64

சோழர் மரபில் முதல் பராந்தகன் , இராசாதித்தனுக்கு இளவரசாக முடிசூட்டினான் .

சுந்தர சோழன் , ஆதித்த கரிகாலனை இளவரசனாக்கினான் .

முதலாம் இராசராசன் , இராசேந்திரனை 1012ஆம் ஆண்டு இளவரசாக்கி முடிசூட்டினான் .

இளவரசர்களும் தம் பெயரில் கல்வெட்டுகள் பொறித்துக் கொண்டதை அறிகின்றோம் .

அரசராக முடிசூடும்போது சிலர் பிள்ளைப்பருவப் பெயரினை மாற்றிப் புதுப் பெயர் பெற்றனர் .

அருள்மொழித் தேவன் என்பது இராசராசனின் இளமைப்பெயர் .

இராசேந்திரன் இளமையில் மதுராந்தகன் என்ற பெயரினைப் பெற்றிருந்தான் .

அவர்கள் முடிசூடிய நாள் அபிஷேகம் பண்ணின முகூர்த்தம் என்று கூறப்படும் .

சேர மரபில் இளங்கடுங்கோ , இளங்கோ ஆனபோது முனிவர்களுக்குக் கொடுத்த கொடையைப் புகலூர் ஆறுநாட்டார் மலைக் கல்வெட்டுக் கூறுகிறது .

“ இளங்கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல் ” என்பது அதைக் குறிக்கும் கல்வெட்டுத் தொடராகும் .

இளவரசர்கள் சில தனிப்பகுதியில் ஆட்சி செய்து பயிற்சி பெற்றனர் .

தந்தைக்காகச் சில இளவரசர்கள் போரிலும் ஈடுபட்டனர் .

இராசேந்திரனின் மகன் இளவரசனாக , சோழபாண்டியன் என்ற பெயருடன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது .

2.1.4 பெண் கொள்வதும் கொடுப்பதும்

சோழ அரசர்கள் , சேரர் , பாண்டியர் , கீழைச் சாளுக்கியர் குடும்பத்திலிருந்தும் மழவரையர் , பழுவேட்டரையர் , இருக்குவேளிர் , விழுப்பரையர் , முத்தரையர் போன்ற பல குறுநில மன்னர்கள் குடும்பத்திலிருந்தும் பெண் எடுத்தனர் .

அதேபோல் தம் பெண்களையும் மணமுடித்துக் கொடுத்தனர் .

வேளிர்களை , அரசர்களுக்கு மகட்கொடைக்கு உரிமையுடையவர் என அழைப்பர் .

இராசராசன் தேவியார் வானவன்மாதேவி சேர குலத்துப் பெண் .

இராசராசன் மகள் குந்தவை கீழைச் சாளுக்கிய இளவரசன் விமலாதித்தனை மணந்தாள் .

இராசேந்திரன் என்னும் இயற்பெயரையுடைய முதல் குலோத்துங்கன் , கங்கை கொண்ட சோழனான முதலாம் இராசேந்திர சோழன் மகள் அம்மங்காதேவிக்கும் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன் .

அரசியர்

அரசருடன் முடிசூடி , அத்தாணி மண்டபத்தில் அரசருடன் ஒருங்கு வீற்றிருந்து , தனி ஆணை செலுத்தும் உரிமை தமிழக அரசியர்க்கு உண்டு என்பதைக் கல்வெட்டுகள் பல கூறுகின்றன .

பல்லவ அரசன் , அரசி

உலகுடைய பெருமாளுடன்

ஒக்கமுடி கவித்தருளி

( மூன்றாம் இராசராசன் மெய்க்கீர்த்தி )

ஒக்க அபிஷேகம் சூடும் உரிமையுள

தக்க தலைமைத் தனித்தேவி

( இரண்டாம் இராசராசன் மெய்க்கீர்த்தி )

என்ற கல்வெட்டுப் பகுதிகள் அரசியர் முடிசூடுவதைக் கூறுகிறது .

பெண்ணரசு என்றே அவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர் .

