்

மெல்லினமெய்

இடையினமெய்

உயிர்மெய்

அளபெடை

என்பனவாம்.

அன்பார்ந்த நண்பர்களே! இப்பதின்மூன்று வகை எழுத்துகளையும் கீழ்வரும் தலைப்புகளுள் அடக்கி, அவற்றைத் தனித்தனியே நாம் காண்போம்.

தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன (இயல்பு வகை)

மெய்யும் உயிருமாகிய கூட்டில் ஒலிப்பது (கூட்டவகை)

தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன (குறுக்கம்)

தமக்குரிய மாத்திரையின் நீண்டொலிப்பன (அளபெடை)

2.2.1 தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன செய்யுள் அடியில் தமக்குரிய மாத்திரையில் ஒலிக்கப் பெறும் எழுத்துகள் ஏழு ஆகும்.

1. குறில்

2. நெடில்

3. உயிர்

4. மெய்

5. வல்லினம்

6. மெல்லினம்

7. இடையினம்

குறில்

இங்குக் ‘குறில்’ என்றது உயிர்க்குறிலை ஆகும். அவையாவன: அ, இ, உ, எ, ஒ, என்னும் ஐந்தாம். இவற்றுக்குத் தனித்தனி மாத்திரை ஒன்று ஆகும். இப்பாடத்தின் இறுதியில் எந்த எந்த எழுத்திற்கு எவ்வளவு எவ்வளவு மாத்திரை என்று படிக்க இருக்கின்றோம்.

நெடில்

இங்கு ‘நெடில்’ என்றது உயிர்நெடிலை ஆகும். அவையாவன, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழாம். இவற்றுக்குத் தனித்தனி மாத்திரை இரண்டு ஆகும். உயிர்க்குறில் தன்னினும் மிக்க ஓசை வேண்டின், நெடில் அதனை நிறைவு செய்யும் என்பது பற்றி உயிர்க்குறில் அளவு எடாது; நெடிலே அளபெடுக்கும் என்றமையை நினைவில் கொள்ளுங்கள்.

உயிர்

இங்கு ‘உயிர்’ என்றது உயிர்க்குறிலும் (5) உயிர்நெடிலும் (7) ஆகிய பன்னிரண்டு எழுத்தை ஆகும். அவையாவன: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள. உயிரெழுத்துகளையே குறில் என்றும், நெடில் என்றும், உயிரென்றும் பகுத்துக் கொண்டதன் அவசியத்தை (இன்றியமையாமையை) முன்னர்ப் பார்த்தோம். எண்ணிப் பாருங்கள். உயிர்நெடில்களுக்குத் தனித்தனியே மாத்திரை இரண்டு என்பதும் குறில்களுக்கு மாத்திரை தனித்தனியே ஒன்று என்பதும் முன்னர் மொழியப்பட்டதால், பொதுப்படச் சொன்ன உயிர்க்காம் மாத்திரை தெளிவாம்.

மெய்

‘க்’ என்னும் எழுத்து முதலாக ‘ன்’ என்னும் எழுத்து ஈறாகத் தமிழ் நெடுங்கணக்கில் அமைந்துள்ள பதினெட்டு எழுத்துகளும் மெய்யெழுத்துகள். இவற்றுக்குத் தனித்தனியே மாத்திரை அளவு அரை ஆகும். மெய்க்கு உடம்பு, புள்ளி, ஒற்று, முதலிய பிற பெயர்களும் உண்டு.

கைக்குழந்தைக்காரி ஒருத்தி பேருந்தில் பயணித்தால் அவளுக்கே கட்டணம்; குழந்தைக்குக் கட்டணம் இல்லை. இரட்டைக் குழந்தையைப் பெற்றவள் ஒருத்தி அந்த இரண்டு குழந்தைகளுடன் பயணித்தாலும் அவளுக்கே கட்டணம். அவ்விரு குழந்தைகளுக்கும் இல்லை. அதுபோலச் செய்யுள் எனும் பேருந்தில் குறிலை அல்லது நெடிலைத் தொடர்ந்து வரும் ஒரு மெய்க்கும் அலகு கொள்ளப்படுவதில்லை; இருமெய்க்கும் அலகு கொள்ளப்படுவதில்லை. ஆனால் அலகிடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

பக் / கம்     - தனிக்குறில் ஒற்று,

தனிக்குறில் ஒற்று     - நேர்நேர்

பாக் / கம்     - தனி நெடில் ஒற்று,

தனிக்குறில் ஒற்று     - நேர்நேர்

பீர்க் / கு     - நெடில் ஒற்று ஒற்று

(தனிநெடில் ஈரொற்று)     - நேர்

ஒற்று கணக்கில் கொள்ளப்படாமையும் அசைப் பிரிப்புக்குப் பயன்படுவதையும் காண்கின்றோம். ஒற்று (மெய்) அளபெடுக்கும் போது ஒரு மாத்திரையாகின்றது. அப்போது ஓரலகாகக் கொள்ளப்படுகின்றது.

வல்லினம், மெல்லினம், இடையினம்

மேற்கூறிய உயிர், மெய் ஆகிய எழுத்துகளைப் பொதுவாகப் பிறப்பிடம், முயற்சி, மாத்திரை அளவு, பொருள், வடிவம் ஆகியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ அளவாகக் கொண்டு இலக்கண ஆசிரியர்கள் இனம் காண்கின்றனர் அல்லது இனம் பிரிக்கின்றனர்.

இவ்வகையில் பதினெட்டு மெய்யெழுத்துகளையும் அவை ஒலிக்கப்படும் அளவு, பிறக்கும் இடம், மேற்கொள்ளப்படும் முயற்சி போன்றவைகளை அளவாகக் கொண்டு வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூவகையாகப் பகுத்துள்ளனர்.

வல்லின எழுத்துகள் : க், ச், ட், த், ப், ற்.

மெல்லின எழுத்துகள் : ங், ஞ், ண், ந், ம், ன்.

இடையின எழுத்துகள் : ய், ர், ல், வ், ழ், ள்.

ஆய்தம்

மாணவ நண்பர்களே! முன்பே ஆய்த எழுத்து உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? இவை இரண்டுமேயா? என்று பார்த்தோம். யாப்பிலக்கணத்தார் சில போது உயிரென்றும் சிலபோது மெய்யென்றும் கருதியுள்ளனர். இப்போது இத்தலைப்பின்கீழ், ஆய்தம் இருவகைப்படும் என்பதனையும் அதன் விரியையும் பார்க்க இருக்கின்றோம்.

அரைமாத்திரை அளவில் ஒலிப்பது முற்றாய்தம் என்றும், அரையளபினின்றும் குறுகிக் கால்மாத்திரை அளவில் ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்று வழங்கப் பெறுகின்றது. முற்றாய்தம் எட்டு என்பது நன்னூலார் முடிபு.

குற்றெழுத்தை அடுத்தும், உயிரெழுத்தோடுகூடிய வல்லின உயிர்மெய்களுக்கு முன்னும் வரும் ஆய்தம் ஆறு ஆகும்.

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்தவல் ஆறன் மிசைத்தே

(நன்னூல், 80)

காட்டு : எஃகு , கஃசு, கஃடு, கஃபு, கஃது, பஃறி

(பஃறி = படகு)

அவ்+கடிய = அஃகடிய; இவ் + கடிய = இஃகடிய எனத் திரிதல் என்னும் புணர்ச்சி விகாரத்தால் வரும் ஆய்தம் ஒன்று;

‘செய்வது’ என்பது ‘செய்வஃது’ என விரித்தல் என்னும் செய்யுள் விகாரத்தால் வருவது ஒன்று; (6+1+1+= 8) ஆக எட்டு. ஆய்தக் குறுக்கமாவது, ல, ள ஈற்று நிலைமொழியின் முன் தகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட வருமொழி வந்து புணரும் போது

அல் + திணை = அஃறிணை

எனவும்,

முள் + தீது = முஃடீது

எனவும், திரிய வரும் ஆய்தமாகும். இதனை, நன்னூலார்

ல, ள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் என்னும் நூற்பாவால் (97) குறிப்பார்.

2.2.2 மெய், உயிர் ஆகிய கூட்டில் ஒலிப்பது

உயிரும் மெய்யும் கூடிப்பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்து எனப்படும்.

‘க’ என்பது, ‘க்’ என்னும் மெய்யெழுத்தும் ‘அ’ என்னும் உயிரெழுத்தும் கூடிப்பிறந்த உயிர் மெய்யெழுத்து ஆகும். ‘க்’ என்ற ஒரு மெய்யுடன் அகரம் முதல் ஒளகாரம் ஈறான பன்னிரண்டு உயிர்களும் கூட, க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ எனப் பன்னிரண்டு எழுத்துகள் உண்டாகும் அல்லவா? பதினெட்டு மெய்யெழுத்துகளோடும் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் கூட இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் உளவாகின்றன (18×12 = 216).

பதினெட்டு மெய்யுடன் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து உயிர்க்குறில்கள் கூடுவதனால் (18×5) தொண்ணூறு உயிர்மெய்க் குறில்களும், பதினெட்டு மெய்யுடன் ஆ, ஈ , ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழு உயிர்நெடில்கள் கூடுவதனால் (18×7=126) நூற்று இருபத்தாறு உயிர்மெய் நெடில்களும் பிறக்கும்.

மெய்க்கு மாத்திரை அரை உயிர்க்குறிலுக்கும் உயிர்நெடிலுக்கும் மாத்திரைகள் முறையே ஒன்றும் இரண்டுமாகும். ஆதலால், உயிர்மெய்க் குறிலுக்கு ஒன்றரை மாத்திரை ஆகல் வேண்டும்.

க் – மெய்; மாத்திரை 0.5

அ – உயிர்க்குறில் மாத்திரை 1

க் + அ = க. உயிர்மெய்க்குறிலின் மாத்திரை 1.5

என்று ஆகல் வேண்டும். ஆனால் ஆவதில்லை. ஒரு மாத்திரையாகவே நிலைக்கின்றது. மெய், தன் வடிவத்தைக் கொள்கின்றது. மாத்திரையை விட்டுக் கொடுக்கின்றது. உயிர் தனது வடிவை விட்டுக் கொடுக்கின்றது; தனக்குரிய மாத்திரையை நாட்டுகின்றது. ஒருவர் பொறை இருவர் நட்பு!

இவ்வாறே, உயிர்மெய் நெடிலுக்கும் உயிர்நெடிலின் அளவே அளவு. அஃதாவது இரண்டு மாத்திரை.

2.2.3 தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன

உயிர் எழுத்துகளுள் இ, உ, ஐ, ஒள என்பனவும், உயிரும் மெய்யுமாக கொள்ளப்பெறும் ஆய்தமும், மெய்களுள் ‘ம்’ என்னும் எழுத்தும் தமக்குரிய மாத்திரையினின்றும் குறைந்து ஒலிப்பனவாம். இவை, இடம், சார்பு, பற்றுக்கோடு ஆகியவைகளை உடையன, சொல்லிடைப் படுங்கால். இவற்றை முறையே குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் என்பார்கள்.

யாப்பருங்கலக்காரிகை ஆசிரியர், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஐகாரக்குறுக்கம் ஆகிய மூன்றனையே கொள்கின்றார். ஒளகாரக்குறுக்கம் ஆய்தக் குறுக்கம், மகரக்குறுக்கம் ஆகிய மூன்றனைக் கொள்ளவில்லை.

ஆகையால், நண்பர்களே! ஆசிரியரால் ஏற்கப்பட்ட குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் ஆகிய மூன்றனை மட்டும் இப்பகுதியில் நோக்குவோம்.

குற்றியலுகரம்

‘குற்றியலுகரம்’ என்ற பெயரே இதன் இலக்கணத்தைச் சொல்வதாய் அமைந்துள்ளது. குறைந்து இயல்கின்ற அல்லது நடக்கின்ற உகரம் என்ற பொருளைத் தருகின்றதல்லவா? குறுமை + இயல் + உகரம் என்றவாறு பிரித்துப் பாருங்கள் விளங்கும்.

‘உ’ என்பது உயிர்க்குறில். இது உயிர்க்குறில் எழுத்துகள் ஐந்தனுள் ஒன்று. இதன் மாத்திரை ஒன்று. இதனை, ‘உ’ என்று தனித்தோ, ‘உலகு’ என்று மொழி முதல் படுத்தியோ ஒலித்துப் பாருங்கள். இதன் ஒலிக்கப்படும் கால அளவு ஒன்று என்பது விளங்கும்.

‘உலகு’ என்பதை மீண்டும் ஒருமுறை ஒலியுங்கள். முதலில் நின்ற ‘உ’ வை ஒலித்த அளவிலா மொழியின் இறுதியில் நின்ற ‘கு’ வை ஒலித்தீர்கள்? இல்லை. அதற்குரிய ஒரு மாத்திரையினின்றும் குறைந்தே ஒலித்ததை உணர்வீர்கள்.

நாகு

எஃகு

வரகு

கொக்கு

குரங்கு

தெள்கு

என்னும் இவற்றைப் படியுங்கள். ஈரெழுத்து ஒரு மொழியின் இறுதிக் கண்ணும், ஆய்தம், உயிர், வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய ஐவகைத் தொடர் மொழி இறுதிக் கண்ணும் நின்ற (‘க்’ ஐ ஊர்ந்த) உகரம் குறைந்து ஒலிக்கப் பெறுவதை உணர்வீர்கள்.

க் ச் ட் த் ப் ற் என்னும் வல்லின மெய்யை ஊர்ந்து வரும் உகரம் வன்மை ஊர் உகரம் எனப் பெறும். அவை: குசுடுதுபுறு. இவ்வன்மை ஊர் உகரங்கள் மேற்கூறிய ஆறுவகை மொழியின் இறுதிக் கண் வரும்போது தமது மாத்திரையினின்றும் குறைந்து ஒலிக்கப் பெறுகின்றன. ஆகவே இவற்றைக் குற்றியலுகரங்கள் என்றனர். எனவே, குசுடுதுபுறு என்ற ஆறும் குற்றியலுகர எழுத்துகள்.

கு சு டு து பு று – என்னும் குற்றியலுகரங்கள் என்றவை கூடச் சிலபோது முற்ற ஒலிப்பது உண்டு.

பசு – அசு – இது – கடு – என்னும் இவற்றை ஒலித்துப் பாருங்கள், தம் மாத்திரை முழுதும் ஒலிக்கப் பெறுவதை உணர்வீர்கள். இதனின்றும் குறிலைத் தொடர்ந்து வரும் போது கு சு டு து பு று என்பன குறுகி ஒலிப்பதில்லை என்பது புரியும். இவை முற்றியலுகரங்கள் எனவும் உணர்வீர்கள்.

மொழியிலக்கண நூலார் குற்றியலுகர எழுத்துகள் ஆறு; அவை, நெடில் ஆய்தம், உயிர், வல்லின மெல்லின இடையின எழுத்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மொழியின் (சொல்லின்) இறுதிக்கண் வரும்; நெடிலைத் தொடர்ந்து குற்றியலுகர எழுத்துகள் ஆறும் ‘நாகு’ ‘காசு’ ‘சூடு’ ‘காது’ ‘காபு’ ‘சோறு’ என்றவாறு இறுதியில் வருவது போல ஏனைய ஐந்தனொடும் தொடரும்; இறுதியிலும் வரும். தொடர, 6×6=36 என குற்றியலுகரம் ஆகும்; என்ற இவற்றையெல்லாம் கருதியவர்களாய்க் குற்றியலுகர்,

1.நெடில் தொடர்க் குற்றியலுகரம்

2.ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

3.உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

4.வன்தொடர்க் குற்றியலுகரம்

5.மென்தொடர்க் குற்றியலுகரம்

6.இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என ஆறு வகைப்படும் என்றும், இதன் விரி முப்பத்தாறு என்றும் சொல்லி வைத்தனர்.

யாப்பிலக்கணக்காரர்கள் அசை உண்டாகும் வகையை அடிப்படையாகக் கொள்கின்றனர். நேரசை உண்டாகும் வகை நான்கு. அவை, குறில், குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று என்பன. நிரையசை உண்டாகும் வகை நான்கு. அவை: இணைக்குறில், இணைக்குறில் ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று. இவற்றுடன் குறில் தவிரப் பிறவற்றுடன் வரும் வன்மை ஊர் உகரமே குற்றியலுகரங்களாகும். அவை (7×6) 42 ஆகும்.

குற்றியலிகரம்

உயிர்க்குறில் எழுத்துகளுள் ஒன்றான இகரத்தைத் தனித்தும், சொல்லின் முதலில் வைத்தும், சொல்லின் இறுதியில் வைத்தும் ஒலித்துப் பார்ப்போம்.

இ – ஒரு மாத்திரை (தனித்து)

இலை – ஒரு மாத்திரை (மொழிமுதல்)

கதலி – ஒரு மாத்திரை (மொழியிறுதி)

இவற்றுள் இகரம் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கிறது. முன்னிலை அசைச்சொல்லான ‘மியா’ என்பதிலும் ஒரு மாத்திரையே ஒலிக்கிறது.

ஆனால் ‘மியா’ என்னும் அசைச்சொல் தனியே வாராது. ஏவல் வினையை அடுத்தே வரும். செல், கேள் என்னும் ஏவல் வினைகளோடு சேர்ந்து சென்மியா, கேண்மியா எனவரும். இவற்றில் மகரத்தை ஊர்ந்துவரும் இகரம் (மி) தனக்குரிய ஒரு மாத்திரையினின்றும் குறுகி அரைமாத்திரை அளவாகக் குறுகி ஒலிப்பதை உணர்வீர்கள். இது ஒருமொழி அல்லது தனிமொழிக் குற்றியலிகரம் எனப்படும். யகர வருமொழி ஏற்படுத்துகிற குற்றியலிகரத்திற்கு எடுத்துக்காட்டு:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்

கியாண்டும் இடும்பை இல

சேர்ந்தார்க் – நிலைமொழி (இறுதி – குற்றியலுகர எழுத்து)

யாண்டும் – வருமொழி (யா – முதல் எழுத்து)

சேர்ந்தார்க் கி யாண்டும் (கி – குற்றியலிகரம்)

யாப்பிலக்கணத்தில் அசைகளின் கீழ்வரும் குற்றியலுகரம் 42 என்றதனால், யகர வருமொழி ஏற்படுத்துகிற குற்றியலிகரமும் 42 என்றனர். அத்துடன் தனிமொழிக் குற்றியலிகரத்தையும் சேர்த்து 43 என்பர்.

ஐகாரக்குறுக்கம்

‘ஐ’ என்னும் எழுத்து உயிர்நெடில்கள் ஏழனுள் ஒன்று. நெடில் எனவே, இதற்குரிய மாத்திரை இரண்டு என்பதனை அறிவீர்கள். இரண்டு மாத்திரை என்றாலும் மொழியின் (சொல்லின்) முதல், இடை, கடை ஆகிய எல்லா இடங்களிலும் இது, இரண்டு மாத்திரை அளவினதாய் ஒலிக்கும் என்று கூறிவிட முடியாது.

‘ஐ’- (ஒலித்துப் பாருங்கள். இரண்டு மாத்திரைக்கால அளவு ஒலிக்கப் பெறுவதை உணர்வீர்கள். இங்குத் தன்னையே சுட்டி வருகின்றது)

ஐப்பசி- (இங்கு மொழியில் முதலிடத்து வருகின்றது. ஓசை குறைகின்றது. ஒலித்துத்தான் உணர வேண்டும்)

இடையன்- (இங்கு மொழியின் இடையில் வருகின்றது. இங்கும் தனக்குரிய ஒலியில் குறைகின்றது.)

குவளை- (இங்கு மொழியின் இறுதியில் வருகின்றது. இங்கும் தனக்குரிய இருமாத்திரையினின்றும் குறைந்தே ஒலிக்கின்றது)

ஆதனால், எழுத்திலக்கணத்தார், ஐ என்ற எழுத்துத் தன்னைச் சுட்டிவரும் போதும் அளபெடுக்கும் போதும் மட்டும்தாம் தனக்குரிய இரண்டு மாத்திரையில் ஒலிக்கும்; (ஏனைய மூவிடமாகிய) மொழியின் முதல், இடை, கடைகளில் ஒரு மாத்திரையளவிலேயே ஒலிக்கும் என்றனர்.

மொழியில் ஐகாரம் வருமிடத்தை நினைக்க ஐகாரக்குறுக்கம் மூன்றாகின்றது. ‘ஐகான் மூன்றே ஒளகான் ஒன்றே’ என்கின்றார் நன்னூலார்.

2.2.4 தமக்குரிய மாத்திரையில் நீண்டொலிப்பன செய்யுளில் இசை நிரப்புவதற்காக உயிர் நெட்டெழுத்தும் மெய்யும் (ஒற்று) அளபெடுக்கும். உயிர்எழுத்து அளபெடுத்தால் உயிரளபெடை என்றும் ஒற்று அளபெடுத்தால் ஒற்றளபெடை (மெய்யளபெடை) எனக் கூறப்படும். எந்த எழுத்து அளபெடுத்ததோ அதற்கு இனமாகிய குற்றெழுத்தை அருகில் எழுதிக்காட்டல் மரபு.

உயிரளபெடை

நெடில் அளபெடுக்கும் என்பதை அறிவீர்களல்லவா?

நெடில் ஏழு. அவை: ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள. இவற்றுள், ‘ஆ’வுக்கு ‘அ’ இனம். இவ்வாறே ஈகார ஊகார ஏகார ஓகாரங்கட்கு இனக்குறில் முறையே இகர உகர எகர ஒகரங்கள் ஆகும். ஐக்கு இ; ஒளக்கு உ இனக்குறில்களாம்.

உயிர்நெடில் ஏழும் அளபெடுக்கும்போது எத்தனை மாத்திரை எடுத்தது என்பதைக் காட்ட அவ்வவற்றின் இனக்குற்றெழுத்தை அத்தனை மாத்திரைக்கேற்ப அருகில் இட்டு எழுதுவது வழக்கம்.

காட்டு:

தொழாஅர் எனின் (ஒரு மாத்திரை மிகுதி என்பதைக் காட்ட ‘அ’ எனும் எழுத்தை (இனக்குறிலை) ஒரு தடவையே எழுதப்பட்டுள்ளது)

செறாஅஅய் வாழிய (இரண்டு தடவை இட்டு எழுதப்பட்டுள்ளது)

சில இடங்களில் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீண்டு அளபெடுப்பதையும் காண முடிகின்றது. மகடு – மகடூ – மகடூஉ.ஏழு நெட்டெழுத்துகளும் தனித்து நின்றும் அளபெடுக்கும். சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் நின்றும் அளபெடுக்கும். அவ்வாறு ஏழு எழுத்துகளும் மேற்சொன்ன நான்கு இடங்களிலும் அளபெடுக்க உயிரளபெடை இருபத்தெட்டாம்.

காட்டு:

ஆஅ, ஈஇ     - தனிநிலையில் அளபெடுத்தல்

ஆஅரிடம், ஈஇரிலை     - சொல்லின் முதலில் அளபெடுத்தல்

படாஅைக, வளைஇய     - சொல்லின் இடையில் அளபெடுத்தல்

குரீஇ, கடாஅ     - சொல்லின் இறுதியில் அளபெடுத்தல்

ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்றாலும் மெய்யளபெடை என்றாலும் ஒன்றே. மெய்கள் பதினெட்டு. இவற்றுள். வல்லின மெய்யாகிய கசடதபற என்னும் ஆறு எழுத்துகளுடன் இடையின எழுத்துகள் ர, ழ என்ற இரண்டும் ஆக எட்டு எழுத்துகளும் அளபெடுக்கா. இவையெட்டும் நீட்டி ஒலிக்க முடியாதவை என்பர்.

மேற்சொன்ன எட்டு எழுத்துகள் ஒழிந்த ஏனைய பத்து மெய்களும் அளபெடுக்கும். ஆய்தமும் அளபெடுக்கும். இங்கு ஆய்தத்தை மெய்யில் சேர்த்திருப்பதை நீங்கள் நினைவுகூர்தல் வேண்டும்.

மெல்லினமெய்     :     ங ஞ ண ந ம ன     - 6

இடையினமெய்     :     வ ய ல ள     - 4

(ர, ழ – தவிர்ந்தவை)

ஆய்தம்     :     ஃ     - 1

ஆக மொத்தம்     11

இவை அளபெடுக்கும் போது தமக்குரிய அரை மாத்திரையினின்றும் மிக்கு ஒரு மாத்திரை அளவாக ஒலிக்கும். அளபெடுத்தமைக்கு அடையாளமாக அதே மெய்யெழுத்தை மீண்டும் ஒரு முறை அதனை அடுத்து எழுதிக்காட்டுவர்,

ஒற்றுஎழுத்து, (சொல்லில்) குறில் அடுத்தும், குறிலிணையை அடுத்தும் அளபு எடுக்கும்.

காட்டு :

மங்ங்கலம்     - (‘ங்’ குறிலை அடுத்து அளபெடுத்தது)

அரங்ங்கம்     - (‘ங்’ குறிலிணையை அடுத்து அளபெடுத்தது)

அளபெடுக்கும் ஒற்றெழுத்துப் பதினொன்று; ஒற்று அளபெடுக்கும் இடம் குறில் அடுத்து (குறில்கீழ்), குறிலிணையை அடுத்து (குறிலிணைக்கீழ்) என இரண்டும். எழுத்தும் இடமும் உறழ (11 எழுத்து x 2 இடம்) ஒற்றளபெடை மொத்தம் இருபத்திரண்டு ஆகும்

2.3 விதப்புக்கிளவி (சிறப்பித்து மொழிதல்) தரும் விளக்கம்

இலக்கண ஆசிரியர் யாதேனும் ஒரு காரணம் பற்றித் தாமியற்றும் நூற்பாவில் எடுத்துமொழியும் சொற்களை ஆளுவார். அச்சொற்கள், எதுகை முதலிய நோக்கம் பற்றிப் பாடலை நிறைக்க வருஞ்சொற்கள் அல்ல. ஆசிரியன் சொல்ல எண்ணும் செய்தியை வாசகனோ உரையாசிரியனோ கருதிக் கொள்ளவேண்டும். அஃதாவது உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் பெய்வனவாகும். இவ்விதப்புக் கிளவிகள் நாம் வேண்டியனவற்றைப் பயக்கும் ஆற்றலை உடையனவாம். அசைக்கு உறுப்பாம் எழுத்துகளைச் சொல்லவரும் அமிதசாகரர் மறுவறு மூவினம், மைதீர் உயிர்மெய், அறிஞர் உரைத்த அளபு என மூன்று விதப்புக் கிளவிகளை ஆண்டுள்ளார். ஆதலால், அவை தரும் செய்திகளையும் காண்பது நமது கடமையாகும்.

2.3.1 மறுவறு மூவினம் மெய்யெழுத்து வல்லினம் மெல்லினம் இடையினம் என மூவகைப்படும்; இவையும் அசைக்குறுப்பாவனவாம் என்னும் செய்தியைச் சொல்ல, ‘மூவினம்’ என்றாலே போதும். அதனை ‘மறுவறு’ என்று அடைகொடுத்துச் சிறப்பிக்கின்றார். இங்ஙனம், விதந்து – எடுத்து – சிறப்பித்து மொழிவதன் நோக்கம் என்ன? அது, இம்மூவின மெய்யும் உயிர்மெய்யாகிய காலத்தும் வல்லின உயிர்மெய், மெல்லின உயிர்மெய், இடையின உயிர்மெய் என்று மெய்யின் பெயராலேயே வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்பதே நோக்கமாம்.

2.3.2 மைதீர் உயிர்மெய் ‘உயிர்மெய்’ என்று சொல்வதே போதும். ‘மைதீர்’ என்னும் அடையைச் சேர்த்துள்ளார். இது, இங்கு, விதப்புக்கிளவி. இவ்விதப்புக் கிளவியைக் கொண்டு காரிகை ஆசிரியர் உணர்த்த விரும்புவது, ஏறிய உயிரின் மாத்திரையே உயிர்மெய்க்கும் அளவு என்பதைச் சொல்ல வேண்டும் என்பதேயாகும்.

க் – மெய் – அரைமாத்திரை

அ – உயிர் – ஒரு மாத்திரை

க்+அ – மெய் + உயிர் – அரை + ஒன்று – ஒன்றரை மாத்திரையென்று கருதி விடுவோம் அல்லவா? அவ்வாறு கருதக்கூடாது; உயிர்மெய்யின் மாத்திரை, மெய்யேறிய உயிரின் மாத்திரையே என்று நினைதல் வேண்டும்.

2.3.3 அறிஞர் உரைத்த அளபு துணியை அளக்க ‘மீட்டர்’ என்ற அளவையும், எண்ணெயை முகக்க ‘லிட்டர்’ என்ற அளவையும், நிறுத்தளக்கக் ‘கிலோ’ என்ற அளவையும் கொள்கின்றோம். அதுபோல, நம் முன்னோர் எழுத்தொன்று ஒலிக்கப்படுவதற்கு ஆகும் கால அளவையும் கணக்கிட முயன்றார். முயன்று, ‘மாத்திரை’ என்ற அளவைக் கண்டனர். அவர்களுடைய கொள்கைப்படி இயல்பாகக் கண்ணை இமைப்பதற்காகும் கால அளவும், இயல்பாக விரலை நொடிப்பதற்காகும் கால அளவும் மாத்திரையாகும்.

‘இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை’

என்றார் நன்னூலார் (100).

உயிர்க்குறில்,

உயிர்மெய்க்குறில் – ஒருமாத்திரை

உயிர்நெடில்,

உயிர்மெய்நெடில் – இரண்டுமாத்திரை

உயிரளபெடை – மூன்று மாத்திரை என்பது பெரும்பான்மை;

சிறுபான்மை நான்கு மாத்திரையுமாம்

ஒற்றளபெடை – ஒரு மாத்திரை

ஒற்று – அரைமாத்திரை

ஆய்தம் – அரைமாத்திரை

குற்றியலிகரம் – அரைமாத்திரை

குற்றியலுகரம் – அரைமாத்திரை

ஐகாரக்குறுக்கம் – சொல்லின் முதலில் ஒன்றரை மாத்திரை;சொல்லின் இடையிலும் இறுதியிலும் ஒருமாத்திரை

(ஒளகாரக்குறுக்கம் – சொல்லின் முதலில் ஒன்றரை மாத்திரை, காரிகையாசிரியர் இதனைக் கொள்ளவில்லை)

ஆய்தக்குறுக்கம் – கால்மாத்திரை

மகரக்குறுக்கம் – கால்மாத்திரை

மாத்திரை என்றால் என்ன? ஒவ்வொரு வகை எழுத்துக்கும் தனித்தனி எவ்வளவு மாத்திரை? என்பன பற்றிக் காரிகையாசிரியர் பேசவில்லை. எனினும், இவை குறித்து முன்னையோர் கூறிய இலக்கணத்தையே தழுவிக் கொள்கின்றார். தழுவிக் கொள்வதற்காக விதந்து சொன்ன கிளவியே ‘அறிஞர் உரைத்த அளபும்’ என்னும் விதப்புச்சொல்.

