47

சைவம் பெண்களுக்கும் உரிமை கொடுத்தது .

பெண்களும் முத்தி அடைய முடியும் என்று சைவம் கற்பித்தது .

4.2.1 சாதி வேற்றுமை கருதாத சைவம்

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் பிறப்பால் பிராமணர் .

நந்தனார் தாழ்த்தப்பட்டவர் .

சேரமான் பெருமாள் அரசர் .

கண்ணப்பர் வேடர் .

இவர்களிடையே எந்தவித வேறுபாட்டையும் சைவம் கற்பிக்கவில்லை .

நந்தனாரின் அன்பின் பெருமையை இறைவன் தில்லைவாழ் அந்தணர்களுக்கு உணர்த்துகிறான் .

கண்ணப்பர் என்ற வேடர் பற்றிச் சிவகோசரியார் என்ற முனிவரிடம் சிவபெருமான் கூறும்போது “ அவனுடைய வடிவம் எல்லாம் அன்பு ; அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியது ” என்று கூறுகிறார் .

கண்ணப்பரைப் போல இறைவனிடம் அன்பு செலுத்த யாரால் முடியும் என்று முற்றும் துறந்த பட்டினத்தார் கூறுகின்றார் .

மனிதர்களைச் சாதியால் பிரித்துப் பார்க்காதது சைவம் .

சுந்தரர் அந்தணர் குலத்தில் பிறந்தார் ; அரசரால் வளர்க்கப்பட்டார் ; வேறு குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார் .

4.2.2 எது மெய்ப்பொருள் ?

கண்ணப்பர்

உலகில் உண்மையான பொருள் ஒன்றே !

அது சிவம் என்பது சைவர்களின் கொள்கையாகும் .

உயிர்கள் தாம் செய்யும் பாவபுண்ணியங்களுக்கு ஏற்பப் பிறவிகளைப் பெறுகின்றன .

இறைவனைத் தொழுது தீவினை தவிர்த்து உயிர்கள் பிறப்பு நீங்கலாம் என்று சைவம் கூறுகின்றது .

வினையை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும் .

" பிறவாமை வேண்டும் ; வினை காரணமாக மீண்டும் பிறப்பு இருந்தால் இறைவனை மறவாத நெஞ்சம் வேண்டும் " என்பதே அடியவர்களின் வேண்டுகோளாக இருந்தது .

அழுதும் தொழுதும் இறைவனை வேண்டி அவன் அருளைப் பெறலாம் என்பது அடியவர்களின் நம்பிக்கை .

சிவத்தை உணரும் ஞானமே மெய்யறிவாகும் .

அந்த ஞானம் வீடுபேற்றைத் தரும் என அடியவர் கருதினர் .

4.2.3 பெண்மையைப் போற்றிய சைவம்

இசைஞானியார்

சைவ உலகில் பெண்களை இழிவாகக் கருதும் நிலை இல்லை .

பரவையார் , சங்கிலியார் , இசை ஞானியார் , காரைக்காலம்மையார் , மங்கையர்க்கரசியார் ஆகியோர் சைவம் வளர்த்த பெண்மணிகள் .

காரைக்காலம்மையார் இறைவனின் அருள் பெற்றவர் .

இறைவன் ஆடும்போது அந்த ஆடலுக்குரிய பாடலைப் பண்ணோடு இசைத்த மூதாட்டி .

சைவக்கோயில்களில் உள்ள 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைப் பார்த்திருக்கிறீர்களா ?

காரைக்காலம்மையார்

மங்கையர்க்கரசியார்

எல்லோரும் நின்று கொண்டிருக்கக் காரைக்காலம்மையார் உட்கார்ந்திருப்பார் .

இறைவன் இவரை அம்மையே !

என அழைத்தான் .

மங்கையர்க்கரசியார் பாண்டியனின் மனைவி .

இவரைத் திருஞான சம்பந்தர் “ மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச்செல்வி பாண்டிமாதேவி ” என்று பாடுகின்றார் .

செம்பியன்மாதேவி என்ற சோழர்குல அரசி சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டிய பெருமைக்கு உரியவர் .