2.2.1 அரியணையில் அரசியர்

ஆட்சிக் கட்டிலில் அரசரோடு வீற்றிருந்தனர் என்பதை ,

செம்பொன் வீர சிம்மாசனத்து

திரிபுவன முழுதுடை யாளொடும்

வீற்றிருந் தருளிய ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்

( மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி )

புவனி முழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய

திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜதேவர்

( இரண்டாம் இராசராசன் மெய்க்கீர்த்தி )

என்பன போன்ற கல்வெட்டுப் பகுதிகள் கூறுகின்றன .

ஆணையெங்கும் தனதாக்கிய ஆதிராஜன்மாதேவி

( மூன்றாம் இராசராசன் மெய்க்கீர்த்தி )

உடன் ஆணை திரு ஆணை

உடன் செல்ல முடிகவித்து

( இரண்டாம் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி )

என்ற மெய்க்கீர்த்திப் பகுதிகளாலும் அரசியர் ஆணை செலுத்திய செய்தியை அறியலாம் .

2.2.2 பல்லவ அரசியர்

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் மனைவி சங்கா , இராட்டிர கூட மன்னன் மகள் . அவளை , பூமியைப்போலப் பொறுமை உடையவள் என்றும் , இலட்சுமியைப்போல அழகுடையவள் என்றும் , தாயைப் போல அன்போடு குடிமக்களைப் பாதுகாத்தாள் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன .

பல்லவன் நிருபதுங்கன் மனைவி பிருதிவி மாணிக்கம் என்பவள் கங்க மன்னன் மகள் .

அவள் பெயரில் பிருதிவிமகாதேவி மங்கலம் என்ற ஊரே இருந்தது .

வாய்க்காலுக்கும் , ஏரிக்கும் , ஊர்களுக்கும் பல அரசியர் பெயர்கள் இருந்தன .

பல்லவன் அபராசிதன் மனைவி மாதேவடிகள் ஒரு தமிழ்ப்பெண் .

சாருதேவி , ரங்க பதாகை , மாறம் பாவை , காடவன் மாதேவி , வீரமா தேவி என்பவர்கள் புகழ்வாய்ந்த சில பல்லவ மன்னரின் பேரரசியர் ஆவர் .

2.2.3 அரசியர் திருப்பணிகள்

அரசியர் தனியாகக் கோயில் கட்டியுள்ளனர் .

இராசராசசோழன் மனைவி உலோகமாதேவி திருவையாற்றில் கட்டிய கோயில் உலோகமாதேவி ஈச்சரம் என்ற பெயரோடு விளங்குகிறது .

இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு , ‘ அக்கன் குந்தவையாரும் நம் பெண்டுகளும் ’ கொடுத்த கொடைகளைக் கல்வெட்டில் பொறிக்க ஆணையிட்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன .

கண்டராதித்தன் மனைவியார் செம்பியன் மாதேவி .

அவர் உத்தம சோழனின் தாயார் .

அவர் பல கோயில்களில் திருப்பணி செய்துள்ளார் .

திருநல்லம் என்னும் கோனேரி ராசபுரத்தில் கோயில் எடுப்பித்து , தன் கணவன் சிவலிங்கத்தை வணங்குவது போல ஓர் அழகிய சிற்பத்தையும் செதுக்கச் செய்துள்ளார் .

இராசராசனின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் தேவியாருமான குந்தவையார் சைவ , வைணவ , சமணக் கோயில்கள் பலவற்றைக் கட்டியுள்ளார் .

தஞ்சையில் தன் தந்தையார் பெயரால் அமைந்த சுந்தரசோழ விண்ணகரத்தில் ஆதுலர் சாலை என்னும் மருத்துவ சாலையை ஏற்படுத்திக் கொடைகள் பல தந்துள்ளார் .

‘ ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ

குலோத்துங்கசோழ தேவர் திருத்தங்கையார்

குந்தவையாழ்வார் ஆளுடையார்க்குத் தண்ணீர் அமுது

செய்தருள குடிஞைக்கல் நிறை மதுராந்தகன்மாடையோடு

ஒக்கும் பொன் ஐம்பது கழஞ்சு ’

என்பது சிதம்பரம் கல்வெட்டு .

