49

2. பிறர் பொருளை விரும்பாமை

3. தவறான இன்பத்தைக் கொள்ளாமை

4. பொய் பேசாமை

5. கள் அருந்தாமை

தமிழகத்தில் பௌத்த நெறிகள் பலராலும் விரும்பப்பட்டன .

இவை நல்ல நெறிகளாக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டன .

5.3.3 பௌத்தர் பண்பாடு

பௌத்தத் துறவிகளின் கூட்டத்தைச் சங்கம் என்றழைத்தனர் .

இந்தச் சங்கம் பௌத்த சமயக் கொள்கைகள் பரவுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது .

இவ்வாறு சமயப் பெரியோர் அருளுணர்ச்சி உடையவராகவும் பண்பாடு மிக்கவராகவும் இருந்தனர் .

இவர்கள் துன்பங்களைத் தாங்கிப் பழகினர் .

பிறருக்குத் துன்பம் செய்வதை அறவே வெறுத்தனர் .

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு

( குறள் ; 271 )

என்ற திருக்குறள் கூறும் நெறியே அவர்கள் நெறியாக அமைந்தது .

வரும் துன்பத்தைத் தாங்குதல் , பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை இவையே தவத்திற்கு உரியன என்பது இதன் பொருள் .

பெண்களுக்கும் சமய உலகில் பேரிடம் உள்ளது என்பதைப் பௌத்தம் வற்புறுத்தியது .

மணிமேகலை என்ற பெண் துறவு பூண்டு பலருக்கும் ஞானத்தைக் கற்பித்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. வைதிக சமயம் என்பது யாது ?

விடை

2. வைதிகம் , சமணம் , பௌத்தம் ஆகியன கொண்டிருந்த கடவுள் சிந்தனைகளைக் கூறுக .

விடை

3. சமண சமயம் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தது ?

விடை

4. சமணர் செய்த தானங்களைக் குறிப்பிடுக .

சமணர் தமிழ்த் தொண்டு E

சமண சமயம் தமிழகம் வந்த பிறகு தமிழறிஞர்கள் பலர் சமணத்தைத் தழுவினர் .

ஊன் உணவு இல்லாத காய்கறி உணவை இப்போது சைவ உணவு எனக் கூறுகிறோம் .

ஆனால் , பழங்காலத்தில் இவ்வகை உணவு ஆருகத உணவு எனப்பட்டது .

ஆருகதம் என்பது சமணத்தின் மற்றொரு பெயர் ஆகும் .

மகாவீரர் என்ற சமணப் பெரியவர் மோட்சம் அடைந்த நாளே தீபாவளி ஆகும் .

இதனை இந்து சமயம் பிற்காலத்தில் தங்களுடைய விழாவாக ஆக்கிக் கொண்டது .

இவ்வாறு மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய சமணர்கள் , இலக்கிய , இலக்கணங்கள் , நிகண்டுகள் , சிறு பிரபந்தங்கள் ஆகியவற்றை இயற்றித் தமிழை வளமுடையதாக்கினர் .

5.4.1 இலக்கியம்

சங்க காலத்தில் சமண அறிஞர் பலர் இலக்கியப் பணிகளைச் செய்துள்ளனர் .

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் சமண சமயக் கருத்துகள் பலவற்றைக் கூறும் நூலாகும் .

சீவக சிந்தாமணி சமண முனிவராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டதாகும் .

ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி என்ற மற்றொரு காவியமும் சமணர் அளித்த நன்கொடையாகும் .

நாலடியார் , பழமொழி நானூறு , ஏலாதி , சிறுபஞ்சமூலம் , அறநெறிச்சாரம் ஆகிய அறநூல்கள் சமணர் அளித்தவையேயாகும் .

5.4.2 இலக்கணம்

தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துக் கூறுகின்றது .

அது சமண சமயத்தைச் சார்ந்த கருத்தாகும் என அறிஞர்கள் கூறுகின்றனர் .

கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலும் இதற்குப் பின்னர்த் தோன்றிய நேமிநாதம் , நம்பி அகப்பொருள் , புறப்பொருள் வெண்பாமாலை , யாப்பருங்கலம் , யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களும் சமணர் படைத்து அளித்தவையேயாகும் .

தமிழில் அதிக இலக்கண நூல்களை எழுதிய பெருமை சமணர்களையே சார்ந்ததாகும் .

5.4.3 பிற நூல்கள்

செய்யுள் நூல்களுக்கு விரிவாக உரை எழுதுகின்ற ஒரு நிலையைச் சமணர்கள் வளர்த்தனர் .

இது கல்வி பெறுவதற்கு அடிப்படையாக ஆயிற்று . தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரை எழுதியவர் இளம்பூரணர் என்ற சமணரே ஆவார் .

இவர் தமிழ்ப் பண்பாட்டு நிலையைத் தழுவி அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார் .

அவரை அடுத்து உரை ஆசிரியர் பலர் தோன்றியுள்ளனர் .

இந்தக் காலத்தில் அகராதி என்ற நூல் வகையை நாம் அறிவோம் .

அந்த அகராதிகளுக்கு மூல நூல்கள் என்று குறிப்பிடப்படுவன நிகண்டுகள் என்பனவாகும் .

நிகண்டுகள் என்பன செய்யுள் வடிவில் உள்ள அகராதிகளேயாகும் .

அந்த நிகண்டினைத் தோற்றுவித்த பெருமை சமணர்களையே சாரும் .

திவாகரம் , சூடாமணி , பிங்கலந்தை என்ற நிகண்டுகள் சமணர்களால் படைக்கப்பட்டன .

சிறு காப்பியங்கள் எனச் சொல்லப்படும் ஐந்து நூல்களைச் சமணர்கள் இயற்றித் தந்தனர் .

மேருமந்தர புராணம் என்ற புராண நூலைத் தந்தவரும் சமணரே ஆவர் .

இவ்வாறு பலவகை நூல்களைத் தந்த பெருமை சமணர்களுடையதாகும் .

பௌத்தர் தமிழ்த் தொண்டு E

சமயப் போராட்டத்தில் பௌத்த நூல்கள் பல அழிந்துவிட்டன .

இன்று தமிழிலுள்ள பௌத்த நூல்கள் மிகச் சிலவேயாகும் .

இலக்கியம் , இலக்கணம் , பிரபந்தம் என்ற மூன்று வகையான படைப்புகளைப் பௌத்தர் தமிழுக்கு அளித்துள்ளனர் .

பௌத்தரின் தமிழ்ப் படைப்புகள்

இலக்கியம் காப்பியம் மணிமேகலை , குண்டலகேசி

* பிற விம்பிசார கதை , சித்தாந்தத் தொகை , திருப்பதிகம் .

இலக்கணம் வீரசோழியம்

* இம்மூன்று நூல்களும் காலத்தினால் அழிந்தவை .

குண்டலகேசி முழுமையாகக் கிடைக்கவில்லை .

5.5.1 இலக்கியம்

தமிழில் இன்றைக்கு முழுமையாக கிடைக்கும் பௌத்த இலக்கியம் மணிமேகலை என்ற ஒன்றாகும் .

இது சிலப்பதிகாரக் கதையைத் தொடர்ந்து எழுதப்பெற்ற ஒரு காப்பியமாகும் .

கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலை பௌத்த நெறியைத் தழுவி அறங்கள் பல செய்ததை இந்நூல் கூறுகின்றது .

இந்த நூலை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பவர் ஆவார் .

வைதிக சமயத்தை இந்த நூல் கடுமையாக மறுத்து உரைக்கின்றது .

இந்தச் சமயத்திற்குரிய மற்றொரு காவியம் குண்டலகேசி ஆகும் .

இந்த நூல் கிடைக்காது போயினும் , இதன் செய்யுள்கள் சில பிற நூல்களில் எடுத்தாளப் பெற்று நமக்குக் கிடைக்கின்றன .

