134

இறைவன் முன்னர் அரங்கேற்றப்பட்ட சிறப்பினை உடையதால் இது ஞான உலா என்றும் பெயர் பெற்றது .

சில உலா நூல்கள் வருமாறு :

• திருக்கயிலாய ஞான உலா

சேரமான் பெருமாள் நாயனார் சிவபெருமான் மீது பாடியது இந்த உலா. இதுவே முழுமை பெற்ற முதல் உலா நூல் என்பர் .

திருமாலும் பிரம்மனும் காணமுடியாத பரம்பொருள் ஆகிய சிவபெருமானின் காட்சியைத் தேவர்கள் காண விரும்பினர் .

இறைவனும் சிறந்த அணிகளை அணிந்த சுந்தரத் ( அழகான ) தோற்றத்துடன் திருவீதியில் உலாச் சென்றார் .

இந்நிகழ்ச்சியை விவரிப்பதே இந்த உலா .

• ஆளுடைப் பிள்ளையார் திருவுலாமாலை

நம்பியாண்டார் நம்பி இயற்றியது .

திருஞானசம்பந்தர் பாட்டுடைத்தலைவர் .

இவ்வுலாவில் ஏழு பருவ மகளிரின் செயல்கள் தனித்தனியே கூறப் பெறாமல் , ஒன்றாகக் கூறப் பெற்றுள்ளன .

• திருவாரூர் உலா

அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றியது .

திருவாரூர் இறைவனைப் பற்றியது .

• திருக்கீழ்வேளூர் உலா

இந்த நூலையும் அந்தகக்கவி வீரராக முதலியாரே இயற்றி உள்ளார் .

இவ்வுலா வேளூர் இறைவன் கேடிலியப்பர் மீது பாடப்பட்டது .

• தமிழன் உலா

இநநூலை இராசை .

கி. அரங்கசாமி இயற்றி உள்ளார் .

தமிழர் வரலாற்று நாயகர்களின் பரம்பரையில் வந்த தமிழன் ஒருவன் உலா வருவதை இந்த உலா விவரிக்கிறது .

தமிழரின் வரலாறு , பண்பாடு , மொழி முதலியவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடாக இத்தலைவனை ஆசிரியர் படைத்து உள்ளார் .

தன் மதிப்பீ்டு : வினாக்கள் - I

1. பண்டைய உலாக்களில் பாட்டுடைத் தலைமை பெற்றோர் யார் யார் ?

விடை

2. உலா இலக்கணத்தை முதலில் கூறிய நூல் எது ?

விடை

3. உலாவில் இடம்பெறும் ஏழுவகைப் பருவ மகளிர் பெயர்களைக் குறிப்பிடுக .

விடை

4. முதல் உலா நூல் எது ?

அதன் ஆசிரியர் யார் ?

விடை

5. பண்டைய உலா நூல்களில் நான்கின் பெயரைக் குறிப்பிடுக .

மூவர் உலா

ஒட்டக் கூத்தர் இயற்றிய உலாக்கள் மூன்று .

1 ) விக்கிரம சோழன் உலா

2 ) குலோத்துங்க சோழன் உலா

3 ) இராசராச சோழன் உலா

இம்மூன்றும் பாட்டன் , தந்தை , மகன் ஆகிய மூவரையும் பாடுவன .

மூவரைப் பாடுவதால் மூவர் உலா என்ற பெயரையும் பெற்றது .

4.2.1 இராசராச சோழன் உலா

இராசராச சோழன் உலா சிறந்த கவிநயம் வாய்ந்த பாடல்களை உடையது .

இப்பாடல்கள் ' கண்ணி ' என்று கூறப்படும் .

( கண்ணி = இரண்டு அடிகள் கொண்டது) நண்பர்களே !

இராசராச சோழன் உலா பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம் )

4.2.2 நூலாசிரியர்

இந்நூலை இயற்றியவர் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார் .

கவிச் சக்கரவர்த்தி என்ற தொடர் கல்வெட்டு மூலம் தெரிய வருகின்றது .

( ஏ. ஆர் எண். 109 , 110 & 1027 , 8 ) ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் மீது பிள்ளைத்தமிழ் பாடி உள்ளார் . அரிசில் ஆற்றங்கரை மீது உள்ளது கூத்தனூர் என்பது .

இவ்வூர் ஒட்டக்கூத்தர் புலமைக்காகச் சோழர்கள் வழங்கியது என்பர் .

ஒட்டக்கூத்தர் இராசராசசோழன் உலாவைப் பாடி அரங்கேற்றம் செய்தார் .

ஒவ்வொரு கண்ணியும் அரங்கேறும் போது ஓராயிரம் பொன் மன்னன் வழங்கி உள்ளான் .