2.2.4 பட்டத்து அரசியர்

அரசனது மனைவிமார்கள் பிராட்டியார் , மணவாட்டி , பெண்டு , ஆழ்வி , போகியார் , சாணி , தேவியார் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளனர் .

அரசனின் மூத்த மனைவியார் அக்ரமகிஷி , அக்ரமகாதேவி என அழைக்கப்படுவார் .

முதல் இராசராசன் தேவி பெயர் தந்திசத்தி விடங்கியார் .

அவருக்கு உலோகமாதேவி என்றும் பெயர் உண்டு .

பட்டத்துத் தேவி இறந்துவிட்டால் இன்னொருவர் பட்டத்துத் தேவி ஆவார் .

விக்கிரம சோழனின் பட்டத்து அரசி முக்கோக்கிழானடிகள் இறந்தவுடன் தியாக பதாகை என்பார் பட்டத்து அரசியானார் .

முதல் குலோத்துங்க சோழன் பட்டத்து அரசி மதுராந்தகி இறந்தவுடன் தியாகவல்லி என்பவர் பட்டத்து அரசியானார் .

பல சோழ அரசரின் மனைவியர் உலகமுழுதுடையாள் , புவனிமுழுதுடையாள் , தரணி முழுதுடையாள் , அவனிமுழுதுடையாள் எனப் பெயர் பெற்றிருந்தனர் .

உலகமுழுதுடையாள் என்ற பெயர் பொதுப்பெயராக வழங்கியது .

மாறவர்மன் சுந்தரபாண்டியன் , சடையவர்மன் சுந்தரபாண்டியன் , பாண்டியன் ஸ்ரீவல்லவன் ஆகியோரின் தேவிமாரும் உலகமுழுதுடையாள் என்ற பெயர் பெற்றிருந்தனர் .

அலுவலர்கள்

தமிழகத்தில் அரசர்களது ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் பொதுநலமும் அனுபவமும் மிக்க அலுவலர்கள் பலர் பல்வேறு துறைகளில் பொறுப்புடன் பணியாற்றி நல்லாட்சி புரிந்தனர் .

பொதுவாக அவர்கள் பெருந்தரம் , சிறுதரம் அல்லது பெருந்தனம் , சிறுதனம் என்று அழைக்கப்பட்டனர் .

அவர்களில் சிலர் அரச குடும்பத்தாராகவும் இருந்தனர் .

இராசேந்திரன் சோழன் காலத்தில் பாண்டிய நாட்டை நிர்வகிக்க , அவன் மகனே ‘ சோழபாண்டியன் ’ என்னும் பெயரில் ஆட்சி புரிய மதுரைக்கு அனுப்பப்பட்டான் .

முன்பு இராசமகேந்திரன் என்னும் இளவரசன் தொண்டை நாட்டுப் பகுதியை நிர்வகித்து வந்தான் .

மதுராந்தகன் என்பான் ‘ சோழ கங்கன் ’ என்று பெயர் பெற்றுச் சேலம் மாவட்டப் பகுதியில் அதிகாரத்தில் இருந்துள்ளான் .

கண்டராதித்தன் மகன் ஒருவன் மதுராந்தகன் கண்டராதித்தன் என்று பெயர் பெற்றவன் சோழ நாட்டுக் கோயில்களின் தணிக்கை உயர் அலுவலனாகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றி வந்தான் .

சிலப்பதிகார காலத்தில் மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தவுடன் கொற்கையில் இருந்த இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து அரசுப் பொறுப்பேற்றான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது .

2.3.1 உயர் அலுவலர்

உத்தரமந்திரி , ஆளும் கணத்தார் , உடன் கட்டத்து அதிகாரிகள் , உள்படு கருமத் தலைவர் , திருமந்திர ஓலைநாயகன் போன்றோர் உயர் அலுவலர்களாகத் திகழ்ந்துள்ளனர் .

சேனாபதிகள் பலர் படையின் உயர் தலைவர்களாக இருந்துள்ளனர் .

