34

இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர , தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர , டகர மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல் , ஆய்தமாகவும் திரிந்தன .

வருமொழி முதலில் உள்ள தகரம் லகரத்தை அடுத்து வரும்போது றகரமாகவும் , ளகரத்தை அடுத்து வரும்போது டகரமாகவும் திரிவதற்கு விதி னல முன் றனவும் என்று தொடங்கும் நூற்பாவில் பின்னர்க் கூறப்படும் .

• தனிக்குறிலைச் சாராத லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சி

தனிக்குறிலைச் சாராத லகர , ளகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி நன்னூலார் மூன்று சிறப்பு விதிகளைத் தருகிறார் .

கல் , முள் போன்ற சொற்களில் தனிக்குறிலைச் சார்ந்து லகர ளகர மெய்கள் ஈறாக வந்தன .

வேல் , வாள் போன்ற சொற்களில் தனி நெட்டெழுத்தைச் சார்ந்தும் , மரங்கள் போன்ற சொற்களில் பல எழுத்துகளை அடுத்தும் ல , ள இரண்டும் ஈறாக வந்தன .

இத்தகைய சொற்களின் இறுதியில் வரும் லகர ளகர மெய்களே தனிக்குறிலைச் சாராத லகர ளகர மெய்கள் எனக் கூறப்படுகின்றன .

1. அல்வழிப் புணர்ச்சியில் தனிக்குறிலைச் சார்ந்து வாராத லகர , ளகர மெய்கள் , வருமொழியின் முதலில் வந்த தகரம் திரிந்த பின்பு தாமும் கெடும் .

( லகரத்தின் முன் வரும் தகரம் றகரமாகவும் , ளகரத்தின் முன்வரும் தகரம் டகரமாகவும் திரியும்)

சான்று :

இச்சான்றில் வருமொழி முதலில் உள்ள தகரமெய் றகர மெய்யாகத் திரிந்தபின்பு , நிலைமொழி இறுதியில் உள்ள லகரமெய் கெட்டது .

இச்சான்றில் வருமொழி முதலில் உள்ள தகரமெய் டகரமெய்யாகத் திரிந்தபின்பு , நிலைமொழி இறுதியில் உள்ள ளகரமெய் கெட்டது .

2. அல்வழி , வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழியில் முதலில் வந்த நகரமெய் திரிந்த பின்பு நிலைமொழி இறுதியில் உள்ள லகர ளகர மெய்கள் கெடும் .

( லகரத்தின் முன் வரும் நகரம் னகரமாகவும் , ளகரத்தின் முன்வரும் நகரம் ணகரமாகவும் திரியும் .

இவ்வாறு திரிவதற்கு விதி ‘ னல முன் றனவும் ’ என்ற நூற்பாவில் பின்னர்க் கூறப்படும்)

சான்று :

அல்வழி

( வேள் – வேளிர் குலத் தலைவன் )

வேற்றுமை

( தோன்றல் என்பது ஒருவன் பெயர் .

தோன்றலினது நன்மை , வேளினது நன்மை ஆறாம் வேற்றுமைத் தொகை )

இச்சான்றுகளில் லகரத்தை அடுத்து வந்த நகரம் னகரமாகவும் , ளகரத்தை அடுத்து வந்த நகரம் ணகரமாகவும் திரிந்த பின்பு , நிலைமொழி இறுதியில் உள்ள லகர , ளகர மெய்கள் கெட்டன .

3. வருமொழி முதலில் வல்லின மெய்கள் வந்தால் லகர ளகர மெய்கள் அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாதலும் , முறையே றகரமெய்யாகவும் , டகர மெய்யாகவும் திரிதலும் உண்டு ; வேற்றுமைப் புணர்ச்சியில் திரியாமல் இயல்பாதலும் உண்டு .

சான்று :

அல்வழி

கால் + கை = கால்கை ( காலும் கையும் )

பொருள் + புகழ் = பொருள்புகழ் ( பொருளும் புகழும் )

இவை உம்மைத் தொகை .