இவர் பெயரால் தமிழகத்தில் ஓர் ஊர் உள்ளது .

நாயன்மார்களும் பண்பாடும் E

நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து பலப்பல நற்பண்புகள் அறியப் பெறுகின்றன .

குணம் என்ற குன்று ஏறி நின்ற பெரியோர்கள் அவர்கள் !

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு ( குறள் ; 997 )

என்று திருக்குறள் கூறுவது போலத் தமக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் நல்லனவற்றையே செய்யும் பண்பை நாயன்மார்களிடம் காணலாம் .

திருக்கோயிலூர் மன்னராக விளங்கியவர் மெய்ப்பொருள் நாயனார் .

திருநீறு பூசியவர்களைத் தம் மனத்திற்கு உகந்தவர்களாகப் போற்றி வழிபாடு செய்பவர் இவர் . இவருடைய பகைவன் முத்தநாதன் மனத்தினுள் இவரை வீழ்த்தும் கருத்துக் கொண்டிருந்தான் .

அதனால் ஒரு குறுவாளை ஓலைச் சுவடிக்கிடையில் மறைத்து எடுத்துக் கொண்டு , திருநீறுபூசிச் சிவனடியார் போலக் கோலம் கொண்டு நாயனாரைச் சந்தித்தான் .

இறைவனுக்குரிய மெய்ப்பொருளைக் கற்பிப்பதாகக் கூறிக் குறுவாளால் அவரைக் குத்தினான் .

அப்போது முத்தநாதனைப் பாய்ந்து கொல்ல வந்த தம் மெய்க்காப்பாளரான தத்தனை , நாயனார் பார்த்தார் .

" தத்தா இவர் நம்மவர் , இவரை இடையூறில்லாமல் செல்ல விடு " என்றார் .

மெய்ப்பொருள் நாயனாரின் வரலாறு , சான்றாண்மைப் பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் .

திருநாவுக்கரசரைச் சுண்ணாம்பு வேகவைக்கும் அறையில் அடைத்து வைத்தார்கள் ; உணவில் நஞ்சு கலந்து கொடுத்தார்கள் ; யானையை ஏவிக் கொல்ல முயன்றார்கள் ; கல்லிலே கட்டிக் கடலிலே எறிந்தார்கள் .

எல்லாவற்றிலும் அவர் பிழைத்துக் கொண்டார் .

தம்மை இவ்வாறெல்லாம் செய்ய ஆணையிட்ட அரசனை அவர் வசை மொழியவில்லை .

அரசனுக்கு எதிராக இயக்கம் நடத்தவில்லை .

இத்தகைய பண்பாடு நாயன்மார்கள் வாழ்க்கையில் காணப்படுகின்றது .

4.3.1 அப்பரும் சம்பந்தரும்

அப்பரும் சம்பந்தரும்

திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் அப்பர் .

அப்பர் என்ற பெயரை யார் வழங்கினார் என்பது தெரியுமா ?

திருஞானசம்பந்தர்தான் திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைத்தார் .

சம்பந்தர் ஏறிவந்த பல்லக்கை அப்பர் சுமந்தார் .

இருவரும் வேதாரணியம் என்ற திருமறைக்காட்டில் கோயில் கதவு திறக்கவும் மூடவும் பாடினர் .

திருநாவுக்கரசர் வேளாளர் மரபைச் சார்ந்தவர் .

திருஞானசம்பந்தர் அந்தணர் குலத்தவர் .

எனினும் இருவரிடையே வேறுபாடில்லாமல் இருந்தது .

இதுவே சைவம் வளர்த்த பண்பாடு .

4.3.2 அப்பரும் அப்பூதியும்

திங்களூர் என்ற ஊரில் அப்பூதி என்று ஒரு அந்தண நாயனார் இருந்தார் .

இவர் திருநாவுக்கரசரிடம் ( அப்பர் ) பேரன்பு கொண்டிருந்தார் .

தம் பிள்ளைகளுக்கெல்லாம் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டினார் .