2.4 தொகுப்புரை

மாணாக்கர்களே! இந்தப் பாடத்தின் வழி நாம் அறிந்து கொண்டவற்றைத் தொகுத்துக் காண்போம்.

எழுத்து என்பது காரணப்பெயர்.

எழுத்து என்பதன் வரைவிலக்கணம்

எழுத்துகளின் வகை

ஆய்த எழுத்து ஒருகால் மெய்; ஒருகால் உயிர்

அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள் பதின்மூன்று

தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன, குறில், நெடில், உயிர், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம் என்பன.

உயிரும் மெய்யும் கூடி ஒலிப்பது உயிர்மெய். உயிர்மெய்க்கு அதனை ஏறிய உயிரின் அளவே அளவு.

தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன, குற்றியலிகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம் என்னும் மூன்று.

அளபெடை இருவகைப்படும். அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

பாடம் - 3

அசையும் சீரும்

3.0 பாட முன்னுரை

முந்தைய இரண்டாம் பாடத்தில் செய்யுள் உறுப்புகள் ஆறனுள் முதலாவது உறுப்பு எழுத்து என்றும், அசைக்கு உறுப்பாகும் எழுத்துகளின் வகை பதின்மூன்று என்றும் பார்த்தோம். இப்பாடத்தில் செய்யுள் உறுப்புகளுள் எழுத்தினை அடுத்து அமைவதாகிய ‘அசை’ என்னும் உறுப்பைக் குறித்துப் பார்க்க உள்ளோம்.

ஓசை தழுவி வருவது பாட்டு அல்லது செய்யுள்; ஓசையின்றிச் செய்யுள்தன்மையாய் வருவது நூற்பா; ஓசையும் இன்றிச் செய்யுள் தன்மையும் இன்றி வருவது உரைநடை. இதனை இளம்பூரணரின்,

‘பலசொல் தொடர்ந்து பொருள்காட்டுவன வற்றுள் ஓசை

தழீஇய வற்றைப் பாட்டென்றார். ஓசையின்றிச் செய்யுள்

தன்மைத்தாய் வருவது நூல் எனப்பட்டது’

என வரும் உரைவிளக்கப் பகுதி உரைக்கின்றது.

‘பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல்’ என்னும் திருக்குறள் தொடரும், ‘இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று’ என்னும் நல்வழித் தொடரும், ‘அரும்புணர்ப்பின் பாடல்சாம் பண் அறியாதார் முன்னர்’ என்னும் நான்மணிக்கடிகைத் தொடரும் பாடலுக்கு ஓசை அல்லது இசை இன்றியமையாதது என அறிவிக்கின்றன. பாட்டுக்கு அசைகளே அடிப்படை. அசைகள்தாம் பாட்டின் சந்தத்தை அல்லது ஓசையை உண்டாக்குகின்றன. எனவேதான், நம்முடைய முன்னோர்,

‘எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து

அசைத்து இசை கோடலின் அசையே’

என்றனர் போலும்.

அன்பார்ந்த மாணவர்களே! இனி, நாம் அசையினது இயல்பு, நேரசையும் அமையும் வகை, அசைக்கு உறுப்புகளைக் கொண்டு அலகிடும் முறை, அலகிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில செய்திகள், அசையான் இயலும் சீர்களின் வகை, அவற்றிற்கான வாய்பாடு, விதப்பு வகையால் அமிதசாகரர் சொல்ல விரும்பும் செய்திகள் ஆகியவற்றை விளங்கக் காண்போம்.

3.1 அசை

அசைதல் – தொழிற்பெயர்

அசைத்தல் – இதுவும் தொழிற்பெயர். இவ்விரண்டனுக்கும் பொருள் முறையே இயங்கல், இயக்கல் என்பனவாகும். அசைதல், அசைத்தல் ஆகிய இரண்டனுக்கும் முதல் நிலை அல்லது பகுதி ‘அசை’ என்பதாகும். இம்முதல் நிலைக்குப் பொருள்கள் ‘இயங்கு’, ‘இயக்கு’ என்பனவாம். எழுத்து, ஒன்றும் பலவுமாக நடந்து (இயங்கி) ஒலித்து வரையறுத்த ஓசையைக் கொள்ளுவதால் அசை எனப் பெறுகின்றது. மற்று, எழுத்தை ஒன்றும் பலவுமாக நடத்தி (இயக்கி) ஒலிக்கச்செய்து குறிப்பிட்ட அல்லது வரையறுத்த ஓசையைக் கொள்வதனாலும் அசையெனப் பெறுகின்றது. இவ்விருமுறையையும் சுட்ட ‘அவ்வெழுத்து அசைத்திசை கோடலின் அசையே’ என்று குறிப்பிடுகின்றனர்.

செய்யுள் என்னும் ஒலிச்சங்கிலி அசையென்னும் சிறு வளையங்களால் அமைந்து இயங்குவது; இயங்கும் இயல்புடையது என்பர். செய்யுளின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள இந்த அசையை, உண்டாக்கும்/உருவாக்கும் அமைப்பினை நோக்கி இருவகையாகப் பகுப்பது யாப்பிலக்கணத்தாரது மரபாகும். அவை: நேரசை, நிரையசை.

3.1.1 நேரசை அமையும் வகை நேரசை என்பது அசை வகைகளுள் ஒன்று. இது, நான்கு வகையில் அமையும். நேரசை ஒற்று நீங்கலாக ஓர் எழுத்தே பெறும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

இக்குறளின் நான்காம் சீர் ‘ஆதி’ என்பது. இது இரண்டு அசைகளைக் கொண்டுள்ளது. ‘ஆ’ என்ற நெடிலும் நேரசை; ‘தி’ என்ற குறிலும் நேரசை.

‘பகவன்’ என்பது ஐந்தாவது சீர். இது இரண்டு அசைகளால் ஆனது. ‘பக’ என்பது ஓர் அசை. ‘வன்’ என்பது ஓர் அசை. ‘வன்’ என்பதில் குறிலும் ஒற்றும் தொடர்ந்துள்ளன; எனவே நேர்அசை.

‘எழுத்தெல்லாம்’ என்பது இக்குறளின் மூன்றாவது சீர். மூன்று அசைகளை உடைய சீர் இது. இதன் மூன்றாவது அசை ‘லாம்’ என்பது. இது, நெடிலும் ஒற்றுமாகச் சேர்ந்து உண்டாகிய நேர்அசையாகும்.

இப்போது, இக்குறளில் ‘நேரசை’ என்று கூறியவற்றையெல்லாம் உற்று நோக்குங்கள்.

1. தனிக்குறில் (தி)

2. தனிக்குறில் ஒற்று (வன்) ஒற்று நீங்கலாக ஓர் எழுத்தே வருவதைக் காணுங்கள்

3. தனி நெடில் (ஆ)

4. தனி நெடில் ஒற்று (லாம்)

என்று நால் வகையால் வருவனவெல்லாம் நேரசை என்பது புலனாகும். இதனையே வேறு வாய்பாட்டால் (வேறொரு வகையில்) நேரசை நான்கு வகையில் உண்டாகும் எனலாம் அல்லவா? அமிதசாகரர்,

குறில் – ழி

குறில் ஒற்று - வெல்

நெடில் – ஆ

நெடில் ஒற்று – வேள்

என நான்கு வகையால் வரும் ‘நேர்வகை’ என்கின்றார். அவர்தரும் காட்டு, ‘ஆ-ழி-வெல்-வேள்’ என்பன வாகும்.

யாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியராகிய குணசாகரர் நேரசைகளாலேயே ஆகிய பாட்டொன்றைக் காட்டுகின்றார். அதனை அலகிட்டால் நேரசை அமையும்முறை புலனாகும். (அலகு=அளவு)

‘போது சாந்தம் பொற்ப வேந்தி

ஆதி நாதற் சேர்வோர்

சோதி வானந் துன்னு வாரே’

(முதலடி)

போது

சாந்தம்

பொற்ப

வேந்தி

போ து சாந் தம் பொற் ப வேந் தி

தனி நெடில் தனிக் குறில் தனி நெடில் ஒற்று தனிக் குறில் ஒற்று தனிக் குறில் ஒற்று தனிக் குறில் தனி நெடில் ஒற்று தனிக் குறில்

நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்

(இரண்டாம் அடி)

ஆதி

நாதற்

சேர்வோர்

ஆ தி நா தற் சேர் வோர்

த.நெ. த.கு த.நெ. த.கு,ஒ த.நெ,ஒ த.நெ,ஒ

நேர் நேர் நேர் நேர் நேர் நேர்

(மூன்றாம் அடி)

சோதி

வானந்

துன்னு

வாரே

சோ தி வா னந் துன் னு வா ரே

த.நெ. த.கு த.நெ. த.கு,ஒ த.கு,ஒ த.கு த.நெ. த.நெ.

நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்

இங்ஙனம் அலகிட்டுப் பார்த்ததிலிருந்து,

‘நெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்று அடுத்தும்

நடைபெறும் நேரசை நால்வகை யானே’

என்னும் நூற்பாவின் பொருள் நன்கு விளங்குகின்றது அல்லவா? பொருள் காண முயலுங்கள். இது யாப்பருங்கலச் சூத்திரமாகும்.

3.1.2 நிரையசை அமையும் வகை நிரையசை என்பது அசைவகைகளுள் ஒன்று. இதுவும் நேரசையே போல நான்கு வகையில் அமையும். நிரையசை ஒற்று நீங்கலாக இரண்டு எழுத்துகளைப் பெறும்.

இரண்டு எழுத்துகளைப் பெறும் என்றதனால், ‘நெடில்குறில்’ எனத் தொடரும் எனக் கொள்ளக் கூடாது. ‘குறில்நெடில்’ என்று தொடரும் என்றே கொள்ள வேண்டும். மற்றுக் ‘குறில்குறில்’ என்று தொடரும் அல்லது அடுத்தடுத்து நிற்கும் என்றும் கொள்ள வேண்டும். நிரையசை அமையும் வகையை அறியக் கீழ்வரும் பாட்டை அலகிடுவோம்.

‘அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய

மணிதிக விரொளி வரதனைப்

பணிபவர் பவநனி பரிசறுப் பவரே’

(முதலடி)

(இரண்டாம் அடி)

மணிதிக ழவிரொளி வரதனைப்

(1) (2) (3)

மணி கு கு திக கு கு ழவி கு கு ரொளி கு கு வர கு கு தனைப் கு கு ஒ

இணைக் குறில் இணைக் குறில் இணைக் குறில் இணைக் குறில் இணைக் குறில் இணைக் குறில் ஒற்று

நிரை நிரை நிரை நிரை நிரை நிரை

(மூன்றாம் அடி)

இப்பாடலுள்,

(அ) இணைக்குறில் அல்லது குறிலிணை தனித்து நிரையசையாவன அணி, நிழ, தரு, ணெறி, திய, மணி, திக, ழவி, ரொளி, வர, பணி, பவ, நனி, பரி, பவ என்பவையாகும்.

(ஆ) இணைக் குறில் ஒற்று அல்லது குறிலிணை ஒற்று அடுத்து வந்து நிரையசையாவன, கமர்ந், தனைப், பவர், சறுப் என்பனவாம்

(இ) குறில் நெடில் இணைந்து வந்து நிரையாவது லசோ (அசோ), என்பதாம்.

(ஈ) குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வந்து நிரையசை யாவது. நடாத் என்பதாம்

இவற்றினின்றும், நேரசையைப் போன்று நிரையசையும் நான்கு வகையாக இயங்கும் என்பதை அறிகின்றோம். அவை

1. இணைக் குறில் – வெறி

2. இணைக்குறில் ஒற்று – நிறம்

3. குறில் நெடில் – பலா

4. குறில் நெடில் ஒற்று – விளாம்.

3.1.3 அலகும் அலகிடலும் அலகு என்பதன் பொருள் ‘அளவு’ என்பதாகும். மாணவர்களே! கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலையும், பெரிய புராணக் கடவுள் வணக்கப் பாடலையும் நீங்கள் அறிந்தவர்கள்தாம். அவற்றுள் இடம்பெறும் ‘அலகிலா விளையாட்டு உடையார்’ என்னும் தொடரையும், ‘அலகில் சோதியன்’ என்னும் தொடரையும் எண்ணுங்கள். இவ் விடங்களில் அலகு என்பது அளவு என்ற பொருளில்தானே வருகின்றது?.

செய்யுளில் பயிலும் சீர்களை ‘அசை’ என்னும் செய்யுள் உறுப்பாகப் பகுக்க நம்மனோர் ஓர் அளவைக் கொண்டுள்ளனர். கொள்ளும்போது அசைப் பிரிப்புக்கு மெய்யெழுத்தை ஒரு வரையறை எல்லையாகக் கருதினர். கருதியதனாலேயே மெய்யெழுத்து அளபெடுக்கும் இடம் தவிர மற்றைய இடங்களில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்றனர். இதனை,

‘தனிநிலை ஒற்றுஇவை தாம்அலகு இலவே

அளபெடை அல்லாக் காலை யான’

என்னும் நூற்பா அறிவிக்கின்றது.

நேர் அசை ஓர் அலகு

நிரை அசை இரண்டு அலகு.

ஓர் அலகு என்பது ஒற்று நீங்கலாக ஓர் எழுத்து; இரண்டு அலகு என்பது ஒற்று நீங்கலாக இரண்டு எழுத்து என்று கருதவேண்டும்.

அலகிடும் போது மனத்தில் கொள்ள வேண்டியன.

(அ) தனிக்குறில், நேரசை என்றார் ஆசிரியர் என்பதைப் பற்றிக் கொண்டு

(1) (2)

அகர

அ/ க/ ர

கு கு கு

நேர் நேர் நேர் முதல

மு/ த/ ல

கு கு கு

நேர் நேர் நேர்

என்றவாறு அசையைப் பிரித்தல் கூடாது. இணைக் குறில் நிரையசை என்றதை மனத்தில் கொண்டு

(1) (2)

அகர

அக/ ர

கு கு கு

முதல

முத/ ல

கு கு கு

இணைக் தனிக் குறில் குறில் இணைக் தனிக் குறில் குறில்

நிரை நேர் நிரை நேர்

என்றவாறு பிரித்தல் வேண்டும். பிரித்த பின், எஞ்சி நின்ற குற்றெழுத்தே, நேரசை எனக் கொள்ளல் வேண்டும்.

(அ) குறிலும் நெடிலும் இணைந்து வந்து நேர்அசை உருவாகும்; குறிலும் நெடிலும் இணைந்து ஒற்று அடுத்து வந்து நிரை அசை உருவாகும்; என்றவற்றைக் கொண்டு நெடிலும் குறிலும் இணைந்தும், நெடிலும் குறிலும் இணைந்து ஒற்று அடுத்தும் வந்து நிரையசை உருவாகும் எனக்கொள்ளல் கூடாது. ‘குறில் நெடில்’ என்ற வைப்பு முறையை நோக்க வேண்டும்.

விளாம் ளா/விம் (அல்லது) ஆ/வி

விளாம்/

கு நெ ஒ

குறில் நெடில் ஒற்று

நெ. கு ஓ

தனிநெடில் தனிக்குறில் ஒற்று

நெடில் குறில்

தனிநெடில் தனிக்குறில்

நிரையசை நேர் நேர் நேர் நேர்

(ஆ) ஒற்றெழுத்துகள் கலந்து வரும் போது சீர்களின் இடையே வரும் ஒற்று எழுத்து அசையை நிர்ணயிக்கும் காரணியாக அமையும் அல்லது அசை எல்லையை நிர்ணயிக்கும்.

(காட்டு)

1) அன்னம்

அன் / னம்

2. அனம்

அன /ம்

3) அனந்தன்

அனந் /தன்

த.கு.ஒ த.க.ஒ

கு கு ஒ

இணைக்குறில் ஒற்று

கு கு ஒ கு.ஒ இ.கு.ஒ தனிக்குறில் ஒற்று

நேர் நேர் நிரை நிரை நேர்

இவற்றள் ன், ம், ந், ன் எனும் ஒற்றெழுத்துகள் அசையெல்லையாக அமைந்தமையைப் பாருங்கள்.

3.2 சீர்

சீர் என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று. எழுத்தும் அசையும் முதல் இரண்டு உறுப்புகள். இது மூன்றாவது உறுப்பாகும். நேரசை நிரையசை என்று மேலே பார்த்துவந்த ஈரசைகளும் தம்முள் இரண்டும் மூன்றும் நான்குமாக உறழ்ந்தும் உறழாதும் இணையச் சீர்கள் உருவாகின்றன. தனி ஓர் அசையும் கூட ஒருசீர் ஆதலும் உண்டு என்பதையும், நாம் இங்குக் கவனத்தில் கொள்வது நல்லது. இச்சீர்களின் எண்ணிக்கையை வைத்துத்தான் செய்யுளின் அடிகள் இருசீரடி, முச்சீரடி என்பனவாகக் கணக்கிடப்படுகின்றன. தளைகளை உண்டாக்குவதும் சீரே ஆகும். இவற்றை யெல்லாம் பின்வரும் பாடங்களில் படிக்க இருக்கின்றோம்.

சீர் என்பது சீர்மையின் குறுக்கம். இது காரணப்பெயராகும். அசை தனித்தோ இரண்டு முதலாக இணைந்தோ சீராக (சீர்மை-ஒழுங்கு) அமைதலின் ‘சீர்’ எனப்பட்டது. தான் பெற்ற பெயருக்கேற்ப, ‘ஒலி ஒழுங்கு’ அல்லது ஒலிநயம் (Rhythm) என்னும் நடைலயத்தை உண்டாக்குவதில் தளையைப் போலவே பெரும்பங்கு வகிப்பதும் இச்சீரே. அஃதாவது ‘சீர்’ என்னும் இந்தச் செய்யுள் உறுப்பே. இனிச் சீரின் வகைகளாகிய ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் ஆகியவை பற்றி விரிவாகப் படிப்போம்.

3.2.1 அசைச்சீர் (2) அசைச்சீர் இரண்டு. அவை, நேரசைச்சீர், நிரையசைச்சீர் என்பனவாம்.

முன்னே, ‘சீர்’ என்றதன் விளக்கப்பகுதியில் ‘தனி ஓர் அசையும் கூட ஒருசீர் ஆதல் உண்டு’ என்று பார்த்தோம். அசை, நேர்அசை, நிரைசை என்று இருவகைப்படுவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த நேர், நிரை என்னும் அசைகள் தாமே தனித்து நின்று அசைச்சீர்கள் ஆவதைக் காண்போம்.

நேரசை மட்டுமே சீர் ஆதல்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல் (38)

தொடிற்சுடி னல்லது காமநோய் போல

விடிற்சுட லாற்றுமோ தீ (1159)

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால் (14)

இந்த மூன்று குறள்களின் ஈற்றுச்சீரினை (ஏழாவது சீரினை)ப் பாருங்கள். இவை தனிக்குறில் ஒற்று, தனிநெடில், தனிநெடில் ஒற்று எனவந்த நேரசைகள். இவை நாள் என்னும் வாய்பாட்டைப் பெறும் ஓரசைச்சீர்களாம்.

தனிக்குறில் ஒன்றுமே ஈற்றுச் சீராய் வந்து ‘நாள்’ எனும் வாய்பாட்டில் இயங்கும் நேரசையைக் காண்பது அரிது.

நிரையசை மட்டுமே சீர் ஆதல்

‘நேர்’ என்னும் ஓரசையே வெண்பாவின் ஈற்றுச் சீராய் வந்து ‘நாள்’ என்னும் வாய்பாட்டைப் பெற்றது போல, நிரை என்னும் ஓரசையும் வெண்பாவின் ஈற்றுச்சீராய் நின்று ‘மலர்’ என்னும் வாய்பாட்டைப் பெறும்.

வேண்டுதல் வேண் டாமை இலானடி சேர்ந்தார்க் (கு)

யாண்டும் இடும்பை இல                               (4)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்                           (430)

அஞ்சுவ தோரும் அறனே; ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா                              (366)

ஏவியது மாற்றும் இளங்கிளையும், காவாது

வைதுஎள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய்தெள்ளி

அம்மனை தேய்க்கும் மனையாளும், இம்மூவர்

இம்மைக்(கு) உறுதி இலார்.                      (திரிகடுகம், 49)

மேற்கண்ட பாடல்களின் இறுதிச் சீரைப் பாருங்கள். இல, இலர், அவா, இலார் என்பவை அவை. இவை யனைத்தும் முறையே இணைக்குறில், இணைக்குறில் ஒற்று, குறில் நெடில், குறில்நெடில் ஒற்று என்றவாறு இணைந்து நிரையசை ஆயின. அதே நேரத்தில் ஓரசைச்சீரும் ஆயின; மலர் என்னும் வாய்பாட்டின ஆயின.

ஓரசையே நின்று சீர் ஆகும் இடங்களை ஒழிபியலிலும் படிக்க இருக்கின்றீர்கள். அங்குப் பேசப்படும் அசைக்கூன் உள்ளிட்ட சீர்க்கூன், அடிக்கூன் ஆகிய மூவகைக் கூன்களுள் அசைக்கூன், எனப்பெறும் ஒன்றும் அசைச்சீரே யாம்.

ஒரு விளக்கம்

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய் (359)

என்பது குறள்வெண்பா. இதன் இரண்டாம் சீர் ‘சார்பு’ என்பது. இது அசைவகையால் பிரிக்கும் போது நேர், நேர் என ஈரசையாகப் பிரிகின்றது.

சார்பு

சார்/     பு

நெ ஒ.

தனிநெடில்

ஒற்று     தனிக் குறில்

நேரசை

நேரசை

தே மா

(வாய்பாடு)

சார்பு – இடைத்தொடர்க் குற்றியலுகரம். யாப்பிலக்கணத்தார் கருத்தின்படி ‘நெடில் ஒற்றுக் கீழ்க் குற்றியலுகரம். குற்றியலுகரத்திற்கு மாத்திரை அரை. அரைமாத்திரை அளவில் ஒலிக்கப்படும் எழுத்துகளை யாப்பிலக்கண நூலார் கணக்கில் கொள்ளார். என்றாலும் ஈற்றில் வாராமல் இடையில் வருமானால் ஒருமாத்திரை அளவினதாகக் கொள்வர்; அலகூட்டுவர் என்ற கொள்கைப்படி இந்த சார்பு என்னும் சொல் அலகூட்டப்பட்டுள்ளது. தேமா என்ற வாய்பாட்டையும் பெற்றுள்ளது.

‘சார்பு’ என்பதனைப் போன்றதே ‘மார்பு’ எனும் குற்றியலுகரச் சொல்லும், இது வெண்பாவின் இறுதியில் வரும்போது இதன்கண் உள்ள ‘புகர’ மாகிய குற்றியலுகர எழுத்து அரைமாத்திரை அளவினதாகக் கருதப்படுகின்றது. கருதி, ‘காசு’ என்னும் வாய்பாடு வழங்கப்படுகின்றது.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.                          (131)

என்பது குறள்வெண்பா. இதன் ஈற்றுச்சீர் மார்பு என்பது. வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசையாதல் வேண்டும் என்பது விதி. விதிக்கேற்பப் பகுப்போம்.

மார்பு

மார் /     பு

நெடில் ஒற்று தனிநெடில்     குறில் ஒற்று குற்றுகரம்

நேரசை

(மாத்திரை, அரை; அரைமாத்திரை கணக்கில் கொள்ளப்படாது. எனவே, மெய்க்குச்சமம். மெய் அலகு பெறாதது போலக் குற்றுகரமும் பெறாது)

ஆகவே, குற்றுகர ஈற்றிலேயே வாய்பாடும் ‘காசு’ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு என்னும் வாய்பாடும் இத்தகையதே. இவற்றை ஓரசைச்சீராகவே கொள்வர்.

3.2.2 ஈரசைச்சீர் மாணாக்க நண்பர்களே! 1, 2 என்னும் இரண்டு எண்களை வைத்துக் கொண்டு உங்களால் எத்தனை இரண்டிலக்க எண்களை உருவாக்க முடியும்?

11

21

22

12

என நான்கு எண்களைத் தாமே? ஆம் எனின், (1) நேர், (2) நிரை என்னும் இரண்டு அசைகளைக் கொண்டு உங்களால் நான்கு ஈரசைச் சீர்களையும் உருவாக்க முடியும்,

நேர் நேர் (11)

நிரை நேர் (21)

நிரை நிரை (22)

நேர் நிரை (12)

என்று. எனவே ஈரசைச்சீர் நான்கு.

இவ்வாறே, நிரைநிரைச்சீர், நிரைநேர்சீர், நேர்நேர்ச்சீர், நேர்நிரைச் சீர் என்பது போல மூவசை, நான்கசைச் சீர்களையும் சொல்லப்புகின் மிக விரிவாக அமையும்.

நம் முன்னோர் இவற்றைக் குறிப்பிட வழிகளைக் கண்டுள்ளனர் அவ்வழிகளுள் ஒன்றே வாய்பாடு என்பது. வாயில் படுவதால் வாய்பாடு. வாய்பாடு-இன்ன அமைப்பினது என்பதனைக் காட்டும் குறியீடு.

அசைகள் இரண்டும் மூன்றும் நான்குமாய் இணைந்து உருவாகும் சீர்களுக்கும் வாய்பாடு கண்டனர். அங்ஙனம் ஈரசைச்சீர்கள் நான்கனுக்கும் கண்ட வாய்பாடே தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பன.

1. கற்க

தேமா

கற்     / க     =     தே     / மா

த.கு.ஒ     த.கு         த.நெ.     த.நெ.

நேர்     நேர்         நேர்     நேர்

தே     மா

தேமா

(வாய்பாடு)

(வாய்பாடு)

2. அதற்கு

புளிமா

அதற்     / கு     =     புளி     / மா

கு.கு.ஒ     கு.         கு.கு.     நெடில்

இணைக்குறில்

ஒற்று     தனிக்குறில்         இணைக்குறில்     தனிநெடில்

நிரை     நேர்         நிரை     நேர்

புளிமா (வாய்பாடு)

புளிமா (வாய்பாடு)

3. கசடற

கருவிளம்

கச     / டற     =     கரு     / விளம்

கு.கு.     கு,கு         கு.கு     கு.கு.ஒ

இணைக்குறில்     இணைக்குறில்         இணைக்குறில்     இணைக்குறில்

ஒற்று

நிரை     நிரை         நிரை     நிரை

கருவிளம் (வாய்பாடு)

கருவிளம் (வாய்பாடு)

4. கற்பவை

கூவிளம்

கற்     / பவை     =     கூ     / விளம்

கு.ஒ.     கு.கு         நெ.     கு.கு.ஒ

தனிக்குறில் ஒற்று     இணைக்குறில்         தனிநெடில்     இணைக்குறில் ஒற்று

நேர்     நிரை         நேர்     நிரை

கூவிளம் (வாய்பாடு)

கூவிளம் (வாய்பாடு)

பாடலில் அமைந்த சீர்களைத்தாம் அலகிட்டு வாய்பாடு காண வேண்டும் என்பதில்லை. வாய்பாடுகளைக் கூட அலகிட்டு அவ்வவ் வாய்பாடுகள் ஆகும் நெறியை அறியலாம்.

தேமா

புளிமா

கருவிளம்

கூவிளம்

என்னும் நான்கு வாய்பாடுகளையும் பாருங்கள். இவற்றில் ‘மா’ என முடியும் சீர்கள் இரண்டும் ‘விளம்’ என முடியும் சீர்கள் இரண்டும் இருப்பதை அறிவீர்கள். ‘மா’ என முடியும் இரண்டையும் ‘மாச்சீர்’ என்று வழங்குவர்; ‘விளம்’ என முடியும் இரண்டையும் விளச்சீர் என்று வழங்குவர். எனவே, நான்கு எனப்பட்ட ஈரசைச்சீர் இருவகைப்படுவது புலனாகும்.

ஈரசைச் சீருக்கு வேறொரு பெயரும் உண்டு. அப்பெயர், அகவல் சீர் என்பதாகும். சிறப்பாக இச்சீர் நான்கும் அகவல் என்னும் ஆசிரியப்பாவுக்கு உரிமை பூண்பதால் இப்பெயர் வந்தது. செய்யுட்கு உரிய சொல்லை உரிச்சொல் என்றது போல ஆசிரியப்பாவுக்கு உரியசீர், ஆசிரிய வுரிச்சீர் என்றும் உரிமை பற்றிப் பெயர் பெறுகின்றது.

இது, ‘இயற்சீர்’ என்றும் வழங்கப்பெறும். காரணம், இரண்டாம். ஒன்று, நேர், நிரை என்ற அசைகள் தம்மொடு தாம் இயல்பாக இணைதலால் பிறக்கும் சீர் என்பது. மற்றொன்று, நால்வகைப் பாக்களுக்கும் மூவகைப் பாவினங்களுக்கும் பொருத்தமாக இயலுகின்ற சீர் என்பதாகும்.

3.2.3 மூவசைச்சீர் மூன்று அசைகளைக் கொண்ட சீர் மூவசைச்சீர். இஃது, அசையின் எண்ணிக்கையையால் உற்ற பெயராகும்.

முன்பு 1, 2 என்னும் இரண்டு எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்கள் நான்கனை உருவாக்கிய உங்களால், 1,2 என்னும் இவ்வெண்களைக் கொண்டு மூன்று இலக்க எண்கள் எட்டனை உருவாக்க முடியும்,

111

211

221

121

112

212

222

122

என்றவாறு. 1 என்பதை நேர் அசை எனவும், 2 என்பதை நிரையசை எனவும் கொண்டு மேல் உருவாக்கிய மூவிலக்க எண்ணுக்கேற்பப் பொருத்துங்கள்.

111

- நேர்

நேர்

நேர்

(1)

நேரசை இறுதி

211

- நிரை

நேர்

நேர்

(2)

221

- நிரை

நிரை

நேர்

(3)

121

- நேர்

நிரை

நேர்

(4)

112     - நேர்     நேர்     நிரை         (1)     நிரையசை இறுதி

212     - நிரை     நேர்     நிரை     (2)

222     - நிரை     நிரை     நிரை     (3)

122     - நேர்     நிரை     நிரை     (4)

இம் மூவசைச்சீர்கள் எட்டனையும் உற்று நோக்குங்கள். நேரசை இறுதியாகவுடைய சீர்கள் நான்கையும், நிரையசையை இறுதியாக உடைய சீர்கள் நான்கையும் காண்பீர்கள்.

பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்

உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் – கென்னோ

மனனொடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப்

புனனாடன் பேரே வரும்.

இது, முத்தொள்ளாயிரத்தில் காணப்படும் வெண்பா. இந்த வெண்பாவில் இடம்பெறும் நேர் ஈற்று மூவசைச் சீர்கள் சிலவற்றுக்கு அலகிட்டுப் பார்ப்போம்.

மாணாக்கர்களே! இவற்றினின்றும் ‘காய்’ என்னும் வாய்பாட்டில் முடியும் மூவசைச்சீர்கள் நான்கு என்பதை அறிவீர்கள். அவை:

தேமாங்காய் – நேர் நேர் நேர்

புளிமாங்காய் – நிரை நேர் நேர்

கருவிளங்காய் – நிரை நிரை நேர்

கூவிளங்காய் – நேர் நிரை நேர்

காய்ச்சீர் நான்கும் சிறப்பாக வெண்பாவுக்குரியன ஆகும். ஆதலால், இவற்றை வெண்பா உரிச்சீர் என்றும் வெண்சீர் என்றும் வெள்ளை உரிச்சீர் என்றும் வழங்குகின்றனர்.

நேரீற்று மூவசைச் சீரைப் பார்த்தோம். இனி நிரையீற்று மூவசைச்சீரைப் பற்றிப் படிப்போம்.

‘பூந்தாமரைப்     போதலமரத்

தேம்புனலிடை     மீன்திரிதரும்

வளவயலிடைக்     களவயின்மகிழ்

வினைக்கம்பலை     மனைச்சிலம்பவும்

மனைச்சிலம்பிய     மணமுரசொலி

வயற்கம்பலைக்     கயலார்ப்பவும்’

என்பது வஞ்சிப்பாவின் முற்பகுதி. இப்பகுதியினின்றும் சில சீர்களைக் கொண்டு அவற்றுக்கு அசை பிரித்து வாய்பாடு காண்போம்.

இனிய மாணாக்கர்களே! மேல் குறித்தவற்றிலிருந்து ‘கனி’ என்னும் வாய்பாட்டில் முடியும் மூவகைச் சீர்கள் நான்கு என்பதை அறிகின்றீர்கள் அல்லவா? அந்த நான்கு சீர்கள்:

தே மாங் கனி     - நேர் நேர் நிரை

புளி மாங் கனி     - நிரை நேர் நிரை

கரு விளங் கனி     - நிரை நிரை நிரை

கூ விளங் கனி     - நேர் நிரை நேர்

இத்தகைய மூவசைச்சீர்களைக் கனிச்சீர் என்கின்றனர். மேலே, இக்கனிச் சீர்களைக் காண நாம் ஒரு வஞ்சிப்பாவின் (‘பூந்தாமரை’ எனத் தொடங்கும் பா) அடிகளைத் தாமே கொண்டோம்? ஆம் எனில், இக் ‘கனிச்சீர்’கள் நான்கும் சிறப்பாக வஞ்சிப்பாவுக்கே உரியன என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது அல்லவா!

வஞ்சிப்பாவுக்குச் சிறப்பாக உரிமை உடைய இந்தக் கனிச்சீர்களை வஞ்சியுரிச்சீர்கள், வஞ்சிச்சீர்கள் என்னும் பெயர்களாலும் குறிப்பர்.

3.2.4 நாலசைச்சீர் நான்கு அசைகளால் இயலும் சீர் ஆதலால், நாலசைச்சீர் எனப்படுகின்றது. இஃது, அசையின் எண்ணிக்கையைக் கருதி வைக்கும் பெயராகும்.

முன்பு 1,2 ஆகிய இரண்டு எண்களைக்கொண்டு இரண்டிலக்க எண்கள் நான்கனையும் மூன்று இலக்க எண்கள் எட்டனையும் உருவாக்கிய உங்களால் அந்த எண்களையே கொண்டு நான்கு இலக்க எண்கள் பதினாறனை உருவாக்க முடியும்,

1111     1112

2111     2112

2211     2212

1211     1212

1121     1122

2121     2122

2221     2222

1221     1222

என்றவாறு, முன்கூறியவாறே ‘1’ என்பதை ‘நேர்’ அசை எனவும், ‘2’ என்பதை ‘நிரை’ யசை எனவும் கொண்டு மேல் உருவாக்கிய நான்கிலக்க எண்ணுக்கு ஏற்பப் பொருத்துங்கள்.

1) 1111

2) 2111

3) 2211

4) 1211

5) 1121

6) 2121

7) 2221

8) 1221     - நேர் நேர் நேர் நேர்

- நிரை நேர் நேர் நேர்

- நிரை நிரை நேர் நேர்

- நேர் நிரை நேர் நேர்

- நேர் நேர் நிரை நேர்

- நிரை நேர் நிரை நேர்

- நிரை நிரை நிரை நேர்

- நேர் நிரை நிரை நேர்         நேர் ஈற்று நாலசைச்

சீர் எட்டு

9) 1112

10) 2112

11) 2212

12) 1212

13) 1122

14) 2122

15) 2222

16) 1222     - நேர் நேர் நேர் நிரை

- நிரை நேர் நேர் நிரை

- நிரை நிரை நேர் நிரை

- நேர் நிரை நேர் நிரை

- நேர் நேர் நிரை நிரை

- நிரை நேர் நிரை நிரை

- நிரை நிரை நிரை நிரை

- நேர் நிரை நிரை நிரை         நிரை ஈற்று நாலசைச்

சீர் எட்டு.

இப்போது பாருங்கள், நேர் நிரை என்னும் இரண்டு அசைகளைக் கொண்டு பதினாறு சீர்களை உருவாக்க முடியும் என்று உணர்வீர்கள். உணர, நாலசைச்சீர்களின் எண்ணிக்கை பதினாறு (16) என்பதும், இவற்றுள் ‘நேர்’ என்று முடிவன எட்டுச்சீர்கள் என்பதும், ‘நிரை’ என்று முடிவன எட்டுச்சீர்கள் என்பதும் அறிவீர்கள்.

இவற்றின் வாய்பாட்டை அறியக் காரிகையின் உரையாசிரியராகிய குணசாகரர் தரும் வஞ்சிப்பா ஒன்றனை அலகிட்டுப் பார்ப்போம். அப்பாடல்:

செழு நீர்ப் பவளத்

அங் கண் வா னத்     தம ர ர ர சரும்

வெங் களி யா னை     வேல் வேந்தரும்

வடி வார் கூந் தன்     மங்கையரும்

கடி மல ரேந் திக்     கதழ்ந் திறைஞ்சச்

சிங் கஞ் சுமந் த     மணியணை மிசைக்

கொங் கவி ரசோ கின்     குளிர்நிழல் கீழ்ச்

திரள்காம்பின்

முழு மதி புரை யும்     முக்குடைநீழல்

வெங் கண் வினைப்பகை     விளிவெய்தப்

பொன் புனை நெடு மதில்     புடை வளைப்ப

அனந் தச துட் டய     மவையெய்த

நனந் தலை யுல குடை     நவைநீங்க

மந் தமா ருத     மருங்கசைப்ப

அந் தர துந் துபி     நின்றியம்ப

இலங் கு சா மரை     யெழுந் தலமர

நலங் கிளர் பூமழை     நனிசொரிதர

இனிதிருந்

தருணெறி நடாத்திய ஆதிதன்

திருவடி பரவுதும் சித்திபெறல் பொருட்டே.

இந் நான்கனையும் பாருங்கள்.

தே மா

புளி மா

கரு விளம்

கூ விளம்

என்பனவற்றோடு நேர், நேர் என்று ஈரசைகள் இணைய, அவை, தேமாந்தண்பூ-புளிமாந்தண்பூ – கருவிளம்தண்பூ – கூவிளந்தண்பூ என ஆகின்றன. இவற்றைத் ‘தண்பூ’ வில் முடியும் நாலசைச் சீர்கள் என்பர்.

அடுத்து, இந்த நான்கனையும் பாருங்கள்.

தேமா

புளிமா

கருவிளம்

கூவிளம்

என்பவற்றுடன் நிரை, நேர் என்று ஈரசைகள் இணைய, அவை தேமா நறும்பூ – புளிமா நறும்பூ – கருவிள நறும்பூ – கூவிளநறும்பூ என வாய்பாட்டைப் பெறுகின்றன. இவற்றை ‘நறும்பூ’ வில் முடியும் நாலசைச் சீர்கள் என்கின்றோம். பூச்சீர், தண்பூ-நறும்பூ என்னும் இருவகையினது.

அடுத்து, இந்த நான்கனையும் பாருங்கள். தேமா – புளிமா – கருவிளம் – கூவிளம் என்பவற்றுடன் நிரை, நிரை என்று ஈரசைகள் இணைய, அவை தேமா நறுநிழல் – புளிமா நறுநிழல் – கருவிள நறுநிழல் – கூவிள நறுநிழல் என வாய்பாட்டினை கூறுகின்றன. இவற்றை ‘நறுநிழல்’ என முடியும் நாலசைச்சீர்கள் என்கின்றோம்.

இந்தச் சீர்கள் நான்கனையும் பாருங்கள்.

தேமா

புளிமா

கருவிளம்

கூவிளம்

என்னும் வாய்பாட்டினைக் கொண்ட நான்கு ஈரசைச்சீர்களுடன் தனித்தனி நேர், நிரை என்னும் இரண்டு அசைகளைக்கூட்ட நான்கசைச் சீர்களாகின்றன. ஆகி முறையே

தேமாந் தண்ணிழல்

புளிமாந்தண்ணிழல்

கருவிளந்தண்ணிழல்

கூவிளந் தண்ணிழல்

என்னும் வாய்பாட்டை உறுகின்றன. ‘தண்ணிழல்’ என்னும் முடிவின இவை. ஆக

தண் பூ – (4)

நறும் பூ – (4)

தண்ணிழல் – (4)

நறுநிழல் – (4)

என்று பதினாறு வகைப்படுகின்றது நான்கசைச்சீர்.

நான்கசைச்சீர்கள் பதினாறும் பொதுச்சீர் எனப்பெறும். இவ்வாறு சொல்வதற்குக் காரணம், எல்லா வகைப் பாடல்களுக்கும் உரிய பொதுச்சீர் என்பதன்று. அவ்வாறு இந்த நாலசைச்சீர் ஒன்றும் நால்வகைப் பாக்களிலும் பயின்றுவருவதில்லை. வஞ்சிப்பாவில் மட்டுந்தான் ஓரளவிற்குப் பயில்கின்றது. பின்னர் ஏன் இதனைப் ‘பொதுச்சீர்’ என்றனர்?

‘பொது’ என்பதற்குச் ‘சாதாரணம்’ என்பது பொருள். அவ்வளவு சிறப்பில்லாத மக்களைப் ‘பொதுமக்கள்’ என்று சொல்லுவதை / குறிப்பதைக் காண்கின்றோம். இஃது இந்தப் பொருளில் வருவதைப் ‘பொது மக்கட்கு ஆகாதே பாம்பறியும் பாம்பின கால்’ என்னும் பழமொழி நானூற்று அடியில் பார்க்கலாம். சிறப்பில்லாத இந்தச் சீரை இக்காரணத்தால்தான் ‘பொதுச்சீர்’ என்றனர். அலகிடும் போது பூச்சீர், காய்ச்சராகவும், நிழல்சீர் கனிச்சீராகவும் கொள்ளப்படும்.

3.3 விதப்புக்கிளவி (சிறப்பித்து மொழிதல்) தரும் விளக்கம்

விதப்புக்கிளவியைப் பற்றி முன்னைய பாடத்திலே பார்த்திருக்கிறோம். இனிய மாணாக்கர்களே! இந்த விளக்கத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இங்கு, நாம் ‘விண்தோய் விளாம்’ ‘கண்ணிய பூவினம் ‘ஒண்ணிழல் சீர்’ என்னும் மூன்று விதப்புக் கிளவிகளால் மூல ஆசிரியர் சொல்ல விழைந்ததாக உரையாசிரியர் கருதுபவற்றைப் பார்க்கப் போகின்றோம்.

3.3.1 விண்தோய் விளாம்: காரிகையின் ஆசிரியர் ஆகிய அமிதசாகரர் நேரசை அமையும் வகை, நிரையசை அமையும் வகை ஆகியவற்றைக் கூறினாரே தவிர, நேரசையின் அலகு எத்தனை என்றோ, நிரையசையின் அலகு எத்தனை என்றோ மொழியவில்லை. ஆகலான், அவற்றைக் கூறாமல் போய்விட்டார் என்ற குற்றம் வாராமை வேண்டி ‘விண் தோய் விளாம்’ என்னும் விதப்புக் கிளவியைத் தனது அசைக்கான காரிகை யாப்பில் பெய்கின்றார். உரைகூறும் குணசாகரர் இவ்விதப்புக் கிளவியைப் பற்றுக் கோடாகக் கொண்டு, ‘நேரசை ஓரலகு பெறும்; நிரையசை ஈரலகு பெறும்’ என்னும் வேண்டிய செய்தியை விளைத்ததாகக் கூறுகின்றார்.

3.3.2 கண்ணிய பூவினம் நாலசைச்சீர்கள் பூச்சீர் என்றும் நிழல்சீர் என்றும் இருவகைப் படுவதை முன்னர்ப் பார்த்தோம். அவற்றுள், பூச்சீர் எட்டும் காய்ச்சீரை ஒக்கும் என்கின்றபோது ‘கண்ணிய பூவினம்’ எனச் சிறப்பிக்கின்றார். இவ்வாறு சிறப்பித்த அதனால் ஆசிரியர் சொல்ல விரும்புவன:

வெண்பாவினுள் நாலசைச் சீர்கள் வாரா;

ஆசிரியப்பாவில் அரிதாகக் குற்றியலுகரம் வருமிடத்து வருமே அல்லாமல் பிற இடத்து வாரா;

கலிப்பாவினுள்ளும் அவ்வாறே குற்றுகரம் வந்தவிடத்து அன்றிப் பிறஇடத்து வாரா;

வஞ்சிப்பாவில் வரும். வஞ்சிப்பாவில் வரும்போது குற்றியலுகரமாக வர வேண்டும் என்னும் கட்டுப்பாடில்லை;

வஞ்சியுள் இரண்டு நாலசைச்சீர் ஓரடியுள் அருகி ஒன்றையொன்று பொருந்தி நிற்கவும் பெறும்;

வஞ்சிப்பா அல்லாத பிற பாக்களுள் ஓரடியில் ஒன்றன்றி அதற்குமேல் வாரா; இரண்டு வரினும் அடுத்தடுத்து இணைந்து நில்லா;

துறை தாழிசை விருத்தம் என்ற வகைமைபட்ட பாவினத்துள்ளும் பயின்று அடிக்கடி வாரா;

என்பனவாம்.

3.3.3 ஒண்ணிழல் சீர்: ஆசிரியர் அமிதசாகரர், வெறுமனே ‘நிழல்சீர்’ என்று சொல்லாமல் ‘ஒண்’ (ஒண்மையுடைய) என்ற அடைமொழியைப் புணர்த்துச் சிறப்புச் செய்கின்றார். இவ்வாறு சிறப்பித்ததன் காரணம், ‘அவர் ஒன்று சொல்லக் கருதுகின்றார்’ என்பதாம். அவர் கருதுவதாக உரையாசிரியர் சொல்வது,

நிழல் என்னும் சொல் இறுதியாகிய நிரையீற்றுப்

பொதுச்சீர் எட்டும் வஞ்சியுள் (வஞ்சிப்பாவுள்)

அல்லது (பாடல்கள் பிறவற்றுள்) வாரா

என்பதாகும். அஃதாவது ‘நிழல்‘ சீர் எட்டும் வஞ்சியுள் வரும் என்பதாம். வர, தூங்கல் ஓசை சிறக்கும் என்பது கருத்து.

3.4 தொகுப்புரை

இனிய மாணாக்கர்களே! இங்கு நாம் இப்பாடத்தில் கற்ற செய்திகளைத் தொகுத்துக் காண்போம்.

எழுத்துக்கு அடுத்தபடியாக அசையும், அசையினால் உருவாகும் சீரும் செய்யுளின் இரண்டாவது உறுப்பும் மூன்றாவது உறுப்பும் ஆகும்.

அசை என்பதன் பொருள் இயங்கு. எழுத்து, ஒன்றும் பலவுமாக இயங்கி ஒலித்து வரையறுத்ததோர் ஓசையைக் கொள்வதால் அசை எனப்படுகின்றது.

அசை இருவகைப்படும், நேரசை, நிரையசையென. நேரசை அமையும் வகை நான்கு. நிரையசை அமையும் வகையும் நான்கு.

நேரசைக்கு ஓர் அலகு; நிரையசைக்கு ஈரலகு. அலகிடும் போது அரைமாத்திரை அளவினதாகிய மெய், கணக்கில் கொள்ளப்படுவதில்லை. எனினும் மெய் அசையெல்லையாகும் இடத்தைப் பெறுகின்றது.

சீர், அசையின் எண்ணிக்கையைக் கொண்டு ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் எனப்பெயர் பெறுகின்றது.

ஓரசைச்சீர் இரண்டு என்பது பெருவழக்கு. ஈரசைச்சீர் நான்கு; மூவசைச்சீர் எட்டு. நாலசைச்சீர் பதினாறு. ஆக, சீர் மொத்தம் முப்பது.

ஓரசைச்சீர், அசைச்சீர் எனப்படும்.

ஈரசைச்சீர், இயற்சீர் எனப்பெறும். இஃது அகவல்சீர் என்ற பெயரும் உடையது. இதன் வாய்பாடு கருதி மாச்சீர், விளச்சீர் என இதனைப் பகுப்பதும் உண்டு. அகவற்பாவுக்கே பெரிதும் உரிமையாதல் பற்றி அகவற்சீர் எனப்பெறும்.

மூவசைச்சீர் எட்டனையும் வாய்பாடு கருதி நான்கு காய்ச்சீர்; நான்கு கனிச்சீர் என்று பகுப்பர். காய்ச்சீர் வெண்பாவுக்கே உரிமையாதல் கருதி வெண்சீர் – வெண்பா உரிச்சீர் – வெள்ளையுரிச்சீர் என்ற பெயர்களைப் பெறும்.

கனி என்னும் இறுதிச் சொல்லில் முடியும் மூவசைச்சீர்கள் நான்கும் கனிச்சீர். இது, வஞ்சிப்பாவுக்கே உரியது. ஆதலால், வஞ்சியுரிச்சீர் என்ற பெயரைப் பெறும்.

நாலசைச்சீர், மொத்தம் பதினாறு. இது, பொதுச்சீர் எனப்பெறும். இப்பெயர் பெற்றமைக்குக் காரணம் சீர்கள் பிறவற்றைப் போல அத்துணைச்சிறப்பு இதற்கு இல்லாமையே எனலாம். இது பூச்சீர், நிழல்சீர் என இருவகைப்படும்.

பூச்சீர்களைக் காய்ச்சீர் போல் கருதித் தளை காண வேண்டும்; நிழல் சீர்களைக் கனிச்சீர்களைப் போலக் கருதித் தளை காணல் வேண்டும்.

அசைச்சீர், வெண்பாவின் இறுதியில் பெரும்பான்மை வரும்; பொதுச்சீர் என்னும் நாலசைச்சீர் வஞ்சிப் பாவில்தான் பெரிதும் பயிலும்.

பாடம் - 4

தளை வகைகள்

4.0 பாட முன்னுரை

இனிய மாணாக்கர்களே! முந்தைய பாடங்களில் செய்யுள் உறுப்புகள் ஆறனுள் முதல் மூன்று உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர் என்பவற்றைப் பற்றிப் படித்தீர்கள். இந்தப் பாடத்தில் நான்காம் உறுப்பாகிய தளையைப் பற்றிப் படிக்க இருக்கின்றீர்கள்.

`வட்டம்’ என்பது ஒருசொல், `செயலர்’ என்பது ஒரு சொல். இவ்விரு சொல்லும் தொடரும்போது `வட்டம் செயலர்’ என்று தான் வரல் வேண்டும். `வட்டம்’ என்பதன் ஈற்றிலமைந்த `ம்’ என்ற மெல்லெழுத்தை ஒலிக்க முயற்சி எடுத்துக்கொண்ட நாவாலும், உதடுகளாலும் உடனடியாகச் ’செயலர்’ என்பதன் முதலில் அமைந்த `ச்’ என்ற வல்லெழுத்தை உச்சரிக்க முடியவில்லை. ஆதலால், நாக்கு `வட்டம்’ என்பதன் இறுதியிலுள்ள `ம்’ என்ற ஒலியைக் கெடுக்கின்றது. ஒலிப்பதில் எளிமை வேண்டிக் கெடுத்த இடத்தில் `ம்’-க்கு மாறாக `ச்’ என்ற ஒலியை இட்டுக் கொள்கின்றது; `வட்டச் செயலர்’ என எளிமையாக ஒலிக்கின்றது. இச்செய்கையை எழுத்திலக்கணம் `புணர்ச்சி’ என்கின்றது; புணர்ச்சியின்போது நிகழும் மாற்றங்களைத் தோன்றல் – திரிதல் – கெடுதல் ஆகிய `திரிபு’ என்கின்றது; யாதொரு திரிபும் இல்லையெனின் `இயல்பு புணர்ச்சி’ என்கின்றது. சுருங்கச் சொன்னால், நிலைமொழியின் ஈற்றெழுத்தொடு வருமொழியின் முதலெழுத்து இயல்பு அல்லது திரிபு வகையில் இயைவது புணர்ச்சி எனலாம் போலத் தோன்றுகின்றது. இதுபோலவே, நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் தம்முள் யாதோ ஒரு வகையில் கட்டுப்படுவது, தளை எனப்படுகிறது. ஒருவனும் ஒருத்தியும் திருமணம் என்னும் நிகழ்வால் கட்டுறுகின்றனர். கட்டுறுவதைக் குழூஉக்குறி போலக் “`கால்கட்டு’ப் போட்டுவிட்டேன் அவனுக்கு’’ – எனும் பெரியோரைக் காண்கின்றோமே!

கட்டு, பந்தம், பிணைப்பு, தொடக்கு, தளை என்பன ஒரு பொருளை உணர்த்தி வரும் சொற்கள். உழவர்களிடம் இத்`தளை’ என்னும் சொல்லாட்சி மிகுதியாகவே உள்ளது. அவர்கள் கற்றையாகக் கட்டப்பட்ட நாற்று முடிச்சையும் `தளை’ என்பர். தளையளவு (ஒரு கட்டு) நாற்றினை நட்ட வயல்பரப்பையும் `தளை’ என்பர். இனி, யாப்பிலக்கணத்தார் கூறும் தளை குறித்த செய்திகளைப் பார்ப்போம்.

4.1 தளை

`தளைதல்’ என்பது தொழிற்பெயர். இதன் முதனிலை அல்லது பகுதி `தளை’ ஆகும். இதன் பொருள் கட்டுதல், பிணைத்தல், யாத்தல் என்பனவாம். இதனை முன்னரும் பார்த்தோம்.

யாதானும் நாடாமால்

என்னும் போது எழும் இசைக்கோலம் (Rhythm) அல்லது ஒலிநடை வேறு.

செல்வப்போர்க் கதக்கண்ணன்

என்னும் போது தோன்றும் இசைக்கோலம் அல்லது ஒலிநடை அல்லது ஒலிலயம் வேறு. வேறுபட்ட ஒலிநடையைத் தோற்றுவதற்குக் காரணமாக அமைபவை எவை? முன்னர் நின்ற சீரும், நின்ற சீரை அடுத்துத் தொடர்ந்து வந்த சீரும்தாம். சொல்லப்போனால், சிறப்பாக இந்த இசைவேறுபாட்டினை ஏற்படுத்துவன நின்ற சீரின் ஈற்றசையும் வந்த சீரின் முதலசையுமே என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவேதான் யாப்பிலக்கணம், நின்றசீரின் ஈற்றசையோடு வந்த சீரின் முதல் அசை தளைந்து நிற்க இரண்டு சீர்களால் உருவாவதே தளை என்கின்றது.

சீர் இரண்டு – தட்டு நிற்றலின் தளையே

என்பது பழம்பாடல் அடி. தட்டு – தளைந்து.

மக்கள் அவர்பொருள் (குறள். 63)

இதன்கண் `மக்கள்’ என்பது நின்ற சீர். `அவர்பொருள்’ என்பது வந்த சீர். இவற்றின் ஈற்றசையும் முதலசையும் இணைகின்றன. இணையும்போது `மக்கள்’ என்ற நின்றசீர், நிரையசையை முதலாக உடைய `அவர் பொருள்’ என்னும் வரும் சீரை அவாவுகின்றது.

நன் மக்கள் பேறு (குறள். 60)

`மக்கள்’ என்பது `நன்மக்கள்’ என்றவாறு மேலும் ஓர் அசையைப் பெற்று மூவசைச்சீராக அமையுமாயின், செப்பலோசையை (வெண்பாவுக்குரிய ஓசை) உண்டுபண்ண, நேரசையை முதலாக உடைய சீரை அவாவுகின்றது (பேறு).

`நன்மக்கள்’ என்னும் இதுவே துள்ளல் ஓசையை (கலிப்பாவுக்குரிய ஓசை) உண்டாக்க நிரையசையை முதலில் பெற்ற மேலுமொரு மூவசைச்சீரை வேண்டுகின்றது / அவாவுகின்றது.

(எ-கா) `நன்மக்கள் அவாவினார்கள்’

இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வன யாவை? ஒன்று, சீர் இரண்டு குறிப்பிட்ட ஒலி ஒழுக்கில் ஒன்றை ஒன்று அவாவும் என்பது; மற்றொன்று, தளை உருவாக்கத்தில் நின்ற சீரின் ஈற்றசைக்கும் வந்த சீரின் முதலசைக்கும் பெரும்பங்கு உண்டு என்பது; பிறிதொன்று, ஓசையை உண்டாக்குவதில் சீர் ஒன்றில் அமைந்திருக்கும் அசைகளின் எண்ணிக்கையும் பங்கு வகிக்கின்றது என்பது.

(1)     (2)     (3)     (4)

`அகர     முதல     எழுத்தெல்லாம்     ஆதி

(5)     (6)     (7)

பகவன்     முதற்றே     உலகு’

இதனில் `அகரம்’ என்பது நின்ற சீர். நின்ற சீர் என்னும் பெயர், வந்த சீரை நோக்கி வைத்தது ஆகும். ’முதல’ என்பது வந்த சீர். `எழுத்தெல்லாம்’ என்னும் வரும் சீரை நோக்க `முதல’ என்பது நின்ற சீர். ஆதி என்னும் வருஞ்சீரை நோக்க `எழுத்தெல்லாம்’ என்பது நின்ற சீர். `பகவன்’ என்னும் வரும் சீரை நோக்க, `ஆதி’ என்பது நின்ற சீர். பகவன் வந்த சீர். `முதற்றே’ என்ற வருஞ்சீரை நோக்கப் `பகவன்’ என்பது நின்ற சீர். `உலகு’ என்னும் வருஞ்சீரை நோக்க `முதற்றே’ என்பது நின்ற சீர். `உலகு’ என்பதனின் மேல் ஒரு சீர் இல்லாமையால் `உலகு’ என்பது நின்ற சீராகவில்லை. இவ்வாறே, `அகரம்’ என்பதன் முன் ஒரு சீர் இல்லாததால் அது வரும் சீராகவில்லை; நின்ற சீராகவே அமைகின்றது.

ஆக, ஒரு பாடலின் முதல் சீரும் இறுதிச்சீரும் தவிர மற்ற இடைநின்ற எல்லாச் சீர்களும் ஒருகால் நின்ற சீராகவும் ஒருகால் வந்த சீராகவும் கருதப்படத்தக்கவை என்பதும், இவ்வாறு கருதியே தளை காணப்பட வேண்டும் என்பதும், இதனால் தெரிய வருகின்றன.

இந்தப் பார்வையில், தளை என்பது, சீர்களின் தொடர் இயக்கத்தில் நின்ற சீர் என்றதன் ஈற்றசையும், வந்த சீர் என்றதன் முதலசையும் தளைந்து நிற்பது தளை என்ற விளக்கத்தைப் பெறமுடியும்.

உலகம் யாவையும்

இதனைப் பாருங்கள். இது, கம்பராமாயணக் கடவுள் வணக்கப் பாடல் தொடர். இதில் உலகம் என்பது நின்ற சீர். யாவையும் என்பது வந்த சீர்.

(அ)

நின்ற சீர்                                                           வந்த சீர்

உ ல                 க ம்                                           யா            வை யு ம்

கு கு                கு ஒ                                           நெ            கு கு ஒ

இணைக்குறில்   தனிக்குறில் ஒற்று                  தனி நெடில்       இணைக்குறில் ஒற்று

நிரை                நேர்                                       நேர்                   நிரை

புளிமா (வாய்பாடு)                                         கூவிளம் (வாய்பாடு)

நேர் முன் நேர்

நின்ற சீரின் ஈற்றசையும் நேர் ; வந்த சீரின் முதலசையும் நேர். `நேர் முன் நேர்’ என ஒன்றுபட்டு (ஒன்றி) வருகின்றன. ஒன்றுதல் – பொருந்துதல்.

(ஆ)

(ஆ)

நின்ற சீர்                                                           வந்த சீர்

செல்வப்போர்க்                                                 கதக்கண்ணன்

செ ல்         வ ப்              போ ர் க்                         க த க்        க ண்          ண ன்

கு ஒ            கு ஒ              நெ ஒ ஒ                        கு கு ஒ       கு ஒ           கு ஒ

தனிக்             தனிக்            தனி            இணைக்   தனிக்       தனிக்

குறில்            குறில்           நெடில்                             குறில்         குறில்      குறில்

ஒற்று             ஒற்று            ஈரொற்று                       ஒற்று           ஒற்று         ஒற்று

நேர்             நேர்              நேர்            நிரை           நேர்           நேர்

தேமாங்காய் (வாய்பாடு)                                              புளிமாங்காய்

இதில் நின்ற சீரின் ஈற்றசை நேர்; வந்த சீரின் முதலசை நிரை. `நேர் முன் நிரை’ என வேறுபட்டு (ஒன்றாது) வருகின்றது.

