130

கைவந்த கொழுநரொடும் உள்ளப் புணர்ச்சிக்

கருத்தான் அகத்துஒடுங்க

( மீனா .

பிள் .

34 )

( நுடங்க = அசைய , கொடிஞ்சி = தேரின் உறுப்பு , பொலம் = பொன் , அமரகம் = தேவருலகம் , பொன்மேருவில்லி = சிவன் , கொழுநர் = கணவன் )

இவ்வாறு அக இலக்கிய மரபாகிய இயற்கைப் புணர்ச்சி இங்குக் கூறப்படுகிறது .

2.5.2 புறம் தரும் ஆட்சி

அகப்பொருள் போற்றப் படுவது போலவே புறப்பொருளும் இந்நூலில் போற்றப் பட்டுள்ளது .

தடாதகைப் பிராட்டிக்கு எனத் தனி ஆட்சிக்குரிய நிலப்பரப்பு உள்ளது .

இந்த நிலப்பரப்பின் எல்லைக் கற்களாக குலமலைகள் எட்டும் அமைந்துள்ளன .

உலகில் பகை ஒழித்து உலகை ஒரு குடையின் கீழ்க் கொண்டுவரத் தடாதகையாள் விரும்புகிறாள் .

ஒரு குடையின் கீழக் கொண்டு வந்த பின் தென்குமரிக்கு ஒப்ப வடகடல் துறையிலும் மண்ணு மங்கலம் ( வெற்றிக்குப்பின் நீராடல் செய்தல் ) செய்கிறாள் .

இதனைப் புலவர்

இமயத் தொடும்வளர் குலவெற்பு எட்டையும்

எல்லைக் கல்லில்நிறீஇ

எண்திசை யும்தனிகொண்டு புரந்து

வடாது கடல்துறைதென்

குமரித் துறைஎன ஆடும் மடப்பிடி

( மீனா .

பிள் .

39 )

( வெற்பு = மலை , நிறீஇ = நிறுத்தி , மடம் = இளமை , வடாது = வடக்கு , பிடி = பெண்யானை ( போன்ற நடை )

என்று மீனாட்சியின் வெற்றிச் சிறப்பினைப் புகழ்ந்துள்ளார் .

இவ்வாறாகப் புலவர் தமிழ் இலக்கிய அக , புற மரபுகளையும் பிள்ளைத்தமிழில் சேர்த்துப் புனைந்திருப்பது படித்து மகிழ்வதற்கு உரியது .

அகமும் புறமும்

தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து நோக்கும்போது ஓர் உண்மை புலனாகும் .

சங்க அக இலக்கிய மரபும் புற இலக்கிய மரபும் காலம் தோறும் தமிழிலக்கியங்கள் மீது செல்வாக்குச் செலுத்தி இருப்பதை அறியமுடியும் .

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் அச்செல்வாக்கு உண்டு .

2.5.1 அகம் தரும் இயற்கைப் புணர்ச்சி

தலைவனும் தலைவியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடுதல் செய்வர் .

இதனை இயற்கைப் புணர்ச்சி என்பர் .

உள்ளப்புணர்ச்சி என்றும் கூறுவர் .

தலைவனாகிய சிவனுக்கும் தலைவியாகிய தடாதகைப் பிராட்டிக்கும் ( மீனாட்சியம்மை ) இயற்கைப் புணர்ச்சி கயிலாயத்திலே நிகழ்கின்றது .

பொய்யோ என்று எண்ணும்படியான இடையை உடையவள் மீனாட்சி .

இவள் மேரு மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானைக் காண்கிறாள் .

உள்ளப்புணர்ச்சி தோன்றும் நிகழ்ச்சி மூலம் புலவர் இயற்கைப் புணர்ச்சி மரபை விளக்கிய திறம் பாராட்டிற்கு உரியது .

இதனைப் பின்வரும் பாடல் விளக்கும் .

பொய்வந்த நுண்இடை நுடங்கக் கொடிஞ்சிப்

பொலம்தேரொடு அமரகத்துப்

பொன்மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்றுஅம்மை

பொம்மல் முலை மூன்றில் ஒன்று

இவ்வாறு அக இலக்கிய மரபாகிய இயற்கைப் புணர்ச்சி இங்குக் கூறப்படுகிறது . 2.5.2 புறம் தரும் ஆட்சி

இமயத் தொடும்வளர் குலவெற்பு எட்டையும் எல்லைக் கல்லில்நிறீஇ

எண்திசை யும்தனிகொண்டு புரந்து

வடாது கடல்துறைதென்

குமரித் துறைஎன ஆடும் மடப்பிடி

( மீனா .