வரிக்கூறு செய்வார் பல்வேறு வகையான வரிகளை நிர்ணயம் செய்தனர் .

நாடு கூறு செய்வார் , நாடுகளையும் , ஊர்களையும் அளந்து எல்லைகள் நிர்ணயம் செய்து , வரிக்கடமைகளை நிர்ணயம் செய்து , வசூல் செய்ய உதவியாக இருந்தனர் .

மண்டல முதலிகள் , நாடுகண்காணி செய்வார் முதலியோர் மண்டலம் , வளநாடு , நாடுகளின் பொறுப்பாளராக இருந்தனர் .

2.3.2 அரசு அலுவலர்

புரவுவரித் திணைக்களம் என்பது இன்றைய ‘ ரெவின்யூ போர்டு ’ போலப் பணியாற்றியது . அதன் உறுப்பினர்கள் புரவுவரித் திணைக்களத்தார் எனப்பட்டனர் .

அதன் தலைவர் புரவுவரித்திணைக்கள நாயகம் என்று கூறப்பட்டார் .

கண்காணி என்பது மேற்பார்வையாளர் பெயர் .

வரிப் பொத்தகம் , கணக்கு , வரியிலிடு , முகவெட்டி , கீழ்முகவெட்டி , பட்டோலை , கீழ்க்கணக்கு , கரணம் போன்ற பல அலுவலர்கள் பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன .

‘ ஸ்ரீகார்யம் செய்வார் ’ ஆலயங்களிலும் , சமயம் தொடர்பான காரியங்களிலும் ஈடுபட்டனர் .

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஸ்ரீகார்யம் செய்பவராக இராசராசன் காலத்தில் நியமிக்கப்பட்டவர் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன் ஆன தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் .

விசய நகர மன்னர்கள் காலத்திற்குப்பின் மகாமண்டலேசுவரன் , பிரதானி , தளபதி , காரியத்துக்குக் கர்த்தர் போன்ற உயர் அலுவலர்களும் , கந்தாசாரம் , அட்டவணை , சேனாபாகம் , சேர்வைகாரர் போன்ற கீழ்நிலை அலுவலர்களும் இருந்தனர் .

பத்திரங்கள் பதிவு செய்யுமிடம் ஆவணக் களரி எனப்பட்டது .

நாடாழ்வான் , ஊராழ்வான் என்ற அலுவலர்களும் இருந்துள்ளனர் .

2.3.3 அலுவலர் பெயர்கள்

சேனாபதி குரவன் உலகளந்தான் ஆன இராசராச மாராயன் , ஈராயிரவன் பல்லவரையன் ஆயின மும்முடி சோழபோசன் , பாளுர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன் , கிருஷ்ணன் ராமன் ஆன மும்முடி சோழ பிரமராயன் , சேனாபதி அரையன் கடக்கங்கொண்ட சோழன் , இராசராச அணிமுரி நாடாழ்வான் போன்றவர்கள் சோழர்கால உயர் அலுவலர்கள் ஆவர் .

வேளாளர்கள் மூவேந்தவேளான் என்றும் , அந்தணர்கள் பிரமராயன் என்றும் பட்டம் பெற்றிருந்தனர் .

காலிங்கராயன் , கச்சிராயர் , மழவராயர் , பல்லவராயர் என்பன போன்ற பட்டப் பெயர்களும் அரசு அலுவலர்கட்கு அளிக்கப்பட்டன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 ) முதல் இராசராசன் இளவரசு என யாருக்கு முடி சூட்டினான் ?

( விடை )

2 ) பாண்டிய மன்னர்கள் தங்கள் குலம் என்ன என்று அழைத்துக் கொண்டனர் ?

( விடை )

3 ) அரசர் வீற்றிருந்து ஆட்சி புரிந்த சிம்மாசனம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

( விடை )

4 ) மூத்த புதல்வருக்கு அரசுரிமை வழங்கியது எவ்வாறு அழைக்கப்பட்டது ?