இவ்வாறு ஒன்றியும் ஒன்றாதும் வருவதைக் கருதி, முன்னர்த் தளை என்பதற்கு அளித்த விளக்கத்துடன், `தளை என்பது சீர்களின் தொடர் இயக்கத்தில் நின்ற சீர் என்றதன் ஈற்றசையும், வந்த சீர் என்றதன் முதலசையும் ஒன்றியும் ஒன்றாதும் தளைந்து (பிணைந்து) நிற்பது தளை’ என்று கூறலாம் போலத் தோன்றுகிறது. மேலும், தளையை `ஒன்று தளை’ `ஒன்றாத் தளை’ என்று இருவகையாகவும் பகுக்கலாம் போலவும் தோன்றுகிறது அல்லவா? தோன்றவேதான், இலக்கண விளக்க ஆசிரியர் அமிதசாகரரை விடத் தெளிவாக,

தன்சீர் தனதோடு ஒன்றலும் உறழ்தலும்

என்றுஇரண்டு ஆகும் இயம்பிய தளையே

எனக் குறிப்பிட்டுள்ளார்.

4.1.1 எழுவகைத் தளைகள் இனிய மாணாக்கர்களே! நாம் ஒன்றிய தளை, ஒன்றாத தளை என்னும் வகைப்பாட்டில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய தளைகளைப் பற்றி, இனிப் படிப்போம்.

நால்வகைப் பாக்களுக்கும் உரிய தளைகள் மொத்தம் ஏழு. அவையாவன:

1. நேரொன்று ஆசிரியத்தளை [மா முன் நேர்]

2. நிரையொன்று ஆசிரியத்தளை [விளம் முன் நிரை]

3. இயற்சீர் வெண்தளை [மா முன் நிரை; விளம் முன் நேர்]

4. வெண்சீர் வெண்தளை [காய் முன் நேர்]

5. கலித்தளை [காய் முன் நிரை]

6. ஒன்றிய வஞ்சித்தளை [கனி முன் நிரை]

7. ஒன்றாத வஞ்சித்தளை [கனி முன் நேர்]

4.1.2 தளைகள் – பெயர்க்காரணம் இந்த ஏழுவகைத் தளைகளும் இந்த இந்தப் பெயர்களைப் பெறக் காரணம் என்ன? காரணங்களைத் தெரிந்து கொள்வது நல்லது. தெரிவதற்கு முன்னால், நாம், சீர்களின் பெயர்களை முன் பாடத்தில் படித்தோம் அல்லவா? அவற்றை நினைவுகூர்தல் மிக நல்லதாகும். உரிய சொல் என்பது `உரிச்சொல்’ என்று மருவி வரும் என்பதையும், ஆசிரியப்பாவுக்கு உரிய சீர் `ஆசிரிய உரிச்சீர்’ என்றும், இயற்சீர் என்றும் வழங்கப்படும் என்பதையும், வெண்பாவுக்குரிய சீர் வெண்சீர் என்றும் வெண்பாச்சீர், வெள்ளை உரிச்சீர் என்றும் வழங்கப்பெறும் என்பதையும், வஞ்சிப்பாவுக்குரிய சீர் வஞ்சியுரிச்சீர் என்று வழங்கப்படும் என்பதையும், கலிப்பாவிற்கு என்று தனிவகைச்சீர் இல்லை; வெண்சீரே அதற்குச் சீர் என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். ஏனெனில், யாப்பிலக்கண நூலார் இந்தச் சீர்களை வைத்துக்கொண்டே தளைகளுக்குப் பெயரிடுகிறார்கள் என்பதற்காகவே ஆகும்.

இயற்சீராகிய ஆசிரிய உரிச்சீர் நின்று அகவலோசையை உண்டாக்க வரும் சீருடன் பந்தப்படுவதால் ஆசிரியத்தளை;

இயற்சீராகிய ஆசிரிய உரிச்சீர் நின்று வெண்பாவுக்குரிய செப்பலோசையை உண்டாக்க வருஞ்சீருடன் கட்டுண்ணுதலால் இயற்சீர் வெண்தளை;

வெள்ளையுரிச்சீராகிய வெண்சீர் நின்று வெண்பாவுக்குரிய செப்பலோசையை உண்டுபண்ண வருஞ்சீருடன் தொடக்குறுதலால் வெண்சீர் வெண்தளை;

வஞ்சியுரிச்சீர் நின்று வஞ்சிப்பாவுக்குரிய தூங்கலோசையை உண்டாக்க வருஞ்சீருடன் தொடர்புறுதலால் வஞ்சித்தளை;

வெண்பாவுரிச்சீராகிய வெண்சீர் நின்று கலிப்பாவுக்குரிய துள்ளலோசையை எழுப்புவிக்க ஏற்ற வருஞ்சீருடன் பிணைப்புறுதலால் கலித்தளை (கலி – துள்ளல்)

என்று நால்வகைப் பாவுக்குரிய தளைகள் பெயர் பெறுகின்றன.

4.1.3 தளைகள் : பகுப்பும், அடங்கும் தளையும் தளைகள் ஏழும் ஒன்றிய தளை ஒன்றாத்தளை என்ற இரண்டு பகுப்புகளுக்குள் அடங்குகின்றன. `ஒன்றிய தளை’ என்னும் பகுப்புக்குள் அடங்கும் தளைகள் நான்கு. அவை:

1. நேரொன்றாசிரியத்தளை

2. நிரையொன்றாசிரியத்தளை

3. வெண்சீர் வெண்தளை

4. ஒன்றிய வஞ்சித்தளை

ஒன்றாத தளை என்னும் இரண்டாம் பகுப்பில் அடங்குவன மூன்று தளைகள். அவை:

1. இயற்சீர் வெண்தளை

2. கலித்தளை

3. ஒன்றாத வஞ்சித்தளை

4.2 ஒன்றிய தளைகள்

எந்தச்சீர் நிலைச்சீராக நிற்கின்றதோ அந்தச்சீரின் ஈற்றசையே வந்த சீரின் முதலசையாக அமையுமானால் அவ்வகைத் தளைகளுக்கு ஒன்றிய தளைகள் என்று பெயர் – இது, பொது விதி.

இங்கு, எந்தச்சீர் என்றது இயற்சீர் அகவல் சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர் என்பவற்றையாகும்; வந்த சீரின் முதலசை என்றது நேர் அல்லது நிரையை ஆகும்.

இயற்சீர் அல்லது ஆசிரியவுரிச்சீரை வாய்பாட்டு வகையில் சொல்வதென்றால், `மாச்சீர்’ என்றும், `விளச்சீர்’ என்றும் குறிப்பிடல் வேண்டும். மாச்சீரும் விளச்சீரும் ஈரசைச்சீரின.

வெண்சீர் அல்லது வெள்ளையுரிச்சீர் என்பது வாய்பாட்டு வகையில் `காய்ச்சீர்’ எனப்பெறும். காய்ச்சீர் என்றாலே, அது நேரசையை இறுதியாகக் கொண்ட மூவசைச்சீர் நான்கு என்பதை நாம் அறிவோம்.

வஞ்சியுரிச்சீர் என்பதை வாய்பாட்டு வகையில் `கனிச்சீர்’ என்று வழங்குவர். கனிச்சீர் என்றாலே, அது நிரையசையை இறுதியில் கொண்ட மூவசைச்சீரைத்தாம் என்பதும், அது நான்கு என்பதும் நாம் அறிந்தவை தாம்.

4.2.1 நேர் ஒன்றாசிரியத்தளை நேர் ஒன்று ஆசிரியத்தளை என்பதில் ஒன்று என்பது பொருந்து எனப் பொருள்படும்.

`காமர் சேவடி’ – இது குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது. இச்சீர்கள் இடம்பெற்ற பாட்டு, ஆசிரியப்பாவாம்.

நின்ற சீர் வந்த சீர்

காமர் சேவடி

கா ம ர் சே வ டி

நெ கு ஒ நெ கு கு

தனிநெடில் தனிக்குறில் ஒற்று தனி நெடில் இணைக்குறில்

நேர் நேர் நேர் நிரை

தேமா (வாய்பாடு) கூவிளம் (வாய்பாடு)

நேர் முன் நேர்

நேர் ஒன்றாசிரியத் தளை

நின்ற சீர் ஆசிரிய உரிச்சீர், வந்த சீரின் முதலசை நேர்அசை.

நேர் முன் நேர் நேர் ஒன்றாசிரியத்தளை. நின்ற சீரின் பெயரால் ஆசிரியத்தளை எனப்படுகின்றது; ஒன்றிய அசைகளின் பெயரால் விதந்து நேரொன்றாசிரியத்தளை எனப்படுகின்றது.

4.2.2. நிரை ஒன்றாசிரியத்தளை தாமரை புரையும்

இதுவும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் இடம் பெறுவதே. ஆசிரியப்பாவின் முதலிரண்டு சீர்கள் இவை. `தாமரை’ – நின்ற சீர்; `புரையும்` வந்த சீர். இவ்விரண்டு சீர்களுக்கும் இடையே அமைந்த பந்தத்தைக் காண்போம்.

நின்ற சீர் வந்த சீர்

தாமரை புரையும்

தா ம ரை பு ரை யு ம்

நெ கு கு கு கு கு ஒ

தனிநெடில் இணைக்குறில் இணைக்குறில் தனிக்குறில் ஒற்று

நேர் நிரை நிரை நேர்

கூவிளம் (வாய்பாடு) புளிமா (வாய்பாடு)

நிரை முன் நிரை

நிரையொன்றாசிரியத் தளை

நின்ற சீர் ஆசிரிய உரிச்சீர்

நின்ற சீரின் இறுதி அசை நிரையசை

வந்த சீர் புரையும்

வந்த சீரின் முதல் அசை நிரையசை

நிரை முன் நிரை யென ஒன்றுகின்றது. ஆசிரிய உரிச்சீர் ஆகிய விளச்சீர் நின்று தன் இறுதியசையாகிய நிரையையே வரும் சீரின் முதலசையாகக் கொண்டு ஒன்றுகின்றது. எனவே, நிரையொன்றாசிரியத் தளை. ஆக நின்ற சீரின் பெயரால் ஆசிரியத்தளை எனப் பெறுகின்றது; ஒன்றிய அசைகளின் பெயரால் `நிரையொன்று’ என்னும் விதப்பினைப் பெற்று நிரையொன்றாசிரியத்தளை எனப்படுகின்றது.

4.2.3 வெண்சீர் வெண்டளையாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு

இது குறள் வெண்பா.

நின்ற சீர் வந்த சீர்

யாதானும் நாடாமால்

யா தா னு ம் நா டா மா ல்

நெ நெ கு ஒ நெ நெ நெ ஒ

தனி நெடில் தனி நெடில் தனிக்குறில் ஒற்று தனி நெடில் தனி நெடில் தனி நெடில் ஒற்று

நேர் நேர் நேர் நேர் நேர் நேர்

தேமாங்காய் (வாய்பாடு) தேமாங்காய் (வாய்பாடு)

காய் முன் நேர்

வெண்சீர் வெண்தளை

நின்ற சீர் யாதானும்; யாதானும் என்பது மூவசைச்சீர். மூவசைச்சீரில் `காய்’ என்னும் வாய்பாட்டை இறுதியில் கொண்ட சீர். `காய்’ எனும் வாய்பாட்டை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு. இந்நான்கும் வெண்சீர் எனப்படும். எனவே, இங்கு நின்ற சீர் வெண்சீர் என்பது தெளிவு.

வெண்தளை என்பது வெண்பாவிற்குரிய தளையாகும். இங்கு வெண்தளையை உருவாக்கிய சீர் எது? வெண்சீர் தானே? எனவே, அது தோன்ற (உருவாக்கியமை தோன்ற) வெண்சீர் வெண்தளை எனப்படுகின்றது.

காய் என்னும் வாய்பாட்டையுடைய மூவசைச்சீரின் நேரசை, தன் முன் நேர் அசை வர ஒன்றி வெண்சீர் வெண்டளை ஆகின்றது. காய் முன் நேர்- வெண்சீர் வெண்டளை.

4.2.4 ஒன்றிய வஞ்சித்தளை மந்தா நிலம் வந்தசைப்ப

வெண்சாமரை புடைபெயர்தரச்

செந்தாமரை தாள்மலர்மிசை

எனவாங்கு

இனிதிருந் தோங்கிய இறைவனை

மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே

இது குறளடி வஞ்சிப்பா என்னும் வகையினது. மொத்தத்தில் வஞ்சிப்பாட்டு. நாம், ஒரு சோற்றுப்பதமாக இப்பாட்டில் வரும், வெண்சாமரை புடைபெயர்தர என வரும் ஓரடியைக் கொள்வோம்; தளை காண்போம்.

நின்ற சீர் வந்த சீர்

வெண்சாமரை புடைபெயர்தரச்

வெ ண் சா ம ரை பு டை பெ ய ர் த ர ச்

கு ஒ நெ கு கு கு கு கு கு ஒ கு கு ஒ

தனிக் குறில் ஒற்று தனி நெடில் இணைக் குறில் இணைக் குறில் இணைக் குறில் ஒற்று இணைக் குறில் ஒற்று

நேர் நேர்

நிரை நிரை

நிரை நிரை

தேமாங்கனி (வாய்பாடு) கருவிளங்கனி (வாய்பாடு)

கனி முன் நிரை

ஒன்றிய வஞ்சித்தளை

எந்தச் சீர் நின்ற சீராக நிற்கின்றதோ அந்தச் சீரின் ஈற்றசையே வந்த சீரின் முதலசையாக அமையுமானால் அவ்வகைத் தளைகள் ஒன்றிய தளைகள் என்று பெயர்பெறும் என்றும், பாவில் எவ்வகைப்பாவுக்கு எந்தச்சீர் உரிமை பெற்றுள்ளதோ அந்த உரிமைச்சீரின் பெயரே தளைக்கும் பெயராம் என்றும் படித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்த விளக்கம் பொருந்த மேல் அலகிட்டதனைப் பார்ப்போம்.

நின்ற சீர், `வெண் சாமரை’ என்பது. இது, மூவசைச்சீர், கனி என்னும் வாய்பாட்டுச் சொல்லில் முடிவது; வஞ்சியுரிச்சீர். கனி என்னும் வாய்பாடு கொண்ட இந்த நிரையீற்று மூவசை வஞ்சி உரிச்சீர், வரும் சீரின் முதலசையொடு (நிரை) ஒன்றுகின்றது.

இனிய மாணாக்கர்களே! இங்கு நின்ற சீர் எது? வஞ்சியுரிச்சீர். எனவே, அது, உண்டாக்கும் தளை, வஞ்சித்தளையாம். வஞ்சியுரிச்சீர் என்ற நின்ற சீரின் ஈற்றசை எது? நிரையசை. வந்த சீரின் முதலசை எது? நிரையசை. எனவே, நிரையொடு நிரையெனப் பொருந்தி – ஒன்றி வருகின்றன அல்லவா? ஆம் எனின், நிரை ஒன்றிய தளை எனலாம். நிரை யொன்றிய தளைகள் பிறவும் உள. இது, வஞ்சித்தளையுள் நிரை ஒன்றியது. ஆதலால், இவையெல்லாம் விளங்க, நிரையொன்றிய வஞ்சித்தளை என்று சொல்ல வேண்டியவர்கள் சுருக்கம் கருதி ஒன்றிய வஞ்சித்தளை என்றனர். ஒன்றிய வஞ்சித்தளை எனவே ஒன்றாத வஞ்சித்தளை என்று ஒன்று இருப்பது இனங்குறித்தல் அல்லது அருத்தாபத்தி வகையில் உணர முடிகின்றது.

இதற்கு முந்திய பாடத்தில் வெண்பா பற்றிய செய்திகளைக் கற்றீர்கள். இப்பாடத்தில் இரண்டாவதாக உள்ள ஆசிரியப்பா பற்றியும், நான்காவதாக உள்ள வஞ்சிப்பா பற்றியும் அறியவுள்ளீர்கள். மூன்றாவதாக உள்ள கலிப்பா பற்றிய செய்திகள் விரிவாக உள்ளதால் அதனை அடுத்த பாடத்தில் பயிலலாம். நிரல் முறையில் (வரிசை முறை) செய்யப்பெற்றுள்ள இம்மாற்றம் பாடங்களின் அளவு மிக நீளாமல் அமையவே என்பதை மனம் கொள்க. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்படுகிறது.

4.3 ஒன்றாத தளைகள்

முன்பு, எந்தச்சீர் (இயற்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர்) நிலைச்சீராக நிற்கின்றதோ அந்தச் சீர்க்குரிய பாக்களின் பெயரையே தளைக்கும் பெயராக வைத்துள்ளனர் என்றும், எந்தச் சீர் நிலைச்சீராக நிற்கின்றதோ அந்தச் சீரின் ஈற்றசையே வந்த சீரின் முதலசையாக அமையுமானால் அவ்வகைத் தளைகளை ஒன்றிய தளைகள் என்றனர் என்றும் படித்தோம். இப்போது இங்கு, நின்ற சீரின் ஈற்றசையோடு வரும் சீரின் முதலசை ஒன்றாமையால் உண்டாகும் தளைகளைக் காண்போம். இவை, ஒன்றாத தளைகள் எனப்படுகின்றன.

ஒன்றாமையாவது, நின்ற சீரின் ஈற்றசை `நேர்’ அசையானால் வந்த சீரின் முதலசை நிரையாவது; நின்ற சீரின் ஈற்றசை `நிரையசை’ ஆனால் வந்த சீரின் முதலசை நேர் ஆவது ஆகும்.

ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்பன தம் பொருளைத் தாமே உணர்த்தும் இலக்கணம் உடைய சொற்களாம். முன் சொன்ன ஒன்றாத தளைகள் மூன்றனுள் இயற்சீர் வெண்தளையும் கலித்தளையும் ஆகிய இரண்டும் ஒன்றாமையாகிய தன் இலக்கணத்தைக் காட்டுவதில்லை என்பது கவனிக்கத்தகுவது. இனி ஒன்றாத தளைகள் மூன்றனைக் காண்போம்.

ஒன்றாத தளைகளுள் ஒன்றாக இயற்சீர் வெண்டளையை இனம் பற்றிக் கொண்டாலும், இத்தளை இரண்டு வகையாக வருவதைக் காண்கின்றோம். மாமுன் நிரையும் இயற்சீர் வெண்டளை ; விளமுன் நேரும் இயற்சீர் வெண்டளை. இவ்வகையில், ஒன்றாத தளைகளும் நான்கு எனக் கருதத் தோன்றுகின்றது.

4.3.1 இயற்சீர் வெண்தளை ஒன்றாத தளைகளுள் ஒன்று, வெண்பாவுக்குரிய தளைகளுள் ஒரு வகை. வெண்பாவுக்கு உரிமையும், இயற்சீரினால் உருவாவது என்பதும் தோன்ற இயற்சீர் வெண்டளை எனப் பெறுவது. இயற்சீர் வெண்டளை என்ற பெயரே அதனுடைய இலக்கணத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது. மா முன் நிரை என்று நிற்பதால் வருவது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

இது குறள் வெண்பா. இதனுள் `பிறவி’ என்பது நின்ற சீர்; `பெருங்கடல்’ என்பது வந்த சீர்.

`நீந்துவர்’ என்பதை நோக்கப் `பெருங்கடல்’ என்பது நின்ற சீர்; நீந்துவர் என்பது வந்த சீர். இக்கருத்து முன்னமும் கூறப்பட்டது. நினைந்து பாருங்கள்.

நின்ற சீர்                                                      வந்த சீர்

பிறவிப்                                                           பெருங்கடல்

பி ற     வி ப்                                                              பெ ரு ங்     க ட ல்

கு கு     கு ஒ                                                          கு கு ஒ     கு கு ஒ

இணைக்குறில்     தனிக்குறில் ஒற்று     இணைக்குறில் ஒற்று     இணைக்குறில் ஒற்று

நிரை     நேர்                                                                                     நிரை     நிரை

புளிமா (வாய்பாடு)                                                        கருவிளம் (வாய்பாடு)

மா முன் நிரை

இயற்சீர் வெண்டளை

நின்ற சீர் `பிறவி’ என்பது. இது, இயற்சீர்; இயற்சீரில் `மா’ எனும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியிற் கொண்ட ஈரசைச்சீர். இம்மாச்சீரின் முன் நேர் அசையை முதலாகவுடைய சீர் வந்திருந்தால் ஒன்றுவதாய் இருந்திருக்கும். அவ்வாறு வரவில்லை. மாறாக, நிரையசையை முதலாகவுடைய சீரே வந்துள்ளது. அதாவது, ஒன்றாத சீரே வந்துள்ளது. மா(நேர்) முன் நிரை யென. எனவே, ஒன்றாத தளை.

வெண்பாவுக்குரிய தளை வெண்டளை எனப்படும். ஆதலால், இங்கு வந்தது வெண்டளை. அதுவும் இயற்சீரால் வந்த வெண்டளை. ஆகவே, இது இயற்சீர் வெண்டளை எனப்படுகின்றது. மா(நேர்) – முன் – நிரை, இயற்சீர் வெண்டளை.

நின்ற சீர்                                                                                                      வந்த சீர்

பெருங்கடல்                                                                                                நீந்துவர்

பெ ரு ங்     க ட ல்                                                          நீ ந்     து வ ர்

கு கு ஒ     கு கு ஒ                                                            நெ ஒ     கு கு ஒ

இணைக்குறில் ஒற்று     இணைக்குறில் ஒற்று     தனிநெடில் ஒற்று     இணைக்குறில் ஒற்று

நிரை     நிரை     நேர்     நிரை

கருவிளம் (வாய்பாடு)     கூவிளம் (வாய்பாடு)

விளம் முன் நேர்

இயற்சீர் வெண்டளை

நின்ற சீர் பெருங்கடல். இது, இயற்சீர். விளம் என்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் கொண்ட ஈரசைச்சீர். இந்த விள ஈற்று இயற்சீரின் முன்னர் நேரசையை முதலசையாகக் கொண்ட வரும் சீர், தளைந்துள்ளது. விளம் முன் நேர் வந்து இயற்சீர் வெண்டளை தோன்றியது.

4.3.2 கலித்தளை வெண்பாவுக்குரிமையுடைய சீர் நான்கு. அவை, `காய்’ என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் கொண்ட மூவசைச்சீர்களாம்.

தேமாங்காய்

புளிமாங்காய்

கருவிளங்காய்

கூவிளங்காய்

என்பன அவை. வெண்பாவுக்குரிய இவை கலிப்பாவுக்கும் உரியவாகின்றன.

வெண்பா உரிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசை நிரையசையாக அமையுமானால் கலித்தளை தோன்றும். அஃதாவது, காய் முன் நிரை வருவது கலித்தளையைத் தோற்றுவிப்பது என்பது பொருள். காய் முன் நிரை எனவே, ஒன்றாதது என்பது வெளிப்படை (காய் – நேர்).

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே

….. ….. ….. தமிழணங்கே.

நின்ற சீர்                                                                     வந்த சீர்

நீராருங்                                                                      கடலுடுத்த

நீ     ரா     ரு ங்                                                             க ட     லு டு த்     த

நெ     நெ     கு ஒ                                                             கு கு     கு கு ஒ     கு

தனிநெடில்     தனி நெடில்     தனிக் குறில் ஒற்று     இணைக் குறில்     இணைக் குறில் ஒற்று     தனிக் குறில்

நேர்                நேர்                       நேர்                                       நிரை                       நிரை                                       நேர்

தேமாங்காய் (வாய்பாடு)                                          கருவிளங்காய் (வாய்பாடு)

காய் முன் நிரை

கலித்தளை

இங்கு, நின்றசீர் `நீராரும்’ என்பது. இது மூவசைச்சீர். காய் என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் கொண்டுள்ள மூவசைச்சீர். காய் ஈற்று மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுக்குரிய சீர்கள். அஃதாவது வெள்ளையுரிச்சீர்கள் அல்லது வெண்சீர்கள். இவ்வகைச்சீர்கள் முன்னர் நேரசை முதலிய சீர் வந்திருக்குமாயின் வெண்சீர் வெண்டளையாகி ஒன்றிய தளையில் அடங்கியிருக்கும். அவ்வாறு ஒன்றாமல் நிரையசையை முதலாக உடைய சீர் வந்து பந்தப்பட்டதால் கலித்தளை தோன்றியது; ஒன்றாத தளைகளுள் ஒன்றாயிற்று.

4.3.3 ஒன்றாத வஞ்சித்தளை வஞ்சிப்பாவுக்கு உரிமையுற்ற சீர்கள் நான்கு. அவை, `கனி’யென்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் கொண்ட மூவசைச்சீர்களாம். இவற்றின் மூன்றாம் அசைகள் நிரையசையால் இறும் (முடியும்). அவை:

தேமாங்கனி

புளிமாங்கனி

கருவிளங்கனி

கூவிளங்கனி

என்னும் வாய்பாட்டின.

வஞ்சி உரிச்சீர் நின்று, வரும் சீர் முதலசை நேராக (நேரசையாக) அமையுமானால் ஒன்றாத வஞ்சித்தளை தோன்றும்.

மந்தாநிலம் வந்தசைப்ப

வெண்சாமரை புடைபெயர்தரச்

இவை வஞ்சிப்பா ஒன்றனது அடிகள். இதனுள் வரும் `மந்தாநிலம்’ என்பது நின்ற சீர்; `வந்தசைப்ப’ என்பது வந்த சீர் ஆகும்.

நின்ற சீர்                                                       வந்த சீர்

மந்தாநிலம்                                                   வந்தசைப்ப

ம ந்       தா  நி ல ம்                                          வ ந்   த சை ப்  ப

கு ஒ      நெ        கு கு ஒ                                     கு ஒ     கு கு ஒ      கு

தனிக் குறில் தனி      இணைக்                         தனிக் குறில்  இணைக்   தனிக் குறில்

ஒற்று        நெடில்  குறில் ஒற்று                       ஒற்று          ஒற்று

நேர்           நேர்         நிரை                              நேர்               நிரை           நேர்

தேமாங்கனி (வாய்பாடு)                                     கூவிளங்காய் (வாய்பாடு)

கனி முன் நேர்

ஒன்றாத வஞ்சித்தளை

இங்கு, நின்ற சீர் `மந்தா நிலம்’ என்பதாம். இது, மூவசைச்சீர், அதுவும் `கனி’ என்னும் வாய்பாட்டுச் சொல்லை இறுதியில் உடைய மூவசைச்சீர். கனி என்னும் வாய்பாட்டில் இறும் சீர்கள் நான்கும் வஞ்சியுரிச்சீர் என்பதை மேலே பார்த்தோம். இந்த நிரையசையை இறுதியில் கொண்ட கனி வாய்பாட்டுச் சீர்கள் முன் நிரையசையை முதலாகக் கொண்ட கனி வாய்பாட்டுச் சீர்கள் வரின் ஒன்றிய வஞ்சித்தளை தோன்றும் என்பதை முன்னர்ப் பார்த்தோம். அதுபோல ஒன்றி வராமல் வஞ்சியுரிச்சீர் முன், நேரசையை முதலில் கொண்ட சீர், ஒன்றாமல் வந்துள்ளது. ஒன்றாமல் கனிமுன் நேர் (நிரை முன் நேர்) என்று வருவது ஒன்றாத வஞ்சித் தளையாம்.

மேற்படித்த செய்திகள் எல்லாமும் சொல்லவந்த காரிகையைக் காண்போம், அது,

தன்சீர் தன(து) ஒன்றின் தன்தளை

யாம்;தண வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக்(கு)

உரித்து;வல் லோர் வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளை

யாய்விடும்; வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர்

விகற்பமும் ஒண்ணுதலே

என்பதாகும்

4.4 சீர்களும் அவை தோற்றுவிக்கும் தளைகளும்

முன்பு, நாம், சீர்கள் நான்கு வகைப்படும் என்றும், அவை ஓரசைச் சீராகிய அசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்றும் படித்தோம். இப்பெயர்கள் அசையின் எண்ணிக்கையைக் கருதி வைத்த பெயர்கள்.

இவை, வாய்பாடு கருதிப் பெறும் பெயர்கள் கீழ்வருவன:

அசைச்சீர் – நாள், மலர்

ஈரசைச்சீர் – மாச்சீர், விளச்சீர்

மூவசைச்சீர் – காய்ச்சீர், கனிச்சீர்

நாலசைச்சீர் – பூச்சீர், நிழல்சீர்

இவை செய்யுளில், அச்செய்யுளுக்குரிய ஓசையைத் தரும் உரிமை பற்றி எய்தும் பெயர்கள்.

மாச்சீர் விளச்சீர்         - இயற்சீர் / அகவல் சீர்

காய்ச்சீர்         - வெள்ளையுரிச்சீர் / வெண்சீர்

கனிச்சீர்         - வஞ்சியுரிச்சீர்

நாள், மலர் என்னும் வாய்பாட்டு ஓரசைச்சீர், வெண்பாவின் இறுதிச் சீராக வருவது. பூச்சீரும் நிழல் சீரும் அருகி வருவதனை முன்னே பார்த்துள்ளோம்.

இயற்சீரிலிருந்து பிறக்கின்ற தளைகள் நேர் ஒன்றாசிரியத்தளை, நிரையொன்று ஆசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை எனும் மூன்று தளைகள் ஆகும்.

காய்ச்சீராகிய வெண்சீரிலிருந்து பிறக்கின்ற தளை, வெண்சீர் வெண்டளை யாகும். மற்றுக் கலித்தளையும் ஆகும்.

கனிச்சீராகிய வஞ்சிச்சீரிலிருந்து பிறக்கின்ற தளைகள் இரண்டு. அவை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை.

இப்போது உங்களிடம் ஒரு வினா எழும். அது, அசைச்சீரும், பூச்சீரும், நிழல் சீரும் ஆகிய இவை மூன்றிலிருந்து தளைகள் பிறப்பதில்லையா? என்ற வினாவாகக் கூடும். இவ்வினாவுக்கு இனி விடை காண்போம்.

4.4.1 அசைச்சீர்க்குத் தளை காணல் ஓரசைச்சீர் பெரும்பான்மையும் பாட்டின் இடையில் வராது. ஒரு வேளை ஒரோ வழி வந்துவிட்டால் எவ்வாறு தளை காண்பது? அதற்கும் யாப்பிலக்கணத்தார் வழி வகுத்துள்ளனர். அமிதசாகரர்,

அசைச்சீர் இயற்சீர் ஒக்கும் ஒண்தளைக்கே

என்கின்றார். அசைச்சீரை இயற்சீராகக் கொண்டு தளை காணும் விதத்தைப் பார்ப்போம்.

உரிமை யின்கண் இன்மையால்

அரிமதர் மழைக் கண்ணாள்

செருமதி செய் தீமையால்

பெருமை கொன்ற என்பவே

இது `வஞ்சி விருத்தம்’ என்னும் பாவின வகையைச் சார்ந்த பாடல். இதன்கண் இடையில் `மழை’ என்னும் ஓரசைச்சீரும் `செய்’ என்னும் ஓரசைச்சீரும் பயில்கின்றன. இவ்விடங்களில் ஈரசைச்சீர்கள் வந்திருக்க வேண்டும். கவிஞன் கொள்ளவில்லை. கவிஞர்களுக்கு இவ்வாறு சலுகைகள் உண்டு.

