அகராதிப் பொருள்
ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளை (meaning) வழங்குவது அகராதி (Dictionary). இதன்மூலம் சொல்லின் பொருளை நன்கு அறிந்து கொள்ள முடியும். நாட்டுப்புறவியல் என்பது குறித்து அகராதி தரும் கருத்தாவது: ‘மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஓர் இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழிவழியாக வழங்கி வருவது’ என்பதாகும்.
அறிஞர்கள் கருத்து
அறிஞர்கள் ‘நாட்டுப்புறவியல்’ என்ற சொல்லுக்குப் பதில் நாட்டார் வழக்காறு என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர். ஆய்வறிஞர் நா.வானமாமலை அவர்களால் பயன்படுத்தப்பட்ட சொல் ‘நாட்டார் வழக்காறு’ என்பதாகும். இவர் வழியைப் பின்பற்றி அறிஞர் தே. லூர்து என்பாரும் நாட்டுப்புறவியல் என்பதற்கு ‘நாட்டார் வழக்காறு’ என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.
மேனாட்டு அறிஞர்கள் ‘Folk lore’ என்ற சொல்லை ‘நாட்டுப்புறவியல்’ என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தியுள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆய்வாளர் ஆலன் டண்டி என்பார் ‘Folk’ என்னும் மக்கள்; காட்டுமிராண்டி நிலையிலுள்ள அல்லது நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும், நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறுகின்றார். இவரது கருத்தைக் கீழ்க்காணும் ஆங்கிலப் பகுப்பு விளக்குகி்றது.
Savage or Primitive Folk or Peasant Civilized Elite
Pre-Non-Literate 1) Illiterate 1) Literate
2 ) Rural 2) Urban
3) Lower Stratum 3) Upper Stratum
எனவே ‘Folk’ எனப்படுவோர் மேனாட்டார் கருத்து விளக்கத்தின்படி, கல்வியறிவற்றவர், கிராமத்தில் வாழ்பவர், தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர் என்பது பெறப்படுகிறது. அடுத்து ‘lore’ என்ற சொல்லை, ‘படைப்பு’ எனக் கொள்ளலாம். அது வழங்கப்படும் சூழல், பாடம் (Text), அமைப்பு இவற்றைக் கொண்டு முடிவு செய்யப்படலாம் என்றும் எடுத்துரைக்கின்றனர்.
இவ்வாறு நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல், நாட்டுப் படையல் என்பன Folk lore என்ற ஆங்கிலப் பெயருக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ‘Folk lore’ என்ற சொல்லின் அமைப்பிலிருந்து இந்நாட்டுப்புறவியல் தொடர்பான பல்வேறு கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு, இதைப் பற்றிய ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன.
படைப்பாளன்
ஒரு நாட்டுப்புறப் பாடலைப் படைத்தவர் இவர்தான் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது மனத்தின் அனுபவ வெளிப்பாடாகக் கிராமத்துச் சூழலில் உருவாவது ஆகும். இப்பாடலின் தன்மைகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.
படைப்பின் தன்மைகள்
நாட்டுப்புற பாடல்களுக்கு எனச் சில தனித்தன்மை வாய்ந்த பண்புகள் காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்,
• வாய்மொழியாகப் பரவும் தன்மையது (It is oral)
• மரபு வழிப்பட்டது (It is traditional)
• குறிப்பிட்டு இவர் தான் படைப்பாளர் என்று இல்லாதது (It is usually anonymous)
• பல்வேறு வடிவங்களாகத் திரிபடையும் பண்பினது. (It exists in different versions)
• ஒருவித வாய்பாட்டுக்குள் அடங்குவது (It tends to become formalized)
ஆகிய தனித்தன்மைகள் கொண்டது.
இவ்வாறு நாட்டுப்புற மக்களே நாட்டுப்புற இலக்கியத்தின் படைப்பாளர்கள் என்று கூற வேண்டும். இப்பாடல்கள் கூட்டு முயற்சியில் உருவானவை. மேலும் மரபு வழியாகப் பரவும் பாரம்பரியச் சிறப்பினை, போக்கினைக் கொண்டவை. இப்பாடல்களை இன்னார் தான் பாடவேண்டும். இப்படித்தான் பாடவேண்டும் என்ற கட்டுப்பாடு என்பது எல்லாம் கிடையாது.
1) தாலாட்டுப் பாடல்கள்
2) குழந்தைப் பாடல்கள்
3) காதல் பாடல்கள்
4) தொழில் பாடல்கள்
5) கொண்டாட்டப் பாடல்கள்
6) பக்திப் பாடல்கள்
7) ஒப்பாரிப் பாடல்கள்
8) பனிமலர்ப் பாடல்கள் (மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு
உட்படாத பாடல்கள்)
என்பவைகளாகும்.
• நாட்டுப்புறக் கதைகள் (Folk Tales)
நாட்டுப்புற மக்களுக்கு முறைசாராக் கல்வி (Non-formal Education) போன்று, அறக்கோட்பாட்டை (Ethics) வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. கதைகளைக் கீழ்க்காணும் முறையில் பகுத்து உரைப்பர். அவையாவன:
1) மனிதக் கதைகள்
2) விலங்குக் கதைகள்
3) மந்திர தந்திரக் கதைகள்
4) தெய்வக் கதைகள்
5) இதிகாச புராணக் கதைகள்
6) பல்பொருள் பற்றிய கதைகள்
என்பனவாகும்.
• நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்
நாட்டுப்புறக் கதைப்பாடல் என்பது ஓரிடத்தில் வழங்கப் பெறும் புகழ்மிக்க கதையினைப் பாடலாகப் பாடுவதாகும். இவ்வாறு கதையைப் பாடலாகக் கூறுவது அல்லது பாடலில் கதை பொதிந்து வருவது கதைப் பாடல் எனப்படும். கதைப் பாடலில்
1) காப்பு அல்லது வழிபாடு
2) குரு வணக்கம்
3) வரலாறு
4) வாழி
என்ற நான்கு பகுதிகள் கட்டாயம் இடம் பெற்று இருக்கும். மேலும் இக்கதைப் பாடல்களில் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெறுதல் உண்டு.
• பழமொழிகள்
பழமையான மொழிகளே பழமொழிகள் ஆகும். அறிவாலும், அனுபவத்தாலும் பழுத்துப் போன மொழிகள் நாட்டுப்புற மக்களால் நயம்படக் கூறப்படும் பொழுது அது பழமொழி என்றாகிறது. இதைச் சொலவடை, முதுமொழி, பழஞ்சொல், முதுசொல் என்றும் கூறுவர். பழமொழிகளை,
1) அளவு அடிப்படை (Size Basis)
2) பொருள் அடிப்படை (Subject Basis)
3) அகர வரிசை அடிப்படை (Alphabetical Basis)
4) அமைப்பியல் அடிப்படை (Structural Basis)
5) பயன் அடிப்படை (Functional Basis)
என்ற பிரிவுகளால் ஆய்வு செய்வர்.
• விடுகதைகள் (Riddles)
நாட்டுப்புற மக்கள் தங்களின் அறிவுத் திறத்தைக் காட்டுவதற்காகப் புதிர்ப் பண்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருத்தைக் கூறுவார்கள். அதில் ஏதாவது ஒரு கருத்து மறைந்து இருக்கும். அதைக் கண்டுபிடித்து விடை கூறவேண்டும். இவ்விடுகதைகள்
நாட்டுப்புற விடுகதைகள் (Folk Riddles)
இலக்கிய விடுகதைகள் (Literary Riddles)
என்ற இருநிலையில் உள்ளன எனலாம்.
• புராணங்கள் (Myths)
‘புராதனம்’ என்னும் வடசொல்லில் இருந்து உருவானதே ‘புராணம்’. ‘புராணம்’ என்பது வழிவழியாக வந்த இறைவன், இறைவி பற்றிய கருத்துகள் அடங்கிய கதைகள் எனலாம். வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் போற்றப்படுகின்றன. சைவம், வைணவம் என்ற சமயங்களுக்கு உரிய புராணங்கள் பல உள்ளன. நாட்டுப்புற மக்களின் கடவுள் வழிபாட்டில் இடம்பெறும் சிவன், முருகன், திருமால் போன்ற கடவுளர்க்குப் புராணங்கள் உள்ளன. புராணங்களை,
1) மகா புராணங்கள்
2) இதிகாச அமைப்பிலானவை
3) சாதிப் பெருமை விளக்குவன
4) ஊர்ச் சிறப்பைக் கூறுவன – தலபுராணம்
என்று பகுத்துக் கூறலாம்.
இவ்வாறு நாட்டுப்புற இலக்கியம் என்பது அக்கிராம மக்களின் மண்ணின் மணத்தோடு, உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே எடுத்துக்கூறல் என்ற அமைப்பில், இசை நயத்தோடு, இலக்கணக் கட்டுப்பாடு என்பது இல்லாது படைக்கப்படுவது ஆகும். படைப்பாளன் இவன் தான் என்று அறுதியாகக் கூற முடியாதபடி எல்லாரும் தாம் என்று கூறும் வகையில் படைக்கப்படுவது ஆகும்.
• நம்பிக்கைகள்
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் இலக்கியம், கலைகள், கைவினைப் பொருட்கள் போன்று இடம் பெறும் மற்றொரு முக்கியக்கூறு நம்பிக்கை (Belief) என்பதாகும். நம்பிக்கையினை மனிதனின் மூன்றாவது கை என்பர். இந்நம்பிக்கை மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் இடம் பெறுவதாகும். இயற்கையின் மழை, விலங்கு, பறவை குறித்தும்; மனிதரின் பிறப்பு, பருவமடைதல், விருந்தினர் வருகை, உழவு, என்பவை பற்றியும்; திசை, நட்சத்திரம், ராசி, கோலமிடுதல், விதி பற்றிய சிந்தனை, இறப்பு போன்ற பலவற்றிலும் கிராமத்து மக்களிடம் காணப்படும் அழுத்தமான நம்பிக்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இந்நம்பிக்கைகளில் காரண காரியங்களை ஆராய முடியும். அறிவியல் போன்று வன்மை, மென்மைகளை ஆராய்தல் என்னும் போது கிராமத்து மக்களின் உள்ளப்பாங்கு, பண்பாடு ஆகியவற்றை அறிய முடியும்.
1) சமூகச் சார்புக் கலைகள்
2) சமயச் சார்புக் கலைகள்
என்று பிரித்து உரைக்கலாம்.
இவற்றில் இடம்பெறும் ஆட்டங்கள் எனப்படும் கலைகள்,
1) சிலம்பாட்டம் 2) காவடியாட்டம்
3) கரக ஆட்டம் 4) மயிலாட்டம்
5) கும்மியாட்டம் 6) ஒயிலாட்டம்
7) கோலாட்டம் 8) பின்னல் கோலாட்டம்
9) பொய்க்கால் குதிரையாட்டம் 10) தேவராட்டம்
11) சேவையாட்டம் 12) சக்கையாட்டம்
13) கழியல் ஆட்டம் 14) சிம்ம ஆட்டம்
15) வேதாள ஆட்டம் 16) பொடிக்கழி ஆட்டம்
17) பகல் வேஷம் 18) கரடி ஆட்டம்
19) வர்ணக் கோடாங்கி 20) புலி ஆட்டம்
21) பூத ஆட்டம் 22) பேய் ஆட்டம்
23) கணியான் ஆட்டம் 24) வில்லுப் பாட்டு
25) கூத்து 26) தெருக்கூத்து
27) கழைக் கூத்து 28) பாவைக் கூத்து
29) தோற்பாவைக் கூத்து
என்பவைகளாகும்.
• கைவினைப் பொருட்கள்
மேலும் நாட்டுப்புற மக்களின் கைவினையின் ஆற்றல் திறத்தால் உருவாகும் பொருட்களுக்குத் தனித்தன்மை மிகுந்த சிறப்புகள் உண்டு. இத்தகு பொருட்களும் நாட்டுப்புற மக்களின் கலை நயத்தால் உருவாகும் தன்மையன என்பதால் இக்கைவினைப் பொருட்களும் கலை என்பதில் இடம் பெறும்.
கிராமத்து மக்கள் காலங்காலமாகப் பாரம்பரியமாகச் செய்துவரும் பொருட்கள் உண்டு. இவர்களது கைவினைத் திறத்தைக் கண்டு மக்கள் வியந்து நிற்பார்கள். இவர்களது கைவினைகள் (Folk Crafts):
1) மண்பாண்டக் கலை 2) காகிதப் பொம்மைகள் செய்தல்
3) மரப் பொம்மைகள் செய்தல் 4) பாய் பின்னுதல்
5) மரவேலைப்பாடு 6) உலோகச், சிற்ப வேலைப்பாடு
7) கல் சிற்ப வேலைப்பாடு 8) சப்பரம்,தேர், தெய்வம் அலங்கரிக்கும் கலை
9) நெசவுக் கலை 10) தஞ்சாவூர்த் தட்டு, நெல்மணி, ஏலக்காய் மாலை செய்தல்
• தேசத்தார்
• நாட்டு மகாசனம்
• நாட்டாண்மைக்காரர்
• கள்ளர், செம்படவர் முதலிய சாதியினரின் பட்டப் பெயர்கள்
• தென்னார்க்காடு மாவட்டத்திலிருந்த ஒரு விவசாய வகுப்பார்
அகராதியின் கருத்துப்படி ‘நாட்டார்’ என்பது ஒரு கூட்டத்தாருக்கு உரியது என்பதாக இல்லை. மேலும் ‘நாட்டார்’ என்ற சொல்லாட்சி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களைச் சுட்டுவதாக வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகு வரன்முறைகளுக்கு உட்படாத சொல்லாக, நாட்டுப்புறத்தாரே ‘நாட்டார்’ என்று நாட்டுப்புறவியல் அறிஞர்கள் விளக்கம் தந்தனர். ‘நாட்டார்’ என்பதே, ஆங்கிலத்தில் குறிக்கப் பெறும் folk என்னும் சொல்லுக்கு இணையாக இந்த அறிஞர்கள் தரும் தமிழ்ச் சொல்லாகும். இச்சொல்லின் அடிப்படையில் நாட்டுப்புறவியல் தொடர்பாகப் பல்வேறு கலைச் சொற்களையும் உருவாக்கியுள்ளனர். அச்சொற்களைத் தெரிந்து கொள்வது நலம் பயப்பதாகும்.