வீட்டிலுள்ள பொருள்களெல்லாம் திருநாவுக்கரசு என்றே பெயர் கொண்டன .

திருநாவுக்கரசரின் பெயரால் அறச்சாலைகள் நிறுவினார் ; தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தருமம் செய்தார் .

இவர் அப்பரைப் பார்த்ததில்லை .

ஒருநாள் அப்பர் திங்களூருக்கு வந்தார் .

தம் பெயரே எங்கும் விளங்குவது கண்டார் .

அப்பூதியை அவருடைய இல்லத்தில் வந்து கண்டார் .

“ உங்களுடைய பெயரில் தருமம் செய்யாமல் வேறொரு பெயரில் தருமம் செய்ய வேண்டிய காரணம் என்ன " என்று கேட்டார் .

அப்பூதி இதுகேட்டுக் கோபம் கொண்டார் .

“ கல்லில் கட்டிக் கடலில் போட்டபோதும் கரையேறிய அப்பரின் பெருமை அறியாத நீர் யார் " என்று அப்பூதி கேட்டார் .

பிறகு தம்முன் நிற்பவர் அப்பரே என்று அறிந்து அவரைப் பணிந்தார் .

அப்பூதியின் அன்பு எல்லை அற்றது .

தம் மகனைப் பாம்பு தீண்டி அவன் இறந்த நிலையிலும் அவர் அப்பருக்கு விருந்து செய்யத் தயங்கவில்லை .

" பெரியவருக்கு அமுது செய்யும் வேளையில் இவன் இடையூறு செய்தான் " என்று மகனைக் குறித்து எண்ணினார் .

வருணப் பாகுபாடு இவர்கள் வாழ்க்கையில் மதிப்பு இழந்துவிட்டது .

4.3.3 சுந்தரரும் சேரமான் பெருமாளும்

சுந்தரர்

சுந்தரர் இறைவனுடைய தோழர் .

தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர் .

சேரமான் பெருமாள் சேரநாட்டு மன்னர் .

சுந்தரரும் சேரமான் பெருமாளும் நண்பர்கள் .

நட்பு என்றால் எந்த அளவு என்று காணுங்கள் !

சுந்தரருக்கு வான் உலகத்திலிருந்து அழைப்பு வந்தது .

சிவபெருமான் சுந்தரரை அழைத்துவர இந்திரனின் வெள்ளை யானையை அனுப்பியிருந்தார் .

சுந்தரரும் சேரமான் பெருமாளும் சுந்தரர் யானைமீது ஏறியவுடன் தம் மனைவிமார்களை எண்ணவில்லை ; தம் நண்பர் சேரமான் பெருமாள் தம்முடன் வரவில்லையே என்று கருதினார் .

இதனை அறிந்த சேரமான் தம் குதிரையில் ஏறினார் .

குதிரையின் காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார் .

அந்த அளவில் சேரமான் குதிரை சுந்தரரின் யானையை வலமாகச் சுற்றி அதன் முன்னே சென்றது .

இறைவன் பெயர் எதையும் செய்ய வல்லது என்பதை இந்நிகழ்வு காட்டும் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. இறைவனைக் கடலாக எண்ணியவர்கள் சமயங்களை எப்படி எண்ணினர் ?

விடை

2. சமயங்கள் தோன்று முன்பு வழிபாட்டு நெறி எப்படி இருந்தது ?

விடை

3. சைவ சமய மெய்ப்பொருள் யாது ?

விடை

4. கண்ணப்பரின் அன்பு பற்றிச் சிவபெருமான் கூறியது யாது ?

விடை

5. அப்பரைப் பார்த்து அவர் யாரென்று அறியாத நிலையில் அப்பூதி என்ன கேட்டார் ?

வைணவம் வளர்த்த பண்புகள் E

திருமாலிடம் அன்பு பூண்டவர்கள் வைணவர்கள் ; அவனே முழுமுதல் தெய்வம் என்ற கருத்துடையவர்கள் .

உலகம் எல்லாவற்றையும் உயிர்கள் எல்லாவற்றையும் காக்கும் தொழிலைத் திருமால் செய்கிறார் எனக் கூறுகிறது வைணவம் .

