175

[ விடை ]

4. பாரதியின் முன்னால் பாரதிதாசன் எந்தப் பாடலை இயற்றிப் பாடினார்?

1.4 சுயமரியாதை உலகில் E

பெரியாருடன் பாரதிதாசன்

காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் பங்கு பெற்றிருந்த பெரியார் ஈ.வெ.இராமசாமி , சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கும் , பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளுக்கும் தனிப்பந்தி வைத்து உணவிடுவதை அறிந்தார் .

அதற்கு ஆதரவளித்த தேசபக்தர் வ.வே.சு. ஐயரின் செயலைப் பெரியார் கண்டித்தார் .

காங்கிரஸ் இயக்கத்தவர் வருணாசிரமத்தையும் சாதிப் பாகுபாட்டையும் கண்டிக்காத செயலை வெறுத்த பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் .

பெரியாரின் முயற்சியில் சுயமரியாதைச் சங்கம் தோன்றியது .

பெரியார் தோற்றுவித்த ' குடி அரசு ' இதழ் சாதி மத எதிர்ப்பு , கடவுள் எதிர்ப்பு , வருணாசிரம எதிர்ப்பு ஆகியவற்றைத் தீவிரமாக வெளிப்படுத்தியது .

பாரதிதாசன் இந்த இதழால் கவரப்பட்டார் .

சுயமரியாதை வீரரானார் .

1938-இல் குடி அரசு ஏட்டில் பெரியார் ,

" தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல .

அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார் .

மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமன்றி , அவைகளை ஜன சமூகத்தில் பல வழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர் .

சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூற வேண்டுமானால் , பாரதிதாசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி என்றுதான் கூறவேண்டும் "

என்று எழுதியுள்ளதைக் கவிஞரின் மகனார் மன்னர் மன்னன் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார் .

நெருப்பில் துடித்திடும் மக்கட் கெல்லாம் நல்ல காப்பு - நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும் குளிர் தோப்பு .

என்று சுயமரியாதைப் பெருமையைப் பாரதிதாசன் பாடுவார் .

1.4.1 ' குடி அரசு ' உண்டாக்கிய மாற்றம்

கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும் , கதரே உடுத்தும் தேசபக்தராகவும் விளங்கிய பாரதிதாசனைச் சுயமரியாதை வீரராக்கியது பெரியாரின் ' குடி அரசு ' ஏடு. புதுவையில் நடந்த சுயமரியாதைப் பொதுக் கூட்டத்திற்கு வந்த பெரியாரைப் பாரதிதாசன் பாட்டு வரவேற்கின்றது .

சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்

தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா !

என்று பெரியாரைப் போற்றும் கவிஞரின் கவிதை ' குடி அரசில் ' வெளியிடப்படுகின்றது .

கடவுளர்களைப் பாடுவதைக் கவிஞர் அறவே விட்டு விட்டார் .

1929ஆம் ஆண்டில் அவரிடம் இம்மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது .

" சாதி வேற்றுமை சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமானால் குடியரசின் கொள்கைகளை அஞ்சாது கொள்ளத்தான் வேண்டும் "

என்று கவிஞர் கூறினார் .

கவிஞருக்கு ஊரில் இதனால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது .

அதை அவர் பொருட்படுத்தவில்லை .

1.4.2 ' புதுவை முரசு '

.

சிவப்பிரகாசம்

கவிஞர் சுயமரியாதைக் கருத்துகளைப் பறைசாற்ற சிவப்பிரகாசம் , நோயெல் என்ற நண்பர்களோடு சேர்ந்து ' புதுவை முரசு ' என்ற இதழைத் தொடங்கினார் .

இவ்வேட்டில் பல புனைபெயர்களில் தலையங்கம் , கவிதை , கட்டுரை , நூல் மதிப்புரை ஆகியவற்றைக் கவிஞர் எழுதினார் .

இவ்வேட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை காரணமாகக் கிறித்துவப் பாதிரிமார்கள் வழக்குத் தொடுத்தனர் .

இப்பத்திரிகைக்குச் சில காலம் குத்தூசி குருசாமியும் பூவாளூர் பொன்னம்பலனாரும் ஆசிரியராக இருந்ததுண்டு .

அரசின் நெருக்கடிக்கு உள்ளாகி இவ்வேடு நிறுத்தப்பட்டுவிட்டது .

