21

பண்புப் பெயர்களுக்கு அமைந்த விகுதிகள் பத்து .

அவை ,

மை , ஐ , சி , பு , உ , கு , றி , று , அம் , ஆர் என்பன .

இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .

நன்மை - மை தொல்லை - ஐ

மாட்சி - சி மாண்பு - பு

மழவு - வு நன்கு - கு

நன்றி - றி நன்று - று

நலம் - அம் நன்னர் - அர்

6.1.7 பிறவினை விகுதிகள்

பிறவினை விதிகளை முன்பே அறிந்துள்ளீர்கள் .

அவை , வி , பி , கு , சு , டு , து , பு , று என்பனவாம் .

இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம் .

செய்வி - வி நடப்பி - பி

போக்கு - கு பாய்ச்சு - சு

உருட்டு - டு நடத்து - து

எழுப்பு- பு துயிற்று - று

என்பன .

6.1.8 விகுதிகள் புணர்ந்து கெடுதல்

சில விகுதிகள் புணர்ந்து கெடுகின்றன .

எனவே வழக்கில் அச் சொல்லில் அவ்விகுதிகள் வெளிப்படுவதில்லை .

புணர்ந்து கெட்ட விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுகள் :

ஆய் விகுதி புணர்ந்த சொல் :

நீ நட ; நீ நடப்பி ; நீ செல் - இவற்றில் ஆய்விகுதி புணர்ந்து கெட்டது .

‘ நீ நடப்பாய் ’ எனவராமல் ' நீ நட ' என்று வருதலே மரபாயிற்று .

பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெடல் :

கொல்களிறு , ஓடாக்குதிரை இவற்றில் பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன .

இவற்றில் கொன்ற-அ ; ஓடாத - அ எனும் விகுதிகள் கெட்டன .

தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெடல் :

அடி , கேடு , - இவற்றில் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது .

அடித்தல் , கெடுதல் , என்பவை விகுதி கெட்டு அடி , கேடு என வந்துள்ளன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. விகுதியின் இலக்கணத்தைக் கூறுக .

விடை

2. நன்னூலார் கூறும் விகுதிகள் எத்தனை ?

விடை

3. விகுதிகளை முதல்நிலையில் எவ்வாறு பிரித்துக் காணலாம் ?

விடை

4. வினைமுற்று விகுதிகளின் வகைகள் எத்தனை ?

எடுத்துக் காட்டுத் தருக .

விடை

5. தொழிற் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத்தருக .

விடை

6. பண்புப் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக .

விடை

7. புணர்ந்து கெடும் விகுதிகளை விளக்குக .

இடைநிலைகள்

பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும் .

இதன் பெயரே இது பகுபதத்தில் நிற்கும் இடத்தைக் குறித்தலைக் காணலாம் . • வகைகள்

பகுதி , விகுதிகளைப் போலவே இடைநிலைகளையும் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம் .

( 1 ) பெயர் இடைநிலை

( 2 ) வினை இடைநிலை

6.2.1 பெயர் இடைநிலைகள்

வினையாலணையும் பெயர் அல்லாத பிற பெயர்களுக்கு இடையில் நிற்கும் இடைநிலைகள் பெயர் இடைநிலைகள் எனப்படும் .

பெயர் இடைநிலைகளாக ஞ் , ச் , ந் , த் என்னும் எழுத்துகள் அமைகின்றன .

அறிஞன் , இளைஞன் , கவிஞன் - ‘ ஞ் ’ இடைநிலை

வலைச்சி , இடைச்சி , புலைச்சி - ‘ ச் ’ இடைநிலை

செய்குநன் , பொருநன் - ‘ ந் ’ இடைநிலை

வண்ணாத்தி , பாணத்தி - ‘ த் ’ இடைநிலை

6.2.2 வினை இடைநிலைகள்

வினைப் பகுபதத்தில் காலம் காட்டும் இடைநிலைகளை வினை இடைநிலைகள் என்பர் .