பிள் .

39 )

( வெற்பு = மலை , நிறீஇ = நிறுத்தி , மடம் = இளமை , வடாது = வடக்கு , பிடி = பெண்யானை ( போன்ற நடை )

என்று மீனாட்சியின் வெற்றிச் சிறப்பினைப் புகழ்ந்துள்ளார் .

இவ்வாறாகப் புலவர் தமிழ் இலக்கிய அக , புற மரபுகளையும் பிள்ளைத்தமிழில் சேர்த்துப் புனைந்திருப்பது படித்து மகிழ்வதற்கு உரியது .

தமிழின் தனிச்சிறப்புகள்

தமிழின் தனிப்பெரும் சிறப்புகளை எல்லாம் இப்பிள்ளைத்தமிழ் எடுத்துக் கூறுகின்றது .

குமரகுருபரர் சைவத்தையும் தமிழையும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் போற்றி உள்ளார் .

சங்கம் வைத்து மொழி வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு .

எனவே , மதுரை என்றவுடன் தமிழும் , தமிழ் என்றவுடன் மதுரையும் நினைவுக்கு வருவது இயல்பு .

இதை வெளிப்படுத்துவதுபோல்

தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி

( மீனா .

பிள் .

34 )

என்று மீனாட்சி தமிழோடு பிறந்ததாகக் கூறித் தமிழுக்கு ஏற்றம் தந்துள்ளார் .

2.6.1 பைந்தமிழ்ப் பின்சென்ற பசும் கொண்டல்

மேலும் தமிழுக்கு ஏற்றம் தரும் வகையில் , தமிழை இறைவனோடு தொடர்புபடுத்திப் பாடும் மரபும் உண்டு .

தமிழ் மீது திருமாலுக்குள்ள பற்றை வெளிப்படுத்தும் வகையில் , பிள்ளைத்தமிழில் ஒரு நிகழ்ச்சியைப் புனைந்துரைத்துள்ளார் குமரகுருபரர் .

பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்

பணைத்தோள் எருத்துஅலைப்பப்

பழமறைகள் முறைஇடப் பைந்தமிழ்ப் பின்சென்ற

பச்சைப் பசும்கொண்டலே

( மீனா .

பிள் .

2 )

( முடவு = வளைந்த , படப்பாய் = பாம்புப் படங்கள் உள்ள படுக்கை / திருமாலின் படுக்கை , பணை = திரண்ட , எருத்து = பிடரி , பழமறைகள் = வேதங்கள் )

என்ற பாடல் அடிகள் திருமாலைப் போற்றியுள்ளன .

திருமால் தமிழ்ப் புலவர் ஒருவருக்காகக் காஞ்சியை விட்டு நீங்கிய புராணக் கதையை இப்பாடல் அடிகள் விளக்கி உள்ளன .

• ஆழ்வார் வரலாறு

பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்னும் தொடர் திருமழிசை ஆழ்வார் வரலாற்றைக் குறிப்பிடுகின்றது .

திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்கு ஏற்ப அவர் பின்னால் திருமால் சென்றார் என்னும் பொருள் கொண்டது .

கிழவி ஒருத்தியை ஆழ்வார் இளம் பெண்ணாக மாற்றினார் .

இதனை அறிந்தான் பல்லவ மன்னன் .

ஆழ்வாரின் மாணவன் கணிகண்ணன் மூலம் தன்னையும் இளம் பருவத்தினனாக ஆக்குமாறு ஆழ்வாரை வேண்டினான் .

கணிகண்ணன் மறுத்தான் .

இதனால் மன்னன் அவனை நாடு கடத்தினான் .

இச்செய்தி அறிந்ததும் ஆழ்வார் ,

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய

செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

( கச்சி = காஞ்சி , பைந்நாகப்பாய் = பாம்புப் படுக்கை )

என்று பாடுகின்றார் .

உடனே திருமாலும் காஞ்சிபுரத்தை விட்டு அகன்றார் . தமிழ்ப் புலவருக்காகத் திருமால் இவ்வாறு செய்ததையே பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்று பிள்ளைத்தமிழ் குறிப்பிட்டுள்ளது .

2.6.2 அன்பின் ஐந்திணை

தமிழ்க்கடலின் அன்பின் ஐந்திணை எனத் தொடங்குவது இறையனார் அகப்பொருள் என்னும் இலக்கண நூலாகும் .