இதேபோல விம்பிசார கதை என்ற நூலும் நமக்குக் கிடைக்கவில்லை .

இது விம்பிசாரன் என்ற அரசனுடைய கதையாகும் .

5.5.2 இலக்கணம்

பௌத்த சமயத்திற்குரிய இலக்கண நூல்களில் நமக்கு முழுமையாக இன்று கிடைப்பது வீரசோழியம் என்ற நூலாகும் .

இந்த நூலை இயற்றியவர் புத்தமித்திரனார் என்பவர் .

கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொழுது , திகடசக்கரம் எனத் தொடங்கும் பாட்டைப் படித்தார் .

' திகழ் + தச + சக்கரம் ' என்பதே திகடசக்கரமாகும் என்பது அவர் கருத்து .

இவ்வாறு அளித்தற்கு இலக்கணம் எங்கே உள்ளது என்று அவையில் இருந்தவர்கள் கேட்டார்கள் .

இந்த இலக்கணம் வீரசோழியம் என்ற நூலில் காணப்படுகிறது என்று சுட்டிக் காட்டிய பின்னர் அவையோர் அவ்வாறு சொற்கள் சேர்வதை ஒத்துக் கொண்டார்கள் .

இந்த நூல் வடமொழி நெறியைத் தழுவி இருந்தாலும் , தமிழர்களுக்குரிய பண்பாட்டைக் கூறத் தவறவில்லை .

5.5.3 பிற நூல்கள்

சித்தாந்தத் தொகை என்ற பௌத்த நூல் ஒன்று அச்சமயத்தின் சாத்திரக் கருத்துகளைக் கூறுவதாக அமைந்தது .

' நல்வாய்மை அறிந்தவரே பிறப்பறுப்பார் ' என்று இந்த நூல் கூறுகின்றது .

திருப்பதிகம் என்ற நூல் புத்தர் மீது இயற்றப்பெற்ற தோத்திர நூலாகும் .

இந்நூலில் தானம் , சீலம் முதலான நல்ல குணங்களை உடைய பெருமானாகப் புத்தர் பேசப்படுகிறார் .

இவ்விரு நூல்களும் இன்று கிடைக்கவில்லை .

தொகுப்புரை

தமிழர் பண்பாட்டில் சமணம் பல புதிய விளக்கங்களை ஏற்படுத்தியது .

சல்லேகனை என்ற ஒரு நோன்பு சமணர்களால் குறிப்பிடப் படுகின்றது .

கொடிய நோய் , பெருந்துன்பம் ஆகியவை காரணமாக உடம்பை வருத்திக் கொண்டு உண்ணா நோன்பு இருந்து வடக்குத் திசை நோக்கி உட்கார்ந்து உயிர் விடுவது இந்த நோன்பின் நெறியாகும் .

இதனைச் சங்க காலத்து அரசர்களாகிய கோப்பெருஞ்சோழனும் , பெருஞ்சேரலாதனும் கடைப்பிடித்தனர் . பள்ளி , பள்ளிக்கூடம் ஆகியன சமணர்கள் கொண்டுவந்த சொல் வழக்குகள் ஆகும் .

பௌத்த சமயத்தினர் வழிபட்ட பௌத்தக் கோயில்கள் ஐயனார் கோயில் எனப் பெறும் .

இக்கோயில்கள் பிற்காலத்தில் சைவ சமயத்திற்குரியனவாக மாறிவிட்டன .

புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று இந்துக்கள் கருதத் தொடங்கினர் .

யாகங்கள் செய்யக்கூடிய வழக்கம் பௌத்த சமயத்தால் தமிழ்நாட்டிலிருந்து நீங்கியது .

இவ்வாறு பல மாற்றங்களை உருவாக்கிய பௌத்தமும் சமணமும் தமிழர்கள் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. தீபாவளிப் பண்டிகை எவ்வாறு தோன்றியது ?

விடை

2. சமண இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க இரண்டைக் கூறுக .

விடை

3. பௌத்த இலக்கிய நூல் எது ?