இக்கொடையைச் சங்கர சோழன் உலாவும் தமிழ் விடு தூதும் விவரித்துள்ளன .

ஒட்டக்கூத்தர் , விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார் .

தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார் .

இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1173 வரை வரையறை செய்வர் .

4.2.3 பாட்டுடைத் தலைவன்

இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய மகனே இராசராசசோழன் ஆவான் .

இவனே இவ்வுலாவின் தலைவன் .

தக்கயாகப் பரணி உருவாகக் காரணம் ஆனவனும் இவனே .

இவன் கி.பி. 1146-இல் அரசு கட்டில் ஏறியுள்ளான் .

இவனுக்குப் பல பட்டப் பெயர்கள் உண்டு .

சோழேந்திர சிம்மன் , கண்டன் , இராச கம்பீரன் , திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியன .

இவன் காலத்தில் கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டது .

இக்கோயில் சிற்பங்களால் புகழ் பெற்றுத் திகழ்கின்றது .

தாராசுரம் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்று அழைக்கப்படடது .

இக்கோயிலில் நாயன்மார் அறுபத்து மூவர் உருவங்கள் சிற்பங்களாக உள்ளன .

ஒட்டக்கூத்தர் சிலையும் உள்ளது .

4.2.4 இலக்கியச் சிறப்புகள்

இராசராசசோழன் உலாவும் அமைப்பு வகையில் இரு பிரிவாக உள்ளது .

1 ) பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் பற்றிய செய்திகள் முதலில் கூறப்படுகின்றன .

2 ) தலைவன் உலாப் போகும் காலத்தில் ஏழு பருவ மகளிரின் காதல் செயல்கள் அடுத்து இடம் பெறுகின்றன .

நண்பர்களே !

இவற்றைப் பற்றி விரிவாக நாம் பார்ப்போம் .

• பாட்டுடைத் தலைவனின் முன்னோர்கள்

இந்த உலாவில் இராசராசசோழனுடைய முன்னோர்களின் புகழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளது .

அவற்றை இனிக் காண்போம் .

ஒரு புறாவின் துன்பத்தைப் போக்குவதற்காகத் தன் தசையை அரிந்து தராசுத் தட்டில் இட்டவன் இவனது முன்னோன் ஆவான் .

வானோர் பகைவனாகிய சம்பரன் என்ற அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தவன் இவன் முன்னோன் .

மேல் கடலும் கீழ்க்கடலும் காவிரியால் ஒன்றாகிக் கலக்குமாறு இடையில் உள்ள மலைகளை எல்லாம் வெட்டியவன் .

ஆதிசேடனுடைய மகளாகிய நாகர் கன்னியை மணம் புரிந்து கொண்டவன் .

தெய்வத்தன்மை வாய்ந்தது மேருமலை .

இம்மலையில் புலிக்கொடி பறக்குமாறு செய்தவன் .

பொய்கையார் எனும் புலவர் களவழி நாற்பது எனும் நூலைப் பாடினார் .

அந்நூலுக்காகச் சேரன் ஒருவனின் கால் விலங்கை நீக்கியவன் .

போர்க்களம் சென்று போர்புரிந்து கொண்டே இருந்ததால் 96 விழுப்புண்களைத் தன் உடம்பில் பெற்றவன் .

மதயானைகளால் பதினெட்டுப் பாலை நிலங்களையும் அழித்தவன் .

உதகை என்ற ஊரினை எரித்தவன் .

கங்கை , நருமதை , கௌதமி , காவிரி முதலிய ஆறுகளுக்குச் சென்று தன் மனைவியுடன் நீராடியவன் .

கொப்பம் எனும் ஊரில் பெரும்போர் நிகழ்ந்தது .

யானைகள் பலவற்றைப் பேய்கள் உண்டு மகிழ்ந்தன .

இதனால் ஒப்பற்ற பரணி நூலைப் பெற்றவன் .

நாட்டில் உண்டாகிய கலகத்தை நீக்கியவன் ; சுங்க வரியைத் தவிர்த்தவன் , வறுமையை விரட்டியவன் .

தில்லைக் கோயிலைப் பொன்னால் வேய்ந்தவன் .

தில்லையின் சிற்றம்பலம் - பேரம்பலம் - மண்டபங்கள் - கோபுரங்கள் முதலியவற்றைப் பொன்னால் செய்தவன் .

தில்லைக் கோயிலில் இருந்த திருமால் மூர்த்தியை எடுத்துக் கடலில் மூழ்கச் செய்தவன் .

( இராச .