நின்ற சீர்                                                                                              வந்த சீர்

மழைக்                                                                                           கண்ணாள்

ம ழை க்                                                                                            க ண் ணா ள்

கு               கு ஒ                                                                      கு ஒ                                                   நெ ஒ

இணைக்குறில் ஒற்று                                                                  தனிக்குறில் ஒற்று            தனிநெடில் ஒற்று

நிரை அசை                                                                                       நேர்                                 நேர்

விளம் (வாய்பாடு இல்லை)                                                                       தேமா (வாய்பாடு)

இயற்சீர் வெண்டளை

(இதற்கு மலர் என்ற வாய்பாடு தருதல் ஆகாது. வெண்பாவின் இறுதியில் வரவில்லை என்பதே காரணம். `அசைச்சீர் இயற்சீர் ஒக்கும்’, என்றதனால் விளச்சீராகக் கொள்ளல் வேண்டும்)

விளமுன் நேர் என வந்து இயற்சீர் வெண்டளை பிறக்கின்றது. இயற்சீராவது, ஒன்றாமையால்தான் என்பதை நினைக.

அடுத்த, அசைச்சீர் `செய்’ என்பது. செய் – நின்ற சீர்; தீமையால் வந்த சீர், இவற்றை அலகிடுவோம்.

நின்ற சீர்                                         வந்த சீர்

செய்                                        தீமையால்

செ ய்                                    தீ       மை        யா ல்

கு ஒ                                       நெ  குநெ ஒ

தனிக்குறில் ஒற்று              தனிநெடில்     குறில் நெடில் ஒற்று

நேர்                                  நேர்                         நிரை

மா (கொள்ள வேண்டிய வாய்பாடு)     கூவிளம் (வாய்பாடு)

மா முன் நேர் (நேர் முன் நேர் – ஒன்றுகின்றது)

நேரொன்றாசிரியத்தளை

`அசைச்சீர் இயற்சீர் ஒக்கும்’ என்ற விதியால், `செய்’ என வந்த நேர் அசைக்கு `மாச்சீர்’ வாய்பாடு தந்தோம். மா முன் நேர் என்ற வகையில் ஒன்றி வந்ததனால் நேரொன்றாசிரியத்தளை பிறந்ததாகக் கொள்கின்றோம்.

ஆக, ஓரசைச்சீரை இயற்சீரேபோலக் கொள்ளல் வேண்டும்; கொண்டு வரும் சீர் முதல் அசையோடு நேராய் ஒன்றியதை நேரொன்றாசிரியத்தளை எனல் வேண்டும் (மா முன் நேர்).

வரும் சீர் முதல் அசையோடு நிரையாய் ஒன்றியதை நிரை ஒன்று ஆசிரியத்தளையாக்கல் வேண்டும் (விளம் முன் நிரை).

வரும் சீர் முதல் அசையோடு ஒன்றாததை இயற்சீர் வெண்டளையாகக் கொள்ளல் வேண்டும் என்பன யாப்பிலக்கணத்தார் கொள்கைகளாம் (மா முன் நிரை).

4.4.2 பூச்சீர்க்குத் தளை காணல்`பூச்சீர்’ என்றதும் உங்கள் நினைவில் வரவேண்டியன, நாலசைச்சீர் என்பதும் இந்த ஈற்றையுடைய சீர்கள் எட்டு என்பதும்தாம். இச்சீர்கள் அருகி வருவன; வஞ்சிப்பாவில் பெரும்பாலும் பயிலும் என்பன போன்ற செய்திகளை முன்னைய பாடங்களில் படித்துள்ளோம். ஆசிரியர் அமிதசாகரர் `கண்ணிய பூவிளம் காய்ச்சீர் அனைய’ என்ற விதியால் பூச்சீர் எட்டனையும் காய்ச்சீராகக் கொள்க என்கின்றார். கொண்டால், வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது, அதாவது, காய்ச்சீர் நின்று வரும் சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளை ஆகக் கொள்ள வேண்டும்.

எ-கா.

வடிவார் கூந்தல் மங்கையரும்

வடிவார்கூந்தல்                                                                                       மங்கையரும்

வ டி    வா ர்       கூ ந்     த ல்                                                     ம ங்     கை ய     ரு ம்

இணைக்   நெடில்   நெடில்      தனிக்                                            தனிக்        இணைக்     தனிக்                                                                             குறில்      ஒற்று      ஒற்று           குறில்                                                குறில்     குறில்     குறில்

ஒற்று                                             ஒற்று                         ஒற்று

நிரை          நேர்        நேர்     நேர்                                                 நேர்     நிரை     நேர்

புளிமாந்தண்பூ

(மூவசைச்சீராகக் கொள்ள, வாய்பாடு)

புளிமாங்காய்

காய் முன் நேர்

வெண்சீர் வெண்டளை

பூச்சீர் எட்டும் காய்ச்சீராகக் கருதப்படுவதால், கருதிய அக்காய்ச்சீர் நின்று வரும்சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாகக் கொளல் வேண்டும்.

எ-கா. `அங்கண்வானத் தமரரசரும்’

அங்கண்வானத்     தமரரசரும்

அங்     கண்     வா     னத்     தம     ரர     சரும்

நேர்     நேர்     நேர்     நேர்     நிரை     நிரை     நிரை

தேமாந்தண்பூ

(மூவசைச்சீராகக் கருத வாய்பாடு) தேமாங்காய்

காய் முன் நிரை

கலித்தளை

4.4.3 `நிழல் சீர்’க்குத் தளை காணல் நிரை ஈற்று நாலசைச்சீர்கள் (பொதுச்சீர்கள்) எட்டு. அவை `நிழல்’ என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் பெறுகின்றன. இவற்றைத்தாம் `நிழல் சீர்’கள் என்கின்றோம். இவை வந்து பயிலும் பாக்களையும், வந்து பயிலப்பெறாத பாக்களையும் முன்னரே கண்டு வந்துள்ளோம். இவை, பயின்றுவரும் என்ற வஞ்சிப்பாவின் சில அடிகளைக் கொண்டு அலகிட்டுத் தளை பிறக்குமாற்றை இனிக் காண்போம்.

தளை காண்பதற்குத் துணை வருவது, அமிதசாகரரின் `கனியொடு ஒக்கும் ஒண்ணிழல்சீர்’ என்னும் தொடரே ஆகும். இதன்பொருள்:

`நிழலென்னும் சொல்லியிறுதியாகிய நிரையீற்றுப் பொதுச் சீர் எட்டும் கனியென்னும் சொல்லிறுதியாகிய வஞ்சி உரிச்சீரே போலக் கொண்டு வரும்சீர் முதலசையோடு ஒன்றினும் ஒன்றாது விடினும் வஞ்சித்தளை என்று வழங்கப்படும்.’

என்பதேயாம்.

அதாவது, `நிழல்’ என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியில் கொண்டு வரும் நிரையீற்றுப் பொதுச்சீர்கள் (நான்கசைச்சீர்கள்) எட்டு; இவை, எட்டனையும் தளை காணும்போது வஞ்சியுரிச்சீராகப் (கனிச்சீராக) பாவித்துக் கொள்ளல் வேண்டும்; பாவித்துக் கொண்டு, (அ) வஞ்சியுரிச்சீர் நின்று (கனி = நிரை) வரும் சீர் முதலசையோடு (நிரையசையை முதலாகக் கொண்ட) ஒன்றுவதை ஒன்றிய வஞ்சித்தளையாகக் கொள்ளல் வேண்டும்;

(ஆ) வஞ்சியுரிச்சீர் நின்று வரும்சீர் முதலசையோடு ஒன்றாததனை (கனி முன் நேர்) ஒன்றாத வஞ்சித்தளை என்று கொள்ளல் வேண்டும் என்பது பொருள்.

(மக (குழவி) + அத்துக்கை – மகத்துக்கை; இங்கு `மக’ என்பது இயல்பு உயிரீறு.

மகம் + அத்துக் கொண்டான் மக + அத்துக் கொண்டான் (மக – மகமாகிய நாள்); இங்கு `மக’ என்பது விதி உயிரீறு. மகம் என்பதன் இறுதியெழுத்துக் கெட்டு `மக’ என உயிரீற்றுச்சொல்போல் நின்றதால் விதி உயிரீறு ஆகின்றது, `மக’ என்பது. அதுபோல, நிழல் ஈற்று நாலசைச் சீரை மூவசைக் கனிச்சீராகக் கொள்வதால், `விதி மூவசைச்சீர்’ எனக் கொள்ளலாம்போல் தோன்றுகின்றது).

(அ) எ-கா.

வெங்கண்வினைப்பகை விளிவெய்த

நின்ற சீர்                                                                                வந்த சீர்

வெங்கண்வினைப்பகை                                                                 விளிவெய்த

வெங்     கண்     வினைப்     பகை                                                      விளி     வெய்     த

தனிக் குறில் ஒற்று     தனிக் குறில் ஒற்று     இணைக் குறில் ஒற்று      இணைக் குறில்     இணைக் குறில்     தனிக் குறில் ஒற்று     தனிக் குறில்

நேர்                              நேர்                                       நிரை                     நிரை                   நிரை                   நேர்            நேர்

தேமா நறு நிழல் (இயல்பு)

தேமாங்கனி (திரிப்பு) (வாய்பாடு)                                           புளிமாங்காய் (வாய்பாடு)

கனி முன் நிரை (நிரை)

ஒன்றிய வஞ்சித்தளை

(ஆ) எ-கா.

அந்தரதுந்துபி நின்றியம்ப

நின்ற சீர்     வந்த சீர்

அந்தரதுந்துபி     நின்றியம்ப

அந்     தர     துந்     துபி     நின்     றியம்     ப

தனிக் குறில் ஒற்று     இணைக் குறில்     தனிக் குறில் ஒற்று     இணைக் குறில்     தனிக் குறில் ஒற்று     இணைக் குறில் ஒற்று     தனிக் குறில்

நேர்     நிரை     நேர்     நிரை     நேர்     நிரை     நேர்

கூவிளந் தண்ணிழல் (இயல்பு)

கூவிளங்கனி (திரிப்பு) (வாய்பாடு)     கூவிளங்காய் (வாய்பாடு)

கனி முன் நேர் (நிரை)

ஒன்றாத வஞ்சித்தளை

4.5 தொகுப்புரை

இப்பாடத்தின் வழி அறிந்து கொண்டனவற்றைத் தொகுத்துக் காண்போம்.

தளை என்பது நான்காவது செய்யுளுறுப்பு.

நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் பந்தப்படுவது தளை.

தளை ஏழு. இவ்வேழு தளைகளையும் ஒன்றிய தளை, ஒன்றாத தளை என்னும் வகையுள் அடக்கலாம்.

ஒன்றிய தளைகள் நான்கு. அவை: நேர் ஒன்றாசிரியத்தளை, நிரை ஒன்றாசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை.

ஒன்றாத தளைகள் மூன்று. அவை: இயற்சீர் வெண்தளை, கலித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை.

இயற்சீர் வெண்தளை இரு அமைப்பில் வருகின்றது; ஒன்று, மா முன் நிரை என்று; மற்றொன்று, விளம் முன் நேர் என்று.

பாக்களின் பெயரால் தளை வழங்கப்படுகின்றது. வெண்டளையை வெண்சீர் உண்டாக்கினால் வெண்சீர் வெண்டளை; இயற்சீர் உண்டாக்கினால் இயற்சீர் வெண்டளை.

நின்ற சீரின் ஈற்றசையும் வந்த சீரின் முதலசையும் ஒன்றிவரின் ஒன்றிய தளை; ஒன்றாவிடின், ஒன்றாத தளை.

ஆசிரியப்பாவுக்குரிய தளைகள் இரண்டு. ஒன்று, நேரொன்றாசிரியத் தளை மற்றொன்று, நிரையொன்றாசிரியத்தளை.

வெண்பாவுக்குரிய தளைகள் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையுமாகிய இரண்டு.

கலிப்பாவுக்குரிய தளை ஒன்றே. அது. கலித்தளை. அகவல்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர் என்று இருப்பதுபோலக் கலிச்சீர் என்ற ஒருவகைச்சீர் இல்லை.

அசைச்சீர், இயற்சீர், பொதுச்சீர் எனப் பெயர் வந்தமைக்கான காரணங்கள் இவை என்பது.

அசைச்சீரை, மாச்சீர், விளச்சீர் என வகைப்படுத்தி, இயற்சீர் என்றாகப் பாவித்து வரும் சீரின் முதலசையை நோக்கித் தளை காணல்.

கண்ணிய பூவினத்தைக் காய்ச்சீராகக் கொண்டும், கனியொடு ஒக்கும் நிழல்சீர் என்றதைக் கொண்டும் தளைகளைக் காணல் வேண்டும்.

பாடம் - 5

அடியும் தொடையும்

5.0 பாட முன்னுரை

எழுப்பப்பெறுவதும் எழுதப்படுவதும் ஆகிய காரணங்களால் பெயர்பெற்ற எழுத்து அசைக்கு உறுப்பாகும்; எழுத்து ஒன்றொடு ஒன்றும் இரண்டுமாகத் தொடர்ந்து இயங்கும்போது உண்டாகும் உறுப்பு அசை; அசை தனித்து நின்றும் இரண்டு மூன்று நான்கு என்று இயைந்து நின்றும் உருவாவது சீர்; ஒரு சீரின் ஈற்றசையோடு வரும்சீரின் முதல் அசை தளைந்து (பிணைந்து) நிற்பதால் தோன்றுவது தளை; இத்தனையும் முந்தைய பாடங்களில் படித்து வந்துள்ளோம்.

இப்போது இந்தப் பாடத்தில், தளைகள் பொருந்தி நடப்பதாகிய அடியைப் பற்றிப் படிக்க இருக்கின்றோம்.

மேலும், அடி இரண்டோ சீர்கள் இரண்டோ படைக்கும்போது அவை அழகுற அமையவேண்டி எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் மொழிக் கூறுகளைப் பயன்படுத்தித் தொடுப்பதாகிய தொடையைப் பற்றியும் படிக்க இருக்கின்றோம்.

5.1 அடி

அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து அசை சீர் பந்தம், அடி தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது.

மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார்.

… … … ; அத்தளை

அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு

தொடுத்துமன் சேறலின் தொடையே’

என்னும் நூற்பா, ‘அடி’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைந்துள்ளது.

சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர்.

சுருக்கமாகச் ‘சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி’ என்று சொல்லி வைக்கலாம்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

என்பது குறள் வெண்பா. இது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,

கற்றதனா லாய

என்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு. சான்று:

(1)                                  (2)

‘திரைத்த                     சாலிகை

நிரைத்த                      போல்நிறைந்(து)

இரைப்ப                        தேன்களே

விரைக்கொள்              மாலையாய்’

இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர் அடி’ என்பர். எனவே, இங்கு நாம் சீர்களால் நிரம்பும் ‘சீரடி’களையும் பார்க்க இருக்கின்றோம். சீர்களால் நிரம்பி அடியாகிப் பாட்டிற்கு அடியாகும் (வரியாகும்) பாடலடியையும் பார்க்க இருக்கின்றோம்.

5.1.1 சீர்அடி வகைகள் முன்னே சீர்களால் நிரம்புவது ‘அடி’ என்று பார்த்தோம். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார்.

இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.

மேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.

குறள்ஒரு பந்தம்; இருதளை சிந்தாம்;

முத்தளை அளவடி; நால்தளை நெடிலடி;

ஐந்தளை முதலா எழுதளை காறும்

வந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப

யார் யார் எந்த எந்த முறையில் சொன்னாலும் செய்தி ஒன்றே. இவ்வகையில் ‘சீரடி’ ஐந்து வகைப்படுவது வெளிப்படை. அவை:

குறளடி

சிந்தடி

அளவடி

நெடிலடி

கழிநெடிலடி

5.1.2 சீர்அடி வகைகள் – பெயர்க்காரணம் பேச்சு வழக்கில் கூட ‘அளந்து பேசு’ என்றவர்கள் தமிழர்கள். அய்யன் வள்ளுவர் ‘அற்றால் அளவறிந்துண்க’, ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்றவர். இவர், அளவறிந்து பேசவேண்டும் என்பதையும் உள்ளடக்கித்தான் ‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல்’ எனும் குறளை யாத்திருப்பார் எனக் கொள்வதில் தவறில்லை.

பேசும் பேச்சுக்கே அளவு வேண்டும் என்றவர்கள் செய்யும் செய்யுட்கும் அளவு வேண்டியிருப்பர். எதனையும் பெரியது சிறியது என்பது, மனத்தில் ஏதோ ஓர் அளவை வைத்துக்கொண்டுதான்! எண்ணிப்பாருங்கள். மாணாக்கர்களே! உண்மை விளங்கும்.

செய்யுள் நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி, நேரடி. நேர்தல் – ஒத்துக்கொள்ளுதல், நேர்தல் என்பதற்கு இப்பொருள் இருப்பதை ‘நேர்ச்சிக்கடன்’, ‘தோழி தலைவனின் குறை நேர்ந்தாள்’ என்னும் தொடர்களில் காணலாம். தொடை விகற்பங்களைப் பற்றி பின்னர்ப் படிக்க இருக்கின்றோம். அவ்விகற்பங்களை யெல்லாம் அறிந்து ‘இணை மோனை’, ’பொழிப்பு மோனை’ ’கூழை மோனை’, ’ஒரூஉ மோனை’, ‘மேற்கதுவாய் மோனை’, ‘கீழ்க்கதுவாய் மோனை’, ‘முற்று மோனை’ என்றவாறு கணக்கிட உதவுவது நான்கு சீரால் இயன்ற அளவடி தானே? கணக்கிடுவதற்குப் புலவர் எல்லாரும் அளவடியையே நேர்ந்தனர். ஆகையால் அளவடியின் பெயர் ‘நேரடி’ எனக் கொள்ளப்பெற்றது என்று காரணம் கற்பிக்கலாம் அல்லவா?

ஒன்றை அளவாகக் கொண்டுதான், அவ்வளவைவிடச் சற்றுச் சிறியது; சிறியது; பெரியது; மிகப்பெரியது என்று பிறவற்றைச் சொல்லமுடியும்.

அளவடி என்பது நான்கு சீர்களைக் கொண்டுள்ளது. அளவடியினின்றும் ஒரு சீர் சிந்துவது – குறைவது – சிந்தடி. ‘உனைச்சிந்தென்று சொல்லிய நாச் சிந்துமே’ என்னும் தமிழ்விடு தூதுவில் சிந்தும் என்பது, குறையும் என்ற பொருளில் வருகின்றது. குறளடி, மிகவும் குட்டையான அடி. குறள், ’குறளன்’, ’திருக்குறளப்பன்’ என்னும் இலக்கியத் தொடர்களில் மிகவும் குட்டையானவற்றைச் சொல்லக் ’குறள்’ என்பது ஆளப்பட்டுள்ளது. அளவடியின் நீண்டது என்பது பற்றி நெடிலடி எனப்பெற்றது. நெடிலடியின் நீண்டது என்பது பற்றி ஒரு பொருட்பன்மொழி வாய்பாட்டால் கழிநெடிலடி எனப்பெறுகின்றது. எனவே,

நான்கு சீர் கொண்டது அளவடி

மூன்று சீர் கொண்டது சிந்தடி.

இருசீர் கொண்டது குறளடி

ஐந்துசீர் கொண்டது நெடிலடி

ஐந்துக்கும் மேலான சீர் கொண்டது கழிநெடிலடி ஆம்.

குறளடி

‘திரைத்த சாலிகை

நிரைத்த போல்நிறைந்

திரைப்ப தேன்களே

விரைக்கொள் மாலையாய்’

என்னும் இப்பாடல் வஞ்சித்துறைப் பாடலாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ‘திரைத்த சாலிகை’ முதலடி; ‘நிரைத்தபோல் நிறைந்’-இரண்டாம் அடி; ‘இரைப்ப தேன்களே’- மூன்றாம் அடி; ‘விரைக்கொள் மாலையாய்’- நான்காம் அடி. ஒவ்வொரு அடியும் இரு சீர்களைக் கொண்டு இயங்குகின்றது.

இரு சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, குறளடி. ‘குறளடி’ என்னும் பெயர் வந்தமைக்கான காரணத்தை மேலே பார்த்தோம்.

‘திரைத்த சாலிகை’ என்பது இரண்டு சீர்களால் இயன்ற குறளடி. இதன் முதல் சீர் ‘திரைத்த’ என்பது. இரண்டாம்சீர் ‘சாலிகை’ என்பது. எனவே. ‘திரைத்த’ என்பது நின்றசீர் சாலிகை என்பது வரும்சீர்.

நின்ற சீர்                                      வந்த சீர்

திரைத்         த                          சா                லிகை

கு குஒ         கு                          நெ     கு கு

இணைக்குறில்       தனிக்குறில்            தனிநெடில்    இணைக்குறில்

ஒற்று

நிரை                      நேர்                          நேர்             நிரை

புளிமா                                          கூவிளம்

(வாய்பாடு)                                      (வாய்பாடு)

மா(நேர்) முன் நேர்

நேரொன்று ஆசிரியத்தளை

நேரொன்று ஆசிரியத்தளை என்ற ஒரு தளை தோன்ற இருசீர்கள் தேவைப்பட்டன. இருசீர்களும் இணைந்து ஓரடியாய் நின்றன. செய்யுள் இலக்கணத்தில் மிகக்குறைந்த அடி இதுவே. ஆகையால் குறளடி எனப்பெற்றது. எனவேதான், ஒருதளையான் வந்த அடியினைக் குறளடி என்றனர். ‘குறள் ஒருபந்தம்’ என்பது இலக்கண விளக்கம்.

சிந்தடி

இருது வேற்றுமை இன்மையால்

சுருதி மேல்துறக் கத்தினோடு

அரிது வேற்றுமை ஆகவே

கருது வேல்தடக் கையினாய்

என்னும் இப்பாடல் வஞ்சிவிருத்தமாகும். இதன்கண் நான்கு அடிகள் உள்ளன. ஒவ்வொரு அடியும் மூன்று சீர்களைக் கொண்டுள்ளது. மூன்று சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, சிந்தடி. அளவடி நான்கு சீரில் ஒன்று சிந்தி, மூன்று சீரில் இயங்குதலின் இதன்பெயர் சிந்தடி எனப்பெற்றது என்பதை நாம் மேலே கண்டோம்.

இருது – நின்ற சீர்

வேற்றுமை – வந்த சீர்

இன்மையால் – வந்த சீர்

‘இன்மையால்’ என்னும் வந்த சீரை நோக்க ‘வேற்றுமை’ என்பது நின்றசீர் என்பதை மறத்தலாகாது.

நின்றசீர்                      வந்தசீர்/நின்றசீர்                   வந்தசீர்

இருது                           வேற்றுமை               இன்மையால்

இரு |    து         வேற் |    றுமை          இன் |         மையால்

கு கு     கு         நெ ஒ     கு கு            கு ஒ     கு நெ ஒ

இணைக்        தனிக்         தனி               இணைக்       தனிக்           குறில்

குறில்     குறில்        நெடில்             குறில்           குறில்          நெடில்

நிரை     நேர்            நேர்       நிரை               நேர்     நிரை

புளிமா                     கூவிளம்                          கூவிளம்

(வாய்பாடு)               (வாய்பாடு)                       (வாய்பாடு)

மா(நேர்)முன் நேர்                                               விளம் முன்

நேர்ஒன்று                                                       நேர்இயற்சீர்

ஆசிரியத்தளை                                      வெண்தளை

நேரொன்று ஆசிரியத்தளை, இயற்சீர்வெண்தளை ஆகிய இரண்டு தளைகள் தோன்ற மூன்று சீர்கள் தேவைப்படுகின்றன. எனவே, சிந்தடி அமைய இருதளைகள் தேவையாவதை உணர்கின்றோம். இதையே இலக்கணம் ‘இருதளை சிந்தாம்’ என்கின்றது.

அளவடி அல்லது நேரடி

தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா

மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்

மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும்

தாம்பழுத் துளசில தவள மாடமே

தேம்பழுத் – முதல்சீர்; நின்றசீர்

தினியநீர் – இரண்டாம் சீர்; வந்தசீர் | நின்றசீர் (மூன்றும் என்பதை நோக்க)

மூன்றும் – மூன்றாம் சீர்; வந்தசீர் | நின்றசீர் (தீம்பலா என்பதை நோக்க)

தீம்பலா – நான்காம் சீர்; வந்தசீர் | நின்றசீர் (மேம்பழுத் என்பதை

நோக்க)

இவ்வாறே ‘மாடமே’ என்னும் இறுதிச்சீர் வரை எண்ணப்பட்டுந் தளை காணல் வேண்டும். ஒருசோற்றுப்பதமாக ஓரடி மட்டும் கொள்ளப்படுகின்றது.

நான்கு சீர்களைக் கொண்ட இந்த அளவடியில்/ நேரடியில், முறையே நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை. நேர்ஒன்றாசிரியத்தளை என்று மூன்று தளைகள் தோன்றுகின்றன. இதனை மூன்று தளையால் வந்த அடி எனலாம் அல்லவா? குறிக்கலாம் எனின், முத்தளையால் வந்த அடியினை, அளவடி/நேரடி எனலாமே. எண்ணுங்கள். ‘முத்தளை அளவடி’ என்கின்றது இலக்கணம்.

நெடிலடி

ஐந்து சீர்களால் அமைந்த அடி நெடிலடி. சீர் எண்ணிக்கையைக் கருதி ஐந்து சீரடி. நெடிலடி எனப்படுகின்றது. இப்பெயரை உற்றுக் கவனியுங்கள். இது ஓர் உண்மையைக் குறிப்பில் உணர்த்துவது தெரியும். அது. இயல்பான அடி நான்குசீர் அடியாகிய அளவடியே என்பதாம்.

(1) (2) (3) (4) (5)

வென்றான் வினையின் தொகைநீங்க விரிந்து தன்கண்

ஒன்றாய்ப் பரந்த உணர்வின் னொழியாது முற்றும்

சென்றான் திகழும் சுடர்சூழ் ஒளிமூர்த் தியாகி

நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்

இது, கலித்துறைப்பாடல். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்களால் நிரம்பியுள்ளது. எனவே, நெடிலடி நான்கிளைக் கொண்டு வந்துள்ள பாடல் இந்தக் கலித்துறை. இதன் முதலடியை மட்டும் கொண்டு தளைகள் எத்தனை உள என்று காண்போம்.

ஐந்து சீர்களைக் கொண்ட இந்த நெடிலடியில் இயற்சீர் வெண்தளை, இயற்சீர் வெண்தளை, கலித்தளை, நேரொன்றாசிரியத்தளை என்று நான்கு தளைகள் அமைகின்றன. ஆதலால், நான்கு தளைகளால் அமைவது நெடிலடி என்று சொல்லலாம். யாப்பிலக்கணமும் ‘நால்தளை நெடிலடி’ எனக் குறிக்கின்றது.

கழி நெடிலடி

ஆறு, ஏழு, எட்டு என ஐஞ்சீரின் மிக்குவரும் அடிகள் எல்லாம் கழிநெடிலடி என்று கூறப்பெறும். கழி-மிகுதி. ‘கழிபெருங்காதல்’, ’கழிபேர்இரக்கம்’ என்பவற்றை நோக்கியும் கழி என்பதன் பொருளை உணரலாம். இயல்பான நான்குசீர்களை உடைய அடி, அளவடி; அளவடியின் ஒருசீ்ர் மிக்கது நெடிலடி; நெடிலடியின் ஒன்றோ பலவோ ஆகிய சீர்கள் மிக்கது கழிநெடிலடி. கழிநெடிலடி ஒன்று, எத்தனை சீர்களால் நிரம்பியது என்பது தோன்ற அதன் எண்ணிக்கையை உள்ளடக்கி அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க் கழிநெடிலடி என்று வழங்கப்பெறுவது உண்டு. எண்சீர்க்கு மேலாக வரும் கழிநெடிலடிகள் அத்துணை சிறப்பில்லன என்பர்.

இரைக்கு வஞ்சிறைப் பறவைக

ளெனப்பெயர் இனவண்டு புடைசூழ

நுரைக்க ளென்னுமக் குழம்புகள்

திகழ்ந்தெழ நுடங்கிய விலையத்தால்

திரைக்க ரங்களிற் செழுமலைச்

சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்

தரைக்கு மற்றிது குணகடல்

திரையொடு பொருதல தவியாதே

இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழிநெடிலடி. இப்பாடலின் ஓர் அடிக்கு மட்டும் தளை காண்போம்.

ஆறுசீர்களைக் கொண்ட இந்தக் கழிநெடிலடியில் நேர் ஒன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத் தளை, நிரை ஒன்றாசிரியத் தளை, கலித்தளை என்றாக ஐந்து தளைகள் இடம் பெறுகின்றன. ஆதலால் ஐந்து தளைகளால் அமைவது கழிநெடிலடி என்கின்றனர்.

ஐந்தளை முதலா எழுதளை காறும்

வந்தவும் பிறவும் கழிநெடில் என்ப

5.2 நால்வகைப்பாவும் அடிவரையறையும்

தொல்காப்பியர் தமது செய்யுளியலில் ஆறுவகைப் பாக்களைக் கூறுகின்றார். அவை 1.வெண்பா 2. அகவற்பா 3.கலிப்பா 4.வஞ்சிப்பா 5. பரிபாடல் 6. மருட்பா.

இவற்றுள் பரிபாடல் என்னும் இசைப்பாவைப் பாடுபவர் நாளடைவில் அருகிவிட்டனர். அருகியமைக்கான காரணம், இசையும் நாடகமும் காமத்தைத் தூண்டுவன என்று அவற்றைப் பேணாமல் புறந்தள்ளியவர்கள் அரியணை ஏறியமை ஆகலாம். புரப்பார் இல்லாமையால் இசைப்பாவாகிய பரிபாடலைப் பாடுவோர் இலராயினர். மருட்பா என்பது வெண்பாவும் ஆசிரியப்பாவும் எனக் கலந்து பாடப்பெறும் கலவைப்பாடல் ஆகும். எனவே இன்று பாவகைகளில் சிறப்பின இவை எஞ்சிய நான்கே.

