90

3.3.9 மும்மருந்தும் கூறும் முடிவு

திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி ஆகிய மும்மருந்துகளின் பெயர்களால் அமைந்த நூல்களில் காணும் உண்மைகள் என்னவென்று பார்ப்போமா ?

பணிவுடைமை முதலிய நல்லொழுக்கம் மேற்கொள்ளுதல் , கொலை புரியாமை , புலால் உண்ணாமை , அருளுடைமை , இனிய முகத்துடன் வேண்டுவார்க்கு உணவு கொடுத்தல் ஆகிய இவையே இம்மைக்கும் மறுமைக்கும் பெருவாழ்வு தருவன .

தொகுப்புரை

திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி ஆகிய மூன்று நூல்களைப் பற்றி இப்பாடத்தில் பார்த்தோம் .

கீழ்க்கணக்கு நூலில் திரிகடுகம் , சுக்கு , மிளகு , திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்துப் பொருள்களைக் குறிக்கிறது .

இவை உடல் நோயைத் தீர்க்க வல்லதைப் போல் திரிகடுக நூலில் கூறப்படும் கருத்துகளும் மக்களுடைய உள நோயைத் தீர்ப்பதாகும் .

அறத்தின் உயர்வு , இயற்கையும் அறமும் , அறமும் இன்ப துன்பமும் என்று பல கோணங்களில் நல்லாதனார் திரிகடுகம் வாயிலாக அறக்கருத்துகளை எடுத்துரைக்கின்றார் .

அடிப்படைச் சமுதாய நிறுவனமாகிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் சிந்தனைகள் நல்ல சமுதாயம் உருவாக்கும் வழிகளாக உள்ளன .

இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் என்ற மருந்துப் பெயர் கொண்ட அறநூல் விளக்கப்படுகிறது .

ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்ப்பது போல் உளநோயைப் போக்கும் ஐந்து கருத்துகளைக் காரியாசான் ஒவ்வொரு பாடலிலும் சொல்கிறார் .

அறச் சிறப்புகள் விரிவாகப் பேசப்படுகின்றன .

அறநெறிகளே நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதைச் சிறுபஞ்சமூலத்தில் வலியுறுத்துகிறார் .

இல்லறச் சிறப்பும் , வாழ்வியல் உண்மைகளும் விரித்துரைக்கப் படுகின்றன .

வாழ்வியல் உண்மைகளை விளக்கச் செடி கொடிகள் , மரங்கள் , பறவைகள் இவற்றின் இயல்புகளை எடுத்துக் காட்டுகிறார் .

எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று என்பதை எடுத்துக் கூறி , உலகில் எப்பொருளும் இகழ்தற்குரியன அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார் .

அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை எடுத்துரைப்பதே சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் நோக்கமாக அமைகிறது .

மூன்றாவது பகுதியில் ஏலாதி நூல் பற்றிய விளக்கம் இடம் பெறுகிறது .

இந்நூலில் கணிமேதையார் பொதுவாக அறங்கள் செய்வது நன்று என்று மட்டும் சொல்லாமல் இத்தகைய அறங்களைச் செய்பவர்கள் மறுபிறவியில் மன்னராய்ப் பிறந்து ஆட்சி செய்வர் என்று 21 பாடல்களில் குறிப்பிடுகிறார் .

விண்ணவர்க்கும் மேலானவர் யார் என்பது எட்டுப்பாடல்களில் சொல்லப்படுகிறது .

காலனுக்கு அஞ்சி அறம் செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது .

அறநெறிகள் நன்னெறிகள் முதலியவற்றைப் பின்பற்றி வாழ்வில் உய்ய வேண்டும் என்பதே ஏலாதி நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம் .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

2. பஞ்சமூலம் என்ற சொற்றொடர் குறிக்கும் ஐவகை வேர்கள் யாவை ?

[ விடை ]

3. நண்டுக்கு எமன் யார் ?

[ விடை ]

4. இரண்டு கால் மாடுகள் என்று காரியாசான் யாரைச் சொல்கிறார் ?

[ விடை ]

5. ஏலாதி நூலின் ஆசிரியர் யார் ?

[ விடை ]

6. வாளஞ்சான் , வன்கண்மை அஞ்சான் , வனப்பஞ்சான் யார் ?

[ விடை ]

7. அறங்களைச் செய்தால் மறுபிறவியில் மன்னராய்ப் பிறக்கலாம் என்று எத்தனைப் பாடல்களில் சொல்லப்படுகிறது ?

[ விடை ]

8. ஏலாதி நூல் எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?

இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும்

பாட முன்னுரை

இடைக்கால இலக்கியங்களில் அறநூல்கள்-1 வரிசையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 11 அற நூல்கள் அடங்கும் .

அவற்றுள் நான்காவது பாடமாக இன்னா நாற்பது , இனியவை நாற்பது என்ற இரண்டு நூல்களையும் பார்க்கப் போகிறோம் .

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் பாடலில் நானாற்பது என்று வரும் தொடர் , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது என்ற நான்கு நூல்களையும் குறிக்கும் .

இவை ஒவ்வொன்றும் நாற்பது செய்யுட்களை உடையன .

ஆதலால் இவை ‘ நானாற்பது ’ ( நால் நாற்பது ) என்ற தொடரால் வழங்கப்பட்டன .

இன்னா நாற்பது

இன்னா நாற்பது , துன்பம் தருவனவற்றைத் தொகுத்துத் தருகிறது .

ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்துள்ளன .

ஒவ்வொரு கருத்திற்குப் பின்னும் ‘ இன்னா ’என எடுத்துக் கூறுவதாலும் நாற்பது பாடல்களைக் கொண்டிருப்பதாலும் ‘ இன்னா நாற்பது ’ என்ற பெயரை இந்நூல் பெற்றுள்ளது . 4.1.1 ஆசிரியர்

இன்னா நாற்பது நூலை இயற்றியவர் கபிலர் .

இவர் சங்ககாலத்துக் கபிலர் அல்லர் ; பிற்காலத்தவர் .

இவர் சைவ , வைணவ நெறிகளைப் பொதுவாக நோக்கியவர் .

உலகியலில் ‘ இன்னாதன ’ என்று தோன்றியவற்றை எல்லாம் நான்கு நான்காக ஒவ்வொரு பாடலிலும் அழகாகக் கூறியுள்ளார் .

4.1.2 நூல் அமைப்பும் , பாடுபொருளும்

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்கள் உள்ளன .

பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன .

ஒவ்வொரு பாடலிலும் நான்கு நீதிக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன .

இது ஒரு சிறந்த நீதி நூலாக விளங்குவதால் , பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .

மக்கள் யாவரும் விரும்புவது இன்பமே , என்றாலும் இன்ப , துன்பங்களின் காரணங்களை அறிந்து அதற்கு ஏற்ப நடப்பதில்லை .

இது எக்காலத்திற்கும் பொருந்துவதாகும் .

இன்பத்தின் காரணத்தை அறிந்து கொள்வதை விடத் துன்பத்தின் காரணத்தை , அறிந்து கொண்டு அதனை நீக்கி வாழ்வது அவசியம் என்பதால் இன்னா நாற்பது முதலில் படைக்கப்பட்டு , அதன் பின்னரே இனியவை நாற்பது படைக்கப்பட்டது எனக் கொள்ளலாம் .

இந்நூலில் நல் வாழ்க்கைக்குரிய நீதிகள் கூறப்படுகின்றன .

தனி மனிதனின் கடமைகள் , உரிமைகள் , சமுதாயத்தில் அவன் சந்திக்கின்ற பலவகையான சூழல்கள் ஆகியவற்றில் அவனுக்கு ஏற்படும் துன்பங்களைத் தொகுத்துக் கூறுகின்றார் ஆசிரியர் .

குடும்பம் என்பது கணவன் மனைவி உறவு , அவர்கள் நடத்தும் இல்லறம் , பெற்றோர் , பிள்ளைகள் உறவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது .

குடும்ப உறுப்பினர்களுக்குத் துன்பம் தருவன எவையெவை என்று சொல்கிறது இன்னா நாற்பது .

அரசன் , குடிமக்கள் , உழவர் , துறவிகள் என்று அவரவர் நிலையில் துன்பம் தருவன எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது .

கபிலரின் இன்னா நாற்பது துன்பங்களின் மூலங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது .

கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களிலும் 164 இன்னாதவைகளைக் கபிலர் தொகுத்துக் கூறுகிறார் .

தனி மனிதப் பண்புகள் செம்மைப்பட்டால் , சமுதாயம் சிறந்து விளங்கும் என்ற நோக்கில் அமைந்த அறக்கருத்துகளே இந்நூல் முழுவதும் காணக்கிடக்கின்றன .

ஒழுக்க முறைகள்

சில ஒழுக்க முறைகளும் பழக்க வழக்கங்களும் இந்நூலிருந்து நமக்குக் கிடைக்கின்றன .

கொடுங்கோல் மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்வதை மக்கள் பெரும் துன்பமாகக் கருதினர் .