உலா. கண்ணி . 1-67 )

இவ்வாறாக இராசராசசோழனின் முன்னோர்களின் புகழ்மிக்க செயல்கள் கூறப்பட்டுள்ளன .

இத்தகு புகழ்மிக்க குலத்தில் தோன்றியவன் இராசராசன் என்று ஒட்டக்கூத்தர் விவரிக்கிறார் .

• பாட்டுடைத் தலைவன் சிறப்புகள்

பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் அடுத்துக் கூறப்பட்டுள்ளன .

மங்கலமான இராசராசன் என்ற பெயரை உடையவன் .

சூரிய குலத்தில் தோன்றியவன் .

திருமால் பத்து அவதாரங்களைச் செய்தார் .

என்றாலும் தேவர் பகை முழுவதையும் தொலைக்க முடியவில்லை .

எனவே எஞ்சிய தேவர் பகையைத் தொலைக்கச் சூரிய குலத்தில் இராசராசனாகப் பிறந்துள்ளான் என்பர் .

மனிதகுலத்தில் பிறந்து மேருமலை போன்ற உயர்ந்த புகழினை உடையவன் .

ஏழ்ஏழ் பதினான்கு உலகையும் வென்று தன் கீழ் வருமாறு செய்தவன் .

சக்கரப் படையை உடைய கண்ணன் .

சூரியனையும் குளிர வைக்கும் குளிர்ச்சி பொருந்திய வெண்கொற்றக் குடையை உடையவன் .

சூரிய குலத்திற்குத் திலகம் போன்றவன் .

இதனைப் பின்வரும் பாடல்அடி விவரிக்கிறது .

திருமகன் சீராசராசன் கதிரோன்

மருமகனாகி மறித்தும் திருநெடுமால்

ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்

பாதிப் பகை கடிந்து பாதிக்கு மேதினியில்

செந்தாமரையாள் திருமார்பில் வீற்றிருக்க

வந்தான் மனு வம்ச மாமேரு .

( இராச .

உலா.கண்ணி. 67-72 )

( கதிரோன் = சூரியன் , நெடுமால் = திருமால் , உம்பர் = தேவர் , மேதினி = உலகு , செந்தாமரையாள் = திருமகள் )

இவ்வாறாகப் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் இவ்வுலா நூலில் கூறப் பெற்று உள்ளன .

• மக்களின் மகிழ்வான பேச்சு

பாட்டுடைத் தலைவன் வீதியில் உலாப் போகிறான் .

அவனைக் காண ஆயிரக்கணக்கானோர் வீதியில் கூடி உள்ளனர் .

தலைவனின் அழகைப் பார்க்கின்றனர் .

அவனைப் பாராட்டிப் பேசுகின்றனர் .

நங்கையீரே !

இந்திரனது வச்சிரப்படையை ( ஒரு போர்க்கருவி ) அழித்த வில்லின் அழகைப் பாருங்கள் .

பெரிய கடலானது வற்றுமாறு அம்பு விடுத்த வில்லினைப் பாருங்கள் .

சோழ நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழக் காவிரி ஆறு செல்வதற்கு மலைகளை வெட்டி வழிவிட்ட வாள் ஆயுதத்தைப் பாருங்கள் .

சந்திரனை வென்று மேகத்தை அகற்றித் தூங்கெயில் எனும் மதிலை அழித்த வாள் படையைப் பாருங்கள் என்று மக்கள் தம்முள் பேசிக் கொள்கின்றனர் .

இதனைத்

தற்கோடி ஓரிரண்டு கொண்டு சதகோடி

கற்கோடி சென்ற சிலைகாணீர் - முற்கோலி

வட்ட மகோததி வேவ ஒருவாளி

விட்ட திருக்கொற்ற வில்காணீர் - வெட்டிச்

சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு - வாழ

வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய

மதியெறிந்து வல்லேற்று வான்எறிந்து தூங்கும்

பதியெறிந்த கொற்றவாள் பாரீர்

( இராச .

உலா. 165-172 )

( கோடி = முனை ; வில்முனை , சதகோடி = நூறு முனைகளுடைய வச்சிராயுதம் , மகோததி = கடல் , சிலை = வில் , வாளி = அம்பு , தூங்கும்பதி = தூங்கும் எயில் ( மதில் ) , சோணாடு = சோழநாடு )

என்று புலவர் பாடுகின்றார் .

சேரர்களின் வஞ்சி நகரத்தை வென்று திறையாகப் பெற்ற முரசத்தைப் பாருங்கள் . போரில் தோற்ற மன்னர்கள் பின்னர்த் தம் நாட்டைப் பெற்றுக் கொண்டனர் .