கவிஞர்கள் தாம் சொல்லவந்த கருத்து, சொல்லும் திறன் அமைக்க வேண்டிய நெறி ஆகியவற்றை மனத்தில் கொண்டே தமது கவிதைகளைப் படைக்கின்றனர். அவர்கள் தம் கவிதைகளைச் ‘செவிநுகர் கனி’களாக்கக் கற்பனைகளையும் ஆளவேண்டியுள்ளது. ஆகலின், பாடலின் அடியெல்லைகள் வேறுபடுகின்றன. எனினும், இன்ன இன்ன பாவினை இன்ன இன்ன அடிவரையில் பாடுதல் வேண்டும் என்றும் விதித்தனர். விதித்தவை சிற்றெல்லை எனப்பட்டன. ‘சிற்றெல்லை’ எனவே, ‘எடுத்த மொழிஇனம் செப்பலும் உரித்தே’ என்றபடிக்கொப்பப் ‘பேரெல்லை’ என்பதொன்றும் உண்டு என்பதும் பெறப்படுகின்றது. இது, அருத்தாபத்தி. இனிப் பாக்களின் சிற்றெல்லை, பேரெல்லை ஆகிய இரண்டைப் பற்றிப் படிப்போம்.

5.2.1 சிற்றெல்லை, பேரெல்லை – வேண்டுமா?ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

என்று பாடிவைத்தால், இது, நேரிசை ஆசிரியப்பா என்று வரையறுக்க முடியாது. மேலும், கலிப்பாவின் வஞ்சிப்பாவின் சுரிதகம் போலும் என்று எண்ண வேண்டியும் வரும்.

கொடியவாலன குருநிறத்தன குறுந்தாளை

….. ….. …..

….. ….. …..

பயில்படுவினை பத்தியலாற் செப்பினோன்

புனையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ

வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதே

எனவரும் இவ்வஞ்சிப்பாவின் சுரிதகத்தொடு மேல்சொன்ன ‘ஒருவன் ….. ….. முறையே’ என்ற அடிகளை வைத்துப்பாருங்கள். மருட்கை பிறக்கும். மற்றும் மருட்பாவின் பின்னிரண்டு அடிகளாகவும் தோன்றும்.

திருநுதல் வேரரும்பும் தேங்கோதை வாடும்

இருநிலம் சேவடியும் தோயும்-அரிபரந்த

போகிதழ் உண்கணும் இமைக்கும்

ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே

இம்மருட்பாவின் இறுதி இரண்டடிகளைப் பாருங்கள். தடுமாற்றத்திற்கான தடயம் தெரியும்.

நீல மேனி வாலிழை பாகத்து

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகமும் முகிழ்த்தன முறையே

என்றவாறு முதலில் (தலைப்பில்) ஓரடியைச் சேர்த்துவிட்டால், தெளிவாக இந்தப்பாடல் நேரிசை ஆசிரியப்பா என இனம் பிரித்து அறியலாம். இனிய மாணாக்கர்களே! இதனால், சிற்றெல்லையும் கொள்ளவேண்டியமையை உணர்வீர்கள்.

நாரா யணனை நராயணன்என் றேகம்பன்

ஓராமல் சொன்ன உறுதியால் – நேராக

வார்என்றால் வர்என்பேன் வாள் என்றால் வள் என்பேன்

நார்என்றால் நர்என்பேன் நான்’

இது காளமேகப் புலவரின் பாட்டு. இதனைக் கம்பர் மேற்கொண்ட குறுக்கல் விகாரத்தை (நாராயணன்->நராயணன்) ஏளனம் செய்து காளமேகம் பாடியதாகக் கருதுவதைவிடத் தமிழிலக்கிய உலகம் கவிஞர்களுக்குக் கொடுத்துள்ள சலுகையாகக் கருதலாம். தொல்காப்பியர் கூறும் செய்யுள் விகாரங்கள் உள்ளிட்டுச் செய்யுட்கென அமைக்கும் நூற்பாக் கருத்துகள் எல்லாமும் கவிஞர்களுக்கு வழங்கிய சலுகை தாமே? ‘பாண!’ என முன்னிலை ஒருமையில் தொடங்கிப் ‘பெறுகுவிர்’ என முன்னிலைப் பன்மையில் முடிக்கலாம் என உரிமை தருகின்றாரே தொல்காப்பியர். என்னே

சலுகை.

முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி

பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே:

ஆற்றுப்படை மருங்கில் போற்றல் வேண்டும்

இவற்றையெல்லாம் உட்கொண்டவர்கள்போல யாப்பிலக்கண நூலாரும் செய்யுள் யாக்கும் புலவனது கற்பனைக்கும் அவனது உள்ளத்து உணர்வுக்கும் தடையிருத்தலாகாது எனக் கருதி இவ்வளவு அடிகளில்தான் பாடவேண்டுமென எல்லையை வைக்கவில்லை.

5.2.2 நால்வகைப் பாக்களுக்கான சிற்றெல்லை வெண்பா முதலான நான்குவகைப் பாக்களுக்கான சிற்றெல்லையை அஃதாவது, குறைந்த அடி எவ்வளவு என்பதை இனிப் பார்க்கலாம்.

வெண்பா சிற்றெல்லை

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானொ டூர்ந்தான் இடை

இது வெண்பா. இரண்டு அடிகளை உடையதாய் வந்துள்ளது. ஆதலால் குறள் வெண்பா எனப் பெறுவது. எனவே, வெண்பாவின் சிற்றெல்லை இரண்டடி. இரண்டடியின் குறைந்து பாடல் அமைவதில்லை. ஆத்திசூடி போன்றவற்றில் ஓரடியும் பாடலடியாக வந்துள்ளதே என நீங்கள் வினவலாம். அதற்கு விடை, அவை நூற்பா யாப்பு வகையின என்பதே ஆகும்.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை

இது குறள் வெண்பாவின் இனமான குறள் வெண் செந்துறை.

வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்

பண்டையள் அல்லள் படி.

இது சந்தம் குறைந்த குறள் வெண்பா. யாப்பிலக்கணத்தார் இதனைக் குறட்டாழிசை என்பர். இதுவும் குறள் வெண்பாவின் இனம்.

ஆக, வெண்பாவின் சிற்றெல்லை இரண்டடியே.

ஆசிரியப்பாவின் சிற்றெல்லை

முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே

மலையன் ஒள்வேல் கண்ணி

முலையும் வாரா முதுக்குறைந் தனளே

இது நேரிசை ஆசிரியப்பா. மூன்றடியால் வந்துள்ளது. இதனை விடக் குறைந்த அடியால் வந்தால், என்ன பா என்றோ, இன்ன பாவில் இவ்வகைப்பா என்றோ பிரித்தறிய முடியாது. இவையெல்லாம் ஒருசேர அறிய குறைந்த அளவு மூன்றடிகளாவது வேண்டும். எனவே, ஆசிரியப் பாவின் சிற்றெல்லை மூன்றடி.

கலிப்பாவின் சிற்றெல்லை

கலிப்பா குறைந்தது நான்கடிகளை உடையதாய் வரும். நான்கடிகளினும் குறைந்து கலிப்பா வாராது.

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி

முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்

எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்

மல்லல்ஓங்கு எழில்யானை மருமம்பாய்ந்(து) ஒளித்ததே

இது தரவு கொச்சகக் கலிப்பா; நான்கடியால் வந்துள்ளது. கலிப்பாவின் சிற்றெல்லை நான்கடி.

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவும் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவும் தவிர்ந்து ஏனைய கலிப்பாக்களுக்குத் தரவு மூன்றடியே சிறுமை என்பது ஒழிபியலில் காணப்படுவதாம். தரவு கொச்சகக் கலிப்பாவுக்குத் தரவு நான்கடிச் சிறுமை என்பது கொண்டு, ‘செல்வப் போர்க் கதக்கண்ணன்’ என்னும் தொடக்கத்த பாடல் சான்றாகத் தரப்பட்டது.

வஞ்சிப்பாவின் சிற்றெல்லை

வஞ்சிப்பா கலிப்பாவைப்போலத் துணை உறுப்புகளை உடையது. துணை உறுப்புகள் தனிச்சொல்லும் சுரிதகமும் ஆம். வஞ்சிப்பா ஒன்றைக் காண்போம்.

‘செங்கண்மேதி கரும்புழக்கி

அங்கண்நீலத் தலர்அருந்திப்

பொழிற்காஞ்சி நிழல்துயிலும்

செழுநீர்

நல்வயல் கழனி யூரன்

புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’

-இப்பாடல் குறளடி வஞ்சிப்பா. குறளடி என்னும் இருசீர்களால் ஆகிய மூன்று அடிகளைக் கொண்டுள்ளது. ‘செழுநீர்’ என்ற தனிச்சொல்லையும் அதாவது துணை உறுப்பையும் சுரிதகம் என்னும் துணை உறுப்பையும் நீக்கி, எஞ்சியதையே வஞ்சிப்பா எனக் கொண்டு அடிகளைக் கணக்கிட வேண்டும்.

பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி

வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்

அதனால்.

அறிவன தடியிணைப் பரவிப்

பெறுகுவர் யாவரும் பிறவியில் நெறியே

இது சிந்தடி வஞ்சிப்பா. முச்சீரடியான் (சிந்தடியான்) இயன்ற அடிகள் இரண்டைக் கொண்டுள்ளது. இதனை நோக்க வஞ்சிப்பாவின் சிற்றெல்லை இரண்டடி என்றாகின்றது.

வஞ்சிப்பா மூன்றடிச் சிறுமையை உடையது என்பவர் அமிதசாகரர். இவர் ‘வெள்ளைக்கு இரண்டு அடி; வஞ்சிக்கு மூன்றடி… இழிபு’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

வஞ்சிப்பா இரண்டடிச் சிறுமையை உடையது என்பவர் மயேச்சுரர். மயேச்சுரரின் கருத்தை ஏற்க விரும்பிய உரையாசிரியராகிய குணசாகரர், நான்கு பாக்களுக்குரிய அடியின் சிறுமையும் பெருமையும் சொல்ல வந்த காரிகைக் சூத்திரம், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற முறைமையில் நிறுத்திச் சொல்லாமல் வெண்பா, வஞ்சிப்பா, அகவற்பா, கலிப்பா என்று முறைமாற்றிச் சொல்வதைக் காண்கின்றார். கண்டு, இங்ஙனம் முறைமாற்றித் தலை தடுமாற்றமாக உரைத்தது ஒரு கருத்தைச் சொல்வதற்காகத்தான் என்று கொண்டு ‘மயேச்சுரர் முதலாகிய ஒரு சார் ஆசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும் என்றார்’ என்று சொல்லித் தழுவிக் (ஏற்றுக்) கொள்கின்றார்.

மூல நூலாசிரியரின் கருத்துப்படி வஞ்சிப்பாவின் அடிச்சிற்றெல்லை மூன்று என்றே கொள்வோம்.

5.2.3. நால்வகைப் பாக்களுக்கான பேரெல்லை இரண்டடிச் சிற்றெல்லையது வெண்பா; மூன்றடிச் சிற்றெல்லையை உடையன ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும்; நான்கடிச் சிற்றெல்லையை உடையது கலிப்பா என்று வரையறுத்துக் கூறியவாறு இந்நான்கு வகைப்பாடல்களையும் எவ்வளவு அடிப்பெருமையில் பாடலாம் என்ற வரையறை இல்லை. அதாவது, கீழ் எல்லை சொல்ல முடிகின்றது மீ எல்லையாகிய மேல் எல்லையைக் கூற முடியவில்லை. நால்வகைப் பாவிற்கும் உரிய அடிகளின் மேல் எல்லை, பாடுவோரின் உள்ளத்தின் எல்லை என்றுதான் அமையவேண்டும்.

குறள்இரு சீரடி; சிந்துமுச் சீரடி; நாலொருசீர்

அறைதரு காலை அளவொடு நேரடி; ஐயொருசீர்

நிறைதரு பாதம் நெடிலடி யாம்;நெடு மென்பணைத்தோள்

கறைகெழு வேற்கண்நல் லாய்! மிக்க பாதம் கழிநெடிலே’,

எனவும்,

வெள்ளைக்கு இரண்டடி; வஞ்சிக்கு மூன்றடி; மூன்று

அகவற்கு

எள்ளப் படாக்கலிக்கு ஈரிரண் டாகும், இழிபு;

உரைப்போர்

உள்ளக் கருத்தின் அளவே பெருமை;ஒண்

போதுஅலைத்த

கள்ளக் கரும்நெடும் கண்சுரி மென்குழல் காரிகையே

எனவும் வரும் இவ்விரண்டு காரிகைச் சூத்திரங்கள் தந்த செய்திகளே மேல் நாம் பார்த்தன எல்லாமும்.

5.3. தொடை

’தொடு’ என்னும் ஏவல் கண்ணிய வினைப்பகுதியுடன் இயைந்து (தொடு+ஐ)’தொடை’ என்னும் செயப்படுபொருட்பெயரை உண்டாக்குகின்றது. தொடை என்பதற்கு இங்குத் ’தொடுக்கப்படுவது’ ஆகிய பொருள் என்று அருத்தம்; ’ஐ’ செயப்படுபொருள் விகுதி. தடுக்கப்படுவது தடை; மடுக்கப்படுவது மடை; இறுக்கப்படுவது இறை; நிறுக்கப்படுவது நிறை; எடுக்கப்படுவது எடை என்றாற்போலத் தொடுக்கப்படுவது தொடை என்றாயிற்று.

மாலை தொடுக்கப்படுவது என்ற காரணத்தால், அது, தொடை எனவும் வழங்கப்படும். தொடை என்பது மேலும் ஒரு விகுதியை(அல்) ஏற்றுத் ’தொடையல்’ எனவும் வழங்கப்பெறும். ‘என் சொற்றொடையல் ஏற்றருளே’ என்கின்றார் ஓர் அருளாளர்.

செய்யுளும் கட்டப்படுவது தானே! தொடுக்கப்படுவது தானே! ஆம். குமரகுருபரர்,

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்

என மதுரை மீனாட்சியம்மையை விளிக்கின்றார். மேலும் அவர், ‘தொடையின் பயனே நறைபழுத்த தீந்தமிழின் ஒழுகு நறும் சுவையே’ என விளிப்பதைக் கொண்டு பாட்டாகிய தொடையும் இன்பம்; அதன்கண் பயிலும் தொடையும் இன்பம் என்பவற்றையும் உய்த்துணர்ந்து கொள்ளுங்கள். மாணாக்கர்களே, தொடை என்பது பாடலுக்கு ‘அழகு’ சேர்ப்பது மட்டும் அன்று; நறும் சுவையைக் (இன்பத்தை) கூட்டுவதும் ஆகும்.

செய்யுளின் சுவையைக் கூட்டுவதற்குச் செய்யுளின் அகவயத்ததாகிய கற்பனை, கற்பனையுள் அடங்குகின்ற உவமம் முதலாய கூறுகள் பல உள. செய்யுளின் அழகும் சுவையும் ஊட்டும் அகவயக்கூறே தொடை எனலாம். செய்யுளைப் படைக்குங்கால் கவிஞர்கள் எழுத்து, சொல், பொருள் இலக்கணங்களில் இடம்பெறும் மொழிக்கூறுகள் சிலவற்றைப் பயன்படுத்தித் தொடுக்கின்றனர் அல்லது கட்டுகின்றனர். அவற்றையே நாம் ‘தொடை’ என்கின்றோம். இத்தொடைகளை முழுப்பாட்டில் பயிலத் தொடுப்பதன்றிப் பாட்டின் பகுதிகளாகிய அடியில் அடங்கும் சீர்களிலும் பயிலவிடுகின்றனர். இவை தம்மை,

1. எழுத்து நிலையில் அமையும் தொடை

2. சொல் நிலையில் அமையும் தொடை

3. எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை

4. சொல்லும் பொருளும் என்ற நிலையில் அமையும் தொடை

5. சூன்ய (zero) நிலையில் அமையும் தொடை

என்னும் வகையில் வகுத்துக்கொண்டு படிக்கத் தொடங்குவோம். இப்படியொரு பகுப்பைக் கொள்ள இடம் வைத்துள்ளனரே யன்றி யாப்பிலக்கண நூலார் இவ்வாறு பகுக்கவில்லை. இனிய மாணாக்கர்களே! புரிதலில் எளிமை கருதி உங்களுக்காகக் கொண்ட பிரிவுகளே இவை.

5.3.1 எழுத்து நிலையில் அமையும் தொடை எழுத்து நிலையில் அமையும் தொடை என்றது மொழியினது (Language) எழுத்திலக்கணக் கூறுகளில் சிலவற்றைப் பயன்படுத்திச் செய்யுளை அழகுண்டாகத் தொடுப்பதை/கட்டுவதை ஆகும். இவ்வகையில் அமையும் தொடைகள்,

அ. மோனைத் தொடை

ஆ. எதுகைத் தொடை

இ. அளபெடைத் தொடை

என்பனவாம்.

அ. மோனைத்தொடை

செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை எனப்பெறும். அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வரும் காரணம் பற்றி, இது அடிமோனை எனவும் வழங்கப்பெறும்.

அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி

அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி

அம்பொன் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் …

எனவரும் இந்தப் பாடலைப் பாருங்கள். நான்கு அடிகளே காட்டப்படுகின்றன. அடிதோறும் முதல்மொழியாய் வருபவை ‘அ’ என்ற உயிரெழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவை என்பதை அறிவீர்கள். அவை ‘அ’ என ஒன்றி வந்துள்ளன.

மாவும் புள்ளும் வதிவயின் படர

மாநீர் விரிந்த பூவும் கூம்ப

மாலை தொடுத்த கோதையும் கமழ

மாலை வந்த வாடையின்

மாயோள் இன்னுயிர் புறத்துஇறுத் தற்றே

இந்தப் பாடலைப் பாருங்கள். இதன்கண் அடிதோறும் அமைந்த மாவும், மாநீர், மாலை, மாயோன் என்னும் முதல்சீர்களின் முதலெழுத்து ‘மா’ என்னும் உயிர்மெய் நெடிலாய் ஒன்றி அமைவதைக் காண்பீர்கள். இங்ஙனம் ஒவ்வோர் அடியிலும் வரும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத்தொடையாகும்.

எதுகைத்தொடை

செய்யுள் ஒன்றின் அடிகள்தோறும் முதலெழுத்து ஒழிந்த இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத்தொடை ஆகும். அடிதோறும் வரும் காரணம் பற்றி இந்த எதுகைத்தொடையை அடிஎதுகை என்று வழங்குவதும் உண்டு. இரண்டாம் எழுத்து, மெய்யாகவோ உயிர்மெய்யாகவோ ஆய்தமாகவோ அமையும்.

வடியேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார்

கடியார்; கனங்குழாய்! காணார்கொல்? காட்டுள்

இடியின் முழக்(கு)அஞ்சி ஈர்ங்கவுள் வேழம்

பிடியின் புறத்தசைத்த கை.

இந்த வெண்பாச் செய்யுளின் ஒவ்வோர் அடியின் முதற்சீரிலும் வரும் இரண்டாம் எழுத்து ‘டி’ என்னும் ஒரே எழுத்தாக அமைந்திருப்பதால் இது எதுகைத்தொடை ஆயிற்று. அடிதோறும் வந்த எதுகையாதலின் ‘அடியெதுகை’ என்று இந்த எதுகைத்தொடை வழங்கவும் பெறும்.

மாணாக்கர்களே! எதுகை என்பது இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது மட்டுமன்று. அதன் முதலெழுத்தாக நின்ற எழுத்தின் மாத்திரையளவும் ஒன்றி இருக்க வேண்டும். ‘கட்டு’ என்பதற்குப் ‘பட்டு’ என்பது எதுகை. இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்றது என்பதற்காகப் ‘பாட்டு’ என்பது எதுகையாகாது. இவ்வாறே ‘பாட்டு’ என்பதற்குக் ‘காட்டு’ என்பதே எதுகையாகுமே அன்றிப் ‘பட்டு’ என்பது எதுகையாகாது, என்பதனை நெஞ்சில் நிறுத்துங்கள். மாத்திரையும் அளவில் ஒன்றி வரவேண்டும் என்பது கருத்து. இக்கருத்தைக் காரிகையின் உரையாசிரியர்,

இரண்டாம் எழுத்து ஒன்றின் எதுகை ’என்னாது‘ வழுவா

எழுத்து’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், இரண்டாம் எழுத்து

ஒன்றிவரினும் முதலெழுத் தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய்

வந்து கட்டு என்பதற்குப் பட்டு என்பது அல்லது பாட்டு என்பது

எதுகை ஆகாது. காட்டு என்பதற்குப் பாட்டு என்பதல்லது பட்டு

என்பது எதுகையாகாது எனக்கொள்க

என்று ‘மிகை’ வகையை அறிவிக்கின்றார்.

அளபெடைத்தொடை

ஒரு செய்யுளின் அடிகள்தோறும் முதற்கண் வரும் உயிர் நெடில் அல்லது உயிர்மெய், நெடில் எழுத்துகள் அளபு எடுத்து ஒன்றிவரத் தொடுப்பின், அது, அளபெடைத்தொடை எனப்பெறும்.

உயிர் எழுத்துகளுள் நெடிலும், உயிர்மெய்யுள் நெடிலும் தாம் அளபெடுக்கும் என்பதும், இவை மொழிமுதல், இடை, கடை என்னும் மூவிடங்களிலும் அளபெடுக்குமாயினும் முதலில் எடுக்கும் ஒன்றே கொள்ளப்படுகின்றது. மொழிக்கு முதலில் வராது என்று கொள்ளப்படும் மெய்யும் ஆய்தமும் அடியின் முதல்சீரில்,

எங்ங்கி றைவனுளன் என்பாய் மனனே யா

னெங்ங் கெனத்திரிவா ரின்’

எனவும்

கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு

பொன்ன் பொறிசுணங்கு போழ்வாய் இலவம்பூ

மின்ன் னுழைமருங்குல் மேதகு சாயலாள்

என்ன் பிறமகளா மாறு

எனவும்

எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயர்

வெஃஃகு வார்க்குஇல்லை வீடு

எனவும்

அமையுமாயின், ஒற்றளபெடையும் ஒற்றில் அடங்கும் ஆய்தமும் எதுகை என்னும் நிலையை அடைந்துவிடுகின்றன. எனவே, இங்கு அளபெடை என்றது உயிரளபெடையையே எனக் கொள்ளலாம் போலத் தோன்றுகின்றது.

ஆஅ அளிய அலவன்தன் பார்ப்பினோடு

ஈஇர் இரைகொண்டு ஈர்அளைப் பள்ளியுள்

தூஉம் திரை அலைப்பத் துஞ்சாது, இறைவன்தோள்

மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால்!

ஓஒ உழக்கும் துயர்.

இந்தச் செய்யுளில் ‘ஆஅ’ ‘ஈஇ’ ’ஓஒ’ என்பன உயிர்நெடில்கள் அளபெடுத்தமைக்குக் காட்டாக அமைகின்றன. ’தூஉ’ ‘மேஎ’ என்பன உயிர்மெய்யில் உள்ள அல்லது மெய்யை ஏறிய உயிர்நெடில்கள் அளபெடுத்தமைக்குக் காட்டாகின்றன. முதலில் நின்றன ‘த்’,‘ம்’ என்னும் எழுத்துகளேனும் ஒற்றுமை நயம் கருதி முதல் எழுத்து அளபெடுத்ததாகக் கூறுவது மரபு.

5.3.2 சொல் நிலையில் அமையும் தொடை. மொழியினது (Language) சொல்லிலக்கணக் கூறுகளில் ஒன்றினைப் பயன்படுத்திச் செய்யுளை அழகுண்டாகத் தொடுப்பதைச் சொல் நிலையில் அமையும் தொடை என்பர். இவ்வகையில் அமையும் தொடை ஒன்றே ஒன்று. அது இரட்டைத்தொடையாகும்.

இரட்டைத்தொடை

‘’இரட்டைத்தொடை’’ என்பதில் இடம்பெறும் இரட்டை என்பது ’’இரண்டு’’ என்னும் பொருளில் வருவதன்று. அது,

பாவடி யானைப் படுமணி இரட்டும்

மலைவீழ் அருவி முரசென இரட்டும்

இரட்டும் ஒள்ளருவி’ ‘பறையிரட்ட

என்ற இடங்களில் தொடர்நிகழ்வைச் சொல்ல வருவதைப் போன்றது. அதாவது, மீண்டும் மீண்டும் வருதல் என்னும் பொருளில் வழங்குவது என்று குறிக்கலாம்.

ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்

விளக்கினுள் சீறெரி ஒக்குமே ஒக்கும்

குளக்கொட்டிப் பூவின் நிறம்

இந்தப் பாடலில் இரண்டாம் அடியில் வரும் ‘ஒக்குமே ஒக்கும்’ என்பது இரட்டைத்தொடை ஆகாது. ஏனெனில் ‘ஒக்குமே’ என்பது அந்த இரண்டாம் அடி முழுவதும் வரவில்லை. ஆனால், முதலடியில் நான்குசீர் முழுதும் (பலமுறை) அடுக்கிவரும் ‘ஒக்குமே’ என்ற சொல்லைப் பார்க்கின்றோம். இதுதான் இரட்டைத்தொடை.

எனவே, நாற்சீர் ஓரடியின் முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது இரட்டைத்தொடை என்றாகின்றது.

5.3.3 எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை என்றது எழுத்து, சொல் ஆகிய இரண்டு பற்றிய மொழிக்கூறுகளைப் பயன்படுத்தி அழகுபடக் கூறும் தொடையமைப்பையாகும். இவ்வமைப்பில் அடங்குவன இரண்டு. அவை, ஒன்று இயைபுத்தொடை; மற்றொன்று அந்தாதித்தொடை என்பனவாம்.

இயைபுத்தொடை.

செய்யுளின் அடிதோறும் இறுதி எழுத்து, அல்லது இறுதி அசை அல்லது இறுதிச்சொல் மீண்டும் மீண்டும் வருமாறு தொடுப்பது இயைபுத் தொடை எனப்படும். ‘இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே’ என்கின்றார் தொல்காப்பியர்.

சூரல் பம்பிய சிறுகான் யாறே

சூரர மகளிர் ஆரணங் கினரே

வாரல் எனினே யான்அஞ் சுவலே

சாரல் நாட நீவரல் ஆறே

இந்தப் பாடலின் எல்லா அடியின் ஈற்றிலும் ‘ஏ’ என்னும் ஒரே எழுத்து மீண்டும் மீண்டும் வருமாறு தொடுக்கப்பட்டுள்ளது காண்க.

வானில் பறக்கிற புள்ளெலாம் நான்

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானிழல் வளரும் மரமெலாம் நான்

காற்றும் புனலும் கடலுமே நான்;

விண்ணில் தெரிகின்ற மீன்எலாம் நான்

வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;

மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்

வாரியில் உள்ள உயிரெலாம் நான்.

இந்தப் பாடலின் அடிகள் எல்லாமும் ‘நான்’ என்ற அசையில் அல்லது நான் என்ற சொல்லில் முடிந்துள்ளன.

இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே

தன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே

ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே

அரிமதர் மழைக்கணும் அணங்கே

திருநுதற் பொறித்த திலதமும் அணங்கே

- இச்செய்யுளின் அடிகள் எல்லாமும் ‘அணங்கு’ என்னும் சொல் மட்டும் அன்றி ‘ஏ’ என்னும் அசைநிலையும் இறுதியில் வரத் தொடுக்கப்பட்டுள்ளது.

அந்தாதித்தொடை

செய்யுள்அடி ஒன்றின் இறுதியில் நின்ற எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த அடியின் முதலாக வருமாறு தொடுப்பது அந்தாதித் தொடை என்பர். அந்தமாக நின்றது ஆதியாக வருவது அந்தாதி. அந்தம்+ஆதி = அந்தாதி.

அடி 1. உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி

அடி 2. மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை

அடி 3. முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்

அடி 4. ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்

அடி 5. ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை

அடி 6. அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து

அடி 7. துன்னிய மாந்தரது என்ப

அடி 8. பன்னரும் சிறப்பின் விண்மிசை உலகே

‘உலகு’ எனத் தொடங்கி ‘உலகு’ என முடிந்து மண்டலித்து வரும் இப்பாட்டில் 6 ஆம் அடியின் அந்தம் ‘து’ என்னும் எழுத்து. அது ஏழாம் அடியின் ஆதியாக (து) வந்துள்ளது. இவ்வாறே ஏழாம் அடியின் அந்தம் ‘ப’ என்னும் எழுத்து, எட்டாம் அடியின் ஆதியாக வந்துள்ளது. இது எழுத்தந்தாதிக்குக் காட்டாகின்றது. முதலடியின், இறுதிச்சீர், ‘அவிர்’ என்னும் நிரையசையும் ‘மதி’ என்னும் நிரையசையும் கூடிய ‘கருவிளம்’ என்னும் வாய்பாட்டு ஈரசைச்சீர் ஆகும். இதன் இறுதி அசை ‘மதி’ என்பது இரண்டாம் அடியின் ஆதியானது. எனவே, அசை அந்தாதி.

இரண்டாம் அடியின் அந்தம் ‘முக்குடை’ என்ற ஈரசைச்சீர். இந்தச் சீர் (முக்குடை) முழுதும் மூன்றாம் அடியின் ஆதிச்சீராக வந்துள்ளது. இவ்வாறே ‘ஆசனம்’ என்னும் மூன்றாம் அடியின் அந்தச்சீர், நான்காம் அடியின் ஆதிச்சீராக வந்துள்ளது. ’அறிவு’ என்னும் ஐந்தாம் அடியின் அந்தச்சீர் ஆறாம் அடியின் ஆதிச்சீராக வந்துள்ளது. ஆக, இவை மூன்றும் சீர்அந்தாதிகள் ஆகும். நான்காம் அடிமுழுதும் ஆறாம் அடியாக மடங்கி வந்துள்ளது. ஆதலால், இஃது ஒன்றும் அடியந்தாதி. இதன்கண் எழுத்தந்தாதி, அசையந்தாதி. சீர்அந்தாதி, அடியந்தாதி என்ற நால்வகை அந்தாதிகளையும் காண்கின்றோம்.

5.3.4 சொல்லும் பொருளும் என்ற நிலையில் அமையும் தொடை ஒரு செய்யுளின் ஒவ்வோர் அடியின் தொடக்கத்திலும் சொல்லால் முரண்பாடு தோன்றவும் அல்லது பொருளால் முரண்பாடு தோன்றவும் பாடலைக் கட்டுவது/தொடுப்பது முரண்தொடை எனப்பெறும்.

காலையும் மாலையும் கைக்கூப்பிக் கால்தொழுதால்

மேலை வினையெல்லாம் கீழவாம் – கோலக்

கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்

பெருமானைச் சிற்றம் பலத்து

-இது தண்டியலங்கார மேற்கோள் வெண்பா. இது, சொல்விரோத அணிக்குக் காட்டாக்கப்படுகின்றது. மாறுபாடு, முரண், விரோதம் என்பன ஒரு பொருளை உணர்த்திவரும் சொற்களாம். இதனுள்வரும் காலை, மாலை; கை, கால்; மேல், கீழ்; கருமை, வெண்மை; செம்மை, பசுமை; பெருமை, சிறுமை என்பன முரண் சொற்களாம்.