• கலைச்சொற்கள் பட்டியல்
• நாட்டுப்புற வழக்காறு – Folk lore
• நாட்டுப்புறவியல் – Folk loristics
• நாட்டுப்புற இலக்கியம் – Folk Literature
• நாட்டுப்புறப் பாடல் – Folk Song
• நாட்டுப்புறக் கலை – Folk Art
• நாட்டுப்புற நம்பிக்கைகள் – Folk Beliefs
இச்சொற்களை அறிந்து கொண்டால் இவ்விலக்கியம் குறித்துப் படிப்பதற்குத் துணையாக இருக்கும்.
• ஒரே சொல்லாட்சியினைத் திரும்பத் திரும்பக் கூறுவதைச் சங்கப் பாடல்களில் காணமுடியும்.
• ஒரு கருத்தை மூன்றுமுறை அடுக்கிக் கூறும் தாழிசை எனப்படும் யாப்பின் கூறு சங்கப்பாடல்களிலும், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களிலும் உண்டு.
• மக்கள் வாழ்வில் பயின்று வந்த கண்ணகி – கோவலன் கதையே சிலப்பதிகாரக் காப்பியமாகப் படைக்கப்பட்டது.
• திருநாவுக்கரசரின் பழமொழிப் பதிகம் ஒவ்வொரு பழமொழியையும் எடுத்துரைக்கிறது.
• மாணிக்கவாசகரின் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பொன்னூசல் முதலான பாடல்கள் நாட்டுப்புற மகளிர் விளையாட்டுக்கள் குறித்து எடுத்துரைப்பன.
• பெரியாழ்வாரின் தாலாட்டு, ஆண்டாளின் பாவைப் பாட்டு, குலசேகர ஆழ்வாரின் தாலாட்டு என்பன நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தின் வீச்சால் படைக்கப்பட்டவைகளே.
• இன்றும் மக்களின் தேர்தல் பிரசாரம், கோவில் விழாக்கள் போன்றவற்றில் நாட்டுப்புறப் பாடல்கள், கலைகள் இடம் பெற்று வருகின்றன.
• குறிப்பாக, இன்றைய நாளில் குடும்ப நலத் திட்டம், பசுமைப் புரட்சித் திட்டம், அறிவொளி இயக்கம் முதலானவற்றில் நாட்டுப்புறப் பாடல்கள் காலத்தின் தேவைக்கேற்பப் படைக்கப்படுகின்றன. இவ்வாறு வாய்மொழி இலக்கியத்தின் நீட்சியாக அழுத்தமான அமைப்பில் – அச்சுக் கலையின் செல்வாக்கால் எழுத்திலக்கியம் உருவாகி நிலைத்த தன்மையைப் பெற்றுள்ளது. மேலும் எவ்வெப்போது மக்களை ஒன்று சேர்க்கும் இயக்கங்கள் வலுப்பெற்றனவோ அப்போதெல்லாம் எழுத்திலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் மிகுதியாக இடம்பெறும் என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
• நாட்டுப்புறவியல் என்ற இலக்கியத்தின் தன்மைகளையும்,
• நாட்டுப்புறத்தார் – நாட்டார் – சொல்லாட்சியின் விளக்கத்தையும்,
• நாட்டுப்புற இலக்கியப் படைப்பின் பல்வேறு கூறுகளையும்,
• நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் எங்ஙனம் எழுத்திலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்பதையும் புரிந்து கொண்டீர்கள்.
பாடம் - 2
“தலைமை வாய்ந்த இலக்கிய வரலாறுகள் பலவும் நாகரிகப் பண்பாட்டு வரலாறுகளாகவோ அல்லது திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதிகளாகவோ உள்ளன” என்று ரெனி வெல்லாக் தமது நூலில் கூறுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வில்லியம் ஜான் தாமஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1846ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும் ‘Folklore’ என்ற சொல்லை உருவாக்கி உலகுக்கு வழங்கினார். இச்சொல்லே பெருவாரியாக எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு, மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டுப்புறவியல் என்பது பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்பது அவர் கருத்தாகும். உலக நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரெஞ்சு, ஜெர்மன், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்விலக்கியத்தின் பல்வேறு கூறுகளை, தத்தம் மண்ணின் மணம் வீசத் திறனாய்வு செய்து உலகளாவிய அளவில் நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினை உணரும்படி செய்தன.
இந்திய நாட்டின் காஷ்மீர்ப் பகுதி, இமாசலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், பீகார், அசாம், ஒரிசா, மேகாலயா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளம் என்று அனைத்துப் பகுதிகளிலும் நாட்டுப்புறக் கதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும் காணப்பட்டன என்பதை இந்திய நாட்டுப்புறவியல் வரலாற்றினைப் படிக்கும் பொழுது அறிய முடிகிறது.
வட வேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்
என்பதால் வேங்கடம் முதல் குமரி வரை உள்ள தமிழ்மொழி பேசும் தமிழக மக்களின் வாழ்வியல் முறைகளை நாட்டுப்புற வழக்காறுகள் எடுத்துரைக்கின்றன.
இவ்விலக்கியத்தின் தோற்றத்தினையும் வளர்ச்சியையும் விளக்குவது வரலாறு ஆகும். இதனைக் காலப் பகுப்பின் வாயிலாக வரன்முறைப் படுத்தலாம்.
இந்திய நாட்டுப்புறவியல்
இந்திய நாட்டுப்புறவியல் வழக்காறுகளை அறிஞர்கள்
1) பண்டைக்காலம் (Ancient Period)
2) தற்காலத்தின் தொடக்கக் காலம் (Early Modern Period)
3) தற்காலம் (Modern Period)
என்று முக்காலங்களாகப் பகுத்து, இந்திய நாட்டு எல்லைக்குள் உள்ள மாநிலங்களின் படைப்புகளைத் திறனாய்வு செய்கின்றனர்.
தமிழக நாட்டுப்புறவியல்
இந்திய நாட்டுப்புறவியல் வழக்காறுகளை அறிஞர்கள்
1) சேகரிப்புக் காலம் (1871 – 1959)
2) ஆய்வின் தொடக்கக் காலம் (1960 – 1969)
3) ஆய்வுகளின் வளர்ச்சிக் காலம் (1970)
என்று பகுத்து ஆராய்ச்சி செய்கின்றனர்.
1) நிலைத்த தன்மை உடையன
2) நிலையற்ற தன்மையும் உண்டு
3) இடையிலே நிறுத்தி வைக்கப்படுதலுண்டு
4) தள்ளி வைத்தல் என்பது உண்டு
5) மக்கள் விரும்பும் பண்பின
6) சுவையும், அழகியல் கூறும் கொண்டவை
7) சமூக அடையாளங்களைக் கொண்டவை
8) பார்வையாளன், படிப்பாளரின் மாற்றத்தையும் ஏற்கும் பண்பின.
இவ்வாறு நாட்டுப்புறவியல் என்பது மக்களின் படைப்பாக, மக்களுக்குச் சுவையூட்டும் படைப்பாக, மக்களின் வழியே நிகழ்த்தும் படைப்பாக விளங்கி வருகின்றது. இவ்விலக்கியத்தின் சிறப்பினைச் சான்றுகள் வழி அறியலாம்.
மாட்டுக் கொளப் படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப் படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப் படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப் படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப் படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப் படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையாருக்கு
(நாட்டுப்பாடல் – நா.வானமாமலை)
என்ற நாட்டுப்புறப் பாடல் வழங்கும் தகவல்கள் பலவாகும்.
இப்பாடலில் எதுகை, மோனையுடன், பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டு, பிள்ளையார்க்குப் பிடித்தமான பணியார வகைகளை அடுக்கிச் சொல்லிச் செல்லும் பாங்கு பாராட்டுதற்குரியது. வாய்மொழி இலக்கியம் என்பதால் மனத்தில் பதிவு செய்து கொள்வதற்கு ஏற்ற முறையில் எளிய சொற்களால் இனிமை விளங்கப் பாடல் வரிகளைப் படைத்துள்ளனர்.
நாட்டுப்புறக் கதைகளை அறிஞர்கள் அவரவர் தம் அடிக்கருத்தியல் (Theme) சிந்தனைக்கு ஏற்பப் பகுத்துக் கூறுகின்றனர். இதில் பிரிட்டானிகா கலைக் களஞ்சியம் (Encyclopedia Britannica Vol.9 P519) கீழ்க்காணும் வகையில் நாட்டுப்புறவியல் கதைகளைப் பகுத்துக் கூறுகிறது.
1) புராணக் கதை (Myth)
2) பழங்கதை (Legend)
3) பொதுமக்கள் கதை (Popular Tale)
எடுத்துக்காட்டாக, நாள்தோறும் மக்களின் வாழ்வில் இடம்பெறும் கீழ்க்காணும் பழங்கதை ஒன்றினைத் தெரிந்து கொள்ளலாம்.
ஏழை விறகு வெட்டி காட்டுக்குச் செல்கிறான். விறகு வெட்டும் போது அவனது கோடரி கைதவறி ஆழமான குளத்தினுள் விழுந்து விடுகிறது. வருந்தி அழுகிறான். அவன் முன் ஒரு தேவதை தோன்றுகிறாள். ஒரு தங்கக்கோடரியை எடுத்து வந்து ”இதுவா உன்னுடையது?” என்று கேட்கிறாள். ”இல்லை” என்கிறான். அடுத்து வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து காட்டுகிறாள். ”இதுவும் இல்லை” என்கிறான். இறுதியில், அவனது இரும்புக் கோடரியை எடுத்து வந்ததும், ”இதுதான் என்னுடையது” என்கிறான். அவனது நேர்மையைப் பாராட்டி மூன்று கோடரிகளையுமே அவனுக்குக் கொடுத்து விடுகிறாள். அவன் மகிழ்வோடு வீடு திரும்புகிறான்.
இவ்வாறு வாழ்வின் அன்றாடப் பிரச்சனையே கதையின் கருவாக விளங்குகிறது. மனிதனின் நேர்மை உணர்வும், அது பாராட்டப்படும் பொழுது ஏற்படும் மகிழ்வும் பேசப்படுகின்றன. நாட்டுப்புறவியல் கதைகள் அறக்கருத்தை அறியவும் சமுதாயத்தை அறியவும் பயன்பட்டன. நாட்டுப்புறவியல் வழக்காறுகள் அவர்தம் வாழ்வோடு தொடர்பு கொண்டு வாழும் சிறப்பினையும் பெற்றன.
இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாட்டுப்புற இலக்கியங்களின் தேவை கருதி அவற்றினைப் பதிவு செய்வதில் சில படிநிலைகள் ஏற்பட்டுள்ளன. இப்படிநிலைகளில் குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்கள் எழுத்தின் மூலமாகப் பதிவு செய்யப்படுகின்ற போது, மேற்குறித்த திரிபு வடிவம் என்பது நீங்கி, நிலைத்ததொரு வடிவம் ஏற்படுகின்றது. எழுத்தின் மூலமாகப் பதிவு செய்யப்படுவதனால் பதிவு செய்யப்படுகின்ற நாட்டுப்புற இலக்கியத்தின் பரவல் தன்மை விரிவடைகின்றது.
தமிழில் முதன்முதலில் 1869இல் கதைப்பாடல் வெளியிடப் பட்டதாகக் குறிப்பிடுவர். இதில், ஏ.என்.பெருமாள் எழுதிய கதைப் பாடல் பற்றிய நூல் (1987) குறிப்பிடத்தக்கது. இக்கதைப் பாடல்களுள் நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை போன்ற கதைப் பாடல்கள் பற்றிய ஆய்வுகளும், நூல்களும் தொடர்ந்து வெளிவருகின்றன. இவ்வாறாக நாட்டுப்புற இலக்கியம் தொடர்பான பல சிறந்த நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் மு.வை.அரவிந்தனின் நாட்டுப்புறப் பாடல்கள், செ.அன்னகாமுவின் ஏட்டில் எழுதாக் கவிதைகள், ஆறு.இராமநாதனின் நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், நாட்டுப்புறக் கதைகள், தமிழில் புதிர்கள்-ஓர் ஆய்வு, அ.நா.பெருமாளின் நாட்டார் கதைகள், ச.வே.சுப்ரமணியத்தின் தமிழில் விடுகதைகள் போன்று பல நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நா.வானமாமலை அவர்களால் பாளையங்கோட்டையில் 1964இல் ஆராய்ச்சி என்ற இதழ் தொடங்கப்பட்டு, அதில் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புறவியலோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியத் தமிழ் நாட்டுப்புறவியல் கழகத்தின் காலாண்டு இதழான நாட்டுப்புறவியல் என்ற இதழ் 1983இல் வெளிவந்தது. 1987இல் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கழக இதழான நாட்டார் வழக்காற்றியல் என்ற இதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இன்றளவில் குறிப்பாக மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற வானொலி நிலையங்கள் நாள்தோறும் சில குறிப்பிட்ட நேரங்களில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை ஒலிபரப்புச் செய்து வருகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும்பாலும் தமிழர் திருநாள் போன்ற விழா நாள்களில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளையும் நாட்டுப்புறம் தொடர்பான விளம்பரங்களையுமே ஒளிபரப்பி வருகின்றன.