( விடை )

5 ) அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

நாட்டுப் பிரிவுகள்

தமிழகம் பல மண்டலங்களாகவும் , வளநாடுகளாகவும் , நாடுகளாகவும் , ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது .

இன்றைய மாநிலங்கள் போல மண்டலங்களும் , மாவட்டங்கள் போல வளநாடுகளும் , வட்டங்கள் போல நாடுகளும் இருந்தன .

நாடுகளுக்குச் சமமாகக் கூற்றங்கள் என்ற பகுதிகளும் விளங்கின .

விசயநகர மன்னர் காலத்தில் ‘ உசாவடி ’ அல்லது ‘ சாவடி ’ என்ற பிரிவும் ( பகுதியும் ) இருந்தது .

2.4.1 மண்டலங்கள்

சோழப் பேரரசர் காலத்தில் தொண்டைநாடு , ‘ செயங்கொண்ட சோழ மண்டலம் ’ என்றும் , இலங்கை ‘ மும்முடிச் சோழமண்டலம் ’ என்றும் , கங்கபாடி ‘ முடிகொண்ட சோழமண்டலம் ’ என்றும் , சேரநாட்டுப் பகுதி ‘ மலைமண்டலம் ’ என்றும் , கொங்கு நாட்டுப் பகுதி ‘ அதிராசராச மண்டலம் என்றும் , கீழைச் சாளுக்கிய நாடு ‘ வேங்கி மண்டலம் ’ என்றும் வழங்கப்பட்டன .

மண்டலங்களும் , அவற்றிற்குட்பட்ட வளநாடுகளும் அரசன் பெயராலும் , பட்டப் பெயராலும் வழங்கப்பட்டன .

நாடுகளும் , கூற்றங்களும் தலைநகரான ஊர்ப் பெயரால் அமைந்தன .

2.4.2 வளநாடுகள்

சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள் , இராசராசன் காலம் முதல் வழக்கத்திற்கு வந்தது .

அவ் வளநாடுகள் ஒன்பதும் , முதல் இராராசனின் பட்டப் பெயரால் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது .

அவை இராசேந்திர சிங்க வளநாடு , பாண்டி குலாசனி வளநாடு , கேரளாந்தக வளநாடு , இராசாசிரய வளநாடு , நித்தவினோத வளநாடு , உய்யக் கொண்டான் வளநாடு , சத்திரிய சிகாமணி வளநாடு , அருள்மொழிதேவ வளநாடு , இராசராச வளநாடு என்பனவாம் .

இவ் வளநாடுகள் பெரும்பாலும் இரண்டு ஆறுகட்கு இடைப்பட்ட பகுதிகளாக விளங்கின .

இதை , ‘ அரிசிலுக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட உய்யக்கொண்டான் வளநாடு ’ என்ற கல்வெட்டுப் பகுதியால் அறியலாம் .

குலோத்துங்க சோழன் காலத்தில் , இராசேந்திர சிங்க வளநாடு உலகுய்யவந்த வளநாடு , விருதராச பயங்கர வளநாடு என இரண்டாகப் பிரிந்தது .

சத்திரிய சிகாமணி வளநாடு , குலோத்துங்கசோழ வளநாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது .

விக்கிரம சோழன் காலத்தில் உலகுய்யவந்த வளநாடு , விக்கிரம சோழ வளநாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது .

இவ்வாறே வேறு சில நாடுகளும் பெயர் மாற்றம் பெற்றன .

• நாடுகள்

வளநாடுகட்கு உட்பட்டு , நாடுகளும் கூற்றங்களும் இருந்தன .

இவைகள் தலைநகரங்களாக இருந்த பேரூர்களால் பெயர் பெற்றன .

நல்லூர் நாடு , நறையூர்நாடு , இன்னம்பர்நாடு , திருவழுந்தூர்நாடு , திருஇந்தளூர்நாடு , நாங்கூர்நாடு , ஆக்கூர்நாடு , அம்பர்நாடு , மருகல்நாடு , திருக்கழுமலநாடு , திருவாலிநாடு , வெண்ணையூர்நாடு , குறுக்கைநாடு , நல்லாற்றூர்நாடு , மிழலைநாடு , உறையூர்க் கூற்றம் , தஞ்சாவூர்க் கூற்றம் , ஆவூர்க் கூற்றம் , வெண்ணிக் கூற்றம் , திருவாரூர்க் கூற்றம் , பட்டினக் கூற்றம் , வலிவலக் கூற்றம் , ஆர்க்காட்டுக் கூற்றம் என்பன சோழநாட்டு நாடு , கூற்றங்கட்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும் .