இதற்காக அம்மன்னர்கள் தலையில் மண் சுமந்து காவிரி அணையைக் கட்டினர் .

அவ்வாறு கட்டச் செய்த போர் முரசத்தைப் பாருங்கள் .

இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் கொன்று அவர் சூடிய முடிகளைக் கொண்ட மகுடத்தைக் காணுங்கள் என்று மக்கள் பேசுகின்றனர் .

இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும் :

...............................................................உதியர்

இடப்புண்ட பேர்இஞ்சி வஞ்சியில் இட்ட

கடப்ப முதுமுரசம் காணீர் - கொடுப்பத்

தரை கொண்ட வேற்று அரசர் தம்சென்னிப் பொன்னிக்

கரை கண்ட போர்முரசம் காணீர் .

( இராச .

உலா. 173-177 )

( இஞ்சி = மதில் , வஞ்சி = சேரர் நகர் , முது = பழைய / தொன்மையான , சென்னி = தலை , பொன்னி = காவிரி )

இவ்வாறாக மக்கள் பாட்டுடைத் தலைவனைப் பலவாறு புகழ்ந்து பேசுவதாகப் புலவர் பாடி உள்ளார் .

இப்புகழ் மொழிகள் பாட்டுடைத் தலைவனின் முன்னோர் செயல்களாக இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

• வணங்கினாள் பேதைப் பெண்

பேதைப் பருவம் உடைய பெண்மகள் ஒருத்தி , மன்னனைக் கண்டு பணியும் நிகழ்ச்சியைப் புலவர் நயம்பட விவரித்து உள்ளார் .

இப்பகுதியில் முதலில் பேதைப் பருவமகளின் இளம் பருவம் கூறப்பட்டுள்ளது .

பேதைப் பெண் எப்படிப்பட்டவள் ?

அண்மையில் பிறந்த கிளிக்குஞ்சு போன்றவள் .

தாய்ப்பாலை அண்மையில் மறந்த இளமான் போன்றவள் .

தோகை வளராத மயில் போன்றவள் .

சுற்றத்தார்க்கு மகிழ்ச்சி உண்டாக்கும் கரும்பு போன்றவள் .

முல்லை மாலை போன்ற பற்களை உடையவள் .

இது எம்முடைய பாவை ; இது எம்முடைய கொல்லிப்பாவை என்று கூறிப் பாவைப் பாட்டுப் பாடும் விதம் அறிந்தவள் என இப்பருவமகளின் இளம் பருவம் வருணிக்கப்படுகிறது .

இதனைப் பின்வரும் அடிகள் விவரிக்கும் .

பிறந்தணிய கிள்ளை பெறாத் தாயர் கொங்கை

மறந்தணிய செவ்விமடமான் - புறந்தணியத்

தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தால் சுற்றத்தார்க்கு

உவகை விளைக்கும் ஒரு கரும்பு - பாகைத்

தொடை போய முல்லைத் தொடையலே போல

இடை போய தூய எயிற்றாள்

( இராச .

உலா. 231-236 )

( கிள்ளை = கிளி , மஞ்ஞை = மயில் , தொடைபோய = தொடுக்கப்பட்ட , தொடையல் = மாலை , எயிறு = பல் )

இத்தகைய பேதைப் பருவ மகள் , உலா வரும் மன்னனைக் காண விரைகின்றாள் .

கோடிக் கணக்கான மாதர்களோடு தானும் பின் தொடர்ந்து ஓடுகின்றாள் .

மற்றவர் காணும் வேட்கை கண்டு தணிய , தானும் தணிகிறாள் .

சுற்றத்தாரும் பிறரும் பணியக் கண்டு தானும் பணிகிறாள் , மன்னன் மார்பில் அணிந்துள்ள ஆத்தி மாலையைக் காணுகிறாள் .

பட்டத்து யானையைப் பார்க்கிறாள் .

கோரம் என்ற பட்டத்துக் குதிரையையும் பார்க்கிறாள் .

கும்பிட்டாள் .

மன்னனுடைய கொடியில் தீட்டிய புலி உருவம் பார்த்து மயங்கினாள் , இதனைப் பின்வரும் அடிகள் விளக்கும் .

....................................பலகோடித்

தோகைய ரோடத் தொடர்ந்து ஓடி - தாகம்

தணியத் தணியத் தமரும் பிறரும்

பணியப் பணியப் பணிந்தாள் - மணிமார்பில்

ஆரந்தான் கண்டாள் அயிரா வதம் தொழுதாள்

கோரம் தெரியவும் கும்பிட்டாள் - வீரன்

படாகைப் பெரும் புலியும் பார்த்து ஒழிந்தாள் ( இராச .