44

2.3.1 கல்லும் சொல்லாதோ கவி

மரத்தால் ஒரு யானை செய்தார்கள் .

யானை அச்சாக அவ்வாறே இருந்தது .

அது யானை என்று கருதிப் பார்த்தவர்களுக்கு அது மரம் என்று நினைக்கத் தோன்றவில்லை .

அது மரம் என்று கருதிப் பார்த்தவர்களுக்கு அது யானை என்று நினைக்கத் தோன்றவில்லை .

இதைத்தான் திருமந்திரம் என்ற நூல்

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

( திருமந் : 2290 )

என்று கூறுகிறது .

இது சிற்பக்கலையின் பெருமையை உணர்த்துவது !

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

சிலைகள் பலவற்றை மனிதர்கள் மெய்ம்மறந்து பார்க்கக் காரணம் என்ன ?

கல்லில் சமைத்த உருவம் அதைக் கல் என்பதை மறக்கச் செய்து

விடுகிறது .

இதோ மதுரை மீனாட்சியம்மன் கோயில் முகப்பிலுள்ள தூண் சிற்பங்களைப் பாருங்கள் !

சிவபெருமானின் ஆடல் காட்சிகளைக் கல் வடிவத்தில் பார்த்திருக்கிறீர்களா ?

இவற்றைக் கல் என்று நினைக்கத் தோன்றுகிறதா ?

இதுதான் கலையின் மாட்சி !

2.3.2 தெய்வத் திருமேனிகள்

உமை மற்றும் சிவன்

உலோகத்தால் செய்யப்பட்ட தெய்வத் திருமேனிகள் பல நம் கோயில்களில் இடம் பெற்றிருக்கின்றன .

இதோ , செப்புத் திருமேனியில் அழகிய சிலையாய் உருவாகியுள்ள உமை மற்றும் சிவனின் தோற்றங்களைக் காணுங்கள் !

சுந்தரமூர்த்தி நாயனார்

வள்ளி தெய்வானை உடனாகிய சிக்கல் சிங்காரவேலரின் படிமம் காணக் காணத் திகட்டாதது .

வட களத்தூர் கல்யாண சுந்தரர் திருமேனி பொழுது எல்லாம் பார்த்து இன்புறத்தக்கது .

காதில் வளையம் , தலையில் பாம்பு முடி , கழுத்தில் அணிகலன்களோடு கூடிய சிவபெருமானின் தோற்றம் காண்போரைக் களிப்புறச் செய்யும் .

இதோ , தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் உருவத்தைப் பாருங்கள் இவற்றைப் போல ஆயிரக்கணக்கான உருவங்கள் நம் கோயில்களில் குடிகொண்டு உள்ளன

2.3.3 சிற்பிகளும் சிற்பங்களும்

தமிழகத்தில் சிற்பங்களை வடித்த சிற்பிகள் , தெய்வ உருவங்களை உருவாக்கிய போது சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தார்கள் .

அவையாவன :

மனித உருவில் தெய்வ வடிவம்

• மனித உருவம் போலத் தெய்வ உருவங்களைச் சமைத்தாலும் மனிதர்களைப் போல எலும்பும் நரம்பும் தசையமைப்பும் கொண்டவர்களாகத் தெய்வங்கள் வடிக்கப் பெறுவதில்லை ; படைப்பதில்லை .

• நான்கு கைகள் , ஆறு கைகள் , பன்னிரண்டு கைகள் , ஆறு முகங்கள் , யானைத் தலை போன்ற வேறுபட்ட வடிவங்களில் கலைநுட்பங்கள் வெளிப்படத் தெய்வ உருவங்கள் படைக்கப்பெறும் .

• சிற்பங்களிலேயே ஆடை அணிகலன்கள் , பூணூல் ஆகியன அமைந்திருக்கும் வகையில் சிற்பங்கள் வடிக்கப்பெறும் .

• சிற்பங்களின் அளவுகளிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு .

12 அடி 15 அடி உயரம் கொண்ட சிலைகளும் படைக்கப்பெறும் .

சிற்பிகள் அழகியல் மற்றும் உடற்கூறு இலக்கணங்களைப் பயின்றவர்களாக இருந்தனர் .