இவை ஏறக்குறைய 210 ஆகும் .

• பாண்டிய நாட்டுப் பிரிவுகள்

பாண்டிய நாட்டில் மதுரோதய வளநாடு , வரகுண வளநாடு , கேரள சிங்க வளநாடு , திருவழுதி வளநாடு , சீவல்லப வளநாடு , பராந்தக வளநாடு போன்ற வளநாடுகள் இருந்தன .

வளநாடுகட்கு உட்பட்டு இரணியமுட்டநாடு , களக்குடிநாடு , செவ்விருக்கைநாடு , பூங்குடிநாடு , கீரனூர்நாடு , களாந்திருக்கைநாடு , அளநாடு , துறையூர்நாடு , வெண்பைக்குடிநாடு , நேச்சுரநாடு , ஆசூர்நாடு , சூரன்குடிநாடு , முள்ளிநாடு முதலிய நாடுகளும் , தும்பூர்க் கூற்றம் , கீழ்க்களக் கூற்றம் , மிழலைக் கூற்றம் முதலிய பல கூற்றங்களும் இருந்தன . ஒல்லையூர் நாடு என்று பழங்காலத்தில் வழங்கிய நாடு பிற்காலத்தில் ஒல்லையூர்க் கூற்றம் என்று வழங்கப் பெற்றதெனக் கல்வெட்டுகளால் அறிகின்றோம் .

பாண்டிய நாடு , ஏழு வளநாடுகளையும் , ஐம்பத்திரண்டு நாடுகளையும் கொண்டிருந்தது .

• கொங்குநாட்டுப் பிரிவுகள்

கொங்குநாடு என்பது தொண்டைநாடு போலத் தனித்து இயங்கிய ஒரு நாடு .

பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் , கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாடு குறிக்கப்பட்டுள்ளது .

கொங்கு நாடு 24 உள்நாடுகளை உடையது .

அண்டநாடு , ஆறைநாடு , அரையநாடு , ஆனைமலைநாடு , இராசிபுரநாடு , தென்கரைநாடு , வடகரைநாடு , காங்கயநாடு , காஞ்சிக்கோயில் நாடு , காவடிக்காநாடு , கிழங்குநாடு , குறுப்புநாடு , தட்டயநாடு , தலைய நாடு , நல்லுருக்காநாடு , பூந்துறைநாடு , பூவாணியநாடு , பொங்கலூர் நாடு , மணநாடு , வாழவந்தி நாடு , வெங்கால நாடு , வையாபுரிநாடு என்பனவற்றைக் கல்வெட்டுகளில் காணுகிறோம் .

பிற்காலத்தில் மக்கள் குடியேற்றம் பெருக நாடுகளும் பெருகின .

24 உள்நாடுகளைக் கொண்ட கொங்கு நாட்டில் பிற்காலத்தில் இராசராசபுரம் சூழ்ந்த நாடு 24 , டணாயக்கன் கோட்டை சூழ்நாடு 6 , குன்றத்தூர் துர்க்கம் சூழ்ந்த நாடு 12 என 42 உள்நாடுகள் ஏற்பட்டன .

• பல்லவர் நாட்டுப் பிரிவுகள்

பல்லவர் ஆட்சிப் பகுதியின் வடபகுதியில் முண்டராட்டிரம் , வெங்கோராட்டிரம் ஆகியவை விளங்கின .

அதன் உட்பகுதி விஷையம் எனப்பட்டது .

தலைநகர் காஞ்சி சூழ்ந்த தொண்டைநாட்டில் பழைய 24 கோட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டனர் .