இச்சான்றுகளில் வல்லினம் வர அல்வழியில் லகர ளகர மெய்கள் இயல்பாயின .

வேல் + படை = வேற்படை ( வேல் ஆகிய படை )

வாள் + படை = வாட்படை ( வாள் ஆகிய படை )

இவை இருபெயரொட்டுப் பண்புத்தொகை .

இச்சான்றுகளில் வல்லினம் வர அல்வழியில் லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும் , டகர மெய்யாகவும் திரிந்தன .

வேற்றுமை

கால் + பிடித்தான் = கால் பிடித்தான் ( காலைப் பிடித்தான் )

வாள் + பிடித்தான் = வாள் பிடித்தான் ( வாளைப் பிடித்தான் )

இவை இரண்டாம் வேற்றுமைத்தொகை .

இச்சான்றுகளில் வேற்றுமையில் வல்லினம் வர லகர ளகர மெய்கள் இயல்பாயின .

குறில் செறியா லள அல்வழி வந்த

தகரம் திரிந்தபின் கேடும் , ஈரிடத்தும்

வரும் நத் திரிந்தபின் மாய்வும் , வலிவரின்

இயல்பும் திரிபும் ஆவன உள பிற ( நூற்பா , 229 )

இந்நூற்பாவின் இறுதியில் பிற எனக் கூறப்படுவது கொண்டு பின்வருவனவற்றையும் கொள்ளவேண்டும் .

1. பொதுவிதிப்படி அல்வழியில் லகர , ளகர மெய்கள் கல்சிறிது , கற்சிறிது , முள்சிறிது , முட்சிறிது என உறழ்ந்தே வரவேண்டும் எனக் கூறப்பட்டது .

ஆனால் ,

வில் + படை = விற்படை

எனப் பொதுவிதிப்படி உறழாது .

லகரமெய் றகரமெய்யாகத் திரிந்தது காணலாம் .

2. தனிக்குறிலைச் சாராத ல , ள ஆகிய இரண்டும் அல்வழியில் இயல்பாகும் எனக் கூறப்பட்டது . சான்று : கால்கை , பொருள்புகழ் .

ஆனால் தனிக்குறிலைச் சார்ந்த ல , ள ஆகிய இரண்டும் அல்வழியில் இயல்பாக வருதலும் உண்டு .

சான்று :

கொல் + களிறு = கொல்களிறு

கொள் + பொருள் = கொள்பொருள்

இவை வினைத்தொகை .

3.1.3 நெல் , செல் , கொல் , சொல் என்னும் சொற்களுக்குச் சிறப்புவிதி

நெல் , செல் , கொல் , சொல் என்னும் நான்கு சொற்களின் இறுதியில் உள்ள லகரமெய் அல்வழிப் புணர்ச்சியில் பொதுவிதிப்படி உறழாது , வேற்றுமைப் புணர்ச்சியைப் போல றகர மெய்யாகத் திரியும் .

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்

அல்வழி யானும் றகரம் ஆகும் ( நன்னூல் , 232 )

( செல் – மேகம் ; கொல் – கொல்லனது தொழில் )

சான்று :

நெல் + சிறிது = நெற்சிறிது

செல் + கரிது = செற்கரிது

கொல் + கடிது = கொற்கடிது

சொல் + புதிது = சொற்புதிது

3.1.4 இல் என்னும் சொல்லுக்குச் சிறப்பு விதி

இல் என்னும் சொல்லுக்கு வீடு , இன்மை ( இல்லாமை ) எனப் பல பொருள் உண்டு .

இங்கு இன்மைப் பொருளை உணர்த்தும் இல் என்ற சொல்லினது புணர்ச்சிக்குரிய சிறப்புவிதி பின்வருமாறு நன்னூலாரால் கூறப்படுகிறது .

1. இல் என்னும் சொல்லோடு ஐகாரச் சாரியை வந்து சேர்ந்தால் , வருமொழி வல்லினம் விகற்பமாகும் .