குறிப்பாகக் கல்வி நிறுவனங்களும், ஆய்வுகளும் நாட்டுப்புற இலக்கியத்தின் நுணுக்கங்களைக் கண்டறிவதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. எனவே மக்கள் வழக்காற்று இலக்கியம் அறிவு சார்ந்த மக்களின் சிந்தனைக்கு உரியதாக நிலைத்த பதிவினைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய கருத்தரங்குகளின் முயற்சியே நாட்டுப்புறவியல் துறையின் வளர்ச்சிக்கு அடிகோலியது. அத்தகைய முயற்சிகள் இத்துறையில் தற்போது முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பாக, தூய சவேரியர் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை போன்றவை பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. நாட்டுப்புறவியல் துறையோடு இணைந்துள்ள பல்வேறு துறைகளுடன் தொடர்பு கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகின்றன.
1) உலக அளவில்
2) இந்திய அளவில்
3) தமிழக அளவில்
என்று தெரிந்து கொண்டீர்கள். இதனால் தமிழக அளவில் இதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.
நாட்டுப்புறவியல் தோற்றமும் வளர்ச்சியும் காலப் பகுப்பின் வாயிலாகத் தெளிவாக அறிந்து இருப்பீர்கள்.,
நாட்டுப்புறவியலின் பதிவுகளின் மூலம் நாட்டுப்புறவியலின் வழக்காற்றின் நிலைப்பாடு தெரிந்து கொள்ளமுடியும்.
எதிர்காலத்தில் எவ்வாறு நாட்டுப்புறவியல் விளங்க வேண்டும் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீங்கள் நாட்டுப்புற இலக்கியத்தின் வரலாற்றினை அறிந்து கொண்டீர்கள். இல்லையா?
பாடம் - 3
வகைமை
வகைமை என்பது உள்ளடக்கத்தாலும், உருவத்தாலும், வழங்கப்படும் சூழலாலும் தனித்த இயல்புகளைக் கொண்ட வழக்காற்றுத் தொகுதியேயாகும். தனித்த இயல்பினை வேறுபடுத்துவதன் மூலமாகவும் வகைமை என்பதனை அறியமுடிகின்றது. வகைமை என்பது உருவாக்கப் படுவதில்லை, இயல்பாகவே மரபில் இருக்கின்றது.
வகைமையும் வகைப்பாடும்
வகைமைப்பாட்டிற்குள் வகைப்பாடு என்பது அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். அதனைச் சான்றுடன் விளக்குகின்ற போது வகைமை என்பதிற்கும் வகை என்பதிற்குமான வேறுபாடு சற்றுத் தெளிவாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது, நாட்டுப்புற வழக்காறுகளில் ‘கதை’ என்பதனை வகைமையாகக் கொள்ளலாம். இந்த நாட்டுப்புறக் கதை வகைமைக்குள் புராணக் கதைகள், பழமரபுக் கதைகள், தேவதைக் கதைகள், வேடிக்கைக் கதைகள் போன்றவற்றினை அவற்றிற்கான வகைகளாகச் சுட்டலாம்.
இயல்புகள்
மேற்குறிப்பிட்ட வகைமைக்கான இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இன வகைமை என்பது வட்டாரம் சார்ந்து அமைவது, சிக்கலானது, தெளிவற்றது, நாட்டுப்புற மக்களின் அறிவு எல்லைக்கு உட்பட்டது. ஆய்வு வகைமை என்பது பாதுவானது, சிக்கலற்றது, ஆய்வாளர்களால் உருவாக்கப்படக் கூடியது, தெளிவானது, அறிவியல் சார்ந்தது. இவற்றை இந்த இரண்டு வகைமைகளுக்கான இயல்புகளாகக் குறிப்பிடலாம்.
பிரிவுகள்
நாட்டுப்புறவியல் வகைமையினை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு, பொதுவாக நாட்டுப்புறவியலினை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அவை,
1) நாட்டுப்புற இலக்கியம் 2) நாட்டுப்புறக் கலைகள்
என்பனவாகும். இந்த இரு பெரும் வகைமைப்பாட்டிற்குள் பலவகையான வகைப்பாடுகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
1) நாட்டுப்புறப் பாடல்கள்
2) நாட்டுப்புறக் கதைகள்
3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
4) நாட்டுப்புறப் பழமொழிகள்
5) விடுகதைகள்
6) புராணங்கள்
முதலியனவாகும். இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
நாட்டுப்புறப் பாடல் வகைப்பாடு
நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் எட்டாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.
தாலாட்டுப் பாடல்கள்
தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் தன்மையினை நான்கு கூறுகளாகப் பிரித்துள்ளார்.
1) குழந்தை பற்றியன.
2) குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன.
3) குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன.
குழந்தைப் பாடல்கள்
குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும்,
1) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்.
2) (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது.
3) சிறுவர் பாடல்கள்.
என்றும் பிரித்துப் பார்க்கலாம்.
காதல் பாடல்கள்
காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். 1) காதலர்களே பாடுவது, 2) காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் போது பாடுவது. ஆனால் பெரும்பாலும் நாட்டுப்புறக் காதல், தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் காதல் சுவையைக் காணலாம். உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும்.
தொழில் பாடல்கள்
மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும், நன்மையில் ஈடுபாட்டையும், தீமையில் வெறுப்பையும் காணலாம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு, வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. தொழில் பாடல்களை ஏலோலங்கிடி பாட்டு, தில்லாலங்கடி பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, ஏற்றப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்றெல்லாம் வழங்குவர்.
கொண்டாட்டப் பாடல்கள்
மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கலந்து கொண்டாடுகிறான். அவ்வெளியீட்டில் தொன்மையான கலைச் சிறப்பையும் மக்களது பண்பாட்டின் சிறப்பினையும் அறியமுடியும். மனிதனின் உழைப்பிற்குப்பின், அவனது மனமானது ஆடல், பாடல்களில் ஈடுபடுகிறது. இப்பாடல்களை அகப்பாடல், புறப்பாடல் என்று பிரிக்கலாம்.
அகப்பாடல்
சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படுவது. பூப்புச் சடங்குப் பாடல், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், வளைகாப்புப் பாடல்கள் போன்றவற்றைக் கூறலாம்.
புறப்பாடல்
பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் பாடல்களைப் புறப்பாடல்கள் எனலாம்.
பக்திப் பாடல்கள்
ஆதி காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். அதிலிருந்து விழாக்களும், பண்டிகைகளும், பலிகளும் தோற்றம் பெற்றன. இவ்வழிபாடுகளை மூன்று நிலைகளில் மக்களிடையே காணமுடியும்.
1) இயற்கை வழிபாட்டுப் பாடல்கள்.
2) சிறுதெய்வப் பாடல்.
3) பெருந்தெய்வப் பாடல்.
சான்று : இயற்கை வழிபாட்டுப் பாடல்
சந்திரரே சூரியரே
சாமி பகவானே
இந்திரரே வாசுதேவா
இப்பமழை பெய்யவேணும்
மந்தையிலே மாரியாயி
மலைமேலே மாயவரே
இந்திரரே சூரியரே
இப்பமழை பெய்யவேணும்
இப்பாடலில் தொன்று தொட்டு வரும் இயற்கை வழிபாட்டைக் காணலாம். நிலா, மழை, ஒளி, பாம்பு, பசு ஆகியவற்றை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடும்போது இத்தகைய இயற்கைப் பாடல்களைப் பாடுகின்றனர்.
ஒப்பாரிப் பாடல்கள்
இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களை ஒப்பாரி என்பர். இறந்தவர்களின் இழப்பை எண்ணி, இறந்தவர்களையும் தம்மையும் ஒப்புச் சொல்லி அதாவது ஒப்பிட்டுப் பாடுவது ஒப்பாரியாகும். இறந்தவரின் பெருமையும் அவரது குணநலன்களும் பிறரால் போற்றப்பட்ட முறையும், ஒப்பாரி பாடுகின்றவர்கள் இறந்தவரை நேசித்த முறையும், தன்னுடைய நிலைமை, குடும்பத்தின் நிலைமை, ஈமச் சடங்குகள் பற்றிய விவரங்களும் அப்பாடல்களில் கூறப்படுவதுண்டு.
பன்மலர்ப் பாடல்கள்
ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மை இருப்பின் அப்பாடல் பன்மலர்ப் பாடல் எனப்படும்.
கதைகளின் வகைகள்
முனைவர் சு. சக்திவேல் நாட்டுப்புறக் கதைகளை 6 வகையாகப் பிரிக்கின்றார்.
1) மனிதக் கதைகள்
2) மிருகக் கதைகள்
3) மந்திர – தந்திரக் கதைகள்
4) தெய்வீகக் கதைகள்
5) இதிகாச புராணக் கதைகள்
6) பல்பொருள் பற்றிய கதைகள்
கதைகளின் சிறப்புக் கூறுகள்
இக்கதைகளின் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறக்கோட்பாட்டை உணர்த்துவதே ஆகும். வளரும் குழந்தைகளுக்கு அது நீதி போதனைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. வாழ்க்கைப் பிரச்சனை, ஆசை, துன்பம், சாதிப் பூசல், காதல், ஒழுக்கம், வேதனை, முட்டாள்தனம், பொறாமை, மன உணர்வெழுச்சி, கள்ள நட்பு, மந்திரம், புத்திசாலித்தனம், நீதி முதலியவற்றைக் கூறுவதாக அமையும். மொத்தத்தில் இக்கதைகள் பயன்பாட்டு இலக்கியம் ஆகின்றன. சமூக வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. பண்பாட்டுக் கூறுகளை மீட்டுருவாக்கம் செய்கின்றன. பழங்காலச் சமுதாயச் செய்திகளையும், சமகாலச் செய்திகளையும் இவற்றால் அறிய முடிகின்றது.
கதைப் பாடலின் தன்மை
கதைப் பாடலில் கீழ்க்காணும் முக்கியக் கூறுகள் காணப்படுகின்றன.
1) கதையில் நிகழ்ச்சிப் போக்கு உண்டு. (Action)
2) பாத்திரங்கள் வாயிலாக விளக்கப் பெறும். (Characters)
3) கதைக் கரு உண்டு (Theme)
4) வீரப்பண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெறும். (Prominence of
6) திரும்பத் திரும்ப வரல் (Repetition)
கதைப் பாடலின் அமைப்பு
கதைப் பாடலின் அமைப்பில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவையாவன,
1) காப்பு அல்லது வழிபாடு.
2) குரு வணக்கம்
3) வரலாறு
4) வாழி
என்பவையாகும்.
சான்று : கதைப் பாடல்கள்
1) முத்துப்பட்டன் கதை
2) நல்லதங்காள் கதை
3) அண்ணன்மார் சுவாமி கதை
கதைப் பாடலின் வகைகள்
முனைவர் சு. சக்திவேல் கதைப் பாடல்களை மூன்றாக வகைப்படுத்துகிறார்.
1) புராண, இதிகாச தெய்வீகக் கதைப் பாடல்கள்
2) வரலாற்றுக் கதைப் பாடல்கள்
3) சமூகக் கதைப் பாடல்கள்
பழமொழியின் இயல்புகள்
1) பழமொழியின் முக்கிய இயல்பு, சுருக்கம், தெளிவு, பொருத்தமுடைமை.
2) அறவுரையையும், அறிவுரையையும் கொண்டிருக்கும்.
3) ஒவ்வொரு பழமொழியும் விளக்கக் கூறு (Descriptive element) ஒன்றினைப் பெற்றிருக்கும்.
4) பழமொழிக்கு ஒரு சொல்லில் அமைவதில்லை.
பழமொழி வகைப்பாடு
முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.
1) அளவு அடிப்படை (Size Basis)
2) பொருள் அடிப்படை (Subject Basis)
3) அகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)
4) அமைப்பியல் அடிப்படை (Structural Basis)
5) பயன் அடிப்படை (Functional Basis)
1) அறிவு ஊட்டும் செயல்
2) சிந்தனையைத் தூண்டுதல்
3) பயனுள்ள பொழுது போக்கு
என்ற வகையில் அமைந்து மக்களின் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.
விடுகதையின் வகைகள்
விடுகதைகளை, பயன்பாட்டு அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றார் டாக்டர் ச. வே. சுப்ரமணியம் அவர்கள். அவை,
1) விளக்க விடுகதைகள் (Descriptive Riddles)
2) நகைப்பு விடுகதைகள் (Witty question Riddles)
3) கொண்டாட்ட விடுகதைகள் (Ritualistic Riddles)
4) பொழுதுபோக்கு விடுகதைகள் (Recreative Riddles)
விடுகதையை அமைப்பியல் ஆய்வின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தலாம். அவை,
1) உருவகமில்லாதது (Literal)
சான்று :
‘சிவப்புச் சட்டிக்குக் கறுப்பு மூடி’ – என்பது குன்றி மணியைக் குறிக்கும்.
2) உருவகமுடையது.
சான்று :
‘செத்துக் காய்ந்த மாடு சந்தைக்குப் போகுது’ – என்பது கருவாட்டினைக் குறிக்கிறது.
