மொழி : பேச்சு மொழி, எழுத்து மொழி
மொழியைப் பேச்சு மொழி, எழுத்து மொழி என்று வகைப்படுத்தலாம்.
உதடு உள்நாக்கு
அவள் வந்தாள்
உடல் வலி
பழம் விழுந்தது
ள, ல, ழ, ன, ண போன்ற ஒலிகளை ஒலிக்கும் போது சரியான ஆனால் நுட்பமான வேறுபாடு தேவைப்படுகிறது.
மென்மை
மேன்மை,
வட்டம்,
வாட்டம்
என்று உச்சரிப்பில் நீட்டல், குறுக்கல் உண்டு. பழந்தமிழ்ச் சான்றோர் தமிழ் எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர். ‘மாத்திரை’ என்பது ஒலியின் கால அளவு. ஒரு மாத்திரை என்பது இயல்பாகக் கண் இமைக்கும் நேரம், கை நொடிக்கும் நேரம் ஆகும். குறிலை உச்சரிக்கும் கால அளவு – ஒரு மாத்திரை. நெடிலை உச்சரிக்கும் கால அளவு – இரு மாத்திரை. முதலில் பேச்சு மொழிதான் தோன்றியிருக்க வேண்டும். ஒருவர் பேசுவதை ஒலிநாடாவில் பதிவு செய்ய இன்று முடிகிறது. தொலைபேசி வழி ஒரு நாட்டில் இருப்பவர் இன்னொரு நாட்டில் இருப்பவரோடு பேச முடிகிறது. ஆனால் சங்க காலத்தில் மக்கள் பேசிய தமிழ் எப்படி இருந்தது? பக்தி இலக்கியப் பாசுரங்களை ஓதிய தமிழர்கள் இடைக்காலத்தில் பேசிய தமிழ் எப்படி இருந்தது? இச் செய்திகளை அறிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு இல்லை.
வழக்கு மொழி – வழக்கொழிந்த மொழி
பேச்சு மொழியை மேற்கண்டவாறு பகுக்க முடியும். வழக்கு மொழி என்பது இன்றும் மக்களால் பேசப்படும் மொழி. வழக்கொழிந்த மொழி என்பது இன்று மக்களிடையே பேசப்படாத மொழி. அது, முன்னொரு காலத்தில் பேசப்பட்டிருக்கும். ஏதோ காரணத்தால் பேசுவது தடைபட்டிருக்கும். வடமொழி எனப்படும் சமஸ்கிருதம் மக்களிடையே பேசப்படும் மொழியாக இன்று இல்லை. பேச்சு வழக்கொழிந்த மொழிக்கு வடமொழியைச் சான்றாகச் சொல்வார்கள்.
எழுதுபவர் மொழியின் வரி வடிவத்தைப் பயன்படுத்துகிறார். எழுத்து மொழி உருவாகிறது. ஒரு மொழியைப் பிழையின்றிப் பேசவும், தவறின்றி எழுதவும் ‘மொழி அறிவு’ தேவை. இம்மொழியறிவுடன் கற்பனை வளம், படைப்பாற்றல் இணையும்போது இலக்கியம் பிறக்கிறது.
ஒரே மொழியைப் பலரும் பயன்படுத்தினாலும், அவரவர்களுடைய பின்புலம், சூழ்நிலை காரணமாக ஒவ்வொருவரின் பேச்சிலும் எழுத்திலும் ஒரு தனித்தன்மை ஏற்படும். இதையே தனி மொழி என்று சொல்லுகிறோம்.
மூல மொழி
அடிப்படை மொழி என்றும், முன்னை மொழி என்றும் தொன்மை மொழி என்றும் மூல மொழி வழங்கப்படுகிறது. ஒரு மொழி அடிப்படையாக அமைய, அதிலிருந்து பல மொழிகள் உருவாகலாம். அந்த நிலையில் அடிப்படையாக இருந்த மொழியை மூல மொழி என்று சொல்வர். தமிழ் ஒரு மூல மொழி. ஏனென்றால் தமிழின் சொற்களில் பெரும்பாலானவை வேர்ச்சொற்கள். இவற்றிலிருந்துதான் எண்ணற்ற சொற்கள் உருவாக்கப்படுகின்றன. திராவிட மொழிகளில் உள்ள சொற்களின் வேர்ச்சொற்களை ஆய்ந்து பார்த்தால் அவை தமிழ் வேர்ச்சொற்களாகவே உள்ளன. எனவே, ‘முன்னைத் திராவிடம்’ ‘மூலத் திராவிடம்’ ‘தொல் திராவிடம்’ என்றெல்லாம் கூறுவது தமிழுக்கு வெகுவாகப் பொருந்தும் என்பார் தேவநேயப் பாவாணர்.
தனி மொழி
தனி மொழி என்பது ‘தனியாள் பேசும் மொழி’ (Idiolect) என்பர். தமிழ் என்பது ஒரு மொழி. அதைத் தமிழகத்தில் இருக்கும் தமிழாசிரியராகிய நான் பேசுகிறேன். எழுதுகிறேன். அதே தமிழை வேற்றுமண்ணில் வசிக்கும் தமிழராகிய நீங்கள் பேசுகிறீர்கள். எழுதுகிறீர்கள். அதே தமிழை வேற்று மொழி பேசும் வெளிநாட்டு மாணவர்களாகிய நீங்கள் பேசுகிறீர்கள். எழுதுகிறீர்கள். தமிழ் ஒரே மொழிதான். ஆனால் அதைப் பேசுகின்ற, எழுதுகின்ற நானும், நீங்களும் வெவ்வேறு பின்புலத்தைக் கொண்டவர்கள். அதற்கேற்ப, நம் ஒவ்வொருவர் தமிழும் வெவ்வேறாக அமைகிறது அல்லவா? இதையே ‘தனி மொழி’ என்பர். வேறுபாடுகள் இடம்பெறலாம். இருந்தபோதிலும் நான் பேசுவதை நீங்களும், நீங்கள் பேசுவதை நானும் புரிந்து கொள்ள முடியும். எழுதுவதைப் படிக்க முடியும். அதில் சிக்கல் இருக்காது. தனி மொழியின் சிறப்பு இதுவாகும்.
செந்தமிழ், கொடுந்தமிழ்
பழந்தமிழ் இலக்கண நூல்கள் தமிழைச் செந்தமிழ் என்றும், கொடுந்தமிழ் என்றும் பாகுபாடு செய்திருப்பது தனி மொழியாய் அமைகின்ற வேறுபாடுகளை வைத்துத்தான். இடத்திற்கு இடம் வேறுபட்ட பொருளில் வழங்கும் சொற்களைத் தமிழ் இலக்கணம் திசைச் சொற்கள் என்று குறிக்கிறது. இவ்வாறு சொற்களில் மட்டும் அன்றிப் பேசும் முறை, சொல்லைக் கையாளும் வகை, வாக்கிய அமைப்பு, ஒலிக்கும் முறை போன்றவற்றால் எழும் எல்லா வேறுபாடுகளையும் உள்ளடக்கியது ‘தனி மொழி’.
பொது மொழி – ஒரு விளக்கம்
மொழிகளில் கலப்பு ஏற்பட்டுப் பொதுவான ஒரு புது மொழி தோன்றுவதுண்டு. இந்தப் பொது மொழி என்பது, மொழியின் ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டு பொதுவானதாக அமைவது ஆகும். ஆப்பிரிக்காவில், பிரெஞ்சு மொழியும் ஆப்பிரிக்க மொழியும் கலந்த ‘பிட்கின் மொழிகள்’ பல பேசப்படுகின்றன. இவற்றைப் பொதுமொழிக்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.
சிறப்பு மொழி – ஒரு விளக்கம்
ஒருவர் ஒரு மொழியைக் கற்பது வேறு. அந்த மொழியில் உள்ள சிறப்பான துறைகளைக் கற்பது வேறு. என்னால் தமிழில் எழுதமுடியும். பேசமுடியும். படிக்க முடியும். புரிந்து கொள்ள முடியும் என்பவருக்குத் தொல்காப்பியம் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். காரணம் தமிழுக்குரிய நுண்மையான இலக்கண விதிமுறைகள் தொல்காப்பியத்தில் தரப்பட்டுள்ளன. தமிழில் ஆழ்ந்த புலமை உள்ளவருக்கு உரிய ‘சிறப்பான நூல்’ அது. வணிகர், மருத்துவர், அறிவியலாளர், தகவல் தொழில் நுட்பத் திறனாளர் தத்தம் துறைகளில் எழுதுவதும், பேசுவதும் அத்துறைசார் சிறப்புக் கூறுகளை மிகுதியும் பெற்றிருக்கும். அதனைச் ‘சிறப்பு மொழி’ எனலாம். துறை சார்ந்த உரைகளில், நூல்களில் மொழியின் பொதுக் கூறுகள் குறைவு. சிறப்புக் கூறுகள் அதிகம். அவ்வகையில் அம்மொழியைச் சிறப்பு மொழி என்று குறிப்பிடுவர்.
குறுமொழி – ஒரு விளக்கம்
மிகச் சிறிய எண்ணிக்கையினர் தங்கள் குழுவினரோடு பேசிக் கொள்ளவும், எழுதவும் உருவாக்கிக் கொள்ளும் செயற்கையான மொழியே குறுமொழி ஆகும். குறுமொழி எல்லாருக்கும் புரிவதில்லை. அக்குழுவினருக்கு மட்டுமே புரியும். எல்லாராலும் பயன்படுத்தப் படுவதில்லை. குறிப்பிட்ட குழுவினரால் மட்டுமே பயன்படுத்தப்படும். குறுமொழியின் தோற்றம் எதிர் பாராமல் அமையும். மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தாம் பேசுவது வெளியாருக்குப் புரிந்துவிடக் கூடாது என்றும் தங்களுக்கு வசதி கருதிக் குறுமொழியை உருவாக்கிக் கொள்கின்றனர். குறுமொழி பலகாலம் நீடித்து வாழ முடியாது. பேசுவோர் வட்டம் காலப் போக்கில் குறுகி மறைந்துவிடலாம். ஒரு குழுவினர் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்குப் பயன்படுத்தும் மொழியைத் தமிழ்,
குழூஉக்குறி என்று குறிப்பிடுகிறது. இது குறுமொழியைச் சேர்ந்தது. வணிகர்கள் வியாபார இரகசியங்களைக் காப்பாற்ற வேண்டிக் குறுமொழியைத் தங்களுக்குள் கையாள்கின்றனர்.
கொச்சை மொழி – ஒரு விளக்கம்
கொச்சை மொழி என்பது திருந்தாத மொழி. விதிமுறைகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், தளைகள் எதிலும் சிக்காத தன்னியல்பான மொழி இது, கொச்சை மொழி என்பது இழிந்தது; வசைச் சொற்கள் இடம்பெறுவது என்பர். எந்த மொழியில்தான் வசைச் சொற்கள் இல்லை? ஒரு மொழியின் வசைச் சொற்களை ஆராயும்போது அம்மொழி பேசுவோரது பண்பாட்டு, நாகரிக வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
கட்டமைப்புடன், செறிவாக இருக்கும் இலக்கியச் செழுமை மிக்க திருந்திய மொழியைச் செவ்விய மொழி என்பர். தமிழ் ஒரு செவ்விய மொழி ஆகும்.
கிளைமொழி தோன்றக் காரணங்களாவன: கடல், பேராறு, மலைத்தொடர் போன்ற இயற்கை அமைப்புகள் ஒரு நாட்டைப் பிரிக்கும்போது, ஒரு மொழியி்லிருந்து கிளைமொழி தோன்றக்கூடும். தமிழிலிருந்து மலையாளம் கிளைமொழியாகத் தோன்றவும், நாளடைவில் தனிமொழியாக உருப்பெறவும் குறுக்கே அமைந்த மேற்குத் தொடர்ச்சி மலை காரணம் எனலாம். கிராமம், நகரம் என்று இடம்பெயர்ந்து வாழும்போது கிராமத்தில் வாழ்பவர் பேசும் மொழியும், நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்த அதே குடும்பத்தினர் பேசும் மொழியும் வேறுபடுவதுண்டு. ஒரே ஊரில் வாழும் இருவேறு சமயத்தினர் பேசும் மொழியில் வேறுபாடு வருவதுண்டு. இசுலாமியர் அரபு, உருதுச் சொற்கள் கலந்து தமிழ் பேசுவதைக் கூறலாம். ஒரே இடத்தில் வாழுபவரது மொழிநடை சமூகப் பிரிவு காரணமாக, கல்வியறிவின் காரணமாக வேறுபடுவதுண்டு. மக்கள் கலந்து பழக இன்றைய போக்குவரத்து வசதிகள், தகவல் தொழில்நுட்ப வாய்ப்புகள் உதவுகின்றன. தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், இதழ்கள் முதலியவை பொதுத்தமிழ் உருவாக உதவுகின்றன.
இலக்கியக் கிளைமொழி
கிளைமொழியைக் கூடப் பல்வேறு வகைகளாகப் பகுக்கலாம். செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இலக்கண உரையாசிரியர்கள் கூறுவது கிளை மொழிகளைத்தான் என்பர். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தில் பேசுவது கொடுந்தமிழ்; எல்லை கூறப்பட்ட தமிழ்ப் பகுதிக்குள் பேசப்படுவது செந்தமிழ் என்று கூறுவர். சங்கத் தமிழ், இடைக்காலத் தமிழ், இக்காலத் தமிழ் என்று இலக்கியங்களின் அடிப்படையில் கூறலாம்.
கிளைமொழியின் வகைகள்
வட்டாரக் கிளைமொழி
ஒரு பகுதியில் (மாவட்டம் போன்ற வட்டாரப் பிரிவுகள்) வாழும் மக்கள் பேசுவதற்கும், மற்றொரு பகுதியில் வாழ்பவர் பேசுவதற்கும் உள்ள வேறுபாடுகளால் உண்டாகும் மொழி வட்டாரக் கிளைமொழி ஆகும். தமிழ்நாட்டில் கரிசல் காட்டுப் பகுதியில் வழங்கும் மொழியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
வகுப்புக் கிளைமொழி
ஒரு சமயத்தினர் அல்லது சாதியினர் பேசுவதற்கும், அதே பகுதியில் வாழும் மற்றொரு சமயத்தினர் அல்லது சாதியினர் பேசுவதற்கும் உள்ள வேறுபாடுகள் மி்குந்து உண்டாகும் மொழி ‘வகுப்புக் கிளைமொழி’ ஆகும்.
தொழில் கிளைமொழி
ஒரு தொழில் செய்வோரது பேச்சில் அவர்தம் தொழிலுக்கு மட்டுமே உரிய அரிய சொற்கள் மிகுந்து இருக்கும். இம்மிகுதியால் உண்டாகும் கிளைமொழி ‘தொழில் கிளைமொழி’ ஆகும். நூற்றுக்கணக்கான அரிய சொற்களை மீனவர் கையாள்கின்றனர். அது போலவே குயவர் பேச்சிலும் மிகுந்த சொற்கள் சிறப்புப் பொருள் தரும் கலைச்சொற்களாக உள்ளன.
உட்கிளைமொழி
ஒரே பிரிவினர் பேசும் மொழியில் கூட வேறுபாடுகள் இடம்பெறுவதுண்டு. அவ்வேறுபாடுகள் மிகுதியால் உண்டாகும் கிளைமொழி ‘உட்கிளைமொழி‘ ஆகும்.
மொழியில் உள்ள சொற்கள் முக்கியமானவை. எழுத்துகளின் சேர்க்கை சொல் ஆகும். எழுத்தின் அடிப்படையாக அமைவது ஒலியன். எழுத்துகள் கூடிச் சொற்கள் அமையும் விதம் எல்லா மொழிகளிலும் காணக் கூடியதே. சொல் அமைப்பைக் கொண்டு
என்று மொழியை வகைப்படுத்தலாம்.
(எ-டு)
கண்ணன் – பெயர்ச்சொல்
கண் + அன் கண் = அடிச்சொல் அன் = இடைச்சொல்
இங்கு ‘அன்’ என்ற இடைச்சொல் ஒட்டுமொழியாக வந்தது. தமிழில் ஒவ்வொரு சொல்லையும் இப்படிப் பகுத்துப் பார்த்தால் பல்வேறு ஒட்டுகள் இருத்தலை அறியலாம். ஓர் எழுத்து தனித்து நின்றும் பொருள் தரும்.
‘ஆ !‘ – உணர்வு வெளிப்பாடு
‘தீ’ – நெருப்பு
ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்றும் பொருள் தரும். ஒரு சொல்லைப் பகுக்க முடிந்தால் அதன் பெயர் பகுபதம். பகுக்க முடியாவிட்டால் அதன் பெயர் பகாப்பதம்.
ஓடி வந்தான்.
வந்து போனாள்.
ஓடி, வந்து என்பன இறந்த காலத்தைக் காட்டும் முற்றுப் பெறாத வினைச்சொற்கள். எனவே இவற்றை இறந்த கால வினையெச்சங்கள் என்பர். இங்ஙனம் ஒட்டுகள் அமைகின்றன. ஒட்டுகள் சொல்லில் அமையும் தன்மையை வைத்து, இவற்றை, வேர்ச்சொல்லின் முன்னால் ஒட்டுவதை முன் ஒட்டுச் சொல் என்றும், வேர்ச்சொல்லின் பின்னால் ஒட்டுவதைப் பின் ஒட்டுச்சொல் என்றும், இரண்டு வேர்ச்சொற்களுக்கு இடையி்ல் ஒட்டுவதை உள் ஒட்டுச்சொல் என்றும் கூறுவர். ஒட்டு மொழிகளில் இத்தன்மையைக் காணலாம்.
‘ஒருவர் குழந்தைப் பருவத்தில் இயல்பாகக் கற்கும் மொழி; சிந்திக்கவும், கருத்துகளைப் புலப்படுத்தவும் ஒருவர் இயல்பாகக் கையாளும் மொழியே தாய்மொழி’ என்று ஐக்கிய நாடுகளின் சபை ‘தாய்மொழி’க்கு விளக்கம் தருகிறது. ‘பெற்ற தாய் அவளது குழந்தைக்குக் கற்பிக்கும் மொழி தாய்மொழி’ எனலாம். ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். பயன்படுத்தலாம். அவர் கற்கும் பிறமொழிகள் எல்லாம் அவரது தாய்மொழி ஆகாது. ஒருவருக்கு அவரது தாய்மொழி தவிரப் பிற எல்லாம் அயல் மொழிகளே ஆகும்.
உடல் வியர்த்தல் – மனப்பதற்றத்தைப் புலப்படுத்தும்.
இவ்வாறு உடல் மூலம் உணர்த்துவது உடல் மொழி (Body Language) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பொருட்டுப் பல மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியமாகிறது. வேகமாகவும், தனக்கு எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிற்குரியதைத் தெளிவாகவும் கற்கலாம். அப்போது அம்மொழியறிவு செயல் மொழியறிவாக உள்ளது. செயல் மொழி (Functional Language) உரையாடலுக்கு மட்டும், எழுதுவதற்கு மட்டும் என்ற இரு போக்குகளைக் கொண்டது.
தமிழ் – ஆட்சி மொழி
ஆங்கிலம் – இணைப்பு மொழி (Link Language)
என்ற நிலை உள்ளது.