கொடுங்கோல் மறமன்னர் கீழ் வாழ்தல் இன்னா

( இன்னா நாற்பது - 3 )

( மற மன்னர் = அறநெறி தவறிய )

என்று கபிலர் இதனைச் சுட்டிக் காட்டுகிறார் .

வீரம் இல்லாத மன்னன் போர்க்களம் செல்லுதல் கூடாது என்பது அக்கால மக்கள் கொள்கை .

அக்காலத்தில் மன்னனுக்கு யானைப்படை முதன்மையாகக் கருதப்பட்டது .

மன்னன் உலா வரும்போது யானைக்கு மணி கட்டியிருத்தல் வேண்டும் .

மணியில்லாத யானையின் மீது சென்றால் அரசனுக்குத் தீங்கு நேரும் என்று அவர்கள் அஞ்சினர் .

மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்தல் இன்னா

( இன் .

நாற். - 13 )

( குஞ்சரம் = யானை )

அடைக்கலப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வழக்கம் வெறுத்து ஒதுக்கப்பட்டது .

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா

( இன் .

நாற். - 19 )

என்று கல்லாமையின் இழிவு பேசப்படுகிறது .

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா

( இன் .

நாற். - 26 )

( யாத்த = நெருங்கிப் பிணைந்த ; தொடர் = தொடர்பு )

என்று , பெரியோர் கேண்மையை விடல் துன்பமாகும் என்று எச்சரிக்கிறது .

தனி மனித அறமே சமுதாய அறத்திற்கு அடிப்படை , அறத்தின் வழிச் செல்லாத நிலையில் தனிமனிதனுக்குப் பல துன்பங்கள் ஏற்படுகின்றன .

கற்றவன் , கல்லாதவன் , செல்வன் , வறுமையுற்றார் என்ற போதும் துன்பங்கள் நீங்குவதில்லை .

இந்தச் சமுதாயத்தில் துன்பம் தருவன எவை என்பதை இன்னா நாற்பது தொகுத்துக் கூறுவது பற்றி இனி விரிவாகப் பார்ப்போமா ?

4.2.1 ஈகையும் இரத்தலும் மனத்தில் அருளும் கையில் பொருளும் உடையவரே வறியவர்க்குப் பொருளைக் கொடுக்க இயலும் .

இவை இல்லாதவர் வறியவர்க்குப் பொருள் கொடுத்தல் இயலாது .

எனவே இச்செயல் அவர்க்குத் துன்பத்தையே தரும் என்கிறது இன்னா நாற்பது .

இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு

( இன் .

நாற். - 10 )

( வண்மை = கொடை , புரிவு = செய்தல் )

தம்முடைய செல்வத்தை வறியவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக் குணம் இல்லாதவர்கள் அழகு பயனற்றது .

வண்மை யிலாளர் வனப் பின்னா

( இன் .

நாற். - 9 )

‘ இரக்கம் இல்லாதவரிடத்தில் இரந்து நிற்றல் துன்பம் தரும் ’ ( இன் .

நாற். - 10 ) என்ற கருத்தை ‘ அருளில்லார் தங்கள் செலவு இன்னா ’ எனச் சொல்கிறது இந்நூல் .

‘ கொடுத்த அளவினால் மனம் நிறைந்து மகிழாதவர்க்குக் கொடுத்தல் துன்பம் ’ ( இன் .

நாற். - 21 ) செல்வத்தைப் பெற்றவர் அச்செல்வத்தைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் அனுபவித்தல் வேண்டும் .

பொருளை அனுபவிக்காமல் வீணாகச் சேர்த்து வைப்பவர்கள் அப்பொருளால் அடைய வேண்டிய பயனை அடைய மாட்டார்கள் .

எனவே அனுபவியாமல் சேர்த்து வைக்கின்ற பெருஞ்செல்வத்தின் தொகுதி இன்பத்தைத் தராமல் துன்பத்தையே தரும் .

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா

( இன் .

நாற். - 16 )

என்கிறார் கபிலர் .

4.2.2 புலனடக்கமும் துன்பமும்

உயர்ந்த நிலையில் உள்ள ஒருவன் தன்னுடைய பெருமையும் புகழும் கெடாதபடி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் .

இதற்குப் புலனடக்கம் அவசியம் என்பதை இன்னா நாற்பது எடுத்துரைக்கிறது .

புலனடக்கம் இல்லையென்றால் துன்பம் வரும் என்பதை ,

தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா

( இன் .

நாற். - 32 )

( நன்கு = மிகவும் )

பிறன் மனையாளை விரும்பாத பேராண்மை ஒருவனுக்கு வேண்டும் .