இவ்வாறு விடுகதைகளும் பழமொழிகளும் மக்களின் வாழ்வில் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிப்பதற்கும், சிந்திப்பதற்கும் துணை நின்று உள்ளன. இன்றும் விடுகதை, பழமொழி இவற்றை, தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட வானொலியின் பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில், நிலையத்தார் வானொலி கேட்பவர்களிடம் தொலைபேசி வழிக் கேட்பதையும் கேட்க முடியும். நாட்டுப்புற வழக்காறும் நாகரிகம் மிகுந்த மக்களின் வாழ்க்கையில் மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
புராணங்களின் வகைகள்
தமிழிலுள்ள புராணங்களை மக்களிடையேயுள்ள,
1) வாய்மொழிப் புராணங்கள் (Oral Puranas)
2) எழுத்திலக்கியப் புராணங்கள் (தல புராணங்கள்)
என்று பகுத்து ஆராயலாம்.
1) நாட்டுப்புறப் பழக்கங்கள் (Folk Practices)
2) நாட்டுப்புறக் கலைகள் (Folk Arts)
3) நாட்டுப்புற அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (Folk Science)
1) நம்பிக்கைகள்
2) வழக்கங்கள்
3) சடங்குகள்
4) விழாக்கள்
5) விளையாட்டுகள்
போன்றவை அடங்கும்.
நம்பிக்கைகள்
நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்களின் சமுதாயத்தால் பாதுகாக்கப் படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. நம்பிக்கைகள் பெரும்பாலும் அச்ச உணர்வின் அடிப்படையில் அமைகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் நடக்கின்ற போது மனித மனம் அதற்கு ஒரு காரணத்தைப் படைக்கின்றது. அதுவே நாளடைவில் நம்பிக்கையாக மாறிவிடுகின்றது. சகுனங்கள் பார்ப்பதும் இந்த நம்பிக்கைக்குள் அடங்கும்.
நம்பிக்கையின் வகைகள்
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள் கணக்கற்றவை. அவற்றில் சில,
1) குழந்தை பற்றிய நம்பிக்கைகள்
2) பருவமடைதல் பற்றிய நம்பிக்கைகள்
3) மழை பற்றிய நம்பிக்கைகள்
4) நட்சத்திர நம்பிக்கைகள்
5) கடவுள் பற்றிய நம்பிக்கைகள்
6) உணவு, ஆடை, அணிகலன்கள் பற்றிய நம்பிக்கைகள்
7) மரணம் பற்றிய நம்பிக்கைகள்
8) கனவு பற்றிய நம்பிக்கைகள்
சகுனங்கள்
1) நல்ல சகுனம்
2) கெட்ட சகுனம்
3) பல்லி சகுனம்
என்பனவற்றைக் கூறலாம்.
வழக்கங்கள்
நாட்டுப்புற மக்களிடையே சில வழக்கங்கள் நடைமுறையில் இன்றளவும் காணப்படுகின்றன. அவை பின்வரும் நம்பிக்கைகள் சார்ந்தவை:
1) பெண்களுக்கு முழங்கால்வரை முடி வளர்ந்திருந்தால் தனது கணவனை விரைவில் இழப்பாள்.
2) செவ்வாய்க்கிழமையன்று மயிர் வெட்டினால் தரித்திரம் வரும்.
3) அகன்ற நெற்றியுடையவர்கள் அறிவாளிகள்.
4) ஆண்களுக்கு வலது கண் துடித்தல் நல்லது.
5) ஆண்களுக்கு இடது கண் துடித்தல் கெட்டது.
6) பெண்களுக்கு இடது கண் துடித்தல் நல்லது.
7) ஒருவர் தும்மும்போது ‘நீண்ட நாள் வாழ்க’, ‘நூற்றாண்டு வாழ்க’ எனக் கூறுவர்.
8) மறைவிடத்தில் மச்சம் இருப்பின் நல்லது.
9) திருமண நேரத்தில் மகன் அருகில் தாய் செல்லக் கூடாது.
10) சுபகாரியங்களை முதல் பிறைநாளன்று செய்யக் கூடாது.
சடங்குகள்
நாட்டுப்புற மக்கள் தங்களது வாழ்வில் இன்பம், துன்பம் என்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் சடங்கு செய்தல் என்பது முக்கியம். திருமணம், மரணம், குழந்தைப் பேறு, தெய்வ வழிபாடு என்று எல்லாவற்றிலும் சடங்குகள் இடம்பெறுகின்றன.
சான்று : திருமணச் சடங்கு
திருமணம் என்றால் பந்தல் போட்டு, அனைவருக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பர். நலுங்கு செய்தல், திருநீற்றுக் காப்பு இடல், அம்மி வலமாக வந்து அரசாணி முன்பு தாலி கட்டுதல் முதலியன சடங்குமுறைகள் ஆகும்.
விழாக்கள்
விழாக்கள் பெரும்பாலும் மதச் சார்புடையனவாகவோ, தொழில் சார்புடையனவாகவோ இருக்கும். தொழில் சார்புடைய விழாக்கள் தொழில் சிறப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டாடப் படுகின்றன. சமயச் சார்புடைய விழாக்களில் தெய்வ வழிபாடு கலந்திருக்கும்.
1) தமிழ் வருடப் பிறப்பு
2) சித்திரா பௌர்ணமி
3) வைகாசி விசாகம்
4) பிட்டுத் திருவிழா
5) விநாயக சதுர்த்தி
6) தீபாவளி
7) கார்த்திகை தீபம்
8) நவராத்திரி
9) பொங்கல் விழா
நாட்டுப்புறத் தெய்வங்களோடு தொடர்புடைய விழாக்கள் என்று முனைவர் க. காந்தி சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவை :
1) தேர்த் திருவிழா
2) செடல் போடும் திருவிழா
3) தீமிதி உற்சவம்
4) கம்பம் திருவிழா
5) மொந்தையன் திருவிழா
6) ஊரணிப் பொங்கல்
7) மயானக் கொள்ளை
8) காத்தவராயன் கழுவேற்றம்
போன்றவைகளாகும்.
விளையாட்டுகள்
நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை அறிவதற்கு விளையாட்டுகளும் பெரிதும் உதவுகின்றன. இவ்விளையாட்டுகளை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர்.
1) சிறுவர் விளையாட்டு
சிறுவர்கள் மட்டும் கூடி விளையாடுவது.
சான்று : பம்பர விளையாட்டு, தேர் விளையாட்டு…..
2) சிறுமியர் விளையாட்டு
சிறுமியர்கள் மட்டும் கூடி விளையாடுவது.
சான்று : பூப்பறிக்க வருகிறோம், பூசணிக்காய் விளையாட்டு.
3) சிறுவர் சிறுமியர் விளையாட்டு.
இருபாலாரும் கூடி விளையாடுவது.
சான்று : நொண்டி, நிலாப் பூச்சி, சாட்டு பூட்டு.
4) மகளிர் விளையாட்டு.
சான்று : பல்லாங்குழி, தட்டாங்கல், தாயம்.
5) ஆடவர் விளையாட்டு.
சான்று : சடுகுடு, பதினைந்தாம்புலி, உறியடி விளையாட்டு, சேவல் கட்டு, எருது கட்டு.
1) நிகழ்த்து கலைகள் (Performing Arts)
2) நிகழ்த்தாக் கலைகள் (Non – Performing Arts)
நிகழ்த்து கலைகள்
நிகழ்த்து கலைகளை மேலும் இரண்டாகப் பிரித்து,
1) சமூகச் சார்புக் கலைகள்
2) சமயச் சார்புக் கலைகள்
எனலாம். இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட கலைஞர்களால் நிகழ்த்தப்படுவன.
நாட்டுப்புற நாடகம்
விழாக்களின் போது நடத்தப்படும். பெரும்பாலும் இரவில் தொடங்கி விடிய விடிய நடைபெறும். வள்ளி் திருமணம் போன்ற நாடகங்கள் நாட்டுப்புற மக்களிடையே சிறப்புற்றவை. இந் நாடகங்கள் தற்காலச் சமுதாயத்திற்கு ஏற்பவும் வசனங்களில் சில மாற்றங்களை உள்வாங்கிப் பேசும். இதைப் பெரும்பாலும் நகைச்சுவைப் பகுதியில் காணலாம். நாட்டுப்புற நாடகக் கூறுகளாகத் தற்போது சமூக விழிப்புணர்வு, தேர்தல் பிரச்சாரம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு போன்ற கருத்துகளும் உள்ளடங்கியுள்ளன எனலாம்.
நாட்டுப்புற இசை
நாட்டுப்புற இசையினை வில்லுப்பாட்டில் காணமுடியும். இதில் வில்லுடன், இசைக் கருவிகளாக உடுக்கு, குடம், தாளம், கட்டை என்பனவற்றையும், பம்பை, உறுமி, தக்கை, துந்துபி என்ற நான்கு கருவிகளையும் சேர்த்து எட்டு வகையான பக்கக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த வில்லுப்பாட்டும் தற்பொழுது சமுதாயக் கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்க்கப் பயன்படுத்தப் படுகின்றது.
நாட்டுப்புற நடனம்
நாட்டுப்புறவியலில் நடனம் என்று குறிக்காமல் ஆட்டம் என்று தான் வழங்கப்படுகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கணியான் ஆட்டம் போன்ற ஆட்டங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
கூத்து
கூத்து என்பது பழமையின் சின்னமாக, பண்பாட்டின் எச்சமாக விளங்குகின்றது. தெருக்கூத்தின் வளர்ச்சிதான் நாடகம் என்றும் கூறலாம்.
கூத்தின் வகைகள்
1) பாவைக் கூத்து,
2) கழைக் கூத்து,
3) தெருக்கூத்து
எனப்படும்.
நிகழ்த்தாக் கலைகள்
இக்கலைகளை நாட்டுப்புற மக்களின் தொழில் சார்ந்த கலைகள் என்று தான் குறிப்பிட வேண்டும். இத்தொழில்கள், மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. கோயில்கள், தெய்வங்கள் இவற்றை அழகு படுத்துவதற்காகச் செய்யப்படுவன எனலாம்.
மண்பாண்டக் கலை
நாட்டுப்புற மக்களிடையே மண்பாண்டக் கலை மிகவும் சிறப்புப் பெற்றது. கலையழகுடன் கைத்திறனையும் காட்டி மண்பாண்டம் செய்வதையே பெரும் கலையாக்கிவிட்டனர். பல நிறங்களுடன், உருவ அமைப்பில் மாற்றமும் செய்து கலையழகுடன் பொருந்திய பொருட்களை உருவாக்குகின்றனர். கிராமங்களில் காணப்படும் ஐயனார் சிலைகள் இவர்களின் கைவண்ணத்திற்குச் சான்றாகும்.
பாய் பின்னுதல்
பாய் பின்னும் தொழில் நம்மிடையே பல தலைமுறையாக நடைபெற்று வருகிறது. பத்தமடைப் பாய் நெசவும், பனை ஓலையால் கூடை முடைதலும் கைத்தொழிலின் சிறந்த சான்றாகும்.
சிற்ப வேலைப்பாடு
மரத்திலும், உலோகத்திலும், கல்லிலும் சிற்பங்கள் செதுக்கப் படுகின்றன. கோவில் தேர்களில் அழகான சிற்பங்களைக் காணலாம். உலோகங்களில் தெய்வச் சிலைகளும், பாவை விளக்குகளும் செய்யப் படுகின்றன. உலோகத்தால் செய்வது போன்று கல்லிலும் சிற்பங்கள் செதுக்குவர்.
நாட்டுப்புற ஆடைகள்
நாட்டுப்புற மக்களின் ஆடைகள் பருத்தியால் ஆனவை, எளிமையானவை. ஆனால் வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்ப அவர்களுடைய ஆடைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்படியென்றால் அவர்களுக்கென்ற தனிப்பட்ட அடையாளத்தை அங்கு எதில் காணலாம் என்றால், அம்மக்களின், நம்பிக்கை சார்ந்த சடங்குகளிலும், தெய்வ வழிபாடுகளிலும் காணலாம். அந்த நிகழ்வின் போது எவ்வகை ஆடை அணிகின்றனர், நிறம் என்ன? போன்றவற்றைக் கொண்டு அவர்களின் பண்பாட்டின் தனித் தன்மைகளை அறிய முடியும்.
1) நாட்டுப்புற மருத்துவம்
2) நாட்டுப்புறத் தொழில் நுட்பவியல்
3) நாட்டுப்புறக் கட்டடக் கலை
என்று மூன்று வகைகளைப் பார்க்கலாம்.
நாட்டுப்புற மருத்துவம்
நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்கிறோம். நாட்டுப்புற மருத்துவத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,
1) மந்திர சமய மருத்துவம்
2) இயற்கை மருத்துவம்
மந்திர சமய மருத்துவம்
இவ்வகை மருத்துவம் மந்திரம், சடங்கு போன்றவற்றோடு தொடர்பு உடையதாக இருக்கும்.நாட்டுப்புற மக்களின் மருத்துவ மந்திரச் சடங்குகள் மந்திரித்தல், திருநீறு போடல், கோடாங்கி கேட்டல், பார்வை பார்த்தல், நேர்த்திக் கடன் செய்தல், பேயோட்டல், செய்வினை செய்தல் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த மருத்துவர்களை அம்மக்கள் பூசாரி, பேயோட்டி, பாம்புக்கடி மருத்துவர், எலும்பு முறிவு வைத்தியர், மந்திரவாதி, சாமியாடி, அருளாடி, நாட்டு வைத்தியர் எனப் பல பெயர்களால் அழைக்கின்றனர். மக்களது நோயினைத் தீர்ப்பதற்கு மத மந்திரத்தைத் தழுவி நிற்பதனை மந்திர சமய மருத்துவம் (Magio – religious medicine) எனலாம்.