( அதாவது மிக்கும் , மிகாமல் இயல்பாயும் புணர்தல் )

சான்று :

இல் + பொருள் > இல் + ஐ + பொருள் > இல்லை + பொருள்

= இல்லைப்பொருள் , இல்லை பொருள்

2. இல் என்னும் சொல்லோடு ஆகாரச் சாரியை வந்து சேர்ந்தால் வருமொழி வல்லினம் மிகும் .

சான்று :

இல் + பொருள் > இல் + ஆ + பொருள் = இல்லாப் பொருள்

3. இல் என்னும் சொல் , மேலே கூறிய ஐகாரச் சாரியையோ , ஆகாரச் சாரியையோ பெறாமல் வல்லினத்தோடு இயல்பாகப் புணர்வதும் உண்டு .

சான்று :

இல் + பொருள் = இல்பொருள்

இல் என் இன்மைச் சொற்கு ஐ அடைய

வன்மை விகற்பமும் , ஆகா ரத்தோடு

வன்மை யாகலும் , இயல்பும் ஆகும் ( நன்னூல் , 233 )

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. முள் + செடி – சேர்த்து எழுதுக .

விடை

2. கற்கோயில் - பிரித்து எழுதுக .

விடை

3. முள் + சிறிது – எவ்வெவ்வாறு புணரும் ?

விடை

4. கல் + மனம் , முள் + மலர் – சேர்த்து எழுதுக .

விடை

5. கல் + தீது , முள் + தீது – இவை எவ்வெவ்வாறு புணரும் ?

விடை

6. வாடீது – பிரித்து எழுதுக .

வருமொழித் தகர , நகரத் திரிபுகள்

மெய் ஈற்றுப் புணரியலில் நன்னூலார் நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய்கள் வருமொழியின் முதலில் உள்ள எழுத்துகளோடு புணரும்போது , அவை என்னென்ன மாற்றங்கள் பெறுகின்றன என்பதைப் பற்றி இதுவரை விளக்கிக் கூறினார் .

பொதுவாக நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது , நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய்களே , வருமொழியின் முதல் எழுத்துக்கு ஏற்பத் திரியும் .

சான்று :

மண் + குடம் = மட்குடம் பொன் + குடம் = பொற்குடம்

மரம் + கண்டார் = மரங்கண்டார்

கல் + கோயில் = கற்கோயில்

முள் + செடி = முட்செடி

கல் + மனம் = கன்மனம்

முள் + மலர் = முண்மலர்

நிலைமொழியின் இறுதி எழுத்துக்கு ஏற்ப வருமொழியின் முதல் எழுத்தும் பிற எழுத்தாகத் திரிவது உண்டு .

இவ்வாறு திரிகின்ற வருமொழி முதல் எழுத்துகள் தகர மெய்யும் நகர மெய்யும் ஆகும் .

வருமொழியின் முதலில் வருகின்ற இவ்விரண்டு மெய்களும் , நிலைமொழியின் ஈற்றில் உள்ள ன , ல , ண , ள ஆகிய நான்கு மெய்களுக்கு முன் வரும்போது மட்டுமே திரிபடைகின்றன .

இந்த வருமொழித் தகர நகரத் திரிபுகள் பற்றி நன்னூலார் கூறுவனவற்றைச் சான்றுடன் காண்போம் .

1. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர , லகர மெய்களுக்கு முன் , வருமொழி முதலில் வரும் தகர மெய் றகர மெய்யாகத் திரியும் .

சான்று :

பொன் + தாமரை = பொற்றாமரை

கல் + தாழை = கற்றாழை

( இவற்றில் நிலைமொழி ஈற்றில் உள்ள ன-வும் ல - வும் திரிந்துள்ளன .

இதற்கு உரிய விதியை முந்தைய பாடத்தில் ( Co2141 பகுடி 1.2.1 ) படித்தோம் .

நினைவிருக்கிறதா ? )

2. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர , லகர மெய்களுக்கு முன் , வருமொழி முதலில் வரும் நகர மெய் னகர மெய்யாகத் திரியும் .