விடை

4. பௌத்த இலக்கண நூல் எது ?

விடை

5. பௌத்த சமயத்தின் பிற நூல்களைப் பற்றிக் குறிப்பு வரைக .

இசுலாம் கிறித்துவம் வளர்த்த பண்பாடு

பாட முன்னுரை

நபிகள் நாயகம் இறைவனால் அனுப்பப் பெற்ற தூதர்களுள் ஒருவர் .

கடவுள் ஒருவரே என்ற கோட்பாட்டை உலகம் முழுதும் பரப்பும் நெறி அவருடையது .

இப்பெருமானார் புதிய நெறியைப் போதிக்கவில்லை .

முன்பு பல நபிமார்கள் ( தூதர்கள் ) போதித்த நெறியை நபிகள் நாயகம் முழுமைப்படுத்தியுள்ளார் .

அவரே அச்சமயத்தின் இறுதித் தூதர் ஆவார் .

அவர் வழியாகவே திருக்குரான் என்ற திருமறை நூல் உலகிற்கு வழங்கப் பெற்றது .

இசுலாம் என்ற சொல்லுக்கு அடிபணிதல் என்பது பொருளாகும் .

நற்பண்பே இசுலாம் எனக் கூறுவர் .

இந்த நெறி தமிழகத்தில் புகுந்து தமிழ் மக்களால் ஒரு சமயம் என்று ஏற்றுக்கொள்ளப் பெற்றுப் பல வழிபாட்டுத் தலங்கள் உருவாகின .

இச்சமயத்தின் தாக்கம் தமிழர் பண்பாட்டிலும் நிகழ்ந்தது .

கிறித்துவ சமயம் இயேசுநாதரால் தோற்றுவிக்கப் பெற்று உலகம் எங்கும் பரவியது .

இயேசுநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பல அற்புதங்களைக் கொண்டவை ; அவர் சிலுவையில் அறையப்பட்டது உலக மக்களை உலுக்கியது .

கருணை , அன்பு , அருள் ஆகிய நல்ல பண்புகளைக் கிறித்துவம் உலகிற்கு வழங்கியது .

முன்பு இருந்த மதங்களிலிருந்து பலர் கிறித்துவ சமயத்திற்கு மாறினர் .

கிறித்துவ சமயம் தமிழர் பண்பாட்டில் தனக்குரிய பங்களிப்பைச் செய்தது .

இவ்விரு சமயங்களும் தமிழர் பண்பாட்டில் ஆற்றிய பங்கு குறித்து இங்குக் காணலாம் .

புதிய இரு மார்க்கங்கள் E

< = " " p = " " >

தமிழகத்தில் இசுலாமிய , கிறித்துவ சமயங்களின் தோற்றம்

இசுலாம் , கிறித்துவம் ஆகிய இரு சமயங்கள் தமிழகத்திற்கு வந்த வரலாறு ஆயத்தக்கது .

வணிகத் தொடர்பு என்ற அளவில் அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்கும் முன்பே தொடர்பு இருந்தது .

பண்பாட்டு நிலையில் இத்தொடர்பு பிற்காலத்தில் நிகழ்ந்தது .

பன்னிரண்டாம் நூற்றாண்டில் இசுலாம் தமிழகத்தில் ஒரு சமயம் என்ற அளவில் புகுந்தது .

மதுரை , இராமநாதபுரம் , திருநெல்வேலி மாவட்டங்களில் இசுலாம் தொடக்கத்தில் பரவியது .

கிறித்துவ சமயம் தொடக்கத்தில் வணிகத் தொடர்பால் தமிழகம் வந்ததேயாகும் .

பிறகு சமயம் பரப்புதல் என்ற நோக்கத்தில் கிறித்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர் .

இத்தாலி , பிரான்சு , இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்த கிறித்துவ அறிஞர்கள் கிறித்துவ சமயத்தைப் பரப்பினர் .

கிறித்துவமும் மதுரை , இராமநாதபுரம் , திருநெல்வேலி மாவட்டங்களிலேயே முதலில் பரவியது .