சிற்பிகளுக்கென்று தனி இலக்கண நூல்களும் , பயிற்சி முறைகளும் இருந்தன .

மயன் எனும் தெய்வச் சிற்பி இருந்ததாகவும் அவன் பல அரிய சிற்பங்களை உருவாக்கியதாகவும் , உயர்ந்த கட்டடங்களை எழுப்பியதாகவும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. உலகம் எங்கும் வாழும் கலைகள் எவை ?

விடை

2. அம்பிகாபதியின் கதையைச் சுருக்கமாகக் கூறுக .

விடை

3. யானை விடியும் வரை கதிர்களை உண்ணாமல் இருந்தது ஏன் ?

விடை

4. ஏழு சுரங்களுக்குரிய தமிழ்ப் பெயர்களைக் கூறுக .

விடை 5. திருவள்ளுவர் குறிக்கும் இசைக் கருவிகள் யாவை ?

விடை

6. தெய்வ வடிவங்களைச் செய்யும் போது சிற்பிகள் கடைப்பிடித்த நெறிமுறைகளைக் குறிப்பிடுக .

ஓவியக்கலை E

ஓ என்ற எழுத்தே ஓவியம் என்ற பொருளுடையதாகப் பண்டைக் காலத்தில் இருந்தது .

கற்காலத்திலேயே ஓவியக்கலை உருவாகத் தொடங்கி விட்டது .

மனிதன் குகைகளில் வாழ்ந்த போதே ஓவியம் தீட்டியிருக்கிறான் .

வேட்டையாடி உணவுப் பொருள்களைத் தேடிக்கொண்ட காலத்திலும் ஓவியம் படைத்திருக்கிறான் .

தமிழகத்தில் கீழ்வாலை , முத்துப்பட்டி , அணைப்பட்டி , வேட்டைக்காரன் பாளையம் ஆகிய ஊர்களில் வேட்டையாடுவதைக் குறிக்கும் பழைமையான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன .

கோயில் சுவர்கள் , அரண்மனைப் பள்ளியறைகள் , கொலு மண்டபங்கள் ஆகிய இடங்களில் வரையப் பெற்ற ஓவியங்கள் இன்னும் தமிழகத்தில் அழியாமல் கிடைக்கின்றன .

ஓவியத்திற்கு என்றே தனி இடம் இருந்தது என்பதைச் சித்திரமாடம் என்ற சொல் வெளிப்படுத்தும் .

2.4.1 ஓவியப்பாவை

பெண்ணின் அழகை ஓவியத்திற்கு ஒப்பிடுவது வழக்கம் .

ஓவியம் போன்ற பெண் என்றும் ஓவியப்பாவை என்றும் கூறுவர் .

உயிர்பெற எழுதப்பட்ட

ஓவியப் பாவை ஒப்பாள்

( சீவக : 2048 )

என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது .

கொல்லி மலையிலே ஒரு பெண்ணின் ஓவியம் வரையப் பட்டிருந்ததாம் .

அதனைப் பார்ப்பவர்கள் உயிரைப் பறிகொடுக்கும் அளவிற்கு அதன் அழகில் மயங்கி விழுந்து விடுவார்களாம் .

இரதியின் ஓவியம்

இப்படி ஒரு கதை ( ஓவியப் பாவையைப் பற்றிய ) நம் நாட்டில் நிலவுகிறது .

தமிழக ஓவியங்களில் பெண்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டுள்ளது .

மன்மதன் எனும் தெய்வ அழகனின் மனைவியான இரதியின் ஓவியம் திருப்பரங்குன்றத்தில் இருந்ததாகக் குறிப்பு உள்ளது .

2.4.2 ஓவியச் செய்தி

ஓவியம் பேசுவது போல் இருக்க வேண்டும் .

ஏதோ ஒரு செய்தியை உணர்த்துவது போல் இருக்க வேண்டும் .

" தன்னைவிட்டுத் தன் கணவன் பிரிந்து போய்விடுவானோ என்று அஞ்சுகிறாள் ஒரு பெண் .

போகாதீர்கள் !

என்று சொல்ல நினைக்கிறாள் .