சான்று :

பொன் + நாடு = பொன்னாடு

தென் + நாடு = தென்னாடு

பல் + நலம் = பன்னலம்

3. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர , ளகர மெய்களுக்கு முன் , வருமொழி முதலில் வரும் தகர மெய் டகர மெய்யாகத் திரியும் .

சான்று :

எண் + தேர் = எண்டேர் ( எட்டுத்தேர் )

முள் + தாமரை = முட்டாமரை

3. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர ளகர மெய்களுக்கு முன் , வருமொழி முதலில் வரும் நகரமெய் ணகர மெய்யாகத் திரியும் .

சான்று :

கண் + நீர் = கண்ணீர்

கண் + நோய் = கண்ணோய்

எள் + நெய் = எண்ணெய்

மேலே கூறிய வருமொழித் தகர நகரத் திரிபுகளை நன்னூலார் ,

னலமுன் றனவும் , ணளமுன் டணவும் ,

ஆகும் தநக்கள் ஆயுங் காலே ( நன்னூல் , 237 )

என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

உயிர் ஈற்று , மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகளுக்குப் புறனடை

( புறனடை = ஏற்கெனவே கூறிய விதிகளுள் அடங்காதவற்றைத் தனியே ஒரு நூற்பாவில் அமைத்துக் காட்டுவது )

நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலிலும் , மெய் ஈற்றுப் புணரியலிலும் எல்லா ஈற்று நிலை மொழிகளும் , வருமொழிகளோடு புணரும் முறை பற்றிக் கூறிய புணர்ச்சி விதிகளை இதுவரை பார்த்தோம் .

நன்னூலார் அவ்விரண்டு இயல்களிலும் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்ட சொற்புணர்ச்சிகளும் தமிழில் உள்ளன .

சான்றாக ,

மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்

( கம்பராமாயணம் , 3008:2 )

என்ற கம்பராமாயணப் பாடல் அடியில் மாயிரு என வருகிறது .

இதற்கு ‘ மிகப் பெரிய ’ என்று பொருள் .

இது ,

மா + இரு

எனப் பிரியும் .

மா என்னும் உயிர் ஈற்றுச் சொல் வருமொழி முதலில் உயிர் வரும்போது ,

இ , ஈ ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ( நன்னூல் , 162:1-2 ) என்ற புணர்ச்சி விதிப்படி , இடையில் வகர உடம்படுமெய் பெற்று ,

மா + இரு > மா + வ் + இரு = மாவிரு

என வரவேண்டும் .

ஆனால் இவ்விதிக்கு மாறாக ,

மா + இரு > மா + ய் + இரு = மாயிரு

என இடையில் யகர மெய் பெற்று வந்துள்ளது .

இதற்குக் காரணம் யாது ?

மா என்னும் ஓர் எழுத்துச் சொல் மரம் , விலங்கு என்னும் இரு பொருள்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகவும் , மிகுதி என்னும் பொருளைக் குறிக்கும் உரிச்சொல்லாகவும் வழங்குகிறது .

மா என்னும் சொல் பெயர்ச்சொல்லாக நிலைமொழியில் நின்று , வருமொழி முதலில் உள்ள உயிரோடு புணரும்போது , விதிப்படி வகர உடம்படுமெய்யே பெறும் .

சான்று :

மா + இலை > மா + வ் + இலை = மாவிலை ( மாமரத்தின் இலை )

மா + ஏறினான் > மா + வ் + ஏறினான் = மாவேறினான்

( மரத்தில் ஏறினான் , விலங்கின்மேல் ஏறினான் )

ஆனால் மா என்னும் சொல் உரிச்சொல்லாக நிலைமொழியில் நின்று , வருமொழி முதலில் உள்ள உயிரோடு புணரும்போது , விதிப்படி வகர உடம்படுமெய் பெறாது , யகர மெய்யே பெறுகிறது .

இந்த யகர மெய் உடம்படுமெய் அன்று .

மா + இரு என்பதற்கு இடையில் தோன்றல் விகாரம் என்னும் புணர்ச்சி விதியின்படி யகரமெய் தோன்றி , மாயிரு என அமைந்தது என்று உணர்ந்து கொள்ளலாம் .