அவற்றுள் சில புழல்கோட்டம் , ஈக்காட்டுக்கோட்டம் , மணவிற்கோட்டம் , செங்காட்டுக்கோட்டம் , பையூர்க்கோட்டம் , எயில்கோட்டம் , தாமல்கோட்டம் , ஊற்றுக்காட்டுக் கோட்டம் , களத்தூர்க்கோட்டம் , செம்பூர்க்கோட்டம் , ஆம்பூர்க்கோட்டம் , வெண்குன்றக் கோட்டம் என்பனவாம் .

பல்லவ நாட்டுப் பிரிவுகள் இருபத்து நான்கு கோட்டங்களைச் சேர்ந்த 79 நாடுகள் ஆகும் .

2.4.3 ஊர்கள்

நாடு , கூற்றம் , கோட்டங்கட்கு உட்பட்டு ஊர்கள் இருந்தன .

பெரும்பாலும் வேளாளர்கள் வாழ்ந்த ஊர்கள் ஊர் என்றும் , வணிகர்கள் வாழ்ந்த ஊர்கள் புரம் என்றும் , அந்தணர்கள் வாழ்ந்த ஊர்கள் மங்கலம் , பிரமதேயம் , சதுர்வேதிமங்கலம் என்றும் வழங்கப்பட்டன .

சிதம்பரம் போன்ற பெரிய ஊர்கள் தனியூர் என்றும் வழங்கப்பட்டன .

படைவீரர்கள் தங்கிய பாதுகாப்பிற்குரிய ஊர்கள் சாவடி எனப்பட்டன .

வழுதலம்பட்டுச்சாவடி , திருச்சிராப்பள்ளிச்சாவடி , இராசராசபுரச்சாவடி என்பன சில சாவடிகளாம் .

ஊர் ஆள்வோர் ஊரார் என்று கூறப்பட்டனர் .

சில ஊர்களுக்குத் தனி அலுவலர் இருந்தனர் .

ஊராள்கின்ற பல்லவன் பிரமதரையன் என்பது ஒரு கல்வெட்டுத் தொடர் .

ஊராட்சி முறை

தமிழக அரசர்கள் ஆட்சி சிறப்புற்றிருந்தது .

நாட்டு மக்கள் எல்லா நன்மைகளும் பெற்று அமைதியாக வளமான வாழ்வு வாழ்ந்தனர் .

இதற்கெல்லாம் முதற்காரணம் அக்காலத்தில் ஊர்கள் தோறும் நிலைபெற்றிருந்த ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டேயாகும் .

தமிழக ஊர்களில் அமைந்திருந்த அந்த ஊர்ச்சபைகள் எல்லாம் பொறுப்புணர்ச்சியுடன் விளங்கின .

அறநெறி தவறாமல் நடுநிலைமையோடு அவை ஒழுங்காகத் தம் கடமைகளைச் செய்தமையால் மக்கள் அச்சமின்றி நல்வாழ்வு வாழ்ந்தனர் .

மன்றங்களின் முடிவுகளை ஏற்று , மக்கள் அனைவரும் கீழ்ப்படிந்து நடந்தனர் .

தீயோர்கள் அடங்கி ஒடுங்கினர் .

இச்சபைகளின் பணிகள் அரசன் , அரசனுடைய அதிகாரிகள் கண்காணிப்பில் இருந்தன .

• பிரிவுகள்

அக்காலத்தில் ஊராட்சி நடத்தி வந்த மன்றங்களைக் கவனிக்குமிடத்து அவை நான்கு வகைப்பட்டிருந்தன என்பதை அறியலாம் .

பிராமணர்கள் ஊர் நில உரிமையுடன் வசித்துவந்த சதுர்வேதிமங்கலங்களில் இருந்த சபை , கோயில்களுக்கு உரிய தேவதான சபை , உழவர் உள்ளிட்ட ஏனையோர் இருந்த ஊர்ச்சபை , வணிகர்கள் வசித்து வந்த ஊர்களின் சபை என அவை நான்கு வகைப்படும் .

2.5.1 வாரியங்களும் குழுக்களும்

மன்றங்களின் கடமைகள் பெருகிவந்தன .