கார்காலத்து மாலையில் குயில்கள் சோர்வெய்தும்; மயில்கள் ஆர்த்து நடம் இடும். இவை. ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருள்கள்.

சோலை மயிலும் குயில்மழலை சோர்ந்தடங்க

ஆலும் மயிலினங்கள் ஆர்த்தெழுந்த – ஞாலம்

குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த

விளர்ந்த துணைபிரிந்தார் மெய்

இப்பாடலிலும் குளிர்ந்த, கறுத்த; சிவந்த, விளர்ந்த எனும் சொல்முரண்களைக் காண்கின்றோம். ஆனால், இவ்விருவகை முரண்களும் பாடலின் அடிதோறும் முதல்சீரில் இடம்பெறவில்லை.

இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்

நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை

பொன்னின் அன்ன நுண்தாது உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மடமகள்

பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே

இந்தப் பாடலில் இருள், நிலவு; சிறு, பெரு எனச் சொல்முரணும், இரும்பு, பொன் என்னும் பொருள்முரணும் ஒவ்வோர் அடியின் முதலிலும் வருமாறு தொடுக்கப்பட்டுள்ளன. ஆதலின் முரண்தொடை ஆகின்றது. அடிதொறும் வரும் சொற்களால் முரணானமையால் இது, அடிமுரண்தொடை என்றும் கூறப்பெறும்.

5.3.5 சூன்ய (zero) நிலையில் அமையும் தொடை இராமன்-பெயர்ச்சொல், ஒருவனின் பெயர். ‘இராமன் பாடினான்’ என்னும்போது ‘இராமன்’ என்பது பெயரன்று; அது வினைமுதல். வினைமுதல், செய்பவன், கருத்தா, எழுவாய் என்பன ஒருபொருளையே குறிப்பனவாகும்.

வேற்றுமை என்பதன் பெயர்க்காரணத்தைக் கூறுகின்றார், தெய்வச்சிலையார் என்னும் உரையாசிரியர். அது வருமாறு:

“என்னை வேறுபடுத்தியவாறு எனின், ஒருபொருளை ஒருகால் வினைமுதல் ஆக்கியும், ஒருகால் செயப்படுபொருளாக்கியும், ஒருகால் கருவி ஆக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும், ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு வேறுபடுத்தது என்க”

தெய்வச்சிலையாரின் விளக்கமாகிய வெளிச்சத்தில் பார்த்தால், எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதுகூட வெற்றுரையாகி விடுகின்றது. உருபு உண்டு என்றாகின்றது.

இராமன் – பெயர்ப்பொருள்

இராமன் படித்தான் – வினைமுதல் பொருள்

வினைமுதல் பொருளாக்கிய வேற்றுமை உருபு எது? முதல் வேற்றுமை உருபு. முதல் வேற்றுமைக்கு உருபு உண்டா? இல்லை. உருபு இல்லையெனின் பெயர்ப்பொருள் வினைமுதல்-எழுவாய்- செய்பவன் என வேறாக்கப்பட்டது எவ்வாறு? அப்படியா? உருபு இருக்கின்றது; தெரியவில்லை. தெரியாத அதனைச் ‘சூன்ய உருபு’ என்பர். இராமன்+0+ படித்தான் என்றும் எழுதிக்காட்டுவர். இப்படிப் பலவற்றைக் காட்டலாம்.

Sheep grazes the grass-ஆடு புல்லை மேய்கிறது

Sheep graze the grass-ஆடுகள் புல்லை மேய்கின்றன

(S= morph)

Deer goes fastly-மான் விரைவாக ஓடுகிறது

Deer go fastly-மான்கள் விரைவாக ஓடும் (S; morph)

(படர்க்கை ஒருமைக்கு grazes. goes என வரும் என்பதும், he. She. It-க்கு வினையொடு ‘s’ வரும்; ‘They’ என்னும் படர்க்கைப்பன்மையில் நிகழ்கால வினையில் ‘s’ வராது என்பன கொண்டு மேற்கண்ட எடுத்துக்காட்டை நோக்க வேண்டும்).

செந்தொடை என்பது நாம், மேலே கண்ட மோனை முதலாகிய தொடைகளுள் எதுவொன்றும் அமையாமல் தொடுப்பதாகும். அஃதாவது எந்த வகைத் தொடைநயமும் இன்றித் தொடுப்பது செந்தொடை.

எ-டு:

பூத்த வேங்கை வியன்சினை ஏறி

மயிலினம் அகவும் நாடன்

நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே’

இந்தப் பாட்டில் எவ்வகைத் தொடையும் அமையவில்லை.

முதல் வேற்றுமைக்கு உருபு இல்லையெனினும் ஏதோ ஒன்று பெயர்ப்பொருளை வினைமுதல் பொருளாக்குகின்றது. அது சூன்ய உருபு. அதுபோலச் செந்தொடைப்பாட்டில் எந்தத் தொடையும் இல்லையெனினும் நயம் இருக்கின்றது. அது, சூன்யத்தொடை எனலாம் போலத் தோன்றுகின்றது.

செவ்விய ஒலியும் ஒலியாலாகும் மொழியும் இல்லையானாலும் குழந்தையின் சொல்லைச் ‘செங்கீரை’ என்கின்றோம். கீரை-சொல். ‘செங்கீரை’ என்பது பிள்ளைத்தமிழில் பிரசித்தம். ஏ, என்றா, எனா, உம்மை, என்று, என, ஓடு என்னும் எண்ணிடைச் சொற்கள் யாதொன்றும் வாராமல் ‘சாத்தன் கொற்றன் தேவன் பூதன் நால்வரும் வந்தார்’ என்றாற்போன்று வருவதைப் ‘பெயர்ச்செவ்வெண்’ என்பர். செங்கீரை, செவ்வெண் என்பன போன்று யாதொரு தொடையும் வாராமல் தொடுப்பதைச் செந்தொடை என்றார்கள் போலும்.

‘பூத்த …………….தோனே’ என்னும் செந்தொடைப்பாட்டு, தோழி அறத்தொடு நின்றதாக அமைந்து கழிபேரின்பம் தருகின்றது.

5.4 தொகுப்புரை

மாணாக்கர்களே! நீங்கள் மனத்தில் நிறுத்த வேண்டிய அடி, தொடை ஆகியன பற்றிய செய்திகள் கீழ்வருவன:

அடி என்பது செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது.

சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலிஒழுக்கு தளை; சீர்களின் தொடர் இயக்கம் செய்யுளுக்கு வடிவியக்கம். இவ்வடிவியக்கம் ‘அடி’ என்பதாகும்.

அடி என்பது, பாவின் அடி; சீரடி என்பது பாவின் ஓரடி, சீரடி வகைகள் ஐந்து. அவை: குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி, இப்பெயர்கள் அளவடியின் குறைவு, மிகுதி ஆகியவை கருதி வைத்த பெயர்கள்.

ஒரு தளையை உண்டாக்குவது குறளடி; இருதளையை உண்டாக்குவது சிந்தடி; மூன்று தளையை உண்டாக்குவது அளவடி; நான்கு தளையைத் தோற்றுவிப்பது நெடிலடி; ஐந்தின் மிக்க தளைகளை உண்டாக்குவது கழிநெடிலடி.

வெண்பாவிற்குச் சிற்றெல்லை இரண்டடி; ஆசிரியப்பாவிற்குச் சிற்றெல்லை, மூன்றடி; கலிப்பாவிற்குச் சிற்றெல்லை நான்கடி; வஞ்சிப்பாவிற்குச் சிற்றெல்லை மூன்றடி என்பது, அமிதசாகரரின் மதம்(கொள்கை). இரண்டடி என்பது மயேச்சுரர் மதம். சிந்தடியால் இயன்றால் இரண்டடி; குறளடியால் இயன்றால் மூன்றடிச் சிற்றெல்லை என்பாரும் உளர்.

படைப்பாளிகளாகிய கவிஞர்களுக்கு யாப்புலகம் வழங்கியுள்ள சலுகைகள் பல. அவற்றுள் ஒன்று எவ்வகைப் பாவையும் கவிஞர்கள் தம்முள்ளத்து அளவையாகக் கொண்டு எல்லை வரம்பின்றிப் பாடலாம் என்பது.

தொடுக்கப்படுவது தொடை. கவிஞர்கள் தாம் படைக்கும் செய்யுளைச் செவிநுகர் கனிகளாக்க, எழுத்து சொல் பொருள் இலக்கணங்களில் இடம்பெறும் மொழிக்கூறுகள் சிலவற்றை ஆள்கின்றனர். அம்மொழிக்கூறுகள் செய்யுளை அழகும் சுவையும் உடையதாக்குகின்றன. அதை / அந்த உத்தியைத் தொடை என்கிறோம்.

தொடைகள், மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடைகள் என எட்டு வகைப்படும்.

எண்வகைத் தொடைகளை மொழியிலக்கணக் கூறுகள் அடிப்படையில் புரிதல் பயன் கருதி ஐந்து வகையாகப் பகுத்துப்படித்தோம். இத்தொடைகள் வேறுவகையாகவும் பகுக்கப்படும்.

பாடம் - 6

தொடை வேறுபாடுகள்

6.0 பாட முன்னுரை

இனிய மாணாக்கர்களே! முந்தைய பாடத்தின் முற்பகுதியில், சீர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்ற

குறளடி

சிந்தடி

அளவடி/நேரடி

நெடிலடி

கழிநெடிலடி

என்னும் சீரடிகள் ஐந்தனைப் பற்றியும், நால்வகைப் பாக்களுள் ஒவ்வொன்றுக்கும் உரிய அடிச்சிறுமை, அடிப்பெருமை குறித்த வரையறைகளைப் பற்றியும் படித்தோம். பிற்பகுதியில், செய்யுளில் இடம்பெறும் தொடை என்னும் அழகையும், இடம்பெறும் அத்தொடைகள் எட்டு வகையின என்பதனையும் பார்த்தோம். எண்வகைத் தொடைகளாவன:

1. மோனைத் தொடை (அடிமோனை)

2. இயைபுத் தொடை (அடி இயைபு)

3. எதுகைத் தொடை (அடி எதுகை)

4. முரண்தொடை (அடி முரண்)

5. அளபெடைத் தொடை (அடி அளபெடை)

என்பனவும், செய்யுள் முழுதும் நோக்கிய பார்வையில் பெயர் பெறுவனவாயும், முன்னடியின் இறுதியும் தொடரும் பின்னடியின் ஆதியும் நோக்கிப் பெயர் பெறுவனவாயும், வந்த சொல்லே நான்கு முறையென வந்து அடுக்கு அடி நிரப்புவனவாயும் வருவனவாகிய

6. அந்தாதித் தொடை

7. இரட்டைத்தொடை

8. செந்தொடை

என்பனவும் கூடிய எட்டாம்.

இவ்வெட்டனையும், நாம், மொழிக்கூறுகளின் அடிப்படையில்,

அ. எழுத்து நிலையில் அமையும் தொடை

ஆ. சொல் நிலையில் அமையும் தொடை

இ. எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை

ஈ சொல்லும் பொருளும் எனும் நிலையில் அமையும் தொடை

உ. சூன்ய நிலையில் அமையும் தொடை

என முன்பு ஒரு பயன் கருதிப் பகுத்தோம்.

அந்தாதித்தொடையில் எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீர் அந்தாதி, அடியந்தாதி என வகைமை இருந்தாலும் அவற்றைச் செய்யுளின் ஓரடியின் நான்கு சீர்களில் அமையும் வகையந்தாதியாகக் கருதுவதில்லை. காரணம், அந்தாதி என்பது ஓரடியின் அந்தத்திலுள்ள எழுத்து அசைசீர் முதலாயின அடுத்த அடியின் ஆதியாக வருவதால் என்பதாம். அஃதாவது அடியை நோக்கியதாக அந்தாதித் தொடை அமைகின்றது என்பது கருத்து.

இரட்டைத்தொடை என்பதும் அடியை நோக்கியதுதான். ஓரடியின் நான்கு சீரிலும் வந்த சொல்லே வரவேண்டும் என்பது அதன் இலக்கணம் என்பதால், சீர்நோக்கி இன்மையும், உண்மையும் கண்டு வகைமைப்படுத்தல் இயலாதல்லவா? எனவே, இரட்டைத் தொடையில் வேறுபாடு/விகற்பம் இல்லை என்பது இல்லை என்பது தெளிவு.

செந்தொடையில் ஒரு தொடைவகையும் அமையவில்லையென்று உறுதி செய்யச் செய்யுள் முழுவதும் காணவேண்டும். யாதொரு தொடையும் அமையப் பெறாத செந்தொடையில் விகற்பம்/வேறுபாடு வருமாறு இல்லை. எனவே, செந்தொடையையும் கொள்ளவில்லை.

இவை மூன்றும் தவிர்ந்த ஏனைய மோனை முதலாகிய தொடைகள் ஐந்தனில் விகற்பங்கள்/வேறுபாடுகள் உளவாகின்றன. மோனைத் தொடை முதலிய பிறவற்றின் வேறு பெயர்களாகிய அடிமோனை, அடி இயைபு, அடி எதுகை, அடிமுரண், அடி அளபெடை என்னும் பெயர்களை உற்று நோக்குங்கள். ஓர் உண்மை விளங்கும். அது அடிமோனை, அடிஇயைபு என எடுத்து மொழியப் பெறுதலால் சீர்மோனை, சீர் இயைபு என்னும் வகையும் உண்டு என்பதே ஆகும்.

ஆகவே, நாம் தொடைகளை அடிகளில் வரும் தொடைகள், சீர்களில் வரும் தொடைகள் என வகைப்படுத்தலாம் என்றாகின்றது. அதன்படி, மேலே எண் வகை எனப்பெற்ற தொடைகளை அ. விகற்பமுடைய தொடைகள் ஆ.விகற்பம் இல்லாத தொடைகள் எனப் பகுக்கலாம். இலக்கண விளக்கச் செய்யுளியல் இவ்வகையில் நோக்கியுள்ளது.

மோனை எதுகை முரண்இயைபு அளபடை

ஆனஅவ் வைந்தும் … …

… … … …

தொடையும் அத்தொடையின் விகற்பமும் ஆகும்

செந்தொடை இரட்டையோடு அந்தாதி எனவும்

வந்த/வகையான் வழங்கவும் பெறுமே

இனி விகற்பமுடைய தொடைகளையும் விகற்பங்களுக்கு யாப்பிலக்கண நூலார் இட்ட பெயர்களையும், மொத்த விகற்பங்கள் எத்தனை என்பதையும் காண்போம்.

6.1 விகற்பம் உடைய தொடைகள்

விகற்பம் உடைய தொடைகள் ஐந்து. அவை:

1. மோனைத் தொடை

2. இயைபுத் தொடை

3. எதுகைத் தொடை

4. முரண் தொடை

5. அளபெடைத் தொடை

6.1.1 விகற்பம் ஒரு விளக்கம் விகற்பம், வேறுபாடு, வகை என்பன திரிபு எனும் ஒரே பொருளைப் பயக்கும் சொற்கள் ஆகும்.

தொடை விகற்பம் என்பதே அதன் பன்மையை உணர்த்துகிறது. பல வகையாவன: இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.

தொடை விகற்பங்களைக் காணப் புலவர்கள் எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அல்லது நேரப்பெற்ற (நேர்ந்து கொள்ளப்பட்ட) அடி, அளவடி என்பதை முன்னர்ப் பார்த்தோம். இதன் காரணமாகவே அளவடி, நேரடி எனவும் பெற்றது என்பதையும் முன்னம் பார்த்துள்ளோம். சீர்கள் நான்கனைக் கொண்ட அடி, நேரடி அல்லது அளவடி. அளவடி என்பதை மரம் அல்லது செடியாகக் கருதி விளக்கம் காண்போம்.

செடி அல்லது மரத்தின் உறுப்புகள் வேர், அடி(தண்டு), கிளை, தழை போல்வனவாகும். வேர்ப்பகுதியை முதல் சீராகவும், அடிப்பகுதியை இரண்டாம் சீராகவும், கிளைப்பகுதியை மூன்றாம் சீராகவும், தண்ணிய தழையும் பூக்களையும் கொண்ட தலைப்பகுதியை (தண்டலையை) நான்காம் சீராகவும் பாவித்துக் கொள்ளுங்கள். செடி அல்லது மரத்தின் எவ்வெப்பகுதிகளில் அடர்த்தி – செறிவு – கதுப்புக் காணப்படுகின்றதோ அவ்வப்பகுதிகளைத் தொடையமைந்த சீர்களாகக் கருதிக் கொண்டு கண்டால் விகற்பங்களைப் புரிந்து கொள்ளுதல் உங்களுக்கு எளிமையாகும்.

மரமோ செடியோ தரையின் மேல் நிற்க வேண்டுமென்றால், ஆணிவேருடன் (Primary Root) பக்கவேர்கள் (Lateral Roots) கிளைவேர்கள், வேர்த்தூவிகள் ஆகியவற்றின் தொகுதி வேண்டும். அதுபோலத் தொடைவிகற்பங்களை அறிய இன்றியமையாது ஓர் அடியின் முதல் சீரில் யாதேனும் ஒரு தொடை அமைந்தே வரல் வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.

6.1.2 சீர்த்தொடைகளின் பெயரும் பெயர்க்காரணமும் செய்யுள் ஒன்றின் எல்லா அடிகளிலும் அமையும் தொடைகளை ‘அடித்தொடைகள்’ என்றும், ஓர் அடியின் சீர்களுக்குள்ளே அமையும் தொடைகளைச் ‘சீர்த்தொடைகள்’ என்றும் வழங்குகின்றோம். அளவடி அல்லது நேரடி ஒன்றிலுள்ள நான்கு சீர்களில் சிலவற்றில் தொடை அமைந்தும் சிலவற்றில் அமையாதும், நான்கு சீர்களிலும் முற்ற அமைந்தும் வருவதனைக் கண்டு அவ்வகை விகற்பங்களுக்குப் பெயரிட்டுள்ளனர். அப்பெயர்கள் இணைத்தொடை முதலான ஏழு ஆகும். இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் முற்று என்பவற்றிற்கான பெயர்க் காரணத்தை, இனி, வரிசையாகக் காண்போம்.

இணை (1, 2 சீர்களில் அமைவது)

முள்ளங்கிச் செடியின் வேர்ப்பகுதி மட்டுமல்லாமல் தழைப் பகுதியும் செறிந்து காணப்படும். அதாவது வேர்ப்பகுதியாகிய முதல் பகுதியும், வேர்ப்பகுதியோடு இணைந்து காணப்படும் அடிப்பகுதியும் இரண்டாம் பகுதியும் செறிந்து/கதுவிக் காணப்படுவன. இவ்வாறு, ஓரடியின் முதலிரு சீர்களில் மோனை முதலியன அமைந்து மூன்று, நான்கு சீர்களில் அவை, அமையாது போவதை ‘இணை’ என்கின்றனர். இணை-துணை, சோடி, ‘கால்இணை’ ‘இணைமலர்ப் பாதம்’ என்று வருவதனைப் பாருங்கள். 1,2 சீர்களில் அமைவது இணை.

பொழிப்பு (1, 3 சீர்களில் அமைவது)

பொழிப்பு என்பதற்குச் ‘சிறப்பு’ என்பது பொருள். ‘பொழிப்பா டென்பது புகழெனப் படுமே’ என்பது அகராதி நிகண்டில் காணப்படும் நூற்பாவாகும். எவ்வகைப்பாவின் அடியிலும் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை முதலாய தொடைகள் அமையப் பாடுவது சிறப்பு. ‘நாற்சீரடி பொழிப்பு நன்றே’ என்பது இலக்கணச் சூடாமணி. யாப்பு நூல் உரையாசிரியர்கள் எல்லோரும் ‘பொழிப்பு’ச் சிறப்புடையது என்கின்றனர். சிறப்பும் புகழும் உண்டாக்கும் தொடையைப் பொழிப்புத் தொடை என்றனர் எனலாம். குடைமரம் எனப்படுவதன் முதல் பகுதியாகிய வேர்ப்பகுதியும் கிளைப்பகுதியாகிய மூன்றாம் பகுதியும் செறிந்து (கதுவிக்) காணப்படுவன. இரண்டாம் பகுதியாகிய அடிப்பகுதியிலும் நான்காம் பகுதியாகிய தலைப்பகுதியிலும் செறிவு காணப்படுவதில்லை.

அதுபோல, முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் தொடைநயம் அமையப்பெற்றும் இரண்டாம் நான்காம் சீர்களில் அமையப்பெறாமலும் வருவதைப் பொழிப்புத் தொடை என்கின்றோம்.

ஒரூஉ (1, 4 சீர்களில் அமைவது)

தென்னை மரத்தின் முதல் பகுதியாகிய வேர்ப்பகுதியில் அடர்த்தி – செறிவு – கதுவுதல் – காணப்படும். அவ்வாறே தலைப்பகுதியாகிய நான்காம் பகுதியிலும் செறிவு காணப்படும். ஏனையதாகிய நடுப்பகுதியில் செறிவு ஒருவி (நீங்கி)க் காணப்படும்.

“அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி”

(1) (2) (3) (4)

என்னும் இந்த நான்கு சீர்கள் கொண்ட அளவடியையும் பாருங்கள். இவ்வடியின் முதல் சீரில் ‘அ’ முதல் எழுத்தாக அமைந்துள்ளது. நான்காம் சீரிலும் ‘அ’ என்பது முதலெழுததாக வந்துள்ளது. எனவே, முதலெழுத்துச் சீரின்கண் ஒன்றிவருதலாகிய மோனை அமைப்பைக் காண்கின்றோம். இம்மோனை அமைப்பு இரண்டாம் மூன்றாம் சீர்களில் இல்லை. ஒருவி இருப்பதைக் காண்கின்றோம். இவ்வாறு அமைய வருவது ஒரூஉ எனப்பெறும்.

கூழை (1,2,3 சீர்களில் அமைவது)

கூழை என்பது கூந்தலையும் குறைவு அல்லது குறுமையையும் குறிக்கப்பயன்படும் சொல். அறல்மணலின் ஒழுக்குப் போல முதலில் பரந்து இறுதியில் குறைந்து காணப்படுவதால் மகளிர் கூந்தலைக் ‘கூழைக் கூந்தல்’ என்பர்.

கூழை என்பதன் பொருள் ’இறுதி அல்லது கடைசி’யுயாம்.

‘கூழை இரும்பிடிக் கைகரந்த தள்ள – பேழ்இரும்துறுகல்’ (குறுந்.111:4) என்ற இவ்வடியில் இடம்பெறும் ’கூழை என்பதற்குக் குறுமை என்பது பொருள். சீர்கள் நான்கினைக் கொண்ட அளவடியின் இறுதிச் சீரில் தொடையமையாது வருவது, அல்லது தொடையமைவு குறைந்து வருவது கூழைத் தொடையாயிற்று.

தாழையின் வேர்ப்பகுதியாகிய முதற்பகுதி வேரினால் செறிந்து கிடக்கும். மணற் பாங்கான இடத்தில் தாழை காணப்படுவதால் நிலைத்தன்மைக்காக அடிப்பகுதியில் ஊன்று வேர்களை (shift roots) விடுகின்றது காரணமாம். மூன்றாம் பகுதியாகிய மடல்பகுதியும் செறிந்து காணப்படும். அத்தகைய செறிவு பூ விடுவதற்காகத் தோன்றும் காம்புகளில் காணப்படாது. அஃதாவது, இறுதிப்பகுதி தவிர ஏனைய பகுதிகளில் செறிவு காணப்படுகின்றது. இவ்வாறே ஓர் அளவடியின் இறுதிச்சீர் ஒழித்து ஏனைய மூன்று சீர்களில் தொடை அமைய வருவது கூழைத் தொடையாம்.

‘அகன்ற அல்குல் அம்நுண் மருங்குல்’

இந்த அளவடியில் 1,2,3 ஆகிய மூன்று சீர்களில் மோனை வந்துள்ளது; இறுதிச்சீரில் வரவில்லை. இவ்வாறு இறுதிச் சீர் ஒன்றனில் மட்டும் தொடையமையாமல் வருவது கூழைத் தொடையாம்.

மேற்கதுவாய் (1,3,4 சீர்களில் தொடை அமைவது)

புளிய மரத்தின் முதற்பகுதியாகிய வேர்ப்பகுதி கதுவிக் கொண்டிருக்கும். இரண்டாம் பகுதி அடிப்பகுதி. இதன் அடிப்பகுதியில் செறிவு காணப்படாது. மூன்றாம் பகுதியாகிய கிளைப்பகுதியும் நான்காம் பகுதியாகிய தழைப் பகுதி (தலைப்பகுதி)யும் செறிவாகக் காணப்படுவன. ஆக, மரத்தின் மேற்பாதி அடர்ந்தும் கீழ்ப்பாதியில் அடர்த்தியின்றியும் காணப்படும். இவ்வாறு 1,3,4, பகுதிகளில் மட்டுமே கதுவிக் கிடப்பதைக் காண்கின்றோம். இவ்வமைப்பு மேற்கதுவாய் என்னலாம்.

‘அரும்பிய கொங்கை, அவ்வளை அமைத்தோள்’

இந்த அளவடியில் இரண்டாம் சீரில் தொடை அமையவில்லை. ஏனைய 1,3,4 ஆம் சீர்களில் ‘அகரம்’ ஒன்றிவந்து மோனைத்தொடை அமைகின்றது. அடியின் பின்பாதியில் மோனைச் செறிவு; முன்பாதியில் செறிவு இல்லை. ஆதலின், மேற்கதுவாய்த் தொடை.

கீழ்க்கதுவாய் (1,2,4 சீர்களில் தொடை அமைவது)

கற்றாழைச் செடியின் முதல் பகுதியாகிய வேர்ப்பகுதி, வேர்களால் செறிந்து தோன்றும். மேலும் அடிப்பகுதியாகிய இரண்டாம் பகுதியும் மடல்களால் கதுவித் தோன்றும். இதன் மூன்றாம் பகுதியான நீண்டதொரு காம்பில் செறிவு காணப்படுவதில்லை. காம்பின் உச்சி நான்காம் பகுதி. உச்சியில் நான்கு மடல்களும் ஒரு பூவும் தோன்றுவன. இப்பகுதியும் அடர்ந்து காணப்படும்.

ஆக, முதல், அடி, தலை என்ற மூன்று பகுதிகள் கதுவிக் கொண்டிருக்கும். மூன்றாம் பகுதியாகிய காம்புப் பகுதியில் அடர்த்தி இருக்காது. இவ்வாறு கற்றாழை போலும் செடிகள் சில கீழே கதுவிய நிலையில் தோன்றுகின்றன.

‘அவிர்மதி அனைய திருநுதல் அரிவை’

என்ற அளவடியைப் பாருங்கள். இதன் 1,2,4 சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரும் மோனையழகைப் பார்க்க முடியும். இம்மோனை மூன்றாம் சீரில் இல்லை. இது. நமது ஒட்டுமொத்தப் பார்வையில் முன்பாதியில் தொடைச்செறிவு உடையதாகப்படுகின்றது. எனவே, இவ்வமைப்புக் கீழ்க் கதுவாய் எனப்படுகின்றது. இங்ஙனம் 1,2,4 சீர்களில் கதுவிவரும் தொடையைக் கீழ்க்கதுவாய்த் தொடை என்பர்.

முற்று (1,2,3,4 ஆகிய சீர்கள் எல்லாவற்றிலும் அமைவது).

‘அயில்வேல் அனுக்கி அம்பழைத்து அமர்ந்த’

என்னும் இந்த நேரடியைக் காணுங்கள். இதன்கண் உள்ள நான்கு சீர்களிலும் உள்ள முதலெழுத்து ‘அ’ என அமைகின்றது. இவ்வாறு முதலெழுத்து ஒன்றி வருவதை மோனை என்போம் அல்லவா? ஒரு சீரிலும் ஒழிதலின்றி எல்லாச் சீர்களிலும் முற்றாக (முழுதாக) மோனை முதலாயின (தொடைகள்) அமைவது முற்று எனப்பெறும்.

ஆலமரத்தின் முதல்பகுதி வேர்ப்பகுதி. இதனை முதல் சீராகக் கொள்ளுங்கள். இரண்டாம் பகுதி அடிப்பகுதி. இப்பகுதி புளி, மா, பலா போலச் செறிவின்றிக் காணப்படுவதில்லை. விழுதுகளை (Prop Roots) வீழ்த்தியுள்ளதால் அடிப்பகுதியும் செறிவுடன் காணப்படும். மூன்றாம் பகுதியாகிய கிளைப்பகுதியும் நான்காம் பகுதியாகிய தலைப்பகுதியும் (தழைப்பகுதியும்) ஆகிய இவ்விரு பகுதிகளும் செறிந்து காணப்படுவன), ஆக, நான்கு பகுதியும் அல்லது பகுதிகள் முற்றும் கதுவித் தோன்றும். இவ்வமைப்பை. 1,2,3,4 சீர்களில் மோனை முதலாயின ஒன்றி அமையும் முற்றுடன் ஒப்பவைத்துப் பாருங்கள்.

இனிய மாணாக்கர்களே. சில மரம் செடிகளில் காணப்பெறும் செறிவு போன்று நமது தமிழ்ப் பாடலடிகளில் வரும் தொடைகளும் செறிந்து காணப்படுகின்றன என்பதை இப்போது உணர்வீர்கள். இனித் தொடை விகற்பங்களைக் காண்போம்.

6.2 தொடை விகற்பங்கள்

மேலே, சீர்கள் நான்கால் இயன்ற அளவடிகளில் உள்ள சீர்களில் முற்றுமாக, சில சீர்களிலுமாக ஒன்றிவரும் தொடைகளின் விகற்பங்கள் இணை முதலான ஏழு என்பதை இதுவரை பார்த்தோம். ஒவ்வொரு வகையிலும் மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை என்னும் தொடைகள் ஐந்தும் வருமல்லவா? வரும். வர, அவை ஒவ்வொன்றனொடும் ஒவ்வொரு வகை என உறழ (5X7), முப்பத்தைந்து தொடை விகற்பங்கள் என விரியும்.

6.2.1 மோனைத் தொடை விகற்பங்கள் மோனைத் தொடை விகற்பங்கள் ஏழு. அவை இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை என்பனவாம்.

இணை மோனை

(காட்டு),

அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி

(1) (2) (3) (4)

1, 2 சீர்களில் இணைந்து முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது. 3, 4 சீர்களில் இத்தகைய ஒன்றுதல் இல்லை. எனவே, இணைமோனை.