இயற்கை மருத்துவம்
மூலிகை, தாது போன்ற பொருட்கள், மருந்துகள் முதலியவற்றை இயற்கை நாட்டுப்புற மருத்துவம் என்பர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உட்கொள்ளும் மருந்து, வெளிப்பூச்சு மருந்து என இருவகையுண்டு. இயற்கை நாட்டுப்புற மருத்துவம் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளது. பண்டைய மனிதனின் மருத்துவ அறிவை, நம்பிக்கையை இதன் மூலம் அறியலாம்.
சான்று : மஞ்சள் காமாலை நோய்
1) கீழாநெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணியை அரைத்து மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பால்சோறு சாப்பிட வேண்டும்.
2) சித்திர மூலம் மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.
நாட்டுப்புறத் தொழில் நுட்பவியல்
நாட்டுப்புற மக்கள் மரபு வழியாகக் கடைப்பிடித்து வரும் முறைகளைக் கையாண்டு பொருட்களைத் தயாரிக்கின்றனர். அந்தந்த இடத்திலுள்ள மூலப்பொருள்களைக் கொண்டு கைவினைப் பொருட்களாகக் கலை அம்சம் கொண்ட பொருட்களை மட்டுமின்றி, மனித வாழ்வுக்குப் பயன்படுத்தும் செக்கு, கலப்பை, மாட்டுவண்டி போன்ற பொருட்களையும் தயாரித்து, அதிலும் அவர்களின் தொழில் நுட்பத்தை வெளிப்படுத்துகின்றர்.
கட்டடக் கலை
நாட்டுப்புறக் கட்டடக் கலையில் மரபு வழிப்பட்ட திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. கட்டடம் கட்டுபவரே வீட்டின் அமைப்பைத் தீர்மானிப்பார். அவ்வீட்டின் அமைப்பு பெரும்பாலும் அப்பகுதியிலுள்ள மற்ற வீடுகளின் அமைப்பு போன்றிருக்கும். முன்னோர் கட்டிய கட்டட அமைப்பின் மாதிரியாகவும் இருக்கும். நாட்டுப்புறக் கட்டடக் கலையில் பயன்படுத்தும் பொருட்கள், கருவிகள், தொழில் நுட்ப முறைகள் மற்ற கட்டடக் கலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புற மக்கள் வசிக்கும் வீடுகளைத் தரையமைப்பு, கூரை ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தி உள்ளனர்.
1) நீண்ட சதுரத் தரை அமைப்பும் மட்டமான கூரையும்
2) நீண்ட சதுரத் தரை அமைப்பும் சாய்வான கூரையும்
3) வட்டமான தரை அமைப்பும் கூம்பு வடிவக் கூரையும்.
நாட்டுப்புற இலக்கிய வகைமை – வகை இவ்விரண்டிற்குமான வேறுபாட்டை விளக்கி வகை என்பது வகைமைக்குள் அடங்கும் என்பதை இப்பாடம் தெளிவுபடுத்துகிறது.
நாட்டுப்புற வழக்காறுகள் நாட்டுப்புற இலக்கியம்,நாட்டுப்புறக் கலைகள் என்று இரண்டாக வகைமைப்படுத்தப் பட்டுள்ளன.
நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள் ஒவ்வொன்றாக விளக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலைகளையும் மூன்றாக வகைப்படுத்தி அவற்றையும் தனித்தனியாக விளக்குகிறது, இப்பாடம்.
நாட்டுப்புற வழக்காறுகளைப் பற்றி வகைமைப்படுத்திப் பார்ப்பதன் மூலம் அம்மக்களின் பண்பாட்டினை அறிய முடியும்.
பாடம் - 4
நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் பல புதிய பார்வைகள், உண்மைகள் அல்லது சிந்தனைகள் தோன்றுகின்றன. அதன் மூலம் பல புதிய வாய்பாட்டு உருவாக்கத்திற்கும், பின்பு புதிய கோட்பாட்டு உருவாக்கத்திற்கும் தொடர்ந்து இட்டுச் செல்லுகிறது. அவ்வாறு ஆராயும் போது வாய்பாடுகள் மாறலாம், கோட்பாட்டுப் பார்வைகளும் மாறுவதற்கு இடம் உண்டு.
ஜேக்கப் கிரிமின் ஆய்வினைப் பின்பற்றி மாக்ஸ் முல்லர் (Max Muiller) (கி.பி.1823-1900) என்னும் ஆய்வாளர் புராணங்களைப் பற்றி ஆராயலானார். இவர் வடமொழியிலும், ஒப்பாய்விலும் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பொதுவான தோற்றம் பற்றிய கோட்பாட்டினை முன்மொழிந்தார். இந்தோ- ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் ஒரு முந்தைய தாய்மொழி மூலத்துக்கு இட்டுச் செல்வதாக இக்கோட்பாடு அமைந்தது. இந்த ஒப்பியல் முறையைக் கொண்டு பார்க்கும் போது நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் ஒரே தன்மையான கூறுகள் முந்தைய மக்களிடம் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது தான் கருத்து.
ஒருகளஞ்சு பொன் தருவோம் ஒண்ணுதலே மருத்துவமே
ரெண்டுகளஞ்சு பொன் தாறோம் நாசகியே வளர என்றாள்
மூணு களஞ்சு பொன் தாறோம் மொய் குழலே மருத்துவமே
. . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . .. . . . . . .
பத்துக்களஞ்சு பொன் தருவோம் பாவையரே மருத்துவமே
இப்பாடலில் மொழித் திறனைப் பார்க்க முடிகிறது.
நாட்டுப்புறவியலின் சில கூறுகளும் சமூகவியல் அடிப்படையில் காணப்படுகின்றன. நாட்டுப்புறவியலாளரும், சமூகவியலாளரும் சமூக அமைப்பினைப் பற்றி ஆராய்கின்றனர். பழமொழிகளும் கதைகளும் சாதி அடிப்படையில் அமைந்த சமூக உறவை விளக்குகின்றன. சிக்கலான மனப்பான்மையைக் (complex attitude) குறித்து ஆராய, நாட்டுப்புற இலக்கியங்கள் உதவுகின்றன. சமூகத்தில் காணப்படும் பெரும் பாரம்பரிய மரபு (Great tradition) சிறு பாரம்பரிய மரபு (Little tradition) இவற்றிற்கு இடையே உள்ள சிக்கலான உறவை நாட்டுப்புறவியல் விரிவாக விளக்கிக் காட்டுகிறது.
நாட்டுப்புற மக்களிடையே காணப்படும் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கொண்டு நாட்டுப்புறவியல் மக்களது வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இனி இதில் எந்த விதத்தில் சமூகம் பற்றிய கருத்துகள் அமைந்துள்ளன என்று பார்க்கலாம்.
சமூக வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறியக் குடும்பம், வழக்கம், ஒழுக்கம், மதம் போன்றவற்றை ஆராய்தல் அவசியம். சமூகவியலாளர் இதனைச் சமூகத்தின் நிறுவன அமைப்பு என்பர். இவற்றை நாட்டுப்புறவியலில் காணமுடியும்.
குடும்பம் சமூகத்தின் மூலக்கூறு. குடும்ப அமைப்புகளைக் கொண்டு கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம் என இருவகைப் படுத்தலாம். தாலாட்டுப் பாடல்கள் மூலம் குடும்ப உறவு முறைகளையும், சடங்குகளையும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய சமுதாயத்தில் கூட்டுக் குடும்ப அமைப்பு மறைந்து தனிக் குடும்ப அமைப்பை நோக்கிச் செல்வதை நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிகிறோம். அதே போன்று பலதார மணம் அருகி ஒருதார மணத்தை நோக்கிச் செல்லும் பண்பையும் பார்க்கிறோம்.
வாழ்வு தொடர்பான பழக்க வழக்கங்கள், சடங்குகள், சாவு தொடர்பான பழக்க வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றையும் காணலாம்.
சான்று :
1. சாதிப் பிரச்சனை
முத்துப் பட்டன் கதைப் பாடல், சின்னத் தம்பி போன்ற கதைப் பாடல்கள் மூலம் சாதிப் பிரச்சனைகளைத் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.
2. சொத்துரிமை
பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத நிலையைக் காட்டும் கதைதான் நல்லதங்காள். ஒப்பாரிப் பாடல்களின் வாயிலாகக் கணவனை இழந்த பெண்ணின் ஆதரவு அற்ற நிலை பற்றி அறிய முடியும்.
3. வீர வழிபாடு
கதைப் பாடலின் தலைவர்களான காத்தவராயன், மதுரை வீரன் போன்றோரைத் தெய்வமாக வழிபடுதல் என்பது அத்தலைவர்களின் வீரத்தைப் போற்றும் மரபாகும். இந்த மரபினைச் சங்க காலத்தின் நடுகல் வழிபாட்டோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
ஒற்றுமைகள்
இவ்விரண்டு இயல்களும் மனிதப் பண்பாட்டை ஆராய்வனவாகும்.
நாட்டுப்புறவியலாளர் பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள சடங்குகளை நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் ஆராய்கிறார். பண்பாட்டு மானுடவியலாளர் சமூக அமைப்பின் கீழ் இவற்றை ஆராய்கிறார்.
மானுடவியலாளர் ஓர் இனத்தின் பண்பாட்டினை ஆராயும் போது அவ்வின மக்களிடையே காணப்படும் பழங்கதைகள், நம்பிக்கைகள் முதலியவற்றை ஆராயாவிட்டால் அவரது ஆய்வு முழுமை பெறாது.
மரபு வழிப்பட்ட நம்பிக்கைள், கலை, கைவினைப் பொருட்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், முதலிய ஆய்வுகள் நாட்டுப்புறவியலுக்கும் மானுடவியலுக்கும் பொதுவானவையாகும்.
வேறுபாடுகள்
நாட்டுப்புறவியலும், மானுடவியலும் மிக நெருங்கிய தொடர்புடையவை என்றாலும் இரண்டிற்கும் இடையே சில குறிப்பிடத் தக்க வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அவற்றையும் தெரிந்து கொள்வது அவற்றை மேலும் புரிந்து கொள்ள உதவும்.
மானுடவியலாளரைப் பொறுத்தவரை நாட்டுப்புறவியல் என்பது பண்பாட்டின் ஒரு பகுதியே தவிரப் பண்பாட்டின் முழுமையான ஒன்றல்ல.
பொதுவாக மானுடவியலாளர் தங்கள் இனத்தின் பண்பாடுகளைத் தவிர்த்துப் பிற பண்பாடுகள் பற்றிப் படிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாட்டுப்புறவியலாளரோ தங்களது இனத்தின் பண்பாடு பற்றியும் தமக்கான சில குறிப்பிட்ட மரபுகளைப் பற்றியும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது இவ்விரண்டு துறைகளிலுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாட்டுப்புறவியலின் கோட்பாடுகளுக்கு மண்ணியலும் (Geology) உயிரியலும் (Biology) பல மாதிரிகளைத் தந்துள்ளன. மண்ணியலின் பரிணாம வாதக் கருத்து நாட்டுப்புறவியலாளர்களையும் பாதித்தது. இதன் மூலமாகக் கீழ்க்கண்ட கருத்துகள் பெறப்பட்டன. அவை,
கடந்தகாலப் பண்பாட்டு மரபுகள் பல தலைமுறைகளாக ஒன்றிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டுத் தற்காலத்தே பண்பாட்டு எச்சங்களாக மிஞ்சியுள்ளன எனக் கருதத் தூண்டியது.
ஒரு காலத்தில் உயிர்ப்புடன் விளங்கிய பண்பாட்டுக் கூறுகளே இன்றையே நாட்டுப்புற வழக்காறுகளாக உள்ளன எனக் கருதப்பட்டது.
இந்த மண்ணியல் கருத்தாக்கத்தின் பின்னணியில் நாட்டுப்புறவியல் கருத்தாக்கமும் புரிந்துகொள்ளப்பட்டு, நாட்டுப்புற வழக்காறுகள் சாக மறுத்து இன்றளவும் உயிருடன் இருக்கும் பழைய காலத்துப் பண்பாட்டு எச்சங்கள் தாம் என்பது உறுதி செய்யப்பட்டது.
மனிதனுடைய கடந்த காலத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறுவதால், நாட்டுப்புறவியலையும் வரலாற்று அறிவியல் (
வரலாற்றுப் பேரறிஞரும் நாட்டுப்புறவியல் பேரறிஞரும் பண்பாட்டு வரலாற்று மீட்டுருவாக்கத்தில் (Reconstruction of cultural history) ஆர்வம் உடையவர்கள்.
மரபு என்பது நாட்டுப்புறவியலுக்கும் வரலாற்றிற்கும் பொதுவானதாகும். வாய்மொழி மரபு நாட்டுப்புறவியலின் உயிர்நாடியாகும்.
சான்று :
நாட்டுப்புற இலக்கியத்தின் மூலம் ஒரு நாட்டின் வரலாற்றையும் அரசியல், சமூக வரலாற்றையும் அறிந்து கொள்ளலாம். கதைப் பாடல்களில் வரலாற்றுக் கதைப்பாடல்கள் (
கட்டபொம்மன் கதைப் பாடலில் (கி.பி.1761 – 1799) ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த முதல் வீரன். பாஞ்சாலங்குறிச்சிக்கும் எட்டயபுரத்துக்கும் ஏற்பட்ட பகைமை, ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் ஏற்பட்ட மோதல், வெள்ளையம்மாளின் வீரம் அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தின், சமுதாய வரலாற்றை அறியலாம்.