பாடம் - 2
‘வியாழக் கிழமை ஏழைக் கிழவன் ஒருவன்
வாழைப் பழத்தோல் வழுக்கி் விழுந்தான்’
என்று சிறுவர்களைத் திரும்பச் திரும்பச் சொல்லச் செய்வதன் மூலம், தமிழுக்குரிய ‘ழகர’ ஒலியைக் கற்பிப்பது கிராமங்களில் உள்ள வழக்கம். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பவரது உச்சரிக்கும் திறன் சோதிக்கப்படுகிறது. ஒலிப்புத் தேர்வும் நடத்தப்படுகிறது.
‘சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்’
என்பர். நாவை ஒலித்துப் பயன்படுத்துவதன் மூலமே செந்தமிழ்ப் பயிற்சி பெற முடியும் என்பது நம் முன்னோர் கருத்து.
அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறுகி ஒலிக்கும்போது அவை குறில் எனப்படுகின்றன. அவற்றையே நீட்டி ஒலிப்பதால் நெடில் எனப்படுகின்றன. குறிலை ஒலித்தல் சற்றே அருமையாகவும், நெடிலை ஒலித்தல் எளிமையாகவும் இருப்பதால் இவற்றை முறையே, அரிய உயிர்கள் என்றும் எளிய உயிர்கள் என்றும் (tense vowels. lax vowels) கூறுவர். பிறக்கும் ஒலிகளை உறுப்புகளது அசைவு குறித்துப் பல வகைகளாகப் பகுப்பர். அது குறித்து நீங்கள் ‘ஒலியனியல்’ என்ற பாடத்தில் விளக்கமாகக் கற்பீர்கள். தமிழைப் பொதுவாக இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று வகுப்பர். இயல் என்பது இலக்கியம், இசை என்பது ஒலிப்புடன் தொடர்புடையது. நாடகத் தமிழ் உரையாடலும், இசையும் இணைந்தது.
ஒழுங்கு செய்யப்பட்ட ஒலி – இசை ; ஒழுங்கு செய்யப்படாத ஒலி – ஓசை.
படித்தால் மனத்தில் பதிய மறுப்பவை எல்லாம் இசை கூட்டிப் பாடலாகப் பாடப்படும்போது, மனத்தில் பதிவது இயற்கை. ஒலியே இசையின் ஆதாரம் ஆகும்.
2) இரு மாத்திரை ஒலிகள்
3) ஒரு மாத்திரைக்கும் குறைந்த ஒலிகள்
என்று வகைப்படுத்தலாம். இவற்றுள் குறில் ஒலிகள் ஒரு மாத்திரை அளவின, நெடில் ஒலிகள் இரண்டு மாத்திரை அளவின, மெய்யொலிகள், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் முதலியன ஒரு மாத்திரைக்கும் குறைந்து ஒலிப்பன. ஐ, ஒள என ஒலித்தால் இரண்டு மாத்திரை, ‘அய், அவ்’ என்று குறுகி ஒலித்தால், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் என்று பெயர்; மாத்திரை அளவு குறையும்.
என்று படமிட்டுக் காட்டலாம். எழுத்துகளின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த ஒலியைத்தான் இந்த எழுத்துக் குறிக்கிறது என்று வரையறை செய்யப்பட்ட பின் இலக்கியங்கள், இலக்கணங்கள் தோன்றியிருக்க வேண்டும். உலக மொழியில் உள்ள எழுத்து முறைகளை மூன்றாகப் பகுக்கலாம். அவை,
என்பன. ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் ஓவியமாக அமைவது ஓவிய எழுத்து முறையின் தனியியல்பு ஆகும். இந்த எழுத்து முறை சீனம், சப்பானியம் முதலிய மொழிகளில் வழக்கில் உள்ளது. அசை எழுத்து முறையில் ஒவ்வோர் எழுத்தும் ஓர் உயிரையோ அல்லது ஒர் உயிர்மெய்யையோ குறிக்கும். இந்திய மொழிகளின் எழுத்து முறைகள் அசைஎழுத்து முறை ஆகும். ஓவிய எழுத்து ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் அசை எழுத்தோ நூற்றுக் கணக்கில்தான் காணப்படுகின்றன. அசை எழுத்து உயிர், உயிர்மெய், மெய் என்னும் வகைகளைக் கொண்டிருக்கும். மெய் எழுத்துக்கு அசை இயல்பு இல்லை. ஆனால் உயிர் எழுத்தும், உயிர்மெய் எழுத்தும் அசை இயல்பைப் பெற்றுள்ளதால் பெரும்பான்மை கருதி இந்த எழுத்து முறை அசைஎழுத்து முறை என்று அழைக்கப்படுகிறது. ஒலி வடிவ எழுத்துகளை மொழிநூலார் ‘ஒலியன்’ என்று அழைப்பர். தமிழில் ‘க’ என்பது வரிவடிவால் ஒன்று, ஆனால் ஒலி வடிவால் இரண்டு. ஆம் ! இதில், ‘க்’ என்ற மெய்யும், ‘அ’ என்ற உயிரும் ஆக இரண்டு ஒலிஎழுத்துகள் இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள், (‘ஐகாரம், ஒளகாரம் ஆகிய உயிர்எழுத்துகள் தவிர) அனைத்தும் ஒலியன் எழுத்துகள் ஆகும். பிரெஞ்சு, செர்மன் முதலிய மொழிகளின் எழுத்து முறை ஒலியன் எழுத்து முறை ஆகும். இந்த எழுத்து முறையில் எழுத்துகள் மிகவும் குறைவாகவே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால்,
ஓவிய எழுத்து முறை – படத்தால் ஆனது.
அசை எழுத்து முறை – இரண்டு ஒலி இணைந்த எழுத்துமுறை
ஒலியன் எழுத்து முறை- ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து
என்று கூறலாம். தமிழில் இரண்டு மெய் எழுத்துகளை எழுதும்போது தனித்தனியாகத்தான் எழுதுவது வழக்கம். பிற இந்திய மொழிகளில் அவற்றைச் சேர்த்து ஒரே எழுத்தாக எழுதுவது உண்டு. அதற்குக் ‘கூட்டெழுத்து’ என்று பெயர். மூன்று மெய் எழுத்துகள் சேர்த்து எழுதப்படும் ‘ஒட்டெழுத்தும்’ உண்டு.
தீ – நெருப்பு
போ – போய் விடு
ஒலியழுத்தமும் பொருளும்
ஒலிப்பதில் அழுத்தம் தருவதைப் பொறுத்துப் பொருள் மாறுபடும்.
எதிர்மறைப் பொருள்
எள்ளல் பொருள்
வினாப் பொருள்
வியப்புப் பொருள்
என்று வெவ்வேறு வகையாக ஒலித்து ஒலியழுத்தத்தாலேயே பொருளை வெளிப்படுத்த முடியும்.
க், ச், ட், த், ப், ற் – இந்த ஆறு எழுத்துகளும் வல்லின மெய் எழுத்துகள்
ங், ஞ், ண், ந், ம், ன் – இந்த ஆறும் மெல்லின எழுத்துகள்.
ய், ர், ல், வ், ழ், ள் – என்னும் இந்த ஆறும் இடையின எழுத்துகள்.
உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும். க் + அ = க. இப்படி ‘க முதல் ன’ வரை உள்ள பதினெட்டு எழுத்தும் ‘அ’ கரத்தின் சேர்க்கையால் வந்த உயிர்மெய்கள். இதுபோலவே, க் + ஆ = கா என்றும், க் + இ = கி என்றும் சேர மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகள் (18 x 12 = 216) தமிழில் உள்ளன. ஃ என்று மூன்று புள்ளிகளே வடிவமாக அமைவது ஆய்த எழுத்தாகும். ஆய்தம் என்றால் நுண்மை என்று பொருள், இங்ஙனம் 247 எழுத்துகள் தமிழில் உள்ளன. இவ்வளவு மிகுதி எழுத்துகள் ஏன் என்று எண்ணுபவர் உண்டு. எழுத்துகளைச் சுருக்கும் வகையில் ‘எழுத்துச் சீர்திருத்தம்’ செய்யப்படுகிறது. ‘ஐ’ என்ற எழுத்து ‘அய்’ என்றே வழங்குகிறது. ‘ஒள’ என்ற எழுத்து ‘ஒளவையார்’ என்ற சொல்லை வைத்துத்தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. ‘அவ்’ என்றும் குறிப்பிடலாம் என்று கூறுவர். இவற்றில் சில எழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில் வரும், சில எழுத்துகள் சொல்லின் முடிவில் வரும், சில எழுத்துகள் இடையிலும் வரும். அதுபற்றி,
மொழிமுதலில் வரும் எழுத்துகள்
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்
மொழிக்கு இடையில் வரும் எழுத்துகள்
என்றும் வகைப்படுத்தலாம். புள்ளி வைத்த எழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில் வருவதில்லை. அதாவது, மெய் எழுத்துகள் முதலாக வரச் சொற்கள் அமையா என்ற ஒழுங்கு முறை தமிழுக்கு உண்டு.
1) உயிர் மெய்
2) ஆய்தம்
3) குற்றியலுகரம்
4) குற்றியலிகரம்
5) உயிரளபெடை
6) ஒற்றளபெடை
7) ஐகாரக் குறுக்கம்
8) ஒளகாரக் குறுக்கம்
9) மகரக் குறுக்கம்
10) ஆய்தக் குறுக்கம்
இவை பற்றிய விளக்கத்தினை அடுத்து அடுத்து வரும் பாடங்களில் படிப்பீர்கள்.
ஒரு செயல் நடைபெறுவதைக் குறிப்பது வினைச்சொல் ஆகும். செயல் நடைபெறும் காலம் நிகழ்காலம். செயல் முடிந்ததைக் கூறுவது இறந்த காலம். இனிமேல்தான் செயல் நடக்க உள்ளது என்பதைக் கூறுவது எதிர்காலம். வினைச்சொல் செயலைக் குறிக்கும், செயலின் காலத்தையும் குறிக்கும். படி, வா, போ, இரு, வாங்கு, கொடு, கொடுக்கிறான், கொடுத்தான், கொடுப்பான் என்பவை வினைச்சொற்கள்.
பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ அடுத்து வருவது இடைச்சொல்லும், உரிச்சொல்லும் என்று தொல்காப்பியம் கூறும். இடைச்சொல் பெரும்பாலும் இடையில் வரும்; தானாக வருவதில்லை. பெயரோடும், வினையோடும் வரும், உரிச்சொல் செய்யுளுக்கு உரியது. எல்லா இடங்களிலும் வராது. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளுக்கு உரியது உரிச்சொல் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
நீ – முன்னிலைப் பெயர்
அவன் – படர்க்கைப் பெயர்.
அதுபோலவே காலத்தை ஒட்டியும் வேறுபடும்.
பார்த்தாள் – இறந்தகாலம்
பார்க்கிறாள் – நிகழ்காலம்
பார்ப்பாள் – எதிர்காலம்
பெயர்ச்சொற்கள் திணை, பால் ஆகியவற்றை ஒட்டி அமையும்.
மனிதர், முருகன், வள்ளி, பெண் உயர்திணை
மாடு, புலி, புல், மரம், கல் அஃறிணை
அவன் ஆண்பால் சொல்
அவள் பெண்பால் சொல்
அவர்கள் பலர்பால் சொல்
அது ஒன்றன்பால் சொல்
அவை பலவின்பால் சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற இருவகைச் சொற்களுக்கும் அடிப்படையாக இருப்பது வேர்ச்சொல் ஆகும். ‘மலர்’ என்பது அடிச்சொல். இதுவே மலர்கள், மலரை, மலர்க்கு என்று அமையும்போது பெயர்ச்சொல் ஆகின்றது. மலரும், மலர்ந்தது என்று வரும்போது வினைச்சொல் ஆகின்றது.
வினையை அல்லது செயலைக் குறிப்பது வினைச்சொல் ஆகும்.
நான் எழுதினேன்
அவன் கட்டினான்
என்று வினைச்சொல் மூலம் செயலை அறியலாம். ஒருவர் செயலைத் தானே செய்தாரா, அல்லது பிறரைக் கொண்டு செய்யச் சொன்னாரா என்பதையும் வினைச் சொல்லில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
கோயில் கட்டினான் – செய் வினைச்சொல்
கோயில் கட்டப்பட்டது – செயப்பாட்டு வினைச்சொல்.
ஒரு செயல் முடிந்துவிட்டதா இன்னும் முடியவில்லையா என்பதையும் வினைச் சொல் உணர்த்தும்.
பெயர், வினைச்சொற்களோடு இணைந்து பொருள் வேறுபாடுகளை உண்டாக்கும் ஐ, ஆல், கு, இன், ஏ, ஓ, உம். போன்ற சொற்கள் உள்ளன. அவற்றை ‘இடைச்சொல்’ என்பர். இடைச்சொல் தனக்கு என்று பொருள் எதையும் பெற்றிருப்பதில்லை. பெயரையோ, வினையையோ சார்ந்துதான் இடைச்சொல் அமையும்.
கண்ணன் + ஐ = கண்ணனை – இடைச்சொல்
கத்தி + ஆல் = கத்தியால் – இடைச்சொல்
இராமன் + உடன் = இராமனுடன் – இடைச்சொல்
என் + ஓடு = என்னோடு – இடைச்சொல்
சீதை + கு = சீதைக்கு – இடைச்சொல்
அவள் + அது = அவளது – இடைச்சொல்
இவ்வாறு இடைச்சொற்கள் பொருள் வேறுபாட்டைத் தருவதால் ‘வேற்றுமை உருபுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. பண்பு, குறிப்பு, இசை, மிகுதி இவற்றைக் குறிக்கும் சொற்கள் உள்ளன. அத்தகைய சொல்லை ‘உரிச்சொல்’ என்று அழைப்பர். சால, உறு, தவ, நனி என்றெல்லாம் உரிச்சொற்கள் உள்ளன.
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
(திருக்குறள்-475)
சால – உரிச்சொல்; (பொருள் – மிகவும்)
உரிச்சொல்லின் பயன்பாடு பேச்சு வழக்கில் அதிகம் இல்லை. பண்டைக் கால இலக்கிய நூல்களில் உரிச்சொல் மிகுதியும் உள்ளது.
கிளி – கிள்ளை என ஒரு பகுதி திரிந்து போதல்
மயில் – மஞ்ஞை
திரிசொல்லை இரண்டு வகையாகத் தொல்காப்பியம் பகுக்கிறது. ஒரு பொருளைப் பற்றி வரும் பல சொல், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல் என்பனவே அவை.
மலை என்ற ஒரு பொருளைக் குறிப்பிட வெற்பு, விலங்கல், விண்டு என்று பல சொற்கள் வருவதும்.
எகினம் என்ற ஒரே சொல் அன்னம், கவரிமான், நாய் என்று பல பொருளைக் குறிப்பதும் இந்த இருவகைத் திரிசொல்லுக்குச் சான்று.
அந்நாளைய தமிழகத்தைச் சுற்றிப் பன்னிரு நாடுகள் இருந்தனவாம். அவை செந்தமிழ் சேர்நிலம் எனப்பட்டன. அந்நாடுகளில் வழங்கப்படும் சொல் திசைச்சொல் என்பது. அச்சொல் இடத்துக்கு இடம் வேறுபடும். பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு என்று பன்னிரு நாடுகளைச் சேனாவரையர் கூறுவார்.
ஆ, எருமை என்பவை ‘மாடு’களைக் குறிக்கும் சொற்கள். இவற்றைத் தென்பாண்டி நாட்டார் பெற்றம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
பெற்றம் என்பது திசைச்சொல். அது தென்பாண்டி நாட்டில் மட்டுமே இருப்பது. பிற இடங்களில் வழக்கில் இல்லாதது.
என்று திசைச்சொல்லுக்கும் சேனாவரையர் எடுத்துக்காட்டுத் தருகிறார்.
வடசொல் என்பது சம்ஸ்கிருத மொழிச் சொல்லைக் குறிக்கும். அதை அம்மொழி எழுத்தால் எழுதாமல், தமிழ், வடமொழி என்னும் இரண்டுக்கும் பொதுவான எழுத்தால் எழுதுவது வடசொல்.
தமிழ்ச் சொல் வடசொல்
கடல் - வாரி
மலை - மேரு
நாளடைவில் ‘கடல்’ என்ற தமிழ்ச் சொல்லும், ‘வாரி’ என்ற வடசொல்லும் கடலைக் குறிக்கப் பயன்படுவதாயின. தொல்காப்பியச் சொல் அதிகாரத்தில் இத்தகு பகுப்பு உள்ளது.
முன்னோர் மரபாகப் பயன்படுத்திய முறைப்படி, இப்படித்தான் பயன்படுத்தப்பட வேண்டும், நினைத்தபடி எல்லாம் சொல்லக் கூடாது என்ற வரையறை பெறும் சொற்கள் மரபுச் சொற்கள் ஆகும். குயில் கூவியது என்றுதான் கூற வேண்டும். கூவியது என்பது மரபுச்சொல், மயில் அகவியது; காகம் கரைந்தது; கோட்டான் குழறியது; கோழி கொக்கரித்தது; கிளி கொஞ்சியது என்று சொல்வதே மரபாகும். குயில் அகவியது என்றோ காகம் கத்தியது என்றோ கூறக் கூடாது. கீழே இடம் பெறும் மரபுச் சொற்களைப் பாருங்கள்.
யானை பிளிறியது
புலி உறுமியது
சிங்கம் கர்ச்சித்தது
குதிரை கனைத்தது
கழுதை கத்தியது
நாய் குரைத்தது
எருது முக்காரமிட்டது
விலங்குகள் எழுப்பும் ஒலியைக் குறிக்க எத்துணை மரபுச் சொற்கள் உள்ளன பாருங்கள்.
The dog is barking.
The lion is roaring.
The horse is neighing.
The donkey is braying.
போன்ற சொற்கள் ஆங்கில மொழியின் மரபுச் சொற்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்
பெயர், வினை பொதுச் சொற்கள்
ஒரே சொல், பெயராகவும் பயன்படும்; வினைஆகவும் பயன்படும். அந்தச் சொல் தொடரில் எப்படி வந்துள்ளது என்பதை வைத்துத்தான் அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்று தீர்மானிக்க முடியும். அப்படி வரும் பொதுச் சொற்கள் தமிழில் உள்ளன. அவை,
சொல் – பெயர் வினை
அடி – நீட்டல்அளவு, கால் அடிப்பாய்
அணி – நகை அணிந்துகொள்
இசை – பாடல் ஒலி இணங்கு
இறை – கடவுள் சிதறு
ஆண்பால் – பெண்பால் பெயர்ச்சொல்
பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். இது ஆண்பாலைக் குறிக்கும்போது ஆண்பால் பெயர்ச்சொல்; அதற்கு நேரான பெண்பாலைக் குறிப்பது பெண்பால் பெயர்ச்சொல் என்றமைகிறது.
அப்பன் – அம்மை
கணவன் – மனைவி
காதலன் – காதலி
மாணாக்கன் – மாணாக்கி
தோழன் – தோழி
சிறுவன் – சிறுமி.
எதிர்ச்சொல்
ஒரு சொல்லுக்கு நேர் எதிர்ப் பொருளைக் குறிக்கும் சொல் எதிர்ச்சொல் ஆகும். வா x போ; இல்லை x உண்டு; தீமை x நன்மை; குறை x நிறை; புண்ணியம் x பாவம் என்று எதிரெதிராக அமையும்.
அருஞ்சொல்
மக்கள் நாவில் அதிகம் வழங்காத சொல் அருஞ்சொல். இதற்கு விளக்கம் தந்தால்தான் எல்லாருக்கும் புரியும். இல்லாவிட்டால் விளங்குவது இல்லை.