பொழிப்பு மோனை

(காட்டு)

அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி

(1) (2) (3) (4)

1, 3 சீர்களில் சிறப்பாக (பொழிப்பாடாக) முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது. 2, 4 சீர்களில் (அஃதாவது ஒன்றை விட்டு ஒரு சீர்களில்) இத்தகைய ஒன்றுதல் இல்லை. எனவே, பொழிப்பு மோனை.

ஒரூஉ மோனை

(காட்டு)

அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி

(1) (2) (3) (4)

1, 4 சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது. 2, 3ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரவில்லை. ஒருவி வந்துள்ளது. (ஒருவுதல்-நீங்குகை.) எனவே, ஒரூஉ மோனை.

கூழை மோனை

(காட்டு)

அகன்ற அல்குல்’ அந்நுண் மருங்குதல்

(1) (2) (3) (4)

1, 2, 3ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது. கூழை (இறுதி)ச் சீராகிய 4ஆம் முதலெழுத்து ஒன்றி வரவில்லை. எனவே கூழைமோனை.

மேற்கதுவாய் மோனை

(காட்டு)

அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்

(1) (2) (3) (4)

1, 3, 4ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது. 2ஆம் சீரில் முதல் எழுத்து ஒன்றி வரவில்லை. (மேற்கதுவாய் – மேற்பகுதியில் கதுவி இருத்தல்) எனவே, மேற்கதுவாய் மோனை.

கீழ்க்கதுவாய் மோனை

(காட்டு)

அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

(1) (2) (3) (4)

1, 2, 4ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றுதலாகிய மோனை வந்துள்ளது. 3ஆம் சீரில் முதல் எழுத்துப் பொருந்தி வரவில்லை. 3, 4ஆம் 1, 2ஆம் சீர்களிலேயே செறிவு காணப்படுகிறது. எனவே, கீழ்க்கதுவாய் மோனை.

முற்று மோனை

(காட்டு)

அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த

(1) (2) (3) (4)

1, 2, 3, 4ஆம் சீர்களில் அஃதாவது சொல்லப்பட்ட நான்கு சீர்களிலும் மோனை வரத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆதலின் முற்றுமோனைத் தொடையாம்.

இம்மோனை விகற்பங்கள் ஏழும் வந்த செய்யுளை இணைத்துப் காண்போம்.

அதுவருமாறு:

அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி

அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி

அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்

அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்

அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த

கருங்கயல் நெடுங்கண் நோக்கம்என்

திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே”

6.2.2 இயைபுத் தொடை விகற்பங்கள் செய்யுளின் அடிகள் தோறும் இறுதி எழுத்து, அசை, சொல் ஆகியன இயைந்து வருமாறு தொடுப்பது அடியியைபுத் தொடை என்றால், ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபுத் தொடை. இயைபுத் தொடை விகற்பங்கள் ஏழு. அவையாவன: இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ இயைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்றியைபு.

இணை இயைபு (1,2 ஆம் சீர்களில் இயைபு)

(காட்டு)

மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே

(4) (3) (2) (1)

இஃது அளவடி. இந்த அளவடிக்குள் நான்கு சீர்கள் உள்ளன. நான்கு சீர்களுள் 1, 2ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ‘லே’ இயைந்து வந்துள்ளதால் சீர்இயைபு. 3, 4ஆம் சீர்களில் இயைபு இல்லை.

பொழிப்பு இயைபு (1,3 சீர்களில் இயைபு)

(காட்டு)

மற்றதன் அயலே முத்துறழ் மணலே

(4) (3) (2) (1)

இதன்கண் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து ஒன்றி வந்துள்ளது. இரண்டாம் நான்காம் சீரில் இத்தகைய இயைபு இல்லை. எனவே, பொழிப்பு இயைபுத் தொடை

ஒரூஉ இயைபு (1,4 சீர்களில் இயைபு)

(காட்டு)

நிழலே இனியதன் அயலது கடலே

(4) (3) (2) (1)

இவ்வடியில் ஒன்றாம் நான்காம் சீர்களில் இயைபு வந்துள்ளது. இரண்டாம் மூன்றாம் சீர்களில் இயைபு வரவில்லை; ஒருவியுள்ளது. எனவே, ஒரூஉ இயைபுத் தொடை.

கூழை இயைபு (1,2,3 சீர்களில் இயைபு)

(காட்டு)

மாதர் நகிலே வல்லே இயலே

(4) (3) (2) (1)

இந்த அடியில் உள்ள மூன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில் ‘லே’ என்று எழுத்து இறுதியில் பயில்கின்றது. கூழைச் சீரில் (இறுதிச் சீரில்) இயைபு இல்லை. கூழைக் கூந்தல் போலப் பரந்தும் கடைகுறைந்தும் வரத் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூழை இயைபுத் தொடை.

மேற்கதுவாய் (1,3,4 ஆம் சீர்) இயைபு

(காட்டு)

வில்லே நுதலே வேற்கண் கயலே

(4) (3) (2) (1)

இவ்வடியில் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இயைபு காணப்படுகின்றது. இரண்டாம் சீரில் இயைபு இல்லை. முன்பகுதியாகி கீழ்ப் பகுதியைவிடப் பின்பகுதியாகிய மேல்பகுதியில் செறிவு காணப்படுகின்றது. ஆதலின், இவ்வாறு அமைவது மேற்கதுவாய் எனப்பெறுகின்றது.

கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4 ஆம் சீர்களில் ‘இயைபு’)

(காட்டு)

பல்லே தவளம் பாலே சொல்லே

(4) (3) (2) (1)

இதன்கண் அமைந்த நாக்கு சீர்களில் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களின் ஈற்றெழுத்து ‘லே’ என்பது ஒன்றி வந்துள்ளது. ஈற்றெழுத்து ஒன்றி வருவது ‘இயைபு’ என்பதைப் படித்து வந்துள்ளீர்கள். இவ்வடியிலுள்ள மூன்றாம் சீரின் இறுதி எழுத்து ‘லே’ என்பதாக இல்லை. அடியின் பின்பகுதியாகிய மேற்பகுதியைவிட முன்பகுதியாகிய கீழ்ப்பகுதியில்தான் இயைபு கதுவி (செறிந்து) இருப்பதைக் காண்கின்றோம். எனவே இவ்வாறு அமையத் தொடுப்பதைக் கீழ்க்கதுவாய் என்கின்றோம்.

முற்று இயைபு (1,2,3,4 ஆம் சீர்கள் முற்றிலும் இயைபு)

(காட்டு)

புயலே குழலே மயிலே இயலே

(4) (3) (2) (1)

நான்கு சீர்களைக் கொண்டு இயலும் இவ்வளவடியின் சீர்கள் எல்லாவற்றிலும் முற்றாக (முழுமையாக) ‘லே’ என்னும் இறுதி எழுத்து ஒன்றிவருவதைக் காண்கின்றோம். இறுதி எழுத்து முதலியன (அசை, சொல்) ஒன்றுவது தானே இயைபு என்று படித்து வருகின்றோம். சீர்கள் எல்லாவற்றினும் முற்றாக இயைபுவருவது, முற்றியைபுத் தொடையாம்.

“மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே

மற்றதன் அயலே முத்துறழ் மணலே

நிழலே இனியதன் அயலது கடலே

மாதர் நகிலே வல்லே இயலே

வில்லே நுதலே வேற்கண் இயலே

பல்லே தவளம் பாலே சொல்லே

புயலே குழலே மயிலே இயலே

அதனால்

இவ்வயின் இவ்வுரு இயங்கலின்

எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே”

6.2.3 எதுகைத் தொடை விகற்பங்கள் எதுகை, செய்யுளின் அடிதோறும் வரின், அது அடிஎதுகை என அழைக்கப்பெறும் என்பதையும் ஓரடியின் சீர்களுக்குள்ளே அமையும் எதுகை, சீர்எதுகை என அழைக்கப்பெறும் என்பதையும், சீர் எதுகைத் தொடை இணை எதுகை, பொழிப்பெதுகை, ஒரூஉஎதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை என எழுவகைப்படும் என்பதையும் முன்னர்ப்பார்த்தோம். இப்போது அவற்றுக்கான சான்றுகளை அல்லது காட்டுகளைக் காண்போம்.

இணை எதுகை (எதுகை 1,2 சீர்களில் வரல்)

(சான்று)

பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்திப்

(1) (2) (3) (4)

எதுகை, ஒன்று, இரண்டு என இணைந்து வந்த சீர்களில் காணப்பெறுகின்றது. மூன்று நான்கு ஆகிய சீர்களில் காணப்படவில்லை. எனவே, இணை எதுகைத் தொடை.

பொழிப்பெதுகை (எதுகை 1,3 சீர்களில் வரல்)

(சான்று)

பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி

(1) (2) (3) (4)

எதுகை என்னும் இரண்டாம் எழுத்து ஒன்றுதல் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் காணப்பெறுகின்றது. இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் காணப்பெறவில்லை. பொழிப்பு – சிறப்பு. இவ்வமைப்பில் எதுகை பொருந்திவருவது பொழிப்பெதுகைத் தொடை.

ஒரூஉ எதுகை (எதுகை 1,4 சீர்களில் வரல்)

(சான்று)

மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய

(1) (2) (3) (4)

இந்த எதுகை இந்த அளவடியிலுள்ள ஒன்றாம் நான்காம் சீர்களில் அமைந்துள்ளது; இடைநின்ற இரண்டாம் மூன்றாம் சீர்களில் அமையவில்லை, இரண்டாம் மூன்றாம் சீர்களில் வருவதனின்றும் ஒருவியுள்ளது. எனவே, இது, (சீர்) ஒரூஉ எதுகைத் தொடை.

கூழை எதுகை (எதுகை 1,2,3 சீர்களில் வரல்)

(சான்று)

நன்னிறம் மென்முலை மின்னிடை வருந்தி

(1) (2) (3) (4)

காட்டப்பெற்ற இந்த அளவடியில் அமைந்துள்ள முதல் மூன்று சீர்களில் ‘ன்’ என்னும் இரண்டாம் எழுத்துப் பொருந்தி வந்துள்ளது. ’கூழை’ என்றும் இறுதிச்சீரில் எதுகை வரவில்லை. வருவதினின்றும் குறைந்துவிட்டது. பரந்து (விரிந்து வந்து) வந்து இறுதி குறையும் அறல் ஒழுக்குப்போல உள்ளது. எனவே, இவ்வமைப்பில் வந்ததால் கூழை எதுகைத் தொடை.

மேற்கதுவாய் எதுகை (1,3,4 சீர்களில் எதுகை பயிலல்)

(சான்று)

என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை

(1) (2) (3) (4)

இந்த நேரடியிலுள்ள சீர்கள் நான்கனுள் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுவதாகிய எதுகை இடம்பெற்றுள்ளது. இரண்டாம் சீரில் இடம்பெறவில்லை. இவ்வடியில் முன்பகுதியைவிட, முன்பகுதியின் மேலதாய பின்பகுதியில் எதுகையின் அடர்த்தி காணப்பெறுகின்றது. இவ்வகையில் அமைந்துவரத் தொடுக்கும் எதுகைத் தொடை மேற்கதுவாய் எதுகை எனப்பெறும்.

கீழ்க்கதுவாய் எதுகை (1,2,4 சீர்களில் எதுகை வருதல்)

(சான்று)

அன்ன மென்பெடை போலப் பன்மலர்

(1) (2) (3) (4)

இச்சீர்களுள் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களில் எதுகை பயில்கின்றது. மூன்றாம் சீரில் பயிலவில்லை. இந்த நேரடியில் பின்பகுதியாகிய மேல்பகுதியை விட, மேல்பாதியின் கீழ்ப்பகுதியாகிய முன்பகுதியில் எதுகையின் செறிவு காணப்படுகின்றது. இவ்வாறு அமைந்து வருவதைக் கீழ்க்கதுவாய் எதுகைத் தொடை என்பர்.

முற்று எதுகை (எதுகை நான்கு சீர்களிலும் முற்ற அமைவது)

(சான்று)

கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய

(1) (2) (3) (4)

இந்த அளவடியின் எல்லாச் சீர்களில் முற்றாக -முழுதுமாக எதுகை வருகின்றது. இவ்வாறு முழுதுமாக வருமாறு தொடுக்கப்படும் எதுகைத் தொடை, முற்றெதுகைத் தொடை எனப்பெறும்.

பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்திப்

பன்னருங் கோங்கின் நன்னலம் கவற்றி

மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய

நன்னிற மென்முலை மின்னிடை வருந்தி

என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை

அன்ன மென்பெடை போலப் பன்மலர்க்

கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய

மயிலேய் சாயல்அவ் வாணுதல்

அயில்வேல் உண்கண்எம் அறிவுதொலைத் தனவே

6.2.4 முரண்தொடை விகற்பங்கள் மாணாக்கர்களே, நாம், முரண்தொடை விகற்பங்கள் என்று சொல்லுவது நான்கு சீர்களைக்கொண்ட ஓரடியில், அஃதாவது அளவடியில் நின்ற சீர்களுக்குள் வருமாறு தொடுப்பதாகிய முரண் தொடைகளின் வேறுபாடுகளையே ஆகும் என்பதை உளங்கொளல் வேண்டும். முரண்தொடை விகற்பங்கள் ஏழு. அவை, இணைமுரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் என்றும் தொடை விகற்பங்களாம். இவற்றுக்கான சான்றுகளைக் காண்போம்.

இணைமுரண் (1,2 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று)

சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு

(1) (2) (3) (4)

சீர்கள் நான்கனைக் கொண்ட இவ்வளவடிக்குள் அமைந்த முதலாம் இரண்டாம் சீர்களில் ’சிறுமை’ ’பெருமை’ என்ற முரண் சொற்கள் இடம்பெறுகின்றன; சொல்முரண், 1,2 ஆம் சீர்களில் இந்தச் சொல் முரண் அமைந்து வருவதால், இணை முரண் தொடை எனப்படுகின்றது.

பொழிப்பு முரண் (1,3 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று)

சுருங்கிய நுசுப்பில் பெருகுவடம் தாங்கி

(1) (2) (3) (4)

இந்த அளவடியில் அமைந்துள்ள சீர்கள் நான்கனுள் முதல்சீரின் சொல்லும் மூன்றாம் சீரின் சொல்லும் தம்முள் முரணிச் சுருங்கல், பெருகல் என வருமாற்றைக் காண்கின்றோம். இவ்வாறு ஒன்றாம் மூன்றாம் சீர்களில் முரண்தொடை காணப்பெறுதலால் இதனை (இவ்வமைப்பில் வருவதனை) பொழிப்பு முரண் தொடையென வழங்குவர்.

ஒரூஉ முரண் (1,4 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று)

குவிந்துசுணங்கு அரும்பிய கொங்கை விரிந்து

(1) (2) (3) (4)

இந்தச் சீர்களுள் முதலாம் சீரில் ‘குவிந்து’ என்ற சொல்லும் நான்காம் சீரில் ‘குவிந்து’ என்பதற்கு மாறான-முரண்பட்ட விரிந்து என்ற சொல்லும் பயில்கின்றன. பயின்று முரண்தொடை ஆகின்றது. இந்த இரு (1,4) சீர்களுக்கு இடையில் நின்ற இரண்டு மூன்றாம் சீர்களில் முரண் அமையவில்லை, ஒருவி நிற்கின்றது. எனவே, இவ்வகை அமைப்பில் முரணுவதை ‘ஒரூஉ முரண்தொடை’ என்பர்.

கூழை முரண் (1,2,3 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று)

சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்

(1) (2) (3) (4)

சீர்கள் நான்கனுள் முதல் மூன்றில் (1,2,3 ஆம் சீர்களில்) முறையே ‘சிறிய’ ‘பெரிய’ என்ற சொற்களும் ‘நிகர்’ என்ற ஒப்புப் பொருளமைந்த சொல்லும் வந்து தம்முள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதைக் காண்கின்றோம். நான்காம் சீரில் முரண் இன்மையும் காண்கின்றோம். அடிக்கூந்தல் பரந்து நுனிக் கூந்தல் சிறுத்துக் காண்பதுபோலவும் ஆற்றில் அறல்மணல் ஒழுக்குப்போலவும் இவ்வகைத் தொடை இருக்கின்றது. ஆதலால், இதனைக் கூழை முரண்தொடை என்பர்.

மேற்கதுவாய் முரண் (1,3,4 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று)

வௌ்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்

(1) (2) (3) (4)

இது நேரடி அல்லது அளவடி. இதனுடய சீர்கள் நான்கு. நான்கனுள் முதல் சீரில் வெண்மை எனும் பண்பைக் குறித்த ‘வெள்’ என்னும் சொல் இடம் பெறுகின்றது; மூன்றாம் சீரில் செம்மையைக் குறிக்கும் ‘சேய்’ என்னும் சொல் காணப்படுகின்றது; நான்காம் சீரில் கருமை என்னும் சொல் வந்துள்ளது. இம்மூன்று சொல்லும் தம்முள் பொருளால் முரணுவன. இத்தகு முரண் அமைந்த சொல்லொன்றும் அமையப்பெறாத சீராக இரண்டாம் சீர் இருக்கின்றது. அடியின் பின்பாதி முன்பாதியைவிட முரணமைப்பைக் கொண்டுள்ளது. முன்னதை நோக்கப் பின்னது மேல்வருவது தானே! எனவே, இவ்வகையில் முரண் தொடை அமைவதை மேற்கதுவாய் என்கின்றனர்.

கீழ்க்கதுவாய் முரண் (1,2,4 சீர்களில் முரண் அமைதல்)

(சான்று)

இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்

(1) (2) (3) (4)

இதனில் வரும் நான்கு சீர்களும் மூன்றாம் சீர் தவிர்ந்த ஏனைய ஒன்று இரண்டு நான்காம் சீர்களில் பொருள்முரண் அமைந்துள்ளது. இருக்கை-அமர்ந்தநிலை; நிலை-நின்ற நிலை; இயக்கம் -சஞ்சரிக்கும் நிலை. நான்காம் நிலையென ஒன்றுண்டு; அது, கிடக்கை. மேற்குறித்த மூன்று நிலைகளும் தம்முள் முரணும் பொருளின. இங்ஙனம் முரணத் தொடுப்பது முரண் தொடை. இம்முரண் இவ்வளவடியின் பின்பாதியை விட முன்பாதியேலேயே கதுவிநிற்கின்றது. பின்னது மேலது; மேலதை நோக்கப் பின்னது கீழது அன்றோ! ஆதலின் இவ்வகையில் தொடுப்ப அமையும் முரண் தொடையைக் கீழ்க்கதுவாய் முரண் என்றனர்.

முற்று முரண் (1,2,3,4 ஆம் சீர்கள் முற்றிலும் முரண் அமைதல்)

(சான்று)

துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாது

(1) (2) (3) (4)

முதல்சீரில் உள்ளது ‘துவர்’ எனும் சொல். இது, துவர்ப்புச் சுவை என்னும் பொருளது. இரண்டாம்சீரில் உள்ளது ‘தீம்’ எனும் சொல். இது, இனிப்பு என்னும் பொருளைத் தருவது. மூன்றாம் சீரில் உள்ளது ‘உவ’ எனும் சொல். இது, மகிழ்வு என்னும் பொருளில் வருவதாம். நான்காம் சீரில் உள்ளது ‘முனி’ எனும் சொல். இது, வெறுப்பு என்னும் பொருளைப் பயப்பது. இந்நான்கு சொல்லும் ஒன்றுக்கொள்று முரண்பட்டனவாதல் காணலாம். இவ்வாறு நின்ற சீர்கள் நான்கிலும் முரண்வரத் தொடுப்பது முற்று முரண்தொடையாகும்.

“சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு

சுருங்கிய நுசுப்பின் பெருகுவடந் தாங்கிக்

குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து

சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைகள்

வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும்

இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்

துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்தெனை முனியாய்

என்றும் இன்னணம் ஆகுமதி

பொன்திகழ் நெடுவேல் போர்வல் லோயே”

6.2.5 அளபெடைத் தொடை விகற்பங்கள் அடியளபெடைத் தொடை எனபது செய்யுளில் வருவது. சீர் அளபெடைத் தொடை என்பது செய்யுள் அடி ஒன்றனுள் வருவது. அளவடிகளில் நான்கு சீர்கள் உள்ளன. இவற்றுள் சீர் அளபெடை தோன்றுவது முதல் சீரில் நிலைக்கின்றது. ஏனைய மூன்று சீர்களில் மாறிமாறி அமைவதாய் உள்ளது. ஏன்? நான்கு சீர்களிலும் முற்ற அமைவதாயும் உள்ளது. இந்த அமைதல் வேறுபாட்டால் அளபெடைத் தொடையில் விகற்பங்கள் வந்துறுகின்றன. அவை இணை முதல் முற்று வரையுள்ள ஏழாம். அவற்றைக் காட்டுகளுடன் தெரிந்துகொள்வோம்.

இணை அளபெடைத் தொடை(1,2 சீர்களில் அளபெடை வருதல்)

(காட்டு)

தாஅள் தாஅ மரைமலர் உழக்கி

(1) (2) (3) (4)

முதல் சீர் ‘தாள்’ என்பது. இதன் முதலெழுத்து நெடில் அளபெடுக்க அசையேற்றுச் சீர் நிரம்புகின்றது. இதுபோலவே தாமரை என்ற சொல்லின் முதல்நெடில் ‘தா’ என்பது அளபெடுக்கின்றது. எடுத்து அளபெழுத்து அசையாகின்றது. பின்னர், ஈரசை என்ற வகையில் சீர் நிரம்புகின்றது. இதனை மேல் வருங்காட்டுகளிலும் கொள்ள வேண்டும். இங்கு, ஒன்று இரண்டாம் சீர்களில் அளபெடை வருவதைக் காண்கிறோம். இணைந்த இரண்டு சீர்களில் அளபெடுத்து வருமாறு தொடுப்பது இணையளபெடைத் தொடையாம்.

பொழிப்பு அளபெடைத் தொடை (1,3 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று)

பூஉக் குவளைப் போஒது அருந்திக்

(1) (2) (3) (4)

இதுவும் அளவடி. முதல் சீரில் நின்ற ஓரெழுத்து ஒருமொழி அளபெடுத்து அசைகொண்டது. கொண்டு, சீர் நிரப்புகின்றது. மூன்றாம் சீரில் நிற்கும் நெடில் தொடர்க்குற்றியலுகரம்(போது) வருமொழி ‘அகர’ உயிர்ஏற இடங்கொடுத்துப் ‘போ’ என ஓர் அசையாய் நிற்கவே, அளபெடுக்கின்றது. எடுத்து அசைபெற்றுச் சீரை நிரப்புகின்றது. எனவே, அவையும் சீராம். முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் அளபெடை பயில்கின்றது. முதல் சீரிலும்

மூன்றாம் சீரிலும் தொடைபயில்வதைப் பொழிப்புத் தொடை என்பர். இப்பொழிப்பு வகையில் அளபெடை வருவதால் பொழிப்பு அளபெடைத் தொடை என்றல் மரபு.

ஒரூஉ அளபெடைத் தொடை(1,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று)

காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய்

(1) (2) (3) (4)

இவ்வளவடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் அளபெடை அமையுமாறு காண்கின்றோம். இடைநின்ற இரண்டாம் மூன்றாம் சீர்களில் அளபெடை வாராமல் ஒருவி நிற்பதையும் காண்கின்றோம். இடையில் ஒருவி முதல் சீரிலும் நான்காம் சீரிலும் அளபெடை வருவாறு தொடுப்பது ஒரூஉ அளபெடைத் தொடை என வழங்கப் பெறும்.

கூழை அளபெடைத் தொடை(1,2,3 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று)

மாஅத் தாஅள் மோஒட்(டு) எருமை

(1) (2) (3) (4)

இந்த நேரடியில் முதல் மூன்று சீர்களும் அளபெடை பயிலுமாறு தொடுக்கப்பட்டுள்ளன. கடையொரு சீராகிய கூழைச் சீரில் அளபெடை பயிலவில்லை. முன் கூறப்பட்ட ஆற்றின் அறல்மணல் ஒழுக்கை எண்ணிப்பாருங்கள். தொடக்கத்தில் விசாலித்தும் (பரந்து அகன்றும்) இறுதியில் சுருங்கி இற்றும் முடியும் தோற்றம் நினைவுக்கு வரும். அதுபோலத் தொடக்கச் சீர்களில் மிகுந்தும் இறுதிச் சீரில் இன்றியும் வருமாறு அளபெடையைத் தொடுக்கும் இவ்வகையை கூழை அளபெடைத் தொடை எனல் மரபாம்.

மேற்கதுவாய் அளபெடைத் தொடை (1,3,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று)

தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல்

(1) (2) (3) (4)

இந்த நேரடியில் பின்பகுதியிலுள்ள மூன்றாம் நான்காம் சீர்களில் அளபெடை பயில்கின்றது. முன்பகுதியில் உள்ள இரு சீர்களில் முதலில் நின்ற சீரில் மட்டுமே அளபெடை பயில்கின்றது; இரண்டாம் சீரில் பயிலவில்லை. மேல்பாதியில் அளபெடை செறிந்து தோன்றுவதால் மேற்கதுவாய் அளபெடைத் தொடை எனப்படுகின்றது.

கீழ்க்கதுவாய் அளபெடைத் தொடை (1,2,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று)

மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர்

(1) (2) (3) (4)

இவற்றுள் ஒன்று இரண்டு நான்கு ஆகிய சீர்களில் அளபெடை பயில்கின்றது; மூன்றாம் சீரில் பயிலவில்லை. முதல்சீரும் இரண்டாம் சீரும் கொண்ட கீழ்ப்பாதியில் அளபெடையின் செறிவு-கதுவுதல் காணப்படுகின்றது. மூன்றாம் சீரையும் நான்காம் சீரையும் கொண்ட மல்பகுதியில் இத்தகைய செறிவு காணப்படவில்லை. எனவே, செறிவு உள்ள பகுதியை நோக்கிக் கீழ்க்கதுவாய் அளபெடைத்

முற்று அளபெடைத் தொடை (1,2,3,4 சீர்களில் அளபெடை அமைதல்)

(சான்று)

ஆஅ னாஅ நீஇள் நீஇர்

(1) (2) (3) (4)

இந்த அளவடியில் அமைந்தள்ள எல்லாச் சீர்களிலும் முற்றாக (முழுதுமாக) அளபெடைத்தொடை வருமாறு தொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, முற்றுமாகத் தொடுக்கப்பெறும் காரணம் பற்றி முற்று அளபெடைத் தொடை எனப்பெறுகின்றது.

தாஅள் தாஅ மரைமலர் உழக்கிப்

பூஉக் குவளைப் போஒது அருந்திக்

காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய்

மாஅத் தாஅள் மோஒட் டெருமைத்

தேஎம் புனல்இடை சோஒர் பாஅல்

மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர்

ஆஅ னாஅ நீஇள் நீஇர்

ஊரன் செய்த கேண்மை

ஆய்வளைத் தோளிக்கு அலரா னாவே

6.3 தொடையும் தொடை விகற்பமும் (எண்ணிக்கை)

தொடைகள் மொத்தம் எட்டு. விகற்பம் பெறும் தொடைகள், ஐந்து. தொடை விகற்பங்கள் ஏழு. இவை இரண்டும் உறழ ஐந்து X ஏழு – முப்பந்தைந்து தொடைகள். எனவே, தொடையும் தொடை விகற்பங்களும் மொத்தமாக நாற்பத்தி மூன்று என்ற எண்ணிக்கையாம்.

விகற்பம் பெறும் தொடைகள்       : 5

விகற்பமிலாத் தொடைகள்          : 3

___

ஆக மொத்தத் தொடைகள் மட்டும் : 8

___

விகற்பம் உடைய தொடைகள்

(5) ஐந்தும், தொடை விகற்பம் (7)

உறழ (பெருக்க) 5X7 =

விகற்பங்கள் மொத்தம் 3

—-

ஆக, தொடையும் விகற்பமும் 43

—-

6.3.1 தொடைக்கும் தொடை விகற்பத்துக்கும் இடையே அமையும் வேற்றுமைகள் தொடையென்பது செய்யுளில் அடிதோறும் பார்க்கப்படுகிறது. தொடை விகற்பம் என்பது அடிகளில் அமைந்துள்ள சீர்கள் தோறும் பார்க்கப்படுவது.

தொடை, செய்யுளின் மேலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கப்படுவது. தொடை விகற்பம் என்பது இடமிருந்து வலமாகப் பார்க்கப்படுவது.

குறிப்பு:

தொடை விகற்பம், இடமிருந்து வலமாகப் பார்க்கப்படுவது என்றாலும், இயைபுத் தொடை மட்டும் வலமிருந்து இடமாகப் பார்க்கப் படுவதாய் உள்ளது. காரணம், இயைபுத் தொடை, இறுதிச் சீரில் இருந்து தொடங்குவதாய் இருப்பதேயாம்.

6.4 தொகுப்புரை

இனிய மாணாக்கர்களே, இப்பாடத்தின் வழி நாம் படித்த செய்திகளைத் தொகுத்துக் காண்போம். காண்பது, நினைவில் இறுத்துவதற்குத் துணையாகும்.

தொடைகள் எட்டனுள் ஐந்தே விகற்பம் பெறும் தொடைகள், அந்த ஐந்தாவன: மோனைத் தொடை, இயைபுத் தொடை, எதுகைத் தொடை, முரண் தொடை, அளபெடைத் தொடை.

விகற்பம் பெறாத தொடைகள் மூன்று, அவை: இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை, செந்தொடை. இவை மூன்றும் விகற்பம் பெறாமைக்கான காரணங்கள்:

1. இரட்டைத் தொடையில் வந்த சொல்லே நான்கு முறை இரட்டித்தல்.

2.அந்தாதி சீர்நோக்கியது அன்று: அடியை நோக்கியது.

3.செந்தொடையில் எந்தத் தொடையும் இல்லை.

விகற்பம் என்பதன் பொருள் வேறுபாடு, வகை என்பனவாம்.

இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் வகைகள் உளவாகின்றன.

இணை முதலாய ஏழனுக்குமான பெயர்க்காரணங்கள் காணப்பட்டன.

இணை மோனை தொடைகள் ஐந்தனோடு தொடை விகற்பங்கள் ஏழனை உறழ உண்டாகும் விகற்பங்களின் விரி 35ஐயும் காட்டுகளுடன் கண்டறிந்தோம்.

தொடையும் தொடை விகற்பங்களும் மொத்தம் 43 என்பதனையும் கணக்கிட்டறிந்தோம்.