இதுபோல , ஏற்கெனவே விதித்த புணர்ச்சி விதிகளில் அடங்காது ஒரு காரணம் பற்றி வேறுபட்ட , மாயிரு போன்ற சொற்புணர்ச்சிகளை மெய்ஈற்றுப் புணரியலின் இறுதி நூற்பாவில் நன்னூலார் அமைத்துக் காட்டுகிறார் .

அந்நூற்பா புறனடை நூற்பா எனப்படுகிறது .

புறனடை நூற்பா என்பதற்கு ‘ ஏற்கெனவே விதித்தவற்றுள் அடங்காதவற்றைத் தனியே அமைத்துக் காட்டும் நூற்பா ’ என்று பொருள் .

அந்நூற்பா வருமாறு :

இடை , உரி வடசொலின் இயம்பிய கொளாதவும் ,

போலியும் , மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு

இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே ( நன்னூல் , 239 )

“ இடைச்சொற்கள் , உரிச்சொற்கள் , வடசொற்கள் ஆகியவற்றிற்கு உயிர் ஈற்றுப் புணரியலிலும் , மெய் ஈற்றுப் புணரியலிலும் சொல்லப்பட்ட தோன்றல் , திரிதல் , கெடுதல் , இயல்பாதல் என்னும் புணர்ச்சி இலக்கணங்களைக் கொள்ளாமல் வேறுபட்டு வருவனவற்றையும் இலக்கணப்போலிச் சொற்களையும் , மரூஉச்சொற்களையும் உலக வழக்கிலும் , செய்யுள் வழக்கிலும் வழங்கும் முறைமைக்குப் பொருந்துமாறு கூட்டி முடித்தல் , அறிவுடையோர் எல்லோர்க்கும் முறை ஆகும் ” என்பது இந்நூற்பாவின் பொருள் .

நன்னூலார் இந்நூற்பாவில் கூறும் கருத்துகளைச் சான்றுடன் காண்போம் .

• இடைச்சொற்கள்

சான்று :

ஒன்று + அன் + கூட்டம் > ஒன்றன் + கூட்டம் = ஒன்றன்கூட்டம்

வண்டு + இன் + கால் > வண்டின் + கால் = வண்டின்கால்

இவை இரண்டும் ஆறாம் வேற்றுமைத் தொகை .

ஒன்றன் கூட்டம் – ஒரே பொருளினது கூட்டம் ; வண்டின்கால் – வண்டினது கால் .

வேற்றுமைப் புணர்ச்சியில் , ணன வல்லினம் வரட்டறவும் ( நன்னூல் , 209 ) என்ற விதிப்படி , நிலைமொழி ஈற்று னகரமெய் , வருமொழி முதலில் வல்லினம் வரின் றகர மெய்யாக வேண்டும் .

இவ்விதிப்படி ,

ஒன்றன் + கூட்டம் = ஒன்றற்கூட்டம்

வண்டின் + கால் = வண்டிற்கால்

என வரவேண்டும் .

ஆனால் இந்நிலைமொழிகளின் ஈற்றில் உள்ள அன் , இன் என்பன சாரியைகள் ஆகும் .

சாரியைகள் இடைச்சொற்கள் ஆதலால் , அவை இவ்விதியைக் கொள்ளாமல் .

ஒன்றன் கூட்டம் , வண்டின்கால்

என இயல்பாகப் புணர்ந்தன .

• உரிச்சொற்கள்

சான்று :

நனி + பேதை = நனிபேதை ( மிகவும் பேதை )

மழ + களிறு = மழகளிறு ( இளமையான களிறு )

நனி , மழ என்பன உரிச்சொற்கள் .

உயிர் ஈற்று உரிச்சொற்கள் .

உயிர் ஈற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின் ,

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

க , ச , த , ப மிகும் ( நன்னூல் , 165 )

என்ற விதிப்படி இச்சொற்கள் , நனி + பேதை = நனிப்பேதை