நாட்டுப்புறவியல் துறையை மேற்கூறப்பட்ட துறைகளோடு மட்டுமல்லாது, புதியதாகத் தோன்றி வளர்ந்து வரும் மற்ற துறைகளோடும் ஒப்பிட்டு ஆராய்வதற்கும் இடம் உண்டு. அத்தகு ஆய்வுகளை, கண்டிப்பாக இனி வரும் ஆய்வாளர்கள் மேற்கொள்வார்கள்.
நாட்டுப்புறவியலின் மொழியியல் சிறப்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
நாட்டுப்புறவியலில் காணப்படும் உளவியல் கருத்துகளையும் காணலாம்.
நாட்டுப்புறவியலின் வழக்காறுகளில் காணப்படும் சமுதாயச் சிந்தனை பற்றியும் அறிய முடிகிறது.
நாட்டுப்புறவியலில் காணப்படும் பண்பாட்டு மரபினை மானுடவியலோடு ஒப்பிட்டும் பார்க்கப்படுகிறது.
நாட்டுப்புற இலக்கியத்தை மண்ணியல் அடிப்படையிலும் காணலாம்.
நாட்டுப்புறவியலில் காணப்படும் வரலாற்றுக் கூறுகளையும் பார்க்கிறோம்.
பாடம் - 5
சான்றாக :
வில்லுப்பாட்டைப் பற்றி ஆய்வாளர் ஒருவர் ஆய்வு செய்ய முனைகிறார் என்றால் அவர் தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கே களப்பணிக்குச் சென்றாக வேண்டும். பிற மாவட்டங்களில் வில்லிசை அதிகமாக வழக்கில் இல்லை. அதுபோன்று தெருக்கூத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர் தமிழகத்தின் வட மாவட்டங்களையே களப் பணிக்கான களமாகத் தேர்வு செய்ய வேண்டும். தென் மாவட்டங்களில் தெருக்கூத்துகளைக் காணவியலாது.
அதே போன்று களப்பணிக் களத்தைத் தேர்ந்தெடுக்கும் போது ஆய்வாளரின் நண்பர், உறவினர் போன்றோர் அக்களத்தில் வாழ்பவராக இருந்தால், அம்மக்களோடு தொடர்பு கொள்ள, உறவினை ஏற்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
1) மக்களின் பண்பாடு பற்றிய பொதுவான செய்திகளையும் கற்றறிதல் வேண்டும்.
2) அக்களத்தைக் குறித்துத் தொல்லியலாளர்கள் ஏதேனும் நூல்கள் எழுதியிருப்பின், அவற்றையும் சேர்த்துப் படித்தறிதல் வேண்டும்.
3) அக்களத்தைச் சார்ந்த சங்கத்தினர் பல்வேறு பொருள் குறித்துச் சிறு குறிப்புகள் வெளியிட்டிருப்பின், அவற்றைத் தொகுத்து அப்பகுதியைப் பற்றி அறிதல் அவசியம்.
4) பயணிகளுக்குரிய வழிகாட்டி நூல்கள் வெளியிடப்பட்டிருப்பின், அவற்றைப் படித்தறிதல் தேவையானதாகும்.
5) மக்கள் நல்வாழ்வுத் துறையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையினர் வெளியிட்டுள்ள அரசாங்க வெளியீடுகளைச் சேகரித்தல் வேண்டும்.
6) தேசிய, வட்டார, வரலாறுகள் போன்றவற்றைத் தொகுத்தறிதல், பத்திரிகைச் செய்திகளைத் திரட்டுதல் முக்கியம்.
7) நாட்குறிப்புகள், வட்டார மக்களுள் முக்கியமானோர் பற்றிய வரலாறு அறிதல் வேண்டும். அப்பகுதி மக்களைப் பற்றி, அப்பகுதியில் வாழும் எழுத்தாளரால் ஏதேனும் நாவல்கள் எழுதப்பட்டிருப்பின், அவற்றையும் படித்துணருதல் வேண்டும்.
மேலும் கள ஆய்வு செய்யப் போகும் இடம், அங்குச் செல்வதற்கான சாலை வசதிகள், அருகிலுள்ள பெரிய ஊர்கள், போக்குவரத்து வசதிகள், அங்குள்ள மக்களின் உணவுப் பழக்கங்கள் போன்ற செய்திகளை அறிந்து கொள்வதன் மூலம் ஆய்வாளர், கள ஆய்வின் போது தம்மைப் புதுமனிதராகக் காட்டாமல் பழகிய மனிதராக அறிமுகம் ஆகிறார்.
பால் இன வேறுபாடு
கள ஆய்வின் போது ஆய்வாளர் எதிர்கொள்ள நேரிடும் பால் பாகுபாட்டுச் சிக்கல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) ஆண் ஆய்வாளர் ஆண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.
2) ஆண் ஆய்வாளர் பெண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.
3) ஆண் ஆய்வாளருக்குப் பொது நிகழ்வுகளில் ஏற்படும் சிக்கல்கள்.
4) பெண் ஆய்வாளருக்குப் பொது நிகழ்வுகளில் ஏற்படும் சிக்கல்கள்.
5) பெண் ஆய்வாளர் பெண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.
6) பெண் ஆய்வாளர் ஆண் தகவலாளியை அணுகும்போது ஏற்படும் சிக்கல்கள்.
இச்சிக்கல்களை எல்லாம் ஆய்வாளர் முன்கூட்டியே தெளிவாக்கிக் கொண்டால், களப்பணியில் தான் சந்திக்கும் ஆண், பெண் தகவலாளிக்கு ஏற்ப நடந்து களப்பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
வயது அடிப்படையில்
பாடல் வகைகள், எந்தெந்த வயதினரிடம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுகிறதோ, அந்தந்தப் பாடல் வகைகளை அந்தந்த வயதினரிடம் சேகரிப்பதே எளிதானதும் பயன் தரத் தக்கதுமாகும். அதை அறிந்து, அதற்கேற்றபடி பாடல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
சான்றாக :
ஏற்றப் பாடல்கள், மீன்பிடிப்புப் பாடல்கள், வளைகாப்புப் பாடல்கள் முதலியன வயதானவர்களிடம் மட்டுமே கிடைக்கக் கூடியவை.
சாதி அடிப்படையில்
பலவிதமான சாதிகளைக் கொண்டது சமூகம். ஒவ்வொரு சாதிக்கும் என்று தனிப்பட்ட அடையாளம் காணப்படுகிறது. களப்பணியை மேற்கொள்கிற ஆய்வாளன் பலதரப்பட்ட சாதியைச் சார்ந்த தகவலாளிகளைக் காண நேரிடும். எனவே ஆய்வாளன் தான் சந்திக்க இருக்கும் தகவலாளி எந்தச் சாதி, சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அறிந்து, அந்தச் சாதியின் தனிப்பட்ட அடையாளங்கள், சடங்குகள், பழக்க வழக்கம் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடன் நெருங்கிப் பழகி உறவினை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.
1) முதல் நிலைத் தரவுகள்
2) துணை நிலைத் தரவுகள்
சான்றாக :
‘தெருக்கூத்து’ பற்றிய ஆய்வில் தெருக்கூத்தைப் பல்வேறு சூழல்களில் உற்று நோக்கிக் கள ஆய்வில் திரட்டிய தகவல்கள், கூத்துக் கலைஞர்கள், பார்வையாளர் போன்றோரிடம் நிகழ்த்திய நேர்காணலின் வாயிலாகக் கிடைத்த தகவல்கள்; கூத்து தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள் ஆகியவற்றை முதல் நிலைத் தரவாகக் கொள்ளலாம். கூத்து, தமிழ் நாடகம் பற்றி வெளிவந்துள்ள ஆய்வேடுகள், நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றைத் துணை நிலைத் தரவாகக் கொள்ளலாம்.
1) உற்று நோக்கல்
2) நேர் காணல்
3) வினாத் தொகுப்பு
இவற்றில் நுட்பமான உத்திகள் பலவும் மேற்கொள்ளப்படும்.
உற்று நோக்கலின் வகைகள் :
1) பங்கு பெறும் உற்று நோக்கல் (Participant observation)
2) பங்கு பெறா உற்று நோக்கல் (Non-Participant observation)
3) செய்காட்சி முறை (Arrangement observation)
பங்கு பெறும் உற்று நோக்கல்
பங்கு பெறும் உற்று நோக்கலில் நாட்டுப்புற வழக்காற்று நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, அதில் ஆய்வாளரும் முழுமையாகப் பங்கு கொண்டு செயல்களில் விவாதங்களில் கலந்து கொள்வதாகும்.
சான்றாக :
நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பில் பின்பாட்டுப் பாடுபவராகவோ, விடுகதைகளைப் போடுபவராகவோ, வில்லுப் பாட்டில் கதை கேட்கும் உதவியாளராகவோ வழக்காற்று நிகழ்வுகளில் தம்மை இணைத்துக் கொண்டு உற்று நோக்கலில் ஈடுபடலாம்.
பங்கு பெறா உற்று நோக்கல்
ஆய்வாளர் ஆய்வுச் சூழல் மற்றும் நிகழ்விலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு தரவுகளைத் திரட்டும் முறை பங்கு பெறா உற்று நோக்கல் எனப்படும். சமூகப் பண்பாட்டுச் சூழல்களையும், சிக்கல்களையும் ஆய்ந்திடப் பங்கு பெறா உற்று நோக்கல் சிறந்த முறையாகும். பங்கு கொள்ளாமல் பார்வையாளராக ஒதுங்கியிருந்து நிகழ்ச்சியைக் கவனிக்கும் போது, சேகரிப்பாளர் நிகழ்ச்சியின் இயற்கையான போக்கில் குறுக்கிடாமல் இருக்கின்றார். குறிப்புகள் எடுத்துக் கொள்ளவும், நிகழ்ச்சியினை ஒலிப்பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அவருக்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் தகவலாளிகளின் கவனத்தைத் திருப்பாமலும் இருக்கும். பங்கு பெறும் உற்று நோக்கலை மேற்கொள்ளும் ஆய்வாளருக்குக் கிடைக்கும் அனுபவப் பரப்பும், தகவல் அளவும் பங்கு பெறா உற்று நோக்கலை மேற்கொள்பவருக்குக் கிடைப்பதில்லை. மேலும் ஆய்வாளர் தம்முள் ஒருவராகக் கலக்காமல் பட்டும் படாமல் இருப்பதைப் பல நேரங்களில் தகவலாளர்கள் விரும்புவதில்லை. இத்தகைய இடர்ப்பாடுகள் இதில் காணப்படுகின்றன.
செய்காட்சி முறை
செய்காட்சி முறை என்பது பரிசோதனை முறையில் ஆய்வாளர் தாமே ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்து, தம் தேவைக்கேற்ப நிகழ்வின் காரணிகளைக் கட்டுப்படுத்தியும் நீக்கியும் உற்று நோக்குவதாகும். ஆய்வாளரே ஒரு நிகழ்வை உருவாக்கிச் செய்து காண்பதால் இது செய்காட்சி முறை எனப்படுகிறது.
ஆய்வாளர் இம்முறையைப் பயன்படுத்தித் துல்லியமான விடை காணும் வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் நிகழ்வை மீண்டும் மீண்டும் உருவாக்கி அறிந்து கொள்ளலாம். நிகழ்கலைகளின் ஆட்ட முறைகளைத் துல்லியமாகப் படம் எடுப்பதற்குச் செய்காட்சி முறை பயன்படுகிறது.
களப்பணியில் தகவல் திரட்டுவதன் அடிப்படையில் நேர்காணலை இருவகைப் படுத்தலாம்.
1) கட்டமைப்புடைய நேர்காணல் (Structured Interview)
2) கட்டமைப்பில்லா நேர்காணல் (Unstructured Interview)
கட்டமைப்புடைய நேர்காணல்
நேர்காணலின் நோக்கம், பயன், வினாக்கள், அணுகுமுறை ஆகிய அனைத்தையும் முன்னரே தீர்மானித்துத் திட்டமிட்டு நடத்தப் படுவதாகும். தரவுகளைத் துல்லியமாகப் பெற இம்முறை உதவும். ஆனால் இம்முறை இயல்பான சமூகச் செயலாக இல்லாமல் எந்திரத்தனமாகவும் செயற்கைத் தன்மையுடையதாகவும் ஆகிவிடலாம்.
கட்டமைப்பில்லா நேர்காணல்
நேர்காண்போரின் திறமை, தகவலாளியின் மனநிலை, சூழல் இவற்றிற்கேற்ப அந்தந்த நேரத்தில் அமைத்துக் கொள்வது கட்டமைப்பில்லா நேர்காணல் ஆகும். இது நெகிழ்ச்சியும், இயல்புப் போக்கும் உடையது. முன்னரே வினாக்களை உருவாக்காமல் தகவலாளியை அணுகி நேர்காணலைத் தொடங்குவார். தகவலாளியும் பரந்த அளவில் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள், வழக்காற்று அனுபவங்கள், எண்ணங்கள், உணர்வுகள் போன்றவற்றை இயல்பான போக்கில் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைப்பார். அதிலிருந்து ஆய்வாளர் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நாட்டுப்புற வழக்காற்றுக் களப்பணிக்குக் கட்டமைப்பில்லா நேர்காணல் மிகவும் பயன் தரும்.
நாட்டுப்புற வழக்காறுகளை எடுத்துரைப்போர் நிகழ்கலைக் கலைஞர்கள், நாட்டுப்புறப் பார்வையாளர்கள், சடங்குகளை நிகழ்த்துவோர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு குறைந்தவர்களாக உள்ளனர். இவர்களிடம் வினா நிரலைக் கொடுத்துத் தகவலைப் பெறுதல் என்பது இயலாத செயல்.