இறைவனிடம் ' நீயே சரணம் ' என்று அடைக்கலம் கொண்டால் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடலாம் என்று கூறுகிறது வைணவம் .

இந்திரலோகத்தை ஆளும் பேற்றைவிடத் திருமாலின் இணையடிகளைத் தொழும்பேறு உயர்ந்தது என்கிறார் ஆழ்வார் .

பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே !

( நாலா , மர்ரே : 872 )

என்பது தொண்டரடிப்பொடியாழ்வாரின் கூற்றாகும் .

4.4.1 வைணவம் காட்டும் சமரசம்

திருமாலும் சிவனும் இணைந்த காட்சி

" அரியும் சிவனும் ஒண்ணு ; அறியாதவர் வாயில் மண்ணு " என்பது பழமொழி .

இரு சமயங்களுக்கிடையே பெரிய வேறுபாடுகள் இல்லை .

அறியாதவர்கள் வேறுபாடுகளைக் கற்பித்து மதச்சண்டைகளை உருவாக்கி விட்டனர் .

ஆழ்வாருக்குத் திருமாலும் சிவபெருமானும் வேறு வேறாகத் தோன்றவில்லை .

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழ் அரவும் பொன்நாணும் தோன்றுமால் சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து

( நாலா , மர்ரே : 2344 )

என்கிறார் பேயாழ்வார் .

தாழ்சடை , மழுவாயுதம் , அரவு ( பாம்பு ) ஆகியன சிவபெருமானுக்கு உரியன ; நீண்டமுடி , சக்கரம் , பொன்நாண் ஆகியன திருமாலுக்கு உரியன .

இவையெல்லாம் ஒன்றாகத் தோன்றுகின்றன என்கிறார் ஆழ்வார் .

இதுவே தமிழர் கண்ட சமரச ஞானம் .

4.4.2 வைணவ மெய்ப்பொருள்

உலகத் தோற்றத்திற்கு முதற்காரணம் , துணைக்காரணம் , நிமித்த காரணம் என்ற மூன்றாகவும் இருப்பவன் திருமால் .

ஒரு பானை உருவாவதற்கு முதற்காரணம் மண் ; பானையை உருவாக்கும் குயவன் நிமித்த காரணம் ; சக்கரம் துணைக்காரணம் .

இதேபோல உலகம் உருவாக அனைத்துமாகவும் இருப்பவன் திருமால் என்கிறது வைணவம் .

வைணவத்தில் பக்தி நெறி என்பது விரதம் , தவம் , தியானம் , பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி ஆகியவற்றையெல்லாம் உட்கொண்டது .

இந்த நெறி எல்லாராலும் பின்பற்ற முடியாது .

எனவே வைணவம் பிரபத்தி நெறி என்ற ஒன்றை வகுத்துத் தந்தது .

பிரபத்தி என்றால் சிறந்த பக்தி என்பது பொருள் .

இந்த நெறிக்குக் கட்டுப்பாடுகள் இல்லை . நீராடுதல் , மந்திரம் சொல்லுதல் போன்றவையெல்லாம் பிரபத்தி நெறியில் இல்லை .

புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !

என்ற எளிமையே இறைவனை அடையப் போதுமானது .

4.4.3 திவ்வியப் பிரபந்தம்

ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடிய நாலாயிரம் பாசுரங்கள் திவ்விய பிரபந்தம் எனப்பெறும் .

இது திராவிட வேதசாகரம் அதாவது தமிழ் வேதக்கடல் எனப்பட்டது .

நாலாயிரத்தில் 1296 பாசுரங்கள் நம்மாழ்வாரால் பாடப்பட்டவை .

நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைமையானவர் .

இவர் பாடிய 1296 பாசுரங்களில் 1102 பாசுரங்கள் திருவாய்மொழி எனப்படும் .

இதனை ,

" சாந்தியினை நேராக உடைய நல்ல

சடகோபர் அமுதத்தைத் தாமே உண்டு

தீந்தமிழ் என்று ஒருகோடி வேதமாகும்

செய்ய திருவாய்மொழிந்தார் ..... "

என்று பிற நூலும் பாராட்டக் காணலாம் .