கிளறும் – கிண்டும்
கேணி – கிணறு
ஒரு சொல்லைச் சொன்னவுடன் பொருள் புரிந்தால் அது எளியசொல், விளக்கினால்தான் புரியும் என்றால் அது அருஞ்சொல், ஒரு சொல் அருஞ்சொல்லா, எளிய சொல்லா என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். அவரவரைப் பொறுத்தே அமையும். என்றாலும் சில சொற்களுக்குப் பொருள் புரிய வேண்டுமானால் அகராதியைப் பார்த்தே தெளிய முடியும் என்ற நிலை உள்ளது. அகராதிப் பயிற்சி நம்மைச் சொல் வல்லுநர் ஆக்கும்.
இமையவர் – தேவர்கள்
விசும்பு – வானம்
ஏற்றம் – உயர்வு
நானிலம் – உலகம்
காமர் – விருப்பம்
ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் சேரும்போது எங்ஙனம் எல்லாம் மாற்றம் பெறும் என்பதை இலக்கண நூல்களின் ‘புணரியல்’ விதிகள் தெளிவுபடுத்துகின்றன.
கண்ணன் எழுவாய் (பெயர்ச்சொல்)
வந்தான் பயனிலை (வினைச்சொல்)
செயப்படுபொருள் இடம் பெறவில்லை என்பது குறிக்கத் தக்கது.
முருகன் வள்ளியை மணந்தான் - இத்தொடரில்
முருகன் எழுவாய்
வள்ளியை செயப்படுபொருள்
மணந்தான் பயனிலை
பெயருக்கு முன்னும், வினைக்கு முன்னும் அடைகள் அமைவது உண்டு. அவை பெயரடை, வினையடை எனப்படும்.
தன்வினைத் தொடர் – பிறவினைத் தொடர்,
செய்வினைத் தொடர் - செயப்பாட்டு வினைத்தொடர்,
உடன்பாட்டுத் தொடர் - எதிர்மறைத் தொடர்,
செய்தித் தொடர் - கட்டளைத் தொடர்,
உணர்ச்சித் தொடர் - வினாத் தொடர்.
என்று வகைப்படுத்தலாம். ஒரு தொடரை மற்றொரு வகைத் தொடராக மாற்ற முடியும்.
தன்வினை – பிறவினைத் தொடர்கள்
நான் நேற்று எழுதினேன். தன்வினைத் தொடர்
மாணவர்களை நான் நேற்று எழுத வைத்தேன். பிறவினைத் தொடர்
திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றினார். செய்வினைத் தொடர்
திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப்பட்டது. செயப்பாட்டு வினைத் தொடர்
இந்த வகுப்பில் சிலரே நன்றாகப் படிக்கின்றனர். உடன்பாட்டு வினைத் தொடர்
இந்த வகுப்பில் பலர் நன்றாகப் படிக்கவில்லை. எதிர்மறை வினைத் தொடர்
எவரும் வெற்றி பெற விரும்புவர். செய்தித் தொடர்
எவரே வெற்றி பெற விரும்பாதார்! உணர்ச்சித் தொடர்
வெற்றி பெற விரும்பாதார் யார்? வினாத் தொடர்
வெற்றி பெற்றே ஆக வேண்டும். கட்டளைத் தொடர்
தொடர் இலக்கணம்
கீழ்க்காணும் தொடரில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைப் பிரித்துக் காண்போமா?.
கண்ணன் என்னை நேற்றுச் சந்தித்தான்.
கண்ணன் – எழுவாய்
என்னை செயப்படுபொருள்
என் + ஐ
தன்மைப் பெயர் (என்) இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)
நேற்றுச் சந்தித்தான் – பயனிலை
நேற்று – வினையடை
சந்தித்தான் – இறந்த கால வினைமுற்று.
சொற்றொடர் – உறுப்புகளின் அண்மை உறவு
ஒரு தொடர் உருவாக மூன்று உறுப்புகள் வேண்டும். எழுவாய், பயனிலை ஆகிய இரண்டு உறுப்புகளாலும் கூடத் தொடர் உருவாகும் என்பதையும் அறிவோம் அல்லவா?.
இந்த உறுப்புகள் அண்மை உறவு பெற்றுத் தொடரும்போது தொடர் உருவாகிறது. இராமன் சீதையை மணந்தான் -இத்தொடரில்,
இராமன் – எழுவாய் மணந்தான் – பயனிலை சீதையை – செயப்படு பொருள் இப்படிச் சொற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து தொடர் உருவாகும் முறையைப் பரிசீலிப்பது தொடர்இலக்கணம் அல்லது தொடரியல் (syntax) ஆகும். இதுபற்றி விளக்கமாகப் பின்னர்ப் படிப்பீர்கள். இங்குத் தெரிந்து கொள்ள வேண்டுவது: தமிழில் ஒரே சொல் தொடராதல் உண்டு; சொற்கள் தொடர்ந்து தொடர் உருவாவது உண்டு. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பவற்றின் நெருங்கிய உறவுடைய சேர்க்கையே தொடர் எனப்படும். ஆகவே உறுப்புகள் அண்மை உறவு பெற்றுத் தொடர்வது தொடர். சொற்களின் தொகுப்பு எல்லாம் தொடர் ஆகிவிடாது. ‘இதனை அடுத்து இது வரும்’ என்ற தொடரமைப்பு விதிமுறைகள் உண்டு. தொடர்களை வெவ்வேறு வகைகளாக இனம் காணலாம். எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ், கவிதைத் தமிழ் இவற்றின் இடையே தொடர் அமைப்பில் சிறு வேறுபாடுகள் இருப்பது உண்டு.
‘வந்தேன்’ என்றாலே போதும், ‘நான் வந்தேன்’ என்று உணரலாம்.
தனித் தொடர் அமைப்பு, தொடர்களுக்கு இடையிலான தொடர்பு என்ற இரண்டும் இன்றியமையாதவை. தமிழ்ச் செய்யுளில் தனித் தனித் தொடர்கள் இடம் பெறுகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று திறம்பட இணைக்கவும் படுகின்றன. இருவர் நேருக்கு நேர் பேசிக்கொள்வது கருத்தாடல் ஆகும். ஒருவர் பேச மற்றவர் அமைதியாகக் கேட்பதும் கருத்தாடலே. கருத்தாடலில் தொடர் அமைப்பு நெறிகள் நெகிழ்வாகவே பின்பற்றப்படுகின்றன. ஆனால் ‘கருத்துணர்த்தல்’ முதலிடம் பெறுகிறது.
பாடம் - 3
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான
என்று நன்னூல் நூற்பா குறிப்பிடுகிறது. மொழியின் வரலாறு என்பது காலப் போக்கில் நேர்ந்த மாற்றங்களை ஆராய்வதுதான் என்று சுருக்கமாகக் கூறலாம்.
தமிழ்மொழி அக வரலாறு
தமிழ்மொழி அகப்புற வரலாறு
தமிழ்மொழி புற வரலாறு
இவ்வாறு பகுத்துக் கொண்டு நுணுக்கமாக ஆராயும்போது முழுமையான பார்வை கிடைக்கும்; தெளிவு பிறக்கும்.
எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
(தொல். எழுத்து. நூன்மரபு. நூ. 1)
எழுத்து என்பது தமிழில், ‘அ’ என்பதில் தொடங்கி ‘ன்’ என்பது வரையிலான முப்பது என்று தொல்காப்பியத்தின் முதல் நூற்பா வரையறுக்கிறது.
ஒளகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப
(மேலது. நூ. 8)
அகரம் முதல் ஒளகாரம் வரை உள்ள பன்னிரண்டும் உயிர் எழுத்துகள் ஆகும்.
னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப
(மேலது. நூ. 9)
ககரம் முதல் னகரம் வரை உள்ள பதினெட்டு எழுத்தும் மெய் எழுத்துகள் என அன்று செய்த வரையறை இன்றளவும் தொடர்வதை நீங்கள் படித்திருப்பீர்கள். வியப்பாக இருக்கிறது அல்லவா? இதுபோல் வரலாற்று நோக்கில் ஆராய்வதைத்தான் ‘தமிழ்மொழியின் அகவரலாறு’ என்று வசதிக்காக இப்பாடத்தில் வரையறை செய்யப்படுகிறது.
தொல்காப்பிய விதிப்படி ‘சகரம்’ எந்தவொரு சொல்லுக்கும் முதல் எழுத்தாக வராது (எழுத்து. மொழிமரபு, நூற்பா. 29). ஆனால் சிலப்பதிகாரத்தில் ‘சகடு, சண்பகம், சதுக்கம், சந்தனம், சந்தி, சதங்கை, சக்கரம், சகடம், சங்கமன் போன்ற சொற்கள் சகரத்தை முதல் எழுத்தாகக் கொண்டு இடம் பெற்றுள்ளன. அதேபோல் மணிமேகலையில் ‘சம்பாபதி, சரவணம், சனமித்திரன், சரண், சலம், சபக்கம், சண்பகம் போன்ற சொற்கள் உள்ளன. இவை போன்றவற்றை ஆராய்வது அகப்புற வரலாறு ஆகும்.
‘தண்ணீர்’, ‘நீர்’, ‘வெள்ளம்’ என்பன நீரைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். கடலில் மீன் பிடித்து வாழ்வதை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்களின் மத்தியில்,
ஏறிணி
வத்தொம்
கலக்கு
தெளிவு
பணிச்சல்
மிதாவது
சுரப்பு
மேமுறி
என்று ‘நீரைக் குறிக்கும் சொற்கள்’ இன்றும் புழக்கத்தில் உள்ளன. இதைப் பற்றி ஆய்வது புறவரலாறு எனல் பொருத்தம்தானே!
அதுசரி, தமிழ்மொழியை இப்படி எல்லாக் கோணங்களிலும், எல்லாக் காலக் கட்டங்களையும் முன்னிறுத்தி ஆராய்வதற்குச் சான்றுகள் வேண்டாவா? அவசியம் வேண்டும். மக்கள் எப்படிப் பேசினார்கள் என்பதை இன்று போல் கணினிக் குறுந்தகட்டில் பதிவு செய்யும் நிலை பழங்காலத்தில் இல்லை. என்றாலும் பிற வகைச் சான்றுகள் கிடைத்துள்ளன. பழங்காலத்திய கல்வெட்டுகள், இலக்கணங்கள், இலக்கியங்கள், உரையாசிரியர்கள், அகராதிகள்,அயல்நாட்டார் குறிப்புகள் முதலானவை தமிழ்மொழி வரலாறு அறிய உதவும் சான்றுகளாகத் திகழ்கின்றன.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அசோகர். அவர் காலத்துச் சமண, பௌத்த சமயங்கள் தென்னிந்தியாவில் பரவின. சமண, பௌத்த சமய நூல்கள் பிராகிருதம், பாலி மொழிகளில் இருந்தன. அவற்றின் எழுத்துகள் பிராமி வடிவில் இருந்தன. தமிழகத்தில் சமண, பௌத்தத் துறவிகள் குகைகளில் வாழ்ந்தனர். குகைகளில் உள்ள கல்வெட்டுகள் அத்துறவிகள் பொறித்தவை. எழுத்து பிராமி; மொழி தமிழ் என்பர். ஐராவதம் மகாதேவன், கே.வி. சுப்பிரமணியம், நாகசாமி போன்றோர், இவை ‘தமிழ் எழுத்துகள்’ என்கின்றனர். பொருள் கொள்வதிலும் பல விளக்கங்கள் உள்ளன. சான்றுக்கு ஒரே ஒரு குகைக் கல்வெட்டு வருமாறு:
அரிட்டாபட்டிக் கல்வெட்டு,
கணி இ ந தா ஸீரியகுல
வெள் அறைய் நிகமது
காவி தி இய் காழி திக அந்தைஅ
ஸதன் பிணாஊ கொடுபி தோன்
இதை மயிலை. சீனி. வேங்கடசாமி,
கணி நந்தாஸிரியற்கு
வெள்ளறை நிகமத்து
காவிதி காழிதி ஆந்தைய
ஸீதன் பிணாவு கொடுபித்தான்
என்று பிரித்து, ‘வெள்ளறை அங்காடித் தெருவில் வசிக்கிற காழிதி ஆத்தனுடைய மகன் கணி நந்தாசிரியற்கு ‘பிணாவு’ கொடுப்பித்தான்’ என்று பொருள் கூறுகிறார். ‘பிணா அல்லது பிணவு’ என்பதற்கு, பின்னப்பட்டது, முடையப்பட்டது, சாமரை, கற்படுகை’ என்று விளக்கம் தருகின்றனர். இருபத்தொரு இடங்களில் எழுபத்தொரு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொருள் கொள்வதில் வேறுபாடு இருந்தாலும், இவை பழந்தமிழுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
ஏகபோகம் – ஒரு பூ
தாம்பூலம் - சுருளமுது
கர்ப்பக்கிரகம் – உட்கோயில், அகநாழிகை
பரிவர்த்தனை – தலைமாறு
பரிவட்டம் – சாத்துக்கூறை
நைவேத்யம் - அமுதுபடி
அவிர்பலி – தீயெறிசோறு
கும்பாபிஷேகம் – கலசமாட்டுதல்
மெய்க்கீர்த்திகள்
மன்னன் இராஜராஜன் வெற்றிகளை எல்லாம் கல்வெட்டுகளில் குறிப்பிட்டு, ‘மெய்க்கீர்த்தி’ என்று வெற்றிச் சிறப்பைப் பதியும் முறைக்கு வித்திட்டான். இம் மெய்க்கீர்த்திகளின் தொடக்கத்தை வைத்தே யார் காலத்தவை என்று கூறுமளவிற்கு மொழி அமைப்புக் காணப்படுகிறது.
அரசன் பெயர் மெய்க்கீர்த்தி – தொடக்கம்
1) முதலாம் இராஜராஜன் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி
2) முதலாம் இராஜேந்திரன் திருமன்னி வளர இருநிலமடந்தையும்
3) இராஜாதிராஜன் திங்களேர் தருதன் தொங்கல்
4) இரண்டாம் இராஜேந்திரன் திருமாது புவியெனும்
5) வீரராசேந்திரன் வீரமே துணையா
6) அதிராசேந்திரன் திங்களேர் மலர்ந்தது வெண்குடை
7) முதலாம் குலோத்துங்கன் திருமன்னி விளங்கு
8) விக்கிரம சோழன் பூமாது புணர
9) இரண்டாம் குலோத்துங்கன் பூமன்னு பதுமம்
இவ்வாறு தெளிவான மொழி அமைப்பைக் காணலாம். உறுதி மிக்க சான்றாகக் கல்வெட்டுகள் விளங்குகின்றன.
கல்வெட்டுகளில் நீண்ட கோடு நெட்டுயிரையும் குறுகிய கோடு குற்றுயிரையும் குறிக்கின்றன. நெடில், குறில் வேறுபாடு இல்லை
மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தப் படவில்லை.
என்று குகைக் கல்வெட்டுகள் பற்றிக் கூறலாம். உடம்படுமெய் இல்லாமல் உயிரெழுத்துகள் தொடர்ந்து எழுதப்படும் முறை பின்பற்றப்பட்டுள்ளது.
சான்று :
கோ இலுக்கு – (கோயிலுக்கு)
ஆஇரம் - (ஆயிரம்)
கைஇல் – (கையில்)
என்றே அமைந்துள்ளது என்றும் அறிய முடிகிறது. அல்லவா? (‘ய்’ என்பது உடம்படுமெய். இது இல்லாமல் எழுதப்பட்டுள்ளது)
அகழ்வாய்வுச் சான்று
அகழ்வாய்வில் கிடைக்கும் சான்றுகள் கூடத் தமிழ் மொழி வரலாற்றை அறியப் பயன்படுகின்றன. அரிக்கமேடு என்னும் இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் அகல் விளக்கு ஒன்று கிடைத்தது. அதில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் வருமாறு:
அகல் விளக்கு
முதிகு ழுர அன் அகல்
இதில் முதுகுழுரன் என்பது ஒருவரது பெயர். அகல் என்பது அகல் விளக்கு. முதுகுழூரன் என்பவருடைய அகல் என்று பொருள் கூறுகின்றனர்.
முதிகுழூரன் என்பது முதிகுழுர அன்
என்று எழுதப்பட்டுள்ளது என்பர். கல்வெட்டுகளில் அதை எழுதியவரது நடை இருக்கலாம். சாசனங்களில் செல்வாக்குடன் விளங்கிய மொழிநடை இருக்கலாம். மேலும் அக்காலத்திய பேச்சு நடையில் பயின்று வந்த பிறமொழிச் சொற்கள் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. அச்சொற்கள் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டவை என்று மதிப்பிடுவது கடினம் என்பார் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
(தொல். எழுத்து. நூன் மரபு-15)
உட்பெறு புள்ளி உரு ஆகும்மே
(தொல். எழுத்து. நூன் மரபு-14)
……………………….. ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும்…………….
(தொல். எழுத்து. நூன்மரபு-2)
என்று அந்நூல், வரி வடிவத்துக்கு இலக்கணம் கூறுகிறது.
அ, இ, உ, எ, ஒ………….ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து
(மேலது. 3)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ ஓ, ஒள….. ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து
(மேலது. 4)
என்று குறிலுக்கும், நெடிலுக்கும் உச்சரிப்பு அளவு வரையறுப்பதில், ‘பேச்சு மொழி – ஒலி அளவு’ கூறுகிறது. தமிழ் மொழியின் கட்டமைப்பை விவரிக்கும் முழு இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்துக்கு முன்னரே இருந்த தமிழ்மொழி, அதன் அமைப்பு, தமிழ் இலக்கியங்கள், புலமை வல்லார் பற்றிய அனைத்துத் தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இதற்குப் பின் இலக்கண நூல்கள் பல தோன்றியுள்ளன. அவை முழுமையானவையாகத் திகழவில்லை என்றாலும் வெவ்வேறு காலத்திய தமிழைப் பற்றி அறியவும், ஆராயவும் உதவுகின்றன. அவ்வகையில் நேமிநாதம், வீரசோழியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் சோழர்கால மொழியமைப்பைப் பற்றி ஆராய உதவுகின்றன. முத்துவீரியம் சிற்றிலக்கியக் கால மொழி அமைப்பைப் புலப்படுத்துகிறது. 1680 இல் கோஸ்டா பால்த்சரா என்பவர் இலத்தீன் மொழியில் எழுதிய தமிழ் இலக்கண நூல், கால்டுவெல் எழுதிய, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல், சீகன் பால்கு எழுதிய தமிழ் இலக்கண நூல், வீரமாமுனிவர் எழுதிய தமி்ழ் இலக்கண நூல் முதலியன அந்நியர் வருகைக்குப் பின் தமிழ்மொழி அமைப்பைப் பற்றிப் புலப்படுத்துகின்றன. தமிழ்மொழியில் நேரிட்ட மாற்றம், வளர்ச்சி போன்றவற்றை இவற்றின் துணை கொண்டு ஆராய்ந்து அறிய முடியும்.
சான்றாகத் தொல்காப்பியத்தில் நிகழ்காலத்தைக் குறிக்க இடைநிலை ஏதும் சொல்லப்படாமல் இருப்பதையும், நன்னூல் என்னும் இடைக்கால இலக்கண நூலில்,
கிறு – வருகிறான்
கின்று – வருகின்றான்
ஆநின்று – வாராநின்றான்
என்று மூன்று நிகழ்கால இடை நிலைகள் சொல்லப்பட்டிருப்பதையும் காட்டலாம். இது போல் அந்தந்தக் காலத்திய மொழியமைப்பை இலக்கண நூல்கள் விளக்க முற்படுவதால் அவை மொழி வரலாற்றுக்கு உதவும் சான்றுகளாகின்றன.