உதவியாளர் மூலம் அணுகுதல்
ஆய்வாளர் தரவுகளைச் சேகரிக்கக் களத்திற்குத் தானாக நேரடியாகச் செல்லாமல், அக்களப்பகுதியில் வாழும் நண்பர், உறவினர் போன்றவரின் மூலம் அம்மக்களோடு தொடர்பு கொண்டு, உறவினை ஏற்படுத்திக் கொள்ளுதல் மற்றொரு முறை. இவ்வாறு உதவுபவர் அவருக்குத் தகவலாளியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
ஆய்வாளர் அரசு அதிகாரிகளையும் தமக்கு உதவுபவர்களாக வைத்திருக்கக் கூடாது. அவர்களுடன் தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மூலம் மக்களை அணுகக் கூடாது. அவ்வாறு அணுகும் போது ஆய்வாளருக்குப் பல வேளைகளில் உண்மையான தகவல்கள் கிடைக்காமல் போகலாம்.
இவ்வாறு நமக்கு உதவுபவரைத் தெரிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவரைத் தெரிவு செய்தபின் ஆய்வுக் களத்தில் உள்ள மக்கள் ஆய்வாளரை அவரது நண்பராகவோ அல்லது உறவினராகவோதான் பார்ப்பர். அவரை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்களோ அவ்வாறே ஆய்வாளரையும் நோக்குவர். எனவே ஆய்வாளர் இதில் கவனமாகச் செயல்பட்டால் கள ஆய்வின் போது பல தொல்லைகளைத் தவிர்க்கலாம்.
1) மரபு வழிச் சேகரிப்பு முறை (Traditional Media)
2) அச்சுச் சாதனங்களின் வழிச் சேகரிப்பு முறை (Printing Media)
3) மின்னணுச் சாதனங்களின் வழிச் சேகரிப்பு முறை (Electronic Media)
1) இயற்கைச் சூழலில் பதிவு செய்தல்
2) செயற்கைச் சூழலில் பதிவு செய்தல்
3) செயற்கைச் சூழலை இயற்கைச் சூழலாக மாற்றிப் பதிவு செய்தல்
சான்றாக :
ஒரு சிலர் மட்டுமே செயற்கைச் சூழலில் பாடும் திறன் உடையவர்களாக இருப்பர். பெரும்பான்மையோர் பாடப்படும் சூழலில் தங்களை மறந்து ஈடுபடும் நிலையில் மட்டுமே சரளமாகப் பாடுவர். மற்ற சூழ்நிலைகளில் பாடும்போது பாடல்கள் சரளமாக வராமல் இடையில் நிறுத்தி விடுவர்.
சான்றாக :
கும்மிப் பாடலைச் சேகரிக்க வேண்டுமென்றால் ஒருவரை வரவழைத்துப் பாடச் சொல்லாமல், ஒரு குழுவினரை அழைத்துக் கும்மியடித்துப் பாடச் செய்வது. இல்லையென்றால், ஓரிடத்தில் இருந்து கொண்டே குழுவினரைக் கையைச் சீராகத் தட்டச் செய்து, பின்பாட்டுப் பாடச் செய்ய வேண்டும். இச்சூழலில் சேகரிக்கப்படும் பாடல்கள் இயற்கைச் சூழலில் பாடப்படும் பாடல்களை ஒத்திருக்கும்.
களத்தினைத் தேர்ந்தெடுத்தல், உதவியாளரைத் தேர்ந்தெடுத்தல், களத்திற்குச் செல்வதற்கு முன்-பின் தான் கவனிக்க வேண்டியவை இவற்றை ஆய்வாளர் முன் கூட்டியே சரியாகத் திட்டமிட்டுக் கொள்கிறார்.
ஆய்வாளர் தரவுகளைச் சேகரிக்கக் கையாளும் அணுகுமுறைத் திறன் முக்கியமானது. அதற்காகப் பயன்படும் தொழில்நுட்பக் கருவிகளும், அவற்றின் பயனும் சொல்லப்பட்டுள்ளது.
கள ஆய்வினைத் திட்டமிட்டுத் தெளிவோடு நிறைவேற்றினால், ஆய்வாளர் தனது ஆய்வுப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும். இவ்வாறு கள ஆய்வு குறித்தும் தரவுகளின் சேகரிப்புக் குறித்தும் அறிந்து கொண்டு படிக்கத் தொடங்குங்கள்!
பாடம் - 6
சொல்லாட்சி
‘கற்பு’ என்பது ஒரு கோட்பாடு. நடைமுறை வாழ்வில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடு. இதன் வாழ்வியல் நெறிமுறை (Standard of life) என்னவென்றால், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதாகும். எனவே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே, சமுதாய நிகழ்வாகிய திருமணச் சடங்கின் மூலம் இணைந்து வாழும் வாழ்க்கையே கற்புக் கோட்பாட்டினைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கொள்கையின் சிந்தனைத் தெளிவினாலும் – ஏற்றுக் கொள்ளல் என்பதாலும் – சமுதாய நிலைப்பாட்டினாலும் கோட்பாடுகள் உருவாகின்றன.
கோட்பாடுகளின் நோக்கம்
உலகளாவிய நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது நாட்டுப்புறவியலின் தனித்த சிறப்பான விரிந்த நோக்கப் பார்வையாகும். அதாவது நாட்டுப்புற வழக்காறுகளை வட்டார, தேசிய, சர்வ தேசிய அளவில் புரிந்து கொள்ளுதல்; இதற்குப் பல்வேறு வகையான வழக்காறுகளை, பல்வேறு வட்டார, மொழி, பண்பாட்டுச் சூழல்களிலிருந்து திரட்டி அவற்றை ஒப்பாய்வு செய்தல்; அவற்றுக்கு இடையில் காணப்படும் உலகளாவிய கூறுகளைக் கண்டுபிடித்தல் ஆகியவையே இதன் அடிப்படை நோக்கமாகும். மேலும் நாட்டுப்புற வழக்காறுகளில் பண்பாட்டுத் தனித் தன்மைகளையும், அத்தனித் தன்மைகளுக்கான காரணங்களையும் அறிவதும் இக்கோட்பாடுகளின் நோக்கமாகும்.
நாம் மேற்கொள்ளும் கோட்பாடுகளில் எதை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலும் அவ்வாய்வு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்குள் சுருங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, எந்த ஒரு கோட்பாட்டையும் பல பண்பாட்டுச் சூழல்களிலும் ஆராய்ந்து அக்கோட்பாடு பல பண்பாடுகளுக்கும் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படிப் பொருத்தமாக அமைந்தால்தான் அக்கோட்பாடு உலகளாவிய பயன்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படும். அதே சமயம் அவ்வாறு சொல்லப்படுகின்ற கோட்பாட்டை அப்படியே எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆதரவு, எதிர்ப்பு, மாற்றம், எல்லாமே தோன்றும். ஆனால் அவை அனைத்தும் அக்கோட்பாட்டின் வளர்ச்சிக்கு உதவும். கோட்பாடு வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் நம்பகமான தரவுகள், ஆழமான பகுப்பாய்வு, அறிவுப் பூர்வமான அல்லது தர்க்கப் பூர்வமான விவாதங்கள், பல பண்பாடுகளுக்கும் பொருந்தும் தன்மை போன்றவைகள் இருப்பது முக்கியம் ஆகும்.
1) இருநிலைக் காலக் கோட்பாடுகள்(Diachronic Theories)
2) ஒருநிலைக் காலக் கோட்பாடுகள்(Synchronic Theories)
இருநிலைக் காலக் கோட்பாடுகள் (DiachronicTheories)
இருநிலைக் காலக் கோட்பாடுகள் (Diachronic Theories) கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைப்பவையாக அமையும். தோற்றம், பரிணாமம், மரபுகள், வரலாற்று மீட்டுருவாக்கம், தேசிய வாதம், காதலின்பம் (Romantic) பற்றிய கோட்பாடுகள் இந்த வகையைச் சார்ந்தவையாகும். இந்தக் கோட்பாடுகள் 19ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்றிருந்தன.
ஒருநிலைக் காலக் கோட்பாடுகள் (Synchronic Theories)
20ஆம் நூற்றாண்டில் ஒருநிலைக் காலக் கோட்பாடுகள் முக்கியத்துவம் பெற்றன. இக்கோட்பாடுகள் நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் தந்தன. அமைப்பு, வடிவம், அர்த்தம், பயன்பாடு முதலியவற்றுக்கு முக்கியத்துவம் தந்தன.
கோட்பாடுகள் என்பன முடிவானவை என்பதல்ல. அவை, நாட்டுப்புற மரபுகள், வழக்காறுகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ள உதவும் கருவிகளே. முன்னமே சொன்னது போல 12 கோட்பாடுகளை நாட்டுப்புற வழக்காற்று அறிஞர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் நம் பாடப் பகுதியில் பக்க வரையறை கருதி மூன்று கோட்பாடுகள் மட்டுமே விளக்கப் பெறுகின்றன. அவையாவன:
அமைப்பியல் கோட்பாடு
வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு
சூழல் கோட்பாடு
நாட்டுப்புற வழக்காற்றுக் கதைகளின் பகுதிகளாகிய உறுப்புகளின் விளக்கமும், பகுதிகளாகிய உறுப்புகள் ஒன்றோடு ஒன்று கொள்ளும் உறவும், பகுதிகள் முழுமையோடு கொள்ளும் உறவும் அமைப்பியல் ஆகும். ஆக, அமைப்பியல் என்பது நாட்டுப்புற வழக்காற்றின் உள்ளடக்கத்தைப் பகுத்தும் – தொகுத்தும் – இணைத்தும் அறிந்து கொள்வது எனலாம்.
சான்று
பிராப் சில வாக்கியங்களைக் கூறி அவற்றின் நிலைத்த கூறு என்று எவற்றைக் கூறலாம் என்பதையும் விளக்கியுள்ளார்.
1) ஒரு ஜார் ஒரு கழுகை ஒரு வீரனுக்குக் கொடுக்கிறான். அந்தக் கழுகு அந்த வீரனை வேறொரு நாட்டுக்குக் கொண்டு செல்லுகிறது. (ஜார் = ரஷிய மன்னர்)
2) ஒரு முதியவர் கசென்கோவிற்கு ஒரு குதிரையைக் கொடுக்கிறார். அந்தக் குதிரை கசென்கோவை வேறொரு நாட்டிற்குக் கொண்டு செல்கிறது.
3) ஒரு மந்திரவாதி இவானுக்குப் படகைக் கொடுக்கிறான். அந்தப் படகு இவானை வேறொரு நாட்டுக்குக் கொண்டு செல்கிறது.
4) ஓர் இளவரசி இவானுக்கு ஒரு மோதிரம் கொடுக்கிறாள். அந்த மோதிரத்திலிருந்து சில இளைஞர்கள் தோன்றி இவானை வேறொரு நாட்டுக்குச் சுமந்து செல்கின்றனர்.
மேற்சொல்லப்பட்ட நான்கு கதைகளில் இரண்டு வகையான தன்மைகளைப் பார்க்க முடிகிறது.
1) நிலையானது.
2) நிலையற்றது.
நிலையற்றது என்று எடுத்துக்கொண்டால் கதைப் பாத்திரங்களின் பெயர்கள், இயல்புகள், அனுப்புகின்றவர், கொடுக்கப்படுகின்ற பொருள் இவைகள் வேறுபடுகின்றன.
நிலையானது என்று எடுத்துக் கொண்டால் பாத்திரங்களின் செயல்பாடுகள், அனுப்புவதும், போவதும், கொடுக்கப்படுவதும் நிலையானவை. இவைகளைத் தான் செயல் என்று கூறுகிறார் பிராப். இந்தச் செயல் (வினை- function) தான் கதைகளின் அடிப்படை அலகு.
பிராப் கதைகளின் மாதிரி (Model) அமைப்பினை உருவாக்கினார். அதில் முப்பத்தொரு வினைகளைப் பற்றிக் கூறுகின்றார். அந்த வினைகளுக்கான குறியீட்டையும் அமைத்துள்ளார். இந்தக் குறியீடுகள் பல்வேறு கதைகளை ஒப்பிடும் திட்டத்திற்குப் பின்னர் உதவும். கதைத் தொடக்கச் சூழலில் ஆரம்பித்து முப்பத்தொரு வினைகளையும், குறிகளையும் பார்க்க வேண்டும்.
இந்த 31 வினைகளும் ஒரே கதையில் இடம்பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. சில வினைகள் சில தனித்த கதைகளில் இடம்பெறாமலும் அமையலாம். ஆனால் வினைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றின் வரன்முறை அடுக்கு நிலையானதாகவும் அமையும். கதாபாத்திரங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் 7ஆக அமையும்.
ஆலன் டண்டிஸ்
இவர் பிராப்பின் தேவதைக் கதைகளின் அமைப்பியல் மாதிரியை மாற்றியமைத்து வட அமெரிக்க இந்திய நாட்டார் கதைகளுக்குப் பொருத்தி ஆய்வு செய்தார். அமைப்பியல் ஆய்வை நாட்டார் கதைகளில் மட்டும் அல்லாமல் பழமரபுக் கதைகள், விளையாட்டுகள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம் என்பதை நிறுவினார். பிராப்பின் 31 வினைகளை 10 ஆகச் சுருக்கிக் காட்டினார்.