வாய் வரவில்லை ஆனால் அவள் நிற்கும் நிலையும் கண்ணில் இழையோடும் சோகமும் அந்தக் கருத்தை ' ஓவியச் செய்தி ' போல உணர்த்தியதாகப் " புலவர் ஒருவர் பாடுகின்றார் .

ஓவியம் ஒரு கதை சொல்வதாக அமையலாம் ; ஒரு நீதியை அறிவுறுத்துவதாகவும் அமையலாம் .

2.4.3 ஓவியரும் ஓவியங்களும்

தமிழக ஓவியங்களில் பழைமையானவை காஞ்சி கயிலாசநாதர் கோயில் ஓவியங்களும் , பனைமலைக் கோயில் ஓவியங்களும் , சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியங்களும் , திருமலைப்புரம் , மலையடிப்பட்டி ஓவியங்களும் , தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் ஓவியங்களும் ஆகும் .

காஞ்சி கயிலாசநாதர்

சித்தன்னவாசல்

குகைக் கோயில் ஓவியம்

தஞ்சைக் கோயில்

ஓவியம்

பனைமலைக்

கோயில் ஓவியம்

கி.பி. 600க்கு முற்பட்ட கோயில்கள் செங்கல் , மரம் , சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப்பட்டவை .

அவை அழிந்துபோய் விட்டன .

அவற்றில் வரைந்த ஓவியங்கள் பற்றியும் நமக்குச் செய்திகள் கிடைக்கவில்லை .

நமக்குக் கிடைப்பனவற்றுள் காலத்தால் முற்பட்டது சித்தன்ன வாசல் ஓவியமே !

அரசன் அரசி ஓவியம் , தாமரைப் பொய்கை ஓவியம் ஆகியன அழகுமிக்கவை .

அவையும் இன்று மெல்ல அழிந்து வரும் நிலையில் உள்ளன .

இந்த ஓவியங்களைத் தீட்டிய ஓவியர்களைப் பற்றிய செய்தி ஏதும் நமக்கு கிடைக்கவில்லை .

எனினும் கேவாத பெருந்தச்சன் , குணமல்லன் சாத முக்கியன் , கலியாணி , கொல்லன் சேமகன் , இராசராசப் பெருந்தச்சன் போன்ற பெயர்கள் மட்டும் அறியப்படுகின்றன .

கட்டடக்கலை E யானைகளின் மீது உயர்த்திய கொடிகளோடு நுழையக்கூடிய பெரிய வாயில்கள் , குன்றைக் குடைந்து சமைத்ததுபோல் அகன்ற இடைவெளி கொண்ட முகப்புகள் , சுதையால் வெள்ளியைப் போல் பளபளப்பாகச் சாந்துபூசிக் கண்ணாடிபோல் இழைக்கப் பெற்ற சுவர்கள் , கொடியும் மலரும் இயற்கைக் காட்சிகளும் என வீடுதோறும் வரையப் பெற்ற இனிய ஓவியங்கள் என்றவாறு அமைந்த பெரிய வீடுகளைப் பழங்காலத்தில் நகர் என்றே குறித்தனர் .

பண்டைக்காலத்தில் கட்டப்பெற்ற மாபெரும் அரண்மனைகள் எல்லாம் அழிந்து விட்டன .

ஆனால் கோயில்கள் பல அழியாமல் இன்னும் தமிழர் கட்டடக்கலைப் பெருமையின் மாண்பைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன .

2.5.1 கோயிற் கட்டடக்கலை

செங்கணான் என்ற சோழ வேந்தன் பல்லவர் காலத்திற்கு முன்பே , அதாவது கி.பி. 600க்கு முன்னர் சிவபெருமானுக்கு எழுபத்தெட்டுக் கோயில்களைக் கட்டினான் என்று அறியப்படுகிறது .

பல்லவர்கள் காலத்தில் மலைகளைக் குடைந்து செய்த குகைக் கோயில்களும் , கருங்கற்களை அடுக்கிச் செய்த கற்கோயில்களும் சமைக்கப் பெற்றன .