இசுலாம்

இறைவனுக்கு அடிபணிவதையும் , இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும் உரியன என்பதிலும் இசுலாமியர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர் .

நபிகள் பெருமான் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளைக் கூறியுள்ளார் .

இறைவன் , வானவர் , வேதம் , தூதர் , இறுதித் தீர்ப்பு ஆகிய ஐந்தின் மீது நம்பிக்கைக் கொள்ளுதல் , நன்மை தீமைகளை எந்நிலையிலும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய ஆறும் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளாகும் . இசுலாம் மதத்திற்கு ஐந்து அடிப்படைக் கடமைகள் உள்ளன .

• இறைவனை ஏற்று முகமதை தூதராகக் கொள்ளுதல் ( கலிமா )

• தொழுகை

• நோன்பு

• தான் ஈட்டும் வருவாயில் 2½ விழுக்காடு ஏழை எளியவர்களுக்கு வழங்குதல் .

• புண்ணியப் பயணம் மேற்கொள்ளுதல்

ஆகிய ஐந்தும் மேற்கூறிய கடமைகளாகும் .

மேற்கூறிய ஆறு அடிப்படைச் செய்திகளும் , ஐந்து அடிப்படைக் கடமைகளும் இசுலாம் மதத்தில் இன்றியமையாதன .

இசுலாம் மதத்தைத் தழுவிய தமிழர் , இந்நெறிகளைத் தவறாது கைக்கொண்டனர் .

6.2.1 தமிழகத்தில் இசுலாம்

பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே இசுலாம் மதத்தைப் பற்றிய செய்திகள் தமிழகத்தில் அறியப்பட்டிருந்தன .

இசுலாம் மார்க்கத்தைப் பற்றிய சிந்தனை பலருக்கு இருந்தது .

சுந்தர பாண்டியன் , வீர பாண்டியன் ஆகிய பாண்டிய அரசர்கள் தங்களுக்குள் போராடிக் கொண்டு வடஇந்தியாவிலிருந்து மாலிக்காபூரை அழைத்தனர் .

மாலிக்காபூரின் வரவு தமிழகத்தில் இசுலாமிய ஆட்சிக்கு வழி வகுத்தது .

இதன் விளைவாக இசுலாம் தமிழகத்தின் தென் மாநிலங்களில் ஓங்கிப் பரவியது .

மதுரையை ஆண்ட சுல்தான் இபுராகிம் , தமிழர்கள் இசுலாம் மதத்தில் சேரப் பெரிதும் வழி வகுத்தான் .

காயல்பட்டினம் , கீழக்கரை , இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வணிகம் செய்து கொண்டிருந்த பலர் இசுலாம் மதத்தைத் தழுவினர் .

படிப்படியாக இசுலாம் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சமயமாக மாறியது .

6.2.2 இசுலாமியத் தமிழர்

இசுலாம் மதத்தின் உயர் கொள்கைகள் சமத்துவம் , சகோதரத்துவம் என்பன .

வைதிக சமயத்தின் பல சமயக் கடவுட் கோட்பாடு , பிற சமய ஏற்றத்தாழ்வு , தீண்டாமைக் கொடுமை ஆகியன தமிழர்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்த இசுலாம் தமிழர்களைக் கவர்ந்தது .

தமிழர்களே இசுலாமியர்களாக மாறியதால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு புதிய மதமாக இல்லாமல் ஒரு மார்க்கமாகவே திகழ்ந்தது என்றும் கூறுவர் .

மஸ்தான் சாகிபு பாடல்களும் , தாயுமானவர் பாடல்களும் பொது நிலையிலும் வேறுபாடு காண இயலாது .

" குணங்குடியான் தனைப் பரவினார்க்குப்

பவப் பிணி நீங்கும் "

அதாவது , குணங்குடி மஸ்தான் சாகிபை வழிபட்டவர்க்குப் பிறவியாகிய நோய் நீங்கும் என்று இந்து சமயத்தைச் சார்ந்த சரவணப்பெருமாள் ஐயர் பாடுகின்றார் .