வகர எதிர்கால இடைநிலை பெறுவன மெல்வினை.
பகர எதிர்கால இடைநிலை பெறுவன இடைவினை
ப்ப் என்ற ஈரொற்றைப் பெறுவன வல்வினை.
என்கிறார். இதுபோல் பேச்சுத் தமிழைத் துல்லியமாகப் பரிசீலித்து எழுதப்பட்டுள்ள இடங்கள் பெரிதும் உதவுவன. இவ்விலக்கணங்கள் முழுமையானவை அல்ல. செம்மையானவையும் அல்ல; அயல்நாட்டார் புரிந்துகொண்ட வரையில் எழுதியவை என்ற அளவில் சான்றுகளாகக் கொள்ளத் தக்கவை.
உண்டான், உண்ணாநின்றான் உண்பான்
என்பவற்றைச் சேனாவரையர் தருகின்றார் பிற உரையாசிரியர்களும் இவ்வாறே தருகின்றனர். ஆனால் தமிழ்மொழி வரலாற்றில் சங்க காலத் தொகை நூல்களில் இறந்தகாலம் வினைச்சொற்களில் தெளிவாக அமைந்துள்ளது. எதிர்காலம் தெளிவாக அமைந்துள்ளது. ஆனால் நிகழ்காலம் அமைந்திருக்கவில்லை. எதிர்காலமும், நிகழ்காலமும் இணைந்து அமைந்திருக்கலாம். நிகழ்காலம் பற்றிய தெளிவு உரையாசிரியர் கால வளர்ச்சியாக இருக்கலாம். அது போலவே தொல்காப்பியர் வியங்கோள் வினைமுற்றுக்கு ஈறு (ஈறு-இறுதியில் வரும் எழுத்து) கூறவில்லை. உரையாசிரியர்கேளா ஈறுகளைக் குறிப்பிடுகின்றனர்.
இளம்பூரணர், தெய்வச்சிலையார் வியங்கோள் வினைமுற்று ஈறு – க
சேனாவரையர் க, யா, அல்
நச்சினார்க்கினியர், கல்லாடர் க, யா, அல், ஆல், ஆர், மார், உம், று
இவ்வாறு உரையாசிரியரது உரைகள் அவர்களது கால மொழியமைப்பை விளக்குகின்றன. அதனால் அவற்றை மொழி வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழ் அகரமுதலி தயாரிப்பிலும் ஞா. தேவநேயப் பாவாணர் சிறப்பிடம் பெற்றவர். கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரை முயற்சிகள் தொடர்கின்றன. இவற்றிலிருந்து சொற்களின் பொருள் மாற்றத்தை அறியலாம். வேற்று மொழிகளில் எழுத்துப் பெயர்ப்புச் செய்யப்பட்டிருப்பதால் தமிழ்ச் சொற்களின் ஒலியமைப்பை ஓரளவு அறியலாம். சொற்பொருளியல் ஆய்வுக்கு
ஞா. தேவநேயப்பாவாணர்
அகராதிகள் பெருமளவு உதவுகின்றன. சான்றாக, சொற்கள் பொருளில் அடையும் மாற்றங்களைப் பழந்தமிழ் என்ற நூலில் பேராசிரியர் இலக்குவனார் கீழ்க்கண்ட சான்றுகளின் மூலம் காட்டுவதைக் காணலாம்.
சொல் பழம்பொருள் புதுப்பொருள்
அகம் உள், மனம் கர்வம்
இறத்தல் கடத்தல் சாதல்
கண்ணி மாலை வலை
கிழவன் உரியவன் முதியவன்
கோடை மேல்காற்று வெயில் காற்று
மணிவிழா அழகிய விழா அறுபதாண்டுவிழா
இவ்வாறு மொழியில் சொற்களுக்குத் தோன்றும் புதுப் பொருளை அறியலாம். மொழியில் தோன்றிய புதுச் சொற்களைப் பரிசீலிக்கலாம். புதுச் சொல் அமைப்புகளை ஆராயலாம். இவற்றுக்கெல்லாம் வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்வதில் நிகண்டுகளுக்கும் அகராதிகளுக்கும் தக்க இடம் உண்டு.
சான்றாக, வகரம் உ, ஊ, ஒ, ஓ என்னும் உயிர்கள் தவிர ஏனைய எட்டு உயிர்கேளாடு சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் என்கிறது தொல்காப்பியம். அவ்வாறே, சங்க இலக்கியத்தில்,
வடுகர் - நற்றிணை 212
வாடை - நற்றிணை 5
விரல் – அகநானூறு 34
வீரர் - அகநானூறு 36
வெகுளி – பொருநராற்றுப்படை 172
வேந்தன் – அகநானூறு 24
வையை – மதுரைக்காஞ்சி 356
என்று வந்திருப்பதைச் சொல்லலாம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க காலத் தமிழ்மொழி அமைப்பைச் சுட்டுகின்றன. நாலடியார் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலமாகிய களப்பிரர் காலத் தமிழ்மொழி அமைப்பைப் புலப்படுத்துகின்றன. தேவாரம், திருவாசகம், நாலாயிரத்திவ்விய பிரபந்தம் முதலான நூல்கள் பல்லவர் காலத் தமிழ் மொழியமைப்பை விளக்குகின்றன. கம்பராமாயணம், பெரியபுராணம் முதலியன சோழர் காலத் தமிழ்மொழி வரலாற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. பிள்ளைத்தமிழ், உலா, குறவஞ்சி, பரணி முதலியனவற்றின் மூலம் நாயக்கர் காலத் தமிழ்வரலாறு அறியலாம். புதினங்கள், சிறுகதைகள் இக்கால மொழி வரலாற்றை அறியச் சான்றுகளாகின்றன. விளக்கமாக, தனித்தனிப் பாடங்களாகவே நீங்கள் இவற்றைப் படிப்பீர்கள். இவற்றின் வரிவடிவம் ஒலிப்பு முறையைக் காட்டப் போதுமானதாக இல்லை.
பேச்சுத் தமிழ் பொருள்
அடைக்காய் - பாக்கு
வெள்ளிலை – வெற்றிலை
சம்பாரம் – சாக்கு
விதனம் - செய்தி
மன்னாப்பு - மன்னிப்பு
கலனை – சீனி
பேச்சு நடையில் எழுதப்படும் இலக்கியங்களும் மொழி வரலாற்றை அறிய உதவும். ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு நாவல் சென்னைப் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் என்னும் நாவல், குமரி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் பேச்சு வழக்கில் உள்ளது. அந்தந்த வட்டாரப் பேச்சுத் தமிழ் அமைப்பை அறிய இவை உதவுகின்றன.
மார்க்கோபோலோ ராபர்ட் – டி- நொபிலி
வீரமாமுனிவர்
பாடம் - 4
1) இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம்
2) இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பம்
3) திராவிட மொழிக் குடும்பம்
இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம்
இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தில் உள்ள சில முக்கிய மொழிகள் பஞ்சாபி, சிந்தி, ஹிந்தி, உருது, பிகாரி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, அசாமி, வங்காளி, ஒரியா, பஹரி, காஷ்மீரி, சமஸ்கிருதம் என்பன. இந்திய மக்களில் சுமார் 74 விழுக்காட்டினர் இம்மொழிகளைப் பேசுகின்றனர்.
இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்
இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலமே இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உயர்கல்வி நிலையில் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, போர்த்துகீசிய மொழிகள் பாண்டிச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் பேசப்படுகின்றன.
திராவிட மொழிக் குடும்பம்
திராவிட மொழிக் குடும்பம் இந்தியாவின் இரண்டாவது பெரிய மொழிக் குடும்பம் ஆகும். இந்திய மக்களில் 25 விழுக்காட்டினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை. தொன்மையும், இலக்கியச் செழுமையும் மிக்க தமிழ்மொழி மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளுள் நகலி, பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் ஏட்டளவிலேயே உள்ளன. சமஸ்கிருதமொழி ஏட்டளவில் உள்ளது. சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினரால் பேசப்படுகிறது. இந்நாட்டில் பல்வேறு இனத்தினர் வாழ்கின்றனர். பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். என்றாலும் மொழிகளுக்கிடையே பல பொதுமைப் பண்புகள் இழையோடும் நிலை அறியப்பட்டது. மொழிகளுக்குள் காணப்படும் ஒத்த சொற்களும், மொழிகளின் இலக்கணக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமைக் கூறுகளும் அறிஞர்களை வியக்க வைத்தன. முறைப்படி ஆராயத் தூண்டின.
தனிநபரின் தாய்மொழி எது?
தனிநபர் பேசும் மொழி எது?
என்ற தகவலும் சேர்க்கப்பட்டது. 1881இல் நடந்த முதல் குடி மதிப்பீட்டுக் கணக்கெடுப்பில் இத்தகவல்களும் திரட்டப்பட்டன. புதுப்புதுச் செய்திகள் கிடைத்தன. இந்திய மொழிகள் பற்றிக் கிடைத்த செய்திகளை முழுமைப்படுத்த ஒரு தனித் திட்டம் தீட்டப்பட்டது. அது இந்திய மொழிகளின் கள ஆய்வுத் திட்டம் (Linguistic Survey of India) என்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அது 1898இல் தொடங்கப்பட்டது. 29 ஆண்டுகள் கள ஆய்வு நடந்தது. சர். ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் (Sir George Abraham Grierson) என்பவர் இத்திட்டத்தின் இயக்குநர். இதன் அறிக்கை 1927இல் வெளியானது. அவ்வறிக்கையில் அன்றைய இந்தியாவில் 1595 மொழிகள் வழங்கியமை பற்றிய தகவல்கள் தரப்பட்டிருந்தன.
அவை
பேசப்பட்ட மொழிகள் 179
கிளைமொழிகள் 544
பின் இணைப்பில் இடம் பெற்ற மொழிகள் 872
இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்படுகின்றன என்று 1961ஆம் ஆண்டின் குடி மதிப்பீட்டுக் கணக்கெடுப்புக் கூறுகிறது. திராவிட மொழிக் குடும்பத்தில் 30 மொழிகள் உள்ளன. இந்திய மக்களில் 24.47 விழுக்காட்டினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர் என்கிறது அவ்வறிக்கை.
மக்களிடையே வழங்கிய மொழிகளைப் பரிசீலித்தல், ஒவ்வொரு மொழிக்கும் இடையிலான தொடர்புகளை அறிதல், வடமொழியுடன் ஒத்துள்ளதா, வேறுபடுகிறதா என்று இனம் காணல் என்னும் நிலைகளில் வெவ்வேறு காலக் கட்டத்தில் வெவ்வேறு மொழி ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள், நிறுவிய கருத்துகள்தாம் திராவிட மொழிகள் பற்றிய முழு அளவிலான ஆய்விற்குத் தளம் அமைத்தன.
Dr.கால்டுவெல்
கி.பி. 1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலைக் கால்டுவெல் வெளியிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை என்று கால்டுவெல் அழைக்கப்படுகிறார். அவருக்கு முந்தைய ஆய்வாளர்தம் முயற்சிகளைச் சற்றே காணலாம்.
ஆந்திர – திராவிட பாஷா என்ற பெயரில் தென்னிந்திய மொழியினத்தைக் குமாரிலபட்டர் குறிப்பிட்டுள்ளார். இவர் வடமொழி அறிஞர்; கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
திராவிடர் என்று தென்னிந்திய மக்கள் மனு சுமிருதியில் சொல்லப்பட்டுள்ளனர் என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
இரவீந்திரநாத தாகூர் எழுதிய தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் பரந்த பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. தென்னிந்திய மொழி இனத்தையும் மக்களையும் சுட்டுவதற்குத் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.
ராஸ்க் என்பவர் வடமொழியை ஆராய்ந்தார். பல சொற்களைப் பட்டியலிட்டார். அவை வடமொழிச் சொற்கள் அல்ல என்றும், ‘மலபார் சொற்கள் அவை’ என்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெரிவித்த கருத்து, வடமொழி – திராவிட மொழிகளுக்கிடையிலான வேறுபாடுகளைப் பரிசீலிக்க வழி செய்தது எனலாம்.
தென்னிந்தியாவில் வழங்கிய மொழிகள் ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று கி.பி. 1844இல் கிறித்தவ லாசர் என்பவர் சுட்டிக் காட்டினார்.
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகள் வட இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டவை. அவை ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று செராம்பூரில் சமயப் பணி செய்து கொண்டிருந்த கிறித்தவப் பாதிரியார் வில்லியம் கேரி (William Carey) நிறுவினார்.
எச்.பி. ஹாட்சன் (
டாக்டர் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்
கி.பி. 1856இல் கால்டுவெல் இம் மொழிகளைத் திராவிடம் என்ற பெயரில் குறிப்பிட்டார். இவை ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தோ ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடையன அல்ல என்று நிறுவினார். திராவிட மொழிகள் சில பண்பட்ட மொழிகளைக் கொண்டவை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பன பண்பட்ட திராவிட மொழிகள். தோடா, கோடா, கோண்டு, கூ என்பன பண்படாத திராவிட மொழிகள் என்று கருதினார். 1875இல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் திருந்திய பதிப்பை வெளியிட்டார். அதில் கொடகு மொழி திருந்திய திராவிட மொழி என்று குறிப்பிட்டார். ராஜ்மகால், ஒரோவோன் ஆகியன திருந்தாத திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டார். திராவிட மொழிகளுக்கும், சித்திய மொழிகளுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும் என நினைத்தார். பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவற்றின் வளமை, வளமைக் குறைவின் அடிப்படையில் அவர் திருந்திய மொழி (Cultivated Language), திருந்தாத மொழி (Uncultivated Language) என்று வரையறுக்க முயன்றார். அவர் காலத்தில் வசதிகளும், வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன. திராவிட மொழிகளில் அவர் செய்த ஆய்விற்கு அவர் டாக்டர் பட்டம் பெற்றார். ‘கால்டுவெல்லின் ஆய்வு தென் திராவிட மொழிகளைப் பற்றியது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பொது நிலையில் சுட்டுவதைவிடத் தென் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று அழைப்பது பொருத்தமானது’ என்பார் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். திராவிட மொழிகள் என்று ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை இனம் கண்டு பதிவு செய்த பணி கால்டுவெல்லின் பணியாகும்.
டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்ட திராவிட மொழிகள் 12 ஆகும். இந்திய மொழிகளின் கள ஆய்வுப் பணி இயக்குநர் கிரியர்சன், கொலாமி, நாய்கி ஆகிய மொழிகளும் திராவிட மொழிகளே. அவற்றையும் சேர்த்துத் திராவிடமொழிகள் 14 என்று குறிப்பிட்டார். குவி மொழியை ஆய்ந்தவர் பிட்ஜெரால்டு என்பவர். 1913இல் குவி மொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தார். 1964இல் ஜூல்ஸ்பிளாக் என்பவர் திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு (Structure Grammatical Des Languages Dravidiennes) என்னும் நூலை வெளியிட்டார். இது பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட நூலாகும். இவரது கருத்துகள் பலரால் பின்னர் மறுக்கப்பட்டன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் சர். தாமஸ் பரோ. 1950இல், பர்ஜி, பெங்கோ மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று அறிவித்தார். கலிபோர்னியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் எமனோ. அவர், தோடா மொழியை ஆய்ந்தவர். திராவிட மொழியியல் இனவியல் நாட்டுப்புறக் கதைகள் (Dravidian Linguistics, Ethnology and Folk Tales) என்று நூல் வெளியிட்டார். டாக்டர் பரோ, டாக்டர் எமனோ இருவரும் இணைந்து, திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதி (A Dravidian Etymological Dictionary) நூலைத் தயாரித்து வெளியிட்டனர். இந்திய, தமிழக அறிஞர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திராவிட மொழியியல் கழகம், இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகியவை திராவிட மொழியியலில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளன. இப்போது திராவிட மொழிகள் என முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் இனங்காணப் பட்டுள்ளன.
சான்று; வா+ந்+த்+ஆன் – வந்தான்.
வா - வினையடி
ந் - சந்தி
த் - காலம் காட்டும் உருபு
ஆன் - ஆண்பால் விகுதி
என்று அமையக் காணலாம். சொற்களின் முக்கியப் பகுதி வேர்ச்சொல் (Root Word), அடிச்சொல் (Basic Vocabulary) எனப்படும். திராவிட மொழிகளின் சொற்களைப் பரிசீலித்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
சான்று :
அடிச்சொல் – திராவிட மொழிகள்
கண் – தமிழ்
கண்ணு – மலையாளம்
கன்னு - தெலுங்கு
ஃகன் - குரூக்
கென் – பர்ஜி
திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.
மூன்று - தமிழ்
மூனு - மலையாளம்
மூன்னு - தெலுங்கு
மூறு – கன்னடம்
என்று அமைந்திருத்தலைக் காட்டலாம். திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகள், குறில், நெடில் என்றுள்ளன. இவை பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.
சான்று:
அடி – குறில்
ஆடி – நெடில்
வளி – குறில்
வாளி – நெடில்
தென் திராவிட மொழிகள்
நடுத் திராவிட மொழிகள்
வடக்குத் திராவிட மொழிகள்
என்று மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.
ஆயிடைத்
தமிழ்கூறு நல் உலகத்து
(தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் : 1-3)
என்று தொல்காப்பியப் பாயிரத்தில் தமிழ் வழங்கும் பகுதிகள் சொல்லப்பட்டுள்ளன.
வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று
அந்நான் கெல்லை
என்று காக்கை பாடினியார் என்னும் புலவர் தமிழ் வழங்கிய எல்லையினைக் கூறுகிறார். தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், வங்காள விரிகுடாவிற்கும் இடைப்பட்டுப் பழவேற்காடு முதல் குமரி வரை பரந்து கிடக்கும் நிலப்பகுதி தமிழ் வழங்கும் பகுதி என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். ‘இந்திய மொழிகளுள் சமஸ்கிருத மொழிக்கு அடுத்த நிலையில் பன்னாட்டு அறிஞர்களது கவனத்தைக் கவர்ந்த மொழியாகத் தமிழ் உள்ளது. பழங்காலத்தில் தமிழ் செவ்வியல் நிலையை எய்தியது. இது திராவிட நாகரிகத்தின் சிறப்பை உலகிற்குக் காட்டும் சான்றாக இந்தியா உள்ளது’ என்று குல்பெர்ட் சிலேட்டர் கூறுவார். ‘சங்கத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 26,350 வரிகள் உலகின் ஒப்புயர்வற்ற மொழி தமிழ் என்பதை நிலை நிறுத்துகின்றன’ என்று செக்கோசுலோவாக்கிய நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் தனது முருகனது சிரிப்பு (Smile of Muruga) நூலில் எழுதுகிறார். ‘தமிழ்மொழி கிரேக்க மொழியை விடப் பண்பட்டது. இலத்தீனை விட அழகானது. ஆற்றலிலும் முழுமையிலும் ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளுக்கு இணையானது’ என்று ஆங்கில இலக்கிய ஆக்ஸ்போர்டு துணைநூல் (Oxford Companion to English Literature 1992 p. 1021) குறிப்பிட்டுள்ளது. ‘இன்றுள்ள இந்திய மொழிகளில் செவ்வியல் மொழியாக அமைந்து அதே செழுமையுடன் தொடரும் ஒரே மொழி தமிழ்’ என்று தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஏ.கே. இராமானுஜம் குறிப்பிட்டுள்ளார். மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல மொழி தமிழ்மொழி. ‘திராவிட மொழிகளும் தமிழும்’ என்னும் அடுத்த பாடத்தில் தமிழ் பற்றி விரிவாகப் படிப்போம்.
மலையாள மொழி பால்காட்டும் விகுதிகளை (Pronominal Terminations) விலக்கியுள்ளது.
வடமொழிச் சொற்களை அதிக அளவு ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழில் ‘ஐ’ கார ஈற்றைக் கொண்டு முடியும் சொற்கள் மலையாளத்தில், ‘அ’ கர ஈற்றைப் பெறுகின்றன.
(எ.கா.)
தமிழ் – மலையாளம்
மலை – மல
மலையாள மொழிக்கு டாக்டர் குண்டர்ட் இலக்கண நூலும், அகராதியும் எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூற்றில் உள்ள சில பாடல்கள் சேரநாட்டில் உருவானவை. சேரநாட்டில் இன்று மலையாளம் வழங்குகிறது. முன்னர்த் தமிழ் வழங்கியது. இராமசரிதம் போன்ற தொன்மையான மலையாள இலக்கிய நூல்கள் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளன. பழைய மலையாள இலக்கியத்தில் பன்னிரண்டு உயிரும், பதினெட்டு மெய்யும் மிகுதியாக உள்ளன. பண்டைய மலையாள இலக்கியங்கள் தமிழைப் பின்பற்றி இருத்தலை டாக்டர் குண்டர்ட், டாக்டர் கே.எம். ஜார்ஜ் ஆகியோர் ஒப்புக் கொள்கின்றனர். மலபார் கடற்கரை சிறந்த துறைமுகமாகத் திகழ்ந்தது. கிரேக்கர், யூதர், போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் இவ்வழியே வந்து வாணிகத் தொடர்பு கொள்ள முடிந்தது. தென் திராவிட மொழிகளில் தமிழும், மலையாளமும் மிகப் பிற்காலத்தே பிரிந்தன. “தமிழுக்கும் மலையாளத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு” என்று எமனோ குறிப்பிடுவார்.
இருளா மொழி
இருளர்கள் பேசும் மொழி இருளா. நீலகிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் இருளர் ஆவர். இவர்கள் மலைதேச இருளர்கள் என்று குறிக்கப்படுகின்றனர். ஆனைமலைப் பகுதிகளிலும் இருளர்கள் வாழ்கின்றனர். வட்டக்காட இருளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பேராசிரியர் கமில் சுவலபில் இம்மக்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார். ஜெரார்ட் எப் டிப்லாத் (Gerard F. Diffloth), ஆர். பெரியாழ்வார் ஆகியோர் இருளா மொழியில் ஆய்வு செய்துள்ளனர். இருளா மொழியை 4617 பேர் பேசுகின்றனர். இது 1961இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். குறும்பர்கள், படகர்கள் ஆகியோருடன் இருளர்கள் இணைந்து பழகுகின்றனர். குறும்பா, படகா மொழிச் சொற்கள் இருளா மொழியில் அதிகமாகக் கலந்துள்ளன. இருளர்கள் ஒதுங்கி வாழ்கின்றனர்.
கொடகு மொழி
கொடகு மொழிக்கு என்று எழுத்து வடிவம் கிடையாது. கொடகு மொழியில் இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. மக்களிடையே வழங்கும் பேச்சு மொழியாக மட்டுமே கொடகு மொழி உள்ளது. ஏறத்தாழ 80,000 மக்கள் கொடகு மொழி பேசுகின்றனர். டாக்டர் மோக்லிங் (Mogling) என்பவர் கொடகு மொழி பற்றி ஆய்வு செய்தார். தமிழுடன் கொடகு மொழி நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதை அவர் குறிப்பிட்டார். பின் பேராசிரியர் எல்.வி. இராமசாமி ஐயர் கொடகு மொழியை ஆய்ந்து, அது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளுடன் கொண்டுள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். மேஜர் கோல் (R.A. Cole) கொடகு மொழியின் இலக்கணத்தையும், பல பாடல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். கொடகு மொழியின் தொன்மைப் பண்பு மாறாமல் உள்ளது. கொடகு மொழியின் உயிர் ஒலிகள் குறித்து எமனோ விரிவாக ஆராய்ந்துள்ளார். ஒரு பெண் பல ஆடவர்களை மணக்கும் பழக்கம் கொடகு மொழி பேசும் மக்களிடம் இருக்கிறது என்று டாக்டர். ஏ.சி. பர்னல் (A.C. Burnell) குறிப்பிட்டுள்ளார்.
கோடா மொழி
நீலிகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தினர் கோடர்கள் ஆவர். கோடர்கள் பேசும் மொழி கோடா மொழி ஆகும். ஏறத்தாழ 900 பேர் கோடா மொழியைப் பேசுகின்றனர். கூலி வேலை செய்து வாழும் எளிய மக்கள் கோடர்கள். “கன்னட மொழியின் கொச்சை மொழி போலக் கோடா மொழி காட்சி தருகிறது” என்று டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். எனினும் இம்மொழி தனிமொழி என்று இப்போது நிறுவப்பட்டு உள்ளது. கோடா மொழியை டாக்டர் எமனோ விரிவாக ஆராய்ந்துள்ளார்.
தோடா மொழி
நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் மற்றொரு பழங்குடி இனத்தவர் தோடர்கள் ஆவர். அவர்கள் பேசும் மொழி ‘தோடா’ மொழி ஆகும். பேராசிரியர் பெர்னாட் ஸ்கிமிட் (Bernard Schmid) என்பவர் கி.பி. 1837 இல் தோடா மொழியை ஆய்வு செய்தார். திராவிட மொழிக் குடும்பத்துடன் தொடர்பு உடைய மொழி தோடா மொழி என்று அவர் குறிப்பிட்டார். 800 பேர் தோடா மொழி பேசுகின்றனர். 1935-38 வரை பேராசிரியர் எமனோ இம்மொழி பற்றியும், இம்மொழி பேசும் மக்களைப் பற்றியும் ஆராய்ந்தார். தோடா மொழி பேசும் மக்களின் தொகை 600 என்று குறிப்பிடுகிறார். போதைப் பொருட்களை உட்கொள்ளும் வழக்கம் இம்மக்களிடையே உள்ளது. பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொல்லும் வழக்கமும் உள்ளது. ஆகவே இவர்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டனர் என்று கால்டுவெல் குறிப்பிடுவார். தோடர்களைப் பற்றி கர்னல் மார்ஷல் (Colonel Marshall) விரிவான நூல் ஒன்றினை எழுதியிருந்தார். பேராசிரியர் டபிள்யூ. எச். ஆர். ரிவர்ஸ் (W.
தோடர்களுடன் நெருங்கி வாழும் கோடர்கள், படகர்களுக்கும் கூடப் புரிந்து கொள்ள முடியாதபடி தோடா மொழி உள்ளது. இம்மொழியின் வினைமுற்றுகளில் பாலறி கிளவிகள் உள்ளன. தோடா மொழியின் இலக்கண அமைப்புகளில் பல பழந்தமிழுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளன. ர், ற் ஆகிய ஒலி வேறுபாடு திராவிட மொழிகளைவிடத் தோடாவில் மிகத் தெளிவாக உள்ளது.
படகா மொழி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்ப் பகுதிகளில் வாழும் படகர்கள் பேசும் மொழி ‘படகா மொழி’ ஆகும். படகா மொழி கன்னட மொழியின் வட்டார வழக்கு என்றே எண்ணினர். தற்பொழுது படகா மொழி தனிமொழி என்று கண்டறியப்பட்டுள்ளது. 70 ஆயிரம் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். படகா மொழி பற்றிப் பேராசிரியர் எமனோ ஆய்வு செய்தார். நீலகிரிப் பகுதியில் தோடர், கோடர் ஆகியோர் வந்து குடியேறிய பின் நீண்ட காலம் கழித்தே படகா மொழியினர் வடக்கிலிருந்து வந்து குடியேறினர். இவர்களின் மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்புடையது என்று எமனோ குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழ் இலக்கியத்தில் குறிக்கப்படும் வடுகர்களே படகர்கள் என்பது பலர் கருத்து. படகா மொழியை டாக்டர் ச. அகத்தியலிங்கம் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
துளு மொழி
துளு மொழியைத் திருந்திய மொழி என்று டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். துளு மொழிக்கு வரிவடிவம் இல்லை. இலக்கிய வளமும் இல்லை. பேசில் மிஷனைச் சார்ந்த பாதிரிமார்கள் (Basle Missionaries) துளு மொழியில் பல நூல்களை எழுதினர். அவற்றைக் கன்னட வரிவடிவில் அச்சிட்டனர். மைசூர் மாநிலத்தை அடுத்து ஓடும் ஆறுகள், ‘சந்திரகிரி’, ‘கல்யாணகிரி’ என்பன. அவ்விரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் துளு மொழி பேசப்படுகிறது. எனினும் இப்பகுதி மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர். அவற்றுள் துளுவும் ஒன்று. அவ்வகையில் 5.1 இலட்சம் மக்கள் துளு மொழி பேசுகின்றனர். துளு மொழிக்குப் பேராசிரியர் ஜெ. பிரிகல் (J.Brigal) இலக்கணம் எழுதியுள்ளார். ஏ, மார்னர் (A. Marner) துளு – ஆங்கில அகராதியை 1886 இல் வெளியிட்டார். ஆங்கில – துளு அகராதியை 1888இல் வெளியிட்டார். எல்.வி. இராமசுவாமி ஐயர் இம்மொழியில் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். பேராசிரியர் உபாத்தியாயா துளுமொழிக்குப் பேரகராதி (Lexicon) தயாரித்துள்ளார். “தென் திராவிடக் கிளையிலிருந்து துளு, கன்னடம், கோடா, தோடா, கொடகு, மலையாளம் என்பன படிப்படியாகப் பிரிந்திருக்க வேண்டும்” என்பார் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணியம்.
தென் திராவிட மொழிகளுடன் தெலுங்கு மொழியை இணைத்து ஆய்வது பழைய மரபு. ஆனால் தெலுங்கு நடுத் திராவிட மொழிகளுடன் சேர்க்கப்படுகிறது. அவ்வகையில் நடுத் திராவிட மொழிகளை,
தெலுங்கு – குவி கிளை நடுத் திராவிட மொழிகள்
கொலாமி – நாய்க்கி கிளை நடுத் திராவிட மொழிகள்
என்று இரு கூறுபடுத்துகின்றனர். தெலுங்கு-குவி கிளையில் தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய மொழிகள் உள்ளன. கொலாமி – நாய்க்கி கிளையில் பர்ஜி, கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகிய மொழிகள் உள்ளன. கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகியன தனிமொழிகள் அல்ல; ஒரே மொழியின் கிளைகள் என்றும் கூறுவர். கொலாமி, நாய்க்கி, பர்ஜி, கட்பா ஆகியன சில தனித் தன்மைகளைக் கொண்டுள்ளன. அவை தென் திராவிட மொழிகளிலிருந்து வேறுபட்டவை. சான்றாக, ‘ள’கர ஒலி நாய்க்கி தவிர ஏனைய மொழிகளில் இல்லை; ‘ட’கர ஒலி மொழி முதலில் வருகிறது. அஃறிணைச் சொற்கள் பன்மை உணர்த்த, பலவின்பால் விகுதி கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இவற்றைத் ‘தனிக் கிளை’ என்று பரோ, பட்டாச்சார்யா ஆகியோர் கூறுகின்றனர். பேராசிரியர் எமனோவும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
திரிலிங்கம் (மூன்று கோவில்கள்) என்ற சொல் திரிந்து ‘தெலுங்கு’ என்றானது.
‘தெனுகு’ என்றால் இனிமை. தெனுகு என்ற சொல் திரிந்து ‘தெலுங்கு’ என்றானது.
என்பர். தெலுங்கு மொழி வட இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டது என்று யுவான் சுவாங் (
கோண்டி மொழி
இந்தியாவின் நடுவில் கோண்டுவனம் எனும் காடுகள் உள்ளன. அக்காடுகளில் வாழும் மக்கள், கோயிதோர் ஆவர். கோயிதோர் பேசும் மொழி கோண்டி மொழி; 15 இலட்சம் பேரால் பேசப்படுகிறது. பேராசிரியர் ஆபிரகாம் லிண்ட் (Abraham A Lind), ஏ.என். மிட்சல் (A.N. Mitchell) ஆகியோர் கோண்டி மொழி பற்றி ஆய்வு செய்துள்ளனர். பேராசிரியர் சி.ஜி.செனிவிக்ஸ் டிரென்ச் (C.G. Chenegvix Trench) புனித வில்லியம்சன் ஹென்றி டிரம்மண்டு (Williamson Rev.
ஆந்திரப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் கோண்டா மொழி பேசப்படுகிறது. ஏறத்தாழ 13 ஆயிரம் மக்கள் கோண்டா மொழி பேசுகின்றனர். உசுமானியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.எச்.கிருஷ்ணமூர்த்தி கோண்டா மொழியின் இலக்கண அமைப்பைப் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கோண்டா மொழி என்ற தலைப்பில் இதன் இலக்கணத்தையும், சொல்லமைப்பினையும் ஆராய்ந்து பேராசிரியர் எஸ். பட்டாச்சார்யா நூல் எழுதி உள்ளார். பேராசிரியர் பரோ, பட்டாச்சார்யா ஆகியோர் தொகுத்த குறிப்புகள் இம்மொழி பற்றி அறிய உதவுகின்றன.
குயி மொழி
ஒரிசா மாநிலத்தில் உள்ள கோராபுத் மாவட்டப் பகுதிகளில் குயி மொழி பேசப்படுகிறது. ஏறத்தாழ ஒன்பது இலட்சம் பேர் குயி மொழி பேசுகின்றனர். குயி மொழியின் இலக்கணத்தைப் பேராசிரியர் டபிள்யூ.டபிள்யூ. வின்ஃபீல்டு (W.W. Winfield) எழுதியுள்ளார். பேராசிரியர் பெரிரா (J.E. Pereira) ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார். பரோ, பட்டாச்சார்யா இருவரும் குயிமொழி பற்றி ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி உள்ளனர்.
குவி மொழி
குவி மொழிக்கு கோந்த் மொழி என்றும் பெயருண்டு, குவி மொழி பேசுவோர் கோண்டுவனக் காடுகளிலும், ஒரிசாவில் உள்ள சில குன்றுகளிலும் வாழ்கின்றனர். குவி மொழி பேசுவோர் கோண்டர்கள், கந்தர்கள், கூ (ksus) என்றழைக்கப்படுகின்றனர். ஏறத்தாழ இரண்டு இட்சம் பேர் குவி மொழி பேசுகின்றனர். குவி மொழிக்கென்று வரி வடிவம் இல்லை. எழுதப்பட்ட இலக்கியங்களும் இல்லை. குழந்தைகளைத் திருடி வந்து தெய்வங்களுக்குப் பலி தரும் வழக்கம் இவர்களிடையே இருந்தது என்று அயல்நாட்டினர் குறித்துள்ளனர்.
பெங்கோ மொழி
பெங்கோ மொழியை ஏறத்தாழ 1300 பேர் பேசுகின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பெங்கோ மொழி ஒரு தனிமொழி என்று பேராசிரியர் பரோ நிறுவியுள்ளார்.
மண்டா மொழி
மண்டா மொழி பற்றிய எந்த ஆய்வும் இதுவரை நூலாக வரவில்லை. எனினும் பேராசிரியர்கள் பரோவும், பட்டாச்சாரியாவும் மண்டா மொழி குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
கொலாமி மொழி
மத்தியப் பிரதேசத்தில் கொலாமி மொழி பேசப்படுகிறது. ஏறத்தாழ ஐம்பது ஆயிரம் பேர் கொலாமி மொழி பேசுகின்றனர். பேராசிரியர் சேது மாதவராவ் 1950இல் கொலாமி மொழி இலக்கணம் பற்றி நூல் எழுதி வெளியிட்டார். பேராசிரியர் எமனோ 1955இல் கொலாமி மொழி பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதினார். வில்லியம் பிரைட் கொலாமி மொழி பற்றி ஆய்வு செய்துள்ளார். பேராசிரியர் பரோவும், பட்டாச்சார்யாவும் கொலாமி மொழியில் பல ஆய்வுகளைச் செய்துள்ளனர்.
நாய்க்கி மொழி
மத்தியப் பிரதேசப் பகுதிகளிலும், மகாராட்டிரத்திலும் நாய்க்கி மொழி பேசப்படுகிறது. ஏறத்தாழ 1500 பேர் நாய்க்கி மொழி பேசுகின்றனர். பேராசிரியர் பரோவும், பட்டாச்சாரியாவும் சேர்ந்து நாய்க்கி மொழி குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
பர்ஜி மொழி
மத்தியப் பிரதேசப் பகுதிகளில் பர்ஜி மொழி பேசப்படுகிறது. 19847 பேர் பர்ஜி மொழி பேசுகின்றனர். இம்மொழி பேசும் பகுதியின் மேற்கில் பஸ்தர் பகுதியும், கிழக்கில் கோராபுட் பகுதியும், வடக்கில் ஜகதல்பூர் பகுதியும், தெற்கில் ஜெய்ப்பூரும் அமைந்திருக்கின்றன. பேராசிரியர் கிரியர்சனின் மொழிநூலில் பர்ஜி மொழி குறித்து இரண்டு பக்கங்களில் தரப்பட்டுள்ளது. இம்மொழியைத் தவறுதலாகக் கோண்டி மொழியின் வட்டார வழக்கு என்று குறித்து விட்டனர். 1953இல் பேராசிரியர்கள் எமனோவும், பட்டாச்சாரியாவும் ஆய்வு செய்து பர்ஜி மொழி தனிமொழி என்று நிறுவினர். பர்ஜி மொழிக்கு நான்கு விதமான வட்டார வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிச் செல்கின்றனர்.
கட்பா ஒல்லாரி மொழி
ஒரிசாவிலும், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கட்பா மொழி பேசப்படுகிறது. கட்பா ஒல்லாரி மொழி பற்றிப் பேராசிரியர்கள் பரோ, பட்டாச்சார்யா ஆகியோர் 1957இல் ஆய்வு செய்து நூல் வெளியிட்டுள்ளனர்.
கட்பா சில்லூர் மொழி
ஒரிசாவிலும், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகிய இரண்டையும் ஒரே மொழியாகச் சிலர் கருதுவர். ஆனால் இவை தனித்தனி மொழிகள். கட்பா சில்லூர் பற்றிப் பேராசிரியர் பி.எச். கிருட்டிணமூர்த்தியும், பட்டாச்சார்யாவும் ஆய்ந்துள்ளனர். சிலர் இம்மொழியைத் தவறாகப் போயா என்றழைத்தனர் என்பர். கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகிய மொழி பேசுவோர் ஏறத்தாழ எட்டாயிரம் பேர் உள்ளனர்.
பிராகுயி மொழி
பலுச்சிஸ்தான் பகுதிகளில் பிராகுயி மொழி பேசப்படுகிறது என்று டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். டென்னிஸ் டி.எஸ். பிரே (Denys de Savmarez Bray) என்பவர் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது பிராகுயி மொழி என்று நிறுவினார். பேராசிரியர் எமனோ 1962இல் பிராகுயி மொழி வட திராவிட உட்பிரிவைச் சேர்ந்தது என்று விளக்கினார். திராவிட மக்களும், பிராகுயி மக்களும் ஒரே இனத்தவர் என்று கொள்ளச் சான்றுகள் இல்லை. எனினும் திராவிட மொழி பேசுவோரது கலப்பு இருக்க வேண்டும் என்று இராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுவார். பிராகுயி மொழி பாரசீக மொழியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கலத், ஹயர்பூர் மாவட்டங்களில் உள்ளவர்கள் பிராகுயி மொழி பேசுகின்றனர். ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் வாழ்வோர் பிராகுயி மொழி பேசுகின்றனர். இப்பகுதிகளில் பலுச்சி மொழி பெருவழக்காக உள்ளது. பிராகுயி மொழி பேசுவோர் எண்ணிக்கை மூன்று இலட்சம் என்றும், ஐந்து இலட்சம் என்றும் இரு வேறு கூற்றுகள் உள்ளன. பேராசிரியர் எமனோ பிராகுயி மொழி பற்றி ஆய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
மால்டோ மொழி
பீகார், வங்காளம் ஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள், மால்டோ மொழி பேசுகின்றனர். ஏறத்தாழ 90 ஆயிரம் பேர் பேசுகின்றனர். மால்டோ மொழிச் சொற்களைப் பேராசிரியர் பி.எச். ஹாட்ஸன் (B.
குரூக் மொழியை டாக்டர் கால்டுவெல், ‘ஒரோவன்’ மொழி என்று குறிப்பிட்டுள்ளார். பீகார், அசாம், வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் குரூக் மொழி பேசுவோர் உள்ளனர். 11.4 இலட்சம் மக்கள் குரூக் மொழி பேசுகின்றனர். கர்னல் டால்டன் (Colonel Dolton) எழுதிய வங்காள மக்களின் வரலாறு (Ethnology of Bengal) என்னும் நூலில் குரூக் மொழி பேசும் மக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. பட்சச் பாதிரியார் (Rev. F. Batsch) குரூக் மொழிக்கு இலக்கணம் எழுதியுள்ளார். பேராசிரியர் ஏ.கிரிக்நாட் (A. Grignard) 1924இல் குரூக் மொழி அகராதி ஒன்றையும், இலக்கணநூல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார். ஃபென்ட் ஹன் (Fend –
சான்று :
ஆங்கிலம், ஜெர்மனிய மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஐனு (Ainu), பர்சாஸ்கி (Burshaski) தனித்திருக்கும் மொழிகள்
பிட்கின் (Pidgin), கிரியோல் (Creole) கலப்பு மொழிகள்
எஸ்பெரான்டா, இன்டர்லிங்குவா திட்டமிட்டு உண்டாக்கப்பட்ட செயற்கை மொழிகள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பெருமொழிகளையும், கோண்டி, கூய், துளு, குரூக் போன்ற குறுமொழிகளையும், தென்னிந்தியா, பலுசிஸ்தானம் என்று இந்தியப் பகுதிகளிலும், அயலகத்திலும் வழங்கப்படும் நிலையிலும், மொழி அமைப்பில் பொதுத்தன்மை, அடிப்படை ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழிகள் என்று ஒரு குடும்பத்தினவாக, ‘திராவிட மொழிக் குடும்பமாக’ அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. திராவிட மொழிகள் குறித்து அறிகையில் அவற்றின் பரந்த புழக்கம் வியப்பளிக்கிறது. தமிழ்மொழி முதன்மை பெறுகிறது.
பட்டியல்
இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்த பதினெட்டுத் தேசிய மொழிகளது பட்டியல் வருமாறு:
1) அசாமி
2) வங்காளி
3) குஜராத்தி
4) இந்தி
5) கன்னடம்
6) காஷ்மீரி
7) மலையாளம்
8) மராத்தி
9) ஒரியா
10) பஞ்சாபி
11) சம்ஸ்கிருதம்
12) சிந்தி
13) தமிழ்
14) தெலுங்கு
15) உருது
16) கொங்கணி
17) நேபாளி
18) மணிப்பூரி
பாடம் - 5
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்து மொழிகளாகும். ஒரு குடும்பத்து மொழிகளை ஆராய்ந்தால், அவற்றுக்கிடையே ஒலி அமைப்பு, இலக்கணக் கூறு, சொற்கள் ஆகியவற்றில் ஒற்றுமை இருத்தலை உணரலாம்.
திராவிட மொழிச் சொற்கள்
வட இந்திய மொழிகளிலும் பல திராவிடச் சொற்கள் இன்றும் காணப்படுகின்றன. அவற்றைச் சுதேசிச் சொற்கள் என்று வடமொழி இலக்கண நூலார் கூறுவர். ஒரிய மொழியில் திராவிட மொழிச் செல்வாக்கு இருப்பதை ஓர் ஒப்பாய்வு புலப்படுத்துகிறது. இந்தியாவில் மட்டும் நான்கு மொழிக் குடும்பங்கள் பேசப்படுகின்றன. திராவிட மொழிக் குடும்பம் ஒன்றே முழுமையான இந்திய நாட்டு மொழிக் குடும்பம் என்று கருதும்படி உள்ளது. திராவிட மொழிகளுக்கு என்று பல தனித்தன்மைகள் உள்ளன.
சான்று : செய்தான் - இச்சொல்லில்
செய் - வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன்.
த் – இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன்
ஆன் - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன்.
எனவே, செய்+த்+ஆன் – என்று உருபன்கள் ஒட்டி நின்று ‘செய்தான்’ என்ற சொல் உருவாகிறது. அன், ஆன் முதலியன திணை, பால் உணர்த்தச் சேருவன. வி, பி முதலியன பிறவினை உணர்த்தச் சேருவன. கிறு, கின்று, ஆநின்று முதலியன காலம் உணர்த்தச் சேருவன. இவை சேரும் போது அடிச்சொல் சிதையாது. வேறுபடாது இருப்பது திராவிடமொழி இயல்பு ஆகும். உயிர் நீளல் அல்லது குறுகல் என்ற அளவில் சிறிதளவு வேறுபாடு மட்டுமே ஏற்படும். ஆனால் இந்தோ – ஐரோப்பிய மொழிகளில் அடிச்சொல்லுடன் பிற உறுப்புகள் சேரும் போது, அடிச்சொல்லும், சேர்ந்த சொல்லும் இவை இவை எனத் தனித்தனியே பிரித்துக் காண முடிவதில்லை. அவை சிதைந்து கலந்து பிரிக்க முடியாதனவாக மாறியுள்ளன. எனவே திராவிட மொழிகள் ஒட்டுமொழிகள் எனப்படுகின்றன.
சான்று:
தமிழ் – கண்
கன்னடம், மலையாளம் - கண்ணு
தோடா – கொண்
கொடகு – கன்னு
தெலுங்கு – கன்னு
பர்ஜி – கெண்
குரூக் – ஃகன்
எண்களைக் குறிப்பன எண்ணுப் பெயர்கள். இவை ஏறத்தாழ திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் ஒன்று போலவே அமைந்துள்ளன.
சான்று:
தமிழ் – மூன்று
மலையாளம் - மூணு
கன்னடம் – மூறு
தெலுங்கு – மூடு
சான்று: தன்மை இடப்பெயர்
யான், நான் – தமிழ்
ஞான், யான் - பழைய மலையாளம்
நானு – கன்னடம்
நேனு – தெலுங்கு
நாம், நாங்கள், யாம் தமிழ்
நாம், நோம் (சில இடங்களில்) மலையாளம்
நாவு, ஆம், ஆவு கன்னடம்
மேமு, மனமு ஏ, மூ (பழைய இலக்கியம்) தெலுங்கு
இவ்வாறே முன்னிலை, படர்க்கை ஆகியவற்றிலும் ஒற்றுமையைக் காணலாம்.
முன்னிலையை உளப்படுத்தாத பன்மை (Exclusive)
யாம், நாங்கள் - தமிழ்
மேமு – தெலுங்கு
முன்னிலையை உளப்படுத்தும் பன்மை (Inclusive)
நாம் – தமிழ்
மனமு - தெலுங்கு
பன்மையில் முன்னிலையாரை உளப்படுத்துவது, முன்னிலையாரை உளப்படுத்தாதது என்ற வேறுபாடு ஆங்கில மொழியில் இல்லை. We என்பது இருவகைக்கும் பொதுவாக உள்ளது.
சான்று:
ஆங்கிலம் தமிழ்
1. I saw the man who came வந்த மனிதனைப் பார்த்தேன்
the man who -இணைப்புச் சொல் வந்த – பெயரெச்சம்
2. I saw him who came வந்தவனைப் பார்த்தேன்
him who – இணைப்புச் சொல் வந்தவன் – வினையாலணையும் பெயர்
சான்று:
சில + அணி – சிலவணி – தமிழ்
வ் – உடம்படுமெய் தோன்றுதல்.
மணி + அழகு – மணியழகு – தமிழ்
ய் – உடம்படுமெய்.
தெலுங்கில், ‘ரகரம்’ ‘ககரம்’ உடம்படுமெய்யாக வருகின்றன.
சான்று:
பொத + இல்லு – பொதரில்லு (இலைவீடு) – தெலுங்கு
ர் – உடம்படுமெய்.
பத + ஒண்டு – பதகொண்டு – (பதினொன்று) – தெலுங்கு
க் – உடம்படுமெய்.
அறுவர் – தமிழ்
வ் – உடம்படுமெய்.
ஆறுகுரு – தெலுங்கு
க் – உடம்படுமெய்.
கூயி போன்ற திராவிட மொழிகளிலும் உடம்படுமெய் உள்ளது. வடமொழியில் இரண்டு உயிரும் சேர்ந்து ஓர் உயிராக மாறிவிடும் நிலை உள்ளது.
சான்று:
மட + அதிபதி – மடாதிபதி – வடமொழி
ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இவ்வாறு ஓர் உயிர், அடுத்து வரும் உயிரோடு இணைதல் உண்டு. தமிழில் ஓரிரு இடத்தில் இந்நிலை உண்டு.
சான்று: பரு+அரை- பராரை – தமிழ்
சான்று:
மது
மாது
திராவிட மொழிகளில் குறில், நெடில் வேறுபாடு இன்றியமையாததாக உள்ளது.
சான்று: நான் சிங்கத்தைப் பார்த்தேன்.
இதில் நான் என்ற எழுவாயை அழுத்தி ஒலித்தால், ‘நான்தான் பார்த்தேன் வேறு யாரும் பார்க்கவில்லை’ என்ற பொருள் கிடைக்கும்.
இதில் சிங்கத்தை என்னும் செயப்படுபொருளை எடுத்து ஒலித்தால், ‘நான் சிங்கத்தைத்தான் பார்த்தேன். வேறு எதையும் பார்க்கவில்லை’ என்ற பொருள் தொனிக்கும்.
இதில் பார்த்தேன் என்னும் சொல்லை எடுத்து ஒலித்தால், ‘நான் வேறு ஒன்றும் செய்யவில்லை. பார்க்க மட்டுமே செய்தேன்’ என்று பொருள் தரும்.
இது வாக்கிய ஒலியழுத்தம் ஆகும். நீ சொன்னது சரி என்பதை ஒலிப்பதன் மூலம், நீ சொன்னது சரி என்ற எளிய பொருள் கிடைக்கும். நீ சொன்னது சரியில்லை என்ற எதிர்மறைப் பொருளும் கிடைக்கும்.
அவன் வந்தான் என்பதை,
அவன் வந்தான்,
அவன் வந்தான்?
அவன் வந்தான்!
என மூவகைப் பொருள் வர ஒலிக்கலாம். அவன் வந்ததைக் கூறுவது முதல் வாக்கியம். அவன் வந்ததைக் கேட்கும் வினா வாக்கியம் இரண்டாவது, வியப்பைத் தெரிவிப்பது மூன்றாம் வாக்கியம். இவ்வாறு எதிர்மறைப் பொருள், எள்ளல் பொருள், வினாப் பொருள், வியப்புப் பொருள் உணர்த்தப்படுவது ஒலி வேறுபாட்டால் எனலாம். இது எழுத்தில் புலப்படுத்த இயலாதது. பேச்சில் இயல்பாய் அமைவது, எல்லாப் பேச்சு மொழிகளிலும் உண்டு.
த்வனி
ப்ரபாவம்
ச்ரிய கல்யாண்
முதலிய கூட்டொலிகள் வடமொழியில் உள்ளன. அத்தகு வடசொற்கள் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் உள்ளன. அவை இரவலே. அம்மொழிகளது இயற்கையான ஒலிகள் அல்ல. அச்சொற்களைத் திராவிட ஒலி அமைப்புக்கேற்ப அமைத்துக் கொள்ளும் மொழி தமிழ். தமிழில் பழைய திராவிட மொழியின் ஒலியமைப்பு அதிகம் மாறாமல் இருந்து வருகிறது.
சான்று:
State – இருமெய் முதலில் வரல்.
Strong – மூன்று மெய் முதலில் வரல்.
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இப்படி இரண்டு மெய்யும், மூன்று மெய்யும் சொல்லுக்கு முதலில் வருவது போல் தமிழில் வருதல் இல்லை. மெய் மற்றொரு மெய்யுடன் கூடி முதலில் வருதல் இல்லை. மெய் உயிருடன் கூடியே மொழிக்கு முதலில் வரும்.
எ.கா.
இங்க்லான்ட் இங்கிலாந்து ஆங்கிலச் சொல் தமிழ் ஒலிப்பு முறை பெறுதல்
க்றைஸ்ட் கிறிஸ்து – கிறித்து
எ.கா.
தத்வ தத்துவம் வடசொல் தமிழ்ஒலிப்பு முறை பெறுதல்
க்ருஷ்ண கிருட்ண – கிருட்டினன்
தமிழில் கூட்டொலிகள் குறைவு. பொருந்தா ஒலிகள் கூடுவதில்லை.
வடமொழி முதலான இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் நெடுஞ்சொற்கள் குறைவு. எனினும் எளிய ஒலியசைகள் அம்மொழிகளில் இல்லை. தமிழில் சொற்கள் நீண்டிருப்பினும் எளிதில் ஒலிக்கும்படி உள்ளன. வடசொற்கள், ஆங்கிலச் சொற்கள், பிற சொற்கள் எவையாயினும், தமிழ் ஒலிப்பு முறை பெறுவது தமிழுக்கே உரிய தனி இயல்பாகும்.
சான்று:
வா
கா
தீ
போ
நீ
ஆ
இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் அடிச்சொற்களைப் பிரித்தறிய முடிவதில்லை. திராவிட மொழிகளில் எளிதில் பிரிக்க முடியும். பொதுவாக அடிச்சொல்லுடன்,
1) ஒலிக்க உதவும் வண்ணம் ஒலித்துணையாகச் சேரும் சொற்கள்.
2) அடிச்சொல்லின் பொதுவான பொருளை, ஒன்றுக்கு உரியதாகச் சிறப்பாக உணர்த்தும் சொற்கள்.
3) திணை, பால், காலம், வேற்றுமை போன்ற இலக்கண வேறுபாடுகளை உணர்த்துவன.
என்று மூன்று வகைகளில் சொற்கள் சேருகின்றன.
தமிழிலும், கன்னடத்திலும், ‘உகரம்’ ஒலித்துணையாகச் சேர்கிறது.
சான்று:
கண் - கண்ணு – (உகரம் பெறுதல்)
மண் - மண்ணு - (உகரம் பெறுதல்)
சில – செலவு – (கன்னடம் – உகரம் பெறுதல்)
தமிழில் உயர்திணையில் ஒருவரை ஆண்பால் என்றும், பெண்பால் என்றும் பகுக்கும் நிலை உள்ளது. ஆனால் பலரை அவ்வாறு பகுத்தல் இல்லை. ஆண் பன்மை, பெண் பன்மை என்பன இல்லை. பலராக இருப்பின் ஆண், பெண் வேறுபாடு இன்றிப் பலர்பால் என வழங்குதல் உள்ளது. அது போலவே அஃறிணைப் பொருள்களுள் உயிருள்ள பொருள்களையும் ஆண்பால், பெண்பால் எனப் பகுத்தல் இல்லை. அவற்றை உயிரில்லாப் பொருள்களைப் போலவே ஒன்றன்பால், பலவின் பால் எனப் பகுப்பர்.
தெலுங்கிலும், கோண்டியிலும் மட்டும் ஒருத்தியை (பெண்ணை)க் குறிக்கும் போது அஃறிணை ஒன்றன்பாலாகக் குறிப்பர்.
சான்று:
அவள் வந்தாள் - தமிழ் – உயர்திணை – பெண்பால்
அதி வச்சினதி - தெலுங்கு – அஃறிணை – ஒன்றன்பால்.
அதுபோலவே, தோடர், கோடர் மொழிகளில் திணை, பால், எண் வேறுபாடு இல்லாத படர்க்கை இடப்பெயராகிய அதம், இதம் என்னும் சொற்களே அவன், அவள், அவர், அது, அவை, இவன், இவள், இவர், இது, இவை என்னும் யாவற்றையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
சான்று:
கை + ஆல் - கையால் – ஒருமை
கை + கள் + ஆல் - கைகளால் – பன்மை
‘ஆல்’ என்ற உருபே ஒருமைக்கும், பன்மைக்கும் பயன்படுத்தப்படுவதைச் சொல்லலாம். இங்ஙனம் திராவிட மொழியும், ஐரோப்பிய மொழியும் வேற்றுமை உருபு ஏற்கும் முறையில் வேறுபடுவதைக் காணலாம்.
‘ஆம்’ என்னும் பெயரெச்சம் சேர்த்து எண்ணுமுறை குறிக்கப்படுவதுண்டு.
சான்று:
இரண்டாம் ஆண்டு (ஆம் – பெயரெச்சம்)
மூன்றாம் வகுப்பு (ஆம் – பெயரெச்சம்)
ஆனால் ஒன்று என்ற பெயருடன், ‘முதல்’ என்னும் வேறு சொல்லையும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
சான்று:
முதல் ஆண்டு - தமிழ்
மொதட்டி - தெலுங்கு
‘ஆம்’ என்பதற்குப் பதில் தமிழில் ‘ஆவது’ என்பதும் சேர்த்து வழங்கப்படும்.
சான்று:
மூன்றாவது வீடு – தமிழ்
சான்று:
அடி – பெயர் – பாதம்
அடி – வினை – அடித்தல் செயலைக் குறிப்பது.
திராவிட வினைச்சொற்கள் பெரும்பாலும் ஒட்டுநிலை ஆக அமைந்தவை. தமிழில் வினைச்சொல் காலம், திணை, பால் முதலியவற்றை உணர்த்துவது உண்டு.
சான்று:
வந்தான் காலம் இறந்தகாலம்
திணை உயர்திணை
பால் ஆண்பால்
ஆங்கிலம் முதலிய மொழிகளில் இந்த நிலை இல்லை. has come, came, is coming என்பன காலத்தை மட்டுமே உணர்த்தின.
மேலும் வினைச்சொற்கள் திணை, பால் முதலியன உணர்த்தும் முறை திராவிட மொழிகளில் ஒன்றாகவே, ஒழுங்காகவே உள்ளது. ஐரோப்பிய மொழிகளில் இருப்பது போலப் பலவகை முறை இங்கு இல்லை.
திராவிட மொழிகளும், சித்திய மொழிகளும் முற்று, எச்சம் என இருவகை வினைப்பகுப்பைப் பெற்றுள்ளன. அவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூவகைக் காலம் உணர்த்துகின்றன. ஏனைக் காலங்களை உணர்த்தத் துணை வினைகளைப் பயன்படுத்துகின்றன. ஏவல், வியங்கோள் என்னும் அமைப்பைப் பெற்றுள்ளன.
திணை, பால், இடம் உணர்த்தும் பால்அறி கிளவிகள் மலையாளத்தில் மட்டும் இல்லை. கோண்டு போன்ற மொழிகளில் பாலறி கிளவிகள் சேர்வதில் ஒழுங்கின்மையும், சிக்கலும் காணப்படுகின்றன. ஆனால் தமிழில் ஒழுங்கும் தெளிவும் காணப்படுகின்றன.
வடமொழி போன்றவற்றில் வினைத்திரிபு முறைகள் பலவாகக் காணப்படுகின்றன.
தன்வினை பிறவினை ஆதல்
தன்வினை தமிழில் இ, தெலுங்கில் இசு (அ) இஞ்சு, கன்னடத்தில் இசு என்னும் விகுதிகளைச் சேர்ப்பதால் பிறவினை ஆகும்.
திராவிட மொழி தன்வினை பிறவினை
தமிழ் செய் செய்வி
தெலுங்கு செய் சேயிஞ்சு (செய்வி)
பிலிபி (அழை) பிலிபிஞ்சு (அழைப்பி)
கன்னடம் மாடு (செய்) மாடிசு (செய்வி)
ஐரோப்பிய மொழிகளில் பிறவினைப் பொருளை உணர்த்த வேண்டின், இரண்டும் பலவுமான சொற்கள் தொடர்ந்து நின்றே உணர்த்தும். ஆனால் திராவிட மொழிகளிலோ சொல்லினுள் சிறு மாற்றத்தாலேயே பிறவினைப் பொருளை உணர்த்த முடிகின்றது.
இரட்டைக்கிளவி வினை
திராவிட மொழிகளில் மினுமினுத்தது, கலகலத்தது போன்ற இரட்டைக் கிளவி வினைகள் பல உள்ளன. இவற்றில் இருமுறை வரும் சொற்களைப் பிரித்தால் பொருள் கெடும், இவை இரட்டிப்பாலேயே பொருள் தருகின்றன.
சான்று:
அது என்னால் உடைக்கப்பட்டது - ஐரோப்பிய மொழி மரபு.
அது உடைந்து போயிற்று - தமிழ் மரபு.
படு, உண் போன்ற துணைவினைகள் சேர்க்கப்படுகின்றன.
உடைந்தது – உடைக்கப்பட்டது – (படு – துணைவினை)
உடைபட்டது – (படு – துணைவினை)
கொலையுண்டான் - (உண் – துணைவினை)
கொலையுண்டது - (உண் – துணைவினை)
செயப்பாட்டு வினை திராவிட மொழிகளில் புதிதாகப் புகுந்தது. புதியதாகப் புகுந்த பின்னரும் செல்வாக்குப் பெறவில்லை என்பர். அதுபோலவே திராவிட மொழிகளில் எல்லா வினைச்சொற்களும் உடன்பாட்டு வினைகளே. எதிர்மறை உணர்த்தும் இடைநிலைகளைப் பெறுவதாலேயே அவை எதிர்மறை வினைகளாகின்றன.
சான்று:
வருவான் – வாரான்
செய்வேன் – செய்யேன்
செய்தான் – செய்திலன்
திராவிட மொழிகளில் வினைச்சொல் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
சான்று:
அவன், இவன்,
அவர், இவர்,
அது, இது தமிழ் – சுட்டுச் சொற்கள்
வாடு, வீடு,
வாரு, வீரு,
தா, தீ தெலுங்கு – சுட்டுச் சொற்கள்
எவன், எவள், எது – தமிழ் - வினாச்சொற்கள்
ஏவன், ஏவள், ஏது – மலையாளம் - வினாச்சொற்கள்
திராவிட மொழிகளில் எ அல்லது ஏ முதலிலும், ன் அல்லது ம் ஈற்றிலும் பெற்ற வினாக்கள் காணப்படுகின்றன.
என் – என்ன, என்னது? – தமிழ்
ஏன்? – தமிழ்
ஏன்? – மலையாளம்
ஏனு? – கன்னடம்
ஏமி? – தெலுங்கு
திராவிட மொழிகளில் ஆ, ஈ என்னும் நெடில்களே சுட்டுகளாக வழங்கப்படுகின்றன. தெலுங்கில் ஆ, ஈ பெரும்பான்மையாகவும் அவ், இவ் என்பன சிறுபான்மையாகவும் உள்ளன. மலையாளமும், கன்னடமும் அவ்வாறு வழங்குகின்றன. தமிழில் ஆ, ஈ என்பவற்றுடன் அவ், இவ் என்பனவும் வழங்கியிருக்கின்றன.
சொற்கள் பொருள் உணர்த்தும் முறை உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவாக விளங்குகின்றது. பொருள் உணரும் மக்களின் மனம் பொதுத்தன்மை பெற்றிருத்தலே இவ்வுண்மைகள் பொதுவாக இருப்பதற்கும் காரணம் எனலாம். சொற்கள் பல தொடர்ந்து அமைவது சொல் தொடர் அமைப்பு ஆகும். ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லை இடம் மாற்றி அமைத்தாலும் பொருள் மாறும் நிலை உண்டு.
சான்று:
John killed Weber. இதில் பெயர்களை மாற்றினால் பொருள் மாறுபடும்.
தமிழில் அவ்வாறு எளிதில் மாறும் நிலை இல்லை.
வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்று, வடசொற்களைக் கையாளும் போது வடவெழுத்துகளை அகற்றிவிட்டு, தமிழ் எழுத்திட்டுச் சொல் ஆக்கிக் கொள்ளும்படி தொல்காப்பியம் குறிக்கிறது.
எழுத்து வடிவில் உள்ள இலக்கண நூல்கள், இலக்கிய நூல்களை அதிகமாகத் தமிழ் மொழியே பெற்றுள்ளது. ஏனைய திராவிட மொழிகளை விட, தமிழ்மொழியிலேயே தொன்மையான இலக்கண, இலக்கிய நூல்கள் மிகுதியாக உள்ளன.
திராவிட மொழிகளில் பேச்சு வடிவம், இலக்கிய வடிவம் என்று இரண்டு வடிவங்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று மிகுதியாக மாறுபட்டு உள்ளன. தமிழிலும் எழுத்து வடிவம், பேச்சு வடிவம் என இரட்டை வடிவங்கள் இருந்தபோதிலும், ஏனைய மொழிகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே வேறுபாடுகள் உள்ளன.
கால வேறுபாடு திராவிட மொழிகளில் பெரிய மாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. பழங்கன்னடம் – புதுக் கன்னடம், பழம் மலையாளம் – புது மலையாளம் என்று இரண்டுக்கிடையில் புரிந்து கொள்வதில் பெரிய இடைவெளி உள்ளது. இருவேறு மொழிகளோ என்று ஐயமே கூட ஏற்படுகிறது. ஆனால் தமிழில் இவ்வேறுபாடு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
திராவிட மொழிகளில் சொல் வளமும், அதிகச் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்றிருக்கும் மொழி தமிழே ஆகும். ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன.
திராவிட மொழிகளில் அமைந்துள்ள பழங்காலக் கல்வெட்டுகள் வேற்று மொழிகளிலேயே அமைந்துள்ளன. ஆனால் தமிழின் தொன்மையான கல்வெட்டுகளில் மிகுதியானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
தமிழில் பிறமொழித் தாக்குதல் மிகவும் குறைவாகவே உள்ளது. தொன்மையான எழுத்து வடிவங்கள், இலக்கணக் கூறுகள் தமிழில் அதிகமாகப் பேணிக் காக்கப்படுகின்ற நிலை உள்ளது.
திராவிட என்ற வடசொல்லுக்கு Dramida, Dravida, Dra-vida என்று மூன்று வடிவங்கள் உள்ளன. இப்பெயரைத் தமக்கு முன் யார் யார் பயன்படுத்தியுள்ளனர் என்றும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வடமொழி எழுத்தாளர் குமாரில பட்டர், தென்னிந்திய மொழி இனத்தை, ‘ஆந்திர-திராவிட பாஷா’ என்று குறித்துள்ளார்.
மனு சுமிருதியில் தென்னிந்திய மக்கள், ‘திராவிடர்’ என்ற பொதுப்பெயரால் சுட்டப்பட்டுள்ளனர்.
கி.பி. 1854 இல் வாழ்ந்த பாபு இராசேந்திரலால் என்னும் மொழியியலறிஞர், ‘திராவிடி’ என்ற பெயரால் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கின்றார்.
இரவீந்திரநாத தாகூர் எழுதிய தேசீய கீதத்திலும் ‘திராவிட’ என்ற சொல்லைப் பரந்த நிலையிலேயே ஆண்டுள்ளார். தென்னிந்திய மொழி இனங்களையும், மக்களையும் சுட்டுவதற்குத் திராவிடம் என்ற பெயரைக் கையாண்டுள்ளமை தெளிவு.
இந்தோ-ஆரிய மொழிகளின் தாக்குரவு திராவிட மொழிகளைப் பொறுத்த வரையில் சொற்களின் நிலையில் தான் பெருமளவிற்குக் காட்சி தருகின்றது. இன்றைய நிலையில் திராவிட மொழிக் குடும்பம் உலக மொழிக் குடும்பங்கள் வரிசையில் ஆறாவது அல்லது ஏழாவது இடத்தைப் பெறுகின்றது. இந்தியாவில் வழங்கும் நான்கு மொழிக் குடும்பங்களுள் இது ஒன்றே முழுமையான இந்திய நாட்டு மொழிக் குடும்பமாகக் கருதப்படுகிறது.
1) திராவிட இனமொழிகளை ஒருங்கிணைத்துப் பரிசீலித்தல்.
2) திராவிட மொழிகளுக்கு இடையிலான பொதுமைக் கூறுகளைக் கண்டறிதல்.
3) மொழிகளின் தனித்தன்மைகளை விளக்குதல்.
4) தொல் வடிவத்தைக் காணுதல்.
5) தொல் வடிவத்துடன் இனமொழிகளின் கூறுகளை ஒப்பிடுதல்.
என்று மொழிநூலார் ஆய்கின்றனர். ஆனால் மூலத் திராவிடமொழி என்பது மொழிநூலாரின் ஊகமே தவிர முடிந்த முடிவு அன்று. எமனோ மீட்டுருவாக்கம் மூலம் தொல் திராவிட மொழியின் தன்மைகளை ஆய்ந்துள்ளார்.
தொல் திராவிடத்தில் ஐந்து குறில் உயிர்களும், ஐந்து நெடில் உயிர்களும் உள்ளன. தொல் திராவிட மொழியில் உள்ள பத்து உயிர் ஒலியன்களும் எல்லாத் திராவிட மொழிகளிலும் அப்படியே இருக்கின்றன.
தொல் திராவிட மொழியில் ககர ஒலியன் எல்லா உயிர்களுடனும் மொழிக்கு முதலில் வந்துள்ளது. தொல் திராவிட மொழியில் மொழிக்கு முதலில் வரும் சகரம் திராவிட மொழிகளில் சில மாற்றங்களை அடைந்துள்ளது. தமிழ் மொழியில் உள்ள சகரத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் பல சொற்கள் சகர மெய் இல்லாமல் உயிரெழுத்துடன் தொடங்குவனவாக அமைந்திருக்கக் காணலாம்.
சான்று:
சமைத்தான் – அமைத்தான்
சான்றோர் – ஆன்றோர்
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் காணப்படும் ‘உப்பு’ என்ற சொல் பண்டைக் காலத்தில் ‘கப்பு’ என்றும் வழங்கியுள்ளமையைக் காணலாம். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சகரமாக வருவது, கன்னடம், துளு போன்ற மொழிகளில் ககரமாகவும், நடுத்திராவிட மொழிகளில் ஸகரமாகவும், பெங்கோ, மண்டோ, கூவி மொழிகளில் ஹகரமாகவும் அமைந்துள்ளது. தோடா மொழியில் சகரம் தகரமாக மாறியுள்ளது. தோடா, கோத்தா மொழிகள் தமிழ், மலையாளத்திலிருந்து பிரிவுபட்டுக் கன்னடம், குடகு, துளு போன்ற மொழிகளுடன் ஒன்றுபட்டு நிற்றலைக் காண்கிறோம்.
தொல் திராவிடத்தில் கிறுக்கன், முதுகன் என்னும் சொற்களில் ‘கன்’ ஆண்பால் விகுதியாக உள்ளது. தொல் திராவிடத்தில் நான்கு என்னும் எண்ணைக் குறிக்க ‘நால்கு’ என்னும் சொல் உள்ளது. சங்க இலக்கியத்தில் ‘நால்கு’ வந்துள்ளது. ‘லகரம்’ ‘னகரமாக’ மாறிய மாற்றம் திராவிட மொழிகள் ஒன்றாய் இருந்த காலத்தில் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
நால்கு – நான்கு
தொல் திராவிட மொழியில் எதிர்மறை விகுதியாக ஆ இருந்தது.
அது பாடாது – ஆ (எதிர்மறை விகுதி)
‘எட்டு’ என்னும் எண்ணுப் பெயர் கன்னடத்தில் ‘எண்டு’ என்றும், தமிழ், மலையாளம், தோடா, கொடகு மொழிகளில் எட்டு என்றும் வழங்குகிறது. மூலத்திராவிட மொழியில் ‘எண்ட்டு’ என்று இருந்திருத்தல் வேண்டும். கன்னடத்தில் டகரம் கெட்டு எண்டு என்றும்; தமிழிலும், மலையாளத்திலும் ணகரம் கெட்டு எட்டு என்றும் மாறிவிட்டது.
எண்ட்டு – எண்டு – கன்னடமொழி
எண்ட்டு – எட்டு – தமிழ், மலையாளம்
சான்று:
* a – தொல் திராவிட ‘அ’ உயிர்.
தமிழ் மலையாளம் தோடா கோத்தா கன்னடம் கொடகு பர்ஜி
panri panni pody paj pandi pandi pend (pig)
இவ்வாறே எல்லா உயிர்களும் அமைவதைக் காணலாம்.
தொல் திராவிடமொழி தமிழ்
* அ அ
* ஆ ஆ
* இ இ
* ஈ ஈ
* உ உ
* ஊ ஊ
* எ எ
* ஏ ஏ
* ஒ ஒ
* ஓ ஓ
* க்- க்,ச்
* க்க் க்க்
* -க் க்
* ங்க் ங்க்
* ச்- ச்
* -ச்ச் ச்ச்
* ஞ்ச் ஞ்ச்
* -ட்- ட்
* -ட்ட்- ட்ட்
* ண்ட் ண்ட்
* த்- த்
* – த்- த்
* த்த் த்த்
* ந்த் ந்த்
* ப்- ப்
* ம்ப் ம்ப்
* -ற்- ற்
* ற்ற ற்ற
* ன்ற் ன்ற்
* ம் ம்
* ன்,ந் ன்,ன்
* ண் ண்
* ஞ் ஞ்
* ய் ய்
* ர் ர்
* ல் ல்
* ல்ல் ல்ல்
* வ்- வ்
* -வ்- வ்
* ழ் ழ்
* ள் ள்
* ள்ள் ள்ள்
பாடம் - 6
இரட்டை வழக்கு
தமிழில் பேச்சு மொழி, எழுத்து மொழி என இரட்டை வழக்கு உள்ளது. ஒரு வாக்கியத் தொடர் பேச்சு மொழியில் அமைக்கப்படுவதற்கும், எழுத்து மொழியில் அமைக்கப்படுவதற்கும் இடையே வேறுபாடு உண்டு. பேச்சுத் தமிழின் வாக்கியம் எளியது. சுருங்கியது, நேரானது, இயல்பானது, தெளிவானது. எழுத்துத் தமிழின் வாக்கியம் பெரும்பாலும் நீண்டது. செயற்கையாக அமைத்துக் கொள்வது. சிக்கலானது. காரணம் என்ன? பேசுபவர் எண்ணும் எண்ணங்களுக்கு உடனே ஒலிவடிவு தந்து அதை வெளிப்படுத்துகின்றனர். எனவே சுருங்கிய நேரத்தில், குறைந்த மூளை உழைப்பால் அமைந்தவை பேச்சு மொழி வாக்கியங்கள். எழுதுபவர் பற்பல எண்ணி அனைத்திற்கும் எழுத்து வடிவு கொடுத்து வெளியிடுகின்றனர். தமிழில் பேச்சு வாக்கியம் சராசரி இரண்டு சொற்கள் உடையது என்றும், எழுத்து வாக்கியம் நான்கு அல்லது ஐந்து சொற்கள் உடையது என்றும் கூறுவர். இவை போன்ற செய்திகளை இப்பாடம் ஆராய்கிறது
எழுத்து எனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
என்று கூறுகிறது. தொல்காப்பியர் காலத்தில் தமிழில் எழுத்துகள் வளர்ச்சி பெற்றிருந்தன. வரையறை செய்யப்பட்டு இருந்தன. தொல்லை (தொன்மை, பழமை) வடிவின எல்லா எழுத்தும் என்று நன்னூலில் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் எழுத்து கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் வழங்கி வந்துள்ளது. தமிழக அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறை கண்டுபிடித்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டு, அறச்சலூர்க் கல்வெட்டு, புகழூர்க் கல்வெட்டு ஆகியவற்றில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில் அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்பர். இவற்றில் உள்ள தமிழ் எழுத்துகளில்
புள்ளி இல்லாத மெய் வடிவு மெய்யை மட்டும் குறிக்கும்
அகரம் ஏறிய மெய்யைக் குறிக்க ஒரு கோடு இடப்பட்டது
என்றும் எழுத்தின் அமைப்பை ஆய்வு செய்து ஐராவதம் மகாதேவன், இரா.நாகசாமி போன்றோர் கூறுவர்.
பிராமி எழுத்து
தமிழகத்தில் மிகப் பழமையானது தமிழ் எழுத்து ஆகும். இதைப் பிராமி எழுத்து என்றும், தென்னிந்தியப் பிராமி எழுத்து என்றும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை வழங்கி வந்தனர். இது பண்டைத் தமிழ் எழுத்து (Archaic Tamil Script) எனலாம். தமிழகத்தின் பழங்கல்வெட்டுகளில்,
பத்து உயிரெழுத்துகள்தாம் எழுதப்பட்டுள்ளன.
ஐகாரமும், ஒளகாரமும் காணப்படவில்லை.
வட்டெழுத்து
அசோகனது கல்வெட்டுகளில் புள்ளியிடப்பட வேண்டிய இடங்களில் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளது. கி.பி.மூன்று – நான்காம் நூற்றாண்டளவில் பண்டைத் தமிழ் எழுத்தின் வடிவம் மாற்றம் பெறத் தொடங்குகிறது. கல்லில் உளியாலும், தூரிகை கொண்டு வண்ணத்திலும் எழுதிய நிலை மாறி, ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதத் தொடங்கியதால் இவ்வடிவ மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். எழுத்தாணியால் ஓலையில் நேர்க்கோடுகளையும், பக்கக் கோடுகளையும் எழுதினால் ஓலை கிழிந்து விடக்கூடிய நிலை. ஏற்படும். அதைத் தவிர்க்க, நேர்க்கோடுகளிலும், பக்கக் கோடுகளிலும் சிறுவளைவுகளைச் சேர்த்து எழுதத் தொடங்கி உள்ளனர். இம்மாற்றத்தை ஈரெட்டிலைக் கல்வெட்டில் காண முடிகிறது. நாளடைவில் மேலும் மேலும் வளைவுகளைப் பெற்று வட்டெழுத்து என்று அழைக்கும் அளவுக்கு மாற்றம் பெற்றுவிட்டது. முழு வட்ட வடிவம் பெற்ற தமிழ் எழுத்துகளைக் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் காண முடிகிறது. வேள்விக்குடி, சீவரமங்கலம், சின்னமனூர்ச் செப்பேடுகளில் இவ்வெழுத்தைப் பார்க்கலாம்.
வளைவு தந்து எழுதுவதால், ப, ம, ய, வ ஆகிய எழுத்துகள் மிகச் சிறு வேறுபாட்டோடு எழுதப்பட்டுள்ளன.
ண, த, ற போன்ற எழுத்துகளிடையே அதிக வேறுபாடு இல்லை.
மற்றொருவகை எழுத்து
சில எழுத்துகளை வேறுபடுத்திப் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. கி.பி.பதினேழாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருக்கும் இவ்வட்ட வடிவ எழுத்துகளைப் படிப்பது கடினமாக உள்ளது. மிகப் பிற்காலம் வரை தமிழகத்தின் தென்கோடிப் பகுதியிலும், கேரளப் பகுதியிலும் வழங்கி வந்தது. எனினும் கி.பி.11-12ஆம் நூற்றாண்டில் இவ்வட்ட எழுத்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்குப் புரியாத எழுத்தாக ஆகிவிட்டது. அதனாலேயே அப்பகுதிகளில் மற்றொரு வகைத் தமிழ் எழுத்து உருவாகத் தொடங்கிவிட்டது. இந்த மற்றொரு வகை எழுத்துத்தான் இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்து. சிம்மவர்மனின் பள்ளங்கோயில் செப்பேட்டிலும், மகேந்திரவர்மன் காலத்திய வல்லம் குடைவரைக் கோயில் கல்வெட்டிலும் இவ்வெழுத்தை முதன்முதலில் காண முடிகிறது. இந்த எழுத்துகளில் சிலவும், சமஸ்கிருதக் கிரந்த எழுத்துகளில் சிலவும் ஒன்று போலக் காணப்படுகின்றன. பல்லவர்கள் தம் செப்புப் பட்டயங்களிலும், குடைவரை மற்றும் கோயில்களிலும் சமஸ்கிருத மொழியை எழுதக் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தினர். பாண்டிய மன்னர்களும் தமது செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் சமஸ்கிருத மொழியையும், கிரந்த எழுத்துகளையும் பயன்படுத்தினர். வேள்விக்குடிச் செப்பேடு, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குடைவரைக் கோயில் கல்வெட்டுகள் மற்றும் வைகைக் கரைக் கல்வெட்டு ஆகியவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். சோழர்கள் தாங்கள் வென்ற பகுதிகளில் எல்லாம் இப்புதிய தமிழ் எழுத்தையே பயன்படுத்தினர். பிற்காலப் பாண்டியர்கள், பிறகு வந்த விசயநகர மன்னர்கள், அவர்களை அடுத்து வந்த நாயக்க மன்னர்கள் இப்புதிய தமிழ் எழுத்தையே பயன்படுத்தினர். அதன் பின்னர் அச்சு இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இப்புதிய எழுத்து முறை மாற்றமின்றி நிலைத்துவிட்டது. இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்து முறை இதுதான். வட்டெழுத்து பழந்தமிழ் வடிவம். அது பழங்கல்வெட்டுகளில் உள்ளது. படிக்கக் கடினமாக உள்ளது.
எழுத்து ஆய்வு
தமிழில் மிகப் பழைய எழுத்து பண்டைத் தமிழ் எழுத்து. இதைப் பிராமி எழுத்து என்கின்றனர். தென்னிந்தியப் பிராமி என்றும் குறிக்கின்றனர். ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறை பரவிய பின்னர்ப் பண்டைத் தமிழ் எழுத்து பிராமி முறையிலிருந்து, வட்டெழுத்தாக வடிவம் பெற்றது. வட்டெழுத்து ஒரு நிலை, சமஸ்கிருதக் கிரந்த எழுத்தைப் போன்ற தமிழ் எழுத்துகள் கையாளப்பட்டது. மற்றொரு நிலை, அச்சு இயந்திரம் வந்ததால் எழுத்தமைப்பில் பின் மாற்றம் நேரவில்லை. அச்சில் எளிமை கருதி, தமிழ் எழுத்தமைப்பில் சீர்திருத்தங்களை வீரமாமுனிவர் செய்தார். தந்தை பெரியார் செய்தார். அவை பின்பற்றப்படுகின்றன. அவ்வளவே, ஒருவரது எழுத்தும், மற்றொருவரது எழுத்தும், எழுதும் முறையால் வேறாக அமைகின்றனவே அல்லாமல், தமிழ் எழுத்தமைப்பில் இக்காலக் கட்டத்தில் எம்மாற்றமும் நிகழவில்லை. எது தமிழ் எழுத்து? எங்குத் தொடங்கியது? எப்படி வளர்ந்தது? இன்றைய எழுத்து உருவானது எப்படி? என்றெல்லாம் பரிசீலிக்கப் பட்டுள்ளது.
1) தமிழ் ஒலியியல்
2) தமிழ் ஒலியனியல்
3) தமிழ் உருபனியல்
4) தமிழ் உருபொலியனியல்
5) தமிழ்ச் சொல்லியல்
6) தமிழ்த் தொடரியல்
7) தமிழ்ச் சொற்பொருளியல்
என்ற படிநிலை அமைப்பைக் கொண்டு அமைகிறது.
ஒலியுறுப்புகள்
பேச்சொலியை எழுப்புவதற்குப் பேச்சுறுப்புகள் பயன்படுகின்றன. பேச்சுறுப்புகளில் நாக்குப் போல அசையும் உறுப்புகளும் உண்டு. மேலண்ணம் போல அசையா உறுப்புகளும் உண்டு. நாக்கு, கீழ் உதடு, கீழ்த்தாடை முதலானவை அசையும் உறுப்புகள். அண்ணம், மேல்வாய்ப்பல் முதலியவை அசையா உறுப்புகள். தமிழ்ப் பேச்சொலிகள் உயிர், மெய் என்று இரண்டு பெரும் பிரிவாக உள்ளன.
தமிழ் ஒலிகள்
ஓர் ஒலியை ஒலிக்கும்போது காற்று பேச்சுறுப்புகளினூடே தங்கு தடை இல்லாமல் இயல்பாக வெளிப்படுமானால் அந்த ஒலி உயிரொலி ஆகும். அ, ஆ என்னும் உயிர் ஒலிகளை ஒலித்துப் பாருங்கள். காற்று தங்கு தடை இல்லாமல் வெளியேறுகிறது.
ஓர் ஒலியை ஒலிக்கும்போது காற்று பேச்சு உறுப்புகளினூடே தடைப்பட்டாலும், திசை மாற்றத்துக்கு உள்ளானாலும் அந்த ஒலியை மெய்யொலி என்கிறோம். ப, ம, ட, த என்னும் ஒலிகளை ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிக்கும்போது காற்றுத் தடைப்படுகிறது.
தமிழ் உயிரொலிகளும், மெய்யொலிகளும் அவற்றின் ஒலிப்பு முறைக்கு ஏற்ப நுட்பமாக வகைப்படுத்தப் படுகின்றன.
உயிரொலிகள்
நுரையீரலில் இருந்து காற்று வெளிப்படும் போது ஒலியுறுப்புகளால் எவ்வகைத் தடையும் இன்றி வெளிவருவது உயிரொலி. தொல்காப்பியர் உயிரொலிகளைப் பற்றி 54-56, 84-88 ஆகிய நூற்பாக்களில் எழுத்ததிகாரத்தில் விளக்கியுள்ளார். உயிர்களை அங்காப்புயிர்கள் (அ, ஆ) முன்னுயிர்கள் (இ, ஈ, எ, ஏ) குவியுயிர்கள் (உ, ஊ, ஒ, ஓ) என்று மூன்றாகப் பகுக்கிறார்.
மெய்யொலிகள்
ஒலி உறுப்புகளில் உரசுதல், தடுத்து வெளியிடுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். தொல்காப்பியர் மெய்யொலிகளை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப் பகுத்துள்ளார். மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி, மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துவர்.
ஒலிப்பு வேறுபாடுகள்
தமிழில் பேசும்போது குறிப்பிட்ட சில இடங்களில் ஒலிப்பில் அழுத்தம் தருவது உண்டு. இது ஒலியழுத்தம் எனப்படுகிறது. ஒரு வாக்கியத்தில் ஒலியழுத்தத்தில் திரிபு ஏற்பட்டால் பொருளும் மாறிவிடும். இப்படி ஒலி அழுத்தத்தில் ஏற்படும் திரிபை இசைத்திரிபு என்பர். ஒரு முழு வாக்கியத்தை ஒலிக்கும்போது ஒலிப்பில் ஏற்ற இறக்கங்களையும், சமநிலையையும் உணருகிறோம். சில வேளைகளில் இந்த ஏற்ற இறக்கங்களே தொடர்ப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு. இதைத் தொடரிசை என்பர். தமிழ் ஒலியியல் ஆய்வில் ஒலியழுத்தம், இசைத்திரிபு, தொடரிசை முதலானவற்றுக்கும் தகுந்த முறையில் இடம் தரப்படுகிறது.
தமிழில்,
கடல்
பங்கு
பகல்
ஆகிய சொற்களை ஒப்பிட்டால், க் என்ற ஒலியன் ஒலிப்பொலியாகவும், உரசொலியாகவும் ஒலிக்கக் காணலாம். இப்படிச் சூழலுக்கு ஏற்பத் திரிபடைந்து ஒலிக்கும் ஒலி மாற்றொலி ஆகும். க் என்ற ஒலியனுக்கு k. g. h என மூன்று மாற்றொலிகள் உள்ளன. இவை,
k - மொழி முதலில் வரும் – கடல்
ஒற்று இரட்டும் சூழலில் வரும் – பக்கம்
g - மெல்லினத்தின் பின் வரும் – பங்கு
h - ஏனைய இடங்களில் வரும் – பகல்
தமிழ் ஒலியன்கள், தமிழ் ஒலியன்களின் மாற்றொலிகள் வருகை இடம் ஆகியன பரிசீலிக்கப் படுகின்றன.
ஒலியன்கள் வரும் இடம்
தமிழில் உயிரொலிகள் மொழியில் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் வரும். மெய்களில் எந்தெந்த மெய்கள் மொழிக்கு முதலில் வரும் எந்தெந்த மெய்கள் மொழிக்கு இடையில் வரும், எந்தெந்த மெய்கள் மொழிக்கு இறுதியில் வரும் என்று மெய்களின் வருகை முறையினை ஒலியனியல் முறையாக ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும்.
ஒலியனியல் நெறிகள்
தமிழ் மொழியில் உயிர் ஒலியன்கள் இணைந்து வருவதில்லை. உயிர் ஒலியன்கள் இணைய வேண்டிய சூழல் வந்தால் தமிழில் உடம்படுமெய் வந்து உயிர் ஒலிகளை இசைவுபடுத்தும். மெய் ஒலியன்கள் இணையும் போது இரண்டு மெய்களோ, இரண்டுக்கு மேற்பட்ட மெய்களோ இணையலாம். ஒரு மெய் இரட்டிப்பாகி இணையலாம். வேறு வேறு மெய்களும் இணையலாம். மெய்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்போது அவை சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே இணைகின்றன. அந்த நெறிமுறைகள் ஒலியனியலில் முறையாக விளக்கப்படுகின்றன.
செய் – வினை நிகழ்ச்சி
த் – இறந்த காலம் உணர்த்தும் உருபு
ஆன் – ஆண்பாலை உணர்த்தும் உருபு
செய்தான் என்பதில் உள்ள, செய், த், ஆன் ஆகிய மூன்றும் தனித்தனி உருபன்களாம். உருபன்களைப் பற்றிய செய்திகள் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.
வேர் உருபன்
மேலும் பிரிக்க இடம் தராத சொல் வேர்ச்சொல் ஆகும். கல் என்பது வேர்ச்சொல். அதை மேலும் பிரிக்க முடியாது. இது வேர் உருபன் எனப்படும்.
அடி உருபன்
விகுதிகளை அல்லது ஒட்டுகளை ஏற்க இடமளிக்கும் சொற்கூறு அல்லது உருபன் அடிச்சொல் என்று பெயர் பெறும். செய் என்பது அடிச்சொல், கல் என்பது விகுதியை ஏற்கவும் வல்லது. அதுவும் அடிச்சொல். அடி உருபன் எனலாம்.
ஒட்டு உருபன்
அடிச்சொல்லுடன் உருபுகள் ஒட்டுவதுண்டு. செய்தான் என்பதில் செய் என்னும் அடிச்சொல்லுடன் ஒட்டும் த், ஆன் ஆகிய இரண்டும் ஒட்டுகள். அவை ஒட்டு உருபன்கள் எனலாம். ஒட்டு ஓர் அடிச்சொல்லுக்கு இடப்பக்கம் வந்தால் முன்னொட்டு என்றும், வலப்பக்கம் வந்தால் பின்னொட்டு என்றும் அடிச்சொல்லின் நடுவில் செருகப்பட்டால் இடை ஒட்டு என்றும் பெயர் பெறும்.
1) பெயர்
2) வினை
3) பெயரடை
4) வினையடை
5) வல்லடை
6) இடை
என்று வகைப்படுத்தலாம்.
சான்று:
நிலம், மரம், யானை பெயர்கள்
நிலத்தை, மரத்துக்கு, யானையால் உருபு ஏற்றன.
நிலம் வலியது
மரம் ஆடியது
யானை வந்தது எழுவாயாக வந்தன.
கருப்பாக, கருப்பான ஆக, ஆன விகுதிகளை ஏற்றன.
அது கருப்பு பயனிலையாக வந்தது.
ஆண்பால் பெயர், பெண்பால் பெயர், பலர்பால் பெயர், ஒன்றன்பால் பெயர், பலவின்பால் பெயர் என்று பெயர்களில் பல வகைகள் உள்ளன.
எ.டு :
ஆடு, பாடு, படி, போ, வா வினைச்சொற்கள்
ஆடினான், பாடினான், படித்தான், போனான், வந்தான் கால இடைநிலைகளை ஏற்றன.
ஆடினான், பாடினான் முற்றாக வருவன.
ஆடிய, பாடிய எச்சமாக வருவன.
வேகமாக ஆடினான், அழகாகப் பாடினான் வினையடைகளால் தழுவப்பட்டன.
தமிழில் உள்ள வினைகளைத் தெரிநிலை வினை, குறிப்புவினை, குறைவினை என்று வகைப்படுத்தலாம்.
தெரிநிலை வினை என்பது வினையடி, கால இடைநிலை, பாலிட விகுதி ஆகியவற்றைப் பெற்று வருவது.
சான்று : செய்தான்.
குறிப்பு வினை என்பது வினையடி, பாலிடவிகுதி மட்டுமே பெற்றுக் கால இடைநிலை பெறாமல் வருவது.
சான்று : நல்லன்
குறைவினை என்பது கால இடைநிலை, பாலிட விகுதி ஏற்பதில்லை.
சான்று : இல்லை, உண்டு.
சான்று :
உயரமான மரம்
ஆழமான கிணறு.
உயரமான, ஆழமான என்பவை மரம், கிணறு ஆகிய பெயர்களுக்கு அடையாக வந்தன. பெயரைத் தழுவி நிற்பன பெயரடைகளாம்.
சான்று :
அழகாகப் பாடினான்
வேகமாக ஓடினான்
அழகாக, வேகமாக ஆகியன பாடுதல், ஓடுதல் ஆகிய வினைகளுக்கு அடையாக வந்தன.
சான்று :
மிகவும், நிரம்ப, இருமடங்கு, மும்மடங்கு, பன்மடங்கு என்பன. மிகவும் நீளம், மிகவும் அகலம், மிகவும் சுடுகிறது, மிகவும் வியர்க்கிறது, மிகவும் அழகான பாட்டு, மிகவும் வேகமாக ஓடினான்.
இவற்றில் மிகவும் என்பது பெயருக்கும், வினைக்கும், பெயரடைக்கும், வினையடைக்கும் அடையாக வந்துள்ளதால் இதை வல்லடை எனலாம்.
சான்று :
ஐ, ஆல், கு, ஓடு, இன், அது, கண் – ஆகிய வேற்றுமை உருபுகள்.
த், வ் முதலான கால இடைநிலைகள்
ஆ, ஏ, ஓ, தான் முதலானவை.
சான்று : மரம் + வேர் = மரவேர்
இதில் மரம் நிலைமொழி. வேர் – வருமொழி. இந்த இருமொழிப் புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மாற்றங்கள் நேர்கின்றன
அகச் சந்தி
மொழியியலார் அகச் சந்தி, புறச் சந்தி என்று பிரிக்கின்றனர். ஓர் அடிச்சொல்லும், விகுதியும் சேரும்போது அந்தச் சொல்லுக்கு அகத்தே அமையும் மாற்றம் அகச்சந்தி ஆகும்.
சான்று :
கல் + இல் = கல்லில்
(நிலைமொழி + விகுதி)
தெரு + இல் = தெருவில்
நிலம் + இல் = நிலத்தில்
ஊர் + இல் = ஊரில்
(அடிச்சொல் + விகுதி) - (அகச்சந்தி)
புறச்சந்தி
ஒரு முழுச்சொல்லும், இன்னொரு முழுச்சொல்லும் சேரும்போது அங்கே நேரும் மாற்றம் ஒரு சொல்லின் புறத்தே அமைவது, இது புறச்சந்தி ஆகும்.
சான்று :
இராமனை + பார் = இராமனைப் பார்
சொன்னதை + செய் = சொன்னதைச் செய்.
சீதையை + கண்டேன் + சீதையைக் கண்டேன்
நீந்த + தெரியும் = நீந்தத் தெரியும்
இங்கு க், ச், த், ப் ஆகிய ஒற்றுகள் ஒரு சொல்லுக்குப் புறத்தே மிக்கு வந்தன. எனவே இவை புறச்சந்தி ஆகும்.
சான்று :
கிளி + அழகு = கிளியழகு
தெரு + இல் = தெருவில்
இஈஐ வழி யவ்வு மேனை
உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்
உயிர் வரின் உடம்படுமெய் என்றாகும்
(நன்னூல் – 162)
என்று தமிழிலக்கணத்தில் வரையறை செய்யப்படுகிறது.
தோன்றல்
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றுமொழி மூவிடத்து மாகும்
(நன்னூல் – 154)
என்று நிலைமொழி இறுதியில் உயிர் நிற்க வருமொழி முதலில் வல்லெழுத்து வந்தால் அங்கு வல்லொற்றுத் தோன்றும்.
சான்று : புலி + குட்டி = புலிக்குட்டி
திரிதல்
இரண்டு சொற்கள் அல்லது சொற்கூறுகள் சேரும்போது அவற்றில் உள்ள எழுத்து திரிந்து வேறாதல் உண்டு.
சான்று : கல் + தூண் = கற்றூண்
பொன் + குடம் = பொற்குடம்
மண் + குடம் = மட்குடம்
மறைதல்
நிலைமொழியும், வருமொழியும் சேரும்போது அவற்றில் உள்ள எழுத்துகளில் ஒன்றோ, பலவோ மறைந்து விடுவதுண்டு. இது மறைதல் அல்லது கெடுதல் என்று கூறப்படுகிறது.
சான்று :
மரம் + வேர் = மரவேர்
அகம் + கை = அகங்கை, அங்கை