இந்த இடைநிலைகள் உணர்த்தும் காலத்தைக் கருத்தில் கொண்டு அவற்றை மூன்றாகப் பிரிக்கலாம் அவை ,

( 1 ) இறந்தகால இடைநிலைகள்

( 2 ) நிகழ்கால இடைநிலைகள்

( 3 ) எதிர்கால இடைநிலைகள்

என்பன .

• இறந்தகால இடைநிலைகள்

த் , ட் , ற் என்னும் மெய்களும் , இன் என்பதும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலத்தைத் தருகின்ற வினைப் பகுபதங்களுடைய இடைநிலைகளாகும் .

இதனை , நன்னூல் ,

தடற ஒற்று , இன்னே ஐம்பால் மூவிடத்து

இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை ( 142 )

என்று விளக்குகின்றது .

இதற்கான எடுத்துக்காட்டைப் பின்வருமாறு காண்போம் .

நடந்தான் , பார்த்தான் - ‘ த் ’ இடைநிலை

கொண்டான் , விண்டது - ‘ ட் ’ இடைநிலை

நின்றான் , தின்றான் - ‘ ற் ’ இடைநிலை

ஒழுகினான் , வழங்கினான் - ‘ இன் ’ இடைநிலை

‘ இன் ’ என்னும் இடைநிலை மட்டும் சில இடங்களில் இறுதி மெய் ‘ ன்‘ கெட்டு ‘ இ ’ மட்டும் தனித்து வரும் .

சில இடங்களில் ‘ இ ’ கெட்டு ன் மட்டும் வரும் .

எடுத்துக்காட்டு :

எஞ்சியது - எஞ்சு + இ ( ன் ) ய் + அ + து இதில் ‘ ன் ’ கெட்டு ‘ இ ’ வந்தது .

போனது - போ ( இ ) ன் + அ + து .

இதில் ‘ இ ’ கெட்டு ‘ ன் ’ மட்டும் உள்ளது .

• நிகழ்கால இடைநிலைகள்

வினைப் பகுபதத்தில் நிகழ்காலத்தைக் காட்டும் இடைநிலைகளாக ஆநின்று , கின்று கிறு என்ற மூன்றினை நன்னூல் விளக்குகின்றது .

‘ ஆநின்று கின்று , கிறு மூவிடத்தின்

ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை , ( 143 )

செல்லாநின்றான் , நடவாநின்றான் - ஆநின்று

செல்கின்றான் , நடக்கின்றான் - கின்று

செல்கிறான் , நடக்கிறான் - கிறு

இதைப்போலவே இவ்வினை இடைநிலைகளை மற்ற பால் , இடம் ஆகியவற்றிலும் இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் .

• எதிர்கால இடைநிலைகள்

எதிர்காலத்தைக் காட்டும் இடைநிலைகள் எதிர்கால இடைநிலைகள் எனப்படும் .

இவை , ப் , வ் , என இரண்டு மெய்களாகும் .

இரண்டிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .

நடப்பான் , துறப்பான் - ப்

வருவான் , வருவாள் - வ்

காலம் காட்டும் விகுதிகள் வினைப் பகுபதங்களில் இடைநிலைகள் காலத்தைச் சுட்டுவன : அவை மூன்று காலத்திற்கும் தனித்தனி இடைநிலைகளாக அமைந்துள்ளன .

என்றாலும் சில வினைப் பகுபதங்களில் விகுதிகளும் காலத்தைக் காட்டும் பணியைச் செய்கின்றன என்பதை அறிய முடிகிறது .

( நன்னூல் , நூற்பா , 145 )

இனி , இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் காண்போம் .

( 1 ) று , றும் இறந்தகாலமும் , எதிர்காலமும் காட்டும் .

சென்று ( சென்றேன் ) - று சென்றும் ( சென்றோம் ) - றும் இறந்தகாலம்

சேறு ( செல்வேன் ) - று சேறும் ( செல்வோம் ) - றும் எதிர்காலம்

( 2 ) து , தும் : இறந்தகாலமும் , எதிர்காலமும் காட்டும் .