“ வடமொழி வேத வேதாந்தங்களில் தோன்றுகிற ஐயந்திரிபுகளைத் திருவாய்மொழியினைக் கொண்டு தெளிகின்றோம் " என்று வேதாந்த தேசிகர் என்ற பேரறிஞர் கூறுகின்றார் .

இந்தத் திருவாய்மொழிக்கு ஐந்து உரைகள் உள்ளன .

வைணவப் பெரியார்கள் வளர்த்த பண்பாடு E

வைணவப் பெரியார்கள் திருமாலின் அவதாரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் .

இராம அவதாரத்தையும் கிருஷ்ண அவதாரத்தையும் மனம் குளிரப் பாடுபவர்கள் .

கொடியவர்களை அடக்கி நல்லோர்களைக் காக்கின்ற இறைவனின் திருக்குணத்தை இவர்கள் பெரிதும் போற்றக் காணலாம் .

மனிதர்களைப் பாடுவதில்லை என்று உறுதி பூண்ட பெரியோர்கள் இவர்கள் .

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் !

மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்

( நாலா , மர்ரே : 3212 )

என்று கேட்கிறார் நம்மாழ்வார் .

இந்தப் பொருள் எதற்கு ?

எத்தனை நாளைக்குப் போதும் ?

என்று கூறி இறைவனைப் பாடி இந்தச் சன்மத்தை அதாவது பிறவியை ஒழித்துக் கொள்வதே நல்லது என்கிறார் அவர் .

இறைவனையே வணங்கும் பெருமை , அடியார்களின் முன் எளியவராய்ப் பணிந்து வாழும் தன்மை , இறைவனின் அவதாரப் பெருமைகளைப் பேசுதல் ஆகியவற்றை வைணவப் பெரியோர்கள் தம் பண்புகளாகக் கொண்டிருந்தனர் .

இராமானுஜர் வைணவ சமயத்தை நாடெங்கும் பரப்பியவர் .

வைணவர்களால் மதிப்புக்குரியவராக வணங்கப்பட்டவர் .

அவர் ஒருமுறை திருப்பதி சென்றார் .

திருப்பதி கோயில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த பெரிய திருமலைநம்பி என்ற முதியவர் இராமானுஜரை வரவேற்க ஏழு மலைகளையும் கடந்து கீழே வந்து காத்திருந்தார் .

இராமானுஜர் அவரிடம் “ என்னை வரவேற்க யாராவது ஒரு சிறியவரை அனுப்பியிருக்கக் கூடாதா ? " என்று கேட்டார் .

அதற்குத் திருமலைநம்பி “ நானும் அதைத்தான் நினைத்தேன் .

ஆனால் என்னைவிடச் சிறியவர் யாரும் இல்லையே " என்றார் .

இந்த எளிமை வைணவர்கள் வளர்த்த பண்பாடாகும் .

4.5.1 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

ஆண்டாள்

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெண் .

அவர்தாம் ஆண்டாள் .

திருவில்லிப்புத்தூர் நந்தவனத்தில் பெரியாழ்வார் தாம் கண்டெடுத்த குழந்தையைக் கோதை என்று பெயர் சூட்டி வளர்த்தார் .

இக்கோதையே ஆண்டாள் எனும் ஆழ்வார் .

பெரியாழ்வார் திருமாலுக்கென்று கட்டி வைத்த மாலையை ஆண்டாள் தான் சூடிக்கொண்டு கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள் .

ஒருநாள் இதைக்கண்ட ஆழ்வார் ஆண்டாளைக் கோபித்துக்கொண்டார் ; மாலை புனிதம் கெட்டுவிட்டது என்றார் .

ஆனால் திருமால் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே தமக்கு வேண்டும் என்று கேட்டார் .

பெரியாழ்வாரும் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையைத் திருமாலுக்குச் சூட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார் .

இறுதியில் ஆண்டாள் திருமாலோடு இரண்டறக் கலந்தார் . பெரியாழ்வார் ,