கடமைகள் பெருகவே அவற்றை நிறைவேற்றுவதற்குத் தனித்தனி வாரியங்கள் அமைப்பது இன்றியமையாததாயிற்று .

அவை சம்வத்சர வாரியம் அல்லது ஆட்டை வாரியம் , ஏரி வாரியம் , தோட்ட வாரியம் , கலிங்கு வாரியம் , பஞ்சவார வாரியம் , பொன் வாரியம் , கழனி வாரியம் , கணக்கு வாரியம் , தடிவழி வாரியம் , குடும்பு வாரியம் எனப் பலவகைப்பட்டன .

இவ்வாரியங்கள் அன்றி மூலபருடையார் , சாத்த கணத்தார் , காளி கணத்தார் , கிருஷ்ண கணத்தார் , குமார கணத்தார் , சங்கரப்பாடியார் , பன்மாகேஸ்வரர் போன்ற வேறு சிறு தனிக் குழுவினரும் அக்காலத்தில் இருந்தனர் .

( இங்குச் சுட்டப்பட்டுள்ள வாரியங்கள் பற்றிய விளக்கங்கள் பாட இறுதியிலுள்ள கலைச் சொற்கள் பகுதியில் கூறப்பட்டுள்ளன)

• உறுப்பினர்

சொந்த இடத்தில் வீடு கட்டிக் குடியிருப்போர் , வரி செலுத்தக் கூடிய கால்வேலிக்குமேல் நிலம் உடையவர்கள் , கல்வி அறிவுடன் அறநெறி தவறாமல் தூய வழியில் பொருள் ஈட்டி வாழ்பவர்கள் , காரியங்களை நிறைவேற்றுவதில் வல்லமையுடையவர்கள் , முப்பத்தைந்து வயதுக்கு மேல் எழுபது வயதிற்கு உட்பட்டவர்கள் , கடந்த மூன்றாண்டு வாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் , பெரும் கல்வியறிவுடன் அரைக்கால் வேலி நிலம் உள்ளவர்கள் ஆகியோர் வாரிய உறுப்பினர் ஆவதற்கு உரிமை உடையவர்கள் ஆவர் .

அக்காலத்தில் சபை உறுப்பினர் ஆவதற்குச் சொத்து , கல்வி , ஒழுக்கம் ஆகியவையே காரணமாக இருந்தன .

• உறுப்பினராக இயலாதோர்

வாரிய உறுப்பினராக இருந்து கணக்குக் காட்டாதவர்கள் , இவர்களின் சிறிய தந்தை பெரிய தந்தை மக்கள் , அத்தை மாமன் மக்கள் , தாயோடு உடன் பிறந்தான் , தகப்பனோடு உடன் பிறந்தான் , சகோதரியின் மக்கள் , சகோதரியின் கணவன் , மருமகன் , தகப்பன் , மகன் ஆகியோரும் மற்ற நெருங்கிய உறவினர்களும் , பெரும்பாதகம் புரிந்தோர் , இவர்கள் உறவினர் , தீயோர் கூட்டுறவால் கெட்டுப் போனவர் , கொண்டது விடாத கொடியோர் , பிறர் பொருளைக் கவர்ந்தவர் , கையூட்டு வாங்கியோர் , ஊர்க்குத் துரோகம் செய்தோர் , கூடத்தகாதவர்களோடு கூடியோர் , குற்றம்புரிந்து கழுதை மேல் ஏறினோர் , கள்ளக் கையெழுத்து இட்டோர் ஆகியோரும் வாரிய உறுப்பினர் ஆவதற்கு உரிமை உடையவர்கள் அல்லர் .

• வாரியம் நடைமுறை

பறை அறைந்து அல்லது முரசு அடித்துச் சபை கூட்டப்படும் .

பெரும்பாலும் பகல் நேரத்தில் கூட்டம் நடைபெற்றது . இரவுக் கூட்டங்கள் சரியாக நடைபெறாமலிருந்ததும் , எண்ணெய் , திரிச் செலவு அதிகமானதும் அதற்குக் காரணம் ஆகும் .