1.4.3 திரைப்பட உலகில் சுயமரியாதைக் காற்று

தொடர்ந்து பல இதழ்களில் எழுதிவந்த பாரதிதாசனைத் திரை உலகம் அழைத்தது .

ஒளவை டி.கே. சண்முகம் அவர்களின் வற்புறுத்தலால் , ' பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் ' படத்திற்குக் கவிஞர் பாடல்கள் எழுதினார் .

அதற்குப் பிறகு தேசபக்தர் வ.ரா.வின் அழைப்பின்பேரில் ' ராமானுஜர் ' படத்திற்கு உரையாடலையும் பாடல்களையும் வரைந்தார் .

அவ்வளவு விருப்பமாக இப்பணியை அவர் செய்யவில்லை .

எனினும் , பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்கள் எடுத்த படங்களில் எழுதப்பட்ட பாடல்கள் வழியாக அவர் புகழ்பெற்றார் .

தட்டிப் பறித்தார் என்வாழ்வை என்று தொடங்கும் திரைப்பாட்டு இதோ ஒலிக்கிறது பாருங்கள் !

பாரதிதாசன் பணியாற்றிய திரைப்படங்கள் மற்றும் பாடல்களின் தொகுப்பு

1.5 காலத்தை மாற்றிய கருத்துப் புயல் E

பாரதிதாசன் தோன்றிய காலத்தில் தமிழகம் பழமையின் பிடியில் இருந்தது .

மூடப்பழக்கங்கள் , சாதிமத வேறுபாடுகள் , தீண்டாமை , மதுப்பழக்கம் , பெண்ணடிமை , இளமை மணம் , கைம்மைப்பழி ஆகிய பல தீமைகள் சமுதாயத்தின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருந்தன . தீண்டாமை

பெண்ணடிமை இளமை மணம்

எத்தனையோ இயக்கங்கள் தோன்றி வளர்ந்தும் இவற்றை மாற்ற முடியவில்லை .

எத்தனையோ முற்போக்குச் சிந்தனையாளர்கள் சமூகத்தை மாற்ற முயன்றும் முடியவில்லை .

கவிஞர் சுப்புரத்தினம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனார் .

மதுப்பழக்கம்

இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி

இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே !

என்று மனம் நைந்தார் .

நைந்து வருந்தி மனம் சோம்பிடவில்லை .

" கொலைவாளினை எடடா " என முழங்கினார் .

மரத்துப்போயிருந்த தமிழர்களைக் கனல் தெறிக்கும் கவிதைகளால் துடித்தெழச் செய்தார் .

என்று மனிதனின் உள்ளத்தில் ஓர் இயக்கத்தை ஏற்படுத்தினார் .

மனிதர்களில் உயர்வு தாழ்வு , மேல் கீழ் கற்பித்துச் சமூகத்தில் குப்பை எண்ணங்களும் கழிவு வேலைகளும் மலிந்த காலத்தில் கவிஞர் ஒரு புலவராக உருக்கொண்டார் ; மொழி நடையில் ஒரு மின்வேகம் ; கருத்தில் ஒரு புத்தொளி ; பார்வையில் ஒரு தொலைநோக்கு ; செயலில் ஒரு புரட்சி முதலியவற்றைக் கொண்ட கவிஞரால் சமூகம் ஒரு புதிய திருப்பத்தை எய்தியது .

1.5.1 மூடநம்பிக்கை எதிர்ப்பு

மூடநம்பிக்கை

சோதிடம் தனை இகழ் என்றார் பாரதி .

மனிதர்கள் இகழ்ந்தனரா ?

ஒருநாளில் இராகு காலம் , யமகண்டம் என வேலை செய்யாமல் இருக்கும் நேரத்தை வளர்த்தனர் .

சூலம் , அட்டமி , நவமி எனப் பயணத்திற்கு ஆகாத நாட்களெனக் கூறி இயங்காமல் சோம்பிக்கிடக்கச் செய்தனர் .

செவ்வாய் , வெறுவாய் எனக் கிழமையை ஒதுக்கினர் .

ஆனி , பங்குனி குடிபுகக் கூடாது எனப் புறக்கணித்தனர் .

' பூனை குறுக்கே வந்தால் போகும் காரியம் பாழ் ' என்றனர் .

எண்ணெய் கொண்டு எதிரே வந்தால் செல்லும் செயல் கைகூடாது எனக் கணித்தனர் .