வந்து ( வந்தேன் ) - து வந்தும் ( வந்தோம் ) தும் இறந்தகாலம்

வருது ( வருவேன் ) - து வருதும் ( வருவோம் ) தும் எதிர்காலம்

( 3 ) டு , டும் : இறந்தகாலம் காட்டும்

உண்டு ( உண்டேன் ) - டு உண்டும் ( உண்டோம் ) - டும் இறந்தகாலம்

( 4 ) கு , கும் எதிர்காலம் காட்டும்

உண்கு ( உண்பேன் ) - கு உண்கும் ( உண்போம் ) - கும் எதிர்காலம்

( 5 ) மின் , ஈர் , உம் , ஆய் எனும் ஏவல்விகுதிகள் , வியங்கோள் விகுதிகள் , இ , மார் விகுதிகள்

உண்மின் - மின் உண்ணீர் - ஈர் உண்ணும் - உம் உண்ணாய் - ஆய் எதிர்காலம்

உண்க , உண்ணிய , உண்ணியர் - எதிர்காலம்

சேறி ( செல்வாய் ) - எதிர்காலம்

உண்மார் ( உண்பதற்காக ) - எதிர்காலம்

( 6 ) ப விகுதி : இறந்தகாலமும் , எதிர்காலமும் காட்டும் .

உண்ப ( உண்டார் ) - இறந்தகாலம்

உண்ப ( உண்பார் ) - எதிர்காலம்

( 7 ) செய்யும் எனும் வாய்பாட்டின் உம் விகுதி

அவன் உண்ணும் - நிகழ்காலம் ( உண்கிறான் )

அவள் உண்ணும் - எதிர்காலம் ( உண்பாள் )

( 8 ) ஆ விகுதி : எதிர்மறைப் பொருளில் மூன்றுகாலத்துக்கும் வரும்

உண்ணா - இறந்தகாலம்

உண்ணா - நிகழ் காலம்

உண்ணா - எதிர்காலம்

6.3.1 பகுதி இரட்டித்துக் காலம் காட்டுதல்

கு , டு , று என்னும் எழுத்துகளை ஈற்றில் கொண்ட ‘ புகு ’ , ‘ தொடு ’ , ‘ உறு ’ என்பன போன்ற பகுதிகள் மெய் இரட்டித்து இறந்த காலத்தைக் காட்டும் .

புகு + ஆன் - புக்கான் விடு + ஆள் - விட்டாள் பெறு + ஆர் - பெற்றார் இறந்தகாலம்

நெட்டெழுத்தைச் சார்ந்து வரும் ‘ கு ’ என்ற ஈற்றை உடைய சில சொற்களும் மெய் இரட்டித்து , இறந்தகாலத்தைக் காட்டும் .

போடு + ஆன் - போட்டான்

தொகுப்புரை

பகுபத உறுப்புகளுள் விகுதி என்பது பகுபதத்தின் கடைசியில் நிற்கும் உறுப்பு என்பதும் , எனவே அது இறுதிநிலை என்று அழைக்கப்படுகின்றது என்பதும் விளக்கப்பட்டது .

நன்னூல் விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று காட்டியுள்ளது எடுத்துக் காட்டுகளுடன் சுட்டப்பட்டது .

இந்த விகுதிகள் தெரிநிலை வினைமுற்று விகுதிகள் , தன்மை வினைமுற்று விகுதிகள் , முன்னிலை வினைமுற்று விகுதிகள் , வியங்கோள் வினைமுற்று விகுதிகள் , குறிப்பு வினைமுற்று விகுதிகள் , என்று வினைப்பகுபத விகுதிகளாக வகைப்படுத்தி விளக்கப்பட்டன .

சில விகுதிகள் பெயர்ப்பகுபத விகுதிகளாகவும் அமைகின்ற விதமும் எடுத்துக் காட்டப்பட்டது .

இவற்றுடன் பெயரெச்ச , வினையெச்ச விகுதிகளும் , தொழிற்பெயர் , பண்புப் பெயர் விகுதிகளும் , தன்வினை , பிறவினை விகுதிகளும் விளக்கப்பட்டன .

தொழிற்பெயர் விகுதிகளில் சில புணர்ந்து கெடும் தன்மையில் அமைந்துள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது .

அடுத்ததாக , பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து நிற்கும் உறுப்பான இடைநிலைகள் இருவகைப்படும் என்றும் , அவை பெயர் , வினை இடைநிலைகள் என்றும் கண்டோம் .

வினை இடைநிலைகள் இறந்த கால , நிகழ்கால , எதிர்கால இடைநிலைகள் என்று மூன்று காலத்தைக் காட்டுவதற்குத் தனித்தனியே அமைந்துள்ளன என்பது விளக்கப்பட்டது .

மூன்றாவதாக , காலங்காட்டும் விகுதிகள் டு , டும் , று , றும் , து , தும் , கு , கும் , ஆகியவற்றோடு ஏவல் வினை விகுதிகளும் , வியங்கோள் வினை விகுதிகளும் காலங்காட்டும் தன்மை , எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்பட்டது .

சில பகுதிகள் இரட்டித்துக் காலம் காட்டும் தன்மையுடையன என்பதையும் இப் பாடத்தில் கண்டோம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இடைநிலைகள் எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

விடை

2. வினை இடைநிலைகள் எத்தனை ? அவற்றை விளக்குக .

விடை

3. காலம்காட்டும் விகுதிகளுக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக .

விடை

4. ஏவல் , வியங்கோள் வினைகள் எக்காலத்தைக் காட்டும் ?

எடுத்துக்காட்டுத் தருக .

விடை

5. பகுதி இரட்டித்துக் காலம் காட்டுவதை விளக்குக .

பாட முன்னுரை

தமிழ் மொழியில் உள்ள ஐந்து இலக்கணங்களில் முதலாவது எழுத்து இலக்கணம் ஆகும் .

இதனைப் பற்றி ஏற்கெனவே படித்துள்ளோம் .

இனியும் தொடர்ந்து படிக்க இருக்கிறோம் .

எழுத்துகளின் வகை , எண்ணிக்கை , பெயர் , மாத்திரை பற்றியும் , மொழிக்கு முதலிலும் , இறுதியிலும் , இடையிலும் வரும் எழுத்துகள் பற்றியும் , போலி பற்றியும் , எழுத்துகளின் பிறப்புப் பற்றியும் , எழுத்துகள் பொருள் நோக்கில் சேர்ந்து வரும் பகாப்பதம் , பகுபதம் என்னும் இருவகைப் பதங்கள் பற்றியும் இதற்கு முந்தைய பாடங்களில் விரிவாகப் படித்துள்ளோம் .

இனி இப்பாடத்திலும் , இதனைத் தொடர்ந்து வரும் பாடங்களிலும் பகாப்பதம் , பகுபதம் என்னும் இருவகைப் பதங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருகின்ற புணர்ச்சி இலக்கணம் பற்றி விரிவாகப் படிக்க இருக்கிறோம் .

இந்தப் பாடத்தில் தொல்காப்பியரும் , நன்னூலாரும் எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு எந்த அளவு முக்கிய இடம் தந்துள்ளனர் என்பது விளக்கிக் காட்டப்படுகிறது .

புணர்ச்சி பற்றி நன்னூலார் தரும் விளக்கம் குறிப்பிடப்படுகிறது .

நன்னூலார் புணர்ச்சியை எழுத்துகள் , பதங்கள் , பொருள் , எழுத்து மாற்றம் என்னும் நால்வகை அடிப்படையில் பாகுபடுத்திக் கூறியிருப்பது தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகிறது .

தமிழில் புணர்ச்சி இலக்கணம் ஓசை இனிமையும் , பொருள் நோக்கும் கொண்டது என்னும் கருத்துச் சுட்டிக் காட்டப்படுகிறது .

எழுத்து இலக்கணமும் புணர்ச்சியும்

புணர்ச்சி என்றால் சேர்க்கை என்று பொருள் .

இரண்டு பதங்கள் ( சொற்கள் ) ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவதை எழுத்து இலக்கணம் புணர்ச்சி என்ற சொல்லால் விளக்கும் .

சான்று :

பொன் வளையல்

புணர்ச்சி என்பதைச் சந்தி என்றும் குறிப்பிடுவர் .

இரண்டு சொற்கள் சந்திப்பதைப் பற்றிய இலக்கணம் என்பதால் இவ்வாறு கூறினர் எனலாம் .

புணர்ச்சி என்பது தமிழ்ச் சொல் .

சந்தி என்பது வடசொல் .

புணர்ச்சியில் சேர்ந்து வரும் இரண்டு சொற்களில் முதலாவது வரும் சொல்லை நிலைமொழி என்றும் , இரண்டாவது வரும் சொல்லை வருமொழி என்றும் நன்னூலில் பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார் .

நிலைமொழி என்றால் நிற்கும் சொல் என்று பொருள் .

வருமொழி என்றால் நிலைமொழிக்குப் பின் வருகின்ற சொல் என்று பொருள் .

சான்று :

பொன் வளையல்

பொன் - நிலைமொழி

வளையல் - வருமொழி

தொல்காப்பியர் நிலைமொழி என்பதை நிறுத்த சொல் என்றும் , வருமொழி என்பதைக் குறித்துவரு கிளவி என்றும் குறிப்பிட்டுள்ளார் .

மொழி , கிளவி , சொல் என்பன ஒரே பொருளுடைய சொற்கள் .

தற்காலத் தமிழ் இலக்கணத்தில் நிலைமொழி , வருமொழி என்பனவே வழக்கில் உள்ளன .

எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு மிக முக்கியமான இடம் தரப்பட்டுள்ளது .

தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தில் முதலாவதாக அமைந்துள்ள அதிகாரம் எழுத்ததிகாரம் ஆகும் .

அதில் ஒன்பது இயல்கள் உள்ளன .

அவற்றில் நூல் மரபு , மொழி மரபு , பிறப்பியல் என்னும் முதல் மூன்று இயல்களில் எழுத்துகளின் வகை , எண்ணிக்கை , பெயர் , வடிவம் , மாத்திரை , பிறப்பு முதலியன பற்றிக் கூறுகிறார் .

எஞ்சிய புணரியல் , தொகை மரபு , உருபியல் , உயிர் மயங்கியல் , புள்ளி மயங்கியல் , குற்றியலுகரப் புணரியல் என்னும் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றியே கூறுகிறார் .

தொல்காப்பியரைப் போலவே நன்னூலாரும் நன்னூலில் முதலாவதாக அமைந்த எழுத்ததிகாரத்தில் புணர்ச்சிக்கு முக்கிய இடம் தந்துள்ளார் .

நன்னூல் எழுத்ததிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன .

அவை எழுத்தியல் , பதவியல் , உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் , உருபு புணரியல் என்பனவாம் .

நன்னூலார் எழுத்து இலக்கணத்தை எண் , பெயர் , முறை , பிறப்பு , உருவம் , மாத்திரை , முதல் ( சொல்லின் முதலில் ) , ஈறு ( சொல்லின் இறுதியில் ) , இடைநிலை ( சொல்லின் இடையில் ) , போலி , பதம் , புணர்ச்சி எனப் பன்னிரு வகையாகப் பிரிக்கிறார் .

எண் , பெயர் , முறை , பிறப்பு , உருவம் , மாத்திரை ,

முதல் , ஈறு , இடைநிலை , போலி என்றா

பதம் , புணர்பு , எனப் பன்னிரு பாற்று அதுவே ( நன்னூல் , 57 )

( ஈறு = இறுதி : புணர்பு = புணர்ச்சி) இவற்றில் எண் முதல் போலி என்பது வரையில் உள்ள பத்து இலக்கணங்களை எழுத்தியலிலும் , பதம் என்பதைப் பதவியலிலும் விளக்குகிறார் .