திருநாவுக்கரசர் எனும் சைவக்குரவர் தம் காலத்தில் இருந்த கோயிற் கட்டட வகைகளைப் பற்றிக் கூறுகிறார் .

அவையாவன :

• கரக்கோயில்

• கொகுடிக்கோயில்

• ஞாழற் கோயில்

• இளங்கோயில்

• மணிக்கோயில்

• ஆலக்கோயில்

கோயிற்

கட்டட

வகை சிறப்பு எடுத்துக்காட்டு

கரக்

கோயில் வட்டமான

விமானம

திருக்கடம்பூர்

கொகுடிக்

கோயில் வட்ட விமானத்தின் மேல்

கர்ண ( தோடு வடிவக் ) கூடம் திருக்கருப்பறியலூர்

ஞாழற்

கோயில் ஞாழல் ( ஒருவகை மரம் )

போன்று ( குடை விரிந்த ) அமைப்பு உடையது ( இன்று இல்லை )

இளங்

கோயில் பெருங்கோயிலைப்

பழுதுபார்க்கும்

பொழுது தெய்வ

உருவைத்

தற்காலிகமாக

வைக்கும் கோயில்

கடம்பூர்

மணிக்

கோயில் ஆறு அல்லது

எட்டுப்

பட்டைகளைச்

சிகரத்தில்

கொண்டது

சீனிவாசநல்லூர்

ஆலக்

கோயில் மிக அகன்று

தாழ்ந்த மேற்

கூரையுடைய

கோயில்

( இன்று இல்லை )

கோயிற் கட்டட வகை .

வட்டமான விமானத்தை உடைய கோயில் கரக்கோயில் ( திருக்கடம்பூர் ) ஆகும் . வட்டமான விமானத்தின் மேலே தோடு போன்ற அமைப்புடைய கர்ண கூடத்தைக் கொண்டது கொகுடிக் கோயில் ( திருக்கருப்பறியலூர் ) ஆகும் .

ஞாழல் என்பது அடர்ந்த மலர்கள் பூக்கும் ஒருமரம் .

இந்த மரம் போன்று குடை விரிந்த அமைப்புடையது ஞாழற் கோயில் .

இவ்வகைக் கோயில் இன்று இல்லை .

இளங்கோயில் என்பது பெருங்கோயிலைப் பழுது பார்க்கும்போது தெய்வ உருவைத் தற்காலிகமாக வைக்கும் கோயில் ஆகும் .

இதனைப் பாலாலயம் என்றும் கூறுவர் ( கடம்பூர் )

மணிக் கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப் பட்டைகளைச் சிகரத்தில் கொண்டதாகும் ( சீனிவாசநல்லூர் )

ஆலக்கோயில் என்பது ஆலமரத்தின் கீழ் அமைந்தாற்போல அகன்று விரிந்த சிறப்புடைய கோயிலாகும் .

கோயிற் கட்டடக் கலையில் குறிப்பிடத்தக்கவை தூண்கள் , மேற்கூரையின் உள்பகுதி , கோபுரம் , தெய்வ உருவங்கள் ஆகியவை ஆகும் .

2.5.2 அரண்மனைகள்

கோட்டை கொத்தளங்கள் , அகழிகள் , கொலு மண்டபங்கள் , யானை குதிரைக் கொட்டடிகள் , அந்தப்புரங்கள் போன்றவற்றோடு கூடியது அரண்மனை .

பண்டைக்காலத்து அரண்மனைகள் பலவும் அழிந்துவிட்டன .

உறையூர் , பூம்புகார் , கருவூர் , மதுரை , வஞ்சி ஆகிய நகரங்களிலிருந்த அரண்மனைகள் இன்று இல்லை .

செஞ்சி

நாயக்கர்

மகால்

இதோ , மூன்றில் ஒரு பகுதியாகக் குறுகி விட்ட திருமலை நாயக்கர் மகால் , தஞ்சை மராட்டியர் கால அரண்மனை , செஞ்சி தேசிங்குராசனின் அரண்மனை ஆகியன சிதைந்த நிலையில் இன்றும் உள்ளன .