தும்மினால் , தொடங்கிய செயல் அழிந்தது எனக் கருதினர் .

மனிதரில் சிலரைத் தொட்டால் தீட்டு என்றனர் .

சொர்க்கம் , நரகம் என்ற இரண்டு உலகங்கள் உள்ளன என்றும் மனிதர் செய்யும் புண்ணிய பாவங்களுக்குத் தகுந்தாற்போல இறப்புக்குப்பின் அங்குப் போய்ச் சேர்வர் என்றும் பகர்ந்தனர் .

ஏழு பிறவிகள் இருப்பதாக நவின்றனர் .

இவ்வாறு பகுத்தறிவுக்கு ஒவ்வாத எத்தனையோ நம்பிக்கைகளை நாட்டில் விதைத்து வளர்த்தனர் .

இவற்றைப் பாரதிதாசன் கடுமையாக எதிர்த்தார் .

என்று குழந்தைக்குப் பாடும் தாலாட்டிலேயே புரட்சிப்பண் பொருத்தினார் .

மூட நம்பிக்கைகளை வாழ்நாள் முழுவதும் அவர் கடுமையாகச் சாடினார் ; அம்முயற்சியில் வெற்றியும் கண்டார் .

1.5.2 இன உணர்வும் மொழிக்காப்பும்

சாதிமத வேறுபாடுகள்

தமிழன் என்ற இன உணர்வைப் பாரதிதாசன் வளர்த்தார் .

பிற பண்பாடுகளால் சீர்குலைந்து சிதையாதவாறு தமிழ்ப்பண்பாடு காக்கப்பெற வேண்டும் என அவர் முழங்கினார் .

தமிழர்களிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து தமிழர் அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அவர் உரைத்தார் .

இனத்தைச் செய்தது மொழிதான் ; இனத்தின்

மனத்தைச் செய்தது மொழிதான் .

என்று அவர் பாடுகின்றார் .

தமிழ் இனம் உலகில் புகழ்பெற்ற இனமாக வேண்டும் என்பது அவர் அவா .

தமிழ் மொழியைக் காப்பதற்காக அவர் களம் புகவும் சிறை செல்லவும் தயங்கவில்லை .

வேற்றுமொழிகளின் ஆதிக்க வேரைக் கல்லி எறியும் முயற்சியில் அவர் தலைநின்றார் .

இதோ இந்த இசைப்பாட்டைக் கேளுங்கள் !

1.5.3 புதியதோர் உலகம் செய்தவர்

அறிவியல் நோக்கு மலிந்த இக்காலத்தில் பழைமைகளும் , மூடநம்பிக்கைகளும் , பகுத்தறிவு அற்ற எண்ணங்களும் மண்டிக்கிடக்கும் சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர் எழுத்தின் ஒவ்வோர் அணுவையும் பயன்படுத்தினார் .

குடிக்கவும் கூழ் இன்றி இருக்கும் ஏழைக் கூட்டம் ஒருபுறம் ; பாலும் தேனும் தெவிட்டப் பஞ்சணையில் உருளும் செல்வர் கூட்டம் மறுபுறம் .

வானுயர்ந்த மாளிகைகளில் வாழ்வோர் ஒருபுறம் ; நடைபாதைகளில் நலிவோர் மறுபுறம் .

பாழ்நிலத்தைப் புதுக்கிப் பக்குவம் செய்தவர்கள் ஒருபுறம் ; அதில் வசதியாய் உட்கார்ந்து பஞ்சாங்கம் படிப்போர் மறுபுறம் .

கல்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்து தந்தோர் ஒருபுறம் ; அவற்றைப் பயன்படுத்திக் களிப்போர் மறுபுறம் . காட்சி

மூச்சடக்கி முத்தெடுப்போர் ஒருபுறம் ; அதை மாலையாக்கி அணிந்து பகட்டுவோர் மறுபுறம் .

இந்த நிலை நீக்கப்பட வேண்டாமா ?

எல்லாரும் இந்நாட்டு மன்னர்தாமா ?

இதோ அதற்குத்தான் முழங்குகிறது பாருங்கள் புரட்சிக் கவிஞரின் குரல் !

1.6 தொகுப்புரை

எத்தனையோ கவிஞர்கள் இந்த நாட்டில் பிறந்தார்கள் !

அவர்களில் பலர் கால வெள்ளத்தின் போக்கில் வசதியாய்க் கப்பல் ஓட்டினார்கள் .

புரட்சிக்கவிஞர் சமுதாயக் கடலில் , கொந்தளிக்கும் எதிர்ப்பு அலைகளுக்கிடையே கவிதைக் கட்டுமரத்தை அஞ்சாது செலுத்திய ஆண்மையாளராகத் திகழ்ந்தார் .

கொள்கை வெறியும் செயல்திறனும் மிக்க அவர் பாடல்கள் தமிழரின் இதயச் சுவர்களில் என்றென்றும் ஒலிக்கும் !

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. கடவுளைப் பாடும் நிலையிலிருந்து பாரதிதாசன் எந்த ஆண்டில் மாறினார் ?

[ விடை ]

2. கவிஞர் தொடங்கிய இதழின் பெயர் யாது ?

[ விடை ]

3. பாரதிதாசனைத் திரைப்பாடல் எழுத முதலில் அழைத்தவர் யார் ?

[ விடை ]

4. பாரதிதாசன் காலத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் குறித்து எழுதுக .

[ விடை ]

பாரதிதாசனின் சமுதாயம்

2.0 பாட முன்னுரை

சமூகம் என்பது ஓர் அமைப்பு .

அது யாராலும் உருவாக்கப்படாமல் தானே அமைவது .

ஒரு சமூகம் உருவாக ஒத்த மனத்தினராக மனிதர் நெருங்கி வரவேண்டும் .

ஒரு பொதுமை கருதி ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் .

தத்தம் விருப்பு வெறுப்புகளை விட்டு ஒரு குறிக்கோளைக் கருதி ஒன்றிணைய வேண்டும் .

அதுவே சமூகம் ; அதுவே சமுதாயம் .

விலங்குகளுக்குக் கூட்டமே உண்டு ; சமூகம் , சமுதாயம் என்ற அமைப்பு அவ்வுலகில் இல்லை .

சமூகம் என்பதற்குத் திரண்டது என்பது பொருள் .

பாலில் வெண்ணெய் திரள்வது போல மாந்தரிடையே சமூகம் உருவாகும் .

சாதி சமய அடிப்படையிலான சமூகங்கள் உயர்ந்தன அல்ல ; உயர்ந்த கருத்தின் அடிப்படையில் உருவாகும் சமூகங்கள் வையத்தை உய்விக்கும் .

இந்தியச் சமுதாயம் சிதறிக் கிடந்தது ; மாநிலங்களாய்ப் பிரிந்து கிடந்தது ; மதங்களால் போரிட்டுக் குலைந்தது .

அடிமை இருளில் அறியாமைச் சேற்றில் புதைந்து கிடந்தது .

அதனை ஒருமைப்படுத்த ‘ விடுதலை ’ என்னும் குறிக்கோள் தோன்றியது .

இந்தியச் சமுதாயம் தோள்தட்டி ஆர்த்தது .

விடுதலை பெற்றது .

உரிமை வாழ்வு மலர்ந்தது .

உரிமை பெறு முன்பு இந்தச் சமூகம் எப்படி இருந்தது தெரியுமா ?

உப்புக் காய்ச்சுவதற்காகப் போராட ஓடுகிறது பாருங்கள் மக்கள் திரள் !

உண்ணா நோன்பிருந்து நைகிறது பாருங்கள் !

இப்படிப் போராடிக் கொண்டிருந்தது ஒரு சமூகம் .

அதன் மற்றொரு பகுதி எப்படி இருந்தது ?

இதோ பாரதியார் கூறுகிறார் கேளுங்கள் !

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே

வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த

மரத்தில் என்பார் ; அந்தக் குளத்திலென்பார்

துஞ்சுது முகட்டி லென்பார் மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

( பாரதியார் பாடல் , பாரத ஜனங்களின் தற்கால நிலை : 1-8 )

இப்படித்தான் மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடந்தது நாடு .

இதனை அகற்றத் தோன்றியவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .

இது , “ மடமைச் சேறு எழுந்திரு வெளியே வா ஒளியை நோக்கிய உன் பயணம் தொடங்கு , ” என்று அறிவுறுத்திய பாவேந்தரல்லரோ அவர் ?

2.1 பாரதிதாசனின் சமுதாயம் - ஒரு விளக்கம்

E

• வறியவர் நலிவும் உடையவர் கொள்ளையும்

வறுமைப் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது தமிழ்ச் சமுதாயம் .

வறுமைக் கோட்டுக்குக் கீழே , மிகக் கீழே கோடிக்கணக்கான மக்கள் நைந்து நலிந்தனர் .

சிலர் மட்டும் செல்வராய் , நில உடைமை கொண்டவராய் , குறுநில மன்னராய்த் திகழ்ந்தனர் .

வறுமைச் சமூகத்தின் உழைப்பைச் சுரண்டிச் செல்வச் சமூகம் கொழுத்தது .

வறியோர் எலியாக முயலாகக் கிடந்தார்கள் .

அஞ்சிக் கிடந்த அவர்களைப் புலிவேடம் போட்டு மேலும் அச்சுறுத்தினார் முதலாளிமார்கள் .

நாலுபேர் கைகளில் கருவி ஏந்திப் பாறைகளைப் புரட்டுகின்ற காட்சி

அதோ நாலுபேர் வெயிலில் வேர்வை அருவிகள் பெருகக் கைகளில் கருவி ஏந்திப் பாறைகளைப் புரட்டுகின்றனர் பாருங்கள் .

அவர்களின் குழிந்த வயிறு , ஒட்டிய கன்னங்கள் , உலர்ந்த விழிகளைப் பாருங்கள் .

ஆனால் அங்கே குடைபிடித்துக் கொண்டு ஒருவர் கொழுத்த உடலோடு நிற்பதைக் காணுங்கள் !

இந்தக் காட்சியைக் காணும் கவிஞனின் உள்ளம் கொதிக்கின்றது .

இந்தச் சமுதாயம் மாற்றப்பட வேண்டுமெனக் கருதுகின்றார் .

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்

கொள்ளையடிப்பதும் நீதியோ ? - புவி

வாழ்வதுதான் எந்தத் தேதியோ ?

( சாய்ந்த தராசு : 5-7 , முதல் தொகுதி )

• சமத்துவம் சாத்தியம்

உலகம் இப்படியே இருந்துவிடாது என்றும் அவர் கருதுகின்றார் .

ஏழை கோழையாக இருக்கும் வரைதான் இந்த நிலை இருக்கும் .

அவன் தாழ்ந்து குனிந்து பணிந்து வாழும் நிலையிலிருந்து நிமிரும் நிலை வரும் .

அப்படி நிமிர்ந்தால் ஒரே நொடியில் உலகம் மாறிவிடாதா எனக் கேட்கின்றார் .

கையிலே திருவோடுதான் உண்டு என்று கூறும் ஓடப்பர் ஒருபுறம் ; செல்வநிலையின் உச்சியிலே இருக்கும் உயரப்பர் மற்றொருபுறம் .

ஏழையப்பராக இருக்கும் ஓடப்பரும் , உயரப்பரும் ஒன்றாக முடியுமா ?

முடியும் என்கிறார் கவிஞர் .

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ !

( உலகப்பன் பாட்டு : 37-40 , முதல் தொகுதி )

அடி , உதை என்றாலே அஞ்சுவோர் கீழோர் அல்லவா ?

அந்த நிலையிலேதான் இவர்கள் சுரண்டிச் சுருட்டி வைத்திருக்கும் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்வார்கள் .

இயந்திரத்தில் இட்டுப் பிழிந்தால்தானே கரும்பு சாறுதரும் ?

உலகம் வழங்கும் உடைமை எல்லாம் பொது எனும் மனநிலை வரவேண்டுமென்று பாரதிதாசன் கருதுகின்றார் .

பொருளாதார நிலையில் ஒரு சமத்துவம் நிலவும் சமுதாயத்தையே அவர் காண விரும்பினார் .

• வறுமையின் காரணம்

நெருப்பில் கூடக் கண்மூடித் தூங்கலாம் ; வறுமை வசப்பட்டவன் தூங்க முடியாது என்றார் திருவள்ளுவர் .

கல்லுக்குள் வாழும் தேரைக்குக் கூட உணவு கிடைத்துவிடுகிறது ; அருகம்புல்லுக்குக் கூட இயற்கை ஓர் ஆடையைச் சுற்றியிருக்கிறது .

ஆனால் ஏழை மாந்தர்தம் நிலை என்ன ?

கந்தை அணிந்தோம் - இரு

கையே விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்

மொந்தையிற் கூழைப் - பலர்

மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம் ( தொழிலாளர் விண்ணப்பம் : 33-36 , முதல் தொகுதி )