" குருவினொடு தெய்வம் நீயே " என வேங்கடராய பிள்ளைக் கவிராயர் போற்றுகின்றார் .

குணங்குடி மஸ்தான் சாகிபு போன்ற இசுலாமியத் தமிழர் பலர் வாழ்ந்த பெருமைக்குரியதாகத் தமிழ்நாடு திகழ்ந்தது .

6.2.3 இசுலாமியர் பணிகள்

தமிழில் காப்பியங்கள் , மெய்ஞ்ஞான இலக்கியங்கள் , சிற்றிலக்கியங்கள் எனப் பலவகையான படைப்புகளை இசுலாமியர் படைத்தனர் .

பல புதிய வகையான இலக்கியங்களையும் உருவாக்கினர் .

இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் எண்ணிக்கையில் பல நூறாகத் திகழ்கின்றன .

அரபு , பாரசீக , உருதுச் சொற்கள் தமிழில் நிறையக் கலந்ததற்கு இசுலாமே காரணமாகும் .

கிஸ்தி , மகசூல் , பசலி , பட்டா , மிராசு , தாசில்தார் , மனு , கஜானா , ஜமாபந்தி , வாரிசு , நமுனா போன்ற நிர்வாகச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்ததற்கு இசுலாமிய சமயம் தழுவிய ஆட்சிகள் காரணமாகும் .

• காப்பியங்கள்

இசுலாமியக் காப்பியங்களில் மிகவும் புகழ்பெற்றது சீறாப்புராணம் ஆகும் .

இதனை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார் .

வள்ளல் சீதக்காதியின் தூண்டுதலால் உமறுப்புலவர் இந்தக் காப்பியத்தை இயற்றினார் .

தமிழிலக்கிய வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை பெரும் காப்பியங்கள் தோன்றவில்லை .

இந்தக் குறையை நீக்கும் வகையில் பதினேழாம் நூற்றாண்டில் சீறாப்புராணம் தோன்றியது .

இந்நூல் 5027 பாடல்களைக் கொண்டது .

சீறாப்புராணத்தைத் தவிர குத்துபநாயகம் , திருக்காரணப்புராணம் , தருமணிமாலை ஆகிய காப்பியங்களும் தமிழில் தோன்றின .

• சிற்றிலக்கியங்கள்

தமிழில் அந்தாதி , உலா , கலம்பகம் , கோவை , மாலை , பரணி , தூது போன்ற சிற்றிலக்கியங்கள் உள்ளன .

இந்தச் சிற்றிலக்கியங்களுக்குரிய மரபைத் தழுவி இசுலாமியரும் பலப்பல சிற்றிலக்கியங்களைத் தந்துள்ளனர் .

மக்காக் கலம்பகம் , மதினாக் கலம்பகம் , நாகூர்க் கலம்பகம் போன்ற கலம்பகங்களும் , நபிநாயகம் பிள்ளைத் தமிழ் , முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும் , நாகை அந்தாதி , மதீனத்து அந்தாதி , திரு மக்கா திரிபு அந்தாதி ஆகிய அந்தாதிகளும் , இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்த சிற்றிலக்கியச் செல்வங்களாகும் .

இவற்றைத் தவிர கிஸ்ஸா , படைப்போர் , மசலா , முனா ஜாத்து , நாமா என்ற புதிய வகைச் சிற்றிலக்கியங்களையும் இசுலாமியத் தமிழர் படைத்தனர் .

கிஸ்ஸா என்பது கதை சொல்லுதல் என்ற பொருள் கொண்டதாகும் .

படைப்போர் என்பது வீரப்போர்ப்பாட்டு ஆகும் .

மசலா என்பது வினா விடை வடிவமான இலக்கியமாகும் . முனாஜாத்து என்பது இறைவனோடு இரகசியமாகப் பேசுதல் என்ற பொருள் உடையதாகும் .