2.5.3 கட்டடக்கலை மாட்சி

தஞ்சை

திருவரங்கம்

கழுகுமலை

மதுரை

இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் , நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் பல செய்யப் பெற்ற மதுரை மீனாட்சி கோயில் , திருவரங்கத் திருக்கோயில் , மாணிக்கவாசகர் பணி செய்த திருப்பெருந்துறைக் கோயில் , கழுகுமலைக் குடைவரைக் கோயில்கள் ஆகியன தமிழர்களின் கட்டடக்கலை மாட்சியைச் சுட்டிக் காட்டி நிற்கின்றன .

வாழும் வீட்டை உறுதி மிக்கதாகக் கட்டிக் கொள்வதில் பண்டைத்தமிழர் கவனம் செலுத்தவில்லை .

வழிபடும் திருக்கோயில்கள் காலத்தை வென்று நிற்கும்படி கட்டினர் .

எகிப்தின் பிரமிடுகள் , கிரேக்கச் சிலைகள் , உரோமானிய கலைக் கூடங்கள் , பைசா நகர்க் கோபுரம் , ஆக்ராவின் தாஜ்மகால் ஆகியவற்றுக்கு நிகராகத் தமிழகக் கோயிற் கட்டடக் கலை விளங்குவதை இன்றும் காணலாம் .

தொகுப்புரை

தமிழர் , கலைகளில் பெரு விருப்பமுள்ளவர் .

இவர்களின் கலைப் பாணியைத் தமிழகக் கோபுரங்களில் காணலாம் .

இன்றும் தமிழகக் கலைகள் கோயில்களாலேயே பாதுகாக்கப்படுகின்றன .

யானை போன்ற விலங்குகளை மயக்கும் ஆற்றல் தமிழ்ப் பெண்ணின் இசைக்கு இருந்தது .

சிலப்பதிகாரம் ஓர் இசைக்களஞ்சியமாக அல்லவா திகழ்கின்றது !

மாமல்லபுரத்தில் கல்யானை , மதுரையில் சிவபெருமான் ஆடற்கோலம் , சித்தன்னவாசலில் அரசன் அரசி ஓவியம் ஆகியன எல்லாம் தமிழரின் சிறந்த கலை மாதிரிகள் அல்லவா ?

இவற்றைக் குறித்து இப்பாடத்தில் ஓரளவு தெரிந்து கொண்டீர்கள் .

தொடர்ந்து போகலாமா ?

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. கொல்லிப் பாவை பற்றிய செய்தியைக் கூறுக .

விடை

2. தமிழகத்தின் பழமையான ஓவியங்கள் எவை ?

விடை

3. செங்கணான் கட்டிய கோயில்கள் எத்தனை ?

விடை

4. கோயில்களின் வகைகளைக் கூறுக .

விடை

5. சிதைந்த நிலையில் உள்ள அரண்மனைகள் இன்று எங்குக் காணப்படுகின்றன ?

அறநூல்கள் வளர்த்த பண்பாடு

பாட முன்னுரை

ஒரு பண்பாட்டின் சிறப்பு அதன் ஒழுக்கநெறி வரையறை - எவற்றைக் கொள்ள வேண்டுமென்றும் , எவற்றைத் தள்ள வேண்டுமென்றும் பகுத்துணர்ந்து நடந்து கொள்வதே என்று விளக்கம் கூறுவர் அறிஞர் .

மனிதன் பிற மனிதர்களோடு முரண்படாமலும் , தன் அறிவை இழந்து விடாமலும் , சமூக ஒப்புரவுக்கு மாறாகத் தனி மனித நிலையை வேறுபடுத்தாமலும் , வாழ்க்கை மெய்ம்மைகளை உணர்ந்து கொண்டு அவற்றைப் புறக்கணிக்காமலும் வாழும் வாழ்க்கை நெறியை ஒவ்வொரு மொழியிலும் அற நூல்கள் கற்பிக்கின்றன .

பொருள் தேடுதலே வாழ்க்கை , இன்பம் துய்த்தலே வாழ்க்கை என்ற நிலைகள் வாழ்க்கையின் உயிர்ப்பை இழந்துவிடச் செய்யும் எனக் கருதியது தமிழினம் . எனவே பல அற நூல்களைத் தமிழ்ச் சான்றோர் இயற்றினர் .