இந்த அகப்பொருளின் தெளிந்த அமுதமாகிய கூட்டினை உண்பவள் கலைமகள் என்ற செய்தியைப் பிள்ளைத்தமிழ் சுட்டி உள்ளது .

தெள்ளித் தெளிக்கும் தமிழ்க்கடலின் அன்பின்ஐந்

திணைஎன எடுத்த இறைநூல்

தெள்அமுது கூட்டுஉணும்

( மீனா .

பிள் .

9 )

( இறைநூல் = இறையனார் அகப்பொருள் , இலக்கணநூல் )

எனும் பாடல் அடிகள் மேல் கருத்தை விவரிக்கும் .

தமிழ் பற்றிய குறிப்புகளைப் பல்வேறு இடங்களில் குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார் .

இவ்வாறாகத் தமிழ் சிறந்த அடைமொழிகளுடன் போற்றப் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது .

தொகுப்புரை

நண்பர்களே !

இதுவரையும் தமிழ் இலக்கிய வகையில் ஒன்றாகிய பிள்ளைத்தமிழ் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் .

அச்செய்திகளை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள் .

பிள்ளைத்தமிழ் என்றால் என்ன என்பது பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள் .

பிள்ளைத்தமிழ் இலக்கிய அமைப்புப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் .

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள் .

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் வரலாற்றை அறிந்து கொண்டீர்கள் .

இப்பிள்ளைத்தமிழின் இலக்கிய நயம் வாய்ந்த பாடல்கள் பற்றியும் தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை இயற்றிய ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக .

விடை

2. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எந்த மன்னன் காலத்தில் அரங்கேற்றப்பட்டது .

விடை

3. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் நான்கின் பெயரைக் குறிப்பிடுக .

விடை

4. தொடுக்கும் கடவுட் பழம்பாடல் எனும் பாடல்வழி மீனாட்சியம்மையின் மாண்புகளை விளக்குக .

விடை

5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அக , புற மரபுகள் கையாளப்பட்ட விதத்தை விவரிக்க .

விடை

6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் வழியாக அறியப்பெறும் தமிழின் சிறப்புகளை விளக்குக .

பள்ளு இலக்கியம்

பாட முன்னுரை

தமிழ் நாட்டில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை மக்களிடையே மிகச் சிறப்புடன் இருந்த ஒரு வகைக் கூத்துக்கலை இலக்கியமே பள்ளு ஆகும் .

96 வகை பிரபந்தங்களுள் பள்ளும் ஒருவகை என்று சிற்றிலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுவர் .

பள்ளு என்பது பள்ளர்கள் எனப்படும் ஒரு சாதி மக்களின் வாழ்வியல் முறைகளைக் கதைப் போக்கில் விளக்கிக் கூறும் நாடக இலக்கியம் .

பள்ளு இலக்கியத்தின் மூலம் உழவர்களின் பழக்க வழக்கங்கள் , ஒழுகலாறுகள் , வேளாண்மைச் செயல் முறைகள் , பள்ளர்களிடையே வழங்கும் சமூகப் பழக்க வழக்கங்கள் , மரபுகள் , சடங்குகள் , குடும்ப வாழ்வியல் முறைகள் முதலான பல்வேறு செய்திகளை அறிய முடிகின்றது .

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓரளவு பாடுபொருள் மாற்றம் நிகழ்ந்துள்ளது .

அரசன் இறைவன் ஆகியோரைத் தலைமக்களாகக் கொண்டு இலக்கியங்கள் பாடப்பெற்றன .

பள்ளு இலக்கியம் சமூக அடிமட்ட மக்களைத் தலைவர்களாக மாற்றியது .

இந்தப் பாடத்தில் தமிழில் சிறந்து விளங்கும் பள்ளு இலக்கிய வகைமை பற்றிய செய்திகளை நாம் அறிய இருக்கிறோம் .

பள்ளு இலக்கியத்தின் தோற்றம்

சிற்றிலக்கியங்களுள் பள்ளும் , குறவஞ்சியும் தனிச்சிறப்புடையன .

தனிச் சிறப்பாவது , எளிய மக்களின் வாழ்வியலைக் காட்டுவது .

இதற்கு முன்பு சிற்றிலக்கியங்களில் தெய்வம் அல்லது மன்னன் இடம் பெற்றதை நினைவு கூர்தல் நன்று .

சிற்றிலக்கியம் மக்கள் இலக்கியமாக மாறியது பள்ளு , குறவஞ்சி போன்ற இலக்கியங்களில்தாம் . அதனால் இவற்றுக்குத் தனிச் சிறப்புண்டு .