மாறாக , பிறன் மனைவியை விரும்புதல் துன்பம் தருவதாகும் .

பிறன்மனையாள் பின்நோக்கும் பேதைமை இன்னா

( இன் .

நாற் .

-38 )

( பேதைமை = அறிவின்மை )

4.2.3 வீரமும் வலிமையும்

வீரமும் வலிமையும் ஒருவனுக்குத் தேவைதான் .

அவை மனிதனுக்குப் பெருமை தருவனவே .

அவையும் எப்போது துன்பமாகும் என்று பாருங்கள் .

வீரர்கள் பலரை உடைய ஒருவன் பகைவரை எதிர்க்கத் தானே மார்பைத் தட்டுதல் நன்மையைத் தராது .

தன்னை வியத்தல் என்றுமே துன்பமும் தருவது ஆகும் .

எந்தச் செயலை மேற்கொள்வதாக இருந்தாலும் எண்ணித் துணிய வேண்டும் .

இல்லையெனில் துன்பமே நேரும் .

சான்றாக நீரில் பாய்ந்து நீந்த விரும்புகின்றவன் , அந்நீர் நிலையின் ஆழம் , அதன் அடியில் இருக்கும் பாறை , மறைந்திருக்கும் மரக்கட்டைகள் ஆகியவற்றை அறிந்து பாய்ந்து நீந்த வேண்டும் .

அதனை அறியாமல் பாய்ந்து நீந்தினால் துன்பம் நிச்சயம் ( இன் .

நாற். - 29 ) .

உயர்ந்த மரத்திலிருந்து கீழே குதித்தல் துன்பம் பயக்கும் .

நெடுமரம் நீள்கோட்டு உயர் பாய்தல் இன்னா

( இன் . நாற் .

-30 )

( நீள்கோடு = நீண்ட கிளை )

இக்கருத்தையே ,

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந் தூக்கின்

உயிர்க்கிறுதி யாகி விடும்

( குறள் : 476 )

என்று குறட்பா கூறும் .

இது போல உயிருக்கு ஊறு விளைக்கவல்ல மூன்று வேறு செய்திகளையும் இப்பாடல் கூறும் .

அவை

1. மதம் பிடித்த யானைக்கு எதிரே செல்லுதல்

2. பாம்பு மறைந்து வாழும் வீட்டில் குடியிருத்தல்

3. கொடிய புலிகள் உலவும் வழியில் பயணம் செய்தல்

ஆகியவை , முள்ளுடைய காட்டில் நடத்தல் துன்பம் .

வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கைக் கொலை செய்வது கொடியது ( இன் .

நாற். - 33 ) . வீரமும் வலிமையும் ஒருவர்க்கு நன்மை பயக்கவல்லன .

ஆனால் அதுவே தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் விளைவது துன்பமே என்கிறார் கபிலர் .

4.2.4 கல்வியும் வறுமையும்

கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு .

கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும் அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது .

கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா

( இன் .

நாற். - 15 )

என்கிறது ஒரு பாடல் .

நற்குடியில் பிறந்தவன் கல்லாதிருத்தல் துன்பம் .

கல்வியற்றவர் சொல்லும் சொல்லின் பொருள் இன்னாதது .

அவன் கற்றவர் நடுவே ஒன்றைச் சொல்லுதல் துன்பமே தரும் .

( இன் .

நாற் .

-28 )

இனி வறுமை நிலையால் வரும் துன்பம் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது என்று பாருங்கள் .

வறியவன் அழகு துன்பமே தரும் .

வளமை இலாளர் வனப்பு இன்னா

( இன் .

நாற். - 27 )

( வனப்பு = அழகு )

பெரிய நகரத்தில் வாழ விரும்புபவன் அதற்கு ஏற்ற செல்வமும் உடையவனாய் இருத்தல் வேண்டும் .

செலவுக்குத் தகுந்த பொருள் கையில் இல்லாதவனாய் இருத்தல் துன்பம் தரும் .

நெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை இன்னா

( இன் .

நாற். - 36 )

( கைத்து = கையகத்து ; இன்மை = இல்லாமை )

செல்வம் இல்லாதவர் தம் வாய்ச் சொல் பயனற்றுப் போகும் .

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்

( குறள் : 1046 )

என்று தமிழ் மறை கூறுகிறது அல்லவா ?

இதே கருத்தை இன்னா நாற்பதும் கூறுகிறது ?

வறியவன் கூறுவதிலுள்ள நயமும் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாது .

இல்லார்வாய்ச் சொல்லின் நயம் இன்னா ( இன் .