கிளாட் பிரிமாண்ட்
கிளாட் பிரிமாண்ட், பிராப்பின் அமைப்பியல் மாதிரியைப் பின்பற்றி மற்றொரு அமைப்பியல் மாதிரியை முன் வைத்துள்ளார். அவர் பிரெஞ்சு நாட்டுத் தேவதைக் கதைகளைத் தமது ஆய்வுக்கு உட்படுத்தினார். பிரெஞ்சு தேவதைக் கதைகள் மூன்று இணை செயல்களைக் கொண்டவை என்ற கருதுகோளை முன்வைத்தார். அவை :
1) சேதப்படுத்தல் (deterioration) முன்னேற்றம் (improvement)
2) தகுதி (merit) பரிசளித்தல் (reward)
3) விரும்பத்தகாதது (unworthiness) தண்டனை (Punishment)
இம்மூன்று இணைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்படும். அத்தொடர்பு இவ்வாறு அமையும்:
‘அ’ சேதப்படுத்தல் ‘அ’ முன்னேற்றமடைதல்
‘இ’ உதவி செய்தவனுக்கு நன்றி ‘இ’ உதவி செய்தவனின் கொடை
‘ஆ’ விரும்பத்தகாத வில்லனின் காரணமாக ‘ஆ’ வில்லனுக்குத் தண்டனை
பிராப் கண்டறிந்த 31 வினைகளை ஆலன் டண்டிஸ் 10 ஆகச் சுருக்கிக் காட்டினார். பிரிமாண்டின் பிரெஞ்சு மாதிரி இதனிலும் சுருக்கி, 6 வினைகள் மூன்று இணைகளாக அமைந்துள்ளன என்று குறிப்பிடுகின்றது. இம்மூன்று இணைகளுக்கும் பிராப்பின் செயல்களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார் பிரிமாண்ட்.
லெவி ஸ்ட்ராஸ்
பிராபைத் தொடர்ந்து மொழியியலை அடிப்படையாக வைத்து நாட்டுப்புற வழக்காறுகளை அமைப்பியல் கோட்பாட்டின்படி ஆராய்ந்தவர் லெவி ஸ்ட்ராஸ் என்னும் மானிடவியல் பேரறிஞர். ‘The Structural Study of Myth’ என்ற ஆய்வுக் கட்டுரையில் புராணங்களைப் புதிய நோக்கில் ஆராய்கின்றார். லெவி ஸ்ட்ராஸ், பிராப்பின் முறையினின்றும் சிறிது விலகிச் சென்றாலும், அமைப்பியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே ஆராய்கிறார்.
இக்கோட்பாட்டை முதன்முதலில் உருவாக்கியவர் மில்மன் பாரி என்பவர் தான். இவர் இலியட், ஒடிசி ஆகிய காப்பியங்களின் வாய்பாட்டு அமைப்புகளை (Formulaic compositon) ஆராய்ந்தார். அதன்பின் 1933 முதல் 1935 வரை யுகோஸ்லேவியப் பகுதியில் வாழும் நாட்டுப்புறப் பாடகர்களின் பாடல்களைச் சேகரித்தார். சேகரித்த பாடல்களைப் புத்தகமாக எழுத ஆரம்பித்து எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிடவே, அவர் சீடர் ஆல்பர்ட் லார்டு ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
ஆல்பர்ட் லார்டு தம் ஆய்வின் படி வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.
குறிப்பிட்ட இன்றிமையாத ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரே விதமான யாப்புச் சந்தத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொகுதி.
பாடகர் வாய்பாடுகளை மனப்பாடம் செய்து கொண்டு நாட்டுப்புறக் காப்பியங்களின் நிகழ்த்துதலில் பலமுறை பயன்படுத்துகிறார்.
இந்த வாய்பாடுகள் இசை, சந்தம், சொற்றொடர், ஓசைப்புலன் சார்ந்த தோரணைகளால் உருவாக்கப்படுகின்றன.
இவை ஓர் இளம்பாடகன் பாட ஆரம்பிக்கும் முன்னரே அவனது சிந்தனையில் சேர ஆரம்பிக்கின்றன. இந்த வாய்பாடுகள் வாய்மொழி எடுத்துரைப்பு நடையின் அடிப்படை ஆகும்.
வாய்மொழிக் காப்பியங்களை எழுத்துக் காப்பியங்களிலிருந்து வேறுபடுத்தும் எண்ணத்தில் பயிலும் நமக்கு மிகவும் உதவும் ஒரு கூறு வாய்பாடு ஆகும்.
இது எந்த ஒரு வரி மற்றொரு வரியுடனும் அடிக்கருத்துடனும் தொடர்புடையது எனப் படிப்பதற்கும், மொத்தத்தில் பாடலின் வடிவத்தைப் படிப்பதற்கும் உதவுகிறது.
அடிக்கருத்துகள் என்பவை மரபுவழிப் பாடலின் வாய்பாட்டு நடையில் ஒரு கதையைச் சொல்லுவதற்காக வழக்காகப் பயன்படுத்தப்படும் கருத்துகளின் தொகுதிகள் ஆகும்.
இந்த அடிக்கருத்துகள் அதே அடிப்படை நிகழ்வுகளையும் விளக்கங்களையும் குறிக்கின்றன.
கேட்போர் கதையை நன்கு நினைவில் கொள்ளுதலும், சொல்வோர் நினைவு படுத்திக் கொள்ளுதலும் இதனால் எளிதாகின்றன.
இதுவே எழுத்து இலக்கியத்திற்கும் வாய்மொழி இலக்கியத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு ஆகும்.
கேட்டுக் கேட்டு மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டியிருத்தலால் இந்த ‘மீண்டு வரல்’ உத்தி (technique), கதை (story or tale), பாடல் (song), கதைப்பாடல்(Ballad) ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது.
பாடுபவர் காலத்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப நீட்டிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறார். பார்வையாளரைத் தன்வயப்படுத்தவும் பாடுவோருக்கு உதவுகிறது.
சான்று
இந்த உத்தி கதைப் பாடல்களில் மீண்டும் வரல், மாறுபட மீண்டும் வரல், இடை இடையே மீண்டும் வரல் எனக் காணப்படுகின்றது.
ஆறான மாசமதில் அரகரா தஞ்சமென்பாள்
ஏழான மாசமதில் இறையவரே தஞ்சமென்பாள்
எட்டான மாசமதில் ஈசுவரரே தஞ்சமென்பாள்
ஒன்பதான மாசமதில் உடையவரே தஞ்சமென்பாள்
என்ற பாடலில் தஞ்சமென்பாள் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருகிறது. இவ்வாறு அமைவது ஒரு குறிப்பிட்ட வாய்பாடாகும். இது வாய்மொழி வழக்காற்றில் அமைய, அதனை வாய்மொழி வாய்பாடு என்கின்றனர்.
மேற்கண்ட ‘சூழல்’ என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் 1935இல் மாலினோவிஸ்கி என்பவர் முன்வைத்தார். தன்னுடைய மொழியியல் இனவரைவியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாகப் பொருளின் சூழல் இன்றியமையாமையை இதன் வழிக் குறிப்பிட்டார். அதன்பின்னர் 1960இல் இந்தியானா மற்றும் பென்சில்வேனியா பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெற்ற இளம் அமெரிக்க வல்லுநர்கள் பனுவல், மொழி, பாவனைகள், கருத்துப் பரிமாற்ற மொழியியல், உளவியல், சமூகவியல், குறியியல் போன்ற சமூக அறிவியல்கள் எவ்வாறு சூழலைச் சார்ந்துள்ளன என்று கண்டனர்.
அதன் பிறகு ரோஜர் ஆபிரகாம், டான்பென் ஆமோஸ், ஆலன் டண்டிஸ், ராபர்ட் ஜார்ஜஸ் மற்றும் கென்னத் போல்ட்ஸ்டின் போன்றோர் நாட்டுப்புற வழக்காறுகளை, சமூகத்தின் உண்மையான தொடர் நிகழ்ச்சியாகப் பார்த்தனர். அதனால் அவர்கள், வாய்மொழி நடத்தைகளை (Verbal behaviour) மொழியிலிருந்தும், இயங்கியலை (Dialectics) மானுடவியலிலிருந்தும், தனி நபரின் பங்கேற்பைச் (Role- playing) சமூகவியலிலிருந்தும், தான் என்ற தன்முனைப்புக் (ego) கருத்தை உளவியலிலிருந்தும் பெற்றனர். அதுமுதல் பல துறைகளில் இருந்து நாட்டுப்புறவியலுக்கு வந்த ஆய்வாளர்கள், வாய்மொழி மரபுகளைச் சூழலிலிருந்து தனிப்படுத்திச் சிந்திக்காமல், அதன் பன்முகங்களைப் பண்பாட்டுச் சூழல்களிலும் பொதுவான சமூகக் கட்டமைப்பு நிலைகளிலும் ஆராயத் தொடங்கினர்.
மருமகள் 30 வயதானவர். சாதிகள் குறித்துக் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட சிந்தனைகள், அவருக்கு ‘எங்க ஆண்ட’, ‘எங்க அய்யா’ என்று பாடவேண்டிய தேவை இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் பாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் அவர்கள் வளர்ந்த, இப்பொழுது வாழ்கின்ற சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அப்பாடலின் வேற்றுமைக்குக் காரணத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.
பண்பாட்டுச் சூழல் பொருள்களின் அமைப்புகளையும்
சமூகச் சூழல் சமூக அமைப்பையும், பரிமாற்றங்களையும் விளக்குகின்றன.
பொருள் சூழல்
நாட்டுப்புற வழக்காற்று வகை ஒன்றைப் பற்றி அச்சமூக உறுப்பினர்களின் ஒட்டு மொத்தமான பொருள் கொள்ளும் முறையாகும்.
நிறுவனச் சூழல் (Institutional Context)
அவ்வகைப் பண்பாட்டிற்குள் அது எங்கே பொருந்தி வருகிறது என்பதாகும்.
தொடர்புமுறைச் சூழல் (Context of Communication System)
அது எவ்வாறு பிற நாட்டுப்புற வழக்காற்று வகைகளோடு தொடர்பு கொள்கிறது என்பதாகும்.
சமூக அடித்தளம் (Social base)
அவ்வகையைக் கொண்டிருப்பவர்கள் என்ன வகையான மக்கள்?
தனிமனிதச் சூழல் (Individual context)
அது எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்வில் செயலாற்றுகிறது?
சுற்றுச் சூழமைவுகளின் சூழல் (Context of Situation)
சமூகப் பின்னணிகளில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதாகும்.
இந்த ஆறு சூழல்களும் தம்முள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஆய்வுக்கு மிகவும் இன்றியமையாதவை.
இவ்வகை ஆய்வுகள் காரணங்களைத் தேடுவதைக் காட்டிலும் பொருளைத் தேடுகின்றன.
ஒரு நாட்டுப்புற வழக்காற்றுப் பனுவலை, மாறுபட்ட சமூக வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலுக்கு மாற்றும் போது ‘பனுவல், அதன் உட்பொருளை விட நிலையானது’ என்ற நிலைக்குச் செல்கிறது. ஆயின் உண்மையான விளக்கம் பனுவலை அதன் சூழலில் ஆய்வதே ஆகும்.
நாட்டுப்புறவியலிலுள்ள ‘சூழல்’ என்ற கருத்தாக்கம் மானுடவியல், மொழியியல், சமூகவியல், உளவியல் மற்றும் தத்துவவியல் போன்ற பிற துறைகளுக்கும் பெரும் பங்களிக்கிறது.
சான்று
நாட்டுப்புற வழக்காறு ஒன்றின் உண்மையான பொருள் பின்னணிச் சூழலிலிருந்து தான் பெறப்படுகிது, பொருள் சூழலிலோ அல்லது தோராயமான பொருள் கொள்ளுதலிலோ இருந்து அல்ல.
முன்பு நாம் பார்த்த ஒரே வீட்டைச் சார்ந்த மாமியார், மருமகள் இருவரும் வயலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அவ்வயலுக்குச் சொந்தக்காரர் வருகிறார். அவ்வேளையில் இருவரும் பாடல் பாடுகின்றனர். அப்பாடல்கள் பின்வருமாறு :
மாமியார் பாடிய பாடல் :
வட்டக் குடிபிடிச்சே – எங்க ஆண்ட
வயப்பாக்க வாராக
வயலுங் கருதாகும் – அவுக
வந்தெடமுந் தோப்பாகும்
நீளக் குடபிடிச்சே – எங்க அய்யா
நிலம் பாக்க வாராக
நிலமுங் கருதாகும் – அவுக
நின்னெடமுந் தோப்பாகும்.
மருமகள் பாடிய பாடல் :
வட்டக் குடபுடிச்சே
வயப்பாக்க வாராக – அவுக
வயலுங் கருதாகும்
வந்தெடமுந் தோப்பாகும்
நீளக் குடபிடிச்சே
நிலம் பாக்க வாராக – அவுக
நிலமுங் கருதாகும்
நின்னெடமுந் தோப்பாகும்.
நாட்டுப்புற வழக்காற்றை உலகளாவிய ஆய்வாக உருவாக்கிய தன்மை, அதற்கென்று சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட காரணிகள் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.
உருவாக்கப்பட்ட கோட்பாடுகளில் மூன்று கோட்பாடுகள் மட்டும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.
அமைப்பியல்-அமைப்பியல் கோட்பாடு – உருவான திறன் – பயன்பாடு- வரையறை போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக, வாய்மொழி வாய்பாடு – வாய்பாடுக் கோட்பாடு – வரையறை – பயன் – சான்றுடன் காணப்பட்டுள்ளது.
இறுதியாகச் சூழல் என்றால் என்ன? எதற்காகக் கோட்பாடாக உருவானது? விளக்கப்பட்டு – வரையறை – பயன் – சான்றுடன் கூறப்